வன்னியர் நல வாரியம்
ஒரு நாட்டின் மிகச் சிறந்த சொத்து அந்த நாட்டின் மனித வளமே. ஒரு சமுதாயத்தின் மனித வளத்தித்திற்கான சிறந்த வாழ்வு என்பது அந்த சமுதாயத்தின் பொருளாதார, சமூக, அரசியல் நிலைபாடுகளைச் சார்ந்திருக்கிறது.
சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ள சமூகத்தையும் மேம்பட்ட நிலையை அடைய செய்யவேண்டும் என்ற அரசியல் சட்ட தத்துவார்த்த படி மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெடுப்புகளை பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள பிற்படுத்த பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட சமூகங்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பட தமிழகம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மக்களின் ஜனநாயகம் நாட்டு மக்களின், சமுதாயங்களின் சமமான நிலைகளில் உள்ளது என்ற ஒரு மாபெரும் தத்துவார்த்த அடிப்படையில் அரசுகள் எடுத்து வரும் நலத்திட்டங்களில் முக்கியமானத் திட்டம் சமுதாய நல வாரியங்கள் ஆகும்.
பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் பல நல்லத் திட்டங்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநரகம் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் ஆகிய மூன்று இயக்குநரகங்களால் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்பினர் சமூக மற்றும் கல்வி நிலைகளைக் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்த தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு கொள்கையின் மூலம் இவ்வனைத்து பிரிவினரும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கும், அரசுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது.
இதன்படி பல்வேறு நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் செயல் படும் நல வாரியங்கள் கீழ்க்கண்டவை.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்.
தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம்.
.காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம்.
.தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்.
தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்.
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம்.
மேற்கண்ட பதினேழு நலவாரியங்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளடக்கியது. தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் (Unorganised Workers) சமூக பாதுகாப்புக்காக தமிழக அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் (Welfare Board) பல உள்ளன.
இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் தவிர சமூக மேம்பாட்டுக்கென்று நலவாரியங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.
இவைத் தவிர பிற்படுத்த பட்டோர் நல மேம்பாட்டுக்காக பிற்படுத்த பட்டோருக்கான நலத்துறை அமைச்சகத்தின் கீழ் பல நலவாரியங்கள் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தனியாகத் தொழில் தொடங்க பதிவு செய்த உறுப்பினருக்கோ அல்லது அவரைச் சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினருக்கோ அதிக பட்சமாக ரூ.7500 (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) முழு மானியமாக நரிக்குறவர் நல வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்கள் குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தனிநபர் மானியமாக ரூ.10,000-ம் (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) அல்லது குழுவிற்கு ரூ. 1,25,000- (ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மட்டும்) அல்லது திட்ட மதிப்பீட்டில் 50% இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக பின் நிகழ்வாக நடைமுறையிலுள்ள விதிகளுக்குட்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் ஓய்வு பெற்ற தகுதி பெற்ற உறுப்பினர்களுக்கு ரூ.1000 மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 20.3.2008 அன்று அளிக்கப்பட்ட இவ்வாண்டின் நிதிநிலை அறிக்கையில், “நரிக்குறவர்களை, நல்ல நெறிக்குறவர்கள் என்று அழைத்து, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் அலைந்து திரியாமல், ஓரிடத்தில் இருந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கென தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், தேவராயநேரி என்னும் இடத்தில் கட்டப்பட்ட 140 குடியிருப்புகளை 13.3.1975 அன்று முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்து நிவாரணம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இது தவிர தொழில் தொடங்குவதற்கு மானிய உதவியும் வழங்கப்படுகிறது.
மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம்
2006ல் பல்வேறு தொழில்கள் செய்தவர்களின் நலன் கருதி 17 தொழிலாளர்களுக்கென வாரியம் அமைத்தார். அதில், மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம் ஒன்று. இந்த வாரியம் மூலம் மக்கள் நிறைய பயன்பட்டனர். மண்பாண்ட தொழிலாளர்களுக்காக மழை காலங்களில் தமிழக அரசால் பராமரிப்பு தொகை நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல பயன்கள் இந்த சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சீர்மரபினர் நலவாரியம்
தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது, அந்த நல வாரிய உறுப்பினர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.ஒரு லட்சம், ஊனமுற்றால் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம், இயற்கை மரண மடைந்தால் ரூ.15 ஆயிரம், ஈமச்சடங்கிற்கு ரூ.2000 சேர்த்து ரூ.17 ஆயிரம், கல்வி உதவித்தொகையாக பெண் குழந்தைகளுக்கு மட்டும் 10, 11ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., படிப்பிற்கு ரூ.ஆயிரம், பிளஸ் 2, பட்டப்படிப்பிற்கு ரூ.1500, பட்ட மேற்படிப்பு, தொழிற்கல்வி படிப்புக்கு ரூ.4000, திருமண உதவித்தொகையாக ரூ.2000, மகப்பேறு உதவித் தொகையாக ரூ.6000, கருச்சிதைவு, கருக்கலைப்பிற்கு ரூ.3000, கண் கண்ணாடி உதவித் தொகையாக ரூ.500, முதியோர் ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கப்படுகிறது.
அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்
மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் 292 தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள்.
மாவட்டம் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகள் மொத்தம் மொத்த மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணிக்கை
மதுரை – பள்ளிகள் – 146
தேனி – பள்ளிகள் – 84
திண்டுக்கல் – பள்ளிகள் – 62
மொத்தம் – பள்ளிகள் 292
இவை தவிர விடுதிகள் மதுரையில் பதினெட்டும், தேனியில் இருபதிமூன்றும், திண்டுக்கல்லில் ஏழும் செயல் படுகிறது.
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்
இஸ்லாமிய மத்த்தைச்சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, முஸ்லிம் மகளிர் நலனுக்காக முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் உதவிகள் மற்றும் தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
சங்கங்கள் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு இணையாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சமாக 1: 2 என்ற விகிதாச்சாரத்தில் 01.04.2012 முதல் ஆண்டிற்கு ரூ.20.00 இலட்சம் வரை அரசால் இணைமான்யம் வழங்கப்படுகிறது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தாகாக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷாகானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் சமூக. பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் விவரம்
விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின்கீழ்
அ. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை 100000
ஆ. விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக் கேற்ப 10000 முதல் 100000 வரை
இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 15000
ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 2000
கல்வி உதவித்தொகை
அ. 10ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
ஆ. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000
இ. 11ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
ஈ. 12ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1500
உ. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1500
ஊ. முறையான பட்டப்படிப்பு 1500
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பு 1750
எ. முறையான பட்டமேற்படிப்பு 4000
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டமேற்படிப்பு 5000
ஏ. தொழிற்கல்வி பட்டப்படிப்பு 4000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்பு 6000
ஐ. தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு 6000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு 8000
ஒ. ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு 1000
மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ /பாலிடெக்னிக் படிப்பு 1200
திருமண உதவித்தொகை 2000
மகப்பேறு உதவித்தொகை
அ. மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம்
(6 மாதங்களுக்கு) 6000
ஆ. கருச்சிதைவு / கருக்கலைப்பு 3000
கண் கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் 500 (அதிக பட்சம்)
முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் 1000 (ஒரு மாதத்திற்கு)
டாம்கோ (தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்)
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சமுதாயத்தில் பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையின மக்களை மேம்படுத்துவதற்காக தனிநபர் கடன், சிறுகடன், கல்விக்கடன், மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகள், தொழில் சார்ந்த பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
தனிநபர் கடன் – திட்டம் 1ன்கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.20.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – ரூ.50000 வரை – 6 சதவீதமும், ரூ.50000க்கு மேல் – 6 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. திட்டம் 2ன்கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.30.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – ஆண் பயனாளிக்கு 8 சதவீதமும், பெண் பயனாளிக்கு 6 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 3-5 ஆண்டுகள்
கறவை மாடு வாங்குவதற்கான கடன் – ஆவின் மூலம் 6 சதவீத வட்டி விகித்த்தில் இரண்டு கவை மாடுகள் வாங்குவதற்கு வழங்கப்படுகிறது. இரண்டு கலப்பின பசுக்கள் வாங்க அதிக பட்சம் ரூ.50000மும், இரண்டு உயர்ரக முர்ரா எருமைகள் வாங்க அதிகபட்சம் ரூ.70000 வரையும் கடன் வழங்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 3 ஆண்டுகள்
ஆட்டோ வாங்குவதற்கான கடன் உதவி – தொழிற்கூட்டுறவு சங்கங்கள் மூலம் எல்.பி.ஜி ஆட்டோ – 1.21 இலட்சமும், மற்ற ஆட்டோ – 1.00 இலட்சமும் 6 சதவீத வட்டியில் அளிக்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 4 ஆண்டுகள்
போக்குவரத்து இனக்கடன் – நான்கு சக்கர வாகனங்கள் முறையே கார், வேன் மற்றும் டிராக்டர் ஆகியவைகள் வாங்க ரூ.3.13 இலட்சம் 10 சதவீத வட்டியில் அளிக்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 5 ஆண்டுகள்
சிறுகடன் – சுய உதவிக்குழுக்களின் அங்கத்தினர்களுக்கு ஜவுளி வியாபாரம், காலணி விற்பனை, சிற்றுண்டி பலகாரம், ஊறுகாய், அப்பளம் தயாரித்து விற்பனை செய்தல், கூடை பின்னுதல் போன்ற சிறுவியாபாரம் செய்து தங்களது பொருளாதாரத்தை உயர்த்திட சிறுவணிகக் கடனாக அதிகபட்சம் ரூ.100000 வரை 7 சதவீத வட்டியிலும், ஆண்டு வருமானம் 1.03 இலட்சத்திற்கு மேற்பட்டு உள்ளவர்களுக்கு அதிகபட்சம் 6.00 இலட்சம் வரை 8-10 வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
கல்விக்கடன் – அரசால் அங்கீகிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை. முதுகலை தொழிற்கல்வி, தொழிற்நுட்பக் கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு 3.00 முதல் அதிகபட்சம் 15.00 இலட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் தொழிற்கல்வி பயில்பவர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு 4.00 லட்சம் வீதம் அதிகபட்சம் 20.00 இலட்சம் வரையிலும். வெளிநாட்டில் தொழிற்கல்வி பயில்பவர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு 6.00 லட்சம் வீதம் அதிகபட்சம் 30.00 இலட்சம் வரையிலும். ஆண்டு வட்டித்தொகையாக 3-5 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. கல்வி பருவம் முடிந்த தேதியிலிருந்து அடுத்த 6வது மாதத்திலிருந்து அல்லது பணியில் அமர்ந்த தேதியிலிருந்து இதில் எது முந்தையதோ அந்த தேதியிலிருந்து அசல் மற்றும் வட்டி தொகை ஆகியவை 60 மாத தவணைகளில் செலுத்த வேண்டும்.
டாப்செட்கோ (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் பிவ, மிபிவ, சீம இனத்தைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது.
கடன்திட்டங்களின் விவரங்கள்
பொதுக்கால கடன் திட்டம் – அதிகபட்ச கடன் தொகை ரூ.10.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – ரூ.5.00 லட்சம் வரை – 6 சதவீதமும், ரூ.5.00 லட்சத்திற்கு மேல் – 8 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 3-5 ஆண்டுகள்
மகிளா சம்ரிதி யோஜனா – அதிகபட்சம் 20 உறுப்பினாகள் அடங்கிய மகளா சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். அதிகபட்ச கடன் தொகை ரூ.50,000 (நபர் ஒன்றுக்கு) ஆண்டு வட்டி விகிதம் – 4 சதவீதம், திரும்ப செலுத்தும் காலம் – 3 ஆண்டுகள்
புதிய பொற்காலத்திட்டம் – மகளிருக்கான காலக்கடன் திட்டம் – அதிகபட்ச கடன் தொகை ரூ.1.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – 5 சதவீதம், திரும்ப செலுத்தும் காலம் – 5 ஆண்டுகள்
ஆடவருக்கான சிறுகடன் திட்டம் – அதிகபட்சம் 20 உறுப்பினாகள் அடங்கிய ஆண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். அதிகபட்ச கடன் தொகை ரூ.50,000 (நபர் ஒன்றுக்கு) ஆண்டு வட்டி விகிதம் – 5 சதவீதம், திரும்ப செலுத்தும் காலம் – 3 ஆண்டுகள்
இந்த நிலையில் தமிழகத்தில் சுமார் முப்பத்து ஐந்து சதவிகத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமூகத்திற்கான நல வாரியம் எதுவும் அமைக்கப்படவில்லை என்பது மிக முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டியது.
வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்களில் பலர் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேறாத நிலையிலும் அரசின் உதவி எதிர்பாரத்து காத்திருக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படவேண்டும் என்று அக்னிகுல பெருந்தலைவர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் அரசிடம் பலமுறை கோரிக்கைகளை வைத்துள்ளார்.,
தமிழக முதலமைச்சர் முதல் அனைத்து தொடர்புடைய அமைச்சர்களை தொடர்பு கொண்டும் சரியான முடிவுகளோ, நலவாரியம் அமைப்பதற்கான முன்னேடுப்புகளோ எடுக்கப்படாத நிலையில் 26.9.2011 அன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கின் எண் W.P.20544 / 2012 ஆகும். அந்த வழக்குப்பதிவுக்கான தரவு மற்றும் தீர்ப்பு நகல் கீழ்க்கொடுக்கபட்டுள்ளது.
அந்த வழக்கின் தீர்ப்பில் பிற்படுத்த பட்ட கமிஷன் இது குறித்த முடிவை எடுத்து செயல் படுத்த வேண்டும் என்று ஆணை இட்டது. தீர்ப்பு நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி பிற்படுத்த பட்டோருக்கான நல்வாழ்வுக்கான துறை செயலருக்கு நீதிமன்ற ஆணையுடன் வன்னியர் கூட்டமைப்பு சார்பாக ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தின் நகல் இதோ.
இந்த நகலுடன் பல்வேறு துறைகளுக்கு, குறிப்பாக தமிழக முதல்வர், அரசின் தலைமை செயலர், பிற்படுத்த பட்ட ஆணைய செயலர், மிகவும் பிற்படுத்த பட்ட ஆணைய செயலர், சட்டத்துறை செயலர், உள்த்துறை செயலர் ஆகியோருக்கு இந்த கடிதத்தின் நகல் அனுப்பப்பட்டது. அந்த தரவுகள் கீழே கொடுக்கபட்டுள்ளது.
இது தொடர்பாக பிற்படுத்தபட்ட, மிகபிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் அனுப்பிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வன்னிய இனம் வாழ்வு சிறக்க, வளம் பெற என தன் வாழ்வு முழுமையையும் தியாகம் செய்திட்ட அக்னிகுல பெருந்தலைவன் சி.என். இராமமூர்த்தி அவர்களின் செயற்கரிய சாதனைகளில் மற்றும் ஒரு சாதனை இது.
வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்து, வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ஆகிய இரு சாதனைகள் தவிர இந்த சாதனையையும் செய்திட்ட பெருமை அக்னிகுல பெருந்தலைவன் சி.என். இராமமூர்த்தி அவர்களையே சாரும்.