வெற்றி நமதே!

 

வன்னியர் சமுதாய மக்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்ட களம் கண்ட வன்னியர் கூட்டமைப்பு கடந்த 2009ம் ஆண்டு தமிழச் சாதிகளின் வரலாற்றில் முதல்முறையாக உள் ஒதுக்கீடு கேட்டு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது. அறப்போராட்டமும் சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடந்து வந்த வேளையில் வன்னியர் கூட்டமைப்பு அதற்காக அரசியல் அடித்தளத்தை உருவாக்க அ.இ.அ.தி.மு.க.வை ஆதரித்து புதிய கள அணுகுமுறையை கடைபிடித்தது.

 

எதிர்கட்சியாக இருந்தி அ.இ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் நமது கோரிக்கையை கேட்டு, நம்மை உபசரித்து ஆட்சிக்கு வந்தவுடன் கனிவுடன் பரிசிலிக்கப்பட்டு உரியமுறையில் ஆவன செய்யப்படுமென்று உறுதி அளித்து அனுப்பி வைத்தார்கள். அன்று தொடங்கி இன்று வரை அ.இ.தி.மு.க. எடுத்திடும் எந்த நிலைப்பாட்டையும் எவ்வித நிபந்தனையுமின்றி திடமாக தீர்க்கமாக ஆதரித்து வரும் ஒரே இயக்கம் வன்னியர் கூட்டமைப்பு ஆகும்.

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கடந்த மார்ச் மாதம் வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்பட்டோர் நல ஆணைத்திற்கு உரிய கருத்துரு வழங்க வேண்டி மாநில அரசின் சார்பாக அரசாணையை வெளியிட்டு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுபவர் என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்கிவிட்டார்.

 

இப்போது நமக்கு கிடைக்க வேண்டிய சமூகநீதிக்கு ஆணையம் உரிய பதில் தர வேண்டியது தான் பாக்கி. சமுதாய பணி செய்வதையே உதிரமாகக் கொண்ட உடலையும், உயிரையும் பெற்றவர் அல்லவா நமது நிறுவனத் தலைவர். மத்திய அரசு சாதாரணமானதல்ல. எந்த பிரஷ்சரும் இல்லாத போது நாம் ஏன் நிறைவேற்ற அவசரப்பட வேண்டுமென்று மத்தியில் இருப்பவர்கள் இருந்து விடுவார்கள் என்று சொல்லி உடனே  நமது மாநில நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள். மாபெரும் சம்பு மகரிஷி மகாயாகம் நடத்தி இருபது நாட்களே முடிந்திருந்த சமயம் உடனே ஒரு பிரச்சார இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றார் தலைவர்.

 

அவரவர் கருத்துக்களை சாதக பாதங்களோடு எடுத்துச் சொல்ல ஒரே குரலில் மே 2-ந் தேதி திண்டுக்கல்லில் இருந்து பிரச்சார இயக்கம் தொடங்குகிறோம். மே 11-ந் தேதி சென்னையில் நிறைவு செய்து அன்று மாலையில் ஒரு கூட்டமொன்றை நடத்துகிறோம் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டு பயணத்திட்டத்தை அரைமணி நேரத்துக்குள் வகுத்துத் தாருங்கள் என்று சொன்னார்.

 

மாநில தலைவர் என்ற முறையில் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின்பு ஒரு பயணத் திட்டத்தை வகுத்து அதில் பங்கேற்று வழி நடத்திச் செல்வதில் கொள்கை பரப்புச் செயலாளர் பச்சியண்ணன் பங்களிப்பார் என்பதையும் அறிவுறுத்த திட்டம் தயாரானது. இருப்பதோ இன்னும் முழுமையாக பத்தே நாட்கள். துரித கதியில் செயல்பட்டார் பச்சியண்ணன்.

 

திண்டுக்கல்லுக்கு விரைந்து தொடக்கத்துக்கான வேலைகளை செய்து முடிக்க, சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் பிரச்சார பயணத்திட்டத்திற்கான பாதுகாப்பு கேட்பது என வேலைகள் பரபரத்தன.

 

இப்படி பத்தே நாட்களில் ஒரு பெரும்பான்மை சமுதாயத்தை தட்டியெழுப்ப நடந்த முதல் பிரச்சார இயக்கம் இதுதான் என்பதை நான் அடித்து சொல்வேன். ஆம் சொந்தங்களோ! வன்னியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் விவேகானந்தன் பேசுகிறேன். இந்த மாபெரும் பிரச்சார இயக்கத்தின் தொடக்கம் முதல் நிறைவு வரை நடக்கும் முதலிலேயே  தலைவர் தயார் படுத்தி இருந்ததால் அதனையும் செய்து முடிக்க இதோ! உங்களுக்காக வன்னியர் உள் ஒதுக்கீடுக்காக நடந்த பிரச்சாரம் மற்றும் கூட்டத்தின் நிகழ்ச்சித் தொகுப்பை தொகுத்து உங்கள் முன் படைக்கிறேன்.

 

மே 2 திண்டுக்கல் நகரிலிருந்து பிரச்சார இயக்கம் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. நகரின் மையப் பகுதியான மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்து நமது வாகனங்களில் இயக்கத்தினர் பிரச்சார களம் காண தயாராக இருந்தனர். தனி உள் ஒதுக்கீடு வேண்டியதற்கான விளக்கத்துடன் கூடிய நமது பிரசுரத்தை அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஆவலுடன் வாங்கி படித்தனர். இந்த பிரசுரம் ஒரு சமய குழுவையே நிறைவு நாளுக்கு அனுப்பி வைக்கும் என்பதை நாங்கள் அப்போது உணரவில்லை.

 

சரியாக 4 மணிக்கு பிரச்சாரத்தை துவக்கி வைத்து நமது நிறுவனத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள். வன்னியர்களுக்கு ஏன் வேண்டும் தனி ஒதுக்கீடு என்பதை விளக்கி அழகாக, ஆழமாக வாதங்களை எடுத்து வைத்தார்கள். நம் சொந்தங்களும், அப்பகுதி மக்களும் ஆர்ப்பரித்து ரசித்து கேட்டார்கள். நிறுவனத் தலைவரின் உரை முடிந்ததும் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி நம்மை வழியனுப்பி வைத்தார் நம் நிறுவனத் தலைவர்.

 

திண்டுக்கல்லில்  ஆரம்பித்த வாகன பிரச்சாரத்துக்கு ஈரோட்டில் பலத்த வரவேற்பு நாமக்கல்லில் சிறப்பான வரவேற்பு. சேலத்திலோ பெரிய திருவிழாவாகி விட்டது. தர்மபுரியிரோ உணவை எடுத்தால் தான் அடுத்த ஊருக்கு அனுப்புவோம் என்று அன்புக் கட்டளை. கிருஷ்ணகிரியிலோ எங்கள் கிராமத்திற்கு வந்து தங்காமல் செல்லக் கூடாதென்றார்கள். வேலூரிலோ அன்பான, உற்சாகமான ஆதரவு, திருவண்ணாமலையிலோ பெருங்கூட்டம். காஞ்சிபுரத்திலோ கடும் நெருக்கடி. நேரம் இல்லை. அடுத்த கிராமம் சென்று திரும்பினால் நாளை சென்னை செல்ல தாமதமாகும் என்பதால் நமது சமுதாய பெரியவர்களிடம் மன்றாடி விடை பெற்றோம்.

 

வன்னியர் கூட்டமைப்பின் வாகன பிரச்சாரத்திற்கு வன்னிய மக்கள் அளித்த ஆதரவையும், உற்சாகத்தையும் எனக்கு எழுத வார்த்தைகள் போதவில்லை. பல கிராமங்களில் நம் மக்களின் அன்பைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தோம். உழைப்பதை மட்டுமே வாழ்நாள் கடமையாக கருதும் இந்த மக்களுக்காக சதிகாரர்கள் சாதியின் பெயரால் சதி செய்கிறார்களே! துரோகம் இழைக்கிறார்களே? என்றெல்லாம் ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது அம்மக்களின் அன்பு.

 

என்ன செய்ய! அரசியல்வாதிகளின் மூலதனமே மக்களின் மறதி தானே! நொந்து கொண்டு நானும், பச்சியண்ணன் அவர்களும் பலநாள் இரவு இது பற்றி விவாதிப்போம். உடன் வந்தோரும் பல கருத்துக்களை எடுத்து வைப்பர். துண்டு பிரசுரத்தை விநியோகித்த சிறுபாலகர்களின் முகத்தை இரவில் தூக்கத்தில் பார்ப்பேன். இச்சிறுவயதில்  சமுதாய பணிக்காக வந்த இவர்களின் பாதங்களை தொட்டு வணங்கினால் தான் நமக்கு பாவம் சேராது என்று மனதுக்குள் அழுது தீர்ப்பேன். பச்சியண்ணனுக்கோ கடமை ஆற்றுவது மட்டுமே முக்கியம். மற்ற ரசாபாசங்களுக்கு அவரிடம் இடம் கிடையாது. அவருக்கு ஒரே ஆறுதல் ஆன்மிகம், கோயில் கண்டால் பச்சியண்ணனுக்கு ஊன் வேண்டாம்!  உறக்கம் வேண்டாம். அந்தளவுக்கு தெய்வ பக்தியில் நாட்டம்.

 

வன்னிய குல மக்களின் அன்பையும், ஆதரவான வார்த்தைகளையும் கேட்டு பலமுறை விக்கித்துப் போய் இருக்கிறேன். இப்போது தான் பல கிராமங்கள் உருமாற ஆரம்பித்து இருக்கின்றன. தொலைக்காட்சியை பார்த்து விடுவதால் மக்கள் நிறைய சந்தேகங்களை கேட்டு விடை கேட்கிறார்கள். நமது பிரசுரத்தை படித்துவிட்டு சி.என்.ஆர். தான் நமக்கு கொடுத்த இட ஒதுக்கீட்டில் கையெழுத்து போட்டார்னா அப்ப இராமதாஸ் என்ன தான் பண்ணினார்னு எதிர் கேள்வி கேட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

 

ஒட்டன் சத்திரம் வழியாக பழனி, தாராபுரம், கொடுமுடி என்று பயணித்து ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு மே 11-ந் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் வந்து சேர்ந்தோம்.

 

பலவிதமான அனுபவங்களுடன் சென்னை வந்த நமது பிரச்சார இயக்கத்தின் நிறைவு நாளில் சென்னை வந்து கூட்டமைப்பின் அலுவலகத்தில் நம் நிறுவனத் தலைவரை சந்தித்தோம். நாங்ள் பிரச்சாரம் தொடங்கியதும்  முதலே சுமார் ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை எங்களுக்கு தலைவரிமிருந்து போன் வந்து விடும். எப்படி இருக்கிறீர்கள்? எங்கு இருக்கிறீர்கள்? பிரயாணம் எப்படி இருக்கிறது? சாப்பிட்டீங்களா? என்றெல்லாம் வரிசையாய் கேள்வி கேட்டு நல்ல விதமான பதிலை பெற்ற பிறகே மக்களிடம் எப்படியான வரவேற்பு இருக்கிறது என்று கேட்பார்.

 

நான் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக சமுதாயப் பணியாற்றி வருகிறேன். வன்னியர் சங்கத்தில் தீவிரமாமக செயல்பட்டு அதன் வளர்ச்சியில் நானும் வளர்ந்து வந்தேன். இதுவரை வன்னிய அடிகளார், இராமதாஸ் உட்பட பல தலைவர்களுடன் சேர்ந்து சமுதாய பணியாற்றி இருக்கிறேன். ஆனால் நமது சி.என்.ஆரைப் போன்ற கண்டதே இல்லை. அதனால் தான் அவரது தலைமையில் வழிகாட்டுதலில் இன்றைக்கும் சமூகப் பணியாற்றி வருகிறேன்.

 

பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கிய எங்களை ஆரத்தழுவி வரவேற்று பாச மழையை பொழிந்தார் நம் நிறுவனத் தலைவர். அனைவரையும் தனித்தனியாக வரவேற்று உபசரித்து உணவருந்த சொன்னார். காஞ்சி மாவட்ட பயணத்தையும் சென்னைக்குள் நுழைந்து பிரச்சாரம் செய்த இடங்களையும் கேட்டார். பேசிக் கொண்டே தலைவருடன் நாங்களும் உணவருந்தினோம். பிறகு அங்கேயே ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

 

மாலை ஆறு மணியளவில் கூட்டம் தொடங்க இருப்பதால் சுமார் நான்கு மணிக்கெல்லாம் தயாராகி சரியாக 5 மணிக்கு அரங்கத்திற்கு வந்து சேர்ந்தோம். அரங்கம் அமைந்திருந்த தியாகராயர் நகர் பனகல் பார்க் பகுதி முழுவதும் நமது வன்னியர் கூட்டமைப்பின் மங்களகரமான மஞ்சள் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது. ப்ளக்ஸ் பேனர்களும், சுவரொட்டிகளும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.

 

அரங்கத்தின் முகப்பில் அனைவரையும் வரவேற்றனர் நம் கூட்டமைப்பின் சென்னை மாவட்ட நிர்வாகிகள். அரங்கம் அழகுற அமைக்கப்பட்டு  இருந்தது. சரியாக ஆறு மணிக்கு கூட்டம் ஆரம்பிக்க, நமது சொந்தங்களும், இயக்கத்தினரும் வந்திருந்தத அரங்கத்தை நிரப்பி இருந்தனர். கூட்டம் தொடங்க சில மணித்துளிகள் இருக்கும் போதே கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

 

அவரை வரவேற்க நமது நிறுவனத் தலைவரும் மிகச் சரியாக அரங்கத்திற்கு வந்து சேர, இருவரும் ஒரு சேர மேடைக்கு வந்தனர். இருவரும் ஒன்றாக வருவதை அறிந்த நமது சொந்தங்கள் ஆர்ப்பரித்து வரவேற்க மேடையில் கூட்டம் தொடங்கியது. நமது கொள்கை பரப்புச் செயலாளர் பச்சியண்ணன் அவர்கள் வன்னியருக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி நடைபெறும் இக்கூட்டத்திற்கு மாநில தலைவரான என்னை தலைமை ஏற்று நடத்திக் கொடுக்குமாறு வேண்ட, அதை பொருளாளர் அருண் கென்னடி வழி மொழிந்தார்.

 

தலைமை உரையாற்ற வேண்டிய நேரம். தலைவர் சி.என்.ஆரின் அரும்பெரும் பணிகளை பட்டியலிட்டே தீருவதென முடிவு செய்து இருந்தேன். அதை முன் வைத்தே எனது உரையும் அமைந்தது. 1987-இல் நடந்த இட ஒதுக்கீடு போராட்ட களத்தில் நான் தலைவர் சி.என்.ஆரை சந்தித்தது ஒரு பொன்னான நேரம். சாலை மறியல் போராட்டத்திற்காக பொன்னேரியிலிருந்து அரக்கோணம் வரை பிரச்சாரம் மேற்கொண்டு அடுத்த கட்டமாக சேலம் வந்தார். வழியெங்கும் கிராமம் கிராமமாக வன்னியர் சங்கத்தில் அனைவரையும் உறுப்பினராக விண்ணப்பம் கொடுத்து சேர்த்துக் கொண்டே வந்தார்.

 

அப்போது வன்னியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த நமது தலைவர் சி.என்.ஆர். அவர்கள் சேலத்துக்கு வந்த போது சாலை மறியலுக்கான களமும் வந்தது. நாங்கள் தலைவருடன் வாழப்பாடி ஒன்றியத்தின் பழனியாபுரத்தில் ஒரு ஓலைக் குடிசையில் தங்கி இருந்து மறுநாள் காலை வாழப்பாடி  பஸ்  நிலையம் அருகே மறியல் செய்தோம். எங்களை காவல்துறையினர் கைது செய்தனர். பலரை வண்டியிலும், சிறையிலும் இடம் இல்லையென்று சொல்லி 69 பேர்களை மட்டும் கைது செய்தனர். அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டோம்.

 

அதே நேரம் திண்டிவனத்தில் வெறும் 18 பேருடன் கைதானார் இராமதாஸ். அவர் ஐந்து கோடி வன்னியருக்கு தலைவராம். நமது தலைவர் அவர்கள் அப்போதே நீதி மன்றத்தில் தானே வாதாடி போராட்டத்தில் கைதான அனைவரையும் விடுதலை செய்ய வைத்தார். இவர் தலைவரா? ஒடி ஒளிந்து கொண்ட இராமதாஸ் தலைவரா?

 

டாக்டர் இராமதாசுக்கே தனது கையெழுத்தைப் போட்டு உறுப்பினர் கார்டு கொடுத்தவர் நமது தலைவர். இன்றைக்கு தியாகச் செம்மலாக வரும் வரும் கோ.க.மணியை கொண்டு வந்தது நான்தான். நமது சி.என்.ஆர். அவர்களிடம் மணியை அறிமுகப்படுத்தி சங்கத்த்தில் இணைத்தோம். அவர் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார் தியாகி ஆவதற்கு? நான் 17 முறை சென்றிருக்கிறேன். இதோ! நம் தலைவர் காணாத சிறையா?

 

இட ஒதுக்கீட்டிற்காக களப்பலியான தியாகிகள் குடும்பத்திற்கு அரசிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் வாங்கிக் கொடுத்தவர் நம் தலைவர். அதில் ஒன்றரை லட்ச ரூபாயை வாங்கி மேலும் வழக்கு போட்டு அதிக நிதி வாங்கி தருகிறேன் என்று பொய் சொல்லி தன் குடும்பத்தின் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்தி இராமதாஸ் வன்னியர் தலைவரென்றால் அல்லவா?

 

இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு சென்ற போதெல்லாம் தலைவர் சி.என்.ஆர். தன் சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்து அழைத்துச் செல்வார். அப்படி இராமதாசுக்கு டெல்லியை காட்டியதே நமது தலைவர் சி.என்.ஆர். அவர்கள் தான். சமுதாயப் பணிக்காக தன் வாழ்க்கையை மட்டுமல்ல சொத்து சுகங்களையும் இழந்தவர் நம் தலைவர் அவரின் கரங்களுக்கு தோள் கொடுத்து நம் உரிமைகளில் வெற்றி பெறுவோம் என்று உரை ஆற்றினேன்.

 

பின்பு அவசரமாக அடுத்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமன்று கூறி கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. அவர்கள் உரையாற்ற விழைந்தேன். அவர்களின் பெருந்தன்மையான, வசீகரமான உரை வீச்சு தனியாக தரப்பட்டுள்ளது. மிக சமுதாயத்துடன் கொங்கு சமுதாயமும் இணைந்து களம் காண்போம் என சூளுரைத்து விடை பெற்றார் அவர்.

 

அடுத்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி. நவமணி சீனிவாசன் அவர்கள் உரையாற்ற வந்தார்.  அவரது பேச்சில் சூடும், சுவையும் நிறைந்து இருந்தது. கூட்டத்தினர் அனைவரும் அம்மா அவர்களின் பேச்சுக்கு பெருத்த ஆரவாரம் செய்தனர்.

 

வன்னியர் கூட்டமைப்பு மற்ற அமைப்புகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. நமது அமைப்பு மட்டுமல்ல. நம் தலைவரும் வித்தியாசமானவர் தான். மற்ற தலைவர்கள் எல்லாம் போராட்டத்திற்கும், அடி வாங்குவதற்கும் தொண்டர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம் தலைவரோ நான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன். எந்தவித போராட்ட களத்தையும் அமைத்து உயிர்ப் பலியாகும் அளவுக்கு விடமாட்டேன். அறிவாயுதம் ஏந்தி சட்டப் போராட்டம் நடத்தி நம் சமுதாய மக்களுக்கு தேவையானதை பெற்றுத் தருவேன் என்று சொல்லும் ஒரே தலைவர் நமது சி.என்.ஆர். தான்.

 

மகத்தான இரண்டு விழாக்களையிம் நடத்துகிறார். பங்குனி உத்திரத்தன் உருத்திர வன்னியன் பிறந்ததால் நமது வன்னியர் இனம் அவதரித்த நாளாக ஒரு விழாவை சீரும் சிறப்புமிக்க நடத்துகிறார். அடுத்து நமது மக்களின் எதிர்கால வாழ்க்கைக்காக தங்கள் உயிரைத் தந்த 25 வன்னிய வீரத்தியாகிகளை போற்றும் வகையில் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் வன்னியர் புரட்சி நாள் விழாவை நடத்துகிறார். வன்னிய சமுதாயத்தில் எந்த அமைப்பாவது இது போல் செய்கிறதா? இல்லை எந்த தலைவராவது தொடர்ந்து இது போல் விழா எடுத்து சிறப்பிக்கிறார்களா? நம் தலைவர் சி.என்.ஆரைப் போல உயர்ந்த எண்ணமும், தொலைநோக்கு சிந்தனையும் கொண்ட தலைவரை நம் சமூகம் இனி பெறமுடியாது.

 

இராமதாசுக்கு மகன் அன்புமணி இராமதாசை காப்பாற்றவும், கொள்ளை அடித்த சொத்துக்களை அடை போல் காத்து நிற்கவுமே நேரம் போதவில்லை. அவரது சொந்த பிரச்சனைகளுக்கே நேரம் போதவில்லை. கொடிய மனம் கொண்ட இராமதாசால் பழிவாங்கப்பட்டவர் பட்டில் சொன்னால் கூட்டத்தின் நேரம் போதாது. நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன். எனது கணவரோடு இணைந்து சமுதாயப் பணியாற்றிய என்னை அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். சொந்த சாதிக்காரர்களையே அடித்தும், மிரட்டியும், உருட்டியும் ரௌடியிசம் நடத்தும் இராமதாஸ் வன்னியர்களுக்கு இனியும் தலைவராக இருக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தது நமது இனிய, பண்பான தலைவர் சி.என்.ஆர். அவர்களுடன் இணைந்து செயல்பட்டு நமக்கான இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவோம் என்றார் நமது பொதுச் செயலாளர் திருமதி. நவமணி சீனிவாசன்.

 

அவருக்கு பிறகு நமது அன்பான வேண்டுகோளை ஏற்று கூட்டத்துக்கு வந்து சிறப்பித்த மதிப்பு மிக்கவர் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தன் தலைவர் திரு. இராஜமாணிக்கம் ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்க வந்தார்கள். அவர் நம் தலைவர் சி.என்.ஆரின் வழியில் இட ஒதுக்கீடு கேட்கப் போவதாக முழங்கினார். அவரது பேச்சும் தனியாக தரப்பட்டுள்ளது.

 

நான் கட்டுரையின் தொடக்கத்திலே சொன்னதை சற்று நினைவு படுத்த வேண்டுகிறேன். சொந்தங்களே! நாம் திண்டுக்கல்லில் விநியோகம் செய்த பிரசுரத்தை படித்துப் பார்த்து நம் தலைவரின் சாதனையை கேட்டு வியந்து அம்மாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவ வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக நமக்கு ஆதரவை அளிக்க முன் வந்தனர். அதன் ஒரு கட்டமாக நூறு பேர் அடங்கிய குழுவுடன் அன்றைக்கு நடந்த அரங்கக் கூட்டத்திற்கு வருகை தந்தார்கள். தமிழ்நாடு வன்னிய கிறிஸ்தவர்கள் சங்கத்தின் சார்பாக திரு. எஸ். நிக்கோலஸ் அவர்கள் நமது தலைவர் சி.என்.ஆர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் வாழும் வன்னிய கிறிஸ்தவர்களை இதுவரை யாரும் ஏறெடுத்து பார்த்ததில்லை. நாங்கள் வலியச்சென்று ஆதரவு தெரிவித்தாலும் மதிப்பாரில்லை. பிறப்பால் வன்னியர்களாக இருந்தாலும் மதத்தால் கிறிஸ்தவர்களாக ஆனதால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எங்களை சேர்க்க மறுத்துவிட்டார்கள். மாய மான்களை நம்பி ஏமாந்த கதை இனி தொடராது. உயிர்ப்பலி தந்து பெற்ற எம்.பி.சி. பட்டியலில் 108 சாதிகள் இணைக்கப்பட்டும் எங்களை சேர்க்க மறுப்பது என்ன நியாயம்? அதனால் பாசமுள்ள, வீரமுள்ள தலைவர் சி.என்.ஆர். அவர்கள் தலைமையேற்று அவரோடு இணைந்து எங்கள் கோரிக்கைக்காக போராட தயாராக இருக்கிறோம். உங்கள் ரத்தம்  உங்கள் சொந்தம் எங்கள் மாவட்டத்தில் வாழும் 124 கிராம மக்களும் இணைந்து வரும் ஜூலை மாதம் திண்டுக்கல்லில் நம் தலைவர் சி.என்.ஆர். அவர்களை வைத்து மாபெரும் மாநாடு ஒன்றை நடத்துகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்வதாக பலத்த கரகோஷத்துக்கு இடையில் அறிவித்தார். இதோ! தலைவரும் நம் ரத்தங்களாகிய கிறிஸ்தவ வன்னியர்களுக்காக தயாராகிவிட்டார் சொந்தங்களே!

 

தலைவர் சிறப்புரையாற்ற நேரம் நெருங்கிய வேளையில், நமது கூட்டமைப்பின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தமிழ் மாநில தலைவரும், பாசமிக்க சகோதரருமான எரிமலை திரு. இராமச்சந்திரன் அவர்கள் உரையாற்ற வந்தார்.

 

அடக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியின் சமூகநீதிக்காக உயிர் நீத்த வீரத் தியாகிகளுக்கு வீர வணக்கம் வன்னியர் சாதி தமிழ் மன்னனுக்கு சொந்தக்காரர்கள். தமிழ் இனத்தின் முன்னோடி சாதியாகவும் திகழ்ந்தவர்கள். என் மகனோ, மகளோ, நானோ அரசியலின் உயர்ந்த பதவிக்கு வரமாட்டோம் என்று சொல்லி உங்களை ஏமாற்றிய தலைவர்களுக்கு மத்தியில் புடம் போட்ட தங்கமாக ஜொலிப்பவர் நம் தலைவர் சி.என்.ஆர். அவர்கள். தான் அறிந்த வரையில் இருக்கின்ற தலைவர்களிலேயே அன்பான, மனதாபிமானமிக்க தலைவர் சி.என்.ஆரைத் தவிர வேறு யாரும் இல்லை.

 

இறைவன் மீது பற்று வைத்து வழிபட்டால் எப்படி நன்மை உண்டாகுமோ, அதே போல் தலைவர் சி.என்.ஆர். அவர்கள் மீது பற்று வைத்தால் உங்களுக்கெல்லாம் நிச்சயம் நல்லது நடக்கும். தலைவர் சி.என்.ஆரை நெருங்கிப் பார்த்தால் தான் தெரியும், அப்படியே அன்பு பிரவாகம் எடுத்து பாய்வதை உணரலாம்.

 

அவர் ஒரு போராளி. உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன். செய்யூரில் அனல்மின் நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டது. அது வரக் கூடாதென பல தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அப்பகுதி மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்தி அனல்மின் நிலையத்தை கொண்டு வந்தவர் நம் தலைவர் சி.என்.ஆர். அனல்மின் நிலையம் என்ன அவரது சொந்த பயன்பாட்டிற்காக? இல்லை இந்த தமிழ் மண்ணுக்காக! தமிழ் மக்களுக்காக! தமிழ் சொந்தங்களுக்காகத் தானே அப்படி ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அதற்காக தொடர்ந்து போராடுவார். எனவே நீங்கள் அனைவரும் தலைவர் சி.என்.ஆரின் கரத்தை வலுப்படுத்த நியை போர்ப்படை தளபதிகளாக உருவாகி இணைந்து செயல்பட்டால் நிச்சயம் இட ஒதுக்கீட்டை பெற்று விடலாம் என்று பேசினார்.

 

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த நம் நிறுவனத் தலைவர் அவர்கள் சிறப்புரையாற்ற எழுந்தார். அரங்கம் அதிர கையொலி எழுப்பினார்கள் நம் சொந்தங்கள். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தமிழ் மாநில தலைவர் அவர்கள் நம் நிறுவனத் தலைவருக்கு ஆளுயர மாலை அணிவித்து சிறப்பு செய்தார். தொடரந்து அவரது மாநில நிர்வாகிகள் நம் தலைவருக்கு பொன்னாடை போர்த்தினார்கள். அதே போல் நமது நிர்வாகிகளும் தலைவர் சி.என்.ஆருக்கு பொன்னாடை போர்த்த, சிறப்புரையாற்ற தொடங்கினார் தலைவர். அன்னாரது பேச்சில் அனல் தெறித்தது என்றும் இல்லாத வகையில் அன்று மிகவும் எழுச்சியோடு உரை நிகழ்த்தினார் நம் தலைவர்.

 

தலைவரின் உரைக்கு நடுவே நமது கொள்கை பரப்புச் செயலாளர் பச்சியண்ணன் அவர்கள் நன்றி உரை  நிகழ்த்தினார். பிரச்சார பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை விரிவாகவும், சுவையாகவும் எடுத்து கூறினார். பயணத்தில் எங்களுடன் வந்த வாகன ஓட்டுநர் உட்பட அனைவரையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் நம் தலைவர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்தவர்களை நலம் விசாரித்து பயணத்தை மிகவும் ஜாக்கிரதையுடன் கையாளுமாறு அறிவுறுத்தி நன்றி நவின்றார் நேம் தலைவர். அனைவருமே இட ஒதுக்கீட்டிற்காக நடத்தப்படும் வெற்றி விழாவில் பிரமாண்டமாய் ஒன்று கூடுவோம் என்று சூளுரைத்து விடை பெற்றனர்.

 

 

இராமதாசுக்கும், அன்புமணிக்கும் சேர்த்து

இட ஒதுக்கீட்டில் கையெழுத்துப் போட்டவன் நான்!

 

வீரமும், ஈரமும் கொண்ட எனதன்பு சொந்தங்களே!

 

திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரை வன்னியருக்கு தனி ஒதுக்கீடு வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி நமது வன்னியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் விவேகானந்தன் அவர்களும், கொள்கை பரப்புச் செயலாளர்  பச்சியண்ணன் அவர்களும் ஒரு குழுவாக கிளம்பி கிராமமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு இன்று சென்னையில்  நிறைவு செய்யும் வேளையில் அதற்காக நடக்கும் அரங்கக் கூட்டத்திற்கு திரண்டு வந்திருக்கும் அன்பான சொந்தங்களே!

 

நமது கூட்டமைப்பின் இட ஒதுக்கீடு போராட்ட களத்துக்கு முன்னோடியாக அமைந்த நமது முன்னோர்களின் வரலாற்றை ஒரளவாவது தெரிந்து கொண்டால் தான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும். 1871-ல் ஆங்கிலேய அரசு முதன் முதலாக மக்கட் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. அப்போது நம்மை சூத்திரர்கள் பட்டியலில் சேர்த்து வைத்தார்கள். இதனை எதிர்த்து நமது சமுதாய முன்னோர்கள் ஒன்று கூடி நமக்கு ஏற்பட்ட இழுக்கை துடைத்தெரிய பல்வேறு வகையில் முயன்றார்கள்.

 

இதற்காக வன்னியகுல விளக்கம் எனும் நூலையே எழுதி ஆங்கிலேய அரசிடம் நாங்கள் வன்னியகுல சத்திரியர்கள் என்பதற்கான ஆதாரமாக இந்நூல் விளங்குகிறது என்று சான்றாகக் கொடுத்தனர். அந்த நூலுக்கு 24-க்கும் மேற்பட்ட சாஸ்திரிமார்கள்  ஒப்புதல் வழங்கி உண்மையை உறுதி செய்தார்கள். 1881-ல் நடந்த கணக்கெடுப்பிலும் நம் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் நமது முன்னோர்கள் ஒன்று கூடி சங்கம் வைத்து போராடுவதென  முடிவெடுக்க, திரு. கோபால நாயக்கர் அவர்களின் சீரிய முயற்சியால் 1888-ல் வன்னிய குல சத்திரிய மகா சங்கம் நிறுவப்பட்டது.

 

சங்கத்தின் மூலமாக பலமுறை போராடிய தன் விளைவாக 1929-ல் நம்மை ‘வன்னியகுல சத்திரியர்கள்’ என பதிவு செய்யுமாறு அரசாணையை வெளியிட்டது ஆங்கிலேய அரசாங்கம். நீண்ட கால போராட்டித்திற்கு பிறகு நம்முடைய முன்னோர்கள் வாங்கிய வன்னியகுல சத்திரியர் என்ற அந்தஸ்தை தக்க வைக்க நாம் போராட வேடும் தானே! தேசத்திலேயே முதன்முதலாக சங்கம் வைத்தது வன்னியர்கள் தான் என்பதை நாம் பெருமையோடு சொல்லியேத் தீர வேண்டும்.

 

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நடத் பொதுத் தேர்தலில் தனியாக களத்தில் நின்று 25 எம்.எல்.ஏ.க்களையும், எம்.பி.க்களையும் வெற்றி வெற வைத்த பெருமை நம் சமுதாய பெருந்தலைவர் இராமசாமி படையாட்சியாரையே சாரும். இந்திய நாடு அதிர்ச்சி அடைந்தது. சுதந்திரம் பெற்று தந்ததாக சொல்லிக் கொண்டு களம் கண்ட காங்கிரசுக்கு சென்னை ராஜதனியில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதலில் மாணிக்க வேலரும், பின்பு படையாட்சி யாரும் சேர்ந்து தான் காங்கிரசை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தினர். இதுதான் வன்னியர்களின் முதல் புரட்சி.

 

படையாட்சியாரின் வார்ப்பான வன்னிய அடிகளார், 1980-களில் வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தார். அதில் பங்கேற்று பட்டை தீட்டப் பட்டவர்களில் நானும் ஒருவன். 1987 செப்டம்பர் திங்களில் நடைபெற்ற ஒருவார கால சாலை மறியல் போராட்டத்திற்கு முன்பு ஒரு நாள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினோம். நான் சென்னை எழும்பூரிலே மாறுவேடத்தில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டேன். இதனுடைய வெற்றியையும், மக்கள் ஆர்பரித்ததையும் பார்த்து தான், தென்காசியிலே நடந்த நிர்வாகக்குழு கூட்டத்திலே ஒருவார கால சாலை மறியல் போராட்டத்திற்கு தயாரானோம்.

 

அக்கூட்டத்தில் போராட்டம் நடத்துவதை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி தொடங்கலாமென்று சொன்னது நான் தான். வரலாறு காணாத போராட்டத்தை நாம் நடத்திக் காட்டி 25 உயிர்களை பலி கொடுதோம். உயிரிழந்த ஒருவர் கூ புறமுதுகிட்டு ஓடியதால் சுடப்படவில்லை. எல்லோருமே மார்பிலே உடம்பின் முற்பகுதியிலே சுடப்பட்டு உயிரிழந்து புதிய புறநானூறு படைத்திட்டார்கள்.

 

இன்றைக்கு ஏதோ ஒரு தனி ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இல்லையேல் நான் சிறை செல்வேன் என்று புலம்பும் இராமதாசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். தனி ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடுத்து, தமிழக அரசின் பார்வையில் கனிவு பிறந்தது முடியும் தருவாயுக்கு வந்து விட்டது. இந்த நேரத்தில் போராட்டத்தை நடத்துவதாக மிரட்டுவதை வன்னிய சமூகம் ஏற்காது.

 

இட ஒதுக்கீட்டிற்காக இறந்த 25 பேரின் குடும்பத்திற்காக நீங்கள் ஏதாவது செய்திருக்கிறீர்களா? உன்னிடமில்லாத கோடியா? பத்து வருடங்களாக மத்திய அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டு கொள்ளை அடித்த கோடிகளின் கணக்கு வன்னிய மக்களுக்கு தெரிந்து தான் இருக்கிறது. அந்த பணத்தில் இறந்த தியாகிகளுக்கு ஏதாவது செய்திட வேண்டுமென்று நினைத்துக் கூட பார்த்திருக்கிறாயா? எம்.பி., எம்.எல்.ஏ. என்று ஏதாவது ஒரு பதவியை அவர்களுக்கு பெற்றுத் தந்தாயா? உள்ளாட்சி பதவிகளில் அமர வைத்தாயா? அட! ஒரு கவுன்சிலர் பதவிக்கு அவர்களை நிற்க வைத்தாயா? இல்லையே! உனது கல்வி நிறுவனத்திலோ, தொலைக்காட்சி பத்திரிகை நிறுவனத்திலோ ஏதாவது ஒரு வேலை போட்டு கொடுத்தாயா?

 

அந்த வீரத் தியாகிகளுக்கு எதுவுமே செய்யாத உனக்கு, உன் மகன் எம்.பி. ஆக வேண்டும். மந்திரியாக வேண்டும். கொள்ளை அடிக்க வேண்டும். அதற்கு ஏமாந்த வன்னிய சமுதாயம் உன் பின்னால் வர வேண்டுமா? உன் மகன் அடித்த கொள்ளைக்கு வழக்கு வந்து கொண்டு இருக்கிறது. விரைவில் அன்புமணி திகார் சிறைக்கு செல்வது உறுதி.

 

டெல்லியில் ஒரு வீடு பார்த்து உட்கார்ந்து இராமதாஸ் திகாருக்கு தினமும் சென்று பார்த்து வருவதை நாடு பார்த்தால் தான் உயிர் நீத்த தியாகிகளின் ஆன்மா சாந்தி அடையும்.

 

இட ஒதுக்கீடு போர்க்களத்துக்குப் பின்பு பாய்ந்தெழுந்தது வன்னியர் சங்கம். அதன் பொதுச் செயலாளராக இருந்த போவது 1989-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்டது தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியல்.

 

20 சதவீத ஒதுக்கீட்டுடன் அதில் 108 சாதிகளை இணைத்து போடப்பட்ட ஒப்பந்தத்தில் அரசு சார்பில் தமிழக முதல்வரும், வன்னியர் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளரான நானும் கையெழுத்திட்டது ஒரு வரலாற்று ஆவணமாக இருப்பதை மறைத்துவிட முடியுமா இராமதாஸ். இராமதாசுக்கு மட்டுமல்ல. அவர் மகன் அன்பு மணிக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு வாங்கி அதில் கையெழுத்திட்டவன் நான்.

 

அந்த வீரத்தியாகிகளால் நாம் பெற்ற இட ஒதுக்கீடே வன்னியர்களின் இரண்டாம் புரட்சி ஆகும். அதனால் தான் வன்னியர் புரட்சி நாள் என நாம் இன்றும் கொண்டாடுகிறோம்.

 

போராட்ட காலத்திலே ஒரு நாளாவது சிறையில் இருந்த நம் சொந்தங்களை இராமதாஸ் போய்ப் பார்த்த துண்டா? நான் எல்லாச் சிறைச்சாலைக்கும் நேரில் சென்று பார்த்து ஆறுதலும், தேறுதலும் சொல்லி வழக்கின் விபரங்களை கேட்டு அடுத்த நடவடிக்கையை எப்படி செய்வதென ஆலோசனை கூறி வந்தேன். ஆனால் இராமதாஸ் யாரை சிறையில் போய் பார்க்கச் சென்றார். கொலை, கொள்ளை, அடிதடி, வெட்டு, குத்து என 64 வழக்குகள் உள்ள ஒரு கொடியவனான காடு வெட்டி குருவை போய் சிறையில் பார்க்கிறார்!

 

உனது கொள்ளைப் பணத்தின் பினாமி என்பதற்காகத் தானே போய் பார்த்தாய். ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போக முடியாத காடு வெட்டி குருவை வீரன், சூரன் என்கிறாய். உயிர்க் கொடுத்த மாவீரர்களை மறந்தே போனாய்! சிறைக்கே செல்லாத உனது அடிவருடி கோ.க. மணியை தியாகச் செம்மல் என்கிறாய்.

 

இட ஒதுக்கீடு போராட்ட களத்துக்கு பிறகு நடந்த தொடர் போராட்டத்தில் தீரர்களாக வலம் வந்த பு.தா. அருள்மொழி, பு.தா. இளங்கோவன், வாழைச் செல்வன், ஆரணி தாராசிங், ஆரணி இராஜேந்திரன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது தமிழக அரசு.

 

அந்த ஐவரையும் நேரில் சந்தித்ததோடு மட்டுமல்ல அவர்களை விடுதலை செய்யக்கோரி வேலூரில் இருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டேன். அதில் பலத்த தாக்குதலுக்கும் ஆளானேன்.

 

நமது தொடர் போராட்டத்தின் விளைவாக அப்போதைய தி.மு.க. அரசு அவர்களை விடுதலை செய்தது என்பதை இராமதாஸ் மறந்து விட முடியுமா?

 

இராமதாசின் அந்திமகக் காலம் நெருங்கி விட்டது சொந்தங்களே! நாடாளுமன்ற தேர்தலில் ஏழு இடங்களிலும் தோல்வியைத் தந்து மொட்டை அடித்தார்கள். சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களில் போட்டியிட்டு நாமம் போட்டார்கள். அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊரை விட்டே வெளியே துரத்தி விட்டார்கள். இனிவரும் தேர்தலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைமேல் உன்னை உட்கார வைத்து ஊர்வலம் போக வைக்கப் போகிறார்கள் நம் மக்கள்.

 

25 வருடத்துக்கு முன்பே கைது செய்து சிறையில் வைக்கப்போது மனைவி மூலம் அப்ளிகேசன் போட்டு காவடி எடுத்து வெளியில் வந்த இராமதாஸ், இப்போது புதிய பாதை! புதிய அரசியல்! என புது வேஷம் போடுகிறார். அப்போதே சிறையில் இருக்காத இராமதாஸ் இப்போது உங்களுக்காக போராடி எப்படி சிறை செல்வார்?

 

பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டும், பச்சோந்தியே வெட்கப்படுமளவுக்கு திமுக, அதிமுக என மாறி மாறி பல்டியும் எடுத்த நீ எப்படி வன்னிய இனத்தில் பிறந்தாய்? நீ உண்மையிலே வன்னியன்தானா? இராமதாசின் அடாவடித்தனத்தால் நம்மை மீண்டும் குற்றப்பரம்பரை பட்டியலுக்கு கொண்டு போய்ச் சேர்ககும் அபாயம் உள்ளதை நீங்கள் உணர வேண்டும்.

 

நாம் வன்னியர் பொதுச் சொத்து வாரியம் கேட்கிறோம். இராமதாஸ் நல்லவர் என்றால் வன்னிய மக்களிடம் பெற்ற பணத்தால் உருவான சொத்துக்களை அவரே கொண்டு வந்து அந்த வாரியத்திலே சேர்க்க வேண்டாமா? அந்த வன்னியர் கல்வி நிறுவனத்திலே இராமதாசின் பங்கு வெறும் 10,000 ரூபாய்தானே. அது மெல்ல மெல்ல இராமதாஸ் குடும்பத்துக்கு போய்க் கொண்டு இருக்கிறது.

 

நமது வன்னியர் கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்ற முத்தான மூன்று கோரிக்கைகளான வன்னியர்க்கு தனி ஒதுக்கீடு, வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம், வன்னியர் நல வாரியம் ஆகியவற்றில் முதல் இரண்டிலும் வெற்றி பெற்று இறுதிக்கட்ட நிறைவேற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில் நமது தமிழக முதல்வர்  டாக்டர் அம்மா அவர்கள் வன்னியர் நலவாரியத்தையும் அமைத்துக் கொடுப்பார்கள்.

 

வன்னியருக்கு தனி உள் ஒதுக்கீட்டு விவகாரத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்பட்டோர் நல ஆணையம் விரைந்து செயல்பட வேண்டும். இதற்காக அந்த ஆணையத்தின் ஆணையரை சந்தித்து மனு கொடுத்து இருக்கிறேன்.

 

இதன் ஒரு கட்டமாக பத்து மாவட்டங்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி இருக்கிறோம். இனி அடுத்த கட்டமாக எஞ்சியிருக்கும் மாவட்டங்களிலும் பிரச்சாரம் நடத்தி மத்திய அரசை வலியுறுத்தி நிச்சயம் நமக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம்.

 

இதற்காக மிகப் பெரிய அளவில் வெற்றி விழா மாநாடு நடத்தி நம் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை அழைத்து அவர்களுக்காக மிகப் பிரமாண்டமான வெற்றி விழா மாநாடு நடத்தப்படும். அதற்கு நம் சமுதாய மக்கள் நன்றி உணர்வுடன் ஒன்று திரண்டு வரவேண்டுமாய் உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறேன்.

 

நமது போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கர்ஜித்தார் நம் தலைவர் சி.என்.ஆர்.

 

 

 

சி.என்.ஆர். தலைமையில் போராடுவோம்!

வெற்றி பெறுவோம்!

 

தனியரசு தடாலாடி!

 

மானமும், வீரமும், அறிவும் செறிந்த தமிழ்ச் சமூகத்தில் வலிமையான வன்னியர் சமுதாயத்திற்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி நடைபெறும் இந்த மாலை வேளை அரங்கக் கூட்டத்தின் நாயகர் தொடர் போராட்ட போராளி ஐயா சி.என்.ஆர். அவர்கள் தலைமையை ஏற்று ஒன்று கூடி திரண்டு நிற்கும் கம்பீரத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோன். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திலும் பல அமைப்புகள் சிறிதாகவும், பெரிதாகவும் தனித்துவத்துடன் இயங்குவது ஜனநாயகத்தின் மாண்பு. அந்த வகையில் தான் வன்னியர் கூட்டமைப்பும் எமது கொங்கு இளைஞர் பேரவையும் இயங்கி வருகிறது.

 

பல்வேறு கால கட்டங்களில் உழைக்கின்ற சமூகமான தமிழ்ச் சமூகம் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கேட்டு போராடி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக உடல் உழைப்பையே பிரதானமாகக் கொண்டு உழைக்கும் சமூகமான, வலிமையான சமூகமான வன்னியர் சமூகம் இட ஒதுக்கீடுக்காக போராடியது பெரும் வரலாற்று பின்புலம் உடையது.

 

1980களில் நமது வன்னிய சமூகம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்ட களமாடிய போதே அதனை தலைமையேற்று நடத்தியவர் நமது ஐயா சி.என்.ஆர். அவர்கள். போராட்ட காலத்திலே ஊர் ஊராகச் சென்று, சிறை சென்று வன்னிய சமுதாயம் வாழ பாடுபட்டார். ஏதோ ஒரு வேலை பார்த்தோமா அல்லது ஒரு கட்சியை ஆரம்பிதோமா, நாலு காசு சம்பாதித்தோமா என்றில்லாமல் சமுதாய அமைப்பை உருவாக்கி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவது பெரும் சாதனை அதற்கு தகுதியானவர் நம் சி.என்.ஆர்.

 

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு பின்பும் இன்றும் கூட தனி உள் ஒதுக்கீடு கேட்டு அதற்கு வழக்கு போட்டது மட்டுமில்லாமல், அதை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரை ஒரு மாபெரும் பிரச்சார இயக்கத்தை நடத்தி, அது நிறைவுறும் நாளில் சென்னையின் மையப் பகுதியில் இவ்வளவு அழகான அரங்கத்தில் ஒரு நட்சத்திரக் கூட்டத்தை நடத்தும் நமது ஐயா சி.என்.ஆர். அவர்களை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். ஒரு நேர்த்தியான கூட்டத்தை கூட்டி அதில் சரிபாதி மகளிர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை இப்போது தான் பார்க்கிறேன். முதலில் நன்றி சொல்ல வேண்டும். இப்படி குடும்ப நிகழ்ச்சியாக கருதி அனைவரும் கலந்து கொண்டால் சமுதாய இயக்கங்களுக்கு இதையே ஆதாராமாகக் கொண்டு செயல்பட நமக்கு உத்வேகமாய் அமையும்.

 

இப்போது இருப்பது நமக்கான அரசு. இதுவே மாற்று அரசாக இருந்தால் இக்கூட்டத்தை நடத்த விட மாட்டார்கள். நமது முதல்வர் அம்மா அவர்கள் கேட்டதை மட்டுமல்ல, கேட்காததையும் கொடுக்கும் உயர்ந்த குணம் உடையவர். சட்ட மன்றத்திலே தினம் தினம் விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை வாசித்து மிகச் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறார். இப்படிப்பட்ட முதல்வர் இருக்கும் போதே உழைக்கும் சமூகமான நாம் விரைந்து செயல்பட்டு நமது உரிமைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

 

நமது சி.என்.ஆர். அவர்கள் ஒன்றும் முடியாததை கேட்கவில்லை. ஏற்கனவே அருந்ததியர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு வழங்கியது போல அவர் சமூகத்துக்கு தனி ஒதுக்கீடு கேட்கிறார் அவ்வளவுதானே!

 

இதற்காகத் தான் நாம் சாதி வாரி கணக்கெடுப்பு கோருகிறோம். சாதி வாரியாக கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால் யாரும் கேட்காமலேயே வலிமையான சமூகமான நமது வன்னியர் சமூகத்திற்கு தானாகவே இருபது சதவீத இட ஒதுக்கீடு கிடைத்துவிடும். அந்தளவுக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மை மிக்கவர்களாக நாம் இருக்கிறோம்.

 

பெரும்பான்மையான, வலிமையான வன்னியர் சமூகம் தலை நிமிர்ந்து நிற்க நான் சார்ந்து இருக்கும் கொங்கு வேளாளர் சமூகமும், எமது இயக்கமும் எல்லா வித நிலைகளிலும், எல்லா வித தளங்களிலும் கை கோர்த்து நின்று போராட தயாராக இருக்கிறது.

 

வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ஆர். அவர்களுடன் இணைந்து போராட்ட களம் காண்போம்! வெற்றி பெறுவோம் என்று சிங்கமென கர்ஜித்து விடைபெற்றார் நம் நேசத்துக்குரிய சகோதர் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான உ. தனியரசு அவர்கள்.

 

சி.என்.ஆர். தான் எங்களுக்கு வழிகாட்டி!

 

மு. இராஜமாணிக்கம் புகழாரம்

 

தமிழ்ச் சமூகத்தில் பெரிய சமூகமான வன்னியர் சமூகத்தைப் போல நாங்களும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான். எங்கள் முத்தரையர் இனத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன. எங்களிலும் நாயக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பட்டப் பெயர் இது. ஆனால் சாதி என்றால் முத்தரையர் என்பார்கள். சென்னையில் நாயக்கர்கள் என்றும் பிறபகுதியில் முத்தரையர்கள், முத்துராஜா, வலையர், மூப்பர் என்றும் பட்டப் பெயர்களையே சொல்லும் பழக்கம் உருவாகிவிட்டது.

 

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த நாங்களும் வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.என்.ஆர். வழியில் தனி ஒதுக்கீடு கேட்க முடிவு செய்துள்ளோம். இது ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்துக்கே புதிய வழிமுறையான உயர்ந்த வழிகாட்டியாகும். சி.என்.ஆர். தொடுத்த சட்டப் போராட்டத்தின் வழியில் நாங்களும் இனி வழக்கு தொடுத்து சமூக நீதி கேட்டு தனி உள் ஒதுக்கீடு கேட்க போகிறோம். இதற்கு வழிகாட்டியாக விளங்கிய சி.என்.ஆர். அவர்களை தமிழ்ச் சமூகமே ஒன்று சேர்ந்து பாராட்ட வேண்டும்.

 

சட்ட ரீதியாக போராடி நாமும் நமக்கான இட ஒதுக்கீட்டை பெற்று விடலாமென்ற நம்பிக்கையை ஏற்படுத்திய சி.என்.ஆர். அவர்களுக்கு தமிழ்ச் சாதிகள் அனைத்தும் நன்றி பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது. வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு கேட்டு போராடி விரைவில் அதற்கான தீர்வை பெறப் போகிற அளவுக்கு பாடுபட்டவர் சி.என்.ஆர்.

 

இவ்வளவு பெரிய காரியத்தை செய்துவிட்டு, மிகவும் எளிமையாக ஆரவாரம் எதுவுமில்லாமல் அமைதியின் திருஉருவமாக திகழும் சி.என்.ஆர். அவர்கள் வன்னிய மக்களோடு நாங்களும் துணையாக இருந்து கை கொடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன். என்றார் நம் பாசமிகு பண்பாளர், தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் மு. இராஜமாணிக்கம் அவர்கள்.

 

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu