வன்னியர் வரலாறு

பல்லவ நாடு தோற்றம்

 

கடவுள் வாழ்த்து

 

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரண

நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை

இல்லென வேண்டா இறையவர் தம்முல்

அல்லும் பகலும் அருளுகின் றானே

-(திருமூலர்  திருமந்திரம்  23)

 

வன்னியர் வரலாறு

  1. வன்னிய குல க்ஷத்திரியர்

பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ

பாவீற் நிருந்த புலவீர் கான் பாடுகோ

ஞாயிற் றொனியான் மதிகிழற்றே தொண்டையார்

கேர்வீற் நிருந்த குடை.

-(பழைய மேற்கோள் பாடல்)

 

க்ஷத்திரி – குடை, வன்னி – அக்கினி. வெண் கொற்றக்  குடைக் கீழ் வீற்றிருந்து அரசு புரிவதால் அரச வம்த்தார் க்ஷத்திரியர் எனப்பட்டார்கள். அவர்கள் அக்கினியிற் பிறந்த அல்லது சுருக்கமாக வன்னியர் எனக் குலப் பெயர் கொண்டவர்கள்.

க்ஷத்திரிய வம்சம் அக்னியிலிருந்து பிறந்ததாக வேதங் கூறுகிறது,

‘ஓ அக்கினி! உன்னிடமிருந்து மாற்றாரின் . பொருளை வெல்லும் க்ஷத்திரிய வம்சம் பிறந்தது. அவர்களுடைய ஆற்றல் எங்கும் பரவி லந்தது. அவர்கள் உண்மையான பலத்துடன் பணி புரிபவர்கள் உன்னிடமிருந்து விரும்பத்தக்க செல்வத்தை தேவர்கள் அனுப்புகிறார்கள், உன்னிடமிருந்து விரைந்தோடும் குதிரை பிறக்கிறது.’

 

க்ஷத்திரியர்கள், அதர்வணர், ஆங்கிஸர் என வேத்திறி கூறப்படும் அவர்களில்  ஆங்கிரஸரின் வழியில் வந்தவர் வன்னியர் புராணம் க்ஷத்திரிரைச் சூரிய குலத்தவர், சந்திர குலத்தவரெனக் கூறும் அவர்களின் சந்திர குலத்தவர் வன்னியர்.

 

வன்னியர், படையாட்சி, நாயகர், கவுண்டர், கண்டர், ரெட்டி, பிள்ளை, பண்டாரத்தார், சேர்வை, எனப் பலப் பலக் குடிப்பெயர்களைக் கொண்ட போதிலும் அவர்களனைவர்க்கும் சம்பு மகரிஷி கோத்திரம் ஒன்றுதான் வழங்கி வருகிறது. அவர்கள் பெண் கொடுப்பதும் கொள்வதுஞ் சம கோத்திரத்திற்றான். அதனால் அவர்களுடைய குலம் சம்பு குலம் எனவும் வழங்கியதை நூலிலுங் கல்வெட்டிலும் காணலாம்.

 

இரட்டைப் புலவர் ஏகாம்பர நாதர் ருலாவில் 151வது செய்யுளில் ‘வெஞ்சமரில், தத்துபரி பல்லவன் சம்பு குலப் பல்லவன் சம்பு குலப் பெருமான் வைத்த துலாபார மண்டபத்துக்கு என்றார்கள். பள்ளிச் சந்தம் வகையூர் திருமலையில் வண்ணந் தீட்டிய குகைக்கு செல்லும் இடது பாரிசத்திலுள்ள கல்வெட்டில் அத்தி மல்லன் சம்பு குலப் பெருமாளான ராஜ கெம்பீர சம்புவ ராயன் என்று கூறப்ட்டிருக்கிறது. இதனால் சம்பு குலத்தில் பிறந்த அரசன் சம்புவ ராயன் எனப்பட்டான் என்பதும் தெரிய வரும். கர்னாடகத்தில் சம்பு குலம் என வழங்கி வருகிறது. ஆந்திராவில் அக்கினி குல க்ஷத்திரியர் என வழங்கி வருகிறது.

 

கம்பர் வன்னியரைச் சம்பு முனிவன் யாகத்திலிருந்து வந்த சந்ததியார் எனவும் பல்லவராயன் மரவில் தோன்றியவர்கள் எனவுங் கூறினார்.

 

 

 

ஜம்பு மகா ரிஷி கோத்திரம்

முந்து நாள் வீர சம்பு‘

முனிசெய்மா மகத்திற் போந்த

சந்ததி யார் சீரோது

நெனந்தகு முதியோர் கேட்ப

இந்தணி சடிவத் தெம்மா

னிணைகழல் பராஅ யிசைத்தான்

செந்தமிழ்க் கம்பன் செம்பொற்

சிலையெழு பதுவா மிந்நூல்

-(சிலையெழுபது 2)

 

 

முற்காலத்தில் வீர சம்பு முனிவர் செய்த யாகத்திலிருந்து வந்த சந்ததியார் சிறப்பைப் பாடுங்கள் என்று பெரியவர்கள் கேட்டுக்கொள்ள கம்பர் வன்லியவரைப் புகழ்ந்து ‘சிலை’யெழுபது என்னும் நூலைப் பாடினார். மூலிவல் அவர் வன்னியரைத்தாம் சம்பு முனிவன் யாகத்திலிருந்து வந்த சந்ததியாராகக் கூறினார் என்பது வரும் பாடலால் அறியலாம்.

 

அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்

தருவவன் னியரை யாம்புகழச்

செவிக்கா ரமுத மென்கேட்டுச்

சிந்தை யுவந்து சீர்தூக்கிப்

புவிக்கா யிரம்பொன் விறைநீக்கிப்

பொற்றண்டிகைபூ ஷணத்தோடும்

கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்

கருணாகரத் தொண்ட வன்னியனே.

-(சிலையெழுபது 85)

கம்பர் பல்லவ மன்னனைக் ‘கருணாகரத் தொண்ட வன்னியனே’ என்ற தொடரே வரும் பாடலிலும் கூறப்பட்டது.

 

எரிக்கும் புகழ்க்கச்சி

யேகரம்பரச்சம் பொனுந்தமிழல்

பொரிக்கும் புலிக்கொடியான்

புகழ்பெற்ற புலமையெல்லாம்

தரைக்கு மதனப்புறத்துந்

தெரிந்திடுந் தமைகண்டேன்

மறைக்குவா லோதுங்க

கருணாகரத் தொண்ட வன்னியனே

-(கருணாகரத் தொண்ட வன்னியனார் சதகம் 21).

இதில் ஏகாம்பரச் சம்பு என்ற தொடரையே வரும் பாடலிலும் கூறப்பட்டது.

 

மேதைப் புலவரெண் ணேகாம்பரச்

சம்பு மெச்சநெடுங்

காதைப் புலவ ரிசட்டையர்

பாடுங் கலம்புகமு

மோதற் கரியநல் லெகம்பவாண

ருலாவு மந்த

மாதைப் பனுவலும் பாராட்

டிடுந்தொண்ட மண்டலமே.

-(தொண்ட மண்டல சதகம் 49)

மேற்கூறிய இரு சதகங்களிலும் ‘ஏகாம்பரச் சம்பு’ என்றது சிவபெருமானே சம்பு முனிவரென்பதைக் காட்டுவறது.

 

பல்லவரின் சந்ததியார் வன்னியர்

வளமருவு மங்கையர்கோன் சொலத்தகுபல்

லவராயன் மரபிற் றோன்றி

களமருவு கறையுடைய கண்ணு தங்கச்

சியின் வாழேகாம்ப் ரோற்

குளமருவு மன்பினரா யொளிர்மகுட்

மணிபொற்றே ருதலி மேனாள

தளமருவு தாமரைபொன் முகவனியர்

படைத்தபுகழ் சாற்றற் பாற்றோ!

 

-(சிலையெழுபது 50)

வன்னியர் தங்கள் குல முதல்வரான ஏகாம்பர நாதருக்கு உள்ளன்புடன் மருடமும், தேரும் கொடுத்தார்கள். பல்லவராயன் மரபிற் றோன்றி தாமரைபோல் அழகிய முகமுடைய வன்னியர் படைத்த புகழ் சொல்ல முடியுமோ! என்றார் கம்பர்.

 

பல்லவ வம்சம்

காஞ்சியில் ஜ்வரஹரேசுவரர் ஆலய சாஸனம் ஒன்று, ‘பல்லவ வம்சத்து ஆம்பலூர் திப்புறாஜ நல்ல சித்தரசனென்’ என்று கூறுவதால் பல்லவ வம்சம் எனவும் வன்னியர்க்கு வழங்கியது தெரிகிறது.

 

சங்க கால வேளிரும் சம்பு குலத்தவரே

 

கம்பர், ‘சம்பு முனிவன் யாகத்திற்றோன்றிய சந்ததியார் வன்னியர்’ என்றது போல் கபிலர், ‘வடபால் முனிவன் யாகத்திற்  றோன்றிய சந்ததியார் வேளிர்’ எனப் புறநானூற்று 201வது பாடலிற் கூறினர். அவர் இருங்கோவேளிடம் பாரியின் மகளிரை மணம் புரிந்து கொள்ளும்படி கேட்டு அப்பாடலைப் பாடினார். அவர் இருங்கோவேளை

 

‘நீயே வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்

செம்புபுனை ந் தியற்றிய சேணெடும் புரிசை

உவரா வீகைத் துவரை யாண்டு

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே வீறற்போ ரண்ணல்’

 

என்றார். இதனால் சங்க காலத்திலிருந்த வேளிர்கள் வடபால் முனிவன் யாகத்தில் தோன்றி வெகு தூரத்திற் செம்பினாற் செய்த கோட்டை அரசாண்டு சளைக்காமல் தருமஞ் செய்து நாற்பத் தொன்பது தலைமுறைக்கு முன்பு வத்தவர் என்பதை யறிகிறோம். அதாவது கபிலர்க்கு நாற்பத்தொன்பது தலைமுறைக்கு முன்பிருந்த இரண்டாவது சங்க காலத்திலிருந்த துவரைக் கோமானின் சந்ததியார் வேளிர்.

 

கடைச்சங்க இறுதியில் இறையனார் அகப்பொருளி லக்கணத்திற்கு உரை கூறிய நக்கீரரும், கபிலரும் ஒரே காலத்தவர் நக்கீரர் கூரியதாகக் கூறப்படும் பழைய உரையில் முச்சங்க வரலாறு கூறப்பட்டிருக்கிறது. அதே வரலாறு கூறும் அகவற்பா  வொன்றைப் பாண்டி நாட்டிலுள்ள செவ்வூர்ச் சிற்றம்பலக்  கவிராயர் வீட்டிலிருந்த பழைய ஏட்டுப் புத்தக மொன்றிலிருந்து டாக்டர். உ. வே. சுவாமிநானதைய்யர். சிலப்பதிகாரத்தின் முகவுரையில் வெளியிட்டார். அதில் இரண்டாவது தமிழ்ச் சங்க காலத்தில் துவரைக்கோமான் இருந்ததாகக் கூறியது வருமாறு

 

’வடுவறு காட்சி நடுவட் சங்கத்

தகத்தியர் தொல்காப் பியத்தமிழ் முனிவர்

இருந்தை யூரிற் கருங்கோழி மோசியார்

எள்ளாப் புலமை வெள்ளூர்க் காப்பியன்

இறவா விசையிற் சிறுபாண்ட ரங்கன்

தேசிக மதுரை யாசிரியன் மாறன்

தவரொப் பாய துவரைக் கோமான்

தேருங் கவிபுனை கீரந்தை யாரிவர்

ஒன்பதோ டடுத்த வைம்பதின்ம ராகும்.

 

-(முச்சங்க வரலாற்று அகவற்பா)

 

இனி, இடைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும்  தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறுபாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக் கேமானும் கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஜம்பத் தொன்பதின்மர் என்ப

-(இறையனார் அகப்பொருள் பாயிரவுரை)

 

கடைச் சங்க காலத்தில் நாற்பத்தொன்பது பாண்டிய மன்னர்களிருந்தார்கள்.

 

எண்ணூப் கேள்விய ரிருந்த தாயிரத்

தெண்னூற் றைம்பது வருட மென்ப

இடர்ப்படா திவர்களைச் சங்க மிரீஇயினர்

முடத்திரு மாறன் முதலா வுக்கிரப்

பெருவழுதி யீறாப் பிறங்கு பாண்டிய

நரபதிக ளாகு நாற்பத்தொன் பதின்மர்

இவருட் கவியரங் தேறினார் மூவர்

புவியிற் சங்கம் புகழ்வட மதுரை.

-முச்சங்க வரலாற்று அகவற்பர்)

அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்து எண்ணூற்று ஜம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த மூடத் திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத் தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாய்ந்தது உத்தர மதுரை என்ப.

-(இறையனூர் அகப்பொருள் பாயிரவுரை)

ஆயிரத்தெண்ணூற் றைம்பது ஆண்டுகள் தொடர்ந்து இருந்து வந்த கடைச்சங்க காலத்தில் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுநிவரை நாற்பத் தொன்பது பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள். ஆகவே, நாற்பத்தொன்பது தலைமுறையாக விருந்து வந்த கடைச்சங்கத்திற்கு முன்பு இரண்டாவது சங்க காலத்தில் தமிழ்ப் புலவனாக விருந்த துவரைக் கோமானின் சந்ததியார் வேலிர், அவர்கள் வடபால் முனியன் யாகத்தில் தோன்றிய சந்ததியார் எனக் கபிலர் கூறியதால் சங்க காலத்திலும் வன்னிய புராணம் இருந்தது தெரியவரும். ஆனால், அக்காலத்தில் வழங்கிய புராணத்திற்கும் பிற்காலத்தில் வழங்கும் புராணத்திற்கும் வித்தியாச மிருக்கிறது.

 

டாக்டர் உ. வே. சுவாமிநானதைய்யர் ’விசுவ புராண சார மென்னும் தமிழ் நூலின் பதிகத்தில் 15-ஆம் செய்யுளில் ‘சம்புமா முனிவன் வேள்வித் தழறரு மரபில் வந்தோன்’ எனவும், இரட்டையர்க ளருளிச்செய்த ஏகாம்பர நாதருலாவில் ‘சம்பு குலத் தொருவன்’ எனவும் வந்திருத்தலின் இதில் (புறம் 201) வடபான் முனிவன் என்றது அச்சம்பு முனிவனாக இருத்தல் கூடுமோ வென்று ஊகிக்கப் படுகின்றது’ என்றார்.

கம்பர் காலத்திலிருந்த ஒட்டக்கூத்தர் பாடிய கீழ்வரும் அடிகள் வடபால் முனிவன் சம்பு முனிவன் தான்  என்பதை உறுதிபடுத்துகின்றன.

கொற்றக் குலோத்துங்க சோழன் குவலவங்கள்

முற்றப் புரக்கு முகில் வண்ணன் பொற்றுவரை

இந்து மரபி லிருக்குந் திருக்குவத்தில்

வந்து மனுகுலத்தை வாழ்வித்த பைத்தளிர்க்கை

மாதர் பிடிபெற்ற வாரணம்.

-குலோத்துங்க சோழனுலா 29-31 கண்ணிகள்)

ஒட்டக்கூத்தர் முதலாங் குலோத்துங்க சோழன் துவரை யாண்ட சந்திர குலத்தில் பிறந்து வந்து சோழ குலத்தை வாழ் விக்கச் செய்தவன் என்றார். குலோத்துங்கனுடைய தாய் அம்மங்காதேவி முதலாம் இராஜேந்திர சோழனுடைய மகள், அவன் தன் தாய் வழியில் சோழ நாட்டை யடைந்ததால் புலவர் அவனை,  மாதர் பிடி (பெண் யானை) பெற்ற வாரணம் (ஆண் யானை) என்றார். அவனுடைய பெயர் ‘இரண்டாம் இராஜேந்திர சோழன்’ எனவும் சரித்திரத்தில் வழங்கும். அவனுடைய தந்தை ஆந்திராவிலிருந்த. வேங்கி நாட்டு வேந்தன், அவனைக் கீழைச் சாளுக்கியன் என்று சரித்திர நூல் கூறும், ஆனால், ‘பல்லவராயன்’ எனத் தமிழ் நாட்டுக் கல்வெட்டு கூறுகிறது.

 

காஞ்சியில் ஏகாம்பரநாதர் கோயிலில் கர்ப்ப கிருகத்தில் அவனை, ‘பள்ளிகொண்ட பாஞ்ச’ நிதி வர்ணனான ராஜேந்திர பல்.வராயன் என்று கல்வெட்டப்பட்டிருக்கிறது. அவனை ஒட்டக்கூத்தர் துவரை சந்திர குலத்தில் வந்தவனாகக் கூறினார். பல்லவ மன்னர்கள் சந்திர குலத்தவ ரென்பது வரும் பாடலால் அறியலாம்.

 

நங்கள் கோத் தொண்டை வேந்தன்

நாமவேன் மன்னர்க் கெல்லாந்

தங்கள்கோ எங்க நாடல்

சந்தி; குலப்ர காசன்

திங்கள்போற் குடையி வீழற்

செய்யகோல் செலுத்து மென்பர்

எங்கள் கொல் வளைக ணில்லா

வீபரித மிருந்த வாறே.

-(நந்திக் கலம்பகம் 39)

இதில் பல்லவ மன்னன் நந்திவர்மனைச் சந்திர குலந்தவனாகக் கூறப்பட்டது.

 

குலோத்துங்கனுடைய சந்ததியாரைச் சம்புவராயன் எனக் கல்வெட்டுகளிற் கூறப்பட்டிருக்கிறது. அவனுடைய மகன் விக்கிரம சோழனைக் காஞ்சியில் வரதராஜர் கோயிற் கல்வெட்டொன்று, ’அம்மையப்பர்களுடைய பேரருளாளன் விக்கிரம சோழ சம்புவறாயன்’ எனக் கூறுகிறது.

 

விக்கிரம சோழனுடைய பேரன் இராஜராஜனை வந்தவாசி தாலுக்காவில் வயலூர் திருவேதி மலையில் பெருமாள் கோயிற் கல்வெட்டொன்று ‘ஸ்ரீ அம்மையப்பனான எதிரிலி சோழனுடைய சம்புவராயர்’ எனக் கூறுகிறது.

 

குலோத்துங்க சோழனுடைய சந்ததியாரைச் ‘சம்புவ ராயன்’ என்றதால் அவர்கள் சம்பு குலத்தவர் எனத் தமிழகம் அறிந்திருந்தது தெரியவரும். அவனைத் துவரை சந்திர குலத்த முனிவன் தடவினுட்டோன்றி துவரை யாண்டு வந்த சந்ததியாரும் கம்பர் கூறிய சம்பு முனிலன் யாகத்திற் போந்த சந்ததியாரும் ஒரே இனத்தவ என ஆகிகாலத்தவர் அறிந்திருந்தது தெரியவரும். ஆகவே சங்க கால வேளிரும் சம்பு மகா ரிஷி கோத்திரத்தாரான வன்னியரே யாவர்.

 

சம்பு முனிவன் யாகத்திற் றோன்றியவர் அகத்தியர்

 

டாக்டர், உ. வே. சுவாமிநானதைய்யர், ‘வடபான் முனிவன் றடலினுட் டோன்றி’ என்பதற்குக் கதை யுரைப்பிற் பெருகும் அது கேட்டுணர்க.’ என்றார். அவ்வளவு பெரிய கதையைத் திருமூலர் கீழ்வரும் இரண்டே பாட்டுகளிற் கூறிவிட்டார்.

 

அகத்தியம்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து

கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்

முடுகிய னீவயத்து முவ்னிரென் றானே.

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்

அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்

அங்கி உதயஞ்செய் வடபால்

தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

-(திருமந்திரம்.337, 338)

 

வன்னிய புராணம் வாதாவிக்குப் பயந்து தேவர்களுந் தெய்வங்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்து கைலாயத்திற்கு வந்தபோது அவர்களுடைய கனத்தால் இமயந் தாழ்ந்து தென்திசை வுயர்ந்தது. அப்போது தேவர்கள் சிவ பெருமானுக்குச் சமமான ஒருவரைத் தென் திசை யனுப்பி பூமியைத் துலாக்கோல் போல் சமன் செய்யச் சொன்னார்கள். சிவ பெருமான் தனக்குச் கமமாக அகஸ்தியரை யனுப்பினான் எனக் கூறுகிறது. (இங்ஙனம் பார்வதி பரமேஸ்வரன். திருமணத்தின் போது நடந்ததாகக் கந்த புராணங் கூறும்.) இதனைத் திருமூலர் மேற் கூறிய 337-வது திருமந்திரப் பாடலில், ‘தேவர்கள் சிவபெருமானிடம், ‘எம்பெருமான் நடுவிடம்’ சமமாக நிற்காமல் இவ்வுலகஞ் சரிந்து விழுந்துவிடும் போலிருக்கிறது’ என்றார்கள். அதற்குச் சிவன்  நடுவிலுள்ள அங்கி அகத்திய! நீ போய் முடுகிக் கொண்ட பூமியில் முன்னிரு என்றான்’ எனக் கூறினார்.

வன்னிய புராணம், சம்பு முனிவர் வளர்த்திய யாகத் தீயில் சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணீரை ஆவுதியாக விட்டு உருத்திர வன்னிய மகாராஜன் தோன்றினான்; அவனுடைய சந்ததியார் வன்னியர் எனக், கூறுகிறது. இதனைத் திருமூலர் மேற் கூறிய 338-வது திருமந்திர பாடலில், அக்கினி யுதய மாகும்படி செய்யும் அகத்தியனும் அக்கினி யுதய மாகும்படி செய்து இமயத்தின் மேல் வீற்றிருக்கும் சிவேனும் வட திசையில் இமயத்தில் தவமிருந்த சம்பு முனிவனும் எங்கும் பரவி விளங்கும் அக்கினியின் ஒளி தான் என்றார்.

 

சிவனும் சம்பு முனிவுனும் அவர்களிருவருஞ் சேர்ந்து யாக குண்டத்திலிருந்து பிறப்பித்த அகத்தியனும் எங்கும் நிறைந்து விளங்கும் அக்கினியின் அவதாரமென்பது கருத்து.

 

மேற்கூறிய இருமந்திர பாடல்கள் இரண்டிற்கும் ‘அகத்தியம்’ என்ற தலைப்பு கொடுத்திருப்பதால் வடபால் தவமுனிவன் யாகத்திலிருந்து தோன்றியவர் அ5த்தியர் தாம் என்பது தெரியவரும்.

திருமூலர் தேவர்கள் முறையிட்டபோது சசன் அகத்திரை வையகத்தில் முன்னிருக்கும்படி அனுப்பியதாகக் கூறியது போல் ஒரு சமயம் முருகனையும் அனுப்பியதாகக் கூறிஞர்.

 

எம்பெரு மான்இறை வாமுறை யோயென்று

வம்பவிழ் வானோர் அகரன் வலிசொல்ல

அம்பவள மேனி அறுமுகன் போயவர்

தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

-(திருமந்திரம் 520)

 

தேவர்கள், எம்பெருமான் இறைவா! அசுரர்களுக்குப் பலங்கொடுத்தது முறையோ? என்று சொல்ல இறைவன், அழகிய பவளம் போல் சிவந்த மேனிகொண்ட ஆறுமுகனே! போய் அவர்களின் பகைவனைக் கொல். என்றான்.

 

தேவர்கள் முறையிட்டபோது சிவபெருமான் அசுரர்களின் திரிபுரத்தை யெரித்ததாகச் சங்கப் புலவர்கள் கூறிஞர்கள்.

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக

அடங்காதார் மிடல்சாவ அமரர்வந்து இரத்தலில்

மடங்கற்போல் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்

கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்

உடன்றக்கால் முகம்போல் ஒண்கதிர் தெறுதலின்

சீறரும் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்

ஏறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந் தியங்குநர்

ஆறுகெட விலங்கிய அழல்அவிர் ஆரிடை

மறப்பருங் காத லிவள்ஈண் டொழிய

இறப்பத் துணித்தனிர் கேண்மின் மற்றைஇய

-(கலித்தொகை 2: 1.10)

பாலை பாடிய பெங்கடுங்கோ, உலகந் தொடங்கிய காலத்திற்றோன்றிய அரி அயன் முதலான தேவர்கள் வந்து அடங்காத அவுணர்கள் பலத்தை யடக்க வேண்டுமென்று கேட்டபோது முக்கண்ணன் எமனைப்போல் கோபங் கொண்டு அவுணர்களின் மூன்று கோட்டை மதில்களைக் கோபித்துப் பார்த்தபோது அவன் முகத்தில் அனல் வீசியது போல் வெயில் காய்வதால் அம்மதில்கள் எரித்து விழுந்தது போல் மலைகள் பிளந்து விழுந்து காட்டு வழியில் தெறிக் கிடக்கும் என்றார்.

 

பாரதி யசடிய பாரதி யரங்கத்துத்

திரிபுர மெரியத் தேவர் வேண்ட

எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப

உமையவ ளொருதிற னாக லோங்கிய

இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்.

-(சிலம்பதிகாரம் 6:39-43)

இளங்கோவடிகளும் தேவர்கள் வேண்டியபடி சிவபெருமான் திரிபுரத்தைத் தீயம்பால் எரித்ததாகக் கூறினார்.

 

ஆகவே, சிலபெருமான் தேவர்கள் வேண்டியபடி அரக்கர்களின் திரிபுரத்தை எரித்தான், ஒரு சமயம் முருகனை அனுப்பினான். அம்முருகன் சிவனுடைய மைந்தன் என வரும் பாடலில் திருமூலர் கூறினார்.

 

எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்

தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலாற்

கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான்

மைந்தன் இவனென்று மாட்டிக் கொள்வீரே.

-(திருமந்திரம் 1016)

 

சிவபெருமானுக்கு ஆறு வட்டமான முகங்கள் கொண்ட ஆறு குழந்தைகளாக சிவன் முன்பு சண்முகன் பிறந்தான். அவனுடன் இறைவனுடைய வாசனே கலத்திருப்பதால் கந்தசாமி, முருகன் என அழைக்கப்பட்டான். அவனைப்போல் அகத்தியரும் சிவனுடைய மைந்தராவார். அவரை ஈசன், அங்கி அகத்திய என விளித்ததாகத் திருமூலர் கூறியதால் அவர் வட்பால் தவ முனிவர் யாக குண்டத்தின் அக்கினியிலிருந்து பிறந்தார் என்பதை யறியலாம்.

 

அங்கி-அக்னி, அகம்-நீடுவிடம், உள்ளிடம், இயம் – இயங்கச் செய்பவன், எல்லாப் பெபொருள்களின் அகத்தில் (நடுவினுள்) இருந்து இயங்கச் செய்யும் அக்கினியின் அவதாரமானதால் அகத்திய (அகத்து+இயன்) என்று .அழைக்கப்பட்டான். அவனுக்கே உருத்திர வன்னியன் எவவும் பெயர் வழங்கியதாகும். உருத்திரன்-அக்கினியின் தெய்வம், வன்னி-அக்கினி, ஆகவே சம்பு முனிவன் யாக குண்டத்திலிருந்து அக்கினி தேவனே வாதாபியைக் கொல்ல அவதரித்ததால் அகத்தியனெனவும் உருந்திர வன்னியனெனவும் அழைக்கப்பட்டான்.

 

வன்னிய புராணம் சம்பு முனிவன் யாகத்திலிருந்து தோன்றிய உருத்திர வன்னியன் வாதாபியை வதைத்ததாகக் கூறுகிறது. ஆனால், மற்ற புராணங்களும் இதிகாசங்களும் வாதாவியை அகத்தியர் பஸ்ப மாக்கியதாகக் கூறுகின்றன. ஆகவே, வாதாவியைக் கொல்ல வடபால் முனிவன் யாகத்தலிருந்து தோன்றியவர் அகத்தியரேயாவார். அவர் அரக்கர்களை யழித்ததாக வேத்முங் கூறுகிறது.

 

ஆங்கிரஸ் மூலிகையே! உன்னக் கொண்டு அதர்

வணர் முதலில் அரக்கர்களை யடக்கினார்கள், உன்னைக்

கொண்டு கன்வெயும் அகஸ்தியரும் அரக்கர்களை

யடக்கினார்கள்.

– (அதர்வண வதம் IV. 87)

 

இதனால், அகத்தியர் அரக்கர்களை யழிக்க க்ஷத்திரியராக அவதரித்தாரென்பது தெரியவரும். இருக்கு வேதமும் அதர்வண வேதமும் இராஜ ரிஷிகளால் இயற்றப்பட்டு க்ஷத்திரியர்களால் போதிக்கப்பட்டு வந்தன. காலம் மாற மாற நால் வேதங்களையும் பிராமணர் ஓதுவாரானார். அதேபோல் க்ஷத்திரியராகத் தோன்றிய அகத்தியரைப் பிராமணராகப் பிற்காலத்தில் இதிகாசங்களும் புராணங்களும் கூறுகின்றன.

 

வடமொழி அக்கினி புராணம் அகத்தியர் காற்று நெருப்பின் சாரத்திலிருந்து வருணனுக்கும் மித்ராவுக்கும் மகனாக கமண்டலத்திலிருந்து பிறந்ததாகவும் விதர்ப்ப தேசத்து இளவரசி உலேபாமுத்திரையை மணந்ததாகவுங் கூறுகிறது.

 

சம்பு முனிவர் வளர்த்திய யாகத்தியில் சிவபெருமான் கமண்டலத்திலிருந்து நீரை ஆவுதியாக விட்டு அகத்தியர் பிறந்ததால் அவர் கமண்டலத்திலிருந்து பிறந்ததாகக் கூறலாம். அப்போது காற்று வீசி நெருப்பை அனல் வீசி எரியும்படி செய்து அகத்தியர் உதயமானதால் அவர் காற்று நெருப்பின் சாரத்திலிருந்து பிறந்தார் எனலாம்.

வேதமும் உபநிடதமும் வருணையும் இணைத்தே கூறும், மித்ரா! எங்களுக்கு நன்மை யருள்வாய், வருண! எங்களுக்கு நன்மை யருள்வாய், என்று தைத்திரியோ பவிஷதம் தொடங்குகிறது.

 

மித்ரா பிராண லிருந்து அல்லது உள்ளே சுவாசிப்பதையும் பகற்பொழுதையுங் காக்குத் தெய்வம்; அவன் (மனிதர்களைச் சுருசுருப்பாக விருக்கீச் செய்கிறான்; பூமியையும் ஆகாயத்தையும் தாங்குகிறான்; எல்லாரையும் கண் மூடாமற் பார்த்துக் கொள்கிறான் வருணன். இரவையும் சுவாசம் வெளிவிடுவதையும் காத்துக் கொண்டிருக்கிறான், அவன் சுடவுளுக்கு அரசனாகவும் அனைடங்களுக்கு அதிபதியாகவும் போற்றப்படுவான்’ எனப் பிருக தாரண்யக உபதிடதம் கூறுகிறது. இதனால் மித்ராவும் வருணனும்  இரவும் பகலும் என்பது தெரியவரும். பகலும் இரவும் கூடும் அந்திப் பொழுதில் வேள்வித் தீயிலிருந்து பிறந்ததால் அகத்தியர் மித்ராவுக்கும் வருணனுக்கும் பிறந்தவராகக் கூறப்பட்டார். தவசிகள் வேள்வி வளர்த்தியதை வருமடிகளால் அறியலாம்.

 

தவப் பன்ளித் தாழ்காவின்

அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்

ஆவுதி நறும்கை

-(பட்டினப் பாலை 53-5)

அகத்தியர் அங்தி (வேள்வி)யில் பிறந்ததால் ‘அங்கி அகத்திய’ எனப்பட்டார். அவர் விதர்ப்ப தேத்து அரசன் மகள் உலோபா முத்திரையை மணந்ததாகக் கூறியதால் அவர் க்ஷத்திரியரே யாவார், அக்கினி மாற்றாரைக் கொல்லும் க்ஷத்திரியனாகவே வேதம் கூறுகிறது. ஆதலால், அக்கினி புத்திரனால் அகத்தியரும் க்ஷத்திரியரே யாவார். அவர் க்ஷத்திரியரிர் முதல்வரானதால் இளங்கோவடிகள் மூவேந்தர்க்கு முரிய சிலப்பதிகாரத்தைத் தொடங்கும்போது சிவனோடு அகத்தியாரையும் நினைத்து அவர்களுக்கு அழிவேற்படாது என்று முற்று முணர்ந்த ஞானிகள் கூறுவார்கள் என்றார். திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும், பூம்புகார் போற்றுதும் என்ற பின்னர் இளங்கோவடிகள் கூறியவை:

 

பொதியி வாயினும் இமய மாயினும்

பதியெழு வறியாப் பழங்குடி கேழீஇய

பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்

நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லைத

ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்

முடிந்த கேள்வி முழுதுணர்ந் தோரே

-(சிலப்பதிகாரம் 1:14-9)

பொதிகையில் அகத்தியரும் இமயத்தில் சிவபெருமானும் புகாரில் உயர்ந்தவர்களும் இருப்பதால் அவைகள் நடுக்கமில்லாமல் நிலைத்திருக்கும் என்று சொல்வார்களே தவிர அழிந்துவிடுமென்று கேள்வியின் முடிவு முழுதும் உணர்ந்தவர்கள் கூறமாட்டார்கள். புகாரைக் கடல் கொண்டபோதும் அது இன்றும் மக்கள் மனதில் நிலைபெற்றிருக்கிறது.

 

இளங்கோவடிகள் சிலப்பதிகார மெழுதியபோது உடனிருந்த சாத்தனாரும் சிலப்பதிகாரத்தின் தொடர் நூலாக எழுதிய மணிமேகலையையும் அகத்தியரை நினைத்தே தொடர்கின்றார்.

 

உகந் திரியா ஓங்குயர் விழுச்சீர்ப்

பயர்புகழ் மூதார்ப் பண்புமேம் படிஇய

ஒங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத்

தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்.

– (மணிமேகலை 1:1-4)

சாத்தனார் மலய மலைபில் தவமிருக்கும் அகத்தியன் சொல்ல செம்பியன் திரிபுரத்தை எறித்ததாகக் கூறினார். ஓர் அரசன் செய்த செயற்கரிய செயலை அவனது சந்ததியாரும் செய்ததாகச் சங்கப்புலவர்கள் கூறுவது மரபு. அத்த மரபில் சிவபெருமான் எரித்த மூப்புரத்தை அவனது வழியில் வந்த சோழன் எரிந்ததாக கூறுகின்றனர்கள். ஆகவே, சாத்தனார் செம்பியன் என்று சிவனையும் மனங்கொண்டு நாலைத் தொடங்கினார். அவர் பதிகத்தைத் தொடங்கும்போது சோழனுடைய குல தெய்வம் சம்பாபதி முன்பு அகந்தியர் கரகத்தைக் கவிழ்த்துக் காவிரிப் பாவையைப் பிறப்பித்ததைக் கூறினார்.

 

இளங்கதிர் ஞாயி றென்ளுந் தோற்றத்து

எங்கொவி மேனி விரிசடை யாட்டி

பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித்

தென்திசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம்

சாசைச் சம்பு தன்கீழ் நின்று

மாதில மடத்தைக்கு வுருந்துயர் கேட்டு

வெந்நிற லாக்கர்க்கு வெம்பகை நோற்ற

சம்பு வென்பாள் சம்பா பதியினள்

செய்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்

கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட

கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை

செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல்

பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற

ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள்

ஒங்கு நீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு

ஆணு விசும்பின் ஆகாய கங்கை

வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப்

பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டீங்கு

அன்னை கேளிவ் வருந்தவ முதியோள்

நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கென

-(மணிமேகலை பதிகம் 1:1-21)

அகத்தியர் அக்கினியின் அவதார மானதால் ஆகாய கங்கை நீரை ஆவியாக்கிக் கரகத்தில் கமண்டலத்தில்) அடக்கி வந்தார். புகாரில் சோழனுடைய குலதெய்வம் சம்பாபதியின் முன்பு கரகத்தைக் கவிழ்த்து காவிரிப் பாவையைப் பாய்ந்தோட விட்டார்.

 

சம்பாபதி இமயத்தில் பிறந்து தென் தமிழ் நாட்டிற்கு வந்து பூமாதேவிக்கு அரக்கர்கள் விளைத்த துன்பத்தைக் கேட்டு அவர்களுக்குப் பகையாக சம்பு மரத்தடியிலிருந்து தவமிருந்தாள். அவள் சிவனைப் போல் செந்நிறமும் விரிசடையுங் கொண்ட சத்தியாவாள். இதனால், சிவபெருமானும் அர்க்கர்களை யடக்க சம்பு மரத்தடியிலிருந்து தவமிருந்தான் என்பது தெரியவரும். சம்பு மரத்தடியில் தவமிருந்ததால் சோழனுடைய குல தெய்வம் சம்பாபதி என அழைக்கப்பட்டாள். அதே போல் சம்பு மரத்தடியில் தவமிருந்ததால் சிவனும் சம்பு முனிவனென  அழைக்கப் பட்டான். அச்சம்பு முனிவன் யாகத்திலிருந்து தோன்றியவன் அகத்தியனே யாவான்.

சிவனை சம்பு முனிவன்

 

தானே யுலகுக்குத் தத்துவ னாய்நிற்குந்

தானே யுலகுக்குத் தையலு மாய்நிற்குந்

தானே யுலகுக்குச் சம்புவு மாய்நிற்குந்

தானே யுலகுக்குத் தண்சுட ராகுமே.

-(திருமந்தரம் 1978)

திருமூலர் சக்தியைத் தையல் என்றார். சிவபெருமான் சம்பு முனிவனாக தவமிருந்ததைப் பார்த்து அரக்கர்களை யடக்க சக்தியுந் தவமிருந்ததை நினைந்து இறைவன் தானே யுலகுக்குத் தத்துவனாகவும் தையலாகவும் (சக்தியாகவும்) சம்பு முனிவனாகவும் இருப்பதாகச் சொன்னார், சாத்தனார் சம்புவென்னுஞ் சம்பாபதியை விரிசடையாட்டி என்றது போலவே திருமூலரும் சக்தியை வரும் பாடலிற் சடாதரி என்றார்.

முத்து வதனத்தி முகந்தொறு முக்கண்ணி

சத்தி சதிரி சகளி சடாதரி

பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி

வித்தகி எண்ணுள்ள மேவிநின் றாளே.

-(திருமந்திரம் 1194)

திருமூலர் சிவனைப்போல் சத்தியும் முக்கண்ணும் சடையுமுடையவளாகக் கூறினார். இளங்கோவடிகளும் பாண்டியனுடைய குலதெய்வம் மதுராபதியும் சிவனைப்போல் பிறையுஞ் சடையுந் தரித்தவளாகக் கூறினார்.

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்

குவளை உண்கண் தவளவாள் முகத்தி

கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி

இடைநிலா விரித்த நித்தில நகைத்தி

இடமருங் கிருண்ட நீல மாயினும்

வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்

இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்

வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்

வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்

தனிச்சிலம்பு அரற்றுந் தகைமையள் பனித்துறைக்

கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்

பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்

குலமுதற் கிழத்தி

-(சிலப்பதிகாரம் 23:1-13)

இளங்கோவடிகள் மதுராபதி இடப்பக்கத்தில் நீல நிறமும் வலப்பக்கத்திற் பொன்னிறமும் வலக்கையில் இடக்கையில் தாமரையும் கொடுவாளும் இடக்காலில் தனிச்சிலம்பும் வலக்காலில் வீரக்கழலுங் கொண்டு இடப்பாகத்திற் சக்தியும் வலப் பாகத்திற் சிவமுங்கொண்ட அர்த்தநாரீஸ்வரரைப் போன்ற வளாகக் கூறினார்.

சிவன் நெருப்பின் ஆற்றளுடையவனானதால் பொன்னார் மேனியன் சக்தி நீரின் தன்மை பூண்டவளானதால் கடல் நீர்ப்போல் நீல நிறமுங் குளத்து நீர்ப்போல் பச்சை நிறமும் உடையவளாகக் கூறப்படுவாள். அவளைத் திருமூலர் பச்சை நிறத்தை யுடையவள் என்றார்.

 

ஓய்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளே

நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்

ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு

ரீங்காரத் துள்ளே யினிதிருந் தாளே.

-(திருமந்திரம் 1073)

ஐவர் – பஞ்ச பூதங்களின் தெய்வங்கள். ஆகாயம்-சதாசிவம், காற்று மகேஸ்வரன், நெருப்பு-உருந்திரன், நீர்-நாராயணன், நிலன்-நான் முகன். இவர்களில் முதல் மூவரைச் சிவனாகக் கூறுவதுபோல் மற்ற இருவருஞ் சிவனேதாம்.

 

காணலு மாகும் பிரமன் அரியென்று

காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்

காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங்

காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.

-(திருமந்திரம் 769)

சிவனும் சக்தியும் கலந்துடனே வைத்ததைக் கண்டதால் தான் சக்தியைச் சிவனுடைய சென்னிறமும் பிறையும் சடையும் முக்கண்ணு முடையவளாகக் கூறினார்கள். ‘அவளைப் பச்சை நிறத்தையுடையவள் என்ற திருமூலர் அவள் பவளம் போல் சென்னிற முடையவளாக வரும் பாடலிற் கூறினார்.

கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை

வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்

செம்பவ னத்திரு மேனிச் சிறுமியை

நம்பிரன் னுள்ளே நயந்துவைத் தேனே.

-(திருமந்திரம் 1058)

திருமூலர் முருகனை ‘அம்பவள மேனி ஆறுமுகன்’ என்றார். (திருமந்திரம் 526) சக்தியும் சிவனைப்போல் வன்னி (அக்கினி) என வரும் பாடலிற் கூறினார்.

பன்மணி சந்திர கோடி திருமுடி

சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி

நன்மணி சூரிய சோம நயனத்தன்

பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

– (திருமந்திரம் 1083)

சக்தி வலக் கண்ணிற் சூரியனைப்போல் கோபக் கனலும் இடக்கண்ணில் சந்திரனைப்போல் தண்ணெளியுங் கொண்டவள். அதாவது இடப்பாகந்திற் சக்தியும் வலப்பாகத்தில் சிவனுங் கொண்டவள், அதேபோல் சிவனும் இடப்பாகத்திற் சக்தியும் வலப்பாகத்தில் சிவனுங் கொண்டவன். அவனது இடப்பாகந்திலுள்ள சக்தியே சம்பு முனிவனாக அவதரித்து அரக்கர்களை யடக்க சம்பு மரத்தடியில் தவமிருந்தான் போலும்! அப்படி தவயிருந்து வேள்வி வளர்த்திய யாக குண்டத்திலிருந்து அகத்தியர் அரக்கர்களே அழிக்க அவதரித்ததால் தான் திருமூலர் ‘அகத்தியன் மேல்பாலவனொடும் வடபால் தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கோளி நானே.’ என்றார்.

திருஞானசம்பந்தர் திருவானைக்காவில் பாடிய ஓர் பதிகத்தில் சிவபெருமான் வெண்ணாவல் (சம்பு) கீழிருந்தே மலையை வில்லாக வளைத்துத் திரிபுரத்தை எரித்ததாகப் பாடிய பாக்கள் வருமாறு:

கொலையார் கரியின் னூரிமு டியனே

மலையார் சிலையா வளைவித் தவனே

விலையா வெனையா ளும் வெணா வலுளாய்

நிலையா வருளா யெனுநே ரிழையே

குன்றே யமர்வாய் கொலையார் புவியின்

தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்

வெள்றாய் புரமூன் றைவெணா வலுவோ

நின்றா யருளா யெனுநே ரிழையே.

 

ஈசன் வெண்ணாவலின் கிழிருந்து அரக்கர்களை யடக்கியதால் தேவர்கள் அம்மரத்தை வணங்குவாரானார் என்பதை வரும் பாடல் புலப்படுத்துகிறது.

புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்

ஒத்தவ் வுரைசொல் லீவையோ ரகிலார்

மெய்ந்தே வர்வணய் கும்வெணா வலுளாய்

அத்தா வருளா யெனுமா யிழையே.

 

இறைவன் அரக்கர்களே படக்க வெண்ணாவல் கீழ் தவமிருந்ததைக் கண்டு தான் சம்பு என்னும் சம்பாபதியும் அரக்கர்களே யடக்க திருவானைக்காவில் சம்பு மரத்தடியில் தவமிருந்தா ளென்பதை வரும் பாடல் புலப்படுத்துகிறது.

மழைவார் மிடறா மழுவச ளுடையாய்

உழையார் கரவா யுமையாள் கணவா

விழவா ரும்வெணா வலின்மே வி வெம்

அழகா வெனுமா யிழையா எவளே.

 

சம்பந்தர் திருவானைக்காவில் ஒருத்தி சிவன் வெண்ணாவலி விருந்ததை வியந்ததாகப் பாடல்கள் தோறும் பாடிய பதிகத்தின் முதற் பாட்டு இது. இதில் உமையாளையும் ஆயிழையாளையும் வேறுபடுத்திக் கூறியதால் சாத்தனார் கூறிய சம்பு என்னுஞ் சம்பாதி சம்பு மரத்தடியில் திருவானைக்காவில் தவமிருந்ததாகச் சம்பந்தர் எண்ணித்தான் அப்பதிகத்தைப் பாடினார் எனத் தெரிகிறது. சாத்தனார் கி. பி. முதலாம் நூற்றாண்டில் இருந்தவர். சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டிலிருந்தவர். ஆகவே அவருடைய காலத்தில் சம்பாபதியின் வரலாறு வழங்கியிருக்க வேண்டும். அவளைப் போல் சிவனும் கயிலாயத்தில் வெண்ணாவல் மரத்தின் கீழ் அரக்கர்களுக்குப் பகை நோற்றான் எனச் சம்பந்தர் அறிந்திருந்தாரென்பதை அவர் திருவானைக்காவில் பாடிய மற்றொரு பதிகம் பலப்படுத்துகிறது. அதன் முதற்பாடல் வருமாறு:

மன்னது வுண்டர் மலரேன்காணா

வெண்ணாவல் விரும்பும பேந்திரரும்

கண்ணது வோங்கிய கயிலையாரும்

அண்ணலா குராதி யானைக்காவே.

 

இப்பதிகத்தின் பாடல்கள் தோறும் சம்பந்தர் கயிலையாரும் மயேந்திரர் ஆரும் (விரும்பும்) ஊர் ஆனைக்காவே என்றதால் சிவபெருமான் தன்னைப்போல் சம்புமரத்தடியில் சம்பாபதி தவமிருந்த ஊரானதால் திருவானக்காவினை விரும்பினான்  எனச் சம்பந்தர் பாடியது தெரிகிறது. ஆகவே கயிலாயத்தில் சம்பு மரத்தடியில் தவமிருந்த சம்பு முனிவன் சிவனேயாவான். ஆனால், திருவானைக்கா ஸ்தல புராணஞ் சம்பு முனிவரையும் சிவபெருமானையும் வேறுபடுத்திக் கூறுவது வருமாறு :

 

திருவானைகாவில் சம்பு முனிவர் நாவல் மரச்சோலையில் சிவ பெருமானை அத்துவிதப் பொருளாகச் சிந்தித்து தவமிருந்து வந்தார். அவர் முன்பு ஓர் சம்பு நாவற்பழம் விழுந்தது. அப்பழத்தைக் கொண்டு போய் முனிவர் கைலாயத்தில் சிவபெருமானுக்குக் கொடுத்தார். சிவபெருமான் நாவற்பழத்தைப் பிரியமாகச் சாப்பிட்டுக் கொட்டையை உமிழ்ந்தார், அக்கொட்டையைப் பிரியமாகச் சம்பு முனிவர் விழுங்கி விட்டார். அது அவருடைய வயிற்றில் முளைத்து சிரசின் வழியாக நாவல்மரமாக வோங்கி வளர்ந்தது. அம்மர நிழலில் தங்கியிருக்கும்படி முனிவர் சிவனை வேண்டினார். பெருமான் முன்பு பழம் விழுந்த இடமான திருவானைக்காவிற்குப் போயிருக்கும்படி முனிவரை யனுப்பினார்.

 

உமாதேவி சாபவிமோசனம் பெறத் திருவானைக்காவிற்கு வந்து காவிரி நீரைத் திரட்டிச் சிவலிக்கமாக்கி அதற்கு நிழல் தரும்படி சம்பு முனிவரைப் பணித்துப் பூசித்து வந்தாள்.

 

இத்தலத்தில் அன்றாடம் ஓர் யானை துதிக்கையில் காவிரி தீர்த்தத்தைக் கொண்டுவந்து லிங்கத்திற்கு அபிஷேகஞ் செய்து மலர் தூவி அர்ச்சித்து வந்தது. ஓர் சிலந்தி அன்றாடம் லிங்கத்தின் மீது நாவல் இலை விழாதபடி தன் இழையினால் கோயிற்கட்டி வந்தது. அந்த எச்சில் நூலை அன்றாடம் யானை களைத்து வந்ததால் சிலந்தி ஒரு நாள் கோபங்கொண்டு யானையின் துதிக்கையின் வாயில் புகுந்து உச்சி மண்டையைக் கடித்தது. யானை துடிதுடித்துத்  துதிக்கையை வாயில் கவ்விய வண்ணம் உயிர் விட்டதால் சிலந்தியும் வெளிவர முடியாமல் உயிர்விட்டது. ஆனால், அவை யிரண்டும் பகைமை நீங்கி தேவ சரீரம் பெற்றன.

 

சம்பு நாயகர் அகிலாண்ட நாயகியாருடன் காட்சி தந்து, நீங்கள் இருவரும் எம்மைப் பூசித்தபடியால் யானை நமது உலகத்தில் சிவ கணத்தலைமை பூண்டு சிறப்படையும். சிலந்தி சோழ மன்னனாகப் பிறந்து சிவபதம் அடையும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

 

இப்புராணக்கதை திருவானைக்கா கோயில் திருப்பணி செய்த காலத்திலும் வழங்கி யந்ததால் மூலஸ்தான கற்சுவரில் அகிலாண்ட நாயகி சிவலிங்கப்பூசை செய்வதாகவும் ஓர் யானை துதிக்கையால் லிங்கத்திற்கு அபிஷேகஞ் செய்வதாகவும் ஓர் சிலந்தி கூடு கட்டுவதாகவும் ஜம்பு முனிவர் தலைவழியாக வளர்ந்த சம்புமரம் லிங்கத்திற்கு நிழல் தருவதாகவும் செதுக்கப்பட்டிருக்கிறது.

 

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்

அங்கட் கருணை பெரிதா யவனே

வெங்கண் விடையா – யெம்வெணா வலுனாய்

அங்கத் தயர்வரி யினனா யிழையே.

 

இப்பாடலிற் சம்பந்தர் ஈசனார் செங்கட் சோழனுக்குக் கருணை செய்ததாகக் கூறியதால் ஸ்தல புரசணத்தில் ஈசன் செங்கட்சோழனாகப் பிறப்பாய் என்று சிலந்திக்கு வரங்கொடுத்ததாகச் சொல்லியது தெரிகிறது. திருநாவுக்கரசர் திருவானைக்காவிற் பாடிய ஓர் பதிகத்தின் பாடல்கள் தோறும் ஈற்றடியில் ‘செழுநீர்த் திரளைச் சென்றாடி னேனே.’ என்றதால் உமாதேவி நீரைத்திரட்டி லிங்கஞ் செய்ததாக ஸ்தல புராணம் கூறியது தெரிகிறது‘

நீல வண்டறை கொன்றை நேரிழை மங்கையோர் திங்கள்

சால வாளர வங்கள் தங்கிய செஞ்சடை யெந்தை

ஆல நிழலு ளானைக் காவுடை யாறியை நாளும்

ஏலு மாறுவல் லார்கள் எம்மையு மாளுடையாரே

 

இப்பாடலிற் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘ஆல – நிழலுள் ஆனைக்லாவுடை ஆதி’ என்று தான் சொன்னார். அவர் சம்பு நிழலுள் ஆனைக்லாகாவுடை ஆதியிருப்பதாகச் சொல்லவில்லை. ஆகவே ஸ்தலப்புராணத்தில் ஜம்பு முனிவர் சிரசின் வழியாக முளைத்த சம்பு மர நிழலில் சம்பு நாயகர் இருந்தாகக் கூறுவது நம்புவதற்கில்லை. இதேபோல் தான் வன்னியர் புராணத்தில் சம்பு முனிவர் யாகம் செய்த போது சிவபெருமான் நெற்றிக்கண்ணீரை ஆவுதியாக விட்டு குத்திர வன்னியன் பிறந்தான் என்பதும் புராண கர்த்தாவின் கற்பனையில் தோன்றியதே. யாகும்.

தந்தை தாயுல குக்கோர் தந்துவன் மெய்த்தவத தோர்க்குப்

பந்த மாயின பெருமான் பரிசுடையவர்திரு வடிகள்

அந்தண் பூம்புன லானைக் காவுடை யாதியை நாளும்

எந்தை யென்றடி சேர்வா ரெம்மையு மாளுடை யாரே.

 

இப்பாடலிற் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆனைக்காவுடைய ஜம்புகேஸ்வரர் தந்தை தாயாக உலகுக்கு ஓர் தத்துவனாக விருப்பதாகக் கூறினார். இதேபோல் திருமூலரும் சிவன் தானே யுலகுக்குத் தந்துவனாய் தையலுமாய் சம்புவுமாய் நிற்குமென்றார், (திருமந்திரம் 1978). ஆகவே இறைவன் தந்தை தாயாக உலகுக்கோர் தத்துவனாகவும் சம்பு முனிவனாகவும் சம்பாபதியாகவும் நின்றான்.

 

திருவானைக்காவில் பாடிய இரு பாடல்களில் திருநாவுகரசர் திருவனைக்கா வுளானை ‘கச்சியேகம்பன்’ எனக் கூறியிருப்பதும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடல்கள்தோறும். ஆனைக்காவுடை ஆதியை நாளும் ஏத்துவார் எம்மையு மாளுடையாரே எனக் கூறியிருப்பதும் நாட்டையாளும் பல்லவர்கள் தாங்கள் கோத்திரத்தின் முதல்வனான சம்பு நாயகர் ஆலயத்தைத் திருவானைக்காவில் கட்டினா்கள் என்பதைக் காட்டுகின்றன. சம்பு முனிவன் யாகத்திலிருந்து அகத்தியர் தோன்றினார் என அறிந்துதானோ என்னவோ அக்கோயிலில் அறுபத்து மூவரோடு அகத்தியர்க்கும் உலோபாமுத்திரைக்கும். சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

 

சம்பு முனிவன் சிவனைத்தவிர வேறு யாருமில்லை. அம்முனிவன் யாகத்தில் தோன்றியவர் அகத்தியரைத் தவிர வேறு யாருமில்லை. மேல் நாட்டவர் தெய்வம் அகஸ்டஸ் (Augustus) அகத்தியரே என்பர். யூதர்களும் அக்கினியின் சந்ததியராகவே கருதப்படுகிறார்வள். ராஜ புத்திரர்களும் யாக குண்டத்திலிருந்து தோன்றிய சந்ததியாராக கூறப்படுகிறார்கள். ஆகவே சம்பு முனிவன் யாகத்திலிருந்து சந்ததியார் வன்னியர் என்பது தொன்று தொட்டு வழங்கி வருவது.

 

வன்னியர் வேதங்கூறும் ஆங்கிரஸரின் சந்ததியார்

மறை மொழிந்தபடி மரபில் வந்த

குலதிலகன் வண்டை நகர் அரசனே

-(கலிங்கத்துப்பரணி 342)

செயங்கொண்டார் பல்லவ மன்னன் கருணாகரத் தொண்ட வன்னியனை வேதம் கூறிய மரபில் வந்த குலதிலகன் என்றார். பல்லவர் வேதங்கூறும் ஆங்கிரஸரின் சந்ததியார் என்பதைக் காஞ்சி கயிலாசநாதர் கல்வெட்டு காட்டுகிறது. தேவநாகர எழுத்திலுள்ள அது பல்லவருடைய உற்பத்தி முறையைக் கூறியது வருமாறு:

 

பிரம்மாவினிடமாக வுதித்த அக்கினி குமாரனாகிய ஆங்கிரஸனும், குமரனும் இந்திரனுக்கு மந்திரியும் தேவர்களுக்குக் குருவுமாகிய பிரகஸ்பதியும், இவருக்குப் புத்திரனான சமியும், இலருக்குப் புத்திரனாக உக்கிரமான பராக்கிரமத்தை யுடையவரும் திரிலோகங்களிலும் பூசிக்கப்பட்ட வரும் அதிபராக்கிரமத்தை யுடையவருமான பரத்வாஜ முனி யுதித்தார். இம்முனீந்திரர் பல்லவ வம்சோற்பவத்திற்குக் காரணபூதரானார். இவரிடத்திலிருந்து பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருவாகிய துரோணர் உதித்தார். இவரிடமிருந்து அரசர்களுடைய பராக்கிரமத்தையுங் கர்வத்தையும் அடக்கிய அசுவத் தாமன் உதித்தான். ஆகியிற் பிரமாவினிடமாக வுதிந்த மனுவரச வம்சத்திற்கு மூல புருஷராய் எவ்வாறிருந்தாரோ அவ்வாறு மேற்படி அசுவத்தாமன் புத்திரனாகிய பல்லவன் உலக முழுமையும் அரசானக்கூடிய ஜய சாலிகளாயும் பராக்கிரமாலிகளாயுமுள்ள அரசர்களுக்கு மூல புருஷனானான்.

 

மேற்கூறியவாறே ஆந்திராவில் பல்லவர் உண்டாக்கிய அமசாவதியிலிருந்த கல்வெட்டும் பல்லவர் உற்பத்திமுறையைக் கூறுகிறது.

 

காஞ்சியில் வரதராஜர் கோயில் கல்வெட்டொன்றில் ‘ஸ்வஸ்தி ஸ்ரீ மஹாமஹி மண்டலேஸ்வரன் பரமவம்ஸோத்பவ பல்லவ குலதிலக பரத்வாஜ கோத்திர ஜெகத்கோபால பல்லவாதீத திருநேத்திரனைய பல்லவராய’ என்று வரைந்திருப்பதால் துரோணருடைய தந்தை பரத்வாஜர் கோத்திரமும் பல்லவருக்கு வழங்கியது உறுதியாகின்றது. ஆகவே வியாசர் கூறியபடி கவுரவர்க்கும் பாண்டவர்க்கும் போர்முறை கற்றுக் கொடுத்து கவுரவர்க்குச் சேனாபதியாக விருந்து போர்க்களத்திற்ண்ட துரோணர் பிராமணன் யுத்தம் புரிவது குலதர்மத்திற்கு விரேதமானது.

 

கயலாசநாதர் கல்வெட்டு அக்கினி புத்திரனான ஆங்கீரஸரின் சந்ததியாக பல்லவரைக் கூறியதால் வன்னியர் ஆங்கிரஸரின் வழியில் வந்தவரே யாவர், வியாசர் பாரதத்திலும் அறுசாசனப்பர்வம் 113, 116, 129வது சுலோங்களில் க்ஷத்திரியர்களுக்கு மூலபுருடர் அங்கீஸசனெனவும் அவன் வழியில் வந்தவர்களே ஆங்கீரரான அக்கினி வம்சந்தார் எனவுங் கூறப்பட்டிருக்கின்ற்ன.

 

அங்கங்களின் சாரத்திலிருந்து பிறந்தவரானதால் ஆங்கிரஸரென அழைக்கப்பட்டதாக உபதிடகங்கள் கூறுகின்றன. சிவனுடைய அங்கமான அக்கினியின் சாரத்திலிருந்து பிறந்ததால் தான் திருமூலர் அங்கி அகந்திய வெனவும் அகத்தியன் மேல்பாலயனொடு வடபால் தவமுனிவன் எங்கு மிலங்கு மொனி யெனவும் கூறினார். ஆதலால் மேற்கூறிய கைலாசநாதர் கல்வெட்டில் பிரம்மா வென்றது பரபிம்மம். பிரம்மாவின் புத்திரன் அக்கினி என்ற சம்பு. அக்கினியின் புத்திரன் ஆங்கிரஸன் என்றது அகத்தியன் என்பதும் பொருத்தமானதேயாம்.

 

அக்கினி! உன்னை வணங்குபவர்க்கு நீ எந்த தன்மை புரிந்தாலும் அது உன்னுடையதேயாம். ஓ ஆங்கிரஸ் என திருக்கு வேதம் கூறுவதால்  அங்கிராஜனான அக்கினியின் வம்சத்தவர் ஆங்கிரஸர் என்பதில் ஐயமில்லை.

 

ஆங்கிரஸ் செய்ததுபோல் மாற்றரின் பொருளைக் கொள்ளையடிப்பதில் சிறந்தவனென்று உன்னை (அக்கினியை) அழைக்கிறோம். உன்னை உரக்க உயர்வாக வாழ்த்துக்கிறோம். அக்கினி மாற்றார் பொருளைக் கவரும் நாயகனே, பசுக்களேக் கவர்த்த செல்வனே! பலமிக்க இனைஞனே! ஓ கதவேதாஸ்! எங்களுக்குப் புகழ் தருவாய். இங்ஙனம் இருக்கு வேதங் கூறுவதால் அக்கினியிலிருந்து பிறந்த க்ஷத்திரியருடைய குலத்தொழில் மாற்றாரை வென்று பொருள்களையும் பசுக்களையும் கார்ந்து வந்து நாட்டைக் காப்பதென்பது வேத காலத்திற்கு முன்பிருந்தே சங்ககாலம் வரை நடைமுறையிலிருந்து வந்தது தேற்றம்

திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப்

பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு

வயவுரு மகளிர் வேட்டுணி னல்லது

பகைவ ருண்ணா வருமண் ணினையே

-(புறநானாறு 20:12-5)

 

குறுங்கோழியூர் கிழார் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரவிரும்பொறையைப் ‘பகைவரை யழித்து அவர்களுடைய நிலத்துப் பொருளே யுண்ணும் தலைவர் நின் நாட்டில் கர்ப்பஸ்திரிகள் விரும்பி சாப்பிடுவதைத் தவிர்த்துப் பகைவர் சாப்பிட முடியாத நிலவருவா யுடையாய் என்றார்.

 

வருவர்கோல் வாழி தோழி பொருவார்

மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை

வண்டேர்த் தொண்டையர் வழையம் லடுக்கத்துக்

புன்றா ளோமைய சுரனிறந் தோரே

-குறுந்தொகை 260: 4-8)

கல்லாடர், பொருவார் மண்ணெடுத்துண்ணுந் – தொண்டையர் என்றது அவர்கள்ள் க்ஷத்திரியர் என்பதை வலியிறுத்தும். டாக்டர் உ.வே. சுவாமி நானதைய்யர், ‘பொருவார் மண்ணெடுத்துண்ணுதலாவது பகையரசர் நாடுகளை வென்று அடிப்படுத்து அவற்றால் வரும் பயன்களை நுகர்தல் இப்பொருள் பற்றியே வடமொழியிலும் அரசனே ‘பூபுக்’ என்று கூறுவர் என்றார். அவர் தொண்டையர் என்பதற்குத் தொண்டைமான்களுக்குரிய என உரை கூறினார். தொண்டைமான் இனத்திரையறுடைய தாய்நாடான நாகநாட்டில் (தூரக்கிழக்கு நாட்டில் இருந்து வந்து அவனுடய பகைவரை வென்று அவனுக்குக் காஞ்சியில் முடிசூட்டிய நாகர்களே தெண்டையரென வருமடிகளால் அறியலாம்.

 

பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான்

கொடுவரிக் குருளை கொனவேட் டாங்குப்

புலவர்ர் பூண்கடன் ஆற்றிப் பகைவர்

கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும்

ஒன்றல் செல்லா வுரவுவாள் தடக்கைக்

கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக

-(பெரும்பாணாற்றுப்படை 443.54)

 

கடியலூர்  உருத்திரங்கண்ணனார் தொண்டையர் புலவருக்குக் கொடுக்க வேண்டிய கடமையைச் செய்துவிட்டு யானையைத் தாக்கிய சிங்கம் புலிக்குட்டியைக் கொல்ல விதம்பியதுபோல் பகைவர் காக்னாங் கோட்டை மதில்களை யழித்து அவர்களுடைய கீரிடத்தைக் கைக் கொண்டு வெற்றியடைவதைத் தவிர்த்துப் பகைவர் சமாதானத்திற்கு வந்த போதும் சம்மதிக்காத மனவுறுதி படைத்தவராய் உரமானவர்கள் தடக்கையிலேந்தி போரிட்டுப் பகைவர் நாட்டில் கவர்ந்த தல்லாடரும் தொண்டையர் மாற்றாரின் பொருளை வென்று சாப்பிட்டதாக கூறியதால் வேதத்தில் மாற்றாரின் பொருளைக் கவர்ந்துண்ணபங்கள் கூறிய ஆங்கீரஸரின் சந்ததியார் தொண்டையர் எனத் தெரிய வரும். சங்க காலத்தில் தொண்டையர் எனப்பட்டவர்களே பல்லவ ரெனப்பட்டா்க ளென்பது வரும் பாடலால் தெரியவரும்.

தொண்டையர்க்காக  முன்வருசுரவி

துங்கவெண்விடை உயர்த்தகோன்

வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு

மால்களிற்றின் மிசைகொள்ளவே.

-(கலிங்கத்துப் பரணி)

செயல்கொண்டார் கருணாகரத்தொண்டை வன்னியனைத் தொண்டையர்க்கரசு என்றதுபோல் நந்திக்கலம்பகத்திலும் பல்லவ மன்னன் நந்திவர்மனைத் தொண்டை வேந்தன் (4 5, 39) தொண்டைக்கோ 11, 45) தொண்டை யரசே (68) தொண்டைய நாடுடைய கோவே (79) தொண்டையோன் (66) பல்லவ ரடலேறு (54) பல்லவன் கேளரி (68, 83) என்றதால் தொண்டையரும் பல்லவரும் தொண்டை நாடும் பல்லவநாடும் ஒருபொருட்கினளிகளாகும்.

 

இளந்திரையன் தன் தாய் நாட்டாரைப்போல் தொண்டை (கோவைக் கொடி) மாலை யணித்திருந்ததால் தொண்டைமான் என அழைக்கப்பட்டான். நாக நாட்டிவிருந்து வந்த அவனுடைய தாய் நாட்டின் சேனைகளும் தொண்டை மாலை யணிந்திருந்ததால் அவர்களைத் தொண்டையர் எனச் சங்கப்புலவர்கள் கூறினார்கள். அவர்கள் மணி பல்லவத் தீவில் (அழகிய பல்லவ தேசத்தில்) இருந்து வந்தவர்களானதால் பல்லவ ரெனவும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் ஜனத் தொகையில் பலபேர் இருந்ததால் பல்லவர் என அழைக்கப்பட்டதாகவுந் தோன்றுகிறது. பறையெழுந் திசைப்ப பல்லவர் ஆர்ப்ப (கவித் தொகை 104 : 29). இம் முல்லைக் கலியிலுஞ் சிறு பஞ்ச மூலப் பாயிரத்திலும் பல்லவர் என்ற சொல் பலபேர் என்ற பொருள் கொண்டது. பல்லவம் என்ற வடமொழி சொல்லுக்குக் கொடி யென்பது பெருளானதால் தொண்டைக்கொடி யணிந்திருந்ததால் பல்லவர் என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.

 

வன்னியர் கடைச்சங்க காலத்திலிருந்த வேளிர்களின் சந்ததியாரும் கி. பி. முதலாம் நூற்றாண்டில் நாக நாடென்னும் தூரக்கிழக்கு நாடுகளிலிருந்து வந்து குடியேறிய பல்லவர்களின் சந்ததியாருமாவர் அரசாங்க ரிகார்டுகளில் வன்னியரின் சாதிப்பெயர் வன்னிய குல க்ஷத்திரியர் அல்லது வன்னியர் என்று தான் பதிவு செய்யப்படும், நாயகர், படையாட்சி, கவுண்டர் எனப்பலக் குடிப்பெயர் கொண்ட போதிலும் அவர்கள் அனைவரும் பள்ளியென அழைக்கப்படுவார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  1. வன்னியரின் குடிப் பெயர்கள்

பள்ளி

 

பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்க

வெள்ளிக் கவிகை மிசையோங்க

-(குலோத்துங்க சோழனுலா83)

 

பள்ளி என்ற விருது பொறிக்கப்பட்ட திருப்பள்ளித் தொங்கல் என்னும் பொன்னாபாண மணிந்து அரசன் யானை மீது பவனி வருவான். பொன்னெழுத் தெழுதுசே றாடி பொற்புற (திருக்களாத்திப் புராணம் 7:66) என்றதால் பொன்னால் பள்ளி என்ற சேறாடி (விருது) எழுதப்பட்ட டாலர் கொண்டது. திருப்பள்ளித் தொங்கல் (மாலை) என்பதை அறியலாம். கோவைத் திருப்பள்ளித் தொங்கல் (குலோத்துங்க சோமனுலா 132) எனவும் கொடியும் பதாகையுங் கொற்றக் குடையும், வடிவுடைய தொங்கலுஞ் சூழ (ஆதியுலா 57) எனவுங் கூறியதால் பொன்னால் செய்த பல உருப்படிகள் கோக்கப்பட்டது. திருப்பள்ளித் தொங்கல் என்பதை அறியலாம்.

 

பள்ளி என்ற சொல்லுக்குப் பலப் பொருள்க ளுண்டு, படுக்கை படுக்கையறை: “பாடமை சேர்க்கைப் பள்ளி” (சிலப் 24:14), ‘பாம்பணை பள்ளி யமர்த்தோன் (பெரும், 373) குளவிப் பள்ளி பாயல் கோள்ளும் (சிறுபாண் 46) சமையலறை: ‘மடைப்பள்ளி’ (சிலப் 21:5) அரசவை: அரங்கும் பள்ளியும் (சிலப் 24:14) அறவோர் இருப்பிடம்: அறவோர் பள்ளி (சிலப் 14:10; மணி 20:6) ‘மாதவர் பள்ளி (மணி 18:8) தவப் பள்ளி (பட்டி 53) ‘நவையறு நாத னல்லறம் பகர்வோர், உறையும் பள்ளி புக் கிறைவளை நல்லாள் (மணி 28:71-2) விலங்குகள் வதியு மிடம்: குருளை நீர் நாய் கொழுமீன் மாந்தித், தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும் கல்லளைப் பள்ளி வதியும்’ (நற்றினை 195; 98) பாசறை : திருமணி விளக்கம் காட்டி திண்ஞாண், எழினி வாங்கிய வீரறைப் பள்ளி (முல்லைப்பாட்டு 63-4)

 

சால்தூய்மை யில்லாக் கலீமாவுங் காழ்கடிந்து

மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ்-சீறிக்

கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளியிம் மூன்றும்

குறுகா ரறிவுடை யார்.

-(திரிகடுகம் 46)

அரசன் முகாம் போடும் ஊரும் ‘பள்ளி’ எனப்பட்டது. மலைபடு கடாம் 419-வது, வரியில் பள்ளி என்றதற்குத் தோற் படுக்கையெனவும் 451-வது வரியில் ‘பள்ளி’ என்பதற்கு இடைச்சேரி யெனவும் நச்சினார்க்கினியர் உரை கூறினார், ஆகவே சங்க காலத்திலேயே ஊர்க்குப் பள்ளி யெனப் பெயர் வழங்கியது. கடைச்சங்கம் முடிந்து ஐந்நூறாண்டுகளுக்கு அப்பால் அவதரித்த அப்பர் சம்பந்தர் காலங்களிலும் ஊர்க்குப் பள்ளி யெனப் பெயர் வழங்கியதை வரும் தேவாரப் பாடல்களால் அறியலாம்,.

 

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே

அஞ்செழுத் தோதிணாளு மரனடிக் கன்பதாகும்

வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா வமணர்தந்த

நஞ்சமு தாக்குவித்தார் நனிபள்ளி யடிகளாரே.

-அப்பர் தேவாரம்

தோடொரு காதனாகி ஒருகா திலங்கு

கரிசங்கு நின்று புரளக்

 

காடிடமாக நின்று கனலாரும் எந்தை

இடமாய காதல் நகர்தான்

வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று

வெறிநீர் தெளிப்ப விரலால்

நாடுடன் ஆடுசெம்பை ஒலிவெள்ளம் ஆரும்

நனிபன்ளி போலும் நமர்கான்.

-(சம்பத்தர் தேவாரம்)

அப்பர் சமணர் கொடுத்த நஞ்சை அமுதாக்கியதும் சம்பந்தரின் தாயார் பிறந்ததும் திருநனிப்பள்ளியில். இங்கே சம்பந்தர் புன்செய் நிலத்தை நஞ்சை நிலமாக்கியதால் இவ்வூர்க்குப் புன்செய் யென ஒரு காலத்தில் பெயர் வழங்கியது. இப்பெயர்கள் மாறிக் கடாரங்கொண்டான் என வழங்கிய பெயர் திரிந்து கிடாரங்கொண்டான் என இப்போது வழங்கி வருகிறது. இவ்வூருக்குச் சமீபத்திலுள்ள செம்பொன்னார் கோயில் ஈசனை, தேவர் சென்று வணங்கும் செம்பொன் பள்ளிபான் மூவராய் முதலாய் நின்றமூர்த்தி’ என அப்பர் கூறினார். இதனால் அக்காலத்திற் செம்பொன் பள்ளி என்ற ஊரின் பெயர் மாறி செம்பொன்னார் கோயில் என்று சொல்லி வந்தது. இப்போது செம்மனார் கோயில் என்றாயிற்று. எனவே சங்க காலத்திலும் தேவார காலத்திலும் பள்ளி யென்ற அடைமொழி கொண்ட ஊர்களின் பெயர்கள் மாற்றமடைந்து தற்போது திருச்சிராப்பள்ளி, அகத்தியம்பள்ளி என ஒரு சில ஊர்களே தமிழகத்தில் நிலைத்திருக்கின்றன. இங்ஙனே கேரளாவிலும் ஒருசில ஊர்களே பள்ளி என்ற சொற் கொண்டவை.

 

ஆனால் ஆந்திராவில் அநேக ஊர்களுக்குப் பள்ளி என இன்னும் வழங்கி வருகிறது. தமிழில் ‘பால்’ என்பது கன்னடத்தில் ஆல் எனச் சொல்வது போல் பள்ளி யென்பது கர்னாடகத்தில் அள்ளி யென அதேக ஊர்களுக்கு வழங்கி வருகிறது. அப்படியே மகாராஷ்டிரத்திலும் அள்ளி யென வழங்கி வருகிறது.

ஒரு சில  கோயில் கொண்டிருக்கும் இறைவன் அவ்வூரையுடையவனாகக் கல்வெட்டுக்களிற் கூறப்படும், பள்ளிச்சத்தம் வகையூர் கல்வெட்டொன்று, இப்பள்ளியுடைய ஆரம்ப நந்திக்கு என்று கூறுகிறது. மகாபலிபுரத்திற் கடந்தரையோரத்திலுள்ள கோயிலின் வடப் பக்கம் அடிவாரத்திலுள்ள கல்வெட்டில், பள்ளி கொண்டருளிய தேவரும் என்று வரையப்பட்டிருக்கிறது. அப்பரும் ‘நனிபள்ளி யடிகளாரே யெனவும் செம்பொன் பள்ளியான் எனவும் கூறினார், அங்ஙனே பள்ளி (ஊரை) யுடைய அரசனைப் பள்ளியான் எனவும் பள்ளி கொண்டவன் எனவும் அழைத்தது தெரியவரும். கச்சி ஏகாம்பர நாதர் கோயிற் கல்வெட்டொன்று பள்ளி கொண்ட பாஞ்ச நிதிவரணனான ராஜேந்திர பல்லவராயன், எனக் கூறுகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரராலயக் கல்வெட்டு, பள்ளிச்செல்வன் பழமுடயனான குலோத்துங்க சோழப் பொரியரையன் என்று கூறுகிறது. இதனால் அரசன் திருப்பள்ளித் தொங்கல் அணிந்திருந்ததாலும் பள்ளி (ஊரை) யுடையவனுனதாலும் பள்ளி கொண்டான் பள்ளியான் என அழைக்கப்பட்டது தெரியவரும். அதனால் அரச பரம்பரையினரான வன்னியரும் பள்ளி என அழைக்கப்பட்டார்கள், அவர்கள் குடியிருந்த தெருவுக்குப் ‘பள்ளித் தெரு’ எனப் பெயர் வழங்கியது போல் அவர்கள் குடியிருந்த ஊர்களுக்குப் பள்ளி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. இன்றும் அநேக கிராமங்களில் வன்னியர் இனம் ஒன்றே வாழ்ந்து வருகிறது. அப்படி வாழ்ந்த ஊர்கள் பள்ளி என அழைக்கப்பட்டதாகும்.

வன்னியர் செல்வந்தர்களாக வாழ்ந்ததால் தான் ‘பள்ளி என்றால் செல்வங் குறைந்து விடாது‘ என்ற வாசக முண்டாயிற்று. அவர்கள் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம், தொழுதுண்டு பின்செல் பவர் என்று விவசாயஞ் செய்யத் தலைப்பட்ட பின் பள்ளியும் பறையனும் என்று கீழ் சாதியாக நூலிலும் எழுதிவரும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டது விதியின் விளையட்டாலேதான்.

வர்மா

 

அரவக் கடலொளி அசோதரம் ஆளும்

இரவி வன்மன்

– (மணிமேகலை 9, 35–9) 28

என்பதால் சங்க காலத்தில் அரசர்களுக்கு வர்மன் (வன்மன்) என்ற  குடிப்பெயர் வழங்கியது தெரியவரும், வர்மா யென்பதற்குக் காப்பாற்றுபவன் என்பது பெருள், பல்லவ மன்னர்களுக்கும் சேர சோழ பாண்டியர்களுக்கும் தூரக்கிழக்கு நாடுகளின் மன்னர்களுக்கும் வர்மா எனக் குலப்பெயர் வழங்கியதைக் கல்வெட்டுகளிற் காணலாம்.

 

அக்கினி புராணம் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகை வகுணத்தார்க்கு முறையே சர்மா, வர்மா, குப்தா தாசன் எனச் சாதிப்பெயர் வழங்குமெனக் கூறுகிறது. இப்பெயர்கள் இந்தியாவில் மொழி வேறுபட்ட மக்களிடையே இன்றும் வழங்கி வருகின்றன. சங்க காலத்திலும் வழங்கி வந்தன. பொருள் இலக்கணத்திற்கு நக்கீரர் கூறிய உரை சிறந்ததெனக் கண்ணீர் விட்டு மெய் மயிர் சிலிர்த்துக் காட்டியவறும் அகநானூறு, நற்றிணை, குறந்தொகை நூல்களேத் தொகுத்தவனும், திருக்குறள் அரங்கேற்றிய போது திருவள்ளுவரோடு சங்கப் பலகையிலிருந்து தலைமை தாங்கியவனும் முருகனுடைய அவதாரமுமான திருநாமம் உப்பூரி குடிக்கிழார் மகன் உருந்திர சன்மன். இவன் பிராமணர் குலத்திற் பிறந்ததால் சன்மன் (சர்மன்) எனப்பட்டான். இதனால் சங்ககாலத் தமிழகத்தில் கூத்திரியர்களுக்கு வர்மா எனக் குலப்பெயர் வழங்கியது தெரியவரும். வன்னியர் க்ஷத்திரியரானதால் வர்மா எனக் குடிப்பெயர் கொண்டவர்கள்.

 

உருத்திரர்

அருமணித் தடம்பூண் முலையரம் பையரேச டருளிப்பாடி

உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்

விரிசடை விரதிக வந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்

தெருவினிற் பொலியுந் திருவாரு ரம்மனே

-(அப்பர் தேவாரம்)

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்

கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திரப்பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவை.

-(சம்பந்தர் தேவாரம்)

உருத்திர வன்னியனின் சந்ததியாரான வன்னியர்கள் இன்று போல் அன்றும் ஜனத்தொகையில் பெருவாரியாக இருந்ததால் அப்பரும் சம்பந்தரும் உருந்திர பல்கணத்தார் என்றார்கள்.

 

அகநானுற்று 166 -வது செய்யுளைப் பாடியவர் யாதவர் குலத்தில் பிறந்வரானதால் இடையன் நெடுங்கிரனார் எனப்பட்டார். அதன் அடுத்த செய்யுளான 167-வது செய்யுளைப் பாடியவர் கடிபலூரில் உருத்திர வன்னியன் மரபில் பிறந்ததால் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இளந்திரையளைப் பெருபாணாற்றுப்டையிலும் அவனுடைய பாட்டுடன் கரிகாற் சோழனைப் பட்டினப்பாலையிலும் பாடியிருப்பதால் இவர் உருத்திர வன்னியன் மரவில் உதித்தவரென்பதில் ஐயமில்லை. ஆகவே சங்க காலத்திலும் அப்பர் சம்பந்தர் காலத்திலும் வன்னியர் உருத்திரர் என அழைக்கப்பட்டார்க னென்பதில் ஐயமில்லை. அதனால்தான் அவர்களுடைய குல முதல்வன் சம்பு முனிவர் யாத்திற் தோன்றிய உருத்திர வன்னியன் யெனப் புராணகர்த்தாக்கள் கூறினார்கள்.

 

படையாட்சி

 

 

கண்க ளிரண்டு அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே

காரிகை யார்கள் தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படு

மாகாதே

மண்ணில் வந்து பிறந்திடு மாறு மறக்திடு மாகாதே

மாறலி யாமவர்ப் பரத மிரண்டும் வணங்குது மாகாதே

பண்களி கூடர் தரு பாடலொ டாடல் பயின்றிரு மாகாதே

பாண்டி நன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது

மாகாதே

விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே

மின்மலை வீசிய காணவன் வந்து வெளிப்படு மாயிடிலே

 

-(திருவாசகம் திருப்படையாட்சி)

 

மாணிக்கவாசகர் தில்லையில் பாடிய இப்பாடல் முதலாவதாகக் கொண்ட பதிகத்திற்கும் படையாட்சி என்று தலைப்பு கொடுத்திருப்பது அக்காலத்தில் தில்லையில் படையாட்சிகளைப் புலவர்கள் புகழ்ந்து பாடியதைக் கண்டு அவர் பாடினர் என்பதைக் காட்டுகிறது. சமயக் குரவர்கள் தில்லையில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைப் பாடியதோடு பல்லவர்களையும் பாடினார்கள். சுந்தர மூர்த்தி மண்ணுல கங் காவம் பூண்ட, உரிமையார் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும், பெருமையால் புலியூர்  சிற்றம்பலத்தெம் பெருமாளைப் பெற்றா மன்றே என்றார். திருமங்கையாழ்வார், பைம் பொன் னுழத்து மணியுங் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோள் பணிந்த செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்தில்லை என்றார். ஆகவே பல்லவர்லகள்களின் சந்ததியாரான படையாட்சிகளை நினைத்து படையாட்சிப் பதிகத்தை மாணிக்க வாசகர் பாடினார். அவர் மண்ணாளும் மன்னவர்கக்கும் மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழனிக்குத் தண் பாண்டி நாட்டானை என்று திருவம்மானையில் சிவபெருமானை பாண்டி நாட்டானாகக் கூறினார். ஆகவே அவர் பாண்டி நன்னாடுடையான் படையாட்சிகள் என்றதற்குப் பாண்டி நாடுடைய சிவனுடைய வழியில் வந்தவர்கள் படையாட்சிகளென்பதைப் புலப்படுத்தும். அவர், தென்னவன் சேரலன் சோழன் சிர்ப்புயங் கன்வரக் கூவாய் என்று (குபிற்பத்து 7) சிவனைப் பாண்டியன் சேரன் சோழன் புயங்கன் என்றார். புயங்கள் பாம்பை அணிந்தவன் எனப் பொருள் கூறுவர். நாகங்கள் வழியில் வந்த நாகர்களின் சந்ததியார் பல்லவர்களானதால் பல்லவனாக நினைத்தான் புயங்கன் என்றார்.  அவர் சிவனைப் பல்லவனாக நினைத்து தான் கானவன் எனவுங் கூறினார். கான் காடு காட்டை வெட்டி நாட்டை யுண்டாக்கியதால் பல்லவர் காடவர் எனப் பட்டார்கள்.

காடுகொன்று நாடாக்கிக்

குளந்தோட்டு வளம்பெருக்கிப்

பிறங்குநிலை மாடற் துறந்தை போக்கிக்

கோயிலொடு குடிதிறீஇ

-(பட்டினப்பாலை 283-6)

கரிகாற் சோழன் காட்டை யழித்து நாட்டை யுண்டாக்கிக் குளம் வெட்டிக் கோயில் கட்டி மக்களை குடியிருக்கச் செய்தான். அவனுடைய பேரன் தொண்டைமான் இளந்திரையனுடைய தாய்நாட்டிலிருந்து வந்த பல்லவர்களும் காட்டை யழிந்து நாட்டை யுருவாக்கியதால் காடவர் எனப்பட்டார்கள். திருவிடைமருதூர் கோயிற் கல்வெட்டு காடு வெட்டிகள் நந்தி போத்தராயன் எனக்கூறுகிறது. சுந்தர மூர்த்தி, கடல் சூழ்ந்த உலகெலாப் காக்கின்ற பேருமான், காடவர் கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்’ என்று பல்லவ மன்னனைக் காடவர் கோன் என்றார். ஒட்டக்கூத்தர், விடை பண்டு காடவன் (குலோத்துங்க சோழனுலா 378) என்றதால் ரிஷபக்கொடி கொண்ட காடவன் பல்லவ மன்னன் என்பது தெரியவரும். அவர் கடியாணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியிர்கோன், கம்பக் களியானைக் காடவனும் (விக்கிரம சோழனுலா 8) என்றதால் செஞ்சி மன்னன் காட்டை யழித்து செஞ்சி மலையில் கோட்டை கட்டி யரசாண்டதால் காடவர் கோன் என அழைக்கப்பட்டது தெரியவரும். இதனால் இராஜா தேரிங்கும் பல்லவ மன்னன் என்பது தெரிகிறது.

 

பாண்டி நாட்டில் கோயில் நிர்வாகிகளாக விருந்த படையாட்சிகளுக்குத்தான் கோவில் குளங்களில் மீன்பிடிக்கு முரிமையிருந்து வந்தது. அதனால் மாணிக்கவாசகர் தில்லையில் புலவர்கள் படையாட்சிகளைப்  புகழ்ந்து பாடுவதைக் கண்டு, மீன்களை வலை வீசி பிடிக்குங் காடவன் போன்று பக்தர் களை வலை வீ சிப் பிடிக்குஞ் சிவபெருமான் உள்ளத்தில் தோன்றுவானானால் அவனது அருள் பெற்ற படையாட்சிகளைப் பாடவுந் தேவையில்லை என்று படையாட்சிகளை இகழ்வது போல் பாராட்டித்தான் பாடினார்.

 

ஆனால், வன்னியர் படைகொண்டு ஆட்சி புரிந்த காலம் மாறி ஏர் பிடிக்கத் தொடங்கி ஏரியில் மீன் பிடிப்பதைக் கண்டு அன்னியர் கேவலமாக எழுதி வருவது கண் கூடு திரு. V. கனககபை பிள்ளே 1906-வது ஆண்டு வெளியிட்ட, பதினெட்டு நூற்றுண்டுகளுக்கு முன்பு தமிழ் (The Tamils Eighteen Hundred Years Ago) என்ற நூலில் இடையர்க்குக் கீழானவர் தட்டான், கருமான், தச்சன், குயவன் முதலான தொழிலாளர்கள், அவர்களுக்குப் பிறகு பட்டாளத்து வகுப்பார் (Militry  Class) அதாவது படையாட்சிகள் அல்லது ஆயதம் தாங்கியவர்கள் வருவார்கள் எல்லார்க்கும் கடைசியில் வலயார், புலையர், மீன் பிடிப்பவர்கள், தோட்டிகள், தங்களை க்ஷத்திரியர் அல்லது வர்த்தகர் என்று சொல்லிக் கொள்ளும் படையாட்சிகள் வீட்டில் இன்று வரை வேளாளர் சாப்பிட மாட்டார்கள், தண்ணீர் கூட குடிக்கமாட்டார்கள் என்று எழுதி யிருக்கிறார்.

 

தென்னூர்க்காடு, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் பெரும்பாலும் வன்னியர்க்குப் படையாட்சி என்ற குடிப்பெயர் வழங்கி வருவது மாணிக்கவாசகர் காலத்திலும் வழங்கியதாகும்.

நாயகர்

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்

காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை

நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட

நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

-(திருமந்திரம் 153)

நாயகன் – தலைவன். நாட்டுக்குத் தலைவனாக விருத்த அரச பரம்பரையினரானதால் வன்னியர் நாயகர் என்ற குடிப்பெயர் கொண்டவர்களாகச் சென்னை, செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

 

மாணிக்க வாசகர் படையாட்சி எனக் குடிப்பெயர் கொண்டவர்களும் நாயகர் எனக்குடிப்பெயர் கொண்டவர்களும் ஒரே இனத்தவர் என்பதை அறிந்ததால் அவர் திருப்படையாட்சி பதிகத்தின் பாக்களில் ஏறுடையான் எனை ஆளுடை நாயகன் எனவும் என்னுடைய நாயகனாகிய ஈசன் எனவும் தம்மையாளும் அரசனாக ஆண்டவனைக் கூறினார். தொண்டரடிப் பொடியாழ்வாரும், ‘என்னே யாளுடைய கோவே  என்று திருமாலைத் தம்மை ஆளும் அரசனாகக் கூறினார். வன்னியரும் நாட்டையாளும் அரசராக விருந்ததால் நாயகர் என அழைக்கப்பட்டா்கள்.

 

நாயகர் என்பது மருவி நாயனார் எனவும் வழங்கும் சைவர்களும் வைணவர்களும் தம்மை ஆளுடைய ஆண்டவனே நாயகன் எனவும் நாயனார் எனவும் அழைந்தார்கள். காஞ்சியில் ஏகாம்பரநாதர் கோயில் ஸ்ரீ தேவ நாயகர் ஆலயத்திலுள்ள கல்வெட்டில், நகரம் காஞ்சீபுரம் உடையார் திருவேகம்ப முடைய னாயனார்க்கு எனக் கூறப்பட்டிருக்கிறது. யதோக்தகாரி கோயிலிலுள்ள கல்வெட்டில், ‘திருவெக்கா னாயனார் எனக் கூறப்பட்டிருக்கிறது.

 

இறைவனுடைய திருநாமங்கள் அரசனுக்கும் வழங்குவதால் அரசர்களும் நாயகர் அல்லது நாயனார் என அழைக்கப்பட்டார்கள். காஞ்சியில் அழகியசிங்கர் கோ யிற் கல்வெட்டில் ஆனப்பிறந்த னாய னாவ இராசராச தேவர்க்கு என்று கூறப்பட்டிருக்கிறது. காஞ்சியில் சேனை முதலியார் சந்ததிக்கு எதிரிலுள்ள கல்வெட்டில், னாயனார் கண்ட கோபால தெவர் முதத்தியாக சமுத்திரப் பட்டை வீம சந்திர  பாலர் படைய னாட்டு வணற் மாலைனல் சித்தர்பார் னாயக்கர் சூரப்ப னாயக்கர் என்று வரையப்பட்டிருக்கிறது. ஸ்ரீ பெரும்பூதூர் தாலுக்காவில் மணி மங்கல கிராமத்தில் இராஜகோபால் பேருமாள் கோயிலில், திருச்சுரத்து கண்ணப்பன் தூசி ஆதிநாயகன் நிலங்கரையன் வன்னிய நாயனான உந்தம், நீத கண்ணப்பன் என்று வரையப்பட்டிருக்கிறது. நாயனார் பட்டம் மற்ற இனத்தவர்க்கும் வழங்குவதால் வன்னிய நாயனான எனப்பட்டது.

நாயகர் என்பது விகாரமாக நாயக் எனக் கேரளாவில் வழங்கி வருகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரி யொருவர் 1746ம் ஆண்டு கள்ளிக்கோட்டையில் நடந்த குழப்பத்திற்குக் காரணம் கூறும் போது, இங்கு மக்களுக்குத் தலைவராக இருக்கும் நாயர்கள் பார்லியமெண்டைப் போல் காண்கிறார்கள். எல்லா விஷயங்களிலும் அரசனுடைய கட்டளைக்கு அவர்கள் கீழ் படிவதில்லை. மந்திரிகள்  தகாத காரியஞ்செய்தபோது தண்டிக்கிறார்கள் என்றார். – (Mal bar Mannual Vol. 1. P 29) இதனால் ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்த காலத்தில் மலையாள ஊர்களின் தலைவர்களாக நாயகர்கள் இருந்தது தெரியவரும். அதேபோல் தமிழ் நாட்டிலும் வன்னியர்கள் இருந்ததால் நாயகர் என அழைக்கப்பட்டார்கள்.

தண்டத் தலைவருந் தலைத்தார் சேனையும் (சிலப் 26:80)

 

அக்காலத்தில் சேனைத் தலைவன் கண்ட நாயகன் எனப்படுவான். கண்டு – சேனை  அதனால் ஆங்கிலேயரும் சேனைத் தலைவர்களுக்கு நாயக் என் பட்டங் கொடுத்தார்கள். காஞ்சி வரதராஜர் கோயிற் கல்வெட்டொன்றில் அர சன் பிரதாப ருத்திரனுடைய தண்ட நாயகனான முப்பிடி நாயகர் என வரையப்பட்டிருக்கிறது. திரு து. அ கோபிநாதராவ் எம்.ஏ. சோழ வமிச சரித்திர சுருக்கம் என்ற நூலிற் குடகு நாட்டின் போரில் தண்டநாயகன் பனசோகே யென்னுமிடத்தில் நடந்த யுத்தத்தே வெகு தைரியமாய்ச் சண்டை செய்ததைக் கண்டு சந்தோஷ மடைந்து இராஜராஜன் அவனை வேங்கை கங்க மண்டல மிவ்விரண்டுக்கும் தண்டநாயகனாக்கி க்ஷத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்னும் பட்டமும் கொடுத்து மாலங்கி என்னும் ஊரை புமளித்தான் என்றார். இதனால் முடிவேந்தர் நமக்காக போரை வென்ற சேனைத் தலைவர்களுக்கு குறுநில மன்னர்களாக்கியதை யறியலாம்.

திரு. கோபி நாத ராவ்,  அரசன் நிருவாய்மொழிந் தருளிய கட்டளை  கேட்டு எழுதப் பல உத்தியோகஸ்தர்கள் உண்டு.  இவர்கட்கு திருமந்திர ஓலை யெதுவார் யென்று பெயர். இவர்களுக்குத் தலைமையான அதிகாரி திருமந்திர வோலை நாயக மெனப்படுவான். (S.I.1 , Vol III, P. 35) இவ்வதிகாரி இன்னின்ன காலத்து இவ்விவ் விஷயங்கள் செய்ய வேண்டும் மென்று ஞாபித்தல் வழக்கம். நம் ஓலை நாயகம் நமக்குச்  சொல்ல என்று சாஸனங்களிற் காணலாம் என்றார். மேலும் அவர் இராஜ்யம் பல மண்டலங்களாகவும் மண்டலங்கள் கோட்டங்களாகவும் கோட்டங்கள் கூறுகளாகவும் கூறுகள் நாடுகள் வளநாடுகளாகவும் வகுக்கப்பட்டிருந்தன. மண்டலங்கள் ஆள்பவர் மண்டலீகர் இத்தகைய வுத்தியோகம் பெரும்பான்மையும் இராஜ வமிசத்தாரே வகித்து வந்தனர். வாங்கப்பட்ட வரித்தொகைகிளைக் கணக்கிற் பதிந்து கொள்வோருக்கு வரியிலார் என்று பெயர் வந்த வரியை எவ்வாறு செலவிடுவது என்பதைத் திட்டஞ் செய்வார் வரிக்குக் கூறு செய்வார் எனப்படுவர். வெளிப்புறத்தூர்களில் வரி விஷயம்ன கணக்குகளை வைப்பவர் பலராதலின் அவர் கூடியிருக்குமிடத்திற்குப் புரவரித்திணைக்களம் என்றும் இவர்கட்கு புரவரித் திணைக்காத்தார்களென்றும் இவர்கள் மேலதிகாரிக்கு புரவரித் திணைக்கள நாயகம் புர வரித் திணைக் களமுகவெட்டி யென்றும் பெயர் என்றார்.

 

திருவொற்றியூர் தியாகராயர் கோயிற் கல்வெட்டொன்றில் தேவதான யிறையிலியாக விட்டமைக்கு இவை  புறவரிகரண னாயகம் கொம்மைப் பாக்க முடையான் யெழுத்து இவை புற வரி சிகரண னாயகம் குழந்தை உடையா னெழுத்து இவை புறவரி சிகரண னாயகம் னெடுங்குன்றங் குமர னெழுந்து. இவை புறவரி சிகரண னாயகம் செம்பறம் பாத்திமர் னெழுத்து, இவை புறவரி சிகரண முக (இ) வட்டி பொன்னுமா யெழுத்து, இவை புறவரி சிகரணம் முகவெட்டி கட்டியூர் உடையா னெழுத்து. இவை புறவரி சிகரணம் முகவெட்டி சிங்குன்றங் கிழுகனா ரெழுத்து. இவை உலகடறாயன் யெழுத்து என எழுதப்பட்டிருப்பதால் அதிகாரிகளெல்லாம் ஒன்றுகூடி வரி விதிப்பதும் விலக்குவதும் செய்தார்களென்பதும் அவர்களெல்லாம் ஊரையுடைய ஐமீன்தார்களென்பதும் தெரியவரும்.

 

வன்னியர் மண்டலத் தலைவர்களாகவும், சேனைத் தலைவர்களான தண்ட நாயகனாகவும், அரசன் கட்டளையை மேற்கொண்டு நடத்தும் திருமந்திரவோலை நாயகனாகவும், வரிவிதிக்கும் அதிகாரி புறவரி சிகரண நாயகனாகவும் இருந்ததால் நாயகர் எனக்குடிப்பெயர் கொண்டவர்களாய்ச் சென்னை, செங்கற்பட்டு, வடவார்க்காடு, தென்னுர்க்காடு மாவட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

 

கவுண்டர்

மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும்

பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும்

முந்தச் சென்று முழுப்பலி பீடிகை

வெந்திறன் மன்னற் குற்றதை யொழிக்கெனப்

பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம் பாதென

கல்லுமிற் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோற்

பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி

ஆர்த்துக் களங்கொண்டோ ராரம ரழுவத்துச்

சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை

வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென

நற்பன் பிடிகை நலங்கொள வைத்தாங்

குயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து

மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி

இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச்

செருவேங் காதலின் திருமா வளவன்

வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும்

நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம்

மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப்

புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்

-(சிலப்பதிகாரம் 5 : 76-94)

புகார் நகரில் மருவூர்ப் பாக்கத்தி லிருந்த வீரரும் பட்டீனப்பாக்கத்திலிருந்த படைகளும் ஒருவரை யொருவர் முந்திக் கொண்டு வந்து  கொற்றவைக்குப் பலிக் கொடுக்கும் பிடத்தில், அரசனுக்குண்டான குற்றத்தை யொழிக வென்று தம்மைப் பலிக் கொடுத்துக் கொண்டு பலிக் கொடை புரிந்தார்கள். அவர்கள், திருமாவளவ னென்னும் கரிகாற் சோழனின் வலிமைக்கு எல்லையாகுக வென்று வஞ்சினங் கூறித் கவண் கல்லை வீசி யெறிந்தார்கள். தோற்பையில் வேல்களைக் கொண்டவர்களும் தோள் தட்டி ஆரவாரஞ் செய்து போர்க்களத்தைத் தமதாக்கி கொண்டவர்களும் கண்கள் சிவந்து சுட்டுவிடும் பார்வை கொண்டவர்களுமான வீரர்கள் (வெற்றி வேந்தன் கொற்றப்கொள்க என்று பலிப் பீடத்தில் தமது தலையை வைத்து இடிபோல் முரசுகள் முழங்க கொற்றவைக்குத் தமது உயிரைப் பலி கொடுத்தார்கள்.

 

உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர்

தலைதூங்கு நெடுமரந் தாழ்ந்துபுரஞ் சுற்றிப்

பிடிகை யோங்கிய பெரும்பவி மூன்றில்

காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்

-(மணி மேகலை 6:50-3)

மனத்தளர்ச்சி யுறாமல் உயிரைத் தானங் கொடுத்த வீரர்களின் தலைகள் அசைந்தாடித் தொங்கும் மரங்கள் புகாரில் காடுகிழாள் (துர்க்கை) கோயிலைச் சுற்றி இருத்தன.

 

சங்க காலத்தில் அரசன் போருக்குப் புறப்படும் போது வீரர்கள் கொற்றவைக்கு உயிர்க் கொடைக் கொடுத்தது முதலாங் குலோத்தங்க சோழன் காலத்திலும் (கி. பி. 1075-1118) நிகழ்ந்ததென்பதை வரு மடிகளால் அறியலாம்.

 

அடிக்கழுத்தி னுடன்சிரத்தை யரிவ ராலோ

அரிந்தசிர மணங்கின் கைக்கொடுப்ப ராலேர

கொடுத்தசிரய் கொற்றவையைத் துதிக்கு மாலோ

குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ

-(கலிங்கத்துப் பரணி : கோயில் 15)

மோடிமுன் றலையை வைப்ப சேமுடி குஞ்சியை முடிப்பரே

ஆடிநின்று குருதிப்பு துத்திலத மம்மு கத்தினில மைப்பரே

-(கவிச்சக்ர விருத்தி)

 

எனவே, அரசன் போருக்குப் புறப்படு முன்பு, ‘மன்னவன் வலிமைக்கு வரம்பாகுக’ என்று கவன் கல்லை வீசியெறிந்து உயிர்க் கொடை கொடுத்த வீரச்களைக் கவணினர் என்றது. நாளடைவில் அவர்களுடைய சந்ததியார்க்குக் கவுண்டர் என்ற குடிப்பெயரை உண்டாக்கியது, வேளாளரும் வயலில் கவண் கல்லை வீசியெறிந்து புள்ளோட்டியதால் கவுண்டர் எனக் குடிப்பெயர் கொண்டவர்களானார்கள்.

 

 

கல்லெறியுங் கவண்வெரீஇப்

புள்ளிரியும் புகர்ப் போகத்தை

-(பட்டினப்பாலை 73:4)

கர்ந்கண் ஆடையை எல்லி மாலையை

சோர்ந்து விழ் கதுப்பினார் செய்தறி தீவரின்

ஒளிதிகழ் ஞெ கிழியர் கவணையர் வில்லர்

களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே

-(கலித்தொகை 52:11-4)

கபிலர் கவண் கல்லை வீசியெறிந்து பறவைகளை யொட்டிய ஏனல் காவலரைக் கவணையர் என்றார்.  இளங்கோவடிகள் வஞ்சினங்கூறிக் கவண் கல்லை வீசிய வீரர்களை கவணையர் என்றார். ஆகவே வீர வன்னியர்களும் வேளாளர்களும் கவண் வைந்திருந்ததால் கவணினர் அல்லது கவணையர் என அழைக்கப்பட்டு வந்து நாளடைவில் கவண்டர் என்றது. இப்போது கவுண்டர் எனக் குடிப்பெயர் கொண்டவர்களானார்கள். தென்னர்க்காடு வடவார்க்காடு சேலம் மாவட்டங்களில் வன்னியர் கவுண்டர் என்ற குடிப் பெயர் கொண்டவர்கள்.

 

கண்டர்

 

கோதைசோரி சொரிகொங்கை விம்மல்விம்மு குறுமுறுவற்

சோதிவெளுக்கில் வெளுமருங்கில் துவனின்யுந் துவள்கண்டாய்

காதுநெடுவேற் படைநந்திக் கண்டன்கச்சி வளநாட்டு

மாதரிவரோ விருக்கின்ற வாளிகற்றென் மடநெஞ்சே

-(நந்திக் கவம்பகம் 10)

பல்லவ மன்னன் நந்திவர்கள் வெற்றிக் கடவனானதால் நந்தி கண்டன் எனப்பட்டான். திருவல்லம் வில்வநாதீஸ்வரர் ஆலயத்தில் ஸ்வஸ்தி ஸ்ரீ விசைய கண்ட கோபால தேவர்க்கு யாண்டு மூன்றாவது முதல் அழகிய பல்லவன் எதிரிலிச் சோழ சம்புவராயனென் எனக் கல்வெட்டப்பட்டிருக்கிறது. விஜயநகர மன்னர்களை மூவராய கண்டன் எனக் கல்வெட்டுகளிற் கூறப்பட்டிருக்கிறது. சேர சோழ பாண்டிய ரென்னும் மூவேந்தர்களின் முடிகளை யாபரணமாகச் செய்து கண்டத்தி லணிந்தவனென்பதர்க மூவராயக் கண்டன் என்ற விருது வழங்கியதாகும். சேர மன்னன் ஸ்ரீ பாஸ்கர இரவிவர்மர் கி.பி. 192 ஆம் ஆண்டு ஜோசப் ராப்பன் என்ற யூதர்க்கு அஞ்சு வண்ணம் என்ற நாட்டை எழுதிக் கொடுத்த செப்பேட்டில் சேர மன்னனைக் கொடை ஸ்ரீ கண்டன் எனவும் தளச்சேரி கீழ்வாய் கண்டன் எனவுங் கூறியிருப்பது இரண்டாம் நூற்றாண்டில் அரசனுக்குக் கண்டன் என்ற விருது வழங்கியது தெரிகிறது. காஞ்சியில் வரதராஜர் கோயிற் கல்வெட்டில், தண்டம னாயக்கன் மகன் தண்டின கொட்டி சுப்பிற கொப்ப கண்டன் கொப்படாய தண்டம நாயகன் என எழுதியிருப்பதால் செங்கற்பட்டு மாவட்டத்திலும் வன்னியர்க்கு கண்டன் என்ற பட்டம் வழங்கியது தெரிகிறது. கவண் கல்லை வீரிக் கண்டத்தை (கழுத்தை) யறுத்துக் கொண்டு கொற்றவைக்கு உயிர்க்கொடை கொடுத்தாலோ, பகையாசர்களிடம் போர் புரிந்து வெற்றிக் கண்டதாலோ, அவர்களுடைய மூடிகளை மாலையாகச் செய்துக் கண்டத்திலணிந்து கொண்டதாலோ, வீரக்கண்டம் கழுத்திலும் காலிலும் அணிந்து கொண்டதாலோ வன்னியர்க்கும் கண்டன் என்ற பட்டம் சேலம் மாவட்டத்தில் வழங்கி வருகிறது.

 

பண்டாரத்தார்

காலமுண் டாகவே காதல்செய் துய்மின் கருதரிய

ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய

ஆலமுண் டானெங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு

மூலபண் டாரம் வழங்கு கின்றான்வந்து முந்துமினே.

-(திருவாசகம்; திருப்பாண்டிப் பதிகம் 5)

பண்டாரம்-பொக்கிஷம், நிதி மாணிக்கவாசகர் சிவபெருமானை மூலபண்டாரம் என்றார்.

பார்ப்பார் பசித்தார் தவசிகள் பர்லர்கள்

காப்பார் தகையா துங் கர்ப்பிலார்-தூப்பால

நீண்டாரா லெண்ணாது நீத்தவர் மண்ணாண்டு

பண்டாரம் பற்றவாழ் வார்

-(ஏலாதி 54)

தஞ்சாவூர் ஜில்லாவில் ஆலங்குடிச் சாஸனைத்தில், இத்தேவர் (ஆபத்சகாயேசுரர்) ஸ்ரீ பண்டாரத்து நாங்கள் வாங்கின கொள்கை யொன்றினாற் பொன் என்று வரையப்பட்டிருக்கிறது.  திருச்சாய்க்காடு சர்யவனேசுவரர் கோயிற் கல்வெட்டில், ‘இந்தேவர் ஸ்ரீ பண்டாரத்திலே எடுக்கவும் கடவதாகப் பெறவேணும் என்று எழுதியிருக்கிறது. கும்பகோணப் நாகேசுவரர் கோயிற் கல்வெட்டில், ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கினமைக்கு இவை இராமநூருடையரின் மூலபருஷப் பிரியனெழுத்து என்று எழுதப்பட்டிருக்கிறது. காஞ்சி வரதராஜா் கோயிலில் பல கல்வெட்டுகளில் காஞ்சிபுரம் திருவத்தியூர் நின்றருளிய அருளாளப் பெருமாள் கோவில் ஸ்ரீ பண்டாரத்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதேபோல் அனேக கோயில் தர்மகர்த்தர்கள் ஸ்ரீ பண்டாரத்தார் எனக் கல்வெட்டுக்களில் காணலாம். ஆகவே வன்னியர் கோயில் தர்மகர்த்தாவும் பொக்கிஷத்தார்களாகவும் இருந்ததால் பண்டாரத்தா் எனவும் குடிப்பெயர் கொண்டவர்களார்கள்.

 

பண்ணாடர்

மிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளித் திடுவார்தம்

அடியிரக்கத் தொடிபணிவார்க் கரசுதருங் கொடையாளர்

படி புரக்க வவதரித்த பண்ணாடர் கரத்தமைவிற்

பிடியுரத்தி னாலன்றே பெருனால முரமுறலே

-(சிலையெழுபது 6)

வன்னியர்  புலவருடைய வறுமை தீரும்படி பிகுந்த பொருள் தந்திடுவார். தம் பாதங்களை யிரக்கத்தோடு பணிபவர்களுக்கு நாட்டையுங் கொடுத்து விடுங் கொடையாளர் பூமியைக் காக்கப் பிறந்த பண்பட்ட நாடுடையவர். பெரிய உலகத்தார் பலம் பெறுவது அவர்கள் கையிற் பிடித்த செங்கோலின் பலத்தனா லன்றோ வன்னியர் பண்பட்ட நாட்டை யாண்ட பரம்பரையினரானதால் பண்ணாடர் என்ற குடிப்பெயருங் கொண்டவர்கள்.

உடையார் : சமயக் குரவர்கள் தம்மை ஆளுடைய இறைவனை உடையாய், உடையால் என்றார்கள். மாணிக்கவாசகர் திருப்படையாட்சிப் பதிகத்தில் என்னை யுடைப் பெருமான், என்னை முன் ஆளுடைய ஈரன் எனச் சிவனைக் கூறினார். தொண்டரடிப் பொடி யாழ்வாரும் திருமாலை என்னை யாளுடைய கோவே? என்றார். திருவல்லம் கோயிலுள்ள கல்வெட்டில் உடையார் ஸ்ரீ ராசராஜேந்திர சோழதேவர் பெருந்தரத்து நிந்திய வினோத வளநாட்டு பாம்புணி உத்தமச்  சோழ பல்லவரையன் கையால் யாங்கள் கொண்டு கடவு அன்றாடு நற்காசு ஐம்பது இக்காசு அம்பதும் எங்களூர் திருவல்லமுடையார கோயில் இவர் எடுப்பித்த ராஜராஜ ஈஸ்வர முடையார் என்று வரைத்திருக்கிறது. அரசர்களும் ஆளுடையவர்களாகவும் நாடுடையவர்களாகவுமிருந்ததால் உடையார் எனப்பட்டார்கள். அவர்களுடைய வழியில் வந்த வன்னியரும் உடையார் எனக் குடிப்பெயர் கொண்டவர்களானார்கள். மற்ற இனத்தவர்களும் உடைமையுடையவானதால் உடையார் எனக்குடிப்பெயர் கொண்டவர்களானார்கள்.

தந்திரியார் : கி.பி. 1456ல் இராஜ வல்லபன் காலத்தில் ஏற்பட்ட பட்டயம் சென்னை திருவொற்றியூருக்கடுத்த சாத்தாங்காடு… வன்னிய சின்னைப்பிள்ளை தந்திரி யுள்ளட்டாருக்கு எழுதிக் கொடுத்த கிரய சாசனம், இதனால் வன்னியர்க்குத் தந்திரியார் எனவும் குடிப்பெயர் வழங் கிய து தெரிகிறது.

 

பிள்ளை : மேற்கூறிய பட்டயத்தால் வன்னியர்க்குப் பிள்ளை பட்டமும் வழங்கியது தெரிகிறது. மற்ற இனத்தவருக்கும் பிள்ளை பட்டம் வழங்குவதால் வன்னிய சின்னப் பிள்ளை எனப்பட்டது. திருவொற்றியூர் தியாகராய கோயிலில் வடவண்டை கல்வெட்டில் புகழ்நெரி அங்கராயர் நாயகப்பிள்ளை என்று எழுதியிருக்கிறது. இதனால் நாயகம் பண்ணியதால் வன்னியரை நாயகப் பிள்ளை என அழைத்து வந்ததால் அவர்களுக்குப் பிள்ளை பட்டம் உண்டானது தெரிகிறது.

 

ராயர் : மேற்கூறிய கல்வெட்டில் அங்க ராயர் என்றதால் வன்னியர்க்கு இராயர் (இராஜர்) பட்டமும் வழங்கியது தெரிகிறது.

ரெட்டியார் : ஆந்திராவை யொட்டிய அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் வட்டங்களில் ரெட்டியார் பட்டம் வன்னியர்க்கும் வழங்கி வருகிறது.  இதேபோல் வன்னியர்க்கு வழங்கும் நாயகர் பட்டம் நாயக்கர் எனத் தெலுங்கருக்கும் வழங்கி வருகிறது. புதுவைக்கடுத்த வில்லவனல்லூர் அக்கினி வம்ஸ க்ஷத்திரியராகிய வன்னியர் மடாலய சாஸனத்தில் கண்டன் மார் தந்திரியார் படையாக்ஷியார் என்னும் பல பட்டப் பெயர் பெற்ற உறவின் முறையார் அனைவரும் போய் இராஜவன்னிய இராஜ ஸ்ரீ மல்லிகார்ச்சுனதேவ மஹா இராயரைக் கண்டு பேச அப்போது ராயரும் சிம்மாசனம் விட்டு இறங்கி நமது வம்சத்தாரறு தெரிந்து தேவாலய பூஜையிருக்க மடத்துத் தருமம் நமக்கேன்று இராயரும் கேட்க அப்போது நாயனார் பண்டாரத்தார் பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் முதலிய மற்ற குரு மடங்கட்டியிருக்க தொண்ட மண்டலத்திலேயும் இருக்கவேண்டுமென்றார் எனக்கூறப்பட்டிருக்கிறது. வைத்தீஸ்வரன் கோயில் வன்னியர் மடாலய தரும சாசனத்தில் பண்ணாட்டார் தங்கள் மரபிற் பேரும் பிரதாபமுமாக வேண்டுமென தொண்டமண்டலம் சோழகனார் காலக்கத்தோழவுடையர் மழுவராய நாயகர் பருவூர் கச்சிராயனார் சமுஷ்டியார் பாஞ்சால நாயனார் வாண்டையார் கோங்குடையார் பெண்ணைக்கரை சீராய நாயனார் சென்னிராய கவுண்டர் இவர்களை வறாங் கூடி என்ற எழுதியிருக்கிறது. இச்செப்பேட்டில் வன்னியர்க்கு வழங்கும் முப்பத்திரண்டு குடிப்பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

 

 

 

 

 

  • ••

 

 

 

 

 

 

  1. இதிகாச புராணங்களின் முரண்பாடு

தீசெங் கனலியுங் கூற்றமு ஞமனும்

மா ரிலா யிரங்கதிர் ஞாயிறுந் தொகூஉம்

ஊழி யாழிக்க ணிருநில முருகெழு

கேழலாய் மருப்பி னுழுதோய்

– (பரிபாடல் 3: 21-4)

 

திருமால் வராக வவதார மெடுத்து ஊழிக் காலத்தில் நீரில் முழ்கிய பூமியைத் தூக்கிவிட்டதாகச் சங்கப்புலவர்கள் கூறினார்கள், ஆனால் இரண்யசசிப்பு பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டுபோய் பாதாளத்தில் ஒளிந்துகொண்டபோது திருமால் வராகவதாரி மெடுத்துப் போய்ப் பூமியைத் தூக்கி வந்த நாகப் பிற்காலப் புராணகர்த்தாக்கள் கூறினர்கள்.

திருவின் கணவ பெருவிறன் மள்ள

மாநில மியலா முதன்முறை யமையத்து

நாம வெள்ளத்து நடுவட் டோன்றிய

வாய்மொழி மகனொடு மலர்ந்த

தாமரைப் பொருட்டுநின் னேமி நிழலே

-(பரிபாடல் 3: 90.4)

திருமால் பூமியைத் தூக்கிவிட்ட போது வெள்ளத்தின் நடுவிலிருந்து தோன்றிய தாமரை மலரிலிருந்து நான்முகன் தோன்றினான். அதனால் திருமாலின் உந்திக் கமலத்திலிருந்து பிரம்மா தோன்றியதாகச் சங்கப்புலவர்கள் கூறினார்கள்.

 

 

எரிமலர்த் தாமரை விறைவீழ்த்த பெருவாரி

விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர் மலரேய்ப்பத்

தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி

-(பரிபாடல் 9: 4-6)

செந்தாமரையில் வீற்றிருக்கும் நான்முகன் வீழ்த்திய ஆகாய கங்கையைச் சிவபெருமான் சடையில் தாங்கியதாகச் சங்கப்புலவர் கூறினார். பகிரதன் தன் முதாதையருக்குக் கர்ம காரியஞ் செய்ய பிரயத்தனப்பட்டு ஆகாயத்திலிருந்து விழும்படி செய்த கங்கையைச் சிவபெருமான் தாங்கியதாகப் பிற்காலத்தவர் கூறினார்கள். ஆகவே சங்க காலத்தில் வழங்கிய இதிகாச புராணங்களுக்கும் பிற்காலத்தில் வழங்கியவைகளுக்கும் மலைக்கும் மடுவுக்கு முள்ள வித்தியாச மிருக்கிறது.

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

முருகனுடைய திருவவதாரம்

கடுவனிளவெனினார் ஐந்தாவது பரிபாடலில் முருகனுடைய திருவவதாரம் கூறினார். அதன் சுருக்கம்: சிவபெருநான் திரி மெரித்த கோபத்தோடு உமையைக் கூடிப்பிறக்குங் குழந்தையால் தனக்கு ஆபத்து வருமென்று இந்திரன் பயந்தான். அதனால் சிவபெருமானிடம் உமையைக் கூடித் தோன்றும் கருவைச் சிதைக்கும் வரங்கேட்டான். வாய்மையுடைய சிவபெருமான் இந்திரனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிவது யருமை யென்று மாற்றிக் கொள்ளாமல் கருவைச் சிதைதுது கண்டங் கண்டமாக துண்டு போட்டான். சிதைந்த கருவும் தேவசேனாபதியாகப் பிறக்கக் கூடுமென்று சப்தரிஷிகள் ஞான திருஷ்டியாற் கண்டார்கள். அவர்கள் சிவனிடமிருந்து கருத்துண்டுகளை வாங்கி வேள்வி தீயி லிட்டு அவிபாக மாக்கித் தம் பத்தினிமார்களைச் சாப்பிடும்படி கொடுத்தார்கள். அருந்ததியைத் தவிர மற்ற ஆறு ரிஷி பத்தினிமார்கள் அவி பாகத்தை யுண்டு அப்போதே  கர்ப்பமானார்கள். ஒரே சமயத்தில் இமயத்தின் உச்சியில் கனையில் தாமரை மலர்ப்பாயின் மீது குழந்தைகளைப் பெற்றார்கள். அன்றைய தினமே அக்குழந்தைகளைக் கொல்ல இந்திரன் வச்சிராயுதத்தை யெறிந்தான். உடனே ஆதறு குழந்தைகளும் ஒருவனாகி வச்சிராயுத்தைப் பிடித்துடைத்தெறிந்தன. வளராத உடம்பைக் கொண்ட குமரன் விளையாட்டாகவே செய்த போரில் இந்திரன் தோற்று வருந்தியதால் அக்கினிக்தேவன்  தன் கோழி வாகனத்தை முருகனுக்குக் கொடுத்தான். இந்திரனும் தன் மயில் வாகனத்தைக் கொடுத்தான். இயமன் தன் வெள்ளாட்டுக் கடாவைக் கொடுத்தான். கொடுத்ததில் ஆடும் மயிலும் சேவலும் சாபமு மரனும் வாளும் வேலும் குடாரியுங் கணிச்சியுங் கனலியு மாலையு மணியும் பன்னிரு கரங்களிற் கொண்டு சண்முகன் அமரர்க்குச் செல்வனானான். இவ்வாறே சங்க காலத்தில் வழங்கியதென்பதை மற்ற சங்கப் புலவர்கள் பாடிய அடிகள் உறுதிபடுத்துகின்றன.

 

நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுகனை

யைவரு னொருவ னங்க யேற்ப

வறுவர் பயந்த வாறமர் செல்வ

வால்யெழு கடவுட் புதல்வு

-(திருமுருகாற்றுப் படை 253 – 6)

 

கடுவனிளவெயினனர் முனிவர்கள் தம் மனைவியர் நிறை கர்ப்பத்தைத் தாங்கமாட்டார்க ளென்று அக்கினியாகிய கடவுளே தாங்கட்டு மென்று வேள்வியின் முந்தியில் கருவையிட்டு அவிபாகமாக்கியதாகக் கூறினார். அதனால் நக்கீரர் பஞ்சபூதங்களின் தெய்வங்களான ஐவருள் அக்கினியின் தெய்வமான உருத்தின் தன் அழகியஅக்கிக் கரங்களா அவிபாகமாக்கிய கருவை யுணடு ரிஷி பத்தினிமார் அறுவ முருகனைப் பெற்றதாக கூறினார். சிவனுடைய கருவைத் தம்பத்தினிமார்களுக்குக்  கொடுக்க உயர்ந்த முனிவர்கள் உடன்பட்டதாலும் அவர்களுடைய பத்தினிமார் அறுவர் சிவனுடைய கருவை யுண்டு ஆறுமுகனைப் பெற்று உயர்வடைந்தாலும் நல்லச்சுதனார், உயர்ந்தவர் உடம்பட சலதாரி மணிமிடற் றண்ணற்கு மறிபாரற் பிற்தோய் நீ (பரிபாடல் 9) என்றார். முருகன் பிறந்ததினமே அவனுக்குக்கஞ்சி இந்திரன் வச்சிராயுதத்தை யெறிந்தால் கோவனார்.

 

பிறந்த ஞான்றே தின்னை யுட்கிச்

சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே

-(பரிபாடல் 14: 25-6)

என்றார். கடுவனிளவொயுனனார் அறுவர் நிவந்தோங்கு இமயத்து நீலப் பைஞ்கனைப் பயந்தோ ரென்ப பதுமத்து பாயல் என்றார். நக்கீரர் நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை அறுவர் பயந்த ஆறமர் செல்வ என்றார். இளங்கோவடிகள் சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ஏறுவர் திருமுலைப்பா லுண்டான் (சிலப்பதிகாரம் குன்றக் குரவை) என்றார். சிவயம், சரவணம் – உச்சி இமயத்தின் உச்சி, கனை – பொய்கை பதுமம் – தாமரைப் பூ. ஆகவே சங்கப் புலவர்கள் இமயத்தின் உச்சியில் தாமரை மலர் மீது தாய்மார் அறுவர் ஆறு குழந்தைகளாக ஆறுமுகனைப் பெற்றதாகக் கூறினார்கள். ஆனால் கந்த புராணத்தில் கூறியதும் வருமாறு :

 

இந்திரன் சிவபெருமானுக்கு ஒர் குமரன் பிறந்ததால் சூரன் குல முழுது மழிப்பான் என்று மன்மதனை யேவி சிவன் மீது பானம் போடச் சொன்னான். சிவன் பானம் போட வந்த காமனை எரித்து விட்டான் சிவன் பார்வதியைக் கல்யாணஞ் செய்த போது வந்திருந்த தேவர்கள் சிவனுக்கு நிகரான ஓர் குமாரனை தந்தருளும்படி வேண்டினார்கள். அப்போது சிவன் தன் ஐந்து முகங்களோடு அதோ முகமுங் கொண்டு காட்சி தந்தார். அப்போது அம்முகங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து நெருப்புப் பொறிகள் பறந்து வந்தன. சிவபெருமான் அக்கினித் தேவனிடம் நெருப்புப் பொறிகளைக் கொண்டு போய் கங்கையிற் சேர்க்கும்படி சொன்னான். தேவர்களிடம் கங்கை தீப்பொறிகள் குழந்தையாகிச் சூரன் குலத்தை யழிப்பான் என்றான். அதன்படி சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்க்கும்படி கார்த்திப் பெண்டிரைத் திருமால் முதலான தேவர்கள் பணித்தார்கள். சிவபெருமான் குமரனை அழைத்துப் போக உமாதேவியுடன் சரவணப் பொய்கைக்கு வந்தார். உமாதேவி பொய்கையிலிறங்கி ஆறு திருவுருவங்களையுத் தன் திருக்கரங்களால் அன்புடன் அணைத்தெடுத்து ஆறுமுங்களும் பன்னிருதோள்களுமுடைய ஒரு திருவுருவமாகச் செய்தளினாள் காளிதாசரும் குமார சம்பவத்தில் சிவன் மன்மதனை யெரித்ததாகச் கூறினார். ஆனால் வியாசர் பாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் கந்தன் பிறந்த வரலாறு வருமாறு :

 

சிவபெருமானும் உமாதேவியும் யாவராலுந் தடுக்கமுடியாத சக்தி வாய்ந்தவர்களானதால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அண்ட முழுதும் எரிந்துவிடுமென்று தேவர்கள் பயந்து உமாதேவிக்குக் குழந்தை பிறக்ககூடா தென்று வரங்கேட்டார்கள். அவர்கள் வேண்டியபடி சிவன் தன் உடம்பிலிருந்து வெளியேற்றிய இந்திரியம் தரையில் விழுந்து அக்கினியானது. அதனால் உமாதேவி, என்நாதன் என்னிடம் குழந்தை பெற விரும்பியபோது அவரைத் தடுத்ததால் உங்களுக்கும் குழந்தை பிறக்கக் கூடாது என்று தேவர்களை சபித்தாள் தேயர்கள் தாரகா சூரனின் இம்சை பொறுக்கமுடியாமல் பிரம்மாவிடம் முறையிட்டார்கள். பிரம்மா, உங்களை உமரதேவி சபிக்கும் பொது அக்கினி தேவனில்லை. அவளுடைய சாபம் அவனை பாதிக்காது. அவன் சிவனுடைய விந்துவிலிருந்து தோன்றிய அக்கினியைக் கங்கையில் விட்டு கங்காதேவியைக் குழந்தைப் பெறும்படி செய்வான். அக்குமரன் உங்கள் குறைகளைத் தீர்ப்பான்’ என்றார், தேவர்கள் அக்கினித் தேவனைத் தேடினார்கள், அவன் பாதாளத்தில் ஒளிந்திருந்ததை ஓர் தவளை தேவர்களுக்குக் காட்டிக் கொடுத்தது. அதனால் அக்கினித்தேவன் தவளை நாவில் ருசிப்பதை யிழக்குமென்று சபித்தான். ஆனால் தேவர்கள் தவளை பல்வேறு வார்த்தைகளை உச்சரிக்கும்படி வரங் கொடுத்தார்கள். அப்பால் அக்கினித்தேவன் அஸ்வதா மரத்தில் ஒளிந்து கொண்டதை ஓர் யானைக் காட்டிக் கொடுத்ததால் அவன் யானைபின் நா பின்புறம் வளையுமென்று சபித்தான். தேவர்கள் யானை தன் நாவினால் உணவைச் சாப்புடவும் பிளிற்றவும் ரெங்கொடுத்தார்கள். அதற்கப்புறந் தான் னொளிந்த இடத்தை ஓர் கிளி காட்டிக் கொடுத்ததால் அக்கினித் தேவன் கிளி பேச்சை யிழக்கும்படி சபித்தா. தேவர்கள் கிளியின் பேச்சு குழந்தை போலவும் கிழவன் போலவும் வியப்பூட்டக் கூடியதாகும்படி வரங் கொடுத்தார்கள். முடிவில் அக்கினித் தேவன் தேவர்கள் கோரியபடி கங்கா தேவியைக் கூடினான். அப்போது ஓர் அரக்கன் பயங்கரமாகக் கத்தியதைக் கேட்டு அவள் பயந்தாள், பின்னர் தன் வயிற்றி லீருக்குங் கருவின் உஷ்ணந் தாங்க முடியாமல் அக்கினித் தேவனைக் கேட்டுக் கொண்டு கருவைச் சிதைந்து மேருமலையின் மேல் வீசி யெறிந்தாள், அம்மலை முழுதும் தங்க மாயமாகி விட்டது, ஓர் கருத்துண்டு புல் பூண்டு நிறைந்த காட்டில்  விழுந்து ஓர் குழந்தையானது.  அதைக் கார்த்திகை கண்டு பாலூட்டி வளர்த்ததால் கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டான் உருத்திரனுடைய விந்துவிலிருந்து பிறந்ததால் ஸ்கந்தன் எனப்பட்டான். தன்னந் தனியாகக் காட்டில் புல் பூண்டுகளில் மறைந்திருந்த தான் குகன் எனப் பேர் பெற்றான்.

தொடங்கி உலகினிற் சோதி மணாளன்

அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை

விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை

ஒடுங்கி யுமையொடும் ஒருரு வாமே

-(திருமந்திரம் 1247)

திருமூலர் சிவனுடைய சடை மேலிருக்குங் கங்கை யொடுங்கி யுமையோ டோருருவ மானதாகக் கூறியதால் கங்கா மணாளன் சிவனே யாவான். ஆகவே வியாசர் கங்கையைக் கூடியதாகக்  கூறிய அக்கினித் தேவன் சிவனே தான். அதனால் தான் உமையின் சாபம் அக்கினித் தேவனைப் பாதிக்கா தெனக் கூறப்பட்டது. கந்தனுடைய திருவவதாரம் வியாசர் கூறியதுரும் சங்கப் புலவர்கள் கூறியதும் சிதைந்த கருவிலிருந்து தான். முருகன் உதித்தான் என்பதை யறிவிக்கின்றன. ஆகவே தமிழ்க் கடவுளாகக் கூறப்படும் கந்தழி கந்தனே யாவான். வியாசர் தவளைக்கு யானைக்கும் கிளிக்கும் அக்கினித் தேவன் சாபங்கொடுத்ததாகவும் தேவர்கள் வரங்கொடுத்ததாகவும் கூறியதை நோக்கும் போது சங்க காலத்திற்குப் பிறகே வியாசர் பாரதம் எழுதப்பட்டதாக தெரிகிறது.

 

சங்கப்புலவர்க்கும் வியாசர்க்கும் வித்தியாசம்

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற

மூகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்

ஐவரென்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்

கைபுனை அரக்கில்லைக் கதழ்யெரி சூழ்ந்தாங்குக்

களிதிகழ் கடாஅத்த கடுவகளிறு அகத்தவா

முளிகழை உயர்மலை முற்றிய முழங்கழல்

ஒள்ளுரு அரக்கில்லை வளிமகன் உடைத்துத்தன்

உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல

எழுஉறழ் தடக்கையின் இனங்கர்க்கும் எழில்வேழம்

அழுவம்கூழ் புகையழல் அதர்பட மிதித்துத்தம்

குழுவொடு புணர்ந்துபோம் குன்றழல் வெஞ்சுரம்

-(கலித்தொகை 25: 1-11)

வாயுபுத்திரனான வீமன் பற்றி யெரிந்த அரக்கு மாளிகையைக் காலால் மித்துடைத்து தன் கிளைகளைக் காப்பாற்றியதாகப் பாலை பாடிய பெருங்கடுக்கோ கூறினர். ஆனால் வியாசர் விதுரன் அனுப்பிய ஆளொருவன் அரக்கு மாளிகையிலிருந்து சுரங்கம் வெட்டியதாகவும் பாண்டவர்களே அரக்கு மாளிகையில் புரோசனன் இருக்கும் சமயம் பார்த்து அதைக் கொளுத்தி விட்டு சுரங்கத்தின் வழியாகத் தப்பி வந்தததாகவுங் கூறினார். அப்படிப் பாண்டவர்கள் தப்பிக்கும்படி செய்த விதுரன் அவர்களுக்கெதிராகத் துரியோதனன் பக்கஞ் சேர்ந்து போர் புரிந்ததாக வியாசர் கூறியது பொருத்தமானதல்ல.

 

சங்க காலப் போர் போல் பாரதப் போர் நடந்தது

அலங்குளைப் புரவி யைவரிராடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலம்பூத் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருசொற்று மிருபதம் வரையாது கொடுத்தோய்

-(புறநானறு 2: 13-6)

முரஞ்சியர் முடிநாகராயர் குதிரைகள் கொண்ட பஞ்ச பாண்டவரோடு கோபித்து நிலத்தில் வளர்ந்த தும்பை மாலை யணிந்து வந்து கெளரவர் நூற்றுவரும் போர்புரித்து களத்தில் மாண்டதாகக் கூறினார். இதனால் பகைவர் நடுக்கும்படி யுத்தஞ்செய்யும்போது தும்ப மாலை யணிய வேண்டு மென்ற புறப்பொருள் இலக்கணத்தின்படிதான் பாரதப்போர் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. உதியஞ் சேரலாதன் பாரதப் போரில் படைகளுக்குச் சோறு போட்டதை மாமூலரும் வருமடிகளில் கூறினார்.

முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்

பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல்

கூளிச் சுற்றம் குழிஇயிருந் தாங்குக்

குறியவும் நேடிவவுங் குன்றுதலை மணத்த

சுரனிறந் தகன்றன ராயினும்

-(அகநானூறு 233 8-11)

பாரதப் போரில் உதியஞ் சேரலாதன் பெருஞ்சோறு போட்டபோது பேய்க்கூட்டம் குள்ளமாகவும் உயரமாகவு மிருந்ததுபோல் காட்டில் மலைகள் குட்டையாகவும் நெட்டையாகவு மிருந்ததாகக் கூறியதால் சங்க காலத்தில் பேய்க்கூட்டம் போர்க்களத்தில் மாண்டவர்களின் வானையும் உதிரத்தையும் உண்டு களிக்கு மென்று சங்கப்புலவர்கள் கூறிபதுபோல் பாரதப் போரிலும் திகழ்ந்ததாக அவர்கள் எண்ணி யிருந்தது தெரியவரும்.

அவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வா

யந்தி வானத் தடுமழை கடுப்ப

வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப

வீரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப்

பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே

ராராச் செருவி னைவர் போல

வடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த

வென்னாத் தெவ்வ குலைவிடத் தார்த்துக்

கச்சி யோயேன்.

-(பெரும்பாணாற்றுப்படை 412-20)

கடியலூர் உருத்திரங் கண்ணனார் அந்திப் பொழுதில் செவ்வானத்தில் பிறைச்சந்திரனைச் சூடிக்கொண்டு கருமேகம் ஊர்ந்து செல்வது போல் பாரதப்போரில் செங்குருதி வெள்ளத்தில் கரிய யானைகளின் பிணங்கள் மிதந்து சென்றதாகக் கூறினார். அவர் ஐவர் மீது கோபித்து நூற்றுவர் வந்ததாகக் கூறியதுபோலவே இளங்கோவாடிகளும் வருமடிகளிற் கூறினார்.

ஒரைவ ரீரைம் பதின்மர் உடன்றேமுந்த

போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

சேரன் பொறையன் மலையன் திறம்பாடி.

(சிலப்பதிகாரம் 29. ஊசல்வரி 24: 1-3)

ஆகவே, சங்கப்புலவர்கள் தம் காலத்துப் போர் போலவே பாரதப் போரும் நடந்ததாக எண்ணியிருந்தது தேற்றம். ஆனால் வியாசர் பதினெட்டு நாட்கள் பாரதப்போரில் இருபடைகளும் பலவியூகங்களை வகுத்துப் பலவித அஸ்திரங்களை மந்திரித்து விட்டு யுத்தம் புரிந்ததாக வர்ணித்திருப்பது அசாதாரணமானது. இதேபோல் வன்னிய புராணத்திலும் உருத்திர வன்னியனுக்கும் வாதாவிக்கும் பலநாட்கள் யுத்தம் நடந்ததாக வர்ணித்திருப்பது ஆசிரியரின் கற்பளையேயாகும்.

சங்கப்புலவர்கள் பாண்டியர் பஞ்ச பாண்டவர் கவுரியர் வழியில் வந்தவர்களாகக் கருதி பாண்டியரைப் பஞ்சவர் எனவுங் கவுரியர் எனவுங் கூறினார்கள்.

 

நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்

கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்

தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது

நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ

இளைய தாயினுங் கிளையரா வெறியும்

அருநரை யுருமிற் பொரு நரைப் பொறாஅச்

செருமாண் பஞ்சவ ரேறே

-(புறநானூறு 53: 1-8)

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாண்டியன் வெள்ளி யம்பலத்தும் துஞ்சிய பெருவழுதியை, அடிமரங்கெட்டு பொந்தையான  ஆலமரத்தின் கிளைகளை  யதன் விழுது தாங்குவதுபோலத் தமக்கு முன்னோர் இறந்துவிட்ட போதிலும் தளர்ச்சியுறாமல் நல்ல புகழ் வாய்த்த பழங்குடி, தடுமாறாகபடி பாம்புகளை யழிக்கும் இடிபோலப் பகைவரைத் காணப் பொறுக்கமற் போர்புரிந்து மாண் படைத்த பாண்டியர் குடி யழியாத படி ஆலவிழுது போற் தாங்குபவன் பெருவழுதி என்றதால் சங்கப்புலவர்கள் பாணடவர் வழியில் வந்தவர் பாண்டியர் என அறிந்தருந்தது தெரியவரும்.

திரண்டமரர் தொமுதேத்தும் திருமால்நின் செங்கமல

இரண்டடியான் மூவுலதும் இருள்சீர நடந்தனையே

நடந்தவடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தவடி

மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

-(சிலப் 17. ஆய்ச்சியர் குரவை. முன்னிலைப்பரவல் 3)

செழிய வாழி தென்னவ வாழி

பழியொடு படராப் பஞ்சவ வாழி

-(சிலப் 20: 32-3)

இளங்கோவடிகள் பஞ்ச பாண்டவர்களைப் பஞ்சவர் என்றார்.  பாண்டியனையும் பஞ்சவ என்றார்.

பணிவி லுயர்சிறப்பிற் பஞ்சவன்

-(பரிபாடற்றிரட்டு 2.40)

பாண்டியரைப் பஞ்சவர் என்றது போல் கவுரியர் எனவும் சங்கப் புலவர்கள் கூறினார்கள். வெல்போர்க் கவுரியர்

-(அகநானூறு 342:4)

வென்வேற் கவுரியர் தொன்முது கோடி

முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுறை

வெல்போர் இராமன் அருமறைக் கவித்த

பல்வீழ் ஆலம் போல

ஒலியவிந் தன்றின் வழுங்கல் ஊரே

-(அகநானூறு 70: 13-7)

வெற்றிவேல் கொண்ட பாண்டியரது மிகப்பழமையான திருவானைக்கரையின் அருகில் ஒலிக்கும் கடலின் துறை முற்றத்தில் இராம பிரான் அருமையான வேதத்தை யாராய்ந்ததாக மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் கூறினர். இதனால் தமிழகத்தில் சங்க காலத்தில் வழங்கிய ராமாயணத்திற்கும் வால்மீகி இராமாயணத்திற்கும் வித்தியாசமிருப்பதை யறியலாம்.

 

 

 

 

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

  1. மனிதன் முதன்முதலில் தோன்றியது தமிழகத்தில்

 

மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின்

றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து

ஆரிய முந்தமி முழுட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

-(திருமந்திரம் 65)

மாரிக் காலத்திலுங் கோடைக் காலத்திலும் நீர் நிறைந்து அலை மோதிக்கொண்டிருந்த எரியில் நீர்வற்றத் தொடங்கிய காலத்தில் ஆண்டவன் ஆரியமும் (சமஸ்கிருதமும்) தமிழும் உடனே சொல்லிப் பெண்களுக்குக் கருணை புரிந்தான் என்றார் திருமுலர்.

 

இடிப்படை வானவனான இந்திரன் முருகன் பிறந்தபோது அவனைக்கொல்ல முயன்றது போல் ஆண்டவன் படைத்த மனிதயினத்தை யழிக்க மழை பெய்யாதபடி செய்து ஏரியில் நீர்வற்றத் தொடங்கியதைக் கண்டு இறைவன் தெய்வந் தொழாஅள் கொழுநம் றொழு நெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை என்று கற்றுக்கொடுக்க மொழியைப் படைத்தா னென்பதை மேற்கூறிய திருமந்திரம் புலப்படுத்துகிறது. அப்படி ஆண்டவன் பெண்களுக்கு கற்று  கொடுத்த நெறி கற்பு எனப்பட்டது. அவன் கற்றுக் கொடுத்த மொழி ஆரியம் தமிழ் எனப் பிரிந்து, பிறகு அவை யிரண்டுங்கூடி மொழியினங்கள் பிறந்ததால் திருமூலர், ஆரியமுந் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க் கருணை செய்தானே என்றார். இறைவன் முதலில் தமிழைப் படைத்தான். அதிலிருந்து சமஸ்கிருதம் படைத்தான் என்பதை யூதர்களின் வரலாறு (Thc Old Testament) புலப்படுத்துகிறது.

 

ஆண்டவன் யூதர்களின் முன்னோன் அப்ரகாமிடம், இனிமேல் உன் பெயர் அப்ராம் (Abrum) என அழைக்கப் படமாட்டாது; உன் பெயர் அப்ரகாமாக (Abeakam) விருக்கும். ஏனென்றால் உன்னை அநேக தேசியங்களுக்குத் (Nations) தந்தை யாக்குவேன். உன்னிடமிருந்து நாடுகளை யுண்டாக்குவேன். மன்னர்கள் வருவார்கள். உனக்கும், உன் சந்ததியாருக்கும் புதிய சண்ணான் (Canaan) நாட்டை யளிப்பேன். உன் சந்ததியார்க்குக் கடவுளாவேன். உன் மனைவி சரையை நீ சரை (Sarai) என்று கூப்பிடக்கூடாது. ஆனால் இனிமேல் சரா (Sarah) என்பது அவளுடைய பெயர். உனக்கும் அவளுக்கும் ஓர் மகனைத் தருவேன். அவள் தேசிய யினத்தவரின் தாயாவாள். அவளுடைய சந்ததியார் அரசர்களாவார்கள் என்றான்.

 

ஆண்டவன் அப்ராமின் பெயரையும் அவனுடைய மனைவியின் பெயரையும் மாற்றியது தமிழிலிருந்து சமஸ்கிருதம் உண்டாக்கப்பட்டதைக் காட்டுகிறது. தமிழில் ஐ விகுதி சமஸ்கிருதத்தில் ஆ வாக மாறும். (உ-ம்) சீதை-சீதா, ராதை-ராதா, மாலை-மாலா. ஆகவே சரை என்ற தமிழ்ப்பெயர் சாரா எனச் சமஸ்கிருத பெயராக்கப்பட்டது. அதேப்போல் அப்ராம் என்ற தமிழ்ப்பெயர் அப்ரஹாம் என வடமொழி பெயராக்கப்பட்டது. எப்பொருளிலும் ஆண் பெண் யென இருமை படைத்ததுபோல் ஆண்டவன் மொழிகளிலும் தமிழ் சமஸ்கிருதம் என இருமை படைத்தான். ஆங்கிலத்தில் ஒன்று முதற் பத்து வரையுள்ள எண்களின் பெயர்களில் ஒன்னும் (Ont) எட்டும் (Eight) தமிழ்ப் பெயர்கள். மற்றவை சமஸ்கிருதப் பெயர்கள், நாவாய் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து நாவல் (Naval) எனக் கடற்படைக்கு ஆங்கிலத்திற் பெயருண்டான தென்பர். நீரில் மிதக்கும் கப்பலுக்கும் பாத்திரத்திற்கும் தமிழில் மலன் எனவும் ஆங்கிலத்தில் வெஸ்ஸல் (Vessal) எனவும் பெயர் வழங்குவதும் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கு முள்ள உறவைக் காட்டுகிறது. தமிழில் மயிலுக்கு வழங்கும் தோகை என்ற சொல் யூதர்களின் ஈப்ரு மொழியில் தொக்கி யென வழங்குகிறதாம். இஸ்ரேயிலின் தலைநகரான ஜெருசலத்திலுள்ள அசலம் மலை என்ற அர்த்தங்கொண்ட சமஸ்கிருத சொல். அது தமிழிலும் வழங்கும். (உ-ம்) அருணாசலம். ஆகவே தமிழும் ஆரியமும் பிறமொழிகளில் கலந்திருப்பதை யாராய்ந்தால் அவை இரண்டுங் கலந்துதான் மொழியினம் உண்டானது தெரியவரும். மொழியின் அடிப்படையில் நாட்டுப்பற்றுண்டாவ, ஆண்டவன் அப்ராம் பெயரை அப்ரகா மெனவும் சரையின் பெயரைச் சரா வெனவும் மாற்றியதோடு அவர்களைத் தேசிய இனங்களின் (Nation) தந்தை தாயாகக் கூறினான்.

 

ஆண்டவன் ஆண், பெண் யென இருமை படைத்தது போல் தமிழ், சமஸ்கிருத மெனப் படைத்தது போல் சமயத்திலும் கிழக்கில் இந்து மதம் (Hinduism) என்று சொல்லும் சமயமும் மேற்கில் யூதர்களின் மதமும் (Zionism) படைத்தான். இந்து மதத்திலிருந்து சமணமும் பௌதமும் தோன்றியதுபோல் யூதர்களின் மதத்துலிருந்து கிறித்துவமும் மகமதியமும் தேன்றின. இந்துக்களின் கடவுளரைச் சமணரும் பௌத்தரும் வழிபடுவது போல் யூதர்களின் கடவுளரைக் கிறித்தவரும் மகமதியரும் வழிபடுகிறார்கள். பைபிலும் குரானும் யூதர்களின் வரலாற்றைப் பின்பற்றி ஆண்டவனால் படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆடம் யெனவும் முதற் பெண் ஈவு எனவும் கூறுகின்றன. ஆடம் ஈவு படைக்கப்பட்ட வரலாறு அவர்கள் தமிழ் நாட்டில் படைக்கப்பட்டவர்களெனக் காட்டுகிறது. அவர்களுடைய பெயர் தமிழ்ப் பெயரே யாகும். ஆடவன் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஆண்மகன் என்பது பொருள். தமிழிலுள்ள ஆண் பால் விகுதி அன் திரிந்து வடமொழியும் ஏற்று ஆடம் (Adam) என்றாயிற்று.

 

ஆடம் தன் மனைவியை ஈவு என அழைத்தான். காரணம் அவள் எல்லா உயிர்களுக்குந் தாயாவாள். அவள் மக்களை ஈவா னென்பதாக ஈவு என அழைக்கப்பட்டாள். அவள் தன் காதலை அவனுக் கீந்ததால் ஈவு என அழைத்தான் என்றலும். அவர்களைப் படைத்த இடத்திற்கு இடன் (Eden) என்பதும் தமிழ்ப் பெயரே யாம். இடன் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இடம் என்பது பொருள். அவர்கள் படைக்கப்பட்ட தத்துவமும் தமிழ் மறையின் தத்துவத் தான்.

 

கடவுள் நிலத்தின் தூசியிலிருந்து மனிதன் உருவை வுண்டாக்கினான். அவனுடைய மூக்கின் வழியாக பிராண வாயுவை வூதி அவனுக்கு உயிர் கொடுத்தான்.

-( Genesis 2: 7)

 

மண்ணொன்று கண்டீர் இரவ கைப் பாத்திரந்

திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது

விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் னானாந்போல்

எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வா றே.

-(திருமந்திரம் 143)

திருமூலரும் ஆண், பெண் என்ற இரு வகையான சரிரமும் மண்ணிலிருந்து படைக்கப்பட்ட தென்றார்.

ஆடம் தூங்கிக் கொண்டிருந்த போது ஆண்டவன் அவனுடைய விலாவெலும்பை யெடுத்துக்கொண்டு அவனுடைய சதையை முடித் தைத்து விட்டான். அந்த எலும்பையே பெண்ணாகச் செய்து அவனிடங் கொண்டு வந்தார். இது என்னுடைய எலும்புகளில் ஒன்றே.  என்னுடைய சதையில் ஒரு கூறு.  இவளை மகள் என்று அழைக்கிறேன், ஏனென்றால் இவள், மனிதனிலிருந்து எடுத்கப்பட்டவளே என்று ஆடம் கூறினான்

-(Genesis 2: 21-3)

ஆண்டவன் ஆறாம் நாள் தன்னுருவிலேயே மனிதனை யுண்டாககனான். ஆகவே அவன் தன்னுருவில் இடபாகத்திற் சக்தி யிருப்பது போல் ஆடமின் இடபாகத்திலிருந்த சக்தியைப் பிரித்துப் பெண்ணாக்கி அவனுக்குத் துணைவியாகத் தந்தான்.

எதும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த

வலம்பன் மணிமுடி வானவ ராதி

எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்

எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.

– (திருமந்திரம் 371)

தக்கன் வேள்வியிற் கலந்துகொண்ட தேவர் கொன்று அவர்களுடைய எலும்புகளை யணிந்து சிவன் திருநடனம் புரிந்தது அவ்வெலும்புகளிலிருந்து மீண்டும் அவர்களே உயிர்ப்பிக்கவே, இறந்தவர் எலும்பிலிருந்து மீண்டும் பிறப்பார்களெனவே தமிழர் சுடுகாட்டில் கொளுத்திய பிணத்தின் எலும்பிற்குப் பாலூற்றிப் புண்ணிய நதிகளிலும் திருக்குளத்திலும் கடலிலும் விடுகிறார்கள். அதனால் ஆண்டவன் ஆடமின் விலாவெலும்பிலிருந்து ஈவுவைப் படைத்தான் என்பதும் தமிழ் மறையின் தத்துவத்தினால் தான்.

 

ஆண்டவன் ஆடம் ஈவிடம் இடனிலுள்ள ஓர் மரத்தின் பழத்தை மட்டுஞ் சாப்பிடக்கூடா தென்று சொல்லியிருந்தான். ஆனால் ஓர் பாம்பு சுவைத் தூண்டி அப்பழத்தைச் சாப்பிடும்படி செய்தது. அதனே யறிந்த ஆண்டவன் அவர்களைத் தேடிவந்த போது அவர்கள் நாணத்தால் அத்தித் தழையை உடுத்திக் கொண்டிருந்தார்கள், அதனால் அத்திப்பழந்தான் ஆண்டவனால் ஒதுக்கப்பட்ட கனியாகும் கீழ்வரும் திருமூலர் திருமந்திரமும் அத்திப்பழந்தான் வினையை விளைவிப்ப தென்பதைப் புலப்படுத்தகிறது.

வறுக்கின்ற வாறு மனத்துலா வெற்றி

நிறுக்கின்ற வாராமத் நீல்வரை யொட்டிப்

பொறிக்கின்ற வரறுமப் பொல்லா வினையை

அறுக்கின்ற நால்வரும் அத்திப் பழமே.

-(திருமந்திரம் 1970)

ஆடமும் ஈவும் தழையை யுடுத்திக்கொண்டதும் அவர்கள் தமிழகத்தில் தான் படைக்கப்பட்டவர்களென்பதைக் காட்டுகிறது. அகப்பாக்களில் ஊழ்வினை வயத்தால் தலைவியைத் தனிமையிற் கண்டு காதல்கொண்ட தலைவன் அவளது சம்மதம் பெற தழையைக் கையுறையாகக் கொடுத்தாகக் கூறப்படும்.

பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து

தழையும் தாரும் தந்தனன் இவனென

இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்

தைஇத் திங்கள் தண்கயம் படியும்

பெருந்தோட் குறுமகள் அல்லது

மருந்துபிறி தில்லே யானுற்ற நோய்க்கே.

-(நற்றிணை 80: 4.9)

 

அன்னாய் வாழிவேண் டன்னை யேன்னை

தானு மலைந்தா னெமக்குந் தழையாயின

பொன்வீ மணியரும் பினவே

என்ன மரங்சொ லவர் சார லவ்வே.

-(ஐங்குறுநூறு 201)

உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும்

தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி

விழவொடு வருதி தீயே யிஃதோ

ஓரான் வருதிச் சீரில் வாழ்க்கை

பெரு நலக் குறுமகள் வந்தென

இனிவிழ வாயிற் றென்னுமில் வூரே

-(குறுந்தொகை 295)

இதனால் சங்க காலத்தில் திருவிழாவின் போது ஆணும் பெண்ணும் தழையை ஆடையாகவும் ஆபரணமாகவும் அணிந்திருந்தது தெரிய வரும். அதன் விளைவாக இக்கலத்திலும் வேப்பஞ்சாலை கட்டிக் கொண்டுத் தமிழர் மாரியம்மனுக்குப் பிராத்தனைச் செய்து வருகிறார்கள். ஆண்டவன் ஆடாம் ஈவுக்குத் தோலாடை கொடுத்தான். சிவன் உடுத்திருப்பதும் புலித்தோலைத்தான்.

 

ஈவு பெற்ற மூத்த மகன் பெயர் காயின் இரண்டாம் மகன் பெயர் ஏபில். மூத்தவன் நிலத்தை விழுது பயிர் தொழில் செய்து ஆண்டவனுக்குப் பழுத்த பழங்களைப் படைத்து வந்தான். இளையவன் ஆடு மாடு மேய்த்துத் தலையாட்டைப் பலி கொடுத்து வந்தான். தமிழர்களும் ஆண்டனுக்கு உயிர்பலி கோடுத்து வந்ததால்தான் பலி பீடமமைக்காமல் தமிழ் நாட்டில் கோயில் கட்டவில்லை. சங்க காலத்தில் ஆட்டைப் பலிக் கொடுத்து இரத்தத்தில் தினையையும் மலரையும் கலந்து தூவி முருகனை அர்ச்சித்து வந்தார்கள்.

 

சிறுதினை மலரெடு விரைஇ மறியறுத்து

வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ

யூரூர் கொண்ட சீர்கெழு விழவினும்

-(திருமுருகாற்றுப்படை 218-20)

 

 

வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்

துருவச் செந்தினை குருதியொடு தூஉய்

முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்

-(அகநானூறு 22:9.11)

மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇ

-(குறுந்தொகை 263:1)

ஏபில் கொடுத்த உயிர் பலிக்கு ஆண்டவன் பிரியம் வைத்திருந்தானென்று காயில் காய்ந்து தன் தம்பியைப் பலி கொடுத்து விட்டான். அதனால் இறைவன் காயின் மீது கோபங்கொண்டு, என்ன காரியஞ் செய்தாய் உன் தம்பியின் இரத்தக் குரல் கத்துகிறது. உன் கையிலிருந்து அவனுடைய உதிரத்தைக் குடிக்க வாய் திறந்த பூமா தேவியால் சபிக்கப் பட்டவனானாய், இனி நிலத்தை நீ விழுதாலும் முன் போல் உனக்கு அவ்வளவு விளைச்சளைத் தரமாட்டாள். நீ பூமியில் நாடோடியாய்த் திரிவாய், என்றான். மக்கள் அறந்தவறிய யிடத் தில் பூமி நல்ல விளைச்சலைக் கொடுக்காதென்பது சங்கப் புலவர்களின் கருத்தாகும்.

 

சிறுகுடி யீரே! சிறுகுடி யிரே!

வள்ளி கீழ்வீழா வரைமீசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்

அல்ல புரிந்தொ ழுகலான்

-(கலித்தொகை 39: 11-4)

குடிமக்கள் தகாதவை செய்தொழு தம்போது நிலத்தில் வள்ளிக் கிழங்கு பெருக்காது, மலையில் தேன் சேராது, கொல்லப்பயிர் கதிர் விடா தென்றார் கபிலர்.

இறைவனிடங் காயின் உன் முகத்தில் விழிக்காதபடி நான் மறைந்து வாழ்வேன். என்னை யாராவது பார்த்தால் கொன்று விடுவார்கள் என்று வருந்தினான். இறைவன், உன்னை எவன் கொல்கின்றானோ அவன் ஏழு முறை பழிவாங்கப்படுவான் என்று காயினை மற்றவர்கள் அடையாளங் கண்டு கொண்டு அவனை எதுவுஞ் செய்யாமலிருக்க ஓர் அடையாளத்தை அவனிடம் உண்டாக்கினான். மற்றவர்கள் என்றதால் ஆடம் ஈவோடு மற்ற யினத்தவர்களும் படைக்கப்பட்டார்கள் என்பதும் அவர்களில் முதலில் ஆடம் ஈவு படைக்கப்பட்டார்களென்பதும் தெரியவரும். காயினின் செய்கை மனிதயினம் எப்படி விளைக்காளான தென்பதைக் காட்டுகிறது. அவனை துன்புறுத்துபவன் ஏழுமுறை பழிவாங்கப்படுவா னென்ற தால் ஒரு தரம் செய்த வினை ஏழு தரம் தொடர்ந்து வருமென்பதைக் காட்டுகிறது. அதனால் தான் திருவள்ளுவரும், ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்(கு) எழுமையும் ஏமாப் புடைத்து என்றார்.

 

காயின் (Cain) ஆண்டவன் முன்னிலையிலிருந்து போய் இடனுக்குக் கிழக்கே நாடு [Nod) என்ற நிலத்தில் வசித்தான். அவன் நாடிச் சென்ற நாட்டிற்கு நாடு  என்று பெயர் கூறப்பட்டதும் தமிழ் பெயர் தான். இதனால் நாடு என்று தேசத்திற்கு எப்படி பெயருண்டரனதென்பது புரிகிறது.

ஆடம் ஈவுக்கு மூன்றாவது மகனாகச் சேத் என்பவன் பிறந்தான். அவனுடைய வழியில் வந்தவர்களேள யூதர்கள் அவர்களுடைய வம்சத்திற் பிறந்தவரே இயேசுவும் ஜானும். ஜானின் சீடர்கள் இயேசுவை ரபி என்றார்கள். செயிண்ட் ஜான் 5 :20) அண்மையிற் காலமான இஸ்ரேயில் பிரதமரும் ரபி குடும்பத்தவர், பகரமும், வகரமும் மயங்கும். அதனால் ரவி என்பது ரபி எனப்பட்டது. எனவே யூதர்கள் இரவி குலத்தவராவார் அவர்கள் சூயஸ் கால்வாயின் கரையோரம் சமீபத்தில் வைத்த அபோலோ (Apollo) சிலையும் சூரிய தேவனே தான். சூரியனுக்கு ஆதவன் எனவும் பெயருண்டு. முதல் மனிதன் ஆடமே ஆதவனானவன், முதற்பெண் ஈவுவே சந்திரனவன். ஆடமின் விலாவெலும்பிலிருந்து ஈவு வுண்டாக்கப்பட்டது போல் சூரியனுடைய அக்கினிப் பிழம்பே சந்திரனாது. நீரில் விழுந்த நெருப்பு கரியாவது போல் நீரில் விழுந்த அக்கினிப் பிழம்பு பூமியானது. பூமாதேவி பெண்ணாகக் கூறப்படுவாள். பூமிபோல் மண்மயமான சந்திரனையு பெண்ணாகக் கவிகள் உருவகப்படுத்துவார்கள்.

 

கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்தாங்கு

இருகருங் கயலோ டிடைக்குமிழ் எழுதி

அப்கண் வானத் தரவுப்பகை யஞ்சித்

திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்

-(சிலப்பதிகாரம் 5: 204-7)

கருமேகம் போன்ற கூந்தலைச் சுமந்து சிறிய களங்கத்தை விட்டு விட்டு இரு கயல் விழிகளுக்கிடையிற் குமிழ்போன்ற மூக்கை யெழுதி கொண்டு அழகிய வானத்தில் பாம்பின் பகைக்குப் பயந்து சந்திரனும் திரிவதுண்டோ வென்று சொல்லும்படி மகளிற் வேளிற் காலத்தில் புகாரின் வீதியிற் றிரிந்ததாக இளங்கோ கூறினார். திங்களை அரவத் தீண்டியதென்பதற்கேற்ப ஈவைக் கெடுத்துக் கனியைச் சாப்பிடும்படி செய்ததும் அரவந்தான். ஆண்டவன் அரவத் திடம், உனக்கும் இப்பெண்ணுக்கும் விரோதமுண்டாக்குவேன். உன் சந்ததியாருக்கும் இவள் சந்ததியாருக்கும் விரோதத்தை யுண்டாக்குவேன். உன் தலையை இவளது சந்ததியார் துண்டிப்பார்கள். அவர்களுடைய குதிக்காலைக் கடிப்பாய் என்றான். (Ganesis 3: 15) இதனால் ஈவின் அவதாரமான சந்திரனுக்கும் பாம்பிற்கும் தீராதபகை யிருந்து வருவதாக ஜோதிடம் கூறுகிறது.

வாழி யாதன் வாழி யவினி

நெற்பல பொலீக பொன்பெரிது சிறக்க

எனவேட் டோளே யாயே யாமே

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்

யாண ரூரன் வாழ்க

பாணனும் வாழ்க வௌவேட் டேமே.

-(ஐங்குறுநூறு 1)

ஐங்குறுநூற்றின் முதற்பத்தான வேட்கைப் பத்தின் பாடல்களன் முதலடியில் வாழி யாதன் வாழி யவினி எனக் கூறப்பட்டது. சங்க காலத்தில் யூதர்கள் தமிழகத்தில் குடியிருந்தார்கள். அதனால் அவர்களுடைய வரலாறு அறிந்த சங்கப்புலவர் ஓரம்போகியார் ஆடம் ஈவைத்தாம் ஆதன் ஆவினி என்றார். இக்காலத்தில் ஆணினத்தை ஆடம் ஈவைனவும் பெண்ணினத்தை ஈவு எனவும் கூறுவது போல் அவர் ஆடவரை ஆதன் எனவும் பெண்டிரை அவினி யெனவுங் கூறினார். தலைவி நாட்டில் நெல்லும் பொன்னும் பெருகவேண்டுமென்று வேட்கை கொண்டது நாட்டு மக்களின் பொருட்டே. ஆகவே அவன் வாழி யாதன் வாழி யவினி என்றது ஆடவர் வாழ்க பெண்டிர் வாழ்க என்றுதான்.

 

கண்ணகி மதுரையை யெரித்த பின் பன்னிரண்டாண்டுகள் மழை பெய்யாமல் பஞ்ச மேற்பட்ட காலத்தில் அவளைத் தெய்வமாக வணங்கிய பின் மழை பெய்தது. அதனால் அவளை மாரியம்மன் என அழைத்தார்கள், மாரி – மழை. அவளைப் பரவி சங்கப் புலவர்கள் பாடியவை அகப்பாக்கள். அவைகளில் தலைவன் தலைவி கோவலன் கண்ணகி தாம். ஆணும் பெண்ணும் வாழ்வதற்கு நாட்டில் நெல்லும் பொன்னும் பெருகவேண்டு மென்று தலைவி விரும்பியதாகப் பாடி புலவர் கண்ணகி தெய்வத்தை உற்சாகப் படுத்தினர். கண்ணகி பிறந்தது சோழ நாட்டில், அழித்தது பாண்டியனுடைய மதுரையை. அதனால் சூரிய குலத்தவரான சோழர் வாழ்க சந்திர குலத்தவரான பாண்டியர் வாழ்க என்பதாக வாழி யாதன் வாழி யவினி எனவும் சிலேடைப் பொருளமையும்.

தாய்க்குத் தலைப்பிள்ளை, ஈவின் தலைப்பிள்ளை காயின் வழியில் வந்தவர்கள் சந்திர குலத்தவராவார். காவின் வாழ்க்கையைக் கசத்து கடனைவீட்டுச் சென்றதால் அவனுடைய வழியில் வந்த பாண்டியர்கள் காப்பான வேப்ப மாலையை யணிந்தவர்களார்கள். தந்தைக்குக் கடைசிப் பிள்ளை. ஆடமின் கடைசிப் பிள்ளை சேத் வழியில் வந்தவர்கள் சூரிய குலத்தவராவார். அவர்கள் ஆண்டவன் ஆடம் ஈவுவைச் சாப்பிடக்கூடா தென்ற அத்தியின் தழையை மாலையாக யணிந்தவர்களானார்கள். அத்தி பூ காண்பதரிதானதால் சங்கப் புலவர்கள் சோழர்ளின் மாலையை ஆர் மிடைந்தற்றே என்று கூறினார்கள். ஆகவே யூதர்களும் சோழர்களும் கூரிய குலத்தவராவார்.

 

ஆடம் ஈவின் இரண்டாம் மகன் ஏபிலின் வழியில் வந்தவர்கள் சேரராவார். தாய்த்தந்தையர் பூமியில் இருக்கும் போதே ஏபில் அன்ணனால் கொல்லப்பட்டு வானுலக மடைத்ததால் வானுனோக்கி  செல்லும் பனையின் ஓலையை மாலையாகச் சேரவரசர்கள் கொண்டார்கள். அவர்கள் வானவனான ஏபிலன் சந்ததியாரானதால் சங்கப்புலவர்கள் சேனை வானவன் என்றார்கள். (புறம். 39, 126) ஆண்டவர் மனிதனையும் நம் உருவிலைபே நம்மைப் போலவே படைப்போம், அவர்கள் கடலில் மீன்கள் மீதும் காற்றில் பறவைகள் மீதும் நிலத்தில் விலங்குகள் மீதும் ஊர்வன மீதும் ஆட்சி செலுத்துவார்களாக என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். இறைவன் முதலில் மனிதன் கடலின் மீன்கள் மீதும் ஆட்சி செலுத்த வேண்டு மென்று விரும்பியதால் ஆடம் ஈவின் முதல் மகன் காயின் வழியில் வந்த பாண்டியர்கள் கடலில் வாழும் மீன் மீது ஆட்சி செலுத்துபவர்ளாக மீன் சின்னத்தைக் கொடியிலும் முத்திரையிலும் கொண்டார்கள். இறைவன் இரண்டாவதாக மனிதன் காற்றில் பறவைகள் மீது ஆட்சி செலுத்த வேண்டு மென்று விரும்பியதால் இரண்டாவது மகன் சேத்தின் வழியில் வந்த சேரர்கள் காற்றில் பறக்கும் பறவைகளையும் அம்பெய்து கொன்று ஆகாயத்தை யாட்சி செலுத்துபவர்களாக வில்லைக் கொடியிலும் முத்திரையிலும் கொண்டார்கள். இறைவன் மூன்றாவதாக மனிதன் விலங்குகள் மீதும் ஊர்வன மீதும் ஆட்சி செலுத்தவேண்டுமென்று விரும்பியதால் மூன்றாவது மகன் சேத்தின் வழியில் வந்த சோழர்கள் நிலத்தில் கொடிய புலியையும் அடக்கி ஆள்வோம் என்பதாகப் புலியைக் கொடியிலும் முத்திரையிலுங் கொண்டார்கள்.

 

யூதர்களின் முன்னோனானா நேர்வாவிடம் ஆண்டவன் ஓர் கப்பலைச் செய்து அதில் அவனுடைய குடும்பத்தாரையும் விலங்கினம் புள்ளினங்களில் ஆணும் பெண்ணும் ஜோடியாக ஏற்றிக்கொள்ளச் சொன்னான். நோவா அந்தக் கப்பலில் தன்னுடைய காவல் மரமான ஆரையும் ஏற்றிக் கொண்டதால் அதற்கு ஆர்க்கெனப் பெயருண்டானது போலும்! ஏழு நாட்கள் மழை பெய்து பூமியில் வெள்ளம் புரண்டது. அப்பால் ஆண்டவன் நிலத்தின் மீது காற்றை வீச நீரை வற்றும்படி செய்தான். ஏழு மாதம் பதினேழு நாட்கள் கடந்ததும் நோவாவின் ஆர்க் அரராத் தென்னும் மலையின்மேல் தங்கியது. ஜன்னலைத் திறந்து நோவா முதலில் புறாவை வெளியில் பறக்கவிட்டான். அது திரும்பி வராத போது கதவைத் திறந்தான். ஆண்டவன் அவனை வெளியே வரச் சொன்னான். அதன் பின்னர் அவறேடு ஆர்க்கில் வந்த விலங்கினம் புள்ளினங்கள் மீண்டும் பூமியில் விருத்தியடைந்தன. புறாவின் எடைக்குத் தன் சதையை அறுத்துப் பருந்திற்குக் கொடுத்த சிபியின் வழியில் வந்தவனானதால் தான் நோவா முதலில் புறாவை பறக்க விட்டுச் சோதித்தான் போலும்! அவனை இயேசு நோய் என்றுதான் கூறினார். அவர் அப்பா என்று தமிழில் தான் இறைவனை விளித்தார். இயேசு ஒரு நாள் அத்தி மரம் காய்க்க கூடாதென்று சாபமிட்டார். அதன் உள்ளுரையாவது அத்திமாலை கொண்ட யூதர்களின் ஆட்சி யழியவேண்டுமென்பது. அவர் சாகுமுன்பு அத்திமரத்தின் கதையைக் கற்றுக்கொள்ளுங்கள். அவனுடைய கிளைகள் தளிர்விட்டு இலை விடும் போது கோடைக் காலம் அருகிலிருப்பதாகும் என்றார். அதாவது யூதர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல்லகாலம் பிறக்கு மென்பதாகும். ஆகவே யூதகள் அத்தி மாலைக் கொண்ட சூரிய குலத்தவராவார். அவர்களுடைய முன்னோனான நோவா சோடாம் தேசத்து அரசன். சோணாடென்னும் சோழநாடே சேடாம் எனப் பைபிலில் கூறப்பட்டதாகும். குமரனும் குமரியும் காத்த குமரிக்கோடு கொண்ட பாண்டியனுடைய நாடே பைபிலில் கூறிய கொமரா  வாகும். பிரளய காலத்தில் சோடாமும் கொமராவும் அழிக்கப்பட்டது போல் கண்ணகியால் பாண்டியனுடைய மதுரை அழிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் சோழனுடைய புகாரும் அழிக்கப்பட்டது. பிரனய காலத்தில் நோவா தன் நாட்டை விட்டு ஆர்க்கில் சென்றதால் யூதர்களின் முன்னோர் வேறு நாட்டிலிருந்து வந்தவர்க ளென்பதில் ஐயமில்லை. அப்படி நோவா சென்றது இந்தியாவிலிருந்து தான். அவனைப் போல் பாண்டியனும் தன் நாட்டைக் கடல் விழுங்கிய போது இந்தியாவிற்கு வந்தவந்தான்.

 

காயின் இடனுக்கு (இந்தியாவிற்கு) கிழக்கில் சென்று நாட்டை யடைந்தான். அப்படி அவன் அடைந்த நாடு இந்தியாவிற்குக் கிழக்கிலுள்ள தூர கிழக்கு நாடேயாம்.  அதனால் அவனுடைய வழியில் வந்த பாண்டியர்களும் தம் நாட்டைக் கடல் விழுங்கியபோது மேற்கு நோக்கி வந்து இந்தியாவிலிருந்த சேர சோழர் நாடுகளைப் பிடித்துக் கொண்டார்க ளென்பதை வருமடிகளால் அறியலாம்.

மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்

மென்வின்றி மேற்சென்று மேவார்நாடு இடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளம்கெண்டை

வலியினுன் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவள்

-(கலித்தொகை 104:1-4)

சோழன் நல்லுருத்திரன், பாண்டியன் தன் நாட்டைக் கடல் விழுங்கி விடவே சோர்வடையாமற் மேற்குத் திசை நோக்கி வந்து சோழ சேரருடைய புலிக் கொடியும் விற் கொடியும் நீக்கிவிட்டுத் தன் வலிமையினால் மீன் கொடியை நட்டான்’ என்றார் .

காயின் இடனுக்குக் கிழக்காகச் சென்று நாட்டை யடைந்தான். அதனால் ஏபில் வழியில் வந்த சேரரும் சேத்தின் வழியில் வந்த சோழ இந்தியாவில் அரசாண்டு வந்தார்கள். அவர்களுடைய நாட்டைப் பாண்டியன் பிடித்துக் கொண்டு இந்தியா முழுதும் ஆண்டான் என்பதை வருமடிகளும் புலப்படுத்துகின்றன.

வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை

ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க

அடியிற் றன்னள வாசர்க் குணர்த்தி

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென் திசை யாண்ட தென்னவன் வாழி

-(சிலப் 11:15-22)

 

இளங்கோவடிகளும், ஓர் பாண்டியன் தன் நாட்டை விழுங்க வந்த கடல் மீது வேலெறிந்து அதன் ஆவேசத்தை யடக்கினான். அப்போது அலையானது அவனுடைய பாதங்களைக் கழுவி அவனுடைய பலத்தைப் பகைவர்கள் அறியும்படி செய்தது. ஆனால் அது பகையை மறக்காமல் சமயம் பார்த்து பாண்டியன் பலங் குறைந்தபோது அவனுடைய நாட்டை விழுங்கியது. அதனால் பாண்டியன் வந்து வடதிசையில் கங்கையும் இமயமும் தனதாக்கிக் கொண்டு தென் திசையிலிருந்து அரசாண்டான் என்றார்.

 

 

 

தென்புலங் காவலர் மருமா னொன்னார்

மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்

கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்

– (சிறுபாணாற்றுப்படை 63-5)

 

இடைக்கழி நாட்டு நல்லூர் : நத்தத்தனாரும் பகைவருடைய நாட்டை மாற்றிக் கொண்ட தன்மை கொண்டது. பாண்டியனுடைய வெண் கொற்றக் குடை என்றார். ஆகவே பாண்டியன் தென் கிழக்கிலிருந்து நான் இந்தியாவிற்கு வந்தான் என்பது உறுதி. ஜாவாவின் பக்கத்தில் மதுரை யென்ற தீவிருப்பது அங்குதான் முதற்சங்க காலத்தில் பாண்டியனுடைய தலைநகரான மதுரை யிருந்த தென்பதைப் புலப்படுத்துகிறது. தூரக் கிழக்கு நாடுகள் முழுதும் பெரும்பாலாக ஜாவாவில் அகஸ்தியர் சிலைகள் தோண்டி யெடுக்கப்பட்டன- ஆகவே அகத்தியர் தோற்றுவித்த முதற்சங்க காலத்தில் பாண்டியனுடைய நாடங்கிருந்த தென்பதில் ஐயமில்லை. வால்மீகி இராமாயணமும் அங்கிருந்த பாண்டியனுடைய நாட்டைக் கடல் விழுங்கிய தென்பதைப் புலப் படுத்துகிறது. சுக்கிரீவன் சீதையைத் தேடிச் சென்ற வானாங்கன் தேடவேண்டிய இடங்களை வர்ணிக்கும் போது, குஞ்சா மலையில் வீச்வ கர்மாவினால் அகத்தியருக்கு ஒரு மாளிகை சிருஷ்டக்கப் பட்டிருக்கிறது. அதில் பாம்புகளின் இருப்பிடமான போகவதி என்ற ஓர் நகர பீருக்கிறது விசாலமான கட்டுகளைக் கொண்டது. புகமுடியாதது எல்லாப் பக்கங்களிலும் கூறிய பற்களுங் கடும் விஷமுங் கொண்ட கொடிய பாம்புகளால் பாதுகாக்கப்பட்டது. எந்த போகவதி நகரமுஞ் சென்று திரிந்து தேடத்தக்கதோ அங்கே வேறு ஏதோ சில தேசங்கள் மறைந்திருக்கின்றன என்றதாக வால்மீகி கூறினார். இதனால் முதற் சங்க காலத்தில் பாண்டியனுடைய நாட்டில் அகத்தியர் சிறந்த குஞ்சா மலையின் அடியில் வாசுகியின் இருப்பிடமான போகவதி விருந்ததெனத் தெரிகிறது. நாகங்களின் இதப்பிடமானதால் தான் அந்நாடுகளுக்கு  நாக நாடெனப் பெயர் வந்ததாகும். இந்தோ சீனாவில் பூமிக் கடியில் நாகலோக மிகுந்ததாக அந்நாடுகளின் இதிகாசங்கள் கூறுகின்றன. நாக நாட்டைச் சேர்ந்த காம்போஜ (கம்போடிய) மன்னர்களும் சந்திர குலத்தவர், ஈவைத் தூண்டிக் கனியைச் சாப்பிட வைத்த நாகத்தைத் தெய்வமாக வணங்கியதால்தான் அவர்கள் நாகர்கள் எனப்பட்டார்கள் எனலாம். ஜாவாவின் தலைநகரை நாகபுரம் எனச் சாத்தனார் கூறினார். (மணிமேகலை 24:169) அங்கிருந்து வந்த பாண்டியனோடு நாகர்களும் வந்து தமிழகத்தில் குடியேறியதால் சங்கப் புலவர்களில் பலர் நாகனார் என்ற குடிப்பெயர் கொண்டவர்களாக விருக்கிறார்கள்.

 

பாண்டியன் இமயமுதல் குமரிவரை ஒரு காலத்தில் ஆரசாண்டான் என்பதை மொகஞ்சதாரோ ஹரப்பாவில் தோண்டியெடுக்கப்பட்ட முத்திரைகளில் மீன் சின்னம் இருப்பது காட்டுகிறது. அங்கு சிவன் சக்தி வழிபாடிருந்தது. மொகஞ்சநாரோவில் கண்டெடுத்த இரண்டு முத்திரைகள் எலம் மெசபொடோமியாவிலுங் காணப்பட்டன. ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பஞ்சாப் சிந்து பாலூசிஸ்தானமுஞ் சேர்ந்து திராவிடர்கள் வாழ்ந்து வந்தார்கள்; பிறகு அவர்கள் சிறிது சிறிதாக மெசபடோமியாவிற்கும் குடியேறியதாகச் சிலச் கருதுகின்றனர். பலூசிஸ்தானத்திற் பிராயூ என்தும் மக்கள் (Brahusi people of Balucistan) இன்றும் திராவிட மொழிகளே பேசி வருகிறார்கள். பின்லாந்து விஞ்ஞானிகள் சிந்து சமவெளி நாகரீகத்தை யாராய்ந்து அது திராவிடருடையது, ஆரியர் வருமுன்பே யிருத்த சாதி முறை சரீரத்தையும் ஆன்மாவையும் அசுத்தப் படுத்தாமல் தடுக்க மதத்தினால் உண்டானது. அதனால் தான் பழமையான சிந்து நாகரீகத்தில் பொதுமக்கள் குளிக்கும் பெரிய யிடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தென்றார்கள். (The Hindu dated 26.2.69)

 

நால்வகை மரபின் மாபெருந் திவும் -(மணிமேகலை 6 :195)

கீழ் திசை நாடுகளில் மக்கள் நால்வகை சாதியாராகத் தொன்று தொட்டு வாழ்ந்து வந்தார்கள். தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு சாதியாரும் தனித்தனித் தெருக்களில் வாழ்ந்து வந்தார்கள்.

பால்வேறு தெரிந்த நால் வேறு தெருவும்

-(சிலப்பதிகாரம் 14. 212, 22, 110)

நால்வேறு வர்ணப் பால்வேறு காட்டி

இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த

குறியவ நெடியவுங் குன்றுகண் டன்ன

கடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும்.

-(மணிமேகலை 6.56 -9)

 

இதனால் சங்க காலத்தில் நால்வகை சாதிபாருக்கும் தனித்தனி  சுடுகாடிருந்த தென்பதும் இறந்தவர்க்குச் சமாதி கட்டினார்களெனப்துந் தெரியவரும். அப்போது பிணத்தைச் சுடுவதும், புதைப்பதும் தாழியில் கவிப்பதும் இருந்த தென்பதை சுடுவோ ரிடுவோர் தொடுகு மிப், படுப்போர் தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர் என்றதால் அறியலாம். –(மணிமேகலை 6. 66-7) தாழியில் பிணத்தை விட்டுப் புதைப்பது சிந்து நாகரீகம் தமிழருடைய தென்பதைக் காட்டுகிறது. நால்வகை சாதிப் பாகுபாடு தமிழர் நாகரீகத் தாலுண்டடானநேயாம். தனித்தனி சாதியாருக்கும் தனித்தனி கடவுளும் இருந்தார்கள்.

கோமகன் கோயிற் கொற்ற வாசயில்

தீமுகங் கண்டு தாமிடை கொள்ள

நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித்

தண்கதிர் மதியத் தன்ன மேனியன்

முத் தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ

வேத முதல்வன் வேள்விக் கருவியோடு

பவளச் செஞ்சுடர் திகழாளி மேனியன்

ஆழ் கடல் ஞால மாள்வோன் தன்னின்

முரைசொடு வெண்குடை கவிசி நெடுங்கொடி

உரைசா லங்குசம் வடிவேல் வடி கயிறு

எனவிவை பிடித்த கையின னாகி

என்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி

கொடுத்தொழில் கடித்து கொற்றங் கொண்டு

நடுபுகழ் வளர்த்து நானிலம் புரக்கும்

உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன

அரசை பூதத்து அருந்திறற் கடவுளும்

செத்திறப் பசும் பொன் புரையும் மேனியன்

மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்

அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்

வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி

நாஞ் சிலும் துலாமும் ஏந்திய கையினன்

உழவுதொழி லுகவும் பழுதில் வாழ்க்கைக்

கிழவன் என்போன் கிள ரொலிச் சென்னியின்

இளம்பிறை சூடிய இனறையவன் வடிவினோர்

விளங்கொளிப் பூத வியன் பெருங் கடவுளும்

மண்ணுற திருமணி புரையு மேனியன்

ஒன்ணிறக் காழுகஞ் சேர்ந்த உடையினன்

ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்

பாடற் கமைந்த பலதுறை போகிக்

கலிகெழு கூடற் பலிபெறு பூதத்

தலைவ னென்போன் தானுந் தோன்றிக்

கோமுறை பிழைத்த நாளி லிந்தகர்

தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப

நாமுறை யாக அறிந்தன மாதலின்

யாமுரை போவ தியல்பன் றோவெனக்

கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்

நாற்பாற் பூதமும் பாற்டாற் பெயரக்

கூல மறுகும் கொடித்தேர் வீதியும்

பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்

உரக்குரங்கு உயர்த்த ஒண் சிலை உரவோன்

காவெளி யூட்டிய நாள் போற் கலங்க

அரவோர் மருங்கின் அழற்கொடி விடாது

மறவோச் சேரி மயங்கெரி மண்டக்

கறவையும் கன்றும் கனலெரி சேரா

அறவை யாயர் அகன்றெரு அடைந்தன

மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும்

விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன

-(சிலப்பதிகாரம் 22 அழற்படுகாதை)

 

இதனால் நால்வகை சாதியார் யாரார் என்பது தெரியவரும், வர்த்தகரும் உழவரும் வைசியராவார். கண்ணகியிடம் கேட்டுக்கொண்டு அக்கினித்தேவன் மதுரையை யெரித்தான், அப்போது பாண்டியனுடைய அரண்மனை வாயிலில் தீ பற்றி யெரிந்தபோது நால்வகை சாதியாரின் கடவுளர் கண்ணகியிடம் விடைபெற்றுப் போக வந்தார்கள். அவர்களில் பிராமணர்களின் தெய்வம் வேள்விக்கு வேண்டிய கருவிகளுடன் பிரம்மாவைப்போல் வந்தான். க்ஷத்திரியரின் தெய்வம் அரசனுடைய முரசுங் குடையும் கொடியும் வேலும் வடிகயிறும் கையிலேந்தி திருமாலைப்போல் வந்தான், வைசியரின் தெய்வம் அரசனின் கிரீடந் தவிர மற்ற அணிகலன்களுடன் வர்த்தகருடைய திராசும் உழவருடைய கலப்பையும் கையிலேந்தி சிவபெருமானைப் போல் வந்தான் சூத்திரரின் தெய்வம் ஆடலிலும் பாடலிலும் வல்லவனாய்க் கருமாரின் ஆயுதங்களைக் கையியேந்தி பலிபெறும் பூதங்களின் தலைவனாக வந்தான். அவர்கள் நால்வரும் பாண்டியன் முறை தவறும் நாளில் இம்மதுரை மாநகரைத் தீ முறை செய்துண்ணும் என்பதை நாங்கள் அறிவோம். ஊரைவிட்டுப் போய் விடுவது இயல்பல்லவா? என்று கண்ணகிக்கு கூறிச் சென்றார்கள். அவர்கள் போனபிறகு பண்டங்களைக் கூலாங்கூலமாக விற்கும் கடை வீதியும் கொடிக் கட்டிய தேர்ச் செல்லும் இராஜ வீதியும் நால்வகை சாதியாரின் வீதிகளும் அருச்சுனன் காண்டா வனத்தைக் கொளுத்திய நாள் போல் மக்கள் கலங்கும்படி அறவோர் பக்கம் தீ கொடி விடாமல் தீயார் சேரியைத்தான் எரித்தது. பசுக்களும் கன்றுகளும் நெருப்புக் கொடி படராத இடையர் சேரிக்குப் போய்ச் சேர்ந்தன. யானைகளும் குதிரைகளும் கோட்டை மதிலுக்கு வெளியே வந்துவிட்டன நால்வகை சாதியாரின் தெய்வங்கள் காக்காமல் போய்விட்ட பின்னரே அவர்களுடைய இருப்பிடத்தைத் தீ மண்டியது. ஆகவே குலதர்மம் கடைச்சங்க இறுதியில் அழிந்தது. எனினும் சாதிப் பாகுபாடு வேருன்றித்தான் இருக்கிறது. அது தமிழிலிருந்து ஆரியம் உண்டாகு முன்பிருந்த திராவிட நாகரீகத்தில் உண்டானது தான். அதிலிருந்து தான் முத்தமிழ் வேதம் ஆரிய வேதம் என இருவகை கோட்பாடுகளுண்டாயின. அவை விரண்டிற்கும் எல்லையாக இருப்பது திருவேங்கடம், வேங்கடத்திற்கு வடக்கே ஆரியமும் தெற்கே தமிழும் பேசி வந்ததால்தான் ஆரியம் வடமொழி யெனவும் தமிழ் தென்மொழி யெனவுங் கூறப்பட்டன.

 

வடசொற்குந் தென்சொற் தும் வாம்பிற்றாய்

நான்மறையு மற்றை நாலும்

இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையத1ய்

நல்லறத்துக் கீறாய் வேறு

புடைகற்றுத் துணையின்றிப் புகழ்பொதிந்த

மெய்யேபோற் பூத்து நின்ற

அடைசுற்றுந் தண்சார லோங்கியவேங்

கடத்திற்சென் றடைதிர் மாதே.

(கம்பராமாயணம், கிட்கிந்தா காண்டம், நாடவிட்டபடலம் 26)

 

சீதா பிராட்டியாரைத் தேடிவரும்படி அனுப்பிய வானரங்களிடம் சுக்கிரீவன், வடமொழிக்குந் தென்மொழிக்கும் எல்லையாகியும் வேதங்களும் மற்ற சாத்திரங்களும் தம்மிடைக்கூறிய எல்லாப்பொருள்களுக்கும் முடிவான பொருளாகிய நல்லறத்திற்கும் எல்லையாகப் புடை குழும் துணைகளின்றிப் புகழ் பொருந்திய உடம்பைப் போல் விளங்கும் தேன்கூடு சூழ்ந்த குளிர்ந்த மலைச் சாரலுடைய உயர்ந்த வேங் கடத்தைச் சென்று அடையுங்கள். என்றான்.

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை

வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை

வேங்கடம் என்றே விரகறி யாதவர்

தாங்கவல் லாருயிர் தாமறி பாரே

-(திருமந்திரம் 190)

 

கம்பர் வேங்கடம் ஆரியவேதமும் முத்தமிழ் வேதமுங்கூறும் நல்லறத்திற்கு முடிவாகவும் எல்லையாகவும் இருப்பதாகக் கூறினார். அப்படியிருவேறு வேடங்களுக்கெல்லையாக வேங்கடத்தை வைத்த சிவனை வேதாந்த கூத்த னெனத் திருமுலர் கூறினார். வடமொழியுந் தென்மொழியுங் கூறும் நல்லறத்திற்கு முடிவாக வேங்கடத்தை வைத்தசிவனை வேங்கடநாத னெனவும் வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தி யெனவுங் கூறினர். முடிவில் ஆரியத்திற்குந் தமிழுக்கு மெல்லையாக வேங்கடத்தை வைத்த சிவனை வேங்கடமென்றே கூறினார். இறைவன் வேங்கடத்திற்கு வடக்கே யுள்ள ஆரியத்திற்குந் தெற்கே யுள்ள தமிழுக்கும் பகையாயும் வைத்தான். இதனால் திசை மருங்கின் மன்னவ ரெல்லாம், தென்றமி ழாற்றல் காண்ருதும் யாமென எனவும் செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல், அறியாது மலைந்த ஆரிய மன்னரை எனவும் (சிலப் 26: 184-5, 27: 5.6) மொழியின் அடிப்படையில் நாட்டுப்பற்றிருந்ததைக் கூறினார். ஆகவே மொழியின் வாயிலாகத் தான் தேசிய யினங்கள் உண்டாயின, அவ்வினங்கள் தொழிலின் அடிப்படை யினால் பலச்சாதிகளைக் கொண்டவைகளாயின, சாதிகளின் குழப்பம் பாரத காலத்திலுமிருந்த தென்பதை பகவத்கீதை காட்டுகிறது.

 

அர்ஜுனன் எதிரே யணிவகுத்து நின்ற படைகளில் தம் உறவினரும் நண்பரும் குருமாரும் இருந்ததைக் கண்டு அவர்களை கொல்ல tமனம் வராமல் கண்ணனிடம், ‘பாபம் அதிகமான போது குடும்பப் பெண்கள் ஒழுக்கஞ் சிதைவார்கள், பெண்கள் கெட்டபோது சாதிக்கலப் பேற்படும். சாதிக்கலப்பு வம்சத்தை யழித்து நரகத்தில் தள்ளிடும். சாதிக் கலப்பைச் செய்யுந் தீமையினால் நெடுங்காலமாக யிருந்துவந்த குலவொழுக்கமுங் குடும்பப் பண்பாடும் அழிவதோடு வம்சமே மறைந்து விடும். கிருஷ்ணர் குடும்பக் கட்டுப்பாட்டைக் கெடுத்த மனிதன் நரகக்தில் நெடுங்காலம் அவதிப்படுவா னென்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அறிவிருந்தும் பாவகாரியத்திற்கு மனதைச் செலுத்திவிட்டோம். அரச போகத்தை விரும்பி நம் சுற்றத் தாரையே கொன்று விட முனைத்து விட்டோம். தான் நிராயுதபாணியாக யிருந்து என்னைத் திருதராஷ்டிரனுடைய மக்கள் கொன்றுவிடுவதே நல்லது என்றான். (பகவத்கீதை 1: 41-46) அவனுக்குப் பதில் சொன்னபோது கண்ணன், என் கடமையைச் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்து விடும். சாதிக்குழப்பத்திற்கும் மக்கள் அழிக்கப்படுவதற்கும் நான் ஆசிரியனாவேன். நால்வகை சாதிபார் என்னால் தான் படைக்கப்பட்டார்கள். அவரவர் குணத்திற்கேற்ப அவரவர்களுடைய தொழிலை வகுத்துக் கொடுத்தேன் என்றான். (கீதை 3.24, 4,13) ஆகவே ஆண்டவனின் முன்னேற்பாட்டினால் தான் உலகத்தில் போர்களும் பூசல்களும் நிகழ்கின்றன. காயின் தன் தம்பி ஏபிலைக் கொன்ற போதே பொறாமைக்கும் பகைமைக்கும் வித்திடப்பட்டது. காயினைத் துன்புறத்துபவன் ஏழுமுறைத் துன்புறுத்தப்படுவான் என்ற போது வினையின் விளைவிற்கு வித்திடப்பட்டது. காயின் வழியில் வந்த பாண்டியன் தேவர்களுக்குப் பகைவனென்பதாக இந்திரனுடைய கிரீடத்தை யுடைத்ததாகக் கூறப்பட்டது.

 

திங்கட் செல்வன் திருக் குலம் விளங்கச்

செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்

பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி

முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று

இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்

பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப

மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்க

-(சிலப் : 11. 23-30)

இந்திரலுடைய உடம்பு முழுதும் கண்ணை யுண்டாக்கியவன் சிவன், அகனால் இந்திரனுடைய முடியை யுடைத்தவனுஞ் சிவனே யாவான், முருகன் பிறந்தபோது அவனைக் கொல்ல முயன்ற இந்திரன் மனிதவர்க்கத்தை யடியோடு கொல்ல மழை பெய்யாமற் செய்த போது இறைவன் மழை பெய்விக்கும் வழியைக் கற்றுக்கொடுக்கத் தமிழைப் படைத்தான். அதனால் அத்தமிழை வளர்த்த பாண்டியனை மழை பிடித்துவந்தாண்ட மன்னனாகக் கூறினார் இளங்கோவடிகள். இப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோட்டென்னவன் (சிலப். படர்க்கை பரவல் 3.11.2) என்றார். இடிப்படை வானவனான இந்திரனுடைய தலை முடியை யுடைத்தத் தொடியைத் தோளிலணிந்தவன் பாண்டியன். அதேபோல் அசுரர்களின் முப்புரத்தை யுடைத்த தொடியைத் தோளி லணிந்தவன் சோழன், தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் (மணி 1:4), ஆகவே அசுரர்களுக்குப் பகைவனாகச் சோழர் திரிபுரமெரித்ததாகக் கூறப்பட்டது.

வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப

எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும்

குறுநடைப் புரவின் நெடுந்துயர் தீர

எறிதரு பருந்தின் இடும்பை நீங்க

அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்

திரிந்துவே றாதங் காலமு முண்டோ

(சிலப் 27: 164.9)

புறவின் அல்லல் சொல்லிய கறையடி

யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்

கோனிறை தலாஅம் புககோன் மருக

ஈதல்நின் புகழும் அன்றே சார்தல்

ஒன்னார் உட்குந் துன்னருங் கடுந்திறல்

தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்

அடுதல்நின் புகமும் அன்றே

-(புறநானூறு 39: 1-7)

மாறோக்கத்து நப்பாலையார் கிள்ளிவளவனிடம் புறாவின் அல்லலைத் தீர்க்க யானைத் தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்டக் கோல் கொண்ட தராசின் தட்டில் புகுந்து அப்புறாவின் எடைக்குத் தன் சதையை யறுத்துப் பருந்திற்குக் கொடுத்தச் சிவிச்சக்கரவர்த்தியின் மரபில் வந்தோய்! அதனால் ஈதல் உனது புகழும் அல்ல. பகைவர் நெருங்கப் பயப்படும்படி பலங்கொண்டதாய் ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் அவுணர்களின் கோட்டை மதில்களை யுடைத்தெறிந்த நின் முன்னோரை நினைத்தால் போரில் வென்றது நினது புகழும் அல்ல. என்றார். சோழனின் முன்னோன் சிவனானதால் தான் சிவன் உடைத்த முப்பு ரத்தைச் செம்பியன் உடைத்ததாகக் கூறப்பட்டது. அச்சிவன் அக்கினியின் அவதாரத்தால் முக்கண்ணன் எரியும் பெய்து திரிபுர மெரித்ததாதக் கூறப்பட்டது. யூதர்களின் கடவுள் ஜெகோ வாவும் (Jahovah) அக்கினி சொரூபந்தான். அவன் மோசஸுக்கு அக்கினி மயமாகத்தான் காட்சித் தந்தான். இஸ்ரேலின் குடும்பம் வென்றுதான் அழைக்கப்பட்டது. மனுநீதி சோழன் வழியில் வந்த மன்னன் என்பதாகத் தமிழில் மன்னா வென்று அழைக்கப்பட்டதாகும். இஸ்ரேலின் சந்ததியாரான யூதர்கள் இரவி குலத்தவரானதால் அவர்களுடைய குடும்பத்தை ரபி (Robbi) எனவும் அழைக்கப்பட்டது, அந்த இரவி குலத்தில் வந்த சோழர்களின் குலத்தெய்வம் இமயத்தில் பிறந்த சம்பு என்பாள். சோழனுடைய நாட்டை பாண்டியன் பிடித்த பின் சோழனுடைய நாடு தென்றிசையில் சிறுநிலமாயிற்று. அப்போது சம்பு அவனே தென்றிசை வந்து அவனுடைய புகாரைக் காத்ததால் அந்நகரம் சம்பாபதி யெனப் பேர் பெற்றது. செம்பியன் இந்தியா முழுவதும் ஆண்ட காலத்தில் சம்பு காத்ததால் இந்தியாவிற்குச் சம்புத் தீவு என்று பெயர் வழங்கியது. சம்புத் தீவுனுள் தமிழக மருங்கில் (மணி 17:62) சம்புத் தீவின் தமிழாக்கம் நாவலந்தண் (மணி 25:12) நாவலந்தண் பொழில் (மணி 22:20 சிலப் 17: 3, 25, 173 பெரும் 465. பரி 5:8) இப்பெயர்களை கல்வெட்டுகளிலும் காணலாம். காஞ்சியில் வரதராஜர் கோயில் கல்வெட்டொன்றில் னாவலப் பெருந்தீவு யென்று வரையப்பட்டிருக்கிறது. மடவளாகம் ஈசுவரன் கோயிற் கல்வெட்டில், செம்பித் தீபுவப் புறத கண்டத்தில் என எழுதப்பட்டிருக்கிறது. சங்க காலத்திலும் இந்தியாவிற்குப் பரதம் எனப்பெயர் வழங்கியது. ‘பாடல்சரில் சிறப்பிற் பாகத் தோய்கிய (மணி. பதிகம் 22) பாண்டியர் வந்து பிடித்தபின் இந்தியாவிற்குப் பரதம் எனப்பெயர் வழங்கியதாகும். கடவில் மீன் பிடித்து வாழ்பவர் மீனவர், பரதர் எனப்படுவார். பாண்டியன் கடலில் வந்ததால் மீனவன் எனவும் பரதவன் எனவும் அழைக்கப்பட்டான்‘ மாங்குடி மருதனார் பாண்டியன் நெடுந்செழியணை தென்பரதனர் போரேறே என்றார் (மதுரைக் காஞ்சி 144) தென்னாட்டில் பரதவர்க்குப் போர்த்தொழிலைக் கற்றுக்கொடுத்த சிங்கம் நெடுஞ்செழிய னென்றதால் அவனுடைய சேனைக்குப் பரதவர் எனப் பேர் வழங்கியது தெரியவரும். ஊன்பொதி பசுங்குடையார் சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி தன் பரதவர் மிடல் சாய்த்ததாக்க் கூறினார், (புறநானூறு 378). ஆகவே பாண்டியன் சேனைத் தென் பரதவர் எனப்பட்டார்களென்பதில் ஐயமில்லை. அப்பாண்டியனின் முன்னோரான பாண்டவரும் பரத குலத்தவராகக் கூறப்பட்டது. வால்மீகி இராமாயணத்தில் பாண்டியனுடைய தலைநகரம் தாமிபரபரணி நதிக்கரையில் இருந்தகாகக் கூறப்பட்டது. அதில் கபர்டம் பாண்டியானாம் என்றதால் கபாடபுரத்தில் இருந்த இரண்டாவது தமிழ்ச் சங்கம் இந்தியாவில் தென்னாட்டில்தான் இநந்தது. முதற் சங்கம் 4440 ஆண்டுகளும் இரண்டரவது சங்கம் 3700 ஆண்டுகளும் மூன்றாவது சங்கம் 1850 ஆண்டுகளுமாக மூன்று சங்கங்களும் தொடர்ந்து 9990 ஆண்டுகள் இருந்து வந்தன. கடைச் சங்க முடிந்த போதுதான் சாலிலாகன சக ஆண்டு ஆரம்பமாயிற்று. அதனால் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதற் சங்கம் ஆரம்பமானது. ஏறக்குறைய 7500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் இந்தியாவிற்கு வந்த பிறகு தான் சிந்து சமவெளி நாகரீகம் உண்டானது. அப்பாண்டியனோடு வந்தவர்களே சங்கக்கால வேளிகள்.

 

 

 

 

  • ••

 

 

 

 

 

  1. வடபால் முனிவன் யாகத்தில் தோன்றிய வேளிரி

இவரியா ரென்குவை யாயி னிவரே

ஊருட விரவலர்க் கருளித் தேருடன்

முல்லைக் கீத்த செல்லா நல்வீரைப்

படுமணி யானைப் பறம்பிற் கோமான்

நெடுமாப் பாரி மகளிர் யானே

தந்தை தோழ னிவரென மகளிர்

அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே

தீயே, வடபான் முனிவன் நடவினுட் டோன்றிச்

செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை

உவரா விகைத் துவரை யாண்டு

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்

தாரணி யானைச் சேட்டிருங் கோவே

ஆண் கட னுடைமையிற் பாண்கட னாற்றிய

ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்

யான்றா விவரைக் கொண்மதி வான் கவித்

திருங்கட லுடுத்தவில் வையகத் தருந்திறற்

பொன்படு மால்வரைக் கிழவ வன்வேல்

உடலுந ருட்குந் தானைக்

கெடலருங் குரைய நாடு கிழ வோயே.

-(புறநானூறு 201)

பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது. இப்பாட்டால் கடைச்சங்க காலத்திலிருந்த வேளிர் வடப் பக்கம் இமயத்தில் தவமிருந்த் சம்பு முனிவரின் யாகத்தில் தோன்றிய வன்னியர் என்பதும் அவர்கள் இரண்டாவது சங்க காலத்திலிருந்த துவரைக்கோமானின் சந்ததியா ரென்பதும் அறிகிறோம். டாக்டர் உ. வே. சுவாமிநானாதைய்யர், கூறியதாவது : துவரை மைஸூரைச்சார்ந்த துவாரஸமுத்திரமென்னும் நகரம்; இந்தகரில் அரசர் பதினெண்மரும் பதினெண்குடி வேளிரும் இருந்தன ரென்றும், அவர்களை அகத்தியமுனிவர் அழைத்துப். போந்து பல இடத்தும் தாபித்தனரென்றும், அவர்களுள் இருங்கோவேள் சிற்றர்சனென்றும் தெரிகின்றது. இதனை, துவாரபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்…. கொண்டு போந்து, மலையமாதவன் நிலங்கடந்த நெடிமுடி யண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண் வகைக்குடிப் பிறந்த வேளிர் (தொல் பாயிரம் அகத்திணை. சூ.32, என வரும் நச்சினர்க்கினியர் வாக்கியங்களால் உணர்க, என்றார். நச்சினார்க்கினியர் வாக்கியங்களால் பாண்டியனோடு வேளிரையும் அகத்தியர் அழைத்து வந்தார் என்பதை யறியலாம். மலையமாதவன்-மலையில் தவமிருந்த அகத்தியன். நெடுமுடி அண்ணலுழை நரபதியர் – திருமாலின் வழியில் வந்த பாண்டியர் முச்சங்க வரலாற்று அகவற்பாவில், பாண்டிய நரபதிகளாகு நாற்பத் தொன்பதின்மர் என்றதால் நச்சினார்க்கினியர் நரபதிகள் என்றது பாண்டியரைத்தாம். நரர் மானிடர், பதி – அரசன், நரபதி – மக்களுக்கு அரசனான பாண்டியன். பாண்டியன் தன் நாட்டைக் கடல் விழுங்கிய போது இந்தியாவிற்கு வந்து சேர சோழர் நாட்டைப் பிடித்துக்கொண்ட பிறகுதான் தமிழிலிருந்து சமஸ்கிருதம் உண்டாகி பதினெட்டு மொழியினங்கள் உண்டாகி பதினெட்டு மொழியினங்கள் உண்டாயின. அப்பதினெட்டு மொழியில் வேறுபட்ட நாடுகளிலும் வேளிர் அரசு புரிந்ததால் பதினெண்குடி வேளிரை நரபதியுடன் மலையமாதவன் கொண்டு வந்ததாக நச்சினார்க்கினயர் கூறினார். அவ்வேளிர்களில் துவரையாண்ட சந்ததியார் சங்க காலத்தில் தமிழயகத்திலிருந்த வேளி்ர்கள், அவர்களில் ஒருவன் இருங்கோவேள். அவனிடம் பாரியின் மகளிரை மணந்து கொள்ளும்படி கேட்டு புறநானூற்று 201வது பாடலப் பாடிய கபிலர் அவன் பாரி மகளிரை மணக்க விரும்பாத போது புறநானூற்று 202 பாடலை பாடினார். இவ்விரு பாக்களிலும் அவனை ஒலியற் காண்ணிப் புலிகடி மாஅல் என விளித்தார், இதற்கு ஒலிக்குந் தன்மை வாய்ந்த மாலை வழியில் வந்தவன் இருங்கோவேன் என்பது பொருள். அகத்தியர் பாண்டியனோடு கொண்டு வந்த வேளிர் சோழனை வென்றதால் அவ்வேளிர்களின் வழியில் வந்த இருங்கோவேளைப் புலிகடிமாஅல் எனக் கபிலர் கூறினார். ஓர் அரசன் செய்த அருஞ்செயலை அவன் சந்ததியாரும் செய்ததாகக் கூறுவது கவி மரபு. சங்கப்புலவர்கள் அரசனேக் கரிக்குங் கடவுளான திருமால் வழியில் வந்தவனாக நெடியோன் உம்பல் எனவும் ல் எனவும் கூறினார்கள். அந்த முறையில் கபிலர் இருங்கோவேளை மாஅல் (திருமால்) என்றார். இளங்கோவடிகள் பாண்டியன், சோழன், சேரன் என்றும் மூவேந்தரையும் திருமாலாக வரும் பாக்களித் கூறினார்.

கோவா மலையாரம் கோத்த கடலாரம்

தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே

தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்

கோகுல மேய்த்துக் குருத்தொசித்தா னென்பரால்

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணுண்டான்

மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்

மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்

பொன்னத் திகிரிப் பொருபடையா னென்பரால்

முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான்

மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்

மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்

கன்னவில்தோ ளோச்சிக் கடல்கடைத்தா னென்பரால்

-(சிலப்பதிகாரம் 17, ஆய்ச்சியர் குரவை, உள்வரி வாழ்த்து)

பாண்டியனைக் கோகுலத்தில் இருந்த மரத்தை யொடித்த கண்ணன் என்பார்கள். சோழனை அழகிய சக்கராயுதத்தை யுடைய திருமால் என்பார்கள். சேரனைக் கடனில் அமிர்தம் கடைந்த திருமால் என்பார்கள் என்றார் இளங்கோ. ஆகவே, கபிலர் இருங்கோவேளைப் புலிக்கடி மாஅல் என்றது. அவன் புலிக்கொடி கொண்ட சேர்மனைக் கடிந்த திருமால் என்பதாக, ஆனால் டாக்டர் உ. வே. சுவாயிநானதைய்யர் தபங்கரென்னு முனிவர் ஒருகாட்டில் தவஞ்செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்வதற்கு நெருங்க, அதுகண்ட அம்முனிவர் அங்கு நோக்கி ஹொய்லுள என்று கூற, அவன் அப்புலியைத் தன் அம்பால் எய்து கடித்தமையால் ஹொய்ஸளனென்றும் புளிகடிமாலென்றும் வழங்கப்பட்டா னென்று சிலர் கூறுவர்; சசகபுரத்தையடுத்த காட்டிலுள்ள தன் குல தேவதையான வாஸந்திகா தேவியைச் சளனென்னும் அரசன் வணங்க சென்றபோது, புலியால் தடுக்கப்பட்டு வருந்துகையில், அக்கோயிலிருந்த பெரியவர் அவனை நோக்கி ‘ஹொய்ஸன’ என்று கூறி ஓர் இரும்புக் தடியை அருள, அவன் அதுகொண்டு அதனைக் கொன்றமை பற்றி ‘ஹொய்ஸளன்’ என்றும், புலிகடிமால் என்றும் பெயர்பெற்றன. வென்று வேறு சிலர் கூறுவர் என்றார். இக்கதைகளிற் கூறப்பட்ட ஹொய்ஸளனுக்கும் கபிலர் கூறிய புலிகடிமாலுக்கும் சம்பந்தமில்லை. அவர் கூறிய துவரைக்கும் மைசூரைச் சேர்ந்த துவாரசமுத்திரந்திற்குங் கூட சம்மந்தமில்லை. ஆனால் நச்சினார்க்கினியர் கூறிய துவரா பத்யை இளங்கோவடிகள் துவரை யென்றதால் அதற்கும் கபிலர் கூறிய துவரைக்குஞ் சம்பந்தமிருக்கிறது. அத்துவரையில் கோகுல மேய்த்துக் குருந்தொசித்த கண்ணனை ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த, பூவைப் புதுமலர் வண்ணன்’ (சிலப் 16: 48-7) என்றார் இளங்கோ. கண்ணன் பிறந்த ஆயர்குலம் பாண்டியனுவடைய குடியோடு தோன்றியதாகச் சோழன் நல்லுருந்திரன் வருமடிகளிற்கூறினான்.

மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வெளவலின்

மெல்வின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்

புலியோடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வடாச்சீர்த் தென்னவன்

தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய

நல்லினத்து ஆயர்.

-(கலித் 104, 1-6)

அரைகபடக் கடந்தட் டாற்றில் தந்த

முரைககெழு முதுகுடி முரண்மிகு செல்வற்குச்

சீர்மிக சிறப்பினேன் தொல்குடிக் குரித்தெனப்

பார்வளர் முத்தமொடு படுகடல் பயந்த

ஆர்கலி உவகையர் ஒருங்குடன் கூடித்

தீதின்று பொலிகவெனத் தெய்வக்கடி யயர்மார்

விவில் குடிப்பின் நிருங்குடி ஆயரும்

-(கலித், 105, 1-7)

ஆயர்கள் பாண்டியனுடைய குடியோடு தோன்றியவர்களான தால் ஆயர் குலத்துதித்த சுபத்திரையைப் பாண்டியர்னுடைய பரத குலத்திற் பிறத்த அர்ச்சுணன் மணந்தாள். ஆயர்கள் அரசர்களுக்குப் பெண் கொடுக்கப் பொதுவானவர்களானதால் பொதுவர் எனப்பட்டார்கள். (கலி 101, 134 107, 111, 112) துவரையாண்ட ஆயர்களின் குடியேடு தோன்றியவர் வேளிரானதால் கடியலூர் உருத்திரங் கண்ணார் வருமடிகளில் இருங்கோவேளைச் சேர்ந்த வேளிரைப் பொதுவர் என்றார்.

 

மாத்தாளை மறமொய்ம்பிற்

செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப்

புன்பொதுவர் வழிபொன்ற

விருங்கோவேண் மருங்குசாய

-(பட்டி, 279.82)

கரிகாற்சோழன் சிறந்த சேனைகளுடன் வீர மிகுந்த பலத்துடன் கண்கள் சிவக்கச் சினங்கொண் டுற்றுநோக்கிப் புன்பொதுவரான வேளிர்களின் கிளை முழுதுங் கெடும்படி இருங்கோவேளைச் சார்ந்தவர்களை யழித்தான். புன்பொதுவர் வழிபொன்ற-புல்லிய இடையராய் அரசாள்வோர்கிளை முழுதுங் கெட்டுப் போக (நச்சினார்க்கினியர் உரை) கடியலூர் உருந்திரங் கண்ணனார் வேளிரைப் புன்பொதுவர் என்றது போல் சோழன் நல்லுருத்திரன் இடையர்களைப் புல்லினத்தாயர் என்றான். (கலிக். 103.110 113.115) பல்லவர்களில் ஒரு சாரார் பரத் வாஜர் கோத்திரங் கொண்டதுபோல் வடபால் முனிவன் யாகத்திற் றோன்றி துவரை யாண்ட வம்சத்தின் இடையில் யதுவென்ற அரசன் வழியில் வந்த ஆயர் யதுகுலத்தவரெனவும் இடைக்குலத்தவர் எனவும் கூறப்பட்டார்கள். இடைக் குகல்மடைந்தை (சிலப் 15 :30.  16 :2) ஆ-பசு அவர்கள் பசுக்களை வளர்த்ததால் ஆயுர் எனப்பட்டார்கள், பகைவருடைய ஆக்களைக் கவர்ந்து வருதல் அரசர்களின் குலத் தொழிலாகப் புறப்பொருள் இலக்கணங் கூறுவதால் ஆக்கள் வைத்திருந்த ஆயர்கள் அரசவம்சத்தவரே யாவார், யாதவர் தேவகிரியில் கோட்டைக் கட்டி அரசாண்டார்கள், அக்கோட்டையின் அண்மையில் எல்லோர குகைகளைக் குடைந்தவர்களும் யாதவ மன்னர்களே யாவார். அக்குகைகளின் சிற்பங்கள் பல்லவர்களுடைய பாணியிலிருப்பதால் அவர்கள் பல்லவரின் ஒரு வகுப்பாரே யாவார். இருக்கு வேதம் க்ஷத்திரிய வம்சத்தை இராஜன்யயெனக் கூறுகிறது. இராஜன்ய புல்லாங் குழலூதியதாக சதபாத பிராமணன் கூறுகிறது. ஆகவே குழலூது மாயர்கள் க்ஷத்திரிய ரென்பது தேற்றம். அவர்களையும் துவாரை யாண்ட சந்ததியாரான வேளிரையும் பொதுவர் எனச் சங்கப் புலவர்கள் கூறியதால் ஆயரும் வேளிரும் க்ஷத்திரிய ரானதால் முடியுடைய வேந்தர் மூவர்க்கும் பெண் கொடுக்கப் பொதுவானவ ரென்பதைச் சங்கப் புலவர்கள் அறிந்திருந்தமை தேற்றம். இருங்கோவேளைத் தலைமையாகக் கொண்ட பதினொரு புன்பொதுவர்கள் கரிகாலனோடு போரிட்டுத் தோற்றார்க களென்பதைப் பரணர் பாடிய வருமடிகளால் அறியலாம்.

 

போதார் கூந்தல் நீவெய் யோளொடு

தாதார் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு

ஆடினை யென்ப நெருறை அலரே

காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர் கரிகால்

ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்

சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்

இமிழிசை முரசம் பொருகளத் தொழியப்

பதினொரு வேளிரோடு வேந்தர் சாய

மொய்வலி யறுத்த ஞான்றைத்

தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.

-(அகப் 247: 7-14)

வெண்ணிவாயில் என்னுமிடத்தில் கரிகாலனேடு போரிட்டுத் தோற்ற இரு பெரும் வேந்தர்களோடு பதினோரு வேளிர்களிலும் ஒருவன் இருங்கோவேள், அவன் தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ் செழியனோடு போரிட்டுத் தோற்ற இரும்பெரும் வேந்தர்களோடு ஐந்து வேளிர்களில் ஒருவன் என்பதை நக்கீரர் பாடிய வருமடிகளரால் அறியலாம்.

திருமரு தோங்கிய விரியலர்க் காவின்

நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு

வதுவை யயர்ந்தனை யென்ப அலரே

கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்

ஆலங் கானத் தகன்றலை சிவப்பச்

சேரால் செம்பியன் சினங்கொழு திதியன்

போர்வல் பசப் பொலம் பூண் எழினி

நாரரி நறவின் எருமை யூரன்

தேங் கமழ் அகலத்துப் புலர்த்த சாந்தின்

இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநனென்

றெழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்

முரசொடு வெண்குடை அகப்படுத் துரைசெலக்

கொன்றுகளம் வேட்ட ஞான்றை

வென்றிகொள் விரர் ஆர்ப்பினும் பெரிதே.

-(அகம் 36 : 10-23)

பரணர் தலைவன் வேறெத்தியோடு ஆற்றில் விளையாடினானென்ற ஊரலர் கரிகாலன் வேந்தரையும் பதினோரு வேளிரையும் வெண்ணி வாயிலில் வென்றபோது அழுந்தூர் ஆவாரத்தினும் பெரிதென்றார். நக்கீரர் தலைவன் வேறொருந்தியை வதுவை செய்தா னென்ற ஊரலர் நெடுஞ்செழியன் இருபெரு வேந்தாரையும் ஐம்பெரு வேளிரையும் ஆலங்கானத்தில் வென்றி போது அவனுடைய வீரர்கள் ஆரவாரத்தை விடப் பெரிதென்றார். உருத்திரங்கண்ணனார் கரிகாலன் பதினொரு வேளிரை வென்ற போதிலும் இருங்கோவேண் மருங்கு சாய வென்றது. வெளிர்களுக்குத் தலைவன் இருங்கோவேள் என்பதைக் காட்டுகிறது. அதனால் தான் கபிலரும் அவனே, வேளிருள் வேளே விறற்போ ரண்ணல் என்றார். இரும்-பெரிய, கோ-அரசன். அவன் பெரிய அரசனாக இருந்ததால் தான் இருங்கோவேள் என்று அழைக்கப்பட்டான். அவனுடைய சந்ததியாரும் இருங்கோவேள் என்ற பட்டத்தைக் கொண்டார்களெனத் தெரிகிறது. திரு. து. அ. கோபிநாத ராவ், அரசர்களும் அவர்களைச் சார்ந்த உறவினரும் அகத்தில் ஒற்றி, காரி, கிள்ளி, இருக்கு வேள் என்பன போன்ற பழந்தமிழ்ப்பெயர் தரித்திருத்தல் வழக்கம். ஆயின் உத்தியோகமுறைமையிற் பராந்தகன், இராஜராஜன் இராஜாதித்தன் என்னும் வடமொழிப்பெயர்களைத் தரிப்பார்கள் என்றார். இருங்கோவேள் என்பது இருக்குவேள் என விகாரமாயிற்று. புதுவைக் கடுத்த வில்லவனல்லூர் அக்கினி வம்ஸ க்ஷத்திரியராகிய வன்னியர் மடாலய சாஸனம், வடகரை விருதப்பசங்கன் வளநாட்டுக்கு மேற்கு நாடு இருங்கோள் எனக் கூறுகிறது. இருங்கோவேன் நாடு இருங்கோள் எனப்பட்டதாகத் தெரிகிறது. அவன் வடபால் முனிவன் யாகத்திற் றோன்றிய வம்சத்தவனாகக் கபிலர் கூறியதால் வன்னியர் மடாலய சாஸனத்தில் அவனுடைய நாடு கூறப்பட்டதாக தோன்றுகிறது.

 

பாரியின் மகளிரை மணந்து கொள்ளும்படி கேட்டுக் புறநானூற்று 201 வது பாடலைப் பாடிய கபிலர் இருங்கோவேள் இசையாத போது புறநானூற்று 202 வது பாடலைப் பாடினார். அதில் அவர் அவனிடம்,

தும்போ லறிவி னுமரு னொருவன்

புகழ்ந்த செய்யுட் கழா அந் தலையை

இகழ்ந்ததன் பயனே யியறே ரண்ணல்

எவ்வி தொல்குடிப் படிஇயர்? என்றார்.

இதனால் எவ்வி வடபால் முனிவன் தடவினுட் டோன்றிய வேளிருள் ஒருவனென்பது தெரிகிறது. ஆனால் டாக்டர் உ. வே. சுவாமி நானதையார் வேள் எவ்வி.இவன் வேளாளருன் உழுவித்துண்போர் வகையினன் என்றார். நச்சிகின்னார்க்கினயிர் வேளாளர் உழுவித் துண்போரும், உழுதுண்போருமென இருவகையினர் உழுவித் துண்போர் மண்டிலமாக்ககளும், தண்டத் தலைவருமாய்ச் சோழ நாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரு முதலிய பதியிற்றோன்றி வேளெனவும், அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடிக்குடிப் பிறந்தோர் முதலியோருடாய் முடியுடைவேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளராம் என்றார்.  (தொல் அகத்திணை சூ. 30) விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு பெற்றுண்ணுங் குறுநில மன்னரை உழுவித்துண்போர் என்றார். அவர்கள் முடியுடை மூவேந்தர்க்கும் பெண் கொடுக்க உரிமையுடையவர்களானதால் அவர்களை மூவேந்த வேளண் எனக் கல்வெட்டுகளிற் கூறப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிற் கல்வெட்டில், ‘இத்திருப்பள்ளித் தாமம் திருத் தொங்கலாக செய்து திருவஞ்சாமா காலத்திலே சாத்தவும் இப்படிக்கித் திருமாளிகையிலே கல்வெட்டவும் கடவதாக வெணு மென்று தொண்டமான்தான் நமக்குச் சொன்னமையில் இப்படி செய்ய பண்ணுவது யெழுதிநான் திருமந்திர ஓலை பண்ணவன் மூவேந்த வேளை நார தென்றும் இப்படித் திருவாய் மொழிந்தருளிதார்  பெயர்களும் கூறப்பட்டிருக்கின்றன. இன்னொரு கல்வெட்டில் இப்படிக்கி திருமாளி கையிலே கல்வெட்டவும் கடவதாகப் பெறவெணு மென்று காலிங்கராயன் நமக்குச் சொன்னமையில் இப்படி செய்பக் கடவதாக சொன்னோம். இப்படி செய்யப் பண்னுவது யெழுதினான். திருமந்திர ஓலை நெரியுடைய சோழ முவெந்த வெளா றென்னும் இப்படி திருவாய் மொழிற்தருள்தார். பெயர்களைக் கூறியிருக்கின்றன. திருவொற்றியூர் தியாகராஜர் கோயிற் கல்வெட்டுகளில், இன்னிலம் முப்பத்தெட்டாவது முதல் அந்தறாயம் பாட்டம் உள்பட இறையிலியாக கைக் கொள்க எழுதினான். திருமந்திர ஒலி நெறியுடைச் சோழ முவெந்த வெளாண் எழுத்து, வில்லவறாயன் எழுத்து. தொண்டைமான் எழுத்து (வி( (அ) ழிஞத் தரையன் எழுத்து. இராச திறாச விழுப்பதறையன் எழுத்து சிந்தரையன் எழுத்து என எழுதியிருக்கிறது. இன்னொரு கல்வெட்டில், இன்னிலம் இருபத்தெழாவது முதல் தெவதான இறையிலியாகக் கைக் கொண்டு நிமந்தஞ் செலுத்த பண்ணுக எழுதினான். திருந்திர ஓலை மீனவன் முவெந்த வெளான், இவை பல்லவராயன் எழுத்து, இவை விழுமுத்தறையன் எழுத்து. இவை விழுப்பதறாயன் எழுத்து. இவை சிங்களறாயன் எழுத்து. இவை தொண்ட(மா)ன் எழுத்து. இவை வங்களறாயன் எழுத்து இவை செதிருல றாயன் எழுத்து. இவை நிலந்துக்கையன் எழுத்து என எழுதியிருக்கிறது. இவைகளால் கல்வெட்டச் சொன்னவர்கள் குறுநில மன்னர்களென்பதும் அவர்களுடைய கட்டளைகளைக்  கேட்டு எழுதும் திருமந்திர ஓலை  மூவேந்த வேளாண் என்றது தெரிகிறது. அரசாங்க அதிகாரிகளை மூவேந்த வேளாண் என அழைத்தார்கள், அருமொழி மூவேந்த வேளார் வெண் குன்றக் கோட்டத்துப் பெருமண்டை நாட்டு பெரு மண்டையிருந்து ஊர்களை வினவா விருக்க (Ep. An. kep, for 1903-4 No 221 of 1904) ‘அதிகாரிகள் சோழ மண்டலத்துப் பாண்டி குலாசனி வளநாட்டுப் புறக்கிளியூர் நாட்டு புலாங்குடையார் பூரன் ஆதித்த தேவனாரான ராஜ ராஜேந்திர மூவேந்த வேளாரும் ஜேநாபதி உய்யக்கொண்ட வளநாட்டு திரைமூர் நாட்டு நாடார் கிழான் ராஜ ராஜன் பரநிருபரர்க்கதரான வீர சோழ இளங்கோ வேளாரும் எயிற் கோட்டத்து எயில் நாட்டு நகரம் காஞ்சிபுரத்துத் திருமயானமுடையார்…. தேவதானமான ஊர்கள் கணக்கு கேட்டு (S.I.I. Vol. III P 115) அதிகாரிகள் சோழ மூவேந்த வேளாரும் நடந்திருக்கக் கூட்டங் குறை வறக் கூடியிருந்து பணியாற்ற பணித்த எழுத்து, (S I.1 Vol. III 179) திருமந்திர ஓலை நாயகனைச் சோழ மூவேந்த வேளாண் என்றதால் வன்னியர்க்கும் வேளாண், வேளார் எனக் குடிப் பெயர் வழங்கியது தெரிகிறது. வேள் உபகாரி, வேளாள னென்பான் விருந்திருக்க உண்ணாதான் (திரிகடுகம் 12:2)} பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னா (இன்னா நாற்பது 37:1) (இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மை  செய்தற் பொருட்டு (திருக்குறள்) வேளாண்மை வேள்வியோ டொப்ப உள, எருதுடையான் உளவரும் விருந்தோம்பி வேளான்மை செய்வால் வேளாளர் என்ற குடிப்பெயர் கொண்டார். குறுநில மன்னர்கள் புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் பொருளுதவியதால் வேளாளர் என அழைக்கப்பட்டார்கள். பெருஞ்சித்திரனார் வெளிமானின் தம்பி சிறிது கொடுத்த போது, அருகிற் கண்டும் அரியார் போல அகனக வாரா முகனழி பரிசில், தாளிலாளர் வேளார் அல்லர் (புறம் 207:2-5) என்று பாடினார். முருகவேளும் பக்தர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பவனானதால் ‘நெடுவேள்’ எனப்பட்டான். பரிசிலர் தாங்கு முருகெழு தெடுவேள் (முருகு 273) அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி, வெறிகமழ் நெடுவேள் நல்குவன் எளினே” (அகம் 98:26.7) வெறிபடிய காமக்கண்ணியார் அறிஞர்கள் அடைந்த துன்பத்தைக் கண்டு அருள் கூர்ந்து அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பவன் கந்தவேள் என்றார். அவர், நெடுவேட் பேணத் தணிகுவள் இவள் (அகம் 22:6) எனவுங் கூறினா். முருகனைப் போல் குறுநில மன்னர்களும் உபகாரஞ் செய்ததால் வேளிர் எனப் பேர் பெற்றார்கள். அவர்கள் மூவேந்தர்க்குப் பெண் கொடுக்க உரிமை பூண்டவர்களானதால் மூவேந்த வேளார் எனப்பட்டார்கள். கரிகாற் சோழனின் தாயார் அழுந்தூர் வேளின் மகள் அவன் தாய் வயிற்றிலிருக்கும்போதே தந்தையை இழந்ததால் தாய் வீட்டில் வளர்ந்தான். அதனால் அவன் பகைவரை வெண்ணிவாயிலில் வென்ற போது அழுந்தூர் ஆரவாரித்ததாகப் பரணர் கூறினார்.

 

தான்முன்னிய துறைபோகலிற்

பல்லொளியர் பணிபொடுங்கற்

தொல்லருவாளர் தொழில்கேட்ப

வடவர் வாடல் குடவர் கூம்பத்

தென்னவன் நிற்ல்கெடச் சீறி மன்னர்

மன்னெயில் கதுவு மதனுடைய நோன்றாள்.

-(பட்டினப் 273 – 8)

கரிகாலன் தான் நினைத்ததைச் செய்யும் ஆற்றலுடையவனானதால் பல ஒளியர் அவனுக்குப் பணிந்து வணங்கியதாகவும் தொன்மையான அருவாளர் அவனிட்ட பணி புரிந்ததாகவும் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறினார். ஆனால் திரு. V. கனகசபை பிள்ளை, கரிகாலன் அருவாளரை வென்று அவர்களுடைய நாடுகளைத் தன் நாட்டோடு சேர்த்தான். அவன் பிடித்த நிலத்தை வேளாளர் பங்கிட்டுக் கொடுத்தான். அத்தலைவர்களின் அந்நிலங்களை வைத்திருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் ஜமீன்தார்களாக விருக்கிறார்கள். (செங்கற்பட்டு ஜில்லாவில் செய்யார், சூனாம்பேடு ஜமீன்தார்கள்) அவர்கள் முதலியார் அல்லது முதல் ஜாதியென்று அறியப்படுவார்கள். வடுகம் அல்லது தற்கால தெலுங்கு நாட்டை வென்ற வேளாளர் வெளமா வென்றழைக்கப்படுவார்கள். அங்கே பெரிய ஜமீன்தார்கள் இன்றும் வெளமா சாதியைச் சேர்ந்தவர்கள். கன்னட ராஜ்ஜியத்தில் வேளாளர் பெல்லால் இராஜ்ஜியத்தைக் கண்டுபிடித்துப் பல நூற்றாண்டுகள் ஆண்டு வந்தார்கள் என்றார். இதேபோல் சரித்திரத்தைத் திரித்து திரு.எஸ். வையாபுரிப் பிள்ளை திருவெண்ணெய் நல்லூர் மன்னன் சடையப்ப வள்ளலை, ‘முதலியார் பரம்பரைச்செல்வராயுள்ள வேளாளர் குலத்தில் தோன்றியவர். இவர் தந்தையார் சங்கர முதலியார் என்பவர். தமிழிலக்கிய வுலகத்திலே சக்கரவர்த்தியாராய் விளங்கிய ஒட்டக்கூத்தர் தமது இளமைப் பருவத்தில் இச்சங்கர முதலியாரிடம் உதவித் தொழில் புரிந்து வந்தார்  என்று செவிவழிச் செய்தி கூறும் என்றார். (தமிழ்ப் பாட நூல், ஒன்பதாம் வகுப்பு 1970 செவிவழிச் செய்தியாகவே சொல்லி வருவதைக் கொண்டு சாதியைக் குறித்தும் பலர் பலவிதமாக யெழுதிவருவது கண்கூடு, கம்பர் தம்மை ஆதரித்த மன்னன் சடையனை இராமயாணத்தில் பலப் பாக்களில் புகழ்ந்து பாடினார்.

அரியணை யறுமன் தாங்க வங்கத னுடைவாள் பற்றப்

பாதன் வெண்குடை கவிக்க விருவருங் கவரி வீச

வீரைசெறி கமலத் தான்சேர் வெண்ணெய்மன் சடையன்

தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைத்தான் மெளிலி

-(கம்பராமாயணம், திருமுடிகுட்டுபடலம் 38)

அனுமன் சிங்காதனத்தைத் தாங்கவும் அங்கதன் உடைவாளைப் பிடிக்கவும் பரதன் வெண்கொற்றக் குடையைப் பிடிக்கவும் மற்ற இரு தம்பிமாரும் வெஞ்சாமரை வீசவும் மணம் பொருந்திய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் இருக்குந் திருவெண்ணெய்நல்லூர் மன்னன் சடையனுடைய மரபிலுள்ளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே கிரீடத்தை இராமாபிரானுக்குச் சூட்டினான்.

கம்பர், வெண்ணெய்மன் சடையன் என்றதால் திருவெண்ணெய் நல்லூர் மன்னன் சடைய னென்பதில் ஐயமில்லை. ஆனால் திரு. வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியார், சூரியகுலத்தவரெனப் படுகின்ற சோழவரசர்க்கு ஒருசார் வெளாண் மரபினர் பட்டாபிஷேக சமயத்தில் மகுடங்கொணர்ந்து தருதல் தமிழ்நாட்டு வழக்கமாதலாலும், இராமபிரான் சூரியவமிசத்தவனாதலாலும் அந்தத் தமிழ்நாட்டு வழக்கை யொட்டி வேளாண் குலத்துச் சடையப்ப முதலியாரின் முன்னோர் மெளலி கொடுத்தாரென்றன ரென்பர். இனி வர்த்தகஞ் செய்யும் வேளாண் மரபைச் சேர்ந்தவன் சடையப்பனாதலால், அவன் முன்னோரென்பது குபேரனைக் குறிக்கும் எனக் கூறுவாரு முளர் என்றார். சடையன் வர்த்தகஞ்செய்யும் வேளாண் மரபினன் அல்லன் என்பதை வரும் பாடலால் அறியலாம்.

அந்தணச் வணிகர் வேளாண் மரபினோ ராலி நாட்டுச்

சந்தணி புயத்து வள்ளல் சடையனே யன்ய சான்றோர்

உய்ந்த மடிய மென்னு முவகையி னுவரி சாண

வந்தன ரிராமன் கோயின் மங்கலந் துரிமை மாக்கள்

இப்பாடல் திரு, வை, மு. கோபால கிருஷ்ணமாச் சாரியார் இடைச் செறுக்கலாகத் திருமுடி சூட்டு படலத்தின் 32.35 செய்யுள்களுக்கிடையில் பிரசுரித்து சில பிரதிகளில் இச்செய்யுள் மரகத (36) என்ற பாடலின் பின் காணப்படுகின்றது என்றார். ஆனால் சும்பர் சடையனைப் இதுவும் ஒன்றாகக் கூறினார். இதில் கம்பர் அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர் என்ற பின் சடையனை யனைய சான்றோர் என்றதால் சடையன் உழவுத் தொழில் புரியும் வேளாண் மரபின னல்லன் என்பது ஒரு தலை மங்கலத்து உரிமை மாக்களான அந்தணர், வணிகர் வேளாண் மரபினரோடு இராமனது பட்டாபிஷேகத்தைக் காண வந்த க்ஷத்திரியரைச் சடையனே யனைய சான்றோர் எனக் கம்பர் கூறினார். இளங்கோவடிகள் வைசியரின் தெய்வத்தை மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன் வாணிக மரபின் நீள்நிலம் ஒம்பி நாஞ்சிலும் துலாமும்  ஏந்திய கையினன், (சிலப். 22.03-6) எனவும், உழவுதொழிலுவும் பழுதில் வாழ்க்கைக் கிழவன் (சிலப் 22:85.6) எனவுங் கூறினார். அத்தெய்வம் அரசர்களின் முடியைத்தவிர மற்ற ஆபரணங்களை யணிந்திருந்தாக கூறியதால் உழவு தொழிலுதவும் வேளாளர் முடி கொணர்ந்து இராமபிரான் பட்டாபிஷேகத்தின்போது கொடுத்தார்களென்பது உண்மையாகாது. வைசிய ஸ்திரியின் புத்திரன் ஒருபோதும் அரசலுக்குச் சீக்கெண்ணெய் தேய்க்க மாட்டா னென்று சதபாதி பிரமாண கூறுகிறது. (Eggeling’s translation. Pt. V.P. 326*) ஆகவே  சோழலரசர்களுக்கு முடி கொணர்ந்த வேளாண் உழுவித்துண்ணுங் குறுநில மன்னனே யாவான். அதனால்தான் அவன் மூவேந்த வேளாண் எனப்பட்டான் போலும்! திருவையாபுரி பிள்ளையும், ஒருமுறை சேர சோழ பாண்டியர் என்ற முடியரசர் மூவரையும் இவர் (சடையப்பர்) விருந்துக்கு அழைத்தனராம். விருந்தின் மேம்பாட்டினை உணர்ந்த அவ்வாசகர்கள் இவருக்குத் திரிகர்த்தராயன் என்ற பட்டப் பெயரை அளித்தார்களாம் இவ்வாறு கூறுவது சேர மண்டல சதகம் என்றார் ராயன் (ராஜன்) என்ற பட்டம் பெற்ற சடையப்பன் க்ஷத்திரியனே யாவான். திருக்கழுக்குன்றம் பக்தவசல சுவாமி கோயிற் கல்வெட்டில் செயங் கொண்ட சோழ மண்டலத்து களத்தூர் கோட்டத்து செங்குன்றனாட்டு அஞ்சூரில் சட்டைய்யராயர் பேரனார் விண்டறான காந்தராயர் மகனார் தொண்டனர் கர்த்தராயர்க்கு எனக் கூறப்பட்டிருக்கிறது. இதில் கூறிய சட்டையப்ப ராயர் கம்பரை யாதரித்த சடைனாகத் தெரிகிறது. அதனால் தான் அவனுடைய பேரனின் மகனைப் பற்றிக் கூறிய போதும் அவனுடைய பேர் வழங்கியது. ஆகவே சடையப்ப வள்ளல் வன்னியர்  என்பதில் ஐயமில்லை.

 

கொடிமன்னு மாடக் குலமென்று மயோத்தி யெய்திக்

கடிமன்னு வாயிற் கடைநின்றருள் கால னோக்கிப்

படிமன்னி வாழும் பலவன்னியர் மண்டலீகர்

முடிமன்ன ரெல்லா முறையே புகுந்தேவல் கேட்க.

-(கம்பராமாயணம் இலங்கையை யழிந்த படலம் 11)

 

கம்பர் பல வள்ளியரான மண்டலீகரும் முடி மன்னரும் இராமபிரானிடம் ஏவல் கேட்டதாகக் கூறியதால் அவர் வடநாட்டு மன்னர்களையும் வன்னியர் என்றது தேற்றம், அதனால். அவர் சடையன் தங்கள் மரபுளோர் என்று வடநாட்டு வன்னியரைத்தான் கூறினார், மற்ற புலவர்களும் பொதுவாக க்ஷத்திரிய வம்சத்தவரை வன்னியர் என்றே கூறினார்கள். தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கும், நாற்படை வன்னியராக்கிய பெருமான்.

-(கல்லாடம் 40)

மைந்த ரொருப துராகி மறைநூ னிறைந்து வளர்ந்ததற்பின்

றந்தை தாயா ரிறந்தேகத் தனையர் கயிலைத் தலமெய்திச்

சிந்தை செய்வார் நல்குரவு தீரவுயர் வன்னிய ராவோ

மந்த நிலைசற் றாதலின் லதிகநிலை மன்னவ ராவோம்.

-ஞானவாசிட்டம் ஐந்தவர் கதை 7.)

காசிபரின் பத்து குமாரர்கள் வேத சாத்திரங் கற்றபின் தாய் தந்தையர் இறந்துவிட அவர்கள் கயிலைக்குச் சென்று வறுமை நீங்க வுயர்ந்த வன்னியராவோம். அந்த நிலை சிறிதானதால் அதிக நிலையுடைய மன்னவராவோம் என்று எண்ணினார்கள்.

 

முதற் சங்க காலத்திலிருந்த பாண்டியனுடைய நாட்டைக் கடல் விழுங்கிய பின் அவன் படையெடுத்த வந்து இந்தியாவில் சேர, சோழர் நாடுகளைப் பிடித்துக் கொண்டான். அதற்கப்புறந்தான் இந்தியாவில் பதினெட்டு மொழிகளுண்டாயின. அதனால் அவனோடு வந்த வடபால் முனிவன் யாகத்தில் தோன்றிய வேளிரின் சந்ததியார் பதினெட்டு மொழி நாடுகளில் அரசு புரிந்ததால் நச்சினார்க்கினியர் அகத்தியர் நரபதியுடன் பதினெண்குடி வேளிரைக் கொண்டு வந்ததாகக் கூறினார். அவ்வேளிர் நாக நாட்டிலிருந்து வந்த நாகர் என்பதை வரும் பாடல் புலப்படுத்துகிறது.

ஞால மீமிசை வன்னியோர் மாய்த்தென

ஏலாது கவிந்தவென் னிரவன் மண்டை

மலர்ப்போர் யாரென வினவலின் மலைந்தோர்

விசிபிணி முரசமொடு மண்பல தந்த

திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன்

படைவேண்டுவழி யறிவுதவியும்

வினைவேண்டவழி யறிவுதவியும்

வேண்டுப வேண்டுப வேந்தன் றேஎத்

தசைநுகம் படாஅ வாண்டதை யுள்ளத்துத்

தோலா நல்வீசை நாலை கிழவன்

பருந்துபசி தீர்க்கு நற்போர்த்

திருந்துவே னாகற் கூறினார். பலரே.

-(புறநானூறு 179)

வடநெடுந்தத்தனார் பாண்டியனுடைய வீரன் நாலை கிழவன் பாண்டியனுக்குப் படை வேண்டிய போது வாளுதமி போரிட்டதாகவும் அரசியற் காரியஞ்செய்யும்படி வேண்டிய போது அறிவு வுதவி அமைச்சனாகவும் இருந்ததாகக் கூறினார், அவன் பெயர் நாவமே கிழவன். நாலைக் கிழாஅன் என வழங்கியதால் அவன் குறுநில மன்னனாவான். அவன் நாகன் என்றதால் அவன் நாகர் வருப்பினகுவான். பாண்டியநாடு நாகர்கள் வந்ததால் தான் சங்கப்புலவர்களில் புறத்திணை நன்னாகனார் மதுரைப் மருதனிள நாகனார், விருச்சியூர் நன்னாகனார், வெள்ளைக்குடி நாகனார் எனச் சிலர் நாகன் என்ற குடிப் பெயர் கொண்டவர்களாக விருக்கிறார்கள், ஆகவே பாண்டியனுடன் சுமார் 7500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வேளிர் தூரக்கிழக்கு நாடுகளைச் சேர்ந்த நாக நாட்டியிருந்து வந்தவர்களே யாவார். அவர்களின் மரபினர் அங்கிருந்து கடைச்சங்க இறுதியில் வந்தவர்களை பல்லவர்களும் சதகர்ணிகளுமாவார், பல்லலர்களின் முதல் மன்னன் பெரும்பாணாற்றுப் படைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன் அவனுடைய தந்தை சோழ மன்னன் கிள்ளிவளவன், தாய் நாக நாட்டிளவரசி. அவனுடைய தாய் நாட்டிலிருந்து வந்து அவனுடைய பகைவரை வென்று அவனுக்கு காஞ்சியில் முடி சூட்டிய நாக நாட்டரசர்கள் பல்லவர்கள். யெடுக்க சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலை யெடுக்க இமயத்திற்குப் போனபோது அவனுக்குத் துணையாகப் படை எடுத்து வந்த நூற்றுவர் கன்னர்களே சதகர்ணிகள்.

 

  • ••

 

 

 

 

 

பல்லவ நாடு தோற்றம்

 

  1. பெரும்பாணாற்றுப் படைத் தலைவன்

தொண்டைமான் இனந்திரையன்

ஆழி யிழைப்பப் பகற்போம் இரவெல்லாம்

தோழி துணையாத் துயர்தீரும் – வாழி

நறுமாலை தாராய் நிரையவோஒ வென்னும்

செறுமாலை சென்றடைந்த போது

-(பழைய மேற்கோள்)

காமநோய் காலை யரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரு மாதலால் தலைவி மாலைப் பொழுதில் திரையனே நினைந்து வகுந்தியதாக அவன் மீது காதல் கொண்ட புலவர் பாடினார். அதேபோல் அவனிடம் பரிசு பெற்ற சிங்கப் புலவர் கடியலுார் உருத்திரங் கண்ணனார் அவனிடம் பரிசு பெற்றுத் திரும்பிய பாணனொருவன் வழியிலெதிர்ப்பட்ட தன் இனத்தவனிடம் திரைவனுடைய நாடு, நகரம், கணம், வீர முதலியவைகளைப் புகழ்ந்து கூறி அவனிடம் போய்ப் பரிசு பெறும்படி வழியனுப்பியதாகப் பெரும்பாணாற்றுப்படையைப் பாடினார்

 

கப்குலு நண்பகமுத் துஞ்சா வியல்பிற்றாய்

மங்குல்சூழ் மாக்கட வார்ப்பதூஉம்-வெஞ்சினவேற்

கான்பயந்த கண்ணிக் கடுமான் றிரையனை

யான்பயத்தே னென்னுஞ் செருக்கு

பெரும்பாணாற்றுப் படையினிறுதியிலுள்ள விந்த வெண்பா இரவும் பகலுந் தூங்காதத் தன்மையதாய் மேகஞ் சூழ்ந்த கருங்கடல் ஆரவாரஞ் செய்வது கொடுங்கோபங் கொண்ட திரையனை யான் பெற்றேன் என்னுஞ் செருக்கினா லென்கிறது, அவனுடைய வரலாறு கூறும் இளந்திரையம் என்ற நுல் எழுதப்பட்டதாக இறையனார் அகப் பொருளிலக்கண பாயிர வுரையினால் தெரிகிறது. அந்நூலில்லா விட்டாலும் அவனைக் கடல் தந்த வரலாற்றைச் சாத்தனார் கூறியிருக்கும் மணிமேகலை நூல் அழியாமலிருப்பது இறைவன் திருவருளினால் தான்.

 

இந்திரவிழாவில் மாதவியின் ஆடல் பாடல் அழகை மற்றவர்கள் அனுபவித்ததைக் கண்டு கோவலன் மணங்காந்து அவளைப் பிரிந்து போய் மதுரையிற் கொல்லப்பட்டான். அதற்கடுத்த வாண்டு இந்திர வியாவில் கலந்துகொள்ள மாதவியை யழத்துவரும்படி அவளுடைய தாய் சித்திராபதி வசந்தமாலையை யனுப்பினாள். மாதவி

தான் துறவு பூண்டு புத்த மதத்தில் சேர்த்ததாகக் கூறியதோடு, மாபெரும் பத்தினி கண்ணகியின் மகளான மணிமேகையுந் தவமேற் கொள்வாள். என்று சொல்லி வசந்தமாலையை யனுப்பிவிட்டால்.. அப்போது மணிமேகலை தன் தந்தையை நினைத்து விட்ட கண்ணீர் அவள் தொடுத்துக் கொண்டிருந்த மலர் மாலையை நனைத்துவிட்டது. அதனால் அவர்களுடனிருந்த சுதமதி புதுப்பூ கொய்துவர மணிமேகலையை யழைத்துக்கொண்டு உவவனத்திற்குப் போனாள். மணிமேகலையைக் காதலித்து இளவரசன் உதயகுமரன் அவர்களைப் பின் தொடர்ந்தான். சுதமதி அவனுக்குப் புத்தி சொல்லி யனுப்பிளிட்டாள். மணிமேகலா தெய்வம் அவர்களுக்குத் தெரிந்த வொருத்தி போல், வந்து உதயகுமரன் அவர்களுக்காக வோரிடத்திற் காந்துக் கொண்டிருந்ததாகச் சொல்லி அவர்களைச் சக்கரவானக் கோட்டத்திற்குப் போய் இரவு தங்கும்படி சொன்னான். அங்கு தூங்கிக்கொண்டிருந்தபோது கொண்டுபோய் தூரக் கிழக்கில் நாக நாட்டைச்சேர்ந்த மணி பல்லவத் தீவில் (அழகிய பல்லவ தேசத்தில்) விட்டுவிட்டாள். மணிமேகலைல் கண்விழித்து ஓர் புத்தர் பிடிகையைக் கண்டு வணங்கியபோது அவளுக்குப் பழம் பிறப்பில் நிகழ்ந்தவையெல்லாம் நினைவிற்கு வந்தன. முற்பிறப்பில் அவளுடைய கணவனாக விருந்தவன் தான் உதயகுமரன். அப்பால் மணிமேகலா தெய்வந் தோன்றி அவளுக்கு வேற்று ருவமடையவும், அந்தர மார்க்கமாகச் செல்லவும், பசியில்லாம விருக்கவும் மூன்று கோமுகி பொய்கையைக் காக்குந் தெய்வம் தீவதிலகை அன்று அப்பொய்கையில் ஆபுத்திரன் போட்டுவிட்ட அச்சயபாத்திரம் மணிமேகலை கையிற் கிடைக்குமென்றாள். அப்பாத்திரத்தைப் பெற்று மணிமேகலை தெய்வங் கற்றுக் கொடுத்த மந்திரத்தின் துணையால் அந்தரமாச்சுமாகப் புகாருக்கு வந்து சேர்ந்தாள். அவளைத் தொடர்ந்து உதய குமரன் காதலித்து வரவே அவள் மந்திரத்தின் துணை கொண்டு காயசண்டிகைபோல் மாறுவேடம் பூண்டாள். அவளோடு உதயகுமரன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட காயசண்டிகையின் கணவனான வித்தியாதரன் தன் மனைவியின் கள்ளக்காதலனாக உதயகுமரனை யெண்ணி அவனை வாளால் துண்டித்துவிட்டான். அதனால் உதயகுமரனின் தந்தை சோழன் கிள்ளிவளவன் மணிமேகலையைச் சிறையிலடைத்தான். அரசமாதேவி தன்மகன் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க மணிமேகலையைச் சிறையிட்டுத் தன் அந்தப்புரத்தில் வைத்துத் துன்புறுத்தி வந்தாள். மத்திரத்தின் துணையினால் பசியில்லாமல் மணிமேகலை யிருந்தாள். ஆனால் அவளுடைய பாட்டி சித்திராபதி அவளை விடுவிக்க அரசியிடம் வந்து அரசனுடைய காதலை வெளிப்படுத்தி வருமாறு கூறினாள்.

 

மன்னன் மகனால் மட்டுமின்றிப் பெண்களாலும் இந்தப் பெரிய புகார் நகருக்குத் துன்பம் விளைக்கக் கூடிய சாப மொன்றுண்டு. அதனால் உப்பளத்தைச் சார்ந்த உயரமான மணற் குன்றின்மேல் அலை யுலாவும் புன்னை மரச் சோலையிற் பிரகாசிக்கும் மணிமுடி யணிந்த கிள்ளி வளவன் முன்னொரு நாள் இளவேனிற் காலத்தில் தங்கியிருந்தான். வியப்பூட்டும் புதுப்பூக்களின் மணம் வீசும் அந்தப் பூங்காவில் யாருமில்லாத வொருபுறத்தில் தன்னந்தனியாக வொருத் நிலையைக் கண்டான், இவள் யார்? இங்கெப்படி வந்தாள்? என்று மன்னன் மனம் தடுமாறி அவள்பால் மையல் கொண்டான். கண்ட கண்களிலும் கேட்ட காதுகாளிலும் உண்டவாயிலும் முகர்ந்த மூக்கினும் தீண்டிய உடம்பிலும் வெற்றித்தரும் கரும்பு வில்லேக்கொண்ட காமவேளின் மல்லிகையும் அசோகும் மாம்பூவும் குவனையுங் கமலமும் உரிய காலத்திற் மலர்ந்த மலர்களால் செய்யப்பட்ட அம்புவின் மணம் வீசுவதால் பகைவர் யாவரையும் புறமுதுகிட்டோடச் செய்த வளவன் அவரிடம் பணிந்து அவள் பணிக்கும் பணியா தென்று கேட்டான். அவனோடு சேர்ந்து அவள் ஒரு மாத கால மகிழ்ந்திருந்த பின்னருந் தான் யாரென்பதை யவனுக்குச் சொல்லவில்லை. ஒரு நாள் திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டாள். பகை மன்னரை வென்ற கிள்ளி அவளொளிந்திருக்கு மிடத்தைத் தேடி யலைந்துகொண்டிருந்தான், அப்போது நிலத்திற் புகுந்தும் உயரிவானத்திற் கேறியும் நீர் மீதுத் திரியுமோர் சாரணன் தோன்றினான். அவனை வணங்கி கிள்ளி என் உயிரனையாள் எங்கேயோ வொளிந்துகொண்டிருக்கிறாள். அடிகாள் அவளைப் பார்த்தர்களா வென்று கேட்டான். சாரணன், அவளைப் பார்க்காத போதிலும் அவனைப் பற்றி முன்னமே யறிவேன். பார்த்திப! கேளாய் நாக நரட்டு மக்கள் நடுக்க மென்பதைக் காணாதவாறு ஆட்சி புரிபவன் வாகை சூடிய வேலேந்திய வளைவணன். அவனுடைய தேவி வாச மயிலே வயிற்றுள் தோன்றியவள் பிலிவளை. அவள் பிறந்த நாளில் சூரிய குலத்திற் பிறந்த வொருவன் இளமுலை தோயக் கருவொடு வருவாள். என்று கணியெடுத்துக் கூறினான். அங்கிருந்து அவள் வரமாட்டாள். அவளுடைய மகன்தான் வருவான். வருந்தாதே இதையுங்கேள் இந்திர விழா செய்ய நீ தவறிய நாளில் நினது புகார் நகரம் கடல் வயிற்றில் புகுந்துவிடும். அது மணிமேகலா தெய்வத்தின் சாபத்தால் நடக்கும். அப்படி நடக்குமென்ற இந்திரனுடைய சாப மிருப்பதால் அது வீண் போகாது. அங்கே (மதுரையம்) பதி அழியு மென்பதும் இங்கே (புகார்)பதி கெடு மென்பதும் மெப்யாக நடக்கு மென்பதை யறிந்து இக்குற்றமற்ற நகரம் கடல் வயிற்றில் புகாதபடி காக்க விந்திர விழா நடத்துவதை மறந்துவிடாதே என்று எச்சரித்துவிட்டுப் போனான். அந்நாளிலிருந்து புகார் நகரில் மக்களுடைய கவலை நீங்காமலிருப்பதால் மணிமேகலையின் பெயர் கொண்ட மணிமேகலா தெய்வம் வருந்தினாலும் வருந்து மென்று அஞ்சுகிறேன் என்று சித்திராபதி அரசியை வாழ்த்தி தன் பேத்தியைத் தரும்படி கேட்டாள். (மணி, 24:25-76) இதனால் மணிமேகலா தெய்வம் பிலிவளையைத் தூக்கி வந்து புகாரில் விட்டு அவன் கிள்ளிவளவனைக் காந்தர்வ மணம் புரிந்து கர்ப்பமானதும் அவளைத் தூக்கிக் கொண்டு போய் அவளுடைய நாக நாட்டில் விட்டுவிட்டா ளென்பது தெரியவரும்.

அரசமா தேவியிடம் விடுதலை பெற்ற மணிமேகலை அந்தரமார்க்கமாக ஜாவா நாட்டிற்குப் போனாள். அங்கு அரசு புரிந்த புண்ணிய ராஜன் முற்பிறப்பில் அமுதசுரபியைக் கோமுகி பொய்கையில் போட்டுவிட்டதை அவனுக்கு அறிவுறுத்த அவனை மணிபல்லவத்திற்கு வரும்படி யழைத்தாள். இருவரும் மணிபல்லவத்தில் கோமுகி பொய்கையின் கரைக்கு வந்தார்கள். அங்கே தீவதில கை மணிமேகலையிடம் பலருந் தொழும்படி அச்சயபாத்திரங் கையிலேந்திய மங்கையரில் நல்லவளே! நின் புகார் நகரங் கடல் வயிற்றில் புகுந்த காரணங் கேள்! நாக நாட்டை யாளும் அரசனுடைய மகள் பீலிவன் பெண்களிற் சிறந்தவள். அவள் பனியின் பகைவனான சூரிய தேவனின் வழியிற் பிறந்த பச்சிளங் குழந்தையோடு வந்து இந்த மணிபல்லவத் தீவில் தேவேந்திரன் வைத்த பீடிகையை வலம்வந்து வணங்கினாள். அப்போது கம்பளச் செட்டியின் கலம் (கப்பல்) வந்து கரையிற் றங்கியது பிலிவளை செட்டியிடஞ் சென்று அவன் சோழ நாட்டின னென்பதை யறிந்து, கொற்றவன் குழந்தை இவனைக் கொண்டு போய் உங்கள் அரசனிடங் கொடுங்கள் என்றாள். செட்டி மகிழ்ச்சியோடு குழந்தை வைத் தொழுது – வாங்கிக் கொண்டான். கடலில் கலத்தை யோட்டி வந்தான். அன்றைய தினமே இருள் சூழ்ந்துகொண்டு கரை சேர முடியாமற் கலம் காற்றினாலுடைந்துவிட்டது. குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமற் கரை சேர்ந்த செட்டிகள் நடந்ததை வடிவேற் கொண்ட மன்னன் கிள்ளிக்குக் கூறினார்கள். அவன் மனமுடைந்து இரத்தினத்தை யிழந்தநாகம்போல் காட்டிலுங் கரையிலுங் குழந்தையைத் தேடிக் கொண்டு இந்திர விழா நடத்துவதை மறந்து விட்டான். அதனால் கோபம் கொண்டு மணிமேகலா புகாரைக் கடல் விழுங்கும்படி சாபமிட்டாள். தேவர்களிருக்குந் தேவலோகத்தையே கடல் விழுங்க வந்தபோது தேவேந்திரன் எப்படிக் கூரிய வேலேந்தி அக்கடலை யெதிர்த்து வருவானே அப்படிக் கடல் கூரிய அலைகளை விரித்துப் பெரிய புகார் நகரை விழுங்கிவிட்டது. அப்போது மன்னன் கிள்ளி தனிவழியே போனான், அறவணவடிகளும் மாதவியும் வருந்தாமல் வஞ்ச நகரத்திற்குச் சென்றார்கள். பரந்த நீருடைடையக் கடலைக் காக்கும் மணிமேகலா தெய்வம் கூறியதை நீ கேட்க விரும்பினால் உந்தந்தையின் மூதாதைய ரொருவரை அவள் எடுத்துக் காப்பாற்றியதையும் அப்போது அவர் அறவரசாண்டதையும் அறவணவடிகளிடங் கேட்டுத் தெரிந்துகொள் என்று தீவதிலகை அந்தரமார்க்கமாகச் சென்னாள். (மணி, 25:175-213)

 

நமது விஞ்ஞான காலத்திலேயே கடல் பொங்கி வேதாரண்யத்தையும் தனுஷ்கோடியையும் மேற்குப் பாகிஸ்தானத்தையும் அழித்தது. அன்று புகாரைக் கடல் விழுங்கியதை மெய்ப்பிக்கிறது. சில ஆண்டுகளாகச் சென்னையிற் குடிசைகள் எரிந்ததற்குக் காரணங் கண்டுபிடிக்காதது மதுரை யெரிந்தவதை மெய்ப்பிக்கிறது. புகாரைக் கடல் விழுங்கியது மெய்யானதால் சாத்தனார் மீண்டும் காஞ்சியில் அறவணவடிகள் மணிமேகலைக்குப் புகாரைக் கடல் விழுங்கிய செய்தியைச் சொன்னதாகக் கூறினர். (மணிமேகலை 29:1-39), இருமுறையும் கம்பளச் செட்டியின் கலத்தைக் காற்றுடைக்கு முன்பு இருள் சூழ்ந்து கொண்டதாகக் கூறினார். அந்த இருட்டில் மணிமேகலா, குழந்தையைத் தூக்கி வந்து சென்னையில் மயிலையில் (மயிலாபூரில்) விட்டுவிட்டதாகத் தெரிகிறது. அதனால் தான் அவ்வூருக்குப் பிலிவளையின் தாய் வாசமயிலையின் பெயரால் மயலேயெனப் பெயரிட்டதாகத் தெரிகிறது. மயிலை-இருவாட்சி திரையனை மயிலை மலர்மீது வளர்த்தியிருந்ததால் மயிலை எனப்பட்டது என்றலும் பல்லவர் தோன்றல் திரையன் மயில்யிற் தோன்றியதால்தான் சயங்கொண்டார், வண்டை வளம்பதி பாடீரே மலையுங் கச்சியும் பாடீரே, பண்டை மயிலேயும் பாடீரே பல்லவசர். தோன்றலைப் பாடீரே என்று கலிங்கத்துப்பரணியில் பாடினார் போலும்.

 

அப்போது கிள்ளிவனவனின் – தம்பி இளங்கிள்ளி காஞ்சியிலிருந்து காஞ்சி நாட்டை யரசு புரிந்துவந்தான். அவன் மணிமேகலையிடம் நலத்தகை நல்லகாய்! நலமிக்க நாடுகளி லெல்லாம் வறுமை வந்தடைந்தது: செங்கோல் வளைந்ததாலோ, தவம் புரிவார் தவறிழைத்தாலோ, மணம் நாறுங் கூந்தலார் கற்புக் குறைந்ததாலோ, எதனாலோ வறியேன். கவலையோடிருந்த என் முன்பு. ஒர் மாதெய்வத் தோன்றி வருந்தாதே! நின் உயர் தவத்தால் ஒர் காரிகை தோன்றுவாள். அவள் கையிலிருக்கும் பெருமை மிக்க பாத்திரத்திலிருந்து சுரப்பது அருமையான உயிர்களைக் காக்கும் மருந்தாகும். அதனால் பரந்த நின் நாட்டிலுள்ளோர் உயிர் பிழைப்பார்கள், அவளுடைய வருளால் தேவேந்திரனின் ஏவலினால் நிலந் தாங்காதபடி மழை பெய்யும். அவள் இந்த அகன்ற நகரத்தில் நுழைந்த, பிறகு மேலான அறச்செயல்கள் பல திகழும். மேகம் வறண்டாலும் நீர்வறக்காது. முன்னோரால் மணி பல்லவத்திலுண்டாக்கப்பட்டது செழிப்பான நீரைக் கொண்ட கோமுகி யென்னும் பொய்கை. அந்த மணி பல்லவமே காஞ்சிமா நகர்க்கு வந்து விட்ட தென்று சொலும்படி பொய்கையும் பொழிலு மமைத்து அழகுபடுத்துவீர் என்று சொல்லிச் சென்றது என்றான் மணி. 28:188-205). தெய்வம் அப்படி அவளைச் செய்யச்சொன்னது மணி பல்லவத்திலிருந்து பீலிவளை கொடுத்தனுப்பிய அவனுடைய மூத்தோன் குழிந்தையை அவன் எடுத்து வளர்க்கும்படி செய்யவேயாம்.

நாக நாடு நடுக்கின் குள்பவன்

வாகை வேலோன் வளைவணன் றேவி

வாச மயிலை வயிற்றுட் டோன் றிய

பீலிவளை யென்போள் பிறந்த வந்தாள்

இரவிருலத் தொருவ னினமுலை தோயக்

கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்

ஆங்கப் புதல்வன் வருஉ மல்லது

பூங்கொடி வாராள் புலம்ப விதுகேள்

தீவகச் சாந்தி செய்யா நாளுள்

காலன் மாநகர் கடல்வயிறு புகூஉம்

மணிமே கலைதன் வாய்மொழி யாலது

தணியா திந்திர சாபமுண் டாக்லின்

ஆங்குப்பதி யழிதலு மிங்குப்பதி கெடுதலும்

வேந்தரை யட்டோய் மெய்யெனக் கொண்டிக்

காசின் மாதகர் கடல்வயிறு புகாமல்

வாசவன் விழாக்கோள் மறவே லென்று

மாதவன் போயின வந்நாட் டொட்டுமிக்

காவன் மாநகர் கலக்கொழி யாதால்

-(மணி. 24:54-71)

சாத்தனா கூறியபடியே இளங்கோவும் மதுரை யெரிந்ததும் ஏற்கனவே விருந்த சாபத்தினா லென்றார்.

யானே பெருத்தந்து அணிமுரசு இரீஇக்

கோன்முரை யறைந்த கொற்ற வேந்தன்

தன்முறை பிழைத்த தகுதியுங் கேள் நீ

ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து

அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று

வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண

உரைசால் மதுரையோடு அலரசுகோ டுறுமெனும்

உரையு முன்டே நிரைதொடி யோயே

(சிலப். 23:130-7)

ஆடிமாதம் கிருஷ்ணபட்சத்தில் அஷ்டமியும் கார்த்திகையின் குறையுங் கூடிய வெள்ளிக்கிழமை யன்று மதுரை யெரியு மென்று சாபங்கொடுத்தவன் இந்திர னென்பதைச் சாரணன் இந்திர சாபமுண்டாகலின் ஆங்குப்பதி யழிதலு மீங்குப்பதி கொடுத்தலும் மெய்யாக நடக்கும் என்று கிள்ளிக்குக் கூறியதால் அறியலாம். இதனால் கோவலன் கண்ணகி புகாரை விட்டுப் போகு முன்னரே கிள்ளிவளவன் பீலிவளையைக் காந்தர்வ மணம் புரிந்தானென்பது தெரியவரும். இது கீழ் வரும் கானல் வரிப்பாடலாலும் தெரிகிறது.

மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோ லதுவோச்சிக்

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய்

மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி

 

இளங்கோவடிகள், கரிகாற் சோழன் கங்கையில் நீராடி மகிழ்ந்த போதிலுங் காவேரி அவனைக் கடிந்துகொள்ளாமலிருப்பது மங்கை மாதர்களின் பெருங்கற் பென் றறிந்தேன் வாழி காவேரி என்று கோவலன் முகற் கானல் வரிப்பாடலேப் பாடியதாகவும், இரண்டாவது பாட்டில் கிள்ளி வளவன் மணவாக் கன்னி பீலிவளையைக் கூடினாலுங் காவேரி நீ அவனைக் கடிந்து கொள்ளாமலிருப்பது நிலைந்த பேர் கொண்ட பெண்களின் பெருக்கற் பென்றறிந்தேன் வாழ் காவேரி என்று பாடியதாகவும் கூறினார். அப்படி அவன் பாடியது தான் மணவாக்கள்னி மாதவியைக் கூடியபோதுங் கண்ணகி தன்னைப் புலவாறிருப்பது அவளுடையர் பெருங்கற்பினால்தா னென்பதை யுணர்ந்துதான். அவன் கானல் விரிப்பாடியதற் கெதிராக மாதவி பாடி முடித்ததும் அவளைப் பிரிந்துபோய் கண்ணகியை யழைத்துக் கொண்டு போய் மதுரையில் வர்த்தகஞ் செய்யப் போன விடத்திற் கொல்லப்பட்டான். அதற்கடுத்து வந்த இந்திர விழாவின் ஆரம்பத்தில்தான் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு போய் மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தில் விட்டுவிட்டாள்: அங்கு மணிமேகலை புத்தர் தனக்குச் சொன்னவை நினைவிற்கு வர கண்டாள்.

 

அணியிழை நினக்கோர் அருந்துயர் வருநாள்

மணிமே கலா தெய்வம் வந்து தோன்றி

அன்றப் பதியில் ஆரிருள் எடுத்துத்

தென்றிசை மருங்கிலோர் தீவிடை வைத்தலும்

வேக வெந்திறல் நாகநாட் டரசர்

சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு

அறச்செவி திறந்து மறச்செவி யடைத்துப்

பிறவிப்பிணி மருத்துவன் இருந்தற முரைக்கும்

திருந்தொளி யாசனஞ் சென்றுகை தொழுதி

அன்றைப் பகலே உன்பிறப் புணர்ந்தீங்கு

இன்றியச னுரைத்த உரைதெவி வாயேன

(மணி 9:54-64)

முற்பிறப்பில் மாதவன் மணிமேகலைக் கடுத்த பிறப்பில் துன்பம் வரும் நாளில் அவளை மணிமேகலா தெய்வம் கொண்டுபோய் ஒர் தீவில் வைத்ததும் நாகநாட் டரசன் கோபந் தணித்து மனமாசு நீங்குவா னென்றான். அதனால் அத்தீவிற் குரிய நாக நாட்டரசன் வளைவணன் தன் மகள் பீலிவளை சூரிய குலத்தவனைக் கூடிக் கருவுற்று வந்ததற்குக் கோபங் கொண்டிருந்து. அன்று அவள் குழந்தையைப் பெற்றதுங் கோபந் தணிந்து மனமாசு நீங்கினா னென்பது தெரிகிறது. ஆகவே மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிக்கொண்டு போய் மணிபல்லவத்தில் விட்டவன்று நான் பீலிவளைத் திரையனைப் பெற்றிருக்க வேண்டும். அன்று மணிமேகலையிடம் மணிமேகலா தெய்வம், மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள், பொதுவறி விகழ்ந்து புலமுறு மாதவன் திருவற மெய்து தல் சித்தமென் றுணர்நீ (மணி 10: 83-5) என்றதால் அன்று பௌர்ணமி தினமென்பது தெரிய வரும். அன்று மணிமேகலையிடம் தீவதிலகை.

‘ஈங்கிப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது

மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய

கோமுகி என்னுவ் கொழுநீ ரிலஞ்சி

இருதின வேனிலில் எரிகதி ரிடபத்

தொரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்

மீனத் திடைநிலை மீனத் தகவையின்

போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்

ஆபுத் திரன்கை யமுத சுரபியெனும்

மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

அந்நா ளிந்நாள் அப்பொழு திப்போழுது

நின்னாங்கு வருவது போலும் தேரிழை

(மணி 11:37 47)

என்றதால் மணிமேகலைக்கு அச்சய பாத்திரம் கோமுகி பொய்கையிலிருந்து வந்து சேர்ந்தது வைகாசி மாதம் பெளர்ணமியில் விசாக நட்சத்திரத்தில் என்பதும் அன்று தான் திரையன் அவதரித்தா னென்பதும் தெரிய வரும். மணிமேகலை இரண்டாந்தரம் மணிபல்லவத்திற்கு வந்த போது அவளிடம் தீவதிலகை புகார் கடல் கொண்டதைச் தெரிவித்த போது பீலிவளை பச்சிளங் குழந்தையைக் கம்பளச் செட்டியிடங் கொடுத்ததாகக் கூறியதும் மணிமேகலை முதலில் மணிபல்லவத்தி லிருந்தபோது தான் திரையன் பிறந்தா னென்பதைக் காட்டுகிறது. தீவதிலகையிடம் புகார் கடலால் விழுங்கட்பட்ட செய்தியைக் கேட்டபின் மணிமேகலை நேரகச் சேரனுடைய வஞ்சி நகருக்கு வந்தாள். அங்கு கண்ணகி கோயிலில் கண்ணகி தெய்வம் கற்புக் கடன் பூண்டு மதுரையை யெரித்த காரணங் கேட்டாள். அதனால் புகாரைக் கடல் விழுங்குவதற்கு முன்பே கண்ணகிச் சிலை கோயிலில் வைக்கப்பட்டது தெளிவு. கண்ணகியின் சிலைக் கல்லை நட்டபோது புகாரில் அரசு புரிந்த செம்பியன் வரமறுத்த செய்தியை இளங்கோ வருமடிகளிற் கூறினார்.

செருவெங் காதலின் திருமா வளவன்

வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும்

நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம்

மண்ணக மருங்கினென் வல்கெழு தோளெனப்

புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்

அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப்

பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென

இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக்

கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு

மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்

கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்

மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன்

பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்

அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த

நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும்

பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும்

நுண்வினைக் கம்மியர் காணா மாபின

துயர் நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு

மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம்

ஒருங்குடன் புணர்த்தாங் குயர்ந்தோ ரேத்தும்

அரும்பெறன் மரபின் மண்டபம்

-(சிலப். 5.90-110)

திருமாவளவ னென்னுங் கரிகாற் சோழன் படையெடுத்து வடதிசை சென்று இமயத்திற் புலி பொறித்து மீண்டபோது வச்சிர நாட்டரசன் இறையாகக் கொடுத்த கொற்றப் பந்தரும் மகத நாட்டு மன்னன் போரில் தோற்றுக் கொடுத்த பட்டிமண்டபமும் அவந்தி வேந்தன் பிரியமாகக் கொடுத்த தோரண வாயிலும் வைத்துப் புகாரில் பட்டி மண்டபங் கட்டினான். அதில் அவனுடைய மகன் கிள்ளி வளவன் அரசு வீற்றிருந்ததைச் சாத்தனாரும் வருமடிகளிற் கூறினார்.

மகத வினேஞரும் மராட்டக் கம்மரும்

அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்

தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்

கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினைப்

பவளத் திரள்காற் பன்மணிப் போதிகைத்

தவள நித்திலத் தாமந் தாழ்ந்த

கோணச் சந்தி மாண்வினை விதானத்துத்

தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பிற்

பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து

இந்திர திருவன் சென்றினி தேறலும்.

-(மணிமேகலை 19:107-16)

இந்திரனுக்குப் புகாரில் ஆண்டு தோறும் விழா நடத்தியதால் கிள்ளி வளவனை இந்திர திருவன் என்றார். அவன் தன் தந்தை கரிகாற் வளவன் மகத நாட்டுக் கைவேலைக்காரர்களும், மராட்ட தேசத்துக் கம்மாரும் யவனத் தச்சர்களுந் தமிழ் நாட்டு வேலைக்காரசிகளுடன் சேர்ந்து செய்த பட்டிமண்டபத்தி லேறி அன்றாடம் அரசியற் காரியங்களேக் கவனித்துவந்தான். அவனுடைய மகன் உதயகுமரனைக் கரிகாலனுடைய பேரன் எனச் சாத்தனார் வருமடிகளிற் கூறினார்.

மதுமலர்க் கூந்தற் சுதமதி யுரைக்கும்

இளமை நாணி முதுமை யெய்தி

உரைமுடிவு காட்டிய உரவோன். மருகற்கு

அறிவுஞ் சால்பும் அரசியல் வழக்கும்

செறிவளை மகளிர் செப்பலு முண்டோ

-(மணி. 4-106-10)

 

மணிமேகலையைப் பின்தொடர்ந்து உவவனத்திற் பளிங்கறை யருகில் வந்த உதயகுமரனிடம் சுதமதி, தன் இளமைக்கு நாணி முதியவன் போல் வேடம் பூண்டு வந்து முதியவர்களின் வழக்கை விசாரித்துத் தீர்ப்புக் கூறிய உரவோனான கரிகாற் சோழனுடைய பேரனுக்கு நல்ல புத்தியும் அடக்க வொடுக்கமும் அரசியல் நீதியும் வளைய லணிந்த பெண்கள் சொல்வதுண்டோ? என்றாள். முடத்தாமக் கண்ணியாரும், முதியோ ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும் (பொருநராற்றுப் படை 1S7-8) என்று கரிகாலன் தன் அரசவைக்கு வந்த முதியோர்களின் பகைமையைத் தீர்ந்ததாகக் கூறினார். உரை முடிவு காணா னிளமையே னென்ற, நரைமுது மக்களுவப்ப-நரைமுடித்துச், சொல்லான் முறை செய்தான் சோழன் குலவிச்சை, கல்லாமற் பாகப் படும் என்ற பழமொழியாலும் கரிகாலன் நரைமுடி தரித்து முதியவர்களின் வழக்கை விசாரித்துத் தீர்ப்புக் கூறியது தெரியவரும். ஆகவே கிள்ளி வளவனின் தந்தை கரிகாற் சோழனே யாவான். அக்கிள்ளி வளவனுக்குப் பீலிவளை பெற்ற தொண்டைமான் இளந்திரையன் சோழர் குடியிற் பிறந்தவனென்பதைக் கடியறூர் உருந்திரங் கண்ணனார் வருமடிகளிற் கூறினா்.

இருநிலம் கடந்த திருமறு மார்பின்

முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த்

நீரைதரு மரபி துரவோ னும்பல்

-(பெரும்பாணாற்றுப்படை 29-31)

இவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர், பெரிய நிலத்தையளத்த திருவாகிய மறுவை யணிந்த மார்பினையுடைய கடல்போலு நிறத்தை யுடையவன் பின்னிடத்தோனாகிய சோழன் குடியிற் பிறந்தோன் என உரை கூறினார். ஆனால் புலவர் திரையன் க்ஷத்திரிய வம்சத்திற் பிறந்தவ னென்பதாக முந்நீர் (கடல்) வண்ணன் பிறங்கடை என்றார். சோழர் குடியிற் பிறந்தவ னென்பதாகத் திரைதரு மரபி னுரவோன் உம்பல் என்றார். இளங்கோவடிகள் க்ஷத்திரியருடைய தெய்வத்தை, உரை சால் சிறப்பின் நெடியோன் அன்ன, அரைச் பூதத்து அருந்திறற் கடவுள். (சிலப் 22:60-1) என்றார். நெடியோன்-திருமால். அவன் காக்குங் கடவுளானதால் சங்கப்புலவர்கள் மன்னனை நெடியோன் எனவும் நெடியோன் உம்பல் எனவுங் கூறினார்கள். இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுனை நெடியோன் என்றார். (சிலப் 28:3) பெருங்குன்னூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறையை நெடியோன் என்றார். (பதிற்றுப்பத்து 82:16) மாங்குடி மருதனார் பாண்டியன் நெடுஞ்செழியனை நெடியோன் உம்பல் என்றார், (மதுரைக்காஞ்சி 61) குமட்டூர் கண்ணணார் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனை நெடியோ னன்ன நல்லிசை, ஒடியா மைந்த என்றார். (பதிற்றுப்பத்து 15:39-40). ஆகவே உருத்திரங் கண்ணனார் திரையன் வல்லரசுகள் நால்வரில் இளையவன் என்பதாக அவனைப் பூமியை யளந்த வனும் இலக்குமியை மார்பில் கொண்டவனுமான நெடியோன் பிறங் கடையென்றார். அவர் சோழர் வம்சத்தைத் திரை தரு மரபு என்றார். வெண்ணிக் குயத்தியார் கரிகாற் சோழனை, நளியிரு முந்நீர் நாவா யோட்டி, வளிதொழி லாண்ட வுரவோன் மருக, களியியல் யானைக் கரிகால் வளவ என்றார். (புறம் 66:1-3) கடியலூர் உருத்திரங், கண்ணனாகர் கரிகாலன் கடற்றிரை தரு பண்டங்களால் உரவோனானா ளென்பதை வருமடிகளிற் கூறினார.

வான்முகந்தீநீர் மலைபொழியவு

மலைப்பொழிந்த நீர் கடற்பரப்பவு

மாரிபெய்யும் பருவம்போல

நீரினின்று நிலத்தேற்றவு

திலத்தினின்று நீர்ப்பரப்பவு

மளந்தறியாப் பலபண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி

யருகடிப் பெருங்காப்பின்

வலியுடை வல்லணங்கினோன்

புலிபொறித்துப் புறம்போக்கி

மதிநிறைந்த மலிபண்டம்

பொதிமுடைப் போரேறி

-(பட்டினப்பாலை 126-37)

கடலிருந்து முகந்து வானத்திற்குப் போன நீர் மலையிற் பெய்வதும் மலையிற் பெய்த நீர் போய்க் கடலிற் கலப்பதும் போல் புகாரில் துறை முகத்திற் கப்பலில் பண்டங்களின் மூட்டைகளை யேற்றுவதும் இறக்குவதும் நடப்பதால் அளந்தறிய முடியாதபடி பல பண்டங்கள் கணக்கிட முடியாமல் வந்து குவிந்ததால் பெருங் காவல் புரியும் வலிமையுடைய வனாய் வல் அணங்கு போன்றவன் கரிகாலன். அவனுடைய புலி முத்திரை பொறித்த நிறைந்த பண்டங்களின் மூட்டைகள் போராகக் குவிந்திருந்தன.

உரை சால் சிறப்பின் அரை கவிழை திருவிற்

பரதர் மலித்த பயட்கெழு மாநகர்

முழங்குகடல் ஞால முழுவதும் வரினும்

வழங்கத் தவாஅ வளத்த தாகி

அரும்பொருள் தருஉம் விருந்திற் றேஎம்

ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்

கலத்தினுங் காலினுத் தருவன ரீட்ட

-(சிலப் 2:1-7)

இளங்கோவடிகளும் புகாரில் உலக முழுதும் வந்தாலுங் கொடுத்துக் குறையாதபடி வளமிகுத்த பண்டங்கள் கலத்திலும் (கப்பலிலும்) காலினும் (காற்றினாலும் கால் நடையினாலும்) கொண்டுவந்து குவித்ததைக் கூறினார். ஆகவே கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாற் சோழனின் பேரன் திரையன் என்பதாக அவனைத் திரைதரு மரபின் உரவோன் உம்பல் என்றார். சாத்தனாரும் உதயகுமரனை உரவோன் மருக வென்றார். தாமப்பல் கண்ணனார் மாவளத்தானை வரையா விகை யுரவோன் மருக வென்றார். (புறம் 43:8) இம்மாவளத்தானே காஞ்சி நாட்டை யாண்டவனாகச் சாத்தனார் கூறிய தொடுகழற் கிள்ளி துணையிளங் கிள்ளி (மணி. 28:172) எனத் தெரிகிறது. நலங்கிள்ளியும் கிள்ளிவளவனின் தம்பியாவான். கிள்ளி தன் தம்பி காரியாற்றுப் போரை வென்றதால் சோழ நாட்டை யாண்டா யென்பதை வருமடிகளால் அறியலாம்.

எஞ்சா மண்ணசைஇ இகலுளந் துரப்ப

வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி

முறஞ்செவி யானையுந் தேரும் மாவும்

மறங்கெழு நெடுவாள் வயவரு மிடைந்த

தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்

சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை

ஆர்புனை தெரியல் இளங்கோன் றன்னால்

காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை

வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி

-(மணி, 19:119-27)

சோழன் நலங்கிள்ளி யுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்த னென்னும் புலவனை நெடுங்கிள்ளி ஒற்றுவந்தானென்று கொல்லப் புக்குழி கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்டது புறநர்னூற்று 47-வது செய்யுள். அவர் சோழன் நலங்கிள்ளி உரையூர் முற்றியிருந்தானையும் அடைந்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடியது. புறநானூற்று 45வது செய்யுள். அவர் நலங்கிள்ளியையும் (புறம் 31, 32, 44, 45,47, 68, 382, 400) குள முற்றத்துத் தாஞ்சிய கிள்ளி வளவனையும் (புறம் 41, 42, 46, 70 385) பாடினார். ஆலத்தூர் கிழாரும் நலங்கிள்ளியையும் (புறம் 225) கிள்ளி வளவனையும் (புறம். 34, 36, 69) பாடினார். ஆகவே நலங்கிள்ளியும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் ஒரே காலத்தவராவர். கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியை உறந்தை யோனே (புறம் 68) என்றார். ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பிறங்கு நிலை மாடத் துறைந்வத யோனே (புறம் 69) என்றார். கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாற் சோழன், காடுகொன்று நாடாக்கிக், குளந்தொட்டு வளம்பெருகிப் பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் கோயிலெடு குடிநீற்இ வாயிலொடு புழையமைத்து, ஞாயினேறும் புதைநீற்இ (பட்டி. 283-8) என்று உறந்தையை யுண்டாக்கியதைக் கூறிஞ்ர். ஆகவே கரிகாலன் இறந்தபோது உறந்தையை நெடுங்கிள்ளி பிடித்துக் கொண்டதில் கிள்ளிவளவனும் நலங்கிள்ளியும் அவனோடு போர் புரிந்து அவனைக் காரியாற்றில் நலங்கிள்ளி கொன்றதாகத் தெரிகிறது. அப்போது உறந்தையில் பாசறையில் கிள்ளிவளவனிருந்ததை ஆலத்தூர் கிழார் பாடிய வருமடிகள் புலப்படுத்துகின்றன.

அடுகளி றுவவுங் கொடிகொள் பாசறைக்

குருதிப் பரப்பிற் கோட்டுமா தொலைச்சிப்

புலாக்கனம் செய்த கலாஅத் தாமனயன்

பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே

பொருநர்க் கோக்கிய வேல னொருநிலைப்

பகைப்புலம் படர்தலு முரியன் றகைத்தார்

ஒள்ளெரி புகையு முருகெழு பசும்பூட்

கிள்ளி வளவன் படர்குவை யாயின்

–(புறம் 69:9-16)

நெடுங்கிள்ளிக்குப் பிறகு உறந்தையிலிருந்து அரசு புரிந்த நலங்கிள்ளியை உறந்தையோனே என்று கோவூர் கிழார் கூறினார். அவன் கிள்ளிக்குப் பிறகு சோழனாட்டை யாண்டா னென்பதை அவனே பாடிய வருமடிகள் புலப்படுத்துகின்றன.

மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்

பாறர வந்த பழவிறற் றாயம்

எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக்

குடி புர விரக்கும் கூரி லாண்மைச்

சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே

-(புறம் 75:1-5)

நலங்கிள்ளி தன் மூத்தோன் கிள்ளிவளவன் மறைந்ததால் விதியில் தனக்கு வந்த சோழ நாட்டின் அரசாட்சியை மனங்கொண்டுதான், மூத்தோர்களைக் கூற்றங் கொண்டு போய்விட்டா னென்று விதியினால் கொடுக்கப்பட்ட அரசுரிமையை யமைந்தோ மென்று குடிகளைக் காக்க வரி கொடுக்கும்படி இரப்பது சிறந்ததல்ல வென்று பாடினான். அவனுக்குப் பிறகு உறந்தையிலிருந்து அரசு புரிந்தவன் கோப்பெருஞ் சோழனாவான். பிசிராந்தையார் சோழநன் னாட்டுப் படினே கோழி, உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ, வாயில் விடாது கோயில் புக்கெம் பெங்கோக் கிள்ளி (புறம் 67:8-11) எனவும் கோழி யோனே கோப்பெருஞ் சோழன் (புறம் 212:3) எனவுங் கூறினார். ஆகவே சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரையில், அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்விந்தோனே என்றதால் கண்ணகிக்குப் பிறகு கோப்பெருஞ் சோழன் அரசு புரிந்தா னென்பது தெரியவரும். கண்ணகியைப் பரவிப் பாடிய அகப்பாக்களில் கோப்பெருஞ் சோழன் பாடிய பாக்கள் குறுத்தொகையில் (20, 53, 129, 147) தொகுக்கப்பட்டன. திரையன் பாடிய பாக்களும் நற்றிணையில் (94. 99, 106) தொகுக்கப்பட்டன. ஆகவே கோப்பெருஞ்சோழனும் திரையனும் ஒரே காலத்தவ ரென்பதும் உறுதி. அப்போது உறையூரிலிருந்து கோப்பெருஞ் சோழன் சோழ நாட்டை யாண்டான். திரையன் கச்சியிலிருந்து காஞ்சி நாட்டை யாண்டானென்பதை வரும் பழைய மேற்கோட் பாடல் வலியுறுத்துகிறது.

வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்

நான்மாடக் கூடலிற் கல்வலிது

சோழ னுறந்தைக் கரும்பினிது தொண்டைமான்

கச்சியுட் காக்கை கரிது.

இதனால் திரையன் காலத்தில் வல்லரசுகள் சேரன், பாண்டியன் சோழன், தொண்டைமான் என நால்வரிருந்தது தெரியவரும். அவர்களில் தொன்டைமான் இளந்திரையன் உயர்த்தவ ளென்பதை வருமடிகள் அறிவிக்கின்றன.

மலர்தலை யுவகத்து மன்னுயிர் காக்கு

முரசு முழங்கு நாளை மூவ ருள்ளும்

இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்

வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்

அல்லது கடி,ந்த வறம்புரி செங்கோல்

பல்வேல் திரையன்.

-(பெரும்.32-7)

 

வெள்ளைக்குடி நாகனார் கிள்ளி வளவனைத் தண்டமிழ்க் கிழவர், முரசு முழங்கு தானை மூவ ருள்ளும், அரசெனப் படுவது நினதே பெரும என்றார். (புறம். 35:3-5) முடத்தாமக் கண்ணியார், முரசு முழங்கு தானை மூவருங் கூடியரசவை மிருந்த தோற்றம் போலப், பாடல் பற்றிய பயனுடை யெழாஅற், கோடியர் தலைவ! கொண்ட தறிந என்றார். (பொருநராற்றுப் படை 34-7). ஆகவே திரையனும் சோழர் குடியிற் பிறந்தவனானதால் முரசு முழங்கு தானை மூவருள்ளும் வலம்புரி சங்குபோல் வரையற்றவனெனக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் அவனை மூவேந்தர்களில் ஒருவனாகக் கூறினார். ஆகவே உறந்தையில் அரசுபுரிந்த கோப் பெருஞ்சோழனைவிட திரையனே சேழநாட்டு முடியுடையன்னனாவான். அவன் தன் பாட்டன் கரிகாலனைப் போலவும் தந்தை கிள்ளியைப் போலவும் பகைவரை வென்றுதான் காஞ்சியில் அரசு புரியலானான்.

 

மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ

விழவுமேம் பட்ட பழவிறன் மூதூ

ரவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வா

யந்தி வானத் தாடுமழை கடுப்ப

வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப

விரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப்

பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே

ராராச் செருவி னைவர் போல

வடங்காத் தாளையொ டுடன்றுமேல் வந்த

வொன்னாத் தெய்வ ருலைவிடத் தார்த்துக்

கச்சி யோனே கைவண் டோன்ற

னச்சிச் சென்றோர்க் கேம மாகிய

வளியுந் தெறலு மெளிய வாகலின்

மலந்தோர் தேஎ மன்றம் பாழ்பட

நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப

நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோருந்

துப்புக்கொளல் வேண்டி துணையி லோரும்

கல்வி மருவி கடற்படர்ந் தாங்குப்

பல்வேறு வகையிற் பணிந்த மன்னர்

-(பெரும்.410-28)

 

அக்காலத்திலேயே திருவிழாவிற் சிறந்தது காஞ்சிமா நகரம். நூற்றுவரைப் போர்களத்திற் கொன்ற பஞ்சபாண்டவர்களைப் போல் கணக்கிலடங்கா சேனைகளுடன் வந்த பகைவரை வென்றுதான் திரையன் காஞ்யில் முடி சூட்டப்பட்டான். தன்னை விரும்பி வந்தோர்க்குத் தன் கை வண்மைத் தோன்ற பாதுகாப்பளித்தான். காத்தலும் அழித்தலும் அவனுக் கெளிமையானவை. அவனை யெதிர்த்துப் போரிட்டவர்களின் நாடும் அரசவைகளும் பாழடைந்தன. அவனே விரும்பி நட்பு கொண்டவர்களின் நாட்டில் நல்ல பொன் விளைந்தது. அவனுடைய நட்பை நாடியும் அவனை விரும்பியும் வேறு துணையின்றி அவன் பலத்தைப் பெறவும் மலையிலிருந்து விழுந்த நீர் கடலிற் கலப்பது போல் பல வகையில் மன்னர்கள் வந்து அவனைப் பணிந்தார்கள். அவர்களில் அதிகமான் அவனுடைய பலத்தை நாடி ஒளவையாரை அவனிடம் தூதனுப்பினான்‘

இவ்வே பிலி வணிந்து மாலை சூட்டிக்

கண்டிரன் நோன்காழ் திருத்திநெய் யணிந்து

கடியுடை வியனக ரவ்வே யவ்வே

பகைவர்க் குத்திக் கோடுதுநி சிதைந்து

கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்

உண்டாவிற் பதங்கொடுத்

தில்லாயின் உடனுண்ணும்

இல்லோச் ஒக்கற் றலைவன்

அண்ணலெங் கோமான் வைநுதி வேலே.

-(புறம். 45)

ஒளவையார் தெண்டைமானின் வேல்கள் மயிலிறகு சூட்டி பூமாலை யணிந்து திரண்ட பலமான காம்புகளைத் திருத்தமாகச் செய்து எண்ணெய் பூசிக் காவல் கொண்ட பெரிய காஞ்சியிலிருக்கின்றன. அதிகமானின் வேல்கள் பகைவரைக் குத்தி வளைந்த முனைசிதைந்து கொல்லனுடைய சிறிய தொழிற் சாலையிலிருக்கின்றன. வென்றார். திரையன் வேல்களைத் தெய்வமாக வணங்கிதான் மயிலிறகும் பூமாலையும் சூட்டிருந்தான். வேல்கள் துருப்பிடிக்காமலிருக்க எண்ணெய் பூசிருந்தான். கடியலூர் உருத்திரங் கண்ணனார் திரையனுடைய கொல்லன் போர் யானைகளின் தந்தங்களுக்கு இரும்புப் பூண் செய்ததை வர்ணித்தார்.

பெருங்கை யாளைக் கொடுந்தெடி படுங்குங்

கருங்கைக் கொல்ல னிரும்புவிண்த் தெறிந்த

கூடத் திண்ணிசை வெரீஇ மடத்

திறையு புறவின் செங்காற் சேவ

லின்றுயி வீரியும் பொன்றுஞ்சு வியனகர்க்

குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பட்

பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு

முறைவேண்டு நரக்குங் குறைவேண்டு நர்க்ரும்

வேண்டுப வேண்டுப வேண்டினாக் கருளி

யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக்

கொடைக்கட விறுத்த கூம்பா வுள்ளத்

துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப்

பொறிவிப் புகர்முகற் தாக்கிய வயமான்

கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப்

புலவர் பூண்கட னாற்றிப் பகைவர்

கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்

வென்றி யல்லது வினையுடம் படினு

மொன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக்

கொண்டி யுண்டித் தொண்டையார் மருக

-(பெரும் 436-54)

கொல்லன் யானைக்குத் தொடி செய்யும்போது அடிக்குஞ் சம்மட்டி யோசை போய் மாடத்தில் சேவல் புருலின் தூக்கத்தைக் கணைக்கும் பொன் நிறைந்த காஞ்சிமா நகரில் திரையன் அரசவையில் வீற்றிருக்குங் காட்சி. கிழக்குக் கடலிலிருந்து வருஞ் செங்கதிரோனின் தோற்றம் போன்றது. அவரவர்களுக்கு வேண்டிய நீதி யளித்து அவரவர்களின் குறைகளைத் தீர்த்து வந்தான். யானையைத் தாக்கிய சிங்கம் புலியைத் தாக்க விரும்பியது போல் புலவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்து பகைவர் காத்த மதில்களை யழித்து அவர்களுடைய முடியக் கைக்கொண்டு பொருள்களைக் கவர்ந்து வந்து சாப்பிட்ட தொண்டையோரின் மருகன் திரையன். அவனைத் திரை தரு மரபின் உரவோன் உம்பல் என்று சோமர் குடியிற் பிறந்தவனாக முதலிற் கூறிய புலவர் முடிவில் தொண்டையோர் மருக வென்றதற்குக் காரணம் தொண்டை மாலை யணிந்த அவனுடைய தாய் நாட்டார் படையெடுத்து வந்து அவனுடைய பகைவரை வென்று அவனுக்குக் காஞ்சியில் முடி சூட்டியதாகும். அவர்கள் தொண்டை மாலை யணிந்திருந்ததால் தொண்டையோர் எனப்பட்டார்கள். திரையனுந் தன் தாய்நாட்டாரைப்போல் தொண்டைமாலை யணிந்த தால் தொண்டைமான்; என அழைக்கப் பட்டான். பெரும்பாளாற்றுப்படையின் இறுதியிலுள்ள வெண்பா கான்பயந்த கண்ணிக் கடுமான் திரையன் என்றதால் அவன் காட்டில் வளர்ந்த தொண்டை (கோவைக்கொடியை) மாலையாக வணிந்திருந்தது தெரிகிறது. அவனுடைய வழியில் வந்த பல்லவர்களும் தொண்டை மாலை யணிந்தவர்களென்பதை வரும் பாடலால் அறியலாம்.

ஊசல் மறந்தாலு மொண்கழ லம்மானை

வீசன் மறந்தாலு மெல்லிய வென்பேதை

பூச லிலங்கிலைவேற் பொற்கழ னந்தி நின்

பாசிலை யந்தொண்டை பல்லது பாடாளே.

-(நந்திக்கலம்பகம் 30)

வாடா வள்ளியின் வராம்சபல தருஉ நாடு பல கழந்த பின்றை நீடு குலைத் காந்தளஞ் சிலம்பிற் களிறுபடித் தாங்கும் பரம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண் வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் –(பெரும் 370-4) பரணன் தன்னினத்தவனிடம் திரையனுடைய பாலை குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருத நிலங்களிலுள்ள ஊர்களில் தங்கி நாடுகள் பல கழிந்த பின் பாலாற்றங் கரையில் அரங்க நாதர் பள்ளி கொண்டிருக்குந் திருவெஃகாவின் சோலையில் தங்கும்படி சொன்னதாக புலவர் பாடினார்.

 

குறுநில மன்னர்களான வள்ளியோர் புலவர்கக்கும் இரவலர்க்குங் கொடுக்க முகம் வாடாதவர்களான நூல் அவர்களை வாடா வள்ளி என்றார். அவர்கள் புலவருக்கு வரையாது கொடுத்ததால் புலவர் பூண்கட னாற்றிப் பகைவர் கடிமதி வெறிந்து குடுமி கொள்ளுத் தொண்டையோர் மருக. என்றார். ஆகவே புலவர் வாடா வள்ளி யென்றது திரையனுக்கு பாதுகாப்பாக விருந்த குறுநில மன்னர்களேத் தான். அவ்வாடா வள்ளியின் வளந் தரும் நாடுகள் பல கழிந்த பின்னர் இரவலனைத் திருவெஃகாவில் பொழிலில் தங்கிப்போகும்படி பாலான் சொன்னதாகப் புலவர் பாடியபோது தாம் பட்டினப்பாலையில் பாடிய வடிகளைப் பாடினார் அவை: அகலாக் காதலொடு பகல்விளை யாடிப், பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும். பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத், துணைப்புணர்ந்த மடமங்கையர் (பட்டி103-6) ‘மடவரன் மகளிரொடு பகல்விளையாடிப் பெறற்கருந் தொல்சீர்த்துறக்க மேய்க்கும், பொய்யா மரபிற் பூமலி பெருந்துவரச், செவ்விகொள் பவரோ டசைஇ. (பெரும். 387 – 90) இதனால் அவர் பாட்டன் காலத்திலிருந்து பேரன் காலம் வரை யிருந்தவ ரென்பது தேற்றம். நக்கீரரும், செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிசால், வெல்போர்ச் சோழன் இடையாற் றன்ன (அகம் 141:22-3) கிள்ளி வளவன் நல்லமர் சஅய்க், கடும்பரிப் புரவியோடு களிறு பல வல்வி, ஏறின் மன்னர் ஊர்கொளக் கோதை, மார்பன் உவகையிற் பெரிதே (அகம் 340:22-5) “செல்லா நல்லிசைப் பொலம்பூட் டிரையன் பல்பூங் கானற் பலத்திரி அனவிவள், நல்லெழில் இளநலம் தொலைய (அகம் 340-6-3) என்று பாடியதால் அவர் கரிகாலன், கிள்ளி, திரையன் ஆகிய மூவர் காலத்தி விருந்தவர். இரையனார் அகப்பொருள் இலக்கணத்திற்கு நக்கீரர் எழுதியதாகக் கூறப்படும் பழைய உரையில் நூற் செய்விந்தானின் பெயரால் நூற்குப் பெயரிட்டதற்கு காரணமாக இளந் திரையம் சதவாகவம் என இந்நூல்களின் பெயர்கள் கூறப்பட்டன. இதனால் திரையன் தன் வரலாறு கூறும் நூலை எழுதும்படி செய்தா ளென்று தெரிகிறது. இறையனார் அகப்பொருள் இலக்கணத்தைக் கொண்டு தான் புலவர்கள் கண்ணகியைப் பற்றி அகப்பாக்களைப் பாடினார்கள். திரையன் பாடிய பாக்கள் மூன்று நற்றிணையில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவன் இறையனார் அகப்பொருள் இலக்கத்திற்கு நக்கீரர் உரை கூறியபோதிருந்தானென்பது தெரியவரும். அவனுடைய தாய் நாட்டரசர்களே அவனுடைய தொண்டை நாட்டைக் காத்த குறுநில மன்னர்கள்.

  • ••

 

 

  1. கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் பல்லவர், சதகர்ணியர் அரசும் காம்போஜத்தில் கிமர் அரசும் தோற்றம்.

 

கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்

காவற் சாகாடு கைப்போன் மாணின்

ஊறின் றாகி யாறினது படுமே

உய்த்த றேற்றா னாயின் வைகலும்

பகைக்கூ ழள்ளற் பட்டு

மிகப்பஃ றீதோய் தலைத்தலைத் தருமே

-(புறநானூறு 185)

 

இப்பாடலில் திரையன், ஓர் அரசன் ஆக்ஞா சக்கரத்தைச் செலுத்தும் வழி யறியாதவனானால் அன்றாடம் பகை யென்னுஞ் சேற்றில் சிக்கிக் கொண்டு நாட்டில் பலத் துன்பங்கள் வந்தடையும் என்றான். அவன் தன் நாட்டைப் பலக் கோட்டங்களாகப் பிரித்தாங்காங்கே காவல் வைத்த தொண்டையர் படைத்தலைவர்களில் சிறந்தவன். சிறுபாணாற்றுப்படைத் தலைவன் ஒய்மானாட்டு நல்லியக்கோடன், வடவெல்லையைக் காத்தவன் வேங்கட நாட்டுப் புல்லி, தென்னெல்லையைக் காத்தவன் அம்பர், நாட்டு அருவந்தை. கரும்பனூர் கிழானும். ஒய்மான் வில்லி யாதனுங் கோட்டத் தலைவர்கள், அவர்கள் கடைச் சங்க விறுதியில் தூரக்கிழக்கிலிருந்த நாக நாட்டிலிருந்து வந்த நாகர்கள். அவர்களின் சந்ததியாரே பல்லவர். சேரன் செங்குட்டுவன் கண்ணகிச் சிலை செய்ய இமயத்திற்குப் படையெடுத்துச் சென்றபோது அவனுக்குத் துணையாக கங்கையிற் செல்லும் போர் கப்பலைச் செய்து கொண்டு வந்த நுற்றுவர் கன்னர். வட நாட்டரசர்களை வென்று அங்கே அரசு புரிந்தார்கள். அவர்களே வட மொழியில் சதகர்ணி எனப்படுவார். புகாரைக் கடல் விழுங்கிய போது மணிமேகலா தெய்வம் கிள்ளி வளவனைத் தூக்கிக்கொண்டு போய்க் காம்போஜத்தில் விட்டு அங்கே அவனுக்குப் பீலிவளை பெற்ற மகனால் கிமர் ராஜ்ஜியம் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

எழுவர் பூண்ட வீகைச் செந்துகம்

விரிகடல் வேலி வியலகம் விளங்க

வொருதான் றாங்கிய வுரனுடை நோன்ற

ணறுவீ நாகமு மகிலு மாரமுந்

துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய

பொருபுள றருஉம் போக்கரு மரபிற்

றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய

நன்மா விலங்கை மன்ன குள்ளு

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா

ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்

களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்

பிடிக்கணஞ் சிதறும் பெயன்மழைத் தடக்கைப்

பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை

நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு

தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை

வான்பொரு நெடுவரை வளனும் பாடி

முன்னாட் சென்றன மாக

-(சிறுபாணற்றுப்படை, 113-29)

இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கடையேழு வள்ளல்கள் பூண்ட ஈகை யென்னும் நுகத்தடியைத் தானொருவனே தாங்கியவன் நல்லியக்கோடன். என்றார். கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதிகமானுக்காக ஒளவையார் திரையனிடம் தூதுவந்தார் (புறம். 95) ஆகவே திரையனும். நல்லியக்கோடனும் கடைச்சங்க விறுதியிலிருந்தவர்கள். சங்கப்புலவர் ஓர் அரசனைத் தந்தை யென்றல் மரபு. அதனால் நத்தத்தனார் பாணனொருவன், தாங்கரு மரபில் தன்னும் (நல்லியக் கோடனையும்) தந்தை (திரையன்) வான்பொரு நெடுவரை வளனும் பாடி முன்னாட் சென்றனமாக வென்றதாகக் கூறினார். வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை (அகம். 85:9) எனக் கண்ணனார் கூறியதால் திரையனுடையது வேங்கட மென்பது தெரியவரும். புறத்திணை நன்னாகனார், எந்தை, ஒலிவெள் ளருவி வேங்கட நாடன்… கரும்பனூரன் காதன் மகனே (புறம். 381) என்று வேங்கட நாடனான திரையனை யெந்தை யென்றும் அவனுடைய காதன் மகன் கரும்பனூர் கிழா னென்றுங் கூறினார். அந்த மரபில் நத்தத்தனார் நல்லியக்கோடனின் தந்தை திரையனின் மலைவளத்தைப் பாணன் பாடிச் சென்றதாகக் கூறினார். உருத்திரங் கண்ணனாரும் திரையனுடைய மலைவளத்தைப் பாடி ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே. வென்று பெரும்பாணாற்று படையை முடித்தார். பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ (பெரும்பாண்.15-6, பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின், இன்குரற் சீரியா ழிடவயிற் றழீஇ (சிறுபாண்,34-5) என்ற வடிகளை நோக்கும்போது பெரும்பாணார்ற்றுப்படையைப் பின்பற்றிச் சிறுபாணாற்றுப்படை பாடப்பட்டமை தெரிகிறது. புலவர் மரக்கட்டைகளைப் புணையாகக்கொண்டு மகளிர் விளையாடுந் துறைகளில் அலைவீசுங் கடல் சூழ்ந்து போக முடியாத தன்மை வாய்ந்த தொன்மையான சிறந்த இலங்கையிலிருந்து படைக் கருவிகளுடன் வந்த நல்ல மாவிலங்கை மன்னர்களில் மறுவற்று விளங்கியவன் ஓவியர் பெருமகன் நல்லியக் கோடன் என்றார். இதனால் மாவிலங்கை யென்னும் நாட்டிலிருந்து வந்த அரசர்கள் தமிழகத்தில் அரசு புரிந்த நாடுகளுக்கு மாவிலங்கை யெனப் பெயர் வழங்கியது தெரியவரும். அவர்களின் படைகள் ஓவியக் கலையிற் சிறந்தவர்களாகப் பலக் கோயிற்களைக் கட்டியதால் ஓவியர் எனப்பட்டார்கள். டாக்டர் உ. வே. சாமிநானாதையர், ஓவியர் குடி நாகர் வகுப்பினுள் ஒரு பிரிவென்பர். என்றார். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் டாலம் மாவிலங்கையில் பசோர் நாகர் அரசு புரிந்ததாகக் கூறினார், அவர்களின் தலைநகர் மிலங்கா காஞ்சிபுரமாகும். தூரக்கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மாவிலங்கை யென்ற நாட்டின் பெயர் மலக்க (Malacca) எனத் திரிந்து தற்போது மலேயா வென வழங்குவதாகும். அங்கு கேதா வென்னுமிடத்திலிருந்த இலங்கா சுகா என்னும் நாடு சீன நூல்களில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அதன் தலை நகரத்தைச் சுற்றி மதிலில் இரட்டைக் கதவுகளும் கோட்டைக்குள் கோபுரங்களும் அரண்மனைகளும் இருந்தன. அரசன் தங்க நகைகளும் காதில் கடுக்கணு மணிந்து யானை மீது பவணி வந்தபோது முரசுகள் முழங்கின. அங்கே சுங்கை பது யென்னுமிடத்தில் பாழடைந்த நகரின் சின்னங்களிருப்பதால் அது இகங்கா சுகாவின் தலை நகரமாகக் கருதப்படுகிறது. அங்கு பல்லவரின் தூ்க்கையின் சிலையும் சிவனது ரிடபத்தின் தலையும் அதன் தெற்கே கோலா செலின்சிங்கில் இந்திய வர்த்தகர் குடியிருந்ததின் அறிகுறிகளும் புராதனப் பொருள்களுங் கண்டுபிடிக்கப்பட்டன. ஓர் தங்க மோதிரத்தில் தென்னிந்திய உருவ மிருக்கிறது. அங்கு கிடைத்த முத்திரையில் (Seal) விஷ்ணுவர்மஸ்ய யென்று பல்லவ கிரந்தத்தி லிருக்கிறது. அப்போது இந்தோசீனாவில் சென்லா (Chen-la) நாட்டின் தலைநகரத்தில் இருபதாயிரம் விடுகளிருந்தன. நகரத்தின் நடுவில் அரசவை விருந்தது. ஒவ்வொரு நகரத்தில் கோமகன் (Governor) இருந்தான். ஐம்பெருங் குழுவினர் அரசனின் அரியாசனத்தின் முன்பு மூன்று முறை தரையைத் தொட்டு வணங்குவார்கள். அரசன் அரியாசனத்தின் மேல் வரும்படி கட்டளை யிட்டதும் சர்வாங்கமாகத் தரையில் விழுந்து கும்பிட்டுப் போய் அரசனைச் சுற்றியமர்வார்கள். சபை களைத்ததும் முட்டியிட்டு வணங்கி அரசனிடம் விடை பெறுவார்கள். மக்கள் குள்ளமாகவும் கருப்பாகவு மிருப்பார். ஆனால் மகளிர் அழகாக விருப்பார்கள். மக்கள் குடுமியை முடி போடுவார்கள். காதில் கடுக்கண் அணிவார்கள். பலமுஞ் சுறுசுறுப்புங் கொண்ட அவர்கள் நாடோறும் காலையில் போர்த் தொழில் பழகுவார்கள். தூரக்கிழக்கு நாடுகளின் கோயில்களுச் சிற்பங்களும் பல்லவர் பாணியிலிருப்பதால் எச்.ஜீ. குயாரிட்ச் வேல்ஸ் பல்லவராதிக்கம் இந்தியாவிலிருந்து அங்கு பரவியதாகக் கருதுகிறார். அங்கு காணப்படும் கல்வெட்டுகள் பல்லவ கிரந்தத்தி லெழுதப்பட்டதால் டாக்டர் பி. சிஎச். சாப்ரா பல்லவர் ஆட்சிக் காலத்தில் இந்தோ-ஆரியர் நாகரீகம் அங்கு சென்றதாகக் கருதுகிறார். ஆனால் அந்நாடுகளின் கோற் சிறப்ங்களிற் காணும் பல்லவர் பாணியும் கல்வெட்டுகளில் பல்லவ கிரத்தமும் பல்லவர்களின் தாயகம் தூரக்கிழக்கு நாடுகள் தாமென்பதை உறுதிபடுத்துக்கின்றன. நத்தத்தனார் தொன்மா விலங்கைக் கருவொடு பெரிய (ஆயுதங்களோடு வந்த) நன்மா விலங்கை மன்னருள்ளும் மறுவின்றி விளங்கிய ஓவியர் பெருமகள் நல்லியக் கோடான் என்றது. அங்கிருந்து பல்லவர்கள் படை யெடுத்து வந்ததை உறுதிபடுத்துகின்றது. இதற்குச் சான்றாக புறந்தினை நன்னாகனார் பெருமா விலங்கைத்  தலைவன் சீறியாழ். இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன் (புறம்.176) எனவும், இலங்கை கிழவோன் வில்லியாதன் (புறம். 379.) எனவுங் கூறினார். அவருடையபெயரால் அவர் நாகர் இனத்திற் பறிந்தவ ரென்பது தெரியவரும். அதனால் தான் அவர் நம்மனவத்தவரான நல்லியக் கோடனையும் வில்லியாதனையும் கரும்பனுர்கிழானையும் பாடினார். நத்தத்தனார் திறல்வேல் நுதியிற் பூத்த கோணி விதல்யேல் வென்றி வேலூர் (சிறுபாண் 172.3) என்றதற்கு தச்சினார்க்கினியர் நல்லியக் கோடன் நன்பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்ட வழி அவன் இக்கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை எறியென்று கனவிற் கூறி அதிற் பூவைத் தன் வேலாக நிரூபித்த தொரு கதை கூறிற்று. இதனாயே வேலூ ரென்று யெராயிற்று என்றார்.  தொன்மா விலங்கையிலிருந்து கடல் கடந்து வந்த நல்லியக் கோடன் முதலான நாக நாட்டரசர்கள் திரையனுடைய வந்த நல்லியக்கோடன் முதலான உருத்திரங் கண்ணனார் பகைவர் கடிமதி வெறிந்து குடுமி கொள்ளும் வென்றி யல்லது வினையுடனும் படினு, மொன்றல் செல்லா வரவுவாட்டக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக (பெரும். 450 – 4) என்றார். திரையனுடைய துறைமுகப் பட்டினமான எயிற்பட்டினத்தை நல்லியக்கோடனின் சேனைகள் காத்ததால் சிறுபாணாற்றுப்படையிலும் எயிற்பட்டினம் வர்ணிக்கப்பட்டது. மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய பனி நீர்ப்படுவிற் பட்டினம் (சிறுபாண் 152-3) சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின் (பெரும்பான் 324). எயில் (மதில்) சூழ்ந்ததால் எயிற்பட்டின மென்று பேர் பெற்றது. அதில் சிலதர் காக்கக் காரணம் அது துறைமுகப்பட்டினம். அகே கலங்கரை விளக்கில் இரவில் கட்டையக் கொளுந்தியதை ஓங்கு நிலை ஒட்டகந் துயின்மடிந் தன்ன விங்குதிரை கொணர்த்த விரை மர விறகிற், கரும்புகைச் செந்தீ மாட்டி (சிறுபாண். 154-6) ஏணி சாத்திய வேற்றருஞ் சென்னி, விண்பொர நிவத்த லேயா மாடத். திரவின் மாட்டிய விலங்குகடர் ஞெகிழி, யுரவத ரழுவத் தோடுங்கலங் கரையும் (பெரும்பாண் 347-50) என்றதா லறிய வாம். கானல் வென்மனால் கடலுமாய் நிமிர்தரப் பாடல் சான்ற நெய்தல் னெடுவழி (சிறுபாண். 150-1) நாலாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை மடமோங்கிய மணல்மலி மறுசில் (பொரும்பண் 321-2) 3 முதிவே னோக்கி துளைமக எரித்த பழம்படு நேறல் பரதவர் மடுப்ப (சிறுபாண் 158-9) கள்ளடு மகளிர் பரதர் மலிந்த பல்வேறு தெருவில் (பெரும்பாண். 339, 323)

 

 

இந்த எயிற்பர்ட்டின் கோட்டத்தில் காஞ்சியும் அடங்கிருந்த தென்பைதை, செயங் கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம் காஞ்சிபுரம் என்னும் காஞ்சிவிலுள்ள கோயில்களின் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. மகாபலிபுரமும் திருக்கழுக்குன்றம் ஆமூர் கோட்டத்தைச் சார்ந்தவையென்பதை அவ்வூர்க் கோயிற் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. எயிற்பட்டினம் வேலூர், ஆமுர் (சிறுபாண் 152, 173, 188) கோட்டங்கள் நல்லியக்கோடன் ஆட்சியிவிருந்தன. அவனைக் கிடங்கிக் (திண்டிவனம்) இருந்து ஆட்சி புரிந்தவனான். பெரும்பாணாற்றுப்படையிலும்   நீர்பெயர் நெள்ளயி (மதுராந்தகம் தாலுக்காவில் உள்ள நீர் பேர் ஊர்) லிருந்து எயிற்பட்டினம் போய் அங்கிருந்து பாலாற்றின் கரையோரம் காஞ்சிக்கு போகும் வழி கூறப்பட்டது. திரையனுடைய தொண்டை நாட்டில் நல்லியக் கோடன்  முதலான குறுநில மன்னர்களில் நாடுகளிலிருந்ததால் உருத்திரங் கண்ணனார் வாடா வள்ளியின் வளம்பல தருஊர் நாடு பல கழிந்த மின்றை (பெரும் 370-1) காஞ்சிக்குப் போகுமாறு பாணன் வழிப்போக்கனிடம் கூறியதாக பாடினார். அந்நாடுகளில் வெங்கட நாட்டைச் சார்ந்த தொண்டையர் தலைவனை முதலில் அவர் வருமாறு வர்ணித்தார்.

யானை தாக்கினு மரபுமேற் செயினு

தீனிற் விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ்

சூன்மகண் மாறா மறம்பூண் வாழ்க்கை

வலிக்கூட் டுனாவின் வாட்குடிப் பிறந்த

புலிப்போத் தன்ன புல்லணற் ள்ளை

சென்னா யள்ள கருவிற் சுற்றமொடு

கேளா மன்னர் கடிபுலம் புக்கு

நாளா தந்து நிறவுதொடை தொலைச்சி

யில்லடு கள்ளின் றோப்பி பருகி

மல்லன் மன்றந்து மதவிடை கெண்டி

மடிவாய்த் தண்ணுமாம் நடுவட் சிலைப்பச்

சிலைநவி வெறுழ்ந்தோ ளோச்சி வலன் வளையூஉப்

பதன்மகிழ் தூங்குத் தூங்கா விருக்கை

-(பெரும்பாண் 134-46)

யானை தாக்கினுலும் பாம்பு மேலே பேறினாலும் நீலவானில் பலத்த யிடியிடித்தாலும் கர்ப்பமுடைய வீர மங்கை பயப்படாமல் அயலார் நாட்டில் கவர்ந்து வந்த பொருளை யுண்ணும்படி செய்யும் வாட் கொண்ட க்ஷத்திரியர் குடியிற் பிறந்த புல்வணற் காளை திரையனுடைய வேங்கத்திலிருந்து வடவெல்லையைக் காத்தான். அவன் செந்நாய் போன்ற ஆயுதத் தாங்கிய தொண்டையரோடு பகைவர் நாட்டிற் பகுந்து போய்ப் பசுக்களைக் கவர்ந்து வந்து கள்ளுக்கு விளையாகக் கொடுத்தான். தொண்டையர் கொழுத்த கட்ரவை யறுத்துச் சாப்பிட்டு மத்தள முழங்க வில்வித்தை பயின்ற உரமான தோட்களை யுயர்த்தி வளைத்துக் கூந்தாடி பகற் பொழுதில் மகிழ்ச்சியார வாரத்தோ டிருப்பார்கள்.

 

முட்காற் காரை முதுபழ னேய்ப்பத்

தெறிப்ப விளைந்த தீங்கந் தூரம்

நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு

பச்சூன் றின்று பைந்திணம் பெருத்த

எச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்

புலம்புக் கனனே புல்லணற் காளை

ஒருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை

ஊர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும்

தொடுத லேசம்புமதி முதுகட் சாடி

ஆதரக் கழுமிய துகளன்

காய்தலு முனண்டக் கள்வெய் யோனே.

-(புறம். 258. உலோச்சனார்)

பால்கொண்டு மடுப்பவு முண்ணா னாகலிற்

செறாஅ தோச்சிய சிறுகோ லஞ்சியொ

டுயவொடு வருந்து மன்னே யினியே

புர்க நிறங் கொண்ட களிறட் டானான்

முன்னாள் வீழ்ந்த வுரவோர் மகனே

உன்னாள் வென்லும் புண்ணென் றம்பு

தோன்மிசைக் கிடந்த புல்லண வோனே

-(புறம் 310 பொன்முடியார்)

உலோச்சனார் புல்லணற் காளை பகைவர் நாட்டிலிருந்து பசுக்களைக் வேர்ந்ததையும் ஊனுங் கள்ளு முண்டதையும் கூறினார். பொன்முடியார் புல்லணலோன் யானையைக் கொன்றும் அடங்காமல் தன் உடம்பின் புண்ணில் தைத்த அம்புவின் நினைவில்லாவன் குடுமி, கொண்டவன். என்றார். தூரக் கிழக்கு நாட்டவரும் குடுமி வைத்திருந்ததைக் கண்டோம். கிழக்கு நாட்டிலிருந்து வந்தவனே யாவான். சங்கப் புலவர்கள் அரசகர்களுக்கு காரணப் பெயர்கள் வைத்துத்தான் பாடினார்கள். சிறிய தாடி மொண்டவனாக விருந்ததால் புல்லணற் காளை என உருத்திரங் கண்ணனாரும் உலேச்சனாரும் புல்லணலோன் என பொன்முடியாருங் கூறனார்கள். அவன் ஒல்லியா விருந்ததால் அவனைப் புல்லி யெனக் கல்லாடரும் மாமூலருங் கூறினார்கள்.

வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புதுவீச்

சூரியா குளைத்தலை பொலியச் சூடிக்

கறையடி மடப்பிடி காணத் தலறக்

களிற்றுக்கண் னொழித்த உவகையர் கலீசிறந்தது

கருங்கால் மராஆத்துக் கொழுங்கொம்பு பிளந்து

பெரும்பொளி துடங்கும் நியம மூதூர்

நறவுதொடை நல்லில் புதவிமுதற் பிணிக்கும்

கல்வா விளையர் பெருமகன் புல்லி

வியன்றலை நன்னாட்டு வேங்கடம்.

-(அகம் 83:1-10)

கல்லாடர் காட்டில் பெண் யானை யலறிக் கதறும்படி ஆண்யானைக் கன்றுகளை பிடித்து வந்து கள்மணம் வீசும் நல்ல வீட்டு முற்றத்திற் கட்டிவைக்கும் கல்லா விளையர் பெருமகன் புல்லியின் நல்ல நாடு வேங்கடம் என்றார். வினைதவில் யானை விறற்போர்த் தொண்டையர், இன மழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் எருவி வேங்கடத் தும்பர் (அகம் 213:1-3) என்றதால் தொண்டையர் வேங்கடத்தில் யானைகளுக்குப் போர்த் தொழில் கற்றுக்கொடுத்தது தெரியவரும். கல்லாடர், போருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர் வழையம் லடுக்கத்து (குறுந்தொகை. 260;4-6) என்றதால் அவர் கல்லா விளையர் யெனத் தொண்டையரைக் கூறியது தெரியவரும். அவர்களின் தலைவன் புல்லி யென்பதை மாமூலரும் கூறினார்.

உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்

வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ

அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்

அண்ணல் யானை வெண்கோடு கொண்டு

நறவுநொடை நல்லில் நாண்மகிழ் அயரும்

கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்

மழபுலம் வணக்கிய மாவண் புல்லி

விழவுடை விழுச்சீர் வேங்கடம்

(அகம் 61:6-13)

மாமூலர் அம்பெய்துக் கொன்ற யானைகளின் தந்தங்களாற் செய்த கட்டிலின் மிதர கள்மணம் வீசும் நல்ல வீட்டில் நாடோறும் அயர்ந்திருக்கு் கள்வர் கோமான் புல்லி. என்றார். மதுரைக் கணக்காயனார் பாண்டியனுடைய சேனைகள் அயலார் பொருளைக் கவர்ந்து வந்ததால் அவனை ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன், ஏவல் இளையர் தலைவன் (அகம் 342, 6-7)என்றார். இதனால் இன்றும் பாண்டி நாட்டில் வாழ்ந்துவரும் கள்ளர் க்ஷத்திரிய ரென்பது தெரியவரும். ஆகவே மாமூலர் பொருவார் மண்ணெடுத் துண்ணும் தொண்டையரைக் கள்வர் என்றார். அவர் கரிகால் வளவனொடு வெண்ணி பறந்தலைப் பொருதுா புண்ணாணிய சேரலாதன் (அகம் 55:10-1) என்றதால் கரிகாலனைப் பட்டினப்பாலையிலுந் திரையனைப் பெரும்பாணாற்றுப்டையிலும் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் காலத்தவராவார். ஆகவே மாமூலர் கல்லாடர் கூறிய புல்லியைத்தான் உருத்திரங்கண்ணனார், புல்லணற்காளை யென்றர். மாமூலர் புல்லியின் நாட்டில் இடையர் வழிப்போக்கர்க்குப் புளிச்சாதமும் (அகம் 311) வரகு சோறும் பாலும் (அகம் 393) கொடுத்ததாகக் கூறினார். உருத்திரங்கண்ணனாரும் புல்லணற் காளையின் மலையில் இடையச் வழிப்போக்கர்க்குத் தினைச் சோறும் வரகு சோறும் (பெரும் 168, 193) கொடுத்ததாகக் கூறினார். புல்லி நன்னாட்டு வேங்கடம் எனக் கல்லாடரும் (அகம் 83) மாமூலரும் (அகம் 311, 393) கூறியதால் திரையனுடைய வடவேங்கட வெல்லையைக் காத்த குறுநில மன்னன் புல்லி யென்பது தெரியவரும். தெற்கே காவிரி யெல்லையைக் காத்த குறுநில மன்னன் அம்பர் கிழான் அருவந்தை யென்பது வரும் பாடலால் தெரியவரும்.

வெள்ளி தோன்றப் புள்ளுக்குர வியம்பப்

புலரி விடியற் பகடுபல வாழ்த்தித்

தன்கடைத் தோன்றனு மிலனே பிறன்கடை

அகன் கட் டடாரிப் பாடுகேட் டருளி

வறனியா னீங்கல் வேண்டி யென்னரை

நீனிறச் சிதாஅர் களைந்து

வெளிய துடீஇயென் பசிகளைத் தோனே

காவிரி யணையுந் தாழ்நீர்ப் படப்பை

நெல்வினை கழனி யம்பர் கிழவோன்

நல்லரு வந்தை வாழியர்

புல்லிய வேங்கட விறல் வரைப் பட்ட

ஓங்கல் வானத் துறையினும் பலவே

(புறம். 385)

அம்பர் கிழான் அருவந்தையை (பி. ம். அம்பலகிழான வெநதையைக்) கல்லாடனார் பாடியது. திரையனுடைய தென் னெல்லையை அருவந்தைக் காத்ததால் வடவெல்லையைப் காத்த புல்லியின் வேங்கட மலையில் பெய்த மழைத்துளியின் எண்ணிக்கையை விடப் பல நாட்கள் அம்பர் வாழியர் என்று கல்லாடர் பாடினார். அருவந்தை அம்பர் (அம்பரம் அல்லது அம்பலம் என்றும் சிதம்பர) நாட்டின் அரச னென்பதைச் சிதம்பரம் நடராஜர் கோயிர் கல்வேட்டுகள் காட்டுகின்றன. அங்கு இராஜ ராழ சோழன் காலத்தி லேற்பட்ட கல்வெட்டுகளில் ஆளுடையனாயநாருக்கு உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர்னாட்டு அம்பர குவந்தை அறையன் நீறணிய வழங்குளானான காலிங்கராயனும் எனவும் உய்யக்கொண்டார். வளநாட்டு அம்பர் நாட்டு அம்பரருவந்தை அரையன் சிவேதவன பேருமானானத் தொண்டைமான் எனவும் வரைந்திருப்பதால் அம்பர் கிழான் அருவந்தை தொண்டைமான் இளந்திரையனின் தொண்டையர் தலைவர்களில்  ஒருவனான குறுநில மன்னன் என்பது தெரியவரும். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்லரர் கோயிற் கல்வெட்டுகளில் ஓய்மா நாட்டு சேவுரான வென்றும் கிரும்பனூர் வாணிகன் ஆதித்த வென்றும் வரைந்திருப்பதால் நன்னாகனாரால் பாடப்பெற்ற ஓய்மானாட்டு நல்லியக்கோடன், கரும்பனூர்கிழான் காலத்தினிருந்து அவர்களுடைய நாடு நகரங்களின் பெயர்கள் மாறாமல் வழங்கி வந்தது தெரிய வரும். ஆனால் திரையன் பிறந்த வரலாறு தான் காலப்போக்கில் மாறி விட்டது.

நச்சினார்க்கினியர், திரையனென்னும் பெயரையுடையவன் என்றதனால், நாகபட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து அவன் யான் பெற்ற புதல்வனை என்செய்வே னென்றபொழுது, தொண்டையை அடையாளமாக கட்டிக் கடலிலேவிட அவன் வந்து கரையேறின் அவற்கு யான்  அரச வுரிமையை எய்துவித்து நாடாட்சிகொடுப்பலென்று அவன் கூற அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின், திரையனென்று பேயர்  பெற்ற கதை கூறினார் என்றார். இதைக்குறித்து டாக்டர் உ.வே. சாமி நாதையர், அதில் நாககன்னியென்றது மணிமேகலை 24-ஆம் காதையின் 57ஆம் அடியிற் கூறப்பெற்ற பீலிவளையே யென்றும் அதற்குத் தக்க ஆதாரம் சாஸனத்திலும் நூல்களிலு முள்ளதொன்றும் சொல்லுகின்றனர் என்றார். ஆனால் மணிமேகலையில் கிள்ளி வளவன் பிலத்துவாரததின் வழியாக நாகலோகஞ் சென்று நாககன்னியையும் புணர்ந்ததாகக் கூற வில்லை. இளங்கோவடிகள் சோழன் (கிள்ளி வளவன்) கன்னி (பீலிவளை)யைப் புணர்ந்ததாக கூறினார். அதனால் அவளை நாக நாட்டும் வள்ளி யென்றது. நாளடைவில் அவளை நாக கன்னியாக்கியதால் கோயில் மரத்தடியில் நாக கன்னியை சுற்றி வந்தால் பெண்களுக்கு குழந்தை பிறக்கு மென்ற சம்பிரதாயமும் தமிழ்நாட்டிற் குடிகொண்டு விட்டது. பதினோராம் றூற்றாண்டிலிருந்த புலவர்களும் கிள்ளிவளவன் நாககன்னியைப் புணர்ந்ததாகப் பாடிவிட்டார்கள். தளவழிக் குகையினிற் பொதி பிலத்தின் வழியே தனிநடத் துரகர் தங்கண்மணி கொண்டவனும் (கலிங்கத்துப் பரணி, சயங் கொண்டார்) பணம் புணச்த்த மோலியான் கோமகளைப் பண்டு, மணம்புணர்ந்த கிள்ளி வளவன் (குலோத்துங்க சோழனுலா. ஒட்டக்கூத்தர்) இதேபோன்ற கதை காம்போஜத்திற்குப் பெயர் வந்த காரணங் கூறச் சொல்வதுதான் வியப்பிலும் வியப்பு. ஆர்ய டெக்கானி லிருந்து கம்பு சுவயம்புவ வென்ற வரசன் வந்து பிலத்து வாரத்தின் வழியாக நாகலோகஞ் சென்ருன். அவனுக்கு நாகராஜன் தன்மகளை மணஞ் செய்து கொடுத்து நாட்டையும் சிருஷ்டித்துக் கொடுத்ததால் அவன் பேரில் காம்போஜம் எனப் பெயர் வந்ததாகக் கதை கூறப்படுகிறது. சாத்தனாரும் இளங்கோவும் கோவலனில் முன்னோரை மணிமேகலா தெய்வம் கடலிலிருந்து காப்பாற்றியதாகக் கூறியதுபோல் இந்தோ சீனாவிலுள்ள பௌத்த நூல்களும் அவளுடைய வாற்றலைக் கூறுகின்றன. அக்காலத்தில் அங்குப் பொன் விளைந்ததால் சுவர்ணபூமி (Chryse the golden of the greeks) என்று பேர் பெற்றது. அங்கு பொன் கொண்டுவரப் போன காசிப் பிராமணன் சம்கா சென்ற கப்பல் உடைந்த பின் மணிமேகலா ஓர் கப்பலைச் சிருஷ்டித்துப் பிரயாணிகள் யேற்றியனுப்பினாள். நாடுகடத்தப்பட்ட இளவரசன் ஜனகா சென்ற கப்பலுடைந்தபின் அவனை மார்போடணைத்துக் கொண்டு போய்க் கரைச் சேர்த்தாள் மணிமேகலா. (Towards Angker. by H. G. Quaritch wales ? 23-5,) சாத்தனார் கோவலனின் முன்னோர் ஏழு நாட்கள் கடலில் நீந்தித் துன்பம் அனுபவித்தபின் அவரைக் காப்பாற்றும்படி இந்திரன் மணிமேகலாவை அனுப்பியதாகக் கூறியது போல் சம்காவும் ஜனகாவும் ஏழுநாட்கள் கடலில் நீந்தித் துன்பமடைத்தபின் அவர்களை மணிமேகலா காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆகவே இந்திரன் மணிமேகலாவின் துணை கொண்டு கப்பலை யுடைத்துப் பிரயாணிகளைக் காப்பாற்றி அவர்கள் பெளத்தர்களாக்கினான் என்பது தெரிகிறது. அந்த முறையில் தமிழ் நாட்டிலும் காம்போஜத்திலும் பௌத்த மதத்தைப் பரப்ப இந்திரனுலடைய குழ்ச்சியால் புகாரைக் கடல் விழுங்கியபோது மணிமேகலா கிள்ளிவளவனைத் தூக்கிக்கொண்டு போய்க் காம்பேசஜத்தில் விட்டு அவனை மீண்டும் பீலிவளையைக் கூடும்படி செய்து அவர்களுக்குப் பிறந்த மக்களால் அங்கே கிமர் நாடும் தமிழகத்தில் பல்லவ நாடு உருவாகும் படி செய்தா ளென்பது மிகையாகாது.

 

விரிதிரை வந்து வியனகர் விழுங்க, ஒரு கனி போயின னுலக மன்னவன் (மணி25:205-6) என்று சாத்தனார் புகாரைக் கடல் விழுங்கிய போது கிள்ளி வளவன் குழந்தையைத் தேடிக்கொண்டு தனிவழியே போனதாகக் கூறினார். அவன் பெயர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று வழங்குவதால் அவன் நாகப்பட்டினத்தில் குளக்கரையில் தூங்கிக் கொண்டிருந்தபோது மணிமேகலா தெய்வம் அவனைத் தூக்கிக் கொண்டு போய் காம்போஜத்தில் விட்டுவிட்டா ளென்பது தெரிகிறது. அதற்கப்புறம் அவளைக் காணாததால் புலவர்கள் அவன் இறந்துவிட்டா னென்ற சந்தேகத்தில் பாடினார்கள். பாடுநர் போலக் கைதொழு தேத்தி, இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார். மண்டமச் கடக்குந் தானைத் திண்டேர். வளவற் கொண்ட கூற்றே என்று மாறோக் கத்து நப்பசலையாரும். நனிபே தையே நயனில் கூற்றம், விரகின்மையின் வித்தட் டுண்டனை வளவனென்னும் வண்டுமூசு கண்ணி, இனை யோற் கொண்டனை யாயின். இனியார் மற்றுநின் பசிதீர் போரே எனறு ஆடுதுறை மாசாத்தனாரும். கலஞ்செய் கோவே கலஞ்செய்கோவே கொடிநுடங்கு யானை நெடுமா வளவன். தேவ ருலக மெய்தின னாதலின் அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி. வனைதல் வேட்டனை யாயி வெனையதுஉம் இருநிலந் திகிரியாப் பெருமலை மண்ணா வனைத் லொல்லுமோ தினக்கே என் ஐயூர் முடவனாரும் கிள்ளிவளவன் இறந்திருப்பா னென்றி ஊகத்தினாற்றான் பாடினார்கள். (புறம். 226, 227, 228) ஆனால் எருக்காட்டுர் தாயங் கண்ணனார்.

 

அறுதொழி லந்தன ரறம்புித் தெடுத்த

தீயொடு விளங்கு நாடன் வாய்வாள்

வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்

எறிதிரைப் பெருங்க லிறுதிக்கட் செலினும்

தெறுகதிர்க் கனலி தென்றிசைத் தோன்றினும்

என்னென் றஞ்சலம் யாமே வென்வேல்

அருஞ்சமங் கடக்கு மாற்றலவன்

திருந்துகழ னோன்றாட் டண்ணிழ லேமே

– (புறம் 397: 20-7)

என்றார். கிள்ளி வளவன் முடிவில் கடலில் தீவில் (மணிபல்லவத் தீவில்) சென்றாலும், கதிரவன் தென்திசையில் தோன்றினாலும் என்ன வென்று பயப்படமாட்டோம், கிள்ளியின் தாள் நிழலி லிருக்கிரும் என்று புலவர் பாடியது கிள்ளி வளவனை மணிமேகலா காம்போஜத்திற்குத் தூக்கிச் சென்றா ளென்பதைக் காட்டுகிறது. பி. ஜீனராட்டி பிர்சி எழுதிய கம்பு சுவயம்புவாவின் கதையில் *(* R. Jeannerat De Beersk’s Angker, Rules In Cambodal, Chapter IlI The Legend of Kambu Svayambhuva.) ஒரு நாள் கண்ணீர் விட்டுக் காய்ந்து போய் இமைகள் மூடிக்கொண்டு விழிகள் மழுங்கி உணர்ச்சி யற்றுப் பிணத்தின் விழியைப்போல வெளுத்திருந்த இருகண்கள் திறந்து சுற்றியுள்ள பூமியைப் பார்த்தன. கடைசியில் தன் தாய் நாட்டை விட்டதிலிருந்து முதன் முதலாக கம்பு சுவையம்புவாவின் இரத்த மிழந்த இதழ்களில் புன்முறுவல் பூத்தது. கம்புதன் யாத்திரையின் குறிகோலாகத் தான் சாக விரும்பிய லோகத்தைக் கண்டான். காரணம் சிவனே அவனுக்குக் கொடுத்த மேராவை யிழந்து விட்டான் என்றார். இராபச்ட் ஜேகாசே கம்பு மன்னனும் நாக தேவியும் என்ற கதையில் A (A Robbert J. Casey’s Four Fares of Siva (The Detective Story of a vanished Rac:) Chapter VIll King Kambu and the Snake Lady.) காட்டில் வாழும் டாக் கனவில் நாகராஜன் மகள் சொன்னபடி ஓர் தானியத்தைக் கண்டு ஆற்றங்கரையில் நட்டுவிட்டு, அங்கேயே உட்கார்ந்திருந்தால் விதை முளைத்து அறுவடை செய்த பின்னர் என்ன செய்வதென்று அவன் தடுமாறிக் கொண்டிருந்தபோது தன் பின்னால் ஒருவன் கவலை தோய்ந்த முகத்தோடு உடம்பைக் கதிரவனுக்குக் காட்டாமல் ஜொலிக்கு மாடையால் போர்த்திருந்ததற்கு அதிசயப்பட்டு யார் நீ என்று கேட்டான். புதியவன், என் பெயர் கம்பு, நான் ஆர்ய டெக்காவின் அரசன். பெரிய கடவுள் சிவன் என்னுடைய மாமனார். அவர் நெடுங்காலமாக உலகத்தாரோடு கோபமாக விருந்தார்: என் நாட்டில் நெருப்புக் காற்றை வீசி தானியத்தை யழித்தார். மக்களும் சிவன் கொடுத்த என் அழகிய மனைவியு மாய்ந்தார்கள். இங்கே நீ செய்த வித்தை யெனக்குப் புதியதல்ல. இதன் பெயர் நெல் இதை மனிதர்கள் சாப்பிடுவார்கள் என்றான். மீகாய் சமவெளியில் காம்போடிய ரொஜ்ஜியம் எப்படி யுண்டாயிற் ரென்று சொல்ல அந்நாட்டுப் புராணக்கதை முக்கியமானதா? அந்தக் கதையிலுள்ள சம்பாஷனைகள் முற்றிலும் சரியானதாக வில்லாமருக்கலாம். ஆனால் சரித்திர சம்பவத்தைக் குறித்து இக்கதையிற் சிறு குறிப்பாவது கிடைக்கிறது. அது எப்படி ஓர் இந்திய விளவரசன் ஆர்ய டெக்கா வென்னுந் தென்னாட்டில் மழையில்லாமற் பஞ்ச மேற்பட்ட பின் ஆசியாவின் இந்த மூலைக்கு வந்தா னென்பதைக் கூறுகிறது. அவன் பெயர் கம்புவாகவும் அல்லாமலு மிருக்கலாம். முதல் அரசனுடைய பெயரி லிருந்து கம்போடியா என்னும் பெயர் வந்த தென்பதாகப் புராணாங்களிற் கூறப்படுவது அவ்வரசனுக் கவ்வளவு மரியாதை செலுத்துவதாகும். ஆனால் இக்கதையிற் கூறியவைகளுக்குச் சான்று எதுவாக விருந்தாலும் இது மிகாங் பிரதேசத்தாருடைய பழைய சம்பிர தாயப்படி கிமர் நாகரீகத்திற்கு மூலமானவர் இந்தியரென்பதைக் காட்டுகிறது என்றார். எச்.ஜி. இராலின்சன், கிருஸ்து சகாப்தத்திற்கு முன்பு இந்துவர்தகர்கள் மிகாங்கதி வழியாகக் கம்போடியாவிற்கு வந்தார்கள். அங்கே குடியேறியவர்கள் தங்களே நாடு கடத்தப்பட்ட இந்திய இளவரசர்க்கும் நாகர் இளவரசிக்கும் நிகழ்ந்த திருமணத்தினாலுண்டான சந்ததியாராகக் கண்டுபிடித்தார்கள். அவர்களின் சந்ததியார் காம்போறார் அல்லது கம்போடியர், என்றார்.* (* Cambodia was visited by Hindu traders who made their way up Mekong river befoere the Christian era, the settlers traced their origin to a marrlage between an exiled Indian princes and a Naga princess. The offspring were kambujas or Combodians-H. G. Rawin- son’s India, A Short Cultural History.) ரோமன் சரித்திராசிரியர் பிலினி (pilny) கி.பி. 77இல் சிலப்பதிகாரத்தின் ஆசிரியச் இளங்கோவடிகளின் சகோதரான கேரள மன்னன் கரிகால சோழனுடைய மகளை மணஞ்செய்து கொண்டதாக எழுதினார். (The Sunday Standard, 22.8. 1968) கரிகால சோழனுடைய மகள் ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தியைக் காவிரி வெள்ளத்திலடித்துக் கொண்டு போன செய்தியை இளங்கோவடிகளும் (சிலப் 21:11-4) பரணரும் (அகம் 76, 135, 222, 236, 376, 396) வெள்ளி வீதியாரும் (அகம் 45) கூறினார்கள். ஆகவே கிள்ளி வளவன் இருந்தது கி.பி. முதலாம் நூற்றாண்டில் எனப் பிளினியின் நூலினால் தெரிகிறது. ஆனால் இராலின்சன் கிருத்து சகாப்தத்திற்கு முன்பு கம்போடியாவில் குடியேறியவர்கள் இந்திய விளவரசன் நாக விளவரசியின் சந்ததியாரென்பதும், கம்பு சுவயம்புவா நாககன்னியை மணந்ததாகக் கதை வழங்குவதும் மணிமேகலா தெய்வம் கிள்ளி வளவனைத் தூக்கிப் போய்க் காம்போஜத்தில் விட்டு அவளைப் பீலிவளையைக் கூடும்படி செய்து அவர்கள் பெற்ற மகனால் அங்கே கிமர் ராஜ்ஜியம் உண்டான தென்பதை உறுதிபடுத்துகின்றன. இதைக் கம்போடியாவில் கிமர் உண்டாக்கிய முதல் தலைநகரமான பாழடைந்த ஸ்ரீ தேவாவின் (srI Deb) சிதைந்து கிடந்த கல்வெட்டும் உறுதிபடுத்துகிறது. அதில் பல்லவ கிரந்தத்தில் சமஸ்கிருதத்தில் வரையப்பட்டிருப்பவை

  1. ….மத்….தம் (அல்லது மந்தம்) தர்ம்மாஸ்-கொக்த யே
  2. …. ந்…. கன்னிர் சிஸ்-தஸ்ய கர்த…
  3. ….வ்….வெட்டி-அகிலம் சகோத்யம்
  4. ….வ்…ஸ-சிஸ்நாக (ந) ஸ்ய யாஸ்-கவே (அல்லது ல)
  5. …(க்ர்) இதன்-ன்ரபசின்யேன குர்வ்வதா புன்யச (ங்கயம்?)
  6. ….(ப்ர?) (ஜ்) ஆ பாலனே சூரன் சத்யதயன்விதன்

இதை டாக்டர் பி.சி.எச். சாப்ரா வருமாறு மொழி பெயர்ந்தார்.

*(*Expanslon of Indo-Aryan Culture during Pallava Rule (as evidenced by Inscription) by Dr. B. Ch. Chhabra, Joint Director Gener a of Archaeology In India. p. 70-1.)

  1. …அவனுக்குக் கூறப்பட்ட நீதிகள்
  2. ….முனிவர் கன்னிக்கும் பிறந்தவ (அதாவது வியாச முனிவர்) அவரால் செய்யப்பட்ட,
  3. ….சொல்ல வேண்டியவேல்லாம் அறிந்தவர் (எது சமயமோ)
  4. … எது (அல்லது யார்) போற்றக் கூடியதோ.
  5. எடுக்கப்பட்டது அறம்புரியம் அரசனால்.
  6. ….குடிகளைக் காப்பதி லிருவரும் வீரர், வாய்மை யருளுடையர்.

டாக்டர் பி. சி. எச். சாப்ரா நினைப்பது போல் கன்னிககுப் பிறந்த வியாச முனிவரை இக்கல்வெட்டில் கூறவில்லை. அவரே சூரன் என்றதற்கு முன்னுள்ள வார்த்தை பிரஜா பாலனே வென்றிருந்தால் சூரன் என்ற சொல் ஒரே, அப்பனுக்குப் பிறந்த இரண்டு இளவரசர்களைக குறிப்பதாகத் தோன்றுகிறது என்றார். அவ்விரண்டு இளவரசர்களில் ஒருவன் தமிழ்நாட்டில் காஞ்சியில் அரசு புரிந்த தொண்டைமான இளந்திரையன் மற்றவன் கம்போடியாவில் அரசு புரித்தவனாவான். இறையனார் அகப்பொருள் இலக்கணத்திற்கு நக்கீரர் கூறியதாகக் கூறப்படும் பழைய வுரையில் நூல் செய்வித்தவன் பெயரால் நூலின் பெயரிடப்பட்டதற்கு உதராணமாக சதவாகனம் இளந்திரையம் என இரு நால் கள் கூறப்படுவதால் இரந்திரையனின் சகோதரன் சதவாகனனாக விருக்கலாம். சகோதர்களான அரசர்கள் தமிழ் நாட்டிலும் காம்போஜத்திலும் அரசு புரி்ததால் தமிழ்நாட்டிலும் தூரக் கிழக்கு நாடுகளிலும் சக ஆண்டு கல்வெட்டுகளிற் கூறப்பட்டிருக்கிறது. சக ஆண்டு ஆரம்பமாகும் கி.பி. 77 ஆம் ஆண்டில் எழுதி முடித்த நூலில் பிலினி கரிகால சோழனையும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையுங் கூறியிருப்பதால் திரையன் ஆட்சி ஆரம்பமான போதுதான் சக ஆண்டும் ஆரம்பமானதென்பது தெரிகிறது. டாக்டர் சாப்ரா மேற்கூறிய கல்வெட்டைச் சையாமியச் ஸ்ரீ தேவா நகரின் கடைக்கால் கல் என்று சொல்வதாகக் கூறினார். இதே ஸ்ரீ தேவா நகரைத்தான் முதன்முதலில் உண்டான இந்தியர் நகரம் என்று எச்.ஜி. குயாரிட்ச் வேல்ஸ் கூறினார்.*( Towards Angker. In the Foot Steps of the Indlan invaders by H. G. Quaritch Wales. rector of the Greater-India Research Committee Chapter VII. A lost Indian City Revealed. P. 93-110.) இதன் அமைப்புபோல் வேறெந்த சையாமின் நகரமில்லை என்றார். ஸ்ரீதேவாவின் அமைப்பும் பட்டினப்பாக்கம் மருவூர்பாக்கம் என்ற இரு பகுதிகளைக் கொண்ட புகார் போலவும் சிவகாஞ்சி விஷ்ணு காஞ்சி போலவும் இரு பகுதிகளைக் கொண்டது. ஆகவே கிள்ளியின் சந்ததியாரால் உண்டாக்கப்பட்டதே ஸ்ரீ தேவா. தேவேந்திரனால் புகார் அழிக்கப்பட்டுக் காம்போஜத்தில் கிமர் ராஜ்யம் உருவானதால் அதன் தலைநகருக்கு ஸ்ரீதேவா என்று தேவேத்திரனின் பெயரிடப்பட்டதாகும். காஞ்சியிலும் தேவராஜா கோயில் கட்டப்பட்டது. வரதராஜப் பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் தெவப் பெருமாள், அருளாளப் பெருமாள் எனக் கூறப்பட்டிருக்கின்றன. பிற்கலத்திற்றான் வரதராஜப் பெருமாள எனப் பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் காஞ்சியில் மணிமேகலா கோயில் காமாட்சிக் கோயிலாக்கப்பட்டது. காம்போஜத்திலும் தேவராஜா கோயில் விஷ்ணுவாலய மாக்கப்பட்டது. பல்லவர் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் கட்டியது போல் காம்போஜத்தில் இரண்டாவது ஜயவர்மன். அமரேந்திரபுரத்தில் கம்பிரேஸ்வரர் கேரயிற் கட்டினான். ஏகாம்பர நாதரை நாயன்மார் கச்சியே கம்பன் என்றார்கள். கோயிற் கல்வெட்டுகள் நகரம் காஞ்சிபுரம் உ.டையார் திருவேகம்ப முடையார் எனக் கூறுகின்றன. ஓர் கல்வெட்டில் ‘கள்ளக் கம்பர்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. கோவை ஜில்லாவில் சாமளாபுரம் கோயிற் கல்வெட்டில் கம்பனார் கோயில் எனக் கூறப்பட்டிருக்கிறது. இராமாயணமெழுதிய கம்பரின் பெயருக்குக் கூறுங் காரணங்களிலென்று அவர் கம்ப நாட்டில் பிறந்தவ ரென்பது. காஞ்சியில் கம்பு நதி பாய்வதால் காஞ்சி நாடே கம்ப நாடாகத் தெரிகிறது. ஆகவே காம்போஜத்தில் நாக கன்னினயை மணந்ததாகச் சொல்லப்படும் கம்பு சுவயம்புவர கிள்ளிவளவனே யாவான். அவன் அங்கு தானே தோன்றியதால் சுவபம்புவா வெனப்பட்டான். கிள்ளிவளவன் என்பவை சோழர்களின் குடிப்பெயர்களானதால் அவனுடைய இயற்பெயர் கம்பு வாகும். ஓர் அரசனின் பெயரைக் கோயிலின் மூலவர்க்குச் சூட்டுதல் மரபு. அதனால் கிள்ளிவளவனின் இயற்பெயர்ல் அவனுடைய சந்ததியார் கட்டிய கோயிலில் எழுந்தருளியிருக்கு மிறைவனுக்குக் கம்பரேஸ்வரம் எனக் காஞ்சியிலும், கம்பிரேஸ்வரர் எனக் காம்போஜத்திலுந் திருநாமஞ் சூட்டினார்கள். பல்லவ மன்னன் கம்பவர்மன் நத்திவர்மனின் புதல்வனும் நிருபதுங்கனின் தம்பியுமாவான்,

சூரவாதித்தி சோழன் நாகலேகஞ் சென்று நாகராஜகுமாரி காந்திமதியை மணத்து அங்கிருந்து வெற்றிலைப் பயிரைச் சோழ நாட்டிற்குக் கொண்டுவந்தானென்று வேறொரு கதை கூறுவது போல் காம்போஜத்திலும் வேறொரு கதை கூறப்படுகிறது. தொன்மையான புராணத்தின் படி கெளத்தின்ய சோமா வென்ற நாக விளவரசியை மணந்து கம்பு ஜாவின் அரசைக் கண்டான், அவன் துரோணரின் மகன் அசுவத்தாமனிடமிருந்து அடைத்த வேலை நட்டான். மற்றொரு கதை சுதாநாயகன ஆதித்ய (சூரிய) வம்ச அரசன் இந்திரபிரஸ்தர்வின் மகனாகச் செய்கிறது. எதுவாக விருந்தாலும் கம்புஜாவில் இந்து ராஜ்ஜியம் முதன் முதலில் கி.பி. முதலாவது அல்லது இரண்டாவது நூற்றுண்டிலுண்டானதாக நாம் கண்டுபிடிக்கிறோம். அது காம்போடியாவின் தேன்பாகத்தைப் பிடித்திருந்தது, பூ-னன் (Fu-nan) என்று சீனர்களால் அழைக்கப்படுகிறது. *(*An Advanced History of Irdia by R. C. Majumdar, H. C. Ray- Chaudhurl, Kalikinkar Datta. P. 207) துரோணரின் மகன் அசுவத்தாமனின் வேலைக் கெளந்தியன். அடைந்தா னென்பதற் கேற்ப துரோணரின் சந்ததியார்ர் பல்லவர் எனக் காஞ்சிக் கைலாச நாதர் கோயிற் கல்வெட்டு கூறுகிறது. இந்நூல் 22-ம் ப. காண்க).

 

காம்போஜ மன்னர்கள் மலைமேல் கோயில் கட்டியதால் லைல (மலை – ராஜா வெனவும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் மதேஸ்வரா வென்னும் லிங்கத்தை வழிபட்டு வந்தார்கள். இந்திர வர்மன் கி, பி. 881ல் பேகாங்கில் இந்திரேஸ்வரா வென்னுங் கோயில் கட்டினான். அதில் சிவனுக்குந் தன் பெற்றோர்களுக்குஞ் சிலை வைத்தான். அவனுடைய மகன் யசோதர வர்மன் (889-910) அங்கோர் என்னும் உலகப்பிரசித்திப் பெற்ற யசோதரபுரத்தை யுண்டாக்கினான். அவனுந் தன் பெற்றோர்க்கும் தன் தாயின் பெற்றோர்க்கும் அங்கே சிலை வைத்தான். அவனுடைய மகன் இராஜேந்திரா வர்மனும் (944-68) தேவராஜா கோயில் கட்டினான். காம்போஜ மன்னர்கள் தம் தாயின் பெற்றோர்களுக்குச் சிலை வைத்தது அவர்களின் முதல் மன்னன் தன் தாயின் பெறறோர்களின் நாட்டை யடைந்தா னென்பதைக் காட்டுகிறது. இராவலின்சன் அங்கு குடியேறியவர்கள் நாடு கடத்தப்பட்ட இந்திய இனவரசனுக்கும் நாக விளவரசிக்கு மேற்பட்ட விவாகத்தினா லுண்டான சந்ததியாராகக் கண்டதாகக் கூறியதும், தமிழ்நாட்டில் கிள்ளிவளவன் பிலத் துவாரத்தின் வழியாக நாகலோகஞ் சென்று நாக்கன்னியை மணந்ததாகக் கதை கூறுவது போல் காம்போஜத்திலும் கம்பு, சுயம்புவா – ஆசியடெக்காவிலிருந்து வந்து பிலத் துவாரத்தின் வழியாக நாகலோகஞ் சென்று நாகராஜன் மகளை மணந்ததாகக் கதை கூறுவதும், இளங்கோ பீலிவளையைக் கன்னி யென்றது போல் ஸ்ரீ தேவா கல்வெட்டு கன்னி மக்கள் இருவர் பிரஜைகளைக் காப்பதில் சூரர்கள் என்று கூறுவதும், சாத்தனார் புகாரைக் கடல் விழுங்கிய போது கிள்ளி தனி வழியே போனான் என்று மணிமேகலா தெய்வம் தீவநிலகைக்குச் சொன்னதாகக் கூறுயதும் மணிமேகலா குளக்கரையில் தூங்கிக் கொண்டிருந்த கிள்ளிவளவனைத் தூக்கிக்கொண்டு போய்க் காம்போஜத்தில் விட்டு அங்கே அவனுக்குப் பீலிவளை பெற்ற மகனின் சந்ததியார் கிமர் என்பதைக் காட்டுகின்றன. கிள்ளிழார் என்றது கிமர் Khmer) என்றானது போலும்! போந்தான் சந்ததியார் என்றது அவர்களுக்கு பூனான் (Fu-nan) என்ற பெயரை யுண்டாக்கியது போலும் அவர்கள் நாம் பெண்வழியில் வந்தவர்கள் என்று எண்ணியதால் நாம் பெண் (Phnom Penn) என்று கம்போடியாவின் தலைநகருக்குப் பெயரிட்டார்கள் போலும்! அவர்களின் நாடு பிரிந்ததில் தாய்நாடு என உண்டான பெயர் தாய்லாந்து (Thai land) என்றானது போலும்! சம்பாவதி காத்த புகாரின் பெயரான சம்பாவின் பெயரால் சம்பா (Champa) என இன்னொரு நாட்டிற்குப் பெயருண்டானது போலும்! சாத்தனார் நாக நாட்டரசன் வளைவணன் தேவி வாச மயிலை வயிற்றில் தோன்றியவள் பீலிவளை யெனவும் சாவகத்தின் மன்னன் பூமி சந்திரன் மகன் புண்ணிய ராஜன் எனவும் அவனுடைய தலைநகரம் நாகபுரம் எனவும் கூறியதால் நாக நாட்டில் அக்காலத்தில் தமிழ் பெயரே வழங்கிய தென்பது தெரிகிறது.

 

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்  அலெக்சாண்ட்ரியா பூகோளவாசிரியர் டாலமி கூறிய இந்தோ சீனாவின் சாதியாரின் பெயர்கள் இந்திய பெயர்களாகவே காணப்படுகின்றன. வென்றார் குயாட்ரிச்வேல்ஸ் (H.G, Quaritch Wales Teward‘s Angkor. P.26) டாலமி மலேசியாவில் மேற்குக் கடற்கரைலுள்ள முக்கிய துறைமுகமான தக்கோபாவின் பெயரைத் தக்கோவம் என்றார். மூன்றாவது நூற்றாண்டு சீன நூல்கள் அதை தகு-லி-ஓ (Thaku-li-O) எனவும் அங்கிருந்த பூனனின் அரசனரின் (King of FuNan) தூதன் இந்தியாவிற்குப் போனதாகவும் கூறுகிறது. தக்கோபாவிற்குச் சுமார் பத்து கல் தொலைவில் நகோபா நதி பின் வடகரையில் ஒர் தமிழ் கல்வெட்டு காணப்பட்டது. அதில் காவிரிப் பட்டிணத்தினாருகிலுள்ள மணிகிராமம், நாங்கூரும் விஷ்ணு கோயிலும் அவனினாரண மென்னாங் குளமுஞ் சேனாமுக சேனைகள் காத்ததுங் கூறப்பட்டிருக்கின்றன. அங்கு சிதைந்திருக்கும் பல்லவ சிற்பங்களை ஊரார் பிர நரை என்கிறார்கள். இது அவனினார்ணந்திற்குச் சமஸ்கிருதத்தில் பிரித்வி நாரணம் என்பதின் திரியாகும். பல்லவ மன்னன் தெள்ளாற்றில் வென்ற நந்திவர்மனுக்குஅவனினாரணன் என்ற பெயருமுண்டு. ஆகவே மலேயாவின் அவனினாரணம் பல்லவருடைய ஊராகும் அதற்குக் கிழக்கில் நகோர்ன் ஸ்ரீதம்மராத் பொருட்காட்சி சாலையில் அந்நகர சிவாலய கல்வெட்டொன்று வரையப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டையிருகில் நார்த்த மலை கல்வெட்டில் தமிழராயன் எனக் கூறப்பட்டிருக்கிறது. தமிழர் ராஜன் கட்டிய கோயில் தமிழராயர் அழகேஸ்வரர் எனப் பேரிடப்பட்டதாகும். அவன் பெயரால் அந்நகர்க்கு நகரம் ஸ்ரீ தமிழராயர் எனப்பேர் வழங்கியது. நாளடைவில் நகோர்ன் ஸ்ரீ தம்மராத் என்றன தாகும். (The Hindu 22-10-1967) குயாரிட்ச்வேல்ஸ், நகோன் ஸ்ரீ தம்மரத்தில் இரண்டு இந்துகோயில்கள் பிராமணர் வசமிருக்கின்றன. அதன் அமைப்பு ஐாவாவில் தீங் பிளாட்டாவிலுள்ள இந்து கோயிலின் கற்குகைப் போலிருக்கிறது. சம்பா, மலேயா, ஐவாவில் பல்லவர் ஆதிக்கம் பரவிருந்தது. மலேயா பெனின்சுலாவின் மேற்குக் கரையில் பல்லவர்களின் சிற்பங் களுடைய கட்டிடங்கள் நிலைத்திராவிட்டாலும் தக்கோபா (தக்கோலம்) தீவில் நாங்கள் தோண்டிப்பார்த்த கோயிலின் கடைக்கால்களினால் அவைகள் பல்லவர்களின் கட்டிடங்கள் என்பதில் ஐயமில்லை. மாமல்லபுரத்தின் கற்கோயில்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது பந்தன் விரி கூடாவைச் சுற்றிக் குடியேறிய பல்லவர்களின் கலையுணர்ச்சியினால் தோன்றியவை அங்குள்ள கட்டிடங்களென்பதில் ஐயமில்லை என்றார் (Towads Angkor P. 153-4) ஆனால் அவரும் மற்றவரும் நினைப்பது போல் பல்லவர்கள் இந்தியாவிலிருந்து அங்கு போகவில்லை. அங்கிருந்து தான் வந்தார்கள். இராஜேந்திரனின் மெய்க்கிர்த்தியவன், ஸ்ரீ விஜயம் பண்ணை, தொன்மலையூர், மாயிருடிக்கம், இலங்கா சோகம், மாப்பாளம் லிம்பங்கம், வளைப்பந்தூர். தக்கோலம், மாலிங்கம், இலாமுகி தேசம் மாநக்கவரம், கடாரம் ஆகிய தூரக் கிழக்கு நாடுகளையும் ஊர்களையும் பிடித்ததாகக் கூறுகிறது. இதிற் கூறிய இலங்கா சோகம் குயாரிட்ச்வேல்ஸ் பல்லவர்கள் ஆதிக்கத்திலிருந்ததாக ஏழாம் நூற்றாண்டின் சீன நூல்களிற் கூறப்பட்டதாகச் சொன்ன இலங்கா சுகா (Lanka Suka) (இந்நூல் 101ம் பக்கம் காண்க) இதில் கூறிய மாலிங்கம் சிறுபாணாற்றுப்படையில் கூறிய மாவிலங்கையின் திரிபாகும். அதன் துறைமுகப்பட்டினம் தக்கோலமாகும். இராஜேந்திரனின் மெய்க்கிர்த்தியில் கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும். எனக் கூறப்பட்டிருக்கிறது. தலை-இடம், முதல் – இதனால் மலேயாவின் தக்கோலத்தில் கலைக் கோவில்களிருந்ததும், அது பல்லவர்களின் முதல் தக்கோல மென்பதும், அங்கிருந்து போர்க் கப்பலில் வந்த நல்லியக்கோடன் முதலான மாவிலங்கை மன்னர்களின் சேனைகள் காஞ்சியைக் காக்க அதன் வடக்கே பதினைந்துகல் தொலைவில் காவல் வைத்த ஊர்க்குத் தக்கோலம் எனப் பேரிட்டதும் தெரியவரும். முதலாம் இராஜாதி ராஜன் மெய்க்கீர்த்தி இலங்கையர்க் கிறைவன் பொலங்கழம் பல்லவன் என்றதால் மாவிலங்கை மன்னர்களில் சக்கரவர்த்தியாகத் தொண்டைமான் இளந்திரையன் காலத்திலிருந்து காஞ்சியில் அரசு புரிந்த பல்லவ மன்னர்களிருந்து வந்தது தெரியவரும்.

 

  1. கனகசபை, டாலமி நூலினால் சோழர்கள் தங்கள் தலைநகரான உறையூரிலிருந்து ஆதாரபூர்மாக சோழர் நாகர் குடும்பங்களின் கலப்பு மணத்தால் வந்த சந்ததியாரான சேரர் நாகர்களால் அப்புறப்படுத்தப்பட்டார்கள் என்றார். (The Tamils Eighteen Hundred Years Ago. P.44 Mc Crindles Ptolemy. P. 184) டாலமிசோர் நாகர் (Sore Nagas) என்றது சோழர் நாகர். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியார் இந்தியாவைப் பிடித்த காலத்திலும் உறையூரில் (திருச்சியில்) அரசு புரிந்தவன் தொண்டைமான்தான் கல்வெட்டு (120) துவரை மாநகர் நின்று போந்த தொன்மை பார்த்துக் கிள்ளி வேந்தன், நிகரில் தென்கவி நாடு தன்னில் நிகழ்வித்த நிதியாளர் எனக் கூறுகிறது. இதனால் கிள்ளிவளவன் வடபால் முனிவன் தடவினுட் டோன்றி துவரையாண்டு நாற்பத் தொன்பது தலைமுறைக்கு முன்பு வந்த வேளிரின் வம்சத்தவள் பீலிவளை யென்று அவளுடைய தொன்மை பார்த்து அவளைக் காந்தர்வமணம் புரிந்தானென அக்காலத்தவர் அறிந்திருந்தது தெரிகிறது. தூரக்கிழக்கு மன்னர்களும் இந்திய மன்னர்களும் ஒருவர்க்கொருவர் அறிமுகமானவர் என்பதும் அவரவர் பரம்பரையும் ஆற்றலும் அறிந்தவ ரென்பதும் சாவக மன்னன் புண்ணிய ராஜன் கிள்ளிவளவனின் நட்பை நாடி தூதனுப்பியதால் (மணி 25: 14) அறியலாம். சேரன் செங்குட்டுவனும் கண்ணகி சிலை செய்ய இமயத்திற்குப் படையெடுத்துப் போகு முன்பு தூரக்கிழக்கு மன்னர்களான நூற்றுவர் கன்னரின் துணையை நாடி தூதனுப்பினான்.

செங்கோல் வேற்றன் திருவிளங் கவையத்துச்

சஞ்சயன் புகுந்து,தாழ்ந்துபல ஏத்தி

ஆணையிற் புகுந்து ரைம்பத் திருவரெடு

மாண்வினை யாளரை வகைபெறக் காட்டி

வேற்மை யின் றி தின்னொடு கலந்த

தூற்றுவர் கன்னருங் கோற்றாழில் வேந்தே

வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது

கடவு ளெழுதவோர் கற்கே யாயின்

ஓங்கிய இமையத்துக் கற்கால் கொண்டு

வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு

யாந்தரு மாற்றல மென்றன ரென்று

வீங்குநீச் ஞாலம் ஆள்வேர்ய் வாழ்கென

அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும்

கடலந் தானைக் காவல னுரைக்கும்

பால குமரன் மக்கள் மற்றவர்

காவா நாவிற் கனகனும் விசயனும்

விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி

அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக்

கூற்றங் கொண்டிச் சேனை செல்வது

நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்

கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன

வங்கப் பெருநிரை செய்க தாமென

– (சிலப் 26: 144- 65)

சஞ்சயன் செங்குட்டுவனின் ஆணையின்படி நூற்றுவர் கன்னரை யழைத்து வந்த செங்கோல் வேந்தே. நின்னோடு வேற்றுமையின்றி நட்புகொண்ட நூற்றுவர் கன்னரும் வானவன் (சேரன்) வடதி்சைப் போவது கண்ணகித் தெய்வத்தின் சில செய்ய ஓர் கற்கே வானதால் இமயத்திலிருந்து கற்கொண்டு வந்து கங்கையில் நீராட்டி வந்து தரும் செங்குட்டுவன், பாலகுமரன் மக்கள் கனகனும் விசயனும் புதிய மன்னர்களோடு சேர்த்து அருந் தமிழின் ஆற்ற வறியாதவர்கள். கூற்றுவனைக் கொண்டு செல்வது இச்சேனை என்று நூற்றுவர் கன்னரிடம் கங்கையைக் கடக்கக் கூடிய பெருங் கப்பல்களைச் செய்யும்படி சொன்னான். ஆகவே நூற்றுவர் கன்னரின் கப்பலினாற் செங்குட்டுவன் கங்கையைக் கடந்து இமயத்தில் கண்ணகிச் சிலைக்கல் கொண்டு வந்ததோடு வடவேந்தர்களை வென்றான்.

 

போரில் வென்ற சேனாபதிக்கு நாடளித்துக்குறுநில மன்னனாக்குதல் முறை. அந்தமுறையில் செங்குட்டுவனோடு சேர்ந்து வடநாட்டு வேந்தர்ளோடு போர்புரிந்து வென்ற நூற்றுவர் கன்னர் ஆங்காங்கே தாங்கள் கைப்பற்றிய நாடுகளை யாளத் தொடங்கினார்கள். அவர்களே வடமொழியில் சதகர்ணி யெனப்படுவார். V. கனகசபையும், சிலப்பதிகாரத்திற் கூறிய நூற்றுவர் கன்னர்கள் வடமொழியில் சதகர்ணி எனப்பட்டார். அவர்கள் கி.பி. 77 முதல் 133 வரை 56 ஆண்டுகள் மகத் நாட்டை யாண்டார்கள் என்றார். சிலப்பதிகாரத்தில் கரிகல சோழன் மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன், பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும் (சிலப் : 101-21 சேர்த்துப் புகாரில் பட்டிமண்டபங் கட்டியதாகக் கூறியதாலும் கி.பி. 77ல் பிலினி கரிகாலனைக் குறிப்பிட்டதாலும் கி.பி 77 லிருந்து மகத நாட்டையாண்ட சதகர்கணிகள் சேரன் செங்கட்டுவனுக்குத் துணைவந்த நூற்றுவர் கன்னர் என்பது தெளிவாகின்றது. மேலும் கனகசபை, சதகர்ணிகள் மூன்று கலிங்கங்களின் அரசர்கள் அவர்களின் சாம்ராஜ்ஜியம் தற்கால தெலுங்கு இராஜ்ஜியத்திலிருந்து வங்காள விரிகூடாவிற் கப்பால் அரக்கன் வரை பரவிருந்தது. காசியில் தோண்டி யெடுக்கப்பட்ட சாஸணத்திலும் இது கூறப்பட்டிருக்கிறது. பரம்பரையாக கர்ண வென்ற பெயர் இந்தியாவில் மட்டுமின்றி கிழக்கந்திய தீவுகள் (Eastern Archipelagu) முழுவதும் கூறப்படுகிறது. இது கர்ணர்கள் மூன்று பகுதிகளான கடற்கரையோரங்களைக் கொண்டிருந்து கடற்படைகளை யுண்டாக்கிக் கிழக்குத் தீவுகளில் அதிகாரஞ் செலுத்தினாக்க ளென்பதை நிரூபிக்கிறது. உபகாரியைக் கர்ணன் என்று மகாபாரதத்திற் கூறப்படும் கர்ணனவிட மகத தேசத்துக் கர்ணனைத் தான் குறிக்கும் என்றார். (The Tamils Eighteen Hundred Years Ago, P. 49) ஆனால் கனகசபை கருதுவதுபோல் சதகர்ணியர் இந்தியாவிலிருந்து போய்க் கிழக்குத் தீவுகளில் அதிகாரஞ் செலுத்தவில்லை. அங்கிருந்துதான் இவ்கு வந்தார்கள். காஞ்சி கைலாச நாதர் கல்வெட்டு துரோணரின் பல்லவனின் சந்ததியார் பல்லவர் என்றது போல் பாரதத்திற் கூறிய கர்ணன் (கன்னன்) சந்ததியார் கர்ணர் (கனனர் என்பது தவறாகாது. அவர்கள் நூற்றுக்கணக்கானவர் சேரன் செங்குட்டுவனுக்குத் துணை வந்ததால் நூற்றுவர் கன்னர் அல்லது சதகர்ணர் எனப்ப பட்டார்கள். நூற்றுக்கணக்கான வாகனமாகப் போர்க் கப்பல்களைச் செய்து வந்ததால் சதவாகனர் எனப்பட்டார்கள். அவர்களுடைய தலைவன் சாலிவாகன னாவான். அவர்களிடம் கங்கையைக் கடக்க கூடிய கப்பல்களைக் கட்டும்படி சேரன் செங்குட்டுவன் சென்னதற் கேற்ப கி.பி. 80-89ல் அலெக்சாண்டிரியாவிலிருந்த கிரேக்க மாலுமி யெழுதிய பெரிப்லஸ் என்னும் நூலில் சங்கரா கொலத்தியே பேந்த என்னும் பெரிய கப்பல்களில் கங்கைகும் சொர்ணபூமிக்கும் போக்குவரத்து நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. கனகசபையும் மகத தேசத்து கர்ணரிடம் சம்பராஜ்ஜியஙட வங்காளவிரிகூடாலின் அந்தப் பக்கமுள்ள அரக்கன் (பர்மா) வரைப் பரவியிருந்ததாகக் கூறினார். வசிஸ்திபுத்ர சதகர்ணியின் நாணயங்களிருக்கும் அரக்கன் சதகர்ணியர் பர்மாவின் மேற்குப் பகுதியலுள்ள அரக்கனிலிருந்து வந்தவர் மகத தேசத்தை யாண்ட மதகர்ணியர் என்பதைக் காட்டுகிறது. அந் நாணயங்களில் தமிழ் மொழி யெழுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவைகளைப் பாலியாக கனகசபை கூறினார். குயாரிட்ச் வேல்ஸ் மலேய பாலினேசியன் கலை யுணர்ச்சியைக் குறிப்பிட்டார். ஆகவே தூரக் கிழக்கு நாடுகளில் பாலிமொழி பேசியவர் பல்லவர் எனப்பட்டதாகவும் தெரிகிறது. ஆகவே சதகர்ணியர் பல்லவராவார். அவர்கள் பர்மா முதல் ஜாவா சுமத்ரா வரை நூற்றுக் கணக்கானவர் சேரன் செங்குட்டுவனுக்குத் துணை வந்து வடநாட்டரசர்களை வென்று ஆளுக்கொரு இராஜ்ஜியத்தை இந்தியாவில் ஏற்படுத்திக் கொண்டார்கள். பிற்காலத்தில் அவர்களுடைய சந்ததியார்க்கும் சண்டை போடுடுக் கொண்டார்கள்.‘

செந்தமிழ் பராபவ வருடம் கார்த்திகை –மார்கழி இதழ்களில் ஞானாதிகக்மச் சாது இரங்ககூன் எழுதிய பல்லவர் காலவரை யறை ஆராய்தற்குறியது. அவர் கி,பி. 1-100 பல்லவர் தென் தக்ஷிணம் ஆண்டு வந்தார்கள். குறும்பர் (பல்லவர் பாலாற்றின் முகத்துவாரத்தைக் கோட்டைகளும் மாளிகைகளுங் கட்டினார்கள் என்றார். இதனால் நல்லியக்கோடன் எயிற்பட்டின முகந்துவாரத்தைக் கட்டினான் என்பது தெரிகிறது. (இந்நூல் 102வது பக்கம் பார்க்க) அண்மையில் பாலற்றின் முகத்துவாரத்தின் கட்டிடங்கள் வாசுவசமுத்திரம் என்றும் ஊரில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறும்பர் நல்லியக்கோடனின் வழியில் வந்தவர்களானதால் அவர்கள் வன்னியர் எனப்படுகிறார்கள். அவர்களின் கடைசி அரசர்கள் காத்தவராய சேதுராயன் என்ற சகோதரர்கள் செங்கற்பட்டுக்குக் கிழக்கே ஏழு கல் தொலைவிலுள்ள திருவடிச்சூலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். அவர்களுடைய நாட்டிலிருந்த கொண்டைக்கட்டி வேளாளர் விஜயநகர அரசனிடம் புகார் செய்தார்கள், விஜயநகர அரசன் படையெடுத்து வந்து குறும்பர்களால் தோற்கடிக்கப்பட்டுத் திரும்பினான். ஆனால் வியலவர் போலிகாரைக் கொண்டு குறும்பரை அடிமைப்படுத்த முனைந்தான் பொலிகார் குப்பாச்சி யென்ற காசியை விஷங் கொடுத்து காந்தராயனைக் கொல்லும்படி செய்து குப்பாச்சியையும் கொன்று விட்டார்கள். சேதுராமன் குப்பாச்சி வம்சத்தாரை ஏரியில் கொன்றதால் அதற்கு பிணயேரி என்று பெயர் வழங்கி வருகிறது. அவர்களைப் புதைந்த விடத்திற்குக் குப்பாச்சி என்று என்று பெயர் வழங்கி வருகிறது. முடிவில் போலிகாரிடம் சேதுராயன் தோற்றுப்போனான்.

 

ஞானாதிக்கமச்சாது, கி.பி.1-100 காஞ்சிபுர்த்தில் விஷ்ணுபூபன் ஆண்டான். ஹஸ்தி வர்மன் வேங்கை (Vengi) யிலாண்டான். கி, பி. 78 – முக்குண்டிப் பல்லவனின் (முன்னவன் சாலிவாகனன், கி. பி. 85 தெலிங் கானா தேசத்தின் கரையினின்று அநேகர் ஜாவாவிற் குடியேறினார்கள் என்றார். இராலின்சன் குஜராத், கலிங்கம், ஒரிசாவிலிருந்து இந்துக்கள் ஜாவாவிற்குக் குடியேறினார்கள். ஜாவாவினர் கி. பி.75-ஆம் ஆண்டு மேற்கிந்தியாவிலிருந்து அஜிச்சு (Aji Saka) என்ற இளவரசன் கீழ் வந்தார்கள். தொத்து வியாதி யேற்பட்டதால் திரும்பிவிட்டதாகக் கறுகிறார்கள் என்றார். கிள்ளி வளவன் காலத்தில் ஜாவா மன்னன் பூண்ணிய ராஜன் மணிபல்வவத்திலிருந்த புத்த பீடிகையை வணங்கித் தன் பழம் பிறப்பை யறிந்தான். அந்த புத்த பீடிகை இந்திரனால் அங்கு வைக்கப்பட்டது, (மணி. 8: 52) அவன் இந்திரன் வழியில் வந்தவன் அவனுடைய தலைநகர் நாகபுரம். (மணி. 24:164 9) ஆகவே ஜாவா நாட்டிலிருந்து செங்குட்டுவனுக்குத் துணையாகப் படையெடுத்து வந்த சாலிவாகனனின் சந்ததியார் தேவேந்திரனின் அமராவதியின் பேரால் ஆந்திராவில் துறைமுகப்பட்டின முண்டாக்கினார்கள். ஞானாதிக்கமச்சாது கி. பி. 90 கோதமிப் புத்ர சதகர்னி அமராவதித் தோப்புக்கு அஸ்திவாரம் போட்டான். கி. பி. 200-300 முக்குண்டி பல்லலன் ஆளுகை அமராவதித் தோப்புக் கட்டினவன். தரணி கோட்டையைத் தலைநகரா யுடையவன். பல்லவ வம்மிசத் தலைவன் சாலிவாகன வரசனின்னும் நான்காவதாவன் என்றார். ஆகவே சதகர்ணியரும் பல்லவ வம்சத்தவரேயாம். அமராவதியில் புதைந்திருந்த கற்சிலைகளிற் சில உருவங்கள் இடுப்புவரை மனித உருவமும் இடுப்பின் கீழ் பாம்பு வாலுப் கொண்டவை. சில ஆண் பெண் உருவங்களின் தலைகளின் பின்னால் ஐந்து அல்லது ஏழு தலை நாகங்கள் படமெடுத்த உருவங்களிருக்கின்றன. ஆகவே அமராவதியை யுண்டாக்கியவர் நாகர்களாவார். காஞ்சி நாட்டிலும் எயிற்பட்டினத்தை யுண்டாக்கிய நல்லியக்கோடனை ஓவியர் (நாகர்) பெருமகன் என்றதால் அமராவதியும் எயிற்பட்டினமும் கட்டியது பல்லவர்களால் தான் என்பது தெரியவரும். ஆனால் அமராவதியை ஜாவாவிலிருந்து வந்தவர்களும் எயிற்பட்டினத்தை மலேயாவிலிருந்து வந்தவர்களும் உண்டாக்கினார்கள். குயாரிட்ச் வேல்ஸ் மலேயாவில் தகோன் ஸ்ரீ தம்மராத் நகரரி லுள்ள இரண்டு கோயில்கள் ஜவாவில் தீன் பிளாட்டோவின் கோயில்கள் டோலிருப்பதாகக் கூறினார். இராலின்சன் ஜாவாலில் தீன் பிளாட் டோவிலுள்ள கோயில்களில் பல்லவர் சாளுக்கியர் செல்வாக்கிருந்ததாகக் கூறினர். ஆந்திராவில் வேங்கியை யாண்ட சாணக்கிய வம்சத்தவனான குலேத்துங்க சோழினைப் பல்லவனேன்று காஞ்சி கைலாச நாதர் கல்வெட்டு கூறுகிறது. (இந்நூல் 7ஆம் பக்கம் காண்க) இதனை ஞானாதக்கமச் சாதுவும் கிபி. 1077 காஞ்சியில் இராஜேந்திர பல்லவராயனின் பட்டயம் என்றார். இவன் இராஜேந்திர சோழனென்னும் முதலாம் குலோத்துங்க சோழனே. பல்லவர்கள் குடியேறிய நாட்டின் மொழியைப் பேசியதால் பல்லவரும் சதகர்ணியரும் ஆந்திரர்களாகக் கருதப்படுகிறது. மழலைத்திரு மொழியில் சில வடுகும் சிலதமிழும். குழறித்தரு கரு நாடியர் குறுகிக்கடை திறயின் (கலிங்கத்துப்பரணி 43) என்றால் குலோத்துங்கன் தெலுங்கு பேசியவன் என்தை யறியலாம். அவனுடைய தந்தை வேங்கி வேந்தன் இராஜராஜன். ஞானாதிக்கமச்சாது (கி..பி.400 வேங்கைபுரம் பல்லவரின் றலையாய நகரம். கி.பி. 489 பாடாமியன் மலைச்சாதன மொன்றில் அரசியற் தலைவன் பல்லவனென்று குறித்துள்ளது. சாளுக்கிய வேந்தன் புளகேஷியின் பட்டம் கி.பி. 500-600, பல்லவா வேங்க தேசம் ஆண்டார்கள். கி.பி. 600-700 கலிங்க தேசத்தில் பல்லவ அரசாட்சி, பல்லவரால் சளுக்கிய வேந்தன் அப்ஜெய மடைந்தான். கி.பி. 608. சளுக்கிய வேந்தன் விக்ரமாதித்தன் காஞ்சித் தலைவனானான். கி.பி. 610 சளுக்கிய வேந்தன் குட்ஐ விஷ்ணு வர்த்தன் வேங்கைப் பல்லவரை ஜெயித்தான் என்றார். இக்குப்ஐ விஷ்ணுவர்த்தன் வேங்கியி லாண்டதால் அவனுடைய சந்ததியார் கிழைச் சாளுக்கியர் எனப்பட்டார்கள். அவனுடைய அண்ணன் புளகேசி வாதாபியில் ஆண்டதால் அவனுடைய சந்ததியார் மேலைச் சாளுக்கியர் எனப்பட்டார்கள். அவனுடைய தம்பி ஐயசிம்மனின் சந்ததியார் நாதி சாளுக்கியர். மேலே சாளுக்கியன் புளகேசிவி மூன்றாம் மகன் விக்கிரமாதித்தன். காஞ்சிப் பல்லவரை வென்றான். அவனுடைய வழியில் வந்த பீமாவின் சந்ததியார் கல்யாணி சாளுக்கியர். குப்ஜ விஷ்ணு வர்தன் வழியில் வந்த கீழைச் சாளுக்கிய வம்சத்தில் பிறத்த இராஜேந்திர குலோத்துங்க சோழன்  வைக் காஞ்சி ஏகாம்பர நாதர் கோயிற் கல்வெட்டு பல்லவன் எனக் கூறுகிறது. இதனைத் தான் ஞாதிக்கமச் சாதுவும் கி.பி.1077 காஞ்சியில் இராஜேந்திர பல்லவராயனின் பட்டயம் என்றார். குலோத்துங்கனை ஒட்டக் கூத்தர் பொற்றுவரை இந்துமரபிலிருக்குந் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்தவன் என்றார். அவனுடைய சந்ததியாரைத் தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் சம்புவராயன் எனக் கூறுகின்றன. (இந்த நூல் 7ஆம் பக்கம் காண்க) ஆகவே மேலை, கீழை, நாசி, கல்யாண சாளுக்கியர் சம்புமகாரிஷி கோத்திரத்தாரான பல்லவர்களே யாம்.

ஞானாதிக்கமச்சரது கி.பி. 725-755 இராஷ்டிரக் கூட்டன் தந்திதுர்கள் காஞ்சியைத் தன்னாட்சிக் குள்ளாக்கினான். (குறிப்பு இராஜபுத்திர ஜாதியின ரென்று சொல்லப்படுகிற இராட்டர் அல்லது  இராட்டவர் (Rathor or Rathaur) யாதவ குலத்தி ரென்றும் இராட்டர் என மருவி வடமொழியில் இராஷ்டிரிக்கர் அல்லது இராஷ்டிரக்கூட்ட ரெனத் திரித்ததாகவும் தெரிகிறது.) என்றார். யாதவர்களும் க்ஷத்திரிய வம்சத்தவர். (இந்நூல் 71ம் பக்கம் காண்க) மேலும் அவர் கி.பி.755 தந்திவர்மன் காஞ்சி யரசனை வென்று அவன் சேனை முறிந்து கலைத்தோட செய்தான், அதற்குப் பின் இருமுறை: பல்லவரை வென்று காஞ்சியைக் கைக் கொண்டான். வீரமஹேந்திர பல்லவன் ஆளுகை என்றார். இத்தந்திவர்மன் (தந்திதுர்கன்) சிற்றப்பன் கிருஷ்ணா (768-772) எல்லோரவில் கைலாஸ் கோயிலை யுண்டாக்கினான். அது காஞ்சி கைலாசநாதர். கோயிலைப் போலிருப்பதால் இராட்டிர கூட்டரும் பல்லவ வம்சத்தவ ராவார். கிருஷ்ணாவின் பேரன் கோவித்தன் III (793-814) காஞ்சியில் பல்லவ மன்னன் தந்திவர்மனை வென்றான். ஆனால் அத்தந்திவர்மனின்  மகன் நந்திவர்மன் III அக்கோவிந்தன் III யின் மகன் நிருபதுங்க அமோகவர்ஷாவின் மகள் கங்காவை மணத்தான்.அவளுடைய மகன் நிருபதுங்க அலராஜிதனுக்கும், சோழ பாண்டியர்களுக்கும் அரைசூர்.  வேம்பில், திருப்புறம்பிய முதலிய இடங்களிற் போர் நடந்ததில் சோழ பாண்டயர்கள் சுவாதின மடைந்ததால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவவரை மறுக்கஞ் செய்யும் என்று திருவாய் மலர்த்தருளியதாக து.அ. கோபிநாத ராவ் கூறினார். அப்படிச் சுந்தரர் பாடியது கோவிந்தன் III தந்தி வர்மனை வென்றதால் சிற்றரசர் பல்லவனுக்குத் திறை கெடுக்காததால் என K. S. ஸ்ரீநிவாஸ் பிள்ளை கூறினார். (தமிழ் வரலாறு முற்பாகம், ப.77). இதுவரை நிருபதுங்கனின் அரசி பிரித்வி மாணிக்கம் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் திருமல்லம்பள்ளி சோமசேகர சர்மாவிடமிருந்து ஆந்திர பிரதேச அரசாங்கம் ஆர்க்கியலாஜிகல் அண்டு மியூசியம் டிப்பார்ட் மெண்டார் வாங்கிய நிருபதுங்கனின் ஆட்சியின் ஆறாம் ஆண்டு செப்பேட்டில் பல்லவரின் அதிகாரி பரஞ்ஜயாவின் மனைவி பிரித்வி மாணிக்கம் எனவும், மகாபலிபுரம், கடற்கரை கோயிலைக் கட்டியது நரசிம்ம வர்மன் எனவும் பரமேஸ்வர வர்மன்வின் மகன் நந்திவர்மன் எனவும் கூறப்பட்டிருக்கின்றன. இதுவரை அக்கோயிலை இராஜசிம்மன் கட்டியதாகவும் பரமேஸ்வரனுக்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவன் நந்திவர்மன் II எனவுங் கூறப்பட்டுவந்தன. (The Sunday Standard 12-11-1967). ஆகவே பல்லவ நாட்டின் வரலாறு அறுதியிட்டுக் கூறமுடியாமல் தானிருக்கிறது.

 

பிரித்வி மாணிக்கத்தை யரசி யென்றதால் அவளுடைய கணவன் பரஞ்சயன் அரசனாவான். அவனே சோழர் வம்சாவளியைப் புதுப்பித்த விஜயாலயன் அல்லது ஆதித்தன் எனத் தெரிகிறது. பரம்+ ஜயம் – மேலான வெற்றி. விஜய + ஆலயம் – வெற்றிக் கோயில். தஞ்சையில் விஜய தேவதை துர்க்கையின் கோயில் கட்டியதால் விஜயாலயன் எனப்பட்டான். மேற்கூறிய செப்பேட்டில் பரஞ்ஜய பாலிகுலம் என்னும் ஆகாயத்தில் ஆதித்தன் எனக் கூறியதால் பரஞ்சயன் விஜயாலயனின் மகனாகக் கூறும் ஆதித்தன் எனவும் தெரிகிறது பாலிகுலம் என்றதால் பரஞ்சயன் பல்லவ வம்சத் தவனாவான். அவன் சோழர் வம்சாவளிடைப் புதுப்பித்ததால் தான் விஜயாலயன் சந்ததியாரன சோழவரசர்களுள் பரகேசரி, இராஜகேசரி என்னும் பெயர்கள் அடுத்தடுத்துத் தரிக்கப்பட்டு வந்தன. ஆதித்தன் மகன் கன்னர தேவன் இராட்டிர கூட்ட வரசரும் கன்னரதேவன் எனப்படுவதால் விஜயாலயன் இராட்டிரகூட்டர் வம்சத்தவனாகவும் இருக்கலாம். அதனால் தான் இராட்டிரகூட்டர் தேவகிரியில் கட்டிய துர்க்கை கோயிலை விஜயாலயன் தஞ்சையில் கட்டினான் எனலாம். அவனுடைய சந்ததியார் தொடர்ந்து கீழைச் சாளுக்கியருக்குப் பெண் கொடுத்ததாலும் மேலைச் சாளுக்கியரைப் போல் ஆதித்தன் என்ற குடிப்பெயர் கொண்டதாலும் அவர்கள் சாளுக்கியர் வழியில் வந்தவர்களாகவும் தோன்றுகிறது. ஆகவே விஜயாலயன் தன்னை ஆதித்த (சூரிய) குலத்தவனாகக் கொண்டு சூரிய குலத்தவனான – சோழனாக்கிக் கொண்டவனே தவிர சங்க காலத்திலிருந்த சோழரின் வழியில் வந்தவனாகான்.

தூரக்கிழக்கில் நாக நாட்டிலிருந்து பல்லவரும், நூற்றுவர் கன்னரும் (சதகர்ணரும்) இந்தியாவில் அரசாளத் தொடங்கிய காலத்திலிருந்து சாலி வாதன சக ஆண்டு ஆரம்பமானது. அப்போது தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியின் காலத்தில் இறையனார் அகப்பொருள் இலக்கணமும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அரங்கேற்றியதோடு மூன்றாவது தமிழ்ச் சங்கம் முடிவடைந்தது.

 

இயேசு பிறந்ததும் கண்ணகி பிறந்ததும் ஒரே காலக்தில். இயேசு தென்னரசி இந்தத் தலைமுறையார்க்குந் தீர்ப்புக் கூற வீறுகொண்டெழுந்து மக்களைக் கண்டிப்பாள். (St Matthew 12:42, St Luke 1l:31) என்றது கண்ணகியைத்தான். இயேசு இஸ்ரேயிலி லுள்ளவர்களுக்கு . வீழ்ச்சியும் பிறகு உயர்வு முண்டாக்கப் பிறந்தார். (st Luke 2:34) அதனால் தான் கி.பி. 68ல் இஸ்ரேயலின் ஜெரூசலத்தை ரோசமர்கள் பிறகு மகமதியர் பிடித்துக் கொண்டார்கள். இப்போது யூதர்கள் தங்கள் ஐரூசலத்தை யடைந்தார்கள், அதேபோல் கண்ணகியும் இந்தியர்க்கு வீழ்ச்சியும் பிறகு உயர்வு முண்டாக்கப் பிறந்ததால். கி.பி 77ல் பல்லவரும் பிறகு அன்னியரும் ஆண்டு இப்போது இந்தியா சுதந்திர நாடானது.

 

  • ••

 

 

 

 

 

  1. கடைச் சங்க முடிவு

 

அடலருந் துப்பின்………….

…………….. குருந்தே முல்லையென

றிற்தான் கல்லது பூவு மில்லை

கருங்கால் வரிதே யிருங்கதீர்த் தினையொ

டிந்தான் கல்ல துணாவு மில்லை

துடியன் பாணன் பறையன் கடம்பனென்

றிந்தான் கல்லது குடியு மில்லை

ஒன்னாந் தெவ்வா முன்னின்று விலங்கி

ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவி னல்லது

நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மில்லை.

-(புறம் 335)

பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைப் புலவர் மாங்குடி கிழார் (மருதனார்) பாடிய இப்பாடலில் கண்ணகி மதுரை யெரித்த பின் போயினாள். மக்கள் மடிந்து பெருங்குடி மக்களின்றி போரில் மடிந்த வீரர்களைப் புதைத்த விடத்தில் தட்ட கல்லைத் தவிர வேறு தெய்வத்தை மக்கள் வணங்காம லிருந்த அவல நிலையை யறியலாம். செங்குட்டுவன் கண்ணகி கோயில் கட்டியும் அவனுடைய வஞ்சியும் செழியன் மதுரையும் செம்பியன் உறந்தையும் வறிதாகிவிட்டன. கடையெழு வள்ளல்கள் மடித்தார்கள். குட்டிப் போட்ட நாய் பால் கறக்காத முலையைக் குட்டிகள் கடிப்பதைப் பொறுக்கமுடியாமல் வெறுஞ் சோற்றுப் பானையைப் பார்த்துக் குலைக்க உரியில் சோர்ந்து கிடக்கும் பாத்திரங்களைச் செல்லரித் திருக்க, சட்டியில் காளான் பூத்திருக்க கிணைமகள் குப்பைக் கிரையை உப்பில்லாமல் வேகவைக்குஞ் சமையலறையைக் காண வெட்கி இரவலன் நல்லியக் கோடனிடஞ் சென்றதாக நத்தத்தனார் பாடினார். (சிறுபாண்) பெருஞ்சித்திரனார் வயதான தாய் தடியூன்றி நடக்கமுடியாதவளாய் முற்றித்தி லிருக்க மனைவி உப்பில்லாமல் வெந்த குப்பைக் கீரையைச் சாப்பிடாமல் எதையும் வெறுத்திருக்க, பாலில்லாத முலையைச் சுவைத்துப் புதல்வன் பசி தாங்க முடியாமல் வெறும் பானையைத் திறந்து பார்த்து அழ, அவள் புலி வருகிறது என்று பயமுறுத்தியும் அம்புலி காட்டியும் அவன் அழுவதை யடக்க முடியாமல் பசி திண்ண வந்தேன் என்று குமணனிடங் கூறினார் (புறம் 159, 160) பெருந்தலைச் சாத்தனாரும் அடுப்பில் காளான் பூத்திருக்க பாலில்லாத முலையைச் சுவைத்த அழுத குழந்தை முகத்தை நோக்கிக் கண்ணீர் விட்ட மனைவியின் துன்பத்தை நோக்கி நினைத்து வந்தேன் என்று குமணனிடங் கூறினார். (புறம் 164) உருவப் பஃறேரிளஞ்சேட்சென்னி காலத்திலிருந்து இளந்திரையன் காலம் வரை நான்கு தலைமுறையாக ஓயாமல் போர் நிகழ்ந்ததால் மக்கள் குப்பைக் கீரையைத் தவிர வேறு என்ன சாப்பிட முடியும்‘

பெருஞ்சேரல் இரும்பொறை அன்னி மிஞிலிக்குத் தங்கப் பாவை செய்து வைத்தது தான் கொல்லிப்பாவை அன்னி மிஞிலி ஓரி பாணனுடைய மகள். பசு பயிரை மேய்ந்ததற்குத் தண்டனையாகக் கோசர் அவளுடைய தந்தையின் கண்களைப் பிடுங்கி விட்டார்கள். அவள் உண்ணாவிரத மிருந்து பாணர் படைகளைத் திரட்டிக் கொண்டு போய் அரசர்களை யெதிர்த்துப் போரிட்டாள். பொதிகைத் தலைவன் திதியனைக் கொன்று அவனுடைய புன்னை மரத்தைத் துண்டித்தாள். அவள் பாழி நகரத்திற்கு வந்தபோது நன்னன் பயந் தொளிந்து கொண்டான். அவளைப் பின் தொடர்ந்து வந்த பொதிகை வள்ளல் ஆஅய் எயினன் அவளை யெதிர்த்துத் தன்னுயிரைக் கொடுத்தான். அதனால் வேளிர் மகளிர் அவளை யெதிர்த்துப் போரிடவே அஃதை அவளைக் கொன்றான். ஆனால் அவள் பேயாக் வந்து பெருஞ்சேரல் இரும்பொறை அதிகமானைக் கொன்ற களத்தில் அமலைக் சூத்தாடினாள். அவளுடைய பூதத்தை பூட்டிப் பாவை செய்து பொறைவன் கொல்லி மலையில் வைத்தான். அந்தக் கொல்லி மலை ஓரிக்குச் சொந்தமானது. காரி ஓரியைக் கொன்று கொல்லி மலையைப் பொறையனுக்குக் கொடுத்தான். அதன் பிறகுதான் பொறையன் கொல்லி யெனப்பட்டது. {அகம் 213, 338) இளங்கோவடிகள் வில்லெழுதிய இமயத்தோடு கொல்லி யாண்ட குடவர் கோவே (சிலப் 24. குன்றக் குரவை.) என்றதால் பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லி யாண்ட பிறகுதான் சிலப்பதிகாரம் எழுதி முடிக்கப்பட்டதாகும். அக்கொல்லிப் பாவையையும் அன்னி மிஞிலியின் ஆற்றலையும் உலமையாகப் பரணர் (அகம் 62, 186, 196, 208 212, 262, 396, நற். 201, 265, குறுத் 89) கபிலர் (குறுந் 100) நக்கீரர் (அகம்126) கல்லாடர் (அகம் 309) கயமானார் (அகம் 145) வெள்ளி வீதியார் (அகம் 45) பாடினார்கள். அதனால் அகப்பாக்களும் அன்னி மிஞிலிக்குக் கொல்லிப்பாவை செய்த பிறகுதான் பாடப்பட்டவை. அவளால் கொல்லப்பட்ட திதியன் பாண்டியன் நெடுஞ்செழியனை யெதிர்த்துத் தலையாலங்கானத்தில் தோற்றோடிய இருபெரும் வேந்தர் ஐம்பெரும் வேளிரில் ஒருவன் (அகம் 36). இச்செய்தியைக் கூறிய நக்கீரரும் அன்னியின் செய்கையை உவமையாகக் கூறினார் (அகம்126) ஆகவே அகப்பாக்களைப் பாடிய புலவர்களெல்லாம் ஒரே காலத்தவர் என ஆராயப் புகுந்தால் பெருகும். பேகன் மனைவி கண்ணகி காரணமாகக் கபிலர் (புறம் 143) பரணர் (புறம் 144, 145) அரிசிற் கிழார் (புறம் 146) பெருங்குன்றுர் கிழார் (புறம் 147) பாடியதால் பதிற்றுப்பத்தில் பாடிய இந்நால்வரும் ஒரே காலத்தவர். இவர்களோடு பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தைப் பாடிய காக்கைப்பாடினியார் நச்செள்ளயார் பாடிய அகப் பாக்களிருக்கின்றன. ஆனால் சேரன் செங்குட்டுவனுக்கு முன்பிருந்த  சேரமன்னர்களை பாடிய குமட்டூர் கண்ணனார், பாலைக் கொதமனார் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய அகப்பாக்களில்லை. ஆகவே சேரன் செங்குட்டுவனுக்குப் பிறகுதான் அகப்பாக்கள் பாடப்பட்டவை.

 

பன்னிரண் டாண்டுகள் மழை பெய்யாமல் பஞ்ச மேற்பட்ட பின் மதுரை ஆலவாய் அவிர்ச்சடைக் கடவுள் தன் பீடத்தின் கீழ் அகப் பொருள், இலக்கண சூத்திரங்களே யெழுதிய செப்பேடுகள் வைத்தான் அர்ச்சகன். செப்பேடுகளைக் கொண்டு போய்ப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியிடங் கொடுத்தான், அவ்விலக்கணத்திற்குப் புலவர்கள் உரை யெழுதினார்கள். அப்போது முருகன் ஊமைப் பிள்ளையாக. உப்பூரிக்குடிக் கிழார் மகன் உருத்திர சன்மனாக அவதரித்திருந்தான். அவனுக்கு வெள்ளாடை, வெண் பூ, வெண் சாந்தணிந்து சங்கப் பலகையில் ஏற்றினார்கள். புலவர்கள் உரையை வாசிக்கும்போது அவன் வாளாவிருந்து மருதனிள நாகனார் வாசிக்கும்போது ஒருவாறு கண்ணர் விட்டு மெய்மயிர் சிலிர்த்து, நக்கீரர் பாசிக்கும்போது பதந்தோறும் கண்ணீர் வார்ந்து மெய்மயிர் சிலிர்த்து நக்கீரர் உரை, முதன்மையானதாகவும் மருதனிள நாகனா ருரை இரண்டாவதாகவுங் காட்டினான் பின்னர் அவ்விலக்கணத்தைக்கொண்டு புலவர்கள் பாடியனுப்பிய அகவற் பாக்களே யாராய்ந்து நான்கு முதல், எட்டடி, வரையுள்ள நானூறு பாக்களைக் குறுந்தொகையிலும் ஒன்பது முதல் பன்னிரண்டடி வரையுள்ள நானூறு பாக்கனை, நற்றிணையிலும் பதிமூன்று முதல் முப்பத் தொன்றடி வரையுள்ள நானூறு பாக்களை அகநானூற்றிலுந் தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி தொகுத்தான் மதுரை உப்பூரி குடி கிழார் மகனாவான் உருத்திர சன்மன் என்பான் என்று கூறியிருக்கிறது. குறுந்தொகை முடித்தான் பூரிக்கோ என்றதால் குறுந்தொதையும் உப்பூரிக்குடிக் கிழார் மகன் உருத்திர சன் மனே தொகுத்தவன். நற்றிணையைத்  தொடுப்பித்தான். பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்றதால் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு மூன்றையும். தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுத் தொகுத்தவன் உருத்திர சன்மனேயாம். திருவள்ளூவர் திருக்குறளை யரங்கேற்றியபோது அவரோடு சங்கப்பலகையில் உருத்திர சன்மனை யிருக்கும்படி அசரீரி சொன்னதாகத் திருவள்ளுவ மாலையின் முதற் பாட்டு கூறுகிறது. வள்ளுவரைப் புகழ்ந்து பாடிய புலவர்களில் உக்கிரப் பெருவழுதியும் ஒருவன். இறையனார் அகப்பொருள் இலக்கணத்தைப் போலவே வள்ளுவரும் களவியல் கற்பியல் எனக் காமத்துப் பாலைப் பாடினார். அவர், தெய்வந் தொழா அள் கொழுதற் றெழு தெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறளைச் சாத்தனார் ஒப்புவிந்தார் {மணி22:59-61) அதன் முதலடியை இளங்கோவுங் கூறினார். (சிலப். கட்டுரை காதை வெண்பா) ஆகவே திருக்குறளுக்குப் பிறகுதான் சிலப்பதிகாரமும் (மணிமேகலையும் அரங்கேற்றப்பட்டன.

நூற்றைத் தொகுப்பித்த யாகனகட் சேய் மாந்தரஞ் சேரலிரும் போன்றை ஆலங்கானத்தில் நெடுஞ்செழியனிடத் தோற்றோடியவர்களில் ஒருவன். ஐங்குறுநூற்றைப் பாடிய ஜவரின் பாக்கள் மற்ற அகப்பொருள் நூல்களிலும் இருக்கின்றன. அவர்களில் கபிலர் குறிஞ்சிக் கலியைப் பாடினார். மருதக் கலியைப் பாடிய மருதனிள நாகனார் இறையனார் அகப் பொருளிலக்கணத்திற்கு உரை கூறியவர். அனர் நெய்தற் கல்யும் கடவுள் வாழ்த்துப் பாடி கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் பரிபாடலில் முருகனைப் பாடியதைக் குறித்து, சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை (அகம் 59:10-2) என்றதால் அப்போது பரிபாடலும் பாடப்பட்டது. கண்ணகி மதுரையை யெரித்த பின் பரிபாடலில் புலவர்கள் திருப்பரங் குன்றத்து முருகனையும் திருமாலிருஞ்சோலை திருமாலையும் (கள்ளழகரையும்) வைகையையும் மதுரையையும் பரவிப் பாடினார்கள். ஆகவே இறையனார் அகப்பொருள் இலக்கணத்தைக்கொண்டு தான் திருவள்ளுவ ருள்ளிட்ட சங்கப் புலவர்கள் அகப்பாக்களைப் பாடினார்கள்.

இறையனார் அகப்பொருள் இலக்கணங் கொடுத்ததோடு உதாரணப் பாட்டாக கொங்குதேர் வாழ்க்கை என்று தொடங்கும் இரண்டாவது குறுந்தொகைப் பாடலையும் பாடித் தருமிக்குக் கொடுத்தார். இதனைத் இருநாவுக்கரசரும் தன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகுக் கிழிதருமிக் கருளினேன் காண் என்றார். இப்பாடலில் பொருள் குற்றமிருப்பதாக நக்கீரர் நெற்றிக் கண்ணைக் காட்டினாலுங் குற்றங் குற்றமே என்று முக்கண்ணனோடு வாதாடியதாகக் கர்ண பரம்பரை கதை யுண்டு. ஆனால் கற்புடைய மகளிர் கூந்தலில் இயற்கையான மணமுண்டு என்ற இப்பாடலின் கருந்தைக் கொண்டு இனங்கோவடிகள் மாதவி கோசிக மணியிடங் கொடுத்தனுப்பிய ஒலைக் கிட்ட மண் முத்திரை மீது அவள் கூந்தல் யெற்றியது கோவலனோடு அவள் வாழ்த்த காலத்தில் கூந்தலுக்குத் தடவிய எண்ணெய் வாசனையை அவன் நினைவிற்குக் கொண்டு வந்து அவள் கற்புடையவள் என்பதை யுணர்த்திக் காட்டிற்று என்றார். (சிலப் 13:.82-6) ஆகவே இளங்கோவும் இறையனார் அகப்பொருள் இலக்கணத்தைக் கொண்டு தான் கோவலன் கண்ணகியைத் தலைவன் தலைவியாகக் குறவர்கள் அகத்துறையில் பாடியதாகக் குன்றக் குரவையில் பாடினர். திருவள்ளுவரும் சங்கப் புலவர்களும் கண்ணகியைப் பரவிதான் அப்பாக்களை பாடினார்கள். இளங்கோ பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம், கோமுறை நீங்கக் கோடிமாடக் கூடல்த் தீமுறை செய்தாளை யேத்தியாம் பாடுகம். தீமுறை செய்தாளை. ஏத்தியாம் பாடுங்கால் மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே என்று சிலப்பதிகாரம் குன்றக் குரவையில் பாடியதை மனங்கொண்டு கபிலர் மைதவழ் வெற்பன் மணவணி காணாமல், கையால் புதைபெறூ உம் கண்களும் கண்களோ, பலவின் பழத்துள் தங்கும் மலகொழு வெற்பனைப்

பாடுகம்வா வாழி தோழி (கலித் 39 41) என்று பாடினார். இளங்கோ கான நறுவேங்கைக் கீழாள் பணவனொடும், வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே; மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப், பெறுகதில் லம்ம இவ்வூரு மோர்பெற்றி, பெற்றி யுடையதே பெற்றி யுடையதே, பொற்றொடி மாதர். கணவன் – மணங்காணப் பெற்றி யுடையதிவ் வூர் என்று குறவர்கள், ஊரில் கோவலனும் கண்ணகியும்- வானகவாழ்க்கை நடத்த  மறுமணம் புரிந்ததாகக் கூறினார். கண்ணகி வேங்கை மரத்தடியி லிருந்த போது அவளுடைய கணவன் வானவர் வடிவில் வந்து அவளைக் கூடிவான லோகம் அழைத்துச் சென்றதால் குறிஞ்சித் திணையில் வேங்கை மரத்தைத்தவிர வேறுமரத்தடியில் தலைவன் தலைவி கூடியதாகப் பாடவில்லை நின்னுறு. விழுமன் கூறக் கேட்டு வருமே தோழி! நன்மலை நாடன் வீரிவிடம் நோக்கி, வீங்கிறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே, புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னுறை முன்றில், நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றே மென்தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும், மன்றல் வேங்கைக் கீழிருந்து, மணம் நயந்தனன் நம்மலை கிழவோற்கே (களி, 38,39,41).

தென்னவன் தீதிலன் தேவர் கோன் றன்கோயில்

நல்விருந் தாயினான் நானவன், றன்மகள்

வென்வேலான் குன்றில் விளையாட்டு யான கீவேன்

என்னோடுந் தோழிமீ ரெல்லீரும் வம்மெல்லாம்.

 

என்று கண்ணகி செங்குட்டுவன் தேவந்தி மற்றவருக்குள் காட்சி தந்து. கூறினாள். அவள் வானவர் வடிவில் வெஞ்வேலான். திருப்பரங்குன்றில், விளையாடிக் கொண்டிருந்தபோது வானவர் வடிவில் கோவலன் அவளைக் காந்தர்வமணம் புரிந்து பின்னர் பூலோகத்தவர் போல் வரைந்து பரத்தை மையில் தினைத்தபேரது அவளுடைய கற்பைப் புகழ்ந்து பாடியவைகளே அகப்பாக்கள். அதனால் பாலைபாடிய பெருங்கடுங்கோ பிரிவாற்றாமை யால் தலைவி வென்வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பாள் கொல் (கலி 27) என்று தான் வென்வேலான் குன்றின்மேல் விளையாடிய போது தலைவன் தன்னைக் கூடியதை நினைத்து தோழியிடம் கூறியதாகப் பாடினார், கோவலன் கண்ணகியை விட்டுப் பிரியமாட்டே னென்று சூளுரைத்து அவளைப் பிரிந்து மாதவியை மணத்ததை மணங்கொடு இளங்கோ அஞ்சலோம் பென்றுதல்ணுண்டு நல்காதான் மஞ்சு சூழ் சோலை மலையருவி யாடுதுமே (குன்றக் குரவை) எனவும் திருவள்ளுவர் அவர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார், பலர்நாண நீத்தக் கடை அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளிந்த சொல், தேறியார்க் குண்டோ தவறு எனவும் பாலைபாடிய பெருங்கடுங்கோ நின்னிற் பிரியலென் அஞ்சலோம் பென்னும், நன்னர் மொழியும் நீமொழிந் தனையே (கலி 21) எனவும் கபிலர், அஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ,

 

வடிவில் கோவலன் அவன்க் 127 பாடுகம்வா வாழி தோழி' (கலித்3941) என்று பாடினார். இளங்கோ'கான நறுவேங்கைக் கீழாள் பணவனொாடும், வானக வாழ்க்கை மறுதரவோ வில் லாளே; மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப், பெறுகதில் லம்ம இவ் / வூரு மோர்பெற்றி, பெற்றி யுடையதே பெற்றி யுடையதே, பொற்றொடி மாதர் . கணவன்- மணங்காணப் பெற்றி யுடையதிவ் வூரி’ என்று குறவர் கள், ஊரில்: கோவலனும் கண்ணகியும்:- வானகவாழ்க்கை" நட்த்த , மறுமணம் : புரிந்ததாகக் கூறினார் கண்ணகி : வேங்கை: மரத்தடியி லிருந்தபோது அவளுடைய.. கணவன்* வானவர் வடிவில் – வந்து. அவளைக் கூடிவான லோகம் அழைத்துச் சென்றதால் குறிஞ்சித் திளை பில் வேங்கை மர்த்தைத்தவிர்

குன்றகல் நல்நாடன் வாய்மையில் பொய்த்தோன்றின், திங்களுள் தீத்தோன்றி யற்று (கலி 41) எனவும், நல்லந்துவனார். ;அஞ்சலோம் பென்றதன் பயனன்றே பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள், மாவின தளிர்போலும் மாண்றலம் இழந்ததை (கலி 132) எனவும் பாடினார்கள். அவர்கள் கர்மச் சுவையோடு பாடி கண்ணகியை மழை பெய்யும்படி செய்ததால்தான் இன்னும் தமிழகத்தில் மாரியம்மனுக்கும், மலையாள பகவதிக்கும் – ஆண்டுதோறும் காமச்சுவையோடு பாடி உற்சவம் முடிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரையில் அன்றுதொட்டுப் பாண்டியனாடு மழை வறங் கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையினிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்திசெய்ய நாடு மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது. அது கேட்டுக் கடல் சூழிலங்கைக் கயவாகு வென்பான் ஆடித்திங்க ளகவையி னாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று என்றதால் கண்ணகி தெய்வந்தான் மாரியம்மன் என்பதும் அவளால்தான் அம்மையும் அக்காலத்திலிருந்து உண்டான தென்பதும் தெரியவரும். அவள் மதுரையை எரித்தது ஆடிமாதம் வெள்ளிக் கிழமையானதால் ஆடிமாதத்தில் மாரியம்மன் திருவிழா நடக்கிறது. வெள்ளிக்கிழமை பெண்கள் நடு விட்டில் இடும் மஞ்சள் குங்கம் கண்ணகி முகத்திற்குத்தான் அவள் பதினான்கு நாட்களுக்குள் கணவனைக்கூடி வானுலகஞ் சென்றதால் பூவாடைக் காரியானாள். அவள் தேவந்திமேல் வந்து, தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின், தெய்வத் தெளியின், தெளிந் தோர்ப் பேணுமின், பொய்யுரை அஞ்சமின், புறஞ்சொற் போற்றுமின் வானூண் துறமின், உயிர்க்கொலை நீங்துமின் தானஞ் செய்ம்மின், தவம்பல தாங்குமின், செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின், பொய்க்கரி போகன்மின், பொருண் மொழி நீங்கன்மின், அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின், பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின், பிறர்மனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின் ஆறமனை காமின். அல்லவை கடிமின், கள்ளுங் களவுங் காமமும் பெய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின், இளமையும் செல்வமும் யாக்கையும் திலையா உளநாள் வரை யாது ஒல்லுவ தொழியாது செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின், மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் என்று வரத்தந்தாள். இவ்வறவுரைகளைப் புலவர் பெருமக்கள் பறப்பாக்கிளிலும் அகப்பாக்களிலும் பாடினார்கள். பத்துப்பாட்டும், பதினெண்கீழ் கணக்கும், எட்டுத்தொகையும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அரங்கேற்றியதோடு கடைச் சங்கம். முடிவடைந்தது.

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

 

 

 

 

 

 

 

 

  • ••

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu