வன்னியர் நல வாரியம் அமைக்கப்பட்டு அதன் மூலமாக அரசிடம் இருந்து கீழ்க்கண்ட திட்டங்களைக் கேட்டுப் பெற அக்னிகுல பெருந்தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்கள் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கீழ்க்கண்டத் திட்டங்களை வகுத்து வன்னியர் மக்கள் தொகையின் அடிப்படையில் இந்த வாரியத்திற்க்கான நிதி ஆதாரங்களைப் பெற வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளார்.
வன்னிய மக்களுக்கானத் திட்டங்கள்
- வன்னியர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தனியாகத் தொழில் தொடங்க பதிவு செய்த உறுப்பினருக்கோ அல்லது அவரைச் சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினருக்கோ அதிக பட்சமாக ரூ.7500 (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) முழு மானியமாக வன்னியர் நல வாரியம் மூலம் வழங்கப்படும்.
- மேலும் வன்னியர் நல வாரிய உறுப்பினர்கள் குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தனிநபர் மானியமாக ரூ.10,000-ம் (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) அல்லது குழுவிற்கு ரூ. 1,25,000 /- (ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மட்டும்) அல்லது திட்ட மதிப்பீட்டில் 50% இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக பின் நிகழ்வாக நடைமுறையிலுள்ள விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும்.
- ஓய்வு பெற்ற தகுதி பெற்ற உறுப்பினர்களுக்கு ரூ.1000 மாத ஓய்வூதியமாக வழங்கப்படும்.
- வன்னியர் நலவாரியத்தில் உறுப்பினர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் விவரம்
- விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின்கீழ்
அ. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை 100000
ஆ. விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக் கேற்ப 10000 முதல் 100000 வரை
- இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 15000
- ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 2000
- கல்வி உதவித்தொகை
அ. 10ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
ஆ. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000
இ. 11ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
ஈ. 12ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1500
உ. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1500
ஊ. முறையான பட்டப்படிப்பு 1500
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பு 1750
எ. முறையான பட்டமேற்படிப்பு 4000
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டமேற்படிப்பு 5000
ஏ. தொழிற்கல்வி பட்டப்படிப்பு 4000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்பு 6000
ஐ. தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு 6000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு 8000
ஒ. ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு 1000
மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ /பாலிடெக்னிக் படிப்பு 1200
- திருமண உதவித்தொகை 2000
- மகப்பேறு உதவித்தொகை
அ. மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம்
(6 மாதங்களுக்கு) 6000
ஆ. கருச்சிதைவு / கருக்கலைப்பு 3000
- கண் கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் 500 (அதிக பட்சம்)
- பொதுக்கால கடன் திட்டம் – அதிகபட்ச கடன் தொகை ரூ.10.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – ரூ.5.00 லட்சம் வரை – 6 சதவீதமும், ரூ.5.00 லட்சத்திற்கு மேல் – 8 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 3-5 ஆண்டுகள்
- மகளிர் சுய உதவி குழுக்கள் – அதிகபட்சம் 20 உறுப்பினாகள் அடங்கிய மகளா சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். அதிகபட்ச கடன் தொகை ரூ.50,000 (நபர் ஒன்றுக்கு) ஆண்டு வட்டி விகிதம் – 4 சதவீதம், திரும்ப செலுத்தும் காலம் – 3 ஆண்டுகள்
- வன்னியர் பொற்காலத்திட்டம் – மகளிருக்கான காலக்கடன் திட்டம் – அதிகபட்ச கடன் தொகை ரூ.1.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – 5 சதவீதம், திரும்ப செலுத்தும் காலம் – 5 ஆண்டுகள்
- ஆடவருக்கான சிறுகடன் திட்டம் – அதிகபட்சம் 20 உறுப்பினாகள் அடங்கிய ஆண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். அதிகபட்ச கடன் தொகை ரூ.50,000 (நபர் ஒன்றுக்கு) ஆண்டு வட்டி விகிதம் – 5 சதவீதம், திரும்ப செலுத்தும் காலம் – 3 ஆண்டுகள்
மேற்கண்டத் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் வாழும் சுமார் முப்பந்தைந்து சதவிகித வன்னியர் மக்கள்தொகை பெரும் பயன் பெறும் என்பதில் ஐயமில்லை.