பொருளடக்கம்
- வாழ்த்துரை
- அணிந்துரை
- என்னுரை
- வன்னியர் உரிமை போராட்ட உண்மை வரலாறு
- வன்னியர் நலனுக்கான சமூக நீதியும்… திமுகவும்…
- வன்னியர் சமுதாயத்திற்கு தி.மு.க. செய்த பட்டியல்
- வன்னியர்சமுதாய சமூகநீதி போராட்டத் தியாகிகள்
- வன்னியர் புரட்சி நாள்
- சி.என்.ஆரின் மறைக்கப்பட்ட வரலாறு
உண்மைகளும் நினைவுகளும்
- கடலூர் அஞ்சலை அம்மாள்
- இட ஒதுக்கீட்டு போராட்டம்
எண்ணிக்கையில் குழப்பம்.?
- 1986-ல் சென்னை கோட்டை முன்பு
பட்டை நாமம் தரித்து பட்டினிப்போராட்டம்
- சி.என்.ஆரின் சட்டப் போராட்டத்திற்கான
ஆவணங்கள்
- வன்னியர் பொதுச்சொத்து நலவாரியம்
- வன்னியர் உள் இட ஒதுக்கீடு
- வன்னியர் நலவாரியம்
வாழ்த்துரை
அணிந்துரை
அணிந்துரை
என்னுரை…
என் பேரன்பிற்குரிய, என் உயிரினும் மேலான சொந்தங்களே, நண்பர்களே!
வணக்கம்,
1971-ல் தொடங்கி இன்று வரை கடந்த ஐம்பது ஆண்டுகளாக என் வாழ்க்கையைச் சம்பு முனி வழி வந்த அக்னி குலத்திற்காக முழுமையாக அர்ப்பணித்ததில் மிகுந்த மன நிறைவு கொள்கிறேன். இன்னும் வருகிற நாட்களில் சமுதாய சமூக நீதி மற்றும் தமிழக நலனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்.
என் வாழ்வு முழுமையாக சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற போது நான் கடந்து வந்த பாதை முட்புதர்கள் நிறைந்த பாதையாக இருந்தது. இருந்த போதிலும், கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று நிர்ணயித்த இலக்குகளைச் சமூகத்தின் நலனுக்காக இன வளமைக்காக அறுதியிட்டு அறிவாயுதம் ஏந்தி உழைத்து வெற்றி அடைந்ததில் உள்ளம் பொங்கும் உவகை கொள்கிறேன்.
இந்த ஐம்பது வருட வாழ்க்கைப் பாதையில் நான் சந்தித்தது ஏராளமானவை. என் சமூகப் பணி ஈடுபாட்டை தூண்டிய இனப் பெரியோர்கள், அவர்களுடனான என்னுடைய வாழ்க்கை மற்றும் போராட்ட அனுபவங்கள், வரலாறு தந்த படிப்பினைகள், இனத் தேவைகளை அறுதியிட்டு இலக்குகளை நிர்ணயித்தல், அந்த இலக்குகளை அடையும் செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுத்துதல் அறிவாயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலம் நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் அடைந்தது என பல நிகழ்வுகளை நான் திரும்பி பார்க்கிறேன்.
இந்தப் பாதையில் என்னுடன் பயணித்து காலம் பிரித்து போட்ட எனது உறவுகள், என் போன்றோர், உணர்வுகளைத் தாங்கி இன விடுதலைக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்த தியாகப் போராளிகள் அறிவாயுதப் போராட்டத்தில் என் உடன் நின்ற சிறந்த சட்ட வல்லுனர்கள், ஆக்கம் கொடுத்த இனிய உள்ளங்கள், இந்தப் பெரும் சமூக உரிமைக்கு உரிய அங்கீகாரம் கொடுத்த வணக்கத்திற்குரிய முதல்வர்கள், அமைச்சர்கள், நீதி அரசர்கள் மற்றும் அரசியல், சமூக இனத் தலைவர்கள், என் சமுதாயப் பணிக்கு மனமார ஆதரவும் உறுதுணையும் நல்கிட்ட என் தனி உறவுகள் என அனைவரையும் உள்ளம் உவகை பொங்க நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
என்னை அக்கினிகுல உலகிற்கு ஈந்த
நலமுடன் திருமதி இரத்தினம்மாள் – தெய்வத்திரு திருமிகு. நடேசக் கவுண்டர்
சமூகப் பணிக்கு வாழ்த்தி அனுப்பிய சி. என். ஆர் அவர்களின் தந்தை திருமிகு. நடேசக் கவுண்டர் – தாயார் திருமதி. இரத்தினம்மாள், சூனாம்பேடு, செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம். இந்தப் போராட்ட வாழ்க்கையில் கொண்ட கொள்கை மாறாமல் இலக்கை துல்லியமாக அடைய நான் கடந்து வந்த துயரங்கள் வார்த்தை அர்த்தங்களுக்குள் அடக்கமுடியாதவை. சமூக நீதிக்கான போராட்டங்கள் எங்குமே நீளமானதும், அகலமானதும், ஆழமானதுமாகும். குறிப்பாக இந்த மாபெரும் இனத்தின் சிறப்பு தனித்துவங்கள் இங்கே மறைக்கப்பட்டுள்ளன, மறுக்கப்பட்டுள்ளன, மறக்கப்பட்டுள்ளன. இவற்றை அடைய முட்புதர்களை, தடைக் கற்களை, கொடிய மனித விலங்குகளைப் பல ஆண்டுகளாக எதிர் கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. ஏராளமான தனிப்பட்ட பொருட் செலவையும் தாண்டி, இலக்கு ஒன்றையே முழுமையாகக் கண்டு கொள்ள வேண்டிய நிலையில் போராட்டம் தொடர்கிறது.
இன்னும் இந்த இன உரிமைக்கான எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி நீத்துப் போக, அனைத்து முயற்சிகளையும் செய்த எதிரிகள், புல்லுருவிகளாக மாறிய சமூகத் துரோகிகள், இன நலனை அழிக்க துணியும் கோடாரி காம்புகள், இன உரிமை போராட்டத்தை வியாபாரமாக்கி இன மக்களை மாக்களாக மாற்றத் துடிக்கும் இனத் துரோக அரசியல் வியாபாரிகள், மூட முரட்டுத்தனத்தால் செயல் வீரர்களை முடக்கிப் போட்ட சுயநல போலிகள் என பலரையும் கடக்க வேண்டியிருக்கிறது.
- வன்னியர் இட ஒதுக்கீடு
வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நான் தொடுத்த வழக்கின் (WP No : 14025/2010) அடிப்படையில் அரசாணை (நிலை) எண் 35 (நாள்: 21.03.2012) பிறப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் 10.5% விழுக்காடு உள் ஒதுக்கீட்டை அறிவித்தார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 13.5% விழுக்காடு வழங்கலாம் என பரிந்துரை செய்திருந்தது. ஆனால் 10.5% விழுக்காடு என குறைத்து தனிச் சட்டமாக (சட்டம் 8/2021. நாள் 26.02.2021) உள் ஒதுக்கீடு அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்தி தெளிவில்லாமல் தேர்தல் ஆதாயம் அடையப் பார்த்தார்கள். எனவே அதில் உள்ள உண்மை நிலையை ஆய்வு செய்து 15% விழுக்காடு வன்னியர்களுக்கானத் தனி உள் ஒதுக்கீடு செய்து தெளிவான அரசாணை வெளியிட ஆவன செய்ய வேண்டுகிறோம்.
- வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்
வன்னியச் சமூகத்தைச் சேர்ந்த முன்னோர்கள் விட்டுச் சென்ற பல இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைத்து அதன் மூலம் நலிவடைந்த வன்னியர்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பு வாழ்வாதார முன்னேற்றம் காண செய்ய நான் தொடுத்த வழக்கின் (WP No : 26565/2011, நாள்: 18.11.2011) அடிப்படையில், தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) சட்டம் 2018 (சட்டம் 44/2018) 04.02.2019 முதல் சட்டமாக ஜனாதிபதி அவர்களால் கையொப்பம் இடப்பட்டு அமலுக்கு வந்தது.
டாக்டர் இராமதாஸ் பெயரில் உள்ள கல்வி அறக்கட்டளை இந்தச் சொத்து பட்டியலில் வன்னியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் 58வது இடத்தில் உள்ளது. அதை, அரசிடம் ஒப்படைக்காமல் இருப்பதற்காகத் தன் பெயரில் அறக்கட்டளையை மாற்றிக் கொண்டார் இராமதாஸ்.
இப்படி எடுக்க வேண்டிய சொத்துக்களின் இன்றைய மதிப்பு சுமார் 10,00,000/- (பத்து லட்சம் கோடி) கோடிக்கும் அதிகம். நான் வழக்கு தொடுப்பதற்கு முன்பே எங்கெல்லாம் சொத்துக்கள் இருக்கிறது என்ற பட்டியலையும் சேகரித்து தாக்கல் செய்திருந்தேன்.
அதேநேரம் அரசால் அமைக்கப்பட்ட வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் செயல்படாமல் முடங்கி உள்ளது. அதை அரசு சீர்படுத்தி புதிய நிர்வாகிகளை மற்றும் அதிகாரிகளை நியமித்து செயல்பாட்டுக்குள் கொண்டு வந்து வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் சிறப்பாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டுகிறோம்.
அதேபோல, 2009-ஆம் ஆண்டு வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தில் முதன் முதலாக, முதல் நபராக பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று வன்னியகுல சத்திரியர்கள், அறக்கட்டளைகளாக உயிலாக எழுதி வைத்த சொத்துக்களை இனம் கண்டறிந்தும் ஆவணங்களைச் சேகரிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சுமார் 3 ஆண்டுகளுக்குள் (2009-2012) வன்னியர் பொதுச் சொத்து நல வாரிய பணிகளை முடித்துக் கொடுத்த பெருமைக்குரியவர் என் அன்பு நண்பர் தாசில்தார் திரு.சு.இராமலிங்கம்.
மேலும், வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்திற்கென தனிச் சட்டம் இயற்றுதல் தொடர்பான வழக்கு விவரங்களில் தரவுகள் சேகரிப்பதில் தொடர் பணிகள் மேற்கொண்டதில், சமுதாயப் பணிகள் ஆற்றியதில் அரியலூரைச் சேர்ந்த என் அன்பு நண்பர் தாசில்தார் சு. இராமலிங்கம், த/பெ. சுப்புராய படையாட்சி அவர்களின் பங்கை என்றென்றும் மறக்க முடியாது. அவரை மனதாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
இத்தனை மாபெரும் சமுதாயத்திற்கான நல்வழிப் போராட்டங்களில் எப்போதும் கூடவே துணையாக இருந்து வரும் சி.என்.ஆரின் சகோதரர்கள்
சி.என்.பிரகாசம் சி.என்.தங்கவேலு சி.என்.இராமமூர்த்தி
- வன்னியர் குல சத்திரியா நல வாரியம் (Vanniyar Kula Kshatriya Welfare Board)
தமிழகத்தில் மக்கள்தொகையில் சுமார் 3,00,00,000 (மூன்று கோடிக்கும்) அதிகமாக உள்ள வன்னியச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் வறுமை கோட்டுக்கு கீழே தான் வாழ்கிறார்கள். படித்த இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்பு இல்லாததால் பலரின் தூண்டுதலால் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
எனவே, அவர்களின் வாழ்க்கை தரம் உயர தமிழ்நாடு அரசு மூலம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு வன்னியர் நல வாரியம் அமைத்து சமூகத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக நான் தொடுத்த வழக்கின் (WP No : 20544/2012 நாள்: 03.08.2012) அடிப்படையில் நலவாரியம் அமைக்கலாம் என்ற உத்தரவும் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் வன்னியர் நல வாரியம் அமைத்து செயல்படுத்த ஆவன செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேனாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த வாழப்பாடி கூ இராமமூர்த்தி அவர்களும், வன்னியர் சங்கத்தின் தலைவராகப்
பணியாற்றிய U.S.இராமமூர்த்தி என்கிற வன்னிய அடிகளாரும், சி.என்.இராமமூர்த்தி ஆகிய நானும், அந்தக் காலத்தில் வன்னியர் சங்கத்திற்காகச் சமுதாயத்தின் மும்மூர்த்திகள் என்று தலைவர் கலைஞர் அவர்களால் அழைக்கப்பட்டோம்.
நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவை ஏற்று, அதன் அடிப்படையில், மேற்கூறிய சூழலில், தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்திற்குச் சொந்தமான பல்வேறு அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் செயல்படுகின்றனவா என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்து, மேற்கூறப்பட்ட வன்னியர் சமுதாயத்திற்குச் சொந்தமான அறக்கட்டளைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பலன்கள் அனைத்தும் உரிய பகுதியினருக்கு உரிய முறையில் சென்றடைவதற்கு ஏற்றவாறு வழிவகைகள் காண்பதற்கு இந்திய ஆட்சிப் பணியில் ஒருவரை (I.A.S. Cadre) தனி அலுவலராக நியமிக்கலாம் என கருதப்படுகிறது.
மேற்படி கருத்துருவின் மீது ஆணை வேண்டி, இக்கோப்பினை அமைச்சர் (ஊரக தொழில் மற்றும் பதிவு) வழியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குச் சுற்றனுப்பலாம் என 07.03.2001-ல் வரைவு செய்யப்பட்டது.
தினமலர் 31-05-2000 SN 11
(ஆத்தூரில் நடைபெற்ற சேலம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க காப்பாளர் சி.என்.இராமமூர்த்தி கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம்.)
வன்னியர் சங்கம் துவக்கப்பட்ட காலத்தில் இருந்து வன்னியர் சங்க ஆயுள் கால உறுப்பினர் அடையாள அட்டை, சங்க உறுப்பினர் அட்டைகளில் பொதுச்செயலாளர் என்ற முறையில் சி.என். இராமமூர்த்தி ஆகிய எனது கையொப்பமே இடம் பெற்றிருக்கிறது.
ஆதாரங்களே இல்லாமல், இன்றைக்கு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற பலரும் அப்போது எங்கிருந்தார்கள் என்பதே விடை தெரியா கேள்விதான்.!?
மாநில வன்னியர் சங்கக் காப்பாளர் குற்றச்சாட்டு.
வன்னியர்கள் நலனில் ராமதாஸ் அக்கறை காட்டவில்லை
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர்.மு.கருணாநிதி அவர்கள் கையொப்பமிட்டு அரசாணை 1045 நாள் 07.03.2001-ல் முதன் முதலாக வெளியிடப்பட்டது. நாங்கள் இந்தச் சமுதாய முன்னேற்றத்திற்காக, பொருளாதார மாற்றத்திற்காகத் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை செய்து வந்தோம். நாங்கள் முதன் முதலில் எஸ். எஸ். ராமசாமி படையாட்சி அவர்களுக்குச் சிலை வைக்க முயற்சித்து, அதற்கான வேண்டுகோளை வைத்த போது, அதை ஏற்று அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆணைப்படி, அன்றைய சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னேற்பாட்டில் கிண்டி, ஹால்டா சந்திப்பில் சிலை வைக்கப்பட்டது.
- திருமிகு. US இராமமூர்த்தி (எ) வன்னிய அடிகளார் அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் & வட்டம்
- கூத்தப்படையாட்சி மகன் திருமிகு. இராமமூர்த்தி (எ) வாழப்படியார், சேலம் மாவட்டம்.
- நடேசக் கவுண்டர் மகன் திரு. சி. என். இராமமூர்த்தி, சூனாம்பேடு கிராமம், செய்யூர் வட்டம் , செங்கல்பட்டு மாவட்டம்.
இப்படியாகச் சேர்ந்து சமுதாயத்திற்கான, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்கும் கோரிக்கைகள்:-
- வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைத்துள்ளதை முழுமையாக செயல்பட, தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டத்திலும் (All District) செயல்படுத்த, வாரிய அலுவலகம் அமைக்க, அலுவலகப் பணியாளர்கள் ஒதுக்கீடு செய்ய, மாவட்ட வாரிய பெருந்தலைவர்கள் (District Chairman), வாரிய உறுப்பினர்கள் (Board Members) நியமிக்க, அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகம் அமைய, அரசு ஆணை (G.O.) பிறப்பித்து செயல்படுத்த வேண்டுகிறோம்.
- வன்னியர் சமுதாயத்திற்காகத் தனியாக உள் ஒதுக்கீடு 15% விழுக்காடு வழங்க வேண்டுகிறோம்.
- வன்னியர் சமுதாயத்திற்குத் தமிழக அரசிடம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு, சீர்மரபினர் நலவாரியம் (DNC welfare Board) போன்று வன்னியர் குல சத்திரியா நல வாரியம் (Vanniyar Kula Shatriya Welfare Board) அமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டத்திலும் (All District) செயல்படுத்த, தனியாக வாரிய அலுவலகம் (Board Office) அமைக்க, அலுவலகப் பணியாளர்கள் ஒதுக்கீடு செய்ய, வாரியப் பெருந்தலைவர்கள் (District Chairman), வாரிய உறுப்பினர்கள் (Board Members) நியமிக்க, அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகம் அமைய, அரசு ஆணை (G.O.) பிறப்பித்து செயல்படுத்த வேண்டுகிறோம்.
வன்னியர் குல சத்திரியா (Vanniyar Kula Kshatriya Welfare Board) நலவாரியம் அமைத்து தர வேண்டுகோள்:
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் நல வாரியங்களில் வழங்கப்படுவதைப்போல் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கீழ்க்காணும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேற்படி நலத்திட்ட உதவிகளைப் பெற, இவ்வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய அத்தாட்சிகளுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதைப்போன்று, தனியாக வன்னியர் குல சத்திரியா நல வாரியம் (Vanniyar Kula Kshatriya Welfare Board) அமைத்து நிதி நிலை அறிக்கையில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை (G.O.) வெளியிட்டு மாவட்ட வாரியாக அலுவலகம் அமைத்து வாரியப் பணியாளர்கள் நியமனம் செய்து, வாரியப் பெருந்தலைவர்கள் (District Chairman) வாரிய உறுப்பினர்கள் (Board Members) நியமித்து செயல்படுத்த ஆவன செய்ய வேண்டுகிறோம்.
நலத்திட்ட உதவிகள் விபரம்:
| 1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் | ரூபாய் | |
| அ) விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித் தொகை | 1,00,000/- | |
| ஆ) விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப | 10,000/- முதல் 1,00,000/- வரை | |
| 2. | இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை | 20,000/- |
| 3. | ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை | 5,000/- |
| 4. கல்வி உதவித் தொகை | ||
| அ) பத்தாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு | 1,000/- | |
| ஆ) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு | 1,000/- | |
| இ) 11 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு | 1,000/- | |
| ஈ) 12 ஆம் வகுப்பு வரும் பெண் குழந்தைக்கு | 1,500/- | |
| உ) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு | 1,500/- | |
| ஊ) (i) முறையான பட்டப் படிப்பிற்கு
(ii) மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட படிப்பிற்கு |
1,500/-
1,750/- |
|
| எ) (i) முறையான பட்ட மேற்படிப்புக்கு
(ii) மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்பிற்கு |
4,000/-
5,000/- |
|
| ஏ) (i) தொழிற்கல்வி பட்டப் படிப்பிற்கு
(ii) மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்பிற்கு |
4,000/-
6,000/- |
|
| ஐ) (i) தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பிற்கு
(ii) மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பிற்கு |
6,000/-
8,000/- |
|
| ஒ) (i) ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு
(ii) மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு |
1,000/-
1,200/- |
|
| 5. | திருமண உதவித் தொகை | 2,000/- |
| 6. | மகப்பேறு உதவித் தொகை | |
| அ) மகப்பேறு: மாதம் ஒன்றுக்குரூ.1000/- வீதம் 6 மாதங்களுக்கு
ஆ) கருச்சிதைவு / கருக்கலைப்பு |
6,000/-
3,000/- |
|
| 7. | மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் | 500/- வரை |
| 8. | முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் | 1,000/- |
| 9. | சுய தொழில் தொடங்க மானியம்
அ) தனிநபர் மானியம் ஆ) குழுக்களாகச் சேர்ந்து தொழில் தொடங்க |
7,500/- 10,000/- (தனி நபர்) அல்லது 1,25,000/- (குழு) |
வன்னியர் கூட்டமைப்பு முன்னெடுத்து, தொடர்ந்து அறிவாயுதம் ஏந்தி, வென்றெடுத்து இந்த வன்னியர் சமுதாயத்திற்குப் பெற்றுத் தந்திருக்கிறேன். மேலும், பல சலுகைகள் பெற மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக அரசு அலுவலகம் ஏற்படுத்த, விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.
இந்த நூல் எழுத வேண்டும் என தீர்மானித்த போதே வெறும் எழுத்துக்களாக மட்டுமில்லாமல் இதில் இடம் பெறும் சம்பவங்களுக்கு உரிய ஆவணங்களும் வைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளாகத் திரட்டப்பட்ட அரிய ஆவணங்களும் இதில் இடம் பிடித்திருக்கிறது.
வன்னியர்களின் வாழ்வில் கடந்த காலங்களில் என்னவெல்லாம் நடந்து இன்றைக்கு நமது சமூகம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் என்ன? நமது சமூக முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்தது யார்? என அனைத்தும் முடிந்தவை மட்டும் இதில் பதிவு செய்திருக்கிறேன்.
இந்த அரசு வன்னியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் வென்றெடுக்கும் அரசு. இந்தியாவிலேயே சாதனைகள் படைக்கும் தலைசிறந்த தமிழக முதல்வர். எங்கள் சமுதாயக் கோரிக்கைகளைச் செய்து கொடுக்கும் முன்னோடி முதல்வராக விளங்குகிறார்.
இந்த வரலாற்று ஆவண முயற்சிக்கு எனக்குத் துணை நின்ற ஒவ்வொருவருக்கும் மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இந்த அறிய முயற்சிகளைக் கடும் சிரமத்திற்குப் பிறகும் முன்னெடுத்து வந்துள்ளேன். சமுதாய மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்கள் ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தைப் படித்து பயனுர வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தோளோடு தோள் நிற்கும் என் துணைவியார்
இத்தனை ஆண்டுகால என்னுடைய சமுதாயப் பணிகளில் தொடர்ந்து உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்து வரும் எனது மனைவி மருத்துவர் திருமதி. சுவேலா உடன்
நன்றியுடன்,
சி.என்.இராமமூர்த்தி, M.Com., B.L.,
நிறுவனத் தலைவர்,
வன்னியர் கூட்டமைப்பு மற்றும்
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி.
வன்னியர் உரிமை போராட்ட உண்மை வரலாறு
உயிராயுதம் ஏந்தி இடஒதுக்கீடு கேட்டுப் போராடிய
சமூக நீதிப் போராளிகளுக்கு உயர்ந்த
மரியாதையை உருவாக்கித் தந்துள்ள
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
அவர்களுக்கு எங்கள் வணக்கமும் நன்றிகளும்!
தமிழகத்தின் தன்னிகரில்லாத முதல்வராக மக்களால் போற்றப்படும் நமது மக்கள் முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் இரண்டாம் நாள் தமிழக சட்டசபையில் (02.09.2021) அன்று இரு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து இருக்கிறார்.
- முதல் அறிவிப்பு : 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த சமூக நீதி போராளிகள் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்து இருக்கிறார்.
- இரண்டாம் அறிவிப்பு : சமூக நீதிப் போராளிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை கொடுக்கப்படும் என்றும் அறிவித்து, சொன்னதைச் செய்பவர்; செய்வதைச் சொல்பவர் முதல்வர் ஸ்டாலின் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
இவை இரண்டும் வன்னியர் கூட்டமைப்பின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் கனவுகள் ஆகும். வன்னியச் சமுதாய மக்களின் வயிற்றில் பால் வார்த்தது மட்டுமல்ல; 25 சமூக நீதிப் போராளிகளின் குடும்பத்தில் விளக்கேற்றியும் வைத்து இருக்கிறார் நம் தமிழக முதல்வர். அவருக்கு நமது சார்பிலும், வன்னியர் சமுதாய மக்கள் சார்பிலும் கோடான கோடி நன்றியைச் சமர்ப்பணம் செய்கிறோம்.
சமூக நீதிக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்தப் போராளித் தியாகிகளுக்கு மட்டுமல்ல அவர்களைத் தியாகம் செய்த அவர்களின் குடும்பங்களுக்கும் இது மிகப் பெரிய மரியாதையையும், கௌரவத்தையும் சேர்த்து தந்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த நாற்பது ஆண்டுகளில் நம் வன்னியச் சமுதாயத்திற்கு செய்த அனைத்து திட்டங்களையும், அதனால் பெற்ற நன்மைகளையும், உதவிகளையும் சமூகப் பெருமைக்காக ஆற்றிய அரும்பெரும் கொடைகளையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான இந்தப் பிணைப்பு காலம் கடந்து நீடிக்கும் என்பதில் எமக்கு எள்ளவும் சந்தேகமில்லை.
வன்னியர் நலனுக்கான
சமூக நீதியும்… திமுகவும்…
வன்னிய குல சொந்தங்களே!
’நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவர் வாக்கை அடிபிறழாமல் பின்பற்றும் சமூகம் நம்முடையது. நம்முடைய சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பை கிள்ளிப்போட்டிருந்தாலும் அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் நன்றியோடு இருக்கிறவர்கள்தான் நாம். இதை எதற்காக இப்போது குறிப்பிடுகிறேன் என யோசிக்கிறீர்களா… விஷயம் இருக்கிறது…
நாடாண்ட இந்தச் சமூகம் வீரம் செறிந்த வேங்கையாக மிடுக்குடன் வலம் வந்த நிலை போய் எல்லாவற்றிற்கும் அடுத்தவர் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட போது நம்மை கை தூக்கி விட்டவர்களை நாம் அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா…
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 3,00,00,000/- (மூன்று கோடி) மக்களைக் கொண்ட மிகப்பெரிய சமூகமாக வன்னியச் சமுதாய மக்கள் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான்.
உருவானது செப்டம்பர் புரட்சி!
ஆனால்… இத்தனை மக்கள் நம் இனத்தில் இருந்தாலும் நம் மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்வாதாரத்திற்காக அடுத்தவரிடத்தில் கையேந்தவேண்டியிருக்கிறதே என யோசித்து 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென்காசியில் வன்னியர் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடத்தி நமது சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டைப் பெற சாலை மறியல் செய்வது என்றும், போராட்டத்தின் மூலம் நமது உரிமைகளை மீட்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 17 முதல் 23 வரை நம் முன்னேற்றத்திற்காகச் சமூகநீதி வேண்டி ஒரு வேள்வியாக பிரமாண்டமான ஒருவார கால சாலைமறியல் போராட்டத்தை நடத்தினோம்.
அந்தப் போராட்டத்தைப் போல அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் தமிழகம் மட்டுமல்ல இந்திய தேசமே கண்டதில்லை என்கிற அளவிற்கு நடத்தப்பட்ட போராட்டக்களத்தால் வடமாவட்டங்கள் முழுவதும் ஸ்தம்பித்தன…
சாலை மார்க்கமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது…
நாடே உற்றுப்பார்த்த அந்தப் போராட்டத்தில் பல லட்சக்கணக்கான நம் வன்னிய சொந்தங்கள் கலந்து கொண்டனர்…
இந்த இன எழுச்சியைக் கண்டு அதிர்ந்து போன அப்போதைய அரசு செய்வதறியாது திணறியது. காரணம், அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். இதையடுத்து, தமிழக காவல்துறை வரவழைக்கப்பட்டு உரிமைக்காகப் போராடிவந்த நமது சொந்தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
உயிராயுதம் ஏந்திய போராளிகள்!
மறக்கமுடியுமா அந்த 1987ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி… அன்றுதான் நம் சொந்தங்கள் காக்காய் குருவியைச் சுட்டுத் தள்ளுவதுபோல தமிழகக் காவல்துறையினரால் துப்பாக்கிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்திலேயும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இல்லாமலும் என மொத்தம் இந்தப் போராட்டத்தின் விளைவாக 25 விலைமதிக்க முடியாத இன்னுயிர்களை நமது சமூகம் இந்தச் சமூக நீதிக்கான விலையாக கொடுத்திருக்கிறது.
இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்து முடிந்து பல லட்சம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
பந்தாடப்பட்ட வன்னியர் கோரிக்கை!
அந்தச் சூழலில் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழ்நாடு திரும்பினார்.
அதன் பிறகு 25.11.1987 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் 94 சாதி அமைப்புகளையும் அழைத்து பேச்சு நடத்தினார். அந்தக் கூட்டத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நானும் கலந்து கொண்டேன்.
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக தருவதற்கு முதல்வர் எம்.ஜி.ஆர் ஒப்புக் கொண்டு அதற்கான அறிவிப்பை வெளியிடுவதாகச் சொன்னார்.
ஆனால், அடுத்த சில மாதத்திற்குள்ளாக உடல்நலக்குறைவால் எம்.ஜி.ஆர் திடீரென மரணம் அடைந்தார்.
இதையடுத்து, அவரது மனைவி ஜானகி அம்மையார் முதல்வராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதுமே ‘எம்.ஜி.ஆர் அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாரோ அதை எல்லாம் கண்டிப்பாகச் செய்வேன்’ என உறுதி அளித்தார்.
அப்போது நடைபெற்ற அரசியல் குழப்பத்தால் தமிழகத்தில்? கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. அலெக்சாண்டர் கவர்னராகப் பொறுப்பேற்றார்.
அவரிடமும் இதே கோரிக்கையை நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். நமது கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக கவர்னரும் பதில் தர தொடர்ந்து நாம் காத்திருந்தோம்.
தேர்தல் புறக்கணிப்பும் கலைஞரின் உறுதிமொழியும்!
அந்த நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வந்தது. நமது சமூகத்திற்கான முறையான இட ஒதுக்கீடு கிடைக்காததால் தேர்தலைப் புறக்கணிக்க நாம் முடிவு செய்திருந்தோம். அதன்படி 1988ல் பூம்புகாரில் பிரமாண்டமான மகளிர் மாநாடு நடத்தி தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தோம். அதே ஆண்டில் மாமல்லபுரத்தில் இளைஞர் மாநாடு நடத்தி அங்கேயும் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தோம்.
தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட பெரும்பான்மையான சமூகம் திடீரென தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்ததால் அரசியல் கட்சியினர் பதறிப்போனார்கள்.
அந்தச் சூழலில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ‘தேர்தல் முடிந்து திமுக அரசு வெற்றி பெற்றதும் வன்னியச் சமூகத்தினரின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உரிய சமூக நீதியைப் பின்பற்றி இட ஒதுக்கீடும் வழங்கப்படும்’ என அறிவித்து தேர்தல் புறக்கணிப்பை கைவிட கேட்டுக் கொண்டார்.
ஒரு வழியாகத் தேர்தலும் நடந்து முடிந்தது. அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதன் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராகப் பதவி ஏற்றார். ஏற்கனவெ அவர் தேர்தல் அறிக்கையில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதற்கேற்ப, அவர் முதல்வராகப் பதவி ஏற்ற 43வது நாள் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் நானும் இன்னும் பிற நிர்வாகிகளும் கலந்து கொண்டோம்.
முதல்வர் கலைஞரும் பொதுச் செயலாளராகிய
நானும் கையெழுத்திட்டோம்!
தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் என்ன வாக்குறுதியை அளித்திருந்தாரோ அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 50 சதவீதமாக இருந்த பிசி (BC) பிரிவிலிருந்து பிரித்து புதிதாக எம்பிசி (MBC) என ஒரு பிரிவை உருவாக்கி அதற்கு 20 சதவீதத்தை ஒதுக்கி 108 சாதிகளுக்கும் சேர்த்து 20 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து வன்னியர் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகப் பிள்ளையார் சுழியைப் போட்டவர் முதல்வர் கலைஞர் கருணாநிதி என்பதை நமது வன்னியச் சமூகம் எக்காலத்திலும் மறந்து விடக்கூடாது.
அந்த ஒப்பந்தத்தில் அன்றைக்கு வன்னியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் நானும், முதல்வர் கலைஞர் அவர்களும் கையெழுத்திட்டோம்.
அந்த இட ஒதுக்கீட்டை வழங்கும்போது ‘நான் ஒரு கனி தருகிறேன். அதை சுவைத்து பாருங்கள்; புளித்தால் மாற்றித் தருகிறேன்’ என அவருக்கே உரிய பாணியில் 108 சாதிகளுக்கும் சேர்த்து 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியபோது முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உருவானது வன்னியருக்கான இடஒதுக்கீடு!
எதற்காக இப்படிக் கூறினார் என்றால் மக்கள் தொகையில் நமது வன்னிய சமூகம் மிகப் பெரும்பான்மையாக இருக்கிறது அப்படியிருக்கும்போது பல சாதிகளோடு இணைத்து ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தால் யாருக்கு எத்தனை இடங்கள் என்பதில் மீண்டும் குழப்பம் வராதா என்ற கேள்வியை யாரும் எழுப்பிவிடக் கூடாது என்பதற்காக இப்படி சொல்லிவிட்டாரோ என்றுகூட சிலர் கூறினார்கள். தமிழ்நாட்டில் விகிதாச்சார இட ஒதுக்கீடு வழங்கும் வரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கான 20% விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு வன்னிய குல சத்திரிய சாதியினருக்கு 15% விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்து சட்ட நடைமுறைகள் செய்து அரசாணை வெளியிட கோருதல் சம்மந்தமாக வன்னியர் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்ட விதிப்படி – விதி 16 (4) வேலையில், 15 (4) கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க அரசு செய்கிற எத்தகைய ஏற்பாட்டையும் இந்த விதியில் உள்ள எப்பகுதியும் தடுக்காது.
கலைஞர் கருணாநிதி 20 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை நமது சமூகத்தைச் சேர்ந்த பலர் வரவேற்றாலும் சிலர் எதிர்க்கத்தான் செய்தார்கள். காரணம், எல்லா சமூகத்திலும் சுயநலவாதிகள் இருக்கத்தானே செய்வார்கள்.
தமிழகத்தில் தற்போது 69 விழுக்காடு நடைமுறையில் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் கூறு 31-B-இன் கீழ் பாதுகாப்புப் பெறும் பொருட்டு (தமிழ்நாடு சட்டம் 45/1994) அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
விவரம் வருமாறு:
| வ. எண். | பிரிவு | இட ஒதுக்கீடு விழுக்காடு |
| 1. | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | 26.5 |
| 2. | பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லீம்கள் | 3.5 |
| 3. | மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு / சீர்மரபினர்
(* Part I – வன்னியகுல சத்திரியர் – 10.5% * Part II – மிபிவ மற்றும் சீர்மரபினர் – 7.0% * Part III – மிபிவ – 2.5% ) |
20 |
| 4. | ஆதிதிராவிடர் | 18 |
| 5. | பழங்குடியினர் | 1 |
| மொத்தம் | 69 |
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அப்படி நமது சமூகத்தின் சாபக்கேடாக வந்து சேர்ந்திருக்கும் சிலர் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இந்தச் சிக்கல் இருந்தபோதும் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியை மீண்டும் நான் சந்தித்து சமுதாயத்தின் ஆதரவை தொடர்ந்து அளித்து வந்தேன்.
விதி 16(4) : வேலையில்
அரசுப்பணிகளில் எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று அர்சு கருதுகிறதோ – அவர்களுக்கு, அரசுப் பணிகளிலும் பதவிகளிலும் இடஒதுக்கீடு செய்வதற்கு அரசு செய்கிற எத்தகைய ஏற்பாட்டையும் இந்த விதியிலுள்ள எப்பகுதியும் தடுக்காது.
விதி 15 (4) : கல்வியில்
”சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பு குடிமக்களுக்கும், பட்டியல் குலத்தினர்க்கும், பழங்குடியினர்க்கும் இவ்வகுப்புகளின் முன்னேற்றங்கருதி அரசு எந்தச் சிறப்பு ஏற்பாடு செய்வதையும் இந்த விதியிலுள்ள எந்தப் பகுதியும் அல்லது விதி 29(2) இல் உள்ள எதுவும் தடுக்காது.”
கல்வியில் வகுப்புவாரி உரிமை செல்லும்படியாகிற தன்மையில் சட்டத்தைத் திருத்தும்படி, பெரியார் ஈ.வெ.ரா. 1950-இல் கோரினார். அரசமைப்பு அவையில் 29-5-1951-இல் சட்டத் திருத்தம் முன்மொழியப்பட்டு, 2-6-1951-இல் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட கருணை நிதி!
எப்போதும் சிரித்த முகத்தோடு வரவேற்கும் கலைஞர் கருணாநிதி அப்போதும் அதே சிரிப்போடு வரவேற்று ஒரு அழுத்தமான பார்வையை நம் பக்கமாக வைத்தார். அந்த பார்வையின் அர்த்தம் ‘கேட்டதை இப்போதுதானே கொடுத்தேன் மீண்டும் என்ன கேட்டு வந்திருக்கிறீர்கள்’ என்பதைப் போல இருந்தது…
அதை உள்வாங்கிய நானும் ‘உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமல்ல அந்தப் போராட்டத்தில் 25 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். அவர்கள் குடும்பம் எல்லாம் நிர்கதியாக இருக்கிறது. அவர்கள் அனைவருமே சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடி உயிர் நீத்தார்கள்.
எனவே அவர்களுக்கு உரிய இழப்பீடும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு மாதந்தோறும் ஆதரவுத் தொகையும் வழங்க வேண்டும் என்றும், பலியானவர்கள் அனைவரும் சமூகநீதி போராளிகள் என்று அரசால் கவுரவிக்கப்படவும் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன்.
பொறுமையாக நான் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு விரைவில் அழைக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார். எப்படியும் ஒரு சில வாரங்களாவது ஆகும் என நினைத்துக் கொண்டு திரும்பி விட்டேன்.
ஆனால், ஆச்சர்யம் சில தினங்களில் எனக்கு அழைப்பு வர, மீண்டும் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் சந்திப்பு நடந்தது.
அப்போது, நாம் வைத்த பிரதான கோரிக்கையான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 25 குடும்பத்தினருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டு கருணைத் தொகையாகவும், மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித் தொகையாகவும் கிடைக்க உடனடியாக உத்தரவு போட்டவர் அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிதான் என்பதை இந்த நன்றியுள்ள சமூகம் எப்போதும் மறக்காது.
கொடுத்தது கலைஞர்தானே!
அன்றைக்கு அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி வழங்கிய மாத உதவித் தொகை 1500/- ரூபாய் இன்றைக்கு ரூபாய் 3000/- உயர்ந்து அந்த 25 குடும்பங்களின் மாதாந்திர தேவைக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது என்பதையும் வன்னியச் சமூகம் என்றைக்கும் மறக்காது.
அதோடு, உதவித் தொகையை விட மிக உயரிய கவுரவமாகப் போராட்டத்தில் பலியான 25 பேர்களும் சமூக நீதி போர்வீரர்கள் என தமிழக அரசு கவுரவப்படுத்தி சான்றிதழும் அளித்தது. இதற்கும் உத்தரவிட்டு கையெழுத்து போட்டது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி என்பதை இந்தச் சமூகம் என்றைக்கும் மறக்காது.
ஒரு நாள் சாலை மறியல், ஒரு வார கால சாலை மறியல் என பலமுனைகளில் போராடி உயிர்த்தியாகம் செய்து இட ஒதுக்கீடு பெற்றாகிவிட்டது. உயிர்த்தியாகம் செய்த குடும்பத்தினருக்கும் தலா ரூபாய். 3,00,000/- (மூன்று இலட்சம்) ரொக்கமும், மாதந்தோறும் ரூபாய் 3000/- நிதி உதவியும் பெற்றுக் கொடுத்தாகி விட்டது.
இவர்களுடைய குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தாயுள்ளத்தோடு கருணை கூர்ந்து ரூபாய்.10,000/- உயர்த்தி தர ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம்.
வன்னியர்கள் மீதான வழக்கும், குண்டாசும்!
ஆனால் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பல லட்சக்கணக்கான நமது சமூகத்து மக்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். அதில் குறிப்பாக அந்தப் போராட்டத்தில் மிக முக்கியமாக இருந்த நானும் இன்னும் பிற நிர்வாகிகளும் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம்.
நான் வழக்கறிஞர் என்பதால் என் மீதான வழக்கில் நானே வாதாடி என் மீது போடப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வைத்து விடுதலையாகி வெளியே வந்திருந்தேன். ஆனால், முக்கியமான 5 பேர்கள் குண்டாசில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் பு.தா.அருள்மொழி மதுரை சிறையிலும், பு.தா.இளங்கோவன் கோவை சிறையிலும், வாழைச் செல்வன் திருச்சி சிறையிலும், ஆரணி ராசேந்திரன் வேலூர் சிறையிலும், தாராசிங் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
இவர்களை வன்னியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், வழக்கறிஞராகவும் அடிக்கடி நான் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளுக்கே போய் சந்தித்து பேசி வந்தேன்.
இன்றைக்கு வன்னியர்களுக்கான ஆபத்பாந்தவனாகக் காட்டிக் கொள்ளும் யாரும் அந்தச் சூழலில் எங்கேயிருந்தார்கள் என்பதை உண்மையான வன்னியர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த முறை அவரைச் சந்தித்ததும் அவர் கேட்பதற்கு முன்பே ‘தலைவரே அந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் குண்டாசில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குண்டாசில் அடைக்கும் அளவிற்கு அவர்கள் எந்த கொடுஞ்செயலும் செய்யவில்லை.
அதோடு, பல லட்சக்கணக்கான வன்னிய மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதால் அவர்களால் வேலைக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு வேலையும் கிடைக்காது. அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும், குண்டாசில் உள்ள 5 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று படபடவென கூறினேன்.
எல்லாவற்றையும் தனக்கே உரிய சிரிப்புடன் கேட்டுக் கொண்ட கலைஞர்… நான் பேசி முடித்ததும்… ‘சி.என்.ஆர்… இது அரசியல் வழக்கு இல்லையே கிரிமினல் வழக்கு இதில் எப்படி நான் தலையிட முடியும்’ என திருப்பி கேட்டார்.
கலைஞர் நினைத்து முடியாததா?
`
அதற்காகவே காத்திருந்ததுபோல நானும் ‘தலைவரே இது முழுக்க முழுக்க அரசியல் வழக்குதான்… சமூக நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத்தான் குண்டாசில் அடைத்திருக்கிறார்கள்.
இதற்கு நானே உதாரணம். என்னையும் இதேபோன்றுதான் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தார்கள். என் வழக்கில் நானே வாதாடி விடுதலையாகியிருக்கிறேன் என கூறி சட்டப்பிரிவில் உள்ள சில விவரங்களையும் கூறி அதன் அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய முடியும் என கோரிக்கை வைத்தேன்.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு உள்ள ஒரு மிக நுட்பமான பழக்கம்… எந்த ஒரு விஷயத்திலும் அத்தனை சீக்கிரம் முடிவு எடுக்க மாட்டார். அதேபோல எந்த விஷயத்தையும் அத்தனை சீக்கிரம் மறக்க மாட்டார்.
ஒரு வேளை அவர் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதை மாற்றிக் கொள்ளவே மாட்டார். இதை பலமுறை அவரை நான் சந்தித்தபோது தெரிந்து கொண்ட உண்மை.
அதோடு, மட்டுமல்லாமல் எந்தக் கோரிக்கையை வைக்கிறோம்; அந்தக் கோரிக்கையின் தன்மை என்ன; அதனால் யாருக்கு என்ன நன்மை என்பதைச் சரியாக கலைஞர் அவர்களுக்குப் புரிய வைத்து விட்டால் நமது கோரிக்கை நிறைவேறிவிட்டது என்று நம்பிக்கையோடு திரும்பலாம்.
நாம் வீடு திரும்புவதற்குள் நல்ல தகவல் பின்னாலேயே வரும். அந்தளவுக்கு எந்த விஷயமானாலும் மிகவும் கூர்மையுள்ளவராகவும், உடனடி செயல்பாட்டாளராகவும் முதல்வர் கலைஞர் அவர்கள் திகழ்ந்தார்கள்.
ஜனவரி 5, 1990ல் முரசொலியில் வந்த முதல் பக்க செய்தி
வன்னியர் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி!
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலிருந்தவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்ட முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வன்னியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
வன்னியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சி.என். இராமமூர்த்தி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
தமிழகத்தின் பெருத்த சமுதாயமான வன்னியச் சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பு இவற்றில் தங்களுக்கு என்று ஒரு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மூன்று போராட்டங்களை அரசுக்கெதிராக நடத்தியது. அதன் விளைவாகப் பலர் சிறையில் தள்ளப்பட்டனர். ஆயிரக்கணக்கான வன்னியர் மீது வழக்குகள் போடப்பட்டன. வறுமைக் கோட்டிற்கும் கீழ் நிலையில் வாழும் வன்னியர் வழக்குகளைச் சுமந்துக் கொண்டு வீட்டிற்கும் கோர்ட்டிற்கும் அலைந்த வண்ணமாக உள்ள அவல நிலைமையினை ஆட்சி பொறுப்பினை ஏற்றுள்ள கலைஞர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர்களைக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாக்கினார்கள். உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள் உதவியற்று நிர்மூலமாக்கப்பட்ட நிலைமையினையும் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டுள்ள வன்னிய நிர்வாகிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தேன். எங்களின் வேண்டுகோளை மனிதாபிமான அடிப்படையில் ஆராய்ந்து மனிதநேயப் பண்பாளராக நடந்து கொண்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வன்னியர் மீது போடப்பட்ட வழக்குகளை விலக்கிக் கொண்டுள்ளார்கள். குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள வன்னியர் செயல் வீரர்களையும் விடுதலை செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
இச்செயல்கள் மூலம் கலைஞர் ஒரு உண்மையான மனிதநேயப் பற்றாளர் என்பதைத் தமிழுலகுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
குறிப்பாக தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள எங்களினச் செம்மல்கள் ஐவரையும் தமிழர் திருநாளுக்கு முன்பே வெளியில் விட ஆணை பிறப்பித்துள்ள தமிழக முதல்வருக்கு வன்னியச் சமுதாய மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் பாராட்டுதலையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வழக்குகளிலிருந்து விடுதலைக்கு உத்தரவிட்ட கலைஞர்!
இத்தனை விவரங்களைக் கேட்டபிறகு அந்தக் கோரிக்கையைக் கலைஞர் நிறைவேற்றாமல் இருப்பாரா என்ன? நாம் வைத்த கோரிக்கையின்படியே குண்டாசில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரையும் விடுதலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் வழக்குகளை சந்தித்த சுமார் 2 லட்சம் வன்னிய மக்கள் மீதான
வழக்குகளையும் தள்ளுபடி செய்தவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிதான்.
இங்கே ஒன்றை மிகவும் முக்கியமான ஒன்றை குறிப்பிட வேண்டும்… குண்டாசில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரையும் விடுதலை செய்வதற்கு முன்பு எதற்கும் இருக்கட்டும் என அவர்களுக்கு முன்ஜாமீன் வாங்கி வைத்துக் கொள்ளச் சொன்னார் கலைஞர்…
எதற்காகத் தெரியுமா… ஒரு வழக்கில் விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்ததும் வேறு வழக்கில் கைது செய்யாமல் இருக்கத்தான்… காரணம், போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை சரி செய்தது தமிழக காவல்துறைதான்…
அதனால், மீண்டும் ஏதாவது வழக்கில் இவர்களைச் சிக்க வைத்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக நமக்கு ஆலோசனை வழங்கியவர் கலைஞர் என்பதை நம்மால் மறக்க இயலாது.
மும்மூர்த்திகள் என்றழைத்த கலைஞர்!
ஒவ்வொரு முறை நானும், வன்னிய அடிகளாரும், வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களும் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து பேசும் போதெல்லாம் நம் சமூகத்தின் நலன் குறித்த கோரிக்கை ஏதாவது ஒன்றாகிலும் அந்தப் பேச்சில் இடம் பிடிக்கும். அதை மறுக்காமல் நிறைவேற்றியும் கொடுப்பார் கலைஞர் என்பதையும் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு பல மாதங்களுக்கு பின் மீண்டும் ஒரு நாள் நானும், வன்னிய அடிகளாரும், வாழப்பாடி இராமமூர்த்தியும் முதல்வர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்தோம். மும்மூர்த்திகளும் ஒன்றாய் வந்தால் கோரிக்கை இருக்குமே! என்ன விஷயம் என்றார்.
சி.என். இராமமூர்த்தியாகிய நானும், யு.எஸ். இராமமூர்த்தியாகிய வன்னிய அடிகளாரும், கூ.இராமமூர்த்தியாகிய வாழப்பாடியாரையும் சேர்த்து மும்மூர்த்திகள் என்று அழைப்பது கலைஞரின் வழக்கம்.
அந்தச் சந்திப்பின் போதும் ஒரு கோரிக்கையோடுதான் போனோம்… நமது சமுதாயத்தை அடையாளப்படுத்திய இலட்சியவாதி நமது சமுதாயப் பெருந்தலைவர் இராமசாமி படையாச்சியாருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் அது!
இந்தக் கோரிக்கையைக் கேட்டதுமே… எங்கள் பக்கமாக திரும்பி ‘ரிப்பன் பில்டிங் போங்க; நான் தம்பிகிட்ட சொல்லிடுறேன். எல்லாம் நடக்கும் என அனுப்பி வைத்தார்.
மேயர் மு.க. ஸ்டாலினுடன் முதல் சந்திப்பு!
அப்போது சென்னையின் மேயராக இருந்தவர் இப்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். நாங்கள் கோட்டையில் இருந்து ரிப்பன் மாளிகை செல்வதற்குள் எங்கள் கோரிக்கை குறித்த விவரங்கள் சென்னையின் மேயராக இருந்த இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.
மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்து வைத்த கோரிக்கை குறித்து பேசியதும் ‘ஆமாம்… முதல்வர் சொல்லியிருக்கிறார். சென்னையில் 3 இடங்களைத் தேர்வு செய்து கொடுங்கள். மூன்றில் எங்கே சரியாக இருக்குமோ அங்கே உடனடியாக சிலை வைக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என அதனை கனிவாகப் பேசி அனுப்பினார் அப்போதைய மேயரும் இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
சொன்னதைச் செய்தார்!
அவர் சொன்னபடியே உடனடியாக கிண்டி ஹால்டா கம்பெனி சந்திப்பில் நமது சமுதாயத் தலைவர் இராமசாமி படையாச்சி அவர்களின் சிலை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு சில மாதங்களிலேயே (21-02.2001) நிறுவப்பட்டது.
அத்தனை சீக்கிரத்தில் தனக்குக் கொடுத்த பணியைச் சிறப்பாக செய்து கொடுத்தவர் அப்போதைய மேயரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்பதையும் இந்தச் சமூகம் என்றைக்கும் மறக்காது.
இப்படி வன்னியச் சமுதாய மக்களின் எந்தக் கோரிக்கையையும் கனிவுடன் கேட்பதோடு, அதை சிறப்பாகச் செய்து கொடுத்த, கொடுக்கப் போகும் திமுக-வுக்கு வன்னிய மக்கள் எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.
வன்னியச் சமுதாயத்திற்கு தி.மு.க. செய்த பட்டியல்!
நான் மீண்டும் பதிவு செய்கிறேன்… சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 25 குடும்பங்களுக்கும் தலா ரூபாய். 3,00,000/- கருணைத்தொகையும், மாதந்தோறும் தலா ரூபாய். 1500/- உதவித் தொகையும் வழங்கியது திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதியால்தான்.
குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்ட 5 நிர்வாகிகளையும் விடுதலை செய்ததும் கலைஞர் கருணாநிதிதான்.
அதேபோல, போராட்ட வழக்குகளில் சிக்கிய சுமார் 2 லட்சம் வன்னிய மக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து தள்ளுபடி செய்து அவர்களை விடுவித்ததும் திமுக ஆட்சியில்தான். அதனால்தான் இன்றளவில் அவர்களில் பலர் அரசு வேலைகளிலும், நல்ல நிலையிலும் இருக்கிறார்கள்.
ஒருவேளை அந்த வழக்குகளில் விடுவிக்கப்படாமல் சிக்கியிருந்தால் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியிருக்கும். அதை மாற்றி நமது சமுதாய மக்களுக்கு நன்மை செய்தவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிதான்.
இது மட்டுமா, நமது போற்றுதலுக்குரிய தலைவர் இராமசாமி படையாச்சிக்கு சிலை வைத்து மரியாதை செய்ததும் திமுகதான். அப்போதைய மேயரும், இப்போதைய முதல்வருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் அந்த சிலை அங்கே பெருமிதமாக நிற்பதற்குக் காரணம்.
எண்ணற்ற நன்மைகளை வன்னிய மக்களுக்கு திமுக செய்திருந்தாலும் சில ‘தனிப்பிறவி’களால் திமுக விமர்சனத்திற்குள்ளாகியே வருகிறது.
வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்!
நமது மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பல லட்சக்கணக்கான கோடி மதிப்புடைய இடங்களும், சொத்துக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கிறது. அதை யார் யாரோ ஆண்டு அனுபவித்து வருகிறார்கள்.
அதை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ‘வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்’ அமைக்க வேண்டும், அதன் மூலமாக நமது சமுதாய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மேம்படும் என்பதற்காக திமுக தலைவரும் முதல்வருமான கலைஞர் கருணாநிதியிடம் மீண்டும் ஒரு கோரிக்கை வைத்தோம்.
நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து கொண்ட கலைஞர் கருணாநிதி அவர்கள் 2001ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த விவகாரத்தைச் சரி செய்து அதற்கான வழிகாட்டு விதிகளைச் செய்ய திரு. தா.சந்திரசேகர் இ.ஆ.ப. அவர்களை நியமித்து, அரசு ஆணை பிறப்பித்தார். அவரும் பணியைத் தொடங்கிய சிறிது நாளில் தேர்தல் வந்தது.
தேர்தலில் திமுக ஆட்சி சென்று அதிமுக அரியணை ஏறியது. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட சந்திரசேகர் ஐஏஎஸ் அதிகாரி வேறு பணிக்கு மாற்றப்படுகிறார். இதனால், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
மீண்டும் கலைஞர்!
வருடங்கள் உருண்டோடின… 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் நமது வேண்டுகோளை ஏற்று முதல்வர் கலைஞர் கருணாநிதி உத்தரவின் பேரில் திரு. கோ.சந்தானம் இ.ஆ.ப. அவர்களது தலைமையில் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் குறித்த விவரங்களை ஆராய 2009-ல் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணை (நிலை) எண் 20, நாள் 02.03.2009.
அறிவாயுதம் ஏந்தினோம்!
இதற்கிடையில் 2010ல் ‘வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்’ அமைக்க வேண்டும் என நான் அறிவாயுதம் ஏந்தி வழக்குத் தொடுத்தேன்.
பல ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய பின்னர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி 44வது / 2018 சட்டமாக உத்தரவிடப்பட்டு ‘வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்’ அமைக்கப்பட்டது.
இதற்கு அரசு ரீதியில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து விவரங்களை ஆராய பிள்ளையார் சுழி போட்டது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிதான் என்பதை இந்தச் சூழலில் நினைவுகூர்வது மிகப் பொருத்தமான ஒன்று.
அப்படி நமது வன்னியச் சமூக மக்களின் மீது அளவுகடந்த கனிவுடன், கேட்ட அனைத்து காரியங்களையும் செய்து கொடுத்தவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி.
அவரைப்போலவே, இப்போதைய திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் நமது சமூகத்தின் மக்கள் மீது அளப்பரிய அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி கொடுத்த 20% சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக குறைந்தது 15% சதவீதத்தை வன்னிய சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடுத்து பல கட்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக உரிய இட ஒதுக்கீடு வழங்கலாம் என நீதிமன்றமும் உத்தரவிட்டது.
தலைவர் தளபதி அளித்த உறுதிமொழி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘அடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் வன்னியர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதற்கான அனைத்து பணிகளும் சரியான முறையில் செயல்பாட்டுக்கு வரும்’ என அறிவித்தார்.
ஆனால், கோர்ட் உத்தரவுபடி நமக்கு முறையாக கிடைக்க வேண்டிய 15% சதவீத உள் இட ஒதுக்கீட்டை பெறாமல் தேர்தல் ஆதாயத்திற்காக சில சுயநலவாதிகளின் சித்து விளையாட்டால் 10.5% சதவீதம் என அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல் ஒரு உள் ஒதுக்கீடு அரசாணையைப் பிறப்பித்தார்கள், அதை சட்டமும் ஆக்கினார்கள்.
தேர்தல் ஆதாயத்திற்காகத்தான் இந்த அவசர கோல அள்ளித்தெளிப்பு என்பதைப் புரிந்து கொண்ட நமது சமூகத்து மக்கள் இந்தத் தேர்தலில் மிக தெளிவாகத் தீர்ப்பளித்தார்கள். நமது சமூகத்து மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி பின்னால் இருந்து குளிர்காயும் நபர்களை அடையாளப்படுத்தி விரட்டியதோடு, ஆதாயம் தேட நினைத்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
வன்னியர்கள் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
அன்பான சொந்தங்களே!
1987-ம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்காகத் தமிழகமெங்கும் வன்னியர் வசிக்குமிடமெல்லாம் நேரில் சென்று அழைப்பு விடுத்து, போராட்டத்திற்கு தலைமை வகித்து வழி நடத்திய பெருமையும், 1989-ல் திமுக ஆட்சியில் முதல்வர் கலைஞர் அவர்களுடன் வன்னியர் சங்க
பொதுச் செயலாளர் என்ற முறையில் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் கையெழுத்திட்ட பாக்கியத்தையும் பெற்றேன். வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக வன்னியர்களுக்குத் தனி உள் இட ஒதுக்கீடு, வன்னியர் பொதுச்சொத்து வாரியம், வன்னியர் நல வாரியம் ஆகிய முத்தான மூன்று கோரிக்கைகளுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்டப் போராட்டம் நடத்தி, வழக்கில் வெற்றி பெற்று உரிய ஆணையைப் பெற அறிவாயுதம் ஏந்தி போராடியவன் என்ற முறையிலும் உங்களோடு உறவாட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.
ராமதாசும், அவரது குடும்பமும் ஒட்டுமொத்த வன்னியச் சமுதாயத்திற்கும், ஏக போக பிரதிநிதி என்று இன்னமும் உரிமையோடு சொல்லிக் கொள்ளைக்காரர்களாக வலம் வருகிறார்களே! மக்களை அடிமைகளாக நினைக்கும் ராமதாஸ் கும்பலிடம் இருந்து இந்தச் சமுதாய மானத்தையும், இருக்கும் சொத்துக்களையும் மீட்க வேண்டிய பொன்னான வாய்ப்பு இப்போது கிடைத்து இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குமுன் நான் ஏன் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு நடந்தவற்றை – நானே சாட்சியாக இருப்பதால் – உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
25 வன்னியர் வீரத்தியாகிகளைச் சாலை மறியல் போராட்டத்தில் பலி கொடுத்தோமே, அந்தத் தியாகிகளின் குடும்பத்தினருக்குக் கருணைத் தொகையாக ரூபாய் மூன்று இலட்சமும், மாதந்தோறும் பென்சனாக ரூ.1,500-ம் கொடுத்தது தலைவர் கலைஞர் அவர்கள்.
1989-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த 43-ம் நாள் வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற வன்னிய சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருபது சதவீத இடஒதுக்கீட்டை உருவாக்கித்தந்து கோரிக்கையை நிறைவேற்றித் தந்தவர் தலைவர் கலைஞர் அல்லவா?
வன்னியச் சமுதாயத்தினரின் கோரிக்கைகளுக்காகபோராடிய பு.த. இளங்கோவன், பு.த.அருள்மொழி, ஆரணி தாராசிங், நெய்வேலி வாழைச்செல்வன் ஆகிய ஐந்து பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது, அவர்களை விடுதலை செய்யக்கோரி எனது தலைமையில் வேலூரில் இருந்து நடைபயணமாக வந்து முதல்வர் கலைஞர் அவர்களை சந்தித்து ஐந்து சமூக நீதிப் போராளிகளின் நிலையையும், போராட்டத்தையும் கேட்டு உடனே விடுதலை செய்தவர் தலைவர் டாக்டர் கலைஞர் அல்லவா.?
சமுதாயப் பெருந்தலைவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களுக்குச் சென்னையில் முழு உருவச் சிலை வைக்க வேண்டுமென்று வன்னிய அடிகளார், வாழப்பாடியார், சி.என்.இராமமூர்த்தி ஆகிய நானும் முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்து கோரிக்கை வைத்தபோது, அன்றைக்கு சென்னை மாநகர மேயராக இருந்த தளபதி அவர்களை உடனே ஆவன செய்யுமாறு அறிவுறுத்த, புயல் வேகத்தில் செயல்பட்டு சிலை அமைத்து படையாட்சியாருக்கு பெருமை சேர்த்தது அந்த உத்தமத் தலைவர் டாக்டர் கலைஞர் அல்லவா? தலைவர் தளபதி அல்லவா?
வன்னியச் சமுதாய முன்னோர்கள் தாம் சேர்த்து வைத்த சொத்துக்களை வன்னியச் சமுதாய மக்களுக்குப் பயன்படுமாறு அவர்களது சொத்துக்களை அறக்கட்டளைக்காக உருவாக்கி உயில் எழுதி வைத்து விட்டுச் சென்றனர். காலப்போக்கில் பராமரிப்பில்லாமல் சிதறிக்கிடந்த வன்னிய முன்னோர்களின் சொத்துக்களை ஒருங்கிணைத்து வன்னியர் பொதுச் சொத்து வாரியத்தை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று வன்னியர் பொதுச் சொத்து வாரியத்தை உருவாக்கியது தி.மு.க.வும் தலைவர் கலைஞரும் அல்லவா?
வன்னியச் சமுதாயத்திற்கு அளவிட முடியாத நன்மைகளைச் செய்து பாசத்துடன் திழந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தலைவர் தளபதி அவர்களுக்கும் செய்நன்றி மறவாமல் நன்றி பாராட்டி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டியது வன்னியச் சமுதாய மக்களின் கடமை அல்லவா.?
வன்னியர்களின் துரோகியை வீழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, நம் கையில் மாநில அரசு! நாம் கை காட்டுவதே மத்திய அரசு! என்ற தலைவர் தளபதியின் உறுதி மொழியைச் சூளுரையாக ஏற்று மாபெரும் வெற்றியைத் தங்கத் தலைவனின் காலடியில் சமர்ப்பிக்க உதயசூரியனுக்கு வாக்களிக்க உறுதி ஏற்போம்.
நாடும் நமதே! நாற்பதும் நமதே!
சி. என். இராமமூர்த்தி,
நிறுவனத் தலைவர்,
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி,
வன்னியர் கூட்டமைப்பு.
நன்றியைக் காணிக்கையாக்குவோம்!
எது எப்படியிருந்தாலும் வன்னிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் அனைத்து நிலைகளிலும் ஏதோ ஒரு வகையில் அதற்கு திமுக முழு முதல் முக்கிய காரணியாக இருந்திருக்கிறது என்பதை வன்னியச் சமுதாயத்தின் குடும்பத்தில் உள்ள அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.
நமது சமூக மக்களுக்காக திமுக செய்த அனைத்து நன்மைகளுக்கான நன்றியாகத்தான் வன்னியர் கூட்டமைப்பும், அனைத்திந்தியப் பாட்டாளி முன்னேற்றக் கட்சியும் எப்போதும் சமூக நீதி காக்கும் திமுகவுக்குத் துணையாக நிற்கிறது. நிற்கும்.
நமது வன்னியச் சமுதாயத்திற்கு கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள்
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) என்ற பிரிவை உருவாக்கி அதில் 20 சதவீத ஒதுக்கீடு தந்தார்.
- சாலை மறியல் போராட்டம் நடந்த போது உயிர்நீத்த தியாகிகள் 25 பேர்களுக்கு 3 லட்சம் ரூபாய் கருணைத்தொகை அளித்தார்.
- இந்த 25 பேரின் குடும்பங்களுக்கும் பென்ஷன் தொகையாக ரூபாய் 3000 மாதம் தோறும் வழங்கினார்.
- அரசு சார்பில் இந்த 25 பேருக்கும் “சமூகநீதிப்போராளி” என்ற பட்டம் அளித்தார்.
- சாலை மறியல் போராட்டத்தின் போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் மீது போடப்பட்ட இரண்டு லட்சத்திற்கும் மேலான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
- குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்தது.
- 1989 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுப் பிரச்சனையைத் தீர்ப்போம் என தெரிவித்து இருந்தார்.
- ஆட்சிஅமைத்த 43வது நாள் கலைஞர் அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்ட MBC பிரிவில் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னிய சமுதாயத்தின் சார்பாக திரு. சி.என். இராமமூர்த்தி அவர்களும் முதல்வர் கலைஞர் அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
- வாழப்பாடி கே. இராமமூர்த்தி, S.இராமமூர்த்தி மற்றும் சி.என். இராமமூர்த்தி ஆகிய எங்கள் மூவரின் கோரிக்கையை ஏற்று,
- படையாச்சியாருக்குச் சென்னையில் சிலை அமைத்து தந்தார் கலைஞர். அன்றைய மேயர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அதற்கான இடம் ஒதுக்கி சிலை அமைத்திட ஏற்பாடு செய்தார்.
- வன்னியர்களுக்கான பொதுச்சொத்து நல வாரியம் அமைக்கவைத்த கோரிக்கையை ஏற்று அதற்கான பூர்வாங்க பணிகளைத் துவக்கினார்.
- முதல்தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5% தகுதிச் சதவிகிதம் மார்க்கை MBC மாணவர்களுக்கு குறைத்து வாய்ப்புக் கிடைக்கச் செய்தார்.
- 2009-ல் மீண்டும் வன்னியர் பொதுச் சொத்துவாரியம் அமைக்க ஆணைப்பிறப்பித்து திரு .கோ.சந்தானம் IAS அவர்களை நியமித்தார்.
- 11வது ஐந்தாண்டு திட்டத்தில் செய்யூர் மற்றும் மரக்காணம் மாவட்டத்தில் 8000 மெகாவாட் அனல்மின்நிலையம் அமைக்க அனுமதியை மத்திய அரசிடம் கலைஞர் பெற்றுத் தந்தார்.
இப்படி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வன்னியச் சமுதாயத்திற்குச் செய்து கொடுத்த பட்டியலின் நீளம் இன்னும் அதிகம். முக்கியமானவற்றை மட்டுமே இதில் பட்டியலிட்டிருக்கிறேன். இதை விடவா இன்னொரு தலைவரும், கட்சியும் நமக்கு செய்து விடப் போகிறார்கள். வன்னிய சொந்தங்களே! வாருங்கள். திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவர்களான கலைஞர் பெருமகனாரும் அவர் வழி வந்த தமிழகத்தின் தவப்புதல்வன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தோள் கொடுத்து உயர்த்திடுவோம்! கரங்கள் கொடுத்து காத்திடுவோம்! இதயத்தைத் தந்து நம் சமுதாய வழிகாட்டும் தலைவராக்குவோம்!
வன்னியர் சமுதாயச்
சமூக நீதி போராட்டத் தியாகிகள்
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் 23 வரை தமிழகமே ஸ்தம்பிக்கும் வரையில் மிகவும் பிரம்மாண்டமான சாலை மறியல் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்டம் வாரியாக ஒவ்வொருவரும் தலைமை ஏற்று வழிநடத்தினர்.
1980களில் சமுதாயத்தின் மூத்த தலைவர் பெருமக்கள் ஒன்றிணைந்து வன்னிய சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்து செயல்படுத்த துவங்கினோம். இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோளாக 20 சதவீத இட ஒதுக்கீடு என்ற ஒற்றை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்காகப் பல முன்னெடுப்புகளை நாங்கள் எடுத்தோம். ஒரு நாள் சாலை மறியல், ஒருநாள் இரயில் மறியல் என்று தொடர் போராட்டங்களை இந்தச் சங்கத்தின் மூலம் நடத்தினோம்.
1987-ல் மிகப்பெரும் போராட்டம் செய்த போது தமிழகமே ஸ்தம்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் சாலைமறியல் போராட்டம் செய்தவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் மீண்டு வந்த சிலரும் மரணமடைந்தனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு முதன் முதல் உயிர் நீத்தவர் விழுப்புரம் மாவட்டம் பார்ப்பனப்பட்டு ரங்கநாத கவுண்டர் இறுதியில் உயிர் நீத்தவர் கடலூர் மாவட்டம் சிறுதொண்டமா தேவி தேசிங்குராஜா உள்ளிட்ட 25 பேர் இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்டனர். இப்படியாகக் கொல்லப்பட்ட 25 பேருக்கும் உதவி செய்திட வேண்டும் என்று அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்தேன்.
முதல்வர் மனமுவந்து மறைந்த ஒவ்வொருவருக்கும் தலா மூன்று இலட்சம் ரூபாயும், மாதா மாதம் ரூ. 1500/- பென்ஷன் தொகையினை 25 குடும்பத்திற்கும் கிட்டும்படியாக வழிவகை செய்தார் கலைஞர். தற்போது அது 3000/- ரூபாயாக கிடைத்துக் கொண்டிருக்கிறது.
25 குடும்பத்திற்கு நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம் என்று மற்றவர்கள் தவறாகப் பரப்புரை செய்து வருகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. நாங்கள் எல்லோரும் அறிவை ஆயுதமாக ஏந்துவதற்கு முன்னதாக உயிரை ஆயுதமாக ஏந்திய போராளிகள். அப்படி உயிரை துட்சமாக நினைத்து நாங்கள் போராடிய போது ஒரு காவலரைக் கூட நாங்கள் தாக்கவில்லை. சத்ரிய தன்மையோடு நிராயுதபாணியாக இருந்தபோதும் நாங்கள் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒன்றிற்காக எங்களது உயிரை நாங்கள் இழந்தோம்.
யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் மக்களோடு இணைந்து அந்தப் போராட்டத்தை நாங்கள் செய்தோம்.
வன்னியர் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று மறைந்த 25 தியாகிகளின் நினைவாக மணிமண்டபமும், அவர்களின் குடும்பத்தில் அவர்களின் படிப்பிற்கேற்றாற் போல் அரசு வேலை ஒன்றையும் தருவதாக தற்போதைய மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்திரவாதம் அளித்துள்ளார். இந்த அறிவிப்பை நாங்கள் மகிழ்வோடு வரவேற்கிறோம்.
சமூக நீதி போர் வீரர்களைப் பற்றிய வரலாற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- பார்ப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர்
தென்னாற்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம், பார்ப்பனப்பட்டு எனும் கிராமத்தில் பிறந்தவர் ரங்கநாதக் கவுண்டர். 55 வயதான அவருக்கு அஞ்சலை என்ற மனைவி. கிருஷ்ணவேணி, ஏழுமலை, சேகர், சின்னப் பொண்ணு, கங்கா, தர்மலிங்கம், பரமசிவன் ஆகிய பிள்ளைகளோடு வாழ்க்கையை நடத்தி வந்தார்.
ஊருக்கெல்லாம் உணவளிக்கும் உழவர் குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு சொந்தமாக இருந்ததே இரண்டு ஏக்கர் புன்செய் நிலம் தான். வன்னிய இனத்தின் வாரிசுப் பெருமையைக் காக்க முடிந்த அவரால், பெருகி நின்ற வறுமையை விரட்ட முடியாத அளவுக்கு காலம் சுழற்றி அடித்து விரட்டியது.
ஒவ்வொரு நாளும் பொழுது புலர்கிறது. பொழுது மறைகிறது. அன்றும் அதே நிலை தான் ரங்கநாதக் கவுண்டருக்கு. 16.09.1987 அன்று இரவு மனைவி, குழந்தைகளுடன் இரவு உணவை முடித்து சிறிது நேரம் பேசி ஆசுவாசப்படுத்திக் கொண்டு உறங்கப் போனார். விடியும் பொழுது நல்ல பொழுதாக விடிய வேண்டுமென்று மனதில் வேண்டிக் கொண்டு படுத்து உறங்கினார்.
17.09.1987 பொழுது விடிந்தது. வன்னிய இன மக்களை நேரில் சந்தித்து வரும் 17-ந் தேதி முதல் 23 வரை நாம் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று வன்னிய தலைவர்கள் முழங்கி இருந்தார்கள் அல்லவா?
அவர்கள் நடத்தும் சாலைமறியல் போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என எண்ணி நம்மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அதில் நம் உறவினர்கள் சாலை மறியல் போராட்ட களத்தின் முன் நின்று களம் கண்டனர். இவர்களைத் தடுத்த காவல் துறையினாரிடம் வழியை மறிக்க வேண்டாம் என அவர்கள் திமிறி பேச, நம்மவர்கள் நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவித்த போராட்டமிது;
அதனால் பாதையை விட முடியாதென பேச்சு நடக்கும் போதே அப்பாவிகளாக, நிராயுதபாணிகளாக நின்று போராடிக் கொண்டிருந்த அக்கிராம மக்களைக் காவல் துறையினர் உயிர் போகுமளவுக்கு தாக்கியும், அவர்களது ஓலைக் குடிசைகளைத் தீக்கிரையாக்கியும், வீட்டிலுள்ள பொருட்களைச் சூறையாடியும் சென்றனர்.
பார்ப்பனப்பட்டில் சாலை ஓரத்தில் குடிசை கட்டி வாழ்ந்த நாவிதர் வீட்டு மூதாட்டி தனது வீடும், பொருட்களும் பறிபோனதை வாயிலும், வயிற்றிலும் அடித்து மண்ணை அள்ளிப் போட்டு தூற்றி சபித்தார். கிராமமே சூறையாடப்பட்டு வெறிச் சோடியது.
ஊருக்கு வெளியில் ரணகளம் நடப்பதை அறிந்து அடுத்த படை வீரரைப் போல வீட்டிலிருந்து கம்பீரமாக வெளியே வந்தார் ரங்கநாதக் கவுண்டர். நெஞ்சு நிமிர்த்தி போராட்டக் களத்துக்கு வந்த அவரைப் போலீஸ் இரக்கமின்றி துப்பாக்கியைப் பிரயோகித்த துப்பாக்கி தோட்டாக்கள் தன்னை நோக்கி வருவதை அறிந்த ரங்கநாதக் கவுண்டர் சாவுக்கஞ்சாமல் தனது காலை எடுத்து வைக்க தோட்டாக்கள் அவரைச் சுட்டு வீழ்த்தின.
சரிந்தது ரங்கநாதக் கவுண்டரின் சரீரம். எழுந்து நின்றது வன்னிய இனத்தின் வீரம். துப்பாக்கியைப் பிரயோகித்த பரங்கியனே பரிதவித்துப் போனான்; இவ்வளவு நெஞ்சுரமா என்று? குடும்பமே கதறி ஓடி வந்தது.
போர்க்களம் போல் காட்சி அளித்த பார்ப்பனப்பட்டு கிராமம் அன்று தான் ரத்தக் குளியலை முதல் முதலாகப் பார்த்தது.
விடியலை பார்த்து நின்ற ரங்கநாதக் கவுண்டரின் குடும்பத்தைச் சில நிமிடங்களில் இருள் சூழ்ந்தது. என்னத்தடா கேட்டோம்! நாங்கள் அடிமை வாழ்வு வாழ்கிறோம். எங்களுக்கு கல்வி இல்லை.
அதனால் வேலை வாய்ப்பில்லை. எனவே எங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றுதானே கேட்டோம். அதற்குப் பதில் உயிர்ப்பலியா? என்று ஊரே கதறித் துடித்தது. சரி! பார்ப்பனப்பட்டோடு இது முடிந்தா போயிற்று! இல்லையே!
- சித்தணி ஏழுமலை
சென்னை, விழுப்புரம் நெடுஞ்சாலை அன்று போர்க்களமாகவே மாறிப்போனாது. அந்தப் பகுதியில் சித்தணி என்னும் ஊரில் இராமகிருஷ்ணன் என்ற இனப்பற்றாளன் வாழ்ந்து வந்தார்.
குடியிருக்க இடமில்லாமல் ஒரு குடிசை போட வழியின்றி புறம் போக்கு இடத்தில் சிறு குடிசை போட்டு கூலி வேலைக்கு போய் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவரின் அன்பு மனைவி அமிர்தம்மாள். கனிவோடு வாழ்ந்த அத்தம்பதியருக்கு அன்பு மகனாகப் பிறந்தார் தியாகி சித்தணி ஏழுமலை.
கூலிக்கு போனால் தான் கஞ்சி என்கிற ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்தது தியாகியின் குடும்பம். பள்ளிப் படிப்பை படிக்க எங்கே போவது? யார் தருவது? விதியின் கொடிய பாதையில் வீழ்ந்த சாதாரண வன்னிய இளைஞனான கல்வி அறிவு இல்லாத, அரசியல் நாட்டம் சிறிதுமில்லாத கட்டிளங்காளை ஏழுமலை. காலச் சுழற்சியில் அஞ்சலாட்சி என்ற நங்கையை திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார் ஏழுமலை.
பிறந்த குழந்தைக்கு ஓராண்டு முடிகிறது. இரண்டாமாண்டு தொடங்கப் போகும் இன்முகவேளை. பிஞ்சு குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பில் தம்பதியர் ஏழ்மையை மறந்து லயித்துப் போய் இருந்த நேரம்.
தமது வறுமைக்கு படிப்பறிவு பெறாததே காரணம் என்பதை உணர்ந்த ஏழுமலைக்கு வன்னிய தலைவர்களின் பேச்சு உரமூட்ட, 17.09.1987 அன்று விடிகாலை பிறந்த குழந்தையாவது நல்வாழ்வு வாழட்டும் என்று ஆசி வழங்கி அஞ்சலாட்சியை உச்சி மோந்து விடைபெற்றான் ஏழுமலை.
எத்தனைக் காலம்தான் நாங்கள் வாழ்விழந்து வாடிக் கொண்டிருப்பது என்று ஏக்கத்தோடு இருந்த ஏழுமலை, எழுச்சி கொண்டு எழுந்து வீடுர் அணை அருகே நம் சொந்தங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். 25 வயது கூட ஆகாத இளங்காளை வீறு கொண்டு எழுந்து மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.
திடமுடன் நின்று கொண்டிருந்தான் ஏழுமலை. துளைத்தெடுத்தது துப்பாக்கியின் தோட்டாக்கள். சரிந்து விழுந்த சரீரத்தை எடுக்க போலீஸ் முற்பட்ட போது ’20 சதவீத இட ஒதுக்கீடு அடைந்தே தீருவோம்! வாழ்க வன்னியர்கள்’ என்று ஏழுமலை முணங்கியபடி உயிர் பிரிந்தது.
- சித்தணி சேகர்
ஏழுமலையின் உயிர் துடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த உயிர் காவு வாங்கப்படுகிறது. ஏழுமலையுடன் களத்தில் போராடிய சித்தணி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்ற மாவீரனை தாக்கி வீழ்த்தினார்கள். பாதிக்கப்பட்ட சேகர் சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவினார். சேகரும் மரணத்தை தழுவும் அந்தத் தருணத்தில் கூட “வாழ்க வன்னியர்” என்றும் “போராட்டம் வெற்றி அடையட்டும்” என்றும் கூறி மரணத்தைத் தழுவினார்.
- தியாகி ஒரத்தூர் ஜெகநாதன்
சாவை முத்தமிடுவோரைச் சர்வ சாதாரணமாய்ப் பார்க்க முடியும். ஆனால் வீரனுக்கு அழகு களப்பலிக்குத் தயாராக இருத்தல் அல்லவா? கொடுமைகள் செய்யச் செய்யப் புழுக்களும் புரட்சி செய்யுமே! இந்த வீர இலக்கணத்தின் நேரடி வாரிசுதான் நம் தியாகி ஒரத்தூர் ஜெகநாதன்.
வன்னியர் சங்கத்தில் ஈடுபட்டு தொண்டு செய்வதையே குறிக்கோளாக கொண்டவர் தியாகச் செம்மல் ஒரத்தூர் ஜெகநாதன். தென்னார்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் பெருமாள் கவுண்டருக்கும், கோகிலாம்பாளுக்கும் புத்திரனாய் பிறந்தார் ஜெகநாதன், சுந்தரி என்ற அக்காளும், நல்லதம்பி, மேகநாதன் ஆகிய இரு தம்பிகளும் ஜெகநாதனின் உடன்பிறந்தவர்கள்.
குடும்பத்தையே இனத்திற்காகப் பாடுபட வைத்த பெருமைக்குரியவர். தான் சந்திக்கும் அனைவரிடமும் சங்கத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் பேசாமல் ஒரு நாளும் போனதில்லை ஜெகநாதனுக்கு. இவரது குடும்பத்திற்கு ஏறத்தாழ இரண்டு ஏக்கர் புன்செய் நிலம் மட்டுமே உள்ள நிலையில் கஷ்டப்பட்டு படித்து ஆளானார்.
ஆலங்குப்பம் ஊரைச் சார்ந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து இல்லறம் நடத்தியவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் மெஸன்ஞ்சராகப் பணிபுரிந்த ஜெகநாதன், வன்னியர் சங்கத்தின் கட்டளையை ஏற்று தொடர் சாலை மறியல் போராட்டம் பற்றி சுற்றியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
பெண் குழந்தை பிறந்து ஆறு மாதமே ஆகி இருந்தது. பெற்ற மகளை எப்படியெல்லாம் பேணி வளர்க்க வேண்டும், பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் இரவில் கண்ட கனவை விரைவில் நனவாக்க வேண்டுமென்று மனதில் நினைத்து படுத்து எழுந்தவருக்கு, தொடர் சாலை மறியல் போராட்டத்திற்கு செய்ய வேண்டிய களப்பணியாற்ற அழைப்பு வந்தது.
ஏற்கனவே செய்து வைத்த ஏற்பாடுகளை விளக்கிய ஜெகநாதன், திட்டமிட்டபடி 17.09.1987 அன்று பனையபுரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாப்பனம்பட்டில் ஆரம்பித்த தேசிய நெடுஞ்சாலை பகுதியின் துப்பாக்கி சூட்டின் சத்தம் பனையபுரத்துக்கும் கேட்டது. அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் வன்னிய இனப் போராட்ட வீரர் ஜெகநாதன் சுடப்பட்டு அங்கேயே வீரமரணம் அடைந்தார்.
- முண்டியம்பாக்கம் சிங்கார வேலு
பொதுவுடைமைக் கருத்துக்களை நம் தாய்த் தமிழகத்துக்கு அள்ளித் தந்த தோழர் மா. சிங்காரவேலர் அவர்களின் பெயரை தன் பெயராகக் கொண்ட முண்டியம்பாக்கம் சிங்காரவேலு ஒரு ஆலை தொழிலாளி ஆவார்.
இரும்பும் எம்பெருமூச்சில் உருகிப் போகும் ஒரு நாளைக்கு! வருத்தும் எங்கள் எசமானர்கள் திருந்துவது எந்நாளைக்கு? என்ற ஏக்கப் பெருமூச்சும், எளிய வாழ்வையும் மேற்கொண்டிருந்தாலும் எப்பாடு பட்டாவது சங்கப்பணிகள் ஆற்றுவதில் சற்றும் சளைக்காதவர் நம் சொந்தம் சிங்காரவேலு!
தென்னாற்காடு மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முண்டியம்பாக்கம் என்றும் ஊரில் அங்கம்மாள் என்ற தனது தாயாரோடு வாழ்ந்து வந்தார் சிங்காரவேலு. உடன் பாசத்திற்குரிய அண்ணன் அரிகிருஷ்ணனும் இருந்தார்.
இணைபிரியா பந்தம் கொண்ட சகோதரர்கள் இருவரும். சங்கத்துக்காக வாழ்ந்து காட்டியவர்கள். இருப்பினும் மார்பைத் திறந்து காட்டி சுடப்பட்ட மாவீரன் மறத்தமிழன் சிங்கார வேலுவின் தியாகத்தால் இன்று நமது வணக்கத்திற்குரியவராக இருக்கிறார்.
நிலமற்ற ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவராதலால் வாழ்க்கைப் போராட்டத்தில் வாட்டமுற்றார் சிங்காரவேலு. வன்னியர் சங்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
எளிய குடும்பத்தில் பிறந்த இவர் வள்ளியம்மாள் என்பவரை மணந்தார். அவரோடு இல்வாழ்க்கை நடத்திய போது நாகவல்லி என்ற பெண் குழந்தை பிறந்தது. சிறிது காலத்திலேயே வள்ளியம்மாள் மரணத்தை தழுவ, நாகம்மா என்ற நங்கையை மறுமணம் செய்து கொண்டார் சிங்காரவேலு. சங்கர், சிவகுமார் ஆகிய இரு மகன்களும், யசோதை என்ற மகளும் நாகம்மாளுக்குப் பிறந்தனர்.
யசோதைக்கு வயது இரண்டுக்குள் இருக்கும். வன்னியர் சங்கம் அறிவித்த சாலை மறியல் போராட்டத்திற்குத் தங்கள் பகுதியில் நடந்த போராட்டமே சிறப்பானது என்ற பெயர் பெற வேண்டுமென்று கடுமையாக உழைத்தார் சிங்காரவேலு. அந்த நாளும் வந்தது. 17.09.1987 அன்று முதல் நாள் அழைத்த நம் அத்தனை உறவினரையும் உடன் அழைத்துக் கொண்டு களமிறங்கினார் சிங்காரவேலு.
சென்னை – பாண்டி – கும்பகோணம் – விழுப்புரம் சாலைகள் சந்திக்கும் பனையப்புரத்தில் 17.09.1987 அன்று வன்னியர் சங்கம் அறிவித்த தொடர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள இளமைத் துடிப்போடு வீரநடை போட்டுச் சென்றார். நம் சொந்தங்கள் கூட நின்ற சிறப்புமிக்க போராட்ட களம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம்.
‘இன்னுயிரினும் இனமானமே பெரிது’ என்ற சிங்காரவேலுவின் மார்பில் அடுத்தடுத்து துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்தது. தன் சமுதாயம் மானத்துடன் வாழ தன் உயிரை காணிக்கையாக அளித்து கொள்கைக் குன்றாக உயர்ந்து நின்றார் சிங்காரவேலு. உடனிருந்தோர் சொன்ன அந்த ஆச்சரியமான வீரமான செய்தியைக் கேட்டு நாடே அதிசயித்தது. பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின.
என்ன செய்து பயன் என்ன? போன உயிர் வந்து விடுமா? யசோதையிடம் கேட்டால், ‘அப்பா! மெட்ராஸ் போயிருக்கார்’ என்று பதில் சொல்லும் அந்த பிஞ்சு மனம் நாளை வளர்ந்து நடந்ததை கேட்டால் அதன் மனதில் நஞ்சு கலக்குமா இல்லையா?
- கயத்தூர் முனியன்
வாழ்வெல்லையைத் தொடுவதற்கு முன்னால் வரலாற்று எல்லையை எட்டிப் பிடித்தவர் சிலர் மட்டுமே உண்டு. ‘தோன்றிற் புகழோடு தோன்றுக’ எனும் வள்ளுவரின் வாய்மொழியை நிரூபித்துக் காட்ட இதோ, சமகால புகழ்வீரன் கயத்தூர் முனியன் களம் இறங்கி களப்பலியான சம்பவத்தை கேளீர்! நம் இன வாழ்வில் சோலை வனம் தோன்ற வேண்டுமென்பதற்காகப் போராடித் தன் உயிர் மூச்சைவிட்ட அந்த சரித்திர நாயகன் சாதித்த வீரஞ்செறிந்த நிகழ்வு இதுதான்.
தென்னாற்க்காடு மாவட்டம், விழுப்புரம் வட்டத்தில் கயத்தூர் எனும் ஊரில் பெருமாள் கவுண்டருக்கும், அங்கம்மாவிற்கும் புண்ணிய புத்திரனாய் வந்து பிறந்தார் முனியன். இவருக்கு மன்னாதன் என்ற அண்ணனும், சுப்பிரமணி, தேவநாதன் என்ற இரு தம்பிகளும் உடன் பிறந்தவர்கள்.
வேதவல்லி என்ற நங்கைக்கும் முனியனுக்கும் திருமண பந்தம் உருவானது. திருமண வேலைகள் இருந்த போது கூட சங்கப் பணிகளில் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டார் முனியன். திருமணம் முடிந்து இல்லற தம்பதிகள் நல்லற வாழ்வை தொடங்கி இருந்த நேரம்.
ஒரு நாள் சாலை மறியல், ஒரு நாள் ரயில் நிறுத்த மறியல் என போராட்டங்கள் நடந்து முடிந்த வேளை ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
அப்போதுதான் முனியனுக்கு திருமணமாகியிருந்த நேரம். மனைவியின் வற்புறுத்தலால் அவரது உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் நெருங்கிய சகாக்களிடம் தலைமைக்குத் தகவல் தந்துவிடச் சொல்லி சென்றுவிட்டார்.
முனியன் வர இயலாததாலும், அப்போதுதான் திருமணமாகி இருந்ததாலும் அப்பகுதியில் போராட்டம் நடத்தும் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைத்தது வன்னியர் சங்கம், ஊருக்கு திரும்பினார் முனியன். நடந்தவற்றைக் கேட்டு கொதித்துப் போன முனியன் சங்க நிர்வாகிகளிடம் கடுமையாக சண்டை போட்டார்.
நான் இருக்கும் இடத்தில் வேறு ஒருவர் தலைமையில் போராட்டம் நடத்தக் கூடாது என்ற முனியனின் துடிப்பை அறிந்து முனியனுக்கே தலைமைப் பொறுப்பை தந்தனர் நிர்வாகிகள்.
17.09.1987 அன்று காலை விடிந்தது. முனியனின் இல்லாள் இன்முகத்துடன் போராட்ட களத்துக்கு அனுப்பி வைத்தாள். அப்போது அவருக்கு தெரியாது, தனது கணவன் வீடு திரும்ப மாட்டானென்று!
முனியன் வீட்டை விட்டு கிளம்பிய சிறிது நேரத்தில் பக்கத்திலிருக்கும் பாப்பனப்பட்டில் வன்னிய இன மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று கேள்விப்பட்ட முனியன் புழுவாய்த் துடித்துப் போனார்.
இச்செய்தி ஊருக்குள் பரவ நிறைமாத கர்ப்பிணியான வேதவல்லி பதறிப் போய் கடவுளிடம் வேண்டுதல் நடத்தினார். கதறினார். வீட்டாரைப் போகச் சொல்லி பார்த்து வரச் சொன்னார்.
அப்போது பனையப்புரத்தில் மறத்தமிழன் சிங்காரவேலுவைச் சுட்டு வீழ்த்தியதைப் போல முனியனும் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான செய்தியைச் சொன்னார்கள். நிறைமாதக் கர்ப்பிணியான வேதவல்லி கணவர் உயிர் பறிக்கப்பட்டதைக் கேட்டு பதைத்து போனாள். பதறினாள். கூக்குரலிட்டாள். பெண் சாபம் பொல்லாதது என்பர். அப்படியானால் கர்ப்பிணி பெண்ணின் சாபம்…?
திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் காலமும் வந்து விட்டதே என்று ஓங்காரமிட்டாள். தலைத்தெறிக்க ஓடினாள். பஞ்சமா பாதகர்கள் முனியனை வீழ்த்தி அந்த நங்கையைப் பரிதவிக்கவிட்டுப் போய் விட்டார்களே! அவர்கள் நாசமாக போக வேண்டுமென ஊரே சபித்தது.
- கயத்தூர் தியாகி முத்து
இளம் வயதிலேயே தன் வீரசாகசங்களால் உலகப் புகழ்பெற்ற மாவீரன் அலெக்சாண்டரைப் போல் சாகசம் புரிந்து சரித்திரம் படைத்தவன் நம்மினக் கொழுந்து கயத்தூர் முத்து. வரலாறு படைப்பதற்கு வயதொன்றும் முக்கியமன்று என்ற வாசகத்தின் மொத்த உருவம்தான் தியாகி முத்து குலமானம் காத்திட்ட வித்து. வன்னியப் பேரினத்தின் மாபெரும் சொத்து.
மணமாகாதா? நம் வாழ்வில் மகிழ்ச்சியும் பொங்காதா? என்று ஏக்கம் பிறக்கும் வசந்த வயதில் வன்னியரின் விலை மதிக்க முடியாத செல்வன் மாவீரன் முத்துவை இத்தனை சீக்கிரம் மாபாவிகள் கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்று நினைக்கவேயில்லை.
மறத்தமிழன் கயத்தூர் முனியனின் ஊரான கயத்தூரில் நடேச கவுண்டருக்கும், பொக்கிலைக்கும் திருமகனாக பிறந்தார் நம் குலத்தின் முத்து. சகோதரர்கள் இருவரும், சகோதரிகள் நான்கு பேரும் உடன் பிறந்தவர்கள். நிலமற்ற விவசாயக் கூலி வேலை செய்யும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த முத்து ஒரு கருப்பஞ்செத்தையால் போடப்பட்ட கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார்.
வறுமையை விரட்ட இயலாத முத்துவுக்கு, அதற்கு காரணம் இனத்தின் விழிப்புணர்வற்ற நிலையே என்றெண்ணி மனம் புழுங்கி இருந்த வேளையில் தான் சங்கம் அறிவித்த தொடர் சாலை மறியல் போராட்டம் வந்தது. திருமணமாகி ஓராண்டு முடிவடையாத நிலையில் முனியன் போராட்ட களம் காண செல்லும் போது நாம் மட்டும் சும்மா இருப்பதா? என்று பொங்கி எழுந்தார் முத்து.
17.09.1987 அன்று பனையபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நம் உறவினர்களின் போராட்ட குணத்தை ஒடுக்க, பட்டென்று பறந்து வந்த தோட்டா முத்துவை வரிசையாகப் பதம் பார்த்தது ‘வாழ்க வன்னியர்குலம்’ என்று முழங்கியவாறு தரையில் சரிந்து மாண்டார் முத்து. வன்னியர் குலம்
காக்க தன் மூச்சை விட்ட முத்துவின் தியாகத்திற்கு நாம் என்ன கைமாறு செய்துவிட முடியும். இதோ! அடுத்த வீரன் கிளம்பி நிற்கிறான்.
- கோலியனூர் கோவிந்தன்
விழுப்புரம் பகுதியில் அமைந்த கோலியனூர் ஊரில் ரங்கக் கவுண்டருக்கும், சின்னப்பொண்ணுக்கும் அருந்தவப்புதல்வனாய்ப் பிறந்தார் கொள்கை மறவன் கோலியனூர் கோவிந்தன்.
இவரின் குடும்பம் விவசாயக் கூலி வேலையைத் தொழிலாகக் கொண்டது. நிலமற்ற ஏழையான கோவிந்தனுக்கு வாழ்க்கைப் போராட்டம் கொடூரமாக இருந்தாலும் உழைப்பதற்கு சளைத்ததே இல்லை.
கோவிந்தனுக்கும், ராணி என்பவருக்கும் திருமணமாகி ஷகிலா, ரேவதி என்ற இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். போராட்டமான வாழ்க்கையில் தன் இனத்துக்காக ஒரு போராட்டம் என்றால் விட்டு விடுவாரா கோவிந்தன்.
ஒட்டு மொத்த இன வளர்ச்சியே தன் குடும்பத்தாரின் வளமைக்கு வழி வகுக்கும் என்பதை நன்கு அறிந்த கோவிந்தன் சோற்றுத் துருத்தியா நான் சொரணை இன்றி வாழ்ந்திட! ஆற்றுப்புணலடா என ஆர்ப்பரிக்கும் உணர்வுகளுடன் போராட்டத்திற்குத் தயாரானார் கோலியனூர் கோவிந்தன்.
இனமானம் காப்போம் என்பதை தன் குறிக்கோளாகக் கொண்ட கோவிந்தன் 17.09.1987 அன்று கும்பகோணம் – பாண்டி – விழுப்புரம் – சென்னை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் கோலியனூரில் நம் சொந்தங்கள் புடைசூழ கோவிந்தனும், விநாயகமும், தாண்டவராயனும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துளியும் பதட்டமின்றி, ‘வாழ்க! வன்னியர் குலம்’ என்று சொல்லி துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கி உயிர் துறந்தார் கோவிந்தன். சடலம் சரிந்தது! தன்மானம் எழுந்து நின்றது.
- கோலியனூர் விநாயகம்
கோலியனூர் ஒன்றியம் மிளகாய் குப்பம் எனும் ஊரில் குள்ளக் கவுண்டருக்கும், பூரணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் கோலியனூர் விநாயகம். இவருக்கும் சோமசுந்தரம், கண்ணன் என்ற இரு அண்ணன்களும், அஞ்சலாட்சி, ஆரவல்லி என்ற அக்காள்களும் உடன் பிறந்தவர்கள்.
நமது வன்னிய இனத்திற்கு சமூக நீதி கிடைக்க சங்கத்தின் மூலமான இன எழுச்சியே ஏதுவானதாகும் என்று முழங்கி தீவிர செயல்பாடுகளை செய்து வந்தார்.
17.09.1987 அன்று நடந்த தொடர் சாலை மறியலுக்கு தயாராகி களமிறங்கிய விநாயகத்தின் மீது தோட்டாவை பாய்ச்ச, துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்சாது இமயம் போல் சாலையில் நின்று மரணத்தைத் தழுவினார் தீரன் கோலியனூர் விநாயகம்.
- தொடர்ந்தனூர் வேலு
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் தொடர்ந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவருடைய தந்தை சுப்பராயக் கவுண்டர். தாய் ஜனகம் அம்மாள்.
தொடர் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்று, காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்த இளைஞர் அவரது வயது அப்போது 22.
காவல்துறை அவரைச் சுட்டப் பிறகு, குத்துயிரும் கொலைஉயுறுமாக துடித்துக் கொண்டிருந்தபோது காவல்துறையினரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு காவல்துறையின் வேனில் ஏற்றப்பட்டு, குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டும் தராமல், வேலுவை அடித்தேக் கொன்றனர்.
- சிறு தொண்டமாதேவி தேசிங்கு
தென்னாற்காடு மாவட்டம் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த சிறு தொண்டமாதேவி எனும் ஊரில் துரைசாமி படையாட்சியாருக்கும் கருப்பாயி அம்மாளுக்கும் புத்திரனாய் இப்பூமியில் வந்து உதித்தார் தேசிங்கு. பெருமாள், ஆறுமுகம், உத்ரவேலு என்கிற மூன்று அண்ணன்களும், ராஜநாயகி என்கிற தங்கையுமாக அழகான குடும்பத்துடன் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார் தேசிங்கு.
இவரது தந்தை துரைச்சாமி படையாட்சியார் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டதாலும், நிலத்தில் ஆழ்குழாய் நீர் வசதி முயற்சியை மேற்கொண்டதாலும் பெருத்த நஷ்டத்திற்கு ஆளானார். இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் குடும்ப வாழ்க்கை நடத்த போராட வேண்டி வந்தது.
தொடக்க கல்வியைப் பிறந்த ஊரான சிறு தொண்டமாதேவியில் பயின்ற தேசிங்கு, உயர்கல்வியை அருகிலுள்ள மருங்கூர் எனும் ஊரில் படிக்கத் தொடங்கினார். உயர் கல்விப் படிப்பின் போது குடும்பம் நொடிந்து போனதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தேசிங்கு, கடும் முயற்சி செய்தும் குடும்ப சூழலால் மேல்நிலைக் கல்வித் தேர்வில் தோல்வியைத் தழுவினார். அதன் பின் குடும்பத்தையும் காப்பாற்றி தன் படிப்பையும் தொடர்ந்து முடித்தார்.
சக நண்பர்களுடன் கபடி விளையாடும் போது அவர்கள் தேசிங்கை அரக்கன் வருகிறான் என்று கூறி விளையாடுவார்கள் என்றால் தேசிங்கின் தோற்றமும், செயல்பாடும் எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துப் பாருங்கள்.
ஒரே மூச்சாக வன்னியர் சங்கத்தில் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி வந்தார். யார் சங்கம் வைத்தாலும் அவர் ஒரு வன்னியர் என்பதுதான் நமக்கு முக்கியம் என்பாராம்.
அதனால் சங்கத்தில் உறுப்பினாராகாமலேயே சமுதாயச் செயல்பாடுகளில் தீவிரம் காட்டியவர் தேசிங்கு. இந்த வேளையில் தான் வன்னியர் சங்கம் அறிவித்த ஒரு வார தொடர் சாலை மறியலுக்கான நேரம் வந்தது.
18.09.1987 மற்றும் 19.09.1987 ஆகிய இரு நாட்களிலும் தேசிங்கு இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் தடைகளை ஏற்படுத்தும் பணியில் துரிதமாக செயல்பட்டார். உற்ற நண்பர்கள் உதவியுடன் களப்பணியாற்றிய தேசிங்கு, 20, 21 ஆகிய இரு நாட்களிலும் எந்த வித வாகனங்களும் வந்து செல்லாமல் தடுக்க முந்திரித் தோப்பில் மறைந்து இருந்து போராட்டகளத்தை அணையாத தீபமாக எரியவிட்டு பாதுகாத்தார்.
22.09.1987 அன்று வானொலியிலும், செய்தித்தாள்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் பண்ருட்டியில் இருந்து நெய்வேலிக்கு வாகனங்கள் செல்வதாக செய்தி வந்தது. இந்தச் செய்தியை அறிந்த சிறுதொண்டமாதேவி வன்னிய இன மக்கள் தங்கள் கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கும்பகோணம் சாலையில் உள்ள கொள்ளுக்காரன் குட்டை என்ற இடத்தில் அணி திரண்டனர்.
பாதுகாப்புடன் வந்த வாகனங்களைத் தடுத்த தேசிங்கும், அவரது சகாக்களும் ‘எங்கள் உயிரே போனாலும் வாகனங்களை விடமாட்டோம். எங்கள் தலைமையிடமிருந்து வாகனங்கள் செல்லலாம் என்று அறிவிப்பு வரும் வரை வாகனங்களை சாலையில் செல்ல அனுமதிக்க மாட்டோம்’ என்று வீர சபதம் செய்து போராட்ட களம் அமைத்தனர்.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்த நடந்த துப்பாக்கி சூட்டினால் தேசிங்கின் உடலிலிருந்து உயிர் பிரியா விடை பெற்றது. மிகச் சின்ன வயதிலேயே பேரும், புகழும் பெற்றான் செஞ்சிக் கோட்டையை ஆண்ட மன்னன் தேசிங்கு. அவனது பெயருக்கும் பெருமை சேர்த்து நம் இனத்திற்கும் பெரும் புகழையும் தந்து சென்றான் நம்குல விளக்கு மாவீரன் தேசிங்கு.
- கொழப்பலூர் முனுசாமி கவுண்டர்
தென்னாற்க்காடு மாவட்டத்தில் மேல்மலையனூர் வட்டத்தில் கொழப்பலூர் எனும் சிற்றூரில் சுப்பராயக் கவுண்டர் மகனாகப் பிறந்தார் முனுசாமி கவுண்டர். காசி என்ற தம்பியுடன் உடன் பிறந்த முனுசாமி, தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டே வன்னியர் சங்க வேலைகளில் ஈடுபாடு காட்டி வந்தார்.
இவருக்கும் – வாசுகி அம்மாளுக்கும் திருமணமாகி நல்லமுறையில் இல்லறம் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஏழுமலை, முருகன் என்ற இரு மகன்களும், வாசுகி, மல்லிகா என்ற இரு மகள்களும் வாரிசாக திகழ்ந்தனர். சங்கத்தின் மீதிருந்த அதீத நன்மதிப்பால் தொடர் சாலை மறியல் போராட்டக் களத்துக்கு தயாரானார் முனுசாமி கவுண்டர்.
ஊரில் தங்களது பகுதியைச் சுற்றி நடக்கும் துப்பாக்கிச் சூட்டை கேள்விப்பட்ட முனுசாமி குடும்பத்தினர் அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவர் குடும்பமும், ஊர்மக்களும் எவ்வளவோ தடுத்தும் கேளாத முனுசாமி கவுண்டர் சாலை மறியல் போராட்ட களத்துக்குச் சென்றார். போராட்ட களம் புழுதி கிளப்பி ரணகளமாக இருந்த நேரம்.
‘எது நேர்ந்தாலும் அதை நேருக்கு நேர் சந்திப்பேன்’ என்று சூளுரைத்த முனுசாமி கவுண்டர் மேல்மலையனூரில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார். அவரைக் கைது செய்து அடித்து, உதைத்து சென்னை சென்ட்ரல் ஜெயிலில் தள்ளினார்கள்.
சிறையில் பட்ட சித்ரவதையால் சாகடிக்கப்பட்ட முதல் தியாகி கொழப்பலூர் முனுசாமி கவுண்டர் தான். அவரின் கனவை நனவாக்க வேண்டுவது நமது கடமையல்லவா?
13.பேரங்கியூர் அண்ணாமலை கவுண்டர்
தென்னாற்காடு மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள பேரங்கியூரில் பிறந்தவர் அண்ணாமலை கவுண்டர். நிலமற்ற கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்ததால் கடும் உழைப்பை காட்டி வாழ்க்கையை நடத்தி வந்தார்.
ராதா அம்மாளோடு திருமணம் நடத்தி இல்லறம் அமைத்து வந்த அண்ணாமலை கவுண்டர் – சம்பத், கார்த்திக் ஆகிய இரு மகன்களையும், செல்வி என்ற மகளையும் வாரிசாகப் பெற்றெடுத்தார்.
ஆரம்ப காலத்தில் அதிமுகவில் ஈடுபாடு உடையவராக இருந்த அண்ணாமலை கவுண்டர், பின்னாளில் வன்னியர் சங்கத்தில் இணைந்து படுதீவிரமாகப் பணியாற்றி வந்தார்.
பேரங்கியூர் மக்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று சபதம் பூண்டிருந்தனர். அதற்காக முழு மூச்சுடன் செயலாற்றி திட்டங்களை வகுத்து தயார் நிலையில் இருந்தனர்.
பேரங்கியூரில் நம்மின மக்கள் போராட்டத்துக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட காவல்துறையின் ஐ.ஜி. ஸ்ரீபால் அவர்கள் சமாதானம் பேச வந்தார். இறுதியில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
60 வயது அண்ணாமலை கவுண்டர் ஊரிலுள்ள மக்கள் முன்னாலேயே அடித்துக் கொல்லப்பட்டார்.
- அமராத்தனூர் மயில்சாமி
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் அமராத்தனூர் கிராமத்தில் பிறந்தவர் மயில்சாமி. கந்தசாமி அவர்களுக்கும், அழகம்மாளுக்கும் புதல்வனாய்ப் பிறந்த மயில்சாமிக்கு அர்த்தனாரி என்ற சகோதரரும் உண்டு.
ஒரு வசந்த காலத்தில் வசந்தகுமாரி என்ற நங்கையைத் திருமணம் செய்து மதிவாணன், மகேஸ்வரன், மாதவன் என மூன்று புத்திரர்களை வாரிசாக பெற்றெடுத்தார் மயில்சாமி. அழகான மனைவி, அருமையான குழந்தைகள், அமைதியான வாழ்க்கை என உருண்டு கொண்டிருந்தது மயில்சாமி வாழ்க்கை. மேட்டூர் பக்கம் உள்ள குஞ்சாண்டியூரில் டி.ஸி.எம். மில்லில் காண்ட்ராக்டராக வேலை செய்து வந்தார்.
17.09.1987 அன்று காலை விடிந்தது. மயில்சாமி பரபரத்து காணப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட போராட்டம் அல்லவா? முதல் நாளில்
ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மயில்சாமி மறுநாள் 18-09-1987 அன்று இன உணர்வு மேலோங்க தன்னுடன் பணிபுரிந்த உறவினர்களுடன் சுமார் நூறு பேருடன் மேச்சேரி டூ மேட்டூர் செல்லும் சாலையில் சென்ற வாகனங்களை மறிக்க ஆயத்தப்பட்டு கிளம்பி போனார்.
மயில்சாமியும் மற்ற உறவினர்களும் சாலையில் அமர்ந்து மறியல் செய்த இடத்திற்கு வந்த போலீசார் கலைந்து போகச் சொல்லி மிரட்டினார்கள். கூட்டத்தில் இருந்தவர்கள் கலைய மறுக்க துப்பாக்கியைக் காட்டி சுட்டு விடுவதாக சொல்லி தடியடி நடத்த ஆரம்பித்தனர் போலீசார்.
மறுநாள் அதிகாலை அவருடன் மறியல் செய்தவர்கள் மயில்சாமியைத் தேடும் போது ஏதேச்சையாக கிணற்றையும் எட்டிப் பார்க்க அங்கே பிணமாக கிடந்தார் மாவீரன் மயில்சாமி. கிணற்றில் உடல் மிதப்பதை அறிந்த காவல்துறை, டி.எஸ்.பி. மற்றும் போலீஸ் படையுடன் வந்து உடலை எடுத்து போஸ்ட்மார்டம் செய்து காவல்துறை வண்டியிலேயே கொண்டு சென்று உடலை அடக்கம் செய்து விட்டனர்.
- வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன்
17-09-1987 அன்று நடைபெற்ற ஒரு வார தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்று அங்கு நடந்த கொடுமையால் பலியான தியாகிகளில் செங்கை மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் வெளியம்பாக்கம் என்னும் சிற்றூரில் பிறந்த இராமகிருஷ்ணனும் ஒருவர் ஆவார்.
சிறு விவசாயியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த இராமகிருஷ்ணன் பால்வளம் அளிக்கும் மாடுகளுக்குரியோர்களின் சங்கத் தலைவராக இருந்தார். நான்கு சகோதரர்களுடன் பிறந்த இராமகிருஷ்ணன் வன்னியர் சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதில் தீவிரமாகவும் செயல்பட்டார்.
25 வயதுடைய இவர் வெளியம்பாக்கத்தில் இருந்த வன்னியர் சங்க கிளையின் தலைவர் ஏழுமலை தலைமையில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமகிருஷ்ணன் குழுவினர் சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்னுமிடத்தில் போராட்ட களம் அமைந்திருந்த நிலையில், அங்கு வந்தது போலீஸ் படை. எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்து சிறையிலடைத்தார்கள்.
சிறைச் சாலையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இராமகிருஷ்ணனின் உடல் தாக்குப்பிடிக்க முடியாமல் மரணத்தை தழுவியது.
- மொரம்புக்காடு குப்புசாமி
சேலம் மாவட்டம் சிவதாபுரம், மொரம்புக்காடு பகுதியைச் சார்ந்தவர் குப்புசாமி. இவரும் மனைவி ஆனந்தாயம்மாளும் ஆசைக்கொன்றும், ஆஸ்திக்கொன்றுமாக வாரிசுகளைப் பெற்றெடுத்தனர். நிலமற்ற ஏழை விவசாயக் கூலியான குப்புசாமி தினமும் வேலை செய்து திரும்பினால் தான் வயிற்றுக்கு சாப்பாடு.
விவரம் அறிந்த காலத்திலிருந்தே எந்த அரசியல் கட்சியிலோ அல்லது பிற அமைப்புகளுடனோ தொடர்புகள் இல்லாதவர். ஆரம்ப காலத்திலிருந்தே இனப்பற்றுமிக்கவராகச் செயல்பட்டவர். சங்கம் தொடங்கிய காலத்திலேயே சிறப்பாகப் பணியாற்றிய பெருமை குப்புசாமிக்கு உண்டு.
தொடர் சாலை மறியல் போராட்டத்திற்கு பல இளைஞர்களை ஒன்று திரட்டி சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டு 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்கு போவதற்கு முன்பு எவ்வித நோயும் இல்லாமல் இருந்தவர். உள்ளே சென்ற பின்பு உடல் உபாதையால் கடுமையாக பாதிக்கப்பட்டார். சிறையில் இருந்து உடல் நலம் குன்றி வீடு திரும்பினார். சுமார் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உயிர் நீத்தார்.
- கயத்தூர் தாண்டவராயன்
விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் தாண்டவராயன். சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். உடலில் தோட்டா பாய்ந்த நிலையில், உயிருக்காக துடித்துக் கொண்டிருந்த போது, காவல் துறையினர் தாண்டவராயனை அடித்தேக் கொன்றனர்.
மணமாகாத இவருக்கு தாய் தந்தையர் இல்லை. இவரது உடன் பிறந்த சகோதரி அவரது நினைவால் வாழ்ந்து வருகிறார்.
- குருவிமலை முனுசாமி
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி அன்னம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள்.
சாலைமறியலின் 7வது நாள் அன்று கடையடைப்பு நடைபெற்றது. அதில் பங்கேற்ற முனுசாமியைப் போலீஸார் லத்தியால் தாக்கினர்.
இதனால் மண்டை உடைபட்டு பலத்த காயம் அடைந்தார் முனுசாமி. கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முனுசாமி, அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
கணவன் இழந்த துக்கம் தாழாமல், சில காலங்களிலே அன்னம்மாளும் காலமானார். அவரது இரண்டு மகன்களும் தற்போது விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
- மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர்
காஞ்சிபுரம் மாவட்டம் மொசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் நாயகர். இவரது மனைவி முனியம்மா. இவர்களுக்கு 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள்.
சாலை மறியலின் போது போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் கோவிந்தராஜ்.
சிறையில் கோவிந்தராஜ்க்கு போலீஸார் கடுமையான சித்ரவதைகளைக் கொடுத்துள்ளனர். பின், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கோவிந்தராஜ், வந்த அடுத்தநாள் மரணமடைந்தார்.
போலீஸாரின் கடுமையான தாக்குதலால் இந்த மரணம் நேர்ந்துள்ளது. அவரது பிரிவை தாங்காது, அவரது நினைவு சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறார் அவரது மனைவி முனியம்மா.
- நத்தமேடு சுப்பிரமணியம்,
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம், நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டிற்காக நடந்த தொடர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகள் இவரது நெஞ்சை பதம் பார்த்தது. உரிமைக்காகப் போராடி தனது இன்னுயிரை நீத்தார் தியாகி சுப்பிரமணி.
அவரது சொந்த கிராமமான நோட்டாங்குறிச்சியில் அவரது நினைவை மனதில் சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறார் கோவிந்தம்மாள்.
- வில்லியநல்லூர் இராஜேந்திரன்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜேந்திரன். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள்.
விவசாயக் கூலி வேலை செய்து வந்தவர் இராஜேந்திரன். சாலை மறியல் போராட்டத்தில் உரிமைக்காகப் போராடினார். புதுசத்திரம் பஸ் ஸ்டாப் அருகே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவரது உடலில் தோட்டா பாய்ந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே இராஜேந்திரன் பலியானார்.
இராஜேந்திரனின் நினைவால் வாழ்ந்து வருகிறார் அவரது மனைவி செல்வராணி.
- கட்டிநாயக்கன்பட்டி மாரியப்பன்
மாரியப்பன் என்பவர் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கட்டி நாயக்கன்பட்டி சவுறியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கைத்தறி கூலித் தொழிலாளி அவர் வன்னியர் சங்கத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு 1987 இல் நடைபெற்ற ஏழு நாள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு போலீசார் நடத்திய தடியடியில் சம்பவ இடத்தில் தன் இன்னுயிரை நீத்தார்.
இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கட்டி நாயக்கன்பட்டி சவுறியூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி கவுண்டரின் மூன்றாவது மகனாக மாரியப்பன் பிறந்தார். இவர் கைத்தறி கூலித் தொழிலாளி ஆவார்.
வன்னியர் சமுதாயம் மீது அதிகப் பற்று கொண்டு வன்னியர் சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அவ்வப்போது சேலத்தில் நடைபெறும் சிறு சிறு கூட்டங்கள் மற்றும் போராட்டங்களில் கலந்து கொள்வார்.
மாரியப்பனுக்கு ருக்மணி என்ற மனைவியும் இரு குழந்தை ( ஆண், பெண் ) இருந்தனர்.இதனிடையே சேலத்தில் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடைபெற்றது இதில் மாரியப்பன் கலந்து கொண்டர்.
1987 ஏழு நாள் தொடர் சாலை மறியல் போராட்டத்தின் போது இவர் ஜலகண்டபுரத்தில் உள்ள பெருமாள் கோவில் மேடு மூன்றாவது வீதியில் கலந்துக்கொண்டார்.
அங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் முனைப்போடு போலீசார் செயல்பட்ட நிலையில் தடியடி நடைபெற்றது அப்போது கூட்டம் கலைந்து செல்லும் நிலையில் மாரியப்பன் தடியடியில் சம்பவ இடத்தில் தன் இன்னுயிர் நீத்தார்.
- தாயங்கரடு நடராஜ்
சின்னா கவுண்டர் – கந்தம்மாள் ஆகியோருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். சிறு வயதில் தந்தையை இழந்தார்கள். தனது அண்ணணின் அரவணைப்பில் வளர்ந்த இளைய மகனான நடராஜன் என்பவர் சேலம் மாவட்டம், ஐந்து ரோடு, நரசோதிப்பட்டி,தாயங்கரடு நகரத்தை சேர்ந்தவர்.
கட்டிட கூலி தொழிலாளியாக பணி புரிந்த இவர் 1987 ஆம் ஆண்டு சேலம் ஐந்து ரோடு சாலையில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் ஏழு நாள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
இதில் நடராஜன் கலந்து கொண்டார் .பிறகு நான்காம் நாள் போரட்டத்தின் போது காவலர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
எட்டு நாட்களுக்குப் பிறகு காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார். காவலர்களின் தாக்குதலால் உடல் நிலை மிகவும் நலிவுற்று இருந்து.இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிறிது காலத்தில் தனது உயிரை நீத்தார் .சமுதாயத்தின் மீது கொண்ட பற்றால் தனது இன்னுயிரைச் சமுதாய வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார் .
மேலும் இவர் வன்னியச் சமுதாய வளர்ச்சிக்காக சிறு , சிறு கூட்டங்கள் நடத்தியவர் மற்றும் அடிக்கடி சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொரப்பாடி சுப்ரமணி,
கடலூர் மாவட்டம் – தொரப்பாடியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி பார்வதி. வன்னியர் சமூகத்தின் எழுச்சிக்காகவும் வருங்கால சந்ததியினருக்காகவும் தனது உயிரை ஏழு நாள் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு காவல் துறையினரால் தாக்கப்பட்டு வீர மரணம் எய்தினார்.
- கண்ரக்கோட்டை ஜெயவேல் பத்தர்
ஜெயவேல் பத்தர் என்பவர் புலவனூர் (கிராமம்) பண்ருட்டி (வட்டம்) கடலூர் (மாவட்டம் )சார்ந்தவர்.இவருக்கு வில்வம் என்ற மனைவியும் இரு குழந்தைகள் (பெண், ஆண்) உண்டு . இவர் திருவிழா காலங்களில் பக்கத்து கிராமங்களில் சென்று பலூன் மற்றும் கைவினைப் பொருட்களை விற்று வியாபாரம் செய்வது இவர் தொழில்.
ஊரில் உள்ள வன்னியச் சமூக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.அதுசமயம் வன்னிய மக்களின் இட ஒதுக்கீடு போராட்டங்களைக் கவனித்து வந்தார்.
அப்போது 1987-ல் ஏழு நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் கண்ரக்கோட்டை என்னும் இடத்தில் நடைபெற தொடங்கியது. அப்போது இவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார் இதில் இவர் இரண்டாம் நாள் போராட்டத்தின் இடையே கலவரம் மூண்டதில் சம்பவ இடத்தில் தன் இன்னுயிரை நீத்தர்.
இப்படி மொத்தம் 25 வன்னிய குல வீரசிங்கங்களை இட ஒதுக்கீடு கேட்டதற்காக உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்.
‘வன்னியர் புரட்சி நாள்’
இந்த வீரத்தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி ‘வன்னியர் புரட்சி நாள்’ என்று வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.
அந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வன்னியர் கூட்டமைப்பின் சார்பாக கௌவரவிக்கப்படுகிறது.
வீரத்தியாகி சித்தணி சேகர் தாயாரைக் கவுரவப்படுத்தும் சி.என்.ஆர்.
அன்பு சொந்தங்களே! நாம் மட்டுமே இப்படி நடத்தி வந்த சமூக நீதிப் போராளிகளின் நினைவுகளில் ஒன்று இதோ! தமிழக அரசே தேடி வந்து செய்யப் போகிறது.
சபதம் ஏற்போம்
சபதம் ஏற்போம்! சாதனைப் படைப்போம்!
இனமானம் காப்போம்! இட ஒதுக்கீடு பெறுவோம்!
மண்ணின் மைந்தர்களாம்
வன்னியர்ப் பேரினம்.
ஏற்றம் பெற்றிட
எழுத்தறிவு வேண்டும் இனம் வாழ வேண்டும் – அதற்கு
இட ஒதுக்கீரு வேண்டும் – தனியே
இருபது சதம் வேண்டும் – எனும்
உயரிய லட்சியத்திற்கு – இன்னுயிர்
தனை தந்த வீர மறவர்களே!
வீண் போகாது உம் தியாகங்கள்
விண் மீனாய் ஜொலிக்கின்றீர் எம் இதயங்களில்
ஓராண்டு ஆகி விட்டாலும் -ம் உங்கள்
தியாகங்களின் உணர்வுகளும் இலட்சியங்களும்
எங்கள் இரத்த நாளங்களோடு பின்னி முறுக்கேறி இருக்கின்றன.
உமது லட்சியங்கள் உருமாறவில்லை.
ஒப்பாரும் நிக்காருமற்ற உயரிய வழிகாட்டி
தேர்தல் புறக்கணிப்பை தீரமுடன் செய்து,
இடஒதுக்கீடு பெற இன்னுயிர் தந்த
இலட்சிய தீபங்களே – உங்கள்
எண்ணக்கனவை நனவாக்க
இலட்சோப இலட்சம் இளைஞர் கூட்டம்
புறப்பட்டு விட்டோம் – அறப்
போர்க்களம் நோக்கி
சத்திரிய மறவர்களே – நும்
கல்லறை முன் எல்லோரும் நின்று
சபதம் ஏற்கிறோம்.
சாதனை படைப்போம்!
வீர வணக்கம்! வீர வணக்கம்!
அன்புடன்
சி.என்.இராமமூர்த்தி,
எம்.காம்., டி.பி.எம்., பி.எல்.,
பொதுச்செயலாளர்.
இடஒதுக்கீடு போராளிகளுக்கு நினைவு மண்டபமும், 25 போராளிக் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலையும் செய்து தருவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உறுதி அளித்துள்ளார். அவருக்கும், அவரது ஆட்சிக்கும் துணை நிற்க வேண்டியது வன்னியச் சமுதாய மக்களின் தார்மீகக் கடமையல்லவா?
ஒன்றுபடுவோம்… வென்று காட்டுவோம்… சரியான சமூக நீதியை நிலை நாட்டுவோம்.
சி.என்.ஆரின் மறைக்கப்பட்ட வரலாற்று
உண்மைகளும், நினைவுகளும்
வணக்கம்,
கடந்த 50 ஆண்டுகாலம் CNR அவர்கள் சமுதாயப் பணியை மட்டும் செய்து கொண்டு வருகிறார். 1971ல் தொடங்கிய அவரது சமுதாயப்பணி வாழ்நாள் முழுவதும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும் என்பதுதான். அதன்விளைவாக அப்போது அவர் படிக்கும் காலம்தொட்டே வன்னியர் சங்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினர் .
அவருடைய ஆக்கப்பூர்வமான பணியைப் பார்த்து தான் வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியைப் பெற்றார். பின்பு பல கட்ட போராட்டங்களை வியூகம் அமைத்து ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று மக்களைத் திரட்டி பலகட்ட போராட்டம் செய்து இட ஒதுக்கீடு பெற்றார் .
அந்தப் பல கட்ட போராட்டத்தில் முக்கியமானவை:
1) பட்டை நாமம் தரித்து பட்டினிப்போராட்டம்
2) எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கருப்பு கொடி காட்டுதல்
3) இரயில் மறியல் போராட்டம்
4) ஒரு நாள் சாலை மறியல் போராட்டம்
5) பின்பு ஒரு வாரகால சாலை மறியல் போராட்டம்.
ஞாயிறன்று போராட்டம் நடைபெற்றால் இராமதாஸ் கலந்து கொள்வார். .
இந்த ஒரு வாரகால சாலை மறியல் போராட்டத்தின் போது அதிமுக அரசின் துப்பாக்கிச்சூட்டில் நம் உறவுகள் 25 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு 1989 ல் மாண்புமிகு தமிழக முதல்வராகப் பதவியேற்ற டாக்டர் கலைஞர் அவர்கள் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு முன் வந்தார். வன்னியர் சங்கத்தின் அன்றைய குழுவோடு பேசி 20% விழுக்காடு கொடுப்பதற்கு முன்வந்தார்.
ஒரு ஜாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு அன்றைய சட்டத்தில் இடமில்லாததால், 108 ஜாதிகளை இணைத்து 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கிறேன் என்று கலைஞர் சொன்னார்.
எதுவுமே கிடைக்காததற்கு 20% விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு வன்னிய குல சத்திரிய சாதியினர் சமுதாய மக்கள் முன்னேற்றம் அடைவார்கள். மக்களின் வாழ்க்கை தரமும் வேலைவாய்ப்பும் பெருகும் என்பதற்காக, அன்றைய வன்னியர் சங்க பொதுச் செயலாளராக இருந்த சி.என். இராமமூர்த்தி அவர்களும் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 20% சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க அரசு ஆணை வெளியிட்டார்கள். இதுதான் சமூக நீதியின் வரலாறு.
இதன் பிறகு தான் பாட்டாளி மக்கள் கட்சியை சி.என் இராமமூர்த்தியும், இராமதாசும் மற்ற தலைவர்களும் இணைந்து துவக்கினார்கள் . பாட்டாளி மக்கள் கட்சி துவக்கியதன் நோக்கமே நம் சமுதாய மக்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதேபோல் மற்ற சமுதாய மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் நம் உரிமை பெற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் தொடங்கினோம்.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிய பிறகு இராமதாஸ் போராட்டத்தின்போது செய்த சத்தியங்களை எல்லாம் மறந்து அவர் பாதையே வேறுவிதமாக சென்றது.
நம் மக்களிடம் வசூல் செய்து வன்னியர் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கி அந்த அறக்கட்டளை மூலம் நம் வன்னிய சமுதாய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை தரம் முன்னேற எல்லா வகையான கட்டமைப்புகளையும் செய்வோம் என்று சொல்லி வசூல் செய்தார்.
அதன்பின்பு, வன்னியர் சமுதாயத்திற்கான பல அறக்கட்டளைகளைத் தன் அதிகார பலத்தை, துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி தனதாக்கிக் கொண்டார். இப்போது வன்னியர் கல்வி அறக்கட்டளை இராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்து தன் கட்டுபாட்டில் வைத்துக் கொண்டுள்ளார். அதன் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடி.
ஒரு வாரகால சாலை மறியல் போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகள் குடும்பங்கள் நிலையைப் பார்த்த வன்னியர் சங்கப் பொதுச் செயலாளர் திரு. சி.என். இராமமூர்த்தி அவர்கள் கலைஞர் அவர்களிடம் பேசி மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகையும் மூவாயிரம் ரூபாய் மாத உதவித் தொகையையும் பெற்றுக் கொடுத்தார். பின்பு அவர்களுக்கு வீடு கட்ட முயற்சி செய்து வீடுகட்டிக் கொண்டிருந்ததை பிரச்சனை செய்து அதையும் ராமதாஸ் கெடுத்து தடுத்துவிட்டார்.
பிறகு பெருந்தலைவர் எஸ். எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு கிண்டியில் சிலையை நிறுவ செய்யும் கோரிக்கையை மும்மூர்த்திகளான வாழப்பாடி கூ. இராமமூர்த்தி, சி.என். இராமமூர்த்தி மற்றும் U.S. இராமமூர்த்தி என்கிற வன்னிய அடிகளார் ஆகிய மூவரும் கலைஞரிடம் வைத்தார்கள்.
கலைஞரும் பெருந்தலைவர் எஸ். எஸ். இராமசாமி படையாச்சி அவர்களுக்கு 21.02.2001ல் சிலையும் வைத்தார்.
வன்னியர் சமுதாய மும்மூர்த்திகளும் தொடர்ந்து கலைஞர் அவர்களைச் சந்தித்து கோரிக்கை வைத்ததன் காரணமாக வன்னியர் பொதுச்சொத்து நல வாரியம் அமைய அரசாணை 1045 (நாள் 09.03.2001) வெளியிட்டார் கலைஞர்.
பிறகு 2009 வரை எதுவும் நடைமுறைப் படுத்தாமல் அப்படியே கிடப்பில் இருந்ததால் நீதிமன்றத்தில் 3 வழக்குகளை சி.என். இராமமூர்த்தி தொடுத்தார்.
அந்த மூன்று வழக்குகளாவன:
- வன்னியர் பொதுச்சொத்து நல வாரியம் (அறக்கட்டளைகள் ஒன்றிணைப்பு, 10 லட்சம் கோடிக்கு மேல் உள்ள சொத்தின் மதிப்பு). நீதிமன்ற ஆணைக்கிணங்க 44-வது சடட்டத்தை (44/2018) உருவாக்கி ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று பொதுச்சொத்து நல வாரியம் அமையப்பெற்றது. இதை அமல்படுத்தவே பதினெட்டு வருடமாக நாம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக, எந்த நிபந்தனையும் இன்றி பொறுமை காத்து சட்டப் போராட்டம் மூலம் வெற்றி பெற்றோம். அதற்காக முதலமைச்சர் பாராட்டு விழாவினையும் 2018 ல் செய்தோம். இந்த வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் நம் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் அடிப்படை உரிமைகளும் கிடைத்துவிடும் என்பதற்காக இராமதாஸ் திட்டமிட்டு கெடுதல் செய்ததோடு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இன்றளவும் செயல்படாமல் பல வழிகளிலும் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
- வன்னியர் குல சத்திரிய நல வாரியம் அமைக்க – நலத்திட்ட உதவிகள் பெற சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து (W.P.No 20544 / 2012 நாள் – 03.08.2012) (நிதி ஒதுக்கி சமுதாய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு) நீதிமன்ற ஆணை பெற்றுவிட்டோம். இதையும் இன்னும் கடந்த 9 வருட காலமாக அமல்படுத்தவில்லை தமிழக அரசு.
- தமிழகத்தில் பெரும்பான்மை சமூக மக்களாக உள்ள வன்னியர்களுக்கு மட்டுமே 15% விழுக்காடு தனி இட உள் ஒதுக்கீடு (20% சதவீதத்திலிருந்து பிரித்து) வேண்டும் என்று 2010ல் வழக்கு தொடுத்து (No. 14025/2010)) 2012ல் நீதிமன்ற ஆணையைப் பெற்று அதனடிப்படையில் அரசாணை எண் (GO.No:35) பெற்றோம். பிறகு அந்த அரசாணையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வன்னியர் குல சத்திரிய சாதியினருக்கு 15% விழுக்காடு தனி இட உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று பரிந்துரையை 2012 லேயே கொடுத்துவிட்டது. அதை அப்போதைய அதிமுக அரசு செயல்படுத்தாமல் இருந்ததால் 2015ல் மீண்டும் நீதிமன்றம் சென்று நீதிமன்ற இறுதி ஆணையை (WP.No. 14025 of 2010 Date:01.04.2015) பெற்றுவிட்டோம். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்களின் குழுவின் பரிந்துரை கோப்பு, முதலமைச்சர் கையெழுத்துக்காக 2012 லிருந்து 9 வருடமாக காத்துக் கிடந்தது. அதன்பிறகு கையெழுத்துட்டு மீண்டும் நடைமுறைப்படுத்த ஒரு அரசாணையை வெளியிட தொடர்ந்து நாம் பலகட்ட போராட்டத்தின் விளைவாக கிட்டத்தட்ட 9 வருட காலம் கழித்து 2021 ல் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 10.5% தனி இட உள்ஒதுக்கீட்டை வெளியிட்டார்.
- தனி இட உள்ஒதுக்கீட்டிற்காக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கொரோனா காலத்தில் 2020 அக்டோபர் மாதத்தில் நாம் முயற்சி எடுத்தபோது அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆர்ப்பாட்டமாக மாற்றினோம். அது மிகப் பெரிய அளவில் மக்களிடம் எழுச்சி பெற்றது. அந்த எழுச்சியைப் பார்த்த இராமதாஸ் அவர்கள் டிசம்பர் 2020 மாதத்தில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தான், போராட்டம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் தனி இட ஒதுக்கீட்டுக்கான வாய்ப்பு இல்லை என்று அதிமுக தேர்தல் சீட்டு ஒதுக்கீட்டு பேச்சின் போது அதிமுகவால் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 15% விழுக்காடு தனி இட உள்ஒதுக்கீடு கொடுக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2012 ல் மாண்புமிகு நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களால் செய்த பரிந்துரை அப்படி இருக்கிறது. அதனால் நாம் அந்த தனி இட உள்ஒதுக்கீட்டை செயல்படுத்தலாம் என்று அதிமுக இராமதாஸிடம் சொன்னார்கள்.
இதை தாமதமாக உணர்ந்த ராமதாஸ் அவர்கள் பின்பு “எங்களுக்கு தனி இட உள்ஒதுக்கீடு கொடுத்தால் போதும்” என்று தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ஆனால் அதிமுக அரசு 10.5% விழுக்காடு தனி இட உள் ஒதுக்கீடு மட்டுமே கொடுக்க முடியும். 15% விழுக்காடு தற்போது கொடுத்தால் மற்ற சமூக ஓட்டு எங்களுக்கு கிடைக்காது அதற்காக இப்போது 10.5% விழுக்காடு தனி இட உள் ஒதுக்கீடுகொடுக்கிறோம் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆணையத்தின் மூலம் 6 மாதத்திற்குள் எடுத்து மக்கள் தொகை அடிப்படையில் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதை இருவரும் சேர்ந்து முடிவு செய்து தேர்தல் நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள்.
2018 ல் அதிமுகவுடன் இராமதாஸ் கூட்டணி வைத்த நோக்கம் என்ன என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மிக முக்கிய காரணமே இதுதான்:
வன்னியர் கல்வி அறக்கட்டளையை மாற்றி அவர் மனைவி சரஸ்வதி பெயரில் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் பெயர் வைத்தார். அதன்பிறகு, இராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றி இன்றளவும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதன் மதிப்பு பல ஆயிரம் கோடியுடையது. சி.என். இராமமூர்த்தி அவர்களின் சட்டப் போராட்டத்தால் உருவான வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் முறையாக செயல்பட்டால், இராமதாசிடம் உள்ள வன்னியர் அறக்கட்டளையையும் இந்நேரம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அப்படி எடுத்துக் கொண்டால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தும் அவர் கையை விட்டு வெளியேறி விடும். அதை உணர்ந்த இராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணிக்கு சரி சொன்னார்.
பல ஊழல் புகார்களை அமைச்சர்கள் மீதும் முதலமைச்சர் மீதும் பட்டியலிட்டு கவர்னரிடம் கொடுத்த அன்புமணி ராமதாஸ் ஏன் இப்படி தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டார். தன்னுடைய பல ஆயிரம் கோடி சொத்துகளைக் காப்பாற்றுவதற்காகவும், மேலும், வன்னியர் மக்களிடம் நிதி பெற்று பல ஆயிரம் கோடி மதிப்புடைய வன்னியர் கல்வி அறக்கட்டளை ஏற்படுத்திய (கோனேரி குப்பம்) சொத்துகளையும் ஏமாற்றுவதற்காத்தானே!!
இப்போது பத்து லட்சம் கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்துகளை, வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் சரிவர பாதுகாக்காமல், ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் செயலிழந்து கிடக்கிறது.
இரண்டாவதாக 15% விழுக்காடு தனி இட உள்ஒதுக்கீடு வன்னியகுல சத்திரிய சாதியினருக்கு கொடுக்காமல் திட்டமிட்டு, உள் நோக்கத்தோடு சட்டமன்ற தேர்தலுக்காக, 10.5% விழுக்காடாக தனி இட உள் ஒதுக்கீட்டை குறைத்துக் கொடுத்தது அதிமுக அரசு.
இப்படித் தொடர்ந்து நம் வன்னிய சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் அனைத்தும் நாம் பல வருடமாக போராடி சட்டத்தின் மூலம் கிடைக்க அரும்பாடுபட்டு கொண்டிருக்கும்போது இப்படி இவர்கள் தாமதப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
நம் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளில் இட ஒதுக்கீடு இப்போது 10.5% விழுக்காடு தனி இட உள்ஒதுக்கீடு கிடைத்துள்ளது. ஆனால் பத்து லட்சம் கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்திலிருந்து நம் சமுதாய மக்களுக்கு எந்த பலனும் சென்றடையாமல் தடுக்கின்றனர்.
அந்தப் பலன்கள் அனைத்தும் முழுமையாக நம் சமுதாய மக்களுக்கு சென்றடைய நாம் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். நம் இளைய சமுதாயம் இன்னும் வரலாறு என்ன என்றே தெரியாமல் அவர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர்.
போலியான வாய் பேச்சுக்களை மட்டும் பேசுபவர்களை நம்பி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எது சரி! எது தவறு! என்று நீங்கள் தீர ஆராய்ந்து எதில் உண்மை இருக்கிறது என்பதையும் தெளிவாக உணரவேண்டும்.
இத்தனை ஆண்டுகள் சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டுமே தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்ட வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் இப்போது தொடங்கி உள்ள அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் அரசியல் அங்கீகாரத்திற்கு நமது பங்கு மிக முக்கியம்.
ஒன்றுபடுவோம்…! அறிவாயுதம் ஏந்துவோம்..!! உரிமையை வென்றெடுப்போம்..!!! முன்னேறுவோம்..!!!!
பிற்படுத்தப்பட்டோரின் பிதாமகர்!
(முரசொலியில் 07.09.2021 அன்று வெளியான செய்தி…)
பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகராக எழுந்து நிற்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வீதியில் நின்று எதையும் பேசலாம். பதவிக்கு வந்த பிறகும் அதற்கு உண்மையாக இருந்து சட்டங்களைச் செயல்படுத்தித் தருபவர்கள் மட்டுமே சமூகநீதிப் போராட்டத்தின் சளைக்காத போராளியாக வரலாற்றில் பதிய வைக்கப்படுவார்கள்,
அந்த வரிசையில் 1987 ஆம் ஆண்டு சமூகநீதிப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட உயிர்த் தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள அறிவிப்பு சமூகநீதிப் போராட்டத்துக்கு தரப்பட்ட மரியாதை ஆகும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது (2019 அக்டோபர்) தி.முக. தலைவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்தார். அதுதான் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வடமாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 25 உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்கான போராட்டம் அது.
1989 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர் அவர்கள் “தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்வோம்” என்று வாக்குறுதி கொடுத்தார்.
தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் முதல்வர் ஆன 43 வது நாள் இது தொடர்பாக வன்னியர் சங்கப் பொதுச்செயலாளர் சி.என்.இராமமூர்த்தி உள்ளிட்டோரை அழைத்துப் பேசினார்.
வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை முதல்வர் கலைஞர் கொடுத்தார். உயிர் நீத்த 25 பேர் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கினார். இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்கியவர் அப்போதைய முதல்வர் கலைஞர்.
அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களை இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து அவர்களின் குடும்பத்திற்கு மாதந்தோறும் ‘பென்ஷன்’ அறிவித்தார். 25 பேர்கள் பேரிலும் ‘சமூகநீதித் தியாகிகள்’ என்று அரசு மதிப்பளித்து சான்றிதழும் தந்தவர் முதல்வர் கலைஞர். வன்னியர் சமூகத்து பிரமுகர்களான பு.தா. அருள்மொழி, பு.தா. இளங்கோவன், வாழைச் செல்வன், ராஜேந்திரன், தாராசிங் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.
இதன் தொடர்ச்சியாக வாழப்பாடி இராமமூர்த்தி, வன்னிய அடிகளார், சி.என். இராமமூர்த்தி ஆகிய மூவரும் முதல்வர் கலைஞரைச் சந்தித்து, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
அவர்களை அன்றைக்கு சென்னை மேயராக இருந்த தளபதியைச் சந்திக்க வைத்தார் முதல்வர் கலைஞர். சென்னை ஹால்டா சந்திப்பில் படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்டது. முதல்வர் கலைஞரும், சென்னை மேயரும் அந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் 2019 அக்டோபரில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்தது. அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்த திமு.க, தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மூன்று முக்கியமான வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள்
- வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்திலேயே மணிமண்டபம் அமைக்கப்படும்.
- பேரறிஞர் அண்ணா அவர்களது அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, ஏஜி என அறிஞர் அண்ணா அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, திரு. ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும்.
- ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தனி இட உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உரிய நடவடிக்கை எடுக்கும்.
…என்று வாக்குறுதி அளித்தார்கள். மூன்றாவது வாக்குறுதியைக் கடந்த அ.தி.மு.க. ஆட்சி அரைகுறையாகச் செய்துவிட்டுச் சென்றது. அதனை இன்றைய திமு.க. அரசு தான் சரியாகச் செயல்படுத்தி உள்ளது.
உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டார் முதல்வர்.
அதேபோல் ஏ.ஜி.கோவிந்தசாமிக்கான மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அறிவித்து விட்டார்.
ஏதோ ஒரு சில கோரிக்கைகளை மட்டுமல்ல; அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் காட்டி பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகராகப் போற்றப்படுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
அனைத்து சமூகத்தவருக்குமான இடஒதுக்கீட்டை 1921 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி. இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு உச்சநீதி மன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையாகப் போராடி 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டத் திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் பெரியாரும், அண்ணாவும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவிகித இடஒதுக்கீட்டை 31 சதவிகிதம் ஆக்கினோம். பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டை 16 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக்கினோம்.
பழங்குடியினருக்கு 1 சதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு வழங்கினோம். பிற்படுத்தப்பட்டோரில் 20 சதவிகிதத்தைப் பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனி ஒதுக்கீடு கொடுத்தோம். அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தனி ஒதுக்கீடு வழங்கினோம். இத்தகைய சமூகநீதி உரிமைகளை அகில இந்திய அளவிலும் அனைத்திந்தியப் பணிகளிலும், கல்வியிலும் கிடைக்க வழிவகை செய்தும் வருகிறோம்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின மக்கள் என்றால் யார்? வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். தமிழர்களைக் காப்பாற்றும் நீதியாகத்தான் சமூக நீதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு திராவிடம் என்ன கிழித்தது என்று கேட்கும் தறுதலைகள் ‘தமிழர்கள்’ வீட்டு வாசலில் நின்று கொண்டு இதைக் கேட்கவும்!
இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு 4 கோடியில் மணிமண்டபம் மற்றும் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம்:
2019 அக்டோபரில் சொன்னார் 2021ல் ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றினார் முதல்வர் ஸ்டாலின்
திமுக, வன்னியர் சமுதாய மக்களுக்குப் பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி– அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது. ஆனால், “கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களை கைது நடவடிக்கைகள் மூலம் துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அதிமுக ஆட்சியாளர்கள் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்.
போராட்டக்களத்தில் நின்றவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்துப் போற்றிடும் வகையில், மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனவுடன் 28.3.1989 அன்று வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு அளித்து அரசு ஆணை (G.O. MS 242 Dated: 28.03.1989) வெளியிட்டதோடு மட்டுமின்றி அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கலைஞர் அவர்கள் தான்.
மேலும், இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தார்.
முதன் முதலில் ராஜ்மோகன் என்ற வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ், அதிகாரியை, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக நியமித்தார்.
1996-ல் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.
அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களை இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து, அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ‘பென்ஷன்’ அறிவித்தார்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப் போர் தியாகிகளுக்கு இணையாக அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்தின் விளைவாக, இன்று வரை அந்தக் குடும்பங்களுக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.
வன்னியர் சமுதாயத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு சென்னை – கிண்டி ஹால்டா சந்திப்பில் முழு உருவச் சிலை அமைத்து, அதனைத் திறந்து வைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
முதன் முதலில் வன்னியர் ஒருவரைத் திண்டிவனம் வெங்கட்ராமன் அவர்களை, கேபினட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சராக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள் தான் என்பதை நாடறியும்.
திமுக ஆட்சியில்தான் முதலமைச்சர் அலுவலகத்தில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள், முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டு பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும் அமர வைக்கப்பட்டார்.
புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு பொற்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார்.
வன்னியர் சொத்துக்களைப் பாதுகாக்க திமுக ஆட்சியில்தான், “வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்” அமைக்கப்பட்டு– அதற்கு அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.தா.சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ். அவர்களை முதல் தலைவராகவும், பிறகு திரு. ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ். அவர்களை, இரண்டாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்.
தா.சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ்., மாநிலத் தேர்தல் ஆணையராக திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.
தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில், வன்னியர் சமுதாயத்திற்கான இன்னும் எத்தனையோ சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும்.
ஆனால், இந்த எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் அப்படி வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காகச் செய்த சாதனை என, ஒரு சாதனையையாவது விரல் விட்டுச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.
அதுமட்டுமின்றி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அந்தத் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு செவி கொடுத்தேனும் கேட்டதா? இல்லவே இல்லை.
ஆனால் இன்றைக்கு ஒரு உறுதிமொழியை நான் இந்த அறிக்கை வாயிலாக அளிக்க விரும்புகிறேன்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், பேரறிஞர் அண்ணா அவர்களது அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, “ஏஜி“என அறிஞர் அண்ணா அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்த நேரத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன்.
இப்படி 2019 அக்டோபர் 7ம் தேதி அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வரானதும் ஏற்கனவே அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்களுக்குச் சிலை வைத்து மணிமண்டபம் அமைத்திட வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் திரு. சி.என்.இராமமூர்த்தி அவர்கள் நீண்ட காலமாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் ஜான்சி ராணியாக அழைக்கப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
யார் இந்த அஞ்சலை அம்மாள்….
கடலூர் அஞ்சலை அம்மாள்
காந்தியார் அழைத்த தென்னாட்டு ஜான்சிராணி
கடலூர் கடற்கரையிலிருந்து வெள்ளையர்களின் காலடி தடம் பதித்த பின்பு 1887-ம் ஆண்டு முத்து படையாட்சிக்கும் அம்மாக்கண்ணுவுக்கும் புகழ்மிக்க மகளாக கடலூர் முத்துநகரில் பிறந்தார் நம் குல சிங்கம் அன்னையர் திலகம் அஞ்சலை அம்மாள்.
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்பட்டுப்போன இப்பூமியில் பரங்கியர்களை விரட்டியடிக்க பெண்கள் எழுச்சியோடு திரண்டு வராத கால கட்டத்தில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு விடுதலைப் போராட்ட களம் புகுந்தார் அஞ்சலை அம்மாள்.
சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் அன்றைய சென்னை மாகாணம் முழுமையும் பரவிக் கிடந்த காலம். ஆண்கள் மட்டுமே களம் கண்டு வெள்ளையர்களுக்கெதிராக போரிட்ட நேரம்.. குண்டும், குள்ளமுமான உருவம். சற்றே கருத்த உடல்வாகு. நிறைய மஞ்சள் பூசிய மங்களகரமான தோற்றம். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. லட்சுமிகரமான திருமுகம். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையில் கருணையும், வீரமும் ஒருசேர இருக்கும். மொத்தத்தில் பார்த்தவர் பரவசத்தோடு கும்பிடத் தோன்றும் ஆன்மிக தோற்றம் உள்ளவர்.
இத்தனை லட்சனத்துடன் கடலூர் முத்துநகர் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38-ம் எண் கொண்ட இல்லத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து விடுதலை போருக்காக ஏன் பெண்கள் அணிவகுக்கக்கூடாதென்ற கேள்வியுடன் களமிறங்கினார் தென்னாட்டு முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாள்.
இளம் பெண்ணாக இருந்து சுதந்திரத்திற்காக நாமும் பங்காற்ற வேண்டுமே என்று துடிப்போடு தந்தையிடம் கோரிக்கை வைத்தார் அஞ்சலை அம்மாள். மகளின் வீரத்தைப் பாராட்டிய தாய் தந்தை இருவரின் அரவணைப்பில் தன் வயதொத்த பெண்களுடன் கடலூரில் விடுதலைக்காக களம் ஆற்றினார் அஞ்சலை அம்மாள். இருப்பினும் உரிய பருவத்தில் திருமணம் முடித்துவிட எண்ணி கடலூர் அருகிலுள்ள சேத்தியாதோப்பு பக்கத்தில் உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த முருகப்பப் படையாட்சியை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தனர்.
செல்வந்தரான முருகப்படையாட்சி தினமும் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் சொந்த மாமன் மகளான அஞ்சலை அம்மாளை மகனுக்கு திருமணம் செய்து வைத்து இனி மகன் திருந்திவிடுவான் என்று நம்பினார் ராமு படையாட்சி. இதில் தான் அஞ்சலை அம்மாளின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
கணவனைத் திருத்துவதற்கும், தனது விடுதலைப் போராட்ட ஆசைகளுக்கும் ஒரு சேர தீர்வுக் கண்டார் அஞ்சலை அம்மாள்.
அன்னிபெசண்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட ஹோம் ரூல் இயக்கம் வெளி உலகுக்கு தெரிவிக்கப்பட்ட சமயம். அன்னிபெசண்ட் அம்மையாரின் தனித்துவத்தால் கவரப்பட்டார் அஞ்சலை அம்மாள். அதே நேரம் நாட்டில் கருப்புச் சட்டம் என்ற ரவுலட் சட்டம் கொண்டு வரப்பட்டதால் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது..
அப்போதுதான் உலகமே அதிரும் வண்ணம் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடக்க, உலகமெங்கும் போராட்டம் திமிறி எழுந்து நடந்தது. அதே நேரம் காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க வெளிநாடுகளில் சுதந்திரத் தீயின் ஜூவாலை கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்தச் சமயத்தில் கடலூருக்கு வருகை புரிந்தார் மகாத்மா காந்தி.
மதுவுடன் சூதாட்டமும் சேர்ந்து முருக படையாட்சியை ஆட்டுவித்த நேரத்தில், தனது ஊருக்கு வந்த காந்தி அடிகளின் பேச்சைக் கேட்க கணவர் முருகப் படையாட்சியை அழைத்துக் கொண்டு சென்றார் அஞ்சலை அம்மாள். கெடிலம் ஆற்றங்கரையில் உரையாற்றிய காந்தி அடிகள் மதுவினாலும், வெள்ளையர்களாலும் நம் தேசம் அழியும் சூழ்நிலையை அவரது மென்மையான பேச்சால் எடுத்துரைத்தார்..
காந்தியாரின் பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்த முருகப் படையாட்சியின் மெளனம், அஞ்சலை அம்மாளுக்கு புதிதாக இருந்தது. திடீரென எழுந்த முருகப் படையாட்சி, காந்தியாரின் பேச்சால் தனது மனம் படாத பாடுபடுகிறது என்று சொல்லியவர் இனி இந்த ஜென்மத்தில் மதுவைத் தொட மாட்டேன் என சத்தியம் செய்தார். உடனே நாம் இருவரும் சேர்ந்தே இனி சுதந்திர போராட்ட களத்திற்கு செல்வோம் என்றும் உறுதி அளித்தார்.
பிரிட்டீஷ் ஆட்சியில் நாடெங்கும் கள்ளுக் கடைகள் ஏராளமாக நடத்தப்பட்டன. அவர்கள் இங்கிருந்து நம் செல்வத்தை கொள்ளை அடித்துக் கொண்டு போவதற்காக நம்மை மதுவில் மூழ்க வைத்தனர். இதை உணர்ந்த அஞ்சலை அம்மாள் தனது கணவருடன் சேர்ந்து கள்ளுக்கடை முன்பு பெண்களைத் திரட்டிக் கொண்டு போய் போராட்டம் நடத்தினார்.
குடிப்பதையே தொழிலாக கொண்டவர்கள் அசிங்கமாகத் திட்டினாலும், பலர் திருந்தியும் வந்ததால் தினமும் போராட்டத்தை நடத்துவதில் முனைப்புடன் செயல்ப்ட்டார் அஞ்சலை அம்மாள். இதனையொட்டி அஞ்சலை அம்மாளின் பணியைப் பாராட்டி கெளரவித்து கணவன் மனைவி இருவருமே சேர்ந்து போராட, ஒவ்வொரு நாளும் பெண்களின் வருகை அதிகரித்தது.
இதை உணர்ந்த அஞ்சலை அம்மாள் தன்னுடன் வந்திருந்த பெண்களிடம் சுதந்திற்காகப் போராட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச் சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைத்தார். இதனால் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கமும், கிலாபத் இயக்கமும் கடலூரில் செயல்பட்ட வேகம் கண்டு ஆட்சியாளர்கள் கோபம் கொண்டனர்.
வெள்ளையர்கள் அடக்குமுறையைக் கையாண்டாளும் அஞ்சலை அம்மாளும், முருகப் படையாட்சியும் மனந்தளராமல் போராட்டத்தைத் தொடர்ந்து வந்த வேளையில் அழகான பெண் குழந்தையான அம்மா பொண்ணுவும் வளர்ந்து போராட்ட களத்திற்கு வந்தார்.
அது சமயம் மதுரையில் இருந்து ஒரு எதிர்ப்புக் குரல் கம்பீரமாக எதிரொலித்தது. 1857-ல் முதல் சுதந்திரப் புரட்சியை நாடு கண்டபோது எழுந்த கிளர்ச்சியை நாம் அறிவோம். அப்புரட்சிக்குப் பின்பு நாட்டின் வடபகுதியில் தொடர்ந்து நடந்து வந்த கிளர்ச்சியை அடக்கச் சென்னை மாகாணத்தில் ராணுவ அதிகாரியாய் இருந்த நீல் துரையின் தலைமையின் கீழ் ஒரு படை பாதுகாப்பிற்காக சென்றது.
கிளர்ச்சியை அடக்கி, பாதுகாப்பிற்குப் பதிலாக செல்லும் வழியெங்கும் நீல் நடத்திய வெறியாட்டம் அடிமைப்பட்ட இந்தியாவில் அழிக்க முடியாத ரத்தச் சாட்சியாக நின்றது.
அன்னிய நாட்டு படைப்புகளில் ஈடுபட்ட அலெக்சாண்டர் செங்கிஸ்கான், தைமூர் போன்றவர்கள் நடத்திய போர்க் கொலைகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு நீல் செய்ததே மனிதாபிமானமற்ற கொலைகளில் முதன்மையானது என உலக வரலாற்று ஆசிரியர்கள் பின்பு கணித்து எழுதினார்கள்.
நீல் சென்ற வழியெங்கும் மக்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். பலர் மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிடப்பட்டனர். சிலருக்கு கழுத்தில் சுருக்குப்போட்டு அவர்களை யானை மீது ஏற்றி, அந்த யானையை ஒரு மரத்தடியில் நிறுத்தி கழுத்தில் தொங்கும் கயிறுகளை மரக்கிளைகளில் கட்டியபின் யானையை அப்புறப்படுத்துவார்கள்.
அப்போதும் அவர்கள் ஊஞ்சல் ஆடுவதைப் போன்ற நிலையில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதை நீல் தலைமையில் சென்ற ராணுவத்தினர் பார்த்து களித்துக் கொண்டாடுவார்கள்.
சில கிராமங்களைச் சுற்றி இயந்திர பீரங்கிகளை நிறுத்தி அக்கிராம மக்கள் வெளியே வராதவாறு தடுத்து அப்படியே தீயிட்டு மக்களுடன் கிராமத்தையே சாம்பலாக்கினார்கள். 1857-ல் நடந்த முதல் புரட்சியின் கிளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கானவர்களை இப்படி நாம் இழந்தோம்.
சரியாக இரண்டே ஆண்டுகளில் லக்னோவில் நீல் கிளச்சியாளர்களிடம் மாட்டிக் கொண்டான். எப்படி நம் மக்களை சித்ரவதை செய்தானோ அதேபோல் நீல் சித்ரவதை செய்யப்பட்டு பீரங்கி முன் கட்டி வைத்து இயந்திரத்தை இயக்க சின்னா பின்னமாக சிதறிப் போனான் நீல். மனித இனம் கண்டிராத மாபாதக செயல்களை செய்த நீல் என்ற அந்த கொடுங்கோலனுக்கு அவனைப் பாராட்டும் வண்ணம் சென்னையில் அவனுக்கு சிலை நிறுவி இருந்தார்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தார்.
1927 ஆகஸ்ட் 15-ல் சத்தியாகிரகத்தின் மூலம் கொடுங்கோலன் நீல் சிலையை அகற்றுவதென முடிவெடுத்து அதற்கு ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இயக்கத்தை மதுரை சிதம்பர பாரதியும் திருநெல்வேலி எஸ்.என். சோமயாஜுலு மற்றும் சில மதுரை காங்கிரஸ்காரர்கள்தான் தொடங்குவதற்கு காரணமாக இருந்தார்கள்.
டி. எஸ். சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு அப்போது நடந்து வந்த தமிழ்நாடு பத்திரிகை அலுவலகத்திலிருந்து சத்தியாகிரகிகள் மவுண்ட் ரோட்டிலுள்ள சிலையை நோக்கி ஊர்வலமாக வந்தார்கள். அந்தச் சிலையை சுத்தியை கொண்டு உடைப்பது என்பதுதான் திட்டமாக வைக்கப்பட்டிருந்தது.
அத்திட்டத்தின்படி ஊர்வலமாக வந்தவர்களில் ஜமதக்னி, சுப்பராயலு மதுரை முகமது காலிசு ஆகியோரால் நீல் சிலை சுத்தியலால் அடிக்கப்பட்டது. வெண்கலச் சிலை என்பதால் உடையவில்லை. உடனே மகாத்மா காந்தி இவ்வாறு செய்வது சத்தியாகிரகத்திற்கு எதிராகும் என்பதால் இம்முறையை அனுமதிக்காமல் களிமண் உருண்டைகளைக் கொண்டு அடிக்க வேண்டுமென்று ஆலோசனை கூறினார்.
சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளப் பகுதிகளில் இருந்து பலர் பங்கெடுத்துக் கொண்டு சிறை சென்றனர். இதில் முருகப் படையாட்சியும் நிறைமாத கர்ப்பிணியான அஞ்சலை அம்மாளும், ஒன்பது வயதுடைய மகளான அம்மாக்கண்ணுவும் சிறைக்குச் சென்றார்கள்.
சென்னை மாகாணத்தில் நடந்த சுதந்திரப் போராட்ட களத்தில் குடும்பமாக நின்று போராடி சிறை சென்ற பெருமை கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்கள் குடும்பத்தையேச் சாரும். இவர் பல பெண்களையும் போராட்டத்தில் ஈடுபட வைத்தார். பேறுகாலம் நெருங்கியவுடன் ஆங்கிலேய அரசு அஞ்சலை அம்மாளை பரோலில் அனுப்பி வைத்தது.
அங்கே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சிறையில் இருந்தபோது பிறந்ததால் ஜெயில் வீரன் என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு ஜெயவீரன் என்று அழைக்கப்பட்டார்.
தாயாரோடு சேர்ந்து நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்மாபெண்ணுவுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சென்னை சிறுமியர் இல்லத்தில் அடைக்கப்பட்டார்.
இச்சமயம் சைமன் கமிஷன் வெற்றிகரமாக புறக்கணிக்கப்பட வேண்டி இருந்ததால் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீல் சிலை உடைப்பு போராட்டம் தொடர்வது நிறுத்தப்பட்டது. இந்த வேளையில் சிலை உடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களைக் காண மகாத்மா காந்தி வந்தார்.
சிறையில் இருந்தவர்களிடம் உணர்ச்சிகரமான சந்திப்பை நிகழ்த்தினார் காந்தி. அனைவரையும் சந்தித்து முடித்த பின்பு சிறுமியர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அம்மாக்கண்ணுவை சந்தித்தார் காந்தி. அப்போது உடனிருந்த ராஜாஜி அஞ்சலை அம்மாளின் மகள் தான் இந்தச் சிறுமி என்று அறிமுகப்படுத்த மகிழ்ச்சியில் திளைத்துப் போனார் காந்தி.
உடனே உரிய அனுமதி பெற்று தனது ஆசிரமமான வார்தாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன்னுடனே அழைத்துக் கொண்டு போய்விட்டார்.
வார்தாவில் அம்மாபொண்ணு என்ற பெயரை லீலாவதி என்று பெயர் மாற்றி தனது ஆசிரமத்திலேயே தங்க வைத்து படிக்க வைத்தார். அங்கேயே தமிழ் பாடங்களையும் நடத்தி, நர்ஸ் ஆவதற்கான படிப்பையும், பயிற்சியையும் கொடுத்து லீலாவதியை சென்னைக்கு அனுப்பி வைத்தார் காந்தி.
சிறையில் இருந்து வெளியே வந்த அஞ்சலை அம்மாளுக்கு அடுத்த போராட்ட அழைப்பு காத்திருந்தது. பிரிட்டீஷ் அரசாங்கம் நம் மக்கள் மீது விதித்த வரிகளில் எல்லாம் உப்பு வரியே மிகவும் கொடுமையானது என்றார் காந்தி. நாம் நடத்தும் போராட்டங்கள் ஏழை மக்களுக்காகத்தான் என்னும் உண்மையை உலகறியச் செய்ய உப்புச் சத்தியாக்கிரகத்தை நடத்தினார் காந்தியடிகள்.
பிரிட்டீஷ் அரசாங்கம் போட்ட வரிகளிலெல்லாம் உப்பு வரியே மிகவும் அநீதியானது. ஏழைகளின் கண்ணோட்டத்துடன் இதை நான் கூறுகிறேன். இந்தியாவில்ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கிறார்களே அவர்களுக்காகத்தான் விடுதலை இயக்கம் நடைபெறுகிறது என்று இந்திய வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார் காந்தியடிகள்.
உப்புச் சத்தியாகிரகத்திற்காக காந்தியடிகள், அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 241 மைல் தொலைவில் உள்ள கடற்கரை ஊரானதண்டியைத் தேர்ந்தெடுத்தார். 1930 மார்ச் 12-ம் தேதி தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.
சென்னை மாகாணத்தில் 1930 ஏப்ரல் 13-ல் ராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து சத்தியாகிரகப் படை வேதாரண்யத்தை நோக்கி புறப்பட்டது. இப்படையில் அஞ்சலை அம்மாளின் குடும்பமே கலந்து கொண்டது. வருபவர்களுக்கு உணவளிக்கக் கூடாதென்று அரசு அடக்குமுறையை ஏவியது. ஆனால் மக்களின் உணர்வுக்கு முன் அவை தோற்றுப் போனது.
ஏப்ரல் 29-ல் வேதாரண்யம் வந்தவர்களுக்கு அடக்குமுறையை மீறி வேதரத்தினம் என்பவர் தங்க இடம் அளித்ததோடு கூட்டத்திற்கு தலைமையும் தாங்கினார். இதனால் இவருக்கு சர்தார் எனும் பெருமைமிகு பட்டம் தேடி வந்தது. வேதாரண்யம் கடலில் ராஜாஜியுடன் அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோர் கடலில் உப்பை எடுக்க , அவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
கணவர் முருகப் படையாட்சி, மகன் ஜெயவீரன் ஆகியோரோடு சிறை வாழ்க்கையை வாழ்ந்தார் அஞ்சலை அம்மாள். இறுதியில் 1931 மார்ச் 5-ல் இந்திய வைஸ்ராய்க்கும் , காந்தியடிகளுக்கும் இடையே ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தம் காரணமாக உப்புச் சத்தியாகிரகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் நடந்த உப்புச் சத்தியாகிரகம் தண்டி யாத்திரைக்கு
அடுத்தப்படியான பெருமையைப் பெற்றதாக மகாத்மா அகமகிழ்ந்து போனார். அனைவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியாவில் கடிதம் எழுதினார்.
காங்கிரஸ் வளர்ச்சிக்காக அஞ்சலை அம்மாள் அரும்பாடுபட்டுள்ளார். கடலூரில் எப்போதும் அவரது இல்லத்தில் தொண்டர்கள் நிரம்பி இருப்பார்களாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்கு செலவிட்டிருக்கிறார். அதிகமான கடன் காரணமாக வீடு ஏலத்திற்கு வந்த போது நல்ல உள்ளம் கொண்ட அவருடைய உறவினர்கள் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர்.
1933-ல் மரியல் போரில் ஈடுபட்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார். 1940-ல் தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு ஆறு மாதமும் 1941-ல் 8 மாதமும் 1943-ல் ஒன்பது மாதமும் கடுஞ்சிறை வாசம் பெற்று இருக்கிறார். சென்னை, வேலூர், கடலூர், திருச்சி பெல்லாரி ஆகிய சிறைகளில் சுமார் ஐந்து வருட சிறை வாழ்க்கையை அனுபவித்தார் அஞ்சலை அம்மாள்.
உழவு மற்றும் நெசவுத் தொழில்களை முன்னோர்கள் செய்து வந்தாலும், அஞ்சலை அம்மாள் நெசவுத் தொழிலையே பிரதானமாக செய்து வந்துள்ளார். 1932-ம் ஆண்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது முருகப் படையாட்சி மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஞ்சலை அம்மாளும் கணவர் முருகப் படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தறிநெசவு செய்து நீண்ட நாள் கட்சிப் பணியாற்றி வந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி நிதிக்காக கதர்த் துணிகளைச் சுமந்து கொண்டு தந்தை பெரியாரோடு சென்று சென்னை நகர வீதிகளில் விற்றுள்ளார்கள். கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட பெருமை அம்மாளுக்கு உண்டு.
1926-ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ–வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-ம் ஆண்டு கடலூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1950-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின் நடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலை அம்மாள் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.
எண்ணற்ற பெரும் பணிகளைச் செய்த அஞ்சலை அம்மாள் வாழ்நாள் முழுவதும் நாட்டுப்பற்று மக்கள் பற்று என்பதிலேயே கண்ணும் கருத்துமாக பணியாற்றி வந்துள்ளார். ஒரு கையில் குழந்தையுடனும் மற்றொரு கையில் காங்கிரஸ் இயக்க கொடியுடனும் போராட்ட களத்துக்கு வந்த அஞ்சலை அம்மாளை ஆங்கிலேய அரசு கண்மூடித்தனமாக தாக்கியது.
தாக்குதல் நடந்த போது பெற்ற குழந்தை கை நழுவியதே தவிர கையில் இருந்த தேசக் கொடியை இறுதிவரை கைவிடவே இல்லை.
மனதில் காந்தியப் பற்றும் நெஞ்சில் நாட்டுப் பற்றும் கொண்டு வாழ்ந்த வீரத் தாயான தெய்வத்திருமகள் அஞ்சலை அம்மாள் 20.02.1961-ல் அமரத்துவம் எய்தினார். காந்தியடிகளின் மரணத்துக்கு பின்பு மிகவும் உடல் நலிவுற்று வாழ்ந்து வந்த அன்னையர் திலகம் அஞ்சலை அம்மாள் இறுதி மூச்சிலும் தேசத்தையும் தேசத் தந்தையையும் உச்சரித்தே இப்பூமியிலிருந்து விடை பெற்றார்.
சமுதாய பெருந்தலைவர் எஸ்.எஸ்.இராமசாமி டையாட்சியாரின் தலைமையின் கீழ் நடந்த அஞ்சலை அம்மாளின் இறுதி ஊர்வலம் கடலூரில் இருந்து 45 மைல் அருகிலுள்ள சி.முட்லூரில் நிறைவடைந்து புனித உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
பெரும் அரசியல் தலைவர்களும் சாதி, மதம், மொழி கடந்த நல்லோர்களின் ஜனத்திரளும் கலந்து கொண்டு கண்ணீர்த் துளிகளால் அஞ்சலை அம்மாளுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
அன்னையர் திலகம் அஞ்சலை அம்மாளின் வீரத் தியாகம் செறிந்த வாழ்வை தமிழக அரசு சமச்சீர் கல்வியின் மூலம் எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் பாடமாக வைத்து சிறப்பு செய்துள்ளது.
இட ஒதுக்கீடு போராட்டம்…
தியாகிகளின் எண்ணிக்கையில் குழப்பம்…!
(நாற்காலி செய்தியில் 1-5.09.2021 அன்று வெளியான செய்தி)
கலைஞர் கொடுத்தது 25
ஸ்டாலின் அறிவித்தது 21
அதிகாரிகள் தவறா?
பொதுவாக சுதந்திர போராட்ட தியாகிகள் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு கடைசி கட்ட கவுரவமே அவர்கள் பெயரில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைப்பதுதான். கடந்த 1987-ல் நாடே திரும்பிப் பார்த்த மாபெரும் போராட்டமான வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், போலீஸ் தடியடி பிரயோகத்திலும் சிக்கி 25 பேர் பலியானார்கள்.
1989-ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அமைந்ததும் வன்னியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த சி.என்.இராமமூர்த்தி கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டில் பலியான 25 பேர்களையும் சமூக நீதி போராட்ட தியாகிகள் என தன் கையெழுத்து போட்ட அங்கீகாரமிட்ட சான்றிதழை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
அதோடு அந்தக் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ருபாய் கருணைத் தொகையும், மாதந்தோறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் உதவித் தொகையும் இப்போது அந்த உதவித் தொகை 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது வழங்கினார் கலைஞர்.
அதன் தொடர்ச்சியாக அந்த தியாகிகள் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என வன்னியர் கூட்டமைப்பு சார்பில் பல ஆண்டுகளாக சி.என். இராமமூர்த்தி கோரிக்கை வைத்து வந்தார்.
இதற்கிடையில் கடந்த தேர்தலுக்கு முன்பும் திமுக அரசு அமைந்தால் இட போராட்டத்தில் பலியான தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி சார்பில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார் சி.என். இராமமூர்த்தி.
இந்தச் சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வரானார்.
முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடிகளை செய்து வரும் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டார்.
இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியானவர்களின் நினைவாக விழுப்புரத்தில் 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. அதே, நேரம் அதில் ஒரு குழப்பமும் ஏற்பட்டது
1989-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 25 பேர்களுக்கு இட ஒதுக்கீடு போராட்ட சான்றிதழும் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இப்போதும் 25 பேர்கள் ஒய்வூதியம் பெற்று வருகிறார்கள்.
அப்படி இருக்க சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததில் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 21 பேர்களின் நினைவாக மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்ததால் பலியான இட ஒதுக்கிடு போராட்ட தியாகிகள் 21 பேரா… 25 பேரா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இது குறித்து வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவரும் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் ஒப்பந்தம் செய்து இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான குடும்பங்களுக்கு கருணைத் தொகையும், மாத ஓய்வூதியமும் பெற்றுத் தந்த சி.என். இராமமூர்த்தி அவர்களிடம் பேசினோம்.
“சார் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியானது 25 பேர்தான். இவர்களுக்கு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைத்து தியாகிகள் சான்றிதழும், 3 லட்சம் கருணைத் தொகையும் ஆயிரத்து ஐநூறு
ரூபாய் மாத உதவித் தொகையும் வாங்கித் தந்தேன். இப்போது அந்த உதவித் தொகை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு தமிழக முதல்வராக அப்பா கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்ததை மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராகி அதே தியாகிகளைக் கவுரவப்படுத்தும் விதமாக மணிமண்டப அறிவிப்பை வெளியிட்டு நிறைவு செய்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து மணிமண்டப அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் பலியானவர்கள் 21 என அறிவித்ததில் ஏற்பட்ட குழப்பத்தையும் சொல்லி விடுபட்ட 4 பேர்களையும் சேர்த்து 25 தியாகிகளுக்கான மணிமண்டபமாக கட்டி எழுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து ஆவணங்களையும் கொடுத்து விட்டு வந்தேன்.
முதல்வரும் அதை துறைரீதியில் சரி பார்ப்பதாகவும், விடுபட்டிருந்தால் சேர்த்து கொள்வதாகவும் கூறினார்” என்கிறார் சி.என். இராமமூர்த்தி.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது… முதல்வருக்கு குறிப்பு கொடுக்கும் அதிகாரிகள் முழுமையான வரலாறுகளைக் கவனிப்பதில்லை என்பது மட்டும் உண்மை.
-கோடங்கி
திமுகவுக்கு உதயசூரியன் சின்னம்
கொடுத்த ஏ.ஜி.கோவிந்தசாமி
இந்திய விடுதலைக்கு முன்பு எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களைத் தலைவராகவும், ஏ.ஜி என்கிற ஏ. கோவிந்தசாமி அவர்களைச் செயலாளராகவும் கொண்டு வன்னிய குல சத்திரியர் சங்கம் இயங்கியது.
சுதந்திர இந்தியாவில் காங்கிரசுக் கட்சி வன்னியர்களைப் புறக்கணித்ததால் வன்னியர்கள் வெகுண்டெழுந்தனர். 1952 தேர்தலில் வடார்க்காடு வன்னியர்கள் ‘காமன்வீல் கட்சி’ என்ற பெயரிலும், தென்னார்க்காடு வன்னியர்கள் ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்ற பெயரிலும் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றனர்.
அந்த தேர்தலில், ஏ.ஜி அவர்கள் முதன் முதலில் “ஏ. கோவிந்தசாமி நாயகர்” என்கிற பெயரில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
ஆனாலும், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வன்னியர் தலைவர்கள் காங்கிரசில் இணைந்ததால், ஏ.ஜி 1954 ஆம் ஆண்டில் ‘உழவர் கட்சி’ எனும் தனிக் கட்சியைத் தோற்றுவித்தார். அதே ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காணை கஞ்சனூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் ஏ.ஜி தலைமையில் வன்னியர்கள் திமுகவில் சேர்ந்தனர்.
திமுகவுக்கு சின்னம் ஏதும் இல்லாததால், தான் உருவாக்கிய உதயசூரியன் சின்னத்தை அக்கட்சிக்கு அளித்தார் ஏ. கோவிந்தசாமி. திமுகவின் உதயசூரியன் சின்னம் உருவான வரலாறு இதுதான்.
திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றி பெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த சமூகம் வன்னியர் சமூகம் தான். வன்னிய மக்களை திமுக ஆதரவாளர்களாக மாற்றியதில் மிகமுக்கிய பங்கு வகித்தவர் ஏ. கோவிந்தசாமி அவர்கள் தான். திமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றியவர் அவர்தான். திமுக தேர்தலில் பங்கேற்க வழிவகுத்தவர் அவர்தான். திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தைக் கொடுத்தவரும் அவர்தான்.
அப்படி பெரும் வரலாறு படைத்த ஏ.ஜி.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குறியது.
(மறைக்க முடியாத வரலாறு முரசொலி செய்தி 05.01.1990)
சென்னை. ஜன. 5- தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலிருந்த ஐவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்ட முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வன்னியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது,
வன்னியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சி.என்.இராமமூர்த்தி விடுத்துள்ள அறிக்கை வருமாறு-
தமிழகத்தின் பெருத்த சமுதாயமான வன்னிய சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பு இவற்றில் தங்களுக்கு என்று ஒரு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மூன்று போராட்டங்களை அரசுக்கெதிராக நடத்தியது.
அதன்விளைவாக பலர் சிறையில் ஆயிரக்கணக்கான வன்னியர் மீது வழக்குகள் போடப்பட்டன. வறுமைக்கோட்டிற்கும் கீழ் வறிய நிலையில் வாழும் வன்னியர் வழக்குகளை சுமந்துகொண்டு வீட்டிற்கும், கோர்ட்டிற்கும் அலைந்த வண்ணமாக உள்ள அவல நிலைமையினை ஆட்சி பொறுப்பினை ஏற்றுள்ள கலைஞர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர்களைக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாக்கினர்கள். உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள் உதவியற்று நிர்மூலமாக்கப்பட்ட நிலைமையினையும் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டுள்ள வன்னிய சங்க நிர்வாகிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
எங்கள் வேண்டுகோளை மனதாபிமான அடிப்படையில் ஆராய்ந்து மனிதநேயப் பண்பாளராக நடந்து கொண்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வன்னியர் மீது போடப்பட்ட வழக்குகளை விலக்கிக் கொண்டுள்ளார்கள்.
உயிர் நீத்த குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்து உதவ முன்வந்துள்ளார்கள். குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள வன்னிய செயல் வீரர்களையும் விடுதலை செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
இச்செயல்கள் மூலம் கலைஞர் ஒரு உண்மையான மனிதநேயப் பற்றாளர் என்பதை தமிழுலகுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
குறிப்பாக தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள எங்களினச் செம்மல்கள் ஐவரையும் தமிழர் திருநாளுக்கு முன்பே வெளியே விட ஆணை பிறப்பித்துள்ள தமிழக முதல்வருக்கு வன்னிய சமுதாய மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்ஒதுக்கீட்டின் இறுதிக்கட்டபோர்
வன்னியக்குல சத்திரிய சமுதாயம்
2011ன்படி35%
1931ன்படியும்_43.59%
மக்கள்தொகை கணக்கெடுப்பும் வரலாற்றையும்
சி.என்.ஆரின் 15 சதவீத உள் இடஒதுக்கீட்டு சட்டப்போராட்டத்தையும் தெரிந்துகொள்வோம்…
நமக்கு 15% உள் இட ஒதுக்கீடு நிச்சயமாக கிடைக்கும். ஆனால் ஆட்சியாளர்கள் அரசியல் சூதாட்டம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் நம் சட்டப் போராட்டம் மூலம் அதை மீண்டும் பெற்றே தீருவோம்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நம் வன்னியகுல சத்திரிய சமுதாயம் 35% இருக்கிறது. 1931 இல் பிரிட்டிஷ் கால அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35% வன்னிய குல க்ஷத்ரியர்கள் மற்றும் 8.59% அக்னிகுல சத்திரியர்கள் (as per Anthropological survey of india). அதனடிப்படையில் சி.என்.ஆர். அவர்கள் உயர்நீதிமன்றத்தில் 15 சதவீத உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று 2010 ஆம் ஆண்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடுத்து முதலில் நீதிமன்ற ஆணையைப் பெற்றார்.
அதனடிப்படையில் அரசாணை GO: 35 நாள்: 21.03.2012-ல் பெற்றார். இந்த அரசாணை போடப்பட்டது பிற்படுத்தப்பட்ட நலத்துறை ஆணையத்திடம் உள் ஒதுக்கீட்டிற்கான பரிந்துரையைப் பெறுவதற்கு.
அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நமக்கு 15% விழுக்காடு தனி இட உள்ஒதுக்கீடு கொடுக்க பரிந்துரையும் அனுப்பிவிட்டது.
நீதிமன்றம் தானாக முன்வந்து 2015 இல் ஒரு மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என்ற இறுதி ஆணையைப் பிறப்பித்தது. இத்தனை வருடமாக அதை அரசு செயல்படுத்தாமல் தடுத்து இருக்கிறார்கள்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு மூலம் வன்னிய குல சத்திரிய பொதுசொத்து நல வாரிய சட்டம் (44/2018) இயற்றி பாதுகாப்பை பெற்று நிறைவேற்றினார் சி.என்.ஆர்.
2009-லிருந்து 2019 வரை வன்னியகுல சத்திரிய பொதுச்சொத்து நல வாரியம் நிறைவேற்றவே 18 ஆண்டுகாலம் போராட வேண்டியிருந்தது.
தனி இட உள்ஒதுக்கீட்டிற்காக 2010-ல் தொடங்கிய சி.என்.ஆரின் சட்டப்போராட்டம் நிச்சயமாக விரைவில் வெற்றி பெற்று வன்னியர் கூட்டமைப்பு சாதனை படைக்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 1931- 2011 விவரம்:
1891இல் நம் பிரிட்டீஷ் அரசாங்கம் நடைபெற்ற காலத்தில் நம் முன்னோர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எத்தனித்து வேலை செய்துகொண்டு வந்தார்கள். 1871, 1881 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது நம்மை வன்னிய குல சத்திரியர் என்று அவர்கள் எடுக்கவில்லை.
மற்ற ஜாதியில் சேர்த்து எடுத்து விட்டார்கள். அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது நம் முன்னோர்கள் நிறைய முறையிட்டார்கள் எங்களைச் சரியான ஒரு வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று. 1882 இல் நம் முன்னோர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்கிறார்கள் காங்கிரஸ் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதல் சமுதாய இயக்கம் “அகில இந்திய வன்னிய குல சத்திரிய மகா சங்கம்”
அப்போது நம் முன்னோர்கள் சொன்னது நாங்கள் பஞ்சகட்சம் கட்டிக்கனும், கோயிலுக்குப் போகணும், பூஜை புனஸ்காரம் செய்ய வேண்டும், சத்திரியத்தை கடைபிடித்து நாட்டுக்கு தானதர்மம் செய்து நாட்டைக் பாதுகாக்கணும் என்பது அந்தச் சங்கத்தினுடைய கோரிக்கையாக இருந்தது. அதனுடைய பரிணாம வளர்ச்சி தான் இன்றைய வன்னியர் கூட்டமைப்பு இருக்கிறது.
கோபால் நாயக்கர் போன்ற நம் முன்னோர்கள் ஒரு முயற்சி எடுத்து ஒரு புத்தகத்தை வெளியிடுகிறார்கள் ”வன்னியகுல விளக்கம்” (Mirror of Vanniya’s). இந்த விளக்கத்தை நம் முன்னோர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கொடுக்கிறார்கள். அதை இந்த பிரிட்டிஷ் அரசாங்கம் மைசூர் பல்கலைக்கழகம் போன்ற நிறைய பல்கலைக்கழகங்களில் கொடுத்து ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வுக்குப் பிறகு அந்தப் பல்கலைக்கழகத்தில் வித்துவான்களாக உள்ளவர்களிடமும் துறை தலைவர்களிடமும் ஒப்புதல் பெற்று 1929-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அரசாணை வெளியீடுகிறது. தமிழ் பேசுகிறவர்கள் வன்னியகுல சத்திரியர்கள் என்றும் தெலுங்கு பேசுகிறார்கள் அக்னிகுல சத்திரியர் என்றும் வெளியிடுகிறது.
அதன்பிறகு 1931-ல் முறைப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுக்கிறார்கள். தனிப்பெரும் ஜாதி என்று வன்னியர்களை குறிப்பிடுகிறார்கள். (Single largest majority of community is Vanniyas). இதுதான் உண்மையான கணக்கெடுப்பு.
1921-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பது அரைகுறையாக எடுக்கப்பட்டு நம் சமுதாயத்தை முறைப்படுத்தபடாமல் வேறு வேறு வகுப்பில் சேர்த்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. அதனால் அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறைவாகத்தான் இருக்கும். நிச்சயமாக அந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதில் 1931ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாம் வன்னிய குல சத்திரிய சமுதாயத்தினை மக்கள்தொகை 43.59%. அதன்பிறகு மொழிவாரியாக மாநிலத்தை பிரிக்கும் போது நம்ம சமுதாயத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களுக்காக அக்னிகுல சத்ரியர்கள் என பிரிக்கப்பட்டார்கள்.
அதனால் 8.59% சதவீதம் குறைந்து 35% சதவீதம் ஆக இருக்கிறது. இதுதான் நம் உண்மையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. இதை மறைத்து இப்போது வேறு வேறு வகுப்பினரும் தவறான தகவலை கொடுக்கிறார்கள் அவர்கள் தான் எதோ அதிகம் என்று. இதில் நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் அவரவர்கள் அறிந்த அரைகுறை தகவல்களைத் தவறாகப் பதிவிடுகிறார்கள்.
2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு socia_ecconomic_caste_censes„ சமூகபொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு. இந்தக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருக்கிறார்கள். அதில் 2 கோடியே 52 லட்சம் (35%) வன்னியர் குல சத்திரியர்கள் இப்போது மக்கள்தொகையில் இருக்கிறார்கள்.
நம் வன்னிய குல க்ஷத்ரிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் விழிப்படையுங்கள். நமக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைக்கான போராட்டத்திற்காக சி.என்.ஆர். அவர்கள் ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றம் அடைவதற்கு செய்த அறப்போராட்டம், சட்டப் போராட்டம், இப்போது அரசியலில் வன்னிய குல க்ஷத்ரியர்கள் பெரும்பான்மை பெற அரசியல் போராட்டத்தையும் முன்னெடுத்து நமக்காக களம் கண்டு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் நம் சமுதாய மக்கள் கையில். சிந்திப்பீர்! செயல்படுவீர்!
வன்னியர்நலவாரியம் நீதிமன்ற வழக்கு
மற்றும் அரசு செயல்பாடு விவரம்
வன்னியர்கூட்டமைப்பு சட்டப் போராட்டம்:
அன்புள்ள சொந்தங்களுக்கு நம் வன்னியர் கூட்டமைப்பு நம் வன்னிய குல சத்திரியர்கள் வளர்ச்சியடைய நலத்திட்ட உதவிகள் பெற வன்னிய குல சத்திரியா நலவாரியம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக அறப்போராட்டம் நடத்தி பிறகு சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து வழக்கு தொடுத்து நீதிமன்ற ஆணை வழக்கு எண் WP.No: 20544 of 2012ஆம் ஆண்டிலேயே பெற்றுவிட்டோம்.
மற்ற பிரிவினர்களுக்கு நலவாரியம் உள்ளதைப்போல் நம் மக்களுக்கும் வேண்டும் என சட்டத்தின் மூலம் நம் வழக்கின் அடிப்படையில் பெற்றோம்.
அரசு இந்த வன்னியர் நலவாரியத்துக்கு அரசு நிதி ஒதுக்கி நம்மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் வாரியத்தின் தலையாய கடமை. இனி நாம் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. அரசு இந்த நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தினாலே போதும்.
வன்னியகுல சத்திரியா நலவாரியம் இன்றுவரை செயல்படுத்தாமல் அரசிடம் நிலுவையில் உள்ளது. நம்மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் முழு பலன்களும் சென்றடையவில்லை. முழுமையாக நம் மக்களுக்கு சென்றடைய நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு வன்னியகுல சத்திரியா நலவாரியத்தைச் செயல்பட வழிவகுப்போம்.
வன்னிய குலசத்திரிய பொதுச் சொத்து நல வாரியம் நீதிமன்றவழக்கு மற்றும் அரசாணை விவரம் வன்னியர் கூட்டமைப்பு சட்டப் போராட்டம்
அன்புள்ள சொந்தங்களுக்கு நம் வன்னியர் கூட்டமைப்பு நம் வன்னிய குல சத்திரியருக்கு நம் முன்னோர்களால் விட்டுச் செல்லப்பட்ட பல்வேறு அறக்கட்டளைகளை ஒன்றிணைத்து சட்டம் இயற்றி பாதுகாத்திட பல வருடங்களாக அறப்போராட்டம் நடத்தி எதுவும் நடக்கவில்லை என்றுதான் சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து உயநீதிமன்றத்தில் தனி ஒரு ஆளாக வழக்கு தொடுத்து நீதிமன்ற ஆணை மற்றும் அரசாணையை 2011 ஆம் ஆண்டிலேயே பெற்றுவிட்டோம்.
பத்து லட்சம் கோடி சொத்துக்கு ஆபத்து?
அதிரவைக்கும் வன்னியர் கூட்டமைப்பு
(கல்கி இதழில் டிசம்பர் 2013 அன்று வெளியான செய்தி)
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த வன்னியர் சமுதாயச் செல்வந்தர்கள், தங்களின் சொத்துகளைச் சமுதாய மக்களின் மேன்மைக்காகப் பயன்படும் வகையில் அறக்கட்டளைகளை உருவாக்கி அவற்றை உயிலாகவும் எழுதி வைத்து விட்டுச் சென்றனர். தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் அந்தச் சொத்துக்களின் இன்றைய மதிப்பு சுமார் பத்து லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால், இந்தச் சொத்துக்களில் பல சுயநல அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி வருமானத்தை ஒருசிலர் மட்டுமே அனுபவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு இந்தச் சொத்துக்களைக் கைப்பற்றி வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் என்ற அமைப்பைச் சட்டப்பூர்வமாக அமைக்க வேண்டுமென்று போராடி வருகிறோம், அந்த வகையில் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான அஞ்சல் அட்டைகளை முதல்வருக்கு அனுப்பவிருக்கிறோம்” என்கிறார் வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனரான சி.என். ராமமூர்த்தி.
தமிழகம் முழுவதும் இது போன்ற அறக்கட்டளைகள் நூற்றுக்கும் மேல் இருந்தாலும், எங்களால் 76 அறக்கட்டளைகளைத்தான் அடையாளம் காண முடிந்தது. இவற்றில் ஆளவந்தார் அறக்கட்டளை, பி.டி. செங்கல்ராயன் அறக்கட்டளை, பரமத்தி வேலூர் நன்செய் இடையார் சங்கர கந்தசாமி கவுண்டர் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. மாமல்லபுரம் அருகே உள்ள வட நெமிலியைச் சேர்ந்தவர் ஆளவந்தார், மாமல்லபுரம் கடற்கரையை ஒட்டிய ஆயிரம் காணி (ஆயிரக்கணக்கான ஏக்கர்) நிலம் இவர் பெயரில் உள்ள அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இதில், கணிசமான பகுதி பலரது ஆக்ரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சென்னையில் செங்கல்வராயன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டடங்களுக்குக் குறைந்த அளவே வாடகை வசூலிக்கப்படுகிறது. அந்த வருமானத்தையும் சிலர் மட்டுமே அனுபவிக்கிறார்கள். வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டால் அறக்கட்டளைச் சொத்துக்களிலிருந்து உரிய வருமானம் வருவதற்கான வாய்ப்பும், ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு சொத்துக்களிலிருந்து வரும் வருமானம் வன்னியர்களின் உயர்வுக்காகவும் பயன்படும்.
நான் போட்ட வழக்கின் காரணமாகத்தான், 2011 ஆம் வருடம் நவம்பர் மாதமே, சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்ற வாரியம் அமைக்க வேண்டிய அவசியத்தை அரசுக்கு அறிவுறுத்தியது. உடனேயே, சட்டப்பூர்வமான அமைப்பு ஒன்றை அமைக்கும் கருத்துரு பரிசீலனையில் இருப்பதாக அரசுச் செயலாளர் கோ.சந்தானம் எனக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தார். அதன் பிறகு ஒரு வருடமாக எந்தத் தகவலுமில்லை. விடாமல் நினைவுப்படுத்துவதன் காரணமாக 2012ஆம் வருடம் நவம்பர் மாதம் அரசு செயலாளர் தங்ககலியபெருமாள் வாரியத்துக்கான அலுவலகம் அண்ணா சாலையில் அமைக்கப்பட்டு ஊழியர்களும் நியமிக்கப்பதாகக் கடிதம் மூலம் தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர், வாரியத்துக்கான இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். இருந்தும் கடந்த ஒரு வருடமாக இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே தான் கோரிக்கை அடங்கிய லட்சக்கணக்கான அஞ்சல் அட்டைகளை முதல்வருக்கு அனுப்ப இருக்கிறோம்.” என்கிறார் ராமமூர்த்தி. இவரது அமைப்பு ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. வன்னியர் சங்கத்தைத் தொடங்கி வன்னியர்களையும் உள்ளடக்கிய பிற்பட்டவர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு பெற்றுத் தந்த தலைவர்களில் இவரும் ஒருவர்.
பொதுச் சொத்து வாரியம் அமைப்பதற்கான வழக்கு விவரங்களில் தரவுகள் சேகரிப்பதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த என் அன்பு நண்பர் தாசில்தார் எஸ்.இ.ராமலிங்கம் அவர்களின் பங்கை மறக்க முடியாது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு_எண்_W_P_No 26565 of 2011. நாள்: 18.11.2011
அரசாணை_எண் 20, நாள்: 02.03.2009
பிறகு உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு வழக்கு எண் (W.P.No. 26565/2011) அடிப்படையில் வன்னிய குல சத்திரிய பொதுச்சொத்து நல வாரியத்துக்கு சட்டம் இயற்றி பாதுகாத்திட சட்டமன்றத்திலே சட்ட மசோதா நம் வழக்கின் அடிப்படையில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது.
பின்பு அந்த சட்ட மசோதா நம் குடியரசு தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டு சட்டம் அமுலாகி இப்போது சட்டப் பாதுகாப்புடன் (44/2018) பொதுச்சொத்து நல வாரியம் இயங்கி கொண்டிருக்கிறது.
இந்த வன்னிய குல சத்திரிய பொதுச்சொத்து நல வாரியத்தில் தற்போது வரை சுமார் 118 அறக்கட்டளைகள் இணைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடுக்கப்பட்ட போது 79 அறக்கட்டளைகள் நீதி மனறத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த அறக்கட்டளைகளை நிர்வகிப்பவர்கள் இன்றுவரை பொதுச்சொத்து வாரியத்தில் அறக்கட்டளை விவரம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனால் இந்த வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் முறைப்படி வாரியத்திடம் சேராமல் நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய முழு பலன்களும் சென்றடையவில்லை. முழுமையாக நம் மக்களுக்கு சென்றடைய நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம்.
பூம்புகாரில் நடைபெற்ற மகளிர் பெரு விழா
வன்னியர் சங்கத்தின் சார்பாக மகளிர் பெரு விழா பூம்புகாரில் நடைபெற்றது. பூம்புகாரில் நடைபெற்ற மகளிர் பெரு விழா வரலாற்று சிறப்புமிக்கது.
ஏனென்றால் வன்னியர்கள் 1988-ல் தேர்தல் புறக்கணிப்பு நடைபெறுகின்ற பொழுது வீரத் தாய்மார்கள் நம்முடைய வன்னிய குல இளைஞர்களுக்கு வீர வெற்றி திலகமிட்டு விடை தரும் நாளாக அமைந்தது. அந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக அந்த பகுதியிலேயே முகாமிட்டு சி.என்.ஆரோடு பணியாற்றியவர்கள் துணைத்தலைவர் பாக்கம் ராமகிருஷ்ணன், அஞ்சா நெஞ்சன் ஜெயராமன், மாவீரன் கொற்றவ மூர்த்தி,பேராசிரியர் கோ.சி.மணி, டாக்டர் கருணாநிதி ஆகியோர் அங்கே பணிகளையெல்லாம் சி.என்.ஆரோடு தொடர்ந்து கிராமம் கிராமமாக சென்று மக்களையும், தாய்மார்களையும் திரட்டுவதற்காக நாங்கள் செய்த எல்லா பணிகளிலும் உடனிருந்து சிறப்புச் செய்தார்கள்.
இப்படியாக வன்னியர் சங்க வரலாற்றில் முதல் முதலாக நடைபெற்ற மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மாநாட்டிலேயே நம்முடைய வீரத்தாய்மார்கள் நமக்கு வெற்றித் திலகமிட்டு அனுப்பிய நாள்.
ஆகவே அன்று மாநாட்டில் பங்கேற்று இதற்காக உழைத்தவர்கள், இவர்களையெல்லாம் நினைவு கூறுகின்ற விதமாகவும், அதே நேரத்தில் இந்த மகளிர் பெரு விழாவிற்காக பெரிய அணிவகுப்பு பேரணியை நடத்தினார்கள்.
அந்த அணிவகுப்பு பேரணியை துவக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல் அதற்காக பெரும்பாடுபட்ட மகளிர் அணி தலைவி மதுரை கோமதி அம்மாள், மாநில செயலாளர் திருமதி. நவமணி சீனிவாசன்,மற்றும் பல தாய்மார்கள் பெருவாரியாக பங்கேற்று நம்முடைய தேர்தல் புறக்கணிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இட ஒதுக்கீடு பெறுவதர்க்கு இது ஒரு தூணாக அமைந்தது. இவர்களை எல்லாம் நாம் நினைவில் வைக்க வேண்டும்.
சி.என். இராமமூர்த்தியின் செய்தியறிக்கை
1987 ஆம் ஆண்டு, இடஒதுக்கீடு போராட்டத்தில், காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான, சமூகநீதிப் போராளிகளுக்கு, ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில், “மணிமண்டபம் அமைக்கப்படும்“….. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ், மாண்புமிகு, தமிழ்நாடு முதலமைச்சர், திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு:-
பத்திரிகை செய்தி.
முரசொலி 03.09.2021
- ••
சி.என். இராமமூர்த்தியின் செய்தியறிக்கை
10.5 சதவீதம் செயல்படுத்துவது தொடர்பான குழப்பம்
மாண்புமிகு தமிழக முதல்வரிடம் மக்களுக்கு தெளிவுபடுத்த கடித நகல் மூலம் கேட்டுகொண்டுள்ளோம்.
நேற்று சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் 10.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி உரையாற்றும்போது இந்தக் கொரானா பேரிடரை சரிசெய்வதில் முழு கவனம் எடுத்துக்கொண்டோம்.
இப்போதுதான் கொரானா குறைய ஆரம்பித்துள்ளது. இனி இந்த 10.5% உள் இட ஒதுக்கீடு பற்றி உரிய துறை அமைச்சரிடம் பேசி சரி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஏற்கனவே மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களையும் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் S. ரகுபதி அவர்களையும் சந்தித்து 10.5% செயல்படுத்துவதில் உள்ள குழப்பங்களை களைய கேட்டுக் கொண்டுள்ளோம். அந்த நகலையும் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் அளித்துள்ளோம்.
தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நமக்கு இந்தக் கொரானா பேரிடர் காலம் முடிந்தவுடன் அது பற்றி உரிய துறை அமைச்சரிடம் பேசி சரி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உள் இட ஒதுக்கீட்டின் உண்மையான பரிந்துரை 13.5% சதவீதத்தை இப்போதுள்ள 10.5% இருந்து 13.5 சதவீதம் உயர்த்தி கொடுப்பதற்கும் நாம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இதையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக நமக்கு முதல்வர்/அமைச்சர் உறுதி அளித்துள்ளார். நம் வன்னியர் சமுதாயத்திற்கு 15% சதவீத உள்இட ஒதுக்கீடு கிடைப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் நான் 2010-ல் வழக்கு (W.P. 14025 / 2010) தொடுத்து 2012-ல் அரசாணை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின் தலைவர் திரு ஜனார்த்தனம் அவர்களின் பரிந்துரையின் படி 13.5 சதவீதம் கிடைக்கும் என நம்பினோம்.
ஆனால், இந்த 13.5 சதவீதம் பரிந்துரை உள் இட ஒதுக்கீட்டை பிப்ரவரி 3ஆம் தேதி 2021 ல் அதிமுக வின் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று அவமதிப்பு வழக்கை நான் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தேன். பிப்ரவரி 26ஆம் தேதி 2021 தமிழக அரசு 10.5% விழுக்காட்டாக பரிந்துரையைக் குறைத்து வன்னியகுல சத்திரியர் சாதியினருக்கு கொடுத்தார்கள். அந்த 10.5% சதவீதம் கொடுக்கப்பட்டதில் உள்ள குழப்பங்களைத் தமிழக அரசு விரைவில் சரிசெய்து நம் வன்னிய சமுதாயத்திற்கு ஒரு நல்ல விடியலை மாண்புமிகு தளபதி அவர்கள் தருவார்கள்.
சி.என். இராமமூர்த்தியின் செய்தியறிக்கை
இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளைக் கவுரவிப்பதில் தந்தை கருணாநிதி தொடங்கி வைத்ததை மகன் முதல்வர் ஸ்டாலின் நிறைவு செய்தார்.
– வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி புகழாரம்
1987ல் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு 4 கோடி செலவில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
2021 சட்டசபை தேர்தலுக்கு முன் திமுக கூட்டணி
வெற்றிக்கு வாழ்த்தி கொடுத்த கடிதம்
ஏற்கனவே 1989-ம் ஆண்டு அப்போதைய முதல்வரும், இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தந்தையான கருணாநிதி அவர்களிடத்தில் கோரிக்கை வைத்து இதே தியாகிகள் 25 குடும்பங்களுக்கும் 3 லட்சம் ரூபாய் கருணைத் தொகையும், மாதம் 1,500 பென்ஷன் தொகையும் (இன்றைக்கு அது 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது) பெற்றுத் தந்தேன்.
அதோடு, அவர்களின் தியாகத்தைக் கவுரவிக்க மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் வன்னியர் கூட்டமைப்பு சார்பில் தொடர்ச்சியாக வைத்து வந்தேன்.
இந்தச் சூழலில், உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு முதல்வராக இருந்த அப்பா கருணாநிதி தொடங்கி வைத்ததை மகன் ஸ்டாலின் முதல்வராக அமர்ந்ததும் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்து நிறைவு செய்திருக்கிறார்.
வன்னியர் கூட்டமைப்பின் தொடர் கோரிக்கையை ஏற்று தியாகிகளுக்கான மணிமண்டபம் கட்டப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கவும், வாழ்த்து சொல்லி இதுவரை வன்னிய சமூகத்திற்கு திமுக செய்த நன்மைகளைப் பட்டியல் இட்ட புத்தகத்தையும் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடத்தில் வழங்குவதற்காகத் தலைமை செயலகத்தில் சந்தித்து நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்தோம்.
அப்போது 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை சுட்டிக்காட்டி உயிர்த் தியாகம் செய்தவர்கள் 25 பேர் என்றும், அந்த 25 பேர்களுக்கும் கலைஞர் அவர்கள் கையெழுத்துப் போட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.
விடுபட்ட 4 பேர்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். ஆவணங்களைப் பார்த்து சரி செய்து கொள்ள சொல்வதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது கட்சியின் துணைத்தலைவர் ரெ.குமரப்பா, மாநிலச் செய்தி தொடர்பாளர் கோடங்கி ஆகியோர் உடனிருந்தனர்.
2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வன்னியர் கூட்டமைப்பும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் ஆதரவை தெரிவித்து வழங்கிய கடிதம்!
புதுவை மாநிலத்தில் முதல் முறையாக வன்னியர் சங்கத் துவக்க விழா
புதுவை மாநிலத்தில் முதல் முறையாக வன்னியர் சங்கத் துவக்க விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
அந்தக் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கத் துவக்க விழாவிற்கான ஆயத்த பணிகளை செய்திட புதுவை மற்றும் காரைக்காலில் ஆறு மாதகாலமாக சி.என்.இராமமூர்த்தி ஐயா அவர்கள் பயணித்து அங்கே உள்ள வன்னியர் சமுதாய உறவுகளை எல்லாம் ஒன்றாக அணிதிரட்டி வன்னிய சங்க துவக்க விழாவிற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து முடித்துவிட்டு வன்னியர் சங்கம் துவக்க விழா ஞாயிறு அன்று ஏற்பாடு செய்தார்கள்.
ஞாயிறு என்பதால் மருத்துவர் இராமதாசும் அந்த வன்னியர் சங்கத் துவக்க விழாவில் சி.என்.ஆர் அவர்களோடு கலந்து கொண்ட தருணம்.
வன்னியர் சங்கத்தின் எந்த நிகழ்ச்சியானாலும் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் மருத்துவர் இராமதாசு.
புதுச்சேரி மாநிலத்தில் வன்னியர் சங்கத் துவக்க விழாவினை ஏற்பாடு செய்யப்பட்டதற்கு சி.என்.ஆர். அவர்களோடு உறுதுணையாக ஏற்பாட்டினை செய்த நண்பர்கள் T.G. கிருஷ்ணராஜ், ஜெ. கிருஷ்ணராஜ், துளசிதாசன், சுப்புராயக் கவுண்டர், பால வைத்தியலிங்கம், சூரன், கிருஷ்ணமூர்த்தி முருகேசன், பவானி மதுரகவி மற்றும் பூங்காவனக் கவுண்டர் போன்றவர்கள் சி,என்,ஆரோடு அரும்பாடுபட்டவர்கள்.
இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு ரூ.4 கோடியில் மணி மண்டபம்
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு – வன்னியர் கூட்டமைப்பு நன்றி!
சி. என். இராமமூர்த்தி அறிக்கை
வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என். இராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை வருமாறு, ‘வன்னிய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான தியாகிகளுக்கு ரூ.4 கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்படும். பலியான குடும்பத்தில் ஒருவருக்கு அவர்கள் கல்வித் தகுதிற்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மனதாரப் பாராட்டுகிறது. வாழ்த்துகிறது.
இதே தியாகிகள் 25 பேர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களிடத்தில் அப்போது கோரிக்கை வைத்து, 25 நபர்களுக்கு தலா 3 லட்சம் கருணைத் தொகையும் மாதந்தோறும் உதவித் தொகையையும் சமூக, நீதி போராளிகள் என சான்றிதழும் வழங்கினார்.
இப்போது சட்ட மன்றத்தில் 21 பேர்களுக்கு என முதல்வர் அறிவித்ததில் விடுபட்ட 4 பேரையும் சேர்த்து 25 தியாகிகளுக்கும் சேர்த்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என வன்னிய கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு சி.என். இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பறிபோன மாநில உரிமைகளை மீட்டெடுக்க
முதல்வர் பொறுப்பேற்கும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து!
அனைத்து பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என் இராமமூர்த்தி அறிக்கை!
(முரசொலியில் வெளிவந்த செய்தியறிக்கை தேதி 06.05.2021)
சென்னை, மே 6 – அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் சி.என். இராமமூர்த்தி விடுத்துள்ள வாழ்த்து அறிக்கை வருமாறு:-
பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெக்கும் பணிகளை தொடங்குங்கள் – தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு சி.என். இராமமூர்த்தி வாழ்த்து!
பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கட்டிக் காத்த திராவிட இயக்கத்தின் மாண்பையும் மரியாதையையும் அழிந்து போகாமல் உங்கள் வெற்றியின் மூலம் மீண்டும் நிலை நிறுத்திய தி.மு.க. தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பல ஆண்டுகளாக பறிபோய் உள்ள மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் மகத்தான பணிகள் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதேநேரம் பல கோடி மக்களைக் கொண்ட வன்னிய சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர முறையான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என் நான் போட்ட வழக்கின் (WP No. – 14025/2010) அடிப்படையிலும், பல அறவழி போராட்டங்களின் காரணமாகவும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்படி 15 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தி வன்னியர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
அதே போல வன்னிய மக்களின் பொருளாதார மந்த நிலை மாற சமுதாயத்தைச் சேர்ந்த முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை ஒரே குடையின் கீழ் சேர்த்து பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும் என நான் தொடுத்த வழக்கின் காரணமாக (WP No. 26565/2011) அமைக்கப்பட்ட பொதுச் சொத்து நலவாரியம் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். போலிகளின் பிடியில் உள்ள வன்னியர் பொதுச்சொத்துக்களைக் கைப்பற்றி வன்னியர் சமூகம் வாழ்வாங்கு வாழ வழி ஏற்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
உங்கள் தலைமையில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல மீண்டும் வாழ்த்துவதிலும், ஆதரவு தருவதிலும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியும், வன்னியர் கூட்டமைப்பும் மகிழ்ச்சி அடைகிறது.
இவ்வாறு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.என். இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு ரூ. 4 கோடியில் மணி மண்டபம்!
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு – வன்னியர் கூட்டமைப்பு நன்றி
சி,என். இராமமூர்த்தி அறிக்கை
(முரசொலியில் வெளிவந்த செய்தியறிக்கை)
சென்னை செப். 3 – வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என். இராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை வருமாறு:
வன்னிய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான தியாகிகளுக்கு ரூ. 4 கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்படும்.
பலியான தியாகிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்கள் கல்வித் தகுதிற்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சி மனதாரா பாராட்டுகிறது. வாழ்த்துகிறது.
இதே தியாகிகள் 25 பேர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களிடத்தில் அப்போது கோரிக்கை வைத்து, 25 நபர்களுக்கு தலா 3 லட்சம் கருணைத் தொகையும், மாதந்தோறும் உதவித்தொகையும், சமூக நீதி போராளிகள் என சான்றிதழும் வழங்கினார்.
இப்போது சட்டமன்றத்தில் 21 பேர்களுக்கு என முதல்வர் அறிவித்ததில் விடுபட்ட 4 பேரையும் சேர்த்து 25 தியாகிகளுக்கு சேர்த்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு சி.என்.இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
******
இராமசாமி படையாச்சியார் 100வது நாளில் அவரது திருவுருவ சிலைக்கு வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம்…
Vanniyars stand to lose more with internal reservation
Now they can compete within the 20% quota for MBCs
With the Pattali Makkal Katchi (PMK) reviving its long-standing demand for a 20% quota for the vanniyars, there is a view in the State bureaucracy that the community stands to lose more than what it has now if the concept of internal reservation is implemented based on the communitys proportionate strength to the state’s overall population.
As the Vanniyars come under the Most Backward Classes (MBCs) and the Denotified Communities, both of which are earmarked 20% reservation, they are entitled to compete within the segment for education and employment. But if an exclusive quota is given to them, they will have to restrict themselves to the lesser segment this is because the vanniyars constitute around 13% of the population an official said, citing the amba sankar Commission’s report of 1985.
Baring the scheduled Castes, the scheduled Tribes and the unreserved communities, the Backward Classes (BCs) and the MBSs account for 78% of the population. The BCs and the MCs are accommodated within the 50% quota.Proportionately, the Vanniyars share will come down to 8.33%.
“When the community can now compete within the 20% quota for MBCs, why should it lower its eligibility by pitching in for internal reservation?” asked the official. It was for the reason that christians, 10 years ago got the government to withdraw its decision to give them a 3.5% exclusive quota within the BC fold, prefering instead to be treated as part of the overall BC’s share of 26.5%.
But, Protagonists of the idea of internal reservation say their demand is reasonable” as the Vanniyars have not benefited much from the 20% quota for the MBCs in the last 30-odd years. PMK spokeperson K.Balu wants the government to make public the data on the recruitment of the vanniyars to the state government services all these years. “This will bring to the fore how we are inadequately represented in the government services,” he said, adding that the principle of elasticity in reservation could be applied to the community, as was done for the Arundathiyars.
C.N.Ramamurthy founder -president of the vanniyar Federation and the petitioner in a case on internal reservation at the madras High Court, said the state Backward Classes Commission, after being asked by the issue in March 2012 in the light of his nation had refused to share with him, its findings on the ground that they were confidential.
வன்னியர்களுக்குப் பொதுசொத்து நலவாரியம் பெற்றுதந்த சி.என்.ராமமூர்த்திக்கு பாராட்டு விழா
(13.08.2018 அன்று மாலைமலரில் வெளிவந்த செய்தியறிக்கை)
வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் சி.என்.ராமமூர்த்திக்கு வடசென்னை வன்னியகுல சத்திரிய மக்களின் சார்பில் பாராட்டு விழா தண்டையார் பேட்டையில் நடந்தது.
பாராட்டு விழா
சட்டத்தின் மூலம் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் பெற்றுத் தந்த சி.என்.ராமமூர்த்திக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ராமகிருஷ்ணன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
எம். ராமலிங்கம் வரவேற்றார். சைதை வி. தேவதாஸ், வி.எம். பல்லவ மோகன், ஜி.நரசிம்மவர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் ஜோசப் ராஜு., எம். பன்னீர் செல்வம், கே. ரகுநாதன், பி. அன்பரசன், எடப்பாடி ஏ. சுப்பிரமணி, வீரபாண்டியன், மன்னர் மன்னன், நரேந்திர பாபு, டாக்டர் ஜெயச்சந்திரன், வக்கீல் குபேந்திர குணபாலன், லிங்க மூர்த்தி, பன்னீர் தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சி.என்.ராமமூர்த்தி ஏற்புரை நிகழ்த்தினார். முடிவில் விஜய நாகேந்தர் நன்றி கூறினார்.
முதல்வருக்கு பாராட்டு
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: –
வன்னியர் பொதுச் சொத்துகளை பாதுகாக்க கடந்த மாதம் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிப்பது.
வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்திற்கு சட்ட அங்கீகாரம் அளித்து சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வது.
வன்னியர் சமுதாயத்திற்கு சொந்தமான அறக்கட்டளைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு வன்னியர் பொதுச்சொத்து நல வாரியம் ஏற்படுத்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து போராடி வந்தவர் சி.என்.ராமமூர்த்தி.
போராடி வெற்றி
தமிழக அரசால் அமைக்கப்பட்ட வன்னியர் பொதுச் சொத்து நலவாரியத்துக்கு சட்ட பாதுகாப்பு கேட்டு வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்று, உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தொடர்ந்து போராடிவெற்றி பெற்று சட்ட அங்கீகாரம் தந்த தலைவர் சி.என்.ராமமூர்த்திக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
வன்னியர் சமுதாய மக்கள் உயிர்பலி கொடுத்து பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இட ஒதுக்கீட்டில் 115 சாதிகள் இணைக்கப்பட்டதால், போராட்டம் நடத்தி பெற்ற பலனை வன்னியர்கள் முழுமையாக அடைய முடியவில்லை. அதனால் வன்னியர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு கேட்டு 2010-ம் ஆண்டு தலைவர் சி. என். இராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நமது கோரிக்கையைப் பரிசீலித்து தமிழக அரசு உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.
வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இக்கூட்டத்தின் மூலம் கோரிக்கையும் வைக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு
வன்னியர் கூட்டமைப்பு – அனைத்திந்திய முன்னேற்றக் கட்சி ஆதரவு!
சி.என். இராமமூர்த்தி அறிவிப்பு
(19.09.2021 அன்று முரசொலியில் வெளியான செய்தி)
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு மற்றும் பாட்டாளி முன்னேற்றக் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சி.என்.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:- தமிழகத்தில் மிக பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிக்காகப் பாடுபட்ட
வன்னியர் சமூகத்தில் உள்ள ஒரே அமைப்பு வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்து தமிழகத்தில் பரவலாக பிரச்சாரம் செய்து தி.மு.க. கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு அணிலாக துணை நின்றது.
தேர்தல் நேரத்தில் வன்னிய சமூக மக்களின் நலனுக்காக நாங்கள் முன் வைத்த இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளுக்கான மணி மண்டபம், தியாகிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளைத் தேர்தல் வெற்றிக்குப் பின் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்ற அறிவிப்பு வெளியிட்டு இந்தப் பெரும்பான்மையான சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர வழிகோலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அ.இ.பா.மு.க. மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறது.
எம்.பி. தேர்தலிலும் சட்டசபைத் தேர்தலிலும் எப்படி தொடர் வெற்றிகளைப் பெற்றோமோ அதே போல் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் நல்லாட்சி தொடர தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். அதற்கு அனைத்து வகையிலும் வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அ.இ.பா.மு.க. முழுமையாக ஆதரவு தெரிவித்து களப்பணியாற்றும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
15 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி வன்னியர் அமைப்பு ஆர்ப்பாட்டம்
(13.10.2019 அன்று தினமலரில் வெளியான செய்தி)
வன்னியர்களுக்கான, 15 சதவீத உள் இடஒதுக்கீட்டை, அரசு இம்மாத இறுதிக்குள் வழங்காவிட்டால், போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர், ராமமூர்த்தி எச்சரித்துள்ளார்.
வன்னியர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடுகோரி, வன்னியர் கூட்டமைப்பு சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், அந்த அமைப்பினர் கூடினர்.
உண்ணாவிரத போராட்டம் நடத்த, போலீஸார் அனுமதி மறுத்ததால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தி பேசியதாவது: வன்னியர்களுக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஐந்து ஆண்டுகளாகியும் இன்னும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை, அரசுக்கு வன்னியர்கள் அனுப்பினர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, ஜனநாயக முறைப்படி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். இம்மாத இறுதிக்குள் இடஒதுக்கீட்டை, தமிழக அரசு வழங்காவிட்டால், வன்னியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
2021 தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் 10.5% இடஒதுக்கீடு குறித்து கேள்வி
பாமகவினர் திடீர் வாக்குவாதம்
(06.03.2021 அன்று தினகரனில் வெளியான செய்தி)
2021-ம் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து பத்திரிகையாளர் கேள்வி கேட்டதையடுத்து பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாமக சார்பில் தேதல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று தி–நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது
நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸில் கலந்து கொண்டனர். பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். பாமக தேர்தல் அறிக்கை குறித்து ராமதாஸ், அன்புமணி வி்ளக்கினர். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியிடம், மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று கடந்த தேர்தலில் முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்தீர்கள். மக்கள் உங்களை ஏற்காததால் அதை கைவிட்டு விட்டீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அன்புமணி இதே கேள்வி எத்தனைமுறை தான் கேட்பீர்கள் என்றார். மேலும், மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்பதை தற்போது மாற்றம், முன்னேற்றம், தமிழகம் என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு, சி.என். ராமமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில்தான் தற்போது தமிழக அரசு வழங்கியுள்ளதாக கூறுகின்றனரே என்று கேள்வி எழுப்பியதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் முதலில் பதில் அளிக்கவில்லை. சி.என். ராமமூர்த்தி உங்களுக்கு நண்பரா என கேள்வி கேட்டு, கண்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.
ஆனால், அன்புமணி 10.5% சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எத்தனை ஆண்டுகள் என்ன மாதிரியான போராட்டங்கள் நடத்தினார்
என்பது குறித்து விளக்கிக் கூறினார். இதையடுத்து பத்திரிகையாளர் 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து மேலும் கேள்வி கேட்க முற்பட்ட போது அவர்களுக்கு மைக் ஆப் செய்யப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட போது பாமக தலைவர் ஜி.கே.மணி நிகழ்ச்சியை முடிப்பதாக நன்றி கூறினார்.
அதன்பிறகு, அங்கிருந்த பாமகவினர் ஒருசிலர் கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூத்த நிர்வாகிகள் சிலர் வாக்குவாதம் செய்த நிர்வாகிகளை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று பாமக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பாமகவினர் நேற்று 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையின் புத்தகத்தை வெளியிட்டனர். அந்தப் புத்தகத்தின் அட்டையின் பின் பகுதியில் பாமகவின் சின்னமான மாம்பழம், அதிமுகவின் இரட்டை இலை, பாஜகவின் தாமரை சின்னம் இருந்த நிலையில் கூட்டணிக் கட்சியான தேமுதிகவின் முரசு சின்னம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய சட்டப் போராட்டத்தால்தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது.
வன்னியர் கூட்டமைப்பு தலைவர் அறிக்கை
(05.03.2021 அன்று தினத்தந்தியில் வெளியான செய்தி)
வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும், சட்டமன்றத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி.
2010-ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 15% சதவீதம் உள் ஒதுக்கீட்டு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தேன், இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பரிந்துரை கேட்டு 21-3-2012 அன்று அரசாணை பிறப்பித்தது. 13-6-2012 அன்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது பரிந்துரையைத் தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாததால் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தேன். 1-4-2015 அன்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு 30 நாட்களுக்குள் இதனைத் தமிழக அரசு நிறைவேற்ற ஆணையிட்டது.
எனது சட்டப்போராட்டத்தின் விளைவாக கிடைத்த 10.5% சதவீத வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு சிலர் உரிமை கோருவதும் தங்களது வெற்றியாக கொண்டாடுவதும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வன்னியர்களுக்கு 15 சதவீதம்
உள் ஒதுக்கீடு இல்லை என்றால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்
வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ஆவேசம்
கள்ளக்குறிச்சியில் வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.என். ராமமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது, வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீட்டிலேயே 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வேண்டுமென்று நான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து , அந்த வழக்கின் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் ஒரு மாத காலத்துக்குள் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என 2015-ல் இறுதி தீர்ப்பு வழங்கியது.
இந்த இறுதி ஆணையைச் செயல்படுத்த வேண்டுமென நான் தமிழக அரசை பலமுறை வலியுறுத்தி உள்ளேன். அதற்கான ஆவணம் முதல்வர் டேபிளில் தான் உள்ளது. 4 ஆண்டுகளில் 16,358 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன் எந்தக் கோப்புகளையும் தங்க வைப்பதில்லை என்று முதல்வர் கூறுவதில் உண்மை இல்லை. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத எடப்பாடி அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். விரைவில், விசாரணைக்கு வருகிறது. அப்போது உலகமே திரும்பி பார்க்கின்ற வகையில் இந்த அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்துவோம் என்றார்.
வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்!
(முரசொலியில் 18.02.2022 அன்று வெளியான செய்தி)
பின்னர் வன்னியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சமூகநீதிப் போராளி இடஒதுக்கீட்டு நாயகர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னையில் உள்ள வன்னியர் கூட்டமைப்பின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருவன:
1) 10.5% உள்இட ஒதுக்கீட்டின் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை வருகின்ற 15 & 16 அன்று ஏற்கனவே சமர்பித்துள்ள 10.5 சதவீதத்துக்கான உயர்நீதிமன்ற வழக்கில் (WP No 14025 of 2010) பெறப்பட்ட நீதிமன்ற ஆணை, அரசு ஆணை எண் GO MS No. 35, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை ஆணை, நீதிமன்ற இறுதியாணை ஆகியவற்றை விவாதித்து 10.5% தடை உத்தரவை நீக்கி செயல்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.
2) வன்னியர் பொதுச்சொத்துவாரியத்திலிருந்து வன்னிய சமுதாயத்துக்குத் தேவையான பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளைச் செயல்படுத்த வைத்தல்.
3) வன்னியர் நலவாரியம் வழக்கு எண் WP No. 20544 of 2012 உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்று நீதிமன்ற ஆணை பெற்று விட்டோம்.
அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
4) இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த 25 தியாகிகள் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட மணிமண்டபம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
5) வன்னிய சமுதாய சுதந்திர போராட்டத் தியாகிகள் சாமி நாகப்ப படையாட்சி, அர்த்த நாரீசவர வர்மா, அஞ்சலை அம்மாள், எஸ்.௭ஸ். இராமசாமி படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், விருப்பாச்சி கோபாலு நாயக்கர் தலைவர்களை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் புறக்கணிக்காமல் காட்சிப்படுத்த தமிழக அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
6) நடைபெற இருக்கின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி ஆதரவு அளிக்கிறது.
அமைப்பு மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சமூகநீதி கூட்டணியான திமுக கூட்டணிக்கு தேர்தலில் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றிக்குப் பாடுபட வேண்டும்.
- I) 1986-ல் சென்னை கோட்டை முன்பு பட்டை நாமம் தரித்து பட்டினிப்போராட்டம் சி.என்.ஆர். தலைமையில் போராட்டம்:
சென்னை கோட்டை முன்பு, நாள் 15.3.1986-ல் பட்டை நாமம் தரித்து பட்டினிப்போராட்டம் நம் சி.என்.ஆர் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பு என்ன நடந்தது என்று சொன்னால், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை எந்த ஒரு பல்கலைக் கழகத்திலும் வன்னிய குல சத்திரியர்கள் துணைவேந்தராக வந்ததில்லை. உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதியாக வந்ததில்லை. எந்த ஒரு பெரிய பொறுப்புகளுக்கும் வரவில்லை இதையெல்லாம் சி.என்.ஆர். அவர்கள் சுட்டிக்காட்டி அவர் தலைமையில் அந்தப் பட்டை நாமம் தரித்து பட்டினிப் போராட்டம் நடந்தது.
இதை ஏன் இன்று சுட்டிக்காட்டுகிறேன் என்றால் தொடர்ந்து இந்த அரசு நம் சமுதாயப் பணியிலும் இந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்திலும் பட்டை நாமம் போட்டு விட்டது என்பதால் சி.என்.ஆர். தலைமையில் பட்டை நாமம் தரிக்கும் பட்டினிப்போராட்டம் கையில் எடுத்து நடைபெற வைத்தார்.
இந்தப் பட்டை நாமம் தரித்து பட்டினிப்போராட்டம் முன்னெடுப்பு நடவடிக்கைக்காக தமிழகம் முழுவதும் நம் வன்னிய சமுதாய இளைஞர்கள் மாணவர்களைச் சந்திப்பதற்காக அன்றைய தினம் சி.என்.ஆர். அவர்களும் எம்.எம் குருபரன், செந்தமிழ்ச் செல்வன், கோ.சுப்பிரமணி மற்றும் என் சம்பத் அவர்களோடும் பயணித்தார்கள்.
ஒவ்வொரு மாவட்டமாக இவர்கள் பயணிக்கின்ற போது பட்டை நாமம் தரித்து பட்டினிப்போராட்டம் செய்கின்ற அவசியத்தை சொல்லியதோடு இளைஞர்கள் மாணவர்கள் நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.
இந்த போராட்டத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பே விழிப்புணர்வை சி.என்.ஆர். அவர்கள் மற்றும் அந்தக் குழு எல்லா மாவட்டத்திலும் செய்தார்கள்.
15.3.1986 அன்று பட்டை நாமம் தரித்து பட்டினிப்போராட்டம் நம் சி.என்.ஆர் தலைமையில் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துணைத் தலைவராக இருந்த இராம. நாகரத்தினம், மாவட்டச் செயலாளர் ஜமீன் ராயப்பேட்டை குப்புசாமி அவர்களும் இதிலே கலந்து கொண்டார்கள்.
மேலே சொன்ன அத்தனை பேரும் பட்டை நாமம் தரித்த பட்டினிப்போராட்டம் கலந்துகொண்டார்கள். எல்லோரும் பட்டை நாமம் தனது நெற்றியிலே
போட்டுக்கொண்டு இந்த அரசு நமக்கு பட்டை நாமம் சாத்தி விட்டது என்று தெரிவித்து பட்டை நாமம் பட்டினிப் போராட்டம் செய்தார்கள்.
அந்தப் பட்டை நாம பட்டினிப் போராட்டம் முடியும் தருவாயில் வந்தவர் பட்டை நாமத்தை தனது நெற்றியில் போட மறுத்து விட்டார். அவர் தெளிவாக இருந்து மற்றவர்களுக்கு பட்டை நாமத்தை போட்டுவிட்டார். அவர் யாரென்று சொன்னால் ஞாயிற்றுக்கிழமையில் ஒரு ஒருநாள் மட்டும் வந்து செல்கின்ற சத்திய சீலர் டாக்டர் ச.இராமதாஸ் அவர்கள்.
இப்படி எந்த ஒரு போராட்டமானலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தவர் தான் தன்னை வன்னியர்களின் அடையாளம் என்று கூறிக்கொள்கின்றனர்.
இந்தப் பட்டை நாமம் பட்டினிப் போராட்டம் முடிந்த பிறகு ஒரு 20% இட ஒதிக்கீடு கிடைக்க வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது. நம் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்பட்டது. இந்த பட்டை நாமம் தரித்த பட்டினிப் போராட்டம் சி.என்.ஆர். தலைமையில் சிறப்பாக நடைபெற்று வெற்றியாக மாறியது.
- II) இரயில்மறியல்போராட்டம் சி.என்.ஆர். தலைமையில் போராட்டம்:
19.12.1986 அன்று ஒருநாள் இரயில் மறியல் போராட்டம் சி.என்.ஆர். அவர்கள் தலைமையில் தமிழகமெங்கும் நடைபெற்றது. இந்த ஒரு நாள் இரயில் மறியல் போராட்டம் சி.என்.ஆர். அவர்கள் தலைமையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த இரயில் மறியல் போராட்டத்திற்கு முன்னெடுப்பு பணியாக செய்யூர் மற்றும் மதுராந்தகம் தாலுகாவில் சி.என்.ஆர். உடன் வன்னிய கிராமங்கள் தோறும் பயணித்தனர். இந்தக் களப் பணியிலே சி.என்.ஆர். அவர்களுடன் பயணித்து சென்றவர்கள் அரசூர் செல்வராஜ், மணப்பாக்கம் கண்ணாயிரம், சூனாம்பேடு விநாயகம், சேம்புலிபுரம் ராஜாமணி, செய்யூர் வேணுகோபால் ஆகியோர் பயணித்தனர்.
இப்படி சி.என்.ஆர். மற்றும் மேலே சொன்ன உறவுகள் கிராமம் கிராமமாக சென்று இந்த இரயில் மறியல் போராட்டத்திற்கான ஆயத்த பணிகளை செய்ததோடு மட்டுமில்லாமல் வண்டி வாகனங்களை ஏற்பாடு செய்துகொண்டு 18.12.1986 அன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக சி.என்.ஆர். அவர்கள் குழு சுமார் 1000 பேர் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது மகாபலிபுரம் அருகாமையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று காவல்துறையினர் கேள்வி கேட்ட பொழுது சி.என்.ஆர். அவர்கள் உடனடியாக வாகனத்திலிருந்து கீழே இறங்கி நாங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவரைச் சந்தித்து நாங்கள் பாராட்ட இருக்கிறோம், வாழ்த்து சொல்ல இருக்கிறோம் அதனாலதான் நாங்கள் இத்தனை வாகனங்களில் செல்கிறோம் என்று சொன்னார். அதற்குக் காவல் துறையினர் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
உடனடியாக சி.என்.ஆர். அவர்கள் மற்றும் அனைவரும் அன்று இரவே சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகாமையில் உள்ள கண்ணப்பர் திடல் வந்து அடைந்தார்கள். அன்று இரவு முழுக்க அங்கேயே தங்கினார்கள். அன்று அதிகாலை 12 மணி அளவில் பேசின் பிரிட்ஜ் (பாலம்) பள்ளத்தின் வழியாக இறங்கி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்திற்கு சென்றார்கள்.
அந்தத் தண்டவாளத்தில் சி.என்.ஆர். மற்றும் போராட்டக்குழு அமர்ந்துகொண்டனர். மகளிரும் பயணித்து இருந்தனர், போராட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கே வருகின்ற ரயில்களை எல்லாம் சி.என்.ஆர். மற்றும் போராட்டக்குழு தடுத்து நிறுத்திவிட்டனர். காவல்துறையினர் சென்ட்ரல் இரயில் நிலையம் முன்பு முழுவதுமாக பாதுகாப்பதற்காக நின்றுகொண்டிருந்தனர். ஆனால் சி.என்.ஆர். அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு திட்டம் வகுத்தார். சென்ட்ரல் இரயில் நிலையம் முன்பாக செல்வது சாத்தியமில்லை என்று அவருக்கு தெரிந்ததால். இரயில் நிலையத்தின் பின்புறமாக பாலத்தின் வழியாக உள்ளே செல்வது என்று திட்டமிட்டிருந்தனர். அதைத்தான் செயல்படுத்தினார். இந்த சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பத்திற்கும் மேற்பட்ட தண்டவாள பாதைகள் இருந்ததால் எல்லா ரயில்களும் இதன் வழியாகத்தான் வரும் செல்லும். அதனால் அதிகாலையிலேயே 3 மணி அளவில் பாலத்தின் வழியாக புதருக்குள் புகுந்து உள்ளே சென்று தண்டவாளத்தின் மீது சி.என்.ஆர். மற்றும் போராட்டக்குழு படுத்துக்கொண்டனர்.
சி.என்.ஆர். அவர்கள் முதன் முதலில் தண்டவாளத்தில் படுத்து கொண்ட பிறகு நம் போராட்ட குழுவில் உள்ள அனைவரும் படுத்துக்கொண்டனர். அப்போது அங்கே உள்ள ரயில் நிலைய காப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் இங்கே நிறைய ரயில்கள் வந்து இருக்கிறது, நீங்கள் விலகிச் செல்லுங்கள், இரயில்கள் செல்லவேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு சி.என்.ஆர். அவர்கள் நாங்கள் ரயிலை நிறுத்தி தான் போராடுவோம் என்று சொன்னார்.
அதற்குள் பொழுதும் விடிந்தது. காலை பத்து மணி ஆகிவிட்டது நீங்கள் எவ்வளவு நேரம்தான் போராடுவீர்கள், இரயில்களை நிறுத்தி விட்டீர்கள் அவையெல்லாம் இப்போது பதிவாகிவிட்டது. தயவுசெய்து கலைந்து செல்லுங்கள் என்று காவல்துறையினர் போராட்ட குழுவிடம் வேண்டுகோள் வைத்தனர்.
அப்போது சி.என்.ஆர். அவர்கள், இன்னொருவர் எங்கள் போராட்டக் குழுவுக்கு வரவேண்டும் அவர் வந்தவுடன் நாங்கள் செல்கிறோம் என்று சொல்லி அந்த இடத்திலேயே போராட்டக் குழு ஒரு கட்டுக்கோப்பாக குழுமியிருந்தனர். இந்த போராட்டத்திற்கு செய்யூர் மற்றும் மதுராந்தகம் கிராமங்களில் இருந்து அதிக அளவு பேர் வந்திருந்தனர் சென்னையிலிருந்து குறைவாகவே வந்து கலந்து கொண்டனர்.
காலை 11 மணி அளவில் மருத்துவர் ச. இராமதாஸ் அவர்கள் அந்தப் போராட்ட களத்திற்கு தாமதமாக வந்து முதலில் உள்ள தண்டவாள பாதையில் படுத்துக்கொண்டார். பிறகு அங்கே சி.என்.ஆர். அவர்கள் சென்று மருத்துவர் ச. இராமதாஸ் அவர்களிடம் இங்கே படுத்து போராட்டம் செய்தால் காவல்துறையினர் லத்தி சார்ஜ் செய்யும் போது ஈஸியாக நம் போராட்ட குழு கலைந்து சென்று வைத்துவிடுவார்கள் என்று சொல்லி நாங்கள் இருக்கும் அந்த பகுதிக்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மத்திய பகுதிக்கு சி.என்.ஆர். மற்றும் மருத்துவர் சென்று சி என் ஆர் அருகில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார்.
அதற்குள் காவல்துறையினர் அங்கேயே நிறைய பேர் குவிந்து விட்டனர். உங்களை எல்லாம் கைது செய்து விடுவோம் கலைந்து செல்லுங்கள் என்று அறிவிப்பு செய்தார்கள். ஆனால் போராட்ட குழு எங்களை முறையாக கைது செய்யுங்கள் என்று சொல்லி தண்டவாளத்தில் உட்கார்ந்து விட்டார்கள்.
அப்போது காவல்துறையினர் போராட்டக் குழுவைச் சுற்றி நின்று கொண்டனர். அப்போது சி.என்.ஆர். அவர்களும் மணப்பாக்கம் கண்ணாயிரம் அவர்களும் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களை கட்டிப்பிடித்து கொண்டனர். பின்பு போராட்டக்குழு இவர்களைச் சுற்றி ரவுண்டு ரவுண்டாக சுற்றி கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றனர். மருத்துவர் ச.இராமதாஸ் அவர்கள் நடுவில் இருக்கும்போது சி.என்.ஆர். அவர்கள் எங்களைத் தாண்டி தான் நீங்கள்
அவரைத் தொட முடியும் என்று சொன்னார். அப்போது அங்கே உள்ள இணை ஆணையர் அவர்கள் பேச வேண்டும் என்று சொல்லி உள்ளே வந்தார்கள். அங்கே வந்த உடனே அவர்கள் கையைத் தொட்டு யு ஆர் அண்டர் அரெஸ்ட் என்று சொன்னார்கள்.
உடனடியாக அடுத்த நிமிடமே லத்தி சார்ஜ் ஆரம்பித்தார்கள். லத்தி சார்ஜ் ஆரம்பித்தவுடனே எல்லா போராட்டக்காரர்களும் எல்லாத் திசையும் நோக்கி சிதறினார்கள். அப்போது சி.என்.ஆர்., மருத்துவர் ச.இராமதாஸ் மற்றும் கண்ணாயிரம் 3 பேர் மட்டும் அங்கே இருந்தனர்.
கண்ணாயிரம் மற்றும் சி.என்.ஆர். அவர்கள் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நடுவில் வைத்து இரண்டு பேரும் தங்களுடைய ஒவ்வொருவர் கையையும் இருக்கமாக பிடித்துக் கொண்டனர்.
அப்போது காவல்துறையினர் அடித்தபோது கண்ணாயிரத்தினுடைய கை எலும்பு முறிந்தது. பிறகு கண்ணாயிரம் அவர்கள் புத்தூருக்கு சென்று கட்டு போட்டு கையை குணப்படுத்திக் கொண்டார்.
இந்த ஒருநாள் இரயில் மறியல் போராட்டம் சி.என்.ஆர். அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த இரயில் மறியல் போராட்டம் மாணவர்களாலும் இளைஞர்களாலும் நடத்தப்பட்டது.
இந்த ஒரு நாள் இரயில் மறியல் போராட்டம் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் பிறகு ஒருநாள் இரயில் மறியல் போராட்டம் ஒரு மிக எழுச்சியாக அமைந்தது.
III) புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம்:
1986 ஆம் ஆண்டு அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த புரட்சி தலைவர் டாக்டர்.எம்ஜிஆர் அவர்கள் மதுராந்தகம் வருகை தந்து அன்றைக்கு அரசு சார்ந்த நெடுஞ்சாலை துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அவர்கள் 28.06.1986 அன்று மதுராந்தகம் வருகை தந்தார்கள்.
அதற்கு முன்னதாகவே சி.என்.ஆர். அவர்கள் தலைமையில் பட்டை நாமம் தரித்து பட்டினிப்போராட்டம் முடிந்தவுடன் எம்ஜிஆர் அவர்களுக்கு சி.என்.ஆர். மற்றும் போராட்டக்குழு கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்று முடிவு செய்து செய்யூர் தாலுகா மற்றும் மதுராந்தகம் தாலுக்கா பகுதியில் சி.என்.ஆர் அவர்கள் களப்பணி ஆற்றினார்கள்.
அன்றைக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் குமுளி செல்வராசு, அரசூர் செல்வராஜ், மணப்பாக்கம் கன்னிப்பன், சூனாம்பேடு விநாயகம், செய்யூர் வேணுகோபால், கடலூர் கிராமம் சங்கர், பெரும்பாக்கம் பெருமாள் மற்றும் ஈசூர் சுப்புராயன் ஆகிய இவர்களெல்லாம் சி.என்.ஆர் அவர்களோடு இரண்டு தாலுகாக்களில் உள்ள 4 ஒன்றியங்களிலேயே பயணித்து எல்லா இடங்களிலும் சைக்கிளில் சென்று வன்னியர் சங்க கொடிகளை ஏற்றினார்கள் .
இந்த மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்பதாக சொன்னவர் வர வில்லை. அன்றையப் பொதுக் கூட்டத்திற்கும் வரவில்லை. அந்தக் காலத்தில் பொதுக்கூட்டம் என்றால் மாநாடு போன்று தான் நடக்கும். அதற்கும் அவர் வரவில்லை. சண்டே மட்டும் வரும் அவர் அன்றைக்கும் வரவில்லை.
பிறகு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கருப்புக்கொடி காட்டும்போது, மதுராந்தகம் வருகை தந்தபோது, கருப்புக்கொடி காட்டியபோது அவர் அந்தக் காரில் இருந்து இறங்கி வந்தார். அப்போது உங்களுக்கு என்ன பிரச்சனை ஏன் கருப்புக்கொடி காட்டுகிறீர்கள் என்று கேட்டார்கள். உடனடியாக சி.என்.ஆர். அவர்கள் தனது கையில் வைத்திருந்த கடிதத்தை கொடுத்து எங்களுக்கு இந்த அரசு பணியில் எந்தவித ஒரு சலுகையும் கிடைக்கவில்லை என்று சொல்லி எம்.ஜி.ஆர். கையிலே கொடுத்தார். அதை அவர் வாங்கி அருகாமையில் உள்ள அரசு அதிகாரியிடம் கொடுத்தபோது சி.என்.ஆர். அவர்கள் திரும்ப அந்தக் கடிதத்தை கொடுங்கள் என்று கேட்டு அதை வாசித்து அவருக்கு காட்டியபோது, அதுவரை எம்.ஜி.ஆர். அவர்கள் ரோட்டில் நின்று அமைதியாக கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்.
நாங்கள் முறையாக முழமையாக வரி கட்டும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் , ஏனென்றால் நாங்கள் வாங்கும் பொருட்கள் அனைத்தும் வரி கட்டிய பிறகே வாங்கப்படுகிறது. நாங்கள் அதிகமாக விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதற்காக நாங்க வாங்கும் பெட்ரோல் டீசல் ஒரு தீப்பெட்டி ஆக இருந்தால் கூட அதற்கு முழுமையாக வரி கட்டிய பிறகுதான் வாங்குகிறோம். அப்படிப்பட்ட மிக அதிகமாக வரி செலுத்தும் சமுதாயத்தைச் சார்ந்த எங்களுக்கு நீங்கள் எந்த ஒரு அடிப்படை நியாயத்தையுமே எங்களுக்கு செய்யவில்லை என்று சொன்னார்கள்.
அப்பொழுது எம்.ஜி.ஆர். அவர்கள் விளக்கமாக சொல்லச் சொல்லிக் கேட்டார். சி.என்.ஆர். அவர்கள் விளக்கமாக சொல்லும் போது ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள சமூகநலக் காடுகளில் இருந்து வரும் வருமானங்கள் ஒவ்வொன்றும் நேரடியாக அரசு கஜானாவுக்கு செலுத்துவதில்லை. அங்கேயே வாழும் மக்களுக்கு அதில் ஒரு பகுதி திருப்பி கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அடிப்படை நியதி இந்த அரசிடம் இருக்கிறது.
அதேபோன்றுதான் எந்த ஒரு ஒன்றியமாக இருந்தாலும் எந்த ஒரு சமூகம் சார்ந்தவராக இருந்தாலும் வீடு விற்கும் போது நிலங்கள் விற்கும்போது பதிவு செய்யும் போது செலுத்தும் கட்டணம், அந்தக் கட்டணம் அரசு கஜானாவுக்கு நேரடியாக முழுவதுமாக செல்வதே இல்லை. அதனுடைய ஒரு பகுதி அந்த பகுதி வாழ் மக்களுக்கு திருப்பி அளிக்கப்படுகிறது.
இப்படியெல்லாம் ஒரு அடிப்படை நியாயம் வைத்திருக்கின்ற இந்த அரசு வன்னியச் சமுதாயத்தில் இவ்வளவு பெரிய வரி வாய்ப்புகளையும் உழவுத் தொழிலையும் நம்பி செய்திருக்கின்ற எங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று சொன்ன போது அதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் தனது கையை நெஞ்சைத் தொட்டு வைத்துக் கொண்டு நான் செய்கிறேன் என்று உறுதி அளித்தார்கள்.
எம்.ஜி.ஆர். அவர்கள் உறுதி அளித்து முடித்து விட்டு காரில் ஏறி சென்ற பிறகு அங்கே சி.என்.ஆர். மற்றும் உடன் இருந்தவர்களைக் கைது செய்தார்கள்.
கைது செய்து அரை கிலோ மீட்டருக்கு அருகில் உள்ள மதுராந்தகத்தில் அடைக்காமல் 11 கிலோ மீட்டர் தூரம் உள்ள சித்தாம்பூர் சிறைச்சாலையில் அடைத்தார்கள்.
இந்தக் கருப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்ட சி.என்.ஆர். அவர்களுடன் கைது செய்யப்பட்டவர் உத்தரமேரூர் R. விசுவநாதன் அவர்கள். இதை ஏன் இங்குச் சுட்டிக் காட்டுகிறேன் என்றால் நமக்கு சும்மா கிடைத்துவிடவில்லை இந்த இட ஒதுக்கீடு இப்படியெல்லாம் பல போராட்டங்களைச் செய்து தான் நாம் பெற்றுள்ளோம்.
நான் முதலில் சொன்ன பட்டை நாமம் தரித்த பட்டினிப்போராட்டம் சி.என்.ஆர். அவர்கள் தலைமையில் தான் நடந்தது. இரண்டாவது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு கருப்புக்கொடி காட்டிய போராட்டமும் அவர் தலைமையில் தான் நடந்தது. ஆகவே இந்த வரலாற்று நிகழ்வுகளில் யார் எங்கே இருந்தார்கள் என்பதை நீங்கள் எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் பழைய வரலாறுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தனது வரலாற்றை அறியாத எந்த ஒரு இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.அதனால் தான் உங்களுக்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதனாலதான் நாம் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு இப்போது இந்த நிலையை எட்டி இருக்கிறோம்.
- IV) 1987 தொடர் சாலை மறியல்; சி.என்.ஆர். கைது; லட்சக்கணக்கான வன்னிய சமுதாய மக்கள் மீது வழக்கு; சி.என்.ஆர். சட்டப்போராட்டத்தால் விடுவிப்பு:
1987 செப்டம்பர் 17 அன்று அதிகாலை 12 மணி அளவில் சி.என்.ஆர். தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழப்பாடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலை 6 மணிக்கு போலீஸ்
அங்கே வந்தது.முக்கிய நிர்வாகிகள் 69 பேரை கைது செய்தது. பிறகு போலீஸ் நிலையம் கொண்டு சென்றார்கள். அதன்பிறகு வழக்குப்பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தார்கள். அதன்பிறகு 28 நாட்கள் கழித்து வெளியே வந்தார்கள்.
பிறகு நீதிமன்ற விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு போகும் ஒரு நாள் முன்பு, தஞ்சை மாவட்டத்தில் அஞ்சா நெஞ்சன் திரு. T.A. ஜெயராமன் மற்றும் மாவீரன் கொற்றவமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த திருமண நிகழ்ச்சிக்கு தஞ்சையில் சி.என்.ஆர். அவர்கள் கலந்துகொண்டு நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சேலம் நீதிமன்றத்திற்கு செல்லும்போது தாமதமாகிவிட்டது.
அப்போது நீதியரசர் அவர்கள் 68 பேரையும் முட்டி போட வைத்து உள்ளார் நீதிமன்றத்தில்.
அதைப் பார்த்த சி.என்.ஆர். அவர்கள் நீதிமன்றத்தில் நீதி அரசர் அவர்களிடம் வாதாடினார். நாங்கள் எல்லோரும் சமூக நீதிக்காகப் போராடிய போராளிகள், நாங்கள் என்ன சாராயம் விற்றமோ, திருட்டு வேலை செய்தோமா? முறையாக அறிவித்து தான் நாங்கள் இந்த தொடர் சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களைக் கீழ்த்தரமாக நடத்துவது சரியல்ல என்று வழக்கறிஞரான சி.என்.ஆர். அவர்கள் வாதாடினார். பிறகு சில மணிநேரம் நீதியரசர் அவர்கள் வழக்கை ஒத்திவைத்தார்.
மீண்டும் வழக்கு விசாரணை நீதி அரசர் அவர்கள் தொடங்கியபோது, கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது அனைவரும் சமூக நீதிக்காக போராடியவர்கள் என்று சொல்லி எல்லோரையும் 69 பேரையும் விடுவித்தார்கள். மன்னிப்பும் கேட்டார்.
இப்படி 69 பேரையும் சி.என்.ஆர். அவர்கள் வாதாடி விடுதலை பெறச் செய்தார்.
இந்த நிகழ்வை கலைஞர் அவர்களிடம் சி.என்.ஆர். அவர்கள் எடுத்துச் சொல்லி, கலைஞர் அவர்களே நீங்கள் பெரியாரின் வாரிசு, அண்ணாவின் அன்புத்தம்பியாக உள்ள நீங்கள், சமூக நீதிக்காக போராடிய எங்கள் சமுதாய லட்சக்கணக்கான மக்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
நான் உள்ளிட்ட 69 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு நீதிமன்றத்தில் நானே வாதாடி விடுதலையாகி உள்ளோம் என்று அவருக்கு எடுத்துக் காட்டி லட்சக்கணக்கான எங்கள் சமுதாய மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சி.என்.ஆர். ஒருவர் மட்டுமே கேட்டார்.
அதைப் புரிந்து கொண்ட கலைஞர் அவர்கள் லட்சக்கணக்கான நம் சமுதாய மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை டாக்டர் இராமதாஸ் அவர்களுக்கும் சேர்த்து தள்ளுபடி செய்தார். இது வரலாற்று நிகழ்வு. அதை நடத்திக் காட்டியவர் சி.என். ஆர். அவர்கள் ஒருவரே.
இப்போதுள்ள இளைய சமுதாய மக்களே, வரலாறு என்ன என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
- V) வன்னிய குல சத்திரிய தலைவர்கள் குண்டாஸில் கைது; சி.என்.ஆர். நடைபயணம் போராட்டம்; கைது விடுவிப்பு:
தமிழக அரசியலில் முதல் முறையாக சட்டமன்றத்திலேயே அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அன்றைய வன்னியர் சங்க பொதுச் செயலாளர் சி.என்.இராமமூர்த்தி அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த மாநாட்டிலே எப்படி பேசி இருக்கிறார், வன்முறையைத் தூண்டி இருக்கிறார், சட்டம் படித்த இவர் இளைஞர் ஆகவும் இருக்கிறார், இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லி சட்டமன்றத்தில் நீண்ட நெடியதொரு உரையாற்றியது மட்டுமல்லாமல், மறுநாளில் முரசொலியில்
மிக விரிவான விளக்கங்களை எழுதி, இந்த சி.என்.இராமமூர்த்தி மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று சி.என்.ஆர். மீது குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்று பெருத்த முயற்சி எடுத்தார்.
இந்த நிலையில் சி.என்.இராமமூர்த்தி அவர்கள் தி.நகரில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்த போது, அந்தக் கூட்டத்திலே அன்றைய எம்.எல்.ஏ.களாக இருந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் அவர்களும் லட்சிய திமுக டி. ராஜேந்தர் அவர்களும் கலந்து கொண்டு இது தவறு, இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு சி.என்.ஆர். அவர்கள் நான் இந்த பவானியில் நடந்த வேட்டுவக்கவுண்டர் வன்னிய ஒற்றுமை மாநாட்டிலேயே நான் எதையும் தவறாகப் பேசவில்லை என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், நான் பேசாததை கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் பேசிய காரணத்தினாலே அவர் மன்னிப்பு கோர வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லை என்று சொன்னால் உயர் நீதிமன்றம் அல்ல உச்ச நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்து அவர்மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி பேசிய பிறகு என்ன நடந்தது என்று சொன்னால்,
மறுநாள் சட்டசபை கூடுகின்ற பொழுது அப்போது கலைஞர் அவர்கள் பேசியபோது சி.என். இராமமூர்த்தி அவர்கள் பற்றிய தவறான தகவலை நான் இந்த மாமன்றத்தில் வழங்கி இருக்கிறேன் சொல்லிவிட்டேன். அது இந்த அவை குறிப்பில் ஏறியிருக்கிறது.
வன்னியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான சி.என்.இராமமூர்த்தி அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் அப்படி பேசவே இல்லை என்று சொல்லி வாபஸ் பெற்றதோடு வருத்தமும் தெரிவித்தார். இந்த தகவல்களை தவறாக தந்த சுருக்கெழுத்தாளர் காவல் துறையைச் சார்ந்த மூன்று பேர்களை பணியிடை நீக்கம் செய்கிறேன் என்று சொல்லி அவர்களைப் பணியிடை நீக்கம் செய்தார்.
இதற்கு அடுத்து வேகமாக கோபத்தில் இருந்த அன்றைய முதல்வர் அவர்கள் பு.தா. இளங்கோவன், பு.தா. அருள்மொழி, நெய்வேலி வாழைச் செல்வன், ஆரணி அருகே உள்ள அக்ரா பாளையம் சி. இராஜேந்திரன் மற்றும் ய. தாராசிங் ஆகிய இவர்கள் எல்லோரையும் குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
இப்படி இவர்களைச் சிறையில் அடைக்கப்பட்ட போது, ஒவ்வொருவரும் இருந்த சிறைச்சாலைகளுக்கு சி.என்.ஆர். மட்டுமேதான் சென்று பார்த்தார்.
பு.தா. அருள்மொழி அவர்களை மதுரை சிறையிலே சென்று சந்தித்தார். பு.தா. இளங்கோவன் அவர்களை கோவை சிறையில் சந்தித்து ஆறுதலும் சொன்னார். பிறகு நெய்வேலி வாழைச்செல்வன் அவர்களை திருச்சி சிறைச்சாலையிலே சந்தித்து இந்த குண்டாஸிலிருந்து வெளியே எடுக்க ஆறுதலும் ஆலோசனையையும் சொன்னார்.
அதன் பின்பு வேலூர் சிறையிலே அடைக்கப்பட்ட ய. தாரா சிங் மற்றும் சி. இராஜேந்திரன் அவர்களை சந்திக்க இயலாத ஒரு வாய்ப்பு ஏற்பட்ட போது, அன்றைக்கு ஐ.ஜி யாக இருந்த அலெக்சாண்டர் அவர்களைச் சந்தித்து சிறைச்சாலையில் உள்ள இரண்டு பேரைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி மனு கொடுத்தபோது, அலெக்சாண்டர் அவர்கள் சொன்னது,
நீங்கள் வேறு மாதிரி இந்த இயக்கத்தை நடத்துங்கள், தமிழ்நாட்டில் நடந்த 7 நாள் சாலைமறியல் போராட்டத்தில் இந்த மாதிரி போராட்டக் கலவரத்தை வீடியோவாக எந்த காவல்துறை அதிகாரியும் தமிழக அரசும் செய்யவில்லை.
நான் மட்டும் செய்து வைத்திருக்கிறேன் என்று அதையெல்லாம் போட்டு காண்பித்து நீங்கள் சாதாரணமாக இணக்கமாக சென்று உங்கள் சமுதாயத்தை முன்னேற்றுங்கள் என்று ஆலோசனை வழங்கியதோடு அனுமதியும் கொடுத்தார்கள்.
அந்த அனுமதியின் அடிப்படையில் சி.என்.ஆர். அவர்கள் வேலூர் சிறைச்சாலையில் இருந்த சி. இராஜேந்திரன் மட்டும் ய. தாராசிங் அவர்களை சந்தித்து விட்டு அவர்களுடைய இல்லங்களில் சி.என்.ஆர். பயணித்து பொதுச்செயலாளர் என்ற முறையில் சி.என்.ஆர். ஆல் தனிப்பட்ட முறையில் இயன்ற உதவியை அன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் செய்தார் என்பதை இந்த அரிய சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.
அதோடு நில்லாமல் வேலூரில் இருந்து சென்னை நோக்கி இந்த குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று சொல்லி நெடும் நடைபயணம் வந்தார். அந்தப் நடை பயணத்தின் போது வாலாஜாபாத் அருகே மற்றவர்களால் சி.என்.ஆர். மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கப்பட்டார்கள். அப்போது மூன்று நாட்கள் எந்தப் பேருந்தும் அந்த மாவட்டத்தில் செல்ல முடியவில்லை. போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது ஸ்தம்பித்து நின்றது.
சி.என். ஆர். அவர்கள் அவலூர்பேட்டை கிராமத்தில் தங்கினார். சி.என்.ஆர். உடன் வந்தவர்களுக்கு எல்லாம் அந்த அவலூர்பேட்டை கிராம மக்கள் தான் உணவு கொடுத்தார்கள்.
பிறகு சி.என்.ஆர். அவர்கள் நடை பயணத்தை தொடர்ந்து நடத்தி கவர்னர் அலெக்சாண்டர் அவர்களிடம் முறையிட்டார்.
பிறகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை சி.என்.ஆர். அவர்கள் சந்தித்து விளக்கினார். நாங்கள் சமூக நீதிக்காக போராடியவர்கள். எங்களைத் தவறாக சித்தரிக்காதீர்கள், இப்படி எல்லாம் அவர்களை கைது செய்வது நல்லது இல்லை. அவர்களைத் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் முன்னதாக நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர் சி.என்.ஆர். மட்டுமே.
இரண்டு முறை சி.என்.ஆர். அவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களுடைய இல்லத்திலும் மற்றும் தலைமை செயலகத்திலும் சந்தித்து வேண்டுகோள் வைத்த போது கலைஞர் அவர்கள் உடனடியாக நாளைக்கே நான் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று சொல்லி சி.என்.ஆர். அவர்களை அனுப்பி வைத்தார். இன்றைக்கே உத்தரவு போடுகிறேன் என்று சொன்னார்கள்.
பிறகு சி.என்.ஆர் அவர்கள் தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே வந்தபோது திரும்பவும் கலைஞர் அவர்கள் கூப்பிட்டு இவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுதலை ஆனாலும் அவர்கள் ஏற்கனவே ஏதாவது ஒரு வழக்கில் இருந்தால் அவர்களைப் பெயில் (பிணை விடுவிக்க) எடுக்க சொல்லுங்கள் என்று சி.என்.ஆர். அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். பிறகு அனைவரையும் விடுதலை செய்தார்கள்.
ஐவரும் விடுதலை ஆன பின்பு சி.என்.ஆர். அவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியும் நேரிடையாக கலைஞர் அவர்களைச் சந்தித்து மரியாதையையும் தெரிவித்தார். அதன் பிறகு இந்த நிகழ்வுகள் எல்லாம் முரசொலி பத்திரிகை முதல் பக்கத்தில் அப்போது போடப்பட்டது. அதேபோல் சி.என்.ஆர். அவர்கள் தவறாகப் பேசினார் என்ற அந்த நிகழ்வும் மிகப்பெரிய அளவில் கட்டுரையாகவே முரசொலியில் வந்தது என்பதையும் இந்த அரிய சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.
இந்தக் குண்டாஸில் கைதான அனைவரையும் சந்திக்க டாக்டர் ச ராமதாஸ் அவர்கள் பார்க்க சென்றதும் இல்லை. அவர்களை விடுவிக்க ஒரு சிறு முயற்சியும் செய்யவில்லை.
வன்னியச் சமுதாயத்தின் இளைய தலைமுறைகளே, உண்மையான வரலாறுகளைத் தெரிந்து கொள்ளுங்கள். சி.என்.ஆர். அவர்கள் மற்றவர்களுக்காகப் போராடிய போராட்டம் இப்பொழுது உள்ளவர்கள் யாருமே செய்யவில்லை. இப்போது வன்னிய இனத்தின் அடையாளம் என்று சொல்பவர்கள் அந்தக் காலகட்டத்தில் சண்டே ஒருநாள் மட்டுமே வந்து செல்பவர்களாக இருந்தார்கள்.
சமுதாயத்தொண்டு மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்ட சி.என்.ஆர். அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக மிகச்சரியாக செய்து கொண்டு செல்கிறார்.
இளைய தலைமுறைகளே! உண்மையான வன்னிய குல சத்ரிய இன போராளி யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், தெரிந்து கொண்டு அவர்களோடு பயணித்து நம் சமுதாயம் முன்னேற பாடுபடுங்கள்.
வன்னிய சமுதாயம் அளித்த சிறப்பு
சி.என்.இராமமூர்த்தி ஐயா பெயரில் உள்ள
இராமமூர்த்திநகர்
1980-களில் இருந்து கடந்த 50 வருட காலமாக சி.என்.இராமமூர்த்தி ஐயா நமது வன்னிய குல சத்திரிய சமுதாயத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டுள்ளார்.
1987-ல் ஐயா சி.என்.ஆர். தலைமையில் நடைபெற்ற தொடர் போராட்ட சாலை மறியலின் விளைவாக நமக்கு 20% இட ஒதிக்கீடு கிடைக்கப்பெற்றது.
அந்தத் தொடர் சாலைமறியலில் சி.என்.ஆர். அவர்கள் சேலம் மாவட்டத்துக்கு தலைமையேற்று போராட்டம் செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டம் அருகில் உள்ள 4 மாவட்டத்திலும் சி.என்.ஆர். அவர்களுக்கு அதிக ஆதரவு இருந்தது.
சி.என்.ஆர். செய்த பல தொண்டுகள் விளைவாக அந்தப் பகுதியில் உள்ள நம் உறவுகள் அவர் மீது உள்ள அதிக பற்று காரணமாக சி.என். இராமமூர்த்தி நகர் என்ற பெயரில் சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில், கல்பகனூர் அருகில் சி.என்.இராமமூர்த்தி நகர் என்று ஒரு கிராமத்திற்கு பெயர் வைத்தனர்.
இது நாளடைவில் ராமமூர்த்தி நகர் என்றாகிவிட்டது. இந்த சிறப்பு இப்போது உள்ள தலைவர்களில் சி.என்.ஆருக்கு மட்டுமே உண்டு.
கடந்த நாற்பதாண்டு காலம் சமுதாயத் தொண்டு மட்டும் செய்து வந்துள்ள சி.என்.ஆர். அவர்கள் இப்போது நமக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு களமிறங்கியுள்ளார்.
அவருடைய சமுதாயத் தொண்டுகளையும் அவருடைய வரலாற்றையும் தெரிந்துகொள்வோம்.
சி.என்.ஆரின் போராட்ட கள புகைப்பட தொகுப்பு
2010ல் சி.என்.ஆர்.தலைமையில் வேலூரில் நடை பெற்ற 15% சதவீத இட ஒதுக்கீட்டுக்கான ஆலோசனை கூட்டம்
இட ஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் வீடு கட்டித்தர அடிக்கல் நாட்டிய சி.என்.ஆர். துரதிர்ஷடவசமாக இந்த வீடுகள் கட்டும் பணி சமுதாய பெயரில் அரசியல் நடத்தும் சிலரால் தடுக்கப்பட்டது.
சி.என்.ஆரின் சட்டப் போராட்டத்திற்கான ஆவணங்கள்
வன்னியர் பொது சொத்து நலவாரியம்
இவ்வாரியத்திற்கான இணையதளம்
வன்னியர் பொதுச் சொத்து நல வாரிய அறக்கட்டளைகள் / பொறுப்பாட்சிகள் 17.02.2022 தேதி வரையிலான பட்டியல்
S
வன்னியர் உள் இட ஒதுக்கீடு
நோக்கக் காரண விளக்கவுரை
1985ஆம் ஆண்டில் திரு. ஜே.ஏ. அம்பாசங்கர் IAS (ஓய்வு) அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கூறப்பட்ட ஆணையமானது, தமிழ்நாடு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களின் மக்கள் தொகையினை மதிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் அப்போதிருந்த அனைத்து அத்தகைய சாதிகள் மற்றும் சமூகங்களின் பின் தங்கிய நிலையைக் கண்டறிவதற்காக கூறப்பட்ட ஆணையத்தால் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களிடம் கணக்கெடுப்பு ஒன்று எடுக்கப்பட்டது.
1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதியினர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கல்வி நிலையங்களில் இடங்கள் மற்றும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 45/1994) கீழ் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்களான கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையிலும் அரசின் கீழ்வரும் பணிகளில் பதவிகள் அல்லது நியமனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்காக மற்றும் சீர்மரபினருக்காக முறையே 30% மற்றும் 20% இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி வந்துள்ளனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர், பிற சாதியினர் மற்றும் சமூகத்தினருடன் போட்டியிட்டு, அவர்களின் உரிய மற்றும் அத்தகைய ஒதுக்கீட்டின் பலன்களின் சட்டப்படியான பங்கினை பெற இயலவில்லை என்பதாலும், அத்தகைய கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் மற்றும் அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளில் அவர்களுக்கான தனிப்பட்ட இடஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சார்ந்த வன்னியகுல சத்ரியர்களுக்கு வழங்குவதற்காக அவர்களிடமிருந்து தொடர்ந்து முறையீடுகள் வரப் பெற்றுள்ளன. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவரானவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கையை ஆய்வு செய்து, தமிழ்நாடு மாநிலத்திற்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களின் சமமான வளர்ச்சியை முன்னேற்றுவதற்காகவும் பல்வேறு நலன்களுக்கு சிறந்த வாய்ப்பினை வழங்குவதற்காகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (வ) 10.5% விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 7% விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2.5% விழுக்காடு ஆகிய மூன்று பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். கூறப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவும் அதற்கிணங்க இட ஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றவும் அரசானது முடிவு செய்துள்ளது.
இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகின்றது.
எடப்பாடி கே பழனிச்சாமி
முதலமைச்சர்.
வன்னியர் நல வாரியம்
வன்னியர் இடஒதுக்கீடு தமிழகஅரசு
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல் முறையீட்டில் சி.என்ஆர் ஐயாவின் உள்இஇடஒதுக்கீட்டுக்கான ஆவணங்களை சேர்த்து (W.P.No. 14025 of 2010) சமர்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தவறானது என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது..
மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் அவர் தலைமையில் இயங்கும் தமிழக அரசுக்கும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் S.S. சிவசங்கர் அவர்களுக்கும் சட்டத்துறை அமைச்சர் S. ரகுபதி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சி.என்.ஆர். ஐயாவின் சட்ட போராட்ட ஆவணங்களை கொண்டு 10.5% உள்ஒதுக்கீடு உறுதியாக தமிழக அரசுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் போராடுவோம்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை 10.5% உள் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்த தீர்ப்பின் 184 பக்கத்தில் 13, 14 மற்றும் 28-ம் பக்கங்களில் இந்த வழக்குத் தொடர்ந்தது சி.என்.இராமமூர்த்திதான் என தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
10.5% உள் ஒதுக்கீடு எப்படி பெறப்பட்டது தெரியுமா?
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு பெறுவதற்காக சி.என்.ஆர். அவர்கள் கடை பிடித்த வழிமுறை இதுதான்…
1) சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010-ல் வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என CNR வழக்கு தொடுத்தார். WP/No. 14025/2010
2) 2012-ல் நீதிமன்றம் மூலம் ஆணை பெற்றார்.
3) நீதிமன்ற ஆணையை தொடர்ந்து தமிழக அரசு 21.03.2012 அரசாணை பிறப்பித்தது. அரசாணை எண் MS-35.
4) 13.06.2012-ல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது.
5) 1.4.2015-ல் சென்னை உயர் நீதிமன்றம் சி.என்.ஆர். வழக்கில் இறுதி ஆணை வழங்கியது.
6) 6.5.2015 தமிழக அரசின் முதன்மை செயலாளர் அருள்மொழி அவர்கள் “உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த கருத்துரு பரிசீலனையில் உள்ளது” என CNR அவர்களுக்கு கடிதம் அனுப்பினார்.
7) நீதிமன்றம் இறுதி ஆணை வழங்கிய பிறகும் தமிழக அரசு மவுனமாக இருந்ததால், “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்தி 10.10.2020-ல் சென்னையில் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை சி.என்.ஆர். நடத்தினார்.
8) அதைத் தொடர்ந்து 3.2.2021-ல் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தார். வழக்கு எண்: SR no WP/10546/2021 and HCMA010150902021 CNR vs Tamilnadu government
9) CNR வழக்கால் நீதிமன்ற நெருக்கடி காரணமாக 18.2.21-ல் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தமிழக அரசு பரிந்துரையை கேட்டது.
10) தமிழக அரசின் கடிதத்தை தொடர்ந்து 22.2.21-ல் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியது.
11) இந்தச் சூழலில் 26.2.2021 அன்று 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்து உள் ஒதுக்கீடு வழங்கி அரசு அறிவிப்பு வெளியிட்டது.
12) இந்த அரசு அறிவிப்புக்கு 14.08.2021-ல் மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை உத்தரவு பிறப்பித்து.
அதோடு, 10.5% உள்ஒதுக்கீட்டுக்கு தடை விதித்த காரணத்தை நீதிமன்றம் தனது 184 பக்க தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளை தடைவிதித்த 184 பக்க தீர்ப்பில் கேட்ட கேள்வி, ஏன் C.N.Ramamurthy Vs Chief secretary of TN govt 2015 உள்ஒதுக்கீட்டு ஆவணங்களை இடஒதுக்கீடு வழக்கின் போது அதற்கான தரவுகளை ஏன் சமர்ப்பிக்கவில்லை என கேட்டுள்ளது.
இதே போன்ற கேள்வியைத் தான் சுப்ரீம் கோர்ட்டிலும் நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள்.
அதோடு, 7 காரணிகளில் 6 காரணிகளை தவிர்த்து, 7வது காரணியான “மக்கள் தொகை கணக்கெடுப்பு” தரவுகளை ஏன் சமர்ப்பிக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதன் காரணமாக தான் உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கான நியாயமான உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உள்ளது.
இந்தச் சூழல் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய மக்களுக்கு பெரும் பின்னடைவுதான் என்றாலும்,
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசின் மீதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் எங்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது.
காரணம், சமூக நீதியை பேணவும், நல்லிணக்கம் நிலவவும் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பாக வன்னிய மக்கள் பெரிதும் நம்பும் உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல பல வகையில் தடைகள் வந்தாலும், துரோக கூட்டத்தின் சதிகள் அனைத்தையும் உடைத்து வன்னியர்கள் வாழ்வு மேம்பாடு அடையும் வகையில் சமூக நீதி நிலை நாட்டப்படும் அனைத்து வழிகளையும் திறந்து புது சரித்திரம் படைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒன்று சேருவோம்…
வென்று முடிப்போம்… சமுதாய, சமூக நல்லிணக்கம் காப்போம்!
வணக்கம்!
***




