வன்னிகுலாதிக்கம்

 

பரத கண்டமாகிய இவ்இந்து தேசத்திலே அனேக ஆயிர்ம் ஆண்டுகளுக்கு முன் பல சக்ரவர்த்திகளும், அனேக அரசர்களும் அரசு புரிந்து வந்தார்களென்று செப்பேடு, சிலாசாஸனங்களேயன்றி, பல இதிகாச புராணங்களும் முறையிடுகின்றன.

அவ்வித அரசர்களின் உற்பத்தியைக் கூறுமிடத்து கர்ப்பாந்த சிருஷ்டி, காரணர்த்த சிருஷ்டி, பிரளயாந்த சிருஷ்டி என வகுக்கப்பட்டிருக்கிறது. க்ஷத்திரயர்களுக்கு மூல புருடர் ஆங்கீரசரெனவும் அவர் வழி வந்தவர்களே ஆங்கீரஸாளான அக்கினி வம்சத்தார் அல்லது வன்னியர் எனவும் வியாச பாரதம் அநுசாசன பர்வம் 113, 126, 129வது சுரோகங்கிள் கூறப்பட்டிருக்கிறது.

 

பதினென் புராணங்களில் ஒன்றாகி ஆக்னேய புராண உத்தரவாக தேவி மஹத்துவமாகிய வன்னியர் புராண ஆதாரப்படி, அரக்கர்களது துன்பத்தை போக்க, காரணர்த்த சிருஷ்டியாக சம்பு மகா ரிஷியின் யாகத்தினின்று உருத்திர வன்னியர் முதலாயினோர் தோன்றினார்களெனவும், அம்மன்னர் மரபே வன்னியர்களெனவும் காண்கிறோம்.

 

இதுவுமின்றி வியாஸ மகாபாரதம் ஆரண்யபர்வம் 220வது அத்தியாயம் மார்க்கண்டேய சருக்கம் 5வது சுலோகத்தில் ‘வேதத்தில் மிக வல்ல பிராமணர்கள், சம்பு எனப்பட்ட அக்நி புத்திரனுடைய பிரதாபங்களைப் பற்றி பேசத் தொடங்கினார்கள் என்று கூறுகிறது.

 

 

 

 

 

கவிச் சக்ரவர்த்தியாகிய

கம்பர் பாடிய சிலை எழுபது 2வது பாடலின் கண்

 

‘முந்துநாள் வீரசம்பு முனிசெய்மா மகத்திற் போந்த

சந்தததி யார்சீ ரோது கௌத்தகு முதியர் கேட்ப

இந்தணி சடிலத் தெம்மா னணைகழல் பராஅ யிசைத்தான்

செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல்’

 

எனக் கூறயிருப்பதில் சம்புமகா முனிவரால் செய்யப்பட்ட மகத்தாகிய யாகத்திலிருந்து உற்பவித்த (உருத்திர வன்னிய மகாராஜன் முதலியோர்) சந்ததியாரெனக் குறிப்பிட்டிருக்கிறார். பின் வரும் வன்னி மன்னர் சாஸனங்கள் பலவற்றிலும், சம்பவராயர் என்றே பதிந்திருக்கிறது.

ஹரிவம்ஸம் 32வது அத்தியாயத்தில் 115 முதல் 122வது வரையிலுள்ள சுலோகத்தின் கர்த்தர்வது:-

‘பிரம்மாவினிடம் அக்நி, அக்நியினிடமாக சந்திரன், சந்திரனது குமாரன் புதன், புதனுக்கு புரூரவன், புரூரவனுக்கு ஆயு, நகுஷன், யயாதி முதலியவர்கள் தோன்றி, அக்கால்வழியே துர்வசு உற்பவித்தானெனவும், துர்வசுவின் குமாரனே வள்ளி எனவும், அச்சந்ததியில் வந்தவன் துஷ்யந்தனெனவும், இந்த துஷ்யந்தனுக்கு கருத்தமனும், கருத்தமனுக்கு ஆக்ரீடனும், ஆக்ரீடனது நான் குமாரர்களே பாண்டியன், கேரளன், சோழன், கலிங்கன்’ எனவும் கூறுகிறது. இதனால் வன்னி என்னப்பட்ட மகாராஜனது கான்முளைகளே சேர, சோழ, பாண்டியர்களென்பது சங்கையற விளங்குகிறது. அவர்களை அக்நி, சூரிய, சந்திர குலமெனப் புராண இதிகாசங்கள் புகன்ற போதிலும், இவர்களின் மூல புருஷர் வன்னியேயாதலின் அரசர்களின் பொதுப் பெயரில் வன்னியர் எனவே வழங்கி வருதல் கண்கூடு. இனி, பல்லவர்களது உற்பத்தியையும் சிறிது ஆராய்வோம்.

பல்லவ மன்னர்களது உற்பத்தியை அம்மரபிலுத்து காஞ்சிபுரத்தில் கி.பி. 550ம் ஆண்டில் ஆட்சி புரிந்த ராஜசிம்ம வர்மனால், மேட்டுத் தெருவிற் கடுத்து கட்டப்பட்டுள்ள இராமசிம்ம பல்லவேஸ்வரம் என்னும் கைலாஸநா ஆலயத்தின் வெளிப்புறத்தில் வெட்டப்பட்டிருக்கும் சிலாசாஸனம், தேவநாகர எழுத்திலிருக்கிறது. அதை தமிழில் மொழி பெயர்த்து வருண தருப்பணத்தில் வெளியிடப்பட்டிருப்பது பின் வருமாறு:-

பிரம்மாவினிடமாக வுதித்த அக்நி குமாரனாகிய ஆங்கிரஸனும், ஆங்கிரஸனுக்குக் குமாரனும், இந்திரனுக்கு மந்திரியும் தேவர்களுக்குக் குருவுமாகிய பிரஹஸ்பதியும் இவருக்குப் புத்திரனான சமியும், இவருக்குப் புத்திரனாக உக்கிரமான பராக்கிரமத்தையுடைய வரும், திரிலோகங்களிலும் பூஜிக்கப்பட்டவரும் அதிபராக்கிரமத்தையுடையவருமான பரத்வாஜமுனி யுதித்தார். இம்முனீந்திரர் பல்லவ வம்சோற்பவத்திற்குக் காரணபூதரானார்.

இவரிடத்திலிருந்து பாண்டவர்களுக்கும், வைரவர்களுக்கும் குருவாகிய துரோணர் உதித்தார். இவரிடமிருந்து அரசர்களுடைய பராக்கிரமத்தையும் கர்வத்தையுமடக்கிய அசுவத்தாமனும், ஆதியின் பிரமாவினிடமாய் உதித்த மனு அரச வம்சத்திற்கு மூல புருஷராய் எவ்வாறிருந்தாரோ, அவ்வாறு க்ஷ அசுவர்த்தாமன் புத்திரனாகிய பல்லவன் உலக முழுமையும் அரசாளக் கூடிய ஜெயசாலிகளாயும், பராக்கிரமசாலிகளாயும் உள்ள அரசர்களுக்கு மூல புருஷனானான்.

பல்லவ அரசர்கள் பக்தியுடைவர்களாயும், கலியின் கொடுமையை அடக்கினவர்களாயும் சத்திய சீலராயும் கம்பீர குணமுடையவர்களாயும் பெரியோர்களை அதி வியேத்துடன் பூஜிக்கப்பட்டவர்களாயும், திரிவர்க்க சதானந நர்த்தகாம) சாலிகளாயும், காமக்குரோத முதலிய குணங்களை அடக்கினவர்களாயும், அஸ்திர பிரயோகங்களில் தேர்ந்தும், இரணகளத்தில் பின்னடையாதவர்களாயும், மனுநீதி தவறாதவர்களாயும் இருந்தார்கள்.

 

பல்லவர்களுக்குள் புராந்தகனாகிய மஹாதேவனிடத்திலிருந்து எவ்வாறு குமாரக் கடவுள் உதித்தாரோ, அவ்வாறு ரணராசிகா வென்னும் பட்டணத்தை ஜெயித்த பல்லவ வம்ச உக்கிரதண்ட மகாராஜாவினிடமிருந்து பல்லவராஜ கீர்த்திப்பிரதாப அத்தியந்த காமன் என்னும் அரசன் உதித்தான். இவ்வரசன் தனது வேலாயுதத்தினால் பூமண்டலத்திலுள்ள அனேக சத்துருக்களை நாசஞ் செய்தான். மேலும் அவனது இராஜாங்க முறைமையினால் பெரு நயனென்னும் பெயரைப் பெற்றான். சைவ சமயத்தை தழுவி சன்மார்க்க நெறியில் ஒழுகியதால் பாபரகிதனானான் என்று வரையப் பெற்றுள்ளது.

 

இவ்வுற்பத்திக் கிரமத்தையே அமராவதியில் அகப்பட்ட பல்லவ அரசர்களின் சிலாசாஸனமும் தெரிவிக்கிறத. மேற்கூறிய பிரமாணங்களால் க்ஷத்திரியர்கள் ஆங்கிரசர், சம்பு, பரத்வாஜர் முதலிய மூல கர்த்தர்களின் வழி வந்தார்களென ஏற்படுகிறது. ஆனதால் வன்னியர்கள் க்ஷ மகரிஷிகள் கோத்தரங்களை வழங்கி வருகிறார்கள் என்றாலும் தமிழ் நாட்டிலுள்ள சுமார் ஒரு கோடி வன்னியர்கள் பெரும்பாலும் சம்பு மகாரிஷி கோத்திரமே வழங்கி வருகிறார்கள். வன்னியரில் ஒரு பிரிவினராகிய வல்லவர்கள் பாரத்வாஜ கோத்திரம் வழங்கியதை காஞ்சி, திருவத்தியூர் அருளாளப் பெருமாள் ஆலய சாசானம் 363வது பக்கம் வெளி வந்திருப்பதில் தெரிந்து கொள்ளவும்.

அரசர்கள் பொதுப் பெயர் வன்னியர் என்பதற்குப் பிரமாணம் வருமாறு:-

சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றாகிய சிவதருமோத்திரம் சிவதான ஞானவியல் 13வது கவி

 

‘தடுத்த தண்ணியன் பாற்கொள்க சாத்திரம்

கொடுக்கும் தேசிகன் றன்குலத் தில்லையே

லடுத்த வன்னிய னேயரு கன்றொழிற்

கொடுக்க ணாபர மார்த்தங் கொடுப்பதே’

என்பதால் தக்க அந்தணனிடத்தில் சிவதீட்சையைப் பெற வேண்டும். அவ்விதம் செய்யக் கூடிய அந்தணன் அக்குலத்தில் இல்லாவிடில் அடுத்த அரசனே அத்தொழிலுக்குரியவன் என்பதால், அந்தணனுக்கு அடுத்த அரசன் என்பதற்கு வன்னியன் எனக் குறிப்பிட்டிருப்பது நினைக்கத் தக்கது.

 

ஞானவாசிட்டம் ஐந்தவர் கதை 7வது கவி

 

‘மைந்த ரொருப துள ராகி மறைநூ னிறைந்து வளர்ந்ததற்பின்

றந்தை தாயா ரிறந்தேகத் தனையர் கயிலைத் தலமெய்திச்

சிந்தை செய்வார் நல்குரவு தீரவுயர்வன் னியராவோ

மந்த நிலைசற் றாதலினா லதிகநிலை மன்னவ ராவோம்’

 

(காசிபரிஷிக்கு) பத்து குமாரர்கள் பிறந்தார்கள். அவர்கள் எல்லாம் வளர்ந்து, வேத சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த பின்பு அப்பிள்ளைகளை விட்டு தாயும் தகப்பனும் நீங்கிச் செல்ல அம்மக்கள் எல்லாம் கைலைக்குச் சென்று தரித்திரம் நீங்கும்படி உயர்ந்த அரசர்களாவோம். அந்த நிலையும் சிறிதாயின் சக்ரவர்த்திகளாவோம் என்று (தமக்குள்) சிந்தை  செய்தனர் என்பது இதன் பொருள். மன்னர் தம் பொதுப் பெயர் வன்னியர் என்பது உணரப் பெறும்.

 

க்ஷ ஞானவாசிட்டம் சதவுருத்திரர் கதை 5வது கவி

 

‘பாதபம் விதையானாற்போற் பள்ளிகொள்மறை யோன்தன்பாற்

போதுறு கனவிற்றன்னைப் பொருவில்வன் னியனாய்க்

கண்டான்

மேதகு முணர்வாற்றுஞ்சி மேவிய கனவிற் றன்பாற்

பூதலத் தரசனாக வவன்றனைப் பொலியக் கண்டான்’

 

நித்திரை செய்த பிராமணனானவன் விருட்சம் வித்தானது போல தன்னை வன்னியனாகவும் கனவு கண்டான். மீண்டும் உணர்வோடு உறங்கி அவ்வன்னியனாகிய அவனே தான் பூதலத்தரசனாக இருப்பதையும் கண்டான் என்பது இதன் பொருள்.

 

தன்னை வன்னியனாகக் கண்ட அந்தணனே நிலவுலக மன்னனாகவும் நிமிர்ந்த பெருமை இப்பாசுரத்தால் உணரப்பெறும். எனவே முதல் தோற்றம் வன்னியன்: அடுத்தது அவன் முடி சூடிக் காட்சி தருங் கோலம் என சாதுக்கள் பொருள் கூறிப் போற்றுகின்றார்.

 

கல்லாடர் அருளிச் செய்த கல்லாடம் 40வது கவி

 

‘தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கும்

நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்’

தருமமெனும் பெரும் பயிரை உலகம் பெறும்படி விளைவித்த ரத, கஜ, துரக, பதாதி என்று சொல்லக் கூடிய நால்வகைச் சேனைகளையுடைய அரசர்களைப் படைத்த பரமன் என்பது இதன் பொருள். இவர் அரச பெருமக்களை நாற்படை வன்னியர் என்று அழைத்ததும் உணர்க.

 

கம்பராமாயணம் உத்திர காண்டம்

இலங்கையை அழித்த படலம் 11வது கவி

 

‘கொடிமன்னு மாடக் குலமென்னு மயோத்தி பெய்திக்

கடிமன்னு வாயிற் கடைநின்றருள் கால னோக்கிப்

படிமன்னி வாழும் பலவன்னியர் மண்ட லீகர்

முடிமன்ன ரெல்லா முறையேபுகுந் தேவல் கேகட்’

 

என்னும் இவற்றால் வன்னியரான பல மண்டலீகரும் முடி மன்னரும் ஸ்ரீமத் நாராயணனது அவதாரமான இராகவன் திருமுன் ஏவல் கேட்டமை உணர்கின்றோம்.

 

இனி சம்பு குலம் பல்லவ குலம் இரண்டும் ஒன்றே என்பதற்குரிய ஆதாரத்தை ஆராய்வோம்.

 

இன்றைக்குச் சுமார் 420 வருடங்களுக்கு முன் காஞ்சிபுரியை ஏகாம்பரச் சம்பு பல்லவன் என்பவன் அரசாண்டிருந்த காலத்தில் இரட்டைப் புலவர்கள் என்னும் இரு பெரும் சகோதரர்கள் காஞ்சி மாநகரை அடைந்து ஏகாம்பரநாதர் தெய்வீக உலா வென்னும் ஓர் பிரபந்தத்தைப் பாடினார்கள். அப்பிரபந்தத்தில் அவ்வரசனைப் பற்றி குறிப்பிடுவதில், க்ஷ உலா 151வது  கவி: ‘வெளுசமரில் தத்துபரி பல்லவன் சம்பு குலப் பெருமான், வைத்த துலாபார மண்டபத்துக்கும்’ என்று கூறப்பட்டிருக்கிறது. க்ஷ துலாபார மண்டபம் கீழண்டை ராஜ வீதியின் வடவண்டை பக்கம் சம்புகுல சோழ பல்லவராய பக்தஜன சபையார்களாகிய வன்னியர்களால் கட்டப்பட்டது.

 

இவ்விரட்டைப் புலவர் ஏகாம்பரச் சம்பு பல்லவன் சமூகத்தில் உலா பாடியதை தொண்ட மண்டல சதகம் 89வது செய்யுளில்,

 

‘மேதைப் புலவரெண் னேகாம்பரச் சம்பு மெச்சநெடுங்

காதைப் புலவ ரிரட்டையர் பாடுங் கலம்பகமு‘

மோதற் க்ரியநல் லேகம்பவாண ருலாவு மந்த

மாதைப் பனுவலும் பாராட் டிடுந்தொண்ட மண்டலமே’

 

என்று குறிப்பிட்டிருக்கிறது.

 

கம்பர் பாடிய சிலை எழுபது  50வது செய்யுளில்

 

‘வளமருவு மங்கையர்கோன் சொலத்தகுபல்

லவராயன் மரபிற் றோன்றி

கள மருவு கறையுடைய கண்ணுதல்கச்

சியின் வாழே காம்ப ரேசற்

குளமருவு மன்பினரா யொளிர்மகுட

மணிபொற்றே ருதவி மேனாள்

தளமருவு தாமரைபொன் முகவனியர்

படைத்தபுகழ் சாற்றற் பாற்றே.’

 

என்று பாடியிருப்பதால் சம்புகுலம் அல்லது செம்பியர்கள், பல்லவர்கள், வன்னியர்கள் என்பன ஒரே மரபாரைக் குறிக்கின்றன என்பது உறுதிப்படுகின்றது.

 

வன்னியின் மரபில் தோன்றிய சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய மன்னர்கள் இந்நாட்டை ஆட்சி புரிந்த காலத்தில் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தேவாலயங்களிலும், மடாலயங்களிலும், பல வகையான சிலாசாஸனங்களும், செப்போடுகளும் இருக்கின்றன. க்ஷ சாஸனங்களில் கூறியுள்ள அரசர்களின் ஆதிக்கத்தை ஆராய்ச்சி செய்யும் பொருட்டு, ஆங்கிலேய துரைத்தனத்தாரால் நியமித்துள்ள தாம்பிர சிலாசாஸன பரிசோதனா கமிட்டி யார் பல க்ஷேத்திரங்களுக்கு ஏகி, ஆங்காங்குள்ள சாஸனங்களை பரிசோதித்து முக்கினமானவைகளைப் புத்தக ரூபமாக பிரகரஞ் செய்திருக்கின்றார்கள்.

 

இஃதன்றியும், சில ஜில்லா கலெக்டர்கள் தங்கள் ஜில்லாக்களில் கிடைத்த செப்பேடுகளையும், சாஸனங்களையும், க்ஷ கமிட்டியாருக்கு அனுப்ப, அவற்றிலுள்ள விஷயங்களையும், உண்மைக் குத்தாரமாகப் பதிவு செய்திருக்கின்றனர். இவ்விதம் சேகரிக்கப்பட்ட சேப்பேடு சிலாசாஸனங்களும் அவ்விஷயங்களடங்கிய புத்தகங்களும், பகிரங்கமாக பலரும் பார்க்கும் பொருட்டு பல பொருட் காட்சி சாலையாகிய சென்னை மியூஜியத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

 

அவைகளில் சில வருண தருப்பணத்தில் வெளியானதையும் பிறகு நமது ஆராய்ச்சியில் கிடைத்ததையும் ஒருங்கு திரட்டி கீழே பிரசுரித்திருக்கிறோம்.

  • ••

திருக்கழுக்குன்றத்திற்கு கிழக்கே 8 மைல் தூரத்திலுள்ள மஹாபலிபுரம் கடற்கரை ஓரத்திலிருக்கும் கோயிலின் வட பக்க அடி வாரத்திலுள்ள சாஸனம்

 

ஸ்ரீகோ ராஜராஜ ராஜகேசரி வர்மரான ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு இருப்த்தாறாவது ஆமூர் கோட்டத்து ஆமூர் நாட்டு நகரம் மல்லாபுரத்து நகரத் தோமும், பேரிளமையோமும் இந்நகரத்து ஜலசயனத்து க்ஷத்திரிய சிம்ம பல்லவ ஈஸ்வரத்து தேவரும் ராஜ சிம்ம பல்லவ ஈஸ்வரத்து தேவரும் பள்ளி கொண்டருளிய தேவரும் உடைபட்டாரத்து பொன்னில் இத்தளிகள் பதிபன்சாரிய ப…ட்டை…. சு… தேவ….. கண்மிகள்ப….. நாங்கள் கொண்டு கடவ பொன் பத்தொன்பதின் கழஞ்சி இத்தேவர்களுக்கு என வெட்டியுள்ளது.

 

இது இராஜகேசரி வர்மன் சிம்மாசனம் ஏறிய 26வது ஆண்டு (கி.பி. 1064ல்) க்ஷத்திரிய சிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. க்ஷ சாஸனத்தால் பல்லவர்கள் க்ஷத்திரியர்களென உறுதியாதல் வெளிப்படை.

 

  • ••

காஞ்சிபுரத்தில் கி.பி. 670க்கு மேல் அரசாண்ட பரமேஸ்வர பல்லவராயன் காலத்தில் காஞ்சி தாலுக்கா கூரம் கிராமத்தில் ஏற்பட்ட செப்பேட்டில் கூறும் விஷயமாவது

 

ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வளூர் நாட்டுக் கூரமும், ஞம்மணம் பாக்கமு ஞங்கண தட விச்சா நீதப் பல்லவரசன் விலைக்காணங் கைகொடுத்துச் சிணேசெயிது ஆயிரத்திருநூற்றுக் குழிபடியால் விற்றுக் கொண்ட நிலம் தளி எடுப்பதற்கு ஓடு சுடக் கொண்ட நிலம் தலைப்படாகத்துள் சூளை மேட்டுப் பட்டியும், ஊருள் மண்டகம் எடுத்த நிலத்தோடுங்கூட அயிந்தேகால் பட்டி நிலமும் விற்று கொண்டு விச்சாவிநீத பல்லவ பரமேச்சுரம் எடுத்து ஏரி தோண்டி இத்தளி வழிபாடு செய்வார்க்கு இருக்கும் மனையும்.

 

இச்சாஸனத்தில் இன்னும் பல விஷயங்கள் விரிவாக எழுதப்பட்டிருப்பதால் அதன் சுருக்கம் பின் வருமாறு: 1264ம் ஆண்களுக்கு முன் பரமேஸ்வர பல்லவராயனெனவும், விச்சாநிதப் பல்லவ அரசன் என்னும் பெயர் கொண்ட மன்னனால் கூரம் கிராமத்தில் உள்ள வித்சாவிநீத பல்லவ பரமேஸ்வரம் என்னும் ஆலயமும் பரமேஸ்வர தடாகம் என்கிற கூரம் ஏரியும் கட்டப்பட்டது.

 

மேற்படி தடாகத்திற்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பொருட்டு பெரிய வாய்க்கால் ஒன்று வெட்டப்பட்டது. நிலங்களின் வருவாயை இருபத்தைந்து பங்குகளாக வகுத்து, இவற்றுள் மூன்று பங்கு ஆலயத்தின் நித்தியக் கட்டளைக்கும் ஆலய மராமத்திற்கும், ஒரு பங்கு மண்டகப்படிக்கும் மண்டபத்தில் பாரதம் வாசித்து பிரசங்கம் செய்வதற்கும், இருபது பங்கு சதுர்வேதிகளுக்கு தானங்கொடுத்த பங்குகளில் மூன்று பங்கு அனந்த சிவ ஆசாரியாருக்கும், அவருடைய சந்ததியார்க்கும் ஒன்றை பங்கு புல்லசருமருக்கும். அவர் சந்ததியார்க்கும் கொடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. க்ஷ கூரம் பட்டயத்தால், பூர்வத்தில் பல்லவ அரசர்கள் தத்தம் ஆளுகையில் பிரஜைகள் விவசாயம் செய்து ஜீவிப்பதற்கு ஜலாதாரமும், பக்தி செய்வதற்கும், பூசிப்பதற்கும் ஆலயங்களும், பாரதம் வாசிப்பது முதலிய நற்காரியங்களையும் செய்திருக்கின்றதாக ஏற்படுகின்றது.

 

  • ••

 

விரிஞ்சிபுரத்திற்குச் சமீபத்திலுள்ள

பொய்கை என்னும் கிராமத்தில்

பெருமாள் ஆலயத்தின் தென்னண்டை

மதிலின் அடிவாரத்திலுள்ள சாஸனம்

 

(ராஜ ராஜ சோழதேவன் ஆளுகையின்

24வது ஆண்டில் வரையப்பட்டது. கி.பி. 1216)

 

ஸ்வஸ்தி ஸ்ரீ ஆயிரத்தொரு நூற்றறுபத்தொன்று செல்லாநின்ற ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜ ராஜதேவற்கு ஆண்டு இருபதாவது முதல் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து தமனூர் நாட்டு வீரன் பாக்கத்து இலாளப் பெருமாள் மகன் ஆண்டான்கள் பங்காளராயருக்குப் பல குன்றக் கோட்டத்துப் பங்காள நாட்டு நடுவில் குன்றத்தூரான இராஜ கெம்பீரநல்லூர் இவருக்குக் காணியாக கீழ் நோக்கின கிணறும் மேனோக்கின மரமும் நாற்பாங்கு எல்லையும் வீற்றொற்றிப்பரிக்கிரயத்திற்கு உரித்தாவதாகக் கொடுத்தோம். அத்தி மல்லன் சம்புகுலப் பெருமாளான ராஜகெம்பீர சம்புவராயன் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சுமார் 760 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி புரிந்த ராஜ ராஜதேவன் காலத்தில் ஓர் அரசனாகயிருந்தவன், இராஜ கெம்பீர சம்புவராயன் என்று தெரிகிறது. முற்காலத்தில் சோழ பல்லவர்களுக்கு சம்புவராயர் என்று வழங்கப்பட்டதைப் போல், தற்காலத்தும் தென்னாற்காடு, தஞ்சை ஜில்லாக்களில் வசிக்கும் வன்னியர்களில் சிலருக்கு சம்புவராயர் பட்டம் வழங்குவதுடன் காஞ்சீபுரத்தில் நாட்டாண்மைதாரர்களுக்கு வீரசம்பு மகாநாட்டார் என்றே நாளதும் வழங்கப் பெற்று வருகிறது.

  • ••

சிவகஞ்சி சுரஹரீஸ்வரர் ஆலயத்தின்

முன் மண்டபத்தில் தென்னண்டை

மதிலிலுள்ள கல்வெட்டு

 

ஸ்வஸ்தி திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ விஜய கண்டி கோபால் தேவர்க்கு ஆண்டு இருபத்தைஞ்சாவது பூர்வபக்ஷத்து தசமியும், திங்கள் கிழமையும் பெற்ற பூராடத்து நாள் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து காஞ்சீபுரத்து சுரவட்டாரமுடைய நாயனாருக்கு பல்லவ வம்சத்து அம்பலூரதிப்பு ராஜ நல்ல சித்தாசனென் திருமட வளாகத்திலுள்ள தறிக்கடமையும் என் உள்ளது.

 

இச்சாஸனம் விஜய கண்ட கோபால தேவர் ஆளுமைகயின் 25ம் ஆண்டு (கி.பி. 1267) வரையப்பட்டது. இதனால் பல்லவ வம்சத்து அம்பலூர் அதிபனாகிய ராஜ சித்தாசன் ராஜ காரிய நிர்வாகியாக இருந்தானெனத் தெரிகிறது.

  • ••

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்

அர்த்த மண்டபத்து மதில் கல்வெட்டு

 

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பூமாது விளங்க, புவிமாது விளங்கனாமாவது விரும்ப, ஜயமாது ஸ்ரீமது மலர் மன்னவருக்கு உபமன்னிய வருமையால் மணபூவருக்கு உச்சங்கொள் தெசைதொரும் செலுத்தி வெங்கலி னிக்க மய்யற் தழப்பக் கலிங்கமறிய கடாமலை  நடத்தி வலங்கொள்ளா வரையாமனடத்தி ஒரு சுடரவும் ஒரு குடை நிழல்…னடத்தினோம். பூமாவித்திருக்கும் சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு ஆண்டு 4வது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து தாமற்கோட்டத்து தாமற்னாட்டத்து திருசிகாமணி சதுர்வேதி, மங்கலத்து மஹா ஸபையோம். ஆளுடையார் திருவேகம்பமுடையார் ஆதிதர்ச்சண்டே சுவற தேவருக்கு நில வெலைக் கையெழுத்து.

சோழ மண்டலத்து ராசாதிராச வள நாட்டு கங்கூர் என்னுங் கோட்டத்து கீழ்ப்படும் மதுராந்தகப் பெறி நாட்டு பல்ல திறயர் உடையார் திருவேகம்ப முடையாருக்கு திருவறத்த சாமத்துக்கு சிறப்பாக வைத்த திருப் பொன்னகத்துக்கும், பாலாத்து திருமஞ்சனம் செம்பாருக்கும் இவர் எழுந்தருளிவிக்க சீகாழினாடு ஒடையப் பிள்ளையாருக்கும், திருசுத்தியும் திருவமுது படிக்கும் வேண்டுவத்துக்கு சந்தறாதித்த வரைக்கும் செல்லுவதாக ஒங்கள் பக்கல் தேவதானமாக கொண்டு விடட நிலமாவது இதன் கீழ் அநேக ஊர் நிலங்களை குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இச்சாஸனம் கி.பி. 1118 முதல் 1132 வரையில் ஏக சக்கராதிபதியாக அரசாண்ட விக்கிரம் சோழனது பிரவாவங்களைத் தெரிவிப்பதில் கலிங்கமிறிய என்று கூறப்பட்டிருக்கிறது. விக்கிரம் சோழரது தந்தையாகிய அபயகுலோத்தமனது சேனைத் தலைவனாகிய கருணாகரத் தொண்ட வன்னியனே கலிங்கத்தின் பேரில் போருக்குச் சென்று கலிங்க மிறியவனென ஜெயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி கடைத் திறப்பு 44வது செய்யுளில்,

‘கலிங்கமெறிந்த கருணாகரன்றன்

களப்போர் பாடத் திறமினோ.’

என்றும் 43வது பாடலில்,

‘காஞ்சியிருக்கக் கலிங்கங் குலைந்த

களப்போர் பாடத் திறமினோ.’

என்றும் வருவதால்,

கருணாகரனது வெற்றியை அவனது தலைவனாகிய குலோத்துங்கன், விக்கிரம சோழன் இவர்களது பிரபாவத்தில் கூறப்பட்டது. மேலும் பரணிப் பிரபந்தத்தில் கருணாகரன் வீரப் பிரதாபங்களைக் கூறுமிடத்தில் காளிக்குக் கூறி கூறிய 52வது செய்யுளில்,

 

‘தண்ணாரின் மலர்த்திரடோ ளபயன்

றானேவிய சேனை தனக்கடையக்

கண்ணாதிய சோழன் சக்கிரமாங்

கருணாகரன் வாரண மேற்கொளமே’

 

என்றும் க்ஷ 54 வது செய்யுளில்,

‘மறித்தோடி எவ்வரசுஞ் சரியவென்று

வருமனுக்கைப் பல்லவர்கோன் வளவை வேந்தன்’

என்று கூறப்பட்டிருப்பதால், கருணாகரனை சோழன் என்றும், பல்லவன் என்றும் கூறப்பட்டிருக்கிறது. குலோத்துங்கனது காலத்திற்குப் பிறகும், விக்கிரம சோழனது ஆட்சி காலத்தும் காஞ்சீபுரமுள்ள சுற்றுப் பக்கங்களில் கருணாகரன் ஓர் சிற்றரசனாக இருந்து ஆட்சி புரிந்தானென விளங்குகிறது. அவன் பேரால் சில கிராமங்களுக்கு கருணாகரத் தொண்டனூர், கருணாகரச்சேரி என நாளதும் வழங்கி வருகிறது. எனவே காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் ஆலய சாஸனத்தில் பல்லவ திறயர் என்னும் ஓர் சிற்றரசன் விக்கிரம சோழனது 4வது ஆட்டில் திருவேகம்பமுடையாருக்கு அர்த்தசாமக் கட்டளைக்கும், பாலாற்று திருமஞ்சனத்திற்கும், திருவமுது படிக்கும் அனேக நிலங்களை விடப்பட்டதாய் தெரிகிறதால் க்ஷ பல்லவ திறயன் கருணாகரனேயாதல் வேண்டும். சிலர் வன்னியர் வேறு, பல்லவர் வேறு என சந்தேக படுகின்றனர். பரணியில் குறிப்பிடப்பட்ட கருணாகரனை மேலே நாம் பல்லவன் எனவும், சோழன் எனவும் கண்டோம். அம்மன்னவனே வன்னியன் என்பதை கம்பர் பாடிய சிலை எழுபது 68வது செய்யுளில்,

‘அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந் தருள்வன் னியரை

யாம்புகழச்

செவிக்கா ரமுத மெனக்கேட்டு சிந்தை யுவந்து

சீர் தூக்கிப்

புவிக்கா யிரம்பொன் னிறைநீக்கிப் பொற்றண்டிகைபூ

ஷணத்தோடும்

கவிக்கா யிரம்பொன் பரிசளித்தோன் கருணாகரத் தொண்ட

வன்னியனே!’

என வருவனவற்றாலும், கருணாகரத் தொண்ட வன்னியனார் சதகம் 24வது கவியில்.

‘எரிக்கும் புகழ்க்கச்சி யேகாம்பரச்சம் பெனுந்தமிழால்

பொரிக்கும் புலிக்கொடியான் புகழ்பெற்ற புலமை யெல்லாம்

தரைக்கு மதனப்புறத்துந் தெரிந்திடுந் தன்மைகண்டேன்

மறைக்குவா லோதுங் கருணாகரத் தொண்ட வன்னியனே.’

 

என்பதாலும் வன்னியர்களே பல்லவர்கள் எனவும் பல்லவர்களே வன்னியர்கள் எனவும் சங்கையறத் தெரிந்து கொள்ளலாம். பல்லவர்களே பன்னிதன் என்பதற்கு நாளதும் ஏகாம்பர ஈஸ்வரர் ஆலயத்துள்ள பல்லவ கோபுரம், பள்ளி கோபுரம் என வழங்கி வருவதே பிரத்தியட்சப் பிரமாணமாகும். அக்கோபுர ஆதிக்கம் பல்லவர் வம்சத்தார்களாகிய பள்ளிகள் என்னும் வன்னியர் வசமே இப்போதும் இருந்து வருகிறது.

 

  • ••

காஞ்சிபுரத்திற்கு வடக்கே 30 மைல்

தூரத்திலுள்ள திருவாலங்காடு நடராஜர்

ஆலய இரண்டாவது பிரகாரத்தின்

கீழண்டை மதிலிலுள்ள கல்வெட்டு

 

கோவிராஜகேசரி வர்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவற்கு யாண்டு இரண்டாவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மணவூர் கோட்டத்து புரசை நாட்டுச் சிவபுரத்துப் பக்கலிங்கையில் திருவமுது செய்தருளாயிருந்து மென்மலை பழையனூர் திருவாலங்காடுடைய மகா தேவர்க்கு இவ்வூர் நிலத்திலே ராஜேந்திர சோழபாடி என்னும் பெயரால் இருபத்தைஞ்சு சங்கரபாடி குடியேற்றி பதினஞ்சு திருநந்தா விளக்குக்கு வேண்டு எண்ணையாட்டி, எரிக்கப்பண்ண வேண்மென்று நங்கன்மிகளில் வீர சோழ பல்லவரையன் நமக்கு சொன்னமையில் இருபத்தைஞ்சு சங்கரபாடி குடியும் இத்தேவர் திருவிளக்கு எண்ணையாட்டக் கடவார்களாக நாமே குடுத்தோமென்று திருமந்திரவோலை அருமொழி விழுப்பரயர் எழுத்தினாற் புகுந்த திருவாய்க்கேழ் விப்படி இத்தருமத்துக்கு அழிவு செய்வார் திருவானை மரத்தாரென்று கல்வெட்டுக்கென அதிகாரிகளை நாங்கொற்றக் கடம்பன் ஏவ இரங்க நாரான வீர சோழ பல்லவரையர் என்பதாம்.

 

க்ஷ  திருவாலங்காட்டுச் சாஸனம் ராஜேந்திர சோழ பல்லவனாகிய முதலாவது குலோத்தங்க சோழன் சிம்மாசனமேறிய 2வது ஆண்டு (கி.பி. 1066-ல்) ஏற்பட்டது. இச்சாஸனத்தில் 15 நந்தர் விளக்குக்கு எண்ணெய் கொடுத்து வர சங்கரபாடியில் 25 குடும்பங்கள் வசிக்க வீர சோழ பல்லவரையன் ஏற்பாடு செய்தானெனத் தெரிகிறது. இதனால் அவன் அப்பக்கம் ஆட்சி செய்த ஓர் சிற்றரசனாதல் வேண்டும். பல்லவர்களும், சோழர்களும் கலப்புற்று சோழ பல்லவர்கள் என வழங்கினார்களென்பதை இச்சாஸனம் உறுதிப்படுத்துகின்றது. ஆகையால் தான் முதலாவது குலோத்துங்கனாகிய அநபாயச் சோழன் வேளாளர் மரபில் உதித்த சேக்கிழார் பெருமானுக்கு உத்தமச் சோழன் பல்லவன் என்ற உயர் பட்டத்தை அளித்தான் என ஏற்படுகிறது. இல்லாவிடில் உத்தமச் சோழன் அல்லது உத்தம பல்லவன் என்றல்லவா கொடுத்தல் வேண்டும். இதனை பெரிய புராணத்தில் சேக்கிழார் புராணம் 8வது செய்யுளில்,

 

அத்தகைய புகழ்வேளாண் மரபிற் சேக்கிழார்

குடியில் வந்த அருண்மொழித் தேவர்க்குத்

தத்துபரி வளவனுந்தன் செங்கோலோச்சுந்

தலைமையளித் தவர் தமக்குத் தனது பேரும்

உத்தமச் சோழப் பல்லவன் றானென்று முயர்பட்டங்

கொடுத்திடவாங் கவர்நீர் நாட்டு

நித்தனுறை திருநாகேச் சுரத்தி லன்பு

நிறைதலினான் மறவாத நிலமை மிக்கார்.

 

என்பதனாலறிக.

  • ••

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் கர்ப்பகிருகத்தில் வரைந்துள்ள

சாஸனத்தில்

 

பள்ளிகொண்ட பாஞ்சநிதி வாணனான ராஜேந்திர பல்லவராயன் என்றும் கோவிராஜ சக்கிரவர்த்திகளாகிய குலோத்துங்கன் சோழன் என்றும், இவன் மனைவியின் பெயர் லோகமா தேவி என்றும் சொல்லப்பட்டிருப்பதால் முதலாவது குலோத்துங்க சோழனைப் பல்லவராயன் என்பதால் பல்லவர்களும், சோழர்களும் ஒரே வம்சத்தவர்களாக வழங்கி வந்ததாய்த் தெரிகிறது.

  • ••

 

சிதம்பரம் சிலாசாஸனம்

சிதம்பரம் நடராஜர் ஆலயம்

2வது பிரகாரத்தின் மேலண்டை

மதிலில் வெட்டப்பட்டது.

 

பூமண்டபத்துக்கு ஸமீபத்திலே திரு மாளிகையிலே கல்வெட்டவும், திருநந்தவனக் குடிகள் பெர் இருவற்குந் திருநந்தவனக் குடிகள் செய்து வருங் குடிமை உள்ளிட்டன. கொள்ளா தொழியவும் பெற வேணுமென்று கேரள ராஜன் நமக்குச் சொன்னமையில் இப்படி செய்.

 

யக்கடவதாகச் சொல்லி இப்படி கணக்கிலும் இட்டுக் கொள்ளக் கடவர்களாக வரிக்குக் கூறு செய்வார்களுக்குஞ் சொன்னோம். இந்நிலம் ஒன்பதாவது முதல் பல வரையொருங் கூட்டித் திருநந்தவனமும், திருநந்தவனக் குடிகள் பெர் இருவற்கும், இலக்கைக்குங் கொற்றுக்குந் திருநந்தவனப்

 

புற இறையிலியுமாய் நிற்க இப்படிக்குக் கோயிலிலே கல்வெட்டவும் பண்ணி இத்திருநந்தவனக் குடிகள் அளக்கக்கடவ திருப்பள்ளித் தாமம் பெர் ஒன்றுக்கு. நாளொன்றுக்குக் குறனி நானாழியாக வந்த திருப்பள்ளித் தாமம் திருப்பூமண்டபத்துக்கு முதலாக அளக்கவும் இவர்களைத் திரு.

நந்தவனக் குடிகள் செய்து வரும் குடிமையுள்ளிட்டன கொள்ளாதொழியவும் பண்ணுவது எழுதினாந் திருமந்திர ஓலை ராஜ நாராயண மூவேந்தவெளான் எழுது விழுப்பாதி ராஜரும், நுளம்பாதி ராஜரும், பாண்டிய ராஜரும், களப்பாள ராஜரும், நந்திய ராஜரும் இராஜ வல்லவப் பல்லவராயரும் வயிராதி ராஜரும் எழுத்திட்டுப் புகுந்த செய்யும்படிப்படி எழுதியது என உள்ளது.

 

இது சுமார் 740 ஆண்டிற்கு முன் அரசு புரிந்த மூன்றாவது குலோத்துங்க சோழன் பராக்கிரமத்தையும் கேரளராயன் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள கடவாச் சேரியில் திருநந்தவனத்திற்காக விடப்பட்ட நிலத்தையும் தெரிவிக்கின்றது.

 

ராஜநாராயண மூவேந்த வேளான் விழுப்பாதி ராயர், நுளம்பாதி ராயர், பாண்டிய ராயர், களப்பாள ராயர், நந்திய ராயர், இராஜவல்லப பல்லவ ராயர், வயிராதி ராயர் இப்பெயர்கள் அக்காலத்தில் பிரபல நிலைமையிலிருந்த பல்லவ, சோழ, சளுக்கிய முதலிய அரசர் பரம்பரையைக் குறிக்கின்றன. இப்பரம்பரையைச் சேர்ந்தோறும் இவை போன்ற பட்டப் பெயரை உடையோரும் சிதம்பரம், சீயாழி, மாயவரம், கும்பகோணம் முதலிய தாலுக்காக்களில் வசிக்கும் சம்பு குலத்தார் என்றும், வன்னியர் என்றும் வழங்கும் வகுப்பினரால் தற்காலத்தும் வழங்கப்பட்டு வருகின்றது.

 

  • ••

 

திருப்புறம்பயம் உடையவனான

செம்பியன் பல்லவராயன் சாஸனம்: கும்பகோணத்தில் உள்ள நாகேச்சுரர் கோயில்

வெளி மண்டபம் வடக்குச் சுவரில் வெட்டப்பட்டது.

 

1, ஸஸிஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் மதுரையும், ஈழமும், கருவூரும், பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளி விஜயாபிஷேகமும், வீராஅ 2. விஷேகமும் பண்ணி அருளின ஸ்ரீதிரிபுவன வீர தேவற்குயாண்டு முப்பத்தஞ்சாவது உய்ய கொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குட முக்கில் உடைய 3. ரா திருக் கீழ் கோட்டமுடையார் கோயில் முதல் பிரகாரத்துக் கீழேத் திருமாளிகையில் வேளூர் கிழவன் ஆழ்வான் திருப்புறம்பிய முடையனாந செம்பியன் பல்லவரை 4. ன் எழுந்தருளிவித்த உடையார் திரும்புறம்பிய முடையார்க்கு அமுதுபடிக்கு நாளொன்றுக்கு ….. வேளைக்கு அரிசி நானாழியும் இவ்வரிசியால் வந்த ப 5.ருப்பமுதும், கறியமுதும், உப்பமுதும், மிளகமுதும், தயிரமுதும், நெய்யமுதும். அடைக்காய் அமுதுபாக்கும், இலையமுதும் மற்றும் திருமஞ்ச 6. னமும், திருப்பள்ளித் தாமமும் திருமேற்பூச்சும் உள்ளிட்ட 13. க்கு உபையமாக வேளூர் கிழவன் ஆழ்வான் திருப்புறம்பிய முடையாநாந செம்பியன் பல்லவரையன் முப்பத்தஞ்சாவது நாள் உள் 14. அய எனால் சீபண்டாரத்து ஒடுக்கின காசு பதினேழாயிரமும் சீபண்டாரத்து ஒடுக்கினமைக்கு இவை இராமநூருடையான் மூலபருஷப் பிரியனெழுத்து எனவுளது.

 

இது கி.பி. 1178 முதல் ஆட்சி புரிந்த வீர தேவன் என்று அழைக்கப் பெறும் மூன்றாவது குலோத்துங்கன் காலத்தில் திரும்புறம்பயம் பிரதேசத்தை அரசு புரிந்த செம்பியன் பல்லவரையன் என்னும் அரசனால் திருப்புறம்பிய முடையார்க்கு நித்ய கட்டளை உற்சவாதிகள் நடைபெற, 17 ஆயிரம் காசு பண்டாரமாகிய பொக்கிஷத்தில் வைத்ததை தெரிவிக்கிறது. செம்பியன் பல்லவரையன் என்பதால் சோழ குல பல்லவன் என விளங்குகிறது. சோழ வம்ஸமும், பல்லவ வம்ஸமும் கலப்புற்று சோழ பல்லவர், பல்லவச் சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது க்ஷ சாஸனத்தால் உறுதிப்படுகிறது. முற்காலத்தில் அரசனிடம் பொக்கிஷாதிபதியாக இருந்தவர்களுக்கு பண்டாரத்தார் என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

 

  • ••

 

திருவல்லன் வில்வநாதீஸ்வரர்

ஆலயத்தின் மடப்பள்ளி மேலண்டை

மதிலிலுள்ள கல்வெட்டு

 

’ஸ்வஸ்தி ஸ்ரீ விசையகண்ட கோபால தேவர்க்கு யாண்டு மூன்றாவது முதல் அழகிய பல்லவன் எதிரிலிச் சோழ சம்புவராயனென் நம்பற்றுக் கடமையும், ஆயமும், கொள்ளுமிடத்தில் முற்காலத்தில் இல்லாததொரு வாசியான செலவளவு மாகாணி வாசியும் நாலுமாவாசியுங் கழித்துக் கடமையும், ஆயமுங் கொள்ளக்கடவதாகச் சொன்னோம். அழகிய பல்லவன் எதிரிலி சோழ சம்புவராயன் என்று இருக்கின்றது.

 

க்ஷ அரசன் காலத்தில் மாகாணியும், நாலுமாவாசியும் வரியிறையைக் கழித்துக் கொடுக்கப்பட்டதை இது தெரிவிக்கின்றது. இச்சாஸனம் கி.பி. 1286ல் விஜய கண்ட கோபால தேவன் சிங்காதனம் ஏறிய மூன்றாவது ஆண்டில் ஏற்பட்டது.

 

  • ••

 

திருவல்லம் வில்வநாதீஸ்வரர்

ஆலயத்தின் வடவண்டை மதிலிலுள்ள

கல்வெட்டு

 

ஸ்ரீசுவஸ்தி கோபரி கேசரி வர்மரான ஸ்ரீராஜராஜ சோழ தேவர்க்கு யாண்டு 4வது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மிய்யாறு நாட்டுத் தீக்காலிவல்லத்துத சபை யோம் கை எழுத்து.

 

உடையார் ஸ்ரீராஜ ராஜேந்திர சோழ தேவர் பெருத்தரத்து நித்திய வினோத வளநாட்டு பாம்புணிக் கூத்தத்து அரைசூர் உடையார் ஈராயிரவ பல்லவனான உத்தமச் சோழ பல்லவரையன் கையால் யாங்கள் கொண்டு கடவ அன்றாடு நற்காசு ஐம்பது, இக்காசு அன்பதும் எங்களூர் திருவல்ல முடையார் கோயிலில் இவர் எடுப்பித்த ராஜ ராஜ ஈஸ்வர முடையார் என உள்ளது.

 

இது கோபரி கேசரி வர்மரான ராஜ ராஜ சோழ தேவ்ன் 4வது ஆண்டில் (கி.பி. 1216-ல்) உத்தமச் சோழ பல்லவரையன் என்னும் அரசனால் திருவல்லம் வில்வநாதீஸ்வரருக்கு ஐம்பது காசு கொடுத்து வந்ததை இச்சாஸனம் தெரிவிக்கிறது.

 

  • •••

திருவண்ணைநல்லூர்

கிருபாபுரி ஈஸ்வரர் கோபுரம்

உள் வாயில் வடவண்டை பக்க சாஸனம்

 

சுவஸ்திஸ்ரீ சம்புவராயன் ஒலே இராச இராச வளனாட்டு திருமுனைப்பா வெண்ணை நல்லூர் உடையார் தடுத்தாட் கொண்டருளிய ஸ்தானத்தார் கொண்டு தங்கள்னாயனாற் திருமடை விளாகதிலும் யிருக்கும் செட்டிகள் கைக்குன்ற வாணிபற்சேனை அங்காடி கோயில் அங்காடிகள் பெரிக்கடமை, தரிக்கடமை களவாசல் பணம் திருவிடை விளாகத்தில் வாசல் பணம் பத்தும்யிப் பேர்ப்பட்டவைகளும் தடுத்தாட் கொண்டருளிய னாயனாருக்குப் படிக்கு வஞ்சனத்துக்கு திருனாமத்துக் காணி இறையிலியாகத் தந்தோம். இவை சம்புவாராயன் எழுத்து என்பதாம்.

க்ஷ சாஸனத்தில் காலவரை விளங்கவில்லை. சம்புவராயன் என்பவன் திருவெண்ணைநல்லூர் தடுத்தாட் கொண்ட கிருபாபுரி ஈஸ்வரருக்கு பல வரும்படிகளை நித்ய படிக்கு விட்டதாயும் சில நிலங்களுக்கு வரியில்லாமல் மானியமாக ஏற்படுத்தியதாயும் தெரிகிறது. இதனால் சம்புவராயன் என்பவன் அப்பிரதேங்களை ஆட்சி செய்தவனாதல் வேண்டும்.

 

  • ••

 

ஸ்ரீபெரும்புதூர் தாலூகா மணிமங்கலம்

இராஜகோபாலப் பெருமாள் ஆலய மண்டபத்தின்

தென்னண்டை மதிலிலுள்ள சாஸனம்

 

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன் சக்ரவர்த்திகள் மதுரையும், ஈழமும், பாண்டியனையும் முடித்தலை கொண்டருளிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 12வது தனுநாயற்று அமரபக்ஷத்து நவமியும், திங்கள் கிழமையும் பெற்ற சித்திரை நாள் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து குலோத்துங்க வளநாட்டு மணிமங்கலமான சதுர்வேதி மங்கலத்து மகா சபையோம் எழுத்து.

 

நம்மூர் வண்டு வராபதி எம்பெருமான் கோயில் ஸ்ரீ காரியஞ் செய்கிற காரம்பிய செட்டு கேசவ பட்டனும் ஸ்ரீ வைணவ கண்காணி அரட்டமுக்கி தாசனுங்க கண்டு, இக்கோயில் திருவாய்க் குலத்து எம்பெருமானுக்கு நாநாழி அரிசியால் ஒரு திருப்போனகம் அமுது செய்தருள இம்மண்டலத்து இந்நாட்டுக் கீழ் மாங்காட்டு நாட்டுத் திருச்சுரத்துக் கண்ணப்பன் தூசி ஆதி நாயகன் நீலங்கரையன் வன்னிய நாயனான உத்தமநிதி கண்ணப்பன் என்பது.

 

இந்த சாஸனம் தினம் நாநாழி அரிசியால் பெருமாள் அமுது செய்தருளுதற்கு வன்னிய நாயன் உத்தமநிதி கண்ணப்பன் 600 குழி நிலம் வாங்கிவிட்டதை தெரிவிக்கின்றது. இவன் மூன்றாவது குலோத்துங்க சோழன் 12வது (கி.பி. 1189ல்) ஓர் அரசனாக இருந்தான் எனத் தெரிகிறது.

 

  • ••

செங்கற்பட்டுக்குத் தெற்கே 9 மைல்

தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம்

வேதகிரீஸ்வரர் ஆலயத்தின்

மூலஸ்தானத்திலுள்ள சாஸனம்

 

கோவி ராஜகேசரி வர்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 14 வது ஐயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர் கோட்டத்து களத்தூர் நாட்டு தன் கூற்று தேவதானம் திருக்கழுக்குன்றமான உலகளந்த சோழ புரத்து ஸ்ரீ மூலஸ்தானமுடைய மகாதேவர்க்கு ஓய்மா நாட்டு சேவூரான சோழ கேரள நல்லூரிலிருக்கும் பள்ளிச் செல்வன் பழமுடையனான குலோத்துங்க சோழப் பெரியரையன் வைத்த திரு நந்தா விளக்கு ஒன்றினுக்கு அருமொழி தேவனுழக்கால் நிசத முழக்கு நெய்க்கு விட்ட சாவா மூவா பேராடு தொண்ணூறு என்றுள்ளது.

இது குலோத்துங்க சோழன் ஆளுகை 14ம் (கி.பி. 1078) ஆண்டில் வரையப்பட்டது. பள்ளிச் செல்வன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட குலோத்துங்க சோழ பெரிய அரயன் திருநந்தா விளக்கு ஒன்றுக்கு உழக்கு நெய் தினம் ஆலயத்திற்கு கொடுத்து வரும் பொருட்டு 90 ஆடு வாங்கி விட்டதை இச்சாஸனம் தெரிவிப்பதுடன் பள்ளி என்னும் பதம் அரசர்களுக்கு சிறப்பாக வழங்கி வந்ததையும் காட்டுகிறது.

 

  • ••

திருக்கழிக்குன்றத்து மலை

மேல் வேதகிரீஸ்வரர் கோயில்

பிரகாரத்திற்கு மேலண்டை சுவரில்

எழுதி இருக்கப்பட்ட சாஸனம்

 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ முந்துமவாணத் திரிபிர்மாதிகள் முனிவர் முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்து சேவிக்கப் போதாதிடமென்று மண்டபம் திருமுன்னெ வகுத்த வொகந்தவாவி திருக்கழுக்குன்றனார் கச்சிவாழ் தொண்டனைக் காந்தறாயனைச் சாந்தவாரித்தலை மன்னரியாரினும் சாபசாத னிவனெனத் தந்ததே.

 

செங்கற்பட்டுக்கு அருகில் திருவிடை ஈச்சுரம் என்னும் ஸ்தலத்தில் சுமார் 420 காந்தவராயன் சேந்தவராயன் என்னும் வன்னி மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் காந்தவராயனால் திருக்கழுக்குன்ற மலை மேல் மண்டபம் வகுத்ததை க்ஷ சாஸனம் தெரிவிக்கிறது.

 

  • ••

 

திருமலை கோபுரத்திற்கும் வண்ணந்த தீட்டிய குகைக்கும் மத்தியில் புதைக்கப்பட்ட படிகளின் பாறை மேலிருக்கும் சாஸனம்

 

கோப்பாரி கேசரி வர்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவற்கு யாண்டு 12வது ஜயங்ககொண்ட சோழ மண்டலத்துப் பங்காள நாட்டு நடுவில் வகை முகை நாட்டுப் பள்ளிச்சந்தம் வைகவூர் திருமலை தேவர்க்கு இளைய மங்கை வைத்த திருநந்தா விளக்கொன்று இதற்கு பூமி திருத்தக்காசு இருபது இப்பூமியால் ஆசந்திரதித்தியவரை இப்பள்ளியுடைய ஆரம்ப நந்திக்கு நித்தம் நந்தா விளக்கொன்றும் பல்லவரசியர் தேவியார் சிண்ணவையார் சந்ததிராதித்த வரை வைத்த நந்தா விளக்கொன்றுக்கு கொடுத்த காசு அறுபது என்றுள்ளது.

 

சிண்ணவையார் என்னும் பல்லவ அரசி ஓர் சோழன் குமாரத்தி இவள் பல்லவ ரானை மணம் புரிந்து கொண்டவள். இப்பல்லவ அரசி வைகவூர் திருமலைத் தேவர்க்குத் திருநந்தா விளக்குக்காக அறுபது காசும், இளைய மங்கையார் இருபது காசும் கொடுத்திருக்கின்றார்கள். இதை மேற்படி சாஸனம் தெரிவிக்கின்றது.

 

  • ••

தென் ஆற்காடு ஜில்லா கூடலூர்

தாலுக்காவில் திருமாணிக் குழி

வாமனபுரீஸ்வரர் கர்ப்பக்கிருகத்துக்

கீழண்டை மதில் முகப்பின்

வலது பக்கத்தில் உள்ள சாஸனம்

 

வீர சிம்மாசனத்துப் புவன முழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பர கேசரி வர்மரான திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு மூன்றாவது சிம்ம நாயற்று அமர பக்ஷத்து பஞ்சமையும் திங்கள் கிழமையும் பெற்ற அஸ்வனி நாள் ராஜ ராஜ வளநாட்டு உடையார் திருமாணிக்குரீ நாயனாருக்கு இந்நாட்டுக் கூடலரச நாராயணன் ஏழிசை மோகனான ஜனனாதகச்சிராயன் திருநந்தா விளக்கொன்றுக்கு சாவா மூவாப் பசு. இப்பசுசு முப்பத்திரண்டும் கைக்கொடு இத்திருந்தா விளக்க ஒன்றும் சந்திராதித்திய வரை செலுத்தக் கடவோம். திருவுண்ணாழிகை சபையோம் இப்படி சம்மதித்து இவ்வுபையங் கொண்டோம். இது பன்மா ஹேஸூவராக்ஷை என்று உள்ளது.

 

இது, கூடல் அரச நாராயணன் ஏழிசை மோகனான ஜனநாதகச்சிராயன் திருநந்தா விளக்குக்காக திருமாணிக்குழி ஆளுடைய நாயனாருக்கு 32 பசுக்கள் விட்டதைத் தெரிவிக்கின்றது. காஞ்சி மாநகரை ஆட்சி புரிந்த சோழப் பல்லவ மரபார்களுக்குத் தான் கச்சிராயர் என்னும் பட்டப்பெயர் உண்டு. விருத்தாசலம் தாலுக்கா முகாசா பருர் ஜமீன்தார்களுக்கு நாளதும் கச்சிராய துரை என்றே வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தென்னாற்காடு ஜில்லாவிலுள்ள படையாட்சியார்களின் குடும்பங்களில் சிலர் கச்சிராயர் என்ற பட்டப்பெயர் உடையவர்களாகவே நாளதும் இருக்கிறார்கள்.

 

  • ••

 

காஞ்சி மாநகரில் ராஜ நாராயண

சம்புவராயர் கி.பி. 1355-ல் அரசியற்றிய

காலத்து விஷ்ணுகாஞ்சி

வரதராஜப் பெருமாள் ஆலய அபிஷேக

மண்டபத்தின் தென் பாகத்தில் வரையப்பட்ட கல்வெட்டு

 

ஸ்வஸ்தி சகலலோக சக்கிரவர்த்திகள் ஸ்ரீராஜ நாராயண சம்புவராயருக்கு யாண்டு இருபதாவது ஆனி மாதம் 30 ம் நாள் பெருமாள் அருளாள நாதன் கோயில் ஸ்தானத்தாருக்கு நனைபு பெருமாள் திருநாள் எழுந்தருளுமளவில்  ஆனை நம்பிரானிலும், குதிரை நம்பிரானிலும். ஸ்ரீ கெருடாழ்வானிலும் நாலுநாளு மிறங்கின தெரு வீதியிலே எழுந்தருளிவிக்கக் கடவராகவும் திருத்தேரில் எழுந்தருளுமளவில் திருநாள் தோறும் ஏழாந் திருநாளில் அத்தைக்கு கெங்கை கொண்டான் மண்டபத்து எழுந்திருளினால் மீளவும் எழுந்தருளிவிக்கக் கடவராகவும் என்பதாகும்.

இச் சாஸனத்தால் சம்பு குலத்து மன்னர்களில் முடி மன்னனாகயிருந்து சுமார் 620 வருஷங்களுக்கு முன் காஞ்சீபுரத்தில் அரசு செலுத்தியவன் ராஜ நாராயண சம்புவராயனெனத் தெரிகிறது. இதற்குப் பின்னரே ஏகாம்பர சம்பு பல்லவன் அரசியற்றினானெனவும் அவனது சமூகத்தே இரட்டைப் புலவர்கள் தெய்வீக உலாவை அரங்கேற்றினர் எனவும் ஏற்படுகின்றது. அவர்கள் தம் வாக்கால் சம்பு குலம், பல்லவ குலம்  யாவும் ஒன்றே என விளக்கியிருக்கிறார்கள்.

 

  • ••

 

 

நாராயண சம்புவராயர் சிம்மாசனம் ஏறிய

முதலாவது ஆண்டில் மஹாபலிபுரம்

வராகசுவாமி கோயிலின் முன் மதிலில் எழுதியுள்ளதாவது

 

நாராயண்ன் சம்புவராயற்கு யாண்டு முதல் மாமல் நின்ற பெருமாளுக்கும் நில மங்கை நாச்சியாற்க்கும் பைன நிலம் உள்ளது. அஞ்சாவது முல் திருவாராதனைக்கும்.

 

என்று எழுதியிருப்பதால் காஞ்சீபுரம் மஹாபலிபுரம் இதுகளுக்கு விசேஷ தானங்களை நாராயண சம்புவராயர் செய்ததை தெரிவிப்பதுடன் இவர் சுமார் 620 ஆண்டுகளுக்கு முன் பேரரசு புரிந்ததாகவும் ஏற்படுகிறது.

 

 

  • ••

 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்

அத்திகிரி பருவதத்திற்கு தென்புறம்

எழுதியிருக்கும் சாஸனம்

 

ஸ்ரீ குலோத்துங்க சோழன் தேவர்க்கு பதிமூனாவது மேஷனாயிற்று, பதினாராந்தேதி வியாழக்கிழமை பூர்வபக்ஷத்து அஷ்டமியு ஆன் செயங்கொண்ட சோழ மண்டலத்து யெயிற் கோட்டத்து நரகம் காஞ்சிபுரத்து திருவத்தியூர் நின்றருளிய அருளாளப் பெரும் அம்மயப்பர் தன்னுடைய பொருளாளான ரத்தின சோழ சம்புவராயர் வைத்த திருநந்தா விளக்கு ஒண்ணுக்கு விட்ட பசு ரிஷபம் – 1 க்கு அழக்கும் கடனதாகவும் பாலமுதுக்கு விட்ட பால் பசு யெட்டும் ஆக பசு 10) நாற்பதும் ரிஷபம் 1ம் கைக்கொண்டோம். இப்படி சந்தறாதித்திய வரைக்கும் செலுத்தக் கடவதாக கைக் கொண்டோம்.

 

கி.பி. 1136ல் அரசாண்ட 2வது ஸ்ரீ குலோத்துங்க சோழன் பதிமூன்றாம் ஆண்டில் விக்கிரம சோழ சம்புவராயர் விஷ்ணு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வரவும், பாலமுதுக்கு 40 பசுவும், ஒரு ரிஷபமும் விட்டதை க்ஷ சாஸனம் தெரிக்கிறது.

 

 

 

 

  • ••

 

 

காஞ்சி திருவத்தியூர்

அருளாளப் பெருமாள் ஆலயத்தில்

வரையப்பட்ட சாஸனம்

 

மகா மண்டலேஸ்வர ஸ்ரீ வீர ஹரி ராயருக்குச் செல்லா நின்ற சகாப்தம் ….க்கு சித்திரபானு சம்வத் சரத்து ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்துக் காஞ்சிபுரத்தில் திருவத்தியூர் நின்றருளிய பெருமாள் அருளாள நாதனுக்கு ஸ்வஸ்தி ஸ்ரீ மஹாமஹி மண்டலேஸ்வரன் பரம வம்ஸோத்பவ பல்லவ குலதிலக பரத்வாஜ் கோத்திர பவுத்திரத்துக்கு ஸ்ரீ புவனாதீஸ்வர காக் கோட்டம் பிகாலபத் பாத்தசாத பரம மஹேஸ்வர பெனிதார்த்த சந்திர கட்டு வாங்க துவசக்கு வாய உபரபோஷண சத்திய சம்பாஷண பசபவ பூஷண விற்பவாஞ்ச நிவாரண வேஷண திருவேங்கிட நாதனோடு வடிசாக சர்ச்சன நித பாராயண கிரந்த சேணா சிற்ப பரப்பிரசண்ட ருத்ராவத்தார ஜெகதங்க பைரவ புவனீதாரண ருபகாந்த ரப்ப அநேக ரிபுநிருபதி மணி மகுட கடித சரணாரவிந்த பூலோக சாதுர்வர்ண பரிபாலவ ராஜஸம் விக்கரம விகார மல்லாபுர வல்லவ மைலாபுரநாத ஜெகத் கோபால பல்லவாதீத திருநேத்திரனைய பல்லவராய என்று வரையப்பட்டிருக்கிறது.

இது வீர ஹரிஹர ராயர் ஆளுகையில் (கி.பி. 1379ல்) காஞ்சியில் அரசனாக இருந்த திருநேத்திரனைய பல்லவராயனைச் சிறப்பித்துக் கூறுகின்றது. பல்லவச் சோழர்கள் பாரத்வாஜ கோத்திரம் வழங்கினதையும் தெரிவிப்பதுடன் மல்லாபுர வல்லவ மைலாபுர நாதர் என்பதால் காஞ்சிபுரத்திற்கும், மயிலை நகரத்திற்கும் அரசர்களாக இருந்தார்கள் என குறிப்பிடுகின்றது. அதனால் தான் காஞ்சி பல்லவ கோபுரத்தில் வன்னியர்களுக்கு ஆதிக்கம் இருப்பதைப் போல் சென்னை மயிலாப்பூர் கோபுர தீபாராதனை சுதந்திரமும், நாளதும் வன்னியர்கள் வசம் இருந்து வருகிறது.

வந்தவாசி தாலுகா வயலூர்  திருவேதி

மலையில் பெருமாள் ஆலயத்தின்

தென்னண்டை சுவற்றிலுள்ள சாஸனம்

 

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீராஜ ராஜ தேவற்கு யாண்டு 15வது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து உத்தமர் சோழ வளநாட்டு வயலூரான குலோத்துங்க சோது நல்லூரில் திருவேதி மலையில் என் பாட்டன் எழுந்தருளிவித்த அம்மை விண்ணகராழ்வார்க்கும், அம்மைக்கும் திதி வாரம், சிறப்பு திதி பூஜைக்கு உள்ளிட்ட திருநல்லூரான சித்திரமேழி நல்லூரில் வெட்டியும், காவலும் தனியாட பெறும் 13 காணிமா நெல்லும் தேவற்குக் கொடுத்து கல்வெட்டு வித்தேன். மிண்டனாகிய ஸ்ரீ அம்மையப்பனான எதிரிலிச் சோழ சம்புவராயர் எய்…. என்றுள்ளது.

 

1919 ளூ நவம்பர் மாதம் 20 உயில் வந்தவாசி தாலுகா வயலூர் கிராமத்தில் கூடிய வன்னி குல க்ஷத்திரிய மகா நாட்டிற்கு ஸ்ரீ சேலம் சு. அர்த்த நாரீச வர்மா, கே. ஏகாம்பர நாயகர் அவர்களுடன் சென்றிருந்த போது க்ஷ ஊர் மலையின் ஆலயத்திலிருந்து இச்சாஸனம் அகப்பட்டது. மற்றும் அச்சுற்றுப் பக்கமுள்ள சரித்திரி  ஆராய்ச்சிகளை செய்த போது நம் முன்னோரின் ஆட்சிப் பிரபாவங்களும், அக்காலத்தில் ஏற்பட்ட ஆலய மேன்மைகளும் அது தற்காலம் சீரழிந்திருப்பதையும் காண எங்களுக்கு ஆச்சரியமும், அடங்கா துக்கமும் தோன்றியது. அச்சரித்திர சாஸன குறிப்புகளைக் கொண்டு வித்வான் சேலம் சு. அர்த்த நாரீச வர்மா அவர்கள் எழுதிய பாடல்கள் பின் வருமாறு:

 

கோகிலா வயலூரின் பூர்வநாமம்

குலோத்துங்க சோழநல்லூ ரென்பதாகும்

 

மீதுலவு திருவேதி மலையின் மீது

விண்ணகரத் திருமாலின் கோயிலுண்டு

 

சேதமுற்ற சிவன்கோயில் தன்னைக்காண

சித்தமிகப் புலம்புமிந்த தீமைசெய்தோர்

பாதகராம் புறமதஸ்தர் லிங்கமூர்த்தி

பனிவெய்யில் மழைபொருத்தல் பாவம்பாவம்

 

குணக்கிரண்டு நாழிகையிற் றிருவாய்ப் பாடி

குன்றதனி லரங்கர்க்கு கோயிலுண்டு‘

மணமுறவே கிடந்ததிருக் கோலமாகுங்

மால்பாதம் பொய்கைதனில் மதிக்கக்காணும்

தணப்பரிய தீர்த்தங்கள் நிரம்பவுண்டு

தலமதனை யாண்டவர்கள் சம்புவேந்தர்

எணத்தகுந்த வயலூரே யிராஜதானி

இன்றும் தன் சின்னங்க ளெங்குந்தோன்றும்.

 

நகரழிந்த பலகுறிகள் காட்சியாவும்

நாடுபவ ருள்ளத்தை நடுக்கஞ்செய்யும்

அகநகரும் புறநகரும் மதிலும் குன்றும்

அகழிமுத லங்கங்க ளனேகமுண்டு

தகவுடனே எதிரிலிநா ராயணப்பேர்

சம்பு மன்னர் அரசாட்சி சாசனங்கள்

மிகவுண்டு திருவேதி மலையின் மீது

விக்கிரம சோழனுட விஜயந்தானே.

 

  • ••

கி.பி. 1429-ல் வீரசிங்கதேவ மகாராயன்

ஆளுகையில் ஏற்பட்ட தாம்பிர சாஸனம்

 

திருவேங்கமுடையான், திருவிளையாட்டுக் கிராமமான சதுர்வேதி மங்கலத்து பிரதி நாமமான கம்பங் குளத்திற்கடுத்த கிருஷ்ண வோடையிலிருக்கும் வன்னி ராஜ கோத்திரம் மூக்கா நாயகன் குமாரன் முத்தைய நாயகன் உள்ளிட்டார் அனைவரும் எங்கள் காணியாட்சி கிராமமான கிருஷ்ணவோடை என எழுதப் பெற்றுள்ளது.

இச்சாஸனத்தில் வன்னிய ராஜ கோத்திரம் மூக்கா நாயகன் குமாரன் முத்தைய நாயகன் என்று வரைந்துள்ளது காண்க.

 

  • ••

கி.பி.1456-ல் ராசவல்லபன்

ஆளுகையில் ஏற்பட்ட பட்டயம்

 

சென்னை திருவொற்றியூருக்கடுத்த சாத்தாங்காடு கிராமத்துக் குருக்கள் சங்கராச்சாரியார் உத்தரவுப்படி அவர் முன்னிலையில் வன்னிய சின்னப் பிள்ளை தந்திரி யுள்ளிட்டாருக்கு எழுதிக் கொடுத்த கிரய சாஸனம் எங்கள் கிராம காட்சியான சாத்தாங்காடு என்று வரையப்பட்டிருக்கிறது. வன்னிய சின்னப் பிள்ளை தந்திரி என்பவன் ஓர் சேனைத் தலைவனாகும்.

  • ••

 

அவனாசி ஈசான்னிய பாகத்தில்

சங்கன குளத்துக்குக் கிழக்கு சிவ பூசை

புஞ்சை காட்டில் குத்துக்கல்லிலே

தீட்டியுள்ள சிலாசாஸனத்து நகல்

 

ஸ்ரீதஸ்ரீ மகா மண்டலே1வன் அரிய தழ விபாடன் மூவறாய கண்டன், கண்டனாடு கொண்டு, கொண்ட நாடு கொடாதவன் பூர்வ தக்ஷிண பச்சம உத்தர சதுசமுத்திராதிபதியான முதலாக எம்மண்டலமும் கொண்டருளிய ராசாதிராசனான ராசபரமேசுவரன் நளவாகன சக்ரவர்த்தி நருளொதர சூரியன் பதினெட்டு கோட்டத்து வன்னியர் தாண்டய துலுக்கர் தௌவிபாடன துலுக்கர் மோகம் தவிர்த்தான் இராய மகாராயர், கிருஷ்ணராயர், இம்முடி அச்சுதவே மகாராயர், பிருதிவி, ராச்சியம் பண்ணியருளா நின்ற சகாசதம் செல்லா நின்ற நந்தனளூ கார்த்திகை மாதம் முதல் இராயசத்துக் கொண்ட மாதய்யன குமாரன் திம்மப்ப நாயகருக்கு தெக்ஷிண புரமான பாலராச உடையாருக்கு செல்லா நின்ற கொங்கு மண்டலத்து ஸ்ரீமன் மகாதேவதே உத்தமன் அவனாசி லிங்கற்திப்படிக்கு யெல்லைய தேவ மகாராசாவின் ஊழியத்து பகவனாயகரும் தானிக அவனாசி சுப்பன் உள்ளிட்டாரும் ஸ்ரீமது அனேக பிரம்மாண்டபாண்ட கெற்ப கிறுபகிறுதவித மதுசூதன திருக்காதீசுபர அனேக தேவதா மகுடமணிகன கிரண என்பதாகும்.

 

சுமார் 420 வருடங்களுக்கு முன் அச்சுததேவ மகாராயர் அரசியற்றிய காலத்தே இச்சாஸனம் ஏற்பட்டதாயும், அப்போது வன்னியர்கள் பல கோட்டங்களில் அரசு புரிந்திருந்ததாயும் க்ஷ சாஸனம் தெரிவிக்கிறது.

 

  • ••

தென்காசி தாலுகா அகோர

சிவந்த பாதமுடைய ஆதீனம்

வன்னிய க்ஷத்திரிய வம்ச பரம்பரை

பட்டய சாஸனத்தின் நகல்

 

கரபு நிலமைகரந்த தேவர் குல வங்கிஷத்தான் எதிர்த்தாரை இமயபோதில் கண்டனம் செய்ய கயிலா சபதி கருணை பெற்றோன். வீர லட்சுமி விளையாட நின்ற புயவலிமையுடையோன். தேவர் காண்டாட திக்கு விசயம் செய்தோன், அரக்கர் குல காலன் பொர்ப்பூண நூலும், கண்டசரமும், வீர கண்டாமணியும், கஸ்தகடையமும், இது முதலாகிய சர்வாபரணமும், உடையோன், இராஜாக்கள், பட்டவர்த்தனர், மகுட வர்த்தனர், மந்திரிகள், பிரபுக்கள், தளகர்த்தர், குந்தளக்காரர் முதலியவர்கள் இருபுறமும் நிறைந்த கெலுமுகத்தை யுடையயோன், வன்னிக் கொடியும், மீனக் கொடியும், புலிக்கொடியும், பஞ்சவர்ண பாவாடையும், சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னிய குலாதிபதி, அக்கினி கோத்திரத்தான் முப்பத்த ரண்டாயுதமுடையோன், நவமணி மாலையுடையோன் செப்பு பரியாள அக்கின் குதிரை நடாத்தி சத்துருவை செயம்பண்ணி அழியாத கீர்த்தியையுடையோன் தேவ சமபந்த முடையோன், தேவ லோகம் விட்டு பூலோகம் வந்தோன், காஞ்சீபுரம் சிலாஸதனத்துக்கு உடையவனாயும், சங்கநிதி, பதுமைநிதி, நவநிதிக்கும் உடையோன், திக்குகள் தோறும் தேவாலயம், பிர்மாலயம் நிர்மாணித்தோன் தாம்பீர நதிக்கும் வடக்கு பழைய ஆழ்வார் கோயிலுக்கு 6 காணி விரைப்பாடும் ஆழ்வார் குறிச்சியில், ஆள்வார் கோயிலும் அதற்கு பூசை முதலியவைக்கு 4 காணி நிலமும் தர்மசாசுபதமாக விட்டுக் கொடுத்து, பதினாறு கோட்டைக்கு தலைவன் அவுகுதேவன் இவர்களில் முதன்மை பெற்ற அக்கினிக் கோத்திரத்தான் வன்னிய வரகுண பாண்டியன் காஞ்சீபுரம் பிரமகுல அகோர சிவந்த பாதமுடைய தேசிகரவர்களை தெரிசனை செய்து விபூதி பிரசாதம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் யெங்கள் குல குருவாகிய அகோர சிவந்த பாதமுடைய தேசிகரவர்கள், தென்காசியில் விஸ்வநாதசுவாமி சன்னதியில், சன்னதி மடத்ததிபராய் வந்திருப்பது தெரிந்து வந்து தெரிசனை செய்து திருநீறு ஆசீர்வாதம் பெற்று தீட்சை செய்து, உபதேசம் பெற்று, குரு மொழிப்படியிருக்க, சாலிவாகன சகாப்தம் 1382 மேல் விஸ்வேசுவரர் சன்னதியில் யெழுதிக் கொடுக்கப்பட்ட பட்டய சாசனமாவது யெங்கள் வம்சத்தார் பாரம்பரை குரு சன்னி தானத்துக்கு வருஷ காணிக்கை தலைக்கட்டு 1க்கு பணம் 2ம், தீட்சைக்கு பணம் 10ம் யெங்களில் வரம்பு தப்பினவர்களுக்கு வாங்கும் கடமையும் சுப முதலாகிய காரியத்திற்கு பணமும், வழக்கப்படி வீதமும் கொடுத்து போதுவோமாகவும் இதை தடை செய்தவர்கள் கோவஸ்தி, சிசுவஸ்தி செய்தவர்கள், போகிறகதியில் போவார்களாகவும், இதை விர்த்தி செய்தவர்களும் இந்தப்படி நடந்தவர்களும் அஷ்ட ஐஸ்வரியமும், சகல சம்பத்தும் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பார்களாகவும்.

இந்தப்படிக்கு,

வரகுண பாண்டியன்

இப்பட்டயமானது சாலிவாகன சகாப்தம் 1382ல் அதாவது 482 வருடங்களுக்கு முன் அக்கினி (அதாவது ஆங்கீரச) கோத்திரத்தானான வன்னிய வரகுண பாண்டியன், ஆழ்வார் கோயிலுக்கு நிலங்கள் விட்டதையும், காஞ்சீபுரம் பிரமகுல அகோர சிவந்த பாதமுடைய  தேசிகரவர்களை தரிசனம் செய்து விபூதிப் பிரசாதம் பெற்று அவருக்கு சில காணிக்கைகள் ஏற்படுத்தியதாயும் தெரிவிக்கிறது.

பாண்டியர்கள், வன்னிய மரவைச் சேர்ந்தவர்ள் என்பதற்கு, கடிகை முத்துப் புலவர் ‘பரவுவர குணராம பாண்டிய வன்னியன் புகழைப் பரிந்து கூற’ என்று பாடியிருப்பதற்கேற்ப மேற்படி பட்டயத்தலும் வன்னிய வரகுண பாண்டியன் என்று குறிப்பிட்டிருக்கிறது. மதுரையை ஆண்ட பாண்டியர்கள் பரம்பரையில் உற்பவித்து தற்காலம் ஏழாயிரம் பண்ணை அரண்மனையில் வீற்றிருக்கும் ராஜ ராஜ ஸ்ரீமந் அம்பை குலசேகர, சிதம்பர துரைப் பாண்டிய, செப்புப்பரி ஆண்டு கொண்டார் என்று பூர்வமிருந்து வழங்கிவரும் பட்டப் பெயருக்கேற்ப, மேற்படி பட்டயத்திலும் செப்புப்பரியான அக்கினிக் குதிரை நடாத்தி என்று வருவனவற்றையும் உற்று நோக்குவோர்க்கு, பலர் பலவாறு தற்போது சந்திர வம்சமென்றும், பாண்டியரென்றும் சொல்லிக் கொள்ள ஏதுவில்லையென்றும், பூர்வீகமிருந்து வம்ச வழியாக வரும் பாண்டியர்கள், சிவகிரி, ஏழாயிரம் பண்ணை, அளகாபுரி முதலிய வன்னிய ஜமீன்தார்களே என்றும் விளங்கும்.

 

  • ••

 

புதுவை மாநகருக்கு அடுத்த

வில்லவநல்லூர் அக்கினி வம்ஸ

க்ஷத்திரியராகிய வன்னியர் மடாலய

பூர்வோத்திரம்

 

சுபஸ்ரீ மஹா மண்டலத்திலே சுவர்ன அரியராய் விபாடன் பாஷைக்குத் தப்புவராத கண்டன், மூவராய் கண்டன், கண்ட நாடு, கொண்டு, கொண்ட நாடு, கொடா தான், துடுக்கர், தளவிபாடன், துடுக்கர் மோகந்தவிர்த்தோன், ஒட்டியர் தளவிபாடன், ஒட்டியர் கோட்டந் தவிர்த்தோன், பின் மண்லமுங்க கொண்ட இராஜாதி இராஜன், இராஜபரமேஸ்வரன், இராஜமார்த்தாண்டன் இராஜேஸ்வரன், புயங்கன், இராஜ கம்பீரன், இராக்கனத் தம்பிரான், இந்திர துரந்தரன், அஸ்வபதி, கஜபதி துரந்தரன், அஷ்ட மனோகர இராயன், அசுராண விருது நரபாலன், கோதண்ட இராமன், கலியுக இராமன், கண்ணன், வாளுக்கு வீமன், தோளுக்கு அபிமன்னன், குணத்திற்குத் தருமன், அழகுக்கு அநங்கன், அமர்ந்ததற்கு அரிச்சந்திரன், ஆண்மைக்கு அனுமான், ஆக்கினைக்குச் சுக்ரீபன், கொடைக்கு கர்ணன், செல்வத்திற்கு அளகேசுரன், பலத்திற்கு வாயு பகவான், உலகுக்கு கதிரோன், உலாவும் உலகமெல்லாம் படைக்க நினைத்தருளிய வீராதிவீர வன்னிய பிரதாபன், கிருஸ்ணதேவ மஹா இராயர், அச்சுததேவ மஹா இராயர், புஜபலதேவ மஹா இராயர், திருமலை தேவ மஹா இராயர், நரசிங்க தேவ மஹா இராயர், இராம தேவ மஹா இராயர், பிரவிட தேவ மஹா இராயர், மல்லிகார்க்சுன தேவ மஹா இராயர் பிரிதிவி இராச்சிய பரிபாலனம் பண்ணி, அருளா நின்ற சகாப்தம் நின்ற ஆங்கீரச வருஷத்து மிதுன மாசத்து பூர்வபக்ஷத்து அஸ்டமியும் பூரட்டாதி நட்சத்திரமும் பெற்ற சோமவார நாள் வடகரை விருதப்ப சங்கன், வளநாட்டுக்கு மேற்கு நாடு இருங்கோள், பாண்டி வளநாடு தொண்ட மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் இந்த நாலு மண்டலத்திற்கு அழகான தொண்ட வளநாட்டுக்கழகான வில்லவனல்லூர் திருக்காமேஸ்வரர் குயிலாரம்மை அவர்கள், சந்நதியாகிய வில்லவனல்லூரிலே அந்தந்த ஜாதிக்கு மடாலயங்கள் உண்டாகின்றன. நமக்கு சிவாலய பூசை மாத்திரமிருக்கின்றது. தென் தேசத்தில் நமது வம்ஸ பண்ணாடர் தங்கள் பேரும் பிரதாபமும் உண்டாக வேண்டுமென்று மடங்கள் கட்டியிருக்கிறார்கள். நாம் இராயரைப் போய்க் கண்டு மடங்கட்ட உத்தரவு பெற்று வருவோமென்று திருவக்கரை வல்லவ நாட்டு மழவராய பண்டாரத்தார், கருத்த நாயனார் பண்டாரத்தார், சின்ன குமார நாயனார் பண்டாரத்தார், சிதம்பரம் மழவராய பண்டாரத்தார், கச்சி இராயர், பெரியண்ணா நாயனார், சிற்றம்பல நாயனார், தாண்டவ நாயனார், சடையப்ப நாயனார், அழகு சிங்க நாயனார், மெய்யோக நாயனார், பண்டாரத்தார் இவர்களும்.

 

கண்டன்மார், தந்திரியார், படையாட்சியார் என்னும் பல பட்டப்பெயர் பெற்ற சோம சூரிய அக்கினி வம்ச பண்ணாடரான உறவின் முறையார் அனைவரும் போய் இராஜ வன்னிய இராஜ ஸ்ரீ மல்லிகார்ச்சுனதேவ மஹா இராயரைக் கண்டு பேச, அப்போது இராயரும் சிம்மாசனம் விட்டு இறங்கி, நமது வம்சத்தாரென்று தெரிந்து தேவாலய பூசையிருக்க மடத்துத் தருமம் நமக்கேனென்று இராயரும் கேட்க, அப்போது நாயனார் பண்டாரத்தார், பாண்டிய மண்டலம், சோழ மண்டலம் முதலிய மற்ற மண்டலங்களில் குரு மடங் கட்டியிருக்க தொண்ட மண்டலத்திலேயும் இருக்க வேண்டு மெனறார். இராயரும் சந்தோஷித்து உங்களுக்கு இடமில்லாமற் போமோவென்று தானத்தாரை அழைத்து நாயனார், பண்டாரத்தார் அவர்களுக்கு இடம் விடப்போமென்று சொல்ல, அப்போது தானத்தார் மூத்த முதலியார், திருநாகத் தொண்ட முதலியார், நம்பித் திருஞானப் பண்டிதர் மற்றும் முற்றாற்றுடையார் நம்பிக் குருக்கள், வயித்தியநாத குருக்கள் கோயில் கணக்கு, க்ஷேமக் கணக்கு மற்றுமுண்டான தானத்தார் தலத்தாருங்கூடி, கெவிசித்தலிங்க தேவர், முளைய தேவர், கம்பிரானார் திருநாமத்தில், காணியான தெற்குத் தெருவில், தேரோடும் வீதியில் தென் சரகில் பாலையர் மடத்திற்குக் கிழக்கு அம்பலத்தாடும் ஐயர் மடத்திற்கு மேற்கு சட்டையர் மடத்திற்கு வடக்கு அடி கிழக்கு மேற்கு (75) தெற்கு வடக்கு அடி (85) அடி ஒன்றுக்குப் பொன் ஒன்றாக (75) பொன்னுக்குக் கிரையங்கொண்டு கல்லில் பேர் வெட்டி, நட்டு கிணறு கட்டி, மடங்கட்டி, தாம்பர சாஸனமாக பட்டயம் எழுதி நாலு மண்டலம் (56) தேசமும் குரு மூர்த்தமாய்க் கொண்டாடச் சொல்லி, மஹா மட பிச்சை முட்டியும், திருவிளக்கும், திருநந்தவனப் பணிவிடையும், திருமாலையும், உபயமும் மகேசுவர பூசையும் பண்ணி நடத்தி வர சிலாநதி சக்கரவர்த்தி யோகிசுவர குருவை மடத்தில் வைத்து, அந்தந்தச் சீர்மைப் பண்ணாமடரும், நாயனார் பண்டாரத்தார் அனைவரும் வம்ச தருமக் கீர்த்திக்காக மடத்திற்குக் கட்டளையிட்டது. உபநய முகூர்த்ததிற்குப் பணம் ஒன்றும், சுயவரம் நாட்டி, மாலை சூடும் கலியாணத்திற்குப் பொன் பத்தும், கத்தி நாட்டிக் கலியாணம் செய்வருக்குப் பணம் பத்தும், மற்ற முகூர்த்தங்களுக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் பணம் ஒன்றும், பெண் வீட்டார் பணம் ஒன்றும், பெண் தந்த பணம் ஒன்றும் மாதா பிதா குர பாத பூஜை வரும்படிகளும் மடத்தில் சேர வேண்டியது. தண்டிகை துரைகள் பத்து பணமும், குதிரை மேற் குடைபெற்ற அஸ்வபதிகள் அஞ்சு பணமும், ஜாதியில் குற்றா குற்றஞ் செய்பவர் அபராத பணமும், மன்னவேடு கிராமத்தார் அரிவாளுக்கு ஆறுபடி தானியமும், களை வெட்டுக்குப் பதக்கு தானியமும், ஏருக்கு முக்குறுணி தானியமும், பேரூருக்குப் பத்து பணமும், சிற்றூருக்கு அஞ்சு பணமும் கொடுக்க வேண்டியது. ஆதுபாது அற்றவர் சொத்தை மடத்தில் சேர்த்து, மடத்தாரால் சவரட்சணை பெற வேண்டியது. இவ்வரும்படிகள் மடத்திற்கு சேருகிற படியால், செந்தூரத்திலர் தேம் கோபி திருமணி திருநீறிட்ட பேர்களும் சந்திர சூரியருள்ள நாள் வரைக்கும் நடத்தி வருவீர்களாகவும், இந்த மடாலய தருமத்தை தங்காமல் கொடுத்த பேர்கள் மாதாப் பிதாக்களை இரட்சித்து, சிவாலயம், பிர்மாலயம், பூதானம், கோதானம், கன்னிகாதானம் செய்த பலனைப் பெறுவார்கள். ஸ்ரீமது வில்லவநல்லூரிலே திருக்காமேஸ்வரர் குயிலாரம்மை குமாரசாமி சந்நிதானம் விளங்குவது போல் விளங்குவார்கள். மடத்திற்கு அனுப்பக் கட்டளை யிட்டதை அனுப்பாவிடில் மடத்து சுவாமியாரால் அனுப்பப்பட்ட பணிவிடை சிஷியாள் எழுந்தருளின் உடனே கூடி, முன்னே போய் காண்பித்துக் கொண்டு வந்தவர்களுக்கு விடுதி விட்டு சாப்பாடு போஜனம் அமைத்து தருமத்திற்குண்டான வரும்படிகளைக் கொடுத்தனுப்பி வைக்க வேண்டியது. தரும பரிபாலரான, சௌபாக்கிய பிரமாணிக்கரான வேள்வியிற் பிறந்தோர்களான, ஸம்பு குலத்தவரான, குமாரசாமியார் படைத் தலைவரான, அசுரர்கள் மார்பரான, ஆஸ்தான பந்துஜன சிந்தாமணியரான, சாந்தமாரியுடைய கன்னியை மணம் செய்தவரான வாடாமாலையும், வன்னத் தடுக்கும் மாலையும் தரித்தவரான, வாசமிகுந்த குவளை மாலையும், மிடக்கொடியும், முப்பத்திரண்டு விருதும் பெற்றவர்களான முன்னூல் மார்பும், புலிக்கொடியும் பெற்றவரான நையாத நாட்டுக்குச் சப்தபதிகளான சோணாடு காத்தவரான, மறையோர் மகனுக்கு உயிர் கொடுத்தவரான வல்லானுடைய மகுடந் துணித்தவரான, வாதாபியை வென்ற வன்னிய குலாதிபரான, செங்கையில் வில்லும் சிலீமுகமும் எடுத்தவரான, ஏரடி வாழும் வீரப்பரி நகுல துஷ்ட நிர்த்தண்ட விர்ப்பன்ன உத்தண்ட, கோதண்ட விக்கிரமார்த்தாண்டரான அனைவோரும் மனமொத்து இந்த காரியம் தட்டு தலை பண்ணுவதல்லவென்று மடத்து தருமம் விளங்கத்தக்கதாக பார்க்கவும், யாதாமொருவர் அகடவிகடம் பண்ணினால் கங்கைக் கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்தில் போகக் கடவர். தங்களுடைய மாதா பிதாக்களைக் கொன்ற தோஷத்திலேயும், தெய்வ பிராமணரைக் கொன்ற பாவத்திலேயும் போகக் கடவர். தருமம் விளங்கக் குலம் விளங்கும். குலம் விளங்கப் பெருமையும், செல்வமும், பதவியும் அடைவார்கள்.

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

சிலை எழுபது விற்படிச் சிறப்பு 6வது செய்யுளில்

 

‘மிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளீந் திடுவார் தம்

அடியிரக்கத் தொடுபணிவார்க் கரசு தருங் கொடையாளர்

படிபுரக்க வவதரித்த பண்ணாடர் கரத்தமைவிற்

பிடியுரத்தி னாலன்றோ பெருஞால முரமுறலே.’

 

க்ஷ சாஸனத்தில் கூறியதற்கிணங்க, இச்செய்யுளிலும் பண்ணாடர் என்ற சொல்லுக்குரியார் வன்னியராவது காண்க.

 

  • •••

 

நந்திக் கலம்பகம் 10வது செய்யுளில்

 

‘கோதைசோரி சொரிகொங்கை விம்மல்விம்மு குறுமுவற்

சோதிவெளுக்கில் வெளுமருங்கிற் றுவளினீயுந் துவள்கண்டாய்

காதுநெடுவேற் படை நந்திக் கண்டன் கச்சி வளநாடுடு

மாதரிவரோ யிருக்கின்ற வாளிமற்றென் மட நெஞ்சே.’

 

க்ஷ சாஸனத்தில் சொல்லியிருப்பதற்கு இணங்க, நந்திக் கலம்பகத்திலும், ஏனைய நூற்களிலும் கண்டன் என்னும் பட்டப் பெயர் வன்னியருக்கு வழங்கப்பட்டு வருதல் காண்க.

 

  • ••

வைத்தீஸ்வரன் கோயில்

வன்னியர் மடாலய தரும சாஸனத்தின்

விவரம் வருமாறு:

 

சுபஸ்ரீமன் மஹா மண்டலேஸ்வரன் அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராத கண்டன், கண்ட நாடு கொண்டு, கொண்ட நாடு கொடதான் பதினெட்டுக் கோட்டது வன்னிராய கண்டன் அஷ்டதிக்கு மனோகர பயங்கரன் சமரில் மார்த்தாண்டன், இராஜகெம்பீரன் நவச்சக்கரவர்த்திகளில் அசுவபதி, கெஜபதி, நரபதி நவ கோடி நாராயணன், பூர்வ தக்ஷணபக்ஷம் உத்திர சப்தி சமுத்திராதிபதி ஈழமும் குணபள்ளமும் கொண்டு, கெஜ வேட்டையும், அசுவ வேட்டையும் எம்மண்டலமுங் கொண்டு ஈழத்துறை கண்டருளிய இராஜாதி ராஜன் இராஜகெம்பீரன், இராஜ குலத்துக்கு ராஜமணி விளக்கு இராஜபரிகேசரி, சோழ சிங்க சித்தாருணன், இனமுடி கொண்டெதிர்த் தரசாளுவான் ஒட்டிய தளவீபாடன், ஒட்டிய மோகந்த விழான், கொங்கு மண்டலம் குறும்பறுத்து, அழியாவிராணமழித்த விராடகொடி வன்னிய மிண்டன், ரணமன்னியப்பிரியன் கோஷ்டத்து வன்னியராய கோலாகலன், இளவரசு மணவாளன் கண்டிய பிரதாபன், கட்டாரி வல்லவன், சங்கீத சாஹித்ய வித்யா வினோதன், ரணமுகசுத்த வீரன், நகைமுகச் சந்திரோ கணங்கள், கைகூப்பும் மணவாள கெம்பீரன், எதிர்த்தோரை சின மடக்கும் வேங்கை வரிப்புலியானோன், தேன்பாயும் வளநாடன், கொங்கர் குலாதிபன், நித்திய கல்யாண வேந்தாதிபன், பூலோக தேசாதிபதிகளில் சூரிய வம்ச குலதீபகாரணன், சிவசமய பரிபாலன், சிவ பூசா துரந்துர தீபகாருணன் துஷ்டநிக்ரக சிஷட பரிபாலகரான வில்லுக்கு அருச்சுணன், வீர வாளுக்குச் சகாதேவன், மல்லுக்கு பீமன், வல்லபதற்கு நகுலன், கோபத்திற்கு காலாக்கின, குளிர்ச்சிக்கு பூரண சந்திரன், ரூபத்திற்கு காமராஜன், கொடைக்கு கர்ணன், ஆக்கினைக்குச் சுக்ரீபன், கேள்விக்கு முசுகுந்தன், அப்படி பூலோக தேவேந்திரனான புஜபல தேவ மகாராயர், அச்சுததேவ மகா ராயர், கிருஷணதேவ மகாராயர், இவர்கள் பிருதிவி ராச்சிய பரிபாலனமே பண்ணியருளி நின்ற சகாப்தம் இதன் மேற் செல்லா நின்ற துர்முகி ளூ தை மாதம் தலை செவ்வாய்க் கிழமை நாள் சங்க விருச்சிகமும், மேவு ஞாயிற்றுப் பூர்வ பட்சத்தில் ஏகாதசியும், திருவோண நட்சத்திரமும் சேர்ந்த கார்த்திகை சோமவார நாளில் சோழ மண்டலத்திற்கு தெற்கு வடக்கு இராஜாதிராஜன் வளநாடு வழுதலம் பட்டுச் சாவடி, திருவாலியவதாரமான் சடாயுபுரி, வேதபுரி, கந்தபுரி, ஆதித்தபுரி, ஆதியான திருப்புள்ளிருக்கும் வேளூரில் கலியுக  வந்தராய்த் தெய்வீக வயித்தியரா யெழுந்தருளிய தம்பிரானர் சன்னிதியில் அந்த அந்த சாதிக்குச் சிவாலயமும், மடாலயமும் உண்டான படியினாலே, பண்ணாட்டார் தங்கள் மரபிற் பேரும் பிரபாதமுமாக வேண்டுமென்று தொண்ட மண்டலம் சோழகனார் காலக்கத் தோழவுடையார் மழவராய நாயகா, பருவூர கச்சிராய நாயனார், இராவுத் தமிண்ட நாயனார், ஊத்தங்கால் வன்னிய நாயனார், சமுவுடியார் பாஞ்சால நாயனார், வாண்டையார், கோங்குமுடையார், பெண்ணைக்கரை சீராய நாயனார், சென்னிராய கவுண்டர் சீராமக் கவுண்டர், செங்கழு நீர்க் கவுண்டர், வேட்சிக் கவுண்டர், நமனாண்டிக் கவுண்டர், நரசிம்மக் கவுண்டர், அனகராயக் கவுண்டர் இவர்களனைவருங் கூடிச் சன்னிதியின் மேலைத் தெரு வீதியில், தென்சருகில் நந்தகோபாலன் மடத்துக்கு கிழக்கு மலைமான் மடத்தக்கு மேற்கு கிழக்கு மேற்கு அடி தெற்கு வடக்கு அடி ஆக அடி… அடி ஒன்றுக்கு பொன் 1. ஆக… பொன் பணம் ஸ்தலத்துக்க மேல் பிள்ளை கையிற் சுத்தகிரையமாய் கொண்டு, கல்லுவெட்டி பேர் வைத்துத கிணறு கட்டி வைத்துத் தாணட்வராய பண்டாரத்துக்குத் தாம்பிர சாஸனமாகப் பட்டயம் பண்ணிக் கொடுத்து நாலு மண்டலம் தாம் ஐம்பத்தாறு தேசத்திலும் கொண்டாடச் சொல்லி, மகா மடதர்ம பிச்சை முட்டியும், திருவிளக்கும், திருநந்தவனப் பணிவிடையும், திருமாலையு பயமும் மகேஸ்வர பூசையும் பண்ணிவரச் சொல்லி, நம்முடைய சந்ததியார் நாலு மண்டலம் ஐம்பத்தாறு தேசத்திலுள்ள உறவின் முறையா ரெல்லோருக்கும் கீர்த்தியும், பலனுமுண்டாக வேண்டுமென்று வாண்டையார், அஞ்சாத சிங்கம், நீலங்கராயர், குலைபடையாட்சி, காளிங்கராயர், கருப்புடையார் இவர்களனைவோரும் மற்றமுண்டான பண்ணாட்டாரும் கட்டளையிட்ட தருமம் காணிபரப்பி பெண்ணாடகம், சாத்துக் குழல், ஜெயங் கொண்ட சோழ புரம், சென்னியாண்டார் கோவில் குழு முறைச் சூழ்ந்த பதினேழு பத்து பருவூரைச் சூழ்ந்த பனிரண்டு பத்து வன்னியரும், ஆத்தி நாடு, சேலநாடு, ஓமளியுள் சீமை, வஞ்சி நாடு, சீமளி சீமை, பூவானி நாடு, மூலக்காடு சீமை, அந்தந்த சீமை பண்ணாட்டாரனைவருங் கூடி, மடத்துக்கு வருஷ வர்த்தனையாக கட்டளையிட்டது தலைகட்டுக்கு ஒரு கலியாணத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர் ஒரு பணம், பெண் வீட்டுக்காரர் ஒரு பணம், தண்டிகை துரைகள் பத்து பணம், குதிரைக் குடை பெற்ற அசுவபதிகள் ஐந்து பணம், சாதியிற் குற்றா குற்றஞ் செய்தவர் அபராத பணமும் மடத்துக்குச் சேருகிறபடியால், திருநீறு திருநாமம்  இடப்பட்ட பேர்கள் சந்திராதி சூரியருள்ள நாள் வரைக்கும் நடத்தி வருவார்களாகவும், இந்த மடாலய தருமத்தை விசாரித்து பண்டாரமவர்களுக்கு இருந்த நாளளவும் படி செலவுங் கொடுத்து, உபகாரமாய் வருஷ வர்த்தனை தங்காமற் கொடுத்த பேர்கள், மாதா, பிதாக்களை இரட்சித்து சிவாலயம், பிரம்மாலயம், பூதானம், கோதானம், கன்னியர்தானம் செய்த பலனைப் பெறுவார்கள். மேற்படி தை மாதம் தலைச் செவ்வாய்க்கிழமை உதயத்துக்குத் தீராத வினை தீர்த்த சுவாமியையும், தைலம்மையையும், முத்துக் குமாரசாமியையும் சேவித்தப் பலனை பெறுவார்கள். தரும வர்த்தனையைக் கொடாதவர் பாவப் பலனை பெறுவார்கள்.

 

இது வன்னிய மன்னர்களும், அவர்களது சந்ததி யாரும் கூடி, வில்லவ நல்லூர், வைத்தீஸ்வரன் கோயில் ஆகி இரு பிரபல ஸ்தானங்களிலும், க்ஷ தருமங்கள் நடந்து வரும் படி ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது.

 

  • ••

 

காஞ்சீபுரம் அனவரத சவுந்தரியப்பட்ட முத்துகச்சேஸ்வர குரு சுவாமியாரவர்கள் மடத்து சேப்பேட்டிலுள்ள விஷயமாவது

 

கலியுக ளூ 2882க்கு மேல் சாலிவாகன சகாப்தம் பிரபவாதி 42க்கு மேல் செல்லா நின்ற வர்த்தமான சௌமிய ளூ பங்குனி மாதம் 17 தேதி உத்திர நட்சத்திரத்தில் அநேக ராச ராச தேவேந்திர அநேக  வீரப் பிரதாப வரசைன்ய வினாசகாமா துர்ய, தைரிய, காம்பீரிய வீரிய, பராக்கிரம சாலியாயிருக்கிற கலிராஜேந்திர சோழன் அரசு செய்யும் நாளில், ஸ்ரீமத் கைலாஸதுல்ய மகாஸ்தலம் காஞ்சீ நகரத்திலிருக்கும் திருவேகம்பமுடைய நாயனாரைப் பூசிக்கும் மாழாங்கராக்களில் சிம்மாசனாதி காரராய் திரிவர்ன குருவாயிருக்கிற அனவரத சவுந்திரி யப்பட்ட முத்துகச்சேஸ்வர குரு சுவாமியாரவர்கள் மடத்துக்குச் சம்பு மகாமுனி வேள்வியிற் பிறந்து ஆதிக்கராகி வாதாபி இனதாவி இரத்தினகிரி முதலாயுள்ள அகில சத்ரு நிவாரணம் பண்ண வீர சட்டை கட்டி, அக்கினிக் கொடி, புலிக் கொடி, சிங்கக் கொடி, அநுமக் கொடி, பஞ்சவர்ண விருது படைத்த மதகிரி வன்னியர், மகுடந்திரித்த வன்னியர், வீர மார்த்தாண்ட வன்னியர், வீரப்பிரதாப வன்னியர், வீரதீர வன்னியர், இந்த அரசர்கள் மேற்படி காஞ்சீபுரம் முதல் கிழக்கு, அங்கிக் கோட்டத்துக்கு மேற்கு, தேவப்புரயாகைக்கு வடக்கு, இராமநாதபுரத்துக்கு தெற்கு, இதற்குட்பட்ட வன்னிய அரசர்களும், மேற்படி வன்னிய அரசர்களுக்குப் படைத் துணைவர்களாகிய விராசாங்கத்துக்குரிய குடிகளும், மேற்படி யாசாரியாருக்கு கலியாண முதலான சுப காரியங்களுக்கு கட்டணங் கொடுக்க வேண்டுமென்று அந்தச் சேப்பேட்டில் எழுதி இருக்கிறது.

இச்சேப்பேடானது 1174 வருடங்களுக்கு முன் ஆட்சி புரிந்த கலிராஜேந்திர சோழன் காலத்தில் ஏற்பட்டது. இதில் வன்னிய புராணத்திலுள்ளபடி சம்பு மகா முனிவர் வேள்வியிற் பிறந்ததையும், வாதாவி இனதாலி என்னும் அசுரர்களை சம்மாரம் செய்ததையும், வன்னிய அரசர்களின் வீரதீரப் பிரபாவங்களையும், அவர்கள் ஆண்டு நாடுகளுக்கு செக்பந்தியும் காட்டப்பட்டுள்ளளன. க்ஷ குரு சந்ததியில் வந்தவரும், ஏகாம்பரேசுவரர் கோயில் குருக்களாயிருந்தவருமான சமீபத்தில் காலஞ் சென்ற பிரம்மஸ்ரீ சுப்ரிமணிய குருக்களுக்கு, சுப்ரமணிய நாயகர் என்றே பெயர் வழங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

  • ••

வடாற்காடு ஜில்லா போளூர் தாலுக்கா

படைவேட்டு இராஜ்ஜியமாகிய படைவேடு சோமநாதேஸ்வர ஆலயத்தின் கீழண்டை

மதிலுள்ள சாஸனம்

 

சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீமன் மஹா மண்டலேஸ்வரன் அரிராய விபாடன், பாஷைக்கு தப்புவராத கண்டன், மூவராய கண்டன், கண்ட நாடு கொண்டு, கொண்ட நாடு கொடாதான், பூர்வதட்சண பச்சிம உத்தர ஸமுத் திராதிபதி ஸ்ரீமன் ராசாதிராச ராச பரவேஸ்வர ஸ்ரீ விரப்பிரதாப கஜவேட்டை கண்டருளிய பிரபுட இம்மடி தேவ மகாராயர், பிரதிலி ராச்சியம் பண்ணி, அருளா நின்ற சகாப்தம் மேல் செல்லா நின்ற சுக்கில வருஷம் சிம்ம நாயற்று பூர்வபட்சத்து திரியோததியும், சனிவாரமும் ஆயுஷ் மான்யோகமும் பெற்ற உத்திராடத்து நாள் தொண்ட மண்டலத்து, படைவீட்டு ராஜ்ஜியம் நாட்டவர் வலங்கையும், இடங்கையும் மஹா ஜனமும் ராஜகம்பீரன் மலைக்கடைந்த முருகமங்கலப்பற்று மருதரசு படை வீடு உடையார் சோம நாதேஸ்வர நயினார் கோயிலிலே நிறைவற குறைவற என உள்ளது.

 

இச்சாஸனம் அழியப்பட்டு முடிவு தெரியாமலிருக்கின்றது. இது 506 வருடங்களுக்கு முன் அரசு புரிந்த புரபுட இம்முடி தேவ மகாராயர் காலத்தில் ஏற்பட்டது. இச்சாஸனத்தில் குறிப்பிட்டபடி மருதரசு படை வீடு நாட்டவர். அக்காலத்தில் வலங்கை இடங்கை மஹா ஜனங்களுக்கும் அதிகாரிகளாக இருந்து, சோம நாதேஸ்வரருக்கு தானங்கள் செய்ததாய் தெரிகிறது. இதில் கண்டபடி நாளதும் வன்னிய நாட்டாண்மைதாரர்கக்கு மருதரசு புடை வீடு மகா நாட்டார் என்றே பெயர் வழங்கி வருகிறது.

 

  • ••

விஷ்ணு காஞ்சிபுரம் வரதராச பெருமாள்

கோயில் தென் பக்கம் மலையாள

நாச்சியார் சன்னிதியில் எழுதி

இருக்கப்பட்ட சாஸனம்

 

ஸ்ரீ ஸ்ரீ திரிபுவன சக்கிரவர்த்திகள் ஸ்ரீ மஹா ராச ராச தேவர்க்கு ஆண்டு மீனனாயிற்று அம்ரபக்ஷத்து பஞ்சமியும், செவ்வாய்க்கிழமையும் பெற்ற கேட்டை நாள் செயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம். காஞ்சிபுரத்து திருவத்தியூர் நின்றருளிய அருளாளப் பெருமாளுக்கு மலை மண்டலத்து மலத்தூர் நாட்டு பாலையூர் கோமான் சங்கரனான இராசராச மழவராயன் வைத்த திருநந்தா விளக்கு ஒண்ணுக்கு ஒரு ளெலத்தார திருக்குத்து விளக்கு பல வற்கத்து பால் பசு பலவற்கத்து சினைப் பசு வறட்டுப் பசு பொலிமுறினாகு கெடாரினாகு ரிஷபம் ஆக பலவற்கத்து உரு விட்டு நாள் அரிமொழி நங்கை நாழியாலே ஆழாக்கு நெய், ஒழக்கு தயிர், முதுநாழி திருநாளதே வைத்து, சந்தறாதித்த வரை செலுத்தத் தக்கவோமாக, சிலாலேகை பண்ணிக் கொடுத்தோம். அருளாளப் பெருமாள் கோயில் ஸ்தானத்தார் இப்படி கோயில் கணக்கு தெய்வாமுடையான் தேவப் பெருமாமள் அருளாளப் பிரியன் எழுத்து.

கி.பி. 1014ல்  திரிபுவன சக்ரவர்த்திகளாக ஆட்சி புரிந்த இராச ராச தேவர் சிம்மாசனம் ஏறிய 12வது  ஆண்டடில் சேர நாடாகிய மலை மண்டலத்து பாலையூர் கோமான் இராச ராச மழவராயன் என்னும் சேர மன்னன், காஞ்சீபுரம் வரதராசப் பெருமாளுக்கு திருநந்தா விளக்கு அமைத்து, அதற்கு நெய்யும், சுவாமிக்கு தயிரும் கொடுக்க ஏற்பாடு செய்ததை மேற்படி சாஸனம் தெரிவிக்கிறது. மழவராயர் எனும் பட்டமாவது அக்நிகுலத்து அரசர்களாகிய சேர அரசர்களுக்கே உரியதாகும். அம்மரபைச் சேர்ந்த அரியலூர் ஜமீன்தார்களுக்கும் நாளதும் மழவராயர் பட்டமே வழங்கி வருகிறது. இதற்கேற்ப, விருத்தாசம் அரியலூர் சாஸனங்களிலும் இப்பெயர் வெளியாகி இருப்பதாலும் தெரிந்து கொள்க.

 

  • ••

விருத்தாசம், விருத்தாசல ஈஸ்வரர்

உச்சிகால கட்டளை பெரிய மடத்திலுள்ள

தாம்பிர சாஸனம்:

 

சாஸனமுடையவர் பெயர் அரசு நிலையிட்ட

ரங்கப்ப மழவராய நாயினார்,

சாஸனத்துப் பிரதி

 

பிலவங்க ளூ மார்கழி மாத முதல் முதலான திதி வார நட்சத்திரங்களும் பெற்ற நாளில் ஸ்ரீமது விருத்தாசல ஈஸ்வரர் சுவாமியாருக்கு சகல புண்ணியனாதி சம்பன்னரான அரசு நிலையிட்ட ரங்கப்ப மளவராய நயினார் பண்டாரத்தாரவர்கள் விருத்தகாசியில் ஈஸ்வர சுவாமியாருக்கு நம்முடைய புண்ணியமாக அவடுழக்கட்டளைக்கு நந்தீஸ்வர ஊத்துவா பண்டாரத்தின் பாரிசமாக தாம்பர சாசனம் கட்டளையிட்டபடி பலரும், பெரிய கடையாரும் மத்து நம் தான ஆடுதொறைகெங்கு குண்டான ஓடத்தொறையும் பெரியமுறையும் கொளத்தூருமாமுடைய பட்டணத்துக்கு வருகிற பலலும் இந்த மகமை புண்ணியத்தை வகித்து புத்தர பவுத்தர பாரம்பரியமாக சந்தறாதித்த வரையும், பொதிக்கி மாப்பணமும், சந்தை வட்டம், கடைக்கி ஒரு காசும், அரிசி சொமைக்கி அள்ளும், இந்தப்படிக்கி மகமை புண்ணியம் நடக்க வேணுமென்று தங்களுக்கு சொல்லி கட்டளையிட்ட தானத்தை யாதாமொருவறாகிலும் யெடையூறு சொன்ன பேர்கள் கங்கைக்கரையில் காறாம் பசுவை கொன்ற தோஷத்தில் போக கடவறாகவும் இந்த புண்ணியம் நடத்தின பேர்கள் அசுவமேதயாக பலன் பெறக் கடவறாகவும்.

 

இந்த தாம்பர சாசனம் ஏற்பட்ட வருஷம் விளங்க வில்லை. அரியலூரில் ஆட்சி புரிந்து, அரசு நிலையிட்ட ரங்கப்ப மழவராய நயினார் காலத்தில், சாசனத்தில் கண்ட சில வரும்படிகளை விருத்தாசல ஈஸ்வர சுவாமிக்கு கட்டளை மகமையாக ஏற்படுத்தியதை தெரிவிக்கிறது. அரியலூர் ஜமீன்தாரர்களுக்கு நாளதும் மழவராய துரை என்ற பட்டப் பெயர் வழங்கி வருகிறது. அரியலூர், உடையார்பாளையம், பிச்சவரம், பரூர் ஜமீன்தாரர்கள் வன்னிய மரபைச் சேர்ந்த சேர, சோழ, பல்லவர்களின் சந்ததிகளாகும். இவர்ககளுக்குள் நாளதும் கொள்வன கொடுப்பன சம்பந்தமுண்டு. மளவராயர் என்பது மழவராயன் என்பதன் திரிபு.

 

 

  • ••

 

அரியலூர் கிருஷ்ணசாமி கோயில்

மஹா மண்டபத்தில் வடவண்டை

மதிலிலிருக்கும் சிலாசாஸனம்

 

ஸ்வஸ்தி விஜய சாலிவாகனசகம் கலி யிதினி மேல் செல்லா நின்ற தந்தினாம ஷம்வச்சரம் வைகாசி மாதம் 22உ சுக்கிரவாரமும், ரோகணி நட்சத்திரமும், சுபயோக சுப கரணமும் கூடின சுப தினத்தல் விஜய ஒப்பில்லாத மளவராயர் ஸாஸனம் பண்ணிக் கொடுத்து இதன் கீழ் பல மானிய நிலங்களைக் குறிக்கப்பட்டிருக்கிறது. க்ஷ சாஸனமும், 213 வருடங்களுக்கு முன் அரியலூர்  அரச பரம்பரையாராகிய விஜய ஒப்பில்லாத மழவராயர் காலத்தில் ஏற்பட்டதாய் விளங்குகிறது.

 

  • ••

உடையார் பாளையம்

வரதராசப் பெருமாள் கோயில்

பெருமாள் ஐய்யங்காரிடமிருக்கும்

தாம்பர சாஸனம்

 

ஸூவஸ்தி விஜயா சாலி வாகன சகாப்தம் கலி யிதின் மேல் செல்லா நின்ற ஸஹாந நாமஸம் வஸ்றம் தெக்ஷணாயநம் வறுவிறுதி ஆவணி மாதம் 24 உ கிருஷ்ணபக்ஷத்து சூரியோதய ஸ்ரீ ஸோமவாரமும், புஷிய நக்ஷத்திரமும், மஹா யோக மஹா கறணமும் கூடின புண்ணிய காலத்தில் பயறணீசுவறபுரத்துக்கு பிரதினாமமான உடையார் பாளையத்தில், கீழ்த் தெருவில் எழுந்தளியிருக்கிற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட னாயகறான ஸ்ரீவரதராசப் பெருமாள் சன்னிதி உச்சிகால கட்டளைக்கு வெங்கிடப்ப மழவறாயற் பவுத்திர விஜய ஒப்பிலாத மழவறாயர் அரச நிலையிட்ட குமாற விசய ஒப்பிலாத மழவறாயர் தாம்புற சாஸநப்பட்டயம் பண்ணிக் கொடுத்தபடி யிததினனாள் திருச்சினாப்பள்ளி சாவடிக்கி கிழக்கு ஸ்ரீ சோழ மண்டலம், கொள்ளடம் காவேரிக்கு வடக்கு நம்முதான சீற்மை பழவூர் பத்தும் விக்கிறம வளனாட்டு கட்டளை நாட்டில் சேர்ந்த யெடயாத்தம் குடியில் வரதராச பெருமான் உச்சி கால கட்டளைக்கு நில மானியம் இதன் கீழ் பல நிலங்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. இச்சாஸனம் 192 வருடங்களுக்கு முன் குமார விஜய ஒப்பிலாத மழவராயர் காலத்தில் உடையார் பாளையம் ஸ்ரீ வரதராசப் பெருமாளுக்கு உச்சிகால கட்டளைக்கு பல நிலங்களை விட்டதைத் தெரிவிக்கிறது.

 

  • ••

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu