வெளியான தேதி : 20.10.2019/சென்னை

முரசொலி பத்திரிகையில் வெளிவந்த செய்தியறிக்கை

 

‘வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு’ என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு நன்றி மறவோம்!

இராமதாசின் துரோகத்தை வன்னிய சமுதாயம் என்றும் மன்னிக்காது!

தி.மு.க. வென்றால்தான் நன்மைகள் பிறக்கும்:

வன்னியர் சமுதாயத் தலைவர்கள் வேண்டுகோள்!

 

சென்னை, அக். 20- வன்னியர் குல சத்திரியர் கூட்டு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இராம. நாகரத்தினம், வன்னிய மகாசங்க முக்கிய நிர்வாகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், ந.வ. கணேசன், பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

வன்னியர் சமுதாய முன்னோர்கள் உள்ளிட்ட எஸ்.எஸ், இராமசாமி படையாட்சியார், மாணிக்கவேல் நாயக்கர் வரை வன்னியர் சமுதாயத்திற்கு மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலத்தில் 20 சதவீதமும் மத்தியில் 2 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு வேண்டி தொடர்ந்து போராடியும், குரல் கொடுத்தும் வந்தார்கள்.

கெஞ்சி கேட்ட ராமதாஸ்!

பின்னர் 1980-ம் ஆண்டு ஏ.கே. நடராசன் முயற்சியால் 28 வன்னியர் அமைப்புகள் ஓன்று கூடி ‘வன்னியர் சங்கம்’ என்ற ஒரே அமைப்பாக உருவாக்கப்பட்டது. தலைவராக தொழிலதிபர் கோபால் நாயக்கர் அவர்களையும் பொதுச் செயலாளராக யு.எஸ். இராமமூர்த்தி என்கிற வன்னியர் அடிகளாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1984-ம் ஆண்டு வரை மருத்துவர் இராமதாஸ் சங்கத்தில் எந்த பதவியிலும் இல்லை. அவருடைய மூத்த மகள் திருமணம் பாண்டிசேரியில் நடந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற சங்க கூட்டத்தில் எந்தக் காலத்திலும் எடுக்கக் கூடாத பதவியை எனக்குத் தாருங்கள் என்று மருத்துவர் இராமதாஸ் கேட்டார். சங்கத்தின் புரவலராக இருந்த ஏ.கே. நடராசன் செயல் தலைவர் என்ற பதவியை இராமதாஸ்க்கு வழங்கினார்.

இராமதாஸின் சூழ்ச்சி!

அதற்கு பிறகு அவரே  தன்னை நிறுவனர் என்று போட்டுக் கொண்டு சங்கத்தை, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனது சூழ்ச்சியில் அவர்களே வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். முதலில் வன்னியர் அடிகளார், பின்னர் ஏ.கே. நடராசன் உள்ளிட்டோர் வெளியேறினர்.

‘இன்னுயிர் தந்தேனும் இடஒதுக்கீட்டை பெற்றே தீருவோம். என்ற முழக்கத்தோடு 1986-ல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 23 அப்பாவி வன்னியர்கள், காக்கையை சுடுவது போல அன்றைய காவல்துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இராமதாஸ் பிடிவாதம்!

தற்காலிமாக 12 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்குவதாகவும் பொதுத் தேர்தல் முடிந்த பிறகு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதற்கு ஏற்றார் போல் இட ஒதுக்கீடு வழங்குகிறோம் என்று முடிவான நிலையில் மருத்துவர் இராமதாஸின் பிடிவாதத்தாலும், பிறகு வெங்கட கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. இது கண் துடைப்பு நாடகம் என்று கூறி 1989-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் புறக்கணிப்பிலும், காஞ்சிபுரம் மாவட்டம் காயரம்பேடு கிராமத்தில் வன்னியார் ஒருவர் காவல்துறை துப்பாக்கி சூட்டிற்கு பலியானார்.

கலைஞர் வழங்கிய இடஒதுக்கீடு!

தேர்தல் முடிந்து தமிழகத்தின் முதலமைச்சராக கலைஞர் பொறுப்பேற்றார். பதவிக்கு வந்த 6வது மாதத்திலேயே அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முயற்சியில் பேச்சு வார்த்தைக்கு கலைஞர் வன்னியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசினார். பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை (எம்.பி.சி.) ஏற்படுத்தி 20 சதவீதம் ஒதுக்கி வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சமூகத்திற்கு வழங்கினார்.

‘நான் ஒரு கனி கொடுத்திருக்கிறேன் அதை ருசித்துப் பாருங்கள் சரி இல்லையென்றால் மீண்டும் பரிசீலிக்கிறேன்’ என்று முதலமைச்சர் கலைஞர் கூறினார். அப்பொழுது சங்கத்தின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சா. சுப்பிரமணியமும், பொதுச் செயலாளராக இருந்த சி.என்.இராமமூர்த்தியும் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஆனால் இடஒதுக்கீடு என்பதை மெல்ல, மெல்ல மறக்கடிக்கச் செய்தார் மருத்துவர் இராமதாஸ், 6 சதவீத வாக்குகளை வைத்து சமுதாயத்தை மறந்து அரசியல் போராட்டங்களை தொடங்க ஆரம்பித்தார்.

ராமதாஸின் ‘பெட்டி’ பேரம்!

வன்னியர் வாக்குகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி கட்சி நடத்திய மருத்துவர் இராமதாஸ் 2 சதவீத இட ஒதுக்கீட்டை கைகழுவி விட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்ததோடு மட்டுமின்றி தலித் எழில்மலைக்கு மத்திய அமைச்சர் பதவியை பெற்றுக்கொடுத்தார், அதை பயன்படுத்தி வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்கினால்தான் கூட்டணி என்று மருத்துவர் இராமதாஸ் கூறவில்லை, மாறாக ‘பெட்டியும் சீட்டும்’ என்ற ஒற்றை பேரத்தில் மாறி மாறி அனைவரும் வெறுக்கும் வகையில் கூட்டணியை அமைத்துக் கொண்டார்.

வன்னியர்களை மறந்த இராமதாஸ்!

1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்த இராமதாஸ் 2001-ம் ஆண்டு அந்தர் பல்டி அடித்து சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார்.

ஜெயலலிதாவிடம் கெஞ்சிய ராமதாஸ்!

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து நான் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். இனி ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தால் பெற்ற, தாயுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு சமம் என்று கூறினார். பணம் சேர்ந்து திடீர் பணக்காரர் ஆகிவிட்ட இராமதாஸால் சிறையில் இருக்க முடியவில்லை. மனைவி சரஸ்வதி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தேர்தல் முடிந்து கலைஞர் ஆட்சிக்கு வந்தார். இதை இராமதாஸ் சரியாகப் பயன்படுத்தி 20 சதவீத தனி இடஒதுக்கீடு பெற்றிருக்கலாம். கலைஞரும் மனமுவந்து கொடுத்திருப்பார்.

2011-ல் ஜெயலலிதா முதலமைச்சராக வந்தார். வன்னியர்களுக்கு என உள்ஒதுக்கீடு அரசு ஆணையும் கண்டுக் கொள்ளவில்லை. வன்னியர் சமுதாயத்தை முழுவதும் புறக்கணித்தார். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தான் வன்னியர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார்.

 

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமைச் செயலாளராக ராயப்பாவையும், அவரது செயலாளராக வைத்தியலிங்கம் ஐ.ஏ.எஸ்., அரசு தேர்வாணை குழு தலைவராக அம்பாசங்கர் ஐ.ஏ.எஸ்., சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டநாதன் ஐ.ஏ.எஸ், தலைமையில் குழு, வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு, தியாகிகளுக்கு 3 லட்ச ரூபாய் நன்கொடை, மாதந்தோறும் பென்சன், வாழப்பாடியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சென்னை மைய பகுதியில் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாருக்கு சிலை.

வன்னியர்களுக்கு கலைஞர் செய்த நன்மைகள்!

வன்னியர் பொதுக் சொத்து நலவாரியம் அமைத்தது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் பொன். கோதண்டம் என்கிற பொற்கோ (துணைவேந்தர்), ராஜ் மோகன் ஐ.பி.எஸ்.,  (தமிழக காவல் துறை தலைவர்), 6க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள். அ.தி.மு.க. ஆட்சியில் பழிவாங்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி காசி விஸ்வநாதன் (முதலமைச்சரின் செயலாளர் பணி ஓய்வுக்கு பின் அரசு தேர்வாணைக் குழு தலைவர்), சந்திர சேகர் ஐ.எ.ஏஸ்., (தமிழ்நாடு தேர்தல் ஆணையம்) ஆகிய வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். இப்படி வன்னியர்களுக்கு செய்ததை சொல்லிக் கொண்டே போகலாம்.

வன்னியர்கள் போராட்டத்தை ‘மரம்வெட்டிகள்’ என்று கொச்சைப்படுத்தினார் ஜெயலலிதா. கலைஞர் ‘இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள்’ என்று பெருமைப் படுத்தினார். 8 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு துணைவேந்தர் இல்லை. தேர்வாணைக் குழுவில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. வன்னிய ஐ.எ.ஏஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிகாரம் இல்லாத பதவிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் மகேந்திரன் ஐ.பி.எஸ்., சீனியாரிட்டிபடி தமிழக சட்ட ஒழுங்கு காவல்துறை தலைவராக நியமித்திருக்க வேண்டும். ஆனால் அவர் பழிவாங்கப்பட்டு மன வேதனையோடு ஓய்வு பெற்றார்.

கலைஞர் வழியில் மு.க. ஸ்டாலின்!

இந்த நிலையில் தான் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வன்னியர் தலைவர்கள் யாரும் நேரில் சென்று கோரிக்கை வைக்காத நிலையில் நாங்கள் வைத்து வரும் கோரிக்கைகளை தொலைக்காட்சி, செய்திதாள்கள் மூலம் தெரிந்து கொண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடும், வன்னியர் தியாகிகளுக்கு மணிமண்டபம், ஏ. கோவிந்தசாமி படையாட்சிக்கு மணிமண்டபம் அமைப்போம் என்றும் அறிவித்துள்ளார்.

கோரிக்கைகள் யாரும் வைக்காத நிலையில் ஆண்ட பரம்பரை என்றாலும் கல்வி, பொருளாதார நிலையில் பின் தள்ளப்பட்டு  உழைக்கின்ற வர்க்கமான தமிழகத்திலேயே தனிப்பெரும் சமூகத்திற்கு தந்தை கலைஞர் வழியில் நன்மைகள் செய்ய முன்வந்த மு.க. ஸ்டாலின் அவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாராட்ட மனமில்லை என்றாலும், வாயிலும் வயிற்றிலும் டாக்டர் இராமதாஸ் அடித்துக் கொள்வது ஏன்? ஏற்கனவே கலைஞர் அமைத்த சட்டநாதன் கமிஷன் பரிந்துரையும் எம்.ஜி.ஆர். அமைத்த அம்பாசங்கர் கமிஷனும் வன்னியர்களுக்கு தனிஇட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. அதை தற்போது நிறைவேற்றும் வகையில் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இராமதாஸ் கொடுத்துள்ள அறிக்கையில் தியாகிகள் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அறிவிப்பைப்பற்றி ஒருவரிக் கூட தெரிவிக்கவில்லை. காரணம் அந்த தியாகிகளை கொச்சைப்படுத்தியவர்தான் இந்த இராமதாஸ்!

 

தியாகிகளை மறந்து மனைவி பெயரில் கல்லூரிகள்!

வன்னியர் அறக்கட்டளை மூலம் அமைக்கப்பட்ட கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரிக்கு நனது மனைவி சரஸ்வதி பெயரை அல்லவா சூட்டிக் கொண்டார். இட ஒதுக்கீடு தியாகிகள் பெயர் சூட்டவில்லை

ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் என்றால் இவர் ஏன் அதிர்ச்சியடைகிறார், வளரும் சமுதாயத்தினர் ஏ.கோவிந்தசாமியின் வரலாற்றை தெரிந்து கொள்ளக்கூடாது என்பதால் தானே? இவரது தைலபுரம் தோட்டத்தில் யார், யார் சிலையோ வைத்தபோது இட ஒதுக்கீடு போராட்ட தியாகிளுக்கு, ஏ. கோவிந்தசாமி படையாச்சிக்கு, எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி, நாகப்ப படையாட்சிக்கு, மாணிக்கவேல் நாயக்கருக்கு, கடலூர் அஞ்சலை அம்மாள், அர்த்தநாரிச வர்மா, சர்தார் ஆதிகேசவர் நாயக்கர் போன்றவர்களுக்கு சிலையை ஏன் நிறுவவில்லை. அல்லது இவர் கையால் ஏதாவது ஒரு இடத்திலாவது  இவர்களின் சிலை திறந்திருப்பாரா?

மகன் அன்புமணிக்காக பாடுபாடுகிறார் இராமதாஸ்!

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். அது போன்று எ.ஜி. சம்பத்திற்கு வாய்ப்பு வழங்கவில்லையாம். கடந்த எம்.பி. தேர்தலில் 7 சீட்டுக்களை பெற்று அதில் மூன்று வன்னியர்களுக்கு மட்டும்தானே சீட் வழங்கப்பட்டது. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் தேர்தலுக்கு மட்டும்தான் உடன்படிக்கை போடுவார்கள். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் ராஜ்ய சபா சீட் கேட்டு பெற்ற ஒரு தலைவர் இராமதாஸ் ஒருவராகதான் இருப்பார். கட்சிக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட மகன் அன்புமணிக்கு கொள்ளைப்புற வழியாக தொடர்ந்து சீட்டை பெற்றவரும் இவராகதான் இருப்பார்.

கடந்த தேர்தலில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக கூறியதால்தான் எதிரும், புதிருமாக இருந்த டாக்டர் கிருஷ்ணசாமியும், ஜான்பாண்டியனும் அ.தி.மு.க.வை ஆதரித்தார்கள். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்கள் என்று கூறி இப்பொழுது நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவில்லை என்று கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உள்ஒதுக்கீடு, மணி மண்டபம் அமைப்போம் என்று கூறியதை யடுத்து, ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மருத்துவர் இராமதாஸ், அவரது மகன் அன்புமணி நெருக்கடி கொடுத்து சமுதாயத்தின் கோரிக்கைகளை பெற்றுக் கொடுக்க முன் வராதது ஏன்?

தி.மு.க. மீது நம்பிக்கை!

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் உள்ளது.

தி.மு.க.வை ஆதரிப்போம்!

விக்கிரவாண்டி தொகுதியிலுள்ள ஒட்டு மொத்த வன்னியர்களும் தி.மு.க. வேட்பாளரான புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். உதயசூரியன் என்பது எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார், ஏ. கோவிந்தசாமியால் கண்டு எடுக்கப்பட்ட சின்னம், வரலாறு திரும்புகிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் என்று வன்னியர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். வன்னியர் நன்றியுடையவர்கள். நம்பகத் தன்மையுடையவர்கள் என்பதை இந்த இடைத் தேர்தலில் நிரூபித்து காட்டி நம்முடைய தனி இட ஒதுக்கீட்டை பெறுவோம்.

1987-ம் ஆண்டு தியாகத்தின் மூலம் வரலாறு படைத்த விக்கிரவாண்டி பூமி, வரலாற்றுப் பிழையை செய்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு வன்னியர் சமூகத் தலைவர்கள் கூறினார்.

  • ••• •

(மறைக்க முடியாத வரலாறு முரசொலி செய்தி 05.01.1990)

சென்னை. ஜன. 5- தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலிருந்த ஜவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்ட முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வன்னியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது,

வன்னியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.என்.இராமமூர்த்தி விடுத்துள்ள அறிக்கை வருமாறு-

தமிழகத்தின் பெருத்த சமுதாயமான வன்னிய சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பு இவற்றில் தங்களுக்கு என்று ஒரு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மூன்று போராட்டங்களை அரசுக்கெதிராக நடத்தியது. அதன்விளைவாக பலர் சிறையில் ஆயிரக்கணக்கான வன்னியர் மீது வழக்குகள் போடப்பட்டன. வறுமைக்கோட்டிற்கும் கீழ் வறிய நிலையில் வாழும் வன்னியர் வழக்குகளை சுமந்துகொண்டு வீட்டிற்கும், கோர்ட்டிற்கும்  அலைந்த வண்ணமாக உள்ள அவல நிலைமையினை ஆட்சி பொறுப்பினை ஏற்றுள்ள கலைஞர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர்களை காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாக்கினர்கள். உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள் உதவியற்று நிர்முலமாக்கப்பட்ட நிலைமையினையும் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டுள்ள வன்னிய சங்க நிர்வாகிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தேன். எங்கள் வேண்டுகோளை மனதாபிமான அடிப்படையில் ஆராய்ந்து மனிதநேயப் பண்பாளராக நடந்து கொண்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வன்னியர் மீது போடப்பட்ட வழக்குகளை விலக்கிக் கொண்டுள்ளார்கள். உயிர் நீத்த குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்து உதவ முன்வந்துள்ளார்கள். குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள வன்னிய செயல் வீரர்களையும் விடுதலை செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

இச்செயல்கள் மூலம் கலைஞர் ஒரு உண்மையான மனிதநேயப் பற்றாளர் என்பதை தமிழுலகுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

குறிப்பாக தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள எங்களினச் செம்மல்கள் ஐவரையும் தமிழர் திருநாளுக்கு முன்பே வெளியில் விட ஆணை பிறப்பித்துள்ள தமிழக முதல்வருக்கு வன்னிய சமுதாய மக்கள் சார்பாகவும் சார்பாகவும் எனது பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

  • ••

 

(சி.என். இராமமூர்த்தியின் செய்தியறிக்கை)

1987 ஆம் ஆண்டு, இடஒதுக்கீடு போராட்டத்தில், காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான, சமூகநீதிப் போராளிகளுக்கு,  ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில், “மணிமண்டபம் அமைக்கப்படும்”….. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ், மாண்புமிகு, தமிழ்நாடு முதலமைச்சர், திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு:-

நன்றி தெரிவித்த பத்திரிகை செய்தி.

முரசொலி 03.09.2021

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu