என்னுரை

வன்னிய குல பெருமைகளைப் பற்றி வன்னிய இனத்தின் பலப் பெரியவர்கள் தங்கள் காலத்தின் இன வரலாற்றை மிகச் சிறப்பாக பதிவு செயுதுள்ளது நமது வரம் ஆகும். இந்த பழைய நூல்களை எல்லாம் கண்டு வியந்து போகின்ற வேலையில் இந்த நூல்கள் நமது தற்கால இனத்தினருக்கும் மிக முக்கியமாக புதுத் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் இந்த நூல் மிக முக்கியமான நூல்.

 

இந்த நூலைப் படிக்கின்ற பொழுது சங்கத்தின் வளர்ச்சியில் மிக அரும்பாடு பட்டவர்களின் உழைப்பு மற்றும் அவர்களின் தொலைநோக்கு சிந்தனைகள் பற்றி அறிய முடிகிறது. இந்த நூல் 1957 ஆம் ஆண்டு க்ஷ, கு, வ, சங்கக் காரியதரிசி, , திரு. ௧. துரைசாமி நாயகர் அவர்களால் எழுதி வெளியிடப் பட்டு இருக்கிறது. இந்த நூலினை படித்து சங்க வரலாற்றின் மிக முக்கியமான ஒரு பரிமாணத்தை அறிந்து கொண்டேன். நான் அறிந்து கொண்ட வரலாற்றை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புத்தகத்தை தொகுத்து வெளியிடுவதில் மிக்க பேருவகை கொள்கிறேன்.

 

சி. என். இராமமூர்த்தி

தலைவர்

அனைத்திந்திய பாட்டாளி மக்கள் கட்சி.

 


குயப்பேட்டை வன்னிகுல க்ஷத்திரிய வாலிபர் சங்கஆரம்பம்.

இச்சங்கம் குயப்பேட்டை வெங்கடாத்திரி நாய்க்கன்  வீதி 88-வது எண்ணுள்ள இல்லத்தின்கண் 1956-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் சுதந்திர தினத்தன்.று மாஜி பெரம்பூர் இரயில்வே தொழிற்சங்கத் தலைவரும் வைதீக சைவ சித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ.சு. சோமசுந்தர நாயகர் அவர்களால் 1860-ஆம் ஆண்டில் நிறுவப்பெற்ற புரசை வேதாகமோக்த சைவ சித்தாந்த சபை செயலாளருமான திருவாளர் மு.உருத்ர.குப்புசாமி  நாயகர் அவர்களைத் தலைவராகக் கொண்டு, வீறுகொண்ட வன்னிய வாலிபர்களாலும், சிறப்பாக வன்னிய மகரிஷி உயர்திரு. ஆ. சுப்பிரமணிய நாயகர், முன்னாள் சென்னை கார்ப்பரேஷன் உதவி மேயரும், அட்வகேட்டுமான உயர்திரு S. P. இராஜாபாதர் நாயகர் B A., B.L, அவர்கள் ஆகிய இரு பெரியோர்களைப் போஷகர்களாகக் கொண்டு தோற்றுவிக்கப் பெற்றது.

குயப்பேட்டை வன்னிகுல க்ஷத்திரிய வாலிபர் சங்கம் அமைத்த இவ்வமயத்தில் நம் குல எழுச்சிக்கு மூலகாரணமாய் இருந்தவர்களைப் பற்றியும், ஏற்பட்ட சந்தர்ப்பங்களைப் பற்றியும் ஒரு சிறிது ஆராய்வது பொருத்தமுடையதாகும்.

நாட்டுப் பற்றுள்ள நம் இந்தியர்கள் 1885 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை பம்பாயில் வங்க பாரிஸ்டர் பானர்ஜி தலைமையில் ஆரம்பித்தார்கள். நாட்டிலிருந்த பல்வேறு ஸ்தாபனங்கள் ஒன்றுகூடி காங்கிரசை மத்திய ஸ்தாபனமாக அமைத்தன, இதனால் ஆங்கிலம் கற்ற இந்தியர்களுக்குள்ளே ஒரு பெருங் கிளர்ச்சி உண்டாயிற்று, நாடெங்கும் நல்லெண்ணங்கள் பரவி இந்தியர்மேல் நாட்டாரைப்போல் உயர்நிலையடைய வேண்டு மென்னும் முழக்கம் உண்டாயிற்று. இராம் மோஹன்ராய், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், பங்கிம், ஈஸ்வர சந்திர: வித்யா சாகர், சுரேந்திரநாத் பாணர்ஜி, பாலங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே,.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதியார் போன்ற அரும் பெரும் தலைவர்கள்  ஈடுப்பட்டு அரும் பாடுபட்டனர்.

அச்சமயத்தில் நம் குலத்தவரில் சிலர் நற்பதவியடைந்து  நன்னியிலிருந்ததினால் அவர்களையும் இக்கிளர்ச்சி தூண்ட ஆரம்பித்தது. எல்லா வகையிலும் உயர்நிலையை அடையாமல் பின்னடைந்திருந்த நம் ஏழையருக்கும் நல்லுணர்வு ஊட்டச் சமயம் அதுவே என்று அவர்கள் தீர்மானித்தார்கள். குலத்தின் பழைய  உயர்நிலையை எண்ணி இதை மேலடையச் செய்யும் வழி கல்வியையும், வீரத்தையும், செல்வத்தையும் மறந்து கிடக்கும் நம்மவர்களுக்குப் பண்டைய உணர்ச்சியை அறிவுறுத்தவதே வென்று தீர்மானித்தார்கள்.

சென்னை வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்க ஸ்தாபனம்.

1886 ஆம் ஆண்டு இக் கருத்துக்கள் அடங்கிய மனு ஒன்று அண்ணாசாமி நாயகர் அவர்களால். கா. கோபால் நாயகர் அவர்களுக்கு எழுதப்  பெற்றது.அண்ணாசாமி நாயகர் அவர்களும், அவருடன் பிறந்து  இக் குலத்திற்குப் பல பணிகள் புரிந்து புகழுமடைந்த இக்காரியத்தில் முதல் முதல் தலையிட்ட உயர்திரு. கா. ஆறுமுக நாயகர் அவர்களும் பெருந்தகையர் ஆவார்கள் . மனுவைப் பெற்ற கோபால நாயகரும் கா. ஆறுமுக நாயகர்., அவர்களும் இக்காரியத்தில் முதல் முதல் தலையிட்ட பெருந்தகையார் ஆவார்கள்.  அவர்கள் தொடங்கும் வேலை சரிவரமுடிய  வேண்டுமானால், அதற்கென்று ஒருவர் தனியே இருந்து உழைக்க வேண்டுமென்றும்அப்படி உழைத்தாலன்றி தாங்கள் மேற்கொண்ட பணி பழிக்கிடமின்றி முடியாதென்றும் தெரிவித்து, அண்ணாசாமி நாயகரே சென்னைக்கு உத்தியோகமாய் வந்து இது விஷயமாய் உழைப்பதாயிருந்தால் தான் தன்னாலான பொருளுதவி செய்வதுடன், மெய்ப்பாடு படுவதாய் உறுதி கூறினார். இதற்கேற்ப 1887-ம் ஆண்டில் அண்ணாசாமி நாயகர் அவர்களும் நீலகிரியைவிட்டு சென்னைக்கு வந்தார். உடனே சென்னையில் இருவரும் பெரு முயற்சிகள் செய்து, பல பேரைக் கூட்டி அளவலாவிப் பேசி உயர்திரு. மகாநாடு சிவபாத நாயகர், மகாநாடு அரங்கநாத நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாஜல நாயகர், ச. சிங்காரவேலுநாயகர், கா. அண்ணாசாமி நாயகர் ஆகிய ஐவர் கூடிய சபை ஒன்றை ஏற்படுத்தி, மேற்சொன்ன அரங்கநாத நாயகர் அவர்களைக்கொண்டு விளம்பரங்களை அச்சிட்டு எங்கும் பரப்பச் செய்தனர். இதுபோல் அடுத்தடுத்து ஐந்து கூட்டங்கள் அரங்கநாத நாயகர் அவர்கள் இல்லத்திலேயே கூட்டப்பெற்றன. இக்கூட்டங்களில் முடிவு  செய்யப்பெற்ற விஷயங்களாவன.

  1. சங்கத்தின் பெயர் “அக்கினிகுல க்ஷத்திரியமகா சங்கம்’ என்பதும், அதை நடத்துவோர் இன்னின்னார் என்பதும்.
  2. சங்கத்திலிருந்து வன்னிய குலாபிமானி என்னும் பத்திரிகை ஒன்று வெளிப்படுத்த வேண்டுமென்பதுமாகும்.ஐந்தாவது கூட்டத்தில் டிஸ்டிரிக்ட் முன்சீப் ராவ்சாயப் த. செல்லப்ப நாயகர் அவர்களும், சாவ்பஹதூர்ஆற்காடு தனகோட்டி முதலியார் F. R. E. S. அவர் களும், அரங்கநாத நாயகர் அவர்களுடைய இல்லத்திற்கே  எழுந்தருளி, நமது கூட்டத்தைக் காங்கிரஸ்

 

கூட்டம் போலவே கூட்டி விமரிசையாய் நடத்த வேண்டுமென்று தங்கள் எண்ணத்தை வெளியிட்டார்கள். அதோடு சங்க விளம்பரங்களில் தாங்கள் கையெழுத்திடுவதாகவும், சம முன்னேற்றத்திற்குத் தங்களாலான பொருள் உதவியைச் செய்வதாகவும் வாக்களித்தார்கள்.

அதன்படியே 1888-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8-ம் நாளில் வன்னிகுல மாபெரும் கூட்டம் ஒன்று கூடுவதாக  ஏற்பாடு செய்யப்பெற்றது. செய்தபின் திரு. கோபால் நாயகர் அவர்கள் சிங்காரவேலு நாயகர் அவர்களையும், அண்ணாசாமி நாயகர் அவர்களையும், தூசி. இராஜகோபால பூபதியார் அவர்களையும், கா. ஆறுமுக நாயகர் அவர்களையும் அழைத்துக்கொண்டு புதுவை, கூடலூர், பாலூர் முதலிய பல இடங்களுக்குச் சென்று, அங்கு உள்ளவர்களுக்குச் சங்கக் கருத்துக்களை விளக்கிக்காட்டி, நம்மவர்களைப் பொது கூட்டத்திற்குக் குறித்த தேதியில் வரும் படியாகக் கேட்டுக்கொண்டனர். இவ்வாறு நான்கு நாட்களில் இருப்புப்பாதை மூலமாயும், கட்டை வண்டிகள் மூலமாயும் நானுறு மைல்கள் இரவும் பகலும் திரிந்து  இவர்கள் நமது குலத்திற்கு ஆற்றிய தொண்டு நாம் பொன்னேப்போல் போற்றத்தக்கதாகும். குறித்த தேதியில் ராவ்சாயப், த. செல்லப்ப நாயகர் அவர்கள் தலைமையின்கீழ் வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்கக் கூட்டம் ஒன்று முதன் முதல் கூடியது, இச்சங்கம் மேற்சொன்ன 8-4-1888 லேயே நிறுவப்பெற்றது, அதுமுதல் சங்கத் தலைவர், உபதலைவர் முதலான செயலாளர்கள் ஏற்படுத்தப்பெற்றும், 42 பேர்கள் கொண்ட உள்ளூர் கமிட்டி ஒன்று நியமிக்கப்பெற்றும், சங்க சட்ட நூல் ஒன்று அச்சிடப்பெற்றும் முறைப்படி கூட்டங்கள் கூட்டப்பெற்றும் வந்தது.

இச்சங்கம்  4-8-1899-ல் கல்வியையும், தர்மத்தையும், சாஸ்திரத்தையும் பரிபாலிக்கும்படி இந்திய கவர்னர் ஜெனரல்அவர்களால் ஏற்படுத்தப்பெற்ற 1860-ம் ஆண்டு 21-வது சட்டப்படி ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்யப்பெற்று இருக்கிறது.

 

நாளடைவில் இச் சங்கம் வளர்ந்து பின்னும் பல பெரியோர்களால் ஆதரிக்கப்பெற்று பிறைமதியென ஓங்க ஆரம்பித்தது. உயர் திரு. கா. கோபால் நாயகர் அவர்கள் 1890 ஜனவரி மாதம் 16 செங்கற்பட்டில் கூடிய மகாசங்க கூட்டத்திற்கும், 1891 ஏப்ரல்மீ 25௨ திருக்கழுக்குன்றம் வன்னியர் மடாலயத்தில் கூடிய கூட்டத்திற்கும், டிசம்பர்மீ 26. திருக்கழுக்குன்றம்,  காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை முதலிய இடங்களில் நடந்த மகா சங்க கூட்டங்களுக்கும், 1893 மார்ச்சுமீ 31௨ முதற்கொண்டு 1894 ஜனவரி 7௨ வரைக்கும் சேலம் ஜில்லாவில் ஏரிகோட்டிபட்டி, சீங்கல்பட்டி, நாட்டறம்பள்ளி, பாரூர் முதலிய இடங்களில் நடந்த கூட்டங்களுக்கும் மிக்க சந்தோஷத்தோடு விஜயம் செய்தார். இவருடன் சென்ற சங்க குலாபிமானிகளுக்குக் களைப்பு தோன்றாதிருக்கும் வண்ணம் அடிக்கடி பலகாரங்களை விநியோகித்துக் கொண்டும் வந்தார். இதிலிருந்து இவர் நமது மக்களிடம் எத்தகைய பேரன்பு கொண்டிருந்தாரென விளங்குகின்றதல்லவா?

மகா சங்கத்தார் வழங்கிய பட்டங்கள்

இவ்வாறு இவர் தாம் பிறந்த குலமாகிய வன்னிகுலத்தைச் சீர்திருத்துவதற்கு மனமொழி மெய்களால் முயன்று, திரவிய சகாயம் செய்துக்கொண்டு வருவதைக் கண்ணுற்ற வன்னிகுல பூபதிகள் யாவரும் இப் புண்ணிய சீலருக்கு 1894 ஜூன்மீ 17 ௨ நடந்த சென்னை வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்க 6-வது மஹோற்சவ காலத்தில் “வன்னிகுலோத்தாரணர்” என்னும் பட்டத்தை மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.

மகா சங்க பாதையை முதன் முதல் திறந்து வைத்த புண்ணியவான் பு. தியாகராய நாயகர் அவர்கள் திருக்கழுக்குன்றம், காஞ்சி மாநகரம் ஆகிய ஆகிய இடங்களில் அமைத்தும், பெரியதோர் சத்திரங்கள் ஆங்காங்கு வன்னிய சங்க கல்விச் சாலைகளும் ஏற்படுத்தி 8000 ரூபாய் மூலதனம் வைத்தும், அவர் நாட்டியிருக்கும் பெரியதோர் சிலாசாசனங்களையும், குலாபிமானத்தையும் பார்வையிட்ட மகா சங்கத்தார் இவருக்கு “வன்னி குலோபகாரி” என்ற பட்டத்தை மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.

திருக்குமளம் என்னும் திவ்ய திருப்பதியில் நமது மரபுபிள்ளைகள் சமஸ்கிருதம் கற்க வேண்டுமென்ற பேரவாவால் அதற்கென கட்டிடம் கட்டி 2000 ரூபாய் தனம் வைத்துப்போன இரங்கூன் மா. வெங்கிடசாமி நாயகர் அவர்களுக்கு மகா சங்கத்தார் வன்னிக்ககுலபோஷகர் என்ற பட்டத்தை மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.

 

திருக்குமலம் என்னும் திவ்ய திருப்பதியில் நமது மரபு பிள்ளைகள் சமஸ்கிரதம் கற்க வேண்டுமென்று பேரவாவால் அதற்கென கட்டிடம் கட்டி இரண்டாயிரம் ரூபாய் மூலதனம் வைத்துபோன இரங்கூன் மா. வேங்கடசாமி நாயகர் அவர்களுக்கு சங்கத்தார் “வன்னிக்குல போசகர்” என்ற பட்டத்தை மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.

இவ்வாறு சங்கத்தில் பிரபல கன தனவான்களும்,பெரும் நிலச் சொந்தக்காரர்களும், அரசாங்க உத்தியோகஸ்தர்களும், முதல் போட்டு பல தொழில்களை நடத்தும் முதலாளிகளும், பிரபல வக்கீல்களும், படித்து பட்டம் பெற்ற ஆசிரியர்களும் மும்மரமாக ஈடுப்பட்டு வேலை நேரம் போக மற்றுமுள்ள மீதி நேரத்தில் தொண் டாற்றி வரும் காலத்தில் சங்கமாகிய குழந்தைக்கோ போதுமான வயதாகாத இளம்பிராயமாகிய 8 வது வயதிலேயே விட்டு விட்டு வன்னிகுல கர்ணாவதார ஸ்ரீமான் வன்னிகுலோத்தாரணர் 1896-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் வெள்ளிக்கிழமை 6 மணிக்கு ஆசாரியர் திருவடியடைந்தார்,

இப் புண்ணியவான் அக்காலத்தில் அடிக்கடி ஸ்ரீமான். ஆற்காடு தனக்கோட்டி முதலியார் வீட்டிற்குச் சென்று சங்க விஷயங்களை பேசும்போதெல்லாம் ‘கோபால் நாயகர் காலம் வரையில்தான் சங்கம் நடக்கும்” என்று முதலியார் சொன்னதும், அப்படியா நினைக்கிறீர்கள் “எத்தனையோ கோபால் நாயகர் தோன்றி சங்கத்தை நடத்தப் போகிறார்கள்” என்று அவர் கூறிய பொன்மொழி யின்படி நாளது வரை சங்கம் நடைபெற்று வருகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் தனது பட்டரையே சங்கத்திற்கு உயில் எழுதி வைத்துவிடுவதாகவும், தன் குடும்ப சிலவிற்குக் கொடுத்துவிட்டு மற்றதைச் சங்காபிவிருத்திக்குச் சிலவு செய்துகொள்ளுமாறும் கூறினார். மகா சங்க நிர்வாகிகள் இவரது குலாபிமானப் பெருங்குணத்தை மெச்சி அவ்வாறு செய்துகொள்ள மனமில்லா தவர்களாய் இருந்துவிட்டார்கள்.

நாயகர் அவர்கள் மகா சங்க பிரதேச காரியதரிசியாயிருந்த திரு. கா. அண்ணாசாமி நாயகர் அவர்களைக் கொண்டு ‘”வன்னிகுல விளக்கம்'” என்ற அரியதோர் ஆராய்ச்சி நூல் எழுதி அவர் சொந்த சிலவில் அச்சிட்டு வெளியிட்டார். அக்காலத்தில் மகா சங்க உள்ளூர் காரிய தரிசியாயிருந்தவரும், அரசாங்க கல்விச்சாலை மேற் பார்வையாளருமான அய்யாகண்ணு நாயகர் B. A. அவர்களைக்கொண்டு தமிழ் வன்னிகுல விளக்கத்தை ஆங்கிலத்தில் எழுதும்படிச் செய்து அதையும் தன் சொந்த சிலவில் அச்சிட்டு எல்லா கலெக்டர்களுக்கும், அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் அனுப்பி நமது மரபை வன்னிகுல க்ஷத்திரியர் என்பதை நிலைநாட்டிச் சென்றார்.

 

 

 

அன்று முதல் பத்திரங்களிலெல்லாம் நமது ஜாதிப் பெயரை வன்னிக்குல ஷத்ரியர் என்று எழுத தொடங்கினார்கள். அந்த ஆங்கில புத்தகத்தை கோதாவரி ஜில்லா கோரிங்கா அக்கினிகுல ஷத்திரிய சங்க தலைவர் திருவாளர், இலட்சமணசாமி நாயுடு அவர்கள் தெலுங்கில் மொழி பெயர்த்து அவர் சொந்த சிலவில் அச்சிட்டு வட நாட்டில் பரவச் செய்தார்.

மற்றும் நாயகர் அவர்கள் சிலை எழுபது, கிருக்கை வளம் முதலிய நூல்களுக்கு என் காலத்திலேயே எழுதி அச்சிட்டுக்கொள்ளும்படியும், “கோபால் நாயகர் எத்தனை நாட்களுக்கு இருப்பாரென்பது என்ன நிச்சயம் என்று அண்ணாசாமி நாயகர் அவர்களிடம் தெரிவித்தாரென்றால் அவரை நமது 1 கோடி மக்களும் தெய்வ மாக அல்லவா வீட்டில் வைத்து பூஜிக்கவேண்டும்.

அதனால்தான் சிலை எழுபது மூலமும் உரையும் தென்னாட்டிலுள்ள பிரபல வித்வான்கள் பலரிடம் சாத்துக்கவிகள்பெற்று உயர்திரு. சுப்பிரமணிய நாயகர் அவர்கள் வெளியிட்ட காலத்தில், அவருக்கே அந்நூலை உரிமையாக்கியது மிகவும் பொருத்தமுடையதாகும். கோபால் நாயகர் இருந்தவரையில் ஆறு ஆண்டுகளாக மகா சங்கம் நடக்கும் காலங்களிலெலலாம் அவர் வீட்டு கலியாணம்போல் சாமக்கிரிகளையெல்லாம் தயார் செய்து தன் சொந்த சிலவிலேயே நடத்தி வந்திருக்கிறார். அவர் இருந்தவரையில் 6 வருடங்களிலும் மகா சங்க உற்சவ வைபவங்களை அச்சிட்டு வெளியூர்களுக்கெல்லாம் அனுப்பி குலாபிமானப் பால் ஊட்டிவந்தார்.

நாயகர் அவர்கள் நடத்திவந்த வருடாந்திர கூட்டங்களில் சன்மானம் வசூலாவது வழக்கம் அப்பணங்களை யெல்லாம் மகா சங்க பொக்கிஷத்தில் சேர்த்துவிடுவார். தன் பேரால் இராயபுரம், மைலாப்பூர் ஆகிய இடங்களில் வன்னிய சங்க கல்விச்சாலைகள் நிறுவி அதிலுள்ள உபாத்தியாயர்களுக்கு தனது பேசின் பவுண்டரியில் வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது உயாத்தி யாயர்களுக்கும் கொடுத்துவிடுவார். நாயகர் அவர்கள் ஆரம்பித்த இரண்டு கல்விச்சாலைகளிலும், பெத்துநாய்க்கன் பேட்டை திரு. எட்டியப்ப நாயகர் அவர்கள் கல்விச் சாலையிலும் வரும் கவர்ண்மெண்ட் கிராண்ட் தொகை சுமார் 1500-க்கு குறையாமல் மிச்சப்பட்டு வெளியூர் கல்விச்சாலைகளை ஆதரித்து வந்தது. இதனால் “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்பதுபோல் அவர் கல்விச் சாலை கிராண்ட் தொகையே பல வருடங்கள் மகா சங்கத் திற்கு பேருதவியாக இருந்தது.

இதைக்கண்ட முத்தியாலுப்பேட்டை தத்துவ விவேசினி பத்திராதிபரும், ஆங்கிலத்திலும் தமிழிலும் பத்திரிகை நடத்திய வித்வமணி பு. முனுசாமி நாயகர் அவர்கள் நம் சங்கத்திற்கு ஓர் வித்வானாக இருந்து எழுத்து வேலைகள் அத்தனையும் கவனித்து வந்தார்.

இவரை தலைமையாகக்கொண்டு இவரது யோசனைப்படித் தான் வன்னிகுல மித்திரன் பத்திராதிபர் ஆ. சுப்பிரமணிய நாயகர் அவர்கள் பல அரிய பெரிய விஷயங்களை எழுதி வெளியிட்டார்.

வித்வமணி பு. முனுசாமி நாயகர் அவர்கள் கோபால்நாயகர் அவர்கள் காலஞ்சென்றபோது பின்வருமாறு பாடுகிறார்.

பிறந்தாலும் பேருலகில் புகழுடனே

எந்நாளும் பிறத்தல் வேண்டும்.

சிறந்தாலும் கோபால நாயகர் போல்

குலவிளக்காய்ச் சிறத்தல் வேண்டும்

மறந்தாலும் மறைபடா மாட்சியுடை

கற்றவங்கள் மலியச் செய்தே,

இறந்தாலும் இறவாத கீர்த்தி புகழ்

இந்நிலத்தில் எய்தல் வேண்டும்.

என்கிறார்.

 

திரு. பல்லவ குலசேகர கா. கோ. பலபத்திர நாயகரின்

குல ஊழியம்

 

இவரது ஜேஷ்ட புத்திரரும் மன்னு நமதருங் குலத்தின் மணி விளக்குமாகிய ஸ்ரீமான் கா.கோ. பலபத்திர நாயகர் அவர்களும் தன் பிதாவின் கருத்தை முழுமையும் முடிவு செய்ய கங்கணம் கட்டிக்கொண்டு, சங்க யாத்திரையைக் காசி, இராமேஸ்வரம் யாத்திரையாகக் கருதி இரவு

பகல் கருதாது வன்னிகுல மித்திரன் பத்திராதியர், ஆ. சுப்பிரமணிய நாயகர், மதுராந்தகம் போதகாசிரியன் மா.ப. முனுசாமி நாயகர், வெங்கடாஜல நாயகர் மற்றும் பல குலாபிமானிகளுடன் தேசூர், செஞ்சி, காஞ்சிபுரம், ஆற்காடு, நன்செய் இடையார், சென்னை முதலிய பல இடங்களிலெல்லாம் மகா சங்க வருடோற்சவங்களை அரும் பாடுபட்டு நடத்தியதுடன், நின்மேலி கிராமத்தில் வன்னிய சங்க கல்விச் சாலை ஒன்றை ஸ்தாபித்தார். இவர்களை கண்ணுற்ற மகா சங்கத்தார். 1910 டிசம்பர்மீ 28 ஆற்காட்டில் காவேரிப்பாக்கம் பூபதி ஜெகந்நாத ராஜா, சடகோப நாயகர், ஆற்காடு தங்கவேல் நாயகர், நாடுவேல் முருகேச நாயகர், G. நடராஜ நாயகர் B.A., முதலியவர்களின் பெருமுயற்சியினால் காங்கிரஸ் மகா சபைபோல் நடந்த சென்னை வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்க 22-வது வருடோற்சவ காலத்தில் “பல்லவ குலசேகரர்” என்ற பட்டத்தை மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.

மகா சங்க வெள்ளிவிழா

நன்செய் இடையாற்றில் சென்னை வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்க வெள்ளிவிழாவை 1913ல் பெரும் பொருள் சிலவில் மிக விமரிசையாக நடத்தி வைத்ததுடன் தனது உயிலில் 30 ஆயிரம் ரூபாயில் மகா சங்கத் திற்கு கட்டிடம் வாங்கி தர வேண்டுமென்று எழுதி வைத்துச் சென்ற நன்செய் இடையாற்று வள்ளல் ச.கந்தசாமி கண்டர் அவர்களுக்கு ‘சம்புகுல சேகரர்” என்ற பட்டத்தை மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.

இப் பட்டங்களை வழங்குவதற்கென மகா சங்கத்தாரிடம் ஓர் சன்னத்து இருக்கிறது. அதில் நமது குலாதிக்கங்களை யெல்லாம் அமைத்து மிக அழகாக பெற்றிருக்கிறது. அதில் அச்சிட்டுத்தான் மேற்கண்ட அனைவருக்கும் பட்டமளித்து மகிழ்ந்தார்கள். நன்செய் இடையாற்றில் வெள்ளி விழாவை நடத்தி வைத்த பல்லவ குலசேகரர் கா. கோ, பலபத்திர நாயகர் அவர்கள் சேலத்தில் மகா சங்கத்தைக் கூட்ட முயற்சி செய்துகொண்டு வரும் காலத்தில் நம் ஜாதியின் துரதிஷ்ட வசமாக 1915 டிசம்பர்மீ 30௨ இரவு சுமார் 9 மணிக்கு மண்ணுலகைவிட்டு விண்ணுலகிற்கு ஏகினார். இதைக் கேட்டதும் வன்னிய உலகம் நடுக்கமுற்று துக்க சாகரத்தில் ஆழ்ந்தது.

சு. அர்தநாரீச வர்மா அவர்கள் பின்வருமாறு பாடி கதறுவதை கேட்க நாமும் கண்ணீர் விடுகிறோம்.

 

 

 

 

 

கவிச்சிங்க இராஜரிஷி சேலம்

இராஜரிஷி. சேலம் சு. அர்த்தநாரீச வர்மா அவர்கள்.

மாசங்க வைபவத்தை யெமதூரில் கண்டிடவே

மலையுங் குன்றுங்

கூசங்க கானகமும் கொடும்பகலில் நள்ளிரவில்

குழவி போலத்

தேசங்க டோறுமெமைப் பின்தொடர்ந்த நினதுசெயல்

சிந்தித் தாறு

மாசங்க ளாகுமுன்னே மோசமுட னெமைப்பிரிந்தாய்

மாயை தானோ ?

என்கிறார்,

காட்டுப்பாக்கத்தில் வன்னிய சங்க கல்விச்சாலையை கட்டி, அதற்கென 4000 ரூபாய் மூலதனம் வைத்துச் சென்ற மவுலிவாக்கம் ஏக போக மிராசுதார் பா, ல. முருகேச நாயகர் அவர்களுக்கு 1921ல் சிதம்பரத்தில் கூடிய மகா சங்கத்தில் “சம்பு குல வள்ளல்” என்ற பட்டத்தை மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.

இவை யாவும் காட்டுப்பாக்கம் வன்னிய ஸ்கூல் மனேஜெரும்தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய தர்ம சுவாமி தேவஸ்தான கர்த்தருள் ஒருவருமான திருவாளர். K. வேங்கிட நாயகர் செய்த அரும்பெரும் முயற்சியே என்பதை வன்னிய உலகிற்கு அறிவிக்க மகிழ்ச்சி யடைகிறோம். இதுவுமன்றி இப்பெரியார் காஞ்சிபுரம் ஆயிரக்கால் மண்டபத்தின்பேரில் உள்ள ஏகாம்பரநாதர் கலியாண மண்டபத்தை சுமார் ரூ. 1000 சிலவு செய்து சீர்திருத்தி வைத்தார். ஸ்ரீபெரும்பூதூரில் வாங்கிய வன்னியர் சத்திரமாகிய ராமாநுஐ கூடத்திற்கு ரூ.1000 உதவி செய்தார்.

வன்னிகுல மித்திரன் நடந்த காலத்தில் அதற்கு ரூ.1000 அளித்தார். இவ்வாறு அவர் செய்த தர்மங்கள் பலவாகும்.



வன்னிகுல மித்திரன் சுற்றுப் பிரயாணம்

பல்லவ குலசேகரர் கா. கோ. பலபத்திர நாயகர் அவர்கள் காலத்திற்குப் பிறகு வன்னிகுல மித்திரன் பத்திராதிபர் ஆ. சுப்பிரமணிய நாயகர் அவர்கள் சங்க உபதேசம், வன்னியர் புராணம் மூலமும் உரையும், சிலை எழுபது மூலமும் உரையும் முதலிய நூல்களை அச்சிட்டுக் கொண்டு தென்னாடு முழுவதும் சென்று சங்க நோக்கத்தைப் பரப்பியதோடல்லாமல் வன்னிகுல மித்திரளையும் 1913 முசல் 1931 வரையில் நடத்தி நம் குலத்திற்கு செய்ய வேண்டிய பணி அத்தனையும் புரிந்து இன்றும் தனது 76-வது வயதில் எங்களுடன் உழைத்து வருகிறர்.

இவரது இறுதி வேலை திருக்கைவளம் மூலமும் உரையும் வெளியிட்டுள்ளார். அது இந்து, சுதேச மித்திரன் சங்கி, தினமணி, உழைப்பாளி முதலிய பல பத்திராதியர்கலாலும் போற்றப் பெற்றுள்ளன, இவரது கிராம பிரசாரத்தில் சேலம் இராஜஸ்ரீ, சு. அர்த்தநாறிச வர்மா. சுதேச மித்திரன் உதவி ஆசிரியர் வன்னிய தேனும்பேட்டை. உலகநாத நாயகர், சேக்காடு, K. ஏகாம்பர நாயகர் முதலியவர்கள் கலந்துகொண்டதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

 

வன்னிகுல வள்ளலின் தெய்வ பக்தியும் குல பக்தியும்.

 

சென்னை வன்னிகுல ஷத்திரிய மகா சங்கத்தின் தங்க விழா 5-5-1910 சென்னை மைலாப்பூரில் நடந்தேறியது, இவ்விழாவை வன்னிகுல வள்ளல் மு. இராஜுநாயகர் அவர்கள் மிக்க விமரிசையாக நடத்தி வைத்தார்.வள்ளல் அவர்கள் சான்றோருக்கு இருப்பிடமான தொண்டை நாட்டைச் சேர்ந்த சீரும் சிறப்பும் மிகுந்த இருப்பிடமான சென்னையின் வடபால் இனிது விளங்கும் இராயயபுரத்தில் வன்னி மன்னர் மரபில் பன்னலமும் பண்புடன் பொருந்தி வாழ்ந்து வருபவர்.

இறைவனருளால் இளமை முதல் கடவுள் பக்தி உடையவராய்ச் சிறந்த வர்த்தகங்ளையும், கான்ட்ராக்டுக்களையும் செய்து செல்வம் திரட்டி வாழ்வாங்கு வாழ்ந்து செல்வச் சீமான் ஆனார். தன்னுடன் பிறந்த தமையனார் உயர்திரு.மு. கன்னியப்ப நாயகர் அவர்களுக்கு உதவியாய் இன்று ஆஸ்திக நெறியில் அவர் செய்த பணிகள் சிறப்பாக ஸ்ரீமான் மு.இராஜூ நாயகர் அவர்கள் இராயபுரம் மன்னர்சாமி கோயில் வீதியிலிருக்கும்

 

 

ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தைப் புதுப்பித்து ஸ்ரீ பாலசுப்பிரமணியரை ஸ்தாபனம் செய்தார்.இராயபுரம் பாதாள விக்னேஸ்வரர் கோயிலைப் புதிப்பித்து நிரந்தர வருவாய் உண்டாக்கினார். இராயபுரம் அங்காள பரமேஸ்வரி தேவஸ்தானத்தைச் சென்னை ஹைகோர்ட்டு உத்தரவு பெற்றுப் பொதுமக்களுக்கு உரிமையாக்கினார். சென்னை லிங்கி செட்டி தெருவிலுள்ள தருமராஜா கோயில் விமானத்தைப் பழுது பார்த்து யாவர் மனத்தையும் மகிழும்படி புதுப்பித்தார். சென்னை தம்பு செட்டி தெருவிலுள்ள மல்லிகேஸ்வரர் கோயில் அம்மனுக்கும், ஸ்ரீ மாணிக்க வாசகருக்கும் அருமையான ஆடை ஆபரணங்களை அணிந்து மகிழ்ந்தார். இவ்விதம் தெய்வத் திருப்பணிகளுக்காகப் பல்லாயிரம் ரூபாய்கள் வாரி வழங்கிய வள்ளலாம் ராஜு நாயகரவர்கள்.

 

இவ்விதம் இறைபணி செய்வதில் இன்பமடையும் இப்பெரியார் தம் குல மக்கள் உயர்வைக் கருதிப் பல வருடங்களாகக் குலத்தொண்டிலும் முண்ணனியிலிருந்து பலருக்கும் வழிகாட்டியாய் விளங்கிவருகிறார். சென்னை வன்னிகுல க்ஷத்திரிய சங்கத்தில் பல்லாண்டுகளாக அங்கத்தினராய்ச் சேவை செய்து வந்தார். சங்கச் செயல்கள் ஒவ்வொன்றையும் திறமுடன் நடத்தியதுடன் சங்க மூலதனத்தை அழிக்காமல் முன்வந்து மாகாநாடுகள் பல சிறப்புடன் நடப்பதற்கு வேண்டிய பொருளைத் தந்து உதவியதுடன் இடையில் பிளவுபட்ட மகா சங்கத்தை ஒற்றுமைப் படுத்தினார்.

ஸ்ரீ பெரும்பூதூர் வன்னிய சத்திரத்திற்கும், திரு. மயிலை வன்னிய சத்திரத்திற்கும். திருத்தணிகை வன்னிய சத்திர கட்டிடத்திற்கும். திருவண்ணாமலை வள்ளால மகா ராஜன் மடத்திற்கும் பொருளுதவியதுடன், முத்தியாலுப்பேட்டை அத்திப்பட்டான குளக்கரைக் கோயிலைக் கோர்ட் உத்தரவு பெற்று நம்மவர்க்கு உரிமையாக்கினார். நம் குல பத்திரிகைகளான வன்னிகுலமித்திரன், க்ஷத்திரியன், பல்லவ நாடு, வன்னிய மணி முதலிய

 

 

 

பத்திரிகைகளுக்கு அவ்வப்போது வேண்டும் பொருள் உதவி அவைகள் வன்னிய உலகில் பரவும்படி செய்தார். மற்றும் தியாகராயர் சுல்லூரிக்கும், சிதம்பரம் வன்னியர்  ஹாஸ்டல், நம் குல மாணவர் பலருக்கும், சம்பளங்களுக்கும் உதவி செய்து வருகிறர்.

 

பெரம்பூர் வன்னிகுல க்ஷத்திரிய சங்கத்தார்

வழங்கிய பட்டங்கள்,

 

இவ்வாறு வாரி வாரி வழங்கும் வன்னிகுல வள்ளனகிய ஸ்ரீமான் நாயகர் அவர்களுக்கு மகா சங்கத்தார் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டியதை சுமார் மூன்று ஆண்டுகளுக்குமுன் பெரம்பூரில் தோன்றிய வன்னீகுலஷத்திரிய சங்கத் தலைவர் உயர்திரு S. P. கிருஷ்ணசாமி நாயகர் அவர்கள் அரிய முயற்சியினால் பச்சையப்ப டிரஸ்ட் போர்ட் தவைர் ராவ்சாயிப் V.S. நடராஜம் பிள்ளை B.A . B. L அவர்கள் தலைமையில் 6-1-57-ல் ஓர் கூட்டம் கூட்டப்பெற்று, ” வன்னிகுல வள்ளல்” எனும் பட்டத்தை மாலை மரியாதையோடு சூட்டினார்கள்.

 

மேற்படி பெரம்பூர் சங்கத்தார்தான் இது வரை அம்பத்தைந்து ஆண்டுகளாக குலத்தொண்டே தெய்வத்தொண்டுவும், தேசத்தொண்டெனவும் எண்ணி உழைத்தவரும் வன்னிகுல மித்திரன் ஆசிரியர் சுப்பிரமணிய நாயகர் அவர்களுக்கு 22-7-56 ல் நடந்த இரண்டாவது மகா நாட்டில் மாஜி ஸ்தல ஸ்தாபன மந்திரி S.S.இராமசாமி படையாட்சியார் அவர்கள் தலைமையில் சின்தாதிரிப் பேட்டை உயர்திரு W.K.சுந்தரேச நாயகர் அவர்கள் உதவியால் “வன்னிய மகரிஷி” என்ற பட்டத்தை தங்க மெடல் மூலமாக சூட்டி மகிழ்ந்தார்கள்,

சகோதரர்களே ! வன்னிய உதிரம் தாதுக்கள் தோறும் நிறையப்பெற்ற கனதனவான்களே, இப்புண்ணிய சரித்திரங்களை வாசிக்கும் நமது குலாபிமான நண்பர்களே,

இப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள வன்னிகுல க்ஷத்திரிய செல்வர்கள் தங்களுடைய நயனுடைய செல்வத்தை வாடிய பயிர்கட்கு வான்மழைபோல் பொழிந்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததுபோல ஒவ்வொரு வன்னிகுல க்ஷத்திரியரும் சங்கத்துடன் ஐக்கியப் படுத்திக் கொண்டு அவரவர்கள் சக்திக்குத்தகுந்தபடி உதவிபுரிந்து, கல்வி, ஒழுக்கம், ஒற்றுமை, கைத்தொழில், அரசியல் முதலிய பல துறைகளில் முன்னேற்றமடைந்து, குல தர்மப்படி ஒழுக்க சீலராய் வாழ்ந்து, வன்னிய உலகமெங்கும் புண்ணியம் பெருகி, மங்களம் உண்டாக எல்லாம் வல்ல நம் குல தெய்வமாகிய ஸ்ரீ சொர்ணகாமாட்சியம்மனைப் பிரார்த்திக்கின்றோம்,

சங்கமே கலியுகத்திற் றெய்வ மாகும்

சங்கமே யோர்குடிக்குச் சந்தி யாகும்

சங்கமே யிகபரமுந் தருவ தாகும்

சங்கமே முன்னோர்கள் தரும மாகும்

சங்கமே நமதரிய செல்வ மாகும்

சங்கமே வழிகாட்டுத் துணையு மாகும்

சங்கமே யெல்லாமா மதனை நம்பி

சங்கத்திற் சேர்ச்துழைப்பீர் சபையி லின்றே.

சேலம். ராஜஸ்ரீ,சு. அர்த்தநாரீச வர்மா+

 

மகாத்மா காந்தியடிகளும், வன்னிகுல வீரர்களும்

சகோதர சகோதரிகளே! இச்சிறு நூலில் வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்கம் அமைப்பதற்கு மூலகாரணமாய் இருந்தவர்களைப்பற்றியும், வன்னிகுலச் செல்வர்களைப் பற்றியும் ஒரு சிறிது நாம் அறிந்துகொண்டோம். இனி மகாத்மா காந்தியடிகளும், வன்னிகுல வீரர்களும் என்பதைப்பற்றி ஒரு சிறிது ஆராய்வோம்.

தமிழ் நாட்டில் கண்ணியமுடன் வாழ்ந்த வன்னியப் பெரியோர்களும், இளைஞர்களும், தாய்மார்களும் காங்கிரஸில் சேர்ந்து உழைத்துச் செந்நீர் சிந்தி, கண்ணீர்புகை, தடியடி துப்பாக்கி வெடி தூக்கு மேடை, சிறைத்தொல்லை, இறப்புலகின் எல்லை முதலியவைகளைக் குடும்பம் குடும்பமாக எட்டிப் பிடித்தனர்.

1907-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் வழக்கறிஞர் தொழில் நடத்தச் சென்ற மகாத்மா காந்தியடிகள் அங்கு இந்தியர்கள் அடைந்த கொடுமை தாள முடியாது.

சத்தியாக்கிரகம் துவக்கிய காலத்திலே, காந்தியடிகள் பெயரை உலகறிய முதல் காரணமாக இருந்தவர். தென்னாற்காட்டைச் சேர்ந்த வள்ளியம்மை என்ற வீரவன்னியத்தாயாரும். மேற்படி போரில் அல்லும் பகலும் உழைத்து இறுதியில் ஆப்பிரிக்க அரசினரின் துப்பாக்கிக் குண்டினை மார்பிலே ஏற்ற மாவீரர் நாகப்ப படையாச்சியால் யாரும். காந்தியடிகள் தமிழகத்திற்கு முதன்முதல் வந்திருந்தபோது மாயவரம் தாலுக்காவிலுள்ள கீழ்ப்பெரும்பள்ளம் முதலிய கிராமங்களுக்குச் சென்று, நாகப்ப படையாச்சியின் பெற்றோரைக் கண்டு நன்றியும், ஆறுதலும் சொல்லி, அவர்கள் வீட்டில் தங்கி நீருணவு உட்கொண்டு சென்றார் என்பது நினைவில் நிறுத்த வேண்டிய விஷயமாகும்.

ஏறக்குறைய முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் உரிமைப்போராட்டத்திலே சொற்பெருக்காற்றி கணவனிலிருந்து கைக்குழந்தைவரை வெள்ளையர் ஆதிக்கத்தை வேரறுக்க வெற்றி முழக்கம் புரிந்த வீரவன்னியத்தாய் அஞ்சலை அம்மையாராகும். காங்கிரஸிற்கு உழைத்துக் கையில் காசின்றி நெளியும் வறுமையும், நெஞ்சம் தளராது ஆங்கிலேயரை எதிர்ப்பேன்; அடிமைத்தளையை அறுப்பேன் எனப் பெரிய முதலாளியோடு போட்டியிட்டு மக்கள் பலத்தால், உண்மை உழைப்பால் வெற்றி பெற்ற வீர வன்னியர் கேத்தாண்டம் பட்டி பொன்னுசாமி கண்டராகும். இந்நிலையில் உழைத்து உயிர் நீத்த வன்னிகுல வீரரகளைக் கூறவேண்டுமானால் அது ஓர் தனி வரலாறாகும் என எண்ணிநான்கு வீரர்களை மாத்திரம் இங்கு கூறப்பெற்றது.

1980-ல் இருந்து 1946-வரையில் தமிழ் நாட்டில் காங்கிரசில் சேர்ந்து உழைத்துச் சிறை சென்றவர்கள் 5760 தேசத் தொண்டர்களாகும். இதில் வன்னிய தேசத்தொண்டர்கள் 1300-ஆகும் என்றால் காங்கிரஸின் ஆணி வேர் வன்னிய பெருங்குடி மக்களல்லவா? இவ்வாறு காங்கிரஸில் அரும்பாடுபட்டு மிகுந்த எண்ணிக்கையில் உழைத்த நம்மவருக்கு 1937 ல் காங்கிரஸ் மாகாண அரசியலை ஏற்படுத்தி சட்ட சபைக்கும் மேல் சபைக்கும் 280 பேர் தேர்ந்தெடுக்கப் பெற்றபோது ஆற்காடு தங்கவேல் நாயகர், கள்ளிப்பட்டு கிருஷ்ணசாமி நாயகர், பூண்டியாங்குப்பம் இராமச்சந்திர படையாச்சி ஆகிய 8 வன்னியர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள்.

1945-ல் இந்திய சட்ட சபைக்கு 7-பேர் தேர்ந்தெடுக்கப் பெற்றபோது வன்னியரைக் கைவிட்டனர். 1946-ல் சட்டசபைக்கும், மேல் சபைக்கும் 7-ஸ்தானங்கள் வன்னியர்களால் கைப்பற்றப்பெற்றது.

1952-ஆம் ஆண்டு தேர்தலில் உழைப்பாளி கட்சி அமைத்ததின் பயனாக சென்னை சட்ட சபையில் 29 M.L.A.வாகவும், 2, M.L.C. வாகவும், 2. மந்திரிகளாகவும், 5. M P.வாகவும் சற்று உயர்ந்தோம். 1957 ஆகிய இவ் ஆண்டிலே ஏற்பட்ட தேர்தலிலே நமக்குள் ஒற்றுமையும் உழைப்பும் குறைந்ததால் 27. M.L.A. வாகவும், 2. M. L. C. வாகவும், 1. மந்திரியாகவும், 3. M. P.வாகவும் குறைந்துவிட்டோம். போனதைப்பற்றி வருத்தப்படுவதில் இனி பிரயோஜன மில்லை.

இனி வரும் ஜில்லா போர்ட், கார்ப்பரேஷன் தேர்தல்களில் நம்மவர்களுக்குள் போட்டியிடும் அர்ப்ப குணத்தை விட்டாலன்றி நாம் முன்னேற முடியாது, ஒரு ஸ்தானத்திற்கு ஒரு வன்னியர் நிற்பாரானால் நாம் அனைவரும் மனமொப்ப நேயமொடு வேலை செய்து அவர் வெற்றி காண பாடுபடவேண்டியது நமது இன்றியமையாத கடமையாகும். இந்த ஐந்தாண்டு காலங்களில் நமது பிரதிநிதிகள் பலன் எதிர்பாராத பணியையும், உண்மை ஊழியம் என்ற இரு பெருங் கருத்துக்களை மனதில் இறுத்தி, தன்னலமற்ற நல்வாழ்வுக்கு வழிகோல வேண்டுமென்றும், தாம் பிறந்த குல சம்பந்தமாக ஏதேனும் தீர்மானங்கள் வருமானால் அவரவர்கள் தனித்தனி கட்சிகளை மனதில் கொள்ளாது சமூக பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டு எங்கள் சங்க சார்பில் நன்றிகலந்த வணக்கத்தை பணிவான அன்புடன் செலுத்திக்கொள்ளுகிறோம்.

 


சென்னை சட்டசபையிலுள்ள வன்னியர்கள்

(காலம் 1957-61)

 

பெயர் தொகுதி.

(திருவாளர்கள்)

சென்னை மாவட்டம் (1)

  1. திரு. K. விநாயகம் M.A., B.L., L T,F. R.E. S (Lond) தியாகராயநகர்,

செங்கற்பட்டு மாவட்டம் (2)

  1. திரு. முத்துசாமி நாயகர் செங்கற்பட்டு.
  2. திருமதி.G. கமலாம்புஜம்மாள் கும்முடிபூண்டி.

தென்னாற்காடு மாவட்டம் (8)

4.திரு.S.S.இராமசாமி படையாச்சி நெல்லிகுப்பம்.

  1. திரு கோபால கண்டர் சத்தியமங்கலம்.
  2.  திருP. வீரப்ப கண்டர் திண்டிவனம்
  3. திருA.கோவிந்தசாமி நாயகர் வளவலூர்.
  4. திருV. P. சாரங்கபாணி கண்டர் விழுப்புரம்,

9., திரு M, கந்தசாமி படையாச்சி உளுந்தூர்பேட்டை

  1. திருR.சீனிவாஸ படையாச்சி கடலூர்.
  2. திரு சாமிகண்ணு படையாச்சி புவனகிரி.

சேலம் மாவட்டம் (8)

12.திரு. P.M. முனுசாமி கண்டர்  அரூர்

  1. திரு. M. கந்தசாமி கண்டர் தர்மபுரி
  2. திரு. S. இலட்சும கண்டர் ஏற்காடு
  3. திரு. N. S. சுந்தரராஜன் B.A., B L, தாரமங்கலம்
  4. திரு. A. இரத்தினவேலுகண்டர் சேலம் 2
  5. திரு. A.இராஜா கண்டர் ராசிபுரம்
  6. திரு. M. P.சுப்பிரமணியம் B A ஆத்தூர்
  7. திருமதி S. ஹேமலதா தேவி பென்னாகரம்

திருச்சி மாவட்டம் (2)

  1. திரு. K.R. விஸ்வநாதன் M.A., ஜெயங்கொண்டம்.
  2. திரு.S. இராமலிங்க படையாச்சி அரியலூர்.

தஞ்சை மாவட்டம் (1)

  1. திருR. இராமாமிர்த தொண்டைமான் ஆடுதுறை.

வடாற்காடு மாவட்டம் (5)

  1. திருM.A. மாணிக்கவேல் நாயகர் BA.BL. துரிஞ்சாபுரம்.
  2. திருசந்திரசேகர நாயகர் ரானிப்பேட்டை
  3. திருV. K.கிருஷ்ணமூர்த்தி ஆம்பூர்
  4. திருRC சாமன்ன கண்டர் திருப்பத்தூர்.
  5. திருS. M. அன்ணாமலை போளூர்

சென்னை மேல்சபை வன்னியயர்கள் (2)

  1. திருA. கஜபதி நாயகர் BA.., BL
  2. திருசேலம் A. சுப்பிரமணியம்

சென்னை வன்னிய மந்திரி (1)

  1. M.A. மாணிக்கவேல் காயகர் BA,BL. ரெவெனியூ இலாக்கா

மக்கள் சபை வன்னியர்கள் (3)

  1. திருN. R. முநுசாமி BA.BL. வட ஆற்காடு.
  2. திருK.R. சம்பந்தம் BA. தஞ்சை மாவட்டம்.
  3. திரு சண்முக கண்டர் தென் ஆற்காடு-

 

குயப்பேட்டையின் பூர்வோத்திரமும், நமது குல தர்மங்களும்.

குயப்பேட்டையைக் குறித்து ஆராய்வதற்கு முன் சென்னையை அடுத்துள்ள பிரபல சிவ க்ஷேத்திரங்களாகிய திருவொற்றியூர், திருமயிலை, திருவாண்மையூர் ஆகிய தலங்களில் வன்னியர்களுக்குள்ள ஆதிக்கங்களை ஒரு சிறிது ஆராய்வோம்,

திருவொற்றியூர் முதலிய சிவ க்ஷேத்திரங்கள் திரு. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியவர்களின் பாடல்கள் பெற்றிருப்பதால் இன்றைக்கு சுமார் 1500 ஆண்டுகட்கு முற்பட்டதென தெரிகிறது.

திருவொற்றியூரில் ஓர் சங்கராச்சாரியர் மடம் இருக்கிறது. அம்மடத்திற்கு அடுத்துள்ள சாத்தாங்காடு கிராமத்தை வன்னிய சின்ன பிள்ளை தந்திரியார் என்ற நமது குல சேனைத் தலைவர் அந்தமடத்திற்கு எழுதிக் கொடுத்திருப்பதாக செப்பேடு இருக்கிறது. மேற்படியூர் மேலண்டை மாடவீதியில் நமது பெரியோர்கள் கட்டிவைத்த பெரிய சத்திரமும், பிள்ளையார் கோயிலும் மகா சங்கத்தார் மேற்பார்வையில் நாளதும் இருந்து வருகிறது.

திருமயிலை என்பது மிகப் புண்ணியஸ்தலம் என்பது அனைவரும் அறிந்ததொன்றே. அந்த க்ஷேத்திரத்தில் இன்றைக்கு சுமார் 1800 ஆண்டுகட்கு முன் கந்தப்பராஜா என்ற வன்னி மன்னன் ஆண்டுகொண்டிருந்தான்.

அதுகாலை கிருஸ்தவ மத பிரசாரம் செய்வதற்காக செயின்ட் தாமஸ் என்ற கிருஸ்துவின் சீடர் சென்னைக்கு வந்தார். கந்தப்ப ராஜாவைக் கண்டார். கிருஸ்தவராக்கிவிட்டால் எல்லா மக்களும் கிருஸ்தவர்களாகி விடுவார்களென்று எண்ணி பல துர்போதனைகள் செய்து அவரை கிருஸ்தவ மதத்தில் சேர்த்தார். அது கண்டநமது மரபார் ஆத்திரம்கொண்டு செயின்ட் தாமஸ் என்பவரை 21-12-68 A. D யில் அடித்துக் கொன்று விட்டார்கள். தாமஸ் இறந்த இடம்தான் இன்று செயின்ட் தோம் என்று மைலாப்பூரில் பிரபல கிருஸ்தவ ஆலயம் இருக்கிறது.

இங்கிலாந்திலிருந்து வருபவர்களெல்லாம் அதை புண்ணிய ஸ்தலமாக எண்ணி வந்து போகிறார்கள். செயின்ட் தாமஸ் உடலை இங்கு புதைத்ததால் ஜனங்களுக்கு ஆவேசம் ஏற்படுமென்று எண்ணி அவரை பரங்கிமலையில் புதைத்து கிருஸ்தவ ஆலயம் கட்டி “செயின்ட் தாமஸ் மவுன்ட்” என்று பெயர் வைத்தார்கள். இதற்கு முன் பிரிங்கிமா ரிஷி வாழ்ந்திருந்ததால் பிரிங்கிமா நகர் என்ற பெயர் இருந்தது. மைலாப்பூரில் அக்காலத்தில் நமது மரபார் பலர் கிருஸ்தவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழும் தெருவுக்கு பெரியபள்ளி தெருவென்றும் சிறியபள்ளி தெருவென்றும் நாளதும் வழங்கி வருகிறது.

மைலாப்பூர் தேவஸ்தானத்தில் கோபுர தீபாராதனை சம்பந்தமாக நம்மவர்களுக்கும், முதலியார்களுக்கும் வியாஜ்யம் நடந்த காலத்தில் அவர்களிடத்தில் இருந்த செப்பேட்டை கோர்ட்டில் கொண்டுவந்து காட்டிய தாகவும், நீதிபதி அவர்களை நோக்கி மதம் மாறிவிட்ட உங்களுக்கு இதில் என்ன அக்கரை என்று கேட்டபோது, நாங்கள் மதம்தான் மாறினோமே தவிர ஜாதி மாறவில்லை யென்றும், வன்னிய கிருஸ்தவர்களென்றும், நாங்கள் கோயிலுக்குள் வராவிட்டாலும் எங்கள் ஜாதியாருக்குள்ள ஆதிக்கமாகிய கோபுர தீபாராதனை தவறி விடுமானால் அது எங்களுக்கும் அவமானம் என்று தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தனியாக தங்கள் பிள்ளை களுக்கென ஓர் உயர்தர பாடசாலையும் கட்டி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாளதும் மைலாப்பூர் பள்ளித் தெருவுக்குப் போனால் அவர்களையெல்லாம் பார்க்கலாம்.

அந்தக் கோர்ட்டின் தீர்மானப்படி நாளதும், நம்மவர்களுக்கே கோபுர தீபாராதனை கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கோயிலுக்கு முன்னால் பந்தல் போடவும். மண்டகப்படி நடத்தவும், ஸ்ரீமத் பாலசக்தியாசி சுவாமிகள் பண்டிலிருந்துவரும் மூலதன வட்டியைக் கொண்டு அந்தப் பண்டின் காரியதரிசியாகிய திரு. எஸ்.தர்மலிங்க நாயகர் அவர்கள் நாளதும் நடத்தி வருகிறார்.

திருவாண்மையூரில் நமது மகா சங்கத்தின் தலைவராயிருந்த கொடைவள்ளல் அணைக்கட்டு சொக்கலிங்க நாயகர் அவர்களால் தெப்ப உற்சவம், கைலையங்கிரி விமானம், தியாகர் நடனம் ஆகிய இம் மூன்றும் ஒருங்கே ஆயிரக்கணக்கான பணச்செலவில் நடந்து வந்தன. அது நமது மரபிற்குப் பெரிதும் கௌரவத்தைத் தந்தது. இராயப்பேட்டையில் பிரபல செல்வந்தராக இருந்த பச்சையப்ப நாயகர் என்பவர் ஓர் வீடு தர்மம் செய்திருப்பதை அங்கு சிலாசாஸனம் செய்திருக்கிறார்.

 

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் குயப்பேட்டையியுள்ள வன்னியர்களும், குலாலர்களும் மற்றும் பல வம்சத்தினரும் தற்போது பீபில்ஸ் பார்க், கார்ப்பரேஷன் கட்டிடம் இவைகள் இருக்கும் இடத்தில் உப்பளங்கள் இருந்ததால் அதில் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

 

அப்போது ஈஸ்ட் இந்திய கம்பெனியார் சென்னைக்கு வரும் காலம். ஆங்கில அரசாங்கத்தார் உப்பளங்கள் இருக்கும் இடம் தங்களுக்கு வேண்டுமென்றும் அங்கிருந்த குடிஜனங்களுங்கு இப்போது சூளையென வழங்கும் இடத்திலிருந்து குயப்பேட்டை வரையில் கம்பெனியாரால் குடியிருக்க அளந்துவிட்ட இடமாகையால் ” இருங்குன்றம் கம்பெனிபேட்டை” யென பெயர் கொடுத்தார்கள்,

 

வீனைதீர்த்த வினாயகர் ஆலயமும், படைவீட்டம்மன் ஆலயமும். உப்பளங்களில் வேலை செய்துகொண்டிருந்த வன்னி குல க்ஷத்திரியர்கள் தாங்கள் பூஜித்து வந்த வினைதீர்த்த வினாயகர், ஸ்ரீ படைவீட்டம்மன் ஆகிய தெய்வங்களை உடன்கொண்டுவந்து தாங்கள் இருக்கும் பகுதிகளில் ஸ்தாபித்து பூஜிக்கலானார்கள். இரண்டு தெய்வங்களுக்கும் கவர்ன்மெண்டிலிருந்து மாதம் ரூபாய் 31/2 வீதம் மகமைப் பணம் வந்துகொண்டிருந்ததாய்த் தெரிகிறது. புண்ணிய கோட்டி நாயகர், கைலாச நாயகர் இவர்களின் மூதாதை களாக இருந்தவர் அண்ணாமலை நாயகர் அவர்களாகும். அவரே அக்காலத்தில் எல்லா ஜாதிகளுக்கும் தலைவராயிருந்திருக்கிறார்.

 

படைவீட்டம்மன் மூல விக்கிரகத்தின் அடியில் அண்ணாமலை நாயகர் ஆதீனம் என்றே சிலாசாசனம் செய்யப்பெற்றிருக்கிறது. படைவீட்டம்மனுக்கு செடல் ஆடிய காலத்தில் கோயிலின் எதிரில் பெரிய மைதானமாக இருந்ததாகவும், செடல் ஆடிய காலத்தில் ஆயிரக் கணக்கான ஜனங்கள் பொங்கல் இடுவது முதலிய தெய்வகாரியங்களுக்கே உபயோகம் பெற்றதாகவும், அப்பொங்கல் கந்தசாமி கோயில் தெரு வரைக்கும் இருக்குமென்றும், அப்பொழுது மொட்டையம்மன் உற்சவம் அவ்வளவு பிரபலமாக இல்லையென்றும், நமது பெரியோர்களால் அறிகிறோம். மேற்கண்ட இரண்டு தேவாலயங்களும் நாளதும் வன்னிகுல க்ஷத்திரியர் வசமே இருந்து வருகின்றன.

பிற்காலத்தில் தூசி இராஜகோபால பூபதியார் என்ற பெரியார் நம் இனத்தவர்கள் பலரை மகா சங்கத்தில் சேர்த்தும், உபநயனம் முதலியன செய்வித்தும், குலாதிக்கமான குலசேகர பெருமாள் ஆலயம் கட்டுவதற்கு காரணமாயிருந்தும் எட்வர்ட் பார்க், வாசகசாலை வன்னி மன்னர் தர்ம தீர்த்தம் முதலியன ஏற்படுத்தியும் வன்னி குலோத்தாரணர் உதவியால் மாஜிக் லாண்டான் என்ற புகைப் படத்தைக்கொண்டு கிராம பிரசாரங்கள் பல புரிந்து அவர் உழைத்த உழைப்பு பொன்னேபோல் போற்றத்தக்கதாகும்.

இதில் கண்டுள்ள வன்னிகுல மாமணிகளின் புண்ணிய சரித்திரங்களை எல்லாம் எழுதுவதற்கு எனக்கு பேராதரவாக இருந்தவர் எனது மதிப்பிற்குரிய தாத்தா வன்னிய மகரிஷி. ஆ. சுப்பிரமணிய நாயகர் அவர்கள் சேகரித்து நெடுநாளாக காப்பாற்றி வைத்திருந்த புத்தகங்களேயாகும். இதில் கிடைக்கக்கூடிய சொற்ப லாபம் எங்கள் சங்கத்திற்கு பேருதவியாக இருக்குமாகையால் வன்னிகுல நண்பர்கள் இப் புத்தகத்தை எங்கும் பரவுவதற்கான முயற்சி செய்வது அவர்களின் இன்றியமையாத கடமைகளுள் ஒன்று என்பதை வந்தனபூர்வமாய் வேண்டிக்கொள்ளுகிறேன் அவ்விதம் அவர்கள் செய்தால் மறுபதிப்பும் அச்சிடப் பெரிதும் உதவியாய் இருக்கும்.

மறுபதிப்பில் தேசம், மதம், ஜாதிக்கென லட்சக்கணக்கான பொருளை அர்ப்பணம் செய்த வன்னகுல மகாப் பிரபு P. T. Lee செங்கல்வராய நாயகர் அவர்களின் சிறந்த சரிதமும், நன்செய் இடையாற்று வள்ளல் எழுதி வைத்துவிட்டுபோன உயிலின் சுருக்கமும், செய்யாறு தாலுக்கா இராஜ வன்னிய ராஜஸ்ரீ சோமசுந்தர முதலியார் அவர்கள் திருவோத்தூர் புண்ணிய ஸ்தலத்தில் செய்துள்ள கல்வி, தெய்வீக தர்மங்களைக் குறித்தும், பறங்கிப்பேட்டை வன்னிகுல சேகரர் வி. குருசாமி ராயர், சதுரங்கப்பட்டணம் ராஜி நாயகர், கல்வி தர்மங்களையும் சென்னை சூளை திரு. G. T. மாணிக்க நாயகர் அவர்கள் ஆரம்பித்துள்ள கல்விச் சாலையைப்பற்றியும், வியாசர்பாடி ஸ்ரீமதி, கன்னியம்மாள் உயிலைப்பற்றியும் வன்னிய மகரிஷி அவர்களால் எழுதி வெளியிட வேண்டியிருக்கிறது. அவர் காலத்திற்குப் பிறகு இவ்விஷயங்களெல்லாம் வன்னிய உலகத்திற்கு தெரியாமல் அழிந்துவிடுமாகையால் அவைகளை வெளிவரவும் முயற்சிசெய்து கொண்டிருக்கிறோம். அம்முயற்சி முற்றுபெற ஆண்டவன் அருள் புரிவானாக.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu