வன்னியர் கூட்டமைப்பின் நோக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள்!

நமது வன்னியர் கூட்டமைப்பு தொடங்கப்பட காலம் முதல் இன்றளவும் தொய்வில்லாமல் நம் சமுதாயத்திற்கு தேவையான கோரிக்கைகளை தொடர் முழக்கமாக எழுப்பி அவற்றை அரசுகளின் செவிகளுக்கு எட்டச் செய்து வருகிறது. நமது கோரிக்கைகளை மீண்டும் நினைவுப்படுத்துவது என கடமையென கருதி இதை பிரசுரிக்கிறோம்.

அகில உலக வன்னியர்களை ஒருங்கிணைப்பது

உலகமெங்கும் பரவிக்கிடக்கும் வன்னியர் சொந்தங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து இனத்தின் வளர்ச்சிக்கும், வளமைக்கும், சிறப்புக்கும் தேவையான முன்னெடுப்புகளை செய்வது.

ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம்

வன்னியர் இளம் தலைமுறையை ஒரு அறிவார்ந்த சமூகமாக வளர்ந்தெடுப்பது. சமூக அரசியல் இன மற்றும் பொருளாதார இனங்களில் நமது வளரும் தலைமுறை சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் தேவையான அனைத்து முன்னெடுப்புகளையும் செய்வது.

பங்குனி உத்திர விழா

வன்னியர் புராணத்தின் படி சம்பு மகரிஷி யாகத்தில் பிறந்த உத்திர வன்னியனே வன்னிய அரசர்களுக்கும், நம் வம்சத்தினருக்கும் முதலாமவர். எனவே பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் பிறக்கும் நாளை ‘வன்னியர் அவதரித்த நாள்’ என அறிவித்து வருடந்தோறும் அதற்கு விழா எடுக்கின்றோம்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் நட்சத்திரத்தன்று வன்னியருத்திரன் தோன்றியதாகச் சொல்கிறது நம் வன்னிய புராணம். அதனால் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத உத்திர நட்சத்திரம் வரும் நாளை வன்னியர் அவதரித்த திருநாளாக கருதி வன்னியர் எழுச்சி நாள் விழாவை வன்னியர் கூட்டமைப்பு சிறப்பாக கொண்டாடுகிறது.

வன்னியர்களின் வாழ்வாதாரமான இட ஒதுக்கீட்டுக்காக 1987 இல் நடந்த போராட்ட களத்தில் உயிர் நீத்த 25 வன்னிய வீரத் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வீரவணக்க விழாவை ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி புரட்சி நாளாக நம் வன்னியர் கூட்டமைப்பு சிறப்பாக கொண்டாடுகிறது.

பல்கலைக்கழகம்

வன்னிய சமுதாயத்தினரின் சொத்துக்கள் பல உயில்கள் மூலம் அறக்கட்டளைகளின் பெயரில் மொத்தம் 20 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளன. அதை மீட்டு வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் அமைத்திட வேண்டுமென்றும் வன்னியர் நிகர் நிலை பல்கலைக் கழகம் வேண்டுமென்றும் தொடர்ந்து போராட்டங்களை வகுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டது வன்னியச் சத்ரியர் சங்கம்

வன்னியர் டாக்குமெண்டரி

வன்னிய இனத்தின் சிறப்புகளை ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த மாபெரும் இனத்தின் வரலாறு, கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் நிகழ்வியல் மரபுகள் குறித்த அறிவையும் ஞானத்தையும் வரும் தலைமுறைகளுக்கு கடத்த வேண்டியது கூட்டமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வன்னியர் டாகுமெண்டரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அந்தந்த பகுதிகளில் பின்பற்ற படுகின்ற வன்னிய மரபுகளை ஆவணபடுத்தி அவற்றை அணைத்து சமுதாய மக்களுக்கும் கொண்டு சேர்ப்போம்.

வன்னியர் டாக்குமெண்டரி மூலம் வன்னியரின இயல், இசை, கலை வடிவங்கள், வாழ்வியல், பொருளாதாரம் என அனைத்து அறிவுசார் புலங்களிலும் ஆவன படுத்துதல் தொடரும்.

வன்னியர் ஆராய்ச்சி மையம்

வன்னியர் சமூகம் குறித்த செய்திகளை ஆவனப் படுத்தவும் சமூகம் குறித்த வரலாறுகளை பதிவு செய்யவும் வன்னிய இனத்தை சார்ந்தோர் ஆராய்ச்சியில் ஈடுபட இந்த மையம் மூலமாக முன்னெடுப்புகள் செய்யப்படும்.

கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு துறையில் வன்னியர் இனத்தை சார்ந்தோர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட வரவேற்கிறோம்.

  • வன்னியர் சமூக குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் வாழ்வியல் குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் பொருளாதார குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் பல்துறை மேம்பாட்டு குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் மொழி குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் வளரும் சமூகம் குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் வணிகம் குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் அரசியல் குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் சமூக உளவியல் குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த ஆராய்ச்சி
  • வன்னியர் மக்கள் குறித்த ஆராய்ச்சி

மேற்கண்ட எந்த ஒரு தலைப்பின் கீழும், ஆராய்ச்சியில் ஈடுபட ஆராய்ச்சியாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த ஆராய்ச்சி மையம் செய்யும்.

வன்னியர் குரல்

தமிழ் பெரும் சமூகத்தின் மாபெரும் சமுதாயத்தின் தமிழ் கூறும் மின்னிதழ் இது. இந்த இதழ் வாரமொருமுறை மலரும். இந்த இதழ் உலகத் தமிழர் இடையே தமிழ் உலக சிறப்புக்களையும், நினைவுகளையும், காலப் பதிவுகளையும் கொண்டு சேர்க்கும். மேலும் வன்னிய சமூகத்தின் செய்திப் பேழையாகவும் செயல்படும். இனம், மதம், சமுதாயம் கடந்து ஒவ்வொரு தமிழருக்கும் இந்த மின்னிதழ் போய் சேரும். அவர்களின் ஞான விளைவுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும்.

வன்னியர் வர்த்தகம்

வன்னியர் குலத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நம் சொந்தங்களை இணைத்து இன வர்த்தக நண்பர்களின் தொழில் மேம்பட, அரசுகளை அணுகி தேவையான அனைத்து இசைவுகளையும் பெற்றுத்தர பாடுபடுவோம். மேலும் அகில உலக வர்த்தக கூட்டமைப்பாக இது செயல்படும்.

வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு

தமிழகத்தில் பொருளாதாரத்தால் வஞ்சிக்கப்பட்டு கீழ் நிலையில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் மாநிலத்தில் 15 சதவீதமும் அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

சாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு

1931-ம் ஆண்டுக்கு பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. எனவே 2021-ம் ஆண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுத்து தந்தை பெரியாரின் உயிர் மூச்சு கொள்கையான வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கிடவேண்டும்.

விவசாயிகள் மேம்பட…

பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கைப்பற்றி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் போக்கினை கைவிட்டு விட்டு விவசாய நிலங்களை பாதுகாத்து விவசாய இடு பொருட்களை மானிய விலையில் வழங்கி விவசாய உற்பத்தியில் பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட மத்திய – மாநில அரசுகள் விவசாயத்திற்கு தனியாக ‘விவசாய பட்ஜெட்’ தாக்கல் செய்திட வேண்டும்.

இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணி மண்டபம்

 1987-ம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் உயிர் நீத்த இட ஒதுக்கீடு போராட்ட வன்னிய தியாகிகளால் தான் வன்னியர் உள்ளிட்ட 109 சாதியினருக்கு மிகவும் பிற்பட்ட பட்டியலில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்து. எனவே சுதந்திர போராட்ட தியாகிகள் மொழிப் போர் தியாகிகளை கௌரவித்தது போன்று இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபத்தை அரசு அமைக்க வேண்டும். அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையும், குடியிருக்க வீடும் கட்டித் தர வேண்டும்.

வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்

வன்னியர் சமுதாய முன்னோர்கள், வன்னியர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பாடு அடைய பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களின் சொத்துக்களை உயிலில் எழுதிவிட்டு சென்றுள்ளனர்.

அவைகளை மீட்டு முறையாகவும் சட்டரீதியாகவும் ‘வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்’ அமைக்க வேண்டுமென்று வன்னியர் கூட்டமைப்பு சட்டரீதியாக போராடி வென்றிருக்கிறது. இதை மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் மாற்றியமைத்து வாரியத்தை சட்டப்பூர்வமாக செயல்படுத்திட வேண்டும்.

வன்னியர் நலவாரியம்

இசுலாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஒன்று அமைக்கப்பட்டு செயலாற்றி வருகிறது.

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் அமைக்கப்பட்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் செயலாற்றிக் கொண்டு வருகிறது. அது போல, வன்னியர் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் வன்னியர் நல வாரியம் அமைத்து, அதற்கென சட்ட திட்டங்களுக்கு சட்டமியற்றி, நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட வேண்டுகிறோம். ஏற்கெனவே வன்னியர் கூட்டமைப்பு வழக்கு தொடுத்து செயல்படுத்த வேண்டி தமிழக அரசை நிர்பந்தித்து வருகிறது.

வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

வன்னியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பழிவாங்கவே பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள ‘வன்கொடுமை சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டுகிறோம்.

வன்னியர்களுக்கு உயர் பதவிகள் கிடைத்திட…

தேசிய கட்சிகளும், மத்திய அரசும் வன்னியர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. வாக்கு பலம் உடைய இந்த சமுதாயத்தின் உண்மை நிலையை உணர்ந்து புரிந்து கொண்டு மத்தியில் ஆளும் அரசு, வன்னியர்களுக்கு – ஆளுநர், மத்திய அமைச்சர், வெளிநாட்டு தூதுவர், உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகள், பொதுத்துறை நிறுவனங்களில் சேர்மன் மற்றும் உறுப்பினர் பதவிகளை வழங்கிட வேண்டும்.

தமிழக அரசு வன்னியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும்.

அரசியல் கட்சிகளில் முக்கிய பதவிகளை அலங்கரித்திட…

வடதமிழகத்தில் 140 சட்டமன்ற தொகுதிகளிலும் 25 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயிக்கின்ற சக்தியாக வன்னியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அரசியல் கட்சிகள் வன்னியர்களின் வாக்கு வங்கிகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு அரசியல் அதிகாரத்தை வழங்குவது கிடையாது.

இந்நிலையை கைவிட்டுவிட்டு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலை பதவிகளில் வன்னியர்களுக்கு உரிய வாய்பு வழங்கிடுக.

வன்னியர் தலைவர்களுக்கு சிறப்பு செய்திடுக…

வன்னியர் கூட்டமைப்பின் தொடர் வேண்டுகோளான

  1. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவும்,
  1. அவருக்கு சட்டமன்றத்திலே முழு உருவப்படம் அமைந்திடவும்,
  1. கடலூரில் அவருக்கு மணிமண்டபம், திருஉருவசிலை மற்றும் நூல் நிலையம் அமைந்திட, வன்னியர் கூட்டமைப்பு வைத்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும், வன்னியர் சமுதாயத்திற்கும் புகழ் சேர்த்த பெரியோர்கள், அர்த்த நாரிஸ்வர வர்மா, எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார், சர்தார் ஆதிகேசவ நாயகர், மாணிக்கவேல் நாயகர், சோமசுந்தர வன்னியர், கடலூர் அஞ்சலை அம்மாள், வன்னியஅடிகளார், வாழப்பாடி இராமமூர்த்தி ஆகியோர்களுக்கு மத்திய அரசே தபால் தலை வெளியிட வேண்டும்! மேலும் தமிழக அரசே இவர்களுக்கு சிலைகள் நிறுவிட வேண்டும். அரசு விழா எடுக்க வேண்டும்.

பலிக்களத்தில் ஆடுகளே

பலியிடப்படுகின்றன…

ஒரு போதும் புலிகள் அல்ல…

வஞ்சிக்கப்பட்ட, வன்னிய இன

சொந்தங்களே,

உரிமைகளை மீட்டு எடுக்க

ஒன்றுபட்டு வாரீர்! ஆதரவு தாரீர்!!

 

Menu