ஒரு நாட்டின் வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பு முக்கியமானது. மக்கள் தங்களுடைய சில சிறு அல்லது பெரிய தியாகங்களின் மூலம் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க முடியும். நாட்டின் அடிப்படை கட்டமைப்புகள் வளர்ச்சித் திட்டங்கள் மக்களுடைய தியாகத்தை உள்ளடக்கியே ஏற்பட்டு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. நாட்டின் உருவான அணைகள் அனைத்தும் மக்களுடைய வாழ்விடத்தை வாழ்வாதாரத்தை தியாகம் செய்வதன் மூலமாகவே அடைந்திருப்பதை நம்மால் உணர முடியும். ஒரு அணை உருவாக பல கிராமங்கள் அழிக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது, அந்தந்த அணையின் வரலாற்றை  படிக்கும்  பொழுது  உணர  முடிகிறது.

ஒரு கிராமம் அழிக்கப்படுகின்ற பொழுது அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் பல தலைமுறைகளாக திருத்தப்பட்டு பண்படுத்தப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பல தலைமுறைகளின் உழைப்பு அதன் பயனை அனுபவித்து வரும் மக்களின் எதிர்காலம் அங்கே அழிக்கப்படுகிறது. மேலும் அந்த கிராமத்தில் கால்நடைகளை வைத்து தொழில் செய்து வரும் ஒருவரின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதார எதிர்காலம் அழிக்கப்படுகிறது. அந்த கிராமத்தை வாழ்விடமாகக் கொண்டு தொழில் செய்து வந்தோரின் வாழ்வாதாரமும் வாழ்வியல் வாழ்வாதார எதிர்காலம் அழிக்கப்படுகிறது. இவை யாவும் தாண்டி ஒரு இனக்குழுவாக வசிப்போரின் குழு அடையாளமும் உணர்வுகள், உறவுகள், பிணைப்புகள் யாவும் அழிக்கப்படுகிறது.

 

அந்த கிராமத்தின் ஒட்டுமொத்த பொருளாதார சமுதாய பிணைப்பு மற்றும் அந்த கிராமத்தை நம்பி இருக்கும் ஏனைய ஊரின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வுரிமை எதிர்காலம் அழிக்கப்படுகிறது. அந்த கிராமத்தில் வசிப்பவரின் அத்தனை தியாகங்களின் கூட்டு முயற்சியே நாட்டின் வளர்ச்சியில் முன்னெடுப்புக்கான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்த தியாகத்திற்கு அரசு தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டியது அவசியம். இப்போதும் அரசுகளால் கொடுக்கப்படும் இழப்பீடு போதுமானதா?. இது இவர்களின் முழுத்தியாகத்தற்கான நியாயமான இழப்பீடோ என்பது கேள்விக்குறியே. இந்த இழப்பீடு போதுமா என்றால் அது கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

 

 

 

ஒரு சமூகத்தின் வாழ்வியலை அழிக்கின்ற பொழுது அதற்குரிய இழப்பீடுகளையும் அதற்கேற்றவாறு கொடுக்க வேண்டியுள்ளது என வலியுறுத்தி தான் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் தலைவர் அக்னி குல பெருந்தலைவன் சி என் இராமமூர்த்தி அவர்கள் சில கோரிக்கைகளை முன்னெடுத்து இருக்கிறார். இந்த முன்னெடுப்பு செய்யூர் – மரக்காணம் அனல் மின் நிலையம் போராட்டத்திலும் தற்போது நெய்வேலி போராட்டத்திலும் முன்னெடுக்கிறார்.

 

 

 

அதன்படி நிலத்தை இழக்கும் உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும், மேலும் அந்த நிலத்தின் மதிப்பிற்கு அந்த நிறுவனத்தின் முன்னுரிமை பங்குகள் நில உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கபடுகிறது .

 

மேலும் அந்த நிறுவனம் மூடப்படுகின்ற பொழுது அந்த மக்கள் அளித்த நிலம் சீர்படுத்தப்பட்டு அவர்களிடம் திருப்பி அளிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தும் மிகச் சிறப்பான ஒருங்கிணைந்த இழப்பீடாக அமையும் என்பதில் ஐயமில்லை. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அந்தப் பகுதியில் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும் அந்தப் பகுதியில் அல்லது மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

 

 

தொழில்நுட்ப வேலைகளுக்கு திறமையாளர்களை வெளியில் இருந்து பெற்றுக் கொண்டாலும் மற்ற வேலைகளுக்கு பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும். சில நாட்கள் அல்லது வாரங்களில் சுரங்கத்தின் பல்வேறு பணிகளுக்கான பயிற்சியை அளித்து தொழிலாளர்களை தயார் செய்ய முடியும் என்பதை மறுக்க இயலாது.

 

மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் நபர்களுக்கான வசிப்பிடத்தை தற்போதைய குடியிருப்பை ஒத்த பகுதியாகவோ அல்லது கிராமமாகவோ  உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது அந்த சமூகத்தின் வாழ்வியல் முறை சமூக பிணைப்புகள் மற்றும் உறவுகள் பாதிக்கப்படாமல்  புதிய பகுதியில் தங்கள் வாழ்வை தொடர முடியும். இது போன்றதொரு இழப்பீடு முறையை சந்திரப்பூர் வெஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் செய்துள்ளது.

 

 

 

 

மேற்குறிப்பிடப்பட்ட இழப்பீடுகள் சிலவற்றை செய்ய முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரு ஏக்கருக்கான இழப்பீடாக ரூபாய் 20,000 இருந்து 45,000 வரை வழங்கியுள்ளது பின்னர் மக்கள் போராட்டத்தின் வெளிப்பாடாக ஒரு ஏக்கருக்கான இழப்பீட்டை ரூபாய் 10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டது.

 

ஒரு ஏக்கரில் சுமார் 5 லிருந்து 15 கோடி ரூபாய் வரை நிலக்கரி தோண்டி எடுக்கப்படும் என்று ஆய்வில் கண்டு இந்த இழப்பீட்டை உயர்த்திக் கொடுக்கும் முடிவு எடுத்துள்ளது. மேலும் இங்கு நிலங்களை அளித்த குடும்பத்தினருக்கு தலா குடும்பம் ஒன்றுக்கு ஒருவர்  என  வேலை  வாய்ப்பு  கொடுக்கப்பட்டு  வந்தது.

 

பின்னர் இந்த முறையால் ஒரு ஏக்கர் வழங்கியவருக்கும் பல ஏக்கரில் நிலம் வழங்கியவர்களுக்கும் ஒரே மாதிரியான வேலை வாய்ப்பு என்பது ஏற்கப்படமுடியாத  நிலையில் ஒவ்வொரு 2 ஏக்கருக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு என முடிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ரூபாய் 45,000 இழப்பீட்டை வைத்துக்கொண்டு ஒரு ஏக்கர் வாங்க முடியாது என்ற நிலையில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தொகையை கொண்டு 4-5 ஏக்கர் நிலத்தை அருகில் உள்ள கிராமங்களில் வாங்க முடிந்தது. இதனால் அவர்கள் வாழ்வியல் மேம்பட்டது.

தலைவர் சி என் இராமமூர்த்தி அவர்கள் வைக்கும் கோரிக்கை என்பது முழுமையானது மற்றும் மக்களுக்கான அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக் கூடியது. அந்த நில உரிமையாளர்கள் எந்தவிதமான பாதிப்பும் இன்றி மாற்று வாழ்வை தொடர இது மிகச்சிறந்த முறையாகும்.

உலகத்தின் மின் சக்தி – ஒரு பார்வை

உலக அளவில் 2020 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 26.8 லட்சம் கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது உலக மின்சார உற்பத்தியில் 67.5% மின்சாரம் இயற்கை எரிபொருள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது மரபுசாரா எரிபொருள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 20.3% ஆகும் 2011 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி உலக அளவில் 41.5% நிலக்கரி மூலமாகவும் 22.1% மின்சாரம் இயற்கை வாயு மூலமாகவும் 3.9% மின்சாரம் என்னை சக்தி மூலமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது இதில் 15.1% நீர் சக்தி மூலமாகவும் 4.2% மூலமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது உலக அளவில் 22.2% மின்சாரம் அணுசக்தி மூலமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது

 

 

ஒரு கிகா வாட்டில் ஒரு பில்லியன் பாட்டில் உள்ளது ஒரு மில்லியன் வாட் என்பது ஒரு மெகாவாட் ஆகும் 1000 வாட் என்பது ஒரு கிலோவாட் என கணக்கிடப்படுகிறது ஒரு கிகா வாட் அவர் என்பது 1000 மெகாவாட் அவர் என கணக்கிடப்படுகிறது சீனா 8.53 லட்சம் கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது அமெரிக்கா சுமார் 4.38 லட்சம் கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது வல்லரசாக உறுதி கொண்டுள்ள இந்தியா 1.66 லட்சம் கிகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்கிறது

தமிழகத்தின் மின் சக்தி – ஒரு பார்வை

தமிழகம் பலவிதமான மின் சக்தி உற்பத்தி முறைகளை பின்பற்றி வருகிறது. தமிழகத்தில் மின்சக்தி காற்று மற்றும் சூரிய சக்தி, கழிவு பொருட்கள் மூலமாக, சிறிய நீர் சக்தி நிலையங்கள் மற்றும் பெரிய நீர் சக்தி நிலையங்கள் மூலமாகவும், கடல் அலை, சூரிய வெப்பம் மூலமாகவும்  மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. இவை தவிர அணுசக்தி மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலமாகவும் மின்னு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகம் தன்னுடைய மின் உற்பத்தியை சுமார் 3387 மெகாவாட்டில் இருந்து 77153 மெகா வாட்டாக உயர்த்த முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் மின் தேவையில் 28% அனல் மின் நிலையங்கள் மூலமாகவும் 50% இயற்கை மின்சார உற்பத்தியின் மூலமாகவும் 14% நீர் சக்தி மூலமாகவும் 5% அணுசக்தி மூலமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இயற்கை வழி மின்சக்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கின்றது. 2017 18 ஆம் ஆண்டுகளில் சுமார் 13 மி யூனிட்டுகள் காற்று மூலமாகவும் 2905 சூரிய சக்தி மூலமாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றது.  இந்த இயற்கை வழி மின் தூர உற்பத்தியின் மூலமாக சுமார் 5406 மின் கரிய நிலவாயு உற்பத்தி தடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவைப் பொருத்தமட்டில், கிட்டத்தட்ட 57.3% மின்சாரத்தை நிலக்கரியிலிருந்தே பெறுகிறோம். கிட்டத்தட்ட 80% நிலக்கரி இந்தியாவிலிருந்தே எடுக்கப்படுகிறது.பெரு/குறு நீர்மின் திட்டங்கள் மூலம் 14.5% மின்சாரமும், காற்றாலை மூலம் 9.9%, சூரிய சக்தி மூலம் 6.3%, அணுமின் திட்டங்கள் மூலம் 2%, எரிவாயு மூலம் 7.2%, உயிரியல் தாவரங்கள் மூலம் 2.7%, டீசல் மூலம் 0.2%  பெறப்படுகிறது. இதில் சூரிய மின்சக்தி, காற்றாலை, பெரு/குறு நீர்மின் திட்டங்கள் மூலம் பெறப்படும் மின்சக்தியை, மரபு சாரா எரிசக்தி எனவும், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் மரபு சாரா எரிசக்தித் துறை 1982-லிருந்தே செயல்பட்டுவருகிறது. இரண்டு முறை, அது பெயர் மாற்றப்பட்டு, தற்போது  ‘மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை’ என்கிற பெயரில் இயங்கிவருகிறது. இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில், சுமார் மூன்றில் ஒரு பங்கு (33%) புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது. பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இது ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனைதான். என்றாலும் ஸ்வீடன், ஸ்காட்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் போன்ற சில நாடுகள், 100% நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவின் இந்த வளர்ச்சியை உற்று நோக்கிய ஐஇஇஎப்ஏ என்கிற சர்வதேச ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனம், இந்தச் சாதனைக்குத் தமிழ்நாடு சிறந்த முன்மாதிரியாக இருப்பதைக் கண்டுபிடித்தது. புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் துறையில் தமிழ்நாடு 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வகித்துவருகிறது. இந்தியாவில் தற்போது உற்பத்தியாகும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு (18.5%) தமிழகத்தின் பங்கு.

தமிழகத்தின் மின் கட்டமைப்பையும், ஆற்றலையும் ஐஇஇஎப்ஏ ஆய்வுசெய்து, சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் தற்போதைய நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் 62% திறனுடன் இயங்குகிறது. இந்தத் திறன் 2026/27 வாக்கில், 45% நோக்கிக் குறைய வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக, மின்செலவுகள் அதிகரித்து, மின்சார விலை அதிகரிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

காற்றாலை மின்உற்பத்தியில் தமிழகம் முன்னோடியாக இருந்தாலும், இங்கே உள்ள ஆலைகள் 20 வருடங்களுக்கும் மேலானவை. இதில் உள்ள தொழில்நுட்பங்களும் பழையவை. இவற்றை மேம்படுத்துதல் மூலம், காற்றாலை உற்பத்தியை இரட்டிப்பு செய்ய வாய்ப்பு உள்ளது. தெளிவான, தீர்க்கமான முறையில், புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கிப் பயணித்தால், 2026/27-ம் ஆண்டுக்குள், தமிழகத்தின் 56% மின்சக்தியைக் காற்றை மாசுபடுத்தாத வளங்கள் மூலம் பெற முடியும் என்கிறது ஆய்வறிக்கையின் முடிவு. நிலக்கரி சார்ந்த புதிய மின்திட்டங்களை மக்களின் ஆதரவோடு நிறைவேற்றுவது இனிமேல் கடினம் என்பதைத் தாண்டி, அத்திட்டங்கள் தவிர்க்கவியலாத தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. நெடுவாசல் தொடங்கி கதிராமங்கலம் வரை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவில்லை.

தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்குப் பயணத்தை மக்கள் அனைவரும் எடுத்துக்கொள்ள இதைவிடச் சிறப்பான சந்தர்ப்பம் அமையாது. மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தமிழகம் அறிமுகப்படுத்திய விதம்போல, ஒவ்வொரு  வீட்டிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் ஏற்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்சார்பு மின்சாரத்தை வீட்டிலேயே அடையும்போது, நிலக்கரிக்கான தேவையோ, ஹைட்ரோ கார்பனுக்கான தேவையோ, மீத்தேனுக்கான தேவையோ இருக்கப்போவதில்லை.

விவசாயக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு போன்றவை இடம் பெறுகின்றன.இவற்றுள் ‘பயோமாஸ்’ எனப்படும் விவசாயக் கழிவுகள் வாயிலாக, நிலையான அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும். வேலி காத்தான் அல்லது கருவேல மரக்கட்டைகள், கரும்புத் தோகை, காய்ந்த எள்ளுச் செடி, காய்ந்த பஞ்சு செடி, உமி, மரப்பட்டறைகளிலிருந்து கிடைக்கும் மரத்தூள், சோளத்தட்டை, தென்னை அடிமட்டை போன்ற வேளாண் கழிவுகள் எரிபொருளாக பயன்படுகின்றன. இவற்றை, மிகப் பெரிய பாய்லரில் இட்டு எரிக்கும் போது, பாய்லரில் உள்ள தண்ணீர் சூடாகிறது. அதன் மூலம் கிடைக்கும் நீராவியால் டர்பைன்கள் சுழல வைக்கப்படும் போது, மின்சாரம் உற்பத்தியாகிறது. 1.75 கிலோ விவசாயக் கழிவுகளை எரிப்பதன் வாயிலாக ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். முதன் முதலில், எம்.பி. டிஸ்லரி நிறுவனம், 1996ம் ஆண்டு, காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள பழைய சீவரம் என்ற இடத்தில், அதன் சர்க்கரை ஆலைகளிலிருந்து கிடைக்கும் கரும்புச் சக்கை, கருவேல மரம் போன்ற விவசாயக் கழிவு களை எரிபொருளாகக் கொண்டு பயோமாஸ் மின் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியது. இதையடுத்து, இந்து பாரத் நிறுவனம், 2006ம் ஆண்டு தூத்துக்குடியில் 20 மெகாவாட் உற்பத்தி திறனில் இத்திட்டத்தை அமல்படுத்தியது. இந்நிறுவனம்,விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின் உற்பத்தி மேற்கொள்ளும் திட்டத்தில் இறங்கியது. தமிழ்நாட்டில், பயோமாஸ் மின் திட்டங்களின் மூலம் 300 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, 116 மெகாவாட் நிறுவு திறனில் பயோமாஸ் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ஆனால், இந்த மின் திட்டங்களில் இருந்து 80 மெகாவாட் அளவிற்கே மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. மின் உற்பத்தி குறைவிற்கு பல காரணங்கள் உள்ளன. இது பற்றி பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பயோமாஸ் மின் திட்டங்கள் வாயிலாக 17,000 மெகாவாட் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.

தற்போது, நாடு தழுவிய அளவில் 40 பயோமாஸ் மின் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றின் நிறுவு திறன் 900 மெகாவாட். ஆனால், இவை அனைத்திலுமாக, 450 மெகாவாட் அளவிற்கே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் தற்போது ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி (ஸ்ரீராம் குழுமத்தின் ஓர் அங்கம்), ஆரோ மீரா கிரீன் எனர்ஜி, ஈ.டி.ஏ. பவர் ஜென், சக்தி சினர்ஜி (டி.வி.எஸ் குழுமம்), தமிழ்நாடு கெமிக்கல் புராடக்ட், நந்தா எனர்ஜி ஆகிய ஆறு நிறுவனங்கள் பயோமாஸ் மின் உற்பத்தி துறையில் உள்ளன.

இவற்றுள் ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனிக்கு, திண்டுக்கல் – செம்பட்டி, பட்டுக்கோட்டை – குறிச்சி, வந்தவாசி – ஆயிலவாடி மற்றும் பொள்ளாச்சி – கரியான் செட்டி பாளையம் ஆகிய நான்கு இடங்களில் மின் உற்பத்தி மையங்கள் உள்ளன. இதில் முதல் மூன்று பிரிவுகள் தலா 7.50 மெகாவாட்டும், பொள்ளாச்சி மின் திட்டம் 10 மெகாவாட் மின் உற்பத்தி திறனையும் கொண்டுள்ளன. ஆக, இந்நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 32.50 மெகாவாட். ஆரோ மீரா கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு புதுக்கோட்டை (7.50 மெகாவாட்), மதுரை – டி.கல்லுப்பட்டி (10 மெகாவாட்) மற்றும் சங்கரன் கோவில் (18 மெகாவாட்) ஆகிய இடங்களில் மின் உற்பத்தி திட்டங்கள் உள்ளன. இதன் மொத்த மின் உற்பத்தி திறன் 35.50 மெகாவாட் ஆகும். ஈ.டி.ஏ. பவர் ஜென் நிறுவனத்திற்கு சாத்தூரில், 10 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஆலை உள்ளது. சக்தி சினர்ஜி நிறுவனம், தர்மபுரி மாவட்டம் பொச்சம்பள்ளியில் 10 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டத்தை கொண்டுள்ளது. தமிழ்நாடு கெமிக்கல் புராடக்ட் நிறுவனத்திற்கு காரைக்குடியில் 9 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டம் உள்ளது. நந்தா எனர்ஜி நிறுவனம், பழைய சீவரத்தில் 18 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் திட்டத்தை கொண்டுள் ளது.பயோமாஸ் மின் உற்பத்தி நிறுவனங்கள், தொடர்ந்து இத்துறையில் ஈடுபட இயலாத அளவிற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. பல நிறுவனங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கிடைக்கும் விலையை விட, உற்பத்தி செலவு மிகவும் அதிகமாக உள்ளதுதான்.

பயோ மாஸ் மின் உற்பத்தி துறையினர் சந்தித்து வரும் பிரச்னைகள், தமிழ்நாட்டின் மின் உற்பத்தி, பயன்பாடு, மற்றும் மரபுசாரா எரிசக்தி துறைக்குள்ள எதிர்காலம் உள்ளிட்டவை குறித்து ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனியின் துணைத் தலைவர் (திட்டம்) ஆர். குலோத்துங்கன், தினமலர் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு: தமிழ்நாட்டின் மின் உற்பத்தி மற்றும் தேவை எந்த அளவிற்கு உள்ளது? தமிழ்நாட்டிற்கான மொத்த மின் தேவை 12,000 மெகாவாட் ஆகும். நீர்மின் திட்டம், அனல் மின் திட்டம், எரிவாயு, காற்றாலை, அணுமின், பயோமாஸ், சுய மின் திட்டங்கள் என 10,250 மெகாவாட் நிறுவு திறனில் மின் திட்டங்கள் உள்ளன.ஆனால், மின் உற்பத்தி 9,720 மெகாவாட் என்ற அளவில்தான் உள்ளது. மீதமுள்ள தேவை, வெளிமாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது. தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மின் உற்பத்தி இல்லாததால் தான் மின் வெட்டு அமலாக்கப்படுகிறது.

பயோமாஸ் மின் உற்பத்தி துறைக்குள்ள பிரச்னைகள் என்ன? அதற்கான தீர்வு எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? பயோமாஸ் மின் திட்டங்களின் வாயிலாக, நிலையான அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும். இதனால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதுடன், கிராமப் பொருளாதாரம் நல்ல அளவில் மேம்படும். பாய்லர்களில், எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளிலிருந்து வெளியேறும் சாம்பல், மாசு கட்டுப்பாட்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப, நவீன தொழில் நுட்பத்தில் வடிக்கட்டப்படுகின்றது.

இந்த சாம்பல் எருவாகவும் பயன்படுகிறது.மரபு சாரா எரிசக்தி பிரிவின் கீழ் வரும் இந்த பயோமாஸ் திட்டத்தில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான செலவு மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அளிக்கும் தொகை குறைவாக உள்ளது. மேலும், பயோமாஸ் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, தமிழக மின்சாரத் துறை அளிக்க வேண்டிய தொகை, கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் முதல், சென்ற ஜூலை மாதம் வரையிலுமாக, 35 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், நிலுவை தொகையும் வழங்கப்படாததால், இத்துறையில் உள்ள பல நிறுவனங்கள் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. கடந்த 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் ஒரு டன் கருவேல மரக்கட்டைகள் விலை, 450-500 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது (2011) 3,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது,தவிர பணியாளர்களுக்கான ஊதியம், வட்டி மற்றும் தேய்மானச் செலவுகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. முன்பு, தமிழக மின் துறை ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 3.15 ரூபாய் வழங்கி வந்தது. பின்பு, இது,4.50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இருப்பினும், தற்போது, ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு, கட்டை உள்ளிட்ட எரிபொருள்களுக்கான செலவினம், 4 ரூபாயாகவும், வட்டி, ஊதியச் செலவு, தேய்மானம் போன்ற இனங்களில் 1.50 ரூபாயும் செலவாகிறது.

ஒரு யூனிட் மின் உற்பத்தி செய்ய 5.50 ரூபாய் செலவாகிறது. ஆக, ஒரு யூனிட் மின் உற்பத்தியில், 1 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்று, இடர்பாடு இருப்பதை உணர்ந்த தமிழக அரசும், கடந்த 2009ம் ஆண்டில், இத்துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் மின் உற்பத்தியை வெளியார்களுக்கு விற்பனை செய்ய அனுமதி அளித்தது. நிறுவனங்களும், ஒரு யூனிட் மின்சாரத்தை 6 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யத் தொடங்கின. இந்நிலையில், மின் பகிர்மான நடவடிக்கைகளுக்காக, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா வீதம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு யூனிட் மின் விற்பனையின் வாயிலாக 20 பைசா இழப்பு ஏற்படுகிறது. தொழிலை நிறுத்தக்கூடாது என்ற நிலையில், சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகபட்சமாக, ஒரு யூனிட் மின்சாரத்தை 4 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன. இந்நிறுவனங்களின் போட்டியையும் எங்களால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே, தமிழக அரசு, நிலையான அளவில் மின் உற்பத்தி வழங்கும் திறன்படைத்த பயோமாஸ் மின் உற்பத்தி துறைக்கு சலுகைகள் வழங்க வேண்டும்.

குறிப்பாக, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு வழங்கும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். குறைந்த விலையில், எரிபொருள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இதற்கு, தரிசு நிலங்களில், எரிபொருளுக்கான மரங்கள் வளர்ப்பிற்கு அனுமதி வழங்கலாம். பயோமாஸ் மின் திட்டம் அமைப்பதற்கான திட்டச் செலவு எந்த அளவிற்கு உள்ளது? காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தி திட்டங்களுக்கு எந்த அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும்? மரபு சாரா எரிசக்தி பிரிவில், பயோமாஸ் மின் திட்டமே சிறந்தது எனலாம். ஒரு மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பயோமாஸ் மின் திட்டத்திற்கான திட்ட முதலீடு 5 கோடி ரூபாயாகும். அதேசமயம், இதே திறன் கொண்ட காற்றாலை திட்டத்திற்கு 6 முதல் 7 கோடியும், சூரிய மின்சக்தி திட்டத்திற்கு 14 கோடி ரூபாயும் செலவிட வேண்டும். ஆனால், காற்றாலை மின் திட்டம் என்பது, காற்று வீசினால் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும்.

தமிழ்நாட்டில், அக்டோபர் முதல் மார்ச் வரையில் காற்றாலைகளிலிருந்து மின் உற்பத்தி இருக்காது.பயோமாஸ் மின் உற்பத்தியில், ஒரு ஆலையில்,நேரடியாக 50 பேருக்கும், மறைமுகமாக, 150 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கு, ஒரு மணி நேரத்திற்கு, 12-15 டன் எரிபொருள் தேவை. ஒரு ஆலை 24 மணி நேரமும் மின் உற்பத்தி செய்யும் நிலையில், சராசரியாக, 300-350 டன் எரிபொருள் தேவைப்படும். ஆக, ஒரு நாளைக்கு (1 ஙீ 24 மணி ) 24 மெகாவாட் அல்லது 24,000 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.பங்குச் சந்தையில் பட்டி யிலிடப்பட்டுள்ள, ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி, கடந்த 2010ம் ஆண்டு, பொதுமக்களுக்கு பங்குகளை வெளி யிட்டு (பங்கு ஒன்று 47 ரூபாய்), 963 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.

 

தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்கள் வைக்கும் கோரிக்கை என்பது முழுமையானது மற்றும் மக்களுக்கான அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக் கூடியது. அந்த நில உரிமையாளர்கள் எந்தவிதமான பாதிப்பும் இன்றி மாற்று வாழ்வை தொடர இது மிகச்சிறந்த முறையாகும்.

 

அனல் மின் நிலையத்திற்கான உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய, மாநில அமைச்சர்கள், NLC நிறுவனத்தின் தலைவர், NLC நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் ஏனைய அரசுத் துறை பொறுப்பாளர்களுக்கும் நமது கட்சியின் சார்பாக கோரிக்கை விடுத்திருந்தோம்.

 

NLC யின் நிர்வாகக்குழு தலைவர் (Chairman) திரு. பிரேம்குமார் மோட்டுப்பள்ளி அவர்களை சந்தித்து NLC மக்களுக்கு செய்ய வேண்டிய நியாயமான கோரிக்கைகள் பற்றி விரிவாக விவரித்தேன். நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

 

 

 

 

இதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தில்  NLC நிர்வாகம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக NLC யின் ரீஜினல் மேனேஜர் திரு. K. பிரபு கிஷோர்.

 

 

 

 

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. கி. பாலசுப்ரமணியம் IAS (தற்போது மாற்றப்பட்டுள்ளார்) அவர்களை சந்தித்து NLC நிலஆக்கிரமிப்பால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாங்கள் குறித்தும் பேசினேன்.

 

 

அதன் பின்பு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். உயர்திரு.R. ராஜாராம் IPS அவர்களை சந்தித்து NLC விவகாரம் பற்றியும் மக்களின் போராட்டம் குறித்தும் நியாயம் கிடைக்க பேசினேன்.

 

அவர்களை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலைபாட்டை எடுத்துக் கூறினேன். அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் மக்களுக்கான நிலைபாட்டையும் எடுத்துக் கூறினேன்.

 

மக்களின் கருத்துப்படி தான் NLC நிர்வாகம் செயல்பட வேண்டும் என்றும் மக்களுக்கு எதிராக செயல்பட்டால் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினேன். நம்முடைய அடுத்தகட்ட நடவடிக்கைகக்கான வேலைபாடுகள் நடந்து கொண்டுள்ளது. அந்த போராட்டம்  செயல்படுத்தும் போது நம் மக்களுக்கு தெரிய வரும்.

 

 

பிறகு மாண்புமிகு தொழிற்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு,

 

 

 

 

 

வேளாண்மைதுறை அமைச்சர் மாண்புமிகு திரு. M.R.K. பன்னீர்செல்வம் .

 

 

 

மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. C.V. கணேசன் அவர்களையும் சந்தித்து

 

 

 

NLC நிர்வாகத்தின்  நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மக்களின் குரலாக  பேசினேன். அனைத்து அமைச்சர் பெருமக்களும் மக்களுக்கு சாதகமான சூழ்நிலையை செயல்படுத்துவோம் என்று கூறினர்.

 

அதன் பின்பு, NLC மற்றும் தமிழக அரசின்  முதல்வர் மற்றும் முக்கியமான துறையை சார்ந்த 37 பேருக்கு அஞ்சல் அனுப்பியுள்ளேன்.

 

 

 

நம்முடைய அடுத்தக்கட்ட செயல்பாடுகள் நடந்துகொண்டுள்ளன. விரைவில் நம் மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

 

நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம், இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் காவல்துறையை வைத்து வலுக்கட்டாயமாக நிலப்பறிப்பில் ஈடுபடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மண்ணின் மக்களின் நிலவுரிமையை மீறி அவர்கள் கருத்துக்கெதிராக மத்திய மாநில அரசுகள் செயல்படக்கூடாது. அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சி இதற்காக மக்களின் கருத்துக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடும்.

 

மக்களின் நலனுக்கான அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் கோரிக்கை:

 

1) NLC விரிவாக்க திட்டத்திற்காக மக்களிடமிருந்து எடுக்கப்படும் நிலங்களுக்கு பணமாக கொடுப்பதற்கு பதில் அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு அந்த பணத்திற்கு பதில் NLC இன் முதலீட்டு பங்கில்  முன்னுரிமை பங்கு (Preferential share) கொடுத்து பங்குதாரராக்க வேண்டும். இதனால் நிலத்தை இழந்தவர்களுக்கு  NLC யின் வருமானத்தில்  நிலஉரிமையாளருக்கான உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்கும். லாபமோ நஷ்டமோ NLCக்கு ஏற்பட்டாலும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மாறாது.

 

2) நிலங்கள் எடுக்கப்படும் கிராமங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவர்களின் ரேஷன்கார்டு ஆவண அடிப்படையில் வேலையில் முன்னுரிமை கொடுத்து வேலை கொடுக்க வேண்டும். கல்வித்தகுதி பார்க்காமல் வேலை கொடுக்க வேண்டும். ஏன்னென்றால் NLC யில் செய்யும் வேலை என்பது 10 நாட்களில் கற்றுக்கொடுத்து செய்யக்கூடிய வேலை (Devision of labour). அதனால் கல்வித்தகுதி பார்க்காமல் வேலை கொடுக்க வேண்டும். இந்த மாதிரி நிகழ்வு தைவான், சீனா மற்றும் கொரியாவில் அந்நாட்டு அரசு ஏற்கனவே செய்துள்ளது.

 

3) நிலங்கள் எடுக்கப்படும் உள்ளூர்வாசிகளுக்கே 100% வேலை கொடுக்க வேண்டும். பிறமாநிலத்தில் இருந்து வேலை செய்ய ஆட்களை கொண்டுவரக் கூடாது.

 

4) வீடுகளை இழந்த கிராம மக்களுக்கு அவர்கள் ஏற்கனவே இருந்த கிராம மாதிரி  அமைப்பு படி அரசு நிலத்தில் வீடுகட்டி கிராமம் அமைத்து கொடுக்க வேண்டும். இதனால் வீட்டை இழந்தவர்கள் அவர்கள் அருகில் வசித்த உறவுகள் மற்றும் சகோதர சமுதாயம் எப்படி பக்கத்தில் இருந்தார்களோ அதே கிராம மாதிரி  அமைப்பில்  வசிப்பார்கள். இதே மாதிரியான கிராம அமைப்பை அரசு நிர்மானித்து தர வேண்டும்.

 

5) NLC வேலை முடிந்து அந்த இடத்தில் NLC யை மூடும்போது அந்த நிலங்களை சமப்படுத்தி திரும்ப நிலங்களை வாங்கியவர்களிடமே நிலங்களை ஒப்படைக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய அரசு உறுதிகொடுத்து அரசாணை வெளியிட்டால் மட்டுமே நிலங்களை எடுக்க நாங்கள் அனுமதிப்போம். இல்லையென்றால் மக்களின் கருத்துக்கேற்ப மக்களோடு இணைந்து அனைத்திந்திய பாட்டாளி முனனேற்றக் கட்சி போராடும்.

 

ஏற்கனவே செய்யூர் மற்றும் மரக்காணம் அனல்மின் நிலைய திட்டத்திற்கு இந்த முறையை வைத்துதான் நாங்கள் போராடினோம்.

 

பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் அமைப்பற்காக, மின் உற்பத்தி நிலையம் நிறுவுவதற்காக 1956ஆம் ஆண்டில் தொடங்கி பல்வேறு கட்டங்களில் சுமார் 40,000 ஏக்கர் நிலத்தை  என்.எல்.சி.  கையகப் படுத்தியுள்ளது.

 

ஏற்கெனவே, நிலம் கொடுத்த மக்கள் என்.எல்.சி.யின் வாக்குறுதிப்படி இழப்பீடோ, வேலை வாய்ப்போ கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

1980களுக்கு முன்பு வரை நிலம் கொடுத்த மக்களுக்கு ஒப்பந்தப் பணியும், தமிழ்நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கி வந்த என்.எல்.சி. நிறுவனம், மண்ணின் மக்களுக்கு வேலை வழங்குவதை நிறுத்திவிட்டது. மாறாக, வெளி மாநிலத்தவர்களே, வேலை வாய்ப்பு பெற்று நெய்வேலியில் குவிகிறார்கள்.

எனவே, என்.எல்.சி. விரிவாக்க திட்டத்திற்காக மத்திய மாநில அரசுகள் இந்த கிராமங்களில் உள்ள மக்களின் கருத்துக்கேற்ப செயல்பட வேண்டும்.  மக்களின் கருத்துக்கு எதிராக செயல்பட கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

அந்த கோரிக்கையின் சாராம்சம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

———————–

(தமிழில்)

 

பெறுநர்

 

அன்புடையீர்,

பொருள்:

நெய்வேலி சுரங்கத்தின் இரண்டாவது, மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துதல் – இதற்காக கரிவெட்டி, காரைமேடு, கதக்கள, மும்மூசோளகம், மேல்வலையமாதேவி மற்றும் கீழமேலவளையமாதேவி, அம்பாள்புரம், தலைகுளம், நத்தமேடு, கிருஷ்ணாபுரம், வடக்குதிட்டை, முத்துகிருஷ்ணாபுரம், தெற்குத்திட்டை, மனவெளி, வண்டுராயன்பட்டு, உடையூர், பூதவராயன்பேட்டை, புவனகிரி, அழிச்சிகுடி, ஓரத்தூர், சாவடி, நகரமலை, சின்னநத்தம், மிராலூர், மஞ்சகொள்ளை ஆகிய கிராமங்களில் நிலம் எடுக்கப் படவுள்ளது – அந்தப் பகுதி மக்களுக்கான இழப்பீடு குறித்து எங்களது கோரிக்கைகள் – அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகள்.

 

சி. என். இராமமூர்த்தி எனும் நான் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருகிறேன்.

எங்களது அமைப்புகள் மூலமாக சமுதாய மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அரசியல், சமூக, சட்டப் போராட்டங்கள் மூலமாக நிறைவேற்றி சாதனை புரிந்திருக்கிறோம்.

இந்த கோரிக்கை ஆவணம் நெய்வேலி சுரங்கத்தின் மூன்றாவது சுரங்க விரிவாக்கம் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் போது கொடுக்கப்பட வேண்டிய இழப்பீடு குறித்தது. அந்தப் பகுதி மக்களின் தியாகத்திற்கு நியாயமான இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டி இந்த கோரிக்கைகளுக்காக எங்கள் இயக்கம் சார்பாகக் குரல் எழுப்புகிறோம்.

எங்களைப் பற்றி

 

வன்னியர் கூட்டமைப்பு தமிழகத்தின் தனிப்பெரும் வன்னிய சமூக கூட்டமைப்பு. எங்கள் அரசியல் கட்சி அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி. எங்கள் கட்சியின் மூலமாக அனைத்து சமூகத்திற்குமான நலத்திற்கு முன்னெடுப்புகள் செய்து வருகிறோம். எங்களது கடந்த கால சாதனைகள் சில.

 

 

1.வன்னிய மக்களுக்கான 10.5% சதவிகித இட ஒதுக்கீட்டை பலவிதமான அரசியல் சமூக சட்ட போராட்டங்கள் மூலமாக சாதித்துள்ளோம்.

 

2.வன்னிய பொது சொத்து வாரியம் அமைப்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து அதன் மூலமாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் நிறைவேற்றி பின்னர் மாண்புமிகு ஜனாதிபதியின் ஒப்புதல் பேரில் நிறைவேற்றிய சட்டத்தின் படி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

 

3.வன்னிய இனத்திற்கான நல வாரியம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி அமைத்தது.

 

பின்னூட்டம்

 

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இதுவரை சுமார் 37256 ஏக்கர் நிலத்தை சுமார் 25000 குடும்பங்களிடமிருந்து பெற்று சுரங்கங்கள் அமைத்துள்ளது. அனைவருக்கும் வேலை என உறுதிமொழி அளிக்கப்பட்டது ஆயினும் 1827 பேருக்கு மட்டுமே நிரந்தரப் பணி வழங்கப்பட்டது சுமார் 3500 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டது நிரந்தர பணியாளர்கள் யாவரும் ஓய்வு பெற்று விட்டார்கள் ஏற்கனவே கொடுத்த எந்த ஒரு உறுதிமொழியையும் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது உள்ள நில உரிமையாளர்கள் காலத்திற்கு ஏற்ற இழப்பீடும் கொடுக்கப்படும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுமா என்ற அச்சமும் கொண்டுள்ளனர் சரியான இழப்பீடுகள் பெற வேண்டும் என்று தற்போது போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் முன்னொரு முறை நிலம் கையகப்படுத்திய பொழுது ஏக்கருக்கு ரூபாய் ஆறு லட்சம் மட்டுமே இழப்பீடாக கொடுக்கப்பட்டது . பல்வேறு போராட்டங்களுக்கும் பின் நிறுவனம் கூடுதலாக ரூபாய் 3 லட்சம் கொடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் அந்த பணம் இன்னும் அனைவருக்கும் முழுமையாக கொடுக்கப்படவில்லை.

உள்ளூரில் வசிப்பவர்களுக்கும் நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு உறுதியளித்த நிறுவனம் பின் நாட்களில் வட இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளது. நிறுவனத்தில் உள்ள அனைத்து பணிகளுக்கும் வட இந்தியர்களை அமர்த்தி உள்ள இந்த நிறுவனம் உள்ளூர் மக்களை புறக்கணித்து வந்தே உள்ளது.

தற்போது நடைபெற இருக்கும் நில கையகப்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள்

தற்போது நெய்வேலி சுரங்க நிறுவனம் தங்களது மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு சுமார் 25000 நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டு அதை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக கரிவெட்டி, காரைமேடு, கதக்கள, மும்மூசோளகம், மேல்வலையமாதேவி மற்றும் கீழமேலவளையமாதேவி, அம்பாள்புரம், தலைகுளம், நத்தமேடு, கிருஷ்ணாபுரம், வடக்குதிட்டை, முத்துகிருஷ்ணாபுரம், தெற்குத்திட்டை, மனவெளி, வண்டுராயன்பட்டு, உடையூர், பூதவராயன்பேட்டை, புவனகிரி, அழிச்சிகுடி, ஓரத்தூர், சாவடி, நகரமலை, சின்னநத்தம், மிராலூர், மஞ்சகொள்ளை ஆகிய கிராமங்களில் நிலம் எடுக்கப் படவுள்ளது.

தென்னாட்டின் பசுமை தீர்ப்பாயம் இது குறித்து வந்த வழக்கை தள்ளுபடி செய்த பிறகு அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் அரசுக்கு சாதகமாக 2019 இல் இறங்கியுள்ளனர் பல்வேறு அடக்குமுறைகள் மூலமாக மக்கள் ஒடுக்கப் படுகிறார்கள் இந்தப் பகுதி மக்கள் வைத்த கோரிக்கைகள் கீழ்கண்டவை  ஆகும்.

  1. வேலைவாய்ப்புஉறுதி
  2. உறுதிஅளித்தபடிஇழப்பீடு பெறுதல்

இதற்கிடையே சட்டமன்றத்தில் தொழிற்துறை அமைச்சர் பேசுகின்ற பொழுது, ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் தருவதாக சொல்லியிருக்கிறார். 1800 பேருயாகக்கு வேலை இருக்கிறது, அதற்கு போட்டி போட வேண்டும், அதில் இடம் கொடுத்தவர்களுக்கு 20 மார்க் கூடுதலாக கொடுக்கபடும் என்று அறிவித்திருக்கிறார்.

நிலம் வைத்திருப்பவர்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஐந்து சதவீதம் மக்கள் மட்டுமே நிலம் வைத்திருக்கிறார்கள். நிலம் இல்லாதவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம், அவர்களுக்கு வாழ்வாதாரம் எப்படி உருவாக்கப் பட இருக்கிறது போன்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை.

மேற்கண்ட உறுதிமொழிகள் கிடைக்காத பட்சத்தில் நிலத்தை கையகப்படுத்துவதை தடுத்தல் கையகப்படுத்தப்படும் நிலங்களில் தற்போது இங்குள்ள விவசாயிகள் உளுந்து சிறுதானியங்கள் காய்கறிகள் மற்றும் மிகுந்த லாபமிக்க. கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து விவசாய உற்பத்திகளும் மிகுந்த லாபம் கொடுக்கக் கூடியது இதன் மூலமாக இந்தப் பகுதி விவசாயிகள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் தரிசுகளாக இருந்த இந்த நிலங்களை பண்படுத்தி சீர்திருத்தி சிறந்த விவசாய நிலமாக மாற்றியதில் பல தலைமுறைகள் தங்கள் உழைப்பை தங்கள் மூலதனத்தை மற்றும் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்ததற்கான எந்தவித முழுமையான இழப்பீட்டையும் பெற முடியுமா என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது.

நில உரிமையாளர்களுக்காக எங்களது கோரிக்கைகள் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பு நில உரிமையாளர்களுக்காக கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றுவதன் மூலமாக அந்தப் பகுதியில் நிலங்களை சுரங்கப்பணிகளுக்காக வழங்கும் நில உரிமையாளர்களுக்கு நியாயமான, சரியான, கௌரவமான இழப்பீடு கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்திய நாட்டின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் பொழுது கொடுக்கப்பட்ட இழப்பீடுகளை முன்னுதாரணமாக வைத்து இந்த கோரிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பகுதி மக்களின் சார்பாக எங்கள் கோரிக்கைகள்

  1. நிலத்திற்கானஇழப்பீட்டைரொக்கமாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கலாம்.
  2. நெய்வேலிசுரங்கநிறுவனம் நிலம் அளிப்பவர்களுக்கு அந்த நிலத்திற்கான சந்தை மதிப்பிற்கு தங்கள் நிறுவனத்தின் முன்னுரிமை பங்குகளை அளிக்க வேண்டும். அந்தப் பங்குகள் நில உரிமையாளர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கானதாக இருக்க வேண்டும். இதன் மூலமாக முன்னுரிமை பங்குகள் ஈட்டி தரும் வருடா வருடத்திற்கான ஈவுத்தொகை நில உரிமையாளர்களுக்கு பயனாக அமையும். இதன் மூலம் தங்கள் விவசாயத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் சம்பாதிக்கும் லாபத்திற்கு நிகராக லாபம் ஈட்ட முடியும்.
  3. நிலம்மட்டுமின்றிசமூக வாழ்விடங்கள் கையகப்படுத்தும் பொழுது அந்தப் பகுதியை போன்றதொரு கட்டுமான கட்டமைப்பை மாற்றிடத்தில் அமைத்து அந்த மக்களுக்கு கொடுக்க வேண்டும் இதன் மூலமாக அந்த மக்களின் சமூக கட்டமைப்புகள் பிணைப்புகள் சிதறாமல் பராமரிக்கப்படும்.
  4. வேலைவாய்ப்பைபொருத்தவரையில்அனைத்து நில உரிமையாளர்களுக்கும், நிலம் இல்லாதவர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் குடும்பக் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும், இந்தப் பகுதியின் இருபாலருக்கும் கட்டாயமாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.  அனைவரையும் பணியில் அமர்த்திய பிறகும் வேலையாட்கள் தேவை எனில் அந்த மாவட்டத்தின் பிறப்பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன் பிறகு மற்ற மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இந்த நிறுவனத்தின் பெரும்பாலான வேலைகள் சில நாட்கள் பயிற்சியின் மூலமாக நிறைவேற்ற முடியும் என்பதால் அந்த பகுதி மக்களை பயிற்சி கொடுத்து பணிக்கு அமர்த்த முடியும். சில தொழில்நுட்ப பணிகளுக்கான வேலையாட்களை வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு அமர்த்தலாம் எக்காரணம் கொண்டும் குறைந்த ஊதியத்தில் பணிபுரிய தயாராயிருக்கும் வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை கொடுக்கப்பட கூடாது.
  5. சுரங்கப்பணிகள்முடிந்த பிறகு நிலத்தை பயன்படுத்தியப் பின்னர் பயன்படுத்தப்பட்ட நிலங்களை, அந்தந்த நிலத்தின் ஆரம்ப நிலை உரிமையாளர்களுக்கே சீர்படுத்திய நிலமாக திருப்பி அளிக்க வேண்டும்.
  6. ஒருஏக்கர்நிலத்திலிருந்து உத்தேசமாக 8-10 கோடி ரூபாய் அளவிற்கு நிலக்கரி பெறப்படும் நிலையை கருத்தில் கொண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மக்களுக்கான கட்டமைப்பு சுகாதாரம் மற்றும் நலன் குறித்த முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்.
  7. அருகிலுள்ளஅனைத்துகிராம மக்களும் எந்த விதமான சுகாதார கேடுகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் மற்றும் சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
  8. நிறுவனங்களுக்கானசமூகபொறுப்புகள் கம்பெனி சட்டம் 2013 பிரிவு 135 இல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஒதுக்கீட்டை முதன்மையாக இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கே செய்ய வேண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  9. பயன்படுத்தியபின்வீணாகும் நீரை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கே அளிக்க வேண்டும்.
  10. நிறுவனம்கொடுக்கும்அனைத்து சலுகைகளும் முன்னாள் நில உரிமையாளர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் ஏற்கனவே பல்வேறு இடங்களில் நிறைவேற்றப்பட்டவையே. உதாரணமாக சந்திரபூர் நிலக்கரி சுரங்கத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட போது செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த முன்னுதாரணங்களை கணக்கில் கொண்டு நெய்வேலி சுரங்க நிறுவனமும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இயற்கை விதிகளின் படி பல தலைமுறைகள் அனுபவித்து வரும் நிலம் என்பது அந்த நில உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி அவர்களின் உணர்வு, வாழ்வியலை சார்ந்தது. இந்த நில கையகப்படுத்தலில் நில உரிமையாளர்கள் விருப்பப்பட்டு நிலத்தை கையளிக்கவில்லை, மாறாக அவர்கள் அரசின் உதவி கொண்டு நிர்பந்தத்தின் மூலமாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் வாழ்வியல், வாழ்வாதாரம், சமூகப் பிணைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் சீர் குலைக்கப் படுகிறது என்பதையும் உணர்ந்து சரியான இழப்பீட்டை மக்கள் பெறவேண்டும் என்ற எங்களது சீரிய நோக்கத்தை மிக ஆழமாக, அழுத்தத்தோடு தங்கள் முன் கோரிக்கைகளாக வைக்கின்றோம்.

 

 

மிக்கநன்றி

என்றென்றும் சமூகநீதிப் பணியில்

சி.என். இராமமூர்த்தி

 

(ஆங்கிலத்தில்)

 

To

 

 

Respected Sir,

 

Sub: NLCIL – Mine III Expansion – Acquisition of Lands for expansion from the local people. Suggestive Demands for fair compensation from the political party Anaithinthia Pattali Munnetra Katchi and Vanniyar Kootamaippu.

 

I am C.N.Ramamurthy M.Com., B.L., President and Founder of Anaithinthia Pattali Munnetra Katchi and Vanniyar Kootamaippu. This letter has been sent across with the Noble Intentions of protecting the interests of the People who stand to lose their land, livelihood and their genuine communal living and community protection in the wake of acquisition of lands for expansion of the Third Mine of Neyveli Corporation Limited.

 

Who we are

 

Vanniyar Kootamaippu is the largest organisation to represent the Vanniyar Community and our political organisation Anaithinthia Pattali Munnetral Katchi works for welfare to everyone. We have several Historical Achievements in the past through various initiatives.

 

Some of them are,

Achieving 10.5% reservation for Vanniyar Community through legal and political battles

Establishing Vanniyar Podhu Sothu Nala Vaariyam through a legal enactment in the State Legislature and Presidential ascent from the Honourable President of India

Establishing a Welfare Board to provide Welfare to the Vanniyar Community

 

Background

 

NLC has acquired lands till date from the local people to the extent of 37256 acres approximately from approximately 25000 families. They were promised of employment in NLC. But NLC has given employment only to 1827 families and those employees are retired now. The rest of the 3500 employees from various families who were promised of permanent employment have been employed on contract basis only till date. The earlier experience of the families not being compensated even with the promised compensation has created very strong mistrust while offering the lands on the basis of compensation promises. NLC while it acquired lands from the local farmers earlier they were promised and offered Rs. 6 lakh per acre of land. After much protest NLC promised to pay Rs.3 lakhs per acre additionally and the same has not been paid to several people till date. Further the workers are brought from North India instead of employing locals. The people employed from northern India includes not only the executives but staff and workers also at all levels.

 

Issues with current Land Acquisition Plan for Mine III expansion

 

NLC is now planning to acquire around 25000 acres of agricultural land for its mining expansion for

the NLC’s super critical lignite based thermal power plant in Neyveli. Neyveli Lignite Corporation already runs three mines in Cuddalore District. In an effort to expand third mine the expansion is planned in the village locations of, Karivetti, Karaimedu, Kathazhai, Mummudi Cholagan, Melvalaiyamadevi, and Keezhvalaiyamadevi. The local people have started their protests after the Southern Bench of the National Green Tribunal had refused to set aside the environmental clearance granted in 2019. The local residents and the land owners have the following significant demands,

 

  1. Demand for Employment
  2. Demand for more compensation than promised
  3. Refusal to give up land for the project

 

We bring to your attention that the areas you are planning to acquire are extremely fertile and thus the farmers have been engaged in farming of Urad Dhal, Millets, Vegetables and specifically commercially highly profitable cane farming. All these farming activities are extremely commercial in nature and very profitable for the farmers in that area. They have remained self reliant and sufficient across generations. We bring to your attention the amount of labour, investments and efforts that would have gone into converting the land to be fertile enough to yield profitable commercial crops for the current generation.

 

The demand by the locals is to compensate them with Rs. 30 lakhs per acre of land.  NLC has earned around Rs.45000 crores in revenue in the last five years, out of which Rs.447 crores which is just 1% of its revenue has been spent on to compensate for environmental pollution caused by coal mining.

 

Our Demands on behalf of the Locals

 

The Anaithinthia Pattali Munnetra Katchi and Vanniyar Kootamaippu put forth the following demands which are reasonable and justifiable for the local people who offer their valuable living environment for the purposes of Mining to NLC. After carefully analysing the different compensation plans and modules offered in similar circumstances by various Governments in India the following demands are made for your favourable consideration.

 

There shall be minimal cash compensation to the locals for the lands they give in acquisition.

NLC shall issue preferential shares for the acquired land value that would commensurate with the market value of land. The preferential shares issued shall be issued in the name of the land owner and shall be transferable to their heirs. The dividends these preferential shares earn year on year would effectively supplement the earnings they would make by their agricultural or other vocations they have been carrying on for their livelihood.

The village which would be dismantled for the purpose of mining shall be recreated in the same format and plan in a nearby new location and be offered to the village residents. This would ensure the communal affinity and bonding being not affected due to relocation.

Employment should be provided to the local people only. In case if NLC needs more people, even after employing the local people, NLC should give preference to the people from the Cuddalore District and then the nearby districts. There after the people should be recruited from other districts of Tamil Nadu only. Most of the jobs being carried out by various employees in NLC require competencies that can be trained to any amateur and non technical person in a couple of week’s time. People with technical competencies can be recruited from elsewhere. The preferences for non technical competency jobs should be given only to the locals and not to people from other states at any cost.

After mining when NLC reaches a stage of rendering the mined land as defunct or used, it should be returned to the original owners in the proportion to their original land holdings which they gave to NLC for acquisition.

Considering the profits NLC would make by extraction of Coal and Lignite in the acquired land which may extend beyond Rs. 8-10 crores per acre, NLC may consider providing all support in terms of financial, infrastructure and care to the people who give their land which is critical for the mining activities.

NLC should provide intensive infrastructure and integrated facilities to the people in the vicinity to ensure they don’t suffer from any health hazards or problems.

The CSR funds being spent by NLC under Section 135 of Companies Act 2013 shall be spent primarily for these people before they allot all other activities.

NLC should provide the used water to the agricultural lands located in the vicinity.

The land owners who contribute their lands should be given access to the special welfare privileges offered by NLC.

 

The above demands are based on the basis of earlier experiences that can be found in Chandrapur Coal Mines and other places. Considering the precedence of such earlier compensations, NLC may with open heart and generous outlook consider the above demands which would make significant difference in the compensation to the critical contributors to the mining activities.

 

Thanking you in anticipation

 

Yours Sincerely

 

 

C.N.Ramamurthy

மேற்கண்ட கோரிக்கை மனுக்களை கீழ்க்கண்ட பொறுப்பாளார்களுக்கு அனுப்பட்டு இருக்கிறது.

 

 

 

The Honourable Chief Minister of Tamilnadu

Government of Tamilnadu

Chief Minister’s Office

Secretariat

Chennai – 600 009

The Chief Secretary

Government of Tamilnadu

Secretariat

Chennai – 600 009

 

 

The Director General of Police

Government of Tamilnadu

Dr.Radhakrishnan Road

Chennai – 600 004

The Chairman

National Green Tribunal

Faridkot House,

Copernicus Marg,

New Delhi – 110001

 

The Honourable Minister of Industries

Government of Tamilnadu

Secretariat

Chennai – 600 009

 

The Secretary

Department of Industries

Government of Tamilnadu

Secretariat

Chennai – 600 009

 

The Secretary

Ministry of Commerce and Industry

Government of India

Vanijya Bhawan, New Delhi

110011, INDIA

The Chairman and Managing Director

NLC India Limited,

Block – 1, Neyveli – 607 801

Cuddalore District

Tamilnadu.

 

The Collector

District of Cuddalore

New Collectorate Building

Manjakuppam

Cuddalore – 607 001

Chairperson

Tamilnadu Pollution Control Board

Government of Tamilnadu

No.76, Mount Salai, Guindy,

Chennai – 600 032

 

 

 

 

The Member Secretary

Tamilnadu Pollution Control Board

Government of Tamilnadu

No.76, Mount Salai, Guindy,

Chennai – 600 032

The Honourable Minister for Environment and Pollution Control

Government of Tamilnadu

Secretariat

Chennai – 600 009

 

Additional Chief Secretary to Government

Environment, Climate Change & Forests Department

Government of Tamilnadu

Secretariat

Chennai – 600 009

 

The Chief Regional Manager

NLC India Limited

No-135, EVR Periyar High Road,

Kilpauk, Chennai-600 010,

Tamil Nadu, India.

 

The Honourable Minister of Agriculture

Government of Tamilnadu

Secretariat

Chennai – 600 009

 

The Secretary

Department of Agriculture

Government of Tamilnadu

Secretariat

Chennai – 600 009

 

The Honourable Minster

Ministry of Agriculture and Farmers Welfare

Government of India

Krishi Bhawan

New Delhi

The Secretary

Ministry of Agriculture and Farmers Welfare

Government of India

Krishi Bhawan

New Delhi

 

 

 

 

 

 

 

 

 

NLC நிறுவனத்தில் 01.01.2014 முதல் கீழ்க்கண்டவாறு இழப்பீடுகள் அளிப்பதாக அந்நிறுவனத் தரப்பில் இருந்து பதிலளித்திருக்கிறார்கள்

 

நில இழப்பீடு, இடப்பெயர்வு இழப்பீடு மற்றும் மீள்குடியமர்த்தல் தொடர்பான இழப்பீடு விவரங்களாவன,

குறைந்தபட்ச விவசாய நிலங்களுக்கான  நில இழப்பீடு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் இருவத்தைந்து லட்சம்.

வீடு மனைகளுக்கான இழப்பீடு – கிராமப்புறங்களில் உள்ள மனைகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் நாற்பது லட்சம் மற்றும் நகர்புற மனைகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் எழுபத்தைந்து லட்சம்

தொடர்ந்த ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு குடும்பத்தில் ஒருவருக்கு.

குரூப் C மற்றும் D தொழிளார்களுக்கு நேர்முகத்தேர்வில் இருபது மதிப்பெண்கள் வழங்குவது

ஐந்து குறிப்பிட்ட வேலைவாய்ப்புகளில் விரும்பாத நபர்களுக்கு ரூபாய் பனிரெண்டு முதல் பதினேழு லட்சம் வரை இழப்பீடு

NLC நிறுவனத்தில் பணியில் அமர்த்தபடாத குடும்பத்தினருக்கு மாத உதவித் தொகையாக இருபது ஆண்டுகளுக்கு ரூபாய் ஏழாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை. மேலும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூபாய் ஐநூறு அதிகப்படியாகவும் அளிக்கப்படும்.

மொத்த இழப்பீடு சுமார் எழுப்பத்தைந்து லட்சத்து ஐம்பது ஆயிரம் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளவர்களுக்கு அளிக்கப்படும்.

 

இடப்பெயர்வுக்கான உதவித் தொகையாக ரூபாய் எழுவத்து ஐந்தாயிரம் அளிக்கப்படும்.

தமிழக அரசின் குரூப்- I, குரூப் – II மற்றும் குரூப் III தேர்வு எழுத இலவச பயிற்சி அளிக்கப்படும்

அனைத்து தொழிற்நுட்ப கல்வி பயின்ற நில உரிமையாளர் குடும்பத்தினருக்கும் இலவசமாக தொழிற் பயிற்சி அளிக்கப்படும்

 

இவை தவிர கீழ்க்கண்ட வழிகளிலும் இழப்பீடு அளிக்கப்படும்.

 

NLC நிறுவனம் அளிக்கும் மாற்று இடத்தித்திற்கு இடப்பெயர்வு செய்யும் பட்டா நில உரிமையாளர்களுக்காண இழப்பீடுகள்

NLC நிறுவனம் அளிக்கும் மாற்று இடத்தித்திற்கு இடப்பெயர்வு செய்யும் பட்டா நில உரிமையாளர்களுக்கு – ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட வீடு மற்றும் கால்நடை கொட்டகை – ஐந்து சென்ட் மொத்த இட அளவில் 2175 சதுர அடியில் அளிக்கப்படும்.

அல்லது

NLC நிறுவனம் அளிக்கும் மாற்று இடத்தித்திற்கு இடப்பெயர்வு செய்யும் பட்டா நில உரிமையாளர்களுக்கு  – ஆயிரம் சதுர அடி அளவில் வீடு கட்ட ஆகும் செலவுகள் ஏற்றுகொள்ளப்படும். இது 1997 ஆம் ஆண்டு நில இழப்பீடு குறித்த சட்டத்தின் படியும், NLC நிறுவனம் இழப்பீடு கொடுப்பதற்காக குறித்த இடத்தில் PWD நிறுவனம் குறிப்பிட்டு இருக்கும் கணக்கீட்டின் படி இழப்பீடு அளிக்கப்படும்.

 

 

அல்லது

NLC நிறுவனம் அளிக்கும் மாற்று இடத்தித்திற்கு இடப்பெயர்வு செய்யும் பட்டா நில உரிமையாளர்களுக்கு – NLC நிறுவனம் இழப்பீடு கொடுப்பதற்காக குறித்த இடத்தில் ஐந்து சென்ட் இடத்துடன் PWD நிறுவனம் குறிப்பிட்டு இருக்கும் கணக்கீட்டின் படி கட்டுமான செலவு அளிக்கப்படும்.

அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பவர்களுக்கு

வீட்டின் மொத்த கட்டுமான மதிப்பில் ஐம்பது சதவிகிதம் அல்லது ரூபாய் இரண்டு லட்சம் இவற்றில் எது அதிகமோ அது இழப்பீடாக அளிக்கப்படும். இந்த இழப்பீடு 1997 ஆம் ஆண்டு நில இழப்பீடு குறித்த சட்டத்தின் படியும், தமிழக PWD  நிறுவனம் குறிப்பிட்டு இருக்கும் கணக்கீட்டின் படியும் கணக்கீடு செய்யப்படும்.

அல்லது

குடும்பம் ஒன்றுக்கு மூன்று சென்ட் நிலம் அளிக்கப்படும்.

இந்த கணக்கீட்டுக்கு நில ஆக்கிரமிப்பு செய்தவர்களை வருவாய்த் துறை மூலமாக அடையாளம் கண்டுகொள்ளப்படும்.

வேலைவாய்ப்பு – ஒரு நேர இழப்பீடு – மாத உதவித் தொகை

நில உரிமையாளர் குடும்பத்தில் ஒருவருக்கு தொடந்த வேலைவாய்ப்பு NLC நிறுவனத்தின் நிரந்திரமில்லா வேலைவாய்ப்புகளில் குறைந்த பட்ச சம்பளத்துடன் அளிக்கப்படும்.

அல்லது

ரூபாய் பனிரெண்டு முதல் பதினேழு லட்சம் வரை ஒரு நேர இழப்பீடாக அளிக்கப்படும். இந்த இழப்பீடு கீழ்க்கண்ட வகையில் கணக்கீடப்படும்.

 

தொகுதி I – ரூபாய் பனிரெண்டு லட்சம்

தொகுதி II – ரூபாய் பனிரெண்டு லட்சம்

தொகுதி III – ரூபாய் பதினைந்து லட்சம்

தொகுதி IV – ரூபாய் பதினேழு லட்சம்

தொகுதி V – ரூபாய் பதினேழு லட்சம்

அல்லது

மாத உதவித் தொகையாக ரூபாய் ஏழாயிரம் முதல் ரூபாய் பத்தாயிரம் வரை அளிக்கப்படும்

தொகுதி I – ரூபாய் ஏழாயிரம்

தொகுதி II – ரூபாய் ஏழாயிரம்

தொகுதி III – ரூபாய் எட்டாயிரத்து ஐநூறு

தொகுதி IV – ரூபாய் பத்தாயிரம்

தொகுதி V – ரூபாய் பத்தாயிரம்

இடப்பெயர்வு செய்யும் குடும்பங்களுக்கு ஒரு ஆண்டுக்கான உதவித் தொகை

ரூபாய் 36000 (ஒரு ஆண்டுக்கு) அல்லது மாதத்திற்கு ரூபாய் 3000 வீதம் நில உரிமையாளர்களுக்கு இடப்பெயர்வு இழப்பீடாக அளிக்கப்படும். (ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு 3 வருடங்களுக்கு முன்னதாக)

அல்லது

நில ஆக்கிரமிப்பு மூலம் வீடு கட்டியவர்களுக்கு ஒரு நேர இழப்பீடாக ரூபாய் பனிரெண்டாயிரம் அளிக்கப்படும். (ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு 5 வருடங்களுக்கு முன்னதாக)

இடப்பெயர்வின் போது இடப்பெயர்வு பண உதவி

 

பட்டா நில உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபாய் எழுவத்து ஐந்தாயிரம் (ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு 3 வருடங்களுக்கு முன்னதாக)

நில ஆக்கிரமிப்பில் வீடு கட்டியிருப்பவர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபாய் எட்டாயிரம் (ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு 5 வருடங்களுக்கு முன்னதாக)

கால்நடை கொட்டகைகள் / சிறுகடை வியாபாரிகளுக்கு

ஒவ்வொரு தகுதியான குடும்பத்திற்கும் – ரூபாய் இருவத்து ஐந்து ஆயிரம்

சிறு வேலைகளில் ஈடுபடுவர்கள் / வியாபாரம் செய்பவர்களுக்கு

ஒவ்வொரு தகுதியான குடும்பத்திற்கும் – ரூபாய் இருவத்து ஐந்து ஆயிரம்

 

மேற்கண்டவாறு இந்த NLC நிறுவனம் இழப்பீடு கொடுத்து வருகிறது. நாம் நமது கோரிக்கைகளை தயார் செய்தது மனிதாபமான அடிப்படையிலும் இந்த நில உரிமையாளர்களிர்களின் உண்மையான யதார்த்தமான அடிப்படையில். இதன்படி இழப்பீடு கொடுக்கும் பொழுது குறுகிய மற்றும் நீண்ட கால உரிமைகள் நிலை நிறுத்தப்படும். நியாயம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்ப்படும் என்று நம்புகிறோம்.

 

 

 

 

 

இந்தியா என்ற இந்த பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் சிறப்பு இயல்பாக, வளர்ச்சியை என்றும் முன்னெடுக்கும்படியாக, சுதந்திரம் அடைந்த பின்னர் நாட்டை நிர்மாணித்த தலைவர்கள் வகுத்திருக்கின்றார்கள்.

 

1947 இல் இருந்து கடந்த 75 ஆண்டுகளில் பல வளர்ந்த நாடுகளுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் கட்டுமான வளர்ச்சி என்பது தமிழக தலைவர்களின் தொலைநோக்கு கனவுகளின் ஊடாக முழுமை அடைந்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சி என்பது தனித்தன்மை கொண்டது.

 

இங்கே அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தவே தொடர்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்த வளர்ச்சி பயணத்தில் சிலர் முட்டுக்கட்டை போடுவதை தங்கள் அரசியல் முறையாகவும் செயல்பட்டு வருகின்றனர். அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி தமிழகம் உலக நாடுகளில் உள்ள 18 நாடுகளின் பொருளாதாரத்திற்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் குறிப்பிடுகிறார்.

 

தமிழகத்தின் மின் சக்தி கட்டுமான வளர்ச்சியிலும் செய்யூர் மரக்காணம் பகுதியில் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாக கருதி செய்யூர் மரக்காணம் அனல் மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உறுதி பூண்டது.

 

இதற்காக 60,000 கோடி முதலீட்டில் சுமார் 12,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. இதை சீர்குலைக்க பல்வேறு அரசியல் மக்கள்திரள் போராட்ட முன்னெடுப்புகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக இந்த திட்டம் ரத்து செய்யப்படும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது.

 

 

அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவனத்தலைவர் சி என் இராமமூர்த்தி அவர்கள் இத்திட்டத்தின் முக்கியத்துவம் உணர்ந்து இத்திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் போராட்டங்களை துவங்கினார். போராட்டத்திற்கு முன்னதாக அந்தப் பகுதி மக்களிடம் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்தார்.

அன்றைய தமிழக அரசு தனியாரிடம் இருந்து ரூபாய் 17க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் கொடுத்து வந்தது. இதன் மூலமாக மேலும் இந்த அனல் மின் நிலையம் அமைவது மூலமாக கீழ்க்கண்ட பயன்கள் அடைய முடியும் என்று உறுதியாக நம்பினார். இதனையே மக்களிடம் எடுத்துச் சொன்னார்.

இந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடும் வேளையில் மத்திய அரசு மரக்காணம் செய்யூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

திராவிட முன்னேற்ற தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் தனிப்பட்ட முயற்சிகளின் காரணமாக இந்தத் திட்டம் மறு உயிர் பெற்றது. இதற்காக அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் தலைவர் சி. என். இராமமூர்த்தி அவர்கள் அரசிடம் வைத்த கோரிக்கைகள் .

 

  1. இந்த திட்டம் பேரறிஞர் அண்ணா அனல் மின் நிலையம் என்ற பெயரில் செயல்படுத்த வேண்டும்.

 

 

  1. இந்தத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் மின்சாரம் தமிழகத்தின் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும்

3.இந்தத் திட்டம் அமைய தேவையான சுமார் 5540 ஏக்கர் நிலத்தை இப்பகுதியில் அரசிடம் உள்ள சுமார் 8310 ஏக்கர் நிலத்தை இந்த பகுதியில் உள்ள உப்பங்கழி வேலி உவர் நிலங்களில் இருந்து பயன்படுத்த வேண்டும். இதனால் இந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்விடத்திற்கோ, வாழ்வாதாரத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்தத் திட்டத்திற்கான விவசாய நிலம் கையகப்படுத்த வேண்டி இருந்தால் அந்த நிலத்தின் மதிப்பிற்கு அந்த நில உரிமையாளர்களுக்கு நிறுவனத்தின் முன்னுரிமை பங்குகளை இந்த நிறுவனம் வழங்க வேண்டும். இந்த முன்னுரிமை பங்குகள் பெற்றுத் தரும் ஆண்டு ஈவுத்தொகை அவர்களின் பொருளாதார நிலையை உறுதி செய்யும். பங்குதாரர்களாக இருக்கின்ற பட்சத்தில் இவர்கள் இந்த தொழிற்சாலையின் செயல்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் கொடுக்கக்கூடிய நிலை ஏற்படும்.

 

 

  1. மின்சாரத்தைசரியான குறைந்த விலைக்கு உற்பத்தி செய்ய வேண்டும். தனியாரிடம் அதிக விலைக்கு வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

5.இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது சுமார் 50,000 குடும்பங்கள் செழிப்பு பெறும். மேற்கூறிய காரணங்கள் அடிப்படையாகக் கொண்டு பல்வேறுப் போராட்டங்களை அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி அதன் தலைவர் அக்னிகுலத்தலைவன் சி. என். இராமமூர்த்தி தலைமையில் முன்னெடுத்தது.

 

 

 

மானுடம் முன்னெடுத்த பல்வேறு போராட்ட வடிவங்களில் மனித சங்கிலி போராட்டம் முக்கியமான ஒரு வடிவம். அமெரிக்காவில் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி வீடு அற்றோரின்  கோரிக்கைகளுக்காகவும் வறுமையை நீக்க கோரியும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் பங்கெடுத்தனர். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11ஆம் தேதி அன்றைய வங்கதேசத்தில் “வங்கதேச அவானி லீக்” கட்சிக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம் முன்னெடுத்தது. இந்த போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் கலந்து கொண்டு தங்கள் போராட்ட இலக்கில் வெற்றி அடைந்தனர்.

இது போன்று போராட்டங்கள் அறப்போராட்டங்களாக உலகம் எங்கும் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளது. அனைத்திந்திய மக்கள் முன்னேற்ற கட்சி அதன் தலைவர் அக்னிகுலபெருந்தலைவன் சி என் இராமமூர்த்தியின் திட்டமிடல் படி  4. 8. 2018 ல் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் என்ற பெயரில் மரக்காணம் ஒன்றிய அலுவலகம் எதிரில் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், மத்திய மாநில அரசுகள் இணைந்து நாரவாக்கம் மற்றும் ஆலம்பர கோட்டையில் துறைமுகங்கள் அமைத்து ரூபாய் 60,000 கோடி முதலீட்டில் 12000 மெகாவாட் மின்

 

 

 

நிலையம் அமைக்க வேண்டும். இதன் மூலமாக மின் சக்தியை யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 1.60 என்ற விலையில் உற்பத்தி செய்ய முடியும்.

 

 

ரூபாய் 17 க்கு தனியாரிடம் வாங்குவதிலிருந்து ரூபாய் 1.60க்கு மின்சாரம் பெற முடியும். இதன் மூலமாக மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படாது.

 

மேலும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது, கீழ்க்கண்ட கோரிக்கைகளை மனதில் கொள்ள வேண்டும்.

 

 

ஒன்று – அனல் மின் நிலையம் அமைக்க தேவையான நிலத்தை  உப்பங்கழி வேலி உவர் நிலங்களை முதன்மையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

 

 

 

 

 

இரண்டு –  வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் பொழுது ஆண் பெண் இருபாலருக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

 

 

 

மூன்று – வேலை வாய்ப்பு அளிக்கின்ற பொழுது முன்னுரிமை அந்த பகுதி வசிக்கும் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கே அளிக்க வேண்டும்.

 

இருபாலனித்தினர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும்.

நான்கு –  விவசாய நிலங்களை ஒப்படைக்கும் விவசாயிகளுக்கு எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் பணி வழங்க வேண்டும் .

 

 

 

ஐந்து – அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான குடியிருப்பு மற்றும் மருத்துவ வசதி அளிக்க வேண்டும்.

 

 

 

 

மேற்கண்ட மக்களின் நலன் நோக்கிய மனித சங்கிலி போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. இந்தப் போராட்டத்திற்கு அன்றைய

 

 

 

போராட்டக் குழு தலைவர் அன்புராஜ் தலைமை தாங்கினார். கிங் ஆறுமுகம் முன்னிலை ஏற்றார். வைரமணி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு விவேகானந்தன் மாநில தலைவர் அவர்கள் போராட்டத்தினை துவக்கி வைத்தார்.

 

 

 

இந்தப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக இட ஒதுக்கீட்டு சமூகநீதி போராளி தலைவர் அக்னிகுலத்தலைவர்  சி.என். இராமமூர்த்தி அவர்கள் போராட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

 

 

 

இந்த பேருரையின் போது இந்த மனித சங்கிலி போராட்டத்தின் நேர்மறை நோக்கங்களை விரிவாக எடுத்துரைத்தார். எக்காரணம் கொண்டும் துளி விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது, எனவே விவசாயத்தை சீர்குலைக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும், என எதிர்மறையாக பேசிய ராமதாஸ் அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் நேர்மறையாக ஆக்கபூர்வமாக அரசு தன்னிடம் உள்ள சுமார் 8310 ஏக்கர் அளவிலான உப்பங்கழி வேலி உவர் நிலங்களை பயன்படுத்தி அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று முன் வைத்தார்.

இந்த அனல் மின் நிலையம் அமைக்கக்கூடிய பகுதியான கடப்பாக்கம், சூனாம்பேடு, செய்யூர், சித்தாமூர், பவுஞ்சூர், கூவத்தூர், மேல்மருவத்தூர் இன்னும் ஏனைய கிராமங்களில் எந்தவிதமான தொழில் நிலையங்களோ தொழிற்சாலைகளோ இல்லை.

எனவே இம்மக்கள் விவசாயம், மீன்பிடித்தல் என இவை இரண்டை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மின் நிலையம் அமையும் போது இந்தப் பகுதியில் உள்ள சுமார் 50000 பேர் வேலை வாய்ப்பு பெற முடியும்.

 

மேலும் இதன் மூலம் 50,000 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற முடியும். சுமார் 12000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது, தமிழக மின் தேவையில் மிகப்பெரிய பங்கை சுயமாக உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

 

மேலும் புதிய தொழிற்சாலைகள் அதன் மூலமாக தொழில் வளர்ச்சியை இந்த மாநிலத்திற்கு பெற்று தர முடியும். இந்த மனித சங்கிலி போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளார்ந்த ஈடுபாடு மற்றும் பங்கு பெற்றதன் மூலமாகவும் சுமார் 7 லிருந்து 8 கிலோமீட்டர் நீள மனித சங்கிலி அமைத்து போராடியதன் மூலமாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

 

 

 

 

மத்திய மாநில அரசுகளின் பணி வேகம் இந்தத் தொடர் போராட்டங்களின் உத்வேகம் பெற்றது.  உள்ளூர் மக்களின் இந்தத் திட்டத்திற்கான உள்ளார்ந்த ஆர்வம் மற்றும் ஒத்துழைப்பு திட்டத்திற்கு எதிரான சதியாளர்களுக்கு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

 

 

மணிப்பூரின் இரும்பு பெண் என்று அழைக்கப்படும் ஈரோம் ஷர்மிளா, தன்னலம் துறந்து மக்களின் இழிநிலையை மாற்ற எண்ணி, இந்த சமூக செயல்பாட்டாளர் ராணுவ சிறப்பு ஆயுத சட்டம் 1958 நீக்க கோரி 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.

2016 நாம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி முடித்துக் கொண்டார். உலகின் மிக நீண்ட உண்ணாவிரத போராட்டம் இது என அந்த மாநில மற்றும் உலக மக்களும் கொண்டாடினர். இது போன்றே ஐயா சங்கரனார் அவர்கள் தமிழகத்திற்கு தமிழ்நாடு என்னும் பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுத்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

 

மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிப் போராட்ட வடிவங்களில் முக்கியமான இந்தப் போராட்டத்தை அக்னிகுலத்தலைவன் சி என் இராமமூர்த்தி அவர்கள் திட்டமிட்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்தார். இதன்படி 10 11 2006  இல் மரக்காணத்தில் அ. பா. மு. க நடத்திய முப்பெரும் விழாவில் முடிவெடுத்து திட்டமிட்டு 22. 12. 2008 அன்று சென்னையில் ஒரு மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை தலைநகர் சென்னையில் நடத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்ததோடு தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

 

சென்னை சேப்பாக்கத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 

 

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இந்த உண்ணாவிரதம் 22 12 2008 அன்று காலை 8 மணிக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் துவங்கி வைத்து உரையாற்றி தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கட்சியின் மாநில தலைவர் திரு விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். போராட்டக் குழுவின் தலைவர் அன்புராஜ் அவர்கள் முன்னிலை வகித்து இந்த போராட்டத்தை நடத்தினார். படையாட்சியார் எஸ். எஸ். ஆர். ராமதாஸ் எம்.பி., அவர்கள் அ. பா. மு. க வின் கொள்கை பாடல்கள் மற்றும் கொள்கை முழக்கங்களை குறுந்தட்டு வடிவில் வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

 

வெளியிடப்பட்ட குறுந்தட்டை மீனவர் தலைவர் பெற்றுக்கொண்டார்.

 

 

 

 

கொள்கை விளக்கங்கள் கொண்ட குறுந்தட்டை இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எஸ்.ஜே இனயத்துல்லா வெளியிட மக்கள் தேசிய கட்சி நிறுவனர் சாத்தை பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

மேலும் தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர் மு ராஜமாணிக்கம் நாடார் இளைஞர் முன்னேற்ற சங்க நிறுவனர் நெல்லை கந்தசாமி,

 

 

அகில இந்திய கிறிஸ்தவ மக்கள் கட்சி நிறுவனர் ஐசக் ஐயா, உழைப்பாளர் மக்கள் கட்சி தலைவர் ராமகோபால் தண்டால்வார், இந்திய ஜனநாயக கட்சி மாநில தலைவர் சமூக நீதி மாத இதழ் ஆசிரியர் எழுச்சி கவிஞர் நெஞ்சிற்கினியன், தலித் மக்கள் முன்னணி மாநில தலைவர் குமரி அருண், பறையர் பேரவை பொதுச் செயலாளர் ஏர்போர்ட் மூர்த்தி மற்றும்,

 

சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி, தமிழ்நாடு மீனவர் நலச்சங்க தலைவர் கொ.சு மணி,

 

கட்டிடத் தொழிலாளர் நல சங்கம் தலைவர் பல்லவ மோகன் ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழக தலைவர் மாமல்லன், தமிழ்நாடு கிராமிய நடிகர்கள் சங்கத்தலைவர் உத்திரமேரூர் விஸ்வநாதன்,

 

வன்னியர் சங்கத் தலைவர் நடராஜன், தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன்,

 

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு. தேசிய மக்கள் தொழிலாளர்கள் இயக்கத் தலைவர் சேம. நாராயணன், புரவலர் ராமச்சந்திரன்,

தேசிய ஜனநாயக கட்சி நிறுவனர் வசீகரன், நமது திராவிட இயக்க நிறுவனத் தலைவர் திருமதி ஓவியம், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ரா. ஆழ்வார், இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் கிறிஸ்துதாஸ், தமிழக தலித் கட்சி நிறுவனர் தலித் குடிமகன், வாழப்பாடியார் பேரவைத் தலைவர் சைதை தேவதாஸ் மேரி புகழேந்தி மற்றும் நரிக்குறவர் சமுதாய தலைவியார் மற்றும் ஏனைய பலர் வாழ்த்துக்களை வழங்கி பங்கேற்றார்கள்.

 

இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அ. பா. மு. க முன்னெடுத்த போதிலும் இந்தப் போராட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் சமுதாய தலைவர்கள் சமூக மக்கள் ஆகியோர் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் பங்களிப்பை, ஆதரவை தெரிவித்து உண்ணாவிரதத்துக்கு புகழ் சேர்த்தனர். அந்த வகையில் இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரு சி என் இராமமூர்த்தி அவர்கள் இந்த அனல் மின் நிலையத்தின் முக்கியத்துவம் குறித்து மிகச் சிறப்பாக விளக்கத்தை அளித்தார்.

 

 

தொடர்ந்து பங்கு பெற்ற தலைவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தின் வெற்றிக்காகவும் கொண்ட இலக்கின் வெற்றிக்காகவும் பாராட்டுக்களையும், ஆதரவுகளையும் பெரும் அளவில் இந்த போராட்டம் குறித்த செய்தியையும் மிகச்சிறந்த அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

 

இந்தப் போராட்டத்தின் இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சமூக சிந்தனையாளர் பேரவை நிறுவனர் இரா. அன்பரசு எம்.பி., அவர்கள் பழச்சாறு அளித்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

மேலும் இந்த போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தின் நோக்கம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் தெரிவித்து நிறைவு செய்து வைத்தார். அனல் மின் நிலையத்திற்கான தொடர் போராட்டத்தின் முக்கிய போராட்டமாக இது அமைந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

 

 

 

இந்திய அரசியலில் வரலாறு பல தலைவர்களை சந்தித்து இருக்கிறது. வ. உ. சிதம்பரனார், கர்மவீரர் காமராஜர், ஜீவா போன்ற அரசியல் தலைவர்கள் இந்த சுதந்திரத்திற்காக பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளை மிகப்பெரிய அரசியல் சாதனைகளை புரிந்து இருக்கின்றனர்.

ஒரு சமூகத்தினுடைய மாற்றத்திற்கான இலக்குகளை அமைத்துப் போராடி அந்த சமூகத்தின் வாழ்வியல், வாழும் சூழல், எதிர்காலத்தை மாற்றி சீரமைத்து கொடுத்தத் தலைவர்கள் வரலாறு நெடுகிலும் இருக்கின்றார்கள். அவர்களை காலம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

பொது நலன், நாட்டு நலன், சமூக முன்னேற்றம் ஆகிய இலக்குகளுக்காக போராடும் தலைவர்கள் எப்போதுமே நேர்மறை அரசியலையே செய்து கொண்டிருக்கிறார்கள். சுயநலம் வாரிசு நலன் மற்றும் சொந்த நோக்கங்களுக்காக போராடும் தலைவர்கள் எப்போதுமே எதிர்மறை அரசியலையேத் தேர்ந்தெடுக்கிறார்கள். டாக்டர் ராமதாஸ் என்றுமே எதிர்மறை அரசியலையே தேர்ந்தெடுத்ததை அவரின் வரலாறு குறியீடுகளாக கொண்டுள்ளது கண்கூடு. இவரது அரசியல், சுயநலன், வாரிசு நலன் குறித்து அமைந்திருந்தது, என்றுமே சமுதாய நலனுக்காகவோ நாட்டின் நலனுக்காகவோ அவர் போராடியது இல்லை என்பதற்கு சில உதாரணங்கள்.

தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களையும் கண்மூடி எதிர்த்திருக்கிறார். விமான நிலையம் விரிவு படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து செயல்பட விடாமல் செய்தார்.

நகரங்களின் நெரிசல் குறைக்கும் வண்ணம் துணை நகரங்கள் அல்லது சாட்டிலைட் சிட்டீஸ் அமையத் திட்டமிட்ட போது அதையும் தீவிரமாக எதிர்த்தார். பின்னதாக பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிட்ட போது அதனையும் எதிர்த்தார்.

ராமதாஸ் அவர்கள் 2006 இல் இருந்து 2011 வரை டாக்டர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசியலில் பங்கெடுத்தார். அப்போது நினைத்த எதனையும் சாதித்துக் கொள்ளக்கூடிய ஆளுமை பெற்றவராக அறியப்பட்டவர்.

 

தற்போது 10.5% இட ஒதுக்கீட்டை பற்றி பேசி நாளும் பொழுதும் அறிக்கைப் போர் செய்யும் இந்த தானைத் தலைவர் நினைத்திருந்தால், இந்த 10.5% இட ஒதுக்கீட்டு சாதனையை எளிதாக வென்றெடுத்திருக்க முடியும்.

ஆனால் அதைப்பற்றிய எண்ணம் கூட இல்லாதவராகவே அவர் இருந்து வந்துள்ளார். இவ்வாறாக எந்த ஒரு முன்னேற்ற திட்டம் வகுக்கப்பட்டாலும் அதனை எதிர்த்து வந்திருக்கி றார்.

இந்தியாவின் 11 ஆவது ஐந்து ஆண்டுத் திட்டம் தீட்டப்பட்டப் பொழுது 13 அனல் மின் நிலையங்களை அமைப்பது என  முடிவு எடுக்கப்பட்டது. அப்பொழுது முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மத்திய அரசிடம் போராடி ஒரு திட்டத்தைத் தமிழகம் பெற்று வந்தார். அதன்படியே செய்யூர் – மரக்காணம் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் உயிர்பெற்றது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வந்தது. இந்தத் திட்டம் மூலம் தொழிற்சாலைகளோ வேலை வாய்ப்புகளோ இல்லாத இந்தப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் போது அந்தப் பகுதிகள் அனைத்தும் அனைத்து வகையிலும் முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

 

இந்த காலகட்டத்தில் வழக்கம் போல் ராமதாஸ் அவர்கள் எதிர்மறை அரசியலையே கையில் எடுத்தார்.

மத்திய அரசு அனுப்பிய பல்வேறு ஆய்வு குழுக்களை பணி செய்ய விடாமல் தடுத்தார்.

எப்பொழுது எல்லாம் அனல் மின் நிலையத்திற்கான ஆதரவுப் போராட்டத்தை மக்கள் எங்கெல்லாம் முன் எடுத்தார்களோ அங்கெல்லாம் எதிர்ப்பு போராட்டத்தை அறிவித்து பெரும் குழப்பம் விளைவித்தார். அ.பா.மு.க மனித சங்கிலிப் போராட்டம் ஆலத்தூர் என்ற பகுதியில் நடந்த பொழுது எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.

எந்த விதத்தில் எல்லாம் போராட்டம் நடத்தினால் பொருள் விரயம் மற்றும் காலதாமதம் ஏற்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் தங்களது போராட்டத்தை கையில் எடுத்துப் போராடினார். இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கும் பொழுது இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறை வெறியாட்டம் செய்வதை வழக்கமாக கொண்ட ராமதாஸ், பல்வேறு வகையிலும் இடையூறுகளை செய்து அதன் மூலம் இத்திட்டம் கைவிடப்படும் நிலைக்கு தள்ளினார். இவரை நம்பிப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான வன்னிய இன இளைஞர்கள் கைதாகி தற்போது வழக்குகளை சந்தித்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களது எதிர்காலத்தைத் தொலைத்து அவல நிலையில் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

எதிர்மறை அரசியல் சில காலம் ஜெயித்தது போன்று தோற்றமளிக்கலாம். மக்கள் நலன் சாராத எந்தவித போராட்டமும் நீண்ட நாட்கள் நீடிப்பதும் இல்லை, ஜெயிப்பதும் இல்லை. எதிர்மறை அரசியல்வாதிகள் சமூகத்தில் இருந்து தூரத்தில் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் வரலாறு நெடுகிலும் காண க்கூடியதாக உள்ளது. ரூபாய் 60000 கோடியில் நிறைவேற்றபட்டிருக்ககூடிய இத்திட்டம் தற்போது நிறைவேறிட ரூபாய் 2 லட்சம் கோடி தேவை என்ற நிலையை அடைய வைத்திருப்பது மட்டுமே செய்யூர் மரக்காணம் அனல் மின் நிலையத்திற்கு ராமதாஸ் அளித்த பங்களிப்பு என்றால் அது மிகையல்ல.

உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ப.மு.க. தலைவர் சி. என். இராமமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையில் சில கருத்துக்கள்

 

இந்தத் திட்டத்திற்காக நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். செய்யூர் மரக்காணம் பகுதியில் ஒருங்கிணைந்த அனல் மின் நிலையம் அமைக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கிராம மக்களை சந்தித்து அதனுடைய முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறோம்.

இந்த பிரச்சனை குறித்து, இந்த இடத்தில் அமைக்க வேண்டிய அவசியத்தை விளக்கி வருகிறோம்.

 

வர்த்தக ரீதியாக இது பயனுள்ளதா என்று ஆய்வு செய்துள்ளோம். பண்டைய தமிழர் பகுதியான ஆலம்பரகோட்டையை பண்படுத்தி அங்கே துறைமுகம் அமைக்கவும், அருகாமையில் இருக்கின்ற செய்யூரில் உள்ள உப்பங்கழி உவர் நிலங்கள் 20,000 ஏக்கர் உள்ளது.

இங்கே இந்த அனல் மின் நிலையத்தை இங்கு அமைக்கலாம் என்று யோசனை தெரிவித்து அதற்காக போராடி வருகிறோம். நாரவாக்கம் என்ற அந்தப் பகுதி தீர்த்தவாரி என்றும் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி பண்டைய துறைமுகமாக இருக்கிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பல்வேறு வகையான முறையில் மக்களை சென்று சந்தித்து பேசி இருக்கிறோம். மேலும் இதற்காக மனித சங்கிலி போராட்டம் நடத்தி இருக்கிறோம்.

இந்த போராட்டத்தில் மூன்றரை மைல்களுக்கு மக்கள் அணிவகுத்து நின்றதை தினத்தந்தி வெளியிட்டிருக்கிறது. இந்த போராட்டங்களின் வெற்றி இந்தத் திட்டம் வரக்கூடாது எனப் போராடியவர்களை மறுத்து இந்தத் திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும் என்று மக்கள் நம்பினார்கள்.

சைனாவில் 8.5 லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய உற்பத்தி 1.44 லட்சம் மெகாவாட். 12000 மெகாவாட் என்பது உலகில் எங்கும் இல்லாத பெரிய திட்டம். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 60,000 கோடி ரூபாய் செலவு செய்யும். இந்தத் திட்டம் தான் இந்திய அளவில் அதிக முதலீடு கொண்ட திட்டம் என்பதை உணர வேண்டும்.

இது தமிழ்நாட்டு பட்ஜெட்டை மிஞ்சிய தொகை. இந்தத் திட்டம் மூலமாக 1.5 லட்சம் மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் தமிழகத்தில் தற்போதைய உற்பத்தி 7539 மெகாவாட் தான். பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு தடையற்ற மின்சாரம் அளிக்க வேண்டி உள்ளது.

 

அனல் மின் நிலையத்திற்காக அனல் பரப்பும் கட்சி

அனைத்திந்திய பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி நிறுவனர்

சி. என். இராமமூர்த்தி சிறப்பு பேட்டி

 

பொதுவாக தமிழகத்தின் மின் தேவை கீழ் கண்ட நான்கு வகைகளில் பெறப்படுகிறது.

1.அனல் மின் நிலையம் 60 சதவிகிதம் (நெய்வேலி தூத்துக்குடி எண்ணூர்)

2.புனல் மின் நிலையம் 32 சதவிகிதம் (மேட்டூர் பாபநாசம் குண்டால்)

3.அணுமின் நிலையம் 3 சதவிகிதம் (கல்பாக்கம்)

4.முறைசாரா முறையில் 5 சதவிகிதம் (காற்றாலை சூரிய சக்தி மூலம்)

”ஒளிர்கிறது இந்தியா” என்ற விளம்பரம். இந்திய மக்களுக்கு புரிய வைத்திருக்கும் பாடம் என்ன என்பதை இப்பொழுது புரிந்து கொள்ள முடியும் என்று நம்பலாமா? அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழக மக்களை ஆட்டிப் படித்து வரும் நிலையில் கட்டண உயர்வு என்று அடுத்த குண்டை வீச சிறு தொழில் நிறுவனங்களும் வாடகை குடிகளும் அதிர்ந்து போனார்கள்.

எதிர்வரும் தேர்தலில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்த தமிழக அரசு கட்டண உயர்வை திரும்பப்பெற்றாலும் தேர்தலில் இதே கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால் அதன்பின் எப்படிப்பட்ட தொல்லை எந்த ரூபத்தில் வரும் என்பதை யாரும் கணிக்க முடியாது.

இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று யோசித்த வேளையில் இந்த கோரிக்கையை மட்டுமே தன் போராட்டமாக அறிவித்து செயலில் இறங்கி போராட்ட களத்தில் இயங்கிக் கொண்டிருந்த பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி நிறுவனர் சி என் இராமமூர்த்தி அவர்களை சந்தித்தோம்.

 

பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிகளில் ஆலம்பரக்கோட்டை மற்றும் நாரவாக்கத்தில் முகாம்கள் அமைத்து 12 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய சுமார் 60 ஆயிரம் கோடி முதலீட்டில் மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செய்யூர் மரக்காணத்தில் ஒருங்கிணைந்த அனல் மின் நிலையம் துவங்க வேண்டும் எனக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த அனல் மின் நிலையம் வருவது பற்றி செய்திகள் வருவதும் பின்பு அந்த செய்திகளைத் தொடர்ந்து சிறு முயற்சிகளுக்குப் பிறகு பல்வேறு சூழ்நிலையில் இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்து செல்லவில்லை.

கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் இந்த மெகா அனல் மின் நிலைய திட்டத்தை உறுதியுடன் செயல்படுத்த முனைந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அப்பட்டமான வடிகட்டிய சுயநல அரசியல் தீவிரவாதிகளான பா.ம.கவால் தவறாக பரிந்துரை செய்யப்பட்டு இந்த திட்டம்  பின்னடைவை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற செய்யூர் மரக்காணம் பகுதியில் உள்ள மக்களை அணுகி அவர்களுக்கு இந்த திட்டத்தின் நன்மைகளைப் பற்றி விளக்கி அவர்களின் பேராதரவுடன் இந்த திட்டம் செயல்முறைப்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி போராடி வருகின்றது.

அரசே மின் உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் மின் கட்டணம் என்ற பெயரில் தமிழக மக்களை கசக்கிப் பிழிகின்ற அவல நிலை ஏற்படாது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் ஆய்வுக் குழு மரக்காணம் செய்யூர் பகுதிகளில் ஆய்வு செய்து சென்றுள்ளது.

இந்தத் திட்டம் உயிர் பெறக் காரணமாக அமைந்த மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு செய்யூர் மரக்காணம் பகுதி வாள் மக்களின் சார்பாகவும் பாட்டாளி மக்களின் முன்னேற்றக் கட்சியின் சார்பாகவும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளும் நாங்கள் எங்களது கட்சியின் நிலைப்பாட்டை தங்களின் மூலமாக மக்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம்.

திட்ட செயலாக்கம்

தமிழகத்தின் பங்கு

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பெரு முயற்சி எடுத்துள்ள தமிழக முதல்வர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இவ்வேளையில் இந்தத் திட்டத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் பேரறிஞர் அண்ணா அனல் மின் நிலையம் என பெயர் சூட்டி இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும்

இந்த திட்டத்தின் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழுமையாக தமிழகத்தின் தேவைகளுக்காக பயன்படுத்திட வேண்டும்.

 

நிலம்

இங்கு ஒருங்கிணைந்த அனல் மின் நிலையம் அமைய தேவையான 5540 ஏக்கர் நிலம் இப்பகுதியில் அரசிடம் உள்ள உப்பங்கழி வேலி உவர் நிலங்களை பயன்படுத்திட வேண்டும். இவ்வாறு செய்தால் அப்பகுதிவாழ் மக்களின் வாழ்விடத்திற்கோ வாழ்வாதாரத்திற்கோ எந்த பாதிப்பும் இல்லை

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விவசாய நிலங்கள் தேவைப்பட்டால் அரசாங்கம் அந்த நிலத்தின் உரிமையாளர்களை இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும்

 

 

 

இவர்களை பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலம் நெய்வேலி மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் அகதிகளாக வாழ்கிற அவல நிலைப் போல் அல்லாமல் இந்தியாவிலேயே முதல்முறையாக மக்களை நேரடியாக பங்குதாரர்கள் ஆக்கி தொழில் வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது இதனால் அவர்களது வாழ்வாதாரம் எப்பொழுதும் பாதிக்கப்படாது இதன் மூலம் நெய்வேலியில் நிலம் கொடுத்தவர்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருவதைப் போன்ற சூழ்நிலை முழுமையாக தவிர்க்கப்படும்

 

 

 

வர்த்தகப் பலன்கள்

1990 இல் இருந்து தமிழகத்தை ஆண்ட எந்த அரசும் இதுவரை எந்த ஒரு புதிய அனல் மின் நிலையத்தையும் கட்டத் துவங்கி செயல்படுத்தவில்லை, மாறாக, தனியார்களை ஊக்குவித்து ஒரு யூனிட் மின்சாரத்தை தற்பொழுது 17 ரூபாய் வரை வாங்கி தமிழக மக்களின் வரிப்பணம் தொடர்ந்து கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஒருங்கிணைந்த அனல் மின் நிலையம் அமைவதன் மூலம்:

தமிழக மக்களின் வரிப்பணம் கொள்ளை போவதை தடுத்திட முடியும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் துவங்க உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை தங்கு தடையின்றி வழங்கிட முடியும்

நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் வேலை வாய்ப்பினை பெறுவார்கள்

அருகில் உள்ள பகுதி மக்களின் அடிப்படை கல்வி வசதி மருத்துவ வசதி மற்றும் கட்டமைப்பு வசதி சிறப்பாக வளர்ச்சி பெறும்

இந்த மின் நிலையத்திற்காக அமைக்கப்படும் துறைமுகத்தின் வாயிலாக கப்பல் போக்குவரத்து அதிகமாகி அதைச் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைவதால் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் துரிதப்படுத்திச் செலுத்திட முடியும்

அரசே மின் உற்பத்தி செய்வதால் ஒரு யூனிட்டுக்கு ஆகும் செலவு வெறும் 1 ரூபாய் 60 காசுகள் மட்டுமே இதனால் எதிர்காலத்தில் மின்கட்டணம் என்ற பெயரில் தமிழக மக்களை கசக்கிப் பிழிகின்ற அவல நிலை ஏற்படாது

எங்களது மேற்கூறிய நிலைப்பாட்டை பொதுமக்களிடம் சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இத்தருணத்தில் எங்களது பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி மேற்கூறிய கோரிக்கையை வலியுறுத்தி மரக்காணம் ஒன்றிய அலுவலகம் முன்பு நான்கு எட்டு ரெண்டாயிரத்தி எட்டு திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் மனித சங்கிலி போராட்டம் நடத்தியது.

தற்போது மீண்டும் 10. 11. 2008 அன்று மரக்காணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் 10. 12. 2008 அன்று நடைபெற முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மின் வெட்டு என்பது கடந்து போன சில மாதங்களில் தமிழக மக்களை மிகவும் அச்சுறுத்திய ஒன்றாக இருந்தது. சமீபமாக அது தவிர்க்கப்பட்டு இருந்தாலும் எதிர்காலத்தில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்குமா? என்ற விவாதம் மக்கள் மத்தியில் இன்னும் நடந்துதான் வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மின் உற்பத்திக்கென எந்தவித திட்டமும் தீட்டாததுதான் இப்போதைய மின்வெட்டுக்கான மிக முக்கிய காரணம் என்பதை அரசியல் விருப்பு வெறுப்பு தாண்டி அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். அதற்காக நடக்கின்ற திமுக ஆட்சியாவது எவ்வளவு மின்சாரம் தேவை. அதற்கான உற்பத்தி சாத்தியமா? என்பதையெல்லாம் பாராமல் உலக நாடுகளே வாருங்கள். வந்து தொழில் செய்யுங்கள். அதற்காக தங்கு தடையற்ற மின்சாரம் தருகிறோம் என கூவிக்கூவி அழைப்பு விடுத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. விளைவு!

 

 

 

தமிழகம் இதுவரை சந்தித்திராத மின்வெட்டை கடந்த சில மாதங்களில் அனுபவிக்க நேர்ந்தது. இதில் ஒன்றை ஒப்புக் கொள்ள வேண்டும்: திமுக அரசு கொண்டு வந்த மின்சார உற்பத்தி உட்பட்ட நல்ல திட்டங்களை செயல்படவிடாமல் தடுத்து நிறுத்திய பெருமை பா.ம.க. டாக்டர் ராமதாசையே சாரும் அதற்கான பலனை அவர் அனுபவிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி பூண்டிருக்க வேண்டும்.

 

ஆனால்  ஓட்டு அரசியலால் ராமதாசை அகற்றுவதற்கு பதிலாக போற்ற வேண்டிய நிலைமைக்காக வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செய்யூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதிகளில் ஒருங்கிணைந்த அனல்மின் நிலையம் அமைக்க திமுக அரசு முனைந்தது.

வழக்கம்போல் குடிதாங்கி அமைக்க விடமாட்டோம் என்ற பல்லவியை பாட அரசும் கிடப்பில் போட்டுவிட்டது. இப்படியாக போய்க் கொண்டிருந்த சூழலில் கடந்த 22ந்தேதி செய்யூர் – மரக்காணத்தில் ஒருங்கிணைந்த அனல்மின் நிலையத்தை மத்திய – மாநில அரசுகள் உடனே தொடங்க வேண்டி சென்னையில் ஒரு உண்ணாவிரதம் நடந்தது நமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்த அந்த போராட்டத்திற்கு சென்றோம்.

சம்பந்தப்பட்ட பகுதி மக்களை நேரடியாகவே இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதை அதில் கலந்து கொண்டவர்களிடம் பேசும்போது தெரிந்தது உண்ணாவிரதம் நடந்த இடம் சென்னை சேப்பாக்கம் பிரமாண்டமான இப்போராட்டத்தை தலைநகரத்தில் நடத்தி அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆச்சரியப்படவைத்தவர் பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி.

உண்ணாவிரத பந்தலில் பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் சார்ந்தவர்கள் பா.ம.மு.க.வின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டி பேசினர். அதில் பா.ம.க. ராமதாசிற்கு எதிராகவும் பேசப்பட்டது குறிப்பாக பா.ம.மு.க வின் நிறுவன தலைவர் இராமமூர்த்தி, ராமதாசை வறுத்தெடுத்து பிரித்து மேய்ந்தார். இத்திட்டத்தை செயல்படுத்த தடையாக இருக்கும் ராமதாசை கைது செய்ய வேண்டும் என்றளவுக்கு பேச்சில் அனல் பறந்தது.

உண்ணாவிரதத்தின் முடிவில் சி.என். இராமமூர்த்தியை சந்தித்தோம். அவரிடம் பேசியதில் இருந்து தொகுத்தது இனி உங்களிடம் பேசும்.

தமிழகத்தின் மின் தேவை அனல்மின் நிலையம் மூலம் 60, புனல் மின் நிலையம் மூலம் 32, அணுமின் நிலையம் 3, முறை சாரா முறையில் 5 என்ற சதவிகித கணக்கில் பெறப்படுகிறது. அனல் மற்றும் புனல் மின் நிலையங்களை அதிகரிப்பதுதான் நமக்கான ஒரே வழி.

மேட்டூர் பாபநாசம், குண்டால் போன்ற புனல் மின் நிலையத்தை அமைக்க வழியில்லாத போது, தூத்துக்குடி நெய்வேலி எண்ணூர் போன்ற அனல் மின் நிலையங்கள் போல இன்னொரு அனல் மின் நிலையம் அமைப்பதே சிறந்த வழியாகும். அந்த நோக்கத்துடன் தான் கடந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த ரங்கராஜன்

குமாரமங்கலம் செய்யூர் அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்துவதற்கான பணிகளையும் துவக்கினார். எதிர்பாராதவிதமாக பா.ஜ.க. ஆட்சி கவிழ திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நேரத்தில் தான் பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி களம் இறங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக முழுவீச்சில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினோம். செய்யூர் மற்றும் மரக்காணம் பகுதிகளில் ஆலம்பரக்கோட்டை மற்றும் நாராவாக்கத்தில் துறைமுகங்கள் அமைத்து 12,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒருங்கிணைந்த அனல் மின்நிலையம் துவங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தினோம். கடந்த பத்தாண்டுகளாக இந்த அனல்மின் நிலையம் வருவது பற்றியும், கைவிடுவது பற்றியுமான செய்திகளால் எங்கள் பகுதி மக்கள் சொல்லொண்ணாத மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த சூழலில் கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் இந்த மெகா அனல் மின் நிலையத் திட்டத்தை துவங்குவதாக அறிவித்தன. தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் அனல்மின்நிலையம் அமைக்கப்படப்போவதை உறுதி செய்தார். நாங்கள் அளவிலா ஆனந்தம் அடைந்தோம்.

எங்கள் போராட்டங்களுக்காக கிடைத்த வெற்றி என்று கருதிய நிலையில் குடும்ப கூத்தாடி, வடிகட்டிய சுயநல அரசியல்வாதியான பா.ம.க. ராமதாசின் தவறான பரிந்துரையால் சொல்லப் போனால் அவரது மிரட்டலால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. அப்பகுதி மக்கள் கொதித்தெழுந்தனர். எங்கள் இயக்கம் அவர்களை அமைதிபடுத்தி மீண்டும் திட்டத்தை கொண்டு வருவதற்காக அந்த மக்களையே பங்கேற்க வைத்து உண்ணாவிரதம், மனித சங்கிலி, பாதயாத்திரை, விளக்க பயணம் என பல்வேறு முறைகளில் போராட்டங்களை நடத்தினோம்.

அரசியல் தீவிரவாதியான ராமதாசின் சூதுக்கு பலியாக வேண்டாம் என்று எடுத்துரைத்ததால் இப்போது மக்களே இத்திட்டம் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்க வைத்தோம்.

இந்த நிலையில் மத்திய அரசின் ஆய்வுக்குழு மரக்காணம், செய்யூர் பகுதிகளில் ஆய்வு செய்ய வந்தனர். அதற்காக அவர்களை வரவேற்று அப்பகுதி முழுவதும் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி பிரமாண்டமாய் செய்தோம். அதாவது இத்திட்டத்திற்கு இந்த பகுதி மக்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டுவது இல்லை என்பதை அதன்மூலம் தெரியப்படுத்தினோம்.

இந்த திட்டம் மீண்டும் உயிர்பெற காரணமான தமிழக முதல்வருக்கு எங்களின் பாட்டாளி மக்கள் முன்னேற்றக்கட்சியின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குவதை கடமையாக கருதுவதாகவும் சொன்னார் சி.என் இராமமூர்த்தி.

மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான 5540 ஏக்கர் நிலம் இப்பகுதியில் அரசிடம் உள்ள உப்பங்கழி மற்றும் உவர் நிலங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் அப்பகுதி மக்களின் வாழ்விடத்திற்கோ வாழ்வாதாரத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. என்றார் ஒருவேளை இத்திட்டத்தை நிறைவேற்ற தவிர்க்க முடியாமல் அருகில் இருக்கும் விவசாய நிலங்கள் தேவைப்பட்டால் அந்த நிலத்தின் உரிமையாளர்களை அந்த நிறுவனத்தில் பங்குதாரர்கள் ஆக்கி நிலத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இவர்களை பங்குதாரர்களாக சேர்ப்பதன் மூலம் ஏற்கனவே நெய்வேலி மின்நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் அகதிகளாக வாழ்கின்ற அவலநிலை அகன்று, இந்தியாவிலேயே முதன் முறையாக மக்களை நேரடியாக பங்குதாரராக்குவதால் அவர்களே தொழில் வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

1990-லிருந்து தமிழகத்தை ஆண்ட எந்த அரசும் இதுவரை எந்த புதிய அனல் மின்நிலையத்தையும் செயல்படுத்தவில்லை மாறாக தனியார்களை ஊக்குவித்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.17/-க்கு வாங்கி மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கத்தான் துணை போய் இருக்கிறது.

இந்த திட்டத்தை அரசு செய்வதால் ஒரு யூனிட்டிற்கு ஆகும் செலவு வெறும் 1 ரூபாய் 60 காசுகள் மட்டுமே என்ற புள்ளிவிவரக் கணக்கையும் சொன்னார் அப்பகுதி மக்களால் செல்லமாக சி.என்.ஆர். என்றழைக்கப்படும் இராமமூர்த்தி.

இப்படி ஒரு ஆதரவான சூழலில் தமிழக முதல்வர் சி.என்.ஆர். போன்ற இத்திட்டத்திற்கு ஆதரவான மக்கள் பிரதிநிதிகளை துணைக்கு வைத்துக் கொண்டு துணிந்து செயல்பட்டால் உண்மையில் இருளை அகற்றி உதய சூரியனை கொண்டு வந்துவிடலாம்.

செய்வாரா  முதல்வர்?

செய்யூர் மரக்காணத்தில் அனல் மின் நிலையம் அமைத்திட ‘தொடர்ந்து போராடும் பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சியின் தொடர் போராட்ட போராளி

உயர்திரு. சி.என்.இராமமூர்த்தி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்!

சித்தாமூர் ஒன்றிய பொதுமக்கள் மற்றும்

பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சி

 

உயிரைவிட்டாலும் விடுவோமே தவிர மக்களுக்கான மரக்கானம் – செய்யூர்

ஒருங்கிணைந்த அனல்மின் நிலையம் அமைக்காமல் ஓயமாட்டோம்!

தொடர் போராட்ட போராளி இராமமூர்த்தி சூளுரை!

 

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் 22.12.2008 காலை 8 மணிக்கு அக்கட்சியின் நிறுவனத் தலைவர்,  ‘இடஒதுக்கீட்டு நாயகர்” “தொடர் போராட்ட போராளி” மக்கள் மருத்துவர் C.N. இராமமூர்த்தி தலைமையில், உண்ணாவிரத அறப்போராட்டத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சி  பொதுச்செயலாளர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் துவக்கி வைத்தார்.

கட்சியின் மாநிலத் தலைவர் S.A. விவேகானந்தன் வரவேற்றார். போராட்டக்குழு தலைவர் தலைமை நிலைய செயலாளர் இராகி. அன்புராஜ் முன்னிலை வகித்தார். இடையில் “கொள்கை பாடல்கள் மற்றும் குறுந்தகடு வெளியீடு நடைபெற்றது. படையாச்சியார் Dr. SSR ராமதாஸ் பேரவைத் தலைவர் Ex. MP வெளியிட்டார். தமிழ்நாடு மீனவர் பேரவை இரா. அன்பழகனார் பெற்றுக் கொண்டார்.

 

 

கொள்கை முழக்க குறுந்தகடை இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் S.J. இனயத்துல்லா வெளியிட மக்கள் தேசியக் கட்சி நிறுவனர் சாத்தை A. பாக்கியராஜ் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் மு. இராஜ மாணிக்கம் நாடார் இளைஞர் முன்னேற்றச் சங்க நிறுவனர் நெல்லை T. கந்தசாமி, அகில இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சி நிறுவனர் ஐசக் ஐயா, உழைப்பாளர் மக்கள் கட்சி தலைவர் இராமகோபால தண்டாள்வார், இந்திய ஜனநாயக கட்சி மாநிலத் தலைவர் சமூகநீதி மாத இதழ் ஆசிரியர் எழுச்சிக்கவிஞர் தா. நெஞ்சிற்கினியன்.

தலித் மக்கள் முன்னணி மாநிலத் தலைவர் குமரி அருண், பறையர் பேரவை பொதுச்செயலாளர் ஏர்போர்ட் T. மூர்த்தி, சமூகநல சேவகர் டிராபிக் ராமசாமி, தமிழ்நாடு மீனவர் நலச்சங்கத் தலைவர் கோசு. மணி, கட்டிட தொழிலாளர் நலச்சங்கம் தலைவர் வே.மு. பல்லவமோகன், ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் நிறுவனர் மாமல்லன், தமிழ்நாடு கிராமிய நடிகர்கள் சங்க தலைவர், உத்திரமேரூர் R. விசுவநாதன், வன்னியர் சங்க தலைவர் A.K. நடராஜன், தமிழ்நாடு யாதவர் மகாசபை தலைவர் M. கோபாலகிருஷ்ணன் விவசாய தொழிலாளர் கட்சி நிறுவன பொன்குமார், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் K. மணிகண்டன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ தனியரசு, தேசிய மக்கள் தொழிலாளர் இயக்க தலைவர் சேம. நாராயண்ன, ஜார்கண்ட் முக்தி மோர்சா மாநிலத்தலைவர் புரவலர் மு. இராமச்சந்திரன் தேசிய ஜனநாயக கட்சி நிறுவனர் வசீகரன், நமது திராவிட இயக்கம் நிறுவனர் திருமதி ஓவியம், பகுஜன் சமாஜ்கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் இரா. ஆழ்வார், இந்திய கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி நிறுவனர் N. கிறிஸ்துதாஸ், தமிழக தலித் கட்சி நிறுவனர் TDK. தலித் குடிமகன் வாழைப்பாடியார் பேரவை தலைவர் சைதை V. தேவதாஸ், மேரி புகழேந்தி, மற்றும் நரிக்குரவர் சமுதாயத் தலைவியார் மற்றும் பலரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

உண்ணாவிரத அறப்போராட்டத்தை, சமூக சிந்தனையாளர் பேரவை நிறுவனரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் இரா. அன்பரசு Ex. M.P, அவர்கள் பழச்சாறு கொடுத்து நியாயமான இந்த கோரிக்கை வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி நிறைவு செய்து வைத்தார்.

சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் PN, வெற்றி செல்வன் நன்றி கூறினார். சுமார் 5000 பேர் கலந்துக் கொண்ட உண்ணாவிரதத்தில் இறுதியாக கீழ்கண்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை.

பாட்டாளிகள்   – விவசாயிகள்  – பொதுமக்களுக்கான நலன் தரும் தீர்மானங்கள் :

 

தீர்மானம் 1: செய்யூர் – மரக்காணம் பகுதிகளில் அமையவிருக்கும் அனல் மின் நிலையத்தை அப்பகுதிகளில் உள்ள மத்திய – மாநில அரசுகளுக்கு சொந்தமான உப்பங்கழி உவர் நிலங்களில் மட்டுமே அமைக்கபடவேண்டும் என்றும், மக்கள் வாழ்வாதாரமாக இருந்து வரும் விவசாய நிலங்களையோ, வாழ்விட பகுதிகளையோ ஒரு அங்குல நிலத்தைக்கூட அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும், மேலும் அமையவிருக்கும் இத்திட்டத்திற்கு பேரறிஞர் அண்ணா – அனல்மின் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் என்றும், இத்திட்டப் பணியை தனியார் வசம் ஒப்படைக்காமல் மத்திய – மாநில அரசுகளே ஏற்று விரைந்து செயல்படுத்தும்படி, இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் வாயிலாக பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. அவர்களுக்கு உரிய அதிகாரத்தை இதுவரை வழங்கவில்லை. எனவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்குகின்ற முயற்சியை பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சி, வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அமைக்க இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3: 1958-ம் ஆண்டு தொடங்கிய இலங்கை, தமிழர் – சிங்களவர் இனவெறி படுகொலைகள் – 1983ல் மிக தீவிரமடைந்து இன்றுவரை தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசின் ராணுவ வெறியாட்டத்தை, இந்திய அரசு தலையிட்டு அப்பாவி தமிழ் மக்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: இலங்கை கடற்படையினர், அப்பாவி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதுடன் பொருள்களை கொள்ளையடித்து செல்வதும் கைது செய்து உணவின்றி, உடையின்றி சித்திரவதை செய்வது வருவது தொடர்ந்து நடைபெறுகிறது. இச்செயல்கள் நடைபெறும் போதெல்லாம் சற்று குரல் கொடுப்பதுடன் நமது அரசியல் தலைவர்கள் நிறுத்திவிடுகிறார்கள். இந்நிலை மாறி தமிழக மீனவர் அச்சமின்றி கடல் தொழில் செய்ய, இந்திய அரசு உரிய பாதுகாப்பு கொடுப்பதுடன், தாரை வார்த்து கொடுக்கப்பட்ட கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5: 18 சதவிகித ஒதுக்கீடு பட்டியிலிடப்பட்ட வகுப்பினருக்கு நடைமுறையில் இருந்தும், அதில் ஒரு பிரிவினரான அருந்திய மக்களுக்கு உரிய பிரதிநிதியத்துவம் இல்லாததை அறிந்து அவர்கள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்து அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு சமூகத்தினரின் எண்ணிக்கைக்கேற்ற சாதிவாரி தனித்தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தமிழக முதல்வரை பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

காஞ்சி மாவட்டம் செய்யூரில் அனல் மின்நிலையம் வேண்டி பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சி மாபெரும் மனித சங்கிலி போராட்டம்!

நான் உயிரோடு இருக்கும்வரை எந்த விவசாயியின் நிலத்தையும் பறிக்கும் எவருக்கும் தாரை வார்க்க முடியாது. மீறினால் போராட்டம் வெடிக்கும் என்றார் பா.ம.க நிறுவனர் இராமதாஸ். அதற்கு நேர் எதிராக பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனர், தமிழினப் போராளி சி.என். இராமமூர்த்தி, எம்காம், பி.எல், விவசாய நிலம் அல்லாத அரசு நிலங்களை கையகப்படுத்தி தொழில் உற்பத்தி துவங்கி வேலை வாய்ப்பை உறுதி செய்யுங்கள் என்கிறார்.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூர் தாலுக்கா கடைக் கோடியில் அமைந்துள்ளது. கடப்பாக்கம், சூணாம்பேடு, செய்யூர், சித்தாமூர், பவுஞ்சூர், கூவத்தூர். மேல்மருவத்தூர் மற்றும் பல்வேறு கிராமங்கள் செய்யூர் தாலுக்காவில் உள்ளன

அரசு நிலங்களை கையகப்படுத்தி தொழில்நுட்பத்தை துவங்கி வேலை வாய்ப்பை உறுதி செய்யுங்கள்

தனியார் தொழிற்சாலைகளோ, அரசு நிறுவனங்களோ இல்லை. மக்கள் மீன்பிடித்தல், உப்பளம் தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க. ஆட்சியில் ரங்கராஜன் குமாரமங்கலம், செய்யூர் அனல்மின் நிலையம் திட்டத்தை அறிவித்தார். பா.ஜக ஆட்சி கவிழ்ந்தது. திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

 

 

.

ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் அனல்மின் நிலையம் துவங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் அனல்மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார். அரசுக்கு சொந்தமான இடம் 2500 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது. 750 ஏக்கர் மட்டும் தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்படும் என அறிவித்தது. 80 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலத்தின் மதிப்பு, திட்டம் அறிவித்தவுடன் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை கூடிவிட்டது.

“நில மதிப்பு கூடிவிட்டதால் மின்துறை அமைச்சரும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார். அதனால் மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திட்டத்தை கைவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் தமிழினப் போராளி சி.என்.இராமமூர்த்தி தலைமையில் நடந்துள்ளது

அதில் வலியுறுத்திய கோரிக்கைகள்:

மத்திய, மாநில அரசுகள் இணைந்து, நாரவாக்கம் மற்றும் ஆலம் பரக்கோட்டையில் துறைமுகங்கள் அமைத்து ரூ 60,000 கோடி முதலீட்டில் 12,000 மெ வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மரக்காணம் செய்யூரில் ஒருங்கிணைந்த அனல் மின் நிலையம் அமைப்பது.

8130 ஏக்கர் நிலம் இப்பகுதியில் அரசிடம் உள்ள உப்பங்கழிவேலி உவர் நிலங்களை அனல்மின் நிலையம் அமைய பயன்படுத்திட வேண்டும். அப்பகுதி வாழ் மக்களின் வாழ்விடத்திற்கோ, வாழ்வாதாரத்திற்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. திட்டத்தை நிறைவேற்ற தேவையான விவசாய நிலங்கள் தேவைப்பட்டால் நிலத்தின் உரிமையாளர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களாக ஆக்கவேண்டும்.

இவர்களை பங்குதாரர்களாக ஆக்குவதினால் நிலம் கொடுத்தவர்கள் அகதிகளாக வாழ்கின்ற அவலநிலை மாறி இந்தியாவிலேயே முதன் முறையாக மக்கள் நேரிடையாக பங்குதாரர்களாகி தொழில் வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

தற்போது தனியாரிடம் ஒரு யூனிட் ரூபாய் 17 க்கு வாங்கும் மின்சாரம் அரசே மின் உற்பத்தி செய்தால் ஒரு யூனிட் ஒரு ரூபாய் 60 காசுகள் மட்டுமே. மின் கட்டணம் தமிழக மக்களை கசக்கிப் பிழிகின்ற அவல நிலை ஏற்படாது.

தமிழகத்தில் தொழில் துவங்க தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கிட முடியும். இதே பிரச்சனைக்காக நிலங்களை கையகப்படுத்த பா.ம.க நிறுவனர் இராமதாஸ் பேசியபோது, ஊராட்சித் தலைவர்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இதே பிரச்சனைக்காக மாற்று வழியை காண்பித்து அனல் மின நிலையம் அமையக்கோரி பட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தமிழினப் போராளி சி.என். இராமமூர்த்தி எம்.காம். பி.எல். மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார். நல்ல திட்டங்களை அரசு கிடப்பில் போடாமல் நல்லவைகளை ஆராய்ந்து, மின்துறை அமைச்சர் திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும் என்கிறது பொது ஜனம் நடவடிக்கைதான் தெரியவில்லை.

 

பா.ம.மு.கட்சி உண்ணாவிரதம்

செய்யூர்- மரக்காணம் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க கோரி, பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத்தலைவர் சி.என்.இராமமூர்த்தி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்குழு தலைவர் ரா.கி. அன்புராஜ் முன்னிலை வகித்தார், மாநில தலைவர் எஸ்.ஏ. விவேகாந்தன் வரவேற்புரையாற்றினார்.

உண்ணாவிரதத்தை டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் துவக்கி வைத்தார். மக்கள் தேசம் கட்சி தலைவர் சாத்தை பாகஜபராஜ், மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் டாக்டர்.என்.சேதுராமன், படையாச்சியார் பேரவை தலைவா டாக்டர் ராமதாஸ், இந்திய தேசிய லீக் தலைவர் இதாயத்துல்லாஹ், மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார், வன்னியர் சங்க தலைவர் ஏ.கே.தடராஜன், வேட்டவலம் மணிகண்டன், ஐசக் ஐயா கிறிஸ்துதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதத்தை ரா-அன்பரசு முடித்து வைத்தார்.

 

 

பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி உண்ணாவிரதம்

சென்னையில் நடந்தது

 

மரக்காணம்-செய்யூர் பகுதிகளில் ஒருங்கிணைந்த அனல் மின் நிலையம் அமைக்க கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சியினர் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் சி என் இராமமூர்த்தி தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சியின் மாநில தலைவர் விவேகானந்தன், தலைமை நிலைய செயலாளர் அன்புராஜ், படையாட்சியார் பேரவை தலைவர் எஸ் எஸ் ஆர் ராமதாஸ், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனயத்துல்லா, தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன், மக்கள் தேசம் கட்சி நிறுவனர் சாத்தை பாக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு இடையே கட்சியின் கொள்கை விளக்கங்கள் அடங்கிய சீடி வெளியிடப்பட்டது

தன்னை தானே தோற்கடித்து கொண்ட ராமதாஸ்!

சி.என். இராமமூர்த்தி அதிரடி பேட்டி!

 

வன்னியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து பாட்டாளி மக்கள் துவங்குவதற்கு முனைப்பு காட்டி அதன் நிர்வாகியாக திகழ்ந்த வன்னியர் தலைவர்களில் மிக முக்கிய மானவர் சி.என். இராமமூர்த்தி பாட்டாளி மக்கள் கட்சி பாதை மாறி பயணிப்பதை ஜீரணிக்க முடியாமல் பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சி என தனியாக துவங்கி பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஏழு தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட்டு வன்னியர்களுக்கு டாக்டர் ராமதாஸ் செய்த துரோகங்களை பட்டியலிட்டு காட்டி அனல் பிரச்சாரம் மேற்கொண்டவர் பாமக வின் தோல்வி குறித்து அவர் கருத்தை அறிய அணுகினோம்.

பாமக கட்சியின் தோல்வி ஒன்றும் எதிர்பாராதது அல்ல எதிர்பார்த்தது தான். சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம் ஆனால் எப்பொழுதும். ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்பது தான் நியதி வன்னியர் சங்கமாக துவங்கிய காலத்தில் பொதுச் செயலாளராக இருந்த நான் வன்னியர்களுக்காக பல தொடர் போராட்டங்களை நடத்தினோம். அதில் முக்கியமானது ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி 1987ல் நடத்திய ஏழு நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் தான். வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டினை தந்தபோது நான் தான் கையெழுத்திட்டேன். ஆனால் இன்று தான் தான் இடஒதுக்கீடு. வாங்கிதந்ததாக கூறுகிறார்.

எவ்வளவு சந்தர்ப்பவாதம் பாருங்கள். வன்னியர் சங்கமாக இருந்து பாட்டாளி மக்கள் கட்சியாக மாற தூண்களாக செயல்பட்டவர்களை நயவஞ்சமாக துண்டித்துவிட்டார் ஏகே நடராஜன், வன்னிய அடிகளார் விழுப்புரம் பால சண்முகம், பு.த.இளங்கோவன் பு.த. அருள்மொழி பாக்கம் ராமகிருஷ்ணன் சேலம் சின்னப்பன் ஆகியோர் முக்கிய தலைவர்களாக செயல்பட்டனர். திண்டிவனத்தில் மருத்துவராக செயல்பட்ட ராமதாஸ் தானே வலுகட்டாயமாய் தொடர் மறியல் போராட்டத்தில் தன்னை திணித்துக் கொண்டு செயல்பட்டவர்.

போராட்டத்தில் இந்த தொடர் மறியல் 25 பேர் வீரமரணமடைந்தனர். அந்த வன்னியர் தியாகிகளின் குடும்பங்களுக்கு நான் போராடி தலா 3,00,000 ரூபாய் நிதி உதவி வாங்கி தந்துள்ளேன். இது வரை நடந்த சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களில் இறந்த வன்னிய குடும்பங்களில் யாரையாவது வேட்பாளராக நிறுத்தியிருப்பாரா? இல்லையே தன் உறவினர்களை மட்டுமே சட்ட மன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் அனுப்பினார். பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது நானோ என் குடும்ப உறுப்பினர்களோ அரசியலில் ஈடுபட மாட்டோம் எந்த நிகழ்ச்சிக்கும் என் செலவில் செல்வேன் ஒரு கோடி தருவதாக சொன்னாலும் நானோ என் குடும்ப உறுப்பினர்களோ சட்டமன்றத்தையோ பாராளுமன்றத்தையோ மிதிக்க மாட்டோம் இது சத்தியம் இதை மீறினால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று முழங்கிய ராமதாஸ் திமுக அதிமுகவிடம் மாறி மாறி முழங்கால் போட்டு மண்டியிட்டு கூட்டணி அமைத்து தன் அன்புமகனை ராஜ்சபா மூலம் உறுப்பினராக்கி அமைச்சராக்கினார்.

தன் மகனை ஒரு தொகுதியில் நிற்க வைத்து ஜெயிக்க முடியாத நிலைமையில் உள்ளார் ராமதாஸ் இது அவருக்கு தெரியும் ஆனால் அவர் பின்னால் சென்ற திராவிட கட்சிகளுக்கு தான் இதுவரை தெரியவில்லை.

தற்போது தான் அவர் வெறும் வெங்காயம் என்பது தெரிந்துவிட்டது. கொள்கைகளை எல்லாம் -அவர் கொண்ட காற்றில் பறக்க விட்டதால் தான் இன்று மக்கள் வாக்கு என்ற சவுக்கால் விளாசி தள்ளிவிட்டனர் வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குரு தான் மிக பெரிய வித்தியாசத்தில் தோல்வியை தழுவியவர் என்றால் அவர்களுக்கு வன்னியர்களிடம் உள்ள செல்வாக்கை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். டாக்டர் ராமதாஸை மக்கள் தோற்கடிக்கவில்லை தன்னை தானே தோற்கடித்துக் கொண்டார் என்பது தான் ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்த உண்மை.

சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல் எழுவோம் என்கிறார்.அவர் ஃபினிக்ஸ் பறவை அல்ல பிணி கொண்ட பறவை இனி என்றுமே எழ முடியாது. இலங்கை தமிழர்களுக்காக நீலீ கண்ணீர் வடித்த ராமதாஸ் தன் மகன் அன்பு மணி மத்திய அமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே இல்லையேல் அவர் பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே செய்தாரா இல்லையே பதவி வெறி பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்று தானே நிரூபணமாகிறது அன்புமணி சுகாதார துறை அமைச்சராக இருந்து என்ன சாதித்தார் பல மருந்து கம்பெனிகளை மூடியது தான் சாதனை.

தமிழகத்தில் புதிய பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம், துணை நகர திட்டம் என பல மக்கள் திட்டங்களை எதிர்த்து முட்டுக்கட்டை போட்டார் தேர்தல் நேரத்தில் மட்டும் வன்னியர் பாசம் கொள்ளும் டாக்டர் ராமதாஸ் இனி மக்களை ஏமாற்ற முடியாது மக்களும் ராமதாஸின் கபட நாடகத்திற்கு ஏமாறவும் மாட்டார்கள் என்றார் ஆவேசமாக.

 

 

செய்யூர் – மரக்காணம் பகுதிகளில் ஆலம்பரக் கோட்டை மற்றும் நாரவாக்கத்தில் துறைமுகங்கள் அமைத்து 12,000 மெகாவாட் மின் செய்ய சுமார் 60,000 கோடி முதலீட்டில் மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒருங்கிணைந்த மின் நிலையம் அமைக்க உண்ணா விரதம், தொடர் சங்கிலி போராட்டம் என பல போராட்டங்களை பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி நடத்தி வருகிறது. கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் கட்டணமில்லா. கல்வி, கட்டாய கல்வி சமசீர் கல்வி எல்லோருக்கும் கல்வி உறுதிபடுத்த பட வேண்டும் என்றும். எங்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றார் சி.என், இராமமூர்த்தி.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu