(சி.என். இராமமூர்த்தியின் செய்தியறிக்கை)

 

10.5 சதவீதம் செயல்படுத்துவது தொடர்பான குழப்பம்

மாண்புமிகு தமிழக முதல்வரிடம் மக்களுக்கு_தெளிவுபடுத்த கடித நகல் மூலம் கேட்டுகொண்டுள்ளோம்…

அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம்.

நேற்று சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் 10.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி உரையாற்றும்போது  இந்தக் கொரானா  பேரிடரை சரிசெய்வதில் முழு கவனம் எடுத்துக்கொண்டோம். இப்போதுதான் கொரானா குறைய ஆரம்பித்துள்ளது. இனி இந்த 10.5% உள் இட ஒதுக்கீடு பற்றி  உரிய துறை அமைச்சரிடம் பேசி சரி செய்யப்படும் என்பதை தெரிவித்துள்ளார்.

 

இது பற்றி ஏற்கனவே மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களையும் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் S. ரகுபதி அவர்களையும் சந்தித்து 10.5% செயல்படுத்துவதில் உள்ள குழப்பங்களை களைய  கேட்டுக் கொண்டுள்ளோம்.

 

அந்த நகலையும் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் அளித்துள்ளோம்.

 

தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் நமக்கு இந்த கொரானா பேரிடர் காலம் முடிந்தவுடன் அது பற்றி உரிய துறை அமைச்சரிடம் பேசி சரி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

 

அதுமட்டுமில்லாமல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உள் இட ஒதுக்கீட்டின்  உண்மையான பரிந்துரை 13.5% சதவீதத்தை இப்போதுள்ள 10.5% இருந்து 13.5 சதவீதம் உயர்த்தி கொடுப்பதற்கும் நாம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

இதையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக நமக்கு உறுதி அளித்துள்ளார்.

 

நம் வன்னியர் சமுதாயத்திற்கு 15 சதவீத உள்இட ஒதுக்கீடு கிடைப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் நான் 2010 வழக்கு தொடுத்து 2012ல் அரசாணை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின் தலைவர் திரு ஜனார்த்தனம் அவர்களின் பரிந்துரை 13.5 சதவீதம் பெற்றோம்.

 

இந்த 13.5 சதவீதம் பரிந்துரை உள் இட ஒதுக்கீட்டை  பிப்ரவரி 3ஆம் தேதி 2021 ல்  அதிமுக வின் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று அவமதிப்பு வழக்கை நான் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தேன். பிப்ரவரி 26ஆம் தேதி 2021 தமிழக அரசு 10.5% மாக  நமக்கு பரிந்துரையை குறைத்து  கொடுத்தார்கள். அந்தப் 10.5 சதவீதம் கொடுக்கப்பட்டதில்  உள்ள குழப்பங்களை தமிழக அரசு விரைவில் சரிசெய்து நம் வன்னிய சமுதாயத்திற்கு ஒரு நல்ல விடியலை மாண்புமிகு தளபதி  அவர்கள்  தருவார்கள்.

 

நன்றி.

சி.என்.இராமமூர்த்தி.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu