சிவமயம்

ஸ்ரீவன்னி வம்ஸ ப்ரகாசிகை

இஃது

சேலம் வன்னிகுல க்ஷத்திரிய

ஸ்ரீ கழறிற்றறிவார் சபையின்

பொக்கிஷ காரியதரிசி

 

சு. அர்த்தநாரீச நாயகவர்ம்மாவால்

 

இயற்றப்பட்டு

சேலம்

ஷண்முகவிலாச அச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப்பட்டது.

 

இரண்டாம் பதிப்பு

பிரமாதீச ஆண்டு சித்திரை மாதம்

 

ரிஜிஸ்தர் செய்யப்பட்டது.)                       (விலை அணா 4.

 

இப்புத்தகம் வேண்டியவர்கள் சேலம் சுகவனபுரி சு. அர்த்தநாரீச நாயகரிடத்திலும் சேலம் ஷண்முகவிலாச அச்சுக்கூடத்திலும் பெற்றுக் கொள்ளலாம்

 

ஸ்ரீ கணேஸாயநம:

 

க்ஷத்ரிய தீபமென்னும்

 

ஸ்ரீ வன்னிவம்ஸப்ரகாசிகை

 

விநாயக ஸ்துதி

 

மாமேவு முச்சுடருள் வன்னி மரபுதித்த

தூமேவு வேந்தரினத் தொல்புகழைத் – தேமேவு

செந்தமிழிற் கத்தியமாய்ச் செப்பக் கருணைமதத்

தந்திமுகச் சாமி சரண்.

 

வினா :-   ‘ஸ்ரீ வன்னிவம்ஸ பிரகாசிகை’ என்னும் பதங்களுக்குப் பொருள் யாரு?

 

விடை :-  ஸ்ரீ = சிறப்புற்ற, வன்னி = அக்கினி பகவானது, வம்சம் = மரபாரகிய க்ஷத்ரியரது குலத்தை, பிரகாசிகை = விளக்கும் நூல் – எனவே வன்னிகுல சத்திரியரது மரபை விளக்கும் நூல் என்பது தேர்ந்த பொருள்.

 

வினா :-   வன்னியர் என்னும் சொல்லுக்கும் இலக்கணம் என்ன?

 

விடை :-  வஹ்நி+ஜர் = ‘அக்கினியில் உதித்தோர்’ எனப் பொருள் படும். இரண்டு வடமொழிப் பதங்களும் தமிழில் வன்னியர் என மருவி ஓர் மரபைச் சுட்டும் காரண இடுகுறிப்பெயராம்.

 

வினா :-   வன்னியர் என்னும் ஓர் ஜாதி சிருஷ்டி காலத்தில் ஏற்பட்டதா? அல்லது இடையிலுண்டாயிற்றா?

 

விடை :-  வன்னியர் என்னும் நாமத்துடன் ஓர் ஜாதி சாஸ்திரங்களில் இல்லை. ஆனால் ஓர் ஜாதியின் உட்பிரிவாகும்.

 

வினா :-   எந்த வர்ணத்தின் உட்பிரிவாம்?

 

விடை :-  ஆதி நால்வருணங்களில் இரண்டாவதாய் விளங்கும் க்ஷத்ரிய வருணத்தின் உட்பிரிவாம்.

 

வினா :-   முதலில் வர்ணங்கள் எத்தனையென்பதை விளங்குக?

 

விடை :-  பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்திரர் – அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகும்.

 

வினா :-   இந்த நான்கு வர்ணங்களும் எக்காலத்தில், எதற்காக, யாரால் ஏற்பட்டன?

 

விடை :-  உலக சிருஷ்டியுண்டாகும் காலத்தில், உலகத்தை நிலை நிறுத்தும் பொருட்டு பிர்மா முதலிய பிரஜாபதிகளால் ஏற்பட்டன.

 

வினா :-   உலகை நிலை நிறுத்துவதற்கும் இந்த நான்கு வர்ணங்கட்கும் சம்பந்தமெப்படி?

 

விடை :-  பிராமணன் வேதமோதி, யாகங்களைச் செய்து, தேவர்களைச் சந்தோஷமாக்கி மழையையும் அதனால் உணவுப் பொருள்களையும் அதனால் உயிர்களையும் உண்டபாக்கக் காரணமாகிறான்; க்ஷத்ரியன், உலகிலுள்ள ஜீவர்களை ஓர் கட்டுக்குட்படுத்தி வேதவரம்பை மீறாதபடி தனது புஜபலத்தால் அவர்களை ஆளுகிறான்; வைசியன் உலகிலுள்ள ஜீவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பயிரிடுவதாலும், அதற்காகப் பசு வளர்ப்பதாலும், விளைந்த பண்டங்களைக் காசுக்கு மாற்றுவதாலும் உலகிற்கு உபகாரமாகிறான்; சூத்திரன் மேற்படி மூன்று வர்ணத்தாருக்கும் ஏவலாளனாய் மேற்படி காரியங்களைச் செய்து முடிக்கப் பயன்படுகிறான்; இவ்வாறு நான்கு ஜாதியார்களும் உலகிற்குக் கட்டாயமாய் வேண்டியவராகின்றனர்.

 

வினா :-   மேற்சொன்ன நான்கு ஜாதிகளையன்றி  உலகில் காணப்படும் வேற ஜாதிகள் எவ்வாறுண்டாயின?

 

விடை :-  அவைகள் ஈஸ்வர சிருஷ்டியல்ல, ஜீவசிருஷ்டியாம்.

 

வினா :-   ஜீவ சிருஷ்டி என்றால் என்ன?

 

விடை :-  ஜீவர்களே உண்டாக்கிக் கொள்வதாம்.

 

வினா :-   ஜீவர்கள் எவ்வாறு உண்டாக்குகின்றனர்?

 

விடை :-  ஈஸ்வரன் ஜீவர்களது ஜென்மாந்தர குணங்களையும் கர்மங்களையும் வேறு பிரித்து நான்கு ஜாதிகளை ஸ்திரீ புருஷர்களுடன் ஜதை ஜதையாய் சிருஷ்டித்து அவர்களுக்கு வேண்டிய தொழில்களையும் இன்னதென்று கற்பித்து அவற்றின்படி நடக்கவும், முறை பிறழ்ந்து மேற்படி நான்கு ஜாதிகளும் ஒன்றோடு மற்றொன்று கலவாதிருக்கவும் வரையறுத்திறுக்க, அக்கட்டளையை மீறி  மேற்படி நான்கு ஜாதியிலுதித்த ஆடவர்களும் ஸ்திரீகளும் மாறிமாறிக் கலந்ததால் வர்ணஸங்கரம் அதாவது ஜாதிக் கலப்பு உண்டாயிற்று. அதனால் வேறு பற்பல ஜாதிகள் உண்டாயின.

 

வினா :-   ஆதி நான்கு வருணங்கள் மட்டும் ஈஸ்வர சிருஷ்டி யென்பதற்குப் பிரமாணமுண்டோ?

 

விடை :-  ‘சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ’ ‘செயலாலுங் குணத்தாலுஞ் செலநாலு குலமாக இயலான்முன் படைத்தேனான்’ என்னும் கீதா வாக்கியமே பிரமாணமாம்.

 

விஷ்ணு புராணம், பாகவதம் முதலிய நூல்களும் இவ்வாறே சொல்லியிருக்கின்றன.

 

வினா :-   வர்ண ஸங்கரத்தால் விளைந்த விளைவு என்ன?

 

விடை :-  அநுலோம, பிரதிலோம, அந்தராள ஸங்கர ஜாதியார்கள் உதித்தார்கள்.

 

வினா :-   அநுலோமர் எப்படி உதித்தனர்?

 

விடை :-  உயர்குல ஆண்களும் தாழ்ந்தகுலப் பெண்களும் கூடியதால் உதித்தனர்.

 

குறிப்பு :-  சுஜாதி ஸ்திரீயினிடம் அக்கிரம விவாகத்தாலும் சோரத்தாலும் பிறந்தவர்களும் அநுலோமர்கள்.

 

வினா :-   விவாகம் எத்தனை விதம்?

 

விடை :-  பிரமம், தெய்வம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசுரம், காந்தர்வம், பைசாசம், இராக்ஷஸம் என்னும் பேதத்தால் எட்டு விதம்.

 

வினா :-   விவாகங்கள் எட்டையும் விளக்குக?

 

விடை :-  (1) வேதாத்யயனஞ்செய்து முடித்த சதாசாரமுள்ள பிரமசாரியைத் தானாயழைப்பித்து தனது கன்னிகையை யலங்கரித்துத் தானஞ் செய்தல் பிரமவிவாகம்.

 

(2) யக்ஞத்தில் தன் புரோகிதனுக்குத் தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுத்தல் தெய்வம்.

 

(3) தனது யாககாரியத்திற்கு ஒன்றிரண்டு பசு அல்லது ரிஷபம் பெற்றுத் தனது பெண்ணைத் தானஞ்செய்தல் ஆருஷம்.

 

(4) ஓர் பிரமசாரியை யழைப்பித்துத் தன்பெண்ணைத் தாரை வார்த்து ‘இருவரும் தர்மத்தை ஆசரியுங்கள்’ எனச் சொல்லிக் கொடுத்தல் பிரஜாபத்யம்.

 

(5) பெண்ணின் பிதாவிற்கு சுல்கமும் பெண்ணுக்கு ஆபரணமும் கொடுத்து பெண்ணைக் கிரகித்தல் ஆசுரம்.

 

(6) பெண்ணும், புருஷனும் மன மொத்துச் சேர்தல் காந்தர்வம்.

 

(7) பலாத்காரத்தால் ஓர் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போதல் இராக்ஷஸம்.

 

(8) ஓர் கன்னிகையை நித்திரை, மயக்கம் முதலிய காலங்களிற் புணர்தல் பைசாசம்.

 

வினா :-   இவ்வெட்டுவித விவாங்களில் எந்த வர்ணத்தாருக்கு எது கிரமம்?

 

விடை :-  சுஜாதி ஸ்திரீயுடன் பிராமணனுக்கு பிரமம்; தெய்வம், ஆருஷம், பிரஜாபத்யம் என்னும் நான்கும், அவ்வண்ணமே  க்ஷத்ரியனுக்கும், வைசியனுக்கும் பைசாசம் தவிர மற்ற ஏழும், சூத்திரனுக்கு காந்தர்வ, ராக்ஷஸ, பைசா விவாகங்கள் தவிர மற்ற ஐந்தும் கிரமமாம்; மற்றவை அக்கிரமமாம்.

 

வினா :-   பிரதிலோமர் எப்படிப் பிறந்தனர்?

 

விடை :-  தாழ்குல ஆண்களும், உயர்குலப் பெண்களும் கூடியதால்.

 

இவ்வண்ணமே அநுலோம பிரதிலோமர்களும் முறை பிறழ்ந்ததால் அந்தராள ஜாதியாருதித்தனர்.

 

குறிப்பு :-  பிரதிலோம, அந்தராளர்களின் பிறப்பில் விவாக சம்பந்தமில்லை.

 

வினா :-   இந்த ஸங்கரஜாதிகட்கு ஓர் கணக்கு உண்டோ?

 

விடை :-  அநுலோக பேதம் நாற்பதும். பிரதிலோம பேதம் ஆறும், அந்தராள ஸங்கரபேதம் பதினான்கும் கூடி ஜாதி அறுபது என்பார்கள்.

 

வினா :-   அறுபது ஜாதியார்களும் ஸங்கர ஜாதியார் தாமோ?

 

விடை :-  ஆம். பிரதான நான்கு ஜாதிகளைத் தவிர மற்றவர்கள் யாவரும் ஸங்கர ஜாதியாரே.

 

வினா :-   இதற்காதாரமென்ன?

 

விடை :-  பராசரஸ்மிருதி, ஆசாரகாண்டம், 2-வது அத்யாயம், பிரதிலோம அநுலோமஜாதி நிரூபணத் பிரகரணத்தின் மாதவீய வியாக்யானத்தில் ஸங்கரர், மூன்று விதம்:-

 

  1. வர்ண ஸங்கரர்,
  2. ஸங்கரர்,
  3. வர்ணஸங்கீர்ண ஸங்கரர்.

 

எப்படியெனில் – உத்தம, அதம வர்ணங்கள் ஒன்றுக்கொன்று கலந்து பிறந்தவர்கள் வர்ண ஸங்கரர்கள்.

 

வர்ணஸங்கர ஸ்திரீ புருஷர்கள் ஒருவரோடொருவர் கலந்து பிறந்தவர்கள் ஸங்கீர்ண ஸங்கரர்கள்.

 

வர்ணஸங்கரர்களும் ஸங்கீர்ண ஸங்கரர்களும் கலது பிறந்தவர்கள் வர்ண ஸங்கீர்ண ஸங்கரர்கள்.

 

இம்மூவகையில் வர்ண ஸங்கரர் அநுலோம பிரதிலோம பேதத்தால் இரண்டு விதம்:-

 

உதாரணம் – பிராமணனுக்கும் க்ஷத்ரிய ஸ்திரீக்கும் பிறந்த வைத்யன் முதலியவர்கள் அநுலோம வர்ண ஸங்கரர்கள் என்னப்படுகின்றனர்.

 

பிராமண ஸ்திரீக்கும் க்ஷத்ரியனுக்கும் உதித்த சூதன் முதலியோர் பிரதிலோம வர்ண ஸ்ங்கரர்கள்.

 

மாஹிஷ்ய புருஷனுக்கும் கணக்க ஸ்திரீக்கும் பிறந்த ரதகாரன் அல்லது கம்மாளன் முதலியவர்கள் ஸங்கீர்ண ஸங்கரர்கள்.

 

கம்மாளர், சூதர் முதலியவர்கள் ஒருவர்க்கொருவர் கலந்து பிறந்தோர் வர்ண ஸங்கீர்ண ஸங்கரர்.

 

வினா :-   ஸங்கர ஜாதி என்பதற்குப் பொருளென்ன?

 

விடை :-  கலப்பு ஜாதி என்பதாகும்.

 

வினா :-   மேற்படி அறுபது ஜாதியார்களின் பெயர்களைச் சொல்லுக?

 

 

அநுலோமார் நாற்பது:-

 

பஸ்திரிகன் … … …

காயகன் (அரையன்) … … …

அஜநிஷ்டயன் … … …                  பிராமண அநுலோமர்

ஜாங்கிகன் … … …

சிவத்து விஜயடன் (குருக்கள்) … …

கோளகன் … … …

 

 

வைத்யன்… … …

பிஷஜன் … … …

சிகித்ஸகன் … … …

விரதன் (ஆராத்யன்) … … …

மஹாமாத்ரன் (மாவுத்தன்) … …        பிரமாண க்ஷத்ரிய

வைகாநஸன் (நம்பி) … … …            அநுலோமர்

கணக்கன் … … …

சூதன் … … …

தெய்வக்ஞன் (சோதிடன்) … …

 

 

 

அம்பட்டன் … … …

உபகாரிகன் … … …

நாவிதன் … … …                       பிரமாண வைசிய

காயஸ்தன் … … …                     அநுலோமர்

குயவன் … … …

சைலூஷன் … … …

 

 

 

பாரசவன் (கூத்தாடி) … … …            பிரமாண சூத்திர

தம்பணவன் (ஒச்சன்) … … …           அநுலோமர்

 

 

க்ஷத்ரபந்து … … …                     க்ஷத்ரிய அநுலோமன்

 

சமஸ்யகன் … … …

நாதி … … …                           க்ஷத்ரிய வைசிய

தரணகன் (முத்திரியன்) … … …         அநுலோமர்

கைசிரன் … … …

 

 

உக்ரன் … … …

சாரிகன் … … …                        க்ஷத்ரிய சூத்திர

நிஷாதன் (வேடன்) … … …             அநுலோமர்

சூலிகன் மேற்படி … … …

 

 

வளையற்காரன் … … …                வைசிய அநுலோமன்

 

 

 

சூத்ரகன் … … …                        வைசிய சூத்ர

இலைவாணியன் … … …               அநுலோமர்

பாம்பாட்டி … … …

 

 

 

அஜ வைத்யன் … … …

வைகநகன் (ஒட்டன்) … … …            சூத்ர அநுலோமர்

ஆர்யகன் (நட்டுவன்) … … …

 

 

பிரதிலோமர் ஆறு:-

 

வந்தி (பட்ராஜ்) … … …       பிராமண க்ஷத்ரிய பிரதிலோமன்

மாகதன் (நோக்கன்)        பிராமண வைசிய பிரதிலோமன்.

சண்டாளன் (பறையன்)     பிராமண சூத்திர பிரதிலோமன்.

ஸாலிகன் (நெசவுக்காரன்), க்ஷத்ரிய வைசிய பிரதிலோமன்.

குசலன் (சாணான்),        க்ஷத்ரிய சூத்திர பிரதிலோமன்.

கோபாலன் (இடையன்)     வைசிய சூத்ர பிரதிலோமன்.

 

 

 

 

அந்தராள ஜாதி பதினான்கு:-

 

  1. கம்மாளன் (ஐந்து பேதம்)
  2. அஸ்வபாலகன் (குதிரைக்காரன்)
  3. ரஜகன் (உயர்ந்த வண்ணான்)
  4. வர்ணாரகன் (தாழ்ந்த வண்ணான்)
  5. கணி (வள்ளுவன்)
  6. சக்ரிகன் (செக்கான்)
  7. ஸபாகரன் (குறவன்)
  8. மாலாகாரன் (சாத்தானி, பண்டாரம்)
  9. ஸஸ்யஸேசகன் (செம்படவன்)
  10. சர்மகாரன் (சக்கிலி)
  11. படவன் (பட்டினவன்)

 

 

  1. கோரு, குளிகன், பெருமாள் மாட்டுக்காரன்

ருண்டிகன்           அல்லது குரங்காட்டி

 

  1. சல்யகன்
  2. மேதரன் – ஆக அறுபதாம்

 

வினா :-   இவர்களின் பிறப்பு, தொழில் முதலியவற்றை விளக்குக?

 

 

 

விஷயம்விப்ராநுலோமர்கள்
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.ஆஸுரம்…பிராமணன்பிராமண

கன்னிகை

பஸ்திரிகன்அரசருக்

கடப்பம்

தாங்கல்

ஆஸுராத்  விப்ரகந்யாயாயம் விப்ராத் ஜாதஸ்து பஸ்த்ரிக: தாம்பூல பஸ்த்ரிகாம் ராக்ஞாம் ஸம்ஸ்க்ருதம்சஹேஜ்ஜலம்

 

2.காந்தர்வம்பிராமணன்,,காயகன்…விஷ்ணு சேவை நித்ய

கீதம்

விப்ராத் ப்ராஹ்மண கந்யாயாம் காந்தர்வாத் காயகோ பவேத் தௌர்யத்ரிகம் ஸ்துதிம் விஷ்ணோ: குர்யாத் வேத்ர தரோ பிவா.

 

3.ராக்ஷஸம்…,,,,அஜ நிஷ்யன்அரசருக்கு குடை பிடித்தல் முதலியனவிப்ராத் ப்ராஹ்மண கந்யாயாம் ராக்ஷஸாதஜநிஷ்டய: ஸராக்ஞாம் பிப்ருயாத் சத்ரம் வஸ்த்ரமாபரணாதிகம்

 

4.பைசாசம்,,,,ஜாங்கிகன்

விராத்தியன்

அரசருக்குத் தூது போதல் முதலியனவிப்ராத் ப்ராஹ்மண கந்யாயாம் பைசாசாத் ஜாயதே சய: ஸராஜலேக வாஹீந்யாத் ஜாங்கிகோ தௌத்ய கர்ம க்ருத்.

 

 

 

5.சோரம்…,,,,சிவத்துவிஜன்ஆகம மார்க்க சிவ பூஜைப்ராஹ்மணாத் விப்ராகந்யாயாம் சௌர்யாத் ஜாத: சிவத் விஜ: அதீத்யாகம சாஸ்த்ராணி நித்யம்குர்யாத் சிவார்ச்சனம்.
6.புருஷன்ஜீ,,விவாஹமான பிராமணப்குண்டன்…தோட்டம் வைத்தல், உப்பு விற்றல்பத்யௌஜீவதி விப்ராயாம் ஜபத: குண்டோ பவேத் த்விஜாத் ஆராம பாலகநம் குர்யாத் லவணாதேஸ்வ விக்ரயம்
7.புருஷனிந்,,பிராமண

விதவை

கோளகன்பெருங்காயம் அவிழ்தம் விற்றல்ம்ருதே பத்தரி விப்ராயாம் விப்ராத் ஜாதஸ்து கோளக: ஹிங்க் வௌஷதாம் சுகாநாம்ச ஸகுர்யாத் க்ரய விக்ரயம். ஏதாஸ்து ஜாதயஸ் ஸப்த ப்ராஹ்மந்யாமநுலோமஜா:

 

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

விப்ர க்ஷத்ரிய அநுலோமர்கள்
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.தெய்வம்…பிராமணன்க்ஷத்ரிய

ஸ்திரீ

வைத்யன்…சூத்ரா நுலோமருக்கு வைத்யம்தைவாத் விவாஹத் ஸம்பூதோ விப்ராத்து க்ஷத்ரிய ஸ்திரியாம் தேநூபநீதோ வைத்யஸ்யாத் ஆயுர்வேத மதீத்யச சூத்ராநாம் சாநுலோமாநாம் ஸகுர்யாத் பிஷஜக்ரியாம்.
2.ஆர்ஷம்…பிராமணன்க்ஷத்ரிய

ஸ்திரீ

பிஷஜன்…ர்வஜாதிக்கும் வைத்தியம்ஆர்ஷாத் விவாஹாத் வித்ராத்து க்ஷத்ரியாயாம் பிஷக்பவேத் குர்வீத் ஸர்வ ஜாதீநாம் சிகித்ஸாம்ச யதாவிதி
3.பிரஜாபத்யம்,,சிகித்ஸகன்ரண மாற்றுதல் அட்டை வைத்தயம்ப்ராஜாபத்யாத் க்ஷத்ரியாயாம் விப்ராத் ஜாத: சிகித்ஸக: சஸ்த்ரதாஹ ஜலூகாதி சிகித்ஸாம்ச கஜாஸ்வதாம்.
4.ஆஸுரம்…,,,,விரதன்…லிங்க பூஜை

கணேஸ பூஜை

ஆஸுராத் க்ஷத்ரியாயாம்து விப்ராத் ஜாதோ வ்ரதோபவேத் ஸம்ஸ்தாபிதாநி லிங்காநி கணேசம் சாபி பூஜயேத்.

 

 

5.காந்தர்வம்…,,,,மஹா மாத்ரன்யானை குதிரை பழக்குதல், சிஷைகாந்தர்வேண க்ஷத்ரியாயாம் மஹாமாத்ரோ பவேத் த்விஜாத் ஆரோஹணம் கஜாஸ்வாநாம் சிக்ஷணம் தஸ்யசோதிதம்.
6.ராக்ஷஸம்…,,,,வைகா நஸன்விஷ்ணு பூஜைவிப்ராத் க்ஷத்ரிய கந்யாயாம் உத்பந்நோ ராக்ஷஸேநய: நாம்நா வைகாநஸஸ்தஸ்ய வ்ருத்திர்விஷ்ணோஸ்ச பூஜநம்.
7.பைசாசம்…,,,,கணக்கன்…தேவ பிராம்மண ராஜ கணக்கு…பைசாசாத் க்ஷத்ரியாயாம்து ப்ராஹ்மணாத் கணகோபவேத் தேவ்த விஜந்ருபாணாம்து ஸஸ்யலேகாதி கர்ம க்ருத்.

 

 

8.புருஷனிருக்க…,,,,சூதன்…ரதசாரத்யம், புராண சிரவணம்.பத்யௌ ஜீவதிவிப்ரெண க்ஷத்ரியாயாம்து யோபவேத் நாம்நாஸூத: க்ஷத்ரியாணாம் குர்யாத் ஸாரத்யமேவச ஸ்ராவயேச்ச புராணாநி புண்யாஸ்வ விலிதா கதா:

 

 

9.புருஷனிறந்தபின்…,,,,தைவக்ஞன்சோதிஷம்…தைவக்ஞ: க்ஷத்ரியாயாந்து ம்ருதே பத்யௌ த்விஜாத்பவேத் அதீத்ய ஜ்யௌதிஷம் சாஸ்த்ரம் கதயேத் பூபலாதிசம். நவைதே க்ஷத்ரியாயாந்து ப்ராஹ்மணாத நுலோமஜா:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • ••

 

 

 

 

 

 

விப்ர வைச்யா நுலோமர்கள்
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.ஆர்ஷம்…பிராமணன்வைசியஸ்திரீஅம்பஷ்டன்காயமாற்றுதல் கர்ப்ப நோய் தீர்த்தல்.விப்ராத் வைத்யஸ்த்ரியாம் ஜாத: ஆர்ஷாதம் பஷ்ட உச்யதே உபநீதஸ்ச குர்வீத சிகித்ஸா சாஸ்த்ர வாஸநாம்.

 

 

 

 

2.பிரஜாபத்யம்,,,,உபகாரகன்துவிஜர்கட்கு க்ஷவரம் செய்தல்ப்ராஜாபத்யேந வைச்யாயாம் விப்ராத் ஸ்யாதுபகாரிக அஸ்யசாம்பஷ்டவர்வ்ருத்தி: வபநம்ச த்விஜந்மநாம்.

 

 

 

3.ஆஸுரம்…,,,,நாவிதன்சூத்திர அநுலோமர்கட்கு க்ஷவரம்.ஆஸுராத் வைச்யகந்யாயாம் விப்ராத் ஜாதஸ்து நாபித: சூத்ராணாம நுலோகமாநாம் உபநம் சாஸ்ய சோதிதம்.

 

 

 

 

 

 

4.காந்தர்வம்…,,,,காயஸ்தன்யாகத்திற் பசுவைக் கொல்லுதல் முதலியனகாந்தர்வாத் வைச்யகந்யாயாம் காயஸ்தோப்ராஹ்மணாத்பவேத் பசுஸம்ஞபநம் குர்யாத் குலாலேக ஸஹாத்வரே வபநம்ச ப்ரகுர்வீது நாபேரூர்த்வம் த்விஜந்மநாம் பௌரோஹிதஞ்ச சூத்ராணாம் அந்யோஷாம் கணகோபவேத்

 

5.ராக்ஷஸம்…,,,,குலாலகன்மட்பாத்திரம் செய்தல்ராக்ஷஸேந்து வைச்யாயாம் விப்ராத் ஜாத: குலாலக: சராவ பாண்டகாரகோ யக்ஞ பாத்ராதிகாரக:

 

6.பைசாசாம்…,,,,சைலூஷன்ராஜசவையில் நர்த்தன சங்கீதம் கூத்தாடல்…பைசாசாத் சைலூஷஸ்யாத் விப்ராத் வைத்ய யோஷிதி க்ஞாத்வாநர்த்தன தந்த்ராணி வர்ணிகாநாம் பரிக்ரஹம் ரஸயுக்தைநிவ்ருத்தாநி கீர்த்தயேத் ந்ருப ஸந்திதௌ.

ஷடேதேப்ராஹ்மணாத்ஜாதா: வைச்யாயாமனுலோமா

ராக்ஷஸாத் சூத்ரகந்யாயாம் விப்ராத் பாரசவோ பவேத் அதீத்ய யாமளம் சாஸ்த்ரம் குர்யாத் தௌர்யத்ரிகாதிகம்.

 

 

 

  • ••

 

 

 

க்ஷ. அநு.
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.ராக்ஷஸம்…பிராமணன்சூத்ர ஸ்திரீபாரசவன்…துர்கை பூபைசாசாத் சூத்ரந்யாயாம் விப்ராத் தம்பணவோ பவேத்

 

2.பைசாசாம்…,,,,தம்பணவன்ஜை ஆடு பலிஸதுர்க்காபூஜநம் குர்யாத் அஜாவிஹநநாதிகம்.

சதுர் விம்சதிரித்யேதே

ப்ராஹ்மணாதநுலோஜா:

 

 

 

  • ••

 

 

 

 

க்ஷத்ரிய வைச்யாநுலோமர்
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.பைசாசாம்…க்ஷத்ரியன்க்ஷத்ரிய

ஸ்திரீ

க்ஷத்ரபந்துராஜசேவை, குடை பிடித்தல்பைசாசஜ: க்ஷத்ரபந்துர் நார்ஹத்யேவந்தருபாஸநம் ஸேவேதந்ருபதிஸ்தஸ்ய வ்ருத்திஸ்யாச்சாத்ர தாரணம்.

 

 

2.ஆஸுரம்…க்ஷத்ரியன்வைச்ய ஸ்திரீவைச்ய ஸ்திரீராஜபுத்திரருக்கு ஆயுதஞ் சுமத்தல்.ஆஸுரேன ந்ருபாஜ்ஜாதோ வைச்யாயாம் சமஸ்யக: காரயேத்

ராஜபுத்ராய தநுராத்யாயுதச்ரம:

 

 

3.காந்தர்வம்,,,,நாதி…அஸ்வாரோஹணம்.க்ஷத்ரியாத் வைச்யகந்யாயாம் நாதிர் காந்தர்வதோ பவேத் அச்வாநாரோஹயேத் ராகஞாம் ஸேநாநாம் தண்டதாரகம்.

 

4.ராக்ஷஸம்,,,,தரணகன்சஸ்த்ர தாரணம்ஸ்யாத்வைச்யாயாம் தரணக: க்ஷத்ரியாத் ராக்ஷஸேந்து ஆத்த சஸ்த்தரஸ் ஸதாவிஷ்ட: குர்யாத் ரக்ஷாஞ்ச பூபுஜாம்.

 

 

5.பைசாசாம்…,,,,கைசிரன்ஆட்ட பாட்ட விநோதம்.க்ஷத்ரியாத் வைச்யகந்யாயாம் பைசாசாத் கைசிரோபவேத் கேளிஸம்யுதந்ருத்தாதி கீதவாத்ய விநோதக்ருது.

இதி க்ஷத்ரிய வைச்யாநுலோமா:

 

 

 

  • ••

 

 

க்ஷத்ரிய சூத்ராநுலோமர்
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.ஆஸுரம்…க்ஷத்ரியன்சூத்ரி ஸ்திரீஉக்ரன்…சேவகரைத் தண்டித்தல், அந்தப் புரங்காத்தல்.சூத்ராயாம் க்ஷத்ரியாத் ஜாத: உக்ரஸ்யாதாஸுரேணது தண்ட்யாஸ்ச தண்டயேத் ராக்ஞாம்

ஸ்யாதந்த: புராக்ஷக

 

 

 

2.காந்தர்வம்…,,,,சாரிகன்ராஜ சந்நிதியில் கோழி முதலிய பந்தயம் விடுதல்க்ஷத்ரியாத் சூத்ரந்யாயாம் காந்தர்வாத் சாரிகோ பவேத் த்யூ… குக்குட மேஷாதி பத்ரிபி: க்ரீடயேந்ருபம்.

 

 

 

 

3.பைசாசாம்,,,,நிஷாதன்…அரசனுடைன் வேட்டையாடல்ராக்ஷஸேந ந்ருபாத் சூத்ர்யாம் நிஷாதாஸ் தஸ்யஜீவநம் ம்ருகபக்ஷி ராக்ஞாம் ம்ருகயாயாம் வநேஷுச.

 

  • ••

 

க்ஷ. சூ. அ.
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
4.பைசாசாம்க்ஷத்ரியன்சூத்ரஸ்திரீசூலிகன்…மாமிச விக்கிரயம்.க்ஷத்ரியாத் சூத்ரகந்யாயாம் பைசாசாத் சூலிகோபவேத் ஹந்யாத் சித்ரவதே யோக்யாண் சூர்யாச்சைவ ச்வவிக்ரயம்.

இதிக்ஷத்ரிய சூத்ராநுலோமா:

 

 

  • ••

 

வை. அ.
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.பைசாசாம்வைச்யன்வைச்யஸ்திரீமணிகாரன்சங்கு, வளையல், ரத்தின வியாபாரம்மதௌ வைச்யஸ்ய காந்தர்வ ராக்ஷஸெளநிஜவ்ருத்திதௌ பைசாசஜஸ் சங்காச மணிமுக்தாதி ஜீவந: (வேத்
வைச்ய சூத்ராநுலோமர்
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.காந்தர்வம்வைச்யன்சூத்ரஸ்திரீசூத்ரகன்…மெழுக்கு வியாபாரம்வைச்யாத் சூத்ரஸ்த்ரியாம் ஜாதோ காந்தர்வாத் சூத்ரகோப குர்யாதாபணவீத்யந்தே மயன க்ரயவிக்ரயம்.

 

 

2.ராக்ஷஸம்மேற்படி,,பர்ணவணிகன்புல், கட்டை வியாபாரம்ராக்ஷஸாத் சூத்ரகந்யாயாம் வைச்யாத் த்ருணவணிக்பவேத் விக்ரயஸ்த்ருண காஷ்டாணாம் வ்ருத்திஸ்தஸ்ய கடஸ்யச வைஸ்யாத்து சூத்ரகந்யாயாம்.

 

3.பைசாசாம்மேற்படி,,அஹிநர்த்தகன்பாம்பாட்டன்பைசாசேந அஹிநர்த்தக: ஸ்மாஜே நர்த்தயேந்நித்யம் யோஷிதாம் ப்ரஸவக்ரியாம்

இதிவைச்யசூத்ராநுலோமா:

 

 

 

 

 

 

சூத்ராநுலோமர்
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.காந்தர்வம்சூத்ரன்…சூத்ர ஸ்திரீகோஜாலி சி கித்ஸகன்ஆடு, மாடு வைத்தியம்சூத்ரஸ்ய சூத்ரகந்யாயாம் காந்தர்வேணது யோபவேத் கோஜாவிமஹிஷாணாம்ச சிகித்ஸா தஸ்ய ஜீவநம்.
2.ராக்ஷஸம்மேற்படி,,வைகநகன்…கிணறு முதலிய வெட்டுதல்ராக்ஷஸேநததா சூத்ர்யாம் சூத்ராத் வைகநகோபவேத் தடாகசேது குட்யாந்து வாபீ கன்ன கர்மக்ருத்.

 

 

3.பைசாசாம்மேற்படி,,ஆர்யகன்…கோயிலில் தாசிகளையாட்டுதல்பைசாசாத் சூத்ரகந்யாயாம் சூத்ராதார்யக உச்யதே தேவாலயேஷு ந்ருத்தஸ்த்ரீ ந்ர்த்தயேத் காநஸம்யுதம்.

இதி சூத்ராநுலோமா:

சத்வாரிம்சத் ப்ரபேதாஸ்யுர் ஏதேவர்ணானுரோமஜா:

 

 

 

  • ••

 

 

 

 
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.க்ஷத்ரியன்பிராமணவந்தி…

ஸ்திரீ

அரசரைத் துதிதெழுப்பல்.ப்ராஹ்மண்யாம் நரபாலேந ஜாதோவை வந்திநாமக: ப்ராஹ்மோ முஹுர்த்தே ஸததம் ந்ருபாணாமவபோதக:

 

 

 

2.….வைசியன்…,,மாகதன்…ராஜ சபையில் அஹஸ்யம், கூத்துவிப்ராயாம் வைச்யதோ ஜாதோ மாகதோ ந்ருத்த தாளக்ருத் ந்ருபாணாம்து படேத்காதா ஹாஸ்யயுக்தாஸ் ததாபரா

 

 

3.சூத்ரன்…,,சண்டாளன்தோல்வேலை…ப்ராஹ்மண்யாம் சூத்ரதோ ஜாத சண்டாளஸ் சர்மக்குரத்பவேத் பூஷணஞ்சாய ஸஸைஸம் ம்ருத்பாத்ரே சாஸ்யபோஜநம்

இதிப்ராஹ்மணப்ரதிலோமா:

 

 

 

  • ••
க்ஷத்ரிய பிரதிலோமர்
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.வைசியன்…க்ஷத்ரிய ஸ்திரீஸாலிகன்…பட்டு வஸ்திரம் நெய்தல், விற்றல்க்ஷத்ரியாயாம் ஸமுத்பந்நோ வைச்யாத் ஸாலிக் உச்யதே க்ஷௌ மாதீநித வஸ்த்ராணி குர்யாச்ச க்ரய விக்ரயம்.

 

2.சூத்ரன்…,,குசலன்…மது, சாராய விற்பனைக்ஷத்ரியாயாம் ஸமுத்பந்நோ சூத்ராத் குசல உச்யதே ஸுரா பைஷ்டிகமைரேய கௌரீமாவீக ஜீவநம்.

இதிக்ஷத்ரியப்ரதிலோமா:

 

 

  • ••

 

வை.பி.
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.,,வைசியஸ்திரீகோபாலன்கால்நடைமேய்த்தல், பால் தயிர் நெய் விற்றல் பல்லக்கு சுமத்தல்.வைச்யாயாயாம் சூத்ரதோ ஜாதோ கோபால இதிநாமதா: காவம் மஹிஷ மேஷாணாம் அஜாநாம் பரிபாலக: ததிதுத்த க்ருதா நீநாம் விக்ரயா துபஜீவநம் ஆந்தோளிகாதி நாஸ்கந்தே வஹேத் வர்ண சதுஷ்டயம்.

இதிவைச்யப்ரதிலோமா: ஏதேஷட் ப்ரதி லோமா: வர்ணாநாம் சதுர்விதம்.

 

 

  • ••

 

ஸங்கர ஜாதிகள்
நெ.விவாஹ பேதம்தகப்பன்தாய்ஜாதிதொழில்விஷய ஸ்லோகம்
1.விராத்தியன்வைசியஸ்திரீஸ்தபதி, ஸ்வர்ணகாரன், சில்மரம், கல், பொன், செம்பு, இரும்பு முதலியவைத்ச்யாயாம் வ்ராத்யதோ ஜாத: ஸ்தபதிஸ் ஸ்வர்ணகாரக: தக்ஷாசில்பீ வர்த்தகீச பஞ்சைதே கர்மபேதகா:

 

 

மாஹிஷ்யன்கணக்கஸ்திரீதச்சன், சில்பி,

வர்த்ததகி.

வற்றால் தொழில்கரணாயாந்து விப்ரேந்த்ரா மாஹிஷ்யாத்யோ விஜாயதே, ஸதக்ஷோ ரதகாரஸ்ச ப்ரோக்த ஸ்சில்பீச வர்த்தகீ. லோஹகாரஸ் சர்மகார:

 

2.கோபாலன்சூத்ர ஸ்திரீமாளவன்அஸ்வபாலநம்சூத்ர்யாம் கோபலதோ ஜாதோ மானவோ அஸ்வாதிபாலக: புரீஷஹாரீ ஸததம் மதி ராநிகடஸ்திக:

 

 

3.ஸாலிகள்,,ரஜகன்…வர்ணாநுலோமர் துணி வெளுத்தல்சூத்ராயாம் ஸாலிசாத் ஜாதோ ரஜகஸ் சேலதா வக: வர்ணாநுலோம வஸ்த்ராணி ஸம்ஸ்குர் யாச்சயவாகுநா.

 

4.கைசிரன்…பிராமண

ஸ்திரீ

வர்ணாரகன்ரஜகனுக்குதவி,

தீட்டுத் துணி வெளுத்தல்

கைசிராத் விப்ரகந்யாயாம் ஜாதோ வர்ணார கோபவேத், நிக்ருஷ்டாசௌச வஸ்த்ராணி தாவயேத் ரஜகாயச.

 

5.ரஜகன்…வர்ணாரக

ஸ்திரீ

வள்ளுவன்

(கணி)

ஈன ஜாதிகட்கு திதி நட்சத்திரம் சொல்லல்வர்ணாரகஸ்த்ரியாம் ஜாதோ ரஜகாத் கணிரசுசூது, துது நக்ஷத்ர வாராதி கதயேத் தீநஜந் மநாம்.
6.ஸாரிகன்…க்ஷத்ரியஸ்திரீசக்ரிகன்…எண்ணெய் பிண்ணாக்கு விற்றல்ஜாத: க்ஷத்ரிய கந்யாயாம் சாரிகாத் சக்ரிகோப வேத், திலாந் விமர்தயேத் யந்த்ரே பிண்யா காதீநிவிக்ரயம்.
7.சூத்ரன்…பிராமண விதவைஸபாகரன்…தானிய கிரய விக்கிரயம்விதவாயாந்து விப்ராயாம் வ்ருஷலாஜ் ஜாதஸ் ஸபாகர: ஸங்க்ருஹ்ய ஸர்வதாந்யாநி குர்யாச்ச க்ரய விக்ரயம்.

 

8.அம்பட்டன்க்ஷத்ரிய

ஸ்திரீ

மாலாக்காரன்புஷ்ப விக்கிரயம்அம்பஷ்டேந க்ஷத்ரியாயாம் மாலாகாரோஸ்ய ஜீவநம் ஆராம ஸேசநம் புஷ்ப க்ரதநம் புஷ்பவிக்ரயம்.

 

9.சாரிகன்…க்ஷத்ரிய விதவைசஸ்யஸேசகன்அநுலோக பிரதிலோக மருக்குத் தொண்டுவிதவாயாம் க்ஷத்ரியாயாம் ஸாரிகாத் ஸஸ்யஸேசக: ப்ரதிலோமாநுலோமாநாம் ஸூசகாதேசமாஹரேத்

 

10.கோபாலன்பிராமண ஸ்திரீசர்மகாரன்தோல் வேலைசர்மகாரஸ்து விப்ராயாம் கோபாலா தப்யஜாயத அஜாவிம்ருக மேஷாதி சர்மணா சில்பகர்மக்குரத்.

 

11.ராஜகன்…ஸாலிக

ஸ்திரீ

படவன்…மீன் பிடித்தல், விற்றல்ஸாலிக்யாம் ரஜகாஜ்ஜாதோ படவோ மத்ஸ்ய ஜீவந: ஜலஜாநாஞ்ச புஷ்பாணாம் மத்ஸ்யாதீநாஞ்ச விக்ரய:

 

சூத்ரன்…கோபாலகோரு…கிராம ரக்ஷணை இலை, புல் பழம் விற்றல்சூத்ராத் கோபஸ்த்ரியாம் ஜாதோ கோருஸ்யாத் க்ராமாக்ஷக: ஸ்திரீ. பலபத்ரத்ருணாநாந்து விக்ரயஞ் சாஸ்ய ஜீவநம்.
12.மேற்படி…சண்டாள ஸ்திரீ…குளிகன்…பயிரிடல்…சண்டால்யாம் சூத்ரதோஜாத: குளிகஸ் ஸஸ்யக்ருந்தநம்.

 

பிராமணன்,,ருண்டிகன்சூத்ர கிராம ரக்ஷணை.சண்டால்யாம்குண்டிகோ விப்ராத் சூத்ரக்ராமஸ்ய ரக்ஷக.
13.அம்பட்டன்பிராமண

ஸ்திரீ

சல்யகன்…பிரதிலோமர்கட்கு எலும்டா பரணம்.அம்பஷ்டாத் விப்ரகந்யாயாம் ஜாதஸ்சல்யக உச்யதே குர்வீத ப்ரதிலோமாநாம் சல்யசர்ம ஸ்வவ்ருத்தயே.

 

 

14.சக்ரிகன்…கோபால

ஸ்திரீ

மேதரன்…மூங்கில், பிரம்புகளால் கூடை முதலியன வனைதல்.ப்ரமாதாச் சக்ரிகாஜ் ஜாதோ மேதரோ கோபக ஸ்த்ரியாம். வேத்ர வேணு சலாகாபி: குர்யாச் சூர்ப்ப கடாதிகம்.

இதிஸங்கரஜாதய:

ஸ்ரீ மகாசைவபுராணத்தில் அநுலோம, பிரதிலோம, அந்தராள ஜாதிகளை விவரிக்கும் 69, 70, 71-வது அத்தியாயங்கள் உதஹரிக்கப்பட்டன.

 

 

  • ••

 

வினா :-   ஜீவர்களுக்குச் சிருட்டிக்கும் வல்லமை இல்லாதிருக்க, இவ்வறுபது ஜாதிக ஜீவசிருஷ்டியெனச் சொல்லலாமோ?

 

விடை :-  சொல்லலாம். உலகில் ஜீவசிருட்டி, ஈச்சிருட்டி என சிருட்டி இருண்டு விதம். முந்தியது பந்த காரணம். பிந்தியதோ மோட்ச சாதனம்.

 

உதாரணம் :-    ஓர் பெண் வடிவம் ஈஸ்வர சிருஷ்டி. அதன் மேல் வைத்த தாய், மனைவி, மகள் முதலிய அபிமானங்களும்; பக்தி, காமம். அன்பு முதலிய விருத்திகளும் ஜீவ சிருஷ்டியாம். இங்கு ஜாதிக் கலப்புக்குக் காரணம் ஜீவர்களானதால் ஜீவ சிருஷ்டியெனச் சொல்லப்பட்டது.

 

வினா :-   சரி, கலப்பு ஜாதிகள் உண்டான பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட உரிமை என்ன?

 

விடை :-  முதல் நான்கு வருணத்தார்களும் அநுலோமர்களும் பட்டணங்களிலும், பிரதிலோமர்கள் கிராமங்களிலும், இதர ஸங்கர ஜாதிகள் கிராமப் புறம்பிலும் வசித்து அவரவர்கட்குக் கற்பிக்கப்பட்ட தர்மங்களை நடத்தி வர ஏற்பாடாயிற்று.

 

வினா :-   வர்ணஸங்கரம் ஏற்படாவிட்டால் முதல் நான்கு சுய ஜாதிகளைத் தவிர மற்ற ஜாதிகளே இல்லாதிருக்குமே! அதனால் குற்றமில்லையா?

 

விடை :-  என்ன குற்றம்! ஆதியில் கிருதயுகத்தில் சாத்வீக குணத்தால் எல்லோரும் பிராமணராகவே யிருந்தார்கள். வேறு ஜாதி கிடையது. பிறகு ஜீவர்களிடம் சத்வகுணம் குறைய ஆரம்பித்ததால் நான்கு ஜாதியாக்கப்பட்டார்கள். அதன் பிறகு ரஜோகுண தமோ குண விசேஷத்தால் பல ஜாதியானார்கள்.

 

வினா :-   கம்மாளர், குயவர் முதலிய தொழிற் சாதிகள் ஏற்படாமலிருந்த காலத்தில் அத்தொழில்கள் எப்படி நிறைவேறின?

 

விடை :-  முதலில் தேவயுகத்தில் வேண்டிய வஸ்துக்களெல்லாம் தபோபலத்தால் ஸங்கற்ப மாத்திரத்தால் கிடைத்தன. அதன் பிறகு சத்வகுணம் குறைய ஆரம்பிக்கவே பிரயத்தனமின்றி பூமியினிடமிருந்து உண்டாயின. பிறகு ரஜோகுண தமோகுண விசேஷத்தால் பூமியைக் கிளற நேரிட்டது. அக்காலத்தில் தான் பலவித தொழிலாளிகள் ஏற்பட்டனர். தற்போது கிளறினாலும் கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது.

 

வினா :-   மிகவும் சரி. இந்தப் பிரிவுகளெல்லாம் ஏற்பட்டதால் விளைந்த பலனென்ன?

 

விடை :-  மோட்சமென்பது மிகவும் தூரமாயிற்று.

 

வினா :-   ஜாதிக்கும் மோட்சத்துக்கும் சம்பந்தம் எப்படி?

 

விடை :-  ஜாதி தருமங்களை ஈஸ்வரப் பிரீதியாக பலனை விரும்பாமல் செய்து வந்தால் அதனால் கிரமமாக மோட்ச சித்தியாம்.

 

வினா :-   இதனை விளக்குக?

 

விடை :-  கர்மத்தால் சித்த சுத்தியும், அதனால் குரு சேவையும், அதனால் ஞானப் பிராப்தியும், அதனால் மோட்சமு மென்பது நமது வேத சித்தாந்தமாம்.

 

வினா :-   நல்லது. நான்கு வருணங்களுக்கும் ஏற்பட்ட தருமமெவை?

 

விடை :-  அந்தணர்க்கு :- ஓதல், ஓதுவித்தல், யாகஞ் செய்தல், யாகஞ் செய்வித்தல், ஈதல், ஏற்றல்.

அரசர்களுக்கு :- ஓதல், யாகஞ்செய்தல், ஈதல், உலகாளுதல், யுத்தம் பயிலுதல், சேவகஞ் செய்தல்.

 

வணிகர்க்கு :-   ஓதல், யாகஞ்செய்தல், ஈதல், பசுக்காத்தல், உழுதல், பண்டமாற்றல்.

 

வேளாளர்க்கு :- சுத்தமுடைமை, சினமின்மை, வேத விதியின்றிய மந்திர முடைமை, அவ்வித நமஸ்காரமுடைமை, தொண்டு புரிதல் முதலியனவாம்.

 

வினா :-   சரி. இக்காலத்தில் க்ஷத்ரியரும் வைசியரும் இல்லையெனச் சிலர் சொல்லுகிறதற்குக் காரணமென்ன?

 

விடை :-  சரித்திர, சாஸ்திர ஆராய்ச்சி யில்லாமையே காரணமாம்?

 

வினா :-   பரசுராமரால் க்ஷத்ரியர் நிர்மூலமாக்கப்படவில்லையோ?

 

விடை :-  முற்றிலுமில்லை. கார்த்தவீரியார்ஜூனன் வம்சத்தாரில்  சிலரை மட்டும் பரசுராமர் கொலை செய் தாரேயன்றி மற்றவர்களை அல்ல.

 

வினா :-   இதற்கு ஆதாரமுண்டோ?

 

விடை :-  உண்டு. பரசுராமர் ஸ்ரீராகவ மூர்த்தியாலும் அதன்பின் பீஷ்மராலும் அவமானிக்கப்பட்டதும், துவாபாரயுகத்தின் முடிவில் நடந்த பாரயுத்தத்திலும் ஜானகி, பாஞ்சாலி முதலிய க்ஷத்ரிய மாதர்களின் சுயம்வர காலத்திலும் அநேக க்ஷத்ரிய வீரர்கள் ஒருங்கே சேர்ந்ததாக ஏற்படுவதும், பராசர பகவான் கலியுக தர்மமாக அருளிய தமது ஸ்மிருதியில் க்ஷத்ரிய தர்மம் சொல்லியிருப்பதும் அரசர் ழுலம் பரசுராமரால் முற்றிலும் அழிக்கப்பட வில்லையென்பதற்குத் தக்க ஆதாரமாம்.

 

வினா :-   சரி, க்ஷத்ரியருள் எத்தனை பிரிவுண்டு?

 

விடை :-  ஒவ்வொருவரும் உற்பத்தியாவதற்கு ஆதாரமாகிய மூலபுருஷனை முன்னிட்டு சூரியகுலம், சந்திர குலம், அக்கினிகுலமென மூன்று பிரிவுகளுண்டு.

 

வினா :-   மேற்படி மூன்றுக்கு மேல் வேறு பிரிவுகளில்லையோ?

 

விடை :-  திக்குப்பாலகர் அம்சமாகவும் க்ஷத்ரியர் உற்பத்தியாயிருக்கிறார்கள். ஆயினும் பரதகண்டத்திற் பிறந்த அரசர்கள் யாவரும் மேற்படி மூவகுப்புள் அடங்கியவர்களே.

 

வினா :-   சூரியகுலமும், சந்திரகுலமும் இருந்ததென்பதற்கு ராமாயண, மகாபாரதக் காவியங்கள் சாட்சியாயிருக்கின்றன. ஆனால் அக்கினி குலமென க்ஷத்ரிய ஜாதியில் ஓர் பிரிவிருந்ததென்பதற்குப் பிரசித்தமான புராண இதிகாசங்களுண்டா?

 

விடை :-  ஆக்நேய புராணத்தில் தேவீ மஹாத்மியத்தில் விரிவாகவும், மஹா பாரத முதலிய நூல்களில் சுருக்கமாகவும் வன்னி மன்னர்களின் சரித்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

வினா :-   வன்னியர்கள் அக்கினியிற் பிறந்தவர்கள் என்பதனாலேயே அவர்களை க்ஷத்ரியரென நம்பமுடியுமா?

 

விடை :-  துட்டர்களை வதைத்து, சாது ஜனங்களைக் காப்பாற்றி, தர்மத்தை நிலை நிறுத்தவே அக்கினியிற் பிறந்தவர்களாதலாலும், இத்தகைய செய்கைகள் ஸ்ரீமந்நாராயணன் அல்லது அவனது அம்சமாகிய அரசர்கட்கே உரியதாதலாலும் வன்னியர்கள் க்ஷத்ரியரென்பதற்கு எட்டுணையும் சந்தேகமில்லை.

 

வினா :-   ‘வன்னியர்கள் க்ஷத்ரியர்களா’ என்பதைப் பற்றி பிறகு விசாரிப்போம். தற்போது தென்னிந்தியா முழுவதும் பரவி, குடி மதிப்புத் தொகையில் முதன்மையாய், கேவலம் தாழ்ந்த நடையுடையவராய்க் காணப்படும் பள்ளிகள் எங்ஙனம் க்ஷத்ரியராவார்? பள்ளிகள் வேறு, வன்னியர் வேறன்றோ?

 

விடை :-  இது முழுப் பூசிணிக்காயைச் சோற்றோடு மறைத்த கதை போலிருக்கிறது. இப்படியும் சரித்திரி ஆராய்ச்சியின்றிய பொறாமையுள்ள சில நூதனை விவேகிகள் புகலுகின்றனர். என்ன வேடிக்கை!

 

வினா :-   ஏன்! அவர்கள் சொல்லுவதில் பிசகென்ன?

 

விடை :-  பள்ளியர்களைத் தவிர ‘வன்னிய’ மகுடமுடைய ஓர் ஜாதி இந்து தேசத்திலுண்டா ‘பள்ளி’ யென்னும் பதம் க்ஷத்ரியரின் பட்டப் பெயரேயன்றி ஜாதிப் பெயராக மாட்டாது. இவ்விஷயம் பின்னால் சொல்லப்படும்.

 

வினா :-   ‘பள்ளி’ என்னும் பதம் அரசர்கட்குரிய தென்பதற்கு ஆதாரமென்ன?

 

விடை :-  சாசனங்களில் ‘பள்ளிச் செல்வன் பழுவரையன்’ முதலிய சொற்கள் சோழவேந்தர்களைச் சிறப்பித்திருப்பதும், மிஸ்டர் ஆப்பர்ட் மிஸ்டர் கெட்டில், மிஸ்டர் நெல்ஸன், ரெவரெண்டு வில்லியம் டெய்லர், ரெவரெண்டு டி. மாரிஸ் முதலிய துரைகளெழுதிய தேச சரித்திரங்களில் இச்சாதியைப் பற்றிய அபிப்பிராயங்களும், காஞ்சி பல்லவராய கோபுரம் தற்போது பள்ளி கோபுரமென வழங்குவம், ‘பல்லவரே இக்காலப்பள்ளிகள்’ என மேற்படி துரைமார்கள் சரித்திரங்களில் புகழுவதும், சென்ஸஸ் சரித்திரங்களிலும் மிஸ்டர் இ. தர்ஸ்டன் துரையெழுதிய ‘தென்னிந்தியாவின் ஜாதிகள்’ என்னும் புத்தகத்திலும் ‘பள்ளிகள் அல்லது வன்னிய’ ரென்று இச்சாதிக்கு மகுடங் கொடுத்திருப்பதும், இவைகட்கெல்லாம் மேற்பட்ட உலகாநுபவத்திலும் பள்ளிகளே வன்னியரென்பது நிதர்சனமாகின்றது. இவ்வித்வ ரத்தினங்கள் ‘பள்ளிகள் மனிதல்களல்ல’ வென்று சொல்லவுங் கூசமாட்டார்கள் போலும்.

 

வினா :-   மெத்தவும் சரி. இனி வன்னியர்கள் க்ஷத்ரியரே என்பற்குப் பிரமாணம் சொல்லுக?

 

விடை :-  சுருதி, யுக்தி, அநுபவம் என்னும் இம்மூன்று பிரமாணங்களைத் தவிர மற்றொன்றால் ஒரு பொருளை நிர்ணயிக்க முடியாது. வன்னியர்கள் க்ஷத்ரியர்களே என்பதற்கு மேற்படி மூன்று பிரமாணங்களும் மலிந்து கிடக்கின்றன.

 

வினா :-   சுருதிப் பிரமாணம் என்ன?

 

விடை :-  பதினெண் புராணங்களுள் ஆக்நேயம், பாகவதம், பிரமாண்ட முதலியனவும், இதிகாசங்களாகிய இராமாயணம், ஹரிவம்ஸம, பாரதம் முதலியனவும்; ஆழ்வார், நாயன்மார் முதலியவர்கள் வசனமும், காவியங்களாகிய சிலையெழுபது, திருக்கை வளம் முதலியனவும்; அந்தந்த அரசர்கள் காலங்களில் ஏற்பட்டு தற்போது கவர்ன்மெண்டாரால் அச்சிடப்பட்டிருக்கும் தாம்பிர, சிலா சாஸனங்களும், தேச சரித்திரங்களும், இன்னும் பிறவும் போதிய பிரமாணங்களாம்.

 

வினா :-   யுக்திப் பிரமாணம் எப்படி?

 

விடை :-  வன்னியர்கட்குப் பரம்பரையாய் ஏற்பட்டு வழங்கி வரும் பட்டபெயர்களுக்கு அர்த்தம் செய்த போதும், அவர்களுக்குத் தேவாலயங்கள் முதலியவிடங்களில் நடக்கும் ராஜ மரியாதைகளாலும் இன்னும் பிறவற்றாலும் இவர்கள் க்ஷத்ரியர்களே என்பது யுக்தியாம்.

 

வினா :-   அநுபவப் பிரமாணம் யாது?

 

விடை :-  பூர்வம் தொடங்கி நாளது வரையில் இந்த மரபார்க்ள் அரசாட்சி செய்வதே அநுபவமாம்.

 

வினா :-   தற்போது வன்னியரில் யார் அரசாட்சி செய்கிறார்கள்?

 

விடை :-  மலையாளத்தரசர்களும் மற்றுஞ்சிலருமாம். அநேகர் பரம்பரைச் சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்தாரர்களாகவும் இருக்கின்றனர்.

 

வினா :-   அவர்கள் யார்?

 

விடை :-

  1. அரியலூர் ஜமீன்தாரவர்கள் திருவானைக் காவையாண்ட கோச்செங்கட் சோழ ராஜ வமிசத்தைச் சேர்ந்தவர்.

 

  1. உடையார் பாளையம் சிற்றரசரவர்கள் காஞ்சீபுரமாண்ட பல்லவராஜ சந்ததியாவார்.

 

  1. சிதம்பரத்திலுள்ள பித்தபுரம் ஜமீன்தார் அவர்கள் ஆதியில் சிதம்பரத்தைப் பொன்னம்பலமாக்கிய இரணிய வர்மசோழன் சந்ததி. இருவருக்கு நான்கு வருடங்கட்கு முந்தி தான் சிதம்பரத்தில் ஸ்ரீமந் நடராஜர் சந்நிதானத்தில் பஞ்சாக்ஷரப்படியில் தில்லை வாழந்தணர்களால் சங்காபிஷேகமும் ஆயிரக்கால் மண்டபத்தில் ஹிரண்ய வர்ம்மன் சந்ததி யென்று பட்டாபிஷேகமும் செய்யப்பட்டு ஹிரண்ய வர்ம்மனுடைய கிரீடமும் சூட்டப்பட்டது.

 

  1. சிவகிரி ஏழாயிரம் பண்ணை ஜமீன்தாரவர்கள் பாண்டியராஜ வமிசத்தில் தற்போதுள்ள சந்ததி.

 

  1. திருநெல்வேலி பன்னீராயிரம் பண்ணை ஜமீன்தாரரவர்களும் சோழராஜ வமிசத்தவராகும்.

 

  1. மலையாளத்தரசர்க்ள் சேரராஜர்களாம்.

 

  1. தெலுங்கு நாட்டில் விஜய நகர வேந்தர் முதலாயினோர் சளுக்கிய வமிசத்தினர்.

 

  1. பரூர், ஊற்றங்கால் முதலிய சமஸ்தானத்தவர்களும் பல்லச் சோழ வமித்தினராம்.

 

வினா :-   அக்நி குலத்தரசர்கள் என்னப்படும் சேர ராஜர்களை மட்டும் வன்னியரென்று சொல்லலாம். சோழ, பாண்டிய, பல்லவ, சளுக்கியர் முதலாயினோரையும் வன்னியரென்று சொல்ல ஆதாரமென்ன?

 

விடை :-  சோழர்கள் சூரிய குலமென்றும், பாண்டியர்கள் சந்திரகுலமென்றும், சேரர்கள் அக்கினிகுலமென்றும் தமிழ்நாட்டுக் கவிகள் சிறப்பித்துப் பேசியிருந்தாலும் உண்மையில் மேற்சொல்லி அனைவரும் வன்னியர்களேயாம். இதற்குப் பல காரணங்களுண்டு. அவற்றுள்:-

 

  1. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சளுக்கிய சந்ததியார்கள் முற்போதும் தற்போதும் ஒருவர்க்கொருவர் கொள்ளக் கொடுக்க வழக்கத்திலிருத்தல்.

 

  1. இவர்கள் யாவரும் தற்போது வன்னியரென்றே அழைக்கப்படுதல்.

 

  1. இவர்களின் மூலபுருஷன் அக்கின பகவான் என்ன புராணங்களில் ஆதாரமிருத்தல்..

 

  1. ‘வன்னியர்’ என்னும் பதப்பிரயோகம் சிறப்பாய் அக்கினி குலச் சேர ராஜர்கட்கும் பொதுவாய் சூரியகுலச் சோழனுக்கும் சந்திர குலப் பாண்டியனுக்கும் காவியங்களில் இருத்தல்.

 

  1. ‘வன்னியர்’ என்னும் பதம் பொதுவாய் அரசர் என்னும் அர்த்தம் தரும்படி கவிகள் பாடியிருத்தல்.

 

இவை முதலிய காரணங்களால் மேற்கூறிய யாவரும் வன்னியர்களேயாம்.

 

வினா :-   இவ்வைந்து வமிசத்தார்கட்கும் அக்கினியே மூல புருஷன் என்பதற்குப் பிரமாணம் யாது?

 

விடை :-  ஹரிவம்சம் :-   யயாதியின் புத்திரனாகிய துர்வகவின் பரம்பரையில் ந்த வன்னி என்னும் அரசன் வழியிலுதித்த ஆக்ரீடன் என்பவனுக்குக் கேரளன், சோழன், பாண்டியன், கலிங்கன் என்னும் புத்திரர்கள் பிறந்தாரென்றும் அவர்களது ராச்சியங்கள் அவர்கள் பேராலேயே வழங்கப்பட்டதென்றும் உரைப்பதற்கிணங்க மிஸ்டர் டாட் துரையவர்களியற்றிய ராஜஸ்தான சரித்திரமும் தெளிவாய்க் கூறுகின்றது.

 

பாரம் சந்திரனது உற்பத்தியைச் சொல்லுமிடத்து ‘சித்திக்கனன் முகத்தம் பிறந்தொளி சிறந்தோன்’ எனச் சந்திரனுக்கு அக்கினியை மூலமாகச் சொல்லிற்று.

 

மேலும் சூரிய சந்திரர்கள் அக்கினியினிடமாகவே தங்கள் பிரகாசத்தைப் பெறுவதாலும், சூரியனது ஆயிரம் நாமங்களில் அக்கினியென்னும் நாமமிருப்பதாலும், உஷ்ணகிரணத்திலும் பிரகாசத்திலும் சூரியனுக்கும் அக்கினிக்கும் பேதமின்மையாலும், அக்நியின் புத்திரராகிய ஆங்கீரஸ மஹா முனிவரே க்ஷத்ரியர் யாவருக்கும் மூலபுருஷரென்பது புராண சம்மதமாகையாலும் மேற்சொல்லிய் ஐந்து வகுப்பினரும் வன்னியர்களேயாம்.

 

வினா :-   வன்னியர் என்னும் பதம் சிறப்பாய் அக்கினி குலச் சேர ராஜர்களைக் காட்டுவதற்கு வசனஞ் சொல்லுக?

 

விடை :-  பாரதம், ஆதிபர்வம், துரோபதை மாலையிட்ட சருக்கத்தில் –

 

‘இவன் செந்தழலோன் மரபாகி ஈரேழுலகும் புகழ் சேரன்’ இராஜ சூயயாகச் சருக்கத்தில் –

 

‘சூரன்லெத்தோ குபேரன் குலத்தோர்  சுடர்பாவகப்

பேரன்குலத்தோர்’

 

‘பரிதியுமதியும் வன்னியுமுதலாம் பல்வகைக்கும்’

முதலியவைகளாம்.

 

வினா :-   சோழ பாண்டிய ராஜாக்களை வன்னியரென்று சொல்ல வசனம் காட்டுக?

 

விடை :-  கருணாகரத்தொண்ட வன்னியனார் சதகம் –

 

‘மறைக்குவாலோதும் கருணாகரத்தொண்ட வன்னியனே’ எனச் சோழவேந்தனுக்கு வன்னியனெனும் பட்டமும் கடிகை முத்துப் புலவரியற்றிய திக்கு விஜயம் –

 

‘வேந்தன்வரகுணராமபாண்டிய வன்னியனுக்கே

விஜயஞ்சொன்னேன்’

 

எனப் பாண்டியவேந்தனுக்கு வன்னியரென்னும் பட்டமும் வந்ததை உணர்க.

 

வினா :-   வன்னியர் என்னும் பதத்திற்கு அரசர் என்று அர்த்தம் தொனிக்க வசனம் காட்டுக?

 

விடை :-  கல்லாடம் –

 

‘நாற்படை வன்னியர் ஆக்கிய பெருமான்’

 

வாசிட்டம், அயிந்தவர் கதை –

 

‘சிந்தை செய்வார் நல்குரவு தீர உயர் வன்னியராவோம்’

கம்பராமாயணம், உத்தரகாண்டம், இலங்கையழித்த படலம்-

 

‘படிமன்னிவாழும் பல வன்னியர் மண்டலீகர்’

என்பன போதிய வசனங்களாம்..

 

வினா :-   முன் உதகரித்த வசனங்களினால் சேர, சோழ, பாண்டியர் வன்னியரென விளங்கினாலும், பல்லவர் அக்நிகுலத்தவர் என்பதற்கு ஆதாரமில்லையோ?

 

விடை :-  வேண்டிய ஆதாரமுண்டு. அக்நியின் புத்திரராகிய ஆங்கீரச முனிவரது பரம்பரையிற் பிறந்த துரோண புத்திரராகிய அஸ்வத்தாமாவின் புத்திரன் பல்லவன்; அவனால் பல்லவ வமிசம் உலகிலுண்டாயிற்று, தற்போது சிதம்பரம் பித்தபுரம் ஜமீன்தாரராகும் இராஜ வன்னிய ராஜஸ்ரீ சாமி துரை சூரப்பசோழனார் அவ்வமிசத்தினர் அன்றோ?

 

வினா :-   பிரமசாரியாகிய அஸ்வத்தாமனுக்குப் பல்லவன் என்னும் குழந்தை எவ்வாறு பிறந்தது?

 

விடை :-  அஸ்வத்தாமாவின் அழகிய தபோவனத்திற் ‘மதனி’யென்னும் ஓர் தேவகன்னிகை ஓர் காலத்தில் வர நேர்ந்து மன்மதாகாரனகிய மகரிஷி புத்திரனைக் காமுற்று அணைந்து பிறந்த புத்திரன் பல்லவன்.

 

வினா :-   இதற்கு ஆதாரமென்ன?

 

விடை :-  பாரதம் அநுசாசனபர்வம் 85-வது அத்தியாயமும், E. ஹல்ஸ் துரையவர்களால் வெளியிடப்பட்ட சாஸன புத்தகம் 1-வது வால்யும் 12-வது பக்கமுள்ள 24-நெ. சாஸனமும், 26-வது பக்கத்திலுள்ள 32-வது சாஸனமும்.

 

வினா :-   ‘பல்லவன்’ என்னும் நாமம் வரக் காரணமென்ன?

 

விடை :-  விருக்ஷத்தின் இளந்தளிர்களின் மீது அத்தேவமாது இந்த சிசுவை வைத்துச் சென்றதால் மேற்படி பெயர் வந்தது. பல்லவம் = தளிர்.

 

வினா :-   சூரப்ப சோழனார் தமக்குள்ள பட்டப் பெயரினால் சோழ வமிசத்தவர் என்று விளங்க பல்லவரென்றது எப்படி?

 

விடை :-  சோழர்களும் பல்லவர்களும் விவாக சம்பந்தமாய் மிகவும் கலந்து பிறகு ‘பல்லவச் சோழர்’ எனவும் ‘சம்புகுலப் பல்லவர்’ எனவும் வழங்கப்படலாயினர்.

 

வினா :-   சம்புகுலத்தார் யார்?

 

விடை :-  சோழவேந்தர்கள்.

 

வினா :-   சோழர்கட்கு அப்பெயர் வரக் காரணமென்ன?

 

விடை :-  சுவாம்யம்புமனுவின் சந்ததியாராதலால் சம்பு வேந்தர் அல்லது செம்பியர் என்னப்பட்டனர்.

 

வினா :-   பல்லவ அரசர்களுள் க்ஷத்ரியர் அல்லர் எனச் சில நூலாசிரியர்கள் எழுதியிருப்பதேன்?

 

விடை :-  விசாரணையின்மையே காரணமாம். பல்லவ அரசர்களுக்குப் பரம்பரையாய் வந்த ‘வர்மா’ என்னும் பட்டப்பெயரே அவர்கள் க்ஷத்ரியர்கள் என்பதற்கும் சாக்ஷியாகும். சாஸனங்களில் ‘க்ஷத்ரிய சிம்ம பல்லவேஸ்வரம்’ முதலிய அநேக பதங்கள் இருப்பதும் அதற்கு வேண்டிய ஆதாரமாம்.

 

மற்றும் அவர்கள் மேல் வித்வான்களால் பாடப்பட்ட காவியங்களும், நாயன்மார் ஆழ்வார்கள் அவர்கள் உத்தம க்ஷத்ரியகுல அரசராகப் பாடியிருப்பதும், அவர்கள் தற்போது  சோழவேந்தருடன் கலந்து பல்லவச் சோழர் என அழைக்கப்படுவதும் அவர்கள் க்ஷத்ரியர் என்பதற்குப் போதிய பிரமாணமாகும்.

 

வினா :-   சரி, சளுக்கியர்களை வன்னியரெனல் எப்படி?

 

விடை :-  அவர்கள் யாகத்தில் அக்நியினிடமாய் அக்நியம்சமாய் உற்பவித்து ‘வேள்புலவரசர்’ என்னும் நாமம்  பெற்றவர்களாவார்கள்.

 

வினா :-   என்னத்திற்காக யாகாக்நியில் உதித்தினர்?

 

விடை :-  முன் சொன்னபடி உலகில் தர்மம் குறைந்து பாவிகள் அதிகமாகி அடக்கியாளும் வல்லமையுள்ள க்ஷத்ரிய வேந்தர்கள் இல்லாத போது முனிவர்களின் பிரயத்தனத்தால் அக்கிநியில் பிறந்தனர்.

 

வினா :-   எத்தனை பேர் பிறந்தனர்?

 

விடை :-  பிரமாரா, சலூகன், புரியாரா, கோஹான் என்னும் நான்கு வீரர்கள் இந்திரன், பிரமன், ருத்திரன், விஷ்ணு என்னும் இவர்களின் அம்சமாய் உதித்தனர். இவர்களில் ‘சலூகன்’ வம்சத்தினர்களே சளுக்கியர். இம்மரபில் விக்கிர மாதித்தன், பிரதாபருத்திரன் முதலிய அநேக வீரர்கள் பிறந்து உலகைப் பரிபாலித்தார்கள்.

 

இந்த அக்நிபுத்திரர் வமிசங்கள் வடக்கே ஹிந்துஸ்தான் முழுவதும் பரவியிருக்கின்றன. ராஜபுத்திரர் ஸ்தானமாகிய ராஜபுதனத்தில் பாரம்பரியமாய் வசிப்பவர்களும் இவர்களேயாம்.

 

வினா :-   சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சளுக்கிய வமிசங்களில் உதித்த வேந்தர்களெல்லாம் வன்னியர்களென்பதற்காகச் சுருதிப் பிரமாணம் கேட்கப்பட்டது. யுக்திப் பிரமாணத்தின்படி அவர்களுக்கு ஏற்பட்டு தற்போது வழங்கி வரும் பட்டப் பெயர்கள் எவை?

 

விடை :-  சேரனார், சோழனார், பாண்டியனார், வர்மா, உடையார், நாயனார், கண்டர், சாமந்தர், பல்லவர், அஞ்சாத சிங்கம், கங்கணவுடையார், மழுவர், பொறையர், அரசுபள்ளி, இராயர், படையாட்சியார், நாயகர், வாளண்டையார், வீரமிண்டர், வல்லமையுடையார், இராஜாளி, தந்திரியார், ரெட்டிகள், துரைகள், பண்டாரத்தார், பூபதி பரமேசுவரனார், காளிங்கராயர், சம்புராயர், கச்சிராயர், பல்லவராயர் முதலியவைகளாம்.

 

வினா :-   மேற்படி பதங்கட்குப் பொருள் சொல்லுக?

 

விடை :-  வர்மா = சூரமுடையவன்; இப்பதம் க்ஷத்ரியர்கள் சூரர்கள் என்பதைக் குறிக்க அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்பட வேண்டுமென்பது ஸ்மிருதி புராணங்களின் விதி.

 

இப்படியே பிராமணர்களுக்குச் ‘சர்மா’ என்றும், வைசியர்கட்கு ‘குப்தன்’ அல்லது ‘பூதி’ என்றும், சூத்திரர்கட்கு ‘தாசன்’ என்றும் விதிக்கப்பட்டிருக்கிறது.

 

உடையார் = பூமிக்குடையவர்.

 

நாயனார், நாயகர் = உலகிற்கு இறைவர்.

 

கண்டர் = சத்துருக்களைக் கொல்லுவோர்.

 

(சோழர்களின் பெயர்களில் ஒன்று.)

 

சாமந்தர் = சேனாபதிகள்

 

பல்லவர் = பாரத்வாஜ கோத்திரமுடைய பல்லவ அரசர்களின் சந்ததியார்.

 

பொறையர் = சேர ராஜாக்களின் பட்டப்பெயர்.

 

பள்ளி = இப்பதம் மலையாள பாஷையில் அரசன் என்னும் பொருள் கொண்டது. ‘பாலா’ என்னும் சமஸ்கிருத தாது மூலமாய்ப் பிறந்தது. உலகைக் காப்பாற்றுவோர் என்னும் பொருளுள்ளது. மலையாளத்தில் வழங்கும், பள்ளிவாசல், பள்ளிவீடு, பள்ளி வேட்டை, பள்ளிவாள் முதலிய பிரயோகங்களே இதற்கு அத்தாட்சியாகும்.

 

இராயர் = ராஜர்கள்.

 

படையாட்சி – சைன்யங்களின் சொந்தக்காரன்.

 

வாளண்டையார் – அருகில் எப்போம் வாளாயுத முடையவர்.

 

தந்திரியார் – மந்திரித் தொழில் வல்லவர்.

 

பூபதி – உலகிற்குத் தலைவர்.

 

துரை – கனவான்.

 

சம்புராயர் – சோழவேந்தர் (செம்பயன் குலத்தார்).

 

பரமேசுவரனார் – உலகை ஆள்பவரில் மேலானவர்.

 

வீரமிண்டர் –  வீரமும் வல்லமையுமுடையவர்.

 

மேற்காட்டிய ஒவ்வொரு பட்டப்பெயரும் அரசர்க்குரியவை. அப்பெயர்களிற் சிலதை  மற்ற ஜாதியார்களிற் சிலர் தற்போது உபயோகித்தாலும் அப்பெயர்க்கு அவர்கள் உரியவர்கள் அல்லர்.

 

வினா :-   எப்பெயரை யார் உபயோகிக்கின்றனர்?

 

விடை :-  ‘நாயனார்’ என்னும் பெயரை பஞ்சமருள் ஓர் பிரிவாகிய வள்ளுவர்களும், ‘படையாட்சி’ யென்னும் பெயரை நெய்தல் நிலமாக்களாகிய செம்படவர்களில் சிலரும் பட்டப்பெயராயும், ‘பள்ளி’ யென்னும் பெயரை அகம் படியர், நத்தமர், அவுரியர், மீனவர், கூடைகட்டியர், செம்படவர், இருளர் முதலியவர்கள் ஜாதிப் பெயராயும் உபயோகிக்கத் தலைப்பட்டிருக்கின்றனர்.

 

வினா :-   மேற்சொல்லிய பட்டப்பெயர்கள் யாவும் வன்னியர்க்குள் வழங்கக் காண்கிலோமே?

 

விடை :-  அடியிற்கண்ட விடங்களில் அடியிற்கண்ட படி அவைகள் வழங்கக் காணலாம்:-

 

சென்னை, காஞ்சி               …    நாயகர்.

 

சேலம், கோயம்புத்தூர்          …    கண்டர்.

படையாட்சியார்.

மதுரை, தஞ்சாவூர்              …    படையாட்சி.

பருவூர்                         …    காசிராயர்.

கீழூர்                           …    நாயனார்.

ஊற்றங்கால் சமஸ்தானம்       …    பரமேஸ்வர வன்னியனார்.

அறந்தாங்கி                     …    வணங்காமுடியார்.

கும்பகோணம்                   …    காவலர், தொண்டைமன்னர்.

மாயூரம்                        …    அஞ்சாத சிங்கம்.

சாமிமலை                      …    வீரமிண்டர்.

வைத்தீஸ்வரன் கோவில்       …    ராயராவுத்த மிண்டர்.

தேனூர்                         …    அண்ணலங்கார்.

திருமங்கலக்குடி                …    வாளண்டையார்.

செஞ்சி துருகம்                 …    முதன்மையார்.

கொழுவாரி மாத்தூர்            …    தந்திரியார்.

மானியப்பட்டு                   …    சமர்த்தியர்.

திருவாங்கூர்                    …    வர்மா.

 

வினா :-   இனி, வன்னியர்கள் மீது வித்வான்கள் பாடிய பிரபந்தங்கள் எவை?

 

விடை :-  மகாகவி கம்பர்            …    சிலையெழுபது.

இருவாட்சிப்புலவர்        …    திருக்கைவளம்.

சடிகை முத்துப்புலவர்     …    திக்கு விஜயம்.

மேற்படியார்               …    சிவகிரிக் காதல்.

ஐயங்கொண்டார்           …    கலிங்கத்துப்பரணி.

கம்பர்                     …    கருணாகரத் தொண்ட

வன்னியனார் சதகம்.

இரட்டைப்புலவர்          …    கட்டியக் கொத்து.

 

இவைகளைத் தவிர காந்தவராயன் கலம்பகம், சேந்தவராயன் போர்க்கெழுவஞ்சி, அஞ்சாத சிங்கர் மாலை, இருவிருத்தப்பா, மழுவராயர் கலித்துறையந்தாதி, கீர்த்திவள மஞ்சரி, ராயராவுத்தமிண்டனாருலா, விட்டலராயன் அரியசந்தமாலை முதலிய நூல்களும் சேர, சோழ, பாண்டிய ராஜாக்கள் மீது ஏற்பட்ட பிரபந்தங்களுமாம்.

 

வித்வான்கள் பிராமணரைப் பாடும் போது ‘மறையெழுபது’ என அவர்களது உரிமையாகிய வேதங்களைச் சிறப்பித்து எழுபது செய்யுட்களும், அரசரைப்பாடும் பொழுது ‘சிலையெழுபது’ என அவர்கள் வில்லைச் சிறப்பித்து எழுபது செய்யுட்களும், வைசியரது தராசுக் கோலைச் சிறப்பித்து ‘துலாவெழுவது’ என எழுபது செய்யுட்களும், வேளாளரது ஏரைச் சிறப்பித்து ‘ஏரெழுபது’ என எழுபது செய்யுட்களும் பாடுவது வழக்கம். அவ்வண்ணமே மகா கவியாகிய கம்பர் வன்னியர் மீது சிலையெழுபது பாடியது உசிதமேயாகும்.

 

வினா :-   வேளாளர் மீது கம்பர் ஏரெழுபது பாடியிருக்கின்றாரே?

 

விடை :-  அவரவர்கள் ஜாதிக்குத் தக்கபடி ஒரே வித்வான் பல ஜாதியார் மீதும் பொது நூல் விரோதமின்றி பாடலாம். ஜாதி வரம்பை மீறி  தாழ்ந்த ஜாதியை உயர்த்தியும், உயர்ந்த ஜாதியைத் தாழ்த்தியும் எந்த நடுநிலையுள்ள  வித்வானும் பாடமாட்டான்.

 

வினா :-   தற்காலத்தில் அநேக ஜாதியார்கள் வித்வான்கள்  பாடியதாக ஜாதி புராணங்கள் ஒப்பு விக்கிறார்களே, அவைகளும் உண்மைதானே?

 

விடை :-  ஒருக்காலும் உண்மையாகாது. பிரமாண விரோதமாய் வயிற்றுப் பிழைப்புக்காக அற்பப் புலவர்கள் பாடியவையாகும். எந்தப் புராணமாயினும் பிரமாணத்தைத் தழுவாதது ஒப்பத் தகுந்ததன்று.

 

வினா :-   பிரமாணயென்பது யாது?

 

விடை :-  வேதங்கள் நான்கு, வேத அங்கங்கள் ஆறு, நியாய சாஸ்திரம், மீமாஞ்சா சாஸ்திரம், ஸ்மிருதி, புராணங்கள் இந்தப் பதினான்குமே இந்து மதஸ்தர் அனைவர்க்கும் ஒப்பமுடிந்த பொதுப் பிரமாணங்களாம்.

 

வினா :-   பிரமாணமில்லாமல் ‘ஸ்வகபோல கற்பிதம்’ அதாவது தாங்களே கற்பித்துக் கொண்ட அவ்வித புராணங்களால் அவர்கட்கு யாது பயன்?

 

விடை :-  அவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் உயர் ஜாதி வேஷத்திற்கு அவர்கட்குள் ஏற்பட்ட ஜாதி கட்டுப்பாடுகளும் மேற்படி புராணங்களும் சகாயமாம்.

 

வினா :-   அதனால் அவர்கட்கு ஜாதி உயர்வு ஏற்படாதா?

 

விடை :-  அவர்கள் உயர் வகுப்பினரென்று கற்றவர்கள் எப்போதும் அங்கீகரிப்பதேயில்லை.

 

வினா :-   கம்மாளர் முதலிய சில ஜாதியார்களால் அச்சிடப்பட்டிருக்கும் சித்தூர் ஜில்லா தீர்ப்பு முதலிய புத்தங்களில் வித்வான்களின் தீர்மானம் ஏற்பட்டிருப்பதால் அப்படிப்பட்ட புத்தகங்களும் பிரமாணமாகுமே?

 

விடை :-  மேற்சொல்லிய பதினான்கு பிரமாணங்களையும் தெரிந்தவர்களே ‘பரிஷத்துகள்’ அதாவது கற்றவர்கள் என்றும், அவர்களே ஜாதி  விவகாரங்களைத் தீர்மானிக்கும் யோக்கியதையுடைவர்களென்றும் மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருப்பதால் மேற்படி ஆபாச புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பவர்கள் கற்றோரல்லர்.

 

வினா :-   ஜாதிப் பிரிவினையால் தற்போது யாதொரு நன்மையையும் நாம் காணவில்லையே? அதனாலென்ன பயன்?

 

விடை :-  ஆதியில் ஜாதிப் பிரிவினை ஏற்பட்டது மிகவும் ஆழ்ந்த  கருத்தை முன்னிட்டே. ஆனால் தற்போது ஒவ்வொரு ஜாதியாரும் முக்கியாம்சமாகிய தங்களுடைய ஜாதி தருமங்களை அடியோடு மறந்து பயனின்றிய ஜாதியபிமானத்தை மட்டும் விடாமலிருக்கின்றனர். ஆனபடியால் தான் நன்மை காணவில்லை.

 

வினா :-   ஜாதி தர்மங்களை விட்டதனாலேயே ஜாதி வித்தியாசமும் வேண்டாமே?

 

விடை :-  அப்படியன்று; எப்படியாவது நாளடைவில் சதாசாரம் அதாவது நமது மஹரிஷிகள் அநுஷ்டித்து வந்த ஒழுங்கைக் கைப்பற்ற முயல வேண்டுமேயல்லாமல்  அடியோடு கீழே விழக்கூடாது. ஆதலின் இனியாவது அவரவர்கள் தங்கள் சுய ஜாதி தர்மங்களை  வழக்கத்திற்குக் கொண்டு வர முயல்வதே கடன்.

 

வினா :-   சுஜாதி கர்மங்களைச் செய்வதால் தான் என்ன பயன்?

 

விடை :-  கர்மத்தால் சித்தசுத்தியும், அதனால் ஞானமும், அதனால் மோட்ச லாபமும் என்பது நமது வேதங்களின் சித்தாந்தமாம் என முன்னமே சொல்லப்பட்டிருக்கின்றது.

 

வினா :-   இதற்குப் பிரமாணம் ஒன்று சொல்லுக?

 

விடை :-  ‘கர்மனைவஹி ஸம்சித்தி மாஸ்த்திதா ஜநகாதப: = கர்மத்தாலேயே ஜனகர் முதலியோர் மோக்ஷமடைந்தனர்’ என்பது கீதாவசனம்.

 

வினா :-   சரி, தற்போது உயரக்கருதும் ஜாதியார் யார்?

 

விடை :-  கம்மாளர், சௌராஷ்டரர், சேடர், பரதவர், சான்றார், இடையர், வேளாளர், செக்கார் முதலியவர்களாம்.

 

வினா :-   இவர்களில் பிராமண அபிமான  முடையவர் யார்?

 

விடை :-  கம்மாளர், சௌராஷ்டிரர், சேடர், குயவர், சாத்தானிகள் முதலியவர்களாம்.

 

வினா :-   ஏன் அபிமானம் கூடாது?

 

விடை :-  இது காலக் கொடுமை. நம் இந்து தேசத்தில் சர்வ ஜன சம்மதமாய் ‘பாரம்பரிய ஜன்யமாய்’ ஸ்ரீமாதவச்சாரியார் முதலிய அநேக மஹான்களால் தங்கள் கிரந்தங்களில் விவரிக்கப்பட்ட பஞ்சகௌட, பஞ்ச திராவிட பேதமாயுள்ள ‘பிராமண’ ரென்னும் ஓர் ஜாதி இல்லாமல் ஒழிந்து விடவில்லை. இவர்கள் தங்களை விஸ்வப் பிராம்மணர், சௌராஷ்டிர பிராம்மணர், தேவாங்க பிராம்மணர், குலாலப் பிராம்மணர் என அடைமொழியுடன் சொல்லிக் கொண்டே போதிலும் இவர்களைப் பிராமணரென மற்றவர்கள் அங்கீகரிப்பதில்லை. புரோஹிதத்திற்கு அழைப்பதுமில்லை. மேலும் இவர்கள் தங்களைப் பிராம்மணரெனச் சொல்லிக் கொண்டால் ஜாதிப் பிரிவினைகளையும் சங்கைகளையும் சொல்லும் சாஸ்திரங்களில் இவர்களின் பெயர்கள் பிராமண் உட்பிரிவில் சொல்லப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது வேறு தாழ்ந்த வரிசைகளில் சொல்லப்படாமல்  இருத்தல் வேண்டும். இரண்டுமில்லை. மேற்சொல்லி சுருதி அநுபவ ஆதாரங்கள் தாம் இல்லாவிட்டாலும் யுக்திக்காவது ஒத்திருக்க வேண்டும், அதுவுமில்லை. ஆகையால் இவர்களின் பிராம்மண்யம் ‘யாரடா கொடுத்தது மணியம் என்றால் நானே கொடுத்துக் கொண்டேன்’ என்னும் கதை போலிருக்கிறது.

 

வினா :-   வைசிய அபிமானமுடையோர் யார்?

 

விடை :-  வேளாளர், இடையர், கோமுட்டியர், செக்கார் முதலியவர்களாம்.

 

வினா :-   வேளாளரைப் பூவைசியரென்றும், இடையரைக் கோவைசியரென்றும் நூல்கள் சொல்லவில்லையா?

 

விடை :-  அவைகள் பொது நூல்களல்ல. பொது நூல்களில் வேளாளரை நான்காவது சூத்திரகுலமென்றும், இடையரை முல்லைத் திணைமாக்களெனவும் சொல்லியிருப்பதைக் காணலாம். மேலும் வேளாளர் இடையர் முதலியவர்கட்குச் சிறப்பாயேற்பட்ட ஏரெழுபது, தொண்டை மண்டல சதகம், திருக்கைவளம், கோகுல சதகம் முதலிய நூல்களில் அவர்களை அவ்வண்ணமே சொல்லியிருக்கிறது. பிற்காலத்தில் மோசக் கருத்தால் அநேக கவிகள் திருத்தப்பட்டிருப்பதால் பழைய பிரதிகளைப் பார்த்தால் உண்மை விளங்கும்.

 

மேலும் சைவ சமயிகள் யாவரும் பரமப் பிரமாணமாய் ஒப்பும் பெரிய புராணத்திலும் வேளாளர்களை நான்காம் குலமாகவே சொல்லப்பட்டிருக்கின்றது. அவ்வண்ணமே உமாபதி சிவாச்சாரியாரும் புராண வரலாற்றில் எழுதியுள்ளார்.

 

‘நான்காம் குலம், சூத்திரத் தொல் குலம்’ முதலிய பிரயோகங்கள் அப்புத்தகத்தில் வேளாளர்க்கு ஏற்பட்டிருத்தலையும், ‘ஆ மேய்ப்பர் குலம்’ முதலிய பிரயோகங்கள் இடையர் குலப்பெயராகிய ஆனாய நாயனார்க்கும் திருமூல நாயனார்க்கும் ஏற்பட்டிருத்தலையும், செக்கார் குல திலகமாகிய கலிய நாயனார்க்கு ‘தைல வினையாளர்’ என்னும் பிரயோகம் ஏற்பட்டிருப்பதையும் மறுக்க யாரால் முடியும்? ஆதலின் இவர்களின் வைசியாபிமானமும் வரம்பு கடந்ததேயாம்.

 

வினா :-   ஆனால், வைசியர் தாம் யாவர்?

 

விடை :-  செட்டிகளென உலகில் பிரசித்தமாயுள்ளவர்களும், விராட் புருஷனது துடையிற் பிறந்த வக்குல மகாரிஷியின் சந்ததியாராய் ஆயிரங்கோத்திரமுடையவர்களுமாகிய நகரத்துச் செட்டிகளே உண்மையான வைசியர்களாம். இவர்கள் வைசியர்களென்பதற்குத் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் ‘பஞ்ச காவிய’ முதலிய அநேக காவிய புராணங்களிருக்கின்றன.

 

வினா :-   சரி, க்ஷத்ரிய அபிமான முடையோர் யாவர்?

 

விடை :-  பரதவர், சான்றார், மறவர், வடுகர் முதலியவர்களாம்.

 

வினா :-   பரதவர் தங்களை க்ஷத்ரியரென்பதில் ஆக்ஷேபனையென்ன?

 

விடை :-  அவர்கள் நமது புராணம், இதிகாசம், ஸ்மிருதி, திவாகரம், நிகண்டு முதலிய சுருதிகளின்படி நெய்தல் நிலமாக்கள் எனவும், படகோட்டியும் மீன்பிடித்தும் இழி தொழிலால் ஜீவிப்போரெனவும், ஜாதிப் பிரிவினையில் அந்தராள ஸங்கர ஜாதியில் சம்பந்தப்பட்டவர்களெனவும் ஏற்படுகிறபடியால் இவர்களை க்ஷத்ரியரெனல் அணுவும் மலையும் சமம் போலாம்.

 

வினா :-   இவர்கள் என்ன ஆதாரத்தால் தங்களை க்ஷத்ரியர் என்கின்றனர்?

 

விடை :-  இவர்களில் சிலர் தாங்கள் பர்வதராஜ வமிசமென்றும் சூரியகுல க்ஷத்ரியரெனவும், சிலர் பரதகுல பாண்டியரெனவும், சந்திர வமிசமெனவும் சொல்லுகின்றனர். இக்கொள்கை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடியிட்டது போலாம்.

 

வினா :-   மேற்படி கொள்கையில் என்ன பிசகு?

 

விடை :-  முந்தியவர்களாகிய பர்வா வமிசத்தார், பாற்கடல் கடையும் போது பிறந்த லக்ஷ்மிதேவிக்கும் மஹா விஷ்ணுவுக்கும் மருகு என்னும் புத்திரன் பிறந்து அவனுக்குப் பர்வதன் என்னும் புத்திரன் உற்பத்தியாகி அவன் தேவர்களாலும் அசுரர்களாலும் கடைய முடியாத பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்ததாகவும்  அவன் வமிசத்தார் தாங்கள் எனவும், அதனால் சூரிய குலம் தாங்கள் எனவும், அஸ்திவாரமின்றிய ஓர் பொய்ப் புராணம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

பிந்தியவர்களோ தங்களுக்குப் பரதர் என்னும் பேரிருப்பதாலேயே தாங்கள் சந்திர வமிச பரத மஹாராஜன் சந்ததியெனவும் பரிமளகந்தியைச் சந்தனு வேந்தனுக்குக் கொடுத்ததனால் அரச சம்பந்த முள்ளவர்களென்றும் சொல்லுகின்றனர்.

 

வினா :-   பரதர் என்னும் சொல்லுக்கு அர்த்தமென்ன?

 

விடை :-  பரவர், பரதர் என்பது கடல் சம்பந்திகள் என்பதாம். பரவர், பரதர், கடலர், நுளையர், கழியர், சலவர், வலையர் என்பன அவர்கள் நாமங்கள்.

 

வினா :-   சான்றார்கள் தங்களை க்ஷத்ரியர் என்பதற்கு ஆதாரமென்ன?

 

விடை :-  தாங்கள் வழங்கி வரும் நாடார், கிராமணி என்ற பட்டப்பெயர்களும் சான்றார் என்ற ஜாதிப் பெயருமே ஆதாரமெனச் சொல்லுகின்றனர். தற்போது ‘சான்றார் குல க்ஷத்ரியர்’ என்ன எந்த நூல் வழக்குகளிலும் இல்லாத ஓர் குலத்தை க்ஷத்ரிய ஜாதியின் உட்பிரிவாகக் கற்பிதிதிருக்கினறனர்.

 

வினா :-   நாடான், கிராமணி, சான்றான் என்னும் பதங்கட்குப் பொருள் யாது?

 

விடை :-  நாடார் – நெருங்காதவர்; கிராமணி = கிராமந்யன் அதாவது கிராமப்புறம்பன்; சான்றார் = கள்விற்போர் (சான்று அல்லது சாறு = கள்). சவுண்டியர், துவசர், படுவர், பழையர், பிழியர் என்பனவும் இவர்களது ஜாதிப் பெயர்களாம்.

 

வினா :-   இடையர் என்ன ஆதாரம் சொல்லுகின்றனர்?

 

விடை :-  கிருஷ்ண பகவான் தங்கள் புத்திரரெனவும், அதனால் தாங்கள் யாதவ வமிச க்ஷத்ரியரெனவும், பசுக்களை வளர்ப்பதால் கோவைசியரெனவும் முன்னுக்குப்பின் முரணாய் இருவிதமாய்ச் சொல்லுகின்றனர்.

 

வினா :-   ஏன் சொல்லக்கூடாது?

 

விடை :-  நந்தகோபனாகிய முல்லை நிலத்தலைவன் கிருஷ்ண பாகவனை வளர்க்கப் பாக்கியம் பெற்றானேயொழியப் பெறப் பாக்கியமடையவில்லை. யாதவ வேந்தாகிய வசுதேவரே அவ்வித  பாக்கியமடைந்தவர். ஆகையல் யாதவர் வேறு, இடையர் வேறு, யாதவர் என்போர் சந்திர வமிச யயாதி வேந்தன் கான்முளையாகிய பஞ்ச நிலத்துள் முல்லைத் திணைக்கு ரியோராதலின் வைசியர்களுமன்று கோவைசிய ரென்போர் மூன்றாவது ஜாதியின் ஓர் தொழிற் பிரிவு, ஜாதிப்பிரிவன்று. இடையர், அண்டர், பொதுவர், கோபாலர், குடவர், அமுதர், கோவலர், ஆயர், தொறுவர் என்பன முல்லை நில மாக்களின் பெயராம்.

 

வினா :-   கவரைகள் என்று வழங்கும் வடுகர்கள் தங்களே க்ஷத்ரியரெனப் புராணம் ஏற்படுத்தியிருக்கிறார்களே? அவர்கள் க்ஷத்ரியர்கள் என்பத சம்மதந்தானே?

 

விடை :-  சைவ புராணத்தில் ஏற்பட்ட ஜாதி வேற்றுமைப்படி அவர்கள் வளையல், முத்து முதலிய விற்போர் என்பதனால் வைசிய அநுலோமர் என்று நம்ப வேண்டியிருக்கிறது. தற்போது கவரைகளில் பெரும்பாலார் சங்கு, வளையல், இரத்தினம் முதலியவைகள் விற்பதாலும், தேசாயி செட்டிகளென்று தங்களைச் சொல்லிக் கொள்வதாலும் பரம்பரையாய் வியாபாரத்துக்குரியவர்களென்றேற் படுகிறது.

 

சமஸ்கிருத நிகண்டாகிய அமரத்தில் அவர்களை வைசியராகச் சொல்லியிருந்தாலும் லட்சுமண கவீஸ்வரரால் செய்யப்பட்ட ஆந்திர நிகண்டில் அவர்களைச் சூத்திரராகச் சொல்லப்பட்ட காரணந் தெரியவில்லை. எப்படியானாலும் அவர்களது  பரம்பரைத் தொழிலை முன்னிட்டு வைசிய வர்க்கத்தில் உட்பட்டவரேயன்றி க்ஷத்ரியராகார்.

 

வினா :-   விஜய நகரத்தரசரது பந்துக்களாக அவர்களது புராணத்தில் எழுதப்பட்டிருக்கிறதே?

 

விடை :-  விஜய நகரத்தாரசர்கள் வன்னியரென்றே வில்லவ நல்லூர், வைத்தீச்சுரன் கோயில் முதலிய விடங்களிலுள்ள சாசனங்கள் சாக்ஷி பகர்வதால் இவர்களிற் சிலர் அவ்வரசர்களின் நம்பிக்கையுள்ள உத்தியோகஸ்தர்களாய் இருந்திருக்கலாம். அதனாலேயே தாங்கள் க்ஷத்ரியரென்ன அபிமானங்கொண்டு புராணமெழுதியிருக்கலாம்.

 

வினா :-   கவரைகள் மீது வித்வான்களில் பாடப்பட்ட பிரபந்தங்கள் உண்டா?

 

விடை :-  காணோம்.

 

வினா :-   அவர்களை க்ஷத்ரியர்களென்று ஸ்தாபிக்க சிலர் தாம்பிர சாஸனங்களாவது உண்டா?

 

விடை :-  அதுவுமில்லை.

 

வினா :-   தற்போது முற்போதாவது இவரது வகுப்பில் துவிஜர் என்னும் குறிப்பைக் காட்டும் உபநயனச் சடங்கு நடத்தும் வழக்கமுண்டா?

 

விடை :-  எப்போதுமில்லை.

 

வினா :-   இப்படியெல்லாம் ஜாதிப் புரட்டுகள் ஏற்படக் காரணமென்ன?

 

விடை :-  பல காரணமுண்டு; அவற்றுள் –

 

  1. இந்துக்களின் வர்ணாச் சிரமங்களும் அவற்றின் தர்மங்களும் வழுவாமலும், ஒன்றோடொன்று கலவாமலும் வேலிபோற் பாதுகாக்கும் க்ஷத்ரிய அரசர்கள் இல்லாமை.

 

  1. தற்போதுள்ள நமது பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் ஹிந்து மத விஷயங்களில் நுழையாமை.

 

  1. தற்காலம் க்ஷத்ரிய க்ஷத்ரிய வைசியர் கிடையாதென்று ஆங்கிலேய சரித்திரக்காரர்கள் பொறாமையுள்ள சிலர் போதனையால் விசாரிமின்றி சரித்திரமெழுதியது.

 

  1. அதையே வேதப்பிரமாணமாக நம்மவரில் கற்றவர்கள் அநேகர் நம்பியது.

 

  1. சென்ஸஸ் என்னும் ஜன சங்கியை யெடுக்க ஆரம்பிதோர் சாஸ்திர வழிக்கு மாறாக இந்துக்களின் ஜாதிக் கிரமங்களை மேலது கீழதாகவும் கீழது மேலதாகவும் பதிவு செய்தமை.

 

கடைசியிற் காட்டிய இக்காரணத்தால் உயர்குலத்தார் அநேகர் தங்கள் ஜாதிப் பெருமைகளைக் குறிப்பித்துத் தங்கள் ஆதிக்யத்தைக் காட்டத் தலைப்படவே கீழ்க் குலத்தார்களும் தாங்களும் உயர்ந்தோர்களென்று வேஷம் போட ஆரம்பித்தார்கள். சுருதி, யுக்தி, அநுபவ மூலமாய் அவர்களை விசாரிப்போர் இன்மையால் போட்டுக் கொண்ட வேஷத்தை நிலையாக்க முயல்கின்றனர்.

 

ஓர் ஜாதிக்கு வாரிசு இல்லையென்று சிலர் கற்பித்துவிட்டதை நம்பி சிலர் தாங்கள் கீழ்ச்சாதியிலிருந்து படும் உபத்திரவத்தை நீக்கிக் கொள்ளச் சமயம் பார்த்திருந்து வார்சில்லாத ஜாதிக்கு நாங்களே வார்சென்று கிளம்பினர். உதாரணமாக-

 

பரதர், சான்றார், மறவர் தங்களைப் பாண்டிய வமிசமெனறு சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மிஸ்டர் நெல்ஸன் தமது மானுயலில் பாண்டிய வமிசத்தார் சிவகிரியில் உள்ளார் என ஸ்தாபித்திருப்பதையும், சிவகிரிக் காதல், திக்கு விஜயம் முதலிய பிரபந்தங்கள் சிவகிரி வன்னியராயர்கள் மீது ஏற்பட்டிருப்பதையும் இவர்கள் அறிந்திலர் போலும்.

 

வினா :-   தற்போது இவர்கள் அடைந்திருக்கும் கல்வி முதலிய நாகரீகங்களை முன்னிட்டு ஜாதியை உயர்த்திக் கொண்டால்தான் என்ன?

 

விடை:-   தொழிலாலும், குணத்தாலும் ஆதியில் ஜாதிகள் பிரிக்கப்பட்டு சிருஷ்டிக்கப்பட்டன. ஆனால் கலியுகத்தில் பிறப்பினால் மட்டும் ஜாதி  பெறப்படுமேயல்லது தொழிற் குணங்களால் பெற முடியாது. பிறப்பும் பூர்வ ஜன்ம தொழிற் குண சம்பந்தமாகவே தான் ஏற்படும்.  எந்தச் சாதியினரேயாயினும் கல்வி, நாகரீகம், ஆசாரம், ஸத்யம், ஈஸ்வர பக்தி, ஜீவகாருண்யம் முதலிய உத்தம குணங்களைக் கடைப்பிடித்து மோட்சமடையலாம். ஆனால் ஒரு ஜாதியிற் பிறந்துவிட்டு வேறொரு ஜாதியின் பெயரைச் சொல்லுவதாலும் வேறு ஜாதிக்கு ஏற்பட்ட தர்மங்களை ஆசாரிப்பதாலும், உயர்ந்த ஜாதியார் போல் பகட்டு வேடம் பூண்டு நடிப்பதாலும் என்ன பிரயோஜனம்? புண்ணியமுமில்லை. புருஷார்த்தமுமில்லை. பின்னையோ நரகந்தான் பிராப்தியென்பதற்கு எட்டுணையும் சந்தேகம் கிடையாது. ஜாதி இயல்புக்கு மீறி நடிப்பவன் மித்யாசாரன் என்ன கீதையில் பகவானால் சொல்லப்பட்டிருக்கிறான். ஆகையால் ஜாதியை உயர்த்திப் பேசுதலும் நடித்தலும் ஈஸ்வர சங்கற்ப விரோதமாகும்.

 

தனது ஜாதித் தொழில் இழிந்ததாயினும் அதை விடாமலே முற்சொல்லிய உத்தம குணங்களுங்ன விளங்க வேண்டுமே யல்லது அந்நிய ஜாதி தர்மங்களில் ஆசைப்படுதல் தன் சொந்தப் புருஷனை அவமதித்து வேறு புருஷனைக் காமிக்கும் பெண்ணிற்குச் சமானமாகும்.

 

மேலும் இரும்படித்தல், மரஞ்செதுக்கல், நெசவு நெய்தல், மீன் பிடித்தல், கள்ளிறக்கல், வளையல் விற்றல், செக்காட்டல் முதலிய தொழில்கள் முதல் மூன்று வர்ணத்தாருக்குரியனவல்ல. ஆதலின் இவர்களின் ஜாதியுயர்வில் ஒருக்காலும் நூல் சம்மதமும் அறிஞர் சம்மதமுங் கிடையாது.

 

வினா :-   ஆதியில் தொழில், குணங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன?

 

விடை :-  சத்துவ குணமும் அக்நி பூஜை முதலிய தொழில்களுமுடையவர் பிராமணராகவும், சத்துவங் கலந்த ரஜோ குணமும் யுத்த முதலிய தொழில்களுமுடையவர் க்ஷத்ரியராகவும், தமஸ் கலந்த ரஜோ குணமும் வியாபார முதலிய தொழில்களுமுடையவர் வைசியராகவும், தமோ குணமும் ஊழிய முதலிய தொழில்களுமுடையவர் சூத்திர ராகவும் பிரிக்கப்பட்டனர்.

 

வினா :-   தமது சிருஷ்டியில் ஏற்பட்ட சகல கண்டங்களிலுமில்லாத இந்த ஜாதி  பேதத்தைக் கடவுள் பரத கண்டத்தில் மாத்திரம் ஏற்படுத்தக் காரணமென்ன?

 

விடை :-  மற்ற தேசங்களில் உள்ளவர்கள் கேவலம் மிருக பிராயமாயிருக்க இப்பரத கண்டம் மட்டும் எப்போதும் உத்தம மனுஷ்யர்கள்  வசிக்கும் நாககீமுடையதாய் இதிலுள்ளோர் மோட்ச யோக்கியர்களாயிருந்து வந்தததால்.

 

வினா :-   சில நாட்களுக்கு முன்னே தான் இந்தியாவில் ஆரியர்கள் குடி புகுந்தாரென்ன சில சரித்திரக்காரர்கள் எழுதியிருப்பதேன்?

 

விடை :-  அது சுத்த பிசகு. இந்தியாவில் ஆரியர்கள் நினைக்கவும் எண்ணவும் முடியாத அநேக யுகங்களாய் வாழ்ந்து வருகிறார்களென்பதே நமது சாஸ்திரப் பிரமாணம். இவ்விஷயத்தை நாம் நமது மங்கள அமங்கள காலங்களில் உச்சரிக்கும் சங்கற்பத்தில் வழங்கும் கால கணித சொற்களால்  அறிந்து கொள்ளலாம்.

 

வினா :-   அச்சங்கற்பத்தில் கால கணிதமுள்ள சொற்கள் யாவை?

 

விடை :-  ‘ஆத்யப்ரம்ஹண; த்விதீய பரார்த்தே, ப்ரதமபாதே, வைவஸ்வதமந்வந்தரே, வர்ஷே’ முதலிய சொற்கள் தற்போதுள்ள பிரமாவுக்கு ஐம்பது வருஷங்கள் பூர்த்தியாகி ஐம்பத்தோராவது வருஷத்தில் முதல் நாளில் ஏழாம் பாகமாகிய வைவஸ்வதமந் வந்தரம் நடப்பதாகக் காட்டுகின்றன.

 

வினா :-   இதைக் கொஞ்சம் விவரமாக்க வேண்டும்?

 

விடை :-  இந்துக்களின் மதப்படி பிரமாக்கள் அநேகர், முந்தி அநேக பிரமாக்கள் நூறு நூறு வருஷங்கள் கழிந்து மாண்டர். தற்போதுள்ள பிரமாவுக்கு ஐம்பது வருஷங்கள் முடிந்த படியால் இனி ஐம்பது வருஷங்கள் கழித்த பின் இவர் பட்டத்திற்கு தற்போது காத்திருக்கும் ஹநுமார் வருவார். ஒரு பிரமாவின் ஆயுள் கணக்கு வருமாறு: – கிரேதை, திரேதை, துவாபுரம், கலியென்னும் நான்கு யுகங்களும் கூடியது ஒரு சதுர் யுகம்; சதுர்யுகம் ஆயிரங் கொண்டது பிரமாவுக்கு ஒரு பகல்; இரண்டாயிரங் கொண்டது ஓர் நாள்; இந்தநாள் முந்நூற்றறுபது ஒரு வருஷம்; இவ்வருஷம் நூறு ஒரு பிரமாவின் ஆயுள். பிரமாவின் ஓர் பகலில் பதினான்கு மனுக்கள் ஈஸ்வராம்சமாய் அவதரித்து ஸ்மிருதிகளையும் சந்ததிகளையும் உண்டாக்கி உலகையாள்வார்கள். அவர்களில் ஸ்வாயம்பு மனு, ஸ்வாரோசிஷமனு, உத்தமனு, தாமசமனு, ரைவதமனு, சாக்ஷுஷமனு என்னும் ஆறு மனுக்களின் காலம் முடிந்து தற்போது ஏழாவதாகிய  வைவஸ்வத மந்வந்தரம் நடக்கிறது. இவர்க்குப் பின் சாவர்ணிமனு, தக்ஷசாவர்ணி மனு, பிரமசாவர்ணி மனு, தர்மசாவர்ணி மனு, ருத்ரசாவர்ணி மனு, ரவுச்சியமனு என்னும் எழுவர் ஆளவிருக்கின்றனர். ஒவ்வொரு மனுவின் காலம் எழுத்திரண்டாயிரம் சதுர்யுகமாகும். ஒவ்வொரு மந்வந்தரத்திலும் ஒவ்வொரு வேத வியாசர்கள் தோன்றி வேதங்களை விரிப்பார்கள். மனுக்கள் ஸ்மிருதிகளை ஏற்படுத்துவார்கள். ஆதலால் நமது இந்து தேசம் எக்காலத்திலும் உத்தம மனிதர்களாலும், வர்ணாச்சிரமதர்ம முதலிய கர்மங்களாலும் வர்ண வேறுபாடுகளாலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

 

வினா :-   சிறிது நாட்களுக்கு முன்னிருந்த வலங்கை இடங்கை சச்சரவில் வன்னியர்கள் இடங்கையில் சேர்ந்திருக்கக் காரணமென்ன?

 

விடை :-  வன்னியரும் பிராமணரும் எப்போதும் மத்தியஸ்தர்களாவே யிருந்தனர். ஆனால் வலங்கைக் கட்சி பிரபலமாகி இடங்கையார் பரிதாப தசையிலிருந்த காலத்தில் ஜனத் தொகையிலும் கௌரவத்திலும் உயர்ந்த வன்னியர்களை மேற்படி இடங்கையார் பிரார்த்திக்க அவர்கட்கு இரங்கி அவர்களிடம் ஒப்பந்த தஸ்தாவேஜு பெற்றுக் கொண்டு அவர்கள் பக்கம் சேர்ந்து வலங்கையாரின் அதிக்கிரமத்தை அடக்கி இடங்கையாரைக் காத்தனர்.

 

வினா :-   இதற்கு ஆதாரம் உண்டோ?

 

விடை :-  சாலிவாஹன சஹாப்தம் எழுநூற்று அறுபத்திரண்டுக்கு மேல் சாதாரண ஆண்டு புரட்டாசி மாதம் 5-ந் தேதியில் சுககலியாணச் சோழன் காலத்தல் காஞ்சீவரம் அனவரத முன்னிலையில் செட்டிகள் முதலிய எட்டுச் சாதியார் எழுதிக் கொடுத்த உடன்படிக்கைப் பத்திரமும், வலங்கை இடங்கைக் காலத்துச் சாசனங்களில் வன்னியர்க்கு இன வரி ஏற்பட்டிருப்பதுமே சாட்சியாகும்.

 

வினா :-   அப்போது வலங்கையில் முக்கியஸ்தர்கள் யார்?

 

விடை :-  வேளாளரும் கவரைகளுமே.

 

வினா :-   இடங்கையில் முக்கியஸ்தர்கள் யார்?

 

விடை :-  கம்மாளர், செட்டிகள் முதலியவர்கள்.

 

வினா :-   வலங்கை, இடங்கை  என்னும் பிரயோகம் ஏற்படக் காரணமென்ன?

 

விடை :-  அக்காலத்தில் காஞ்சியில் அரசியற்றிய பல்லவ வேந்தன் முன்பு இக்காட்சியார்கள் பிரியாது கொண்டு சென்ற போது இடது கைப்பக்கம் நின்றோர் இடங்கையாரெனவும், வலக்கைப்பக்கம் நின்றோர் வலங்கையாரெனவும் அழைக்கப்பட்டார்களென்பது ஐதீகம்.

 

வினா :-   சரி, பிராம்மணாள் முதலியவர்கள் தற்போது கோத்திரம், சூத்திரம், சாகை, பிரவரம் முதலியன உச்சரிக்கின்றார்களே, அவைகள் மற்ற ஜாதிகட்டும் உண்டோ?

 

விடை :-  ஆதி நால்வருணங்கட்கும் உண்டு.

 

வினா :-   கோத்திரமென்றால் என்ன?

 

விடை :-  அவ்வவ்வகுப்பார் உற்பத்தியாவதற்குக் காரணமாயிருந்த மூலரிஷிகளின் நாமங்களாம். கோத்திரமென்பதும் சந்ததியென்பதும் ஒக்கும்.

 

வினா :-   பிரவரமென்பது எது?

 

விடை :-  கோத்திர பரம்பரையில் இடையில் உண்டாகி பிரக்கியாதி யடைந்த உத்தமபுருஷர்களின் நாமங்களாம்.

 

வினா :-   சாகை யென்பது யாது?

 

விடை :-  நான்கு வேதங்களிலும் அந்தந்த கோத்திரத்தார்கள் ஓத வேண்டிய பாகங்களாம்.

 

வினா :-   சூத்திரமென்பது என்ன?

 

விடை :-  ஆபஸ்தம்பர் முதலியவர்களால் செய்யப்பட்டு அந்தந்த சாகையுள்ளவர்கள்  அநுஷ்டிக்க வேண்டுமென்று கற்பித்த தர்மங்களாம்.

 

வினா :-   கோத்திரம் எத்தனை விதம்?

 

விடை :-  கச்யபர், சங்கிருதி, ஹரிதர், அத்திரி, ஆங்கீரசர், ஜமதக்கினி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலிய வேதங்களிற் சொல்லப்பட்ட ரிஷிகளின் பெயரால் அநந்தவிதம்.

 

வினா :-   பிரவரம் எத்தனை?

 

விடை :-  அதுவும் அநேகமே.

 

வினா :-   சாகை யெத்தனை?

 

விடை :-  ருக்வேதத்திற்கு இருபத்தொரு சாகை, சுக்லயஜுர் வேதத்திற்குப் பதினைந்து, கிருஷ்ண யஜுஸுக்கு எண்பத்தாறு, சாம வேதத்திற்கு ஆயிரம்; ஜைமினீயம், திராக்யாயனம் என இரண்டு; அதர்வண வேதத்திற்குக் கௌசிகம் என ஒன்று.

 

வினா :-   வன்னியர்கட்குப் குடிப்பெயர்கள் யாவை?

 

விடை :-  சேரம், சோழம், பாண்டியம் முதலியவையாம்.

 

வினா :-   கோத்திரங்கள் எவை?

 

விடை :-  ஆங்கீரசம், சம்பு, பாரத்வாஜம், ருத்திரவந்யம், கோஹான், சாலுக்யம், பிரமாரா, புரியாரா முதலியன.

 

வினா :-   சாகைகள் எவை?

 

விடை :-  ருக், யஜுஸ், சாமம், அதர்வண மென்பவைகட்கு உரியவைகளாம். கிருஷ்ணயஜுர் வேதத்தின் சாகைகள் முக்கியம்.

 

வினா :-   பிரவரம் யாவை?

 

விடை :-  மேற்சொல்லிய குடிப்பெயர்களே பிரவரம். இவையன்றி குலசேகராழ்வார், சேரமான் பெருமாள் முதலிய புகழ் பெற்ற வீரர்கள் பெயராலும் வழங்குவதாம்.

 

வினா :-   சூத்திரங்கள் எவை?

 

விடை :-  மேற்சொல்லிய ஆஸ்வலாயனம், போதாயன முதலியவைகளாம்.

 

வினா :-   வன்னியர்க்கு மதமென்ன?

 

விடை :-  சைவம், வைஷ்ணவம், சாக்தேயம், சௌரம், காணாபத்யம், வைரவம் முதலியவைகளாம்.

 

வினா :-   இவ்வளவு மேன்மையுற்ற வன்னியர்கள் தற்போது தாழ்ந்த நிலைமையிலிருக்க காரணமென்ன?

 

விடை :-  முதற் காரணம் கலியுக தருமம்.

 

பாரதம் ஆரண்ய பருவத்தில் –

 

‘தெண்டிரைக் கதிபராகிய மன்னர்

தேசமெங்கு முழல்வார் நிலைகெட்டே’

 

என யுதிஷ்டிரருக்கு மார்க்கண்டேயர் கலியுக தருமம் போதித்திருப்பது தற்போது உண்மையாகவே நடக்கிறது. வன்னியர்களின் ஜனத்தொகை மற்றவர்களின் தொகையைக் காட்டிலும் அதிகமானதனாலும், காலக் கிரமத்தில் இவர்களின் அரசு நீங்கி பயிர்த்தொழில் முதலியவற்றில் பிரவேசித்திருப்பதனாலும், கல்வி முதலிய நாகரீகங்கள் இன்மையாலும் தாழ்ந்தது போற் காணப்படுகின்றனர். என்றாலும் ஜனத்தொகையை முன்னிட்டுப் பார்க்கின் மற்ற ஜாதியாரை விட உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் இவர்களேயாம்.

 

வினா :-   இவர்கட்கு மட்டும் நாகரீகம் உயராத காரணமென்ன?

 

விடை :-  முன் சொல்லிய காரணமே.‘

 

வினா :-   இனியாவது உயர நம்பிக்கையுண்டா?

 

விடை :-  உண்டு.

 

வினா :-   எப்படி?

 

விடை :-  ‘சென்னை வன்னிகுல க்ஷத்ரிய மகாசங்கம்’ என்னும் பெயருடன் வன்னிகுலோத்தாரணராகும் ஸ்ரீலஸ்ரீ கோபால நாயகர் அவர்கள் முயற்சியால் உதித்து அவரது புத்திரச் செல்வமாகிய பல்லவ குலசேகர ஸ்ரீமாந் பலபத்திர நாயகர் முதலிய குலாபிமானிகளால் பரிபாலிக்கப்பட்டு இருபத்தைந்தாவது வயதையடைந்திருக்கும் சங்க புருஷன் செய்கையால் அங்கங்கு பிறந்து வளர்ந்து வரும் சங்கச் சிறுவர்கள் விருத்தியடைந்து வருகின்றனர்.

 

வினா :-   மேற்படி சங்கங்களின் நோக்கமென்ன?

 

விடை :-  வன்னியர்கள் கல்வி, ஆசாரம், நாகரீகம், சுஜாதியபிமானம் முதலியவற்றால் பூர்வீக அந்தஸ்தைப் பெறுவதேயாம்.

 

வினா :-   ஈஸ்வர சங்கற்பத்தால் ஏற்பட்ட ஆளுகைக்குரிய க்ஷத்ரிய வேந்தர்கள் இக்காலம் அரசில்லாமலிருத்தல் கடவுளது சங்கற்ப விரோதமல்லவா?

 

விடை :-  ஜீவர்களின் சுக துக்கங்கள் அவர்களின் தர்மா தர்மங்கட்குத் தக்கபடி ஈஸ்வரனால் அமைக்கப்படுகின்றன. ஈஸ்வர சங்கற்பம் நமது புண்ய பாவங்களுக்குத் தக்கபடி தான் அமையும் என்றாலும் இந்தியாவில் இந்து மதத்துக்குரிய சநாதன தர்மங்கள் எப்போதும் முற்றும் இல்லாமல் ஒழிந்தது கிடையாது. கலியுகத்தில் கொஞ்ச காலம் க்ஷத்ரியர்களின் அரசு நீங்குமென்று விஷ்ணு புராணம், பவிஷ்யத் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

 

 

அப்படியிருந்தும் இவர்களின் அரசாட்சி முற்றும் ஒழியவில்லை. சிற்றரசர்கள் அநேகர் ஆள்கின்றனர். நமது வைதிக வர்ணாச்சிரம் தர்மங்களும் அறவே ஒழிவதில்லை. அப்படிப்பட்ட ஓர் காலம் சம்பவிக்கும் முன் பகவான்  இப்பூமியில் அவதாரஞ் செய்து அதர்மத்தை யோட்டி தர்மத்தை நிலைநாட்டி அதனைப் பாதுகாக்க அரசனை நியமிப்பாரென்பது திண்ணம்.

 

 

சுபம்

 

 

 

வாழி

 

வாழிய மாமறை வாழியர் முன்னோர்

வாழியர் முக்குலம் வாழ்தரு மன்னர்

வாழிய வன்னிய மாமர பென்றும்

வாழிய நூலிது மகிதல நன்றே.

 

முற்றிற்று

 

  • ••

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu