அன்புக்குரிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.
வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5% தொடர்பாக நான் தொடுத்த வழக்கு 2010ல்
W. P. NO(14025/2010) வெற்றி கண்ட வழக்கின் ஆவணங்கள் மற்றும் வன்னியர் உள்ஒதுக்கீடு தேவையான அனைத்து ஆவணங்களையும் ஒன்றுதிரட்டி புத்தக வடிவில் தயார் செய்து அதனை இன்று மான்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வழங்கினேன்.
முதல்வரிடம் வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக எடுத்துரைத்தேன்.
மேலும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. R.S
ராஜகண்ணப்பன் அவர்களையும் சந்தித்து ஆவண புத்தகங்களை கொடுத்து முழு விவரங்கள் மற்றும் சட்டப்படி அணுக வேண்டிய நடைமுறை பற்றியும் எடுத்துரைத்தேன்.
அதன் பிறகு தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை செயலாளர் திரு. மங்கத் ராம் சர்மா IAS , சட்ட அலுவலர் திரு. ஆண்டியப்பன் அவர்களையும் சந்தித்து ஆவண புத்தகத்தைக் கொடுத்து இதன் முக்கியத்துவம் மற்றும் வன்னியர் உள்ஒதுக்கீடு வழிமுறையை எடுத்துரைத்தேன்.
வன்னியர் உள் ஒதிக்கீடு 10.5 % சதவீத நான் தொடுத்து வெற்றி கண்ட வழக்கின் அடிப்படை காரணங்கள் மற்றும் மீண்டும் தமிழக அரசு 10.5 %கொண்டு வருவதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஒருங்கிணைத்து ஆவண புத்தகத்தை வடிவமைத்தேன்.
இதனால் நம் சமுதாய மக்களுக்கு மீண்டும் வன்னியர் உள்ஒதுக்கீடு 10.5 % பெறுவது நிச்சயம் உறுதியாகும்.
இத்துடன் வன்னியர் பொதுச் சொத்து வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படியும், புதியதாக என்னால் வழக்கு தொடுக்கப்பட்டு வெற்றி கண்ட வன்னியர் நல வாரியம் அமைத்து தரும்படியும், நடந்துமுடிந்த கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கான மணிமண்டபம் உடனடியாக அமைக்கும்படி , 25 தியாகிகளின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை, 25 தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் செல்கிறது அதனை 10,000 ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
இந்நிகழ்வின் போது அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலாளர் K. வெங்கடேஷ், கொங்குமண்டல பொறுப்பாளர் k. ராம்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் V. சற்குரு உடன் இருந்தார்கள்