வன்னியர் பொது சொத்து வாரியம் மூலமாக வன்னிய இன மக்களுக்கான அக்னிகுல பெருந்தலைவன் சி.என்.இராமமுர்த்தியின் திட்டங்கள்

வன்னியர் பொது சொத்து நல வாரியம் / வன்னியர் நல வாரியம் மூலமாக பல அரியத்திட்டங்களை வன்னிய இன மக்களின் நல வாழ்வுக்காக அக்னிகுல பெருந்தலைவன் சி.என். இராமமுர்த்தி செயல் படுத்த உள்ளார்.

வன்னியர் பொது சொத்துக்கள் இன பெரியோர்களால் இன வளமைகாகவும் செழுமைக்காகவும் கொடுக்கப்பட்டது. இந்த சொத்துக்களின் மூலமாக வரும் வருமானத்தை வைத்து கீழ்க்கண்ட திட்டங்களை செயல் படுத்தத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்க பட்ட செலவினத் திட்டத்தின் படி கீழ்க் கண்டத்  திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

முதியோர் நலன்

  1. மாவட்டந்தோறும் முதியோருக்கான “முதியோர் இல்லங்கள்” அமைக்கப்பட்டு இலவசமாக சேவைகள் வழங்கப்படும். இந்த முதியோர் இல்லங்களுடன் கடவுளின் குழந்தைகளுக்கான இல்லங்களும் அமைக்கப்படும்.
  2. ஆதரவற்ற முதியோர்களுக்காக சிறப்பு திட்டங்கள் செயல் படுத்தப்படும். அவர்களுக்கான பராமரிப்பு, மருத்துவச் செலவுகளை வாரியமே ஏற்று கொள்ளும். அவர்களுக்கான சிறப்பு மருத்துவக் காப்பிட்டுத் திட்டங்களை இலவசமாக அளிக்கும்.
  3. முதியோர்களின் அனுபவங்களை / பட்டறிவுகளை ஆவணபடுத்துவோம்.
  4. நம்மை விட்டு பிரியும் பெரியோர்களுக்கான நினைவேந்தல் இணையத்தளம் ஒன்று அமைத்து அகலா நினைவஞ்சலி செலுத்துவோம்.
  5. தனிமையில் வாழும் முதியோர்களுக்கு, மாதாமாதம் ஆறுதல் தொகை வழங்குவோம்.

இளைஞர் நலன்

  1. படித்த இளைஞர்களுக்கு வேலை பெற்றுத் தருவதற்காக தனிப்பட்ட வேலை வாய்ப்பு முன்னெடுப்புகளை செய்வோம்.
  2. வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான தனி பயிற்சிகள் அளிக்கப்படும்.
  3. தகுதி வாய்ந்தவர்களுக்கு மேற்படிப்பு தொடர அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
  4. தொழில் கல்வி பயில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் படி தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான அணைத்து செலவுகளையும் வாரியமே ஏற்கும்.
  5. தாய், தந்தையை இழந்த பதினெட்டு வயதிற்கும் கீழே உள்ள குழந்தைகளுக்கு மாதாமாதம் அவர்களுக்கான கல்வி மற்றும் வாழ்வாதார செலவினங்களை ஏற்க வாரியம் முன்னெடுப்புகளை செய்யும்.
  6. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இலவச கல்வி, உண்டு உறைவிட வசதிகள் செய்து தரப்படும்.
  7. பொறியியல், சட்டம், இலக்கியம் மற்றும் ஏனைய பட்ட பட்டமேற்படிப்பு படிக்கும் தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவச கல்விக் கட்டணம் செலுத்தப்படும்.
  8. முனைவர் பட்டம் படிக்கும் அனைத்து மாணவருக்கும் மாதமாதம் ஊக்க தொகை அளிக்கப்படும்.
  9. இந்திய / தமிழக ஆட்சிப்பணி மற்றும் வங்கி பணிகள் பெற வேண்டி பயிற்சியை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கும், ஏனைய வேலைகளுக்கான தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்க “அக்னி முனையம்” என்ற பயிற்சி பள்ளிகள் மாவட்டந்தோறும் தொடங்கப்படும்.
  10. ‘அக்னி முனையம்’ என்ற பயிற்சி மையம் இணையத்திலும் அணைத்து சமுதாய இளைஞர்களும் / இளம்பெண்களும் பயன்பெறும்படி செயல் படுத்தப்படும். இதன் மூலம் நீட் பயிற்சி தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளுக்கும் ஆன பயிற்சிகள் இலவசமாக இணையத்தில் அளிக்கப்படும்.

இளம்பெண்களுக்கு

  1. அனைத்து இளம்பெண்களுக்கும் பட்ட மேற்படிப்பு / தொழில் முறை கல்வி / முனைவர் பட்டய படிப்புக்கு வாரியம் செலவினங்களை ஏற்கும்.
  2. கல்விக்கு உதவி தேவையான பெண்களின் உண்டு உறைவிட செலவுகளை வாரியமே ஏற்கும்.
  3. தாய், தந்தை இழந்த இளம்பெண்களின் திருமணத்திற்கு தேவையான அணைத்து உதவிகளையும் வாரியம் உதவும்.
  4. இளம்பெண்களுக்கான கைத்தொழிலில் தேவையான முதலீடுகளை பெற உதவதுடன் அவர்கள் தொழிலில் சிறக்க தேவையான அணைத்து உதவிகளையும் செய்யும்.
  5. பெண்கள் தொழில் முனைவோர் பயிற்சி முன்னெடுக்கப்படும். மத்திய மாநில அரசுகளின் அனைத்து உதவிகளையும் பெற்று தர வாரியம் உறுதி பூண்டுள்ளது.
  6. பெண்களுக்கான சுய உதவி குழுக்கள் அமைத்து அவை செயல் பட தேவையான அனைத்து உதவிகளும் வாரியம் செய்யும்.
  7. வாழ்க்கைத் துணை இழந்த பெண்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கை அமைத்து கொள்ள வாரியம் துணை நிற்கும்.
  8. பெண்களின் பாதுகாப்பிற்கு சட்டபூர்வமாக வாரியம் துணை நிற்கும்.
  9. வன்னிய பெண்களின் வாழ்க்கை சிறக்க தேவையான அணைத்து பயிற்சிகளையும் இலவசமாக வாரியமே அளிக்கும்.

இலவச சட்ட உதவி மையம்

  1. வன்னிய இன மக்களுக்காக இலவச சட்ட உதவி மையம் அமைக்கப்படும். இந்த மையம் மூலமாக சொத்து, வணிகம், குடும்பம் சார்ந்த அனைத்து சட்ட உதவிகளும் அணைத்து மட்டங்களிலும் அளிக்கப்படும்.
  2. வன்கொடுமை சட்டத்தினால் பாதிக்கப்படும் அனைத்து வன்னிய சொந்தங்களுக்கும் இலவச சட்ட போராட்ட உதவி செய்யப்படும்.
  3. வன்னிய இன சட்ட ஆலோசகர்களுக்கு அனைத்து மட்டங்களிலும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

வணிகர்களுக்கு

    1. வன்னிய தொழில் முனைவோருக்காகவும், வணிகர்களுக்காகவும் தொழில் பயிற்சி, ஆலோசனை கொடுக்க சிறப்பு ஆலோசகர்கள் மூலம் இலவசமாக உதவப்படும்.
    2. வன்னிய வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோரை இணைக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
    3. இந்த குழுக்கள் மூலமாக வியாபார உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் முன்னேடுக்கப்படும்.
    4. வன்னிய உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை சில்லறை வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்ய தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
    5. ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விரும்பும் வணிகர்ளுக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளித்து அவர்கள் தொழில் சிறக்கத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
    6. தொடர் தொழில் வளர்ச்சி சம்பந்தமான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்.

தொழில் முனைவோருக்கு

  1. வன்னியர் நல வாரிய உறுப்பினர்கள் குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தனிநபர் மானியமாக ரூ.10,000-ம் (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) அல்லது குழுவிற்கு ரூ. 100000- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) அல்லது திட்ட மதிப்பீட்டில் 50% இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக பின் நிகழ்வாக நடைமுறையிலுள்ள விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும்.
  2. தொழில் முனைவோருக்கான பயிற்சி மற்றும் கடன் பெறுவதில் உதவி ஆகியவை வாரியம் மூலமாக செய்யப்படும்.
  3. தொழில் முனைவோருக்கான திட்ட ஆலோசனைகள் இலவசமாக அளிக்கப்படும்.

விவசாயிகளுக்கு

  1. விவசாய பணியில் ஈடுபடும் வன்னிய சொந்தங்களுக்கு விவசாய பயிர் கடன் பெற்றுத்தர வாரியம் துணை நிற்கும்.
  2. விவசாய உற்பத்தியினை சந்தை படுத்த வாரியம் அனைத்து உதவிகளையும் செய்யும்.
  3. பாரம்பரியமான விவசாய முறைகளை செயல் படுத்த, நம் பாரம்பரிய விதைககளை பாதுகாக்க விவசாயிகளுக்கு துணை நிற்கும்.
  4. அரசின் அனைத்து விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளையும் பெற உதவுவதுடன் அனைத்து ஆலோசனைகளையும் வழங்க வாரியம் உதவிடும்.

கல்வி நிலையங்கள்

  1. நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், தொழில் கல்லூரிகள் மற்றும் உயர் தர பள்ளிகள் தொடங்க வாரியம் உறுதி பூண்டுள்ளது.
  2. வன்னிய சொந்தங்கள் நடத்தி வரும் கல்வி நிறுவன தரம் உயர்த்துதல் மற்றும் அரசு கொடுக்கும் உதவிகளை பெறுத்தர மேம்படுத்த வாரியம் உதவும்.

வன்னியத் தியாகிகள் நினைவு போற்றுதல்

  1. நம் வன்னிய முன்னோர்களின் நினைவை போற்றும் வகையில் பல விழாக்கள் பகுதி வாரியாக நடத்தப் படும்.
  2. மேலும் வன்னிய பெரியவர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவு மலர்கள் வெளியிடப்படும்.
  3. வன்னிய பெரியவர்களின் நினைவு மண்டபங்கள் அவர்களின் சொந்த மண்ணில் அமைக்கப்படும்.

வன்னியர்களுக்கான அரசியல்

  1. வன்னிய பெருமக்கள் அரசியல் தெளிவு பெற அரசியல் அறிவை வளர்த்து கொள்ளும் வகையில் அரசியல் பட்டறைகள் இலவசமாக நடத்தப் படும்.
  2. வன்னிய முன்னோர்களின் நினைவை போற்றும் வகையில் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்படும்.
  3. இளம் வன்னியர்கள் அரசியல் பற்றி அறிந்து கொள்ள சிறப்பு பட்டய படிப்புகளை இலவசமாக படிக்க வாரியம் உறுதி பூண்டுள்ளது.
  4. வன்னியர்களின் வரலாற்றை அனைத்து வன்னியர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இணையம் அமைக்கப்படும்.

ஏனைய முன்னெடுப்புகள்

  1. வன்னிய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் படியாக அவர்களுக்கான சிறப்பு பயிற்சியை இலவசமாக பெற உதவும்.
  2. பள்ளிக், கல்லூரி இறுதி தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
  3. வன்னிய சொந்தங்களுக்கு அவசரகால மருத்துவக் கடன் வசதி வழங்கப்படும்.
  4. வன்னியர்களுக்கான திருமண இணையம் ஏற்படுத்தப் படும்.
  5. உலகமெங்கும் பரவியுள்ள வன்னியர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அவை நம் தமிழ் மண்ணில் வாழும் வன்னிய சொந்தங்களின் நலம் சிறக்க அளிக்கப்படும்.
Menu