என்னுரை

தென்னிந்தியத் திருநாட்டில் மிகப் பெரும் சமூகமாக அறியப்படும் வன்னியர் சமூகம் பல தலைமுறைகளாக தனக்கென தனி அடையாளம் கொண்டு இனமாக பரிமளித்து இன்றும் ஒரு தனிப்பெரும் சமூகமாக இருந்து வருகிறது. பண்டைய வணிக சமூகம் காடுகளைத் திருத்தி, நாடுகளை உருவாக்கி வீரச் சமூகமாக ஆண்டு வந்திருப்பதை வரலாறு கட்டியம் கூறுகிறது.

அக்னிக் குலத்துக்கென தனி ஒரு அடையாளம் இருந்து வந்துள்ளது. காலம் காலமாக பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த சமூகம் வீரம், விவேகம், பொது நலச் சிந்தனை இவற்றின் ஊடே மிகப் பெரிய கலாச்சாரம் சார்ந்த சமூக வாழ்வியலை பண்டையக் காலத்திலேயே உருவாக்கி கொண்டுள்ளது.  ஏறத்தாழ மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு எனும் அளவிற்கு மக்கள் தொகை கொண்ட இந்த சமூகம் தனக்கென வாழ்வியலை, கலாசாரக் கோட்பாடுகளை உருவாக்கி கொண்டுள்ளது, இது மிகப் பெரிய வியப்புக்கு உரிய செய்தியில்லை.

வன்னிய முன்னோர்கள் நதிகளை உருவாக்கி இருக்கிறார்கள். வன்னிய உழவு நிலங்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஆலயங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அரசாண்டிருக்கிரார்கள். மக்கள் நலன், சமுதாய நலன் குறித்து பல்வேறு தத்துவார்த்தமான மாற்றங்களை செயல் படுத்தியிருக்கிறார்கள்.

வன்னிய இனத்தின் கூட்டமைப்பு வன்னிய இனத்தின் ஒற்றுமை மேன்மை இதுகாறும் கட்டிக் காப்பற்றப்பட்டுளது. இதற்கு முக்கிய காரணம் இந்த சமூகத்தின் அடிப்படைகள் என்று உறுதியாக கூறலாம். வன்னிய இயக்கங்கள் குறித்து தொடர் நூல்களை வெளியிடவேண்டும், இந்த நூல்கள் நமது சமுதாய மக்களை சென்று அடையவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வன்னியர் டாகுமெண்டரி மூலமாக பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது வரை வெளி வந்திருக்கும் அனைத்து நூட்களிலினும் இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன். அதற்கு காரணம் இந்த நூல் வன்னிய பெரியவர்களின் நேர்மையான சிந்தனை, கூட்டு முயற்சி, ஆசீர், முயற்சி, வழிகாட்டுதல் என அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது.

வன்னியர் குல ஷத்திரியராக ராஜஸ்ரீ அர்த்தநாரிச வர்மா அவர்கள் அருளி அளித்த சமூகக் கட்டமைப்புகளை வழிகாட்டுதல்களை கொண்டப் பாடல்கள் இன்னும் ஏனைய சமூகப் பெரியவர்களின் பாடல்களை தொகுத்து வெளியிடப்படும் இந்த நூல் தன்னிகரற்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தமிழினம் ஒரு அறம் சார்ந்த இனம். இந்த இனத்தின் கட்டமைப்புகள் அனைத்தும் அறம் சார்ந்தே இருப்பதை கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய தமிழர்கள் ஒரு முன்னேறிய, உலகின் மூத்த முற்போக்கான சமூகமாக இருந்து வந்திருப்பதை நம்மால் தமிழ் பண்டைய சங்க கால நிகழ் கால இலக்கியங்களில் காணமுடிகிறது.

எந்த ஒரு எண்ணமும், செயலும் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்று தமிழினம் உதித்த காலத்திலிருந்து கட்டமைக்க பட்டுள்ளது. தமிழ் சங்க இலக்கியங்களில் பக்தி இலக்கியங்களும், அறம் சார்ந்த இலக்கியங்களும் முக்கிய இடம் பிடித்து உள்ளது. திருக்குறளும் தனி மனித, சமூக வாழ்வியலை அறம் சார்ந்து அமைத்து வழிகாட்டுகிறது.

அவ்வண்ணமே வன்னிய இனமும் பக்தி இலக்கியங்களாலும், தனி மனித, சமூக இலக்கியங்களாலும் ஒழுக்க அறத்தை போதிக்கும் இலக்கியங்களாக இருக்கிறது. இதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும். அந்த இலக்கிய செல்வங்களை நமது தலைமுறைக்கும், இனி வரும் தலைமுறைகளுக்கும் கடத்த வேண்டியது ஒவ்வொரு வன்னியரின் கடமை ஆகும்.

இந்த புத்தகம் சங்க ஸ்தோத்திரங்களில் இருந்து துவங்குகிறது. கணேசர் பாமாலை தொடங்கி நம் தெய்வங்கள் அனைவரையும் பாமாலை கொண்டு தொழுகிறது.

இந்த நூல் 1931 ஆம் ஆண்டு ராஜஸ்ரீ அர்த்தநாரிச வர்மா அவர்களும் மற்ற சமூக பெரியவர்களும் எழுதிய மூல நூல் மற்றும் ஏனைய மூல நூல்களையும் தழுவி எழுதப் பட்டுள்ளது.

வன்னியர் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூலை அனைவரும் படிக்க வேண்டும், பயனுற வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் வெளிவருகிறது. ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

சி. என். இராமமூர்த்தி M.Com., B.L

நூலாசிரியர்

 

ராஜஸ்ரீ அர்த்த நாரீசர் வர்மா

 

சேலத்தில் சுகந்ததிரும் சுகவனபுரியில் தெய்வபக்தியும், ஒழுக்கமும், பெருஞ்செல்வமும், நன்மதிப்பும் கொண்ட சுகவன நாயகர் தம் துணைவியாரோடு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். மக்கட்பேறு வேண்டி, திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரரைப் பிரார்த்தித்து நோன்பிருந்தனர் இருவரும். இடப்பாகத்தில் சக்தியும், வலப்பாகத்தில் சிவனுமுள்ள திருமேனி கொண்ட மூலவருக்கு அர்த்த நாரீசர் என்று வடமொழியிலும், அம்மையப்பர் என்று தமிழிலும் அழைப்பது வழக்கம். மலைமேலும் அடிவாரத்திலும் திருக்கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அர்த்த நாரீசரிடம் அளவற்ற பக்தி கொண்டவர் சுகவன நாயகர்.

நாயகரும், அவரது மனைவி இலக்குமி அம்மையாரும் அம்மையப்பனை அனுதினமும் வேண்ட கருவில் திருவுடைய திருமகனை 27.07.1874-ஆம் ஆண்டு சீரும் சிறப்புமாக பெற்றெடுத்தனர். ஈசன் அருளால் பிறந்ததால் அர்த்தநாரீசன் என்று அம்மையப்பர் பெயரையே வைத்தார்கள்.

வர்மா முற்பிறவியில் செய்த தவப்பயனால் திருப்பூந்துருத்தி, இந்திர பீடம், சிவயோகி கரும்பாத்திர சுவாமிகளிடம் சிவதீட்சைப் பெற்று கல்வி கற்றார். மேலும் குருகுல வாசமிருந்து தமிழ், சமஸ்கிருதம், சமய நூல்களை கசடறக் கற்றார். அதனால் அவர் ஆன்மீக சிந்தனை உடையவராகவும், ஒழுக்கசீலராகவும், கல்வியாளராகவும், கவிஞராகவும், குலப்பற்றும், தமிழ்நாட்டுப் பற்றும், பாரத தேசப் பற்றும் கொண்டவராகவும், எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கை யாளராகவும் திகழ்ந்தார்.

ஆங்கில புலமையையும் பெற்ற வர்மா, கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டு பாடினார். சங்கீதக் கீர்த்தனை இயற்றி, இசை இயக்குநராகவும் விளங்கினார். வர்மா வான சாஸ்திரமும், ஜோதிடமும் கற்று தெளிந்தார். குடும்பம் நடத்த வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கவலை இல்லாதவர் வர்மா.

அர்த்த நாரீசன் எனும் இனிய பேர் பெற்ற அறிஞன், விரும்பத்தக்க ஒப்பற்ற க்ஷத்ரியன், தமிழ் மன்னன் பத்திரிக்கைகளை வெளியிடுபவன். கவியரசன் இயற்றிய சங்க காவியம் படைத்தவன். செந்தமிழின் இலக்கணத்தையும் இயல் இசைகளையும் அறிவேன். என் முன்னோர் செய்த நல்வினையின் பயனால் முதல் குடியான வன்னியர் குலத்தில் பிறந்தார்கள் என்று பெருமை பட எழுதுகிறார்.

வர்மா தன்னை பற்றி அவர் இயற்றிய சங்க காவியம் என்ற நூலில் நூலாசிரியன் எனும் தலைப்பில் எழுதியதை பார்ப்போம். நான் சேலம் நகரில் சுகவனபுரியில் வசித்த சுகவன நாயகரின் மகன். திருச்செங்கோடு அர்த்த நாரீசர் திருவருளால் பிறந்த சிவபக்தன். சீலமிக்க சோழர் திருக்குலத்தில் வந்த ரிஷி. செந்தமிழில் இசை பாடும் புலவன் எனது வாயில் பகவத் கீதையின் மணம் வீசும்.

ஒரே புலவர் எளிய நடையிலும் உயர் நடையிலும் கவி புனையலாமென்ற வர்மா, பாரதியாரைப் போல பாமர மக்களுக்குப் புரியும் வகையில் பாக்களை எளிய நடையில் எழுதி மக்களுக்கு தேசபக்தியை ஊட்டினார். வடமொழியைக் கற்க சமஸ்கிருத பள்ளியில் சேர்ந்து படித்தார் வர்மா. கோயிலில் ஐயர் தவறாக மந்திரம் சொன்னால் அதை திருத்தி சரியான மந்திரத்தை சொல்லிக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு பாண்டித்யம் பெற்றார்.

1905-ஆம் ஆண்டு இந்திய வைஸ்ராய் கர்சன் பிரபு வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரித்தார். இது காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரச்சனையாக உருவெடுத்தது. 1906 டிசம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் திலகர், அன்னியர்களின் பொருட்களை வாங்காமல் பகிஷ்கரித்தல் என்று அறிவித்தார். இது மிதவாதிகளுக்கு பிடிக்காமல் போனது.

தமிழ்நாட்டில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தலைமையில் தீவிர இயக்கம் நடந்து வந்தது. இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடக் கற்று கொடுத்து வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்து, அவர்களை இந்தியாவை விட்டு துரத்த வேண்டும் என்று திட்டமிட்டது தீவிரமான திலகர் இயக்கம். இதனால் க்ஷத்திரியர் மீண்டும் அரசாள வாய்க்குமென்று நம்பிய வர்மா தீவிரவாதி ஆனார்.

சேலத்தில் ஸ்ரீ கழறிற்றறிவார் சபையை 1907-ல் வர்மா நிறுவினார். ஐந்து வருடங்கள் கழறிற்றறிவார் சபையில் சிவனடியார்களுக்கு பூஜை செய்யப்பட்டது. இச்சபையை நிறுவி க்ஷத்ரியர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து வந்தார் வர்மா.

வளங்கொழிக்கும் நிலங்களுக்கு உரிமையாளரான சம்பு குலசேகரர் நன்செய் இடையாறு கந்தசாமி கண்டரையும், ராஜகோபாலாச்சாரியாரையும் தீவிரவாத இயக்கத்தில் ஈடுபடுத்தினார் வர்மா. இதனால் ராஜாஜி சென்னையில் தான் வசித்த வீட்டிற்கு திலகர் பவனம் எனப் பெயரிட்டார்.

சேலம் அர்த்தநாரீசவர்மா, கோவை பூபதி பழனியப்பா, நன்செய் இடையாறு கந்தசாமி கண்டர், ஏமராஜ கண்டனூர் சின்னச்சாமி கண்டர் ஆகிய நால்வரும் தேசப் பணியைக் குலப்பணியாகவே செய்தனர். கழறிற்றறிவார் சபையை சத்திரியர் படை சேர்க்கும் அரசியல் சங்கமாகவும், சேலம் ஜில்லா வன்னிய குல க்ஷத்திரிய சங்கமாகவும் செயல்படச் செய்தார் வர்மா. கந்தசாமி கண்டரை தலைவராகக் கொண்ட அச்சபைக்கு பொக்கிஷ காரியதரிசியாக இருந்தார் வர்மா.

பூபதி பழனியப்பா கோவை ஜில்லா வன்னிகுல க்ஷத்திரிய சங்கமும், சந்திரகுல க்ஷத்திரிய சங்கமும் நிறுவினார். ஏமராஜகண்டனூர் சின்னசாமி கண்டர் கொடுமுடியின் சங்கத்திற்கு தலைவராக இருந்தார்.

1912-ஆம் வருடம் சேலம் சுதேசாபிமானி அச்சுக் கூடத்தில் மேனேஜராக பணியாற்றினார். அப்போது தான் ஸ்ரீ வன்னி வம்ஸப்ராகாசிகை எனும் நூலை வெளியிட்டார். அச்சுக் கலையை நன்கு அறிந்து கைதேர்ந்தவரானார் வர்மா. 1913-ல் இதன் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்.  இப்புத்தகத்தில் தங்களை பற்றி தவறாக எழுதப்பட்டுள்ளதாக கம்மாளர் அவதூறு அச்சுக் கூடம் தடைபட்டது.

 

சென்னை வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்கத்தின் வெள்ளி விழாவையும் சேலம் ஜில்லா ஆறாமாண்டு விழாவையும் 1913-ஆம் ஆண்டு நஞ்சை இடையாறு ஊரில் நடத்திக் காட்டினார் கண்டர். இதில் வர்மாவும் தன் பங்கை சிறப்புடன் செய்து கொடுத்தார். 1917-ல் சேலம் ஜில்லா சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவையும் குதூகலமாக நடத்தினார்கள். இவ்விழாவிற்காக வந்த ஏமராஜ கண்டனூர் சின்னசாமி கண்டர் வர்மாவை தம் ஊருக்கு அழைத்துச் சென்று வசிக்க வீடும் வேண்டிய பொருளும் அளிக்க, கொடுமுடியில் சில காலம் வசித்து வந்தார் வர்மா. இருவரையும் போஜ மகாராஜாவும் காளிதாசனும் என்று உவமைபட அழைக்கலாயினர் அப்பகுதி மக்கள்.

1918-ல் சின்னசாமி கண்டர் கொடுமுடியில் இரண்டு நாள் மகாநாடு நடத்தினார். வர்மாவையும் பூபதி  பழனியப்பாவையும் க்ஷத்திரியர்களை மகாநாட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைக்க சுமார் ஒரு வருடகாலம் கோவை, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தனர். 1918 மே மாதம் மகாநாடு தொடங்கி நடத்தப்பட்டது.

சேலம் திரும்பிய வர்மா துறவறம் பூண்டு தன் பெயருடன் இருந்த நாயகர் என்ற பட்டத்தை துறந்து தாடி வளர்க்க ஆரம்பித்தார். நான் க்ஷத்திரியன் ஆனதால் ராஜரிஷி என்ற பட்டத்தை ஏற்றுக் கொள்வதாக சொன்னார். 1921 ஆம் ஆண்டு திருவண்ணாமலை தாலுகாவில் நடந்த வன்னியர் சங்க கூட்டத்திற்கு சென்றார் வர்மா.

திருவண்ணாமலைக்கு முதல் பயணத்தை தொடங்கிய வர்மாவை அண்ணாமலையார் ஆட்கொள்ள ஆரம்பித்தார். அது சங்க காவியத்தில் ‘யான் வணங்கும் திருவருணை யண்ணல்’ என்று முடிவுரைப் பஞ்சகம் எழுதும் நிலைக்கு கொண்டு வந்தது. கூட்டத்திற்கு வந்த பொன்னுச்சாமி பிள்ளையின் குமாரர் குப்புசாமி கண்டர் அக்னி குல சத்திரிய சங்கத்தை நிறுவி இருந்தார். இவர்களது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த வர்மா, இவர்களை வன்னியர் அல்லது தமிழ்நாட்டு சத்திரியர் எனும் நூலை பிரசுரிக்க வைத்தார்.

ராஜரிஷி வர்மா அருணையில் ரமண மகரிஷியை சந்தித்து ஆசி பெற்றார். அவரின் ஆசிரமத்திற்கு சென்று வந்ததில் பலரின் நன்மதிப்பை பெற்றார். ரமணரின் சிஷ்யர் ஸ்ரீகால்ய கண்ட கணபதி முனிவர் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவர். இவருக்கும் வர்மாவுக்கும் நல்ல தோழமை ஏற்பட்டது.

வர்மா நம் இன மக்களுக்கு ஒழுக்கமும் அறிவுரைகளும் கற்பிக்க செய்யுட்களும் கட்டுரைகளும் எழுதினார். அதில் மிக முக்கியமானது வன்னியகுல பெருமக்களுக்கு உரைத்த உபதேச உரைகளாகும். கல்வியைக் கல், கட்சியொழி, கள்குடியை வேண்டாதே, கொல்லாதே, தன்னலத்தைக் கோராதே, நல்லோரைப் போற்று, புலை நீக்கு, புண்ணியஞ் செய், ஆனினங் காப்பாற்று, மரபொழுக்கம் பற்று என்று பத்து தலைப்புகளின் கீழ் பத்துக் கட்டளைகளை உபதேசித்த பின்பற்றமாறு வேண்டினார் வர்மா.

பத்தாவது கட்டளையின் இறுதியில், சினேகிதனே! திரும்பவும் ஒரு தரம் உன் ஜாதியை சிந்தித்து ‘நான் சத்ரியன்’ என்று சொல். தூக்கத்திலிருந்து விழி, ஜாதிக்கு  உழை. ஜாதி தர்மங்களைக் கைப்பற்று. இதுவே உனக்கு என்னால் முடிந்த உபதேசம் என்று முடிக்கிறார் வர்மா.

ராஜரிஷி வர்மா தனது கவிதைகளின் போது செந்தமிழ்ச் செல்வியின் பாதம் குமரி என்று பாடாமல் இலங்கை என்றே பாடுகிறார். அதற்கு அவரே விளக்கமும் சொல்கிறார்.

சங்ககாலம் முதலே தமிழர்கள் இலங்கையின் ஈழத்தில் குடியிருந்து வருகிறார்கள். இதற்கு குறுந்தொகையில் 343-வது செய்யுளைப் பாடியவரின் பெயர் ஈழத்துப் பூதன் தேவனார் என்பதே அத்தாட்சி. அதில் 189, 360-வது செய்யுட்களைப் பாடிய புலவர் ஈழத்திலிருந்து மதுரையில் குடியேறியதால் அவர் மதுரை ஈழத்து பூதன் தேவனார் எனப்பட்டார். 18-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் இலங்கையை பிடித்த போது ஜாப்னாவில் சேர அரசர் ஆண்டு வந்தார். வவுனியாவில் வன்னிய அரசர் ஆண்டார். 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் இலங்கையை பிடித்த போது கண்டியில் பண்டார வன்னியன் அரசாண்டு வந்தான். இப்பகுதியில் இன்றைக்கும் ஜனத்தொகையில் அதிகமானவர்கள் தமிழர்களே என்று விளக்குகிறார் வர்மா!

1920-ஆம் ஆண்டு வேலூரில் நடந்த வட ஆர்க்காடு ஜில்லா 14-வது அரசியல் மகாநாட்டில் தலைமை உரையாற்றினார் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார். தேசபக்திக்குரிய வழிகள் பற்றி பேசும் போது ‘பாரததேவி மீது புலவர்கள் பாடியுள்ள பாக்களை இன்னிசைக் கருவிகளுடன் பாராயணஞ் செய்யலாம். சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும், சேலம் அர்த்தநாரீசவர்மா அவர்களின் பாடல்களும் மக்களுக்கு தேசபக்தி ஊட்டுவது போலக் கற்றை கற்றையாக அரசியல் நூல்களை ஒதியவரின் சொற்பெருக்குகளும் அப்பகுதியை ஊட்டா’ என்றார். இதைவிட வர்மாவின் கவி ஆற்றலுக்கு எவருடைய மதிப்புரையும் சிறந்ததாகாது.

பாரதியாரும் வர்மாவும் ஒரே பொருள் பற்றி பாடிய பாடல்களை ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது அவரவர் கவியின் தனிச்சிறப்பு புலனாகிறது. பாரதியாரின் மறைவுக்கு குறைவான எண்ணிக்கையில் தான் உற்றமும், சுற்றமும், நட்பும் வந்தது. பாரதியாரின் மறைவு குறித்து வேறு வித தகவல் எதுவும் இல்லாத நிலையில், அன்னாரின் மறைவுக்கு நமது ராஜரிஷி வர்மா அவர்கள் இரங்கற்பா எழுத அது 14.09.1921 தேதியிட்ட சுதேசமித்ரன் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கிறது என்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம். கவிக்குயிலும், கவிச்சிங்கமும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்த இரு கவிஞர்கள் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவைதானா?

வர்மா விட்டுச் சென்ற செல்வங்கள் அவர் கல்வியறிவினால் தீட்டிய எழுத்தோவியங்கள் மட்டுமே. அவர் பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் பற்பல கருத்துக்களை உணர்த்தும் வண்ண வண்ண எழுத்தோவியங்களை வரைந்தார். பாமர மக்கள் படிக்கும் வண்ணம் மிக எளிய நடையிலும், புலவர்கள் மகிழும் வண்ணம் உயர்ந்த நடையிலும் எழுதினார். 17.02.1934-ல் மகாத்மா காந்தி அடிகளுக்கு திருவண்ணாமலை மகா, ஜனங்கள் வாசித்தளித்த நல்வரவு பத்திரத்தை மணிப்பிரவாள நடையில் எழுதினார்.

வர்மா தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கை நடத்துபவராகவே வாழ்ந்து வந்தார். அவரைப் போல 85 வயதில் பத்திரிக்கையின் ஆசிரியராக உலகத்தில் யாரும் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. 1959-ஆம் ஆண்டு தமிழ் மன்னன் என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். அதில் பின்புற அட்டையில் வர்மா அச்சிட்டிருந்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதை அவரது மொழியிலேயே படியுங்கள்.

பத்திராதிபர் விண்ணப்பம்

தமிழ் மன்னர் குல மணிகளே!

யான் பத்திரிக்கைத் தொழிலில் என் ஆயுளில் முக்கால்பாகம் ஈடுபட்டு உழைத்து வருவது உலகப் பிரசித்தம் க்ஷத்திரியனை முதன்முதலில் ஆரம்பித்தேன். அதை நடைபெறவொட்டாமல் நம் குல மணிகள் கங்கணங்கட்டிக் கொண்டார்கள். க்ஷத்திரிய சிகாமணியென் மாத சஞ்சிகையை ஆரம்பித்தேன். அதுவும் அச்சுக் கூடத்தார் பொறாமையால் ஒரு வருடத்தில் நின்றுவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வீரபாரதியென்னும் ஓர் பிரசுரம். வாரம் மும்முறையாக ஆரம்பித்தேன். பிரிட்டிஸ் சர்கார் அதன் மேல் கவனஞ்செலுத்தி பாரதியின் காட்சிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்த சட்டசபையில் வாசித்து அச்சுக் கூட சட்டத்தைத் திருத்தி தமிழகத்தில் தமிழின் ஒரே பத்திரிக்கையாகிய வீரபாரதியின் மேல் வழக்கு தொடுக்க ஆரம்பித்ததும் அஃது நின்றுவிட்டது. இப்படியாக எனது எண்பதாவது வயதுவரை என் முயற்சிகள் வீணாயின. ஒர் சொந்த அச்சகம் வைக்க நான் செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை.

தற்போது முதுமைப் பருவம். இன்று வயது எண்பத்தைந்து. நாளை ஆடி மாதம் 12-ல் எண்பத்தாறு துவக்கம். வாரப்பத்திரிக்கை நடத்த என்னால் உதவியின்றி தனியாய் முடியாத படியால் அவ்விஷயத்தில் குத்திலுதித்த தனவான்கள் உதவியும் கிடைக்காதபடியால் ‘தமிழ் மன்னன்’ என்னும் இச்சஞ்சிகையை ஆரம்பித்திருக்கிறேன். இதன் மூலமாய் என் சொந்த கவிகளையும் காவியங்களையும் வெளியிட்டுத் தமிழகத்துக்கு பரிசளிக்க உத்தேசித்துள்ளேன். இப்பத்திரிக்கையால் வரும் ஊதியம் என் வாழ்க்கையை நடத்தக் கொஞ்சமும் போதாது. ஆதலால் ஓர் வித உபகாரத்தை நாடி இவ்விண்ணப்பத்தை வெளியிடுகின்றேன்.

சந்தாக்கள் சகாயதனம் இரண்டும் நான் வேண்டுகின்றேன். பத்து ரூபாய் வீதம் நூறு பேரிடம் ஆயிரம் ரூபாய் வசூலித்து என் கடைசி நாட்களுக்குதவியாக வைத்துக் கொள்ள என் ஆவல். வைர விழாவில் கிடைத்த ஐயாயிரத் தொகைகள் பத்திரிக்கை பிரசுரித்ததிலும் கடன் பெற்றவர்கள் கொடாததனாலும் தற்போது உதவவில்லை. பத்து ரூபாய் சகாயதனம் தரும் நூறு பேர்கள் முன்வர எனது கோரிக்கை எனது தொண்டை மதித்து நடக்கக் குலமக்களைத் தூண்டுகிறேன்.

ஆர்வலன்,

ராஜரிஷி சு. அர்த்தநாரீச வர்மா.

மேற்கூறிய விண்ணப்பத்தினால் வர்மா தமது 85 வயதிலும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிக்கையை நடத்தும் மனதிட்பமும் சிந்தனைத் தெளிவும் புத்திக் கூர்மையும் உடல் நலமும் கொண்டிருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம். 85 வயதிலும் பத்திரிக்கை நடத்திய வர்மாவுக்கு முதல் பத்திரிக்கை க்ஷத்ரியன் ஆகும்.

வர்மா தள்ளாத வயதிலும் பேராற்றலுடன் சிறந்த கவிதையும் கட்டுரையும் எழுதி பத்திரிக்கையை நடத்தி வந்தவர் பொருளாதாரக் கஷ்டத்தால் நிறுத்தி விட்டார். க்ஷத்ரியன் சிகாமணி மாத இதழையும் நடத்தினார். ஆனால் ஒன்பது மாதங்களில் இதை நிறுத்தி விட்டார். மேலும் தமது மரபினருக்காக க்ஷாத்ர சூடாமணி அல்லது தமிழ்நாட்டு க்ஷத்ரியர் என்ற புத்தகத்தை வெளியிட்டார். 1923-ல் சமஸ்கிருத நூல்களை ஆராய்ந்து பாரா சரஸ்மிருதி (மூலமும் உரையும்) பகவத் கீதா விலாசம், ஜாதி தத்வ நிரூபனம், லோகாந்தரம், ஜீவனும் ஈசனும், விதிமதி விளக்கம் ஆகிய புத்தகங்களை இயற்றி வெளியிட்டார். மதுவிலக்குச் சிந்து, ஸ்ரீவன்னி குலோத்கர்ஷ தீபிகை, குலமாதர் குப்பிப் பாட்டு, வாலிபர் கீதம், மன்னர் குல வாலிபர் கீதம், கொடிப்பாடல், மழவரோதயம், அரசர் குல ஆச்சாரச் சிந்து, பள்ளியர், பரத்துவம், படையாட்சியர் பாடல், ஒற்றுமைப் பாடல் என பல்வேறு தலைப்புகளில் மிக அழகான பாடல்களை இயற்றி கவி உலகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.

 

 

 

 

ஸ்ரீசொர்ணகாமாட்சி துணை.

 

வன்னிகுலக்ஷத்ரிய சங்க உபதேசங்கள்

சங்க தோத்திரம்

 

கணேசர்

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம்

மறைபூத்த நால்வருண மலர் பூத்துக்

கருமமணம் வயங்கப் பூத்த

தறைபூத்த நருந்தொடையற் சம்புகுலத்

தவர்சங்கம் நாளும் வாழக்

கறைபூத்த கவளமெலாங் கவர்ந்தினிய

கருணைமதங் கனிவி னூற்ற

விறைபூத்த கச்சிநகர் விகடசக்ர

விமலன்றாள் விரும்பி வாழ்வாம்.

 

 

ஸரஸ்வதி

மலைமடந்தை யருள்வடிவும் அலைமடந்தைத்

திருவடிவும் வயங்க வோங்கு

கலைமடந்தை யெனுமுலக காரணிதன்

வனசபதங் கருது வோமே

கொலைமங்கு நிணங்கமழுங் கூறுவேற்பல்

லவமன்னர் குலமா சங்கம்

நிலையடைந்து நிதிபெருகி நீணிலத்திற்

கல்விமிக்கு நிகழு மாறே.

 

 

சுப்பிரமணியர்

போர்மேவு மசுரர்குலப் பூண்டெரித்துப்

புரந்தரனைப் புரத்தி லேற்றிப்

பேர்மேவு மறுசமயப் பெம்மானாங்

குகனடிகள்பேணு வோமே

கூர்மேவு பாதகர்தங் குலமறுத்து

மறை தருமங் குலவ வாழ்ந்த

தார்மேவு புயவன்னித் தரணிபர்தஞ்

சங்கமிது தழைக்கவென்றே.

 

 

திருமால்

காரணனையுலகமெலாங் காத்தருளும்

குறிபகத்தைக் கதியின் வைப்பை

நாரணனைத் திருமகட்கு நாயகளை

யனவரதம் நாடுவோமே.

சீரணியுந் திருவளர் தெய்வமனு

முறையிறழாச் செங்கோலாளர்

தாரணியு மழன் மன்னர் சங்கமிது

நீடுழி தழைக்குமாறே.

 

 

பரமசிவம்

சீதமதி நிலவுடுத்த தெய்வத்தை

மழுமானை செங்கை யேந்தும்

நாதனையு மாதேவி நாயகனை

யெஞ்ஞான்றும் நவிற்று வோமே

நீதமொடு கோலேந்தி முறைபுரிந்த

வன்னிகுல நிருபர் சங்கம்

பூதலத்தில் மறைபுகலும் புருடார்த்த

மானவெலாம் பொருந்துமாறே.

 

 

சொர்ணகாமாட்சி

மாடமலி வீரசம்பு மாநாடாங்

கச்சியிற்பல் வருணத் தோருஞ்

சூடமலர்ப் பதமுடியி லெண்ணான்கு

தொல்லறங்கள் தொண்டு மேவக்

காடவராம் பல்லவர்கள் நாடுகுல

தேவதையாய்க் காம கோடிப்

பீடமமர் காமலோ சனியடிகள்

சங்கமிதைப் பேணவுள்வாம்.

 

 

குலசேகராழ்வார்

சிலையேந்தி யுலகளிக்குந் திருவளர்

திருமணியாய் சிறக்கத் தோன்றிக்

கலையேந்து மடியவரை நிதம்போற்றி

யிராமகதை களிப்பிற் கேட்டு

மலையேந்து தன்மகளை யரங்கனுக்கு

மணமுடித்து வானோர்க் கெட்டா

நிலையேந்து மெங்கள்குல சேகரன்றாட்

சங்கமிது நிலைக்க வுள்வாம்.

 

 

சேரமான் பெருமாள் நாயனார்

மறைமுதல்வன் நுதல்விழியாம் வன்னிவழி

யவதரித்து வழுதி சென்னி

திறையளிக்கச் சிற்றுயிர்கள் உரையுணர்ந்து

நடமவினவிச் செங்கோ லோச்சி

இறைமுகத்துக் கருதிதிய மீத்தினிய

நாவலினோ டிணங்கி மீசன்

உறைகயிலை யடைந்தபிரான் பதம்பணிவாஞ்.

சங்கமிது ஓங்கு மாறே.

 

 

சங்காபிமானிகள்

வான்காட்டிக் குடிபோற்று மொருமரபின்

றருமநிலை மதித்துக் கல்வித்

தேன்காட்டி யிருமையினுஞ் சிறப்பேற்ற

கோபாலன் தியாக ராஜன்

கோள்காட்டு செங்கல்வ ராயனு நெட்டியப்பன்

கோவித் தப்பன்

கூன்காட்டு முருகேச விராகநாயகன்

தருமம் குலவி வாழ்க.

 

 


ஜாதீய கீதங்கள்

(பள்ளிச் சிறுவர்கட்காகப் பாடப்பட்டது)

 

“பாடுகின்ற பனுவலோர்கள்” என்ற மெட்டு.

வேதமோடுகுடிபுரந்த வேந்தராயபாந்தவர்

ஜாதியா கும்வன்னிமன்னர் சக்கமெங்குமங்களம்.

 

கணேசர்

கச்சிமேலும்விகடசக்ர கணபதீசர்போற்றுவோம்.

மெச்சுவேந்தர் சங்கமிதனை வேண்டிவாழ்வு தூண்டவே

 

பரமசிவம்

அங்கிவண்ணன் அங்கிநாட்டன் ஆரியாயவேதகள்

எங்கள் சங்கம்வாழவீக இன்னருள் தன்பொன்னருள்.

 

 

காமாட்சி

காமகோடி பீடமேவும் காரணிபரிபூரணி

ஜீரணித்தமன்னர்சங்கம் செழிக்கவே அருள் கொழிக்கவே.

 

மகாவிஷ்ணு

வைபமூன்று முண்டுமிழ்ந்த வாயனுகுமாயனை

மெய்யறாதவேந்தர் சங்கம் மீண்டும்வாழ வேண்டுவோம்.

 

 

சரஸ்வதி

 

வெள்ளை வாரிசப்பொருட்டில் வீற்றிருந்த தேவியை

உள்ளியுள்ளிபாதப்போதையோதியோதல் வேண்டுவோம்.

 

குலசேகரர்கள்

 

வாசியேறிதேகமோடு வானமேரும்சேரர்கள்

தேசுலாவுகோல்நினைந்து சிந்தையன்புமுந்துமே.

 

(இந்திரகபா வர்னமெட்டு.)

 

சேரசோழ பாண்டியர்கள் தெய்வவேந்தர்கள்

செந்தமிழ்நாடது புரந்த தீதில்சாந்தர்கள்

வாரமாகும்சந்ததியார் வாழ்க வாழ்கவே.

வன்னிருலம்பேருலகில் வாழ்க வாழ்கவே.

 

சென்னைநகர் வாழ்ந்தபிரான் செங்கல்வராயன்

சீர்பெருகக்கல்வியுதவி செய்ததாயகன்

வன்னிகுலோத்தாரணனெனும் மதிப்புவாய்ந்தவன்

மாதவகோபாலநாம வள்ளல்வாழியே.

 

வாழி

 

வாழ்க வாழ்கவே-என்றும்-வாழ்கவாழ்கவே

வன்னிமன்னர் சங்கமுலகில் வாழ்கவாழ்கவே

சென்னைமேவும் அன்னைசங்கம் சிறப்பின் வாழ்கவே.

 

சங்கம்வாழ்கவே-எங்கள் சங்கம்வாழ்கவே

தமிழகம்வளர் க்ஷத்ரியர்கள் சங்கம்வாழ்கவே

சங்கநிதியோ டங்கம்பெருகி சங்கம்வாழ்கவே.

 

மித்ரன்வாழ்கவே–குல-மித்ரன்வாழ்கவே

மேதினியில் நீதிவன்னி மித்ரன்வாழ்கவே

வேண்டு சுப்ரமண்ணியன் பல்லாண்டு வாழ்கவே.

 

பாடல்வாழ்கவே-குலப்-பாடல்வாழ்கவே

பாசவர்த்தநாரீசவர்மன் பாடல்வாழ்கவே

பாடுவோர்கள் செல்வநயந்து பாரில்வாழ்கவே.

 



 திரௌபதாதேவி தோத்திரம்

தருமராஜா கோயில்

 

 

 

பாண்டுபுத்திரர் ஐவரில் தருமராஜா ஒருவர். இவரால் குருகுலம் சிறப்பெய்தியது. தருமத்திலும் நற்குணத்திலும் மனிதருக்குள் அழியாச் சிறப்படைந்தவர் தருமர். தருமர் முதலிய ஐவருக்கும் பத்தினி திரௌபதை. பாஞ்சால மஹா ராஜன் துரோணாச்சாரியைக் கொல்வதற்கு ஒரு குமாரனையும், தன்னைத் தேர்க்காலில் கட்டிக்கொண்டுபோன போர் வீரனாகிய அருச்சுனனுக்குப் இந்த பாணிக்கிரகணஞ் செய்து கொடுப்பதற்கு ஒரு குமாரத்தியையும் இந்த யாகத்தினிடமாக உற்பத்தி செய்ய வேண்டி யாகஞ்செய்தான். இந்த யாகத்திலிருந்து  திருஷ்டத்துய்மனும் திரௌபதையும் உற்பத்தியானார்கள். திரௌபதை ஐவரையும் மணம் புரிந்தாள்.

 

துஷ்டத்துய்மன் பாரதப்போரில் துரோணனைக் கொன்றான்.பாரதப் போர் முடிந்த பின்னர் பாண்டவர்களுடைய சொரூபங்களைக் கோயில்களில் வைத்து வணங்குகின்றார்கள். இந்த கோயில்களுக்குத் தருமராஜா கோயிலென்றும், திரௌபதை ஆலயமென்றும், பெரும்பான்மையும் வீரக்கோயிலென்றும் பெயர். இவை தென்னிந்தியாவில் விசேஷமாயிருக்கின்றன. இவற்றில் அனேகம் வன்னியர் ஆதீனத்திலிருக்கின்றன. வன்னியர் ஆதீனத் திலிருப்பதற்குக்காரணம் திரௌபதை அக்கினியினின்று தோன்றிய க்ஷத்திரிய ஸ்திரீயாதலால் அவளை நாளது வரைக்கும் வன்னியர்களில் அனேகர் பூஜித்துக்கொண்டு வருகின்றார்கள்.

 

*பாண்டவரைவரோடு பாஞ்சாலிதானுங்கூடி

மூண்டபாரதத்திற்றங்கள் முளைகள் பந்துக்கள்சேனை

மாண்டதுமனம்பொறாமல் மாள்வதேகடனென்றுன்னி

காண்டிடமலையின் சாரல் கதித்துயிர்நீங்கிமாண்டார்.

மாண்டவர்தெய்வமென்று மாநிலத்தவர்துதிக்க

வேண்டியவரங்களெல்லாம் விருப்புடனீவாரென்றே

பாண்டவர் கோயிற்கட்டி பலருமேபணிந்துநிற்பார்

 

வேண்டிய பூஜை யாவும் வன்னியர் புரிந்து வாழ்ந்தார்.

 

தருமராஜா கோயில் உற்சவம் பத்துநாள் நடத்தப்படுகின்றது. அக்காலத்தில் பாரதக்கதை வாசிக்கபடும். தினந்தோறும் திரௌபதையை யலங்கரித்து வீதிப்பிரதட்சணம், மிக்க வைபவத்துடன் நடத்துவார்கள். தருமர், வீமன், அருச்சுனன், கிருஷ்ணன், இவர்கள் சொரூபங்களையும் வைத்து வணங்குவார்கள். கடைசிநாளில் நெருப்பு மிதித்தலென்னும் ஐதீகம் தருமராஜா கோயிலுக்கெதிரில் தீவளர்த்தி பயபக்தியோடு மஞ்சளாடையுடுத்தி பிரார்த்தனையோடு நடத்தப்படும். இதில் வன்னியர் முதன்மை யாக உபவாசமிருந்து திரௌபதையை மனதில் தியானஞ் செய்துகொண்டு தீயில் இறங்குவதுண்டு. அக்கினியினிடமாகத் தோன்றிய திரௌபதை தமது மக்களுக்கு தீங்கு வராதபடி பாதுகாத்து இரஷிப்பாள்.

 

திரௌபதையினிடம் பக்தி விசுவாசம் பூண்ட ஏனையோரும் தற்காலம் தீமிதித்தலுண்டு. ஆனால், தீ மிதித்தலென்னும் வழக்கம்

தொன்றுதொட்டு வன்னியர்களுக்கேயுண்டு.

 

வில்லி பாரதம் விராடபர்வம் 7-வது கவி

 

கல்கெழு குறும்புஞ் சாரலுங் கிரியுங்

கடிகமழ் முல்லையும் புரவு

மல்குநீர் பண்ணை மருதமுங் கடந்து

வன்னியிற் பிறந்தமா மயிலும்

வில்கெழு தடக்கை யிளைஞருத் தானும்

விராடர்கோன் றனிக்குடை நிழலிற்

பல்குலமாக்கள் வாழ்வுகர் வளநா

டடைந்தனன் பாண்டவர் தலைவன்,

 

பாண்டவர். தலைவனாகிய சகோதரர்களுடனும், வன்னியாகிய அக்கிநியிற் பிறந்த திரௌபதையுடனும் விராடநாட்டைப்போய்ச் சேர்ந்ததை ஷை கவி தெரிவிக்கின்றது. இதனால் வன்னியின மரபார்களே வன்னியர்கள் என வழங்கப்பட்டார்க ளென்பதற்கு இலக்கண விதியும் இங்கெடுத்துக் காட்டுவோம்.

 

வன்னி X ய் X அர். வன்னி பகுதி,  அர்-பலர் பால் விகுதி,

 

‘இ.ஈ.ஐ. வழியவ்வும்’ ஏனையுயிர் வழிவவ்வும், ஏமுன் இவ்விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென்றாகும். என்னும் இலக்கண விதியின்படி யகர உடம்படுமெய்பெற்று முடிந்தது.  வன்னியென்றால் நெருப்பு யென்பது பொருள். ஆதலால் வன்னியரென்பதற்கு நெருப்பிலிருந்து தோன்றினவர், நெருப்பின் சம்பந்த முடையவர் என்பது பொருள். வன்னியர்களின் பேரரசாட்சி காலத்தில் படைத் துணைவர்களாகயிருந்த மறவர், கள்ளர் முதலிய வகுப்பார்களுக்கும் சில தமிழ் ஜில்லாக்களில் வன்னியர் பட்டம் வழங்குகிறது காலமாறுபாடேயாகும்.

 

ஆங்காங்குள்ள வன்னியர்கள் தங்கள் முதாதையாகிய திரௌபதைக்கு வருஷாவருஷைம் உற்சவம் நடத்திக் கொண்டு வருவார்களாகில் தங்கள் குடும்பம் சேமமும் சிறப்பும் அடையும்.

 

தருமராஜா கோயில் பூசாரிகள் பலருக்கும் உபயோக மாகும் வண்ணம் தோத்திரப்பாடல்கள் சிலவற்றை இத்துடன் சேர்ந்திருக்கிறோம்.

 

 

 

ஸ்ரீ கண்ணபிரான்

 

முடிவிலன் பார்ந்த முகத்தினனாகி முதெயிற்

றுவரையம் பதிபோய்ப்

பிடியவலளித்துப் பிறப்பிறப்பில்லாப் பிரமமென்

றுணர்வினா லுணரு

மிடியறு மறையான் றிருமனைக்கிழத்தி விரும்பியாங்

கிருநிதி யருளும்

கடிகம ழுலங்கற் பசுந்துழாயமலன் காமர்பூஞ்

சேவடி நினைவாம்.

 

 

பாண்டவர்

 

சுகுணமார் தருமற்போற்றி தூநெறியொழுகப்பெற்று

மிகுபலவிமற்போற்றி மேவியபாவம் நீங்கித்

தகுதிசேர்விசயற்போற்றி சந்ததம் விசயம் வாய்ந்து

நகுலசகாதேவர்போற்றி நலியுநோய்தீர்ந்து வாழ்வோம்.

 

ஸ்ரீ திரௌபதாதேவி

 

அருள்பழுத் தொழுகு விழித்திரௌபதியே

யழல்வரு மொரு மரகதமே

இருள்பழுத் தொழுகு மழைக்குழ லணங்கே

யெழில்கொள் பாஞ்சாலி யென்னம்மே

மருள்பழுத் தொழுகு வழிவிழா தெம்மை

வழிவழியடிமை கொண்டென்றுந்

தெருள்பழுத் தொழுகு கல்வியுஞ்சீருஞ்

செல்வமுந் தந்துகாத் தருளே.

திருவளர் முகமுங் கருணைசேர்விழியுந் திலகமுங்

குமுதவாய் மலரும்

குருவளர்பிதாம்பரமு நுண்ணிடையுங் குலவுபொற்

கங்கணக் கரமும்

மருவளர்கமல மணையசெம்பதமும் வயங்கவேள்வியி

லெழுந் தருளும்

உருவளர் தெய்வத் திரௌபதியடியே முளமிசை

யென்றும் வாழியவே.

 

*  – போற்றித்திரு அகவல்

 

நித்திய தத்துவ நின்மலி போற்றி

நில கல்யாணி நிரஞ்சனி போற்றி

சகலமும் பெற்ற தாயே போற்றி

சத்தியவற்புத வித்தகி போற்றி

பத்திமையோர் தொழு முத்தமி போற்றி

பாண்டவர் சகாயி பராபரி போற்றி

துலங்கிய வக்கினி சொருபி போற்றி

துருபதன் பெற்ற சுகிர்தி போற்றி

சுந்தரி போற்றி சுமங்கலி போற்றி

சிற்பரி போற்றி செல்வி போற்றி

சிற்குணி போற்றி திரௌபதி போற்றி

போற்றி போற்றிநின் பூங்குழல் போற்றி

போற்றி போற்றிநின் பொலிமுகம் போற்றி

போற்றி போற்றிநின் புனைவிழி போற்றி

போற்றி போற்றிநின் பூங்கரம் போற்றி

போற்றி போற்றிநின் பொற்பதம் போற்றி

 

ஸ்ரீதிரௌபதா தேவி திருவடிகளே சரணம்

 

கிராமதேவதை, மாரியம்மன், கங்கம்மன் முதலிய கோயில்களில் பூஜை செய்பவர்கள் க்ஷை போற்றித்திரு அகவலில், “பாண்டவர்சகாயி பராபரி போற்றி” என்றது முதல் 3.அகவலை நீக்கி அதற்குப் பதிலாக.

 

மகிடாசூர மர்த்தனி போற்றி

படவேடமர்ந்த பத்தினி போற்றி

பெரியபாளையத் தாயே போற்றி

 

என்று மாற்றி மனப்பாடம் செய்துக்கொண்டு குங்குமத்தினாலும் சிகப்பு புஷ்பத்தினாலும் அர்ச்சனைசெய்யவும்.

 

ஆடு கோழிகள் காவு கொடுக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. பாற்பொங்கல் முதலியனயிட்டு காவுக்கு பதில் கலியான பூசனிக்காயில் குங்குமத்தை கொட்டி அதை சுற்றி உடைத்து சிகப்புக்குறி காட்டினால் தேவதை ஏற்றுக் கொள்வாள்.பல இடங்களில் இதையே உயர் வகுப்பினர் அனுஷ்டிக்கிறார்கள். அதனால் ஜீவஹிம்சை நீங்கி புண்ணியம் பெருகும்.

 

ஸ்ரீ சொர்ணகாமாட்சியம்மன் பதிகம்.

 

ஆதிகா லத்திலே வாதாபி இனதாபி.

யசுரர்செய் கொடுமையாலே

அந்தணாக விருடிகட் டேவர்கண் மூவர்க

ளரியஞானிக னாதியோர்.

ஓதுதற் கரிய துன்பக்கடலி லாழ்த்திய

துணர்நதிமைய கிரிசார்பினில்

லுறுசம்புமாமுனியி னானுல்வேள்வி செய்வித்து

வோங்குமக்கினி தேவனைக்

காதலுடனே ருத்திர வன்னிய யெனப்புகழ்

கனலினின் றவதரிக்கக்

கருணைகூர்ந் திந்திரன் மகளையுங் கூட்டி திரு

கலியாணமும் நடத்திச்

சோதி வடிவான வன்னியராஜ னாற்றேவர்

துயர்ந் தீர்த்த குலதெய்வமே

சொந்தமென வந்துளமகிழ்ந்துகதி தந்தருளுஞ்

சொர்ணகாமாக்ஷி யமையே

இத்துடன் பத்து பதிகம் பரங்கிப்பேட்டை ராஜவன்னிய ராஜஸ்ரீ “வன்னிகுல சேகரர்” வி.குருசாமி ராயர் அவர்கள் இயற்றியிருக்கிறார். அஃது வன்னிய புராணக்கதையின் விர்த்தாந்தத்தைத் தெரிவிக்கிறது.

 


குலச்சிறப்பு

 

(கீழ்காணும் பத்தியில் ஆசிரியர் அவர்கள் இனத்தின் பெருமைகளை ரத்தினசுருக்கமாக மிக சுவைபட படைத்திருக்கிறார். இந்த பத்தியை வன்னியர் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் ஆழமாக பதிக்க வேண்டியது என்றால் அது மிகை அல்ல.)

 

நீளும் பெருமை நிகழ் தமிழ்நாட்டில், ஆளும் மரபில் அரசர்கள் குலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ. செளுக்கிய ரென்னும் ஐம்பெருங்குடியில் நாம் அவணியிற் றோன்றினோம். உலகையும் உயிரையும் ஒருங்கே காத்தோம்; ஆவைப் போற்றினோம். அந்தணர் புரந்தோம், கோவியின் முறையைக் குறையாது நிறைத்தோம்; வேள்வியாற்றி விண்ணும் பாலித்தோம்; தேவர்கள் புலவரைத்தினமும் அணைத்தோம்; கற்புக்கரசி கண்ணகி கோயிலை நற்புகழ் தோன்ற நானில மமைத்தோம்; அந்தாதியுலாவை அரண்மேல் பாடி காத்திரத்துடனே கயிலைக் கேகி ஆண்டவன் திருமுன் அரசு அரங்கேறப் பெற்றோம்; திருவார் அரங்கனை மருமகனடைந்தோம்.பசுவின் கன்றிற்காய்ப் பாலனைக் கொன்றோம்: ஓர் புறவிற்காய்ச்ச சீரைப் புகுந்தோம், எண்ணருமாலயப் புண்ணிய மியற்றினோம், எண்ணிய மியிற்றினோம் இந்திரன் பயத்தையும் முந்தியொ ழித்தோம். விண்ணயத் திந்திரவிடங்கர் தம்மை மனத்திறத்திய மான்மியம் பெற்றோம். விண்டோய் மேருவைச் சேனன் நடித்து பணியச் செய்தோம் பாதையும் பெற்றோம்; காவிரியிருமருங்கும் கரையைக் கண்டோம் ஐவகை மன்றம் பெற்ற அரசாட்சி  செய்தோம். சிதம்பரக் கோயில், சிற்சபைப் படியில் பட்டாபிஷேகப் பாக்கியம் கொண்டோம்: சிற்சபை பொற்சபை செம்பொனனால் வேய்ந்தோம். திருமுறை கண்ட செய்தியும் நமதே. திருத்தொண்டா புராணந் தெரிந்ததும் நாமே, ஓர் பழியஞ்சி உயிரை விட்டதுடன் சீர்பெறுநகரைச் செந்தழற் காக்கினோம், எம்மையாளும் இறைவனாமிகனும் அம்மையாகும். அங்கயற் கண்ணியும், உக்கிரம் பெற்று செக்கர்மேனிச்சின வேற் குமாரனும வந்த சீர்மாபெனும் மான்மியம் பெற்றோம்,  தமிழ்ச்சங்க மூன்றினுந் தலைமை வகித்தோம்; கொற்கைப் பேர்மிகப் பொற்கையும் பெற்றோம், வில்லைக்கயலை வெல்புவிக் கொடியை மேருவிற்றீட்டினோம் வீரத்தை நாட்டினோம்; அண்ணாமலை வாழ் அடிகளார்தம்மைப் புண்ணியப் புதல்வராய்ப் பொருந்தப்பெற்றோம் கருமாந்த வினைதனைக் கடவுளே, செய்யும் உரிமையை நாளதும் உளதாய் மகிழ்வோம்; இன்னணம் நமது முன்னோர் பெருமை எண்ணத் தொலையாது, ஏடிடங்கொள்ளாது, புண்ணியாவர்கள் கண்ணிய வழியிற் பொருந்திய நமது திருந்திய வாழ்வை இக்கால் நினைக்கிற்

றுக்கமே பெருகும்.

புராண இதிகாசங்களிலே கூறியுள்ள சேர, சோழ, பாண்டிய.மன்னர்களின் சரிதையனைத்தும் தற்காலத்துள்ள வன்னியர்கள் குலச்சிறப்பாக இங்கு எழுதிக்கொண்டது. இவர்களுக்கடுக்குமா? என்றும் தற்புகழ்ச்சியென்றும் சிலர் எண்ணக்கூடும் அதற்கு சில திருஷ்டாந்தத்தைக் காட்டுகிறோம்.

 

வடவேங்கடம் தென்குமரியாயிடை தமிழ் வழங்கும். நல்லுலகில் உள்ள மக்கட்குப் பேராதரவாகயிருப்பது சூடாமணி நிகண்டு, அதனை ஒரு மரபாரும் ஒதிக்கித்தள்ள முடியாத பொது நூலென்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். அப்பழந்தமிழ் நூலிலே மக்கட்பெயர்த் தொகுதியென ஓரதிகாரமுளது. அவ்வதிகாரத்தில் தமிழ் நாட்டிலுள்ள அந்தணர் முதலிய சகல ஜாதியாரின் பெயர்களைபும் விளக்கியிருப்பதில் அரசர் வகுப்பில் சேரன், சோழன், பாண்டியன்,  குறுநிலமன்னர், படைத்தலைவன் முதலியவர்களைக் குறிப்பிட்டிருக்கிறது. தமிழ் நாட்டிலே தமிழ் வழங்கும் ஜில்லாக்களில் எல்லா ஜாதியாரையும் விட பெருவாரியான ஜனத் தொகையில் வன்னியர்கள் அக்காலத்தில் அரசர் பரம்பரையாராக யிருந்தமையால் இவர்களுக்கென மக்கட் தொகுதியில் வேறு பிரித்துக் கூறுவது அவசியமில்லாமலிருந்தது. அறுதொழில் அரசபரம்பரையாயும். அரசருக்குரிய விவசாயம், கைத்தொழில் புரிபவர்களாயிருந்தால் அதற்கேற்ப தற்காலத்திலுள்ள படி பெரும்பாலும் அந்நாளில் அமைத்திருப்பர்.

 

ஒரு கிராமத்தில் ஒருகுடி இரண்டு குடியாயுள்ள வேலைக்காரர் முதலிய எல்லா மரபாருடைய பெயர்களையும் மக்கள் தொகுதியில் பரந்த ஜனத் தொகையாயுள்ள வன்னியர்களைக் குறிப்பிடாத காரணமென்னவென ஆழ்ந்து யோசிப்பவர்களுக்கு நாம் மேலே கூறிய உண்மை விளங்கும். வன்னிய மன்னர் சரித்திரத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லல. சாளுக்கிய அரசர்களின் விர்த்தாந்தங்களையும், அவர்கள் வழிவந்து தற்காலத்தில் ஆட்சிபுரிபவர்கள் அட்டவணைகளையும் அவர்களுக்குள்ள ராஜமரியாதையாகிய அநுபவங்களையும், அவர்களுக்கும் வன்னிகுல க்ஷத்ரியர்களுக்குமுள்ள பற்றி விவரமாக வரலாற்றில் அறியலாம். ஆயினும் வன்னியர்களே அரசர்கள் என்பதற்குப் பொது நூற்பிரமாணம் பல இருப்பினும் ஒன்றைக் குறிப்பிடுகிறோம்.

 

சைவசித்தாந்த சரித்திரம் 11-ல் ஒன்றாகிய

சிவதருமோத்திரம் சிவதான ஞானவியல் 13-வது கவி

 

“தடுத்த தண்ணியன் பாற்கொள்க சாத்திரம்

கொடுக்கும் தேசிகன் தன்குலத் தில்லையே

லடுத்த வன்னிய னேயருகன் றொழிற்

கொடுக்கணாபர மார்த்தங் கொடுப்பதே”

 

என்னும் கவியில் அந்தணனிடத்தில் சிவதீட்சைப் பெற வேண்டும். அவ்விதம் செய்யக்கூடிய அந்தணன் அவ்விடமில்லாவிட்டால், அடுத்த அரசனே அத்தொழிலுக்குரியவன் என்பதால் அந்தணனுக்கு அடுத்து அரசன் என்பதற்கு வன்னியன் எனக் குறிப்பிட்டிருப்பதா லறியவும்.

 

வன்னியர்களின் பட்டப்பெயர் விளக்கம்

 

இதுவுமன்றி வன்னிகுல க்ஷத்ரியர்களின் பட்டப்பெயரின் தாத்பர்யங்களையும் சிலது விளக்குவாம். பெரும்பாலும் இம்மரபாருக்கு வழங்கும் பட்டப்பெயர்கள் மூன்று. அவையாவன:-

 

நாயகர், படையாட்சி, கண்டர்.

 

நாயகன் (இதன் பொருள்) அரசன்

 

இதற்கு நூற்பிரமாணம் அருணகிரிநாதர் சேரநாட்டைச் சேர்ந்த பழனியம்பதியில் திருக்கோயில் கொண்டுள்ள முருகக் கடவுளுடைய திருப்புகழைப்பாடும். “நாத விந்து கலாதீ நமோநம” என்ற பாடலில்,

 

ஏழ்தலம்புகழ் காவேரியால்விளை

சோழமண்டல மீதேமனோகர

ராஜகெம்பீர நாடாளுநாயக வயலூர்

ஆதரம்பயி லாரூரர் தோழமை

சேர்தல்கொண்டவ ரோடேமுனாளினில்

ஆடல் வெம்பரி மீதேறிமாகயி லையிலேகி

ஆதியந்த உலாவசுபாடிய

சேரர்கொங்குவை காவூர்நனாடதில்

 

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. என்றதில் அக்கினி குலத்தரசரான சேரமான் பெருமாள் நாயனாரை நாடாளும் நாயகன், (அரசன்) என்றும், திருவாரூர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் தோழமை கொண்டவர் என்றும் அவருடன் பரிமீதேறி கைலைக்கேகி அங்கு ஆதியந்த உலாபாடியவர் என்றும் கூறியிருத்தலால் நன்கு விளங்குகிறது.

வில்லிபுத்தூராழ்வார் பாரதம்

(கிருஷ்ணன்தூது சருக்கம் 68-வது கவி,)

 

முன்றிலின்கணின்றிடம் பெளுவரசர்மாமுடிக

ளொன்றொடொன்றறைந் தெற்றிமேலொளிர் பொறிசிதறச்

சென்றுசென்றுறு திசைதொறுந் திகழ்ந்தது செம்பொற்

குன்றெனும்படி குருகுல நாயகன் கோயில்.

 

பலதேசத் தரசர்களும் தங்கள் தங்கள் இடங்களில் போயமர முந்திச்செல்வதால் அவர்கள் கிரீடங்கள் ஒன்றுக்கொன்று பட்டு பல திக்குகளிலும் சிதறிய செம்பொன் குன்றெனும்படியாக யிருந்தது; குருகுல நாயகனென்னும் திருதராஷ்டிரமகாராஜன் அரண்மனை என்பதாம். இதில் வரும் நாயகன் என்னும் பதமும் அரசனையே குறிக்கின்றது. இன்னும் பல உள விரிக்கிற் பெருகும்.

 

படையாட்சிகள்

படையாட்சிகள் என்பதற்குப்பொருள் ரத, கஜ, துரக, பதாதிகளென்கிற நால்வகை சேனைகளுக்கும் ஆண்மையும் உரிமையுடையாரென்றும் சேனாதிபதி சேனைத்தலைவன் என்றுஞ் சொல்லப்படும். இதற்கு நூற்பிரமாணம் வருமாறு:

 

 

மாணிக்கவாசகப் பெருமானார் பாடிய திருவாசகத்தில்

திருப்படையாட்சி என்னும் பகுதியில் முதற்கவியில்.

 

”பாண்டி நன்னாடுடையான் படையாட்சிகள் பாடுது மாகாதே”

நல்வளம் நிறைந்த திருப்பாண்டி நாடதனையே திருப்படை வீடாக வுடையான், படையாட்சிகள் பாடுதுமென்று சொல்லுஞ் சென்னிகழ்ச்சியு முளதாகாது என்றும்

 

 

அருணகிரிநாதர் திருப்புகழ் 2-வது பாகம் 849-வது செய்யுள்

கரூர் ஸ்தலத்தைப்பற்றி பாடியதில்,

 

சஞ்சலசரித பரநாட்டர்கள்

மந்திரி குமரர் படையாட்சிகள்

சங்கடமகிபர் தொழ ஆக்கினை முடிசூடி

 

என வருவனவற்றில் மந்திரி குமரர் படையாட்சிகள் எனக் கூறியுள்ளார்.

 

தலைவன் படையாட்சிகளோடு பாசறைக்குச் சென்றானெனவும் அரசன் முடிசூடுகையில் மந்திரி குமாரர் படையாட்சிகள் முதலிய மகிபர் தொழும்படியிருந்தானெனவும் பொருள்படும் படையாட்சிகள் அரசபரம்பரையாரென விளங்குகிறது. இவர்கள் தென்னாடுகளில் பூர்வமிருந்தபடியே இக்காலத்திலு மிருக்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய மன்னவர்களோடு கலந்து, சம்புகுலத்தவர். வன்னியர், பல்லவர் என்றழைக்கப்பட்டு வருகின்றனர்.

 

 

 

கண்டன் – இதன்பொருள் – சோழன்.

 

வன்னிகுலஷத்ரியர்களில் பலருக்கு கண்டரெனவும், கவுண்டரெனவும் பட்டப்பெயர் உண்டு. கண்டன் என்னும் சொல்லுக்கு சோழன் எனப்பொருள். இதற்கு நூற்பிரமாணம் வருமாறு

 

வில்லிபுத்தூராழ்வார் பாரதப்பாயிரச் செய்யுள்

 

“தென்னாட்டில் வடநாட்டிற் குடநாட்டிற் குணநாட்டிற்

றெவ்வரோடக்

கன்னாட்டியமர் பொருது கங்கை நீ ரூட்டுவித்துக்

கண்டன்வேங்கை

யென்னாட்டு மெழுதியவன் றிருமரபார் பெற்றபுகழ்

யாவர்பெற்றா

ரன்னாட்டு கொற்றமெலா மக்குரிசில் புகழொடவ

தரித்த தன்றே”

 

வில்லிபுத்தூராழ்வார் பாரதம் பாடிய காலத்து அரசு புரிந்தவன் வரபதி ஆட்கொண்டானென்னும் சேர அரசன், இவ்வரசனிடத்தில் வில்லிபுத்தூராழ்வார் பாரதம்பாடி பரிசு பெற்றாரெனவும், இச்சேரன் தமிழை விர்த்தி செய்தானெனவும் விளங்குகிறது. வில்லிபுத்தூராழ்வார். ஷை கவியில் வரபதியாட்கொண்டானாகிய அரசனது பகைவனாயிருந்த பாண்டியனைவென்று, அவனது நாட்டை ஜெயித்து சோழனுக்குக் கொடுத்து முடிசூட்டினானென்றும், கண்டன் வேங்கை அதாவது சோழனுடைய புலிக்கொடியை யென்னாட்டிலும் பிரகாசிக்கும்படி செய்து தனது பெயரை மேருபர்வதத்தில் தீட்டினானென்றும் கூறியிருக்கிறார். இதனால் கண்டன் என்பதற்கு சோழன் என நன்கு விளங்குகிறது. கவுண்டர் என்பதற்கும் நூற்பிரமாணம் வருமாறு:-

 

வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதம்.

 

உத்தியோக பர்வம் படையெழுச்சி சருக்கம் 18-வது செய்யுள்

 

“கலிங்கர்கோன் சோமதத்தன் கௌசிகன்காம்பிலீசன்

றெலுங்கர்கோன் போஜராஜன் கேகயன்றிகதபூபன்

வலங்கொள்வேற்கவுண்டராசன் மாளவன்வளவன்சேரன்

றுலங்குநீரோகனீக னெனும்படைவேந்தர் தொக்கார்’

 

என வருவனவற்றிலும் கவுண்டராசன் என்னும் பிரயோகம் அரச பரம்பரையாரென விளக்குகிறது. அதற்கேற்ப நாளதும் கவுண்டர்களை அரசுபள்ளி என்று வழங்குவதாலும் க்ஷத்ரியரென்பது உறுதிப்படுகிறது. சில ஜில்லாக்களில் இதரமரபார்களுக்கும் கவுண்டர் என்னும் பட்டமிருப்பதால் வன்னியர்கள் என விபரம் தெரிந்து கொள்வதற்கும், சோழமரபர் என்றதற்காகவும் கண்டர் என வழங்குவதே விசேஷமானது.

 

இதுவுமன்றி இவர்களுக்கு வழங்கும் சேரனார், சோழனார், பாண்டியனார், பல்லவராயர், நயனார், சாமந்தர், மழுவராயர், பொறையர், இராயர், கிடாரங்காத்தவர், நீலகங்கரையார், அஞ்சாத சிங்கம், கங்கணவுடையார், வீரமிண்டர், வாளண்டையார், இராஜாளி, சமுக்ஷியர், தந்திரியர், பூபதி, பண்டாரத்தார், பரமேஸ்வரனார், காளிங்கராயர், சம்புராயர், இரட்டிகள், துரைகள் முதலிய அநந்தம் பட்டப் பெயர்களால் இவர்கள் க்ஷத்ரிய மரபாரென்பதை தெள்ளிதின் அறியலாம்.

 

இவ்வித அநந்தம் பட்டப் பெயர்களையும், க்ஷத்ரிய மரபிலுதித்து தற்காலம் சிற்றரசர் ஜமீன்தாரராகவுள்ளவர்களின் பூர்வீகப்பட்டப் பெயர் விவரங்களையும், வில்லவனல்லூர் மடாலயபூர்வோத்திர செப்பேடு, வைதீஸ்வரன் கோயில் வன்னியர் மடாலய தர்மசாசனப்பட்டயம் இதுகளில் பரக்கக்காணலாம். இத்தகைய ஆதிக்கமுடைய வன்னியர்களை பள்ளிகள் என குறைவாகக் கூறுகிறார்களே யெனின் அறியாமையாலும், ஆராய்ச்சிக்குறைவாலும் அவ்விதம் கருதுகிறார்கள். அப்பதம் கடவுளுக்கும், அரசருக்கும் வழங்கும் விசேஷைமுடையதென்பதையும், அச்சொல்லின் தாத்பர்யத்தையு மறிந்துகொள்ளுமாறு சாத்திர, சாசன அநுபவப் பிரமாணங்களுடன் விளக்குகிறோம்.

 

 

 

பள்ளிப்  பிரபாவம்

அமிழ்தினுமினிய தமிழ்மொழியில் “பள்ளி” என்னும் சொல்லின் பெருமையை யறியாத பேதையர்கள் அதை இழிவாக எண்ணிப் பேசுவதும், எழுதுவதுமாக விருக்கின்றனர். அத்தகையோர் பள்ளிக்கூடம் சென்று சில வருடங்களாவது பள்ளிப்பிள்ளைகளாக யிருந்து நிகண்டு முதலிய பழந்தமிழ் நூற்களைக் கற்று கலைமகளின் அருளைப் பெறாதவர்களும், கல்வி கற்றும் அப்பதத்தின் பொருளுணராக் கசடர்களுமேயாவர். அவர்கள் அறியாமையை நீக்கிப் “பள்ளி” யின் மான்மியத்தைத் தமிழ் உலகம் அறியச் செய்யவே இச் சிறு வியாசத்தை எழுதுகின்றோம்.

 

பதினோறாவது நிகண்டு ளகரவெதுகை

8-வது பாடலில் 4வது வரியில்

 

“பள்ளியூர் சிற்றூர் கோயில் பாயல்கண் படைந்த்தோரூர் ?”

 

பள்ளி:- “மருத நிலத்தூர், சிற்றூர், கோயில், மக்கப்படுக்கை, நித்திரை, முனிவரிருப்பிடம்” என நிகண்டு நூலாசிரியர் கூறுகிறார்.

 

அதனால் அச்சொல்லுக்கு மேன்மையான பொருள் உதிக்கின்றதேயன்றி எவ்விடத்திலும் இழிந்த பொருளையே காணோம். இனி அப்பதம் உலக வழக்கில் எத்தனை விதத்தில் வழங்குகிற தென்பதை யாராய்வோம். அரிதினுமரிதான மானிடப்பிறவியின் உற்பவமுதல் வளர்ந்து. அரிவைப் பெற்று சுகபோகங்களை யனுபவித்து. பகவத்யானம்புரிந்து. பரலோகத்தை யடையும் வரையில் காரணமாயிருப்பது பள்ளியேயென்றால் அதன் பிரபாவத்தை யறியாத மானிடப்பிறவி பயனற்ற பிறவியாகவே முடியும்.

 

பள்ளியறை – படுக்கையறை. ஒருமடமாதும் ஒருவனுமாக இன்ப சுகத்தையனுபவிக்குமிடம் பள்ளியறையேயாகும். அக்கலவி இன்பத்தின் வழியாகவே பிரஜா உற்பத்தி ஏற்படுவதால், பிறவிக்கு மூலமானவிடம்

பள்ளியறையேயாகும்.

 

மடப்பள்ளி சமையலறை – குழந்தைப்பருவத்தில் வளர்வதற்குத் தாய்க்கு உணவையும், பிறகு தனக்கு உணவையும் நல்குவது சமையலறையாகையால், உண்டியையளித்துப் போஷிக்குமிடம் மடப்பள்ளியேயாகும். உற்பவித்தபின் அடுத்துப் பெற வேண்டிய

போஷணையையும் மடப்பள்ளியே அளிக்கிறது.

பள்ளி – பள்ளிக்கூடம். பேதை பாலகள்தாகிய ஐந்து வருஷமும் கழிந்தபின் கண்ணில்லாக் குருட்டுப்பிள்ளையாய் வளராமல் எண்ணும் எழுத்துமாகிய இரு கண்களைப் பெறுவதும். பள்ளிக்கூடத்திலேயாம்.சிறுவதிலேயே பள்ளிப் நால்வ ணத்திலும் முதன்மையான பிராமண ஜாதியில் உதித்த  த்போதிலும், அவன் பிள்ளையாகயிருந்து கல்விகற்று மேன்மை யடையாவிடில் கீழான ஜாதியில் உதித்தவனாகவே எண்ணப்படுவானென திருவள்ளுவநாயனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். ஆகையால் உலகத்தில் எத்தனை ஜாதிகள் உண்டோ அத்தளை ஜாதிப்பிள்ளைகளும் ஆதியில் பள்ளிப் பிள்ளைகளாகயிருந்து அறிவைப் பெற்றபின்னரே தங்குலத்துக்குரிய ஆண்மகனாகக் கூடும். பள்ளிப் பிள்ளையாய் இல்லாவிடில் இரண்டு கால் மாட்டுக்கும். நெடுமரத்திற்கும் சமானமானவனென முதுமொழி கூறுவதால், பள்ளிப்  பிள்ளையாய்  இருந்து கல்வி  கற்றவன் அப்பதத்தை  இழிவாக எண்ணவே யிடமில்லை. கற்றறிந்தும் அறிவில்லாக் கசடர்களைப் போல் இப்பதத்தை இழிவென எண்ணிப்பேசி எழுதி மகிழ்கிறார்களே யெனின் தாமரையின் கீழுள்ளமண்டூகமானது அப்புஷ்பத்திலுள்ள இனியதேனின் பெருமையை அறியாத தன்மையேயோல் அவர்கள் கற்றவிடத்தின் மான்மியத்தை யறியாதவர்களென்போம்.

 

பள்ளி – மருதநிலத்தூர், செந்நெல் வினையுமிடத்துக்கு மருதநிலத்தூர் எனப் பெயர். ஜீவதாரமான நெல் விளையும் பூமிக்கே பள்ளிப்பெயர் அமைந்திருக்கிறது.

 

பள்ளி – முனிவரிருப்பிடம்: ஐம்புலன்களையும் வென்ற தவத்தின்மிக்க முனியங்கவர் வசிக்குமிடம் பள்ளியெனப்படுகிறது. பிறந்து வளர்ந்த கல்வி கற்றதின் பயனாய் “சான்றோர்னத்திரு” என்னும் முதுமொழிப்படி பெரியார் கூட்டுறவையும் பெற்று ஞானோபதேசத்தையும் பதவியையடைய யேதுவாகவுள்ள முன்வாரும்பிடமும் பள்ளியெனப்படுகிறது.

பள்ளி – கோயில் – பள்ளி என்ற வார்த்தை கோயில்  என்றும் அர்த்தம் கொள்ளப்படுகிறது. தெய்வம் எழுந்தருளியிருக்குமிடம் பள்ளி யெனப்படுகிறது. பிறமத ஸ்தர்களாகிய மஹம்மதியாகளும், தங்கள் பள்ளிப்பிரபாவம் கோயிலுக்குப் பள்ளிவாசல் எனப்பெயர் வழங்குகின்றனர். புத்தபெருமான் ஆலயங்களுக்கும் பவத்தப்பள்ளி என்ற திருநாமமே சாற்றப்பட்டிருக்கிறது. கோயிலில் எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணு மகாதேவராதிய தெய்வங்களுக்கும் பள்ளிப்பெயர் வழங்கி வருகிறது.

 

 

 

அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரம்

அடைவு திருத்தாண்டகம் முதலாவது கவி.

 

பொருப்பள்ளி வளைவில்லாய் புரமன்றெய்து

புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான்பொற்சக்

கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்

கமழ்கொல்லி பறப்பள்ளி கல்லஞ்சாராற்

சிரப்பள்ளி சிவப்பள்ளி சொம்பொன் பள்ளி

செழுநன்னிப் பள்ளி தவப்பள்ளி சீரார்

பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்

பரலோகத் தினிதாகப் பாவிப்பாரே.

 

இந்தப் பாடலின் தாத்பர்யம் கைலாசமென்னும் மலையையுடைய பள்ளி  மாறுபாடில்லாத திரிபுரத்தையழித்து சலந்தரனைப் பிளந்த அழகிய சக்கரத்தையுடைய பள்ளி திருமறைக்காட்டுப்பள்ளி வாசனை பொருந்திய கொல்லி மலையையுடைய தருமப்பள்ளி திரிசிரபுர மென்னும் தலத்துக்குரிய பள்ளி – சிவமென்று சொல்லப்பட்ட பள்ளி சிவந்த நிறத்தையுடைய பள்ளி செழுமை தங்கிய நன்னியென்னுந் தலத்திலெழுந்தருளிய பள்ளி. யாவரும் நோக்கித்தவஞ் செய்யப்பட்ட பள்ளி சிறப்பையுடைய பரமபதத்துக்குரிய பள்ளி என்று சொல்வோரெல்லாம் பரலோகத்தில் மகிழ்ச்சியுடனே வீற்றிருப்பா ரென்பதாம். இதனால் பள்ளிப்பெயர் பரமசிவனுக் குரியதென்பது நன்கு விளங்குகிறது.

 

 

 

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருக்ஷேத்திரக் கோவை.

 

“அறப்பள்ளியகத்தியான் பள்ளிவெண்களப்பொடி பூசி

நீரணிவானமர் காட்டுப்பள்ளி

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி

திருநனிப்பள்ளி சீர்மகேந்திரத்துப்

பிறப்பில்லவன் பள்ளி வெண்களச் சடையான்

விரும்புமிடைப்பள்ளி வண்சக்கரமா

லுறைப்பாலடி போற்றக் கொடுத்த பள்ளி

யுணராய்மடநெஞ்சே யுன்னிநின்றே”

 

இந்தப் பாடலின் கருத்து மடமையே ஆபரணாமாகப் பூண்ட  என்நெஞ்சமே தருமத்துக்குரிய பள்ளி அகத்தியான் பள்ளி வெள்ளிய திருநீற்றை யணிந்து கொள்வோன் தங்குகின்ற காட்டுப்பள்ளி சிறப்புடைய பள்ளி திரிசிரிபுரமேன்னுந்த் தலத்துக்குரிய பள்ளி – செம்பொன் நிறமாகிய பள்ளி – அழகிய நன்னியென்னுந் தலத்தி லெழுந்தருளியுள்ள பள்ளி பொருந்திய மகேந்திரபுரத்தில் வீற்றிருக்கும் பிறப்பற்றவனாகிய பள்ளி வெண்மையாகிய சடையை யுடையான் விரும்புகின்ற இடை வண்மையாகிய சக்கரத்தையுடைய திருமால் உறைப்பாலடி போற்றக் கொடுத்த பள்ளி. இத்தகைய பெருமை பொருந்திய  பள்ளியை நினைத்து நின்று உணரமாட்டாயா?. இக்கவியிலும் பள்ளியென்பது பரமசிவனைக் குறிப்பது உணர்த்தக்கது.

 

 

 

அலைகடலிற் பள்ளிகொள்ளும் மகாவிஷ்ணுவைக் குறித்து நாலாயிரப் பிரபந்தத்துள் நம்மாழ்வார் சொன்ன 42-வது திருமொழி 4வது பாசுரத்தில் 2வது வரியில்

 

“தடங்கடற் பள்ளிப் பெருமான்றன்னுடைய பூதங்களேயாய்

என்றும்

 

ஷை பிரபந்தம் நம்மாழ்வார் செய்த 46-வது திருமொழி

7-வது பாசுரம் 2-வது வரியில்

 

‘அலைகடற் பள்ளியம்மானை யாழிப்பிரான் நன்ளைய

 

திருவரங்கக் கலம்பகம் காப்புச் செய்யுள்

 

கறைப்பாம்பணை பள்ளியானன பாட்டங்களித்தருத்த

நிறைப்பான்கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழலில்லையே’

31 வது கவி

 

“போனகம் பதினாலு யுவனந் திருப்பள்ளி

பொறியரவணைப் பாற்கடல்”

 

பெரியாழ்வார் பாசுரம் 9வது கவி

 

“படுத்தபைந் நாகணைப் பள்ளிக்கொண் யானுக்கும்.

பல்லாண்டு கூறுதுமே”

 

 

 

சிலப்பதிகாரம் காடுகாண்காதை – 35-40

 

“நீலமேக நெடும்பொற் குன்றத்துப்

பால்விரிந்தகலாது படிந்ததுபோல

வாயிரம்விரித்தெழு தலையடையருந்திறற்

பாயற்பள்ளி பலர்தொழுதேத்த

விரிதிரைக்காவிரி வியன்பெருந்துருத்திக்

திருவமர்மார்பன் கிடந்தவண்ணமும்”

 

இந்த பாடலின் கருத்து –  நீலமேகம் ஓங்கிய பொன்மலைமீதே பக்கங்களில் விரிந்து மிகாமல் ஒதுக்கப்பட்டிருந்த துண்டாகில், அதனையொப்பத் தனது படம் விரித்தெழுந்த ஆயிரந் தலையையும் கிட்டுதற்கரிய திறலையுமுடைய பாம்பணைப் பள்ளிமீதே, தேவர்கள் பலரும் தொழுதேத்த திரைவிரியும் காவிரியாற்றிடைக் குறையிலே திருமகள் பொருந்திய திருமார்பை யுடையோன் கிடந்தகோலமுமென்க.

 

 

கம்பராமாயணம்

கடற்படு பணிலமும் கன்னிப்பூகமும்

மிடற்றினுக்குவமையென் றுரைக்கு மெல்லியோர்

உடற்பட ஒண்ணுமோ உரகப் பள்ளியான்

இடத்துறைசங்க மொன்றிருக்க எங்களால்

 

எம்பெருமானாகிய உரகப் பள்ளியான் திருக்கழுத்துக்கு அவன் இடத்திருக்கரத் தேந்திய பாஞ்சசந்யம் ஒன்றேயன்றி ஏனைய சாதாரண சங்கங்களையும் பிறவற்றையும் உவமை கூறல் ஏலாமையினாலும், ஈண்டு சங்கம் என்றது பாஞ்சசந்யமே என்றாயிற்று. இவ்வாதாரங்களால் மஹா விஷ்ணுவைப் பள்ளிப் பெருமான் பள்ளியம்மானை பள்ளியான் பள்ளி கொண்டான் என கூறியிருத்தல் விளங்குகிறது.

 

 

சிவவாக்கியர் பாடல் 163-வது கவி.

 

“கோயில்பள்ளியேதடா குறித்து நின்றதேதடா

வாயினால் தொழுதுநின்ற மந்திரங்களேதடா

ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்

காயமான பள்ளியிற் காணலா மிறையையே”.

 

பரப்பிரம்ம சொரூபமாகிய இடம், ஞானமான பள்ளியெனவும். இறுதியில் காணப்பெறுவது காயமான பள்ளியெனவும் சிவவாக்கியர் சாற்றுகின்றார்.

 

நம்மில் சிலர் சைவம், வைஷ்ணவம் என பாகுபடுத்திக் கொண்டு தெய்வதூஷைணைக்காளாகிறார்கள். இறுதியில் யாவும் ஒன்றே யெனவும், இது பெரிது அது பெரிதுயெனக்கூறி யிடர்பட வேண்டியதில்லை யெனவும் மும்மூர்த்தி சொரூபங்களையும் வர்ணிக்கிறபோது

 

 

 

திருமங்கையாழ்வார் பாசுரத்தில்,

பாருருவில் நீரெரிகால் விகம்புமாகிப்

பல்வேறு சமயமுமாய்ப் பரந்துநின்ற

ஏறுருவில் மூவுருவம்யென்ன நின்ற

யிமையவர்தந் திருவுருவே ரெண்ணும்போது

ஒருருவம் பொன்னுருவம் ஒன்றுசெந்தி

ஒன்றுமாக் கடலுருவம் ஒத்துநின்ற

மூவுருவம் கொண்டபோது ஒன்றாம்ஜோதி

முகிலுருவம் எம்மடிக ளுருவந்தானே.

எனக் கூறியிருத்தலைக் கண்டுகொள்வார்களாக.

 

இன்னும் மும்மூர்த்திகளையும் பள்ளியெனக்கூறும் பாடல்கள் பலவுளவாயினும் இச்சிறுவியாசம் சுருக்கமாய் வெளியிட நேர்ந்தமையால் விரிக்கற்பெருகுமென விடுத்தோம். உண்மை உணர அவாக்கொள்ளும் உத்தமர்களுக்கு ஒன்றிரண்டு ஆதாரங்களே போதும், குதர்க்கவாதிகளுக்கு ஆயிரங்காட்டினாலும் அவர்கள் மந்த புத்திக்கு எட்டாது.

 

“பள்ளி” என்னும் பதம் அரசரைக் குறிப்பதையும் இங்கு விளக்குவாம்.

 

 

 

பட்டினத்தடிகள் அருளிச்செய்த ஞானம் 45-வது கவி

 

“வேண்டுந்திரவியமும் மேலுயர்ந்தபள்ளியெல்லாம்

ஆண்டதிரைநாடும் அம்பலமும் மாண்டுபெருங்

காடுரந்தாரேமனமே கண்டாயோமாயனயன்

தேடரிய ஈசன் செயல்”

 

என்னும் கவியில்,”மேலுயர்ந்த பள்ளியெல்லாம் ஆண்ட திரைநாடு” என்பதால் பள்ளிகள் அரசர்களெனவும் அவர்கள் அரசாட்சி செய்தது கடலால் சூழப்பட்ட நாடு எனவும் விளங்குகிறது.

 

 

 

பரஞ்சோதி முனிவர் அருளிச் செய்த

மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி 9-வது கவியில்

 

வெள்ளியம்பலவாணனைப் பாணனாக

 

“விறகுவிற்றுழல்வானைப்,

புள்ளியம்புலித் தோலுடையாளனை

புத்தியிற் றொழுதோர்கள்,

பள்ளியந்துலா வேறுவர்

 

மணிமுடிப்பரிப்பா பார்

முழுதாள்வர். தெள்ளிருங்கலை

நன்மகப் பெறுவர்

பின்சிவகதியடைவாரே”

 

என்னும் கவியால்,

 

வெள்ளியம்பலத்தே எழுந்தருளியிருக்கும் பரமசிவனைத்து தொழுபவர்கள், பள்ளியாகிய அரசர்களுக்குரிய துலாபாரதான முதலிய சகலபாக்கியங்களையும் பெற்று நல்லபுத்திரப் பேற்றையும் சிவகதியையும் அடைவார்கள் என்பதால், பள்ளி என்னும் பதம் அரசரையே குறிக்கின்றது.

 

சிலாசாசன ஆதாரம்

 

கோப்பரகேசரி வர்மனென்னும் முதலாவது குலோத்துங்க சோழ அரசன் ஆளுகையில் 1078 ம் ஆண்டில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயகர்ப்பக் கிருஹத்திலுள்ள சாசனத்தில் “பள்ளிச் செல்வன் பழமுடையனான குலோத் துங்கசோழ பெரியரையன்” என ஓர் சோழ வேந்தன் பெயர் குறிப்பிட்டிருப்பதும் பள்ளிப்பதத்தின் பண்டைக்கால மேன்மையை விளக்குகிறது.

 

மலையாளத்தில் அரசன் போகும்போதும், வரும்போதும் அரசனது யானைசேனை பரிவாரங்களைக் குறித்து பேசும்போதும் பள்ளிபோகிறார். பள்ளியானை, பள்ளிவேட்டை, பள்ளிவாள் என்பது முதலிய பிரயோகங்களை நாளதும் வழங்கி வருகிறார்கள்.

 

காஞ்சியில் பல்லவ அரசர்கள் ஆண்டகாலத்தில் ஏற்பட்ட விகடசக்கர விநாயகராலையம், ஆயிரக்கால் மண்டபம், பல்லவகோபுரமாகிய பள்ளிகோபுரம், துலாபாரதான மண்டபம் முதலியனவும் பல்லவமகாராஜன் நடத்திய ஏகாம்பரநாதர் உலாப்போதலாகிய திருவூடற்பவனி உற்சவம், பரிவட்டங்கட்டும் ஐதீகம்யாவும் பல்லவமன்னரின் பரம்பரையாராகிய பள்ளிகளாகிய வன்னியர்கள் ஆதினத்தில் நாளது மிருந்து வருவதால் அவர்கள் அரச சந்ததியாரென ஆட்சேபமின்றி நூலுக்கேற்ப அநுபவப் பிரமாணத்தினாலும் நன்கு விளங்குகிறது.

 

ஆங்கிலேய பண்டிதர்கள் எழுதியிருக்கும் தேசசரித்திரங்கள் பலவற்றிலும் மற்றும் பல புலவசிகாமணிகளின் சரித்திர ஆராய்ச்சிப்படியும் பல்லவர்களே பள்ளிகள் என உறுதிப்படுகிறது.

 

சகோதரர்களே! நாம் மேலே காட்டிய இத்யாதி பிரமாணங்களால் பள்ளியறையிற் பிறந்து மடப்பள்ளியால் வளர்ந்து, பள்ளிக்கூடம் சென்று பள்ளிப்பிள்ளைகளாகயிருந்து கல்வி கற்று, பள்ளியாகிய முனிவரிருப்பிடம் சென்று குரு உபதேசம் பெற்று, கோயிலில் எழுந்தருளியுள்ள பள்ளியாகிய தெய்வங்களை வணங்கி, இறுதியில் மோட்ச சாம்ராஜ்யத்தை அடையவும் ஏதுவாயுள்ள பள்ளிப்பதத்தை ஒருவன் இழிவென எண்ணுவானானால் அவன் மதத்துரோகியும், தேசத்துரோகியும், குருத்துரோகியும், தெய்வத்துரோகியுமாகிய பழிபாவங்களையேற்றுக் கொள்வானென்பதில் சந்தேகமில்லை. ஆகையால் அன்பர்களே,  பலவிதத்திலும் மேன்மையையே தரும். இப்பள்ளிப் பிரபாவத்தை உணர்ந்து, இதுகாறும் தவறாகயெண்ணி இருந்தபோதிலும் அக்குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கைக்கொண்டு பள்ளியாகிய பகவானது அருளைப் பெற்று வாழ்வீர்களாக.

 

பள்ளியர் பரத்துவம்

பள்ளியெனுஞ் சொல்லதனை யறிவினாலே

பரியாலோ சனைசெய்து பார்க்கும்போது

கள்ளமற மன்னருத்தங் காட்டுமல்லால்

கெட்டரத்தம் வேறொன்றைக் காட்டவில்லை

எள்ளுவதேன் இவ்வுலகைக் காக்க வந்த

இறைவருக்காய் அவர்குலத்துக் கிறங்கியின்று

விள்ளுமிக குறிப்பெயராய் விளங்குகின்ற

விருத்தாந்த மறிந் தொழுக்கம் விரும்புவீரே.

பள்ளிச்சொல் மலையாள நாட்டையாளும்

பார்த்திபர்கள் தமக்குரிய பட்டமாக

வெள்ளிடை வெற்பெனவங்கு வழக்கமாக

வெகுஜனங்கள் பேசுவதை வெருப்பார் யாரோ

கள்ளமறப் பட்டினத்தார் ஞானந்தன்னில்

கவிதையொன்று பள்ளியெலா மாண்டநாட்டை

உள்ளபடி பேசுவதைப் படித்தபேர்கள்

ஒருபோது மிழித்துரையார் உணர்ந்துகொள்வீர்.

காக்கின்ற விடமெல்லாம் பள்ளியாகும்

கடவுள் நாரணன்முதலா யமிசமாகும்

கோக்குலத்தார் வரையச்சொல் நீளலாச்சு

குற்றமிலா முனிவர்தவங் காக்குந்தானம்

வாக்குபெற மதிகாக்கும் பாடசாலை

வளர்மகவாய்ப் பிதிலவரைக் காக்குந்தானம்

நோக்கியெலாம் பள்ளியென வறிந்துமுன்னோர்

நூல்வழியு முணர்ந்துயர்வை நோற்பீர்மன்னோ.

வணங்குமிடம் பள்ளியெனும் வாய்மைகண்டே

மகம்மதியர் தொழுமிடத்தைப் பள்ளியென்பார்

இணங்குபுகழ் ஜயின்புத்த விகாரங்கட்கும்

இப்பெயருண்டென வதனை யெண்ணிப்பார்ப்பீர்

நிணங்கமழ்வேல் திருவாங்கூர் புரக்கும்நீதி

மணந்துளப மாலையணி பரமனுக்கே

நிருபர்பெய ரென்றபின்னும் நினைவுவெறேன்

வழங்குமந்த மகிமையையு மதித்துப்பாரே.

பள்ளியெனுஞ் சொல்லிழிவா யெண்ணுகின்ற

பாமரர்கள் சரித்திர சாத்திரங்கள் காணார்

பள்ளிச்சொல் சாசன பண்டிதர்கள் தம்மைப்

பசுபசென விழித்திடவே பண்ணுமாலோ

பள்ளியெனுஞ் சொல்லரிய பாக்கியத்தால்

பண்ணிய புண்ணியத்தால்நம் பாத்யமாச்சு

பள்ளிகுலப்பழிப் பெல்லாம்நீங்கள் செய்யும்

பாதங்களிழி நடையின் பயனென்றுன்னே.

 

நமது முற்கால தற்கால நிலைமை

 

பருதிமதி வன்னியெனு மொருமூன்று

சுடர்ப்பிறந்த பகையில் வேந்தர்

திருமரபிற் றென்னாட்டுச் செம்பியர்பாண்

டியர்சேயர் சேயராக

வருமிகவர்கள் வன்னியராம் பொதுப் பெயரார்

உருக்குலைந்த வாழ்வை யெய்த

தருமரிய சங்கமதை தாபித்தார்

நமதுகுல வள்ளல்தானே.

பொற்கமலத் துறைபெருமான் புவிபெருக்க

வன்றளித்த புகழார் நான்கு

நற்குடிமை தனிலிவர்க ளிரண்டெனவே

சுருதியுக்தி நயந்த காட்சி

முற்பிரமா ணங்கள்பல முன்னிருந்தும்

என்னபயன் முடிவு காணா

வற்பமதி யினராகித் தீவினைசேர்ந்

ததன் பயனா யழிந்தா ரன்றே.

கண்ணாலே காண்பரிய வறுமைபுகுந்

தையவுளங் கவலும் வண்ணம்

எண்ணாலே யைந்திலக்கஞ் சோதரரிச்

சில்லாவில் எழுத்தே யின்றி

மண்ணாலே செய்பதுமை யொழித்தழிவார்

பதமடையும் வகையை யுன்னிப்

புண்ணாக வுளம் வருந்தி யாக்கியவிச்

சங்கமதைப் போற்றி வாழ்வாம்.

 

“எல்லாமிருக்கிறது கடையிலே இலைக்கறி கடைய சட்டியில்லை” என்னும் பழமொழிப்படி வன்னியர்களுக்கு நூற்பிரமாணங்களும், செப்பேடு சிலாசாசன ஆதாரங்களும் பலவிருந்தும் கல்வியில்லாக்குறையே பெருங்குறையாக யிருக்கிறது. அநேக ஆதிக்கங்களைக்கொண்டு பண்டைக்காலந் தொடங்கி அரசாண்ட ராசசந்ததியர்களின் செல்வம் வேற்றரசர் படையெழுச்சியால் கொள்ளைபோய் விட்டமையால் கல்வியிழந்தனர்; கல்வி யிழக்கவே பக்தி நாகரீகம் குறைந்தது; பக்தி நாகரீகம் குன்றவே வறுமை மேலிட்டது; இதனால் மேற்காட்டிய பல நூற்களில் கண்டுள்ள வன்னிகுலக்ஷத்ரியர்கள் இவர்கள்தானோ? அல்லது வேறுயாவரோ என்று அன்னியர் நினைக்க அவ்வளவு பரிதாப நிலையை அடைந்தனர். இதையெல்லாம் கவனித்த கலிகால வன்னிகுல கர்ணாவதார ஸ்ரீமானாகிய “வன்னி குலோத்தாரணர்” கா.கோபால நாயகரவர்கள் சென்னை வன்னிகுல க்ஷத்ரிய மகா சங்கத்தை ஸ்தாபித்தார்.

 


சென்னை வன்னிகுல ஷைத்ரிய மகாசங்க ஸ்தாபன சரித்திரம்

 

“சீர்பூத்த வன்னிருவஞ் செய்தவத்தாலவதரித்து

சிறப்புற் றோங்கி

ஏர்பூத்த வங்கிகுலவிபவமெலாம் உலகறிய

எடுத்துக் காட்டிப்

பேர்பூத்த சங்கமொன்றை நிலைநிறுத்தி நமர்க்குறை

பேசித் தீர்க்கத்

தார்பூத்த மால்பதிசார்கோபால நாயகரின்

கழல்கள் போற்றி.”.

 

ஸ்ரீ கா.அண்ணாசாமி நாயகரவர்கள் 1886 நீலகிரியிலிருந்து ஸ்ரீமான் கா.கோபால நாயகரவர்களுக்கு வன்னிகுலத்தைச் சீர்திருத்தவேண்டிய பற்பல சாதனங்களைக் காட்டி ஓர் மனுவேழுதினார். ஆனால், கா.கோபால நாயகர் என்னும் இப்புண்ணியசீலரோ க்ஷயோர் சென்னைக்கே உத்தியோகமாய் வந்து அது விஷயத்தில் பாடுபடுவதாயின் தம்மாற் கூடிய சகாயம் செய்வதாக மறுமொழி கூறினர். இப்புண்ணியவான் கருத்திற்கிணங்க, க்ஷ. கா. அண்ணாசாமி நாயகர், 1887 அக்டோபர் நீலகிரியைவிட்டு சென்னைக்கு வந்தார்.

 

அவர் வந்த நாள் தொட்டு இவர்தாம் வாக்களித்தது போலப் பற்பல முயற்சிகள் செய்து கூட்டங் கூடுவதற்கு வேண்டிய ஆலோசனைகள் செய்தார்கள். முதலில் சென்னை மஹாநாட்டார் ஸ்ரீ சிவபாட நாயகர் புத்திரர் ந.அரங்கநாதநாயகரவர்களும், ஸ்ரீர் அ.வேங்கடாசல நாயகரும் அவர்களும் ஸ்ரீ ச.சிங்காரவேலு நாயகர் அவர்களும் இருவரும் ஷை அண்ணாசாமி நாயகரும் ஆகிய ஐவருங்கூடி யோசித்து முதல் விளம்பரம் க்ஷை மஹாநாட்டார் அரங்கநாத

நாயகரவர்களைக் கொண்டு பிரசுரித்துப் பரவச்செய்தனர். இம்மாதிரியாக ஐந்து கூட்டங்கள் அடிக்கடி இப்புண்ணியவானுடைய கிரகத்திலேயே கூட்டப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் பெயர் அக்கினிகுல க்ஷத்ரிய மகா சங்கம் என்றும். இதை நடத்துவோர் இன்னின்னாரென்றும், ஷை சங்கத்திலிருந்து வன்னி குமாபிலானியென்னும் பத்திரிகை ஒன்று உலாவவேண்டுமென்றும், ஆங்காங்கு கல்விச்சாலை ஸ்தாபித்து வன்னியச் சிறுவர்களைக் கல்வியில் பயிற்ற வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. ஐந்தாவது கூட்டத்தில் ஸ்ரீ டிஸ்டிரிக்ட் முனிசீபு ராவ்சாஹேப் த.செல்லப்பநாயகர் அவர்களும் ஸ்ரீ ராவ் பஹதூர் ஆதன கோட்டி முதலியாரவர்களும் இப்புண் ணினுடையகிரகத்திற்கு விஜயஞ்செய்து இக்கூட்டத்தைக் காங்கிரஸ் கூட்டம்போல் கூட்டி விசேஷமாய் நடத்த வேண்டுமென்று தங்கள் சம்மதத்தை வெளியிட்டனர். சங்க விளம்பரத்தில் தாங்களே கையெழுத்திட்டு வெகு ஜனங்களுக்கும் அறிவிப்பதாகவும் சங்காபிவிருத்திக்குத் தங்களால் கூடிய சகாயஞ்செய்வதாகவும் வாக்களித்தனர். அதேபிரகாரம் 1888 ளு ஏப்ரல் மீ 8-ம் தேதி மகாஜனசபை கூட்டும் பொருட்டு, ஸ்ரீ கோபால் நாயகரவர்கள், ,ஸ்ரீ ச.சிங்காரவேலு நாயகரவர்களையும், கா.அண்ணாசாமி நாயகரவர்களையும் அழைத்துக் கொண்டு புதுவை, கடலூர், பாலூர் முதலிய இடங்களுக்கு நாலு நாளில் சுமார் நானூறு மைல் ரெயில்மார்க்கமாகவும் வண்டிமார்க்கமாகவும் இரவும் பகலுஞ்சென்று ஆங்காங்குள்ளாருக்கு சங்கக்கருத்தை விளக்கி, அவர்களை க்ஷை மகாஜன கூட்டத்திற்கு குறித்ததேதியில் வரும்படியாகக் கேட்டுக்கொண்டனர். அதே பிரகாரம் அனேக நண்பர்கள் வந்து க்ஷ சுபதினத்தில் ஸ்ரீ ராவ்சாஹேப் த.செல்லப்பநாயகர் அவர்கள் மாளிகையில் சென்னை வன்னிகுல க்ஷத்ரிய மஹாசங்கத்தை ஸ்தாபனஞ்செய்தனர்.

 

பின்னர், இதற்கு வேண்டிய சட்ட திட்டங்கள் செய்வதற்கு வேண்டிய முயற்சிகள் யாவும் ஸ்ரீ பு.முனிசாமி நாயகர  வர்களைக் கொண்டு செய்வித்தனர். சங்காபிவிருத்தியின் பொருட்டு மேற்குப்பக்கத்திலுள்ள தமது குலாபிமான நண்பர்களுக்குப் பன்முறை கடிதங்கள் எழுதிக்கொண்டு வந்தனர். சங்க விவகாரங்களைத் தமக்குப்பதிலாக ஊக்கமாய்ப் பார்ப்பதற்கும் தூண்டுதல் செய்வதற்கும் ஸ்ரீ கா.ஆறுமுக நாயகரவர்களைச் சங்க காரியஸ்தராக தமது சொந்த செலவிலேயே நியமனஞ்செய்து கொண்டனர். ஷை யாருக்கு இரண்டொரு சிப்பந்திகளைக் கொடுத்து அவர்களைக் கொண்டு தென்னிந்தியாவில் செங்கல்பட்டு, சித்தூர, கோயம்பத்தூர், சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கூடலூர், தஞ்சை முதலிய ஜில்லாக்களிலுள்ள வன்னிய குலாபிமானிகளைக்கூட்டி அவர்களுக்கு பன்முறையும் சங்கக்கருத்தை விளக்கிச் சங்கத்தை அபிமானிக்கும்படி விசேஷ பணச்செலவுசெய்து அவர்களுக்குச் சங்க விஷையத்தில் ஊக்கமும்.நம்பிக்கையும் வரச்செய்தனர். அன்றியும் மாஜிக்லாண்டிரன் என்னும் வினோத விளக்கில் பல படங்களைப்புகட்டி அவற்றைக்கொண்டு பிரத்தியட்ச பூர்வமாகப் பிரசங்கித்து வன்னியரைச் சீர்திருத்தும் பொருட்டு, ஸ்ரீ தூசி-இராஜகோபாலபூபதி அவர்களுக்கு க்ஷ மாஜிக்லான்டரனைச் சேர்ந்த படங்களை வாங்கிக் கொடுத்தார். சங்க புத்தகசாலைக்கு சுமார் 300-ரூபாய் பெறும்படியான 97 புத்தகங்கள் வாங்கி இனாமாகக்கொடுத்தார். இப்புத்தகங்களில் அனேகம் வன்னிகுல ஆதிக்கத்தை நிலைநாட்டுபவைகளாக யிருக்கின்றன. இவர் தமது சொந்தத்தில் பொருட் செலவு செய்து அனேக  புத்தங்களையும் விளம்பரங்களையும் பிரசுரித்தார்.

 

மஹா சங்க ரிப்போர்ட் போர்ட்டுகள் விஷேசம் வேண்டியபோது வெளியாருக்கு விநியோகஞ்செய்வதற்கு அப்போதைக்கப்போது தன் சொந்த செலவில் அச்சிட்டுக் கொண்டும் வந்தார்.

 

வன்னிகுல் விளக்கத்தை இங்கிலீஷில் மொழி பெயர்த்துசுமார் இருபதினாயிரங் கையெழுத்தோடு கவர்ன்மெண்டாருக்கு அன்னியர் ஷத்திரியர் எனப் பல திருஷ்டாத்தங்களோடு காட்டி ஒரு பிட்டிஷன் அனுப்பினார். இஃதன்றியும் க்ஷ நூலை ஒவ்வொரு பேட்டையிலுமுள்ள அனேக வன்னியர் முன்னிலையில் அந்நூலுக்குக் கிரந்த கர்த்தாவைக்கொண்டு பிரசங்கிக்கச் செய்தனர். ஜாதி சங்கிரகசாரம் அச்சிடுங்காலத்திலும் தம்மால் கூடிய பொருட்சகாயமும் சரீர சகாயமும் செய்தார். இப்புண்ணியவான் காலஞ்செல்ல ஒருவாரத்திற்கு முந்தி ஸ்ரீ கா.அண்ணாசாமி நாயகரிடத்தில் அவரால் வெளியிடப்பட்ட வன்னிகுல விளக்கத்தைத் தற்காலம் வினாவிடையாகச் செய்துள்ளதைப் பூர்த்திசெய்து கொடுத்தால் தமது ஜீவதிசை காலத்திலேயே அதை அச்சிட்டு வன்னியகுல சங்கக் கல்விச்சாலை மாணாக்கர்களுக்குப் பயன்படுத்தலாமென்று வற்புறுத்திக்கூறி, “கோபால நாயகர் எத்தனை நாளைக்கு இருப்பரென்பது என்ன நிச்சயம் ஆகையால் எனக்கு கைகூடிய காலத்திலேயே நமது மரபிற்கு வேண்டிய புத்தகங்களை அச்சிட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.

 

அன்றியும் சிலை எழுபது உரை, சமஸ்கிருத ஆக்கிநேயபுராணம், ஜாதி சங்கிரகசாரம், கருணாகரத்தொண்ட வன்னியர் சதகம் முதலிய புத்தகங்களை அச்சிடவேண்டுமென்று அவாகொண்டிருந்தனர். இவ்வாறு அவர் வாழ்நாட்களில் வன்னிய குலத்திற்குரிய பல ஆதரவுகளைத் தேடுவதற்கும் அவற்றைப் பிரசுரிப்பதற்கும், போதிப்பதற்கும் வேண்டியபொருள் விரயஞ்செய்துக்கொண்டு வந்தனர். இது சம்பந்தமான வியவகாரங்களை நடத்துவதற்குச் சிப்பந்திகளையும் நியமனஞ் செய்தனர்.

 

சங்க விஷையத்தில் சரீர பிரயாசை

 

முன்னர் கூறியவாறு பல நாடுகளுக்குச் சென்று சங்கத்தின் கருத்தை விளங்கச்செய்தது மன்றி உள்ளூரில், பெத்து நாய்க்கன் பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, குசப்பேட்டை, திருவல்லிக்கேணி சஞ்சீவிராயன் பேட்டை, தேனாம்பேட்டை, கோமளீஸ்வரன்கோயில், நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், முத்தியாலுபேட்டை, இராயபுரம் முதலிய இடங்களில் உள்ள வன்னியர்களைக் கூட்டுவித்து அவர்களுக்குச் சங்கத்தின் கருத்தைவிளக்கி சங்கத்தை அபிமானிக்கச் செய்தனர். 1890 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குமளமா நகரத்திற்கும் புதுவைக்கும், சங்க வியவகாரமாக அங்கத்தாரோடு கூடப்போயிருந்தார். 1890 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 உ செங்கற்பட்டில் கூடிய மகாசங்க கூட்டத்திற்கும் விஜயஞ்செய்தார். 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25உ திருக்கழுக்குன்றம் வன்னியர் மடாலயத்தில் கூடிய கூட்டத்திற்கும் 1891 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 268 திருக்கழுக்குன்றம், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை முதலிய இடங்களில் நடந்த மகாசங்கக் கூட்டத்திற்கும் வந்திருந்தார். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31, முதற்கொண்டு 1894 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி வரைக்கும் சேலம் ஜில்லாவில் ஏரிகோட்டிபட்டி, சிங்கில்பட்டி, பாரூர் முதலான இடங்களில் நடந்த கூட்டங்களுக்கும் மிக்க  சந்தோஷைத்தோடு விஜயஞ்செய்தனர். மேற்கூறிய இடங்களில் நடந்த கூட்டங்களுக்கு தாம் முன்னதாகவே தமது சிப்பந்திகளை அனுப்பி வேண்டிய முயற்சிகள் செய்து கொண்டு வந்தனர். அன்றியும். வழிப்பிரயாணத்திற்கும் வேண்டிய உணவுகளைக் குறைவறச் சேகரித்துத் தம்மோடுகூட வருபவர்களுக்கு உள்ளன்போடு விநியோகஞ் செய்தனர். இவர் சங்கத்தாரோடுகூட வருடந்தோறும் அவர்களுக்கு வழிப்பிரயாணம் தோன்றாமலும், ஊக்கமாயும்.உற்சாகமாயும் இருந்தது.

 

சென்னையில் நடக்கும் வருஷாந்தர மகோற்சவத்திற்கு வெளியிலுள்ள வன்னிகுல் பூபதிகளை வரவழைப்பதற்கு தமது சிப்பந்திகளை முன்னர் அனுப்பித் தகுந்த ஆயுத்தஞ் செய்துகொண்டு வருவார். அன்றியும் க்ஷ பிரதேச கனவான்கள் மகோற்சவ காலத்தில் அவசியம் வரவேண்டிய விஷையத்திற்காக கடிதங்களும் தந்தியும் அனுப்பிக்கொண்டிருப்பார். மகோற்சவகாலத்திற்கு வேண்டிய சாமான்களைத் தம்மால் கூடியவரைக்கும் சேகரிப்பதுமன்றிப் பிறர் சகாயத்தைக் கொண்டும் சேகரிப்பார். அவர்கள் ரெயில்வே ஸ்டேஷனில் வந்திறங்குங் காலத்தில் முகமலர்ச்சியோடு வருகிறவர்களுக்கு நல்வரவுகூறி அவர்களை அழைத்துக்கொண்டு அவரவர்களுக்கு நியமித்துள்ள விடுதிகளில் அமர்த்தி, அவர்களுக்கு வேண்டிய உபசரணைகள் புரிவார். க்ஷ குலாபிமானிகளின் போஜன விஷயத்தில் தாமே நேரிலிருந்து பரிமாறச் செய்வார். ஒருவரும் பசியாயிருக்க அவர் மனம்பொறார். அவர்கள் யாவரும் திருப்திகரமாயுண்டு இருப்பதே அவர் பசியாறியதுபோலாம். இத்தகைய கண்காட்சியைக்கண்டு இவர் புளகாங்கிதங் கொள்வார். வந்தவர்களுடைய சேமாதிசயங்களை வலிய விசாரிப்பார். அவர்களுக்கு வேண்டிய குலசம்பந்தமான புத்தங்களை விநியோகஞ்செய்வார், க்ஷ யார்கள் தத்தம் இல்லத்திற்கேகும். பரியந்தம் தமது சொந்த வேலையில் சிந்தைவையாது அவர்களுக்கு உபசாரங்கள் செய்துகொண்டு வருவார். இவர்கருத்திற்கிணங்க அவரது தண்டவாளப் பட்டரைச் சிப்பந்திகளும் ‘உள்ளூர் வன்னிய குலாபிமானிகளும் சரீரவுதவிசெய்து கொண்டு வந்தார்கள், இவர் இவ்வாறு தாம்பிறந்த குலமாகிய வன்னிய குலத்தைச் சீர்திருத்துவதற்கு மன மொழி மெய்களால் முயன்று திரவியாகாயஞ் செய்துகொண்டு வருவதைக் கண்ணுற்ற வன்னியகுல பூபதிகள் யாவரும் இப்புண்ணிய சீலருக்கு 1894 வருஷம் ஜுன் மாதம் 17 ல் நடந்த சென்னை வன்னியகுல க்ஷத்ரிய மஹாசங்க 6வது மஹோற்சவகாலத்தில் “வன்னியருலோத்தாரணர்” என்னும் பட்டத்தை மாலை மரியாதையோடு சூட்டினார்கள்.

 

ராஜஸ்ரீ ராவ்பஹதார். ஆ.தனக்கோட்டி முதலியாரவர்கள், ராஜஸ்ரீ கூ. அய்யாசாமி பிள்ளையவர்கள், ராஜஸ்ரீ பு. தியாகராய நாயகரவர்கள், ராஜஸ்ரீ சா சுந்தரம் பிள்ளையவர்கள். ராஜஸ்ரீ.கா.ஏகப்ப நாயகரவர்கள், ராஜஸ்ரீ அய்யாகண்ணுநாயகர் நாயகரவர்கள், ராஜஸ்ரீ ச. சிங்காரவேலு நாயகரவர்கள் பி.ஏ. அவர்கள், மற்றுமுள்ள சங்க மெம்பர்களும், சங்கத்தை சோரவிடாது அதை பாதுகாத்துக்கொண்டு வந்தமைக்கு இவர் மிக்க சந்தோஷ முள்ளவராயிருந்தார்.

 

தமக்குப் பின்னரும் இதற்கு வியவகாரங்கள் நடந்தேறி வருமென்று சமயம் நேர்ந்தபோது நான் தீர்க்க தரிசனமாகச் சொல்லக்கூடுவேனென்று கூறிக்கொண்டு வந்தனர். எக்காரியந் தடைப்பட்டாலும் சங்க காரியம் தடைபடாதென்கிற பூரண நம்பிக்கை யுள்ளவராயிருந்தார். அவ்வாறே உண்மைக்குத் தாரமான சில உள்ளூர் வெளியூர் வன்னிகுலத்திரர்கள் அவர் கருத்தை நிறைவேற்றுவதற்கு வெளிவந்து கங்கணம் கட்டிக்கொண்டணர். அவர்களும் இவரைப்போலவே நல்லபேரும் புகழும் அடைவாரென்பது திண்ணம்.

 

மகாசங்க உபாக்கிராசனாதிபதி ஸ்ரீமான் கா.கோபால நாயகரவர்கள் மைலாப்பூர் இராயபுரம் ஆகிய இடங்களில் வன்னியசங்க கல்விச்சாலை ஸ்தாபித்திருக்கின்றனர். இவரைப் போலவே புண்ணியசீலர் வன்னி குலோபகாரி பு.தியாகராய நாயகரவர்களும், வன்னிகுல போஷைகர் ரங்கூன் மா.வெங்கடசாமி நாயகரவர்களும், திரு எட்டியப்ப நாயகரவர்களும், ஆங்காங்கு கல்விச் சாலைகளை ஏற்படுத்தி புகழுடம் பெடுத்தனர்.

 

இவர்களை பின்பற்றி யொழுகுதலே வன்னிகுல கனதனவான்களின் முக்கிய கடமை. நிற்க, வன்னிகுலோத்தாரணர் நமது சங்க தருமத்தை நடத்துவதற்கு சங்கத்தாரே தமது பேசின் பவுண்டரி என்னும் பட்டரையின் மானேஜ்மெண்டைக் கைக்கொண்டு அதினின்றுவரும் இலாபத்தினின்று மூன்றிலொருபங்கு சங்கத் தருமத்திற்கும். இதர தருமத்திற்கும் மற்ற இரண்டுபங்கைக் குடும்ப சவரட்சணைக்கும் வைத்துக் கொள்ளுங்களென்று லோகல் கமிட்டி கூட்டத்தில் பன்முறையுஞ் சொல்லிக்கொண்டு வருவார். இத்தகைய விஷையத்தில் சங்கத்தாரில் சிலர் இஷ்டமில்லாதவர்களா யிருந்தார்கள். சங்காபிவிருத்தி விஷையத்தில் தமது காலத்தையும் கருத்தையும் செலுத்தினார். செலுத்தியும் பட்டரை வியவகாரங்களையும் குடும்ப வியவகாரங்களையும் குறைவற நடத்திக்கொண்டு வந்தார். காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், திருவொற்றியூர், திரூப்போரூர், திருக்குமளம் முதலிய அனேக இடங்களில் நடக்கும் உற்சவாதிகளுக்கும் கோமளபுரம் குலசேகராழ்வார் சபைக்கும், திருவொற்றியூர் வன்னியர் மடத்திற்கும் சிந்தாதிரிப்பேட்டை குலசேகராழ்வார் உற்சவாதிகளுக்கும் தம்மால் கூடிய உதவிசெய்துக் கொண்டுவந்தனர். அன்றியும் பெத்து நாயக்கன் பேட்டையிலுள்ள நாட்டுப்பிள்ளையார்கோயில் உற்சவமுழுமையும் தாமே நடத்திக்கொண்டு க்ஷ பிள்ளையார் புறப்பாட்டிற்காக ஒரு நேர்த்தியான பல்லாக்கு சுமார் 1200-ரூபாயில் செய்வித்தனர்.இவரது ஊக்கத்திற்கும் குணாதிசயத்திற்கும். பரோபகார சிந்தைக்கும் வன்னியரும் அன்னியரும் அவரிடத்தில் அத்தியந்த பிரீதி யுள்ளவர்களாய், இவர் கலிகால வன்னிகுல கர்னாவதார சீமானென உள்ளன்போடு வாழ்த்தினார்கள். இப்புண்ணியசீலர் எடுத்துக்கொண்ட முயற்சியாலும் துண்டுதலினாலும், பொருளுதவியாலும். வன்னியர்களிற் பெரும் பாலாற் பழமைபோல் க்ஷத்ரியகுல தர்மானுஷ்டான முடையவர்களா யிருக்கிறார்கள். இவர் சங்கமாகிய குழந்தைக்கோ போதுமான வயதாகாத இளம்பிராயமாகிய 8-வது வயதிலேயே விட்டுவிட்டு கலியுகாதி ஆண்டு 4997 க்கு மேல் செல்லாநின்ற துர்முகி ஆண்டு ஆவணி மாதம் 14 வெள்ளிக்கிழமை கிருஷ்ணபட்சம் பஞ்சமிதிதி அஸ்வனி நட்சத்திரத்தில் மாலை 6.00 மணிக்கு ஆசாரியர் திருவடியடைந்தனர்.

 

அப்பால்ய குழந்தைக்கு தக்க வயதுவரும் பரியந்திரம் அப்புண்ணிய சீலரைப்போல் யார் பாதுகாக்கப் போகிறார்களென்று குலாபிமானிகளும் ஏக்கமுற்றிருக்கும் சமயத்தில் புலிக்குப்பிறந்தது பூனையாய்ப்போகுமா என்ற பழமொழிப் படிக்கும் “தன்குலம்விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரும் தருமங்கள் செய்து வரலும்” என்னும் ஆன்றோர் வாக்கைக் கடைப்பிடித்தும் இவரது ஜேஷ்ட புத்திரரும் மன்னு நமதருங்குலத்தின் மணிவிளக்குமாகிய ஸ்ரீமான் பல்லவகுலசேகர, கா.கோ.பலபத்திர நாயகரவர்களும் தன் பிதாவின் கருத்தை முழுமையும் முடிவு செய்யக் கங்கணக் கட்டிக்கொண்டு உழைத்து வந்தனர். இவர் தந்தையைப்போலவே தந்தை எவ்வழிமைந்த னவ்வழி என்பதாய் மேற்சொன்ன குலதர்ம பரிபாலனங்களை எல்லாம் முன்னிலும் அதிக விருத்திக்குக் கொண்டுவந்தமையாலும், அகோராத்திரம் குலவிருத்திக்கே அக்குலத்தவராகிய நமக்கெல்லாம் அவர்பாலுள்ள அன்பினாலும் பாடுபடுவதாலும் கடந்த 1910 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 அன்று ஆற்காட்டில் நடந்த சென்னை வன்னிகுல க்ஷத்திரிய வருஷோற்சவகாலத்தில் ”பல்லவகுலசேகரர்” என்னும் உயர்பட்டமளித்தமையாவரு மறிந்த விஷயமே. மகாசங்க 22வது வன்னிய உதிரம் தாதுக்கள் தோறும் நிறையப்பெற்ற கனவான்களே! காலஞ்சென்ற வன்னிகுலோத்தாரணர் அவர்களும் அவர் புத்திரரும் குலாபிமானத்தை மேற்கொண்டல்லவா இப்பெருங்காரியத்தில் முயற்சித்தது. அவர்களுக்குண்டாயிருந்த குலாபிமானம் நமது குலத்துதித்த செல்வந்தர்களுக்கு ஏன் உண்டாகக்கூடாது? நங்குல செல்வந்தர்கள் ஒவ்வொருவரும் இவர்களைப்போல் முயற்சிக்கின் நம்சங்கம் இன்னும் எத்தகை சிறைப்புடையனவாகும்? நாம் அக்குலத்தில் பிறக்கவில்லையா மற்றைய தர்மத்தைப்பார்க்கிலும் குலதர்மம் முக்கியமல்லமா? மேற்கண்ட பிரபுக்களைப்போல் நாமும் நமது சக்திக்குத்தக்கபடி உதவுவோமாகில் சங்கம் நல்ல விர்த்திக்கு வருமென்பதிற் தடையென்ன? இதனால் நம்முடைய இனத்தவர்களும் சுகமடைவார்கள். “தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்” என்றபழமொழியைக் கடைப்பிடித்து முயற்சித்து வரும்படி மிகுந்த வணக்கத்துடன் எமது வந்தனத்தை பன்முறையும் செலுத்துகின்றோம்.

 

பிறந்தாலும் பேருலகி லெந்தாளும்

புகழுடனே பிறத்தல் வேண்டும்.

சிறந்தாலும் கோபால் நாயகர்போல்

குலவிளக்காய் சிறத்தல் வேண்டும்.

மறந்தாலும் மறைபடா மாட்சியுடை

நற்றவங்கள் மலியச்செய்தே

இறந்தாலும் இறவாத கீர்த்திபுகழ்.

இத்நிலத்தில் எய்தல் வேண்டும்.

 

சங்கப்பதிகம்

 

தென்னாற்காடு ஜில்லா வன்னிகுல க்ஷத்ரிய சங்கப் பிரதிதியாகயிருந்த பரங்கிப்பேட்டை “வன்னிகுல சேகரர்” வீ.குருசாமி ராயர் அவர்கள் இயற்றியது.

 

குல நலம்

 

ஆசிரிய விருத்தம்

 

அம்புவுயி லாதியில் வாதாபி யினதாபி

யசுரர்களை சம்ஹ ரித்து

அமராதுயர் தீர்க்கவுயர் சம்புமுனி யாகத்தி

லவதரித் துமைவ ரத்தால்

வுலகெலா மோர் குடைக்கீ

ழோர்குறைவு மின்றிசெங் கோனடாத் திளவரில்

வோங்கு வன்னிய ரென்னவே

நம்பியில் வன்யகுல க்ஷத்ரிய மகாசங்கம்

நாட்டினார் சென்னை தனிலே

ஞானமுங் கல்வியும் பெற்றகன வான்கள்குல்

நன்குபெற் றோங்க வென்றே

வம்பராடும் பொய்யை நம்பிகெட் டாசார

வழியை விட்டழி யாமலே

வள்ளியர்க ளேநல்ல கண்ணியர்க ளேசங்க

வன்னியர்க வாக வாரீர்

 

குல தருமம்

 

ஜனித்தமக வின்நாபி கொடியறுக்கா முனஞ்

ஜாத கருமஞ் செய்திடல்

சந்தோஷை மாகபன் னிருநாட்க ளாகுமுன்

றகுநாம கரணஞ் செயல்

இனியாறு திங்கடனி லன்னப் பிராசன

மினிதாய் நடத்தல் பின்னா

லேற்றமுத லாண்டிலின் றேன்மூன்றி லாகின்மிக

இஷ்டமாய்ச் சவளஞ் செயல்

தனியைந்து வயதினிற் கல்வியையு மேழினிற்

றனுவித் தையும் பயிற்றல்

தக்கபதி னொன்றினுள் ளுபநயன கருமம்வே

தாத்ய யனமும் பயிற்றல்

மனதுடன் மூவேழிற் பாணிகிரஹணஞ் செய்தல்

மன்னர்முறை யிதை நண்ணவே

வன்னியர்க ளேநல்ல கண்ணியர்க ளேசங்க

வன்னியர்க ளாக வாரீர்.

 

முயற்சி

 

சங்கமெனும் வாட்கொண்டு அஞ்ஞான காட்டினிற்

றமதனா சார மென்னுந்

தாவரங்களை வெட்டி யபிமான ஏர்கட்டிச்

சமபூமி யாக வுழுது

தங்குமொற் றுமையென்ற யெருவிட்டு கல்விவிதை

தனைநட்டு அறிஞ ருபதே

சப்புனற் பாய்ச்சிபயி ராக்கியா சாரமாந்

தக்க வேலியை யமைத்து

பங்கம்வா ராதபடி மரமாக்கி யுபநயன

பார்வையாற் பூக்க விட்டு

பகரும்வே தாத்யயன மகிமையாற் காயாக்கி

பிர்ம காயத்ரி யாலே

மங்காத கனியாக்கி யுண்டுநித் யானந்த

மானபத மெய்த மகிழ்வாய்

வன்னியர்க ளேநல்ல கண்ணியர்க ளேசங்க

வன்னியர்க ளாக வாரீர்.

 

வன்னிகுலசேகரர் வீ. குருசாமி நாயகர் அவர்கள் சங்கப் பதிகத்தில் 10-பாடல்கள் எழுதியிருக்கிறார். அக்கருத்துயாவும் பின்வரும் உபதேசப்பாடலில் அடங்கியிருப்பதால் முக்கியமான 3 பாடல்கள் மட்டும் பிரசுரிக்கப்பட்டது.

மஹா சங்கக் கடமை

 

நிலமண்டில வாசிரியப்பா

 

சென்னையின் மன்னிய சிறப்புடை வன்னியர்

முன்னைய நாளின் மொய்ம்புறு வாழ்கைபோல்

பின்னருந் தங்குலம் பீடுட னொழுகதற்

கென்னதா லாகு மெனநளி சூழ்ந்தே

தங்குலச் சிறார்க்குத் தளங்கொடுப் போமா

பொன்கொடுப் போமா புவிகொடுப் போமா

என்கொடுத் தாலு மேதவை நில்லா

சோரர் பயமுஞ் சோதரர் பயமும்

வீரர் பயமும் வேந்தாதம் பயமும்

கள்ளர் பயமுங் கணிகையர் பயமும்

உள்ளார் பயமும் உறவினா பயமும்

வெள்ளத்துப் பயமும் வெந்தணல் பயமும்

கொள்ளை யாளர் கொடுமைசெய் பயமும்

இன்னை பலபய மேற்கென வுதிக்குமால்

அண்ணாத்தலதற்கே யென்னசெய் வாமெனப்

பன்னிப் பன்னிப் பலர்குழீஇச் சூழந்தே

வன்னிநற் குலத்தின் மாசங்க மேயனச்

சென்னையி லொன்றைச் சிறப்புட, நாட்டினர்

இன்னதோர்: சங்கத் தெழிற்றொழில் யாதெனின்

மன்னுாஞ் சிறார்க்குமதி மதனில்

உள்ளருங் கலைப்பொரு ளோதுவித் தத்தலெ

 

 

 

 

 

 

கல்வி செல்வம்

 

“வெள்ளத்தால லழியாது வெந்தணலால்

வேகாது வேந்தராலுங்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்

நிறைவன்றிக் குறைவுறாது.

கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு

மிகவெளிது கல்வியென்னு

முள்ளபொரு ளுள்ளிருக்கப் புறம்பாகப்

பொருள்தேடி யுழல்வதென்னே”

 

என்று முதியோர்கள் பொருட்செல்வம் பலவிதத்திலும் அழிந்துவிடு மென்றும், அது நிலையானதல்ல வென்றும், அதைவிட மக்களுக்குத் தேடி வைக்கவேண்டிய நிலையான பொருள் கல்விச்செல்வமேயென்றும் வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள். ஒருவன் தன் பிள்ளைக்கு நாலு ஏக்கர் நிலத்தை சொத்தாக வைப்பதைவிட இரண்டு ஏக்கர் நிலத்தை விற்றாவது அவனுக்கு கல்வியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

 

 

“கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்

நெல்லினுட் பிறந்த பதராகும்மே.”

 

வெற்றிவேற்கையில் அதிவீரராம பாண்டியர் கூறியதுபோல் நாம் உயர்ந்த மரபாராயிருப்பினும் கல்வியும்  ஒழுக்கமும் குறைவுபட்டிருப்பதால் உலகத்திலே நாம் சமூக முன்னேற்றத்தில் பின்னடைந் திருக்கிறோம்.

 

 

“மேற்பிறந்தாராயினுங் கல்லாதார்

கீழ்ப்பிறந்துங் கற்றா ரணைத்திலர் பாடு”

 

என்று குறளாசிரியர் கூறுகிறார். அதற்கு திருஷ்டாந்தமாக.

 

சேற்றிற் பிறந்திடுங் கமலமலர் கடவுளது

திருமுடியின் மேலிருக்கும்

திகழ்சிப்பி யுடலிற் பிறக்குமுத் தரசரது

தேகத்தின் மேலிருக்கும்

போற்றியிடு பூச்சியின் வாயிநூற் பட்டொன்று

பூசைக்கு நேசமாகும்

புசலரிய வண்டெச்சி லானதேன் தேவர்கொள்

புநிதவபி டேகமாகும்

சாற்றிய புலாலொடு பிறந்தகோ ரோசனை

சவ்வாது புழுகனைவர்க்குமாம்

ஜாதி ஈனத்திற் பிறக்கினுங் கற்றோர்கள்

சபையின்மேல் வட்டமன்றோ

மாற்றிச் சுரத்தினை விபூதியா லுடல்குளிர

வைத்தமெய்ஞ் ஞான முதலே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயனீடு

மலைமேவு குமரேசனே.

 

என்று குமரேச்சதகம்கூறும் பலவித திருஷ்டாந்தங்களால் ஜாதியீனத்திற் பிறக்கினும் கற்றவர்களே மேலான நிலையை  யடைகின்றனரென வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது. இக்கருத்தையே வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தில் பாண்டவர். வனவாசம் நெல்லிக்கனி பொருந்திய சருக்கத்தில் நகுலன் தன் மனக்கருத்தை வெளியிடுவதில்.

 

”குலமிக வுடையாரெழின் மிகவுடையார்

கோதில் செல்வமு மிகவுடையார்

நலமிக வுடையா ரென்னினுங் கல்வி

ஞான மற்பமு மிலாதவரை

வலமிகுதிகிரிச் செங்கையோய் முருக்கின்

மணமிலா மலரென மதிப்பேன்

ஜலமிகுபுவியி லென்றனன்வாகை தார்புனைந்

தாரைமா வல்லோன்”.

 

என்று விளக்கியிருக்கிறார்.

”கல்வியே யாவர்க்கு மொளிகொண்ட வடிவமாங்

கல்வியே புதையலாகும்

கல்வியே பரதேச கமனவின மாகுமக்

கல்வியே துணையதாகும்

கல்வியே திசைகொண்ட கனகீர்த்தியைத் தருங்

கல்வியே பெருமையாக்கும்

கல்வியே வேண்டுதற் போகங்களைத் தருங்

கல்வியே யின்பமாக்கும்

கல்வியே நிலைகொண்ட கற்பகத் தருவதாங்

கல்வியே செல்வமாகும்

கல்வியே யரசராற்பூசை செய்விக்குமக்

கல்வியே கடவுளாகும்

கல்விக்குநிகரான பொருளொன்று மிம்மையிற்

கருதிடினு மில்லையில்லை

கல்லா னெனைத்தொன்று மில்லா னடக்குமிரு

காற்பகவ தென்பர்மாதோ”

 

அவ்வித கல்விப் பொருளன்றி செல்வப் பொருளைத் தேடிவைத்த தனது பிதாவை ஒருவன் குறை கூறுவதை கவனியுங்கள்.

 

“அள்ளிக் கொடுக்கின்ற செம்பொனும் ஆடையு மாதரவாய்

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்ததல்லால்

துள்ளித் திரிகின்ற காலத்திலே யென்துடுக்கடக்கி

பள்ளியில் வைத்திலையே தந்தையாகிய பாதகனே”

 

எனப் பொருள் கொடுத்த தந்தையை பாதகனே எனக் கூறியுள்ளான். இப்போதுள்ள நம்குலப் பெரியோர்கள் பலரும் படிக்காததற்கு இக்காரணத்தையே தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒன்றுதான் உணர்வதில்லை. நாம் நமது தகப்பன்மார்களை குறை கூறுவதுபோல் பிற்காலத்தில் நம்மை நமது மக்கள் குறை கூறவார்களேயென்று யோசித்துப் பார்ப்பார்களானால் பிள்ளைகளை பள்ளிக்கனுப்பி  உண்மையான பள்ளிப் பிள்ளைகளாக வளர்த்து தன் குடும்பத்திற்கும், குலத்திற்கும், தேசத்திற்கும் பெருமையை யுண்டாக்கி அவர்களும் பிற்காலத்தில் தங்கள் பெயரை முன்னுக்கு கொண்டுவரச் செய்வார்கள்.

 

 

“கலைபயிற்றாது காதலர்க்குமா நிதி

நிலையென வளிக்குதல் நெறியில் பித்தர்க்குக்

கொலை செய்வாளிவதும் குழவிதன்னைமா

மலையினோரத்து வைப்பது மாகுமால்”.

 

ஆகையால் உங்கள் பிள்ளைகளை கண்ணில்லாக் குருட்டு மக்களாக வளர்க்காமல் எண்ணும் எழுத்துமாகிய கண்ணைக் கொடுத்து வளர்க்குமாறே சங்கத்தார் உங்களை அடிபணிந்து வேண்டிக் கொள்ளுகிறார்கள்.

 

“காட்டகத்தே நிர்க்கு மவையல்ல நல்ல மரங்கள் சபைநடுவே

நீட்டோலை வாசியாநின்றான் குறிப்பறியமாட்டா தவநன்மரம்”

 

என்றதுபோல் உங்கள் மக்களை வளர்க்காமல் எவ்வளவு ஏழைகளாயிருந்த போதிலும்,

 

”கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சைப் புகினுங் கற்கை நன்றே.”

 

என்பதைக் கடைபிடியுங்கள்.

 

உபதேசப் பாடல்

 

 

அறுசீரடி ஆசிரிய விருத்தம்

அமிழ்தூட்டு மன்னையென வறிவூட்டுந் தந்தையென.

அருளார் ஞான

இமிழுட்டுங் கருணையெழிற் குரவனெனக் குடிநலமே

எண்ணி யாண்ட

தமிழ்நாட்டு மன்னவர்கள் சந்ததிகாள் முந்தியனுஞ்

சரிதங் காணும்

சிமிழ்நாட்டு முபதேசஞ் சிலமொழிவேன் அன்புபெறச்

சிந்தை கொண்மோ.

 

கலையறிவே தலையறிவாம் நிலையறிவாம் நுமதிரண்டு

கண்ணா மின்பக்

கலையறிவே அறமாதி நாற்பொருட்கும் வித்தாகும்

கடனு மாகும்

கலையறிவே யிசைநாட்டும் குலமடைந்த வசையோட்டும்

கருத்தைக் கூட்டும்

கலையறிவே மன்குலத்து முதற்கடமை யாகுமெனக்

கருது வீரே.

 

ஆடவராய் உயர்குலத்திற் பிறந்தறிவிற் கடைப்படுத

லழகோ சொல்வீர்

மூடர்களாய்ப் பிள்ளைகளைச் செய்தபழி யுங்களுக்கே

முடிவிற் காட்டும்

நாடகத்தி லரசனைப்போல் ராஜகுலம் நாமென்றால்

நம்பு வாரார்

தேடரிய பிள்ளைகளை யின்றுமுதற் பள்ளிக்கே

செலுத்து வீரே.

 

வேற்றுமையை நீர்விரும்புங் காலமட்டும் நமதுகுலம்

விருத்தி யில்லை

கூற்றமுங்கள் குலங்கெடுக்கக் கட்சியெனும் பேர்கொண்டு

குதித்த தந்தோ

சீற்றமெங்கு செலுத்துவது பகையாளி நமைக்கெடுக்குஞ்

செயலைக் காணீர்

சாற்றரிய புகழ்மரபீ ரின்றுமுதற் கட்சிபகை

சாடு வீரே.

 

ஒழுக்கமிலா வொருகுலத்தை யுயர்குலமென் றற நூல்க

ளொப்பாதப்பா

ஒழுக்கமிலாக் குறைவாலே யிந்நாளில் நோய்வருமை.

யுபாதை கண்டோம்.

ஒழிக்கமெனின் மரபொழுக்கம் பிரரொழுக்க நன்றேனும்

ஊறு நோக்கு

விழுப்பமுறு மன்னவர்கள் சிறப்பொழுக்க மெப்படியும்.

வேண்டு வீரே.

 

காலைதனி னீராடல் மடியுடுத்தல் சந்திதனிற்

கடவுள் போற்றல்

நூலணிதல் நுல்போற்றல்விருந்தளித்தல் பிதுர்க்கடன்கள்

நோன்பு காணல்

வாலர்கட்குக் கலைபயிற்றல் மாதர்களைக் கற்பறமாம்

வழியில் போக்கல்

சீலதவர் பால்பத்தி யிளையோர்பா லன்புபெறச்

செய்கை தானே.

 

உலகோடு தாம்வாழு முறுதியையே நல்லோர்க

ளுறுதி யென்பார்.

குலனோடு குடிவாழச் செய்வதுவே மேற்குலத்துக்

கொள்கை யாகும்.

நலனாடித் தீமையெலாஞ் சோதரர்க்கு நாட்டுகின்ற

நாட்டீர் பாவப்

பிலனாடி வீழாமற் சோதரர்க்கு நன்மையினிப்

பிறப்பிப் பீறே.

 

நல்லோரி னுறவாலே யிகபரத்தும் நன்மை

யுண்டு நாகரீக

மில்லாத கயவர்களி னுறவாலே தீமையெலா

மின்றே சேரும்

கல்லாத விழிஞர்தமைப் பொல்லாத செயல்புரியும்

கடையர் தம்மை

சொல்லாலு நினைவாலு மறமறந்து நமதுசங்கந்

துணைவீ ரின்றே.

 

எந்நாளும் புண்ணியத்தா லேற்றமுண்டு பாவத்தா

லிறக்க மப்பா

இந்நாளி லிருப்பவர்கள் மறுநாளைக் கில்லையெனு

மியல்பை நோக்கிக்

கன்னாவ தாரனென்று பிறர்மதிக்கக் கல்விமுதற்

றானங் காண்பீர்

முன்னோரின் திருமொழியைக் கடைப்பிடித்து நன்மை

யெலா முன்னுவீரே.

 

வானமெலாம் புகழுமிந்த வன்னிகுலச் சிறப்பொழுக்க

மகிமை யாவும்

மானமென்பார் குலமானம் முந்தியதாம் அதன்பின்னே

மாதர் மானம்

ஈனமறு மறைமானம் புகழ்மானம் க்ஷத்திரியன்

யான்யா னென்றும்

ஞானமுற்று வீரர்களாய்க் குலப்பழியை யொழித்திடவே

நவிலு வோமே.

 

முடிவு
  

பலபலவாய்ச் செப்புவதென் மன்மரபா ருறுதிபெறப்

படிப்பு வேண்டும்

கலகமுறு கட்சிமய லறவேண்டும் கட்குடியைக்

கழித்தல் வேண்டும்.

கொலைவிடுத்துத் தன்னலத்தைக்கொன்றுரியநல்லோரைக்

கூடல் வேண்டும்

புலையொழித்து புண்ணியராய்க் குலமானம் போற்றுதலே

புத்தி காண்பீர்.

 

உபதேச உரைகள்

 

வெண்பா

கல்வியைக்கல் கட்சியொழி கட்குடியை வேண்டாதே

கொல்லாதே தன்னலத்தைக் கோராதே-நல்லோரைப்

போற்று புலைநீக்கு புண்ணியஞ்செய் ஆனினங்காப்

பாற்று மரபொழுக்கம் பற்று.

 

 

 

கல்வியைக் கல்.”

 

சகோதரனே! நீ உன் ஜாதியைச் சிந்தித்துப்பார்..முன்னோர்களின் உயர்வையும் யோசனைசெய். தமிழ்நாடு ஒப்பற்ற நாடு  இந்நாட்டைப் படைப்புக் காலந்தொட்டு பாரம்பரியமாய் பரிபாலித்த அரசர்கள் உனது மூதாதையர்கள், அவர்கள் தாம் சேர.போல எண்ணிக் காத்தனர். மன்னுயிரைத் தம்முயிர்போல் நேசித்தனர்.

 

சோழ, பாண்டிய அரசர்கள்; அவர்கள் குடிகளைக் குழந்தைகள்.ஏற்பட்ட நுல்கள் பல; அவையாவும் சுத்தத் தமிழே! அந்நூல்களுள் முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர். அவர்கள் காலத்தில் அறத்தின் மகிமை அன்புடன் போதிக்கப் பட்டுள்ளது. நீங்கள் அக்காலத்தில் இப்பொழு துள்ளபடி கல்வி வாசனையே இல்லாமல் இருந்திருக்க முடியுமா? முடியாது. ஏன்? கல்வி கற்றல் உங்கள் மரபிற்கு முதற்கடமை. கடமையை எவரும் தவறாமல் அரசன் காப்பாற்றி வந்தான். தவறிவர்களுக்குத் தண்டனையுமுண்டு. தெய்வபயத்தைச் சிந்திக்காவிடினும் ராஜபயத்திற்காவது கற்றுத்தான் தீரவேண்டும். இக்காலத்தில் விஷயம் எதிரிடையாய் விட்டது எண்ணிப்பார். உனது பிள்ளைகளையும், பெண்களையும் பள்ளிக்கனுப்பு. ஆனால் ஓர் எச்சரிக்கை! நமது மதம், நமது ஜாதி நமது முன்னோர்பெருமை, தற்கால வாழ்விற்குத்தகுந்த சாதனங்கள், நாம் இறந்தபின் அடையும் நல்லகதி இவைகளைப்பற்றி போதிக்கும் கல்வியே நமக்கு வேண்டும். கேவலம் உலக சுகத்தை மாத்திரம் உயர்வாய் எண்ணி பழி பாவங்களுக் கஞ்சாமல் காசு சம்பாதிக்கச் செய்யும் கல்வி நமக்கு வேண்டாம். அவ்வித கல்வி கற்போருக்குத் தெய்வமில்லை. தீமைக்கு அஞ்சார்கள். ஆகையால் நமது பூர்வீக் கல்வியைக்கல், கற்றபடி நில், நடத்தைப் பிரதானம், புத்தகப் படிப்புமட்டும் போதாது, ஒழுக்கமும் வேண்டும். இதுவே உனக்கு முதல் உபதேசம்.

 

 

 

கட்சி யொழி”

 

அன்பனே! இக்காலத்தில் எங்கு நுழைந்தாலும் குக்கிராமத்திலுங்கூட எத்தனையோ கட்சிக் கோணலுண்டு. கட்சி பேதமில்லாத ஊரைக்காண்பது அரிது. காரணமென்ன? கல்வி கல்வியுள்ள நகரங்களிலுங்கூட இக்கட்சிபேதம் சர்வசாதாரணமாய் இருக்கின்றது. பின்னேது காரணம்? கர்ம சண்டாள குணம் ஒன்று இக்காலம் உலகமெங்கும் பரவி விட்டது. அந்த பேய்க்குணத்திற்கும் பெயர் “சுயநலம் பேணுதல்” இக்குணமே கட்சிக்குக் காரணம். எமனுக்குச் சமானம். நம்முடைய பலத்தை நமது செல்வத்தை இது நடுவே பிளந்து நாசமாக்கி விட்டது. நம்மைக்கெடுக்க எண்ணி, சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் நமது எதிரிக்கு வாழ்வைக் கொடுத்து நம்மை நசுக்கிவிட்டது. யானை தன் தலைமேல் தானே வாரி போட்டுக் கொள்வதுபோல் கட்சியை வளர்த்தி உனது மண்ணை பலத்தைக் குறைக்காதே. காரியத்தில் கண்ணாயிரு கட்சி என்னும் காளகூடவிஷ சர்ப்பத்தை நல்லறிவாகிய கத்தியால் வெட்டித்தள். நீயும் உனது குலமும் உனது தேசமும் உயர்வடைய இதுவே உனக்கு இரண்டாவது உபதேசம்.

 

 

 

கட்குடியை வேண்டாதே”

 

நண்பனே! அன்புடன் சொல்லுகின்றேன். என் வார்த்தையை யலட்சியஞ் செய்யாதே. கள்ளென்பது விஷம். விஷம் காலிற் பட்டால் உடனே தலைக்கேறுவதை நீ கண்டிருக்கின்றாய், கள்ளும் அப்படியே, ஏன்? அவனுக்கு விஷமேறி மதிமயங்கி விட்டது. பொருள் நஷ்டம், நஷ்டம், பெண்சாதி பிள்ளைகள் கஷ்டம், சர்க்கார் தண்டனை, சிலசமயங்களில் அடி உதை இத்தனையும் அவன் படுகிறான். மிதமிஞ்சிய குடியால் மரணமும் உண்டு. உயர்ந்தமரபார் கள்ளுண்ணும் வழக்கம் ஆங்கிலேயர் அரசாளும் இக்காலத்தில் தானுண்டு. இக்காலத்தில் மலையாள தேசத்தில் இவ்வழக்கத்தைக் காண்பது அரிது. எத்தனையோ செல்வர்கள் அவ்வழக்கத்தால் ஏழைகளாகி விட்டனர். அரசாங்கத்தார் நாம் குடித்துக் கெடுவதை ஆபத்தாய் நினைக்கவில்லை. காசுபெறுவதே முழுநோக்கமாய்க் கருதுகின்றனர். நீ ஜாக்கிரதையாயிரு. நமது மதத்தில் கள்குடிப்பதைப் பஞ்சமா பாதகங்களில் மிஞ்சிய முதற்பாதகமாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றது. கள்ளை மோந்தாலும், கள் சம்மந்தப்பட்ட வஸ்துக்களை புசித்தாலும், தோஷமென்று நமது நூல்கள் பறையறைகின்றன; கருதிப்பார். இந்த வாழ்வு சதமா? இறப்பது நிச்சயம், இறந்தபின் நல்லகதியை எதிர்பார்க்க வேண்டும். கள் குடியனுக்கு எரிவாய் நரகமே இருப்பிடம். நெருப்பெழக் காய்ச்சிய கள்ளை அங்கே அவன் குடிக்க வேண்டும். இந்த லோகத்திலும் பரலோகத்திலும் பிறகு இறந்துகிடைக்கும் ஏழுபிறப்பிலும் நீ பாழடைய வேண்டினால் கள்ளைக்குடி.இன்பம் வேண்டினால் இன்றைக்கே அதை யொழித்துவிட்டு தெய்வசபையாகும் இச்சபையிலேயே இனி உண்ணுவதில்லையென்று உனக்குள்ளே சங்கல்பஞ் செய்துக்கொள் இதுவே உனக்கு முன்றாவது உபதேசம்.

 

 

 

கொல்லாதே”

 

க்ஷத்ரியனே! உன் குலப்பெயரை யோசித்துப்பார். க்ஷத்ரியனென்னும் சொல்லுக்குப் பொருளென்ன? ஜீவர்களையும் ஆபத்திலிருந்து காப்பாற்றுபவன் என்பதல்லவோ. பள்ளி, உன் முன்னோர்கள் உலகத்தை ரட்சிக்கும் தொழிலையே உயிர்த்தொழிலாய்க் கொண்டனர் பள்ளி யென்னும் சொல்லுக்கும் இதுதான் அர்த்தம்?. பாலிப்பவன் பள்ளி. உயர்தொழிலாய் அதிலும். ஒரு புறாவிற்காக உடம்மையெல்லாம் அறுத்துக்கொடுத்த மன்னவன் உங்கள் ஜாதியானல்லவா? ஓர் பசுங் கன்றிற்காகத தனது

பாலகனைப் பரிகொடுத்த மநுநீதிச்சோழன் உனது மரபென்றால் உனது ஒழுக்கத்தை ஒப்பிட்டுப்பார். ஓர் வேளை உணவிற்காக  எத்தனையோ ஜீவராசிகளை கொல்கின்றாய். இது கடவுள் சம்மதமா

 

எத்தனை உயிர்களை நீ கொன்றாயோ அத்தனை பிறவிகள் அவ்விதமாய் நீ பிறந்து அவைகள் உன்னைக் கொன்ற பிறகே நீங்கும். இது தெய்வ நீதி, இதை மாற்றத் தந்திரஞ்செய்தல் சாத்தியமல்ல. நீ எது எதை இவ்வுடலில் செய்தாயோ அது அதையே அடுத்த உடல்களில் அனுபவிக்கவேண்டும். ஆதலால் ஜாக்கிரதை உடலிலிருந்து உயிரைப் பிரித்துக் கொலைசெய்யும் நீ ஓருயிரைய கவலையற்று அழிக்கலமா? பழியும் பாவமும் ஆண்டவன் கோபமும் புதிதாய் சிருஷ்டி செய்ய முடியுமா? கடவுள் செய்த காரியத்தை உன்னைவிட்டு அகலாது. கொலையுள்ள குடும்பம் விருத்தியாகாது. பார்ப்பாரைப்பார்; உனது ஜாதியாரைப்பார்; புலியைப் பசுவைப்பார்; புலி ஐந்துகுட்டிகள் போடும் விருத்தியில்லை. ஒவ்வொன்றே பெரினும் பாரெங்கும் பறந்து விளங்குகிறது. அதர்மத்தால் அருகிவிட்டது. க்ஷத்ரியமரபு தரணியில் ஓங்க வேண்டினால் கொல்லாதே? ஜீவகாருண்யத்தைக் கைக்கொள். இதுவே உனக்கு நான்காவது உபதேசம்.

 

 

 

தன்னலத்தைக் கோராதே”

 

தமிழ்வேந்தர் சந்ததியானே! தன்னலமென்பது சண்டாளகுணம்,

தனக்கெனவாழாத பிறர்க்குரியாளர் குடி உன்னுடைய குடி. சேர, சோழ, பாண்டியர்களின் சரித்திரத்தைச் சாற்றும் தமிழ் நூல்களில் தன்னலமென்னுஞ் சொல்லே கிடையாது. உலகத்தை ஓம்பவே க்ஷத்ரியமரபு ஏற்பட்டது. அத்தகைய பெருமிதமரபில் நீ ஏன் பிறந்தாய். நீ க்ஷத்ரியன், அண்டைவீட்டாள் வாழ்வதைக்கண்டு அருவருப்புக் கொண்டாலும் அல்லது உனக்கடங்கிய குடிகளை ஓங்கவிடாமல் அதிகாரவர்க்க ஆட்சியை அவர்கள் மீது நீ செலுத்தினாலும் நீ ஆண்டவனால் சிட்சிக்கப்படுவாய், மனித ஜன்மம் உனக்கு மறுபடியும் வரவே வராது. மாடு ஆடாய்ப்பிறந்துதான் தொண்டு செய்யவேண்டும். உலகமெல்லாம் வாழவேண்டும், உன்மரபும் ஓங்கவேண்டும். அதற்காகச்செய்வது என்னதெரியுமா? உழை! உழை! ஜாதிக்காக உழை! தேசத்துக்காக உழை! தன்னலத்தைக் கோராதே; இதுவே உனக்கு ஐந்தாவது உபதேசம்.

 

 

 

 

நல்லோரைப் போற்று”

 

படையாட்சி உனது வாழ்வின் மேன்மையும், தாழ்மையும் உனது குணத்தைப் பொறுத்தது. நீ நல்ல குணமுள்ளவனாய்ப் பாவத்தை வெறுத்து, புண்ணியத்தைப் போற்றிவாழ்ந்தால் இவ்வுலகில் புகழையடைவாய்; பரலோகத்தில் க்கியத்தைபெறுவாய்; உனது குணம் கூட்டுறவால் மாறுகின்றது; நீ யாருடன் சஹவாசஞ் செய்கின்றாயோ அவர்கள் குணமே உனக்குப் பிடிபடும்; பாவிகள் கூட்டுறவால் நீ நெடுநாளாய்ப் பாவியாகவே மாறிவிட்டாய்: உன் ஜாதியையும் பாவஞ்செய்யும் ஜாதியாய் மாற்றிவிட்டாய். நீ பாவத்தை செய்வதும் அதன் பலனாக நரகத்தையடைவதும் மறுபடியும் அந்த குணத்துடனே பிறந்து பஞ்சம், நோய், தரித்திரம் இவைகளால் பதைபதைத்து மடிவதும் உனக்கு சஹஜமாகிவிட்டது. இதற்குப் பரிகாரமென்ன? நல்லோரைச்சேர்; அவர்களுடன் கூடிப்பழகு அவர்கள் சொல்லை வேதவாக்கியமாகக்கொள், ஆவிபிரிந்தாலும் அவர்களை வெறுக்காதே. அவர்கள் உனக்குள்ள குறையையும் உன் குடும்பக்குறையையும் உன்மரபுக்குற்ற இழிவையும் உனது தாய்த்தேசமாகிய பாரத நாட்டிற்குநேர்ந்த பழியையும் பரிஹரிப்பார்கள். அவ்வழியில் உன்னைப் பழக்குவார்கள். அப்போது நீ புண்ணியமே செய்வாய். பாவத்திற்கு அஞ்சுவாய். உன் மரபையும் உன் தேசத்தையும் அவ்விதம் பழக்குவாய். பலன் பாக்கியமாய் முடியும். கிருதயுகமாகும். செங்கோல் வளரும். கொடுங்கோல் ஒழியும். தேடக்கிடையாமல் சிறுகும். இத்தனை காரணமானோர் பூரண அறிவுள்ள புண்ணியர்களேயாதலால் நண்பனே நல்லோரைப் போற்று. இதுவே உனக்கு ஆறாவது உபதேசம்.

 

 

 

புலை குறைகளென்பதே நீக்கு

 

சௌமியனே! சோம, சூர்ய, அக்கினி என்னும் முச்சுடர் வழியில் நீ மெச்சப்பிறந்தாய். ஜோதிகள் மூன்றுமே உனது ஜாதிக்கு மூலம், போற்றுந்தன்மையேயன்றி புலைத்தன்மை அங்கு உண்டா? புலை என்றால் என்ன? நீச்ச நடவடிக்கை. உனது இழிந்த நடவடிக்கையாவும் புலையே என்றாலும் மலமூத்திரங்களில் ஊறிய மாமிசத்தைப் புசித்தலே இங்கு புலையெனப்படும். மாமிசமென்பது மிருகங்கள் உண்ணும் உணவு, நாகரீகமாய் மனிதஜாதியைப் படைத்த கடிவுள் தாவர உணவை உண்ணவே மனிததேகத்தை அமைத்தார். மிருகங்களுக்கு வயிற்றில் பல்’ உண்டு மனிதருக்கில்லை. அதனால் கடிமூன்று தெய்வமுண்டு தேகவாழ்வும் தாழ்வும் அவைகளாலேயே என்பது எனது நம்பிக்கை. அத்தெய்வங்களைப் பூஜித்தால் மாத மூன்றுமழை பொழியும், வேளாண்மை செழிக்கும். பஞ்சம் நீங்கும். தொத்துவியாதிகள் சூரியனைக்கண்ட பனிபோல நீங்கும். அத்தெய்வங்களை இகழ்ந்தே இவ்வித க்ஷிணகதியை நாமடைந்தோம். நமது சாதாரண தர்மத்தைச்சாற்றும் வேதங்களில் இம்மூன்று தெய்வங்களை ஏற்றாத இடமேமில்லை. அந்த தெய்வங்கள் எவை? கேவலமாய் நினைக்க வேண்டாம். மறையவரும், பசுக்களும், மாதர்களுமே நமது மதத்தெய்வங்கள்! அந்தணர்கள் சொந்தத்தொழிலை மறந்து அநாச்சார வசமாயினர். மாதர்கள் ஆவிபிரிந்தாலும் பிரியாத தெய்வக்கற்பைச் சிந்தி விட்டனர். அந்தோ! கோமாதாவை இக்காலத்தில் கொலை செய்கின்றனர். எப்படி மழைபெய்யும்? தர்மதேவதை எவ்வாறு தங்கும்? பசு ஓர் தெய்வப்பிராணி. அதன் உடல் முழுதும் பரிசுத்தம். ஒவ்வோர் அங்கத்திலும் ஓயாமல் வாசஞ்செய்கிறார்கள். உனது முன்னோர்கள் பசுவைப்பூஜித்தே புகழடைந்தார்கள். பசுவதை செய்வது உனது குலத்திற்குப்பத்து மடங்கு பாவம். கட்டியும் ஏற்றத்தில் பூட்டியும் அதை அனேக இம்சை செய்யாதே. நீ இறந்து போகும்படியான கஷ்டசமயம் நேர்ந்தாலும் கோமாதாவை வருத்தாதே. அவள் கண்ணீர் விட்டால் நமது தேசமே கஷ்டமடையும். ஐரோப்பாவில் நேர்ந்த அநாகரீகயுத்தம் எதனால் தெரியுமா? நீயே மதித்துக் கொள் அப்பனே! தர்ம தேவதையாகிய பசுவை வருத்தாதே.உன்னாலானவரையில் அதைக்காப்பாற்று. இதுவே உனக்கு ஓன்பதாவது உத்தம உபதேசம்.

 

 

 

மரபொழுக்கம் பற்று”

 

மூவேந்தர் குலத்துதித்த ஆர்வலனே! இஃது உனக்கு

முக்கிய உபதேசம். முன் சொன்ன ஒன்பது உபதேசங்களும்

இதிலடங்கும். முதலில் உன்னை இன்னானென்று தெரிந்து கொள்.

நான் க்ஷத்ரியன் என சந்தேகமற நினை. சந்தேகம் இகபரம்

இரண்டையும் இல்லாமற்கெடுக்கும். உனது குலத்தை நீயோ

மறந்துவிட்டாய். உனது நாட்டிலுள்ள அண்டையயல் சகோதரர்கள்

உன்னை மோசஞ்செய்ய எண்ணுகிறார்கள். நீ ஒதுக்கிய குலாபிமானத்தை அவர்கள் கூட்டத்துடன் கொண்டாடுகிறார்கள்.

வாரிசில்லாத சொத்தாக அவர் மதித்துவிட்டனர். விழித்துக்கொள்.

மறந்ததை மறுபடியும் நினை. வீரநாதஞ்செய்! “நான் க்ஷத்ரியன்

நான் க்ஷத்ரியன்” என்று சொல். எப்போதும் மறவாதே. உனது

ஒப்பற்ற குலத்திற்குரிய முக்கிய ஒழுக்கங்கள் ஐந்து. அவை

வேதமோதல், வேள்வி செய்தல், வித்யாதானம். ஆயுதப்பயிற்சி

மரபையாளுதல் இவைகளேயாம்.

 

வேதமோதல்:

 

இஃது உனது குலத்தின் முதலொழுக்கம், ஒதுவது ஒழிந்தே இந்த ஊழலையடைந்தாய்,இக்காலப்படிப்பு எவ்வளவும் நம்மை.

மதவழியிற் செல்லவொட்டாது வேண்டியது மதப்படிப்பே.

 

 

வேள்வி செய்தல்:

 

ஐந்துவித வேள்விகளுண்டு தேவயக்னம், அக்கினி பூஜை, பிதுர்யக்கும் நமது முன்னோர்கட்கு சிரார்த்தம் செய்தல், மானுசயக்னம் – விருந்துசெய்தல், ஏழைகட்கு அன்னமிடுதல், பூதயங்க்னம் – காக்கை முதலிய பிராணிகளுக்குப் பலியிடுதல்,

 

வித்யாதானம்:

 

தற்போது வேண்டப்படுவது இதுவே. உன் ஜாதியில் தரித்திரம் குடி  கொண்டுவிட்டது. முக்கியமாய் ஏழைப்பிள்ளைகள் அநேகர் சகாயமில்லாமல் தவிக்கின்றனர். ஸ்ரீமான்கள் பீ.டி.லீ. செங்கல்வராய நாயகர், கோவிந்த நாயகர், கா.கோபால நாயகர், பு.தியாகராய நாயகர், திரு. எட்டியப்ப நாயகர். ரங்கூன், வெங்கிடசாமி நாயகர், காட்டுப்பாக்கம். ஏகபோக மிராசுதார் “சம்புகுலவள்ளல்” பா.ல.முருகேச நாயகர், நஞ்சையிடையார், சம்புகுலசேகரர் எஸ்.கந்தசாமி கண்டர் செ.இராசு நாயகர் முதலியவர்களைப்போல் இன்னும் அநேகர் முன்வரவேண்டுகிறோம்.

 

ஆயுதப்பயிற்சி:

 

சிலம்பவித்தை பழகுவதால் தேகபலமிகும்; அதனால் எக்காரியத்தையும் சாதிக்கத் தைரியம் உண்டாகும். உனது குலத்திற்கு முக்கியமாய் வேண்டுவது இதுவே.

 

மரபை ஆளுதல்:

 

ஒவ்வொரு கிராமமும் அதனதன் பெரியதனக்காரரால் ஆளப்படுகிறது. அநேககிராமங்களையாள்பவர் நாட்டார். அதற்குமேல் மகாநாட்டார். இவ்வித ஆட்சிமுறை ஆதிகாலந்தொட்டே உங்கள் கையில் இருந்து வருகிறது. உங்கள் முன்னோர்கள் ஏகசக்ராதிபதிகள் என்பதற்கு இதுவேஅறிகுறி. என்றாலும் சில்லரைக் குணங்களால் உங்கள் கட்டுப்பாடு சீர்குலைந்து விட்டது. கட்சி பேதம்கடுரமாய் விட்டது சீர்திருத்தம் அவசியம்.

 

சினேகிதனே! திரும்பவும் ஒருதரம் உன் ஜாதியைச் சிந்தித்து “நான் க்ஷத்ரியன்” என்று சொல், தூக்கத்திலிருந்து விழி, ஜாதிக்கு உழை, ஜாதி தர்மங்களைக் கைப்பற்று இதுவே உனக்கு முடிந்த உபதேசம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

உபதேச வாக்கியங்கள்

 

கல்வி என்பதே நமக்குக் கண்ணாகும்.

ஒற்றுமையே உயர்ந்த மருந்து.

வேற்றுமைப்புத்தி விநாசந்தரும்.

கூழாயினும் குளித்துக் குடியுங்கள்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டுங்கள்.

கள்ளைக்குடிப்பவன் கரும சண்டாளன்.

கடவுள் சிந்தனையைக் கைவிடாதேயுங்கள்.

கலகவழிகளைக் கைவிட்டு விடுங்கள்.

ஜாதியபிமானத்தை சர்வதா வேண்டுங்கள்.

அன்பே அருமைபந்து, அதிகாரமே ஆகாதசத்துரு.

வீண் விவகாரத்தை விலைக்கு வாங்காதேயுங்கள்.

கிராமத் தலைவருக்கு கீழ்ப்படிந்து நடவுங்கள்.

அன்னியமாதரை அன்னைபோல் எண்ணுங்கள்.

பருவமாதரைதெருவில் விடாதேயுங்கள்.

க்ஷத்ரியர் நாமேன்பதை சந்ததம் நினையுங்கள்.

பத்திரிகை வாசிப்பதால் பலனடைவீர்கள்.

 

 

 

ஒற்றுமைப்பாடல் விருத்தம்

கோவேந்தர் திறைசெலுத்தக் குறுநிலமன்

னவர்போற்றக் குமரி தெற்காய்

மாமேரு தெய்வமலை வடக்காக

நடுவிலங்கும் மகிமை நாட்டைத்

தேவேந்திர போகமுமோர் சிறிதெனவே

யாட்சிநலஞ் செலுத்தி யாண்ட

மூவேந்தர் தமிழகத்து முடிவேந்தர்

சந்ததிகாள் மொழியக் கேண்மின்.

 

கூற்றுநமக் கயலிருந்து வந்ததிலை.

சுயநலமாங் குணத்தி லோங்கும்

வேற்றுமையின் விரிவாலே மேன்மைகுணம்

அரசுரிமை வினைகள் யாவும்

தோற்றுபிறப் புரிமையெலாம் பறிபோக

அடிமைகளாய்த் துரைக ளாக

மேற்றிசையோர்க் கரசளித்து வறுமையெனும்

பிணிநலிப்ப மெலிவோ மந்தோ

 

வேற்றுமைக்கு விதையிட்ட நாள்தொடங்கி

விபரீதம் விருட்ச மாகி

சாற்றபுகழ் தமிழ்வேந்தர் வாழ்வழித்து

ஜாதிநலத் தன்னைப் போக்கி

காற்றடிக்கத் தாங்காத சிறுதுரும்பாய்

நமைச்செய்து கண்டோ ரேசச்

சோற்றுருளை வெல்லமாய் உயிர்பிழைக்கத்

தேசம்விட்டு தொலைத்த தந்தோ.

 

வாழ்வொழியப்பொறுத்தவர்கள் வார்த்தைசொலப்

பொறுக்காது வம்பு பேசி

சூழ்வுபெறு வக்கீல்கள் துரைத்தனத்தார்

சுகமடையத் தொலைத்த செல்வம்

ஏழ்கடலு நிரம்புமே மதுக்குடிக்கு

செலவிட்ட தெண்ணப் போமோ

வீழ்குழியிற் பந்தயமோ வேண்டாம்

வேண்டாம் வெறியை விலக்குவீரே.

 

ஒற்றுமையே ஓர்குலத்தை இழிவேனும்

உயர்வாக்கும் உடமை யாக்கும்

ஒற்றுமையே ஆங்கிலர்போல் உலகமெலாம்

ஆள்கின்ற உரிமை யாக்கும்

ஒற்றுமையே நினைதோறும் பகைவர்குழாம்

அஞ்சுகின்ற உணர்ச்சி யாக்கும்

ஒற்றுமையே பகைப்பிணிக்கு மருந்தாகும்.

தினந்தினமும் உளத்தில் வைம்மின்.

 

உன்னரிய மதிப்பிழந்தீர் ஒதலெனும்

பெரும்பேற்றை யுதறி விட்டீர்

மன்னுரிய வொழுக்கமெலாங் கைவிட்டீர்

பலரிகழும் வாழ்க்கை தொட்டீர்

சின்னநிலை தனிற்சிறுகி யேழைகளாய்ச்

சோற்றுக்கே தேசம் போவீர்

இன்னுமதி வரவிலையோ தூக்கமோ

ஒற்றுமைகொண் டெழுவீர் மன்னோ.

 

ஒற்றுமையாற் குடியோங்கும் குலமோங்கும்

நாடோங்கும் உலகும் ஓங்கும்

ஒற்றுமையாற் கலையோங்கும் நிலையோங்கும்

துலையோங்கும் உழவும் ஓங்கும்.

ஒற்றுமையால் நாற்குலமும் நால்நிலையும்

சிறப்பெய்தும் உயர்ந்த வீடும்.

ஒற்றுமையால் எனுமரிய வேதாந்த

உறுதியையும் உணர்வீர் மன்னோ, (7)

 

விவசாயச் சங்கத்தால் விதையுரங்கள்

விளைவதிக விருத்தி யாகும்.

தவமாகும் கடன்சங்கம் அதிகவட்டி

வாங்காமற் றடுத்துக் காக்கும்

நலமாகும் கிராமபஞ்சா யத்துசங்கங்

கோர்ட்டேறா நலத்தை நல்கும்

உவமானம் நமதுசங்கம் ஒற்றுமையாய்

உலகத்தோர் ஒது வாரே.

 

கற்றுலகில் நற்பேறு பெறவேண்டில்

சுயவரசுகாண வேண்டில்.

வெற்றியொடு மேனாட்டார் வியாபார்

நிலைகுலைய விருத்தி வேண்டில்

குற்றமிலா விவசாயம் கைத்தொழிலில்

நாடுவளம் கொழிக்கவேண்டில்

ஒற்றுமையே உயர்மருந்தாம் வேற்றுமையாம்.

உட்பிணியை ஒழிப்பீர் இன்றே

 

சங்கமே ஒற்றுமைக்குச் சாதனமாம்

நமது பெருஞ் சங்கத்தாலே

துங்கமுயர் கல்விவரும் ஒழுக்கமிகும்.

துரைநிலைமை களுவிற் றோன்றும்

மங்களமார் நாகரிக வாழ்க்கையுறும்.

பள்ளிச்சொல் மதிப்பிற் காணும்

சிங்கமெனப் பகையானை யழித்தமக

ரதவீரஞ் சேரு வீரே

 

 

ஒழுக்கம்

 

(காவடிச் சிந்து வர்ணமெட்டு)

 

காலையெழுந்து நீ நீரிலே முகங்

கழுவிக்குறியிட்டு சீரிலே தினங்

கடவுளைப்போற்றுவாய் நாரிலே பின்

 

கருத்தாயுன் குலத்தொழிலைத் திருத்தமுடன் வருத்தமறக்

காட்டிப் பிழைப்பா யிப்பாரிலே.

 

சுத்தமேசோறிடும் எண்ணுவாய் நித்தம்

துணியைக் கசக்கியே மண்ணுவாய் கம்பஞ்

சோறாயினுங் குளித்துண்ணுவாய் உன்

சுதர்களையும் மனைவியையும் நிதநிதமிப் படிசெய்ய

சொல்லியே நல்வழிப் பண்ணுவாய்

 

தந்தை தாயர்களைப் போற்றுவாய் – தில்

தர்ப்பணம் பிதிர்களுக் காற்றுவாய் ஜெபம்

சந்திவணக்கங்கள் சாற்றுவாய் உன்

ஜாதியிலே அவதரித்த மாதவர்கள் பாதமுடி

தன்னில் வைத்துமலர் தூற்றுவாய்.

 

நெஞ்சாரப்பொய் வழக்காடாதே வெல்ல

நீதிஸ்தலங்களுக் கோடாதே உலக

நிந்தை பழிகளைத் தேடாதே பண்டை

நெறிவழியே – சாதியிலே பெரியதனக் காரர்வழி

நின்றுபார் வீண்செலவு கூடாதே.

 

அர்த்தநாரீசனல் வாக்கியம் உங்கள்

அனைவருக்குமிக பாக்கியம் இதை

அறிந்து நடப்பதே சிலாக்கியம் அப்பா

அல்லாமல் பொல்லாங்கிற் செல்வார்கள் எல்லாரும்

அரிய நரகிற்கே யோக்கியம்.

 

 

 

பஞ்சமா பாதகங்களில் சிறந்த கள்சாராய முதலிய

  1. மதுக்குடியால் விளையுந் துன்பங்கள்

 

கலி விருத்தம்

 

காசழிக்கும் கருத்தை யழித்திடும்.

வேசைபோலும் விருப்பி விழுத்திடும்

தேசழித்து திறலு மழித்திடும்

மாகலாய மதுக்குடி யென்பரோ.

 

பெண்டுப்பிள்ளை பிறப்பென லின்றியே

சண்டையிட்டுத் தமர்களை நீக்கிடும்

அண்டையர்க ளருவருப் பாகவே

கண்டவாறு பிதற்றிடுங் கள்ளரோ.

 

ஜாதியில்லை தரும நெரியிலை

நீதியச்ச நினைப்பிலு மில்லையால்

பாதகங்கள் பழியெனி னாவலே

கோதினாய குடியருக் கென்பவே.

 

மட்டிலாது குடித்த மடையர்கள்

கட்டிலாது களித்துத் தெருவெலாம்

திட்டினோடு திரிவதுங் கண்டபின்

விட்டிடாத வியப்பும் வியப்பரோ.

 

பாக்கியத்துப் பரம்பரை சொத்தெலாம்.

போக்கியின்று புகுந்தவன் பிச்சையில்

நீக்கிமானம் நிறைந்த களவிலே

தாக்கிவீழுஞ் சரிதமு மிஞ்சுமே

 

அஞ்சுபாவ மடங்க விளைத்திடும்

நஞ்சமென்று நவின்ற மதுவெனும்

வஞ்சமுண்டு மயங்கு நரகமே

தஞ்சமென்ற தவத்தர் சூடியரே.

 

பெற்றபிள்ளையைப் பெண்டிரை தாலியை

விற்றுவிட்ட வெறியரு முண்டரோ

பற்றிலாத பைசாசு நிகழ்த்திடால்

குற்றமிக்க குடியர்கள் வாழ்க்கையே,

 

போதையேறி புரள்பவர் கண்டனம்

பாதையேறிப் படர்தலைப் பார்த்தனம்.

தீதுதெண்டஞ் சிறையைத் தெரிந்தனம்

வாதைபோக்கு மருந்திலை மாயமே

 

அன்னைதார முறையறி யாதவர்

பின்னைமக்களைப் பெண்டுக் கழைத்தவர்

என்னசோறு மலமு மிசைந்தவர்

இன்னபேரு மிருப்பது மின்றரோ.

 

கள்ளையுண்டு களித்த கயவர்கட்

கள்ளலொன்றை யமைத்தன னாண்டவன்

நொள்ளைபோல நொடியில் விழுத்திடுங்

கொள்ளைமூத்திரக் கும்பியும் நாமமே.

 

காதலிங்கு குடித்திடுங் கள்ளையே

காதமங்கு கதறிடக் காய்ச்சியே

தூதருண்ணெனச் சொல்லி யுலக்கையால்

சேதமின்றி சிதைப்பர்கள் மண்டையை.

 

பிரசங்கபூஷைணம் வித்வஸ்ரீ.பு.பா.இரத்தினசபாபதி நாயகர்

அவர்கள் இயற்றியது.

எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

 

ஒருபோதும் கள்ளதனைக் குடிக்க வேண்டாம்

உணவாகும் அவையெனவே நினைக்கவேண்டாம்

விருப்போடும் அதைக்கரத்தில் தொடவே வேண்டாம்

விடம்நிறைந்த பாம்பதுகாண் நெருங்கவேண்டாம்

மருள்சேர்ந்த மதுவகைகள் மாந்த வேண்டாம்

மரணநிலை தருமவற்றை மதிக்கவேண்டாம்

அருள்பெருகும் வள்ளுவனார் அருளும் போதம்

அருந்திடுநீ யெஞ்ஞான்றும் வாழு வாயே.

 

கள்ளுஒயின் சாராயம் பருக வேண்டாம்

காரீரல் மூளையையும் அழிக்கவேண்டாம்

கொள்ளைநோய்க் கிவைதகுமென் றெண்ணவேண்டாம்

குணமேது மில்லையதைக் கொள்ளவேண்டாம்

பிள்ளை பெண்டீர் பசித்தழநீ குடிக்கவேண்டாம்

பிரமனிடும் சாபமுன்னைப் பிடிக்கவேண்டாம்

அள்ளிதயிர் பகருங்கள் கீதை போதம்

அருந்திடுநீ யெஞ்ஞான்றும் வாழுவாயே.

 

கலைஞானம் குலைக்குமது கணிக்க வேண்டாம்

கனமழிக்கும் பாழ்மதுவைக் கருத வேண்டாம்

நிலைமாறப் புரியுமதை விரும்ப வேண்டாம்

நிந்தைதான் நிறைந்திடுமே நினையல் வேண்டாம்

கொலைமரத்தில் மாட்டுமதைக் கொள்ளவேண்டாம்

கொடுநரகில் அழுத்துமது ஐயோ! வேண்டாம்

அலகைதனை யழித்தோனின் கீதை போதம்

அருந்திடுநீ யெஞ்ஞான்றும் வாழு வாயே.

 

மதுவிலக்குச் சிந்து

 

பாழான கள்ளைக் குடிக்காதே

வாழ்வான வாழ்வைக் கெடுக்காதே

மேலான ஜாதிக் கடுக்காதே

கீழோரும் உன்னைக்கண்டு கேலிசெய்யலாச்சுதடா.

 

ஐயோ குடியினாலே ஆயிரமாயிரம்பேர்

கையோடெடுத்தகதை கண்டிருந்துங் கேட்டிருந்தும்  – பா

 

நாடுநகர்புகழ ராச்சியமாண்டவரும்

கேடுகுடிபடைத்துக் கெட்டதுண்டு பட்டதுண்டு – பா

 

ராமன் தனக்குச்செய்த நன்மையெல்லாமறந்து

கோமான் சுக்ரீவனிந்த குடியினாலே கொடியனானான் – பா

 

குடித்த வெறியினாலே கோரைகொண்டு யாதவர்கள்

அடித்து மடிந்தகதை அனைவரு மறிந்ததடா – பா

 

மதுக்குடம் தலைமேற்கொண்டு மறலிதிசைபோவேனென்று

வதிஷ்டர்செய்தநல்சபதவார்த்தையின் குறிப்பில்நின்று – பா

 

பெண்டு பிள்ளை நலிய பெற்றோர்மன மெலிய

கண்டோரெல்லாம் வலியக் காரியுமிழ ஐயோ – பா

 

மானமழிந்தபின்பு மாநிலத்திலிருந்தென்ன

போனநடைப்பிணமே பூமிக்கு நீபாரமடா – பா

 

தலைமுறை தலைமுறையாய்ச் சம்பாதித்த பொருள்கள்

மலைபோலிருந்ததெல்லாம் மாயமாகப் போச்சுதடா – பா

 

மிஞ்சுபலநாள்தொட்டு பஞ்சுபடாப்பாடுபட்டு

எஞ்சவைத்த தெல்லாந்தோற்று இஞ்சிதின்ற குரங்கானாய் – பா

 

மடையனாய் மிகக்குடித்து வருவார்க்கெல்லாங் கொடுத்து

விடியவே செலவையெண்ணி விசனமுற்றால்வருவதுண்டோ – பா

 

ஒன்றோ குடியருக்கு ஒதுந்துயரமடா

நன்றாயளவிடவே நாவு வேண்டும் ஆயிரமே – பா

 

 


மகாத்மா காந்தியடிகளின் தத்துவம்

 

 

 

மகாத்மா வணக்கம்

 

”அருணநெடும் ஒளிகதிர்கள் சென்றுலவும்

அவனியிலும் அதற்கப்பாலும்

மருள்நெறிசேர் சுயநலமா மாயவிருள்

இரிந்தோட மதிக்கவொண்ணாக்

கருணையெனும் அளிக்கதிர்கள் தமைவீசி

யிலகுமருட்காந்தி யேந்தல்

வருணமலர்த் திருவடிகள் மாநிலத்தில்

பல்லாண்டு மருவிவாழ்க”

 

காந்திபுராணம்

அவதார விசேஷம்

 

“மேல்நாட்டார் ஏசுவென வியன்துருக்கர்

நபியென்ன விளங்குமிந்த

மாநாட்டார் கண்ணபிரான் மலர்ந்தமொழிப்

படிமாலின் வரவேயென்று

தானாட்டப் பவுத்தரெலாந் தமதிரையாம்

புத்தரெனச் சாற்றாநிற்கும்

பூநாட்டுந் திருவடியான் புகழ்நாட்டு

வார்பிறப்பும் புனிதமாமே”

காந்திபுராணம்

 

 

 

தென்னாப்ரிகா அனுபவம்

 

பார்புகழும் பாரதப்போர் பழையநாட்டில்

பம்பாய்சேர் போர்பந்த ரமைச்சர் வாழ்வில்

சீர்புகழும் வணிகர்குலத் தவத்தால் நாங்கள்

செய்தபெரும் புண்ணியத்தா லுதித்த சீலன்

பேர்பரவும் ஒருகாந்திப் பேரா ரண்ணல்

பெற்றவன்னை சொல்லளித்த பெருமா னெங்கள்

நேர்பரவு சோதரர்சேர் திரான்ஸ்வால் நாட்டில்

வெள்ளையர் கொடுமைதனை வென்றோ னம்மா.

காந்திபுராணம்

அவரது தத்துவங்கள்

 

நேசமுட னிந்துமுகம் மதியர் சேர்ந்து

நிலைத்திடவும் பாஞ்சாலக் கொடுமை யென்னும்.

நாசமினி நிகழா வண்ணஞ் செங்கோல்

நடத்திடவுஞ் சத்தியப்போர் நடத்து வோனும்

சாசனமா யகிம்சையெனுந் தர்மந் தன்னைத்

தரணிபெறத் தந்தோனுந் தான் பிறந்த

தேசவிடு தலையெண்ணிச் சிறைசென் றோனும்

தீமையஞ்சு கின்றோனு மவனே யாமால்.

 

படிபுகழு மண்ணலவர் பெருமை யெல்லாம்.

பகர்வரிதே யவர்வழியைப் பற்றிச் சென்றால்

குடியொழியும் பரதேசிக் கோல நீங்கும்.

கொடுமையறுங் கோலுயர்ந்து குணங்கள் ஓங்கும்

மிடியகலுந் தேசிய வித்தை தோன்றும்

விவாதமிகு வீண்வழக்கில் வெறுப்புண்டாகும்.

விடியலுற்றுச் சுதந்தரமாம் பாது தோன்றி

வெய்யவிருட் குலங்களெலாம் விலகும் தானே.

 

வாழியவர் தத்துவங்கள் பலவாமேனும்

வறுமை யாக்கி

மதங்கெடுத்துத் தேசமெலாம்

யேழைகளைத் தினந்தினமுங்

கொல்லு மந்த

இழிகுடியாம் பழியொழிவே பெங்கள்நோக்கம்.

சூழியபல் லோர்குடியைக் கெடுத்துச் சில்லோர்

செல்வர்களாய் வாழவைக்கு

பாழடைந்து பரிசுத்த குடிசை வாழ்விழ்

மியந் திரங்கள்

பயன்கொழிக்குங் கதருடுத்தும் பண்பு மன்றே.

 

நமது கடமை

 

கோனாட்டை நாமுதித்த குருநாட்டைப்

பழம்புகழைக் கொண்ட நாட்டை

மேனாட்டு வணிகர்வா மிருந்தின்றே

மீட்டுவிட முயலல் வேண்டும்.

தேனாட்டக் காந்திபிரான் திருநாட்டப்

படிநடந்து நேசம் போற்றி

மானாட்டுப் பலபல வாணிபமகற்றி

மதம்போற்றி வாழ்ன் மாதோ

 

நாட்டார்கட்கொரு நல்லுரை

 

எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

 

தண்டமிழாஞ் செல்விநலஞ் சார்ந்த முன்னோர்

தனியரசி னினிமைதனைச் சாற்றக்கேண்மின்

மண்டலங்கள் கோட்டங்கள் மகாநா டன்றி

வளநாடா யிராச்சியத்தை வகுத்தார் வேறு

மண்டலவே ளதிகாரி நாட்டார் மற்றும்

மாண்பெரிய தனக்காரர் வழியிலாட்சி

கண்டனர்பஞ் சாயசபை கிராமந் தோறும்

கண்ணியமும் புண்ணியமும் கமழத்தானே.

 

நாட்டார்கள் ஆட்சிநலம் நவிலக் கேண்மின்

நதியேரி பாசனங்கள் நன்செய் புன்செய்

மாட்டாகும் வரிசேர்த்தல் வழக்கு தீர்த்தல்

வரும்பணத்தி லொருபங்கு மன்னர்க்காக்கல்.

கோட்டாகக் குளங்கோயில் மராமத் தாக்கல்

குடிதண்ணீர் வசதியெங்கும் கல்விச்சாலை

பட்டாருந் தேவர்களின் கோயில் பூஜை

பாதையோடு விளக்கமருள் பணியுந் தானே.

 

ஆங்கிலர்கள் வந்தபின்பே யரசு கெட்டீர்

அதிகார நிலைமையெலா மடையா விட்டீர்

பாங்குபெறு குடியுரிமை பறந்து போச்சு

பஞ்சாய முறையதுவும் பலியா தாச்சு

தாங்குமொரு ஜாதீய வழியில் நீங்கள்

தலைவர்களாய்க் குலாமாளுஞ் சரிதை பெற்றீர்

சங்குமது பழஞ்சரி தமில்வா றாக

விக்கால சரித்திரத்தை மியம்பு வோமே.

 

ஊர்பணத்தை வருவிப்பீர் கணக்கோ வையீர்

உற்றார்கள் உறவின்முறை பகைகளயச் செய்வீர்

பார்ப்பவர்கள் பரிகசிக்கக் கட்சி காண்பீர்

பட்சவாதத் தீர்ப்பால் பழியைச் சேர்ப்பீர்

தீர்ப்பென்றால் துரும்பென்றால் பயமே யில்லை

தினந்தினமு மித்தொழிலே மலிந்த தையோ

சேர்ப்பதுமைச் செத்தபின்னர் எரிவா யென்னுந்

 

தீநரகி லெமதூதர் செய்கை தானே.

படியாத பெரியதனக் காரர் கையில்

பணமிருந்தால் கணக்கறியப் படுவ தில்லை

மிடியாள ரெனிற்பணமே மீள்வ தில்லை

விரோதமே பெற்றபலன் கட்சி காணும்

குடியாளர் வரிநலத்துக் கன்றி வேறே

கொடுமைதனிற் செலவிட்டால் குடும்ப நாசம்

விடியாது மிடிமையிருள் நீங்க சங்க

மியம்பு முபதேசங்க ளேற்றா லுண்டே.

 

ஜாதீய சங்கங்க ளெங்கும் வேண்டும்

தாலூகா சங்கங்க டிணைதல் வேண்டும்

நீதிவழி யதிகாரம் நிலைத்தல் வேண்டும்

நீச்சநெறிக் குடிப்பழக்கம் ஒழிதல் வேண்டும்

ஒதுகல்விச் சாலைபல வோங்க வேண்டும்

உற்றவதிற் குலபோத முணர்த்த வேண்டும்.

போதுமள வாய்நிதியம் புணர்தல் வேண்டும்

புண்ணியமாம் பாவம்போம் புதுமை வாழ்வே.

 

சங்கமே கலியுகத்திற் றெய்வ மாகும்

சங்கமே யோர்குடிக்குச் சக்தி யாகும்

சங்கமே யிகபரமுந் தருவ தாகும்

சங்கமே முன்னோர்கள் தரும மாகும்

சங்கமே நமதரிய செல்வ மாகும்

சங்கமே வழிகாட்டுந் துணையு மாகும்.

சங்கமே யெல்லாமா மதனை நம்பி

சங்கத்திற் சேர்ந்துழைப்பீர் சபையி லின்றே.

 

 

 

விவசாய முறை

 

 

 

உழவின் முக்கியம்

பூமிக்கு உழவு முக்கியமென்பதைப்பற்றி முன்னோர்கள்

சொல்லி இருக்கும் பழமொழிகளாவன.

 

உழவு நடப்பில்லாத நிலமும்

மிளகு நடப்பில்லாத தகரியும் வழவழ.

 

உழுதவன் காட்டைப்பார்.

மேய்த்தவன் மாட்டைப்பார்.

 

வெண்கார்புழுதிக்குவிளையாத பயிர்வுளதோ.

உழுது அலர்ந்தது பழுதாகாது.

 

வெண்ணைபோல் உழவும்

குண்ணு (மலை) போல் விளையும்.

 

உழ அறஉழுதால் விளைவிறவிளையும்.

 

ஓடி ஓடி நூறுகுழி உழுவதைப்பார்க்கிலும்

அமர்ந்து அமர்ந்து ஆறுகுழி உழு.

 

ஆற்றப்புழுதி ஈரந்தாங்கும்.

 

பசு உரத்திலும் பழம்புழுதிநல்லது.

 

அகல உழுவதை ஆழ உழு.

 

மேலுக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.

 

ஈர நிலத்தில் ஏர்பிடி.

 

உழவு உழுதுகாய்ந்தால் வித்திரட்டிகாணும்.

 

கார்த்திகைமாதத்தில் உழுதால் கடுகுமிளகுங் காணாது.

 

ஏழு உழவு உழுதால் எருப்போடவேண்டாம்.

 

உரத்தைத்தள்ளும் உழவு

 

உழவிலும்பகை எருவிலும் தீராது.

 

ஜாண் உழவு முழஎருவுக்குச்சமம்.

 

ஆடுவைத்தலிலும் ஆழஉழுதலேநலம்.

 

தாழஉழுதால் தளிரோடும்.

 

தை உழவு ஐயாட்டுக்கிடை.

 

தைஉழவோ நெய்உழவோ.

 

சித்திரைமாதப்புழுதிபத்தரை மாத்துத்தங்கம்.

 

கழுதை உழுது கம்புவிளையுமா?

 

எட்டுஉழவு உழுதாலும் கட்டைக்குத்தாகாது

 

கையைப்பார்த்து கலப்பையை வெட்டு

 

காலைப்பார்த்து மேழியை வெட்டு

 

எடுப்புண்ட கலப்பை இருந்துண்டுழாது.

 

புல்லறஉழுதால் நெல்றைவிளையும்.

 

நஞ்சைக்கு ஏழுழவு புஞ்சைக்குநாலுழவு

 

ஏழுமழுப்பு உழுதபுலமும்

ஏழுஉலர்த்து உலர்த்தினவிரையும்

எழுபதுநாள் காய்ச்சல் தாங்கும்.

 

முன்னேர்மாட்டை முகத்தில் அடியாதே

விவசாயத்தின் பெருமை

 

“விளைகழணி பூலோக முழுதுமேரி

விரைதிரைநீர் கடல்வருணன் கம்புகட்டி

கிளர்கலப்பை தருசுமையாள் சுவேதராமன்

கிடாமறலி வசத்தீசன் வசத்தாலொன்றிங்

களவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப்பாமல்

அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா

ஒளிபெருகு கொழுமிகுதி எறும்பி றான

உயிரனைத்தும் தேவருமு ண்டுவப்ப தன்றே”.

சேக்கிழார் சுவாமிகள்.

 


பஞ்சாயத்தார் அறிந்துகொள்ள வேண்டிய மநுநீதிகண்ட வாசகம்

 

மநுநீதிகண்ட வாசகம்

 

தேமேவு தமிழகத்தில் மலராள்போற்றுந்

திருவாரூரெனு நகரைச் செங்கோலாட்சி

மாமேவு மனுமரபிற் பிறந்துசெய்த

மன்னவன்பேர் மநுநீதிச் சோழனென்பார்

தீமேவு முருவத்தார் தியாகராஜர்

திருவருளால் ஓர்பதல்வன் பிறந்துவேந்தர்

பாமேவு மரங்கள்பல பயின்றீரெட்டு

பருவத்தான வீதியுலா பரிந்தானம்மா.

மன்பருவத் தோழருடன் மணித்தேரோட்டி

மாநகரில் வீதியுலா வருதல்தேர்ந்த

நன்பருவ மாதர்களும் புரத்தில்வாழும்

நாற்குடியும் திருவீதி குழுமவேந்தன்

தன்பருவ மறிந்தருளப் பசுவாயீசன்

தரும்மொரு கன்றாகக் கன்றுமாங்கே

முன்பெவரு மறியாமல் சிறுவன் தேர்க்கால்

பட்டிறக்கப் பசுக்கதறி யலறுமாலோ.

 

முறையோவென் றலறியந்த தெய்வச்சேதா

முன்னறியா வாராய்ச்சி மணியைக்கொம்பால்

இறையறிய வடித்தந்த சத்தங்கேட்ட

யாவர்களும் துடிதுடித்தா ரரசனதேறான்

மறையவரா லுண்மையுணர்ந் தவ்வாரேதன்

மைந்தனைத் தேரோட்டி மநுநீதிகாண

நிறைமதிய வமைச்சர்கட்கே ஆணைநேர

நெடுமரம்போல் வீழ்ந்தவரு மடிந்தாரன்றே.

ஒருமைந்தன் குலத்துரியா னென்பதோர்ந்தும் .

உற்றமநு நீதிகண்ட உண்மைவேந்தன்

தருமந்தன் வழிச்செல்ல ரதத்தையோட்டித்

தானேதன் மதலையுயிர் தவிர்த்த காலை

தெருமன்றந் தனிலகில தேவரோடும்

தியாகேசன் விடைமீது தோன்றிக்கன்றை

யருமந்த பாலகனை யமைச்சர் தம்மை

யாவிபெறச் செய்தரசர்க் கருளினாரே.

 

சோழமண்டலத்திலே திருவாரூரின் கணிருந்து அரசுபுரிந்து வந்த மதுநீதி சோழரென்பவர், மன்னுயிரைத் தன்னுயிர் போலெண்ணிச் செங்கோனடாத்தி வருநாளில், அவருக்கு ஒரு புத்திரன் பலகலைகளும் பயின்று வாழுநாளில், ஒரு நாள், இராஜகுமாரர்கள் புடைசூழ்ந்துவரத் தேரேறி வீதியிற் செல்லுகையில், ஒருபசுக்கன்று துள்ளிக்கொண்டுபோய் அத்தேர் காலினடியிலகப்பட்டு இறந்தது. அதுகண்ட தாய்ப்பசு கதறிச்சோர்ந்து, நடுங்கி விழுந்தமை. கண்ட சோழபுத்திரன் மனத்துயரங்கொண்டு அறிவழிந்து தேரினின்றுமிழிந்து, அலறுகின்ற தாய்ப் பசுவைப் பார்த்து உயிர் பதைத்து, என்னால் என்தந்தையாருக்கு இப்பெரும் பழிவந்து நேர்ந்ததே, இதற்கென் செய்வேன் இப்பாவத்துக்குப் பிராயச்சித்தமுளதாயின் என் தந்தையார் அறியுமுன்னமே இதற்கோர் பரிகாரஞ் செய்துகொள்ளல். வேண்டுமென்று சிந்தித்து அந்தணரிடத்தே சென்றான். கன்றிழந்த பசுவோ, அத்துயரைச் சமிக்கலாற்றாது. பெருமூச்செறிந்து கண்ணீர் வாரச்சென்று, இராஜமாளிகைவாயிலிற் கட்டிய ஆராய்ச்சி மணியைத் தன்கொம்பினால் அடித்தது.

 

அதுகேட்ட மநுநீதிகண்ட சோழர், சிங்காசனத்தினின்று மிறங்கி விரைந்துசென்று, வருந்தி திற்கும் பசுவைநோக்கி மந்திரிகளால் நிகழ்ந்த செய்தியை அறிந்து, பெருந்துயரங் கொண்டேங்கி, என் செங்கோன் முறைமை நன்று நன்று, இதுயாது செய்தாற்றீரும் என்றுகூறி; கன்றிழந்த பசுவின் முகத்தைப் பார்த்துச் சோர்ந்து நின்றனர். அமைச்சர்கள் அதுகண்டு, அச்சோழர் பெருமான் பாதங்களை வணங்கிநின்று. மஹாராஜாவே உம்முடைய குமாரனைக் கொண்டு கோவதைக்குத் தருமநூல்களில் விதிக்கப்பட்ட பிராயச்சித்தத்தைச் செய்விப்பதே தருமம் என்றார்கள். அதற்கு மநுநீதி சோழர், நீங்கள் கூறும் பிராயச்சித்தம் கன்றையிழந்தலறும் இப்பசுவின் நோய்க்கு மருந்தாமா? நான் ஏகபுத்திரனை இழக்கின்றேன் என்று கருதி, நீங்கள் சொல்லிய இவ்வார்த்தைக் கிணங்கினால் நடுவுநிலைமை தவறாதா? ஆதலால், இப்பசுத் தன் கன்றையிழந்து துயருறு தல்போல், நானும் என் புத்திரனையிழந்து வருந்துதலே நீதி என்று கூறி, தம்முடைய புதல்வனை அங்கு வர வழைத்து, ஒரு மந்திரியைப் பார்த்து, நீ இப்பிள்ளையை வீதியிலே தேர்க்காலின் கீழே கிடத்தித் தேரை நடத்தக்கடவாய் என்று கட்டளையிட, அம்மந்திரி அவ்வாறு செய்யாது தன்னுயிரை விடுத்தான். அதுகண்ட மநுநீதி சோழர், தம் புத்திரனைத் தாமே கொண்டு வீதியிற்சென்று தம்முடைய குலத்துக்கு ஏகபுத்திரன் என்பதையுஞ் சிந்தியாது. அவனைக்கீழே கிடத்தி அவன் மார்பில் உருளையழுந்தும்படி தேரை நடத்தினார். இவ்வரிய செய்கையைக்கண்டு, தேவர்கள்பூமழை பொழிந்தனர். சர்வலோகேஸ்வரராகிய தியாகேசர் இடபாரூடராய், சிவகணங்கள் சூழ எழுந்தருளி வந்துமுன்னின்றார். மதுநீதி சோழரும் எம்பெருமானைத் தரிசித்து வணங்கி பேரானந்தப் பெருங்கடலின் மூழ்கினார். அப்போதே பசுக்கன்றும், இராஜகுமாரனும், மந்திரியும் உயிர் பெற்றெழுந்தனர். அதுகண்ட சோழர் பரவசராய் நின்றனர். அவர், தமது பாதத்தில் வந்து வணங்கிய புத்திரனைத் தழுவி மனமகிழ்ந்தார். பசு தன் கன்றைக்கண்டு பாலைப்பொழிந்து துயர் நீங்கிற்று. தியாகேசப் பெருமான் மநுநீதி சோழருக்குத் திருவருள் சுரந்து மறைந்தருளினார்.

 

விவகாரங்களைப்பேசி முடிவு செய்ய பொதுஜனப் பிரிதிநிதிகளாக ஏற்பட்ட பஞ்சாயத்தார் மேற்கண்ட சரித்திரத்தின் உண்மையை யறிந்து கொண்டு தன்பந்துக்கள் உறவினரென்று கருதாமல் நீதிவழுவாத வகை நியாயம் செலுத்தல் வேண்டும். அவ்வாறின்றி தயவு தாட்சண்யம் பணம் முதலிய சுயநல குணத்தால் தீர்ப்பு சொல்வார்களானால் அவர்கள் குடும்பம் ஏழேழு தலைமுறையும் படும்பாட்டை பின்வரும் ஆதாரங்களாலறியவும்.

 

வேதாளஞ்சேருமே வெள்ளெருக்குபூக்குமே

பாதாள மூலிபடருமே-மூதேவி

சென்றிருந்துவாழ்வளே சேடன்குடி புகுமே

மன்னோரஞ் சொன்னார் மனை

என்ற ஒளவைபிராட்டியார் வாக்கைநன்கு ஆழ்ந்து யோசியுங்கள். நாட்டார்கட்கோர் நல்லுரை என்ற பாடலிலும் வெளியிட்டுள்ளவற்றை கவனியுங்கள்.

 

ஆரம்பூண்ட மணிமார்பா அயோத்திக்கரசே !அண்ணாகேள்

ஈரமிருக்கமரமிருக்க யிலைகளுதிர்ந்த வாறேது?

வாரங்கொண்டு வழக்குரைத்து மண்மேல்நின்று வலிபேசி

ஓரஞ்சொன்னகுடியதுபோ லுதிர்ந்துகிடக்குந் தம்பியரே.

என ஸ்ரீராமர் லட்சுமணருக்குச் சொன்னதாய் விவேகசிந்தாமணியில் கூறுவதை சிந்தனை செய்யுங்கள்.

 

நாரிகள் வழக்கதாகி நடுவறிந் துரைத்தார்சுத்தர்

ஏரிபோற்பெருகி மண்மேலிருகணும், விளங்கிவாழ்வார்

ஓரமேசொல்வாராகில் ஓங்கிய கிளையுமாண்டு

தீரவேகண்கள் ரெண்டும் தெரியாமல் மாழ்குவாரே.

 

என விவேகசிந்தாமணியில் கூறுவதுபோல் தற்காலத்திலும் பிறர் கஷ்டப்படுவதைக் காணலாம். ஆகையால் பஞ்சாயத்து சபையாகிய தருமசபையில் அங்கம் வகிப்போர் அதிவீர ராமபாண்டியர் வெற்றிவேற்கையில் கூறும் அடியிற்கண்ட தரும நியாயங்களை கவனித்தல் வேண்டும்.

 

வாய்ப்பறையாகவும் நாக்கடிப்பாகவும்

சாற்றுவதென்றைப் போற்றிக்கேண்மின்

பொய்யுடையொருவன் சொல்வன்மையினால்

மெய்போலும்மே மெய்போலும்மே.

மெய்யுடையொருவன் சொன்மாட்டமையால்

பொய்போலும்மே பொய்போலும்மே,

ஆகையால்,

இருவர்தஞ் சொல்லையுமெழுதரம் கேட்டே

இருவரும்பொருந்த வுரையானாயின்

மனுநெறி முறையின் வழக்கிழந்தவர்தாம்

மனமுறமறுகிநின் றழுதகண்ணீர்

முறையுறத்தேவர் மூவர்காக்கினும்

வழிவழியீர்வதோர் வாளாகும்மே.

 

அரசனாயினும், அரசாங்க அதிகாரத்தை மேற்கொண்ட உத்தியோக ஸ்தனாயினும், வாதிப் பிரதிவாதிகள் சொல்லும் வார்த்தைகளைப் பலமுறை கேட்டு நீதிப்பிரகாரம் தீர்ப்பு சொல்லானாயின் வழக்கிழந்தவர்கள் அழுதகண்ணீரே வாளாகநின்று அவன் வம்சத்தை (வழிவழியாக) அறுத்துவிடும்.

 

பூதலத்தின்மானிடராய்ப் பிறப்பதரிதெனப்புகல்வர்

பிறந்தோர் தாமும்

ஆதிமறை நூலின்முறை யருள்கீர்த்தியாந்தலங்க

என்பாய்ச்சென்று

நீதிவழுவாதவகை வழக்குரைத்து நல்லோரை

நேசங்கொண்டு

காதவழிப்பேரில்லார் கழுதையெனப்பாரிலுள்ளோர்

கருதுவாரே.

என்ற பெரியோர் வாக்கையும் அறிந்து நடந்து கொள்வார்களாக.

 

 

பகீரதன் குலாபிமானம் விருத்தம்

 

உலகெலாம் புகழ்ச்செங்கோ லோச்சிய மனுக்குலத்தில்

இலகிய பகீரதப்பே ரிறையவன் தனது முன்னோர்

.

நலமுற மலரோன்சேவை நாடியே வானகங்கை

நிலமுறப் புலனடக்கி நெடும்பகல் தவஞ்செய்தானே.

 

நான்முகப் புத்தேள் தோன்றி நவிலுவானப்பா நீத்தம்

வான்முகங் கிளம்பி மண்ணில் வரினதை யடக்குமாற்றல்

தேன்முகக் கடுக்கை வேணி சிவபிராற் கன்றியில்லை

கான்முக மிருந்துசெய்வாய் கடுந்தவமென்றுபோனான்.

 

அரசனும் பத்தைஞ்ஞூறு ஆண்டு பின்னரனை நோக்கி

திரமுடன்தவத்தைச்செய்தான் சிவபிரான் மகிழ்ந்துதோன்றி

தரைவரு நீத்தந்தன்னைச் சடாபாரத்துளியாயேற்று

விரைவுடன் கைலை செல்ல வேந்தனும் துயரின்மூழ்கி

 

பல்லாண்டு மீண்டும் நோற்று பனிமதிச்சடையினானை

நில்லாத கங்கை தன்னை நிலமதிலிறக்க நீத்தம்

சல்லாபமுனிவன் சன்னுதவக்குடில் புகவேவாரி

யெல்லாந்தன்னகட்டிலாக்கி யிருந்தவத்திருந்தான்மன்னோ

 

வெங்கதிர் குலத்து மன்னன் விசனமுற்ற வனைவேண்ட

மங்களமுனிவன் கண்டு மகிழ்ந்து கட்டுறு நீத்தத்தை

தங்கிய செவியாய்ப்போக்கிச் சானவி நாமஞ்சூட்ட

கங்கையுந் தமிழுக்காசான் கமண்டலம் புகுந்ததாலே.

 

குறுமுனியருளைவேண்டி கொடுந்தவம் நோற்ற பின்னர்

இறுதியாய் கங்கை நீத்தம் பகீரதன்முன்னோரென்பிற்

பொறுமையிற் பாயவாழ்த்திப் புகுந்தனர் துறக்கமென்ப

தறுகணான் குலத்தின் மானம் தரையெலாம்புகழுமின்றே

 

எல்லையிலிடையூறெய்தி யிருங்குலமான மேற்கொண்

டொல்லையிற்றவத்தா லென்னமுழுஐயங்கொண்டவள்ளல்

தொல்லருங்குலத்தீர் நீவிர்சோர்விலாமுயற்சிமேற்கொண்

டல்லுறமரபிற்காக்க மளிக்கவே முயல்வீர் மன்னோ.

 

கண்ணியபிதிரர் வாழக் கருதருந்தவமேற் கொண்டே

எண்ணிய முடித்தசெம்ம லிறைபகீரதனைப்போலே

புண்ணியங்குலமானத்திற் புரிந்தவன் விரிந்த கீர்த்தி

நண்ணிய கோபாலப்பேர் நாயகன் இற்றைநாளே.

 

அன்னவன் திருமால் போற்றியருந்தவம் புரிந்த நன்மை

யென்னவேயுல குதித்தோனெமர்க்குறை தவிர்க்குமாற்றல்

முன்னவன் பலபத்திரப்பேர் முடிதவன் வானிற்சென்ற

பின்னவனெறியைப்பற்றி போற்றுவானொருவன்றானே.

 

சுப்பிரமணிப்பேரோன் சுகமெலாம் குலத்துக்காக

அர்ப்பணஞ்செய்த சீரானன்று தொட்டின்றுகாறும்

ஒப்பறுகுலத்தொண்டொன்றே யுறுபலனென்னக்கொண்டான்

தப்பறஜாதித்தொண்டில் தலைப்பட வேண்டுவோமே.

 

“ஒருகோடி நட்சத்திரங்களுடனடுவே

யுதித்த சந்ரோதயம்போ

லுபயகுலசுத்தனாம் பகீரதன்போலவே

வொருபிள்ளை போதுமவனால்

மரபெலாநன்மையையடையு மென்பார்கள் காண்

மணவாள நாராயணன்

மனதிலுரையலர்மேலு மங்கைமணவாளனே

வரதவேங்கடராயனே:” திருவேங்கட. சதகம்,

 

“நன்றிதரும் பிள்ளையொன்று பெற்றாலுங்

குலமுழுதும் நன்மையுண்டாம்

அன்றியறிவில்லாத பிள்ளையொரு

நூறுபெற்று மாவதுண்டோ

மன்றிநடம்புரிவாரே தண்டலையாரே சொன்னேன்

வருடந்தோறும்

பன்றிபலவீன்றுமென்ன குஞ்சரமொன்

றீந்ததனாற் பலனுண்டாமே:”

-தண்டலையார்சதகம்.

 

”குடிசெய்வலென்னு மொருவர்க்குத்தெய்வ

மடிதற்றுத்தான் முந்துறும்”.

  • குறள்.

”தன்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு

தருமங்கள் செய்துவரலும்”

– அரப்பளீசுர சதகம்.

 

“நிலமதிற்குணவான்றோன்றி நீள்குடித்தனரும் வாழ்க

தலமெலாம்வாசந்தோன்றும் சந்தனமரத்திற்கொப்பாம்

நலமிலாக்கயவன்றோன்றி னன்குடித்தேசம்பாழாம்

குலமெலாம்பழுது செய்யுங் கோடரிக்காம்புநேராம்’

  • விவேகசிந்தாமணி

 

 

 

கம்பராமாயணம் திருவடி தொழுத படலம்

‘உன்குலமுன்னதாக்கி யுயர்புகழ்க் கொருத்தியாய

தன்குலந் தன்னதாக்கித் தன்னையுந்தனிமை செய்தான்

வன்குலக் கூற்றுக்கீந்தவ் வானவர் குலத்தைவாழ்வித்

தென்குல மெனக்குத் தந்தாளென்னினிச் செய்வதெம்மோய்”

 

அசோகவனத்திலே கற்புடைய தெய்வமாய் விளங்கும் சீதாபிராட்டியை நேரிற்கண்டு திரும்பிவந்த அநுமான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் திருவடியைத் தொழுது கூறும் மேற்படி கவியில் சீதையின் கற்பினால் அவள் பிறந்த குலத்திற்கும். ஸ்ரீராமனது குலத்திற்கும் பெரும்புகழை உண்டாக்கி விட்டாளெனவும், தன்னைப்பிரித்து காவலில் வைத்திருக்கும் இராவணனது குலத்தை எமபட்டணம் சேர்க்கப்போகிறாளெனவும், அதனால் வானவர் குலமெல்லாம் வாழப்போகிற தெனவும், இவை எல்லாவற்றையும் விட நான் நேரிற்கண்டு தரிசித்து தங்கள் சமூகத்தில் திரும்பிவந்து சீதையின் க்ஷேமத்தை சொல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் அநுமானது குலத்திற்கும் பெரும்புகழ் அளித்துவிட்டாளெனவும் கூறும் கம்பர் வாக்கிலும் குலநலமே பெரிதென வற்புறுத்துகின்றார். ஆகையால் ஒவ்வொருவரும் குலாபிமானிகளாய் வாழவேண்டுமென்பது உறுதிப்படுகிறது.

 

கோபாலவள்ளல் புகழ்ப்பாமாலை

 

 

 

துளுவவேளாளர் ஐஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதரும் திருமழிசை வீர சிம்மாசன மடம் ஸ்ரீமத் சாந்தலிங்க ஸ்வாமிகளாதீனம் வித்வான் ஸ்ரீலஸ்ரீ. சிவப்பிரகாச அய்யரவர்களியற்றியது.

 

நிலம்பூத்த நறுங்கடுக்கை நிறைபூத்த

சடைப்பெருமா னிலவப்பூத்த

நலம்பூத்த வெண்ணான்கு நற்றளிபூத்

தியற்றொண்டை நாட்டிற்பூத்த

வலம்பூத்த வளைநறுங்குவளைபூத்த

மருதவயல் வளையப் பூத்த

குலம்பூத்த பொழிற்காட்டாங் குளம்பூத்த

கற்பகம்போற் குலவிவாழ்வோன்.

 

சீரோங்கு நால்வேதத் திறமோங்கும்

புயன்வேள்வித்தீக்க ணங்கத்

தேரோங்கு மாங்கிரஸி னியலோங்கு

மும்மனரு ளேற்ற மோங்குந்

தாரோங்கு வன்யகுல க்ஷத்ரியர்

தம்வமிசோத் தார ணண்சொற்

பாரோங்குமெழிற்சம்புப் பண்ணவன்கோத்

திரத்தோங்கு பண்பின் மிக்கோன்.

 

பண்ணாடு மதிற்கச்சிப் பதிநாடு வரநதிசொற்

பரவுஞ் செந்தீக்

கண்ணாடு வலப்பரி நற்கவினாடு

மனவேகக்கன கநற்றேர்

மண்ணாடு மதக்களிறு மனனாடு

மும்முரசும்மதியம் பொன்வில்

விண்ணாடுகரருதவ விளங்குறுத சாங்கமென

விருப்பிற் கொண்டோன்.

 

தோன்றிடினற் புகழோடு தோன்றுகெனச்

சொற்றதமிழ்ச் சுருதிக்கேற்ப

வான்றிகழுந் திருவொற்றி வளநகரி ராயபுரம்

வண்கொ றுக்கை

 

யான்றதிரு மயிலைவணாதுலர்ச்சி

றா அர்பயிலவாங்கி லத்தோ

டேன்றபசுந் தமிழுமுணர்த் தினியகலைக்

கழகமமைத் திலங்கிநின்றோன்.

வள்ளையார் தடமல்கு வளச்சென்னை மாநகருள்

வயங்கு நாட்டுப்

பிள்ளையார் திருக்கோயிற் றருமபரிபாலனத்திற்

பெட்பு பூண்டோன்

கள்ளையார் பசுந்துளவக் கண்ணிபுனைந்

தஞ்சிறையக் கழலுனாய

புள்ளையார் வத்திவரும் பெருமான்ற

னடிபரவிப் போற்று நேயன்.

இருவேளு மியற்கையதிவ் வுலகென்ற

பொதுமறைவெந் நிடவே கஞ்சத்

திருமாதுங் கலைமாதுஞ் செறிதரப்பெற்

றாங்கிலேயத்திறனுமன்னி

மருவார்தண் பொழிற் சென்னை வயின்பேசிங்

பாக்டரியை வயங்க நாட்டி

யொருவாது பலகுடும்பமுச்சீவ னம்பெறவீண்

டுதவ நல்லோன்.

 

பி.டி.லீ. செங்கல்வராய நாயகர் தருமம்

 

எவ்வுதவி பெரும்பயனை யிகபரத்து மளிக்குமென்று

யெண்ணிச்செய்த

லவ்வுதவி செங்கல்வராயனெனு மப்பனன்றி

யாரே செய்தார்

துவ்வுமுண வேழைகட்குத் தொழிற்சாலை சிறுவர்கட்கு

துன்ப நோய்க்கு

செவ்வியவைத் தியசாலை நாதரிலாச் சிறுவர்கட்கு

செவிலிச் சாலை.

ஓங்குபுகழ் வன்னிகுலத் துதித்தநன்றி மறவாம

லுதவி யொன்றைத்

தேங்கியவம் மரபுதித்த சிறுவர்பலர் பிற்காலச்

செல்வ மாக

நீங்குதுயர்க் கல்விக்கு மதிதோறும் நூறுபணம்

நிலைக்கத் தந்த

தாங்கவன்றன் குலமானம் உலகறிந்த தனைவருக்கு

முறுதி யாமே.

 

இன்னனபல் தருமமெலாம் காலத்திற் கேற்றபடி

யியற்றி யப்பன்

பொன்னிலக்க மாறுகொடுத்த தப்பனாய்ப் புரவலனாய்

போத நாதாய்

அன்னையாய் உலகத்தி னனுபவத்தில் வந்தவித

மறியார் யாரே

மன்னுபுகழ் வள்ளலையே பின்பற்றிச் செல்வரெலாம்

மதித்தல் நன்றே

 

1870 வருஷத்தில் சென்னைமாநகரில் சூளையம்பதியில் ஜெனரல் காலின்ஸ்  ரோட்டில் வன்னிகுல க்ஷத்ரிய மரபில் மகாப்பிரபுவாய் வாழ்ந்திருந்த பி.டி.லீ.செங்கல்வராய நாயகரவர்கள் தனக்கிருந்த ரொக்கம், பூஸ்திதி, ஆபரணம், மரவகைசாமான். வண்டிகுதிரை உள்பட அவரது கணக்குப்படி 5-லட்சத்து 69-ஆயிரத்து 547-ரூபாயும்,தர்மத்திற்கென உயில் எழுதி வைத்திருக்கிறார். அதன் வட்டியிலிருந்தும், குடிக்கூலி வரும்படியிலிருந்தும், இதரவரும்படி களிலிருந்தும் கிடைக்கும் துகையில் தன் குடும்பத்தவர்களுக்கும், பந்துக்களுக்கும் (பென்ஷைன்கள்)  உபகாரதனம் மாதம் மாதம் கொடுத்துவரும்படி எழுதியிருக்கிறார்.

 

வன்னிய அன்னிய ஏழைப்பிள்ளைகளாக 200 இந்து பிள்ளைகளுக்கு அன்னமளித்து ஆடையாதி உபசரணைகள் செய்து ஆரம்பக்கல்வி கைத்தொழில் கற்றுக்கொடுக்கும் அனாதைப்பிள்ளைகள் ஆஸ்ரமம் ஏற்படுத்தியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஆஸ்பத்திரி தர்மம், உவ்வேரி சத்திரத்தில் சமாராதனை நடத்துவது, அங்கு அவரது சொந்த மரபினரது. பிள்ளைகள் வாசிக்க கல்விச்சாலையாவும் ஏற்படுத்தியிருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு பிரதிதினமும் லைசாற்றும் புஷ்ப கைங்கர்யமும் நடத்திவர தனது பங்களாவில் நந்தவன மமைத்து ஏற்பாடு செய்திருக்கிறார்.

 

இவ்வித தருமம் தவிர நம்முடைய வன்னிகுலப் பிள்ளைகள் கல்விக்கென மாதம் 1-க்கு ரூபாய் 100. நூறுசெலவு செய்ய வேண்டுமென உயிலில் எழுதியிருக்கிறார். இத்தருமங்களெல்லாம். சென்னை பச்சையப்பன் தருமபரி பாலனசபையார் ஆதரவில் நம்மவர்  ஒருவரை டிரஸ்டியாக சேர்த்துக்கொண்டு நடந்தேறி வருகிறது. தற்போது நமது குலத்தில் உள்ள பி.ஏ.பட்டதாரிகளில் நாயகரவர்கள் உதவியால் கல்வி பெற்றவர்களெனச் சொல்லலாம். சென்னையிலும், வெளியூர்களிலும் இவரைப்போல் செல்வம் படைத்த ஸ்ரீமான்கள் பலரிருந்தபோதிலும் அவர்கள் பொருளெல்லாம். ஊர் பேரின்றி கோர்ட்டு கச்சேரிகளிலும் இதர வீண் செலவுகளிலும் அழிந்து போனதை நாம் பிரத்யட்சமாய்ப் பார்த்து வருகிறோம். இவரது சொத்தாகிய  ஆறு லட்சமும் மூன்றுபங்கு அதிக விரத்தியாகி செத்தும் சாகாதவர் போன்ற பெரும் புகழை நிலைநாட்டி வருகிறது. ஆகையால் மற்ற செல்வவான்களும் அவர் வழியையே பின்பற்ற வேண்டும்.

 

இவரது தரும சாசனமாகிய உயிலைப் பார்வையிட்ட நஞ்சையிடையார் சம்புகுலசேகரர் “ச.கந்தசாமி கண்டரவர்கள் தனது சொத்து சுமார் பத்து லட்சம் ரூபாய் பூஸ்திதிகளில் கிடைக்கும் வரும்படியைக் கொண்டு, கல்வி தானம், மாணவர் விடுதி, தெய்வீக தருமம். வன்னிகுல மித்திரனுக்கு ஆதரவு, மகா சங்கத்திற்கு கட்டடம் சேலம் சங்கத்திற்கு கட்டடம், கிராமங்களில் பிரசார வேலை நடத்தல் முதலிய பல தருமங்களை நடத்திவரும்படி உயில் எழுதியிருக்கிறார். அவ்வுயில் சம்பந்தமான வியாஜ்யம் ஐகோர்ட்டிலிருப்பதால் அது முடிவுபெற்றதும் ஷை தருமங்களெல்லாம் மிகப் பிரபலமாக நடந்து வன்னிய உலகில் அவர் புகழ் என்றும் அழியாது நிலைத்து நிற்கும்.

 

வன்னிகுலச் செல்வர்கள் கடமை

 

எந்நாளு மொருபடித்தா யிருப்பமென வறநினையா

திருந்து முங்கள்

சின்னாளைச் செலவிட்டுத் தீநரகுக் கிரையாகச்

செல்வீ ரந்தோ

முந்நாளி லிறந்தவரைக் குறிக்கொண்மின் அவர் வாழ்வின்

முடிவைத் தேர்மின்

இந்நாளிற் கண்ணெதிரே யிறந்துபடுஞ் செல்வரையு

மெண்ணு வீரே.

கூற்றமெனும் பெரும்பாம்பின் பகுவாயி லுலருபுகுங்

குறிப்பை யுள்ள

மேற்றவர்க ளொருகணமுந் தீநெறியில் மறந்தேனு

மேகு வாரோ

சாற்றுபுக ழுறவோர்க எந்தணர்கள் பெருஞ்செல்வர்.

தரையை யாள்வோர்.

நேற்றுவரை கணக்குளதோ மடிந்திரையாய் நேர்ந்தவரை

நினைக்குங் காலே.

திருவடைந்தோர் செயலதனாற் சிந்திக்கு மொருபேறு

தெரிக்குங் காலை

கருவடைந்து பவமுழலுஞ் சிற்றுயிர்கள் கதியுணறும்

கல்விப் பேறாம்

அருநிதியா மப்பேறு நம்மரபிற் கருமருந்தா

யான தெண்ணி

கருமமினி வேறில்லை பாத்திரங்கண் டறமளித்தல்

கடனா மன்றே.

இவ்வுண்மையை யறிந்த வன்னிகுலச் செல்வர்களாகிய செங்கல்வராய நாயகர், வன்னிகுலோத்தாரணகர் கா.கோபால நாயகர், கோவிந்த நாயகர், வன்னிகுலோபகாரி பு. தியாகராய நாயகர், திரு எட்டியப்ப நாயகர்,வன்னிகுலபோஷைகர் ரங்கூன். மா.வெங்கடசாமி நாயகர், ச.கந்தசாமி கண்டர், நஞ்சையிடையார் சம்புகுலவள்ளல் ‘சம்புகுலசேகரர்’ ல.முருகேச நாயகர், செ.இராசு நாயகர் முதலிய குலவள்ளல்கள் தங்கள் பெயர் வன்னிய உலகில் என்றும்பிரகாசிக்க கல்விதானத்தை நிலைநாட்டி யிருக்கிறார்கள். அவ்வாறே இதர வன்னிகுலச் செல்வர்களும் தங்கள் செல்வத்தில் பத்தில் ஒருபாகமாவது கல்விதானம், குலதருமங்களுக்கு வைத்து தக்க ஏற்பாடுசெய்து தங்கள் பெயர் என்றும் அழியாது புகழுடம்புடன் பிரகாசிக்க ஏற்பாடு செய்யப் பிராத்திக்கிறோம்.

 

“ஒருவனே யிரண்டுயாக்கை யூன்பொதியானநாற்றம்

உருவமும் புகழுமாகு மதற்குள்நீ யின்பமுற்று

மருவியயாக்கையிங்கே மாய்ந்திடுமற்றியாக்கை

திறமதாயுலகமேற்றச் சிறந்துபின்னிற்குமன்றே”

 

  • விவேகசிந்தாமணி

 

ஒவ்வொரு மனிதனிடமும் இரண்டு உடம்பிருக்கின்றன. அவையே பூத உடம்பென்றும், புகழுடம்பென்றும் சொல்லப்படும். ஆசைக்கோ ரளவில்லாமல் அகிலமெல்லாம் கட்டி ஆண்டபோதிலும், இன்னும் கடல் மீதிலும் நம்முடைய ஆட்சிசெல்ல வேண்டுமென்று எண்ணுவது மனிதனுடைய இயற்கைக்குணமென்றும், ஆனால் அவன் யோசித்துப் பார்ப்பானானால் பசிதீர உண்பதும் உறங்குவதுமே அவன் செய்கையென்றும் தாயுமானார் எடுத்துக்காட்டுகின்றார். ஆகையால் செல்வம் படைத்தவர்கள் தருமத்தைச் செய்தே புகழுடம்பை நாட்ட வேண்டுமென்பதாயிற்று. தரணிதனில் நிலைநிற்க எந்நாளுமாறாத தருமங்கள் செய்தபேர்களே ‘செத்தும் சாகாத புகழுடம்பெடுத்தவர்களென்றும், அவர்கள் செல்வமே சிறந்த செல்வமென்றும் பெரியோர்கள் பலபடக் கூறியிருக்கிறார்கள். அத்தருமமே இறுதியில் நம்முடன் தொடர்ந்து வருமென்பதை,

 

“அத்தமும்வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக

மெத்தியமாதரும் வீதிமட்டே விம்மிவிம்மியிகு

கைத்தலைமேல்வைத்தழு மைந்தருஞ் ஈடுகாடுமட்டே

பற்றித்தொடரு மிருவினைப் புண்ணியபாலமுமே”

 

என்று பட்டினத்தடிகள் நம்மைத்தட்டி எழுப்பி புண்ணியத்தை செய்யும்படி வற்புறுத்துகிறார். அப்படிச்செய்யாமல்,

 

“றீதுற்றசெல்வமென் தேடிப்புதைத்த திரவியமென்

காதற்றவூசியும் வாராது காணும்கடைவழிக்கே”

 

என்றும் விளக்கிவிட்டார். இதனையே சிவவாக்கியரும்.

 

“ஆடுமாடுதேடினும் ஆனைசேனைதேடினும்

கோடிவாசிதேடினும் குருக்கேவந்துநிற்குமா?

ஒடியிட்டபிச்சையும் உகந்துசெய்த தருமமும்

ஜாடிவிட்டகுதிரைபோல் தருமம்வந்துநிற்குமே”

என்று தெள்ளிதின் விளக்குகிறார். ஆகையால் அவரவர்கள் சக்தியாநுசாரம் தருமம்செய்து அத்தருமம் சூரிய சந்திரருள்ள வரையில் மாறாது நிற்கத்தக்க ஏற்பாடுகள் செய்வதே தங்கள் கடமையாகும். அவ்வித தருமங்களில் குலதருமம் கல்விதானமே சிறந்ததென்பதையும் கவனித்துச் செய்தல்வேண்டும்.

 

குலமாதர் கொப்பிப் பாட்டு

 

 

(சு. அர்த்தநாரீசநாயகவர்மா இயற்றியது)

 

காப்பு

கலைவல்லோர் போற்றுங் கயமுகனே வேத

நிலைவல்லோர் கண்ட நிமலா-சிலைவல்ல

வன்னிகுல க்ஷத்திரிய மாதர்கொப்பிப் பாட்டுரைக்க

மன்னுகவென் நெஞ்ச மகிழ்ந்து.

 

நூல்

வன்னிகுல க்ஷத்திரிய மங்கையே ஒரு

வார்த்தைசொல்லக்கேௗடியென் தங்கையே

உன்னதமிகுந்ததுங்கள் ஜாதியே நான்

ஆதியில் நமதுகுல வேந்தரே உல

ஒதிவரக்கேௗடியந் நீதியே

காண்டுவந்தார். க்ஷத்திரிய மாந்தரே

நீதிதவறியதில்லை யன்னமே மனு

நெரியையனுசரித்தார் முன்னமே

தன்னுயிர்போல் மன்னுயிரை போற்றுவார் குல

ஷைத்திரிய சேனையைக் காப்பாற்றுவார்.

 

இன்னல்புரி துட்டர்களை வட்டுவார் பயிர்க்

கிடாசெய் மிருகங்களை யோட்டுவார்

வேதியர்கள் நாதமறை பாடுவார் நிதம்

 

வேள்விகளில் ஆகுதிகள் போடுவார்.

ஜாதிதருமங்கலெங்கும் நேருமே தர்ம

சாஸ்திரப்படி நடப்பார். யாருமே

சகலஜாதியர்களும் அன்னமே ராஜ

 

சட்டத்தை மீறியதில்லை.முன்னமே

மங்கையர்கள் கற்புநிலை வல்லவர் சொன்ன

வார்த்தைகள் பொய்க்காதுமிக நல்லவர்

மாதமுமும்மாரிகள் பொழிந்ததே அவர்

வாழ்க்கையில்நோய்பஞ்சமும் ஒழிந்ததே

பாதகங்கள் செய்பவர்கள் இல்லையே பசு

பட்சிகளும் பட்டினிக்குத். தொல்லையே

இவ்விதமிருந்ததுங்கள் தேசமே மிக

இழிவை யடைந்ததுவும் மோசமே

செவ்விதின் முறைபுரிந்த ஜாதியே நீங்கள்

சீர்குலைய நேர்ந்ததும் அநீதியே

குலத்தொழில் நீங்களற்றுப் போனதும் சிறு

கூலிக்காரராய் அடிமை யானதும்

விலக்கு நடைகளிலே சென்றதும் வேத

வித்தையைப் புறக்கணித்து நின்றதும்

சாதுசங்க மற்றதுவங் காரணம் உங்கள்

ஜாதியில் விதமடைய ஜீரணம்

ஏதினியுங்கள் நிலையின் தன்மையே மனம்

எண்ணினால் எப்போதுமில்லை நன்மையே

அன்னியர் பலர்களின்முன் நேற்ற்றமே கண்டும்

ஆகுமோ உங்களுக்கிந்த மாற்றமே

நன்னயமடைய வென்றால் சோதரி என்றன்

நன்மொழியைக் கேட்டுளத்தில் ஆதரி

பாசத்துயில் வைகறையில் நீங்கியே உன்றன்

பல்துலக்கிப் பொட்டணிந்து பாங்கியே

வாசலை மெழுகிக்கோலத் தேக்குவாய் மண

வாளனைப் பணிந்துவிழிப் பாக்குவாய்

குளித்து நிதமும்மஞ்சள் பூசுவாய் உன்றன்

கொழுநற் கினியமொழி பேசுவாய்

சுளித்து முகத்தை யென்றுங் காட்டாதே அவர்

சொள்ள சொல்லைத்தட்டி எதிர் நாட்டாதே

குலந்தழைக்கக்கடவுள் போற்றுவாய் உன்றன்

கொழுநன் வாழவேதினம் ஏற்றுவாய்

கலகம் ஒருநாளும் நீ செய்யாதே உன்

கண்மறைந்தபின் அவரை வையாதே

நாத்திமாமன் மாமியாரை ஆதரி ஒரு

நாளும்விரோதஞ் செய்யாதே. சோதரி

கூத்திலைத்து நின்புருஷைன் பேசியே மிகக்

கொடுமைசெய்தாலும் பொறு நேசியே

காதலனே தெய்வமென்று சொல்லடி அவர்

கருத்திற் கிசைந்தபடி நில்லடி

பாதகம் பரபுருஷைர் ஆசையே கொண்ட

பாவியவள் அன்பிலாத வேசையே

பிச்சையென வந்தவரை ஒட்டாதே ஒரு

பிடியாகிலும் கொடுக்க மாட்டாதே

இச்சகத்தில் தர்மமொன்று மாத்திரம் நீ

இறந்தபின் கூடவரும் பாத்திரம்

சட்டிகுடம் பானைகளை நித்தமே கரி

தங்காமல் கழுவிச்செய்வாய் சுத்தமே

முட்டலுற வெளியினில் போடாதே முழு

மோசமாகும் அவ்வழக்கம் கூடாதே

வருவாய்மீறிச் செலவை எண்ணாதே மண

வாளனைக் கடன்காரனாய்ப் பண்ணாதே

அருமைப் பண்டங்களை யிறைக்காதே உன்

அன்பனிடம் ஒன்றையும் மறைக்காதே

அண்டையயல் மனைக்குநீ போகாதே போய்

அரட்டைப்பேச் யிருத்தல் ஆகாதே

சண்டைக்காரி யாகப்பழி போடாதே கேலி

சரசங்கள் யாருடனுங் கூடாதே

தெருவில்நின்று பழமை பாடாதே கெட்ட

தேவடியாள் போல் வம்பு போடாதே

எருமைபோல நடந்து போகாதே லஜ்ஜை

யில்லாத ஜன்மங்காகக் காகாதே

 

வீட்டுசொத்தைத் திருடுவாள்.வேசியே அதை

வேறொருவர்க் களிப்பவள் தாசியே

காட்டுநரி வீட்டெலியாய் மேவியே பின்னுங்

காகமாய்ப் பிறந்திடுவாள் பாவியே

 

எப்பொழுதும் நாயகன்பின் உண்ணுவாய் அவர்

எச்சிலையயிர் தமென்றே யெண்ணுவாய்

முப்பழங்கள் சக்கரையால் உண்டவள் அவன்

மூட அசங்கிதபுத்தி கொண்டவன்

கல்வியினால் கற்புநிலை கார்க்கலாம் பல

காவிய புராணங்களைப் பார்க்கலாம்

நல்வழிபுருடருக்குக் காட்டலாம் பர

நாரியர்மேல் ஆசைதனை ஓட்டலாம்

எத்தனையோ பெண்மணிகள் நீதியில் முன்னம்

உத்தமிகள் அவர்களின் சரித்திரம் ஓதி

உரைத்தாலும் ஓடுமே தரித்திரம்

ஆதலால் படிப்புமிக மேன்மையால் படித்

தறிவுநூல் வளர்ப்பது பான்மையாம்

மாதரின் தற்காலநிலை பாவமே அதை

மாற்றநினைப் பவர்க்கு பிரபாவமே

சந்த்ரமதி ஜானகி நாளாகினி பாஞ்

சாலிதமயந்தி கற்பு வாகிநினி

அந்தமான கல்வியிவர்க் கில்லையே நம்

ஒளவை சரஸ்வதியுரு வல்லையே

கல்விக்கடவுளும் ஒரு பெண்ணடி இதைக்

கண்டாயினுங் கல்விகற்க எண்ணடி

செல்வியே அர்த்தநாரிசன வாக்கியம் தினம்

சிந்தித்தாலடையும் நல்ல பாக்கியம்

மாதரசே யுங்கள்குலம் வாழவே தெய்வம்

வாழ்த்திக் கொப்பியடியுங்கள் தாழவே

வேதநெறி பூதலத்தில் மீறலே மறை

விருத்த நடைகளெலா மாறவே

 

தேசியக் கும்மி

 

சீரணியுமன்னர் தெய்வத்தமிழகந்

தேடிய பாக்கியச் செல்வர்களால்

பாரதநாட்டின் மதிப்புலகெங்கும்

பரவியகீர்த்தி கதையாச்சே,

 

பட்டாற்பருத்தி யெலிமயிரிற்செய்து

பார்ப்பவர்கண்ணைப் பரிக்குமுடை

தொட்டாற்சருக்கும் வழவழப்பாடைகள்

தூரமனுப்பிய தாருணர்வார்?

 

அண்ணல்திருமா வளவன்சரிதத்தை

யாராய்ந்துபார்க்கவும் நேரமுண்டோ

புண்ணியவீரமும் கல்வியுஞ்செல்வமும்

பொங்கிவழிந்ததா ரிங்குணர்வார்?

 

துக்கமிகுந்த பசித்துயரென்பது

தோணாமலேசெல்வப் பிள்ளைகளாய்

மக்களரசைப் போற்றியகாலத்தின்

மான்மியந்தன்னையிங் காரறிவார்?

 

தீவினையென்னென்ன செய்தோமோ அன்பர்

தேவர்முனிவரை வைதோமோ

பாவவினையின் பலனாலேதமிழ்ப்

பார்த்திபராட்சி யிழந்தனரே.

 

செல்வமுழுதும் பரிபோச்சே-கல்வி

செய்தொழில்நாட்டில் வரி தாச்சே

பொல்லாமதுக்குடி யாதியதீமைகள்

போக்கிடமின்றி நிலையாச்சே,

 

பாவணநாட்டில் நுழைந்தாரே மாது

பாரதயின்பம் விழைந்தாரே

யாவனராதிய மேற்றிசையோர்தெய்வ

நாகரீகத்தை மலைந்தாரே.

 

பாரதநாட்டின் பெருமை

 

இஃது. ”நவசக்தி”ஆசிரியர் வித்வ ஸ்ரீமான்

திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் இயற்றியது.

 

“கல்லார்க்கும் கற்றவர்க்குங் களிப்பருளும் களிப்பே”

என்ற இராமலிங்க சுவாமி பாடல் வர்னமெட்டு.

 

மலைகளிலே உயர்மலையை மகிழ்ந்தணியு நாடு

மாநதியுள் வானதியே மல்குதிரு நாடு

உலகில்விளை பொருளெல்லாம் உதிக்கின்ற நாடு

ஒண்தொழிலும் வாணிபமும் ஓங்கியசீர் நாடு

கலைகளொடு மறைமுடியைக் கண்டதவ நாடு

கடவுளருட் கோயில்களே காட்சியளி நாடு

பலசமய உண்மையெலாம் பரந்தொளிரு நாடு

பழமைமிகு புகழ்பெருரு பாரதநன் னாடே.

 

உண்மையரிச் சந்திரனை உவந்தளித்த நாடு

உயர்ஜனகன் ராமபிரான் உலவியபொன் னாடு

கண்ணன்விளை யாடலெல்லாங் கண்டுகளி னாடு

கன்னனொடு பஞ்சவர்கள் காத்ததனி நாடு

தண்மைநிறை புத்தரவர் தருமம்வளர் நாடு

தகைமையுறு வள்ளுவர்தந் தமிழ்பிறந்த நாடு

பண்ணமருங் கரிகாலன் பரித்தபுகழ் நாடு

பகைவர்களுந்தொழுதேத்தும் பாரத நான்னாடே

 

வால்மீகி வியாசமுனி வளர்ந்திருந்த நாடு

வாகடதன் வந்திரியும் வசிட்டமுனி நாடு

“நான்” மறத்த கரர்முதலோர் ஞானமெழிர் நாடு

நாயன்மார் ஆழ்வார்கள் நண்ணியதன் நாடு

மென்னையுறு பட்டினத்தார் மேவுமணி நாடு.

வேதாந்த ராமகிருஷ்ணர் வினங்கியசெந் நாடு

பான்மைபெறு கம்பர்முதல் பாவலர்கள் நாடு

பத்தரொடு ஞானிகள் வாழ் பாரதநன் னாடே

 

சந்த்ரவதி சாவித்ரி ஜானகியின் நாடு

தமயந்தி திரௌபதியுஞ் சார்ந்திருந்த நாடு

இந்திரர்சொல் கண்ணகியின் எழில் நிரைகோள் நாடு

எங்களவ்வை யின்மொழியே எங்குமொளிர்நாடு

அந்தமிகு காரைக்கால் அம்மைசிவ நாடு

ஆண்டாளும் மங்கையர்தம் அரசிவந்த நாடு

பந்தமிலா விக்டோரியா பரிந்தாண்ட நாடு

பாவையர்தம் வடிவான பரதநன் னாடே.

 

தந்தையெனுந் தாதாபாய் தவழ்ந்துறைந்த நாடு

தத்தரொடு கோகுலர்தஞ் சரி தநிகழ்நாடு

நந்தலில்சு ரேந்திரநாத் நாவலர்வாழ் நாடு

நாயகனாந் திலகமுனி நலஞ்சிறக்கு நாடு

இந்துவெனக் காந்தியொளி எழுகின்ற நாடு

இனியஅர விந்தமலர் இன்பமிகு நாடு

பந்துவையும் நீத்தலஜ பதிபிறந்த நாடு

பற்றறுத்தோர் பதந்தாங்கும் பாரதநன்னாடே

 

ஞானமொடு கல்விநலம் நல்குதிரு நாடு

நாதாந்த மோனநிலை நாட்டமிகு நாடு

தானமதை உடலாகத் தாங்குகின்ற நாடு

தான்வருந்திப் பிறர்க்குதவுந் தயைபிறந்த நாடு

வானவருந் தொழுதேத்தும் வளம்பெருகு நாடு

வாழ்விழந்தே இதுகாலை வாடுகின்ற நாடு

ஊனமிலா உரிமைபெற ஊக்கமிகு நாடு

உத்தமரை அளிக்கின்ற ஒருபரத நாடே

 

 

 

 

நீதி நெறி விளக்கம்

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார்

 

விண்ணப்பம்

 

மண்டலாதிபதிகளாய் நீதிசெலுத்தி புகழ்பூண்டு அரசாண்ட நம்மவரின் தற்கால தவுர்பாக்கிய நிலைமைக்குக் காரணம் கல்வியிழந்து, ஆசாரங்குன்றி, ஒற்றுமையுற்று வறுமை மேலிட்டு வாழ்வதேயாகும். தென்னாட்டிலே பெரும் ஜனத்தொகை கொண்டவர்களாகிய நாம் முன்னேற்றம் பெறவேண்டுமானால் கட்டுப்பாடே அவசியம் வேண்டும். அவ்வீத கட்டுப்பாட்டினால் கிராமங்கள் சீர்திருத்தமடைந்தால், நாடு சீர்திருத்தமாகி தாலூகா மேன்மையடைந்து, ஜில்லாவெங்கும் சங்கநோக்கம் பரவும். ஆகையால் முதலில் சீர்படவேண்டியது கிராமங்களேயாகும். கிராமத்திலுள்ள முக்கியஸ்தர்களாகிய நாட்டாண்மை பெரியதனக்காரர்களும், குலாபிமானிகளும் இச்சட்ட திட்டங்களை அனுஷ்டிக்க முற்படுவார்களானால் உடனே கிராமங்களில் அதன் பலனைப் பிரத்தியட்சமாய்ப் பார்க்கலாம்.

 

பாரதம் சாந்திபர்வம், நன்னெறித் துணைபற்றிக் கூறிய வேடராசன் கதையில் பீஷ்மர் தருமநந்தனருக்குக் கட்டுப்பாட்டின் அவசியத்தையும், அதனால் ஏற்படும் இசுலோக பரலோகப் பலனையும் விளக்கியிருப்பதை கவனிக்கவும். கட்டுப்பாட்டிற்கு அவசியமான சில நீதிகளை பீஷ்மர் பின்வருமாறு கூறுகிறார்.

 

“சொர்க்கபதம் வேண்டுமென்கிற அக்கறையிருக்குமாகில் தாயை, தகப்பனை தெய்வமென்றெண்ணிப் பூசித்து அவர்கள் சொல்லுக்கு எதிர் சொல்லாமல் வழிபட்டு நடவுங்கள். பெண்ஜாதி பிள்ளைகளை அன்ட்டன் விசுவாசித்துப் போஷித்து வாருங்கள். பரஸ்திரீ கமனம் பண்ணாதீர்கள். அண்ணன் தம்பீமாருடனேயுந் தயாதிகளுடனேயுங் கலந்திருந்து வேற்றுமையில்லாமற் சாப்பிடுங்கள். இந்த விஷயத்திலும் ஒருவரை யொருவர் வஞ்சிக்க வேண்டாம். சுபாசுபங்களில் விரோதமில்லாமல்கலந்து நடத்துங்கள். பிறருக்கு இடங்கொடாதீர்கள். என்றும் சத்தியந் தப்பலாகாது. தலைபோகிற காலம் வந்தாலும் பொய் பேச வேண்டாம். அதிக ஆசைப்பட வேண்டாம். ஒருவரையொருவர் பார்த்துப் பொறாமைப்பட வேண்டாம். புறங்கூற வேண்டாம் என்று தருமசாஸ்திரம் போதிப்பதால் ஜாதிக்கட்டோலையுடன் பட்டோலை யேற்படுத்தி அதன்படி முறைதப்பாமல் ஒப்பாக நடந்தால் அந்தியகாலம் வந்தபோது நற்கதி புகுவார்களென” எடுத்துக் காட்டுகிறார். எனவே இச்சட்டதிட்டங்கள் முன்னோர் உரைத்த மொழியை அநுசரித்தும், இதற்கு முன் நமது மரபார் எழுதிவைத்திருக்கும் விவகாரங்களைப் பார்வையிட்டும், நமது சங்க சட்டதிட்டங்களைத் தழுவியும், அரசாங்க சட்டத்திற்கு விரோதமில்லாமலும், பஞ்சாயத்து பழைய முறைகளை அநுசரித்தும் எழுதப்பட்டிருக்கிறது வன்னிய உலகம் சீர்திருத்தம்பெற ஆங்காங்குள்ள குலாபிமானச் செல்வர்கள் இச்சட்ட திட்டங்களை அநுஷ்டானத்திற்குச் கொண்டுவரும்படி பணிவான வந்தனத்துடன் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம். இதை வெளியிட உதவி புரிந்த விருகம்பாக்கம், நெசப்பாக்கம் வன்னிகுலக்ஷத்ரியர்களுக்கு மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்துகிறோம்.குலாபிமானிகளுக்கு தொண்டுபூண்டொழுகும்

 

ஆ. சுப்பிரமணிய நாயகர்

“வன்னிகுல மித்திரன் பத்திரா

 

 

 

 

ஸ்ரீசொர்ணகாமாட்சி துணை

 

வன்னிகு க்ஷத்திரிய சங்க நாட்டு சட்டதிட்டங்கள்

 

  1. இச்சட்டதிட்டத்தின் பெயர் வன்னிகுலக்ஷ்த்ரிய சங்க நாட்டுசட்டதிட்டமெனப்படும்.

 

  1. வியாபிக்குமிடம்: சென்னை மாகாணத்திலும், மற்றும்வன்னிகுல க்ஷத்ரியர்கள் வசிக்கும். எல்லாப்பிரதேசசங்கங்களிலுமுள்ள கிராமங்களிலும் இச்சட்டதிட்டங்களை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரலாம்.

 

  1. அநுஷ்டிப்பவர் கடமை: இச்சட்டதிட்டங்கள் ஒருகவர்ன்மென்ட் உத்தரவுபோல் அதிகாரம் வாய்ந்ததல்லவாயினும்கிராமங்கள் சீர்திருத்தம் அடையவேண்டுமென்ற நல்ல எண்ணமும், கோபத்தை அடக்கும் குணமும், குலாபிமானமும் கொண்ட தலைவர்கள் கிராமங்களில் 4-5 பேர்கள் சுயநலகுணங்களின்றி பொதுநல நன்மையை நாடுபவர்களாகவிருந்து ஒற்றுமையுடன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவர்கள் செய்துக் கொள்ள வேண்டிய உறுதிப்பிரமாணங்களை 39-வது பாராவில் பார்க்கவும். அவ்வித கட்டு திட்டங்களுக்கு கிராமத் தலைவர்கள் பயந்து நடந்து இச்சட்ட திட்டங்களை நிறைவேற்றி வருவார்களானால் வன்னிகுலஷைத்ரியர் கிராமங்கள் தெய்வீகவாழ்வைப் பெறும்.

 

  1. கிராமசங்கம் தற்கால அரசாங்கத்தில், கிராமம், சர்க்கிள்,தாலூகா, ஜில்லா, மாகாணம் எனப்பிரிக்கப்பட்டிருக்கிறது. முற்கால’அரசர்களும், கிராமம், நாடு, மகாநாடு, கோட்டம், மண்டலம் எனப்பிரித்திருந்தார்கள். எல்லாவற்றிற்கும் ஆதரவாகயிருப்பது கிராமங்களேயாகும். கிராமங்கள் சீர்திருத்தம் பெற்றால்தான் தேசம் சீர்திருத்தமடைந்த தாகுமாகையால் எங்கும் கிராமசங்கங்கள் தோன்றுதல் வேண்டும்.

 

கிராம சங்கம் அமைக்கும் முறை

 

  1. 25-அல்லது 50-அல்லது 100-தலைக்கட்டுகள்ஒவ்வொரு கிராமத்திலும் வன்னிகுலக்ஷத்ரியர் கிராமசங்கங்களைநியமிக்க வேண்டும். அவ்வித நியமனத்தை ஒரு சுபதினத்தில் ஊர்கோயில், தோப்பு முதலிய பொது இடங்களிலாவது அவ்விதமில்லாத ஊர்களில் எல்லோரும் வரக்கூடிய பெரிய வீடுகளிலாவது, இன்னதேதியில் இந்த சமயத்தில் இன்னார் அக்ராசனத்தில் கிராமசங்கம் கூடுவதாய் ஓர் சிறிய விளம்பரம் கிராமத்திலுள்ள பெரியதனம் முதல் நாட்டாண்மை முதலிய  முக்கியஸ்தர்கள் சிலரது கையொப்பத்துடன் அச்சிட்டு

விளம்பரப்படுத்தி சங்கம் சேர்த்தல் வேண்டும்.

 

  1. இதுவரையில் சென்னை வன்னிகுலக்ஷத்ரிய மகாசங்கம் ஏற்பட்டு 43- வருடங்களாக நடந்த அநுபவத்தைக் கொண்டுபார்க்கிறபோது எத்தனையோ கிராமசங்கங்கள் தோன்றி ஊர்பேரில்லாமல் மறைந்து போய்விட்டன. “எண்ணித்துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவமென் பதிழுக்கு” என்ற முதுமொழியை நாம் நன்றாக மனதிலெண்ணி பின் கண்டபடி செய்தல் வேண்டும்.

 

  1. சங்கம் ஸ்தாபிப்பதற்கு முன் கிராமத்திலுள்ள பலரும்ஒன்றுகூடி ஆரம்ப செலவிற்கும், சங்கவேலையை தொடர்ந்துநடத்தவும் முதலில் தலைக்கட்டு 1-க்கு ரூபாய் 1-க்கு குறையாமல் வசூல் செய்ய வேண்டும். 25 தலைக்கட்டானால் 25-ரூபாயும், 10 தலைக்கட்டானால் அதற்கேற்றபடியும் வசூலித்து சங்கத்திற்கென ஒரு யிருப்புத் தொகை வைத்துக்கொண்டே சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும். செல்வர்களா யிருப்பவர்கள் அவரவர்கள் இஷ்டப்படி அதிகமாகவும் கொடுக்கலாம்.

 

  1. அதிக தலைக்கட்டுள்ள கிராமங்களிலும், சில சிறியகிராமங்கள் சேர்ந்துள்ள மதுராகிராமங்களிலும் தலைக்கட்டுக்குஎட்டு

அணாவீதம் அந்தந்த கிராமங்களில் உள்ள முக்கியஸ்தர்களின் தீர்மானப்படி வசூல் செய்துக் கொள்ளலாம்.

 

  1. சேரும் தொகையில் 4ல் ஒரு பாகமே சங்க ஆரம்பகூட்டத்திற்கு செலவு செய்ய வேண்டும். கிராமசங்கங்களிலெல்லாம்பெரும்பாலும் அந்தந்த கிராமங்களில் உள்ளவர்களே வந்து கூடுவார்கள். பெரிய மதுராகிராமமாக யிருந்தாலும் ஒருமயில் அரைமயிலுக்குட்பட்ட இரண்டொரு கிராமங்களைச் சேர்த்துக் கொண்டு ஏற்படுத்த வேண்டும். அதற்காக பெரியதோர் பந்தல், போஜன ஏற்பாடுகள் பலமாய் வேண்டியதில்லை. பொதுச்சாவடி, கோயில், தோப்பு, பெரியவீடு இதுகளைப்பார்த்து சவுகர்யப்படி சங்கங்கூட்ட ஏற்பாடு செய்து கொண்டு சிறிய நோட்டீஸ், வாத்தியம், தாம்பூலம், முக்கிய குலாபிமானிகள் சிலரை வெளியூர்களிலிருந்து வரவழைப்பதால் அவர்களுக்கு ஏற்படும் வண்டிசத்தம் செலவு யாவும்: வசூலாகும் பணத்தில் 4ல் ஒரு பாகத்திலம்ய செலவு செய்து ஆரம்பக் கூட்டத்தை முடிக்க வேண்டும்.

 

  1. கிராமங்களில் உள்ள குலாபிமானச் செல்வர்கள் ஆரம்பசெலவை தாங்களே ஏற்றுக் கொண்டு விசேஷைமாக நடத்தமுற்படுவார்களானால் கிராமவசூளில் நாழில் ஒரு பாகத்தை அவரிடம் கொடுத்து விட்டு மிகுதித் தொசையை சஞ்கமிகுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

  1. சங்கத்திற்கு இருப்புத் தொகையில்லாமல் ஆடம்பரமாய்முதலில் சங்கம் கூட்டி, பிறகு சங்கவேலை தொடர்ந்துநடக்காமலிருப்பதால் சங்கம் கூடியதனால் ஏற்படும் பலனை கிராமவாசிகள் அடையாமற் போய்விடுவதால் அவ்வித சங்கம் கூடுவது வீண்சிரமமாகும்.

 

  1. சங்க ஆரம்ப கூட்டத்தில் சங்கத்தின் நோக்கமாகியகுலச்சிறப்பைப் பற்றியும், ஷைத்ரியகுல தர்மப்படி உபநயனம்.செய்துக்கொள்ள வேண்டியதைப் பற்றியும், கட்அடியை அறவே நீக்க வேண்டியதைப் பற்றியும், ஒற்றுமையால் கிராமங்களில் ஏற்படும். பலவித நன்மைகளைப் பற்றியும் தக்கவர்களைக் கொண்டு உபந்நியாசித்தல் வேண்டும்.

 

சங்க வேலை

 

  1. பஜனை கோயில்:- கிராமங்களிலுள்ள வைஷ்ணவ பஜனைகோயில்களுக்கு ஸ்ரீமத் குலசேகராழ்வார் சபை என்றும்சிவபஜனை கோயில்களுக்கு ஸ்ரீமத் சேரமான் பெருமானாயனார் திருச்சபை என்றும் பெயர் அமைத்து அதன்படிபோர்டு எழுதிப்போட  வேண்டும்.

 

  1. இராப்பாட சாலை:

ஒவ்வொரு கிராமத்திலும் சங்கயிருப்புத் தொகைக்கு ஏற்றவாறு மாதம் ரூ 2,3,4,5 வீதம் சம்பளம் கொடுப்பதாய் தீர்மானம் செய்து அந்த ஊரில் படிக்கத் தெரிந்த ஒருவரைக் கொண்டு, இரவு பஜனை கோயில், சாவடி, அல்லது பெரிய திண்ணையாகப் பார்த்து இரவு பள்ளிக்கடத்தை சங்கம் கூடிய தினமுதல் ஆரம்பித்து மாலை ஆறரை முதல் எட்டரை மணிவரையில் கூட்டத்தை கட்டாயம் நடத்திக் கொண்டு வரவேண்டும்.

 

  1. பகலில் படிக்க முடியாத வேலை செய்யும் சிறுவர்களும், பெரியவர்களும், இராப்பாட சாலையில் வெகுசுலபமாகக் கல்வி கற்று  முன்னேற்ற மடையலாம். ஆகையால் கிராமங்களில் இராப்பள்ளிக் கூட்டத்தை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.

 

  1. பிள்ளைகள் அதிகம் சேர்ந்தாலும், 2 – உபாத்தியர்களை வைக்கவேண்டியிருந்தாலும் சங்கயிருப்புத் தொகை அதற்குப்போதுமானதா யில்லாமலிருந்தால் படிக்கும் பிள்ளைகளிடம் மாதம் 2-அணா, 3-அணா, 4 அணா, வீதம் வகுப்புக்குத் தக்கபடி சம்பளம் வசூல் செய்து கொள்ளலாம். ஒருவருக்கு பிள்ளையில்லையென்ற காரணத்திற்காக யாரும் தலைக்கட்டு வரியை கொடுக்காமல் இருக்கக்கூடாது. “ஊருடன் கூடிவாழ்” என்ற ஒளவை வாக்குப்படி எல்லோரும் தலைக்கட்டு பணங்களை கட்டாயம் கொடுக்க வேண்டும்.

 

  1. பள்ளிப் பிள்ளைகளின் பெயர்களை ஒழுங்காக ரிஜிஸ்டரில் எழுதிஆஜரானது நிலுவையானது இதுகளை எல்லாம் கிரமமாகஉபாத்தியாயரை வைக்கச் சொல்லி சங்க மெம்பர்கள் மேற்பார்வை பார்த்து வரவேண்டும்.

 

  1. இராப் பள்ளிக்கூடங்களில் அரிச்சுவடி, வாசக புஸ்தகம், சதகம், கணக்கு, நிகண்டு, திருப்புகழ் ஆகிய தமிழ்ப்பாடங்களையேசொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வன்னிகுல க்ஷத்ரியசங்க உபதேச வாக்கியங்களையும், பாடல்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். சங்க சரித்திரங்களையும் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இராப் பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ் படிப்பு சகலமும் வந்துவிடுமென்று எதிர்பார்க்க முடியாது. தமிழ், கணக்கு நன்றாய் படிக்கவும், எழுதவும் தெரிந்து கொண்டால் போதுமானது.

 

  1. படிப்பு தெரியாத பிள்ளைகளும், விவசாயிகளும்வாசிப்பதற்கேஇராப் பாடசாலை ஏற்படுத்துவதாகையால் அவர்களையே பெரும்பாலும் அதில் சேர்க்க வேண்டும். வன்னிகுல க்ஷத்ரியர் அல்லாத அன்னியர் பிள்ளைகளையும் கல்விச் சாலையில் சேர்த்துக் கொள்ளலாம். அப்பிள்ளைகளிடம் கட்டாயம் சம்பளம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

20.அப்பாடசாலைக்கு “———– -கிராம வன்னிகுல க்ஷத்ரியர் சங்க இராப் பள்ளிக்கூடம்” எனப் பெயரமைத்த போர்டு போட வேண்டும்.

 

  1. இராப் பள்ளிக்கூட கிராண்டு மேற்கண்ட விதமாகயாவும் சரியாய் அமைத்து 6- மாதம் இராப்பாட சாலையைநடத்திக் கொண்டு வரும்போது அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த தாலூகா ஜில்லா, கல்வியிலாகா இன்ஸ்பெக்டர்களுக்கும், தாலூகா போர்டு பிரிசிடென்டுகளுக்கும் எழுதி தெரிவித்தல் வேண்டும். அந்தந்த சர்க்கிள் தாலூகா போர்டு மெம்பர்களைக் கொண்டும். கிராமத்தார்களின் முயற்சியின் பேரிலும் இராப்பாடசாலைக்கென உள்ள கிராண்டு தொகைகளைப் பெற முயற்சிக்க வேண்டும். உபாத்தியாயர் பாஸ் செய்தவராக யிருந்தால் மிக்க விசேஷைம்.

 

  1. ஒரு இராப் பள்ளிக்கூடத்தை ஒரு உபாத்தியாயாரக் கொண்டுமுப்பது பிள்ளைகளுக்குக் குறையாமல் வைத்து முறையாகநடத்திவந்தால் அதனால் கிடைக்கும் கிராண்டு தொகை முதுவதும் உபாத்தியாயருக்கு சம்பளமாய் கொடுத்துவிடலாம். முதல் வருஷத்தில் தான் சங்க பணத்தில் செலவு செய்ய வருக்கும். அடுத்தடுத்த வருடங்களில் கிராண்டு தொகைகளிலேயே இராப்பாடசாலையை நடத்திக் கொண்டுசங்க தலைக்கட்டு பணங்களை இதர தருமங்களுக்கு உபயோகித்துக் கொள்ளளாம்.

 

  1. கிராண்டை சங்க காரியதரிசியாக இருபவரோ அல்லது.பிரசிடென்டாக யிருப்பவர் பேரிலோ வரவழைக்கலாம். அவர்களேகல்விச்சாலையின் மானேஜர் என்ற முறையில் கல்வியிலாகா அதிகாரிகளிடம் கடிதப்போக்கு வரவு நடத்தி வர வேண்டும்.

 

24.குலாச்சார தருமம் தமது க்ஷத்திரியகுல தருமப்படி 12 வயது பிள்ளைகள் அனைவரும் உபநயனம் செய்து கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும். அந்தியூர்,

திருக்குமளம், வளவனூர் முதலிய இடங்களிலுள்ள தமது குலகுருமார்களைக் கொண்டுக் கல்விச்சாலை பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் சங்க ஆதரவில் உபநயனம் செய்து வைக்க வேண்டும்.

 

  1. பெரியவர்களும் உபநயனம் செய்து கொள்வதுவிசேஷமானது. இதுதான் கிராமத்தை உடனே சீர்திருத்தத்திற்குகொண்டுவரக் கூடிய சாதனமாகையால், சங்கம் ஆரம்பிக்கும் நாளிலேயே சிறுபிள்ளைகளுக்கெல்லாம் அன்று காலையில் உபநயனம் தடத்தி பகலில் சங்கத்தைக் கூட்டுவது மகாவிசேஷைம் பொருந்தியதாகும்.

 

  1. 50-வருடங்களாக தமது குலப்பெரியார்கள் செய்த இந்தஅருமையான தெய்வீக முயற்சியினால்தான் அநேக கிராமங்கள்சீர்திருத்தமடைத்து சங்கத்தை தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். ஆகையால் கிராமத்தவர்கள் இதை கட்டாயம் செய்து முடித்தல் வேண்டும். இதற்கு குறும்பு பேசுபவர்கள் உண்மைச் சீர்திருத்தம் அறியாதவர்களாவார்கள். பெரியவர்கள் செய்துக்கொள்ள பிரியமில்லாவிட்டால் சிறியவர்களுக்குக் கட்டாயம் நடத்தி அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்.

 

  1. இதனால்தான் பிற்காலத்தில் குலத்திற்கு பெருமதிப்பும்சங்கத்திற்கு பெருங்கவுரவமும் உண்டாகும். ஒருவன் படித்துசீர்திருத்தி நெடுநாளைக்குப் பிறகு முன்னேற்றமடைவதைவிட இச்சீர்திருத்தம் உடனே கிராமங்களுக்கு நல்ல பெயரையும், புகழையும் உண்டாக்கும். அநேக கிராமங்களில் இதனாலேயே நம்மவர் சீர்திருத்தம் பெற்று புகழுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

 

  1. உபநயனம் செய்துகொள்வோர் அநுஷ்டிக்க வேண்டியசந்தியாவந்தனக் கிரமங்களை இப்புத்தகத்தின் இறுதியில்சேர்த்திருப்பதைப் பார்த்தும், குருமூலமாய் கேட்டும் தெரிந்து கொள்ளவேண்டும்.

 

  1. குருமார்கள் வர சவுகர்யப் படாத காலங்களில் அந்தந்தகிராமங்களில் உள்ள புரோகிதர்களைக் கொண்டு உபநயனத்தைநடத்திக் கொள்ள வேண்டும் சங்க ஆரம்ப தினத்தில் அந்த கிராமங்களில் உள்ள சிறுவர்களுக்கு உபநயனம் செய்வதே முதற் கடமையாகும்.
  2. சிறுவயதில் செய்ய தவதிவிட்ட போதிலும் கலியாணகாலங்களில் உபறயன முகர்த்தம் செய்து அதிலிருந்து அப்படியேதிருத்திக் கொள்ளுதல் வேண்டும்.

 

  1. மதுவிலக்கு நமது மரபார் ஏழைகளாகி கல்வி கற்கவகையில்லாமலும், ஒழுக்கமில்லாமலும், கட்டத் துணியும் உண்ணஉணவில்லாமலும், பார்ப்பதற்கு மிக்க கேவலமாயிருப்பதற்கு கட்குடிதான் முக்கிய காரணம். ஒரு குடிகாரன் தினப்பிரதி 4அணா குடியில் செலவு செய்து வருவானாகில் அவன் மாதம் 1 –க்கு ரூ18-0யும் வருடத்தில் ரூ9000யும் தொலைத்து விடுகிறான். அந்த 96.ரூபாயைக் கொண்டு 60 ரூபாய்க்கு தான்யங்களும், 3. புடவைகளுக்கு ரூ.12.0.0-ம். 4.வேஷ்டிகளுக்கு ரூ.5.0.0.ம். 5.குழந்தைகளுக்கு பாவாடை, சொக்காய், வேஷ்டிகள் ரூ12-00 க்கும் வாங்குவானானால் 5.பேருடைய குடும்பத்திற்கு உண்ண உண்ணவும் கட்டத் துணியுமிருக்கும். அப்போது அவனைப் பார்த்தால் பலபேர் மதிக்கவும். கவுரவமும் ஏற்படும். குடியர்களை சீர்திருத்துவதற்கு சங்க நிர்வாகஸ்தர்களாகவுள்ள முக்கியஸ்தர்கள் முதலில் தாங்கள் அவ்வித துர்ப்பழக்க முடையவர்களாக யிருந்தால் அவர்கள் முதலில் கட்டுப்பாடு செய்து கொண்டு பிறகு கிராமங்களில் முச்சலிக்கை ஏற்படுத்தி குடிக்கக் கூடாதென கட்டுதிட்டம் செய்யவேன்டும். அவ்விதமே பலஜாதிகளில் செய்து முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.

 

32 கள், சாராயம் குடிக்கும் மகா பாதகமாகிய கொடிய வழக்கத்தினால் நம்மவர்கள் பலர் குடும்பங்கெட்டு, கல்வியற்று. ஒழுக்கமின்தி தரித்திரமேலிட்டு, கொலை, களவில் ஈடுபட்டு கெட்டலைந்து கடைசியில் மரணமடைகிறார்கள். ஆகையால் குடி ஒழிந்தால் கல்வி பரவும், ஒழுக்கமிகும், கடன்கள் தீரும்,  விவசாயம் விருத்தியாகும் செல்வர்களாய் வாழ்ந்து கிராமத்திற்கும் ஜாதிக்கும் பெருமதிப்பு ஏற்படும். இதுவே சங்கத்தின் முக்கியமான வேலையாகையால் புதுகுடியர்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

  1. திருநட்சத்திர உற்சவம்: சங்க பணம்யிருப்பிலிருந்தாலும்அல்லது வருடவாரி தலைக்கட்டு பணத்திலாவது, குலாபிமானிகள்உதவியைக் கொண்டாவது அவரவர்களுக்கு அடுத்துள்ள திவ்ய க்ஷேத்திரங்களாகிய சைவ, வைஷ்ணவ ஆலயங்களில் பிரதி வருடம்

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அக்நிகுலோற்பவராகிய ஸ்ரீமத் சேரமான் பெருமாணாயனார் திருநட்சத்திரத்தையும் பிரதி வருடம் மாசி மாத புனர்பூச நட்சத்திரத்தில் வன்னிருலோற்பவராகிய ஸ்ரீமத் குலசேகராழ்வார் சாத்து முறையையும் நடத்திவர வேண்டும்.

 

34.சமீபத்தில் திவ்ய க்ஷேத்திரங்களில்லையானால் அவரவர்கள் கிராமங்களில் உள்ள பஜனைக் கோயில்கள் ஸ்ரீமத் சேரமான் பெருமாணாயனார் ஸ்ரீமத் குலசேகராழ்வார் திருவுருவப் படங்களை எழுதி அமைத்துக் கொண்டு ஷை விசேஷைத் திருநட்சத்திரத் தினங்களில் உற்சவம் கொண்டாட வேண்டும் ஷை பக்தர்கள் சரித்திரங்களை, பெரியபுராணம், நாலாயிரப் பிரபந்தம் ஆகிய நூற்களில் காணவும்.

 

35.கிராம ஆலயங்கள்:- கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில், கிராமதேவதை ஆலயம், திரௌபதையம்மன் கோயில் முதலிய சகல தேவாலய உற்சவங்களையும் அந்தந்த கிராமநாட்டு சங்கத்தாரே முன்னின்று வசூல் செய்து நடத்தி அதன் வரவு செலவு கணக்குகளை சங்கவருடாந்திர ரிப்போர்ட்டில் விபரமாய் வெளியிடவேண்டும்.

 

  1. மேலே கூறிய இராப் பள்ளிக்கூடம், உபநயனம், மதுவிலக்கு, திருநட்சத்திரம், கிராம ஆலயதர்மங்கள் இவைகளைகவனித்து நடத்தி வரவும். பிரதி வருடமும் சங்கத்தை கூட்டவும்.அடியிற் கண்டபடி சங்க நாட்டு நிர்வாகஸ்தர்களை ஆரம்ப கூட்டத்திலேயே தெரிந்தெடுக்க வேண்டும்.

 

  1. கிராமசங்க நாட்டு நிர்வாக சபையார்கள்கிராமத்திலுள்ள ஜனங்களுக்குத் தக்கபடி 5 பேர் அல்லது 7 பேர், 11 பேர், 13பேர் வீதம் கிராமத்திலுள்ளவர்களில் கல்வி, செல்வம், நிர்வாகத்திறமை பகையாளியிடத்தும் அன்பு செலுத்தும் குணம் வாய்ந்தவர்களாக சிலரைப் பொறுக்கியெடுத்து அவர்கள் பெயர்களை தனித்தனி சீட்டில் எழுதி சங்க கூட்டத்தினர் முன்பாக சிறு பிள்ளையைக் கொண்டு சீட்டுகளில் எத்தனை பேர் வேண்டுமோ அத்தனை சீட்டுகளை மட்டும் எடுக்கச்சொல்லி அவர்களையே நாட்டு நிர்வாக சபைமெம்பர்களாக அமைத்துக் கொள்ள வேண்டும் கிராம பெரிய தனம் நாட்டாண்மை தாரராகவுள்ளவரை, கட்டாயம் ஒருவராக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

  1. சீட்டு போடாமல் இன்னின்னார் இருந்தால் போதுமெனஎல்லோரும் ஏகோபித்து எடுத்துக் கொள்ள சம்மதப் பட்டால்அதன்படி நியமித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு கிராமத்தவர்கள் அடியிற்கண்டபடி ஜாதிக்கட்டு முரிமுச்சலிக்கை எழுதிக் கொடுக்க வேண்டும்.

 

  1. இச்சட்ட திட்டம் கிராமங்களில் நிறைவேறி கிராமம்சீர்திருத்தம் பெறவேண்டுமானால் அதற்கு அந்தந்த ஊரிலுள்ளமுக்கியஸ்தர்களே காரணகர்த்தர்களா யிருக்கவேண்டும். சங்க நாட்டு நிர்வாக சபையார்களாக தெரிந்தெடுக்கப்படும் 5 அல்லது 7, 11, 13 நிர்வாகஸ்தர்கள் முதலில் தாங்கள் தேவாலயத்தின் முன்பு உறுதியான வாக்களித்து சத்தியம் செய்துக் கொண்டு அடியிற்கண்ட வீதம் உறுதிமொழிப்பத்திரம் 12 அணா ஸ்டாம்பில் எழுதி அதில் நிர்வாக சபையார்கள் கையொப்பம் செய்து கொள்ள வேண்டும்., அப்பத்திரம் தலைவரிடமிருக்க வேண்டும்.

 

கிராம சங்க நாட்டு நிர்வாக சபையார்

உறுதிப்பிரமாணப் பத்திரம்

 

193  ஸ்ரீ                  மீ        உ                  ஜில்லா

 

ஷைத்ரிய ஜாதி                  கிராமத்திலுள்ள.      வன்னிகுல

மதம்                ஜீவனம்

குமாரர்

 

(என்று நிர்வாக சபையார் பெயர்களை எல்லாம் சேர்த்து எழுதிக் கொள்ள வேண்டும்) கிராம சங்க நாட்டு நிர்வாக சபையார் எழுதிக் கொண்ட உறுதிப் பிரமாணபத்திரம் என்னவென்றால். நாங்கள் நம்முடைய கிராம சீர்திருத்தத்திற்காகவும், நமது ஜாதியாரின் மேன்மைக்காகவும், நாம் பிறந்த நமது குலத்திற்குச் செய்ய வேண்டிய கடமைக்காகவும், வன்னிகுல க்ஷத்ரிய கிராம சங்க நாட்டு நிர்வாக சபையார்களாக நமது ஜாதியார் நம்மை தெரிந்தெடுக்கப் பட்டிருப்பதால் இன்றுமுதல் தொடங்கி நமக்குள் ஒருவர்க்கொருவர் கொள்வன கொடுப்பன. பண லேவாதேவி, இதர குடும்ப விவகாரங்களில் என்ன சச்சரவு ஏற்பட்ட போதிலும் நாங்கள் சங்கத்தைவிட்டு விலகுவதில்லை. ஒருக்கால் நிர்வாக சபையார்களாகிய நம்மில் ஒருவர் தப்பிதம் செய்த போதிலும் அதற்கேற்றபடி சங்க கட்டணம் மற்ற மெம்பர்கள் சொல்வதுபோல் செலுத்திவிட்டு ஆயுள் உள்ளவரையில் நமது சங்கத்திற்காக உழைக்கிறோம். சங்கத்தைவிட்டு நீங்குவதில்லை. இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம், கிராம சங்க நாட்டு நிர்வாக சபையார்கள். மனப்பூர்வமாக எழுதிக் கொண்ட உறுதிமொழிப் பிரமாணபத்திரம்.

 

  1. நமது முன்னோர்கள் அரசாட்சி செய்த காலங்களில்ஏற்பட்ட செப்பேடுகளில் தருமங்களை பரிபாலிப்பதற்காக இப்படியேசத்தியம் செய்துக்கொண்டு நடந்து வந்தார்கள். “சத்தியத்திற்குத் தவறி தருமத்தைக் கெடுப்பேனாகில் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷைத்தில் போகக்கடவேன்” என்று தான் செப்பேடுகளில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த சொல்லுக்குக் கட்டுப்பட்டு பயந்து தான் அநேக மடாலயங்களையும், தேவாலயங்களையும், உற்சவாதிகளையும், மண்டகப்படி தருமங்களையும், தண்ணீர்ப்பந்தல்தருமங்களையும் நடத்திவந்திருக்கிறார்கள்.அதனால் தான்நாம் இக்காலத்தில் கல்வி, ஜனாசார சீர்திருத்தங்களில் குறைவுபட்டிருந்த போதிலும், நமக்கு சிதம்பரம், திருவண்ணாமலை. காஞ்சீபுரம், மதுரை, ஸ்ரீரங்கம் முதலிய பிரபல தேவஸ்தானங்களில் ஏற்பட்ட பழைய அரசமரியாதைகள் சில நடந்து நமது மரபுக்கு கவுரவம் அளித்து வருகிறது. ஆகையால் ராஜபயத்தை விட தெய்வத்திற்கு நிர்வாக சபையார் பயந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

 

  1. கிராம சங்க நாட்டு நிர்வாக சபையார்களின் கடமைவிவகாரங்ககளைப் பைசல் செய்யும் நிர்வாக சபையார்கள்அவர்களுடைய பிள்ளை, உற்றார், உறவினர், உடன்பிறந்தவர்களாக யிருந்தாலும் குற்றம் செய்திருந்தால் அதற்கேற்றபடி கண்டனை தெண்டனை செய்பவர்களாயிருக்க வேண்டும். அவர் எனது பிள்ளை, இவர் எனது மாமன், அவர் எனது மைத்துனர்; அண்ணன், தம்பி என்ற பாரபட்சம் சபையில் ஒருக்காலும் பார்க்கக் கூடாது. அவ்வித பாரபட்சமான நாட்டாண்மையை நடத்தியே இப்போதும் நம்மில் எத்தனையோ நாட்டாண்மைகாரர்கள் குடிக்க கஞ்சிக்கும். கட்ட துணிக்கும் வகையற்று, நிற்க நிழலுமில்லாமல் தவிக்கிறார்கள். சில நாட்டாண்மைதாரர்களே நியாயமாக நடந்து பொதுப்பணத்தை தருமத்திற்கு செலவிட்டு கணக்கு வைத்து பலருக்கும் காண்பித்து வருகிறார்கள். ஆகையால் பிள்ளையாகயிருந்தாலும் வீட்டில் ஆதரிக்க வேண்டுமே தவிர குற்றம் செய்தபோது கண்டித்து அலனுக்காக நிர்வாகஸ்தரே சங்க கட்டணத் தொகையை செலுத்தி  விடவேண்டும். நிர்வாகஸ்தர்களே ஒருகால் குற்றம் செய்தாலும் மற்றவர்கள் சொல்லுவதுபோல் அவர்கள் முன்னதாய் கட்டணத்தை செலுத்தி விடவேண்டும். அப்போதுதான் கிராமத்திலுள்ள மற்றவர்களும் சங்க நீதிக்குக் கட்டுப்பட்டு பயந்து நடந்து கொள்வார்கள். கடவுளும் நமக்கு நல்ல கதியளிப்பார். நிர்வாக சபையார்கள் முக்கியமாய அறிந்து கொள்ள வேண்டிய மனுமுறைகண்ட வாசகத்தை 60 வது பக்கத்திலும், நாட்டார்கட்கொரு நல்லுரையை 57-வது பக்கத்திலும் பார்க்கவும்.

 

வன்னிகுல க்ஷத்ரியர் சீர்திருத்த

ஜாதிக்கட்டுமுரி + முச்சலிக்கை

 

193              ஸ்ரீ                மீ                உ

ஜில்லா       தாலுகா

 

கிராமத்திலிருக்கும் வன்னிகுல க்ஷத்ரிய கிராம சங்க நாட்டு நிர்வாக சபையார்களாகிய இராஜவன்னிய ராஜஸ்ரீ

குமாரர்        1

2

3

4

5

 

ஆகிய உங்களுக்கு அடியில் கையெழுத்தும் கைநாட்டும். செய்திருக்கும் க்ஷை கிராமத்திலுள்ள வன்னிகுல க்ஷத்ரியர்களாகியே நாங்கள் எழுதிக் கொடுத்த ஜாதிக்கட்டு முரி முச்சலிக்கை யென்னவென்றால்

 

(1) இன்றுமுதல் தொடங்கி நமது குல முன்னோர்கள் வழக்கப்படி நாட்டாண்மை சங்கத்தார்களாகிய நீங்கள் ஏற்படுத்தும் நிபந்தனையின் படிக்கு நாங்கள் நடந்து கொள்ளுவதுடன். கற்பிக்காமை, வாட்சண்டை, வாய்மொழி, தப்பு முரைபேதம் குலபேதம், ஜாதிப்பிரஷ்டம், லாகிரி முதலிய வஸ்துக்களை உபயோகித்தல், அளர்ச்சாரங்களுக்கு உல்படிந்து ஜாதிக்கடாத காரியங்கள் செய்வது ஆகிய குற்றங்களைச் செய்வோமானால் ஆண் பெண்களாகிய நாங்கள் மேல்கண்ட உங்களால் முன்னோர் வழக்கப்படி ஏற்படுத்தும். கண்டனை தென்டனை இல்

உள்ளாகிறோம்.

 

(2) ஆண்களோ, பெண்களோ தெருவில் நின்றுவாயில் வந்தபடி பேசி சச்சரவு செய்வதில்லை. விவகாரமிருந்தால் நாட்டு சங்கத்தாரிடம் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அத்துமீறி நடந்தால் ஆண்களுக்கு 0-4-0-ம் பெண்களுக்கு 0-2-0-ம் ஜாதிக்கட்டணம் விதிக்க மனப்பூர்வமாய் ஒப்புக் கொள்ளுகிறோம். (பெண்கள் தப்பிதத்திற்கு புருஷர்களும், சவரட்சணைக் கர்த்தர்களும் ஜவாப்தாரிகளாக வேண்டும்.)

 

(3) கிராமத்தில் நம்குலஸ்தரில் யேற்படும் கூட்டம் முதலியதுகளுக்கு வராமலும், கூட்டத்திற்கு வந்திருந்து அவமதித்துப் போய்விட்டாலும், கூட்டத்தில் வீண் வார்த்தைகள் பேசி கலகம் செய்தாலும், மேல்கண்ட கண்டனைக்கு உள்ளாகிறோம்.

 

(4) ஷை சங்க நாட்டாண்மைதாரர், வெகுஜன மெஜாரட்டியார் தீர்மானிக்கும் சங்க கட்டணத்தை வாய்தாபடி கட்டத் தவறினால் நமது குல முன்னோர்கள் வழக்கப்படிக்கு எங்களை ஜாதிக்கட்டு முதலியது கட்ட இதனால் நாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக் கொள்கிறோம்.

 

(5) மேற்கண்ட சங்க நாட்டாண்மைகளுக்கும் நமது குலஸ்தர்களுக்கும் தெரியாமல் மேற்கண்ட எந்தவித விவகாரத்தைக் குறித்தும் ஷை யார்கள் உத்தரவில்லாமல் கோர்ட்டு நடவடிக்கையாகிய மேலுக்குப் போகிறதில்லை.

 

(6) சங்க நாட்டாண்மைதாரர்களால் பாரபட்சமாக விசாரித்து கட்சிக்காரரில் ஒருதலையாக பேசுவதாக வெகுஜன மெஜாரட்டியார்களுக்கு யேற்படுமானால் சுத்துப்பக்க கிராம குல நாட்டாண்மைகளையும், தாலூகா, ஜில்லா, மகாசங்கத்தார்களையும் வரவழைத்து விசாரித்து நீதி நடத்தும்படிக்கும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதற்காக ஏற்படும் செலவுகளை மனுதாரர்களே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

 

(7) ஒவ்வொரு வீடுகளிலுள்ள ஆண்பெண் பிள்ளைகளை 5-வயது முதல் 12 அல்லது 15 வயதளவும் கல்விச் சாலையில் விடவும், பிறகு கைத்தொழில் முதலான வேலைகள் கற்றுக் கொடுப்பதுடன், நமது வம்சத்துக் குண்டான சுதர்மமாகிய குலதரும தேவஸ்தான தருமங்களுக் கீடுபடுவதுடன் சங்கத்திற்கென வருடவாரியில் ஏற்படுத்தும் தலைக்கட்டு தருமங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் சொல்லாமல் உட்பட்டு நடந்து கொள்ளுகிறோம்.

 

(8) இதில் கண்ட எந்த அம்சங்களை மீறினாலும், மீற முயன்றாலும், ஜாதிப் பிரஷ்டமான கட்டுதிட்டங்களுக்கு உட்படுகிறோம்.

 

(9) குல ஒற்றுமையுடன் சர்வ நியாயத்துக்கும் உள்படுவதாக எங்கள் மனப்பூர்வமாய் சம்மதித்து மேல் கண்ட அம்சங்களை எங்களுக்கு வாசித்துக் காண்பிக்கக் கேட்டு அதில் கண்டபடி நடந்து கொள்ள சம்மதித்து இதில் கையெழுத்தும் கைநாட்டும் செய்திருக்கிறோம்.

 

  1. இந்த முச்சலிக்காபாரத்தை 12.அணா ஸ்டாம்பு கடிதத்தில்எழுதி கிராமத்திலுள்ளவர்களிடம் கையொப்பங்கள் வாங்கிதலைவரிடம் கொடுத்து வைக்க வேண்டும். ஷை விவகாரங்களில் வரும் வரும்படியைக் பொக்கிஷைதாரரிடம் சேர்த்துவிட வேண்டும்.

 

  1. நாட்டாண்மைதாரர். அந்தந்த ஊர் நாட்டாண்மை பெரியஊனக்காரர் சங்கத்தில் ஒருநிர்வாக மெம்பராகயிருக்கஅர்கல்வி, ஒழுக்கம் குலாபிமானம் வாய்ந்தவராயிருந்தால் அவரே அககிராம சங்கத்திற்கு தலைவராக யிருக்க வேண்டும். தலைவர் வேண்டும்.

 

பதவிக்குத் தகுதியில்லாவிட்டாலும் அவரை உபதலைவராகச் சேர்க்க வேண்டும். கிராமத்தின் பழைய வழக்கப்படி அவருக்கு சுபாசுப சேர வேண்டிய தாம்பூலம், தேங்காய் இம்மரியாதைகளை அவருக்கு முதலில் அளித்தல் வேண்டும். நாட்டு கட்டணம் ரூபாயை மாத்திரம் சங்க பொக்கிஷைதாரரிடம் சேர்த்துவிட வேண்டும். தேவாலய மாலை, மரியாதையையும் வழக்கப்படி நடத்திவர வேண்டும்.

 

  1. சங்கத்தலைவர்: கிராமத்திற்குத் தக்கபடி 5.7.9.11.13நிர்வாக மெம்பர்களைத் தெரிந்தெடுப்பதில் வயதும், கல்வியும், ஒழுக்கமும், நடுநிலைமையும் கொண்ட ஒருவரை அந்த கிராம சங்கத்திற்கு தலைவராகத் தெரிந்தெடுத்தல் வேண்டும்:

 

  1. உபதலைவர்: 9.11.13மெம்பர்கள் தெரிந்தெடுக்கும்கிராமங்களில் மேற்கண்ட பொறுப்பு வாய்ந்த மற்றொருவரையோ, நாட்டாண்மை தாரரையோ உபதலைவராக அமைத்துக் கொள்ள வேண்டும். 5.7 மெம்பர்கள் உள்ள கிராமங்களில் அங்குள்ள சவுகர்யப்படி உபதலைவரை அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

  1. தலைவர்வேலை ஒவ்வொரு கிராமசங்க நாட்டு நிர்வாகசபை கூட்டங்களுக்கு வந்து அக்ராசனம் வகித்து சங்க காரியங்களைநடுவு நிலைமையாக நடத்தி வரவு செலவு கணக்குகளை காரியதரிசி எழுதியிருக்கிறாரா? பொக்கிஷதாரர் பணத்தை வரவு செலவுக்கு சரியாய் வைத்துக்கொண்டிருக்கிறாரா? இராப்பள்ளிக்கூடம் சரியாய்

நடக்கிறாதா? என்று கவனித்து வரவேண்டும் உபதலைவருக்கு உதவியாகயிருந்து ஷ காரியங்களை கவனித்து

வரவேண்டும்.

 

  1. பொக்கிஷதாரர்:- தலைவருக்கு அடுத்தபடியாக, கிராமத்தில் பணக்காரராயும், சங்கப் பணத்தை மஞ்சள் துணியில்முடிபோட்டு வைத்து அதில் ஒருகாசும் கையாளாமல்படிக்குசங்கதெய்வத்திற்குப் பயந்து கேட்டபோது ஒருகாசும் குறைவின்றி கொண்டுவந்து கொடுக்கக் கூடியவராயுமுள்ள ஒருவரை பொக்கிஷதாரராகத் தெரிந்தெடுத்து சங்கப் பணங்களை அவரிடம் கொடுக்க வேண்டும்.

 

  1. சங்கநிதி: சங்கப் பணத்தில் இரவு பள்ளிஉபாத்தியாயருக்கு பிரதிமாதமும் சம்பளம் கொடுக்கவேண்டியிருக்குமாகையால் மிகுதிப்படாது. ஒருகால் குலாபிமானம் பெருங்குணம் வாய்ந்த செல்வர்கள் அதிக தொகை கொடுத்து கையிருப்பிலிருந்தால் தக்க பொறுப்பின் பேரில், தற்காலத் தலைவர் தற்கால பொக்கிஷதாரர் இருவர் பேரிலும் கடன்பத்திரம், பாண்டுகள் பிறப்பித்துக் கொண்டு கடன் கொடுத்து விர்த்தி செய்ய வேண்டும்.

 

  1. தனபத்திரம் கிராமத்திலுள்ள குலாபிமானச் செல்வர்கள்கிராம சங்கம் நீடுழி நடந்து தமதுபெயர் சந்திர, சூரியாஉள்ளவரையில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமென்கிற தரும குணத்தால் சங்கத்தின் பேரால் 1/2 அல்லது 1 ஏக்கர் நிலம் தானம் செய்து வைக்கலாம். அவ்வித தான பத்திரங்களை தற்காலமுள்ள சங்கத்தலைவர், தற்காலமுள்ள சங்க பொக்கிஷதாரர் இன்னின்னார். என்றவர் பேர்களால் தான பத்திரம் எழுதி யாதொரு வில்லங்கமும் இல்லாதபடிக்கு சங்கத்தாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதில் இத்தரும சொத்து வன்னிகுல க்ஷத்ரியாயாவருக்கும் பொது என்று எழுதியிருக்க வேண்டும். அவ்வித மூலதன வரும்படியைக் கொண்டு தானஞ் செய்பவர்கள் பேரால், இராப் பள்ளிக்கூடத்தையோ. நாயன்மார், ஆழ்வார் திருநட்சத்திரங்களையோ, தானஞ் செய்பவர் இஷ்டப்படி சங்கத்தார் நடத்தி வரவேண்டும். கூடுமானால் இவ்வித சொத்துக்களை சென்னை வன்னிகுல க்ஷத்ரிய மகாசங்கத்தார் பேரில் எழுதிவைத்து அவ்வித தருமங்களையும் நடத்திவரலாம். 10 ஏக்கராவுக்குக் குறையாத நிலமுடையவர்கள் 1/2 ஏக்கராவும் 20 ஏக்கராவுக்குக் குறையாத நிலமுடையவர்கள் 1 ஏக்கராவும் சங்கம் என்ற மைந்தனுக்கு தானஞ் செய்வார்களானால் அவர்கள் பெயர் என்னாளும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். மற்ற சொத்துக்களை அவரவர்கள் குடும்ப போஷணைக்கு தக்கப்படி உயில் மூலம் எழுதி வைத்து தனக்குப் பிற்காலத்தில் தன் மைத்தர்களும், வார்ட்களும், வீண் விவகாரம் செய்து கோர்ட்டு கச்சேரிகளில் அழித்து விடாமல் செய்வதே வன்னிகுலச் செல்வர்கள் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும். நிலம் சங்கத்திற்கு தானஞ் செய்ய சவுகாயப் படாவிடில் 500 ரூபாய் 1000 ரூபாய் ரொக்கமாக நிலங்களின் பேரில் கடன் கொடுத்து அந்த வட்டியைக் கொண்டு அவரவர்கள் இஷ்டப்படும் சங்க தருமங்களை நடத்திவரவும் ஏற்பாடு செய்யலாம்.

 

50 பெரிய குற்றங்கள் கொலை, களவு, கொடுத்துன்பம், மோசம், முதலிய பெரிய குற்றங்களை கிராமசங்கத்தார் விசாரிக்கக் கூடாது அவையெல்லாம் மாஜிஸ்ட்ரேட்டுகள் முன்னால் விசாரித்து பைசலாக வேண்டிய பெரிய குற்றங்களாகும். ஜாதிக்கட்டு முரிமுச்சலிக்கையில் கண்ட வாதிப்பிரதிவாதிகளின் சம்மதத்தின் பேரில் கிராம சங்கத்தார் பைசல் செய்ய வேண்டும்.

 

  1. சங்கக் கட்டணம். அந்தந்த விவகாரத்திற்குத் தக்கபடிவாதிப்பிரதிவாதிகளின் நிலைமையை அனுசரித்து மெம்பர்கள் கலந்து கொண்டு நியாயமாக விதிக்க வேண்டும்,

 

  1. விவகாரங்களை பைசல் செய்ய வாரத்தில் ஒரு நாள்பகல் 11-மணி முதல் மாலை 3மணி வரையில் ஏற்படுத்திக் கொண்டு அன்றே அவைகளை தீர்மானம் செய்தல் வேண்டும். காலை மாலையில் அவரவர்கள் சொந்த வேலைகளை கவனிக்கவும் சவுகர்யமாயிருக்கும்.

 

  1. ஜீவனாம்சம், மறுமணம் முதலிய குடும்பவிவகாரங்கள்:- க்ஷை விவகாரங்களைப் பைசல் செய்யும்நாட்டாண்மைதாரர்கள் சில தாலூக்காக்களில் தரும நீதிக்கும். இந்துலாவுக்கும் விரோதமாக விவகாரங்களை நடத்தி வருவதாய் ஏற்படுகிறது. அவ்வித விவகாரங்களைப் பைசல் செய்யவோர் இந்துலாவில் அடியிற்கண்ட செக்ஷன்களைப் பார்வையிட்டு  அதன்படி விவகாரங்களை ஒழுங்ககாக பைசல் செய்தல் வேண்டும். இந்துலா செக்ஷன் 38,311,312,36,304,305,313,32,37,4,24,2 இந்தியன் பினல்கோட் செக்ஷன் 494-ஐ பார்க்கவும்.

 

பால்யவிவாகம்: எந்த காரணத்தை முன்னிட்டும் ருதுவாகாத பெண்ணுக்கு விவாகம் செய்யக்கூடாது. அது சாரதா சட்டப் பிரகாரம் குற்றமாகும். வீண்செலவும், சதிபதி சுகமின்மையும், கடன் தொல்லையால் குடும்பம் கெட்டுப்போக காரணமுமாக யிருப்பதால் பால்ய விவாகம் கண்டிப்பாய் கூடாது.

 

இவ்வித விவகாரங்களைப் பற்றி நாம் எழுதியிருக்கும், சட்ட சம்பந்தமான விஷையங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நேரில் வந்தே ஜட்ஜ்மென்ட் யாவும் தெரிவித்தல் வேண்டும்.

 

  1. சிவில் விவகாரங்கள்:- சிவில் சம்பந்தமானபாகப்பிரிவினை அக்குபாத்தியம், உயில், ஜீவனாம்சம் முதலியவிவகாரங்கள் கிராமங்களிலேயே சங்கபஞ்சாயத்தார்கள் மூலமாய் எழுதி பைசல் செய்துக் கொள்ளவேண்டுமென்ற எண்ணம் மிராசுதாரர்களுக்கும், வாதிப் பிரதிவாதிகளுக்கும் யிருக்குமானால் இருதரப்பார்களிடமும் முதலில் முச்சலிக்கை பெற்றுக் கொண்டு. சொத்துக்கு ஏற்றவிதமாக பாகப்பிரிவினை பத்திரம், அக்கு விடுதலை, உயில் இதுகளை எழுதி ரிஜிஸ்டர் செய்ய ஏற்படும் தொகையும், சொத்தின் மதிப்புக்கு ரூ.100-க்கு சங்க கமிஷைன் ரூ.1-0-0 வீதம் இருதரப்பார்களிடம் முதலில் பெற்றுக் கொண்டே விவகாரங்களை பைசல் செய்தல் வேண்டும். பெரிய சொத்து, கஷ்டமான விவகாரங்களாகயிருந்தால், சங்கத்தார் ஒரு வக்கீலைக் கலந்து கொண்டு சட்டத்திற்கு பாதகமில்லாமல் எழுதி முடித்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இத்தகைய விவகாரங்களை பைசல் செய்ய கிராம சங்கத்தார் இந்துலா, இந்தியன் பீனல்கோட் முதலிய தமிழ் சட்டபுஸ்தகங்களைப் படித்து விவகாரங்களை பைசல் செய்யும் விதத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்விதம் கிராமமிராசு தாரர்கள் செய்வார்களேயானால் தங்கள் சொத்து பிற்காலத்தில் கோர்ட்டு விவகாரங்களில் அழிந்து போகாமல் குடும்பத்திலுள்ளவர்களும் வீண்வியாஜ்யமின்றி சுகமாய் அநுபவிப்பார்கள். அதனால் கிராமசங்கத்திற்கும் அநுகூலம் ஏற்படும்.

 

  1. மேற்படி விவகாரங்களில் கிடைக்கும் சங்க சகாயதனம், பொக்கிஷதாரரிடம் சேர்க்கவேண்டும்.கமிஷன்களையும்சங்கசெலவிற்கென வருடவாரியில் தலைக்கட்டின்பேரிலோ, அல்லதுஏக்ரா  பேரிலோ அந்தந்த கிராமங்களுக்கு ஏற்றபடி வரிவிதித்துக் கொண்டு வசூல் செய்துவரவேண்டும்.

 

56.காரியதரிசி – இவராலேயே சங்கவிவகாரங்கள் சரியாய் நடைபெறவேண்டும். இவர் எழுதப்படிக்கத் தெரிந்தவராகயிருக்க வேண்டும். சங்ககணக்கையும், சங்கமீட்டிங்கில் நடக்கும் விவகாரங்களையும் அதற்கென தனித்தனிபுஸ்தகங்கள் வைத்து கொண்டு இவர்கை பட எழுதிவரவேண்டும். சங்கம் சம்பந்தமாக வெளியூர்களிலுள்ள குலாபிமானிகளுக்கோ தலைமைச் சங்ககளுக்குகோ இவரே கடிதப்போக்கு வரத்து செய்துவரவேண்டும். இவர் பணக்காரராகயிருக்கவேண்டு மென்ற அவசியமில்லை. நன்றாய் எழுதப்படிக்கத்தெரிந்தவராய் மாத்திரம் யிருக்கவேண்டும். கிராமத்திலுள்ளவராயும் நமது மரபு உபாத்தியாய ராயுமிருந்தால் அப்பேர்க்கொற்றவரை சங்கக்காரிய தரிசியாக ஏற்படுத்திக் கொள்ளலாம்.

 

  1. இவர் இதரமெம்பர்கள் தன்னை தூஷித்தாலும்அவமதித்தாலும் சங்கமே நமக்கு தெய்வம், சங்கத்தை நடத்துவதேநமது கடமை, அதற்காகவே நாம் இந்த வகுப்பில் பிறந்திருக்கிறோமென்ற எண்ணமுடையவராக யிருக்கவேண்டும். இவரது அருமையான உழைப்பின் முயற்சியால் தான் இராப்பள்ளிக்கூடம், இதர சங்க தருமங்களெல்லாம் நடந்து வரவேண்டும். ஜாதிப் பத்திரிக்கைகளையும், புஸ்தகங்களையும் வரவழைத்து எல்லோருக்கும் வாசித்துக்காட்டவேண்டும். புஸ்தகம் தருவித்துக் கொள்ளவேண்டும்.

 

  1. இவரது ஜாதியபிமான உழைப்பால் தான் கிராமங்களில் தெய்வீகவாழ்க்கை ஏற்பட்டு நல்ல பெயர் கிடைக்க வேண்டுமாகையால்சுயநலகுணமின்றி பொது நலத்திற்கு உழைப்பவராயிருக்க வேண்டும். மற்ற பிரசிடென்ட், பொக்கிஷதார் மெம்பர்கள் சங்க விஷயத்தில் அக்கறை குறைந்தவர்களாக யிருந்தாலும் அவர்களை அடிக்கடி தூண்டுதல் செய்து சங்க விவகாரங்களை விடாமல் நடத்தி வரவேண்டும். பிரதி வருடத்திலும் ஆரம்ப வைபவத்தை நடத்தியதுபோல் வருடாந்திர மகாநாடுகளையும் நடத்திவர வேண்டும்.

 

  1. சங்கத்தின் பொறுப்பு யாவும் அவரையே சேர்ந்ததாகையால் மெய்வருத்தம் பாராமலும், பசிநோக்காமலும், எவ்வெவர்தீமையும் மேற்கொள்ளாமலும், அருமையும் பாராமலும், அவமதிப்பும் கொள்ளாமலும் சங்கக் கருமமேதனக்குக் கண்ணாகயிருந்து உழைத்து வரவேண்டும்.

 

  1. காரியதரிசியாகயிருப்பவர் வரவு பணத்தை கணக்கில் வரவுவைத்துகொண்டு அப்போதைக்கப்போது பொக்கிஷதாரரிடம்நேரில் கொடுத்து சங்கக் கணக்கில் அவர் கையொப்பம் பெற்றுக் கொள்ளவேண்டும். காரியதரிசியாக யிருப்பவேரே இராப்பாடசாலை உபாத்தியாயராகயிருந்து நடத்திவந்தால் மிக்க விசேஷம். அக்கறையாகப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். அவருக்கு மாதசம்பளம் சங்கத்திலிருந்து கொடுத்து விடவேண்டும்.

 

  1. சங்கநாட்டு நிர்வாகசபைகூட்டம்: தலைவரும்உபதலைவரும் பொக்கிஷதாரரும் காரியதரிசியும் மெம்பர்களும்இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது மூன்றுமாதத்திற்கு ஒருமுறையோ கட்டாயம் மாதந்தரக்கூட்டத்தை காரியதரிசி கூட்டவேண்டும். அக்கூட்டத்தில் சங்கப்பணம் வரவு இவ்வளவு செலவு இவ்வளவென்றும் இருப்பு இவ்வளவென்றும் விபரமாய் மெம்பர்களுக்குப் படித்துக்காட்டி படித்தவர்களிடம் கையொப்பமும் படியாத மெம்பர்களாகயிருந்தால் கைநாட்டும் சங்க புரொசீடிங்கில்வாங்கவேண்டும். இக்கூட்டத்தில் நடக்கும் சங்கவேலைகளை இதரவிவகாரங்களையும் அப்புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டும்.

 

  1. நிர்வாகசபை மெம்பர்களின் கடமை:தலைவர். காரியதரிசி பார்த்துக்கொள்வார்கள் நமக்கென்ன யென்றுயிருந்து விடக்கூடாது.அவரவர் வீட்டு கழணிவேலைகளையெப்படி தினப்படி கவனிக்கிறோமோ அப்படியே மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்ததும் இராப்பள்ளிக்கூடத்தைபோய் பார்ப்பதும், பஜனை நடந்து வருகிறதா என்று கவனிப்பதும், தினப்படி ஓய்வான சமயங்களில் ஆலயங்களுக்குச் சென்று கடவுளைத் தொழவும்வேண்டும். சங்ககட்டணம் யாராவது செலுத்தாதிருந்தாலும், சங்கப் பணத்தில் வட்டிகட்டாமலிருந்தாலும் அதை வாங்கிவந்து காரியதரசி மூலமாம் பொக்கிஷதாரக்கு அனுப்பவேண்டும். பள்ளிப்பிள்ளைகள் இராப்பள்ளிக்கூடத்திற்குச் சரியாய் வருகிறார்களாயென்றும் கவனிக்க வேண்டும்.

 

  1. வருடாந்தர மகாநாடு கிராம நாட்டு சங்கம் ஆரம்பித்துமேற்கண்டவீதம் ஒருவருடம் பூராவும் நடத்தி முடிந்ததும்வருடாந்தரக்கூட்டம் கூட்டவேண்டும். இக்கூட்டமானது அந்தந்த ஊரில் ஏற்படும் தேர், திருவிழா காலங்களில் வைத்துக்கொள்வது நலம். ஏனென்றால் அவ்வித சமயங்களில் ஜனங்கள் வழக்கமாகவே கூடுவார்களாகையால் அதையொட்டி சங்க வருஷோற்சவமானாலும் சங்க ஆரம்பக்கூட்டமானாலும்.வைத்துக் கொள்வது மிக்கநன்மை. வருடாந்தரக் கூட்டம் கூடுவதற்கு ஒரு மாததித்ற்கு முன்பே வரவேண்டிய சங்கப்பணம் பாக்கிகளை எல்லாம் வசூலித்து அந்த வருட கணக்கைக்காட்டி பூர்த்தி செய்து விடவேண்டும். வருடாந்தரக் கூட்டத்திற்கு ஒரு சபாநாயகரை இதர இடங்களில் இருந்து இடங்களிலிருந்து நியமித்துக் கொண்டு கிராமத்திலுள்ள வன்னிகுல க்ஷத்ரியர்கள் அனைவரையும் வருவித்து அவர்கள் எழுதிக்கொடுத்திருக்கும் முச்சலிக்கையில் கண்ட ஷரத்துபோல் அக்கூட்டத்திற்கு கட்டாயம் வரவேண்டுமென ஏற்பாடு செய்து பெருங்கூட்டம் கூட்டி அந்த வருடத்திய வரவு, செலவு. இருப்புக் கணக்கை அவர்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும்.

 

  1. சங்கயிருப்புத் தொகையை அனுசரித்து சென்னைவன்னிகுலக்ஷத்ரிய மகாசங்கத்திற்கு சக்தியாநுசாரம் ரூ500 க்கு குறையாமல் கட்டணம் செலுத்தி அதன் ஆதரவில் இக்கிராம நாட்டு சங்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் கிராமசங்க அபிவிருத்தியை நாடாமல் குலாபிமானமின்றி அதிகாரத் தோரணையில் நடப்பதாக கிராம நாட்டு சங்கத்தாருக்குத் தோன்றுமானால் அவர்கள் தொடர்பை விட்டு கிராமநாட்டு சங்கத்தை கயேச்சையாகவே ஜில்லா, தாலூகா சங்க ஆதரவில் நடத்திவர வேண்டும்.

 

சங்கசீல்:- அந்தந்த கிராம சங்கத்தின் பெயரமைத்த சீல் ஒன்று யிருத்தல் வேண்டும். சங்க சம்பந்தமான எல்லா ரிகார்டுகளின் பேரிலும் அச்சீலைப்போடுதல் வேண்டும். அது காரியதரிசியிடமிருக்க வேண்டும்.

 

  1. 65. நூதன நிர்வாக சபை மெம்பர்களை தெரிந்தெடுத்தல்:-கிராம நாட்டு சங்க நிர்வாகசபை மெம்பர்களில்யாரேனும் தெய்வீகமாக காலகதியடைந்து விட்டாலும், ஒரு மெம்பரின் நடவடிக்கை சங்க வேலைகளுக்கு இடையூறாகவும், கட்டு திட்டங்களுக்கு அடங்கி நடக்காதவராகவுமிருக்கிறாரென்று பலருக்கும் தோன்றுமானாலும், அப்பேர்க்கொற்றவருக்கு பதிலாகவாவது தள்ளாமை, அசௌக்கியம் முதலிய காரணங்களால் ராஜிநாமா செய்து விட்டால் அவருக்கு பதிலாகவாவது வருடாந்தர கூட்ட உள்ள வெகுஜன வன்னிகுல க்ஷத்ரியர் வாக்குப்படி தகுந்த ஒருதெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

சங்கக் கட்டளை

 

கிராமத்தவர் அவசியம் ஒழுகுதல் வேண்டும்.

 

  1. அதிகாலையில் எழுமுன் கடவுளை நினைத்து எழு.

 

  1. சுத்தனாக மதக்குறியணிந்து கடவுளை ஒருமனதாய்க் கீழ்திசைநோக்கித் துதித்து வேலைக்குப்புறப்படல், நெற்றியில்ஒன்றுமிடாமல் உண்ணும் உணவானது மலத்திற்குச் சமானமென முன்னோர்கள் கூறியிருப்பதால், கட்டாயம் நெற்றியில் மதக்குறி யணிந்தே புசித்தல்,

 

  1. தேசம். ஆடை, வீடு, பொருள்களைச் சுத்தமாய் வைத்துக்கொண்டு சுகாதாரத்தைப் பின்பற்றல்.

 

  1. உயர்வு, தாழ்வு, மதம், நிறம், அந்தஸ்து பேதங்களைஜனசமுதாயத்தின்கண் பாராட்டலாகாது.

 

  1. சாத்தியமானவரை சினத்தை அடக்கிப் பொறுமையைப்பெறப்பழகல்.

 

  1. பிறர்பொருளைக் கவர நினைப்பதையும், சூதையும், பொய்வழங்குதலையும் விட்டொழிக்க வேண்டும். அவை முதலில்இன்பம் அளித்து பின் பலநாளைக்கும் துன்பம் தருவன.

 

  1. ஜீவவதையும், குடிப்பதையும்விட்டுவிடல். குடிப்பதால்பலகுடிகள் முழுகிப்போய் வருமையாயினர்.

 

  1. பிறமனைவியைக்காணின் பரதேவதையாக நினை’ என்றமஹாத்மா வாக்கை மறவாமை.

 

  1. வரவுக்குமேல் செலவு செய்யாதிருக்க முயற்சித்தல், கடனேகனத்த துயர்தரும். (தலைமேலுள்ள கல்.)

 

  1. சங்கச் சந்தாவைச் சரியாய்ச் செலுத்திச் சங்கக் கூட்டத்திற்கு

இயன்றவரையில் தவறாது விஜயம்செய்தல்.

ஸ்ரீ

விநாயக கலச பூஜா விதிக்கிரமம்

ஆசம்ய-ஆசமநீயம் செய்யவும் (பிறகு)

 

சுக்லாம் பரதரம் விஷ்ணும், ஸஸிவர்ணம் சதுர்புஜம்!

ப்ரஸந்த வதநம் த்யாயேத், ஸர்வ விக்நோப ஸாந்தயே!

அயம் முஹுர்த்த: ஸுமுஹுர்த்தோஸ்த்திதி பவந்தோ

மஹந்தோநுக்ருஹ்ணந்து

 

அயம் முஹுர்த்த: ஸுமுஹுர்த்தோஸ்து (என்றுசொல்லி நமஸ்காரம்

செய்ய வேண்டியது.)

 

  1. த தேவ லக்கம் சுதிநம் த தேவ தாரா பலம் சந்த்ர பலம்

தேவ வித்யா பலம் தைவ

தே அங்க்ரி யுக்மம் ஸ்மராமி

பலம் ததேவ லக்ஷ்மீ பதே

 

  1. லாபஸ்தேஷாம் ஜயஸ் தேஷாம் குதஸ் தேஷைம் பராபவ

ஏஷா மிந்தீவரஸ்யாமோ ஹ்ருதயஸ்தோ ஐநார்த்தது.

 

  1. ஆபதா மப ஹர்த்தாரம் தாதாரம் ஸர்வு ஸம்பதாம்,

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

(என்று சொல்லி புத்தியும் குட்டும் போடவேண்டியது.)

 

சர்வவிக்நச் சிதே தஸ்மை ஸ்ரீ கணாதிபதயே நம

 

(என்று சொல்லிப்ராணாயாமம் செய்யவும் அதாவது ஆள்காட்டி விரலினாலும் பெரியவிரலினாலும் மூக்கைபிடிப்பது இம்மாதிரியாக மூக்கைப் பிடித்துக்கொண்டு கீழ்க்குறிப்பிட்ட மந்திரத்தை சக்திக்கு தக்கவாறு ஐபிக்கவும்.)

 

ஓம்பூ: ஓக்ம்ஸத்யம்

ஓம்புவ: ஓம்தத்ஸ விதுர்வரேண்யம், பர்க்கோதே

ஓக்ம்சுவ: வஸ்ய தீமஹி தியோயோந: ப்ரசோதயாத்

ஓமாபோஜ்யோதி ரஸோம்ருதம் ப்ரஹம்

ஓம்மஹ்: பூர்ப்புவஸ்ஸுவரோம்.

(என்று ஐபித்துக் கொண்டு மூச்சை விடவும் )

 

சங்கல்பம்

(வலது துடையின் பேரில் இடதுகையை வைத்து அதற்குமேல் வலதுகையால் மூடிக்கொண்டு செய்யும் கிரியை)

 

மம உபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வ

ப்ரீத்யர்த்தம் சுபசோபந முஹுர்த்தே, அத்யப்ரஹ்மண த்வீதிய

பரார்த்தே, ஸ்வேத வராஹகல்பே, வைவஸ்வத மந்வுந்தரே, கலியுகே,

ப்ரதமபாதே, ஜம்புத்வீபே, பரதவர்ஷே பரத கண்டே, சகாப்தே

மேரோதக்ஷிணதிக்பாகே, ஸமஸ்ததேவதா ப்ராஹ்மண ஸந்தி தெள

வர்த்தமாநேந வ்யாவஹாரிக சாந்த்ரமாநேந ப்ரபவாதிஷைஷ்டி

சம்வத்ஸரானாம், மத்யே- நாமஸம்வுத்ஸரே-அயநே ருதௌ மாஸே!

பக்ஷே திதௌ-வாஸரயுக்தாயாம் ஏவம் குண விசேஷைண

விசிஷ்டாயாமாஸ்யாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பாதாம்.

க்ஷேமஸ்தைர்ய விஜயாயராரோக்ய ஐஸ்வர்யாபி விருத்யர்த்தம்,

தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த சித்யர்த்தம்

புத்ர பௌத்ராபி வர்ருதியர்த்தம், இஷ்ட காம்யார்த்த

 

சித்யர்த்தம்மநோவாஞ்சா பல சித்யர்த்தம், சமஸ்த துரி தோப

ஸாந்த்யர்த்தம் சமஸ்த்த மங்களா வ்யாப்யர்த்தம் வரஸித்தி

விநாயகாதேவதா முத்திஸ்ய பகவந்த்முகோல் லாஸ ப்ரீத்யர்த்தம்

சுல்போக்த ப்ராகாரேண யாவச்சக்தி த்யாநா வாஹநாதி ஷோடசோப

சார பூஜாம் கரிஷ்யே

(என்று சொல்லி கலசபாதரத்தில் யிருக்கும் மூலத்தை தொடவேண்டியது.)

 

ததங்கத்வேந கலச பூஜாம்கரிஷ்யே.

(வாழை இலையின் பேரில் பச்சரிசியை பரப்பி அதன் பேரில்

ஜலம் நிறைந்த சொம்பைவைத்து அதற்கு மாவிலை தேங்காய்

புஷ்பங்களால் அலங்கரித்து செய்யும் கிரியை.)

கலசம் கந்த புஷ்பார்ச்சதை ரப்பர்ச்ச

(என்று அக்ஷதையை கலசத்தின்பேரில் போடவும். ஒரு புஷ்பத்தை கலசத்தின் உள்ளே போட்டு)

தது பரி ஹஸ்தம் நிதாய

(என்று சொல்லி கையினால் கலசத்தை மூடிக்கொண்டு கீழே சொல்லிய மந்திரத்தைச் சொல்லவும்)

 

  • கலசஸ்ய முகே விஷ்ணு கண்டேருதிர ஸமாஸ் ரிதா

மூலே தந்ர ஸ்த்திதோ ப்ரஹ்ம மத்யே மாத்ரு கணாஸ்ம்ருதா.

 

  • குக்ஷெளது சாகரா ஸர்வே சப்த த்வீபாவ சுந்தரா ருக்வேதோ

அத யஜுர்வேத சாமவேதோ ஹ்யதர்வண:

 

  • அங்கைசை ஸஹிதா சர்வே கலசாம்பு ஸமாஸ் ரிதா

ஆயாஸ்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

 

  • கங்கேச யமுநேசைவ கோதாவரி ஸரஸ்வதி நாமதே வரிந்து

காவேரி ஜலேஸ்மிற் ஸந்நிதிக்குரு

 

ஆபோ பூர் புவ ஸ்ஸவ ரோம்

(என்று சொல்லி கலசத்தில் யிருக்கும் தீர்த்தத்தை கையில் எடுத்துக் கொண்டு பூசைக்காக கொண்டுவந்த சாமக்கிரியையின் பேரிலும் தன்னுடைய நெற்றியின் பேரிலும் தெளிக்கவும்)

 

சுலசோதகேன பூலாதரவ்பாணி தேவ மண்ட்ப மாத்மநம்

சம்ப்ரோக்ஷ்ய

என்று சொல்லவும்.

 

கணபதி பூஜா

மஹா கணாதிபதிம் தயாயாமி

(என்று சொல்லிக் கொண்டு நமஸ்காரம் செய்யவும்)

 

மஹா கணாதிபதிம் ஆவாஹயாமி

(என்று சொல்லி அலங்காரம் செய்யவும்)

 

மஹா கணாதிபதியே ஆஸமநம் சமர்ப்பயாமி.

மஹா கணாதிபதியே அர்க்யம் சமர்ப்பயாமி

மஹா கணாதிபதியே பாதியம் சமர்ப்பயாமி

மஹா கணாதிபதியே ஆசமநீயம் சமர்ப்பயாமி

மஹா கணாதிபதியே ஒளபசாரிக ஸ்நாநம் சமர்ப்பயாமி

 

மஹா கணாதிபதியே ஸ்நாநாந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி

மஹா கணாதிபதியே வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் சமர்ப்பயாமி

மஹா கணாதிபதியே யஜ்ஞோப வீதார்த்தம் அக்ஷதாந் சமர்ப்பயாமி

மஹா கணாதிபதியே கந்தாந் தாரயாமி சமர்ப்பயாமி

மஹா கணாதிபதியே சுந்தஸ்யோபரி அலம்கரணார்த்தம் சமர்ப்பயாமி

மஹா கணாதிபதியே அசூதாந் சமர்ப்பயாமி

மஹா கணாதிபதியே புஷ்பம் பூஜயாமி சமர்ப்பயாமி

 

ஓம் சுமுகாய நம ஓம் பாலசந்த்ராய நம

ஓம் ஏகதந்தாய நம: ஓம் கஜாநநாய நம

ஓம் கபிலாய நம: ஓம் வக்ரதுண்டாய நம:

ஓம் கஜகர்ணிகாய நம ஓம் சூர்ப்பகர்ணாயநம:

 

ஓம் லம்போதராய நம : ஓம் ஹேரம்பாய நம

ஓம் விகடாய நம ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

ஓம் விக்நராஜாய நம ஓம் மஹா கணாதிபதயே நம

ஓம் கணாதிபாய நம ஓம் நாநாவித பரிமள புஷ்பாணி

ஓம் தூமகேதுவே நம ஸமர்ப்பயாமி, தூபார்த்தம்,

ஓம் கணாத்யக்ஷாய நம அக்ஷதாந் ஸமர்ப்பயாமி

 

மஹா கணாதிபதயே தீபார்த்தம், அக்ஷதாந் ஸமர்ப்யாமி,

ஓம் ப்ராணாய ஸ்வாஹா

ஓம் அபாநாய ஸ்வாஹா

ஓம் வ்யாநாய ஸ்வாஹா

ஓம் உதாநாய ஸ்வாஹா

ஓம் ஸமாநாய ஸ்வாஹா

ஓம் ப்ரஹ்மநே ஸ்வாஹா

ஓம் ப்ரஹ்மணீம் ஆத்மாம்ருதத்வாய ஸ்வாஹா

ஓம் மஹா கணாதிபதயே ஆசமநீயம்ஸமர்ப்பயாமி

ஓம் மஹா கணாதிபதயே தாம்பூல பல நிவேதாம், ஸமர்ப்பயாமி

 

(என்று ப்ரஸாதங்களை நிவேதநம் செய்யும்)

 

பிறகு மந்த்ர

ஹீநம் க்ரியா ஹீநம் பக்தி ஹீநம் கணாதிப யத் பூஜித மயாதேவ

பரிபூர்னாம் ததஸ்துதே அநயா ஷோட சோப சார பூஜயா பகவாந்

ஜர்வ தேவாத்மக ஸ்ரீ மஹா கணாதிபதி சுப்ர ஸந்நோ வரதோபவந்து

 

(என்று சொல்லி அக்ஷதையையும் புஷ்பத்தையும் கொஞ்சங் கையில்

எடுத்துக்கொண்டு ஜலத்தை வார்த்துக்கொண்டே கீழே விட

வேண்டியது.)

 

மம இஷ்டகாம்யார்த்த பலசித்தி ரஸ்து

என்று சொல்லி சாஷ்டாங்க தண்டம் சமர்ப்பிக்கவும்.

 

கணாதிபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி

(என்று புஷ்பத்தை தலையில் குடிக்கொள்ளவும்.)

 

 

ததங்கத்வேந: ப்ராண ப்ராதிஷ்டாபனம் கரிஷ்யே பூர்புவ:

ஸ்ஸுவரோமிதி திக்பந்த

(என்று த்யாநம் செய்யவும்.)

பிறகு

யத்கிசூசித் நிவேதநம் குர்யாத்

(வெல்லம் பழம் இவைகளை நிவேதனம் செய்யவும்)

 

அத வரஷித்தி விநாயக பூஜாவிதாநம்.

சுகந்தாநிச புஷ்பாணி ஜாதீ குந்தமுகாநிச

ஏகவிம்சதி பத்ராணி ஸம்க்ருஹாண நமோஸ்துதே.

ஸ்ரீ வரஸித்தி விநாயக புஷ்பம் பூஜயாமி

(என்று புஷ்பத்தை திருவடியில் சேர்க்கவும்)

 

(பிறகு நின்றுக் கொண்டு)

 

அந்யதா சாஹூம் நாஸ்தி த்வமேவ சரணம் மம

தஸ்மாத் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ விநாயக

(என்று பிரதக்ஷிணம்செய்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய

வேண்டியது)

 

ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்

சர்தேச நமஸ்கார கேசவம் ப்ரதிகச்சதி

மங்களம் பகவாந் விஷ்ணு மங்களம் மதுசூதந

மங்களம் புண்டரீகாக்ஷோ மங்களம் கருடத்வஜ

 

 

ஹரி:ஓம்.

ஓம் தத் ஸத்

 

வைஷ்ணவர்கள்

ஹரி: ஓம் என்றும்

மற்றவர்கள்

ஓம் தத்ஸத்

என்றும் சொல்லி ஆரம்பித்து முடிக்கும் காலத்தில் ஹரி ஓம் என்றும் சொல்லி முடிக்க வேண்டும்.

 

  • காலையிலெழுந்து அஞ்சலிப் பண்ணிக் கொண்டு

 

“ஹரிர்ஹரதி பாபாநி துஷ்டச்சித்தை ரபி ஸ்ம்ருத: அநிச்சயாபி

ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹ்யதே வஹி பாவக:”

 

என்று த்யாநிக்க வேண்டும். பிறகு

 

  • ஸௌக்யத்துக்குப் போதல்: (கொல்லைக்குப்போதல்)

ஸௌக்யமான பின்பு மிருத்திகையால் சௌசம்பண்ணி வாயை கொப்பளித்து, தந்ததாவநஞ் செய்து *ஆசமனம் பண்ணவேண்டும்.

 

தீர்த்தமாடுதல்-அவரவர்கள் தங்கள் தங்கள் உபாஸனா மூர்த்தியை த்யாநம் பண்ணிக்கொண்டு ஸ்நாநஞ் செய்து. துவட்டிக்கொண்டு தௌதவஸ்திரம் தரித்து ஆசமனமும் அங்கந்யாஸமும் செய்ய வேண்டும்.

 

 

 

புண்டரம்

 

திருமண்காப்பு தரித்தல்.- ஸ்ரீமதே ராமாநுஜாய நம்: என்று ஸ்தல சுத்திசெய்து ஓராஸத்தின் மீது திருமண் பெட்டியை எழுந்தருளப் பண்ணி “ஸ்ரீபூதேவ்யைநம:” என்று திருமண் கதிரை அபிமந்திரித்து “ஸ்ரீசைலேச” இத்யாதி தனியன் தொடங்கி திருப்பல்லாண்டு திருப்பாவை முதலியவற்றை திருமண் காப்பும் ஸ்ரீ சூர்ணமும் தரிக்கிறவரையில் அநுஸந்தித்து அஞ்சலி ஹஸ்தனாய் கேசவாதி நாமங்களை அநுஸந்திக்க வேண்டும்.

 

(a) திரிபுண்டரம்.- திரியக்காகிய புண்டாம் சிவப்பிரீதியாயுள்ளது; அது பாவத்தை யொழித்து மெய்ஞானத்தைத்தரும். அக்கினி ஹோத்திரத்திற் பிறந்த சுத்தமாகிய திருவெண்ணீற்றைக் கொண்டு (அக்கினிரதி) என்றது முதலிய பிருவாத் ஜாபாலோப நிஷைத்திலுள்ள ஏழுமந்திரங்களால் மந்திரித்து மஹாதேவரைத் தியானித்து, அவ்வெண்ணீற்றினைச் ஸர்வாங்கமும் உத்தூளனஞ் செய்துகொள்ள வேண்டும். பின்பு காலாக்கினி ருத்திரம் என்னும் பஞ்ச ருத்திரத்திலுள்ளதோர் உபநிடதத்தில் கூறியிருக்கும் விதிப்படித் திரியக்காகிய திரிபுண்டரத்தைச் சிரம், நெற்றி, மார்பு, தோள் முதலிய மூட்டிடங்களுமாகிய

 

சந்தியாகாலம்.

 

உபறயனமானபின் மாலைச்சந்தி முதற்செய்து கிரமமாக மற்ற சந்திகள் செய்ய வேண்டும்.

 

சூரியோதயத்திற்கு மூன்று நாழிகையிரும்போது நக்ஷத்திரம் தோன்றுகிறது முதல் சூரியபிம்பம் காணப்படுகிற வரையில் காலைசந்தி: அல்லது பிராதஸ் ஸந்தியா காலம்,

 

சூரியபிம்பம்: அமர்வது முதல், நக்ஷத்திரம் தோன்றுகிற வரையில் மாலைச்சந்தியா காலமாகும்.

 

மாலைச்சந்தி சூரியனோடு கூடியது உத்தமம், காலைச்சந்தி நக்ஷத்திரதோடு கூடியது உத்தமம், மத்தியானச்சந்தி சூரியன் உச்சியிலிருக்கும்போது உத்தமம். “காணாமல் கோணாமல் கண்டு கொள்க” என்பதும் இது.

 

உத்தமகாலத்தில் சந்தி செய்கிறவர்கள் விசேஷைபலனையும், மோக்ஷத்தையும் பெறுவார்கள் என்றார் கவுதமர்.

 

பிறந்தது முதலிய சூதங்கள். சித்தப்பிரமை, அவசரம், பயம் இவைகளொழிய மற்றெல்லாக்காலத்திலும் இரண்டு சந்தியா நுட்டானங்களும் செய்யத்தக்கதென்று விஷ்ணு புராணங் கூறுகின்றது.

 

நோய்த்துன்பமில்லாதவனும் சுகமாக விருப்பவமனுமாகிய இருபிறப்பாளன் சந்தியாவந்தனத்தை விட்டுவிட்டால் பிராயசித்தம் செய்து கொள்ள வேண்டியவனாகிறானென்று யோகயாக்குவல்கியர் கூறினார்.

 

சூதகத்தில் பிராஜாமாம முதலிய ஏனைய மந்திரங்களை மனதினாற் செய்து சந்திக்கடனை முடிக்க வேண்டுமென்று மரீசி

கறுகின்றனர்.

 

விடியற்காலமும் பிரதோஷைசமயமும் சந்திக்கடனுக்குச் சிறந்த காலங்களாகும். அது கடத்தலால் கருமத்திற்குரிய பொழுது. தவறிப் போதலில்லை என்று விருத்தமநு கூறினார்.

 

ஸந்தியாவந்தனம்

 

“அபவிதிர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபி வா

யச்மறேத் புண்டரி காக்ஷம் ஷபஹ்ய ப்யுந்தரஸ்ஸூதி புண்டரீகாக்ஷ

புண்டரீகாக்ஷ

புண்டரீகாக்ஷ

 

என்கிற மந்திரத்தை ஜபித்துக் கொண்டு “யஜ்ஞோப வீதத்தை நன்றாக தீத்திக் கொண்டு அஞ்சலி பண்ண வேண்டும்.

 

(ராகத்வேஷம் முதலான கெட்ட குணங்களுடன் கூடியவனாயும்

அசுத்தத்துடன் கூடியவனாயும். உள்ள என்னை பக்தி. ச்ரத்தை முதலான புநிதமான குணங்களை உண்டு பண்ண ஏ பகவந் க்ருபை கூர்ந்தருள வேணுமென்கிறது இச்லோகம்)

 

பிறகு ஒருபாத்திரத்தில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு

 

“சூரயஸ்ச மா மந்யுஸ்ச மந்யுபதயஸ்ச மந்யு க்ருதேப்ய: பாபேப்யோ ரக்ஷந்தாம் யத்ராத்ர்யா பாப மகார்ஷம் வாஸா ஹஸ்தாப்யாம் பத்ப்யா முதரேணஸிஞ்சா ராத்ரி தவலம்பது யத்கிஞ்ச துரிதம் மயிஇத மஹம்மா மம்ருதயோநௌ சூர்யேஜோதிஷுஜுஹோமி ஸ்வாஹா”

 

என்று சொல்லிக்கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும் அதாவது,

 

ஓம் கேசவாயஸ்வாஹா:

ஓம் நாராயணாயஸ்வாஹா:

 

என்று அநுஸந்தித்துக் கொண்டு மூன்றுதரம் உளுந்தளவு ஜலத்தை நெஞ்சு நனைகின்ற மாதிரி சாப்பிடவும்.

 

ஓம் மாதவாய ஸ்வாஹா:

ஓம் கோவிந்தாய நம:

ஓம் விஷ்ணுவே நம:

ஓம் மதுஸுதநாய நம:

ஓம் திரிவிக்ரமாய நம :

ஓம் வாமநாய நம:

ஓம் ஸ்ரீதராய நம:

ஓம் ஹ்ருஷீகேசாய நம:

ஓம் பத்மநாபாய நம:

 

இரண்டு கைகளையும் அலம்பிக் கொள்ளவும்.இரண்டு உதடுகளையும் துடைத்துக் கொள்ளவும். தீர்த்தத்தை நெற்றியில் தெளித்துக் கொள்ளவும். வலது கையில் ஜலத்தை எடுத்துக்கொண்டு காலின் மேல் வார்க்கவும்.

 

 

 

 

 

 

 

 

ஓம் தாமோதராய நம:

 

சிரஸில் ப்ரோஷித்துக் கொள்ளவும்.

 

ஓம் சங்கர்ஷைணாய நம:

 

மோவாய் கட்டையை விரல்களால் தொடவும்.

 

ஓம் வாசுதேவாய நம:

ஓம் ப்ரத்யும்நாய நம:

 

மூக்கைத் தொடவும்.

 

ஓம் அறிருத்தாய நம:

ஓம் புருஷோத்தமாய நம:

ஓம் அதோக்ஷஜாய நம:

ஓம் நரஸிம்ஹாய நம:

 

இரண்டு கண்களையும் தொடவும்.

இரண்டு காதுகளையும் தொடவும்.

 

ஓம் அச்யுதாய நம:

ஓம் ஜநார்த்தநாய நம:

ஓம் உபேந்த்ராய நம:

ஓம் ஹரயே நம:

ஓம் க்ருஷ்ணாய நம:

 

நாபியைத் தொடவும்.

ஹ்ருதயத்தைத் தொடவும்.

விரலின் நுணிகளால்

நெற்றியைத் தொடவும்.

இரண்டு தோள்களையும் தொடவும்.

 

(இதை தான் ஆசமநீயமென்றும் அங்கந்யாஸகரந்யாஸ்மென்றும் சொல்லுவார்கள்)

 

இதனுடைய கருத்து என்னவெனில்? ஸர்வசாஷியான பகவானும் ஜ்ஞானிகளும் குருக்களும் என்னை துர்க்குணங்களினால் உண்டாக்கப்பட்ட பாபத்தினின்றும் காப்பாற்ற வேண்டும் நான் முன் ராதரியில் கெட்ட புத்தியினாலும்,  வார்த்தைகளினாலும்

வ்யாபாரங்களினாலும், ப்ராணஹிம்சைகளினாலும் ஆஹாரங்களினாலும், ஸ்த்ரீபோகங்களினாலும் – இது முதலான கார்யங்களால் உண்டான பாபங்களையும் இன்னும் என்னால் அறியப்படாதன பாபங்களையும் அஹங்கார மமகாரங்களையும் போக்கி முக்திஸாதனமான மோக்ஷமென்கிற ஜ்யோதிஷால் ஜஹோமி எரித்து ஸ்வாஹா நன்றாக ரக்ஷிக்க வேணும் என்கிறதை வெளிப்படுத்துகின்றது. இதற்கு கீழே சொல்லப்பட்ட 24 மந்த்ரங்களும்த்ரிகரணங்களினாலும் பகவானுக்கு அடிமை  செய்ய வேணுமென்று காண்பிக்கின்றது. த்ரிகரணம் வாக்கினாலேயும் கைகளினாலேயும் செய்யும் கைங்கரியம், அதாவது மனஸால் நினைப்பது வாக்கால் சொல்லுவது கைகளால் செய்வது)

 

பிறகு உள்ளங்கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு

 

“உத்திஷ்டத்து பூதபிசாசாகிய: ஏதே பூமிபாரகா ஏதேஷாமவிரோதேந் ப்ரம்ம கர்ம ஸமாரபே”

 

என்று சொல்லிக் கொண்டு ஜலத்தை கீழே தெளித்து ஓர் ஆஸனத்தின் மீது ப்ராங்முகமாக உட்கார்ந்துக் கொண்டு ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.

 

இதனுடைய கருத்து சரீரத்திற்கு அபயசஸ்ஸை உண்டுப்பண்ணும் பூதபிசாசிகளாகிய காமக்ரோதங்களே சற்று

ஏன் எனில்? யான் ப்ரம்மகர்மமாகிற ஜபம் செய்ய

போகிறபடியால்.

 

ப்ராணாயாமமாவது பத்மாஸனத்துடன் உட்கார்த்து கொண்ட பூரகம், கும்பகம், ரேசகம் என்கிறபடி பூர்ண காயத்ரியை ஒரு தடவை ஜெபிப்பது. இப்படி மூன்று தடவை ஜபிக்கவும், அதாவது பவிதரவிரலையும் பெரிய விரலையும் மூக்கின்பேரில் வைத்துக் கொண்டு கீழ் குறிப்பிடும் 11-மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டு வலதுத் துவாரத்தால் காற்றை நன்றாக இழுக்கவேண்டியது (இதுவே பூரகம்) உடனே மூக்கை பிடித்துக்கொண்டு ஒருதடவை மேல் சொன்னப்ரகாரம் ஜூபிக்கவும். (இதுவே கும்பகம்) முடிந்ததும், மறுபடியும் 11 மந்திரத்தையும் ஐபித்துக் கொண்டு இடது மூக்கால் முச்சைவிடவும் (இதைதான் ரேசகம் என்கிறது. இப்படி ஒரு தடவை ஜபம் செய்வது ஒருப்ராணாயாமம். இப்படி 2 தடவை ஜபிக்க வேண்டியது.

 

பூர்ண காயத்ரியின் மந்திரம்

 

ஓம் பூ

ஓம் புவ:

ஓக்ம் ஸ்வ:

ஓம் மஹ:

ஓம் ஜந:

ஓம் தப:

ஓக்ம் ஸத்யம்:

ஓம் தத்ஸவிதுர் வரேண்யம்

பர்கோ (தேவஸ்யbeq

தீயோ யோந: ப்ரசோதயாத்

ஓம் மாபோஜ்யோதி ரஸோம்ருதம்

ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்

 

இதைதான் ப்ரம்ம வித்யை என்று சொல்லுகிறது. இப்படிப்பட்ட ப்ராணாயாமத்தை எவன் ப்ரதி தினமும் அனுஷ்டிக்கின்றானோ? அவன் ப்ரஹம்ம தேஜஸ்ஸை அடைவான்,

 

இப்படி ஜபம் செய்த பிறகு சங்கல்பம் செய்ய வேண்டும். (சங்கல்பம் என்றால் மனதால் செய்யப்போகும் கார்யத்தை நினைப்பது.) இடது கையை வலது துடையின் பேரில் வைத்து அதன்பேரில் வலது கையினால் மூடி கீழ்ச் சொன்ன மந்திரத்தை சொல்லவும்.

 

ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த ஸ்ரீமஹாவிஷ்ணோராஜ்ஞா

ப்ரவர்த்தமாநஸ்ய அதியப்ரஹ்மண: தவிதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வுந்தரே கலியுகே பிரதமபாதே ஜம்புதனியே, பரதவர்ஷே பரத கண்டே மேரோ தக்ஷிணதில்பாகே ஸ்ரீசைலஸ்ய – ப்ரதேஸே மத்யதேஸே சமஸ்ததேவதா ப்ராஹ்மண ஹரி ஹரஸந்நிதௌ அஸ்மிந் வர்த்தமாந வ்யாவஹாரிகசாந்த்ர மாந்த ஸம்வத்ஸ்ரே அயநே ருதௌ வாஸரே- சுபநக்ஷத்திரே சுபயோகே சுபகரணே ஏவம்குண விசேஷைண விசிஷ்டாயாம் சுபதிதௌ மமோ பாத்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர

 

ப்ரீத்யர்த்தம் ப்ராதா, மத்யா, சாயாந்த – ஷந்தியா முபாஸிஷேஷ்,

 

என்ற சங்கல்பம் முடிந்தவுடன் எழுந்திருந்து

 

“ப்ராயச்சித்தார்கிய பிரதானபூர்வக பிராத மர்கிய

பிரதாநம்கரிஷ்யே”

 

என்று மார்பிற்கு நேராக அஞ்சலி ஹஸ்தனாய்

 

தருபதா திவு மும்சது. திருபதாதி வேந் முமாசன

ஸ்விந்த ஸ்நாத்வீ மலாதிவ பூதம் பவித்ரேணே வாஜ்யம்

ஆப ஸ்ஸுந்த்தந்து மைநஸ

 

பனி மூங்கில எப்படி சூரிய கிரணம் பட்ட மாத்திரத்தில் எழுந்து மேலெபோய் விடுமோ அப்படிப்போல் அழுக்குடன் கூடினவனாயுமுள்ள என்னை காமக்ரோதங்களாகிற அழுக்கிலிருந்து விடுபட்டவளாகவும் பவித்ரவானாகவும் மூலப்ரக்ருதியில் இருந்துவிடுபட்டவனாயும் செய்து ஏ பரமாத்ம! என்னை மேலே கொண்டு போவாயாக என்று அநுஸந்தித்து இரண்டு கைகளிலேயும் ஜலத்தை எடுத்துக்கொண்டு கிழக்கு முகமாக நின்று,

 

“உதியுந்த மஸ்தம் யந்த மாதித்ய மபி த்யாயந்

குர்வன் ப்ராஹ்மணோ வித்வாந் த்ஸகலம் பத்ரமஸ்நுதே

அஸர் வாதித்யோ ப்ரஹமேதி ப்ரஹ்மைவ ஸந்

ப்ரஹ்மாப்யேதி ய ஏவம் வேத அஸா வாதித்யோப்ரஹ்ம்”

 

என்று சொல்லி முன்சொன்ன காய்த்ரிமந்ரத்தை மனதால் நினைத்துக் கொண்டு மூன்றுதடவை ஜலத்தை இரண்டு கைகளால் எடுத்துக் கொண்டு முகத்திற்கு நேராகத் தூக்கி தாரையாகவிடவும்.

 

அர்க்கிய பிரதானம்.

 

சூரியனைப் பாதிக்கின்ற இராக்ஷசாளுடைய நாசத்தின்  பொருட்டுச் செய்வதாகும்.

 

நியமம்:: சூரியனை நோக்கி காலையில் குனிந்தும், மத்தியானத்தில் சாந்தமாய் நின்றும், மாலையில் உட்கார்ந்தும் அர்க்கியதானம் செய்தல் வேண்டும். காலை மத்யானத்தில் தானமாகவிடும் நீரை ஜலத்தில் அல்லது ஜலத்தால் பரோக்ஷிக்கப்பட்ட நிலத்தில் விடவேண்டியது. மாலை அர்க்கியம் மூலத்தில் விடுதல் கூடாது.

 

பிறகு ஆசமனம் செய்து உட்கார்ந்து கொண்டு இடது முழங்காலினால் முட்டிப் போட்டுக் கொண்டு இரண்டு, காலுக்கு மத்தியில் சொம்பை வைத்துக் கொண்டு ஒரு கையால்,

ஸந்தியாம் தர்ப்பயாமி

காயத்ரியம் தர்ப்பயாமி

பராஹ்மிம் தர்ப்பயாமி

நிம்ருஜீம் தர்ப்பயாமி

என்று நான்கு தடவை விரல்களின் நுனியால் ஜலத்தை விடவும்

 

பிறகு ஆசமனம் செய்துக்கொண்டு அவரவர்கள் ஆராதிக்கும் விக்ரஹமூர்த்தியின் முன்பாக நின்று யஜ்ஞோபவிதத்தின் முடியை இண்டு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் மத்தியில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு துணியால் மூடி மார்பிற்கு மத்தியில் வைத்துக்கொண்டு

 

ஓமித்யே காக்ஷரம் ப்ரஹ்ம்ம

அக்நீர் தேவதா

ப்ரஹம் இதயார்ஷம்

காயத்ரம்ச்சந்தம்

பரமாத்த ஸ்வரூபம்.

சாயுஜ்யம் விநியோகம்

 

என்று அநுஸந்தித்து விக்ரஹத்திற்கோ படத்திற்கோ பெரியவர்களுக்கோ சாஷ்டாங்க தெண்டம் சமர்ப்பிக்க வேண்டும். பெரியவர்களாகிறார் காயத்ரிமந்திரத்தை ப்ரதிதினமும் ஜபிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளவும்

 

 

 

 

பகவத் நமஸ்காரம்

 

நமோ ஸ்த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே

ஸஹஸ்ரபா தாக்ஷி ஹிரோருபாஹவே

ஸஹஸ்ரநாம்நே புருஷாயஸாஸ்வதே

ஸ்ஹஸ்ரகோடி யுகதாரிணே நம:

சதுஸாகர பர்யந்தம் கோப்ராஹ்மணேப்ய

ஸ்ஸுபம் பவது அஹம்போ அபிவாதயே.

காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா

புத்யாத்மநா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.

 

ஹரிஓம்

 

இதுவே ஸந்தியாவந்தனம். இம்மாதிரியாக யாவன் ஒருவன் அநுஷ்டிக்கின்றானோ அவன் ஐஹிகம் என்னும் பலத்தை அடைந்தவனாய் “மண்ணாண்டு விண்ணுமாள்வர் மண்ணூடே என்கிறாப்போல் எல்லா போகங்களையும் அநுபவித்து இம்மையில் ஆமுக்ஷ்மிகம் என்னும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைவார்கள்.

 

குறிப்பு: இத்தகைய சந்தியாவந்தனம் செய்யுமவர்கள் தலையில் குடிமியும் மார்பில் யஜ்ஞோபவீதமும் உடையவர்களாய் யிருக்க வேண்டும்.மொட்டை யடித்தவர்களுக்கு இது உபயோக மாக மாட்டா.

 

வேதங்களில் உள்ள மந்த்ரமாகிய இவைகளை அநுஸ்த்திக்கின்ற காலத்தில் முதலில் ப்ரணவத்தைச் சொல்லியே ஆரம்பிக்க வேண்டுமென்று சொன்னோம். ஏனெனில்? வேதங்களுக்கு ப்ரதான்யம் ப்ரணவமாதலால் “வேதத்துக்கோமென்னு மதுபோல்” என்கிறபடியே முடிக்கும் காலத்திலேயும் ப்ரணவத்தைச் சொல்லியே முடிக்க வேண்டும்.

மகா நிருபம்

இஃது, விருத்த காசி ஈசான்ய மடாலயம், வன்னியர் குலகுரு

ஸ்ரீலஸ்ரீ சக்கரவர்த்தி சிவயோகி அவர்களால் எழுதப்பட்டது.

 

“குருபிரம்ஹ குருவிஷ்ணு குருசாக்ஷாத் மஹேஸ்வரா:

தஸ்மைஸ்ரீ குருவே நம:’

 

மெய்ஞ்ஞான சற்குருவினால் சிஷ்யாத்துமாகளுக்கு தேக இரக்ஷிப்பும் ஆத்தும இரக்ஷிப்பும் உண்டாவதற்குக் காரணம் உண்டோவெனில்.

 

தெய்வ திருஷ்டாந்தம்

 

தேவன் மனுக்களை அசுத்த ஜெனன சுபாவமாக சிருட்டித்தலும், குரு உபதேசானுஷ்டான விதியினால் சுத்த ஜெனனமாக சிருட்டித்தலும், தேவன் பால்லிய, யௌவன, கௌமார, விருதாப்பிய பருவத்தால் தூல தேகத்தை வளர்த்தலும், குரு மந்தனை வளர்த்தலும், தேவன் இப்பிறவியைச் சம்மரித்தலும், குரு எதிர் மந்தரதர, தீவர, தீவரதர பக்குவத்தால் விவேக சூட்சுமதேகத்தை பிறவியைச் சம்மரித்தலும், தேவன் மறைப்பாற் றன்னை மறைத்தலும், குரு மறைப்பின்றன்னையே மறைத்தலும், தேவன் மோக்ஷ உணர்வை அனுக்கிரகித்தலும், குரு மோக்ஷ பதவியை கரதல மாணிக்கம்போல் விளங்கப்பெற அனுக்கிரகித்தலுமாம். இஃதன்றியில்,

 

மூன்றுங்காணிக்கை பெறுதலும், இராஜன் துஷ்டநிக்கிரகம் சிஷ்டரக்ஷகம் செய்தல்போல, குரு அபக்குவனைக் கண்டித்தும் பக்குவனைத் தெளிவித்தலுமாம் இஃதன்றியில்,

 

இராஜ திருஷ்டாந்தம்

 

இராஜன் உலகத்தின்கண் சோர மிருகபயத்தை நீக்குவது போல, குரு இராகத் துவேஷாதியுட் பயத்தை நீக்கலும், இராஜன் சத்துரு வேதனையை நீக்குவதுபோல, குருநரகவேதனையை நீக்கலும், இராஜன் மணி, பொன், தான்னியாதி பகுதி பெறுவதுபோல, குரு உடல் பொருளாவி மூன்றுங்காணிக்கை பெறுதலும், இராஜன் துஷ்டநிக்கிரகம் சிஷ்டரக்ஷகம்” செய்தல்போல், குரு அபக்குவனைக் கண்டித்தும் பக்குவனைத் தெளிவித்தலுமாம் இஃதன்றியில்,

சூரிய திருஷ்டாந்தம்

 

சூரியன் காந்தசக்திபோல தன்கிரண அஸ்தத்தினால் சந்திரன் நட்சத்திராதிகளும் நிலைபிறழாது நிற்கலும், குரு தன் அபய அஸ்தத்தினால் சிஷ்யர் முழுதும் ஒத்து நிற்கலும், சூரியன் பிரகாசத்தினால் நட்சத்திராதிகள் பிரகாசித்தலும், குரு அனுஷ்டான அனுக்கிரகத்தினால் சரீரம் லட்சணமாகப் பிரகாசித்தலும், சூரியன் சென்ற முகமே நட்சத்திரமுதலானவைகள் நடக்கலும், குரு நன்னடையின் படி யாவரும் நடக்கலும், சூரியன் ஒருருவத்தினால் பற்பல உருவும் விளங்குதலும். குரு ஒரு விவேக ஜென்மத்தினால் பலரும் விவேக ஜென்மமாக விளங்குதலும். அன்றியும் சந்திரன் சுயமே பிரகாசத்தோடும் களங்கத் தோடும் பேருருவாகவு மிருக்கினும் சூரியன் பிரகாச மெவ்வளவு உளதோ அவ்வளவே பிரகாசித்து களங்கத்தால் தன்னை மறையாது உலகிற் பிரகாசத்தையுத் தருதலும்போல, ஒருவன் பிரபலனாக விருக்கினும் குருகடாக்ஷ மெவ்வளவோ அவ்வளவே விவேக விளக்கமதனால் தன் அறியாமையையும் விட்டு பிறர்க்கு முபகாரனாதலும் இன்னமும் சூரியன் பூமியைநோக்கில் பூமியோடுள்ளன வெல்லாம் பிரகாசித்தலும் வானை நோக்கில் வானுள்ளன வெல்லாம்

பிரகாசித்தலும்போல, குரு காரியவுபதேச கர்ம்மானுஷ்டானத்தால் இகத்தின்மேன்மை யாதலும், காரணவுபதேச ஞானனுஷ்டானத்தால் பரனுலகத்து மேன்மையாதலும் பிரசித்தம். மேலும் சாதாரணமாக சூரியனில்லாதுலகு இருளிலும், குருவில்லாதவர் பாபவிருளிலும், இராஜனில்லா துலகு அநீதியிலும், குருவில்லாதவர் அக்கிரமத்திலும் அகப்படுவது சித்தம், அன்றியும் தெய்வமில்லையாயின் மோக்ஷமில்லை. குருவில்லையாயின் மோக்ஷத்திற்கு வழிபாடில்லை. ஆகையினாலே,

 

உதாரணம்

 

தடாகத்தைவிட்டு சேற்றினில் மூழ்குவானும், அமிர்தத்தைக் கவிழ்த்து விஷத்தை யுண்பானும், பாக்கியத்தை நீக்கி தரித்திரத்தைப் பற்றுவானும், பிரகாசத்தை விலக்கி இருளிற்றவிப்பானும், நல் வழியைத் தவிர்ந்து முள்வழி நடப்பானும், யாவனெருவனுளனோ? உளனாயின் நேத்திரம் வேண்டா மென்கிற குருடனை யொப்பதனால் அகக்குருடனு மாவனென்பர், பெரியோரால் ஆனதனாலும் மானிடஜெனன மெடுத்தவர்கட் கெல்லாம் பிரதானகாரணம் சற்குருவேண்டுவது என, கருதிப்பிரமாணமாக இருக்கின்றது. பிரத்தியட்சானுபவ சித்தம் இருப்பதனால்,

 

புராணாதி பிரமாணம்

 

நாம் ஜம்பு மகாரிஷி கோத்திர ராகவும், அகரசம் மார நிமித்தமாய் ஆதியில் அயோனி சம்பவராய் அக்கினியுற்பவ க்ஷத்திரிய வமிசமென்பது முதலாக விளங்கவேதவியாச மஹாரிஷ்கரர் அருளிய அஷ்டாதச புராணங்களில் ஆக்கினேய புராணம் முதல் நூலாகவும், வில்லுக்குரிய வேந்தரென மகா கவியாகிய கம்பர், அருவிய செம்பொற் சிலை யெழுபது வழி நூலாகவும், அரசாட்சிக்கு கடிகை முத்துப்புலவரா லருளிய திக்குவிஜய மென்பது சார்பநாலாகவும் இன்ன மநேக பூர்வ பிரபந்தங்களுமிருப்பதன்றியில் இன்னமநேகமாக அக்கினி வம்சத்து இராஜ சம்ஸ்தானபதிகளும் விலக்ஷணமாகலிருக்க,

மனுஸ்மிருதி ய-வது அத்தியாயம், சங-வது வாக்கியம்,

 

மகா திருபம்

இஃது. விருத்த காசி ஈசான்ய மடாலயம், வன்னியர் குலகுரு

ஸ்ரீலஸ்ரீ சக்கரவர்த்தி சிவயோகி அவர்களால் எழுதப்பட்டது.

 

“குருபிரம்ஹ குருவிஷ்ணு குருசாக்ஷாத் மஹேஸ்வரா:

தஸ்மைஸ்ரீ குருவே நம”

 

மெய்ஞ்ஞான சற்குருவினால் சிஷ்யாத்துமாகளுக்கு தேக இரக்ஷிப்பும் ஆத்தும இரக்ஷிப்பும் உண்டாவதற்குக் காரணம் உண்டோவெனில்.

 

தெய்வ திருஷ்டாந்தம்

 

தேவன் மனுக்களை அசுத்த ஜெனன சுபாவமாக சிருட்டித்தலும், குரு உபதேசானுஷ்டான விதியினால் சுத்த ஜௌனமாக சிருட்டித்தலும், தேவன் பால்லிய, யௌவன, கௌமார விருதாப்பிய பருவத்தால் தூலதேகத்தை வளர்த்தலும். குரு மந்தனை மந்தரதர, தீவர், தீவரதர பக்குவத்தால் விவேக சூட்சுமதேகத்தை வளர்த்தலும், தேவன் இப்பிறவியைச் சம்மரித்தலும், குரு எதிர் பிறவியைச் சம்மரித்தலும், தேவன் மறைப்பாற் றன்னை மறைத்தலும், குரு மறைப்பின்றன்னையே மறைத்தலும், தேவன் மோக்ஷ உணர்வை அனுக்கிரகித்தலும், குரு மோக்ஷ பதவியை கரதல மாணிக்கம்போல விளங்கப்பெற அனுக்கிரகித்தலுமாம். இஃதன்றியில், மூன்றுங்காணிக்கை பெறுதலும், இராஜன் துஷ்டநிக்கிரகம் சிஷ்டரக்ஷகம் செய்தல்போல, குரு அபக்குவனைக் கண்டித்தும் பக்குவனைத் தெளிவித்தலுமாம் இஃதன்றியில்,

 

இராஜ திருஷ்டாந்தம்

 

இராஜன் உலகத்தின்கண் சோர மிருகபயத்தை நீக்குவது போல, குரு இராகத் துவேஷாதியுட் பயத்தை நீக்கலும், இராஜன் சத்துருவேதனையை நீக்குவதுபோல, குருநரகவேதனையை நீக்கலும், இராஜன் மணி, பொன், தான்னியாதி பகுதி பெறுவதுபோல, குரு உடல் பொருளாவி மூன்றுங்காணிக்கை பெறுதலும், இராஜன் துஷ்டநிக்கிரகம் சிஷ்டரக்ஷகம்” செய்தல்போல், குரு அபக்குவனைக் கண்டித்தும் பக்குவனைத் தெளிவித்தலுமாம் இஃதன்றியில்

 

சூரிய திருஷ்டாந்தம்

 

சூரியன் காந்தசக்திபோல தன்கிரண அஸ்தத்தினால் சந்திரன் நட்சத்திராதிகளும் நிலைபிறழாது நிற்கலும், குரு தன் அபய அஸ்தத்தினால் சிஷ்யர் முழுதும் ஒத்து நிற்கலும், சூரியன் பிரகாசத்தினால் நட்சத்திராதிகள் பிரகாசித்தலும், குரு அனுஷ்டான அனுக்கிரகத்தினால் சரீரம் லட்சணமாகப் பிரகாசித்தலும், சூரியன்சென்ற முகமே நட்சத்திர முதலானவைகள் நடக்கலும், குரு நன்னடையின் படி யாவரும் நடக்கலும், சூரியன் ஒருருவத்தினால் பற்பல உருவும் விளங்குதலும், குரு ஒரு விவேக ஜென்மத்தினால் பலரும் விவேக ஜென்மமாக விளங்குதலும், அன்றியும் சந்திரன் சுயமே பிரகாசத்தோடும் களங்கத் தோடும் பேருருவாகவு மிருக்கினும் சூரியன் பிரகாச மெவ்வளவு உளதோ அவ்வளவே பிரகாசித்து களங்கத்தால் தன்னை மறையாது உலகிற் பிரகாசத்தையுந் தருதலும்போல, ஒருவன் பிரபலனாக விருக்கினும் குருகடாக்ஷ மெவ்வளவேர் அவ்வளவே விவேக விளக்கமதனால் தன் அறியாமையையும் விட்டு பிறர்க்கு முபகாரனாதலும் இன்னமும் சூரியன் பூமியைநோக்கில் பூமியோடுள்ளன வெல்லாம் பிரகாசித்தலும் வானைநோக்கில் வானுள்ளன வெல்லாம் பிரகாசித்தலும்போல, குரு காரியவுபதேச கர்ம்மானுஷ்டானத்தால் இகத்தின்மேன்மை யாதலும். காரணவுபதேச ஞானனுஷ்டானத்தால் பரனுலகத்து மேன்மையாதலும் பிரசித்தம். மேலும் சாதாரணமாக சூரியனில்லாதுலகு இருளிலும், குருவில்லாதவர் பாபவிருளிலும்  இராஜனில்லா துலகு அநீதியிலும், குருவில்லாதவர் அக்கிரமத்திலும் அகப்படுவது சித்தம். அன்றியும் தெய்வமில்லையாயின் மோக்ஷமில்லை. குருவில்லையாயின் மோக்ஷத்திற்கு வழிபாடில்லை. ஆகையினாலே,

உதாரணம்

 

தடாகத்தைவிட்டு சேற்றினில் மூழ்குவானும், அமிர்தத்தைக் கவிழ்த்து விஷத்தை யுண்பானும், பாக்கியத்தை நீக்கி தரித்திரத்தைப் பற்றுவானும், பிரகாசத்தை விலக்கி இருளிற்றவிப்பானும், நல் வழியைத் தவிர்ந்து முள்வழி நடப்பானும், யாவனெருவனுளனோ? உளனாயின் நேத்திரம் வேண்டா மென்கிற குருடனை யொப்பதனால் அகக்குரு டனு மாவனென்பர். பெரியோரால் ஆனதனாலும் மானிடஜெனன மெடுத்தவர்கட் கெல்லாம் பிரதானகாரணம் சற்குருவேண்டுவது என, சுருதிப்பிரமாணமாக இருக்கின்றது. பிரத்தியட்சானுபவ சித்தம் இருப்பதனால்.

 

புராணாதி பிரமாணம்

 

நாம் ஜம்பு மகாரிஷி கோத்திர ராகவும், அசுரசம் மார (நிமித்தமாய் ஆதியில் அயோனி சம்பவராய் அக்கினியுற்பவ க்ஷத்திரிய வமிசமென்பது முதலாக விளங்கவேதவியாச மஹாரிஷீசுரர் அருளிய அஷ்டாதச புராணங்களில் ஆக்கினேய புராணம் முதல் நூலாகவும். வில்லுக்குரிய வேந்தரென மகா கவியாகிய கம்பர், அருளிய செம்பொற் சிலை யெழுபது வழி நூலாகவும், அரசாட்சிக்கு கடிகை முத்துப்புலவரா லருளிய திக்குவிஜய மென்பது சார்புநூலாகவும் இன்ன மநேக பூர்வ பிரபந்தங்களுமிருப்பதன்றியில் இன்னமநேகமாக அக்கினி வம்சத்து இராஜ சம்ஸ்தானபதிகளும் விலக்ஷணமாகவிருக்க.

மனுஸ்மிருதி ய-வது அத்தியாயம், சங-வது வாக்கியம்.

 

உலகத்தில் இந்த க்ஷத்திரியஜாதிகள் தன்கருமத்தை விட்டதினாலும், நடாத்திவைப்பவனில்லாததானலும், மெள்ள சூத்திரத்தன்மையை அடைந்தனர்கள் என்று இருக்கின்ற சாக்ஷிக்குச்சரியாக,

 

 

 

இரத்தின திருஷ்டாந்தம்

 

இரத்தின தளங்களைப்போல் இவ்வம்சத் தெண்ணிலிசென

தளங்கள் மிகுதியாக விருப்பதனால் சிலர் அரிதாய் காரிய குருவினால் தீபத்தின் முன் விளங்கும் இரத்தினம் போல் தன்மட்டில் பிரகாசித்தவரும் தீபத்தின் பின்னிட்ட இரத்தினம்போ லாவதனால் அந்த இரத்தின தளங்களைச் சித்திரிகனால் கரடு நீக்கிக் கடைந்தால் விலையுயர்ந்தும், மன்னர் மகுட முதலானவைகளி வணிந்தும், சூரியன் முன்பின்னும் விகசிதமாகப் பிரகாசிக்கும். இதுபோல சதுர்வேத சமயத்தின் வன்னியர் முழுமையும் சம்பிரதாயமாக புனிதராய் விளங்க குல குரு பரம்பரை முதலான விவரம் திருமுகம் என்னும் புத்தகத்துட் சொல்லிய பிரகாரம் நமது வம்ச பூர்வாசாரியார் பரம்பரை இத்தேசத்தும் உத்தாரணம் செய்ய வேண்டியும்,

 

அரசியல் ஆறென்னும் ஷைத்திரிய தருமத்துள்.

 

அறநிலை, அறம், அறநிலைப் பொருள், இங்ஙனம் பிரதானம்

இவ்விரண்டு வாக்கியம் இதனுட் பொருள்தத்தம் வருணாச்ரமத்தின் நடைபிறழாது நிலைபெற பாதுகாத்தல் அறநிலையறம், தத்தம் நிலையினான் முயன்று பெறுபொருள் அறநிலைப் பொருளாம் இதனால் இம்முறை நிறுத்தவும்,

 

குருசந்நிதி லட்சணம்

 

முற்பிரதானம் மடாலயம் வேண்டுவதனால் ஸ்ரீ காஞ்சி புரியில் முன் அரசாட்சி செய்த அக்கினிவம்ச க்ஷத்திரிய துலாதானப் பல்லவ மகாராஜா ஆதொண்டமண்டலத்துள் வராகநதி சமீபத்தில் வில்லவன் நல்லூரென்னும் மகா சிவக்ஷேத்திரத்தில் தேவார்ச்சனைக்குத் திருக்கோயில் குருசந்நிதானம் வம்ச ஆக்கினேய புராணத்தின்படி நவராத்திரி சுபதினத்தில் பரமேஸ்வரி கொலுவின் முன் ஜம்பு மகாரிஷி யாகம் வளர்த்தி வருஷைத்துக்கோர்தரம் யாகத்தின்முன் சகலபாவ நிவாரணமாய் புனிதராக க்ஷத்திரிய காயத்திரி முதலானதும் பெற்று விஜய தசமியில் விஜயமாக வன்னியர் தங்களியல்பினை பொருந்த யாகசாலையும் சிவ பூசை விஷ்ணுபூஜை, வேதிகைகளும், தடாகம், பூங்காவனம், கூபம், மகானசம் இதுகள்

முதலான அங்கத்துடன் மடாலயம் அமைத்து நமக்குரிய ஆயுதம்

வில்மணியுடன், குடை, சாமரம், ஆலவட்டம் துவச முதலானதும்,

வாத்தியங்களுடன் தம்பிரான்கள் ஒதுவான்கள் பரிசென திருக்கூட்ட முதலானவர்களும் அங்கமாக ஆத்துமகோடிகளுக் கன்னதானமும் பிள்ளைகளுக்கு வித்தியாதானமும் சிஷ்யவருக்கங்களுக்கு ஞான தீட்சை முதலான அனுக்கிரக மடாதிபதியாயெழுந் தருளாநின்ற.

 

அக்கினி திருஷ்டாந்தம்

 

சுவலாக்கினிவாசனிடத்து குளிர், இருள், மிருகம். சர்ப்பம், பிசாசு முதலணுகாததுபோல மகா காரணஸ்வயகுல சற்குரு கிருபாகடாக்ஷ விசேஷைத்தால் பேதவாதிகளால்வரும் அஞ்ஞானம் சம்சயம் விபரீதமுதலானதும் இனியோர் காலத்தும் அணுகாதவராய் பூமியின் மகாமேரு சமான கீர்த்தியும், வானத்தின் நட்சத்திராதி சூரியனொப்ப பெருகியும், பிரகாசமும் பொருந்தி சந்திராதித்தருள்ளவரைக்கும் நமது வம்ச குருசிஷ்ய பரம்பரை சம்பரதாயமாக மேன்மேலும் அபிவிர்த்தியாய் ஆதீனம் வளர்ந் தோங்கும்படி யாவரும் சுவாமியை யுள்ளபடிதியானித்து வம்சமுழுதுமொரு தன்மையாய் அனுஷ்டான ஆசாரலட்சண தெய்வபக்தராய் தேவரட்சக ஆத்துமரட்சகசன் மார்க்கராக விளங்க பிரதான காரணம் குல குரு மூர்த்தம் சங்க முன்னிலையென் றறிந்து மேற்படி குரு தருமத்திற்கு எப்படியோயப்படி முந்தி உதவி கையெழுத்துவைத்த அடியோம் யாவருக்கும் சர்வ உத்தமமாம். இம்மேன்மையையறிந்து தடையின்றி இவ்வம்சமகாசனங்களும் இந்த மகாகனம் பொருந்திய மகா சங்க சன்மார்க்கத்தைப் பெற அவரவ ரிதையத்துள் கிருபை வருகவென்று

பிரார்த்திக்கின்றோம். நமது குலதேவதை ஸ்ரீசொர்ணகாமாட்சி ரக்ஷிக்கவும்.

 

இங்ஙனம்.

சக்கரவர்த்தி சிவயோகி,

 

 வன்னிகுல மித்திரன் வாழ்த்துக்கவி

 

திங்கடவழ் மணிமாடச் சென்னைவயின் பிரம்பூரிற்

சிறந்து வாழும்

எங்கள்குல மணிவிளக்காஞ் சுப்பிரமண் ணியனொன்பான்

யாண்டின் முன்னர்

பொங்குமொருசுபதினம்போல் தரும்வன்னி யுலகமெலாம்

புகழா நிற்கும்

மங்களமார் வன்னிகுல மித்திரனிப் புவியினிதம்

வாழ்க மாதோ.

வேலூர், வ.கு.வேலுநாயகர்

 

உலகறிந்த வொருபுலவர் கோதுமுரை யாதுளதா

முரைப்பீ ரன்பீர்

நலவுடல மாவியொடு நங்குலத்திற் கேதத்தம்

நயந்த வேந்தர்

திலகமொரு மித்திரனால் வன்னியுலகப் புகழைச்

செகத்தில் வீசுங்

குலமணி சுப்பிரமணியக் கோமரபு மாமரபாய்க்

குலவி வாழ்க.

சு.அர்த்தநாரீச வர்மா.

 

கங்கையு மதியுங் கொன்றையுந் தாறுங்

கடிகம ழாதியோடறவுஞ்

சங்கையிலாது தரித்திடும் பரம தயாநிதி

ஈன்றருள் புநிதன்

துங்கவேற் கரங்கொள் சுந்தரன் பாதம்

துதித்திடும் சுப்பிரமணிய

மங்களகுணனே மகிழுடன் வருக வன்னிநங்

குலத்துமா மணியே.

 

-இலத்தூர், சாமிஉபாத்தியாயர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu