வன்னியர் இட ஒதுக்கீடு – 10.5% ஒதுக்கீடு – போராட்ட பயணம் இட ஒதுக்கீடு வெற்றி போராட்ட முயற்சி (மூன்றாம் புரட்சி)

உரிமை போராட்டம் என்பது பல வழிகளில் பல தலைவர்களால் முன்னெடுக்கபட்டு வந்துள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் அஹிம்சை போராட்டம் வென்றது போல் இந்த காலகட்டத்தில் அறிவாயுதம் ஏந்திய புரட்சி ஒன்றே வெல்லும் எனவும் இந்திய திருநாட்டில் என்றும் சட்டத்தின் ஆட்சி என்று தீவிரமாக நம்பியவர் அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி.

வன்னியர் கூட்டமைப்பு மூலமாக 2000 முதல் இட ஒதுக்கீடு போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தார். தொடர்ச்சியாக பல கட்ட போராட்டங்களை நடத்தினாலும், பல முறை ஆளும் அரசாங்கத்திடம் நேரடியாக பல முறை இந்த கோரிக்கைகளை குறித்து முறையிட்டாலும் அதற்கான எந்த முயற்சியையும் அரசு செய்ய வில்லை.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை உயர் நீதி மன்றத்தில் வன்னிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு வழக்கொன்றை பதிவு செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தால் விசாரணைக்கு ஏற்கப் பட்டது. (W.P(PIL) No.14025/2010). இந்த வழக்கு பதிவு ஆவணம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஆண்டு. இந்த காலகட்டத்தில் இருந்த அரசு தொடர்ந்து வாய்தா வாங்கியே தங்களது ஆட்சி காலத்தை முடித்து கொண்டார்கள்.

இதற்க்கிடையில், எதிர் கட்சித் தலைவரான புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி  அவர்களை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரில் சந்தித்து அனைத்து வழக்குத் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்தார்.

அப்பொழுது புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கழக ஆட்சி அமைந்ததும் இட ஒதுக்கீடுக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்திந்திய பிற்படுத்தபட்டோர் ஆணையத் தலைவர் திரு. ராவ் அவர்கள் சென்னை வந்த போது நேரில் சந்தித்து அனைத்து விளக்கங்களையும் அளித்து ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு பிற்படுத்தபட்டோர் ஆணையத் தலைவர் மாண்புமிகு நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களுக்கு அனுப்பிய மனுவின் நகல் மற்றும் விளக்கத்தையும் அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி  அவர்கள் விளக்கியதுடன் சமுதாயத்தின் நியாயமான இந்த கோரிக்கைக்கு துணை நிற்க வேண்டினார்.

தமிழக முதல்வர், அமைச்சர்கள், மத்திய அரசு தலைவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே வந்தார் தலைவர் அவர்கள். மேலும் வன்னிய கூட்டமைப்பு நடத்திவந்த “வன்னிய குரல்” என்ற இதழ் மூலமாக தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தும் குரல் எழுப்பபட்டு வந்தது.

வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தபட்டோர் பட்டியலில் கொடுக்கப்படும்

20% ஒதுக்கீட்டில் 15% சதவிகித தனி உள் ஒதுக்கீடு கேட்ட கோரிக்கையை எழுப்பிய பொழுது மத்திய அரசின் கீழ் உள்ள சிறுபான்மையினருக்கான நலத்துறை, தமிழக அரசின் கீழ் உள்ள பிற்படுத்தபட்டோர் ஆணைய  கருத்து கேட்கப்படவேண்டும் எனக் கூறி 12.3.2012 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டு இருந்தது.

அப்பொழுது முதல்வர் புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பரிந்துரையின் பேரிலேயே இந்த ஆணையை வெளியிட்டு உள்ளதை நாம் அறியலாம்.

உயர்நீதிமன்றம் வழக்கின் நிறைவில் அளித்த தீர்ப்பின் நகல் இதோ,

இதற்குப் பின் இந்த உயர்நீதி மன்ற ஆணையை செயல்படுத்த வேண்டி தமிழக அரசை பல முறைகளில் வலியுறுத்தி வந்தார் தலைவர் அவர்கள். இந்த ஆணையை செயல் படுத்த வேண்டி முதல்வர், அமைச்சர்கள் என பலரையும் பலமுறை சந்தித்து முறையிட்டார்.

இந்த ஆணையை உடனடியாக செயல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்த வேளையில் 25.2.2021 அன்று தமிழக சட்டபேரவையில் வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் குறித்த அரசு குறிப்புகளை கீழே காணலாம்.

ஒரு நீண்ட நெடிய போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று அனைத்து கல்வி கூடங்களிளும், வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்கள் தனி ஒதுக்கீடாக 10.5% பெறத் தொடங்கிவிட்டனர்.

இந்த போராட்ட வெற்றி அறிவாயுதம் ஏந்தி நடத்திய சட்ட போராட்டம் மூலமாக மட்டுமே சாத்தியமானது என்பதினை தெள்ள தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஏறத்தாழ 40 வருட கடும் உழைப்பின், தன் வாழ்க்கையினை முழுமையாக தியாகம் செய்த அரும்தலைவன் அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி அவர்களால் மட்டுமே அவர்களுக்கு பெரும் உறுதுணையாக இந்த அறப்போராட்டத்தில் உடன் நின்ற போராளிகள் மாத்திரமே சாத்தியமாக்கிய வெற்றி இது.

இந்த வெற்றியை தங்களின் போராட்டம் மூலமாகவே பெற்றோம் என சிலர் கூறி வருவது காலத்தின் பெரும் விந்தை.

அறம் வென்ற போராட்டம் அறம் சார்ந்த தலைவனின் மூலமாக மட்டுமே சாத்தியம் என்பதினை மீண்டும் தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொண்ட தருணம் இது.

முன் களம்

வன்னியர்கள் மொத்த மக்கள் தொகையில் குறிப்பிடப்படும் அளவிலான மக்கள் தொகையில் பரவி, விரவி இருக்கின்றனர்..

இந்தியாவில் 1931 ஆம் ஆண்டு நடந்த மக்கள்த் தொகை கணக்கெடுப்பின் படி மதராஸ் ராஜதானியில் மக்கள்த் தொகை 67.54 இலட்சம். இந்த காலகட்டத்தில் மதராஸ் ராஜதானியில் வன்னியர்களின் மக்கள் தொகை சுமார் 29.44 இலட்சம். இந்த கணக்கின் படி மதராஸ் ராஜதானியில் வன்னியர்களின் மக்கள் தொகை சதவிகிதம் 43.59%.

2011 தமிழகத்தில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 7.21 கோடிகள். இந்த கணக்கெடுப்பின் படி வன்னியர்களின் தமிழக மக்கள் தொகை 2.53 கோடிகள் மற்றும் வன்னியர்களின் சதவிகிதம் 35% ஆக இருந்தது.

தமிழ்நாட்டில் வன்னியர் சமூகம் எண்ணிக்கை அடிப்படையில் அதிக பலம் வாய்ந்தவர்கள் என ‘தி நேஷனல் புக் டிரஸ்ட்’ என்ற நிறுவனம் வெளிவிட்ட சுதந்திர போராட்டம் நூலில் குறிபிடப்பட்டுள்ளது. 1871 ஆம் வருடம் பிரிட்டிஷ் அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் வன்னியர்கள் 39.5 இலட்சம் என குறிபிடப்பட்டுள்ளது. 22.12.1946 ஆம் வருடம் ‘திராவிட நாடு’ இதழில் வன்னியர் மக்கள் தொகை 63 இலட்சம் என பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மண்மணம் மண் விசுவாசம் மாறாத மக்கள் வன்னியர்கள். முடிந்த வரை அவர்கள் தங்கள் வாழ்விடங்களை மாற்றி கொள்வதில்லை. பழைய சென்னை ராஜதானியில் தமிழக வன்னியர்கள், ஆந்திரா வன்னியர்கள் என அழைக்கப்பட்ட இரு பிரிவினரும் வாழ்ந்து வந்தனர். தமிழக பகுதிகளில் வாழ்ந்த வன்னியகுல மக்கள் தங்கள் உரிமைகளை பெற்றிட வேண்டி 1844 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை நாடினார்கள். 1860 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு சாதகமான தீர்ப்பினை பெற்று அந்த கால கட்டத்தில் வாழ்ந்த சமுதாய பெரியவர்கள் இன உரிமையை காத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

அப்போதெல்லாம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வன்னியர்கள் சூத்திரர்கள் எனவே பதிவு செய்யப்பட்டார்கள். வன்னியர்களை ஷத்ரியர்கள் என பதிவு செய்யவேண்டி எடுத்த முயற்சிகள் நீண்ட போராட்டத்திற்கு பின்னால் 1881, 1891 ஆகிய ஆண்டுகளில் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் அது நிறைவேறவில்லை. வன்னிய பெரியவர் டி. ஐயாகண்ணு நாயகர் அவர்கள் “வன்னியகுல விளக்கம்” என்ற நூலினை எழுதி வன்னியர்கள் ஷத்ரியர்களே என பல சான்றுகளுடன் நிறுவினார்.

பின்னர் இந்தியாவின் முதல் ஜாதி சங்கமான வன்னியகுல அபிமான சங்கத்தை நிறுவி  அதை திக்கெங்கும் பரவிட செய்தனர். வன்னிய குலாபிமானி என்ற பத்திரிக்கையையும் நடத்தினர்.

இந்த போராட்டம் பல வடிவுகளில் தொடர்ந்தது. அரசியல் செயல் பாடுகளில் வன்னிய பெருமக்கள் ஈடுபட்டனர். பல தேர்தல்களில் போட்டியிட்டு சில பிரநிதித்துவங்களையும் பெற்றனர்.

முதல் புரட்சி

பிற்காலத்தில், 1950 களில் கர்மவீரர் காமராஜ் அவர்களின் வேண்டுகோள் படி படையாட்சியார் அவர்கள் இருபது சதவிகிதம் இலவச கல்வி தரும் உத்தரவாதத்துடன் காங்கிரஸ் கட்சில் இணைந்தார்.

இட ஒதுக்கீடு என்பது மனித உரிமை என்ற ஒரு அடிப்படை புரிதல் வேண்டும். இயற்கை தன்னுடைய அனைத்து கொடைகளையும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாகவே வைத்துள்ளது. காற்று, நீர், ஒளி, இன்னும் பல என அனைத்தையும் பொதுவாக வைத்துள்ளது.

மனித இனம் ஒரு சமூக கட்டமைப்பில் வாழத் துவங்கிய பிறகு அனைவருக்கும் ஆன உரிமைகளை சட்டங்கள் மூலமாக உறுதி செய்துள்ளது. இருப்பினும் சமூக வேறுபாடுகள் காரணமாக சில இனங்கள் தங்கள் உரிமைகளை பெறப் போராட வேண்டியிருப்பது நிதர்சனமான ஒன்றாகா உலக வரலாறுகள் நமக்கு உணர்த்துகிறது.

இன உரிமைக்காக போராடும் தலைவர்கள் தங்கள் சுயம் தாண்டி உழைத்தால், போராடினால் மட்டுமே அதை பெற முடிகிறது.

இந்த இருபது சதவிகித இலவச கல்வி கோரிக்கை பிற்க்காலத்தில் இருபது சதவிகித இடஒதுக்கீடு என உருமாறியது. சமுதாய பெருந்தலைவர் படையட்சியரின் இந்த அடித்தளம் காரணமாகவே அவர் சமுதாய மக்களின் மூத்த முக்கிய தலைவராக என்றும் இருக்கிறார். படையாட்சியார் அரசியல் செயல் பாடுகளில் உறுதுணையாக இருந்தவர் வன்னிய அடிகளார்.

இரண்டாம் புரட்சி

இதன் பின் 1980 ஆம் ஆண்டு வன்னிய அமைப்புகள் நடத்தி வந்த பலரையும் ஒருங்கிணைத்து வன்னிய சங்கத்தை துவங்கினார்கள் வன்னிய அடிகள் அவர்கள். 28 அமைப்புகளை உள்ளடக்கிய இந்த சங்கம் இன்றைய அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி மற்றும் பலரையும்  சங்கத்துடன் இணைத்து சங்கத்தை வலுப்படுத்தினார்.

இந்த சங்கம் அழைத்து வன்னிய இன முன்னெடுப்புகளில் இனத்துகொண்டவர், அப்போதைய திராவிடகழக தீவிரதொண்டர் மருத்துவர் இராமதாசு அவர்கள்.

1984 தொடங்கி வன்னிய அடிகளார் தீவிர களப் பணியாற்றி 1985 ஆம் ஆண்டு நடந்த சங்கப் பொதுக்குழுவில் 20% இட ஒதுக்கீடு வேண்டி மறியல் போராட்டங்களை துவக்கினார். இது முதல் இரண்டுக் கட்டங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை. மூன்றாம் கட்டத்தில் நாடு அதிர போராட்டம் வெடித்தது.

1987 ஆம் ஆண்டு நடந்த மறியல் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உரிமைப் போராளிகள் 25 பேர் தங்கள் இன்னுயிர் தியாகம் செய்தார்கள்.

இதன் விளைவாக 108 இடைச் சாதிகளை இணைத்து 20% இட ஒதுக்கீடு பெற முடிந்தது. அந்த கால கட்டத்தில் இருந்த ஆளும் கட்சிகளின் வியூகங்களில் சிக்கி வன்னிய சமுதாயம் அரசியல் வண்ணம் பூண்டு தங்கள் உண்மைக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் தீவிரத்தை இழந்தனர்.

இந்த காலகட்டத்தில் உண்மை நிலை அறிந்து அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமுர்த்தி தன்னை முழுமையான சமூக பணிக்கு அர்ப்பணித்து 2000 வருடத்தில் வன்னிய அடிகளார், வாழப்பாடி இராமமூர்த்தி போன்ற மற்ற வன்னிய பெரியவர்களை இணைத்து வன்னிய கூட்டமைப்பு கண்டார்.

இந்திய இட ஒதுக்கீடு வரலாறு

இட ஒதுக்கீடு என்பது ஒரு நாகரீக சமுகத்தின் முதிர்ச்சி. இந்திய ஜனநாயகம் ஒரு முதிர்ச்சி அடைந்த ஜனநாயகம். இந்த வகையில் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சம நிலையில் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை மரபு இந்த நாட்டுக்கே உரித்தான தனிச்சிறப்பு வாய்ந்த மரபு.

கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், பிரநிதித்துவம் ஆகியவைகளில் அனைத்து சமூகத்தினரும் சமமான நிலையில் இருக்க வேண்டும் என்று இந்திய வரலாற்றில் பலவிதமான போராட்டங்கள் நடைபெற்றது.

சுதந்திரதிற்கு முன்பு

  • இட ஒதுக்கீடு இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே பிரிட்டிஷாரால் வழங்கப்பட்டு வந்த ஒன்று தான். நேர்மறையான பாகுபாடு என்ற முறையில் இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருந்தது. உதாரணமாக 1882 – 1891 ஆகிய ஆண்டுகளில் சாகு என்ற கோலாப்பூர் சமஸ்தான மகாராஜா பிராமின் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அது நடைமுறைக்கு வந்தது.
  • 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 வது நாள் நீதி கட்சி ஒரு அரசாணையை வெளியிட செய்தது. (GO #613). அதன் படி 50% இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்க வகை செய்தது. அது நாடு முழுவதும் அமல் படுத்த பட்டது.
  • 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய அரசியல் சட்டம் ஏற்படுத்தி அதில் இதற்க்கு வகை செய்தது.
  • 1932 ஆம் வருடம் நடந்த வட்ட மேசை மாநாட்டில் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்நோல்டு மதவாரியான பிரநிதித்துவத்தை உறுதி செய்தார்.

சுதந்திரத்திற்கு பின்

  • உலக அளவில் இந்த சமூக சமன்பாட்டுக்கான முன்னெடுப்புக்கள் எடுத்த ஒரே நாடு இந்தியா என்பதில் பெருமை கொள்ளலாம்.
  • இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பட்டியலின இனத்தவர்கள் மற்றும் பழங்குடிகளுக்கு தேவையான முன்னெடுப்புகளை அரசாங்கம் எடுத்தது. அதன் படி 1980 ஆம் வருடம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பாகுபாட்டை உருவாக்கினர். 2019 ஆம் வருடம் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினர்.
  • 1979 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் முக்கிய பணி சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகக்களுக்கான ஒதுக்கீட்டை குறித்து ஆய்ந்து அறிக்கை தயார் செய்வது. இந்த கமிஷன் 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை கொண்டு ஆய்வு செய்தது. அதன் படி 52% ஆன மக்கள் தொகைக்கு இட ஒதுக்கீடு தேவைப்படுவதாக முடிவுக்கு வந்தது. அதன் படி 27% பணியிடங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் இந்த வகுப்பினருக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்தது.
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 15(4) இன் படி, மாநிலங்கள் தங்கள் மக்கள் தொகையின் தேவைக்கு ஏற்ப சமூக உரிமைகள், கல்வி போன்றவைகளில் இட ஒதுக்கீட்டை  பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின சமூகத்தினர், பட்டியலின பழங்குடிகளுக்கு வழங்கலாம் என்று மாநிலங்களுக்கு உரிமையை கொடுத்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்பு பிரிவு 46 இன் படி, மாநிலங்கள் தங்கள் குடிமக்களின் எந்த பகுதியினருக்கு சமூக, பொருளாதார முன்னேற்றம் தேவைபடுகிறதோ அதற்க்கான முடிவுகள் மற்றும் முன்னெடுப்புகளை செய்ய உரிமையை அளித்துள்ளது. மேலும் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்துகொள்ள உரிமையை அளித்துள்ளது.
  • தற்போதைய தமிழக இட ஒதுக்கீடு படி பட்டியலின மக்களுக்கு 18%, பட்டியலின பழகுடியினருக்கு 1%, மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு 50% என மொத்தம் 69% இட ஒதுக்கீட்டை அளித்துள்ளது.

 

 

Menu