வன்னியர் பொது சொத்து நல வாரியம் – போராட்ட பயணம்

வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். இந்த வன்னிய பெரியோர்கள் அமைத்து இருக்கும் அறக்கட்டளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் பத்து லட்சம் கோடி ருபாய் பெறுமான சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ளது.

இந்த அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக அமைக்க பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், காலபோக்கில் கேட்பாரின்றி இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் சுயநல எண்ணம் கொண்டோர்  கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. அந்த அறக்கட்டளைகளின் மூலமாக வரும் பல கோடி பெறுமான வருமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றவேண்டும் என்று அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி அவர்கள் பெரு முயற்சியைத் துவங்கினர்.

வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு களமிறங்கிய அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி அவர்களை சொந்த இனத்தாரே கேலியும், கிண்டலுமாக பார்த்தனர்.

கொண்ட கொள்கையில் என்றுமே உறுதிய நிற்கும் அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி தன்னுடைய போராட்டத்தை 1989ல் அப்போதைய தமிழக கவர்னர் வணக்கத்திற்குரிய அலெக்சாண்டர் அவர்களின் உதவியோடு துவங்கினார்.

முதலாவதாக முக்கிய அறக்கட்டளைகளை மற்றும் சொத்துக்களை அடையாளம் காண துவங்கினார்கள். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் பின்னும் வன்னிய முன்னோர்கள் இன நலனுக்காக, இன மக்களின் முன்னேற்றத்திற்காக விட்டு சென்ற சொத்து மதிப்பு சுமார் பத்து இலட்சம் கோடிகள் இருக்கலாம் என கணக்கிடபட்டது. இந்த சொத்துக்கள் யாவும் உயில் மூலமாக இந்த அறக்கட்டளைகளுக்கு எழுதி தரப்பட்டது என்பது மிக முக்கியமான செய்தி.

இந்த காலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திடம் சர். பி. டி. லீ செங்கல்வராயண் நாயக்கர் கொடுத்து சென்ற சொத்துக்கள் மீட்கப் பட்டது. அதன் பிறகு மிக நீண்ட தேடல், போராட்டங்கள், புலன் விசாரணைகள் மேலும் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மூலமாக சுமார் 103 சொத்துக்கள் அடங்கிய பட்டியல் தயாராக உள்ளது. இந்த போராட்டம் ஏறத்தாழ முப்பது ஆண்டு காலம் நடைபெற்று தற்போது அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி முயற்சியால் வென்று உள்ளோம். இந்த போராட்டத்தில் சந்தித்த அனைத்து தடங்கல்களையும் கடந்து வந்து பொறுமையுடன் கொண்ட கனவை சாதித்த பெருமை அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி அவர்களைச் சாரும்.

நாளொரு பொழுதொருமேனியாக போராட்டங்கள் அதிலும் சமுதாய நலனுக்கான போராட்டங்கள், தன் வாழ்நாள் அனைத்தையும் ஒரு சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்பது என்பது சுய நலம் பார்க்காமல், சமுதாய நலன் ஒன்றையே கனவாக கொண்ட வெகு சிலரால் மட்டுமே இயன்ற ஒன்று.

வன்னிய பெருந்தலைவர்கள், பெரும் சாதனையாளர்கள் பட்டியலில் வரலாறு படைத்து இன மானம் காத்து, இன உரிமை காத்து, இன நலனையும் காத்த பெருமை நம் பெரும் மதிப்பிற்கும், வணக்கத்துக்கும் உரிய ஐயா அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி அவர்களைச் சாரும். இனி வன்னிய இன வரலாற்றை இவர் எடுத்த முன்னெடுப்புகளில் இருந்தே துவங்க வேண்டியது காலத்தின் நிதர்சனம்.

பொதுச் சொத்து வாரியப் போராட்டம் மற்றும் வெற்றி பயணத்தில் கண்ட முக்கிய தடங்களைத் தரவுகளோடு இனி பார்க்கலாம்.

இந்த பொது சொத்து நல வாரிய போராட்டம் ஒரு வழக்கோடு துவங்கியது. அது வரை அணைத்து ஆவணகளையும் தேடி, தரவுகளை தோண்டி, பல விலை கொடுத்து தயார் ஆன பின்னான முதல் அடி இது. சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்று பதியப்படுகிறது. இந்த வழக்கு எண்: 26565/2011 என்பதாகும். இந்த வழக்கின் வேண்டுதல் வன்னிய பொது சொத்து வாரியம் அமைக்க ஆணையிட வேண்டும் என்பதே.

இந்த வழக்கு மிக சிறப்பாக நடாத்த பெற்று 18.11.2011 அன்று வன்னியர் கூட்டமைப்பிற்கு சாதகமாக அமைந்தது. தர்மம் வென்றே தீரும் என்று இந்த சட்ட போராட்டத்தை கையிலெடுத்த தலைவனுக்கு இது தேர்ந்த வெற்றி என்பதில் ஐயளவும் சந்தேகமில்லை.

இந்த வழக்கின் தீர்ப்பு நகல் இதோ உங்கள் பார்வைக்கு.

இந்த தீர்ப்பு மூன்று பக்கங்கள் கொண்டது. இது முதல் பக்கம். அடுத்த இரண்டு பக்கங்களை இனி காண்போம்.

இந்த தீர்ப்பு மூன்று பக்கங்கள் கொண்டது. இது இரண்டாம் பக்கம். அடுத்த ஒரு  பக்கத்தை இனி காண்போம்.

இந்த தீர்ப்பு மூன்று பக்கங்கள் கொண்டது. இது மூன்றாம் பக்கம்.

வழக்கு, தீர்ப்பு, வெற்றி என மூன்று வார்த்தைகளில் வழி மிகுந்த பயணத்தை மறந்து விடக் கூடாது. இந்த வழக்கு நிறைவடையும் வரை ஆன பொருட்ச் செலவு, சட்ட ஆலோசகர் செலவுகள், தடைகள், நேர விரயங்கள் என இந்த முன்னெடுப்பை செய்தவர்கள் சந்தித்த சிக்கல்களையும், இந்த வரலாற்றை மூன்று வார்த்தைகளில் கடந்து செல்லும்பொழுது நினைவு கொள்ள வேண்டும்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து சட்ட வடிவமாக்க 15.6.2018 அன்று அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி அவர்கள் மான்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றினை எழுதி இன்னும் பல முறைகள் முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்தார். அதை வலியுறுத்தும் வகையில் அரசு உரிய சட்டம் இயற்றுவதற்கான கருத்தரு கடிதம் ஒன்றினை 27.12.2011 அன்று எழுதினர். அதை தொடர்ந்து தமிழக அரசு ஒரு வாரியத்தை அமைத்து அரசானை எண்: G.O.(MS) No.20 dated 02.03.2009 அன்று வெளியிட்டது. அந்த அரசானை படி இந்த வாரியத்தின் முக்கியமான பணி வன்னியர் அறக்கட்டளைகளை / தர்ம சாசன அருட் கொடை பணிகளை சரியான முறையில் கண்காணித்து அதன் மூலம் வன்னியர்குல ஷத்திரியர் இன மக்கள் பயன் பெற வேண்டும் என தெரிவித்தது. இந்த வாரியம் செயல் படுவதற்காக எண். 736, அண்ணா சாலையில் உள்ள LLA வளாகத்தில் 4 வது தளத்தில் அமைக்க பட்டது. அதற்கான அரசானை நகல் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் பக்கம்

இரண்டாம் பக்கம்

இந்த வாரியத்துக்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரை சட்ட ஆலோசகராக நியமித்து ஒரு தாசில்தாரையும் சில பணியாட்களையும் நியமிக்க உத்தரவிட்டது.

இந்த வாரியத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒரு இணையத் தளத்தையும் அன்றைய முதல் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் 29.10.2011 அன்று துவக்கி வைத்தார். அந்த இணையதளத்தின் முகவரி www.tn.gov.in/vppwb என்பதாகும். அந்த இணையதள பக்கங்களின் நகல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாரியத்தின் முக்கிய பணிகளாக கீழ்கண்டவற்றை குறிப்பிட்டுள்ளது.

  • வன்னியர்கள் ஏற்படுத்தி இருக்கும் அறக்கட்டளைகள் மற்றும் தர்ம சாசன அருட்கொடை பணிகளைத் தேடி அடையலாம் கண்டடைவது.
  • இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் யாவை என்று கண்டு அறிவது, எந்த நோக்கத்திற்காக இந்த அறக்கட்டளைகள் நிறுவப்பட்டன என்று கண்டு அறிவது.
  • இந்த அறக்கட்டளைகளின் நிர்வாகிகளுக்கு உரிய முறையில் செயல் பட தேவையான் அனைத்து ஆலோசனைகளையும் அளிப்பது.
  • இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்களை சரியான முறையில் பராமரிக்க தேவையானவற்றை செய்வது.
  • இந்த அறக்கட்டளைகளுக்கு தேவையான சட்ட உதவிகளை பெற்று தருவது.

மேற்கண்ட பணிகளை செய்ய தேவையான அனைத்து முன்னெடுப்புக்களையும் செய்வது போன்ற வழிக்காட்டு நெறி முறைகளை உள்ளடக்கி உள்ளது.

இது வரை கண்டு கொண்ட சில அறக்கட்டளைகளை பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அறக்கட்டளைகள் குறித்த விவரங்கள் விரைவில் ஒரு புத்தக வடிவில் வரவிருக்கிறது.

வன்னிய குல ஷத்ரியர் மிகவும் பெருமையும் பெருமிதமும் கொள்ளகூடிய இந்த வெற்றியானது சாதரணமானது இல்லை. இந்த சாதனையை இன மக்களுக்கு பெற்று தந்த அக்னிகுல பெருந்தலைவன் சி. என். இராமமூர்த்தி அவர்களையும் இந்த முக்கியமான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த அணைத்து சமுதாய பெரியவர்களையும் தலைமுறைகளும் வாழ்த்தும்.

இந்த போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளை தரவிறக்கம் பகுதியில் இருந்து நீங்கள் படித்து கொள்ளலாம்.

Menu