மனம் திறந்த மடல்…
அன்புமிக்க உறவினர்களே!
வணக்கம்.
நமது சமுதாய முன்னேற்றத்திற்காக பல்வேறு காலகட்டங்களில் தலைவர்கள் பலர் உருவானார்கள்!
அவர்கள், இப்போதைக்கு இருந்த சூழ்நிலைகளுக்கும் – வாய்ப்புகளுக்கும் இடையில், அரும்பணி செய்து வந்திருக்கிறார்கள் வன்னியர் சமூக மேம்பாட்டுக்காக உழைத்திருக்கிறார்கள்!
குறிப்பாக, திரு. மாணிக்கவேல் நாயக்கர், எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் ஆகியோரது தலைமைதான், சுதந்திரத்திற்குப் பிறகு நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உரிய அளவில் இல்லாவிட்டாலும் ஓரளவாவது நாடாளு மன்றத்திலும் சட்டமன்றத்திலும் இடம் பெற முடிந்தது!
‘நண்டு நாற்காலி ஏறுமா? பள்ளி பாராளுமன்றம் செல்வானா?’ என்று பலரும் எள்ளி நகையாடிய போதுதான், இந்த வரலாற்றுத் திருப்பம் நிகழ்ந்தது! வன்னியர்களின் ஆளுமையும் ஒற்றுமை உணர்வும் உலக்கு முதன்முதலாக நிரூபணமானது!‘
சுதந்திரத்திற்குப் பிறகு 1952ல் நடந்த முதல் தேர்தலில் நமது வன்னியர் சமூகத்தின் காவலர்களான எஸ்.எஸ். இராமசாமிப் படையாட்சியாரும் மாணிக்கவேல் நாயக்கரும் எடுத்த முடிவினாலும் – கொடுத்த ஒத்துழைப்பாலும் தான், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்க முடிந்தது!
அதாவது, வன்னியர்களின் – வன்னியர் தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாவிட்டால், 1952ல் காங்கிரஸ் ஆட்சியே அமைத்திருக்க முடியாது! அந்த அளவுக்கு வன்னியர் சமூகத்தை ஒரு கட்டுக்கோப்பில் வைத்திருந்தனர், நமது தலைவர்கள்! இது வரலாறு!
வன்னியர் சமூக எழுச்சிக்கும், அவர்தம் மேம்பாட்டுக்கும் அயராது பாடுபட்ட அந்தத் தலைவர்கள் எல்லாம், ‘எங்கோ விலை போய்விட்டார்கள்’ என்று முன் வரலாறு தெரியாத நமது ‘உவினர்களின் மத்தியில் குற்றம் சாட்டிப் பேசி, அந்த பழைய தலைவர்களிடமிருந்து நான் வேறுபட்டவன் – வித்தியாசப்பட்டவன், வன்னியர் சமூகத்தை ரட்சித்துக் காப்பாற்ற வந்த கலியுக அவதாரம் என்று தன்னை உயர்த்திக் காட்டிக் கொண்டு ஒருவர் புறப்பட்டார்! அவர்தான் பட்டாளி மக்கள் கட்சியின் சர்வ சர்வாதிகாரத் தலைவராக இப்போது உலா வரும் இராமதாஸ்!
புகழ்பெற்ற லார்சன் – ட்யூப்ரோ என்ற நிறுவனத்தில் பெர்சனல் ஆபீசராக இருந்த திரு. ஏ.கே. நடராஜன், வன்னியர் சமூகத்து படித்து இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் வேலையைப் பெற்றுத் தருவது போன்ற சேவையை செய்ய, ‘ட்ரிபிள் – எஸ்’ (SSS) என்ற அமைப்பை 1977 – 78 வாக்கில் நடத்தி வந்தார்! இந்த அமைப்பின் திண்டிவனம் நகர அமைப்பாளர் பேராசிரியர் தீரன், திண்டிவனத்தில் உறுப்பினராக இருந்த 100 பேரில் ஒருவர், இராமதாஸ்! இந்த செய்தி அதிர்ச்சியாக இருக்கும்; ஆனால் உண்மை!
வன்னிய அடிகளார்…
‘ட்ரிபிள் – எஸ்’ அமைப்பு ஒரு ரகசிய சேவை அமைப்பாக இருந்ததால் ‘வெளிப்படையாக செயல்பட, வன்னியர் சங்கத்தை அமைக்க வேண்டும்’ என்று, பேராசிரியர் தீரனும், டாக்டர் இராமதாசும் திட்டமிட்டனர். அதன்படி, ‘வன்னியர் சங்கம்’ 20.07.1980ல் துவங்கப்பட்டது! இந்த வன்னியர் சங்கத்தின் முதல் தலைவர் – யு.எஸ்.இராமமூர்த்தி என்கிற தவத்திரு வன்னிய அடிகளார்!
சங்கம் துவக்கப்பட்ட சில வருடத்திற்குள், இராமதாசுக்கு ஆசைகளை பொத்துக் கொண்டு வளரத் தொடங்கியது! வன்னியர் சங்கத் தலைவரான தவத்தரு வன்னிய அடிகளாருக்கு எதிராக, கோஷ்டி களேபரம் செய்தார், இராமதாஸ்!
வன்னிய அடிகளார், இராமதாஸ் பிடியில் சிக்கிக் கொண்டி வன்னியர் சங்கத்திலிருந்து வெளியேறி, அவரும் ஒரு வன்னியர் சங்கத்தை அமைத்தார்! அடிகளார் இடத்தில், சென்னையை சேர்ந்த – உழைப்பால் உயர்ந்த கோபால் நாயக்கர் என்ற தொழிலதிபரை தலைவராக நியமித்தார். பிறகு, பாக்கம் இராமகிருஷ்ணனையும் அதன்பிறகு, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ரிடையர் ஆன சா.சுப்பிரமணியத்தையும் நியமித்தார்! சா. சுப்பிரமணியத்தை இராமதாஸ் தூக்கிக் கிடாசியதும், கோபால் நாயக்கரையும், பாக்கம் இராமகிருஷ்ணனையும் ஓரம் கட்டியதும் தனி வரலாறு!
இராமதாஸ் செய்து தந்த ஐந்து சத்தியங்கள்
வன்னியர் சங்கத்து உறுப்பினராக இராமதாஸ் இருந்த போது, சங்கத்தை வளைக்கும் வேலைகளை உத்தமர்ல போல வேடமிட்டு செய்தார்! அவருக்கு, மேடையில் பேசம் அறிக்கை எழுதவும் முழுமையாக உதவியவர், பேராசிரியர் தீரன்! இந்த காலகட்டத்தில், டாக்டர் தொழிலில் இராமராசுக்கு வந்த ஒருநாள் வருமானம் ரூ 500 முதல் ரூ 800 வரைதான்!
திண்டிவனத்தை விட்டு எந்த ஊருக்குப் போனாலும் வீரப்பா டிரான்ஸ்போர்ட், எம்.ஆர்.எஸ். பஸ்தான்! அப்போதும் அவருக்கு ஒரு அம்பாசிடர் கார் இருந்தது! அது, திண்டிவனம் எல்லையைத் தாண்டும் சக்தி இல்லாதது!
இந்தச் சூழலில், ஊர்தோறும், சங்கம் நடத்திய கூட்டங்களுக்கு இராமதாஸ் சென்றார்! அந்தக் கூட்டங்களில் எல்லாம் மறக்காமல் ஐந்து சத்தியங்களைச் செய்து, ஆவேசமாகப் பேசினார்! இந்த சத்தியப் பேச்சு, 1998 பாராளுமன்ற இடைப் பொதுத் தேர்தல் வரை நீடித்தது! இராமதாசின் அந்த ஐந்து சத்தியங்கள் இதுதான் :
இராமதாஸ் : நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம் :
- நான் எந்தக்காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்!
- சங்கத்தின் பொதுக்கூட்டங்களும் பொது நிகழ்ச்சிகளுக்கும், எனது சொந்தச் செலவில்தான் வந்து போவேன். ஒரு கால கட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல் போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனேயொழிய, ஒரு போதும் மற்றவர் செலவில் வந்து போகமாட்டேன்!
- எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால் செருப்புக் கூட சட்ட மன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்துக்குள்ளும் நுழையாது!
- எனது வாரிசுளோ, எனது சந்ததியினரோ, யாரும் – எந்தக் காலத்திரும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ எந்தப் பதவிக்கும் வரமாட்டார்கள்!
- எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி, இந்த இராமதாஸ் விலை போகமாட்டான் – இது சத்தியம்! என் தாய் மீது சத்தியம்!
சவுக்கால் அடியுங்கள்
இதையெல்லாம் உங்கள் டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி, நான் நடந்தால், என்னை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து, சவுக்கால் அடியுங்கள்!
தனது தாய் மீது சத்தியம் செய்து, டாக்டர் இராமதாஸ் பேசிய பேச்சுக்களை நம்பிய நமது சொந்தங்கள், முழுமையாக நம்பினார்கள்!
இதன் அடிப்படையில்தான், வன்னியர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையில் கூட, சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.என்.இராமமூர்த்தியை கையொப்பமிட வைத்தார்!
மூத்த சமுதாயத் தலைவர்
எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாருக்கு
செருப்பு – வளையல் – மயில் பார்சல்
- வன்னியர் சங்கம் துளிர்விட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், ‘எஸ்.எஸ். இராமசாமிப் படையாட்சியை நம்பி பயனில்லை. அவர் விலை போய் விட்டார். வன்னியர் சமூகத்திற்கு துரோகம் செய்து விட்டார். ஆகவே, நமது சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அவரது கடலூர் முகவரிக்கு ஒற்றைக் கால் செருப்பு, வளையல், மர்ம உறுப்பு மயிர் ஆகியவற்றை பார்சல் அனுப்புங்கள்’ என்று, சங்கத்து சக உறுப்பினர்களுக்குக் குரூரமான – அநாகரீகமான கட்டளையிட்டவர்தான், இந்த சமுதாய நீதிக் காவலர் இராமதாஸ்!
இராமசாமி படையாட்சியார், தன்து பச்சை நிற அம்பாசிடர் காரில், நெடுஞ்சாலையில் சென்றால், அதை வன்னியர் பெருமக்கள் காண நேர்ந்தால், வயல் வெளிகளில் நாற்று நட்டுக் கொண்டிருந்தாலும், ஏர் ஓட்டிக் கொண்டிருந்தாலும் செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு, நெடுஞ்சாண்கிடையாக கார் போகும் திசையில் விழுந்து வணங்குவார்கள்! அத்தகு பேரும் – புகழும் பெற்ற வன்னியர் சமூகத்தின் முதுபெரும் தலைவருக்கு, ஒற்றைக் கால் செருப்பைப் பார்சல் செய்ய வைத்து, அவமானப்படுத்தினார்! கொடுமையான எதிரிக்குக் கூட இப்படி ஒரு அவமானச் செயலை – இழிச் செயலை, உலகில் எவரும் செய்திருக்க மாட்டார்கள்! அப்படி ஒரு இழிச் செயலை, சொந்த சமூகத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தலைவருக்கு எதிராக செய்து, துன்புறுத்தினார் இராமதாஸ்! ஆனால், இன்று அந்த இராமதாஸ் நிலை என்ன தெரியுமா? அவர் போடும் சட்டைக்கும் உடுத்தும் வேட்டி – பேண்ட்டுக்கும் மேட்ச்சிங்காக, கலர் – கலராக செருப்பு அணிந்து, மினுக்கு நடை போடுகிறார்!
இரண்டு கட்டளைகள்
வன்னியர் சங்கம் வலுப்பெறத் துவங்கிய சமயத்தில், வன்னியர் சமூக மக்களுக்கு ஒரு முக்கியக் கட்டளையை பிறப்பித்தார்…
- இந்த சாதியில் பிறந்தவர்கள், நமது சங்கத்து உறுப்பினர்கள், அரசியல் கட்சியில் இருக்கிற வன்னியர்களோடு ஒட்டோ – உறவோ வைத்துக் கொள்ளக் கூடாது!
- பிறக்கிற ஒவ்வொரு வன்னியக் குழந்தையும் வன்னியர் சங்கப் பேரேட்டில் வரவேண்டும்!
இவரது இந்த உருக்கமான கபட நாடக வசனத்தை, சங்கத்தின் உறுப்பினர்கள் வேத வாக்காகக் கருதி, துவக்க நிலையில் பின்பற்றத் துவக்கினார்கள்!
ஆனால், இவரது செல்லத் தம்பிக்ள் மூன்று பேரையும் மூன்று கட்சிகளில் ஐக்கியப் படுத்தினார். ஒரு தம்பி சீனிவாசன் – காங்கிரஸ் கட்சி; இவரது மனைவி முதலியார் சமூகம். இன்னொரு தம்பி எழிலன் – தி.மு.க.; இவரது மனைவி ‘தலித்’ சமூகத்தைச் சேர்ந்தவர். மற்றொரு விவசாயத் தம்பி சுப்பிரமணி – அ.தி.மு.க.
ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, தன்னுடைய சொந்தத் தம்பிகளையும், சொந்த பந்தங்களையும் மாற்று ஜாதிகளில் – கட்சிகளில் உலவ விட்டார், இராமதாஸ்!
பட்டாளி மக்கள் கட்சி துவக்கப்பட்ட பிறகு, 1988 முதல் 1991 வரை செல்வி ஜெயலலிதாவை…
- வெள்ளைப் பன்றி
- மலத்திலே நெளிகின்ற புழு
- தெரு நாய்
என்று கூட்டங்களில் இழிவாகப் பேசி, கை தட்டல்களைப் பெற்றவர், இராமதாஸ்!
காலம் மெல்லக் கடந்தது…
இராமதாசின் சாயம் வெளுக்கத் துவங்கியது!
காற்றில் பறந்த உபதேசம்
இவரது ஒரே அன்பு மகன் டாக்டர் அன்புமணிக்கு, சென்னையில் திருமணம்.
திருமணத்திற்கு தலைமை வகித்து – தாலியை எடுத்து மணமகனிடம் கொடுத்தது யார் தெரியுமா? இராமதாசின் மொழியில் சொல்வதென்றால், ‘வெள்ளைப் பன்றி’ அதாவது, ஜெயலலிதா!
திருமண விழாவிற்கு வருகை தந்த ஜெயலலிதாவை ‘புரட்சித்தலைவி அவர்களே, வருக! வருக!’ என்று, மூன்று முறை முழங்கு, தலை வணங்கி வரவேற்றார், இராமதாஸ்!
திருமணப் பரிசாக, ‘வெள்ளைப் பன்றி’ ஜெயலலிதா கொடுத்த விலையுயர்ந்த வைர நெக்லசை, புன் சிரிப்போடு பெற்றுக் கொண்டு வளைந்து, குனிந்து குலைந்து வணக்கம் போட்டனர்!
தனது சங்கத்துக்காரன் – கட்சிக்காரன், வேறு எந்தக் கட்சிக்காரனோடும் ஒட்டோ – உறவோ வைக்கக் கூடாது என்று கட்டளையிட்ட இந்த இராமதாஸ், தனது அன்பு மகன் அன்புமணிக்கு பெண் எடுத்தது எங்கே தெரியுமா?
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான வக்கீல் கிருஷ்ணசாமி மகளைத் தான், மருமகளாக ஏற்றார்! காங்கிரஸ் குடும்பத்தில்தான், பெண் எடுத்தார்!
காங்கிரஸ் கட்சியிடம் விலை போய் விட்டதாகக் குற்றம் சுமத்தி இராமசாமிப் படையாட்சியாருக்கு செருப்பு, வளையல், மயிர் பார்சல் அனுப்பும் இயக்கம் நடத்திய இந்த இராமதாசுக்கு, பிய்ந்து போன செருப்பையும் வளையலையும் பார்சல் அனுப்பலாமா?
இப்படித்தான், இராமதாசின் சாயம், மேலும் வெளுக்கத் துவங்கியது!
மெதுவா… மெதுவா தொடலாமா
மறைந்த எம்.ஜி.ஆர். ஒரு சினிமாவில், ‘மெதுவா மெதுவா தொடலாமா?’ என்று பாடுவதைப் போல, வன்னியர் சமுதாயத்திற்கு செய்த ஐந்து சத்தியங்களில் நான்காவது சத்தியத்தை, ‘கரன்சி பண்டல்’ நோய் காரணமாக மெதுமெதுவாகக் கை கழுவி விட்டார், இராமதாஸ்!
- எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் – எந்தக் கால கட்டத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள்…
என்று சபத் செய்த ‘அரிச்சந்திரன்’ இராமதாஸ், அன்பு மகன் அன்புமணியை, ‘பசுமைத் தாயகம்’ என்ற (பேராசிரியர் தீரன் உருவாக்கியது – அவரது மருமகன் உலகம் சுற்றிய சாதனையாளர் சீனுவாச ராவ் நிறுவியது) அமைப்பிற்குத் தலைவராக்கிவிட்டார்!
‘சூப்பர் – லீடர்’ சின்ன அய்யா
டாக்டர் அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தி, ‘சின்ன டாக்டர்’, ‘சின்ன அய்யா’ என்று பட்டம் சூட்டி, களத்திலே இறக்கிவிட்டு விட்டார்!
இப்போது ‘சின்ன அய்யா’ அன்புமணி, பா.ம.க., மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை எடுபிடிகளைப் போல நடத்திக் கொண்டிருக்கிறார்!
மத்திய மந்திரிகளான சண்முகம், பொன்னுச்சாமி இருவரது டெல்லி அமைச்சராக நிர்வாக அலுவலங்களில் சின்ன அய்யாவுக்காக, தனி ‘குளு குளு’ அறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அநாகரீகத்தை எந்த நாட்டிலும் காண முடியாது!
‘சின்ன அய்யா’வின் ஒப்புதல் – உத்தரவு இல்லாமல், எந்த பைலும் நகருவதே இல்லை!
- மத்திய அமைச்சரவையில் இரண்டு பா.ம.க. மந்திரிகள் உள்ளனர். இவர்களது இலாகா தொடர்பான கோப்புகள் மாதக்கணக்கில் முடங்கியது! காரணம், உங்களது மகன் அன்புமணியின் உத்தரவு உடனடியாகக் கிடைக்காதது தான்! அன்புமணி ‘பைல்’ பார்த்து, ‘பைல்’ தொடர்புள்ள நபரைப் பார்த்து, அந்த நபரிடம் பேரம் நடத்தி, கைக்கு விஷயம் வந்து சேர்ந்தால்தான், கோப்பு நகர்கிறது! இதனால், அந்த இலாகா தொடர்பான அரசின் செயலாளர்கள் மனம் உடைந்து, பிரதமருக்குப் புகார் கூறினார்களே, நினைவுக்கு வருகிறதா? பிரதமர் வாஜ்பாய், இது தொடர்பாக உங்களை நேரில் அழைத்துக் கடிந்து கொண்டாரே, மறுக்க முடியுமா?
பா.ம.க.வின் தலைவர் ஜி.கே. மணி என்றாலும் அவர் பெயருக்குத்தான்! ‘சின்ன அய்யா’ தான் பா.ம.க.வுக்கும் – வன்னியர் சங்கத்திற்கும் மட்டுமல்லாமல், இரண்டு டெல்லி மந்திரிகளுக்கும் மற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் ’சூப்பர் லீடர்’!
- தூய நோக்கத்தோடு, நமது சமுதாய வளர்ச்சிக்காக ‘ட்ரிபிள்-எஸ்’ (SSS) என்ற அமைப்பை சென்னையைச் சேர்ந்த ஏ.கே. நடராஜன் தலைமை ஏற்று நடத்தியபோது, அந்த அமைப்பில் ஒரு சாதாரண உறுப்பினராக இருந்தவர், இராமதாஸ்! சமுதாய உணர்வை அவரிடமிருந்துதான் பெற்றார்!
அந்த நடராஜன் – ஒரு வன்னியர் சங்கத்தை 1999 துவத்தில் துவக்கி, சில கூட்டங்களை நடத்தி, இராமதாசின் சுயநலத்தை விமர்சிக்கத் துவங்கினார்! இராமதாசால், தனது முன்னாள் தலைவரின் செயலை சகித்துக் கொள்ள முடியவில்லை! நடராஜன் செங்கற்பட்டில் நடத்திய ஒரு கூட்டத்தில், மூர்த்திகரமாக திட்டமிட்டு, அடியாட்களை ஏவிவிட்டு, தாக்கினார்.
நடராஜன் மேலும் இராமதாசை விமர்சிக்க ஆரம்பித்தார்! இராமதாஸ் மேலும் கடுப்படைந்தார்! ஏ.கே. நடராஜனை அவரது வீட்டிலேயே தாக்கும்படி கட்டளையிட்டார்! செத்தேன் – பிழைத்தேன் என்று உயிர் தப்பி, ‘வேல்முருகா… வேல்முருகா’ என்று அலறிப் பிழைத்தார், நடராஜன்! தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி. பிரிவு புலனாய்வு செய்து வருகிறது! இந்த காலகட்டத்தில், புகழ் பெற்ற செங்கல்வராய நாயக்கர் என்ற வள்ளலின் பெயரால் அமைந்துள்ள 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள அறக்கட்டளையின் தலைவராக நடராஜன் பொறுப்பு வகித்து வந்தார்.
அந்தப் பொறுப்பிலிருந்து நடராஜனை நீக்க இராமதாஸ் திட்டம் போட்டார். ஏற்கெனவே நடராஜனை எதிர்த்து, அவரது சுரண்டல் நடவடிக்கைகளை எதிர்த்து, வழக்குப் போட்டிருந்த வழக்கறிஞர் ஒருவரைப் பயன்படுத்தி, நடராஜனை செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினார்!
நீக்கப்பட்ட அந்தப் பொறுப்பில், தனது மகள் கவிதாவைக் கொடுத்ததன் மூலமாக சம்பந்தியான டாக்டர் இராஜசேகரனின் சகோதரரான முன்னாள் டி.ஜி.பி. – இராஜ் மோகனை ட்ரஸ்ட் உறுப்பினராக நியமிக்க வழி செய்தார்! படாத பாடுபட்டு, அவரை ட்ரஸ்ட்டின் தலைவராகவும் ஆக்கிவிட்டார்!
- படாத பாடுபட்டு, ‘எம்.ஏ.எம். இராமசாமி மார்க்கத்தில், செங்கல்வராய நாயக்கர் ட்ரஸ்டின் தலைவராக இராமதாஸ் கொண்டு வந்துள்ள முன்னாள் டி.ஜி.பி. இராஜ்மோகன் எவ்வளவு பெரிய யோக்கியர் தெரியுமா?
இவரைப் பற்றி முதல்வர் கருணாநிதியைக் கேட்டால், விரிவாகக் கூறுவார். பேராசிரியர் தீரனைக் கேட்டால் இப்படிக் கூறுகிறார்:
‘இராஜ்மோகனுக்கு டி.ஜி.பி. பதவிக் காலம் முடிந்ததும் அவருக்கு மேலும் ஒரு வருட எக்ஸ்டன்ஷன் தரும்படி – அதாவது பதவிக்காலம் நீட்டிப்புத் தரும்படி, என்னை முதல்வர் கருணாநிதியிடம் டாக்டர் இராமதாஸ் தூது அனுப்பினார். நானும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, இராஜ்மோகனுக்கு பதவி நீட்டிப்புத் தரும்படி நயமாகப் பேசி, வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை பொறுமையாகக் கேட்டு கொண்டிருந்த முதல்வர் கருணாநிதி, ‘ஏய்யா தீரன், உங்களுக்கு விவரமே இருக்காதா? ஒரு நல்ல ஆளுக்கு சிபாரிசு செய்தா, நானும் யோசிப்பேன். நீங்க என்னடான்னா, ஜெயலலிதா – செல்வகணபதியோடு சேர்ந்து பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி பர்சேஸ் பண்ணதுல ஊழல் செய்திருக்கிற ஆளுக்கு சிபாரிசு செய்யறீங்களே. அவரு செஞ்ச ஊழலுக்கு நெறைய ஆதாரம் இருக்கு. டாக்டர் இராமதாசுக்கும் சொந்தக்காரனா ஆயிட்டதனாலேயே அந்த ஆளை (இராஜ்மோகனை) கேசுல இருந்து கழட்டி விட்டுட்டோம். அத்தோட நின்னுக்கங்க. போயி இராமதாசுகிட்ட நான் சொன்னதை அப்படியே சொல்லுங்க…’ என்று முகத்தில் அடித்தது போல கூறினார்! நான் ஏண்டா வந்தோம்னு, தலையை கவுத்துக்கிட்டு வந்து, டாக்டர் இராமதாஸ் இடம் விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு, இந்த ஊழல் விஷயம் ஏற்கெனவே தெரியும் போல இருக்கு, அவரு ‘கப்சிப்’னு இருந்திட்டாரு!
இதுதான், முன்னாள் டி.ஜி.பி.யும் டாக்டர் இராமதாசின் சம்பந்திக்கும் தம்பியுமான இராஜ்மோகனின் லட்சணம்!
முதல்வர் கருணாநிதி கருணை காட்டாமல், சட்டப்படி நடக்கட்டும் என்று ஒதுங்கியிருந்தால், கலர் டிவி ஊழல் வழக்கில், ஜெயலலிதா – செல்வகணபதியோடு சேர்ந்து, இராஜ்மோகனும் நாறியிருப்பார்!
செங்கல்வராய நாயக்கர் பெயரிலான அறக்கட்டளையில் கலர் டிவி ஊழல் பாணியில் எதவும் நடக்காமல் இருக்க, ட்ரஸ்ட்டில் உள்ள ஏனைய உறுப்பினர்களும், உறுப்பினர் செயலாளர் குமாரும் கவனித்துக் கொண்டால் சரி!
மகனுக்கு சாட்டையடி இல்லையா?
- காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டிச் சாய்க்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீட்டில் வெள்ளித் தாம்பாளத்தில், பட்டுத் துணியால் போர்த்தி எடுத்து வரப்பட்ட கத்தியால் நம் முதுகில் புறமுதுகில் குத்திய வஞ்சகமான கட்சி என்றும், காங்கிரஸ் கட்சியை கடுமையாக வர்ணித்து வந்தவர் இராமதாஸ்!
அந்த இராமதாசின் மகன் டாக்டர் அன்புமணி, வந்தவாசி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட தனது மாமனார் கிருஷ்ணசாமிக்காக, இரவு-பகலாக பணியாற்றினார்! லட்சக்கணக்கில் பணம் செலவிட்டார்.
சங்கத்தின் – கட்சியின், அடிப்படைக் கொள்கைக்கு எதிராக, ரகசியமாக செயல்பட்டு, துரோகம் செய்த இராமதாசின் மகன் அன்பு மணிக்கு ஏன் சாட்டையடி தரவில்லை?
சாட்டை இங்கே இராமதாஸ் எங்கே?
இப்படியாகத்தானே, ‘மக்கள் காவலர்’ என்பதை நிரூபித்து விட்டார்!
‘மக்கள் காவலர்’ என்று வன்னிய மக்கள் அன்பாக அழைத்து – 200 லட்சம் வன்னிய மக்களின் காவலராக இருப்பார் என்று, மெய்யாக நம்பித்தான்!
ஆனால், இராமதாஸ், அரசியல் அதிகாரம் தன்வசப்பட்ட போது, ‘மக்கள்’ என்றால், அது, தான் பெற்ற மக்கள், சம்பந்தி வழி மக்கள் மட்டும் தான் என்று நினைத்து, லட்சக்கணக்கான வன்னியர்களை மறந்துவிட்டார்! வஞ்சித்து விட்டார்!
- இராமதாசின் சம்பந்திகளில் ஒருவர், டாக்டர் இராஜசேகரன், இவரை, 1998ல் மத்திய அரசுப் பதவியான, ‘ஆல் இண்டியா போர்டு ஆஃப் மெடிகல் எஜூகேஷன்’ சேர்மேனாக நியமனம் செய்தார்! மருத்துவத்துறையில் பேரும் புகழும் பெற்ற நமது உறவினர்கள் பத்து – பதினைந்து பேர் இருக்க, இவரை மட்டும் தான் – இராமதாஸ் பரிந்துரை செய்து பதவி பெற்றுத் தந்தார்!
- வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த பு.த. அருள்மொழி, பா.ம.க.வின் வளர்ச்சிக்கு, வன்னியர் சங்க எழுச்சிக்கு அரும்பாடுபட்டவர். ‘குண்டர்’ சட்டத்தில் கைது ஆகி, 10 மாதக் காலம், சிறை தவம் இருந்தவர்! அவரை நீக்கிவிட்டு, இராமதாஸ் தனது நெருங்கிய உறவுக்காரரான ‘காடுவெட்டி‘ குருவை தலைவராக நியமித்துவிட்டார்!
யார் இந்த காடு வெட்டி குரு? இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என்று டஜன் கணக்கில் வழக்குகள் உள்ளன.
அதுமட்டுமல்ல, தமிழரசனின் விடுதலைப் படையைச் சேர்ந்த இளவரசன் அமைப்பிற்கும் இராமசாமி அமைப்பிற்கும் நடுவிலே புகுந்த காடுவெட்டி குரு, அவர்களுக்குள் மோதுதலை உருவாக்கினார் – விளைவு? நமது சொந்தங்கள் 16 பேர் வெட்டிச் சாய்ந்தார்கள்! இராமசாமி கொலையாவதற்கும் இளவரசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கும் ‘குள்ளநரி’ குருவே காரணம்!
ஒரு கொலைகாரர் என்று பெயரெடுத்தவர், டேங்கர் லாரி, கார், டூ வீலர் கடத்துபவர் என்றும், சாராயம் காய்ச்சுபவர், பெட்ரோல் கடத்துபவர் என்றும், பத்திரிகைகள் எழுதுகின்றன. இதெல்லாம் மெய்யா – பொய்யா என்பது வேறு விஷயம்! முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சா. சுப்ரமணியம், வன்னிய அடிகளார், பாக்கம் இராமகிருஷ்ணன், கோபால் நாயகர், பு.த. அருள்மொழி போன்ற யோக்கியர்கள் இருந்த பதவியில், ஒரு கொலைக்குற்றம் சுமப்பவரைத் தலைவராக்க வேண்டிய அவசியம் – அவசரம் இப்போது என்ன வந்தது? அருள்மொழியை அடுத்து, உங்கள் பேச்சைக் கேட்கும் நல்லவர்கள் யாருமே உங்களது சங்கத்தில் இல்லையா? பு.த. அருள்மொழியை வன்னியர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியது, அவருக்கு கவர்னர் பதவி வாங்கிக் கொடுக்கவா? வாழப்பாடியார் தி.மு.க. ரூட்டில் ராஜ்ய சபா எம்.பி.யாகி மத்திய மந்திரியாகி விடக்கூடாது என்று, வீண் வம்புக்கு, பாண்டிச்சேரியில் தோற்ற மீனவர் இராமதாசுக்குத் தானே, ராஜ்யசபா சீட்டுக் கேட்டு முதல்வர் கருணாநிதியை துளைத்து எடுத்தார்? பு.த. அருள்மொழிக்காக ராஜ்யசபா ‘சீட்டை’ ஒரு தமாஷுக்காவது கேட்டு வைத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? இழுத்த இழுப்புக்கெல்லாம் வளையமாட்டார்., வன்னியர்களுக்கு உள்ள இயற்கையான சுபாவத்தோடு நிமிர்ந்து நிற்பார் என்பதால் தானே, பு.த. அருள்மொழியை ஓரம் கட்டினார் இராமதாஸ்?
‘ஐந்து சத்தியங்களில் ஒன்றை மீறினாலும், என்னை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து சாட்டையால் அடியுங்கள்’ என்று, பெற்ற தாயின் மீது வன்னிய மக்களுக்கு சத்தியம் செய்து – வன்னியர் சமூகத்தை திக்குமுக்காட வைத்த இராமதாஸ் அவர்களே, நீங்கள் வாக்கு மாறியதற்காக, சத்தியம் மீறியதற்காக சாட்டை அடி வாங்கத் தயாரா?
‘தவறு செய்தவர்கள் – இதோ இங்கே கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள சாட்டையை எடுத்து நீங்களே அடித்துக் கொள்ளுங்கள்’ என்று கட்சியின் நிர்வாகிகள், மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்கிற செயற்குழுக் கூட்டங்களில் கூறுவீர்கள்…
இந்த ஜபர்தஸ்து மிரட்டல் எல்லாம், மற்றவர்களுக்குத்தானா?
அந்த சாட்டையை எடுத்து, முதலில் நீங்கள் தானே அடித்துக் கொண்டு, வழிகாட்ட வேண்டும்? இப்படிச் செய்வதுதான் நியாயம் என்று, உங்களுக்கு உங்கள் மனசாட்சி சொல்லவில்லையா? மனம் என்று ஒன்று உங்களிடம் இருந்திருந்தால், அது நடந்திருக்கும்! ‘மனம்’ இல்லாத போது, இது எப்படி நடக்கும்? ஓ… மனம் ஒரு குரங்கு! இராமதாஸ் மனம் ஒரு கள்ளுண்ட குரங்கு!
அவமானப்படுத்தப்பட்டு
வெளியேற்றப்பட்ட
சமுதாயத் தலைவர்கள்…
வன்னியர் சங்கத்திலும் கட்சியிலும் இப்போது இருப்பவர்களை விட, இராமதாசால் அவமானப்படுத்தப்பட்டு, வெளியேற்றப்பட்டவர் களும் வெளியேறியவர்ளும் தான் அதிகம்!
டாக்டர் இராமதாசின் அடாவடித்தனத்தாலும், சூழ்ச்சி – வன்மம் கலந்த நிர்ப்பந்தத்தாலும், சங்கத்திற்காகவும் கட்சிக்காவும் வெறிதனமாக உழைத்த நமது சமூகத்து பெருமக்கள் – அறிஞர்கள், செயல்வீரர்கள், திட்டமிட்டு வெளியேற்றப்பட்டனர்!
- இராமதாஸ் வன்னியர் சங்கத்தை நிறுவி – நடத்திய துவக்க காலத்தில், அவரோடு உணர்ச்சி பூர்வமாக இணைத்துக் கொண்டு, தனது எழுத்தாற்றல் பேச்சாற்றலை சங்க வளர்ச்சிகாக தீவிரமாக செலவிட்டு, தனது பேராசிரியர் வேலையை இழந்தவர், தீரன்! பா.ம.க. உருவாக காரணமாக இருந்தார். பிறகு பா.ம.க,வின் தலைவராக இருந்து, 1998 வரை கடுமையாகப் பாடுபட்டார்! இராமதாசுக்கான எல்லா எழுத்துப் பணிகளையும் செய்தார்! கட்சிக்காக துவக்கப்பட்ட ‘தினப்புரட்சி’ நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்று 28 ஆயிரம் பிரதிகள் வரை விற்கும் சூழ்நிலையை தீரன் உருவாக்கினார்! இது, தமிழக அரசியல் கட்சிகள் நடத்தும் பத்திரிகை துறை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்! அவர், 1998 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வோடு கூட்டணி அமைக்க வலியுறுத்தி – இராமதாசோடு 1998ல் கருத்து மாறுபாடு கொண்டார்! அவரை ஓட ஓட விரட்டினார்! அவர் தனியே ஒரு கட்சியை துவக்கிய போது, அவரது கூட்டத்தில் பங்கேற்க வாகனங்களில் வந்த, நூற்றுக்கணக்கான நமது சொந்தங்களை, அடியாட்களை ஏவிவிட்டு தாக்கினார்! தீரன் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், தனது சொந்தத் தொகுதிக்குள் நுழையவிடாதபடி மிரட்டல் – அச்சுறுத்தல் செய்தார்! அவரது குடும்பத்தாரையும் மிரட்டி, துன்புறுத்தினார்! 98ல் தி.மு.க. கூட்டணிக்கு ஆலோசனை கூறிய தீரனை விதவிதமாகக் கொடுமைப்படுத்திய இராமதாஸ், 99ல் தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமானாது, தனிக்கதை!
இதற்கெல்லாம் மேலாக, பா.ம.க. அலுவலக பீரோவில் தீரன் வைத்திருந்த அவரது எம்.ஏ. சான்றிதழ், 48 ஆயிரம் ரூபாய், துணிமணிகள், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட திராவிட இயக்கம், தமிழர் வரலாறு தொடர்பான காணக்கிடைக்காத ஆய்வுப் புத்தகங்கள், ‘தமிழ் இலக்கியத்திற்கு திராவிட இயக்கத்தவரின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் டாக்டரேட் பட்டம் பெறுவதற்காக தயாரித்து வைத்திருந்த பி.எச்டி., தீசிஸ் தொகுப்பு, எல்லாவற்றையும் டாக்டர் இராமதாஸ் கைப்பற்றிக் கொண்டார்!
டாக்டர் பொற்கோ, டாக்டர் நாகநாதன், ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. ஐ. கணேசன், எம்.எல்.ஏ., முத்துகுமார் போன்றவர்களின் மூலமாக டாக்டர் இராமதாசோடு பேசியும் பயனில்லை! எல்லாம் போகட்டும் – தீசிஸ் ரிப்போர்ட்டையாவது கொடுங்கள் என்று கெஞ்சியும் பயனற்று போனது!
இருபதாண்டு காலம், தனது அறிவை, ஆற்றலை, கல்வியை, இளமையை இராமதாசுக்காக தொலைத்த பேராசிரியர் தீரனை, இப்படியா ஈவு இரக்கமின்றி பழி வாங்குவது? வரலாறு இராமதாசை மன்னிக்குமா?
- ‘புகழ் மட்டும் மேன்மைமிகு ராணிக்கு, அவப்பெயர், தண்டனை எல்லாம், அமைச்சரவைக்கே…’ என்று, இங்கிலாந்து ராணியார் பற்றி கூறுவது உண்டு. அது போல, சங்கத்திலும், கட்சியிலும் கிடைக்கும் பேரும் – புகழும், சூழும் வசதிகளும் இராமதாசுக்கு மட்டும், ஏழெட்டு செக்ஷன்களில் வழக்குகள், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் சிறை தண்டனைகள், சொத்து – சுகம் இழப்பு, அவப்பெயர் எல்லாம், சங்கத்தின் – கட்சியின் நிர்வாகிகளுக்கே’ என்பதுதான் உத்தமர் இராமதாசின் புதிய தத்துவம்!
- அறிஞர் அண்ணா அவர்களார், ‘சாணக்கியன்’ என்று அன்பாக அழைக்கப்பட்ட அரசியல் நேர்மையாளர்; இருபது ஆண்டுக் காலம் மந்திரியாக – எம்.எல்.ஏ.வாக இருந்து, சிறந்த பண்பாளர் என்று பாராட்டு பெற்றவர், பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) முழக்கமிட்ட முதல் வன்னிய சிங்கம்!
- ‘தென்னிந்தியாவின் மதுலிமாயி’ என்று, பெரிதும் புகழப்பட்டவர்; கரும்பு விவசாயிகள் நலனுக்காக சங்கம் அமைத்து அரும்பாடு பட்டவர்; நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணி செய்த நேர்மையாளர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, நமது உறவினர்!
இந்த இரண்டு அரசியல் தலைவர்களும் இராமதாசின் பேச்சில் நெகிழ்ந்து, பா.ம.க.வில் சேர்ந்தார்கள்! இந்த இருவரும் மக்கள் அறிந்த – மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள்! இவர்களை, சூழ்ச்சி செய்து அவமானப்படுத்தி, கட்சியிலிருந்து வெளியேற்றியவர், இராமதாஸ்!
- வன்னியர் சங்கத்தின் – மாணவர் அணியின் முதல் மாநில அமைப்பாளராக இருந்து செயல்பட்டவர். வ.ச.வின் தென்னாற்காடு மாவட்ட செயலாளராக அரும்பணி செய்தவர். விழுப்புரம் மாவட்ட பா.ம.க.வின் செயலாளராக உழைத்தவர். 1987 தொடர் சாலை மறியல், உள்ளிட்ட எல்லா போராட்டங்களிலும் பங்கேற்றவர் – சிறை சென்றவர், திண்டிவனம் என்.எம். கருணாநிதி! லட்சக்கணக்கான ரூபாயை சங்கத்திற்காகவும் கட்சிக்காகவும் உங்களுக்காகவும் இழந்தவர்! உழைப்பால் உயர்ந்து, கட்சிக்குள் ஒரு பலமான பிடிப்பை வைதிருந்தார், கருணாநிதி! உங்கள் கைப்பாவையாக இருக்கமாட்டார் என்று கருதி, அவருக்கு எதிராக கோஷ்டி அமைத்து, அவமதித்து – வெளியேற்றியது எந்த வகை நியாயம்? அவர் தீரனின் தமிழ்ப் பட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பதைப் பொறுக்கமாட்டாமல், திண்டிவனம் அரசு மருத்துவமனையின் அவலத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம் (13.03.2000) நடத்திய போது அடியாட்களை ஏவிவிட்டு, அவரையும் அவரது காரையும் தாக்கியது ஏன்? உங்களது தாக்குதலுக்கு உள்ளான கருணாநிதி மீது பொய் வழக்கு ஜோடிக்க, போலீசுக்கு உத்தரவிட்டதும் – கைது செய்து சிறையிலடைத்ததும், கொடூரமான செயலல்லவா? இத்தனைக்கும் அவர் உங்கள் குடும்பத்துச் சொந்தமல்லவா? காட்டுமிரண்டித்தனமான உங்களது செயல்பாடு, வன்னியர் குணநலன்களுக்கு எதிராக இருப்பது புரிகிறதா? இதயமற்ற மனிதருக்கு, இதுவெல்லாம் வாடிக்கையா?
மக்களுக்குத் தெரிந்த, மக்கள் செல்வாக்கு உள்ள, தலைமைப் பண்புமிக்க எவரையும் இராமதாஸ் சகித்துக் கொள்ளமாட்டார் என்பதற்கு, இது ஒரு சிறந்த சான்று!
- வன்னியர் சங்கம் நிறுவிய காலம் தொட்டு சங்கத்திற்கு சொத்து – சுகங்களை இழந்து உழைத்த செயல் வீரர்கள், பத்து ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை நிதி தந்து உதவியவர்கள், பா.ம.க. உதயமான போது, அதனை வலுவாகக் கட்ட இரவு – பகலாக உழைத்தவர்கள், கட்சிக்காகப் போராடி சிறையில் தவமிருந்தவர்கள், இந்தக் கட்சியும் – இராமதாசும் தான். வன்னியர் – பட்டாளி மக்கள் சமூகத்தின் ‘காவல் தெய்வம்’ என்று எண்ணி பாடுபட்டவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள், கொடுமையாக அவமானப்படுத்தப்பட்டு, சங்கத்திலிருந்தும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்! அந்தப் பட்டியல் மிக மிக நீளமானது! அந்தப் பட்டியலின் ஒரு சிறு பகுதி இது!
- ‘தவத்திரு’ வன்னிய அடிகளார்
வன்னியர் சங்கத்தை இராமதாஸ் நிறுவியபோது, அதன் முதல் தலைவரே, இவர்தான்.
- திரு. ச. சுப்பிரமணியம், I.A.S. (Rtd)
இவரும் வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவர்.
- திரு. இராம. நாகரத்தினம்
வன்னியர் சங்க துணைத் தலைவர்
- திருமதி. நவமணி சீனுவாசன்
வன்னியர் சங்க மாநில மகளில் அணி தலைவி
- திரு. எஸ்.எம். பாலசண்முகம்
தலைமை நிலையச் செயலாளர், வ.ச.
- திரு. அரூர் அருணாசல படையாட்சி
பொருளாளர், தருமபுரி மாவட்ட வ.ச.
- திரு. உத்திரமேரூர் ஆர். விஸ்வநாதன்
நடிகர் எம்.ஆர். ராதா மாதிரி பேசும் சிறந்த பேச்சாளர்
- திரு. திருத்தணி டாக்டர். சேகர் வர்மா
செங்கை மாவட்ட செயலாளர், வ.ச.
- திரு. எம். சின்னப்பன்
தலைவர், சேலம் மாவட்ட வ.ச.
- திரு. டி.ஏ. ஜெயராமன்
செயலாளர், தஞ்சை மேற்கு மாவட்ட வ.ச.
- திரு. மயிலாடுதுறை கொள்ளவமூர்த்தி
செயலாளர், தஞ்சை கிழக்கு மாவட்ட வ.ச.
- திரு. கோ.வி. மணிவண்ணன்
செயலாளர், கடலூர் மாவட்ட வ.ச.
- திரு. திருக்கழுக்குன்றம் கதிர்வேல்
செயலாளர், செங்கை கிழக்கு மாவட்ட வ.ச.
- திரு. குரோம்பேட்டை என். சம்பத்
செயலாளர், மாநில இளைஞர் அணி, வ.ச.
- திரு. பாண்டிச்சேரி திருவரசன்
மாநிலச் செயலாளர், பாண்டி
திருவரசனின் சம்பந்திக்கு சொந்தமான 100 ஏக்கர் கரும்பு தோட்டத்தை வ.ச. நடத்திய சாலை மறியலின் போது – விஷமிகள் தீ வைத்து அழித்தனர். அப்படிப்பட்ட திருவரசனின் மகள் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு, அவரை வன்னியர் சங்கத்திலிருந்து திட்டமிட்டு நீக்கினார் – கேவலப்படுத்தினார், இராமதாஸ்!
- திரு. வேலூர் எஸ். மோகன்
மாநில துணைத் தலைவர், வ.ச.
- திரு. வந்தவாசி துரை காசிலிங்கம்
செயலாளர், சம்புவராயர் மாவட்ட வ.ச.
- திரு. தருமபுரி பாலாஜி ஆறுமுகம்
அமைப்பாளர், தருமபுரி மாவட்ட வ.ச.
- திரு. திண்டிவனம் கருணாநிதி
இராமதாஸ், இவருக்கு பெரியப்பா,
மாவட்ட செயலாளர் வன்னியர் சங்கம் (தென்னாற்காடு)
- திரு. சதாசிவம்
மாநில செயற்குழு உறுப்பினர், சேலம்
- திரு. அனந்தலை நடேசன்
வேலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர்
- வழக்கறிஞர் வி.டி. தமிழ்மணி
திருத்துறைப்பூண்டி, பா.ம.க.
- பாதிரி சீ. கோவிந்தசாமி
தலைமை நிலையப் பேச்சாளர்,
பேரவைத் தலைவர்,
பட்டாளி தொழிற்சங்கம்.
- தங்கஜோதி
விழுப்புரம் பா.ம.க.
- நெடி சுப்ரமணியம்
1980ல் தனது 15வது வயதில் வன்னியர் சங்கத்தின்
விடலையர் பிரிவை துவக்கியவர்.
- ‘ஃபைவ் ஸ்டார்’ எம். சுந்தரம்
ஆற்காடு பா.ம.க.
இவர்களையெல்லாம் உங்களுக்கு நினைவு இருக்கிறதா?
இப்போது உங்களது அரவணைப்பில் யார் இருக்கிறார்கள்? வ.ச.விற்கமு பா.ம.க.விற்கும் சம்பந்தமே இல்லாத மூர்த்திகளும் பொன்னுசாமிகளும் தானே?
ஒன்றிரண்டு பேர் பழைய தியாகிகள் உங்களிடம் இருப்பது உண்மை! ஆனால், அவர்களது மனசாட்சி, உங்களுக்கு – உங்களது செயலுக்கு எதிராக இருக்கிறது என்பது தெரியுமா டாக்டரே?
- வன்னியர்களுக்காக சங்கம் ஆரம்பித்து, வன்னியர்களுக்காக கட்சி ஆரம்பித்து, வன்னியர்களின் உணர்வுகளையும் பணத்தையும் சுரண்டிக் கொழுத்த நீங்கள்; இப்போது வன்னியர்களையே சூறையாடுவது உலக மகா அயோக்கியத்தனம் அல்லவா, டாக்டரே? இதுதான் உங்கள் முடிவான முடிவு என்றால், உங்களது பொது வாழ்க்கையில், ‘முடிவின் தொடக்கமும்’ தொடங்கி விட்டது என்றாவது புரிகிறதா?
- வன்னியர் சங்கம், பா.ம.க. இரண்டடிலும் சமுதாய உணர்வோடு ஈடுபாடு கொண்டு, சொத்து – சுகங்களை உற்சாகமாக இழந்தவர்கள்; போராட்டம் – சிறை, வழக்கு என்று வதைபட்டவர்கள்; மாநில – மாவட்ட பொறுப்புகளை ஏற்று லட்சம் லட்சமாக செலவிட்டு மகிழ்ந்தவர்கள்; உங்களுக்காகவும் தினப்புரட்சிக்காகவும் அள்ளி அள்ளி நிதி வழங்கிய வள்ளல்கள் என்று, ஒட்டு மொத்தமாக ஒரு லட்சம் பேர் இருப்பார்களா? அந்த ஒரு லட்சம் தியாக தீபங்கள் இப்போது எங்கே டாக்டரே?
உங்களை நம்பி – உங்களது ‘காந்தி’ வேஷத்தை நம்பி வந்த இவர்களை, விதவிதமாகச் சரண்டினீர்கள்! பல கோடீஸ்வரர்கள் – லட்சாதிபதியாகி, ஒதுங்கினார்கள்! பல்லாயிரக்கணக்கான லட்சாதிபதிகள் பிச்சாதிபதிகளாகி, ஓட்டாண்டிகளாகி துவண்டு, அங்கும் – இங்கும் ஓடிப்போனார்கள்!
வன்னியர் மேம்பாடு கருதி சர்வபரித் தியாகம் செய்யும் துடிப்போடு வந்த நமது சொந்தகளில் – வலுவான பணப் பின்னணி கொண்டவர்களை, அரவணைத்துப் பேசுவதும் – செலவுகளை இருத்து விட்டு, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பொறுப்புகளை வழங்குவதும் ‘தினப்புரட்சி’ டைரக்டர்களாக நியமிப்பதும் உங்களது ‘தந்திர’மான முதல் ரவுண்டு வேலை! இரண்டாவது ரவுண்டுக்கு புதிய பணக்கார வன்னியர்களை அந்நியர்களை – இழுத்துக் கொண்டு, முதல் ரவுண்டில் பாடுபட்ட தியாகிகளை திட்டமிட்டு ஒதுக்குவது உங்களுக்குக் கைவந்த கலை! இந்த மாதிரியான, ‘சொந்தங்களையே சூறையாடும்’ ஆக்டோபஸ் ஐடியாக்களை, எங்கே படித்தீர்கள், டாக்டர்? மூன்றாவது ரவுண்டு சுரண்டலுக்கு, உங்களது மகனை களத்தில் இறக்கி விட்டு, சூட்சுமமாக செய்ல்படுவது என்ன மாதிரியான சமுதாய உணர்வு டாக்டரே?
- ‘கலைஞர் கருணாநிதிதான் நமது சமுதாயத்தின் முதல் எதிரி’ என்று மேடை தோறும் பேசியவர், இராமதாஸ். ஆனால் இன்று அவரோடு தேனிலவு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
- மு.க. ஸ்டாலினை துணை முதல்வர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு ஆலோசனை கூறுகிறார். இந்த திடீர் ‘ஐஸ்’ வியாபாரத்திற்கு என்ன காரணம்? அதுவும் ஒரு சுயநலப் பாதுகாப்புதான்! தனது வாரிசான அன்புமகன் அன்பு மணிக்கு, பா.ம.க.வில் ஒரு சூட்சுமமான அரசியல் பாதுகாப்பை ஏற்படுத்தத்தான்!
இப்படியாகத் தானே, நமது சமுதாயத்திற்கு தீங்கு செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கிறார், இராமதாஸ்!
- இவரது ஐந்து சத்தியங்களையும் உணர்ச்சி பொங்கும் கொள்கை முழக்கத்தையும் கேட்டு – நம்பி, களத்தில் இறங்கி, சர்வபரித் தியாகம் செய்து, அடி, உதை, சொத்து, இழப்பு, வழக்கு, சிறை என்று கொடுமைகளை ஏற்ற நமது வன்னிய மக்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள்! உயிர்த்தியாகம் செய்தும், உடல் ஊனமுற்றும் தியாகம் செய்தவர்கள் பல நூறு கணக்கானவர்கள்.
அவர்கள் சிந்திய ரத்தத்தின் மீது, அவர்கள் செய்த தியாகத்தின் மீது, அவர்களது கல்லறையின் மீது இராமதாசும் அவரது குடும்பமும் – பெண் கொடுத்து, பெண் எடுத்த சம்பந்திகள் குடும்பமும் இதெல்லாம் போதாது என்று அவரது ‘பழைய சொந்த – பந்தங்களும் சங்கத்தையும் கட்சியையும் வளைத்துப் போட்டுக் கொண்டு, ‘உலகம் பிறந்தது எனக்காக…’ என்ற எம்.ஜி.ஆர். சினிமா பாடல் பாணியில், ‘சங்கம் வைத்தது எனக்காக… கட்சி அமைத்தது எனக்காக…’ என்று, ‘டூயட்’ பாடிக் கொண்டிருக்கிறார், இராமதாஸ்!
தியாகிகளை மறந்த இராமதாஸ்
சமூக நீதிக்காகப் போராடி 1980 முதல் இன்று வரை உயில் பலியான நமது வன்னியர்கள் ஏராளம்! அவர்களது கல்லறையின் மீது சொகுசு வாழ்க்கை அமைத்துக் கொண்டு, சற்றேறக்குறைய நூறு ஏக்கர் நிலப் பரப்பில் தோம் துரவுகளோடு கூடிய வசந்தமாளிகைளை அமைத்துக் கொண்டுள்ளார். திண்டிவனத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் சுரங்க மாளிகையாக – மருத்துவமனையை அமைத்துக் கொண்டு, ‘குளுகுளு’ வாழ்க்கை நடத்தும் இராமதாஸ், டாடா சுமோ, டாடா சபாரி என்று ஒரு டஜன் கார்கள் பவனி வர, பத்து – இருபது முரட்டுப் பாதுகாவலர்களுடன் பாதுகாப்பாக ஊர்வலம் போகும் இராமதாஸ், இந்த ஏற்றமான வாழ்க்கைக்குக் காரணமான அந்த தியாகச் செம்மல்களை கனவிலாவது நினைத்துப் பார்த்தது உண்டா? டிராக்டர், கார், புல்லட் என்று வசதியோடு அமைதியாக வாழ்ந்த அந்த மக்களில் பல பேர், இன்று ஓட்டைக் குடிசைக்குள், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்களே, அவர்களுக்கு என்ன உதவிகள் செய்தார், இராமதாஸ்? அதைப் பட்டியலிட்டுக் காட்டுவாரா?
ஒரு நேர்மையான தலைவராக இருந்தால், மனம் என்று ஒன்று இருந்து, மனசாட்சி என்று ஒன்று உள்ளவராக இருந்ததால், தனது தலைமையை ஏற்று – தனது சத்திய வாக்குமூலத்தை நம்பி, உயிர்த் தியாகம் செய்த அந்த மாமனிதர்களுக்கு – 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு தியாக மணிமண்டபம் எழுப்பி, அவர்களது சிலைகளை நிறுவி, வரலாற்றில் எப்போதும் நிலைக்கிறபடி செய்து விட்டுத்தானே, அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்!
- சாலை மறியல் போராட்டத்தில் (17.09.87 முதல் 23.09.87 முடிய ஒரு வார காலம்) பங்கேற்று போலீஸ் கொடுமைக்கு ஆளாகி, உயிர் பலியானவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், கோர்ட் – வழக்கு என்று வதைபட்டவர்கள், 15 ஆயிரத்துக்கும் மேலானவர்கள்! அவர்களுக்கு உரிய பண உதவி – சட்ட உதவிகளைச் செய்து கொடுத்தது உண்டா?
- சாலை மறியல் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் பு.த. அருள்மொழி, பு.தா. இளங்கோவன், தாராசிங், வாழைச் செல்வன், இராஜேந்திரன் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பேராசிரியர் தீரனின் ஆலோசனைப்படி வன்னியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சி.என்.இராமமூர்த்தி, இரா. நாகரத்தினம், எஸ்.எம். பால சண்முகம் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசி, கோரிக்கை வைத்த மனு கொடுத்தனர். முதல்வர் கருணாநிதி, சாலை மறியல் போரில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவதாக அறிவித்தார்! குண்டர் சட்டத்தில் கைது ஆகியிருந்த ஐந்து பேரையும் விடுதலை செய்தார்! உடனே ‘கருணாநிதி நமது சமுதாயத்தின் முதல் எதிரி. அவர் தரும் பணத்தை இப்போது வாங்காதீர்கள். நானே நிதி திரட்டி தலா ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன்’ என்று சபதம் செய்தார், இராமதாஸ்!
இந்த இராமதாஸ் என்ற மகா யோக்கியரின் பேச்சை நம்பி, உயிர் பலியானவர்களின் குடும்பத்தினர், முதல்வர் கருணாநிதி அறிவித்த பணத்தை வாங்காமல், பசி – பட்டினியால் வாடி, பல வருடம் காத்திருந்தனர். பசியின் ‘சமுதாயக் காவலர்’ நமது குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்று நம்பி, பத்து ஆண்டுகள் காத்திருந்தனர். இராமதாசால் வெளியேற்றப்பட்ட பேராசிரியர் தீரன், 1998-ல் தனிக்கட்சி அமைத்தார். அவர் மறுபடியும், உயிர் நீத்த தியாகிகளுக்காக நிவாராண நிதி கேட்டு, முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டு, தலா மூன்று லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொடுத்தார். மாதந்தோறும் ரூ. 1500 பென்ஷனும் பெற்றுத் தந்தார். சாலை மறியலின் போது உடமைகளை இழந்தவர்களுக்கு தலா பத்தாயிரும் ரூபாய் என்று பெற்றுத் தந்தார். இதுதான், உண்மையான வரலாறு!
அய்யன் வாக்கு…
உன்னதமான கொள்கைக்காக உயிர் நீத்த அந்தத் தியாகிகளின் ‘ஆவி’, தைலாபுரத்தில் உள்ள நீச்சல் குளத்தோடு அமைந்த வசந்த மாளிகைத் தோட்டத்தைத் தானே சுற்றி கொண்டிருக்கும்!
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
என்று அய்யன் திருவள்ளுவர் கூட, இராமதாஸ் போன்ற நன்றி கொன்றவர்களுக்கு ‘உய்வு‘ கிடைக்காது என்று தானே சாடுகிறார்! சாபம் கொடுக்கிறார்! அய்யன் திருவள்ளுவரின் வாக்கு நிச்சயம் பலிக்கும்.
மூன்றில் இரண்டு மந்திரி பதவி
‘தலித்’துகளுக்கா?
வன்னியர் சமுதாயத்தைப் பாதுபாப்பதற்காக சங்கம் அமைத்து, அதை அரசியல் கட்சியாக மாற்றி, பா.ம.க. என்று பெயர் சூட்டி ‘தலித்’ மக்களோடு பாசத்தோடு கை கோர்த்துக் கொண்டு, வன்னியர்களின் உழைப்பு – பணம் – தியாகத்தைப் பெற்றுக் கொண்டு வளர்த்தார், இராமதாஸ்!
1998ல் பா.ம.க.வுக்கு, ஒரு நபரை மத்திய அமைச்சராக்கும் பொன்னான வாய்ப்ஹப வந்தது! இராமதாஸ் என்ன செய்தார்? தான் ஒரு ‘தலித்’ நேசன் தலித் பிறவி என்று காட்டிக் கொள்ள – நிரூபித்துக் கொள்ள, ‘தலித்’ ஒருவருக்கு அந்தப் பதவியை பாச உணர்வோடு வழங்கிப் பெருமிதப் பட்டார்! (கட்சிக்கு எதுவுமே தலித் எழில்மலை செய்யவில்லை என்று பின்னால் வசைபாடி, 1999 தேர்தல் நேரத்தில், ‘வந்ததும் – வாசியும்’ ஆன எம்.பி.யை, எழில்மலை வீட்டில் உட்கார வைத்து, ஒரு வாரம் சத்தியாகிரகம் செய்து, ஒரு கோடி பெற்று, எழில்மலைக்கு பட்டை நாமம் தீட்டியவர் தான், இந்த மக்கள் காவலர்)
1991ல் பா.ம.க.வுக்கு, இரண்டு மத்திய அமைச்சர்கள் பதவி கிடைத்தது! அப்போது என்ன செய்தார் இராமதாஸ்? காங்கிரஸ் வட்டாரத்தில், மணி சங்கர் ஐயருக்கு உதவியாளராக இருந்த கதர்ச்சட்டைக்காரரான ‘தலித்’ ஒருவருக்கு, போனால் போகிறது என்று வன்னியர் ஒருவருக்கும் பதவியளித்து, அவர்களை ‘டம்மி’யாக்கி, தனது மகனின் கட்டளைக்குக் கீழ்படியும், பொம்மைகளாக ஆக்கி வைத்துள்ளார்! இந்த இரண்டு மந்திரிகளின் வரவு – செலவு, கொள்கை முடிவுகளை, ‘சின்ன அய்யா’ அன்பு மணிதான் எடுக்கிறார்! பெரிய அய்யா, சிரித்து மகிழ்கிறார்!
வன்னியர் சங்கம் துவக்கப்பட்ட போது, ‘தலித்’துகளின் பங்கு – உழைப்பு இருந்ததா? தலித்துகளால், தொல்லைகளும், துயரங்களும் தான் நமது உறவினர்களுக்கு இருந்தது!
சரி, பா.ம.க. துவக்கப்பட்டு 10 வருட காலமாகிறது. இது அரசியில் கட்சி, பல சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் இருப்பார்தான். அப்படித் தான், ‘தலித்’ மக்களும் சிலர் இருந்தார்கள். நாடார், முஸ்லீம் என்றும் ஒன்றிரண்டு பேர் நாம்கேவாஸ்தாக இருந்தார்கள் – இருக்கிறார்கள். பா.ம.க. வளர்ச்சியில் இவர்களது பங்கு என்ன? எத்தனை ஆயிரம் ‘தலித்’, நாடார், முஸ்லீம் மக்கள் பா.ம.க.வில் உறுப்பினர்கள்? வெளித் தோற்றத்திற்காக விரல் விட்டு எண்ணத்தக்கவர்கள் தானே இருந்தனர்! அல்லது, உங்களால் நியமிக்கப்பட்டனர்! பிறகு எதற்காக, மூன்று மத்திய அமைச்சர் பதவிகளில் இரண்டை ‘தலித்’ மக்களுக்கு வழங்கினீர்கள்?
இது, விழுக்காடு அடிப்படையில் கணக்கிட்டால், ‘தலித்’களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பதவி என்றல்லவா ‘ரிசல்ட்’ வருகிறது! வன்னியர்களின் பங்கு மூன்றில் ஒரு பங்கு என்றாகிறதே! குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக இருக்கிறதே! ‘தலித்’ மக்களுக்குப் பாடுபட தமிழ்நாட்டில், அகில இந்தியாவில் ஏகப்பட்ட அமைப்புகள் – கட்சிகள், தலைவர்கள் இருக்கிறார்கள்! நமக்கென்று யார் இருக்கிறார்கள்? 200 லட்சம் வன்னியர்களின் ஒரே ரட்சகர் நீங்கள் தான் என்று நம்பிய மக்களை, திட்டமிட்டு வஞ்சித்தது ஏன்?
‘தலித்’ மக்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வருவதற்கு என்ன காரணம்? ஏதோ ஒரு அழுத்தமான காரணம் இருக்கிறது! இல்லாவிட்டால் பல்லாயிரக்கணக்கான வன்னியர்கள் தியாகம் செய்து, ரத்தம் பாய்ச்சி வளர்த்த கட்சியை, அதனால் வந்த மத்திய அமைச்சர் பதவியை, பழைய சொந்த – பந்தங்களுக்கு 66.66 சதம் பதவியை வாரி வழங்குவீர்களா?
இராமதாஸ் வெளியிட்ட
சுய வரலாறு!
டாக்டர் இராமதாசின் பழைய பூர்வேந்திரம் என்ன? அவரது குடும்பத்து பொருளாதார நிலவரம் என்ன? இப்போது, 1996க்குப் பிறகு, வாழும் அரண்மனை ‘பந்தா’ வாழ்க்கை நிலவரம் என்ன? சுருக்கமாக – ஆனால், உண்மையான விவரம் இதுதான்:
- நான் சங்கக் (வன்னியர்) கூட்டத்திற்கு வருகிறேன். நான் வசதியானவனல்ல. எனக்கு இருப்பது, மூன்று ஏக்கர் நிலம்தான். அதுவும் மானாவாரி நிலம். பயிரிடத் தகுதியற்ற நிலம். இந்தச் சூழ்நிலையில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வந்து – போக ரூ. 300 – ரூ. 500 என்று செலவு ஆகிறது, வட்டிக்கு பணம் வாங்கிக் கொண்டு தான் வருகிறேன். இருந்தாலும், நான் செய்து கொடுத்த சத்தியப்படி, எவரிடமும் பணத்தை வாங்கமாட்டேன்.
-1980 முதல் 1989 வரை பங்கேற்ற சங்கக் கூட்ட
நிர்வாகிகளிடமும், 1989 முதல் 1996 வரை பங்கேற்ற
பா.ம.க. நிர்வாகிகளிடமும் டாக்டர் இராமதாஸ்.
- கீழ்சிவிறி ஆதிதிராவிடர் பள்ளியில் நான் படித்துக் கொண்டு இருந்த போது, வரட்டி தட்டுவதற்காக தினமும் மாலையில் ஒரு கூடை சாணி பொறுக்கி, வீட்டுக்குக் கொண்டு வந்தால் தான், அடுத்த நாள் காலையில் குடிக்கக் கொடுக்கும் கூழுக்கு, கொஞ்சம் கீரை கொடுப்பார் என் அம்மா. அம்மா வரட்டி தட்ட, நான் சாணி பொறுக்கித் தராவிட்டால், சில சமயங்களில் கூழும் கிடைக்காது. இப்படியெல்லாம் சிரமப்பட்டேன். இந்தச் சூழ்நிலையில் தான், நான் பள்ளிப் படிப்பு முடித்து, டாக்டாராக ஆனேன்.
- 1980களில் வன்னியர் சங்கத்து உள்வட்ட
நண்பர்களிடம் இது பற்றி பெருமைப்பட கூறி,
நான் ஏழ்மையிலிருந்து புறப்பட்டு வந்த ‘அக்னி’
என்று சொல்வார், இராமதாஸ்.
இராமதாசின் இந்த இரண்டு சத்திய வாக்கு மூலங்களும் பொய்யல்ல; நூறு சதம் உண்மைதான். மருத்துவக் கல்லூரியில் படித்த போது, தனது இறுதியாண்டு படிப்பை முடிக்க (1963) நமது உறவினர் ஒருவரிடம் கடனாக வாங்கிய சில நூறு ரூபாயை இன்று வரை திருப்பி தரவில்லை என்பதும் கூட, உண்மைதான்!
வறுமையின் பிடியில் உழன்று, முயன்று, நிமிர்ந்தவர்தான் இராமதாஸ்! அதிலெல்லாம் நாம் குறை காணவில்லை!
இராமதாஸ், நா தழுதழுக்க – பெருமிதம் பொங்கக் குறிப்பிட்ட, இந்த இரண்டு சத்திய வாக்குமூலங்களும் – சுய வரலாறும், நூறு சதம் உண்மைதான்! இதை நாமும் மறக்கவில்லை; திண்டிவனம் வட்டாரத்து மூத்த வயதுடைய மக்களும், வன்னியர் சங்கத்தின் துவக்க கால உறவினர்களும் மறுக்கமாட்டார்கள்! குறிப்பாக, இவர் பிறந்த கீழ்சிவிறி கிராமத்துப் பெரியவர்களும் – இவரது பள்ளித் தோழர்களும் மறுக்கவே மாட்டார்கள்!
- இராமதாசின் ஐந்து சத்தியங்களையும் – இரண்டு சுயவரலாற்று வாக்குமூலங்களையும் கேட்ட நமது சொந்தங்கள், ‘அடடா – நமது சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் தீர்வு காண… மாட்டுக் கொட்டகையில் பிறந்த ரட்சகர் ஏசுநாதர் போல், நமக்கொரு மாட்டுச் சாணி பொறுக்கிய ரட்சகர் அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்’ என்று, மெய்யாகவே நம்பினார்கள்!
- வன்னியர் சமூக மக்களது சகல பிரச்சனைகளுக்கும், அதாவது 108 வியாதிகளுக்கும், இவர் தான் மருந்து, இவர்தான் டாக்டர் என்றும், ஒரே கதிமோட்சம் என்றும் கருதினார்கள்!
இராமதாஸ் பகிரங்கமாக வன்னியர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவித்த ஐந்து சத்தியங்களையும் 1989 வரை 90 சதம் மீறாமல் தான் இருந்தார்! இதன் பிறகு தான் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தத்துவப்படி, தடம் புரளத் துவங்கினார்! பந்தா, டாம்பீகம், சொகுசு வாழ்க்கை என்று, இராமதாசின் வாழ்க்கை திசை மாறியது!
தோட்டத்துக் கனவுகள்…
1998ல் வாழப்பாடி இராமமூர்த்தியின் ‘விடாபிடி’யான முயற்சியால், பி.ஜே.பி. – அ.தி.மு.க. தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் பா.ம.க. இடம் பிடித்தது! பி.ஜே.பி. தலைமையில் – வாஜ்பாய் தலைமையில் மத்தியி அரசு அமைந்தது! பா.ம.க.வுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்தது! இராமதாஸ், துள்ளாட்டாம் போடத் துவங்கினார்!
- மறைந்த எம்.ஜி.ஆருக்கு ஒரு விசாலமான ‘தோட்டம்’ இருந்தது போல… ‘டான்சி ராணி’ என்று இவரால் வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஒரு போயஸ் தோட்டம் இருப்பது போல… தனக்கும் ஒரு ‘தோட்டம்’ இருக்க வேண்டும்; வசந்த வசதிகளோடு அது அமைய வேண்டும் என்று இராமதாஸ் ஆசைப்பட்டார்.
அதுமட்டுமல்ல; ‘டான்சி ராணி’ ஜெயலலிதா போலவே 10 – 15 டாடா சுமோ, டாடா சபாரி கார்கள் அணிவகுக்க, அடியாட்கள் புடை சூழ, பவனிவர விருப்பப்பட்டார்! இராமதாசின் ஆசைகளும் விருப்பங்களும் புதிய கூட்டணியை அமைத்துக் கொண்டன! இந்தப் புதிய கூட்டணி முழுமையாக வெற்றி பெற்று விட்டது! இராமதாஸ் ஜெயித்துவிட்டார்! இரண்டு கோடி வன்னியர்களின் எதிர்காலம் – தோற்றுப் போய் விட்டது!
- வன்னியர் சங்கம் அமைத்தது எனக்காக…
பட்டாளி கட்சியைக் கண்டது எனக்காக…
– என்று எம்.ஜி.ஆர். பாடிய ‘உலகம் பிறந்தது எனக்காக…’ என்ற பாடலின் வரியை மாற்றி, ‘ஹம்’மிங் செய்தார்!
ஜெயலலிதாவின் வழியில்
இராமதாஸ்…
- திண்டிவனத்தில் இராமதாஸ் கட்டுமானங்களோடு அண்டர் – கிரவுண்டு வசதியோடும் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ மருத்துவ மாளிகையை எழுப்புவதற்கு அவரிடம் சொந்தமாகப் பணம் இல்லையாம். அதனால், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திற்கு விண்ணப்பம் போட்டு – கடன் வாங்கி, மாளிகை எழுப்பினார்! வாங்கிய 25 லட்சம் ரூபாய் கடனையும் திருப்பி செலுத்திவிட்டார்.
எப்படி?
அங்கே தான் இருக்கிறது – ஜெயலலிதா சூட்சுமம்!
- காரல் மார்க்ஸ்
- தந்தை பெரியார்
- டாக்டர் அம்பேத்கார்
போன்ற மாமேதைகளின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பதாக கூறிக்கொள்ளும், இராமதாஸ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் பெற்ற கடனை அடைக்கிற விஷயத்தல் மட்டும், ஜெயலலிதாவின் கொள்கையைப் பின்பற்றினார், இராமதாஸ்!
அது எப்படி?
- தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 24 செண்ட் நிலத்தில் தேக்கு பயிரிட்டதாகவும் – விளைந்த தேக்கு மரங்களை வெட்டி விற்ற வழியில் 25 லட்சம் ரூபாய் வருமானம் வந்ததாகவும் கூறுகிறார். இப்படியாக வந்த 25 லட்சம் ரூபாயை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திற்கு செலுத்தி, கடனை சரிகட்டியுள்ளார்!
ஜெயலலிதா, பதினோறு ஏக்கர் நிலத்தில் திராட்சைத் தோட்டம் வைத்து, திராட்சை பயரிட்டு – விற்று, ஆறு கோடி வருவாய் வந்ததாக வருமான வரித்துறைக்குக் கணக்குக் காட்டினார்! இந்த அதிசய திராட்சை வளர்ப்பு, நுட்பத்தை ஜெயலலிதாவிடமிருந்து பெற்று, கூடுதல் லாபம் அடைய, உலகம் முழுவதுமுள்ள திராட்சை பயிரிடுவோர் சங்கத்தினார், ஐதராபாத்தை முற்றுகையிட்டபடியே இருக்கிறார்கள்!
ஜெயலலிதாவின் மீதான வருவாய்க்கு மீறி சொத்து சேர்த்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கூட, திகைத்துப் போய் இருக்கிறது!
இராமதாஸ், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து சாணி பொறுக்கி, அடிப்படை விவசாய தொழில் நுட்பம் தெரிந்த மேதையல்லவா? அதனால், ஜெயலலிதாவைவிட கூடுதல் விவசாயத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு ஏக்கர் 24 செண்ட் நிலத்திலேயே தேக்கு மரம் வளர்த்து, 25 லட்சம் ரூபாயை நிகர வருமானமாகப் (செலவு போக) பெற்றுள்ளார்!
‘தமிழினக் காவலர்’ – ‘சமுதாய நேசர்’ இராமதாஸ், மெய்யாகவே தமிழர்களை – தமிழக விவசாயிகளை நேசிப்பவராக இருந்தால், ஒரு ஏக்கர் 24 செண்ட் நிலத்தில் தேக்கு மரம் வளர்த்து, 25 லட்சம் ரூபாயை லாபமாகப் பெறும் விவசாயத் தொழில் நுட்பத்தை வெளியிட்டு, தமிழக விவசாயிகள் செழிப்படைய உதவ வேண்டும்! ஒட்டு மொத்த தமிழக விவசாயிகளுக்கும் இந்த தொழில் நுட்ப ரகசியத்தை வெளியிட தயக்கமாக இருந்தால், விவசாயத்தையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் நமது சொந்தங்களான வன்னிய மக்களுக்காவது ரகசியமாக வெளியிடுங்கள்! அவர்களது வாழ்க்கை, உங்களது வாழ்க்கை போல ஏற்றம் அடையும்! வன்னியர்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்! டாடா சுமோ-சபாரிகள் சூழும்! ‘உலக விவசாயிகளின் முன்னோடி – வழிகாட்டி இராமதாஸ்’ என்று, உலக விவசாயிகள் அமைப்பு உங்களைப் பாராட்டி, பட்டம் வழங்கி கவுரவிக்கும்! ஏன் ‘நோபல்’ பரிசே கிடைக்கும்.
இராமதாஸ் அவர்களே, சும்மா சொல்லக் கூடாது, நீங்கள் எதிலேயும் முதலிடத்தைப் பிடிக்க முயற்சிக்கும் சிறந்த உழைப்பாளி என்பதை நிரூபிக்க, ஜெயலலிதாவின் திராட்சை வளர்ப்பு தொழில் நுட்பத்தை முறியடித்து, முதலிடத்தைப் பிடித்து விட்டீர்கள்! இந்தத் துறையில் ‘அய்யா’தான் நம்பர் ஒன்! ‘அம்மா’ நம்பர் டூ!
- ‘மரம் வெட்டி’ என்று யாராவது இராமதாசை விமர்சித்தால், எழுதினால் இவர் கொதித்துப் போவார். ‘என்னை மரம்வெட்டி என்று எவனாவது சொன்னால், எழுதினால் அவனை செருப்பால் அடியுங்கள்’ என்று, கட்சிக்காரர்களுக்குக் கட்டளையிடுகிடுறார்!
- கள்ளச் சாராய வியாபாரப் போட்டியில் கூட, உரிமையை நிலைநாட்ட பத்து பேர் வெட்டிக் கொல்லப்படும் போது, பல நூறு ஆண்டுக் காலமாக வஞ்சிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ஒதுக்கீடு கேட்டுப் போராடும் போது, மரங்களை வெட்டியது – போராடியது மாபாதகமான செயலா? 1987 செப்டம்பர் 16ம் தேதி இரவு நாம் மரங்களை வெட்டிக் சாய்க்காமல் இருந்திருந்தால், தமிழகமே ஸ்தம்பித்து நின்றிருக்குமா? உலகமே நம்மை திரும்பிப் பார்த்திருக்குமா? சீர்மரபினரோடு நமக்கு ஒதுக்கீடு தான் கிடைத்திருக்குமா?
- தமிழ்நாடு முழுவதும் இராமதாஸ் பயணம் செய்து, ஒன்றியம் தோறும் அம்பேத்கார் சிலையை திறப்பது ஏன்? ‘சென்னையில் உள்ள எம்.சி. ராஜா ஹாஸ்டலில் தங்கி, நானும் பொன்னுசாமியும் படித்தோம்’ என்று இராமதாஸ் பெருமை பேசுவது ஏன்? அந்தப் பொன்னுசாமி, எப்போதாவது நீங்கள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்றது உண்டா? பா.ம.க.வுக்கும் பொன்னுசாமிக்கும் எப்போது தொடர்பு வந்தது? பஞ்சாயத்துப் பள்ளியின் ஆசிரியராக இருந்த பொன்னுசாமி, காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான மணிசங்கர் அய்யரிடம் பெர்சனர் அசிஸ்ட்டெண்டாக ஐந்து வருடம் வேலை பார்த்தவர்! அதற்காக பொன்னுசாமிக்கு நன்றிக் கடனாக மணி சங்கர் அய்யர் அப்போது ஒரு பெட்ரோல் பங்க் வாங்கிக் கொடுத்தார்! அந்த பொன்னுசாமிக்கு, மத்திய மந்திரி பதவி தந்த மர்மம் என்ன?
இராமதாசின் சுயரூபம்!
‘வன்னியர்களுக்கா – வன்னியர்களின் நலனுக்காக விஸ்வரூபம் எடுப்பேன்’ என்று இப்போது முழக்கமிடுகிறார், இராமதாஸ். ஆனால், இவரது சுயரூபம் என்ன தெரியுமா?
வன்னியர் அல்லாத ஆதிசங்கரை வெற்றிபெறச் செய்ய, கடலூர் தொகுதியில் மட்டும் ஆறு நாட்கள் இடைவிடாமல் சுற்றுப் பயணம் செய்த இராமதாஸ், வன்னியர் சங்கத்தன் தலைவர் பு.த. அருள்மொழி போட்டியிட்ட மயிலாடுதுறை தொகுதியிலும் தோழமைக் கட்சியின் தலைவரும் நமது உறவினருமான வாழப்பாடி இராமமூர்த்தி போட்டியிட்ட சேலம் தொகுதியிலும் மேலும் ஓரிரு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்யாதது ஏன்? டி.எம். செல்வகணபதியிடமும் – மணிசங்கர் அய்யரிடமும் வாங்கிய கையூட்டிற்கான கைமாறா?
இனம் போலவே இருந்து…
புதுவை மாநிலம் என்பது தமிழகம் போலவே, வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலம்! பா.ம.க. ஆட்சி அமைக்கும் அளவுக்கு, வாய்ப்புள்ள மாநிலம், ஆனால், மக்களுக்கு சொரணையில்லை. எனவேதான், எவனெவனோ புதுவை முதலமைச்சராகிறான் என்று, பேசுபவர் இராமதாஸ்! அதுமட்டுமல்ல, ‘திண்டிவனத்திலிருந்து கடலூர் செல்வதாக இருந்தால், நான் பாண்டிச்சேரி வழியாகப் போகமாட்டேன். விழுப்புரம் வழியாகத்தான் போவேன். ஏனென்றால், சொரணை அற்ற வன்னியர்கள் பாண்டிசேரியில் இருக்கிறார்கள்’ என்று மனம் நொந்து பேசுவார்! இது உண்மைதான்!
சரி, புதுவை மாநிலத்து வன்னியர்களுக்கு சொரணை இல்லைதான்! சொரணை அதிகமாக உள்ளதாகக் கூறிக்கொள்ளும் இராமதாசே, 1999 நாடாளுமன்ற தேர்தலின் போது, புதுவை வேட்பாளரை தேர்வு செய்த போது, அந்த சொரணை உங்களுக்கு எங்கே போனது? நீங்கள் கண்டுபிடித்துக் கொண்டு வந்த பா.ம.க. வேட்பாளர்களும் உங்களுக்கும் என்ன பாத்தியதை? உன்னுடைய இந்த அயோக்கியத்தனமான செயலால், புதுவை மாநிலமே சிரிக்கிறது! நமது சொந்தங்களெல்லாம் கண்ணீர் வடிக்கிறார்கள்!
இராமதாசின் இந்த இழிச்செயலை ‘அய்யன்’ திருவள்ளுவர் மிகவும் கடுமையாகச் சாடுகிறார்:
இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
-அதாவது இனம் போலவே இருந்து, உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொது மகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும் என்கிறார், அய்யன்! இது யாருக்குப் பொருத்துகிறதோ இல்லையோ பாண்டிசேரியில் வன்னியர் மூக்கை அறுத்து எறிந்த ‘அய்யா’ இராமதாசுக்கு நூறு சதம் பொருந்தும்!
நிருபர்களுக்கு இராமதாஸ் கொடுத்த
‘விஸ்கி’ விருந்து!
நமது உறவினர் பெண்களைத் திரட்டி, தமிழகம் முழுவதும், ஒன்றியங்கள் தோறும் பூலான்தேவி, ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்களை வைத்து, மது விலக்குப் போராட்டத்தை நடத்தியவர், இந்த இராமதாஸ்! ஆனால், இன் பாக்கெட் சாராயத்தை விற்க பேண்டும் என்று தமிழக அரசுக்கு அவசரமாக வேண்டுகோள் விடுப்பது ஏன்? இந்த அறிவிப்பு, பா.ம.க.வின் செயற்குழு, பொதுக்குழு முடிவின் தீர்மானமா? ‘பாக்கெட் சாராயத்தை கொண்டு வா’ என்று, போராட்டமே நடத்தினாலும் நடத்துவீர்கள்! ஏனென்றால், நீங்கள் ஒரு ‘கொள்ளை சிங்கம்’! வன்னியர்களுக்கு – தமிழர்களுக்கு உள்ள ஞாபக மறதியை நல்லாவே வியாபாரம் செய்கிறீர்கள்!
சமீபத்திய பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும், சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான தாஜ் கோரமண்டலில், தனது கட்சியின் வெற்றியை – மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக, ஒரு பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்! இந்தக் கூட்டத்திற்கு, ‘அய்யா’ இராமதாசே அடிக்கோடிட்டுக் கொடுத்த பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அழைப்புகள் ரகசியமாக அனுப்பப்பட்டது! இவரையும் பா.ம.க.வையும் தூக்கித் தூக்கி எழுதிய நமது உறவினர் மணி நடத்துகிற ‘நெற்றிக்கண்’ பத்திரிகைக்கு, அழைப்பு இல்லை! அவ்வளவு கவனமாக, நமது உறவினரை ஒதுக்கி வைத்துவிட்டு, பத்திரிகையாளர்களுக்கான ‘விஸ்கி’ விருந்து நடந்தது!
ஏதோ, பாட்டாளி மக்கள் தொடர்பான கொள்கை அறிவிப்பை வெளியிடுவதற்கான சந்திப்பு அல்ல இது! இந்திய அரசியலில், குறிப்பாக தமிழக அரசியலில் எந்தக் கட்சித் தலைவரும் செய்யாத அசிங்கமான ஏற்பாடு இது! இதிலேயும் இராமதாஸ், ரெக்கார்டு செய்துவிட்டார்! அது வெறும் பத்திரிகையாளர் சந்திப்பு அல்ல, வெளிநாட்டு மதுபானங்களுடன், நடப்பன, பறப்பன, நீந்துவன வகையறாக்களோடு பல லட்சம் ரூபாய் செலவில் நடந்த ‘விஸ்கி’ விருந்து!
விருந்து மண்டபத்திற்கு இராமதாஸ் வந்து, அனைவருக்கும் வணக்கம் போட்டார்! குசலம் விசாரித்தார்! கை குலுக்கினார்! அவரோடு, வெற்றி பெற்று மத்திய மந்திரியான இரண்டு மந்திரிகள்! எம்.பி.க்கள்! எம்.எல்.ஏ.க்கள்! பா.ம.க.வின் நிர்வாகிகள்! பிறகு, இராமதாஸ் மெல்ல நழுவி, தாஜ் ஓட்டலில் ஏற்கெனவே ‘ரிசர்வ்’ செய்யப்பட்டிருந்த அறைக்கு, ஒன்றும் தெரியாதது போல் போய்விட்டார்! இராமதாஸ் இடம் பெயர்ந்ததும், ‘சீயர்ஸ்’ நடந்தது! செலவு பல லட்சம் ரூபாயாம்! இந்தச் செய்தியை கண்ணீர் மல்க தனது ‘நெற்றிக்கண்’ பத்திரிக்கையில் வெளியிட்டவர் நமது சொந்தம் ஏ.எஸ். மணி!
தற்குறிகளை எம்.பி.யாக்கிய இராமதாஸ்…
நமது சமுதாய மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்ட, படித்த இளைஞர்கள், பா.ம.க.விலும் வன்னியர் சங்கத்திலும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் தேர்வு செய்து வேட்பாளராக்கி எம்.பி.யாக்காமல், கைநாட்டுப் பேர்வழிகளான ஏ.கே. மூர்த்ததி, துரை போன்றவர்களை எம்.பி.யாக்கியுள்ளார், இராமதாஸ்! லட்சக்கணக்கான படிப்பாளிகளும் நூற்றுக்கணக்கான மதிநுட்பம் மிக்கவர்களும் உள்ள நமது சமூகத்தை, படிப்பறிவற்ற தற்குறிகளாக வெளியுலக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார் இராமதாஸ்!
99 பாராளுமன்றத் தேர்தலின் போது, வன்னியர் சங்க முன்னாள் தலைவர் சா. சுப்பிரமணயிம், ஐ.ஏ.எஸ். செங்கற்பட்டு தொகுதியில் போட்டியிட் மனு செய்தார். தற்குறியான மூர்த்திக்காக, சா.சு.விடம் நய்ந்து பேசி, வாபஸ் பெற வைத்தார்! ஆன செலவுத் தொகையைத் தருவதாகச் சொன்னவர், இன்றுவரை திரும்பியே பார்க்கவில்லை! டெலிபோன் வழியாகக் கூட நன்றி தெரிவிக்காதது ‘நன்றி’ கொன்ற செயலல்லவா? செஞ்சியை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தியை, செங்கற்பட்டில் வெற்றி பெற வைத்தார்! இதே செங்கற்பட்டு தொகுதியில் இப்போதும் உங்களுடன் விசுவாசமாக இருக்கிற போரூர் சண்முகம் மறந்து போனது ஏன்? டாக்டர் இராமதாஸ் கட்டளைப்படி, தனித்து நின்ற போதெல்லாம் – ஒவ்வொரு தேர்தலுக்கும் 50 லட்சம் ரூபாய் என்று மூன்று முறை செலவு செய்தவர், போரூர் சண்முகம். பாண்டிச்சேரி தேர்தலுக்காக ரூ. 5 லட்சம், ‘தினப்புரட்சி’ க்காக ரூ. 5 லட்சம் என்று வாரி வழங்கிய போரூர் சண்முகம்தானே சரியான வேட்பாளர். அவருக்கு சீட்டு தராமல் மூர்த்திக்கு சீட்டு தந்த மர்மங்கள் என்ன? அந்த மர்ம மூடிச்சுகளை அவிழ்ப்பீர்களா?
இராமதாசின் எடு-பிடியாகயும், ஏவல் ஆளாகவும், சொந்த விஷயங்களை கவனித்துக் கொள்ளும் சிறப்புத் தூதராகவும் இருந்து வருபவர், ஏ.கே. மூர்த்தி! இவர், பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்த போது, நாலு வரி பிரமாண உறுதிமொழியை – தமிழில் படிப்பதற்கே, மூன்று நிமிடம் எடுத்துக் கொண்டார்! அறிஞர்களும் மேதைகளும் அரசியல் நிபுணர்களும் இடம் பெற்றுள்ள நாட்டின் உயர்ந்த அவையில் கூடியிருந்தவர்கள், தாய்மொழியைக் கூட ‘தத்தக்கா-பித்தக்கா’ என்று மூர்த்தி படித்த போது, என்ன நினைத்திருப்பார்கள்? நமது சமுதாயத்தை இப்படியாகத்தானே கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டார், இராமதாஸ்!
குவித்துக் கொண்டிருக்கும்
சொத்துக்கள்…
தேர்தலுக்குத் தேர்தல் தொழிலதிபர்களை தானே நேரில் சென்று சந்தித்து, பணத்தை பெட்டிப் பெட்டியாகப் பெற்று வந்தார், இராமதாஸ்! இதல்லாமல், 1998-99ல் பணம் கோடி கோடியாக பல ரூட்டுகளில் வந்து குவிந்தது!
அண்ணாசாரையில் உள்ள ஒரு பிரபல கட்சியின் அலுவலகம் எதிரே அமைந்துள்ள மூன்று நட்சத்திர ஓட்டலை, வாங்கிவிட்டார்! இதல்லாமல், தியாகராய நகரில் பங்களாக்கள் வாங்கப்பட்டுள்ளது!
இப்போது, அடையாறில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு மருத்துவமனையை மகனுக்காக வாங்கிப் போட பேச்சு வார்த்தை நடத்துகிறார், இராமதாஸ்!
இராமதாஸ் சுருட்டல்கள்…
- இராமதாஸ், தலைசிறந்த ‘அயோக்கிய சிகாமணி’ என்பதற்கான சில முக்கிய குறிப்புகள்:
வன்னிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர், வழக்கறிஞர் சி.என். இராமமூர்த்தி, எம்.காம்., டி.பி.எல்., பி.எல்., படித்தவர். இராமதாஸ் மீது பற்றும், பாசமும் கொண்டவர். இவரை ‘தாஜா’ செய்து மடக்கினார். சி.என்.இராமமூர்த்தியின் பெயரில் தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடனாக வாங்கிய ஒரு மகேந்திரா வேன் மற்றும் நான்கு ஜீப்புகளை, சங்கத்து வேலைக்கு வேண்டும் என்று சொல்லி எடுத்துச் சென்றதுடன், அவள்ளை ‘போர்ஜரி’ செய்து விற்று, பணத்தை இராமதாசே சுருட்டிக் கொண்டார்! தீரன் உள்ளிட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் அனைவரும் அறிந்த விஷயம் இது!
- 1987 செப்டம்பர் 17ம் நாள் நடைபெற்ற சாலை மறியலில் துப்பாக்கில் சூட்டில் பலியான, தடியடியில் மரணமடைந்த மொத்தம் 25 உறவினர் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, வழக்குகளை சந்திப்பதற்காக என்று, நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இராமதாஸ் பெயருக்கு ‘செக்’ மூலமாகவும் ‘டிராப்ட்’ மூலமாகவும் பல லட்ச ரூபாயை அனுப்பினார்கள்! அந்தப் பணம், வன்னியர் சங்கத்துக்கும் வரவில்லை, சாலை மறியல் போரில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்திற்கும் போய்ச சேரவில்லை! பலியான தியாகிகளின் ஆவி, இராமதாசை மன்னிக்குமா?
வன்னியர் சங்கம் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திய போது ‘நமது சங்கத்தை தடை செய்ய அரசு முடிவு செய்யப் போகிறது. எனவே, நாம் உஷாராக இருக்க வேண்டும். முக்கிய தஸ்தாவேஜுகளையும் பணத்தையும் பாதுக்காப்பாக வைக்க வேண்டும், என்ன செய்யலாம்? என்று நரித்தனமாக ஆலோசனைக் கேட்டார், சங்க தலைமை நிர்வாகிகளிடம்! உடனே சங்க நிர்வாகிகள், இராமதாசின் பாதுகாப்புணர்ச்சியை வியந்து பாராட்டி, ‘நீங்களே எங்காவது பத்திரப்படுத்துங்கள்’ என்று, உத்தமர் இராமதாசிடமே பணத்தை ஒப்படைத்தனர்! இதுவரை அந்தப் பணம் இராமதாசிடமிருந்து திரும்பியே வரவில்லை! கோடிகளில் கும்மாளம் போடும் இப்போதாவது அந்தப் பணத்தைக் கணக்கிட்டு, வன்னியர் சங்கத்தில் ஒப்படைப்பாரா?
நமது சமூகத்தை சேர்ந்தவர்கள், இராமதாசின் பிடிக்குள் உள்ள வன்னியர் சங்கம் . பா.ம.க. இரண்டிலும் இருக்கிறார்கள்! இவர்களில் யாராவது ரொம்பவும் பாப்புலரானாலோ, விஷய ஞானத்தோடு செயல்பட்டாலோ இராமதாஸ் சகித்தக் கொள்வதில்லை! இதற்கு சமீபத்திய உதாரணம், பா.ம.க.வில் தலைமை நிலையச் செயலாளராக இருந்த செயல் வீரர் முத்துக்குமார். இவர் வீட்டு திருமணத்திற்கு முதல்வர் கருணாநிதி வந்தார் என்பதாலேயே தலைமை நிலையத்திலிருந்து வடசென்னைக்கு துரத்தப்பட்டார்! அந்த இடத்தில் பத்திரிகையாளர்களைக் கையாளும் திறனற்ற இராமதாசின் எடுபிடி ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார்! இராமதாசை தலைவராக ஏற்றுச் செயல்பட்ட பல தலைவர்கள், அறிஞர்கள், செயல்வீரர்கள், அவராலேயே அவமானப்படுத்தப்பட்டு தூக்கியெறியப் பட்டனர்! பலருக்கு வெட்டு, குத்து, மிரட்டல்கள்! மேலும் பலரை தீர்த்துக்கட்ட பட்டியல் தயாரித்த வைத்துக் கொண்டு பம்பாய் தாதாக்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு அலைகிறார்!
சொந்தங்களையே குறி வைத்து சூறையாடும் கொடூரமான மனிதர் இராமதாஸ்!
- பசுத்தோல் போர்த்தக் கொண்டு நாடகமாடி வரும் சுயநலப் பேர்வழி – இராமதாஸ்! அவரது தலைமையை உதறித் தள்ளுவோம்!
- வன்னியர் சங்கத்திலும், பா.ம.க.விலும் ரத்தம் சிந்திப் பாடுபட்ட உத்தமர்களை சூழ்ச்சி செய்து விரட்டிய வஞ்சனையாளர் – இராமதாஸ்! அவரது தலைமையை ஒதுக்கித் தள்ளுவோம்!
- ஏ.கே. நடராஜன், தீரன் போன்ற நமது சொந்தங்களையே தீர்த்துக் கட்ட பம்பாய் தாதாக்களின் கூலிப்படை மூலம் திட்டமிடுகிறார். கொலை வெறி பிடித்தவர் – இராமதாஸ்! அவரது முகமூடியை கிழித்துக் காட்டுவோம்!
- சங்கத்திற்கும், கட்சிக்கும் சர்வாதிகாரத் தலைவராகி, தன் குடும்பம், தன் பிள்ளை, தன் சம்பந்தி, தன் பழைய உறவுக்காரர்கள் என்று ஒரு வட்டம் அமைத்துக் கொண்டு கோடிகளில் கும்மாளம் போடுபவர் – இராமதாஸ்! அவரது உத்தமர் வேடத்தைக் கலைத்து அம்பலப்படுத்துவோம்!
இனியொரு விதி செய்வோம் – அதை
எந்த நாளும் காப்போம்!
200 லட்சம் வன்னியர்களுக்கென புதியதோர் தலைமையை உருவாக்குவோம்!
டாக்டர் அய்யாவுக்கு சில கேள்விகள்
- பி.ஜே.பி. கூட்டணியில் இருந்த ஜெயலலிதா, தனது கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முப்பதுக்கும், மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் நிறுவனங்களில் வழக்கறிஞர் பொறுப்புக்களைப் பெற்றுத் தந்தார். ஆனால் நீங்கள் ஒரே ஒரு வன்னியருக்கு கூட, மத்திய அரசில் வழக்கறிஞர் பொறுப்பு பெற்றுத் தராமல் போனது ஏன்?
- வன்னிய சமூகத்திற்காகவே வாழ்வதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்கள், பா.ம.க.வில் உள்ள ரவீந்திரன் துரைச்சாமி நாடார் ஒருவருக்கும் மட்டும் மத்திய அரசு வழக்கறிஞர் பதவியை பெற்றுத் தந்தது ஏன்?
- நெய்வேலி சுரங்க நிறுவனத்திற்கு (NLC) தங்களது நிலங்களை கொடுத்துவிட்டு, அனாதைகளாகிவிட்ட பல்லாயிரக்கணக்கான நமது உறவினர்களுக்கு, உரிய நஷ்ட ஈடு – வேலை வாய்ப்பு பெறுத்து தருவதாக விதவிதமான இயக்கம் நடத்திய நீங்கள், அதில் வெற்றி பெற முயற்சிக்காமல் NLC சேர்மேனாக இருந்து, பல கோடி ரூபாய்களை ஊழல் செய்து ஏப்பம் விட்ட பூபதியிடம் பேரம் பேசி, வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு அவரைக் காப்பாற்ற ஜெயலலிதா மூலமாக மத்திய அரசுக்கு நெருக்கடியைத் தந்தது உண்மையா இல்லையா?
- மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் ஒன்றிலாவது ஒரு வன்னியரை கவுரவப் பதவிகளான தலைவர் பதவியோ இயக்குநர் பொறுப்போ பெற்றுத் தராமல் ஒதுங்கிக் கொண்டது ஏன்?
- ‘வேந்தர் பரம்பரை நாம் – நமக்கு ஒரு துணை வேந்தர் பதவியில்லையா?’ என்று முன்பெல்லாம் மூச்சு முட்ட பேசுவீரே, நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக் கழங்கள் உள்ளதே. எதிலாவது ஒன்றில் ஒரு வன்னியரை நீங்கள் துணை வேந்தராக ஆக்கினீரா?
- ‘ஆளுநர், வெளிநாட்டுத் தூதர் பதவிகளில் வன்னியர் ஒருவர் கூட வந்ததுண்டா?’ என்று கொதிப்பீர்களே, இதுபற்றி முயற்சி எடுத்து பிரதமர் வாஜ்பாயிடம் எப்போதாவது பேசியது உண்டா? அந்தப் பதவிகளை வகிக்கும் தகுதி உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ள வன்னியர்களிடம் இருப்பதால், அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களா?
- 1998-ல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த தலித் எழில்மலையும் நீங்களும் ரகசியக் கூட்டணி அமைத்துக் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 320 (முன்னூறுறு இருபது) டாக்டர் சீட்டுக்களை வாங்கி, ‘சீட்’ ஒன்றுக்கு 10 லட்சம், 15 லட்சம் என்று ‘மிட்டாய்’ பெற்றுக் கொண்டு, கும்மாளம் போட்டீர்களே, அதில் ஒன்றிரண்டு சீட்டுக்களையாவது, வன்னியர்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று நினைக்காமல் மறந்தது ஏன்?
- தலித் எழில்மலை, தனது மைத்துனர் மூலமாக ‘நிலா’ டிவி ஆரம்பித்தார். அதில் நீங்கள் பல கோடி ரூபாயை ஒதுக்கி, பங்கு மூலதனத்தை வாங்கியது எப்படி?
- உங்கள் மனைவி திருமதி. சரஸ்வதியும், உங்கள் மகன் டாக்டர் அன்புமணியும் தலித் எழில்மலையும் ஆட்டிப் படைத்து – ஒரு கொத்தடிமை போல நடத்தி, நிழல் மந்திரிகளாக செயல்பட்டு, அடித்த கொள்ளை பற்றி ‘தராசு’ பத்திரிகை அம்பலப்படுத்தியது. நீங்கள் யோக்கிய சிகாமணியாக இருந்தால், ஒரு வழக்கை அந்தப் பத்திரிகை மீது போட வேண்டியதுதானே? ஏன் போடவில்லை? நிஜங்களின் மீது வழக்குகள் போட முடியாது என்பதாலா?
- 1998-99-ல் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சராக இருந்த வாழப்பாடியாரை நெருக்கி, இருபதுக்கும் மேற்பட்ட கேஸ் ஏஜென்சிகளும் 25க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்களும் பெற்றீர்களே, அவற்றை யார் யாருக்காக – எந்த காரணத்திற்காகப் பெற்றுத் தந்தீர் என்ற பட்டியலை வெளியிடுவீரா?
- சங்கத்துக்காக – கட்சிக்காக ஒரு மணி நேரம் உழைக்காத உங்களது மைத்துனரின் இளைய மகனுக்கு பாண்டி 100 அடி சாலையில், இராமச்சந்திரா கேஸ் ஏஜென்சி வந்தது எப்படி?
- திருவள்ளுர் மாவட்டம் – திருவள்ளுரில் ‘பூர்ணிமா ஏஜென்சீஸ்’ பெட்ரோல் பங்க் வந்ததே, அதற்கு நீங்கள் கூறும் காரணம் என்ன? அந்த ஒதுக்கீட்டைப் பெற்றவர், சாலை மறியலில் சிறை சென்ற தியாகியா?
- உங்களது ரகசியத் தூதரும். எடுபிடியுமான நடராஜனுக்கு, சுங்குவார் சத்திரத்தில் ‘A’ கிளாஸ் பெட்ரோல் பங்க் வாங்கித் தந்தது ஏன்? அவர் என்ன சாலை மறியலில் உயிர் நீத்த தியாகிகளின் வாரிசா?
- உங்களது மைத்துனருக்கு வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து, மேல் மருவத்தூல் உடல் ஊனமுற்றோருக்கான கோட்டாவில் கேஸ் ஏஜென்சியைப் பெற்று, அதை வந்தவாசி – திருவண்ணாமலை சேட்டுக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டது ஏன்?
- பெங்களூரில் LPG கேஸ் ஏஜென்சியை, தன்னோடு படித்த டாக்டர் ஒருவருக்கு வேண்டும் என்று கெடுபிடி செய்து வாங்கினீரே, அந்த ஏஜென்சியை பெற்ற பா.ம.க. செயல்வீரர் யார்?
- மேட்டூர் கேஸ் ஏஜென்சியை பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியின் அண்ணன் மனைவிக்கும், புவனகிரி கேஸ் ஏஜென்சியை பு.தா. இளங்கோவனின் மனைவிக்கும் ஒதுக்கியது சரி! அவர்கள் கட்சிக்காக பாடுபட்டவர்கள்! ஆனால் சென்னை துறைமுகத்தின் உள்ளே கொடுக்கப்பட்ட பெட்ரோல் பங்க்கை உங்களது ‘வாரிசு’ டாக்டர் அன்புமணிக்கு அன்பளிப்பாகத் தந்தது ஏன்? அன்புமணி அதை விற்று பல லட்சம் பணம் பார்த்தாரே. இது உண்மையா – இல்லையா?
- வந்தவாசியில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட LPG கேஸ் ஏஜென்சியை, அந்தத் தொகுதி எம்.பி.யான துரை, கபளீகரம் செய்து விட்டார். இதுப்பற்றி உங்களிடம் புகார் வந்தது. மலைவாழ் மக்களை ஏமாற்றிய துரையை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? அதில் அடங்கியுள்ள ரகசியம் என்ன? இதே எம்.பி. வேட்டவலம் பெட்ரோல் பங்கையும் சுருட்டியது தங்களுடைய ஆசியோடா – இல்லையா?
- உங்கள் தலைமையில் நடந்த சாலை மறியல் போரில் உயிர் நீத்த தியாகிகளின் வாரிசுகள் பல பேர், கேஸ் ஏஜென்சி கேட்டு முறையிட்டடிபயே இருந்தார்கள். அவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு, மத்திய அமைச்சராக இப்போது உள்ள சண்முகத்தின் மகனுக்கு LPG கேஸ் ஏஜென்சியை பெற்றுத் தந்தது ஏன்?
- அண்ணாமைலைப் பல்கலைக் கழக நிர்வாகத்தினரை, வன்னியர்களை திரட்டி விதவிதமாக மிரட்டியது ஏன்? பிறகு அந்த நிர்வாகத்திடமே ரகசிய உடன்பாடு செய்து கொண்டு, ஆண்டு தோறும் ஐந்தாறு டாக்டர் சீட்டும், பத்து, பதினைந்து இஞ்சினீயரிங் சீட்டும் கோட்டாவாகப் பெறுவது உண்மையா, இல்லையா? அப்படி பெற்ற சீட்டுக்களில் ஒன்றிரண்டையாவது சாலை மறியல் தியாகிகள் குடும்பத்திற்குத் தந்தது உண்டா? அத்தனை சீட்டுக்களையும் உங்கள் மனைவியும் மகனும் விற்று கோடிகளைக் குவித்தது உண்மையா, இல்லையா?
- திண்டிவனத்தில் ‘எஸ்.ஐ.எஸ்., கூட்டம் என்றால் பயந்து ஓடும் பத்தாம் பசலிக்கு உங்களது ஒரே மகன் அன்புமணிக்கு பெண் பார்த்து கொடுத்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அவரது மகனுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் சீட்டு வாங்கிக் கொடுத்தது என்ன நியாயம்? சமூக முன்னேற்ற சங்கத்தினர் கொதித்துப் போயுள்ளனரே, உங்கள் பதில் என்ன?
- சங்கத்திற்கும், கட்சிக்கும், உங்களுக்கும் விசுவாசமாக இருந்த நமது சொந்தங்கள், தங்களது பிள்ளைகளுக்காக டாக்டர் சீட்டு கேட்டு உங்களை சுற்றிச் சுற்றி வந்தார்கள். அவர்களையெல்லாம் நிமிர்ந்து கூட பார்க்காமல், உங்களது மருத்துவமனையின் காம்பவுண்டராக வேலை பார்த்த ஒரு மாற்று சாதியாரின் மகனுக்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தல் டாக்டர் சீட்டு வாங்கித் தந்த மர்மம் என்ன?
- ஓரிரு வன்னியர் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு நீங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சீட்டு வாங்கித் தந்தது உண்மைதான். ஆனால் அதற்கு உண்டான லட்சங்களை உங்களது மனைவியும், மகனும் வாங்கிப் போட்டுக் கொண்டது உண்மையா. இல்லையா?
- 1996-ம் ஆண்டு மார்ச் இறுதியில் ரூ. 5 லட்சத்தை கட்சியின் தேர்தல் நிதியிலிருந்து எடுத்து கடலூர் TIICல் இருந்த உங்களது கடனை அடைத்து உண்டா, இல்லையா?
- 1996 தேர்தல் முடிந்தவுடனே தேர்தல் நிதியில் எஞ்சியிருந்த கட்சிப் பணம் ரூ 29 லட்சத்தில், ரூ. 5 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை எடுத்து, உங்களது திண்டிவனம் வீட்டை நவீனப்படுத்தி ‘குளுகுளு’ ஏசி வசதியை அமைத்தது ஏன்? இது ஒரு ஊழல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? கட்சிப் பணத்தை தொடக்கூட மாட்டேன் என்று செய்த சத்தியம் மறந்து போனது எப்படி?
- அந்த 23 லட்சம் ரூபாயில் 5 லட்சத்தில் 41 ஆயிரம் ரூபாய் போக எஞ்சிய பணத்தைக் கூட, நீங்கள் மட்டுமே கையொப்பம் போட்டு எடுக்கிறபடி, வன்னியர் சங்கக் கணக்கில், திண்டிவனம் வங்கியில் போட்டுக் கொண்டது எந்த வகை நியாயம்?
- ‘இரண்டு வருடமாக டாக்டர் தொழிலில் வருமானம் இல்லை. விவசாயமும் சரியாக இல்லை’ என்று 1995-96ல் தவித்துக் கொண்டிருந்த நீங்கள் ‘டிக்’ கடனை நேர் செய்ய முடியாமல் தவித்து, கட்சிப் பணத்தில் கடனை அடைத்த நீங்கள், இப்போது மாதத்திற்கு நான்கு முறை டெல்லிக்கு பறக்கிறீர்களே, அது உங்கள் சொந்தப் பணமா? ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் போய்வர ரூ. 15,000 ஆகிறது. நாலு முறை என்றால் மாதம் ரூ. 60 ஆயிரம் ஆகிறது. இந்தச் செலவுக்கான பணம், நீங்கள் ஏற்கெனவே சத்தியம் செய்து தந்தது போல் சொந்தப்பணமா? சமீபத்தில் வந்த பணமா? எந்தப் பணம்?
- டெல்லி சென்றால் கட்சியின் எம்.பி.க்களது, மந்திரிகளது வீட்டில் தங்காமல் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதும், பல லட்சம் ரூபாய் பில்லை தொழிலதிபர்களின் தலையில் கட்டுவதும் ஏன்?
- மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஆண்டிமடத்தில் முழங்கியது நினைவுக்கு வருகிறதா? அரியலூர் – ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள நமது சொந்தங்களை, இந்தியா சிமெண்டஸ், ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தச் சொன்னீர்களே ஞாபகம் இருக்கிறதா? உங்கள் பேச்சை நம்பி, நம் சொந்தங்கள் ஒரு பக்கம் போராட, நீங்கள் ஒரு பக்கம் ரகசியமாக இந்தியா சிமெண்ட்ஸ், ராம்கோ சிமெண்ட்ஸ் நிர்வாகங்களோடு பேரம் பேசி, ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் என்று நான்குமுறை லஞ்சம் பெற்றது எந்த வகை தர்மம்?
- உங்களது கடைசி மகள் கல்யாணச் செலவால் ஏற்பட்ட கடனை அடைக்க, தைலாபுரத்தில் உள்ள நான்கு ஏக்கர் தேக்கு மரத் தோட்டத்தை விற்பதாக நாடகமாடி, இந்தியா சிமெண்ட்ஸ், ராம்கோ சிமெண்ட்ஸ் அதிபர்களிடம் பல லட்சம் ரூபாயை பெற்றது, எந்த அடிப்படையில்? நமது சொந்தங்களின் உரிமைகளை மீட்பதாக நாடகமாடி, அவர்களது நலன்களை ஆலை அதிபர்களின் காலடியில் வைத்து லட்சங்களைப் பெற்ற உங்களது செயல், நீச்ச செயலல்லவா?
- பசுபதி பாண்டியனைத் தூண்டிவிட்டு, சுற்றுச் சூழல் கெட்டு விட்டதாகப் போராட்டம் நடத்தச் சொல்லிவிட்டு, போராட்ட காலத்திலேயே ஸ்டெர்லைட் நிர்வாகத்தோடு உங்களது உறவினர் மூலம் பேரம் பேசியதும், லட்சங்கள் கை மாறியதும் போராட்டத்தைத் தொடராமல் கைவிட்டதும் ஏன்?
- ‘பாலாற்றை பாதுகாப்போம்’ என்றீர்கள், தோல் தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்று நீரில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று வேலூர் மாவட்ட பா.ம.க.வினரை களத்தில் இறக்கிவிட்டு, கடுமையாகப் போராட்டம் நடத்தினீர்கள், போராட்டம் ஒருபுறம் நடக்கும் போதே தோல் தொழிற்சாலை அதிபர்களிடம் பேரம் பேசி, 20 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டீர்கள். டாக்டர் இராமதாஸ் அவர்களே, இது என்னங்க நியாயம்?
- ‘பவானி ஆற்றை பாதுகாப்போம்’ என்று ஒரு பக்கம் சைக்கிள் பேரணி நடத்திவிட்டு, மறுபக்கம் திரை மறையில் விஸ்கோஸ் ஆலை அதிபர்களிடம் உங்கள் மகன் அன்புமணி மூலமாக ரகசிய பேரம் நடத்தி, பெற வேண்டியதைப் பெற்றீர்கள். இந்த அற்புதமான ஏய்ப்புக் கலையை எங்கே கற்றீர்கள்?
- உங்களை மாபெரும் தலைவராக நினைத்து, உடலுழைப்பையும் தந்து, சொத்து சுகங்களையும் இழந்த தளபதிகள் எத்தனை பேர்? அவர்களையெல்லாம், ‘விலை போகிற மாடுகள் இவர்கள்’ என்று, நா கூசாமல் கூறினீர்களே, அவர்களது இன்றைய நிலவரம் என்ன என்று தெரியுமா?
விழுப்புரம் மு. பால சண்முகத்தை உங்களுக்குத் தெரியுமா? அவர் உங்களுக்காக, சங்கத்துக்காக, கட்சிக்காக உழைத்த உழைப்பு நினைவுக்கு வருகிறதா? இப்போது அவரது குடும்பம் தவியாய் தவிக்கிறது. வயது வந்த தன்து பெண்களைக் கூட கட்டித்தர வழியில்லாத கடன்காரனாக, வீடு ஜப்திக்கு வரும் அளவில்தான் வாழ்கிறார்!
வாலாஜா அனந்தலை நடேசன் சங்கத்துக்காக, கட்சிக்காக உழைத்த உழைப்பு எத்தனை? இன்று அவரது குடும்பம், கூலி வேலைக்குப் போனால் தான் அடுப்பு எரியும் என்ற அவல நிலையில் உள்ளது!
அரூர் அருணாசலப் படையாட்சி. இவர் சங்கத்திற்கு, கட்சிக்கும் ‘தினப்புரட்சி’க்கும் பல லட்சம் ரூபாயை வாரி வாரி வழங்கிய வள்ளல். அந்த வள்ளல். உன்னால் புறந்தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டவர். எப்படி? நோய்க்கும், கடனுக்கும் ஆட்பட்டு படுத்த படுக்கையாய் கண்ணீர் விட்டு உன்னை, உமது துரோகத்தை சபித்துக் கொண்டே சமீபத்தில் மரணமடைந்து விட்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
1996 தேர்லுக்கான பா.ம.க.வுக்கு கட்சிக் கொடிகள் தைத்தக் கொடுத்தவர், பா.ம.க. செயல்வீரர் ஈரோடு எம்.பி. வெங்கடாசலம்! அவருக்கு பாக்கியாக ஒரு லட்சம் ரூபாயை இன்றளவும் நீங்கள் தரவில்லை! அதுமட்டுமல்ல, அவரை கட்சியிலிருந்து தூக்கி கிடாசிவிட்டீர்கள். அவர் இப்போது மனம் உடைந்து சபித்துக் கொண்டு வாடுகிறார்!
உங்களது தைலாபுரம் தோட்டப் பண்ணைக்கு அரசின் இலவச விவசாய விதை, கருவி, மருந்து என்று எல்லாவற்றையும் தூக்கிச் சுமந்து வந்து கொடுத்த உழைப்பாளி, செஞ்சி டேப்போ முனுசாமி. இவர் வன்னியர் சங்கத்திற்கு கடுமையாக உழைத்தார். அந்த முனுசாமி, தனது மகனுக்கு ஒரு டாக்டர் சீட்டு கேட்டு, உங்களிடம் கெஞ்சினார். கண்ணீர் விட்டார். ஆனால் நீங்கள் முகம் கொடுத்துக் கூட பேசாமல் விரட்டி விட்டீர்களே! இதெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? ‘குட்கா’ முதலாளிகளின் முகங்கள் தான் இப்போதெல்லாம் நினைவுக்கு வரும். மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டு விட்டு, அட்வான்ஸ் கோடிகளை அழுதுவிட்டு, அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்று தவிக்கும் கல்வி அதிபர்கள் நினைவுக்கு வருவார்கள். நீங்கள் ஏறுவதற்கும் ஏணியாக இருந்த இவர்களின் முகங்கள் உங்களுக்கு எப்படி நினைவுக்கு வரும்?
- திண்டிவனத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் திருமண மண்டபன்ம கட்டுவேன் என்று கூறி, நமது சொந்தங்களின் நெல்லாகவும், பணமாகவும் வசூலித்தீர்கள். இடம் வாங்கினீர்கள், செங்கல்சூளையும் போட்டீர்கள். திருமண மண்டபம் உருவானதா? போட்ட செங்கல்சூளை என்ன ஆச்சு? ‘எனக்கு வசதி வரும் போது எனது சொந்த செலவிலேயே திருமண மண்டபம் கட்டுவேன்’ என்றீர்ககேள், இன்னும் ‘வசதி வரவில்லையா? கிரானைட் தொழிலதிபர் சுப்பா ரெட்டியை மிரட்டி பல லட்சம் ரூபாய் வாங்கியதும், அந்தப் பணத்தில் தைலாபுரம் வசந்த மாளிகையை அமைத்ததும், மாளிகையை நமது சொந்தங்கள் பார்த்து விடாதபடி, பத்து அடி உயர சுவர் எழுப்பிக் கொண்டதும் உண்மையா, இல்லையா?
- வன்னியகுல சத்திரிய சமுதாய நல கல்வி அறக்கட்டளை சென்னையில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நமது சொந்தங்களான தலைவர்களால் அமைக்கப்பட்டது. நீங்கள் தான் இந்த அறக்கட்டளைக்குப் பொறுத்தமான தலைவர் என்று வாழப்பாடியார் முன்மொழிந்து தலைவராக்கினார். இந்த அறக்கட்டளையின் சார்பில் கல்லூரி, பாலிடெக்னிக் கட்ட, பல லட்சம் ரூபாய் வசூலானது. வசூல் நடந்தது. ஆனால் ஒரு நர்சரி பள்ளிக்கூடம் கூட வரவில்லையே ஏன்? ஆனால் உங்களது மகனுக்காக ஒரு மருத்துவக் கல்லூரியை துவக்க, சுமூகமான வேலை செய்கிறீர்களே அது ஏன்?
- ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு 1997 பிப்ரவரி முதல் தேதி நடத்தப்பட்டது. மாநாட்டையொட்டி பேரணியும் நடந்தது. மாநாட்டுச் செலவுக்காக ஈழத் தமிழர்கள் தந்த நன்கொடை 30 லட்சம் ரூபாய், ‘இந்த நன்கொடை லண்டனில் LTTE ஏஜெண்டாக இருந்த லாரன்ஸ் திலகர் மூலம் தாங்கள் தெலைபேசியில் பேசி பெற்றதுதான், இந்தப் பணம் வரவில்லை என்று நீங்கள் புருடா விட்ட போது புலிகளின் தலைமை உமது முகத்தில் உமிழ்ந்ததை மறந்து விட்டீர்களா? ‘புலிகளுக்கே புல்லுக் கட்டு கொடுத்த ஊழல் புலி’ என்று உங்களை வர்ணிக்கலாமா?
- ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்காக பா.ம.க. சார்பில் தமிழக தொழிலதிபர்களிடமும் கட்சியின் வலுத்த நபர்களிடமும் திரட்டப்பட்ட நிதி 35 லட்சம் ரூபாய், மாநாட்டுச் செலவு வெறும் ஒன்பதே கால் லட்சம் ரூபாய். எஞ்சிய 55 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என்ன ஆச்சு டாக்டரே? அது என்னமோ ஆச்சு விட்டுவிட்டுவோம். அந்த மாநாட்டுப் பேரணியில் பங்கேற்க வந்த ஈரோட்டைச் சேர்ந்தவர் நான்கு பேர், வேன் விபத்தில் சிக்கி இறந்து போனார்கள். இறந்தவர்களின் உடல் சென்னை ஜி.எச்.-ல் மூன்று நாட்கள் கிடந்தது கேட்பாரற்று. பேராசிரியர் தீரன் பெருமுயற்சி எடுத்து உடலை ஈரோட்டுக்கு அனுப்பினார். இறந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு வெறும் பத்தாயிரம் கொடுப்பதற்கே மறுத்து விட்டீர்களே, இது எந்த வதை மனிதாபிமானம்?
- சங்கத்துக்காகவும், கட்சிக்காகவும் பாடுபட்ட முக்கியப் புள்ளிகள் உங்களை சந்திக்க தைலாபுரம் தோட்டத்துக் வந்தால் அவர்களுக்கு உங்கள் தரிசம் கிடைக்கிறதா? உங்களின் உதவியாளர் நடராஜன்தான் தரிசனம் தருகிறார். நீங்கள் குவித்து வைத்துள்ள சொத்தில் பங்கு கேட்க வந்தவர்கள் போல விரட்டப்படுகிறார்களே, அது ஏன்?
- ‘தொண்டர்களின் சிரமத்தைப் ப்றி எல்லாம் எள்ளளவும் கவலைப்படாமல், மூச்சுக்கு மூச்சு போராட்டங்கள் நடத்தி, கடைசியிலே வன்னியர்களை பழையபடி குற்றப் பரம்பரையாக்கி விட்டுத்தான் டாக்டர் இராமதாஸ் ஓய்வார் போலிருக்கு’ என்று அடிக்கடி போராட்டம் நடத்தி, நமது சொந்தங்களை வழக்குகளில் சிக்க வைத்த டாக்டர் இராமதாஸ் பற்றி வாழப்பாடி இராமமூர்த்தி ஒரு முறை கூறி ஆதங்கப்பட்டார்.
- வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் நடத்திய போராட்டங்களின் போது ஆயிரக்கணக்கான நமது சொந்தங்களின் மீது போடப் பட்ட வழக்குகளை வாபஸ் பெரும்படி, பேராசிரியர் தீரன், எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் உருக்கமாகப் பேசினார். முதல்வர் கருணாநிதி எல்லா வழக்குகளையும் திரும்பப் பெற்றார். தொண்டர்கள் அடிக்கடி கோர்ட், வழக்கு என்று அலையும் தொல்லைகளிலிருந்து மீண்டனரே என்று, தீரனைப் பாராட்டுவதற்கு பதிலாக கடிந்து கொண்டது ஏன்? காக்காய்க்குத் தெரியுமா எருது வருத்தம்?
- ‘கருணாநிதி காலில் விழாத குறையாக அப்படி கெஞ்சினீர்களாமே. யார் அப்படி உங்களை கெஞ்சத் சொன்னது? கோர்ட்டுக்கு வரும் போரதாவது கட்சியை நம்மாளுங்க நெனச்சிப் பார்த்தாங்க. அதையும் இல்லாம செய்திட்டீங்களே’ என்று தீரனிடம் உங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்தியது, நினைவுக்கு வருகிறதா? ‘நம்ம ஆளுங்க கேசுக்காக பயந்துட்டாங்கன்னு கருணாநிதி நம்மைப் பற்றி இளக்காரமாக நெனச்சிக்குவாரு. கட்சின்னா, போராட்டம், கேசு எல்லாம் வரத்தான் செய்யும்’ என்று அப்போது வீர வசனம் பேசிய நீங்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கமா?
- 03.86 முதல் 1996 வரை நடந்த விதவிதமான வன்னியர் சங்க, பா.ம.க. போராட்டங்களின் போது திட்டமிட்டு முன் கூட்டியே கைது ஆனது எப்படி? உள்ளூர் போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு இப்படி நாடகமாடியது வீர தீரச் செயலா? ‘தடா’ சட்டத்தை நீக்கக் கோரி 1995ல் சென்னையில் போராட்டம் நடந்தது. நீங்கள் முதன்முதலாக போராட்டக் களத்தில் கைது ஆனீர்கள். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் கொசுக்கடிக்கு பயந்து, நெஞ்சுவலி என்று உங்களது மனைவி சரஸ்வதியை விட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கருணை மனு போட்டு, விடுதலையாகி, சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்ந்தீர்களே, உங்களை ஜெயலலிதா மட்டுமல்ல, அரசியல் உலகமே நையாண்டி செய்து கைகொட்டிச் சிரித்ததே, நினைவுக்கு வருகிறதா? ‘விடுதலைப் புலிகளுக்காக ஏழு ஆண்டு என்ன, எழுபது ஆண்டுகள் கூட சிறை செல்லத் தயார்’ என்று உங்களின் ‘வீரவசனம்’ அம்பலப்பட்டு விட்டது பற்றி எப்போதாவது வருத்தப்பட்டது உண்டா?
- 1996 பொதுத்தேர்தலின் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி பா.ம.க.வுக்கு 30 எம்.எல்.ஏ. சீட்டும் 3 எம்.பி. சீட்டும் தருவதாக வாக்களித்தார். அதை அப்படியே மறைத்துவிட்டு தனித்தே போயிட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தது ஏன்? தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க கூட்டணி ஜெயிக்கும், தான் முதலமைச்சராகலாம் என்று ஜெயலலிதா கணக்கு போட்டார். இதன் அடிப்படையில் உங்களுக்கு எம்.ஏ.எம். இராமசாமி மூலம் 3 கோடியே 50 லட்சம் ரூபாயுடன் தூது விட்டார். பேரம் முடிந்தது. அதுமட்டுமா மூன்றாவது அணி உருவானது. அதையும் இரண்டாக உடைத்து வைகோவுக்கு துரோகம் செய்தீர்கள். வாழப்பாடி இராமமூர்த்தி வீட்டை அடகு வைத்து கடன் வாங்கி உங்களுக்கும், உங்களது வேட்பாளர்களுக்கும் லட்ச லட்சமாக கொடுத்தார். நீங்கள் எல்லா கால கட்டத்திலும் ஜெயலலிதாவோடு கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு செயல்பட்டது தானே உண்மை? உங்களது தனிப்பட்ட ஆசை அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள, வன்னியர் சங்கத்தையும், பா.ம.க.வையும் பயன்படுத்தும் நீங்கள் சமூக துரோகியல்லவா?
- சங்கத்துக்காக, கட்சிக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல், வழக்கு, சிறை என்று உழைத்த நமது சொந்தங்கள் பல லட்சம் பேர், இருந்த சொத்துக்களை இழந்து கடன்காரன்களாகவே இருக்கிறார்கள். அவர்களது மனைவி, தாயின் கழுத்தில் தாலி ஒன்றுதான் மிச்சம். ஆனால் அவர்களை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்திய உங்களின் தற்போதைய வாழ்க்கை நிலைமை என்ன? உங்கள் குடும்பத்தாரின் வாழ்க்கை வளம் என்ன?
- நீங்கள் 1998ல் சிம்லா ஏரியில் மனைவி, மக்களோடு குடும்பத்து உறுப்பினர்கள் 35 பேரோடும் ‘போட்’ சவாரி செய்தது நினைவுக்கு வருகிறதா? இவர்களுக்கு எல்லாம் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்தவர்கள் யார் என்று கூற முடியுமா? ஒரு வார காலம் ரிலையன்ஸ் அம்பானியின் அரவணைப்பால் ‘குளுகுளு’ சிம்லா வாழ்க்கை நடத்தியதை பத்திரிகைகள் எழுதித் தள்ளியதே, ஞாபகம் இருக்கிறதா? உள்ளூர் திருவிழாவுக்கே போக முடியாமல் தவிக்கும் சங்கத்து உறுப்பினர்களை, பா.ம.க. தொண்டர்களை நினைத்துப் பார்த்தீரா? 1987க்கு முன் சொந்தமாக டிராக்டர் ஓட்டிய நமது சொந்தங்கள், இப்போது ஏர் ஓட்டக் கூட முடியாமல் தவிக்கும் போது, இராமதாசே உனக்கு ‘குளுகுளு’ சிம்லா வாழ்க்கை ஒரு கேடா?
- ‘கட்சிக்காக பலமுறை சிறை சென்றவர்களை, உழைத்தவர்களை கேட்காமலே திடீர் திடீர் என்று கட்சியிலிருந்து நீக்குவது நியாயமா? இதற்கு டாக்டர் இராமதாஸ் பதில் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று கடந்த ஆண்டு விருத்தாசலத்தில் நடந்த பா.ம.க. செயற்குழுவில் ஒரு கட்சித் தொண்டர் கேட்டர். அவரது கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘எனக்குக் கட்சியும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம். நான் போய் டாக்டர் தொழிலையே பார்த்துக்கிறேன்’ என்று வெட்டிக் கொண்டு நழுவ ஓடியது ஏன்? பிறகு நைசாக ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்?
- வன்னியர்களை குற்றப் பரம்பரை என்று நீதிக்கட்சி ஆட்சி அறிவித்தது. இதை எதிர்த்து ஒட்டு மொத்த வன்னியர் சமூகமும், கொதித்தெழுந்து போராடியது. வென்றது. 1989ல் தி.மு.க. ஆட்சி வன்னியர்கள் ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் அடைத்தது. வன்னியர் சங்கம் கொதித்து எழுந்தது. இப்படி நம்மைப் பழிவாங்கிய எவரும் நம்மவர்கள் அல்ல. வன்னியர்கள் அல்ல. ஆனால் வன்னியருக்காக சங்கம் வைத்து, சங்கத்திற்காக கட்சி வைத்து, தனது சொந்தக் குடும்பத்தை வளமாக்கிக் கொண்டு வாழும் நீங்கள், உங்களோடு கருத்து மாறுபடும் வன்னியர் தலைவர்களை, அறிஞர்களை, உழைப்பாளர்களை வெட்டி வீழ்த்துவதே வேலையாக இருப்பது ஏன்?
- உங்களோடு கருத்து மாறுபட்டு, உங்களது துரோகம் தாளாமல் வெளியேறி, ‘வன்னியர் சிங்கங்கள்’ என்ற அமைப்பை நமது உறவினர்கள் நடத்துக்கிறார்கள். அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும். அந்த அமைப்பில் உள்ளவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று, தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, உங்களது கட்சியின் கடலூர் பொதுக்குழுவில் தீர்மானம் போட்டது ஏன்? பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டது ஏன்? இது பச்சை ஆள்காட்டி வேலையல்லவா?
- தமிழ் சினிமா வரலாற்றில் முதலாவதாகவும், கடைசியாகவும் ஒரு படையாட்சியின் பெருமை பேசும் படம் வந்தது. நமது உறவினர் தங்கர்பச்சான் கேமரா கை வண்ணத்தில் வந்த அந்தப் படத்தின் பெயர் : மறுமலர்ச்சி. இராசுப் படையாட்சியின் கம்பீரத்தை படம் பிடித்த ‘மறுமலர்ச்சி’ திரைப்பத்தை வெளியிடுவதில் துவங்கி, பழனிவேல் படையாட்சி கொலையில் முடிந்தது. வாண்டையார்கள் சாம்ராஜ்யத்தை எதிர்த்து நின்று படையாட்சிகளுக்காக பாடுபட்ட மாவீரன் பழனிவேல் படையாட்சி வெட்டிச் சாய்க்கப்பட்டான். வாண்டையார்களை கைது செய்யும்படி அனைத்துக் கட்சிகளும் அனைத்து சமூகத்தவரும் போராடினார்கள். வாண்டையார் சகோதரர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
- ‘இப்போதுதான், எங்களுக்கு சுதந்திரம் வந்தது’ என்று சிதம்பரம் பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர். அந்தக் கொலைகாரர்களை ஜாமீனில் விடக்கூடாது என்று அரசுத் தரப்பு வக்கீல் இன்றளவும் உறுதியாக இருக்கிறார். ஆனால் வன்னியர்களின் உயிரைக் குடித்துக் கும்மாளம் போட்ட வாண்டையார்களை ஜாமீனில் விடும்படி கடலூரில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் போட்டது ஏன்? தமிழக முதல்வருக்கு சிபாரிசு செய்வது எதற்காக? 1999 பாராளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறையில் பா.ம.க. வேட்பாளர் பு.த. அருள்மொழி, வன்னியர் சங்கத் தலைவர் வேட்பாளர், அவரை வீழ்த்த தீவிரமாக மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஈடுபடுகிறது, எப்படி? என்று லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வெளியிடுகிறது. ஆனால் உங்கள் நிலைப்பாடு என்ன? கீழறுப்பு வேலை செய்து, துரோகம் செய்வது தானா? வன்னியர் சங்கப் போர்வையில், வன்னியர்களின் காவலர் என்ற முகமூடியுடன் நமக்கு எதிரானவர்களுடன் கொஞ்சிக் குலாவுவது ஏன்? இடையில் ஏதாவது பேரம் நடந்ததா? என்ன அந்த பேரம்? அந்த பேரத்தின் மதிப்பு என்ன? உங்களது துரோகத்தின் கனபரிமாணம் தான் என்ன? என்ன?
பு.தா. அருள்மொழியை தோற்கடிக்க முக்குலத்தோர் சங்கம் நோட்டீஸ் வெளியீடு, வாண்டையார் சகோதரர்கள் ஜாமீனில் வெளி வர ‘இராமதாஸ் தேவர்’ முதல்வரிடம் முறையீடு.
அருள்மொழியை தோற்கடித்த மணி சங்கர் அய்யரின் தனி உதவியாளர் பொன்னுசாமி, மத்தியில் அமைச்சராக ‘இராமதாஸ் அம்பேத்கார்’ பிரதமருக்கு பரிந்துரை.
ஆமாம். இப்போது கேட்கிறோம். நீங்கள் யார்? பல நிறம் காட்டும் பச்சோந்தியா? வன்னிய வெள்ளாடுகளை விழுங்க வந்த குள்ளநரியா?
- முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம், தமிழக அரசியலில் நடக்கும் உள்ளடி விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு மிகுதியாக உள்ளவர். நேர்மையாளர். யார் மீதும் காரணமின்றி குறை சொல்லாதவர்.
1996 சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு அவர் டெல்லியிலிருந்து விமானத்தில் வந்தார். அவரோடு அதே விமானத்தில் டாக்டர் இராமதாசின் மகனுக்கு பெண் கொடுத்த ‘பலே’ கிருஷ்ணசாமியும் வந்தார். விமானப் பயணத்தின் போது, ‘தி.மு.க. கூட்டணியில் இராமதாஸ் சேராம தனித்துப் போட்டியிடச் சொல்லி பல கோடி ரூபாயை ஜெயலலிதா கொடுத்ததாகவும் அதை இராமதாஸ் வாங்கிக்கிட்டார் என்றும், ஒரு நம்பத் தகுந்த தகவல் வந்திருக்கு. இதெல்லாம் அசிங்கமான வேலை’ என்று கூறியிருக்கிறார்.
விஷயம் டாக்டர் இராமதாசுக்குப் போனது. அதை அப்படியே அமுக்கியிருந்தால், உண்மையான உள்ளடி விஷயம் யாருக்குமே தெரிந்திருக்காது. ஆனால் ‘உத்தமர்’ இராமதாஸ் என்ன செய்தார் தெரியுமா?
ரயில்வே ஊழியருக்கான பல்லவர் பேரவையின் ஆண்டு விழா அயன்புரத்தில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட இராமதாஸ்….
‘நான் மதிக்கத் தகுந்த சிறந்த தலைவர் எம்.பி.எஸ். அவரே என்னைப் பற்றி இல்லாதும் பொல்லாதும் கூறுகிறார். நான் ஜெயலலிதாவிடம் பல கோடி ரூபாய் வாங்கி விட்டதாகவும், ரகசிய உடன்பாடு செய்து கொண்டதாகவும், எனது உறவினரிடம் கூறியிருக்கிறார். நான் இப்படிச் செய்வேனா? இப்படிச் செய்வது பெற்ற தாயோடும், மகளோடும் உடலுறவு வைத்துக் கொள்வதை விட மோசமானது. அந்தக் கேவலமான செயலை இந்த உடம்பில் உயில் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை இந்த இராமதாஸ் செய்யமாட்டன்…’
என்று பேசிக்கொண்டே போனவர், சட்டென்று தேம்பித் தேம்பி மேடையில் அழுதார்.
இவரது இந்த உருக்கமான உரையையும், தேம்புதலையும் கண்ட பேராசிரியர் தீரனும் கூட்டத்தில் குழுமி இருந்தவர்களும் ‘அச்சச்சோ’ என்று ‘உச்’ கொட்டினார்கள். பல பேர் உணர்ச்சி வசப்பட்டு ‘எம்.பி.எஸ்.’ ஒழிக, என்று கோஷமிட்டார்கள். கடலூரைச் சேர்ந்த வேல்முருகன், மயக்கமடைந்து, மேடைக்கு முன்னால் விழுந்தே விட்டார். நாடகக் காட்சிகள் நடந்து முடிந்த சில நாட்கள் கழித்து, டாக்டர் இராமதாசின் ரகசியக் கட்டளையின் படி போரூர் சண்முகமும் இராமதாசின் ஒரே மகன் அன்புமணியும், ரயில்வே எஸ்.பி.யாக இப்போது இருக்கிற பாண்டியன், ஐ.பி.எஸ். மூலமாக ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் டி.டி.வி. தினகரனை சந்தித்து, இறுதிக் கட்ட பேச்சு நடத்தவும் ஒப்பந்த விவரங்களை இறுதி செய்யவும் சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்குச் சென்றார். தினகரன், ஜெயா டிவிக்கு பாண்டர் வாங்கிய ஊழல் கைது ஆகி, நெஞ்சு வலிக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ள அங்கே ‘அட்மிட்’ ஆகியிருந்தார்.
ஜெயலலிதாவின் ரகசியத் தூதர் தினகரனுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை, பேரம், வெற்றிகரமாக நடக்கிறது. முதல் ரவுண்டு தொகை மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய், செட்டிநாட்டு ராஜா, எம்.ஏ.எம். இராமசாமி மூலமாகக் கைமாறுகிறது.
இந்தத் திரை மறைவு பேரம் பற்றி எதுவும் தெரிந்திராத பா.ம.க. தலைவர் பேராசிரியர் தீரன், தோழமைக் கட்சியின் தலைவரான வாழப்பாடி இராமமூர்த்தியிடம் தேர்தல் நிதி தந்து உதவும்படி கேட்கிறார்.
வாழப்பாடியாருக்கு எல்லா திரை மறைவு பேரமும் தெரியும். அவர் ஒன்றும் தெரியாதவர் போல, ‘டி.டி.வி. தினகரனிடம் பேசிப் பாருங்கள். எல்லா அன்பான ரகசியங்களும் தெரியும், என்று பொடி வைத்துப் பேசினார்.
பேராசிரியர் தீரன், டி.டி.வி. தினகரனை போனில் தொடர்பு கொண்டார். தினகரன் எடுத்த எடுப்பிலேயே, ‘போன வாரம் டாக்டர் இராமதாசோட மகன் அன்புமணி வந்தாரு. அவரிடம் பேசினடி எல்லத்தையும் செட்டில் பண்ணியாச்சு. தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறவும் ம.தி.மு.க. வுடன் கூட்டணி சேராமல் இருப்பதற்கு சேர்த்தே அம்மா ‘10சி’ (10 கோடி) கொடுத்தாச்சு…’ என்று விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டார்.
தீரன் அதிர்ச்சியடைந்தார். அயன்புரம் கூட்டத்தில் டாக்டர் இராமதாஸ் தேம்பி தேம்பி அழுத காட்சி, கண்ணில் படம் படமாக வரிந்தது. இராமதாஸ் பேசிய அந்தக் குரூரமான. பச்சையான கண்ணீர் வசனம், காதில் தீயின் ஜூவாலையுடன் ரீங்காரமிட்டது.
அடுத்த இரண்டு நாளில், தீரனைச் சந்திக்க அ.தி.மு.க. மந்தியாக இருந்த நெல்லிக்குப்பம் தாமோதரன், தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் இருக்கும் தீரனின் பல்லவா லேசருக்கு ரகசியமாக வருகிறார். வன்னியர்கள் மிகுந்த 25 சட்டமன்றத் தொகுதிகளில், பா.ம.க. வேட்பாளர்களை அடக்கி, வாசித்து, வாக்குகளை இரட்டை இலைக்குப் போட ஏற்பாடு செய்யும்படி கூறுகிறார். டாக்டர் இராமதாஸ் கட்டளைப்படி நடந்த இந்த சந்திப்பில் ஜெயலலிதாவின் தூதராக வந்த மந்திரி தாமோதரனின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அமுலுக்கு வருகிறது.
அதற்கு அடுத்த நாள், ‘ஜெயலலிதாவைத் தாக்கி, ஊழலை அம்பலப்படுத்தி தயாரிக்கப்பட்டு, தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விட்ட பா.ம.க. வீடியோ பிரச்சார கேசட்டுகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’ என்று டாக்டர் இராமதாசின் மகன் அன்புமணி கட்சித் தலைவர் தீரனுக்கும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் கட்டளையிடுகிறார்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அத்தனையும் சத்தயமானவை. ‘இல்லை’. அது சுத்தப் பொய் என்று டாக்டர் இராமதாஸ், அவரது குடுமபத்து குலதெய்வமான நல்லாவூர் ஐயனார் சாமியின் முன்பு கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்வாரா? அவருக்கு சங்கோஜமாக இருந்தால் அவரது மகன் அன்புமணியாவது சத்தியம் செய்வாரா?
கடலூல், மணக்குப்பத்தை பூர்வீகமாகக் கொண்டவர். புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வீரர் திரு. தங்கவேல் படையாட்சி, கம்யூனிஸ்ட் தலைவர். மறைந்த நமது சமுதாயச் சுடரொளி எஸ். எஸ். இராமசாமிப் படையாட்சியின் பள்ளித் தோழர். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள். முதல் மகனுக்கு வேலாயுதம் என்று பெயர் வைத்தார். காரணம் தங்கவேல் படையாட்சி முருக பக்தர், இரண்டாவது மகனுக்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான கல்யாண சுந்தரத்தின் பெயரை வைத்தார். மூன்றாவது மகனுக்கு, தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்காகப் போராட்டங்களை நடத்திய, சிறந்த கம்யூனிஸ்ட் தலைவரான சீனுவாசராவ் பெயரை வைத்தார்.
தங்கவேல் படையாட்சியின் மூத்த மகன் வேலாயுதப் படையாட்சி, மெட்ரிகுலேஷன் படித்தவர். சட்டம் படிக்காத சட்ட மேதை. 1978-79லேயே புதுச்சேரியில் ஏ.கே. நடராஜன் நடந்த வந்த ‘ட்ரிபிள் எஸ்’ அமைப்பைத் துவக்கி வன்னியர் மக்களுக்குப் பாடுபட்டவர். பிறகு 1980ல் வன்னிய அடிகளார் தலைமையில் வன்னியர் சங்கம் உருவான போது, புதுவை மாநிலத்தில் வன்னியர் சங்கத்திற்கு அடித்தளம் அமைத்துப் பாடுபட்டார். 1989ல் பா.ம.க. உருவான போது, பா.ம.க.வை பலமாகக் கட்டுவதற்காக உழைத்தார். டாக்டர் இராமதாஸ் அவர்களே இதெல்லாம் உங்களது நினைவுக்கு வருகிறதா?
தங்கவேல் படையாட்சியாரின் மூன்றாவது மகன், சீனுவாசராவ் படையாட்சி. இவர் சர்வதேசப் பார்வையுள்ள முற்போக்கு சிந்தனையுடைய இளைஞர். ‘பசுமைத் தாயகம்’ என்ற அமைப்பை தனது நண்பர் ஞானசேகரனுடன் இணைந்துத் துவக்கி நடத்தி வருபவர். சீனுவாசராவ் படையாட்சி, ஞானசேகரன் ஆபூர்வ இரட்டையர்கள், வாழப்பாடியார் போன்ற உல்ல உள்ளங்களின் நிதி உதவி மற்றும் ஒத்துழைப்போடும், மூன்று கட்டமாமக நூறு நாடுகளில் அதிபர்களையும்; ஐ.நா. பொதுச் செயலாளர்கள் கோபி அன்னன், பூத்தராஸ் பூத்தராஸ் காலி, பெரஸ் தி கெய்யர் ஆகியோரை நேரில் சந்தித்து, உலகச் சமாதானத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலியுறுத்தி, பாராட்டுக்களைப் பெற்றவர்கள். ஐ.நா. சபையில் காலடி எடுத்து வைத்த முதல் வன்னியர், பண்ருட்டி இராமச்சந்திரன். அவருக்கு அடுத்து ஐ.நா. சபையில் 45 நிமிட நேரம் உரை நிகழ்த்தியது. இந்த இரட்டையர்கள் தான். உலகின் 50 நாடுக்ள் இவர்களது சேவையைப் பாராட்டி, தங்கள் நாட்டுக் குடியுரிமையை அளித்து, கௌரவம் செய்துள்ளது. 1987ல் இவர்கள் அமெரிக்காவில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது, இவர்களது சேவையைப் பாராட்டி, கெண்டகி மாநிலம் ‘இன்டியன் பீஸ் சைக்கிளிஸ்டே டே’ என்று 05.10.1987யை அறிவித்து, விழா நடத்தி பெருமை செய்தது. இந்தியர்களின் சேவையைப் பாராட்டி ஒரு அமெரிக்க மாநிலம் ‘விழா நாள்’ அறிவிப்பு செய்தது, இவர்களுக்குத்தான் முதல் என்பதும், இவர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தவர், அண்ணல் காந்தியடிகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 1989 அக்டோபர் 2ல் தான் காந்திஜியின் நூற்றாண்டையொட்டி,‘மகாத்மா காந்தி டே’ என்று அமெரிக்கா அறிவித்தது. மேலும் ‘KEY OT CITY’ என்ற தங்கத் திறவு கோலை இந்த இரட்டையர்களுக்கு அமெரிக்காவின் இருபது நகர மேயர்கள் வழங்கி, கவுரவப் பிரஜையாக்கி, எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்று அமெரிக்க கௌரவித்துள்ளது. ஆயிரக்கணக்கான சர்வதேச அமைப்புகள் இவர்களது நோக்கங்களைப் பாராட்டி, பதக்கங்களையும், சான்றுகளையும் வழங்கியுள்ளது. சுருக்கமாகக் கூறுவதானால், சைபீரியா முதல் சகாரா வரை, அமேசான் முதல் சீனா வரை, இவர்களது கால் தடம் நூறு நாடுகளில் பதிந்துள்ளது. நமது உறவினர் சீனுவாசராவ் படையாட்சியும் அவரது நண்பர் ஞானசேகரனும் உலகத்தின் செல்லப் பிள்ளைகள். சுற்றுச் சூழல் பயங்கரங்களுக்கு எதிராகப் போராட வந்த தேவதூதர்கள்.
இந்த ஆபூர்வ இரட்டையர்களில் ஒருவரான சீனுவாசராவ் படையாட்சி, அவரது தந்தை தங்கவேல் படையாட்சி பற்றியும் அண்ணன் வேலாயுதப் படையாட்சியின் வன்னிய சமூக மேம்பாட்டுக்கான உழைப்பு பற்றியும் டாக்டர் இராமதாசே, உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?
- 1987 தொடர் சாலை மறியலுக்கு பிறகு, ‘மரம் வெட்டி’ என்று சில அரசியல் கட்சிகளுக்கு பல பத்திரிகைகளும் உங்களை இழிவாக எழுதியதும், நீங்கள் கண்ணீர் வடித்து வருந்தியதும், நினைவுக்கு வருகிறதா?
- நமது சமுதாயத் தலைவர் ஒருவர் மீது படிந்துவிட்ட கரையைப் போக்க விரும்பி, சீனுவாசராவ் படையாட்சி தனது நண்பர் ஞானசேகரனோடு திண்டிவனம் வந்து உங்களைச் சந்தித்து 1993 டிசம்பரில் என்பது, நினைவுக்கு வருகிறதா? அந்த சந்திப்பில், உங்களின் கெட்டுப்போன இமேஜை தூக்கி நிறுத்த, தனது ‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் வழியாக திட்டம் வகுத்துத் தந்தது. நினைவு இருக்கிறதா?
- 1994 ஜனவரிக்கும் 1996 நவம்பருக்கும் இடையில் 22 மாத காலம், பா.ம.க.வுக்காகவும் உங்களுக்காகவும் 600க்கும் மேற்பட்ட அரசியல் மற்றும் பசுமைப் புரட்சி தொடர்வான கட்டுரைகளையும் அறிக்கைகளையும், தயாரித்தும், அவற்றை தங்களது சொந்தச் செலவில் ‘ஃபேக்ஸ்’ வழியாக நாடு முழுவதும் உள்ள பத்திரிகைகளுக்கும் தலைவர்களுக்கும் அனுப்பி, பல லட்சம் ரூபாயை செலவிட்டு மகிழ்ந்தனரே, அது நினைவுக்கு வருகிறதா?
- சீனுவாசராவ், ஞானசேகரன் இரட்டையர்களை மேனேஜிங் ட்ரஸ்ட்டிகளாக நியமித்து 22.11.1995 அன்று திண்டிவனத்தில் ‘பசுமைத் தயாகம்’ அமைப்பை ஒரு ட்ரஸ்ட்டாக பதிவு செய்தது நினைவுக்கு வருகிறதா?
- இந்த ஆபூர்வ இரட்டையர்களின் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலமாக ‘பாலாற்றை பாதுகாப்போம்’ போன்ற பல இயக்கங்களும், நடைப் பயணமும் சைக்கிள் பயணங்களும் நடத்தப்பட்டனவே எதற்காக? உங்களுக்குப் பேரும், புகழும் சூழ வேண்டும் என்பதற்காகத் தானே?
- சீனுவாசராவ் தலைமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் போராட்டங்கள் ஒரு பக்கம் நடக்கும் போது, மறுபக்கம் சுற்றுச் சூழல் கெடக் காரணமான ஆலை அதிபர்களிடம் ரகசிய பேரம் நடத்தி, லட்சம் லட்சமாக பணம் பெற்றுக் கொண்டீரே, நினைவுக்கு வருகிறதா?
- உங்களை மாபெரும் மக்கள் தலைவராகவும் பேராசிரியர் தீரனை தங்கள்து உற்சாக வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டு சற்றேறக்குறைய மூன்றாண்டு காலம் பணத்தையும் உழைப்பையும் செலவிட்ட சீனுவாசராவ் திருமண விஷயத்தில் மூக்கை நுழைத்து, எப்படியெல்லாம் சுயநலமாக செயல்பட்டீர்கள் என்று நினைத்துப் பார்த்தீர்களா?
- உங்களை தந்தையாகவும் உங்களது மனைவி சரஸ்வதியம்மாளைத் தாயாகவும் கருதி, சர்வதேச சுற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென்ற சீனுவாசராவ் குடும்பத்தின் நிம்மதியை திட்டமிட்டு குலைத்த உங்களுக்கு, உள்ளம் என்று ஒன்று இருக்கிறதா? இல்லை, கலைஞர் கருணாநிதி குறிப்பிடுவது போல், அங்கே ஒரு பள்ளம் இருக்கிறதா?
- பேராசிரியர் தீரனின் ஒரே மகள் தாமரையை திருமணம் செய்து கொள்ள, சீனுவாசராவ் படையாட்சி விரும்புகிறார் என்று தெரிந்து, மகிழ்ச்சியடைய வேண்டிய நீங்களும் உங்களது மனைவியும் என்ன மாதிரியான சூழ்ச்சிகளையெல்லாம் விதவிதமாகச் செய்தீர்கள்?
- உங்களது தம்பி, கட்டைப் பஞ்சாயத்து சீனுவாசன், முதலியார் குடும்பத்துப் பெண்ணை மணந்தவர். இவரது மகள் அம்மு, டாக்டருக்குப் படித்துக் கொண்டிருந்தார். அம்முவுக்கு மெடிக்கல் ‘சீட்’ வாங்கிக் கொடுத்தவர், வள்ளல் வாழப்பாடியார். அந்த அம்முவை சீனுவாச ராவ் படையாட்சிக்குத் திருமண முடிச்சுப் போட உள்ளுக்குள் திட்டமிட்டிருந்த நீங்களும், உங்கள் மனைவியும், தீரன் மகளை சீனுவாச ராவ் திருமணம் செய்யத் தயாரான போது ரகசியத் திட்டம், ரகசியமாகே தவிடு பொடியாகி விட்டதே என்று, கொதித்துப் போனது தானே உண்மை?
- பேராசிரியர் தீரனுக்கு சீனுவாசராவ் படையாட்சி மாப்பிள்ளையானால், பசுமைத் தாயகம் அமைப்பு தீரனின் பிடிக்குள் வந்துவிடும் என்ற வீணான அச்சமும், தீரன் உங்களது கைப்பிடிக்குள் இருக்கமாட்டார் என்ற கற்பனையும், உங்களை எந்த மாதிரியான குரூரமான வேலைகளையெல்லாம் செய்ய வைத்தது என்று, தொகுத்துப் பார்த்தீர்களா?
- ‘1996 தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவிடம் ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி விட்டேன்’ என்று சீனுவாச ராவ் ஊரெல்லாம் செய்தி பரப்புறான். அவனுக்கு உன் மகளைக் கொடுக்கக் கூடாது. மீறி பெண் கொடுப்பது என்ற நீங்கள் முடிவு செய்தால் உங்களை பா.ம.க. தலைவர் பதவியிலிருந்து நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று பேராசிரியர் தீரனை 1996 இறுதியில் மிரட்டியது ஏன்?
- தான் மதித்துப் போற்றும் தலைவரான நீங்களா, இல்லை தனது மகள் தாமரையின் வாழ்க்கையா என்று, தீரனைப் குழப்ப வைத்து, தீரனை, சீனுவாச ராவ் படையாட்சிக்கு எதிராகக் கிளர்தெழ வைத்து, அற்ப சுகம் கண்டது ஏன்?
- உங்கள் நிர்ப்பந்தம் காரணமாக, உங்கள் மீது கொண்டிருந்த மரியாதையின் நிமித்தமாக, உங்களது உள்ளடியான சுய நல திட்டத்தை அறியாமல் தனது ஒரே மகளது எதிர்காலத்தையே இரண்டாம் பட்சமாக்கும் படி, தீரனை நிர்ப்பந்திக்க உங்கள் செயல், வெட்ககரமானது என்று தோன்றவில்லையா?
- உங்களது தம்பி சீனுவாசனின் மகளை தனக்குக் கொடுக்க நீங்கள் சதித் திட்டம் போட்டு, அதன் அடிப்படையில் எதிரும், புதிருமாக ‘கோள்’ மூட்டிக் கொண்டிருப்பதை அறியாத சீனுவாச ராவ் படையாட்சி, தீரனுக்கு எதிராகத் திரும்பி, தீரனின் மகள் தாமரையை 02.01.1997 அன்று சி.பி.எம். தோழர்களின் துணையோடு திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில், சொந்த, பந்தங்கள் இல்லாமல் எளிமையாகத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்ததே நினைத்துப் பார்த்தீரா?
- உங்களது இரண்டு மகள்களின் திருமணத்தையும் மகன் திருமணத்தையும் உடனிருந்து பாடுபட்டு, கடன் வாங்கியும் நன்கொடை திரட்டியும் நடத்தி வைத்த தீரன் மகளது திருமணத்தை, நல்லபடியாக நடக்க விடாமல், சதிவலை பின்னிய உங்களையும் உங்களது மனைவி சரஸ்வதியம்மாளையும், எந்த சாமி மன்னிக்கும்?
- எப்படியோ ஒரு வழியாக திருமணம் செய்து கொண்ட மணமக்களை மனதார வாழ்த்துவதற்கு பதிலாக அடியாட்களை அனுப்பி சீனுவாசராவ் படையாட்சி, தாமரை தம்பதிகளை அடித்துக் கொல்ல நீங்கள் சதி செய்தும், பாண்டிச்சேரி கம்யூனிஸ்ட் தோழர்களும் பா.ம.க.வினரும் அவர்களுக்குப் பாதுகாப்புத் தந்து உங்களது கொடூரமான திட்டத்தை முறியடித்தது, உங்களுக்கு நினைவு வருகிறதா?
- சீனுவாச ராவ் படையாட்சி, தாமரை மணமக்கள், ஞானசேகரனுடன் விருத்தாசலம் சென்று, பா.ம.க.வின் சொத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் ‘வள்ளல்’ டாக்டர் ஆர். கோவிந்தசாமியை 1997 ஜனவரி 4ம் தேதி சந்தித்து, ஆசி பெற்றனர். ரூ. 25 ஆயிரம் பணத்தைக் கொடுத்து டாக்டர் ஆர். கோவிந்தசாமி வாழ்த்துக் கூறினார். அப்போது தான் நீங்களும் உங்கள் மனைவி சரஸ்வதியும் இந்த இளம் ஜோடிகளுக்கு எதிராக எந்த மாதிரியான சதித்திட்டம் போட்டீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டனர். பேராசிரியர் தீரனை ஒழிக்கவும் சீனுவாசராவ் படையாட்சியை தன் குடும்பத்தின் பக்கம் இழுக்கவும் நீங்கள் போட்ட ‘ஒன் பாயிண்ட்’ புரோக்ராம் அடிபட்டுப் போனதால் ஆக்ரோஷம் அடைந்து என்னவெல்லாம் செய்தீர்கள்.
- 1997 ஜனவரி 15ல் அதாவது சீனிவாசராவ் படையாட்சி, தாமரை திருமணம் நடந்த அன்று 13வது நாளில் உங்கள் மனைவி சரஸ்வதி, தைலாபுரம் தோட்டத்திற்கு சீனுவாசராவ், ஞானசேகரன், தாமரை, தீரனின் தம்பி முறையிலான வக்கீல் செல்வராஜ் (இவர் சரஸ்வதியின் அக்கா மகளை திருமணம் செய்து கொண்டவர்.) ஆகியோரை தைலாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து திடீர் பஞ்சாயத்து நடத்தியது உங்களுக்கு தெரியுமா? அந்தப் பஞ்சாயத்தில் பேசப்பட்ட விஷயம் என்ன? ‘இந்த திருமணத்தை நாங்க ஏத்துக்க முடியாது. டாக்டரோட (இராமதாசோட) தம்பி சீனுவாசன் இப்படித்தான் (எப்படித்தான்?) யாரையும் கேக்காம திருமணம் செய்துக்கிட்டப் 15 வருஷம் அவரை ஒதுக்கி வெச்சிட்டோம். ஐம்பது தலைகட்டும் உங்க திருமணத்தை எதிர்க்குது…’ என்று சரஸ்வதியம்மாள் எகிறி குதித்தது உங்களுக்குத் தெரியாதா?
- உங்கள் மிரட்டலுக்கு உங்கள் மனைவியின் கெடுபிடிக்கும் அஞ்சாமல் பயணப்பட சீனுவாச ராவ் – தாமரை இளம் ஜோடிகளுக்கு திருமண வரவேற்பையாவது நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு பாண்டிச்சேரி மேரியில் 28.01.1997ல் நடப்பதாக இருந்தது. அழைப்பிதழ்களும் அச்சாகிவிட்டன. தீரனும், சீனுவாசராவ் பக்கம் நின்றார். அப்போது என்ன செய்தீர்கள்? அந்தத் திருமண வரவேற்வு விழாவே நடக்கக்கூடாது என்று சதி செய்தீர்கள்? மணமக்களையும், தீரனையும் மிரட்ட, பசுபதி பாண்டியனை நியமித்தீர்கள். இந்த உங்களது செயலை பாண்டிச்சேரி பா.ம.க. சொந்தங்களும் தமிழ்நாட்டு பா.ம.க. புள்ளிகளும் கூட கடுமையாக விமர்சித்தது, உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? உங்களது இந்தக் கொடூரமானச் செயரை என்னவென்று குறிப்பிட்டு வர்ணிப்பது?
- சீனுவாசராவ் படையாட்சி, திறமையாளர் மட்டுமல்ல. நேர்மையாளரும் கூட. அதற்கு ஒரே சான்று 1996 தேர்தல் நிதியாக ஜெயலலிதா கட்டளைப்படி ரகசியமாக எம்.ஏ.எம். இராமசாமி கொடுத்த பணத்தின் ஒரு பகுதியான 2 கோடி ரூபாய் + இந்தியா சிமெண்ட்ஸ் கொடுத்த 50 லட்சம் ரூபாய் + ராம்கோ சிமெண்ட்ஸ் கொடுத்த 50 லட்சம் ரூபாய் + துண்டு துண்டாக வாழப்பாடியார் மார்க்கத்திலும் வந்த ஒரு கோடி ரூபாய், ஆக மொத்தம் 4 கோடி ரூபாயை பா.ம.க. வேட்பாளர்களுக்கு, உங்களது கட்டளைப்படி தனது பாண்டிச்சேரி வீட்டில் வைத்துப் பிரித்துக் கொடுத்து, வவுச்சர் போட்டு, கையெழுத்து வாங்கி, கணக்கு எழுதியவர் சீனுவாசராவ்தானே? நீங்கள் கொடுத்த 4 கோடி ரூபாயை நாணயமாக வேட்பாளர்களுக்குக் கொடுத்து எஞ்சியிருந்த 27 லட்சம் ரூபாயை உங்களிடம் ஒப்படைத்தவர் தானே சீனுவாச ராவ்? தேர்தல் செலவில் கணக்கெழுதச் சொல்லி உங்கள் மனைவி 5 லட்சம் ரூபாயைப் பெற்றது உண்டா இல்லையா? அந்தப் பணத்தை கடலூர் ‘டிக்’ ஆபீசில் கடனுக்காக 1996 மார்ச்சில் செலுத்தியது உண்டா, இல்லையா? எஞ்சிய 27 லட்சம் ரூபாயில், 20 லட்சம் ரூபாயை வன்னியர் சங்கக் கணக்கில் போட்டுவிட்டு, ஏழு லட்சம் ரூபாயை எடுத்து, உங்களது திண்டிவனம் வீட்டை புதுப்பித்துக் கட்டிக் கொண்டது உண்மையா, இல்லையா? நேர்மையாளர் சீனுவாசராவ் படையாட்சியை நிம்மதியாக வாழ விடாமல் சூழ்ச்சி வலை பின்னியது தருமமா?
- உலகம் சுற்றிய வாலிபர்களை சீனுவாசராவ் படையாட்சியும், ஞானசேகரனும் உருவாக்கிய பசுதைத் தாயகம் அமைப்பை இப்போது கபளீகரம் செய்து கொண்டு, நாளேடுகளில் இரண்டு முழுப் பக்க விளம்பரங்களை வெளியிட்டு உங்கள் அன்புமகன் அன்புமணிக்கு அரசியல் உலா நடத்துவது ஏன்? என் வாரிசுகள் கூட, பொது வாழ்க்கைக்கு வரமாட்டார்கள் என்று அப்போது செய்த சத்தியம் இப்போது காற்றில் பறப்பது ஏன்?
- உலகம் அறிந்த சுற்றுச்சூழல் அறிஞர் சீனுவாச ராவ், தனது தம்பிக்கு மாப்பிள்ளையாக வேண்டும் என்று நீங்கள் சதித் திட்டம் போட்டீர்கள். அது, நல்லாவூர் அய்யனார் சாமியின் கருணையாலும் திண்டிவனம் ஆஞ்சநேயரின் அருளாலும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. உங்களின் சதிச் செயலுக்கு தீரன் இரண்டு கெட்டானாகி உடன் பட்டிருந்தும் கூட, உங்கள் சதி இயற்கையால் தோற்றுப் போனது. ஒரு கட்டத்தில் 1997 ஜனவரி 4ம் தேதிக்கு பிறகு தீரன் நிமிர்ந்து நின்றார். நீங்கள் வெகுண்டு எழுந்தீர்கள். பேராசிரியர் தீரனை பா.ம.க.விலிருந்து வெளியேற்ற மீனம், மேஷம் பார்க்கத் தயாரானீர்கள். 1997 ஜனவரி 4க்குப் பிறகு பேராசிரியர் தீரனுக்கு எதிராக கட்சிக்குள் ஒரு கட்சி கட்டினீர்கள். 1998 தேர்தல் சமயத்தில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகப் பேசியதைக் காரணம் காட்டி ஜெயலலிதாவோடு பேரம் பேசி தீரனை வேரறுத்தீர்கள். 20 வருட காலம் சர்வ பரித் தியாகம் செய்த பேராசிரியர் தீரனை, உங்களது மூளையாகவும் மூல பலமாகவும் இருந்து வந்த தனது மகள் தாமரையையும் மகன் குட்டிமணியையும் தெரு முனைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி இயக்கப் பாடல்களைப் பாட வைத்த தீரனை, அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த சதி செய்தீர்கள். இன மானக் காவலருக்கு இதுவா அழகு? சொந்தங்களையே சூறையாடும் கொடுங்கோன்மைக்கு ‘இனமானக் காவல்’ என்றா தமிழ் அகராதி கூறுகிறது?
- ஞானியார் அடிகள் என்று ஒரு ஆன்மீகப் பெருமகனார் கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு தமிழகத்தில் நல்ல பேரும், புகழுடன் வாழ்ந்தார். இவர் பிராமணரல்லாதவர். வாழப்பாடியாருடன் படித்தவர். நாத்திகவாதியான தந்தை பெரியார் ஒரு சமயம் கடலூர், திருப்பா திருப்புலியூர் ரயிலடியில் ஞானியார் அடிகளின் காலில் தடார் என்று விழுந்து வணங்கினார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் சூறாவளிச் செய்தியாக பரவியது. எதிர்ப்பும், கண்டனமும் பரவலாக வந்தது. சில நாட்கள் இடைவெளி விட்டு தந்தை பெரியார் தனது நிலையை இப்படி விளக்கினார்.
- ‘நான் பச்சைத் தமிழனாகிய ஞானியாரடிகளின் காலில் விழுந்தது உண்மைதான். நான் அவரது காலில் விழுந்து வணங்குவதைப் பார்தது திருப்பா திருப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்த 30, 40 பேர் அவரது காலில் விழுந்து வணங்கினார்கள். எனக்கு சந்தோஷமாக இருந்தது. பார்ப்பன சாமியார்களின் காலில் விழுவதை விட, தமிழ்ச் சாமியார் காலில் விழலாம். இந்த உணர்வு, எல்லா தமிழனுக்கு வரவேண்டும். என் கொள்கை எனக்கு நண்பர் ஞானியாரடிகளின் கொள்கை அவருக்கு உங்களுக்குத்தான். தமிழன் உயர வேண்டும் என்ற உணர்வு வேண்டும். அதற்காகத்தான் அதை உணர்த்தத்தான் நான் அப்படி நடந்தேன்’ இவ்வாறு கூறிய தந்தை பெரியார், தவத்திரு குன்றக்குடி அடிகளாரை தனது இனிய நண்பராகக் கருதி, அவரை சாதி ஒழிப்பு மாநாடுகளில் பேச வைத்து, மகிழ்ச்சியடைந்ததும் உண்டு.
ஆனால்…
தந்தை பெரியாரின் படத்தைப் போட்டு கட்சி வளர்த்த நீங்கள் கோடான கோடி மக்களால் உலகம் முழுவதும் நேசிக்கப்படும் ‘ஆதிபராசக்தி’ பங்காரு அடிகளார் விஷயத்தில் எவ்வளது நடந்த கொண்டீர்கள்? 1988-89ல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக்கில் உங்களது சகலையின் மகனுக்கு ஒரு ‘சீட்’ கேட்டீர்கள். ஏற்கெனவே இரண்டு சீட்டுகளை உங்களுக்கு சிபாரிசுடன் வந்தவர்களுக்குத் தரப்பட்டு விட்டதாலும், சிபாரிசு, காலம் கடந்து வந்ததாலும் உங்களது புதிய கோரிக்கையை ஏற்க இயலாத நிலையில் நிர்வாகம் இருந்தது. உங்களின் சகலையின் மகனுக்கு ‘சீட்’ இல்லை. உங்களுக்கு பங்காரு அடிகளார் மீது ஆத்திரம் மூண்டது. 1989, 1991 தேர்தல் சமயம் தேர்தல் நிதி கேட்டு பங்காரு அடிகளாரை நச்சரித்தீர்கள். அவர் ஆகா, ஓகோ அரசியல் கட்சிகளுக்கே தேர்தல் நிதி தருகிற பழக்கம் இல்லாதவர். தேர்தல் நிதி கேட்டு மிரட்டியவர்களை, செவ்வாடையால் துரத்தியடித்து, நிமிர்ந்து நின்ற ஆன்மீகப் பேரறிவாளர். அப்படிப்பட்ட நமது உறவினரை மிரட்டுவதற்காக நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்?
- பங்காரு வட்டாரத்தில் கள்ள நோட்டு நடமாகிறது…
- வன்னியர் நிலங்களை பங்காரு அபகரித்தான்…
- மேல்மருவத்தூரில் கற்பழிப்பு, கொலை எல்லாம் நடக்குது…
- இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று மேல்மருவத்தூர் பகுதியைச் சுற்றியுள்ள மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செங்கற்பட்டு நகரங்களில் பா.ம.க. கூட்டம் நடத்தி, கீழ்த்தரமாக பேசி, பங்காரு அடிகளாருக்கு எதிராக செங்கற்பட்டு மாவட்ட பா.ம.க. செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் சி.கோ. மணியன் போன்றவர்களைத் தூண்டிவிட்டு, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களைத் தாக்கச் சொன்னதெல்லாம் நினைவு இருக்கிறதா?
- உனது இந்த இழி செயலை, தமிழகத்துலுள்ள லட்சோப லட்சம் ஆதிபராசக்கித பக்தர்கள் அறிந்து உனக்கு ‘சாபம்’ கொடுத்தனரே நினைவு இருக்கிறதா?
நீதி கேட்டு நெடும் பயணம் வந்த வைகோவுக்கு பங்காரு அடிகளார் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், நமக்கு சல்லிக் காசு தரவில்லை என்றும் கடை கட்டி, பா.ம.க. தொண்டர்களை, பங்காரு அடிகளாருக்கு எதிராக உசுப்பி விட்டீரே… நினைவு இருக்கிறதா? தமிழ்ச் சாமியார் ஞானியாரடிகளின் காலில் விழுந்து, வணங்கி தமிழனை ஆதரித்த தந்தை பெரியார் பெயரைச் சொல்ல உனக்கு என்ன யோக்கியதை? பங்காரு அடிகளார் பச்சைத் தமிழன் மட்டுமல்ல. அவர் நமது உறவினார். அவரையே மிரட்டிப் பார்த்து சுகம் கண்டி நீயா, வன்னியர் சமூகக் காவலர்? நரகல் நடையில் பங்காரு அடிகளாரை ஊர் ஊராக விமர்சித்த உன்னுடைய இப்போதைய நிலை என்ன? நீயும் உனது மகன் அன்புமணியும், அடிகளாரின் காலில் விழுந்து வருடா வருடம் ‘சீட்டு’ வாங்கி, குஷாலடிப்பது உண்மையா, இல்லையா? ஆயிரம் கண் படைத்த ஆதிபராசக்தியின் கண்களுக்கு இது தெரியாமலா இருக்கும்? அதற்கான தண்டனை கிடைக்காமலா போகும்?
- விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூண்களில் ஒருவர் கிட்டு. இவர் சந்தேகமானச் சூழ்நிலையில் இந்தியக் கடல் எல்லையில், கப்பலில் இறந்தார். இதையொட்டி மத்திய அரசைக் கண்டித்து கண்டனப் பேரணி ஒன்றிற்கு பா.ம.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில போலீஸ் அனுமதி மறுத்தது. பேரணியை எப்படியாவது நடத்துங்கள் என்று வலியுறுத்துவதற்காக, விடுதலைப்புலிகளின் லண்டன் பொறுப்பாளர் திலகர், உங்களை பத்துக்கும் மேற்பட்ட தடவை லண்டனிலிருந்து திண்டிவனத்திற்கு, உங்களுக்கு போன் செய்தது உண்மையா, இல்லையா? வீட்டில் இருந்து கொண்டே திலகருக்கு டேக்கா கொடுத்து நழுவிக் கொண்டது ஏன்? ‘இவனுங்க பேச்சைக் கேட்டு பேரணி நடத்திட்டு கோர்ட்டு, கேசு, ஜெயில்னு எவன் அலையுறது? என்று பேராசிரியர் தீரனிடம் புலம்பியது ஏன்? புலி வேஷம் போட்டு, புலிகளிடம் பணம் பறித்துக் கொண்டு, புலிகளுக்கே ‘அல்வா’ கொடுத்தது ஏன்?
- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகத்தை எதிர்த்து ‘பூட்டுப் போட்டுப் பூட்டும் போராட்டம்’ ஒன்றை பா.ம.க. சார்பில் 12.02.92ல் நடத்தினீரே, நினைவிருக்கிறதா? போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கை என்ன ஆச்சு? அது மண்ணாப் போச்சு. ஆனால் 1993ல் 15 இஞ்சினீயரிங்க சீட்டுக்கள், 7 எம்.பி.பி.எஸ். சீட்டுக்கள், 4 எம்.பி.ஏ. சீட்டுக்கள், 4 பி.டி.எஸ். சீட்டுக்கள், 3 அக்ரி சீட்டுக்கள் என்று அதே பல்கலைக் கழகத்திடம் ‘கோட்டா’ பெற்று அதையெல்லாம் வெளியாருக்கு விற்று இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக சுருட்டியது உண்மையா, இல்லையா? வருடந்தோறும் இதே பாயில் ‘ஸ்பெஷல் கோட்டா’வை எம்.ஏ.எம். இராமசாமியிடம் பெற்று, ஆண்டுக்கு பல கோடி சுருட்டுவது எந்த வகை நியாயம்?
- இராமசாமி உடையாருக்கு சொந்தமான இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை, தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று 03.08.92ல் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தியது நினைவிருக்கிறதா? அந்தக் கல்லூரி விஷ விருட்சம் என்றீர். இராமசாமி உடையாரை ‘சாராய உடையார்’ என்று கேலி பேசினீர். பிறகு, அதே சாராயத்திடம் ரகசிய பேரம் நடத்தி 4 எம்.பி.பி.எஸ். ‘சீட்டு’ வாங்கினீரே, அதை மனைவி, மகன் மூலமாக விற்றுப் பதுக்கிக் கொண்டீர் டாக்டரே, இது எந்த வகை நியாயம்?
- பாண்டிச்சேரியில் 1989, 1991, 1996 ஆகிய மூன்று முறை பா.ம.க. வேட்பாளராகப் போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் பத்து லட்சம் ரூபாய் வீதம் 30 லட்சம் ரூபாயை இழந்தவர். நமது சொந்தம் திருமதி. பவானி மதுரகவி, தனித்துப் போட்டியிட்ட போதெல்லாம், திருமதி. பவானியை நிறுத்தி அவரை ஓட்டாண்டியாக்கிய நீங்கள் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிட்ட போது அவரை ஒதுக்கித் தள்ளியது ஏன்? பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் உங்களின் மருமகன் தன்ராஜ் வழியாக கைமாறிய ரூ. 50 லட்சம் தான், 1999ல் மீனவர் டாக்டர் இராமதாசை வேட்பாளராக்கியது என்று உங்களைப் பற்றி பாண்டிச்சேரி மாநில பட்டாளிகள் புகார் கூறுகிறார்களே. அது உண்மையா? காலம் காலமாக கட்சிக்காக உழைத்த திருமதி. பவானி, திருவரசன், இராஜசேகரன், நீதிபதி கோவிந்தராஜன் எல்லாம் மறந்து போனதன் மர்மம் என்ன? 60 சதம் வன்னியர் வாழும் மாநிலம் என்றும், 2001ல் பா.ம.க. ஆட்சி என்றும் நீங்கள் முழக்கமிடுவதெல்லாம் ஒரு நாடகமா என்று பாண்டிச்சேரி சொந்தங்கள் கொந்தளித்து நிற்பது, உங்களுக்குத் தெரியுமா உண்மையா, இல்லையா?
- தமிழக அரசியல் கட்சிப் பத்திரிகை வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத் 28 ஆயிரம் பிரதிகள் விற்பனையான ‘தினப்புரட்சி’ நாளிதழ், பணம் இல்லாமலா நின்று போனது? உங்கள் மனம் இல்லாததால் தான் அது நிறுத்தப்பட்டது. 1991ல் பா.ம.க.வுக்கு நான்கு எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். அவர்களின் சட்டமன்றப் பேச்சுக்கள் பத்திரிகையில் முதலிடம் பெற்றது. ஆசிரியர் தீரனின் தலையங்கமும், பெட்டிச் செய்திகளும் எல்லாத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது. ‘டான்சி ராணி’ தொடரை கவிஞர் பங்குனி உத்திரன் எழுதினார். இதையெல்லாம் பார்த்து பெருமைப்பட வேண்டிய நீங்கள், பேராசிரியர் தீரனைக் கடித்து கொண்டதுதானே உண்மை? ‘என் பேச்சைப் போட பல பத்திரிகைகள் இருக்கு. என் அறிக்கையை எல்லா ஏடுகளும் வெளியிடுகின்றன. நமக்கெதுக்கு தனியா ஒரு நாளேடு?’ என்று பேராசிரியர் தீரனிடம் சொல்லி ‘தினப்புரட்சி’யின் மூச்சை நீங்களே நிறுத்திய வரலாறு உண்மையா, இல்லையா?
- ‘தினப்புரட்சி’க்கு நிதி கொடுத்து உதவியவர்கள் ‘வள்ளல்’ என்று குறிப்பிட்டு தினப்புரட்சியில் பட்டியல் வெளியிட்டீரே, நினைவு இருக்கா? 100, 200, 500, 1000 லட்சம் என்று நிதி வழங்கிய நமது சொந்தங்கள், பத்தாயிரத்திற்குத் மேல். அவர்களில் எத்தனை பேர் உங்களது தொடர்பில் இப்போது இருக்கிறார்கள்? அந்தப் பழைய வள்ளல்களில் பல நூறு பேர், புதிய ஓட்டாண்டிகளாகியிருப்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் யோக்கியதையைப் புரிந்து கொண்டு ஓடி ஒதுங்கிய நமது சொந்தங்கள் எத்தனை ஆயிரம் பேர்? அந்தப் பட்டிலை உங்களது புதிய உறவுகளின் அனுமதியோடு வெளியிடுவீர்களா?
- ‘பசுதைத் தாயகம்’ அமைப்பின் நடவடிக்கைகளில் 1999 தேர்தலுக்கு முன்பு உங்கள் மகன் அன்புமணி பங்கேற்றது உண்டா? அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்தது உண்டா? போராட்டங்களில் பங்கேற்றது உண்டா? பிறகு எப்படி ‘அன்புமணி ஏழு வருடமாக பசுமைத் தாயகத்தின் தலைமையேற்று சமூக சேவை செய்து வருகிறார்’ என்று ‘கப்சா’ விடுகிறீர்கள்?
- உங்களின் அன்பு மகன் அன்புமணியை அரசியல் களத்தில் நைசாக இறக்கி எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற பதவியில் அமர்த்தத்தானே இப்படி அந்தர் பல்டி அடிக்கிறீர்கள்.?
- அண்மையில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது மீனவர் இராமதாசுக்காக கருணாநிதியிடடம் கெஞ்சியது ஒரு பக்கம், உங்கள் மகனை ராஜ்யசபா எம்.பி.யாக்க பிரதமர் வாஜ்பாயடம் மண்டியிட்டது இன்னொரு பக்கம். இது உண்மையா, இல்லையா?
- வன்னியர் சங்கம் துவங்கிய 1980 முதல் பா.ம.க. துவங்கிய 1989 முதல் 1999 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வருகிற நாள் வரை சங்கத்திற்கும், கட்சிக்கும், தினப்புரட்சிக்கும், உங்கள் குடும்பத்திற்கும், பாசப் பொழிவோடு விதவிதமாக அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் வாழப்பாடியாரை திட்டமிடு கவிழ்த்தது பச்சை துரோகம் மட்டுமல்ல. கொச்சையான துரோகம் அல்லவா?
- வேலூர் மாவட்ட ‘ட்ரிபிள் எஸ்’ அமைப்பின் மாணவர் அணியின் அமைப்பாளராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்ட துடிப்புமிக்க நமது சொந்தம் ச. கார்த்திக்கேயன், வன்னியர் சங்கத்தை வேலூர் மாவட்டத்தில் நிலை நிறுத்த, 1984ம் ஆண்டு உங்களை அழைத்து வேலூர் இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், வாலாஜா நகரங்களில், ஒன்றியங்களில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் வன்னியர் சங்கக் கொடியேற்று விழாக்களை நடத்தியவர். பா.ம.க. துவக்கப்பட்ட பிறகு அதிலும் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டவர். பண்ருட்டி இராமச்சந்திரனை நீங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றிய போது, இவரும் பண்ருட்டியாருடன் சென்றார். பண்ருட்டியாரின் மக்கள் நல உரிமைக் கழகத்தின் மாநில தொழிற் சங்க செயலாளராக இருந்தவர் ‘BHEL’ ச. கார்த்திகேயன். ‘பெல்’ வருமானத்தையும் நிலம் விற்ற பணத்தையும் 1983 முதல் 1995 முடிய உங்களுக்காக செலவிட்ட ச. கார்த்திக்கேயன். அவர் பண்ருட்டியாருடன் சென்ற ஒரே காரணத்துக்காக, 1996 மத்தியில் இராணிப்பேட்டை முத்திக்கடை பகுதியில் தி.மு.க. நடத்திய இட ஒதுக்கீடு பாதுகாப்புப் பொதுக் கூட்டத்திற்கு சென்ற போது, பா.ம.க.வினரைத் தூண்டி விட்டு, ச. கார்த்திகேயனை கொலை செய்ய திட்டமிட்டீர்கள். கொலை முயற்சியிலிருந்து தப்பித்து, பலத்த உருட்டுக்கட்டை அடிகளுடன், வேலூர் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் கிடந்தாரே? நினைவு வருகிறதா? அவர் உங்கள் மீது இராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாரே நினைவு திரும்புகிறதா? இப்போதும் அவரைத் தீர்த்துக் கட்ட கூலிப் படைகளின் மூலம் நீங்கள் திட்டமிட்டிருப்பது ஏன்?
- ‘கரவொலி’ கதிரவன் என்ற திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த பா.ம.க.வின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாரை நினைவு இருக்கிறதா? உங்களின் புகழ் பாடித் திரிந்த சண்டமாருதப் பேச்சாளரான கதிரவனை, அவர் பண்ருட்டியாருடன் விலகிச் சென்று விட்ட காரணத்திற்காக, 1996 மத்தியில் ‘பெல்’ கார்த்திகேயனுடன் துரத்தித் துரத்தித் தாக்கினீர்களே நினைவுக்கு வருகிறதா? தப்பி ஓடிவிட்ட கதிரவனை மீண்டும் குறி வைத்து நீங்கள் ஏவி விட்ட அடியாட்கள் 1997 துவக்கத்தில் சென்னை கடற்கரை சாலையில் வண்டியை ஏற்றிக் கொன்று போட்டனரே, இது நினைவுக்கு வருகிறதா? ஆர்ப்பாட்ட முழக்கமிட்டு பத்தாண்டுகள் உங்களுக்காகப் பாடுபட்ட ‘கரவொலி’ கதிரவன், அநாதைப் பிணமாக சென்னை மருத்துவமனையில் கிடந்தானே, அவனது ஆவி உங்களைத் துரத்தாதா?
- வேலூர் மாவட்டத்தில் இஞ்சினீயராக நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிய திண்டிவனத்தைச் சேர்ந்த எம். குபேரன் என்பவரை நினைவு இருக்கிறதா? வேலூர் மாவட்டத்தில் உள்ள வன்னிய குல சத்திரியர் சங்கப் பொறுப்பாளர்களையும், கார்த்திகேயன் போன்ற இளைஞர்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன், வன்னியர் சங்கத்தை வேலூர் மாவட்டத்தில் வேரூன்ற வைத்தாரே, நினைவு இருக்கிறதா? அவர் மின்சாரம் தாக்கி இறந்து போனார். அவரது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று உங்களுக்கு தோன்றாமல் போனது ஏன்?
- ‘திருத்தணி மாவீரன்’ என்று நீங்கள் உற்சாகமாகக் குறிப்பிடுவீர்களே, அந்த இரங்கநாதனை உங்களுக்கு நினைவு இருக்கிறதா? உங்களுக்காக, சங்கத்திற்காக, பா.ம.க.விற்காக கைப்பணத்தை இழந்து, போலீஸ் தொல்லைகளையும் வழக்குகளையும் இன்முகத்துடன் சந்திக்க அந்த திருத்தணி மாவீரன் இரங்கநாதன் பண்ருட்டியாருடன் சேர்ந்துவிட்ட ஒரே காரணத்துக்காக, அவரது ரைஸ்மில்லையும், வீட்டையும் சுக்குநூறாக அடித்து, உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தினீர்களே இது என்ன நியாயம்?
- பா.ம.க. தலைமை நிலையச் செயலாளராக இருந்தவர், பா. செந்தமிழ்ச் செல்வன். பல போராட்டங்களிலும் பங்கேற்ற செயல் வீரர்.வந்தவாசி எம்.பி. தொகுதியில் பா.ம.க. சார்பில் தனித்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்து ஏழாயிரம் வாக்குகள் பெற்றவர். இவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் உங்களது சுயநல கோரிக்கைகளை ஏற்று லட்சம் லட்சமாக அழுது தீர்த்து வைக்கும் வசதியில்லாதவர். எனவே கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிட்ட போது, அவரை ஒதுக்கி விட்டு, எடுபிடி, ஏவல் வேலை செய்கிற ஒரு தற்குறியை எம்.பி.யாக்கி விட்டீர்கள். கொள்கை வீரனான செந்தமிழ்ச் செல்வன், இப்போது அனாதை ஆனந்தனாக்கப்பட்டு உங்கள் நிழலில் கிடக்கிறார். இது என்ன தருமம் என்று எங்களுக்கு கூற முடியுமா டாக்டரே?
- அழகு சொட்டச் சொட்டப் பேசி மக்களை கவரும் திறமையாளர், வழக்கறிஞர் குணபாலனை உங்களுக்கு நினைவு இருக்கிறதா டாக்டரே? அவர் இப்போதும் உங்களோடுதான். உங்களுக்கு விஸ்வாசமாகத்தான் இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராகும் திறமையிருந்தும், உங்களையும் உங்கள் துணைவுயாரையும் அதற்கெல்லாம் மேலாக உங்களது செல்வ மகனையும் குஷிப்படுத்தும் ஒரு தற்குறிக்கு செங்கற்பட்டுத் தொகுதியை ஒதுக்கித் தந்து எம்.பி.யாக்கியது ஏன்? சரி. எம்.பி. சீட்டுதான் இல்லை. மத்திய அரசின் கீழ்வரும் ஏதாவது ஒரு உயர்மட்டக் குழுவில் உறுப்பினராகவாவது நியமிக்க பரிந்துரைக்கக் கூடாதா? சுயமாக சிந்திப்பவர்களுக்கும் அறிவாளர்களுக்கும் எந்தப் பதவியும் தரமாட்டேன் என்று தொழுப்பேட்டில் சத்தியம் செய்து விட்டீர்களா?
- விடுதலைப்புலிகளின் அமைப்புக்கு ஒரே பாதுகாப்பு நான் தான் என்று 1997ல் சுவிட்சர்லாந்து மாநாட்டில் மனைவியோடு சென்று பங்கேற்றுப் பேசினீர்களே நினைவு வருகிறதா? அங்கே போய் மாவீரன் வேஷம் போட்டு, டாலர்களை வசூலித்துக் கொண்டு திரும்பிய நீங்கள், விடுதலைப்புலிகளுக்குப் பெட்ரோல் கடத்தியதாக பா.ம.க. இளைஞர் அணி செயலாளர் கே.எம். ஷெரீப், பா.ம.க. தலைமை நிலையச் செயலாளர் முத்துக்குமார், திருவிடைமருதூர் ஆலயமணி, பாபநாசம் கே.எம். மோகன் ஆகியோரைக் காட்டிக் கொடுத்து கட்சியிலிருந்து நீக்கியது ஏன்? வெளியில புலி, வீட்டுல எலியா?
- ஈழத் தமிழர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே புகழ் பெற்றவர் பா.ம.க.மகளில் அணி தலைவி திருமதி. சக்தி கமலம்மாள். உங்களது துணைவியார் சரஸ்வதிக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை டஜன் கணக்கில் ‘மொய்’ எழுதியவர். கூட்டணியில்லாமல் தனித்து பா.ம.க. போட்டியிட்ட போதெல்லாம் எம்.பி. சீட்டு, எம்.எல்.ஏ. சீட்டுக் கொடுத்து கடனாளியாக்கிய நீங்கள் அவருக்கு 98, 99 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் வெற்றி பெறவும் உதவாதது ஏன்?
- பா.ம.க.வின் மாநில தொழிற்சங்கத் தலைவராகவும், பா.ம.க. மாநில இளைஞர் அணி செயலாளராகவும், பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளராகவும் திறம்பட செயல்பட்டு மக்கள் செல்வாக்கைப் பெற்றவர் மு. ஞானமூர்த்தி. அவரது வேகமான வளர்ச்சியை தாளமுடியாத நீங்கள் உங்களது குடும்பச் சொந்தமான காடு வெட்டி குருவை பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளராக நியமித்தது, நினைவுக்கு வருகிறதா? உங்களது ஈனத்தனமான செயலை வெறுத்து தி.மு.க.வில் சேர்ந்த மு. ஞானமூர்த்தி இப்போது உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலராக வெற்ற பெற்று நிமிர்ந்து நிற்கிறார். மு. ஞானமூர்த்திக்கு செல்வாக்கு இல்லை என்று நீங்கள் வெளியேற்றினீர்கள். அவர் தனது செல்வாக்கை மாவட்ட அளவில் நிரூபித்து விட்டார். இப்போது உங்களை முகத்தை எங்கே வைக்கப் போகிறீர்கள்?
- செங்கற்பட்டில் வசிக்கும் உங்களது தம்பி எழிலனுக்கும் உங்களுக்கும் விவகாரம் வந்து அவமானப்பட்டீர்கள். உடன் பிறந்த தம்பியான எழிலனைத் தீர்த்துக் கட்டும்படி பா.ம.க. முக்கியப் புள்ளியான சி.ஆர். பாஸ்கரனுக்கு உத்தரவு போட்டீர்கள். பாஸ்கரன் நைசாக நழுவிக் கொண்டார். உங்களுக்குக் கோபம் கொப்பளித்தது என்ன செய்தீர்கள்? எஸ்.ஆர்.எம். இஞ்சினீயரிங் கல்லூரியில் மிரட்டிப் பணம் வசூல் செய்தார். ஆற்று மணலைத் திருடி விற்கிறார். உடையாரின் சாராய ஆலையில் பணம் பண்ணிவிட்டார். அப்படி, இப்படி என்று பாஸ்கரன் மீது குற்றம் சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றியது என்ன நியாயம்?
- வன்னியர் சங்கம், பா.ம.க. இரண்டிலும் துணிவோடு செயல்பட்டவர் கும்பகோணம் ‘மாவீரன்’ கே. குருசாமி. உங்கள் வீட்டுக்கு பண நெருக்கடி வந்த போதெல்லாம் வாரி வழங்கிய வள்ளர். படியளந்த பரந்தாமன். கட்சிக்காகவும், உங்களுக்காகவும் பல லட்சம் ரூபாயை இழந்த போதிலும், உங்களுக்குப் பூரண விஸ்வாசமாக இருந்தவர்க. ஒரே ஒருமுறை உங்களது குடும்பத் தேவையை அவர் நிறைவு செய்யவில்லை என்பதால், அவரை நீங்கள் வெறுத்தீர்கள். உட்கட்சித் தேர்தலில் குருசாமியை தோற்கடிக்க, கும்பகோணத்திற்கு, செந்தமிழ்ச் செல்வனையும், சி.ஆர். பாஸ்கரனையும் அனுப்பினீர்கள். அப்போது உருவான அடிதடியில் குருசாமியின் மண்டையில் அடிபட்டு, புத்தி சுவாதீனத்தை இழந்து பரிதாபமாகச் செத்தார். டாக்டரே சொல்லுங்கள். இதற்குப் பெயர்தான் மனித நேயமா?
- ‘பா.ம.க.வுக்கும், எனக்கும் கூட்டு இல்லை. வன்னியர் சங்கத்திற்கும் எனக்கும் தான் கூட்டு. நான் இறந்தால் எனக்கு வீர வன்னியர்கள் தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும்…’ என்று மேடை தோறும் முழங்கியவர் டாக்டர் அல்ஹாஜ் பழனிபாபா. பழனிபாபா கொலை செய்யப்பட்ட பிறகு, அவரது இரங்கல் கூட்டத்தில் மதவெறி பி.ஜே.பி. தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன். பழனிபாபா இல்லை என்ற குறை உங்களுக்கு வேண்டாம். பழனிபாபா செய்ய வேண்டியதை இந்த இராமதாஸ் செய்வான். இது சத்தியம். என்று முழங்கிய டாக்டரே. 1998, 1999 நாடாளுமன்றத் தேர்தல்களின் போது யாரோடு கூட்டு சேர்ந்தீர்கள்? டாக்டர் பழனிபாபாவின் கல்லறையில் ‘சத்தியம்’ செய்து பேசியது நினைவிருக்கிறதா? டாக்டர் பழனி பாபாவின் ஆன்மா உங்களை மன்னிக்குமா? சத்தியம் உங்களுக்கு சர்க்கரைப் பொங்கலா?
- எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பற்றி கவலைப்படாமல் வன்னியர் சங்கத்திற்காகவும், பா.ம.க.வுக்காகவும் தொடக்க காலம் முதலே பாடுபட்டவர். மயிலாடுதுறை ‘செந்தீ’ தரணி வேந்தன். மிகச் சிறந்த பேச்சாளர். உங்களுக்கு ஏகப்பட்ட பட்டங்களை வழங்கி மகிழ்ந்தவர். கட்சிப் பணியில் ஈடுபட்டு காலை ஊனமாக்கிக் கொண்டவர். தீரனை கட்சியை விட்டு நீக்கினீர்கள். ’22 ஆண்டுகள் நமது சமுதாயத்திற்காகப் பாடுபட்டவருக்கே இந்த கதியா? இது நியாயமா?’ என்று தரண் வேந்தன் கேட்டார். நீங்கள் ‘போடா நொண்டிப் பயலே…’ என்று கேவலமாகப் பேசி, விரட்டியடித்தீர்களே, என்ன நியாயம் டாக்டரே?
- நீங்கள் உங்கள் மனைவி சரஸ்வதி குடும்பத்தினரின் பணத்தில் தான் படித்தீர்கள். எம்.பி.பி.எஸ். டாக்டர் பட்டமும் பெற்றீர்கள். அதற்கு நன்றிக் கடனாக சரஸ்வதியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் டாக்டர் பட்டம் பெற்றதும் சரஸ்வதியம்மாள் குடும்பத்திற்கு செய்து தந்த வாக்குறுதியை காலடிய்ல போட்டு மிதித்துவிட்டு வேலூர் பணக்காரரின் பெண்ணை திருமணம் செய்ய தயாரானீகள். உங்களது தில்லு, முல்லு வேலையை தெரிந்து கொண்ட சரஸ்வதியின் தாய்மாமன் நல்லாவூர் சுப்பிரமணியக் கவுண்டர் உங்களை கடத்திக் கொண்டு போய் மிரட்டி கட்டாயப்படுத்தி, சரஸ்வதியை உங்களுக்குத் திருமணம் முடித்து வைத்தார். இது நூறு சதம் உண்மை. இதை நீங்கள் மறுக்க முடியுமா டாக்டரே?
- டாக்டரே நீங்கள் நம்பத் தகுந்த வரும் இல்லை. நட்புக்கு இலக்கணமானவரும் இல்லை என்பதற்கு திண்டிவனம் மக்கள் ஒரு சம்பவத்தை இப்போது கூட மறக்காமல் கூறுகிறார்கள். தி.மு.க.வில் எம்.எல்.ஏ. வாகவும், எம்.எல்.சி.யாகவும் இருந்தவர் நமது சொந்தம் ’ஆவன்னா’ தங்கவேலு. அண்ணாவின் நண்பர். பண்பாளர். நேர்மையாளர். நீங்கள் சொந்தமாக மருத்துவமனை வைக்க யாரும் இடம் தராத போது ‘நம்ம சாதிப் பையன்’ என்று பரிதாபப்பட்டு உங்களுக்கு மருத்துவமனை வைப்பது முதல் பல்வேறு உதவிகளைச் செய்தார். அப்படிப்பட்ட நல்லவரான ‘வாத்தியார்’ ஆ. தங்கவேலு குடும்பத்தை 21 ஆண்டுகள் வம்பு, வழக்கு நடத்தி கொடுமை புரிந்தது நியாயமா? இதுதான் நன்றி செலுத்தும் லட்சணமா?
- புதுச்சேரி பா.ம.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜசேகரன். நமது உறவினர். இவர் தனக்குச் சொந்தமான மெடிக்கல் ஸ்டோர், வில்லியனூர் தொழிற்சாலை போன்றவற்றையெல்லாம் விற்றுவிட்டு, அந்தப் பணத்தையெல்லாம் உங்களுக்காகவும், கட்சிக்காகவும் செலவிட்டவர். இன்றளவும் உங்களுக்கு விஸ்வாசமாக இருப்பவர். அவரை ஓரம் கட்டிவிட்டு உங்களது மனைவி சரஸ்வதியின் அண்ணன் இராமச்சந்திரனின் இரண்டாவது மகனான ஆனந்தனை புதுவை மாநில துணை அமைப்பாளராக்கியது ஏன்? உங்களது குடும்ப பாசம், உங்களது கண்களை மறைக்கிறதா?
- தீரன் எழுதிய பாடல்களை அட்டகாசமான மெட்டமைத்து வன்னியர் சங்க மேடைகளிலும் பா.ம.க. மேடைகளிலும் பாடுபவர்கள் ‘டேப்’ சக்ரவர்த்தி, தருமபுரி பிரேம கிருஷ்ணன், திருப்பூர் கோபால் இந்த மூவரும் 1999 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உங்களை சந்தித்துப் பேச வந்தனர். ‘டேப்’ சக்ரவர்த்தி அப்போதுதான் திருமணமான தனது மனைவியோடு வந்தார். வாழ்த்துப் பெற திருப்பூர் கோபால் தனது கண் அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டார். நீங்கள் என்ன சொல்லி விரட்டினீர்கள். ‘நீங்கள்லாம் பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடி, கட்சி வளர்க்கிற கண்டிஷன்ல நான் இல்ல. யாரோட கூட்டு, எப்ப வைக்கணுமோ, அப்ப அப்ப அப்படி வெச்சி, நான் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கொண்டு வருவே. அதன் மூலம் எனக்கு கட்சி வளர்க்கத் தெரியும். ஊருக்குப் போய்ச் சேருங்க.’ என்று ஏழைக் கலைஞர்களை விரட்டியடிச்சீர்களே, இது என்ன நியாயம்? இவர்களது குரலோசையால் தான் இப்போது உள்ள ஏற்றம் கிடைத்தது என்பதை மறந்தது ஏன்?
- உங்கள் அன்பு மகன் அன்பு மணியைப் பற்றி நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள். நினைவுக்கு வருகிறதா? தீரன், பாதிரி கோவிந்தசாமி, சி.ஆர். பாஸ்கரன், செந்தமிழ்ச் செல்வன் போன்றவர்கள் முன்னிலையில் நீங்கள் என்ன சொன்னீர்கள்? மேலே கூறப்பட்ட இவர்களெல்லாம் உங்கள் வீட்டில் உங்களோடு அமர்ந்து ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது டாக்டர் அன்புமணி வீட்டுக்கு உள்ளே வருகிறார். எப்படி? ஒரு கர்ச்சிப்பை எடுத்து மூடிக் கொண்டு வருகிறார். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் ஓடி போகிறார். நீங்கள் ‘என் பையன்கிட்டயும் என் மருமகன் பரசுராமன்கிட்டயும் ஒரு ‘ஏ.கே. 47’ துப்பாக்கியை கொடுத்தா, சங்கத்துக்கு இழுத்துக்கிட்டுப் போன தீரனைத்தான் முதல்ல சுடுவாங்க… ரெண்டாவதா ‘நாட்டுக்கவி’ தியாகராஜனை சுடுவாங்க… மூணாவதா என்னை சுடுவாங்க… ஏன்னா அவ்வளவு இனப்பற்று அவங்களுக்கு’ என்று தனது மகன் அன்புமணி, மருமகன் பரசுராமன் ஆகிய இருவர் பற்றி குறிப்பிட்டு வேதனையோடு கிண்டலடித்தீர்கள்.
இப்போது நீங்க அய்யா, அவரு சின்ன அய்யாவா? அவருக்கு நமது சொந்தங்களின் பணத்தில் ஆளுயர போஸ்டரா? வானுயர கட்-அவுட்டா? நல்ல மோசடியா இருக்குன்னு உங்களுக்குத் தோன்றவில்லையா டாக்டரே?
- வாகனங்களின் புகையும், சத்தமும் தான் சுற்றுச்சூழலை கெடுக்கிறது. ஆனால் சுற்றுச்சூழல் பற்றி வாய் கிழியப் பேசுகிற நீங்கள், வாழப்பாடியார் வாங்கித் தந்த 4 டாடா சுமோ, ஜெகத்ரட்சகன் வாங்கித் தந்த 4 டாடா சுமோ, தொழிலதிபர்களிடம் பெற்ற பணத்தில் வாங்கிய 22 இதர டாடா சுமோக்கள், 10 மகேந்திரா வேன்கள் புடைசூழ – புடைசூழ, புழுதி கிளப்பிக் கொண்டு ஊர், ஊராக ஊர்வலம் போவது ஏன்? இதுதான் பசுமைத் தாயகத்தை உருவாக்கும் லட்சணமா?
- மரங்களை வெட்டாதீர்கள் – வன்னியர்களின் தலைகளை வெட்டுங்கள் என்பது தான் பசுமைத் தாயகத்தின் புதிய முழக்கமா?
- நன்றி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உங்களை நிறுவனராகவும், வன்னிய அடிகளாரைத் தலைவராகவும் கொண்டு வன்னியர் சங்கம் துவக்கப்பட்ட காலம் முதல் 1999 பாராளுமன்றத் தேர்தல் முடிகிற வரை, சங்கத்திற்கும் கட்சிக்கும் – உங்களுக்கும் லட்சம் லட்சமாக, கோடி கோடியாக வாரி வழங்கிய தன்னடக்கமான வள்ளல் – வாழப்பாடியார்.
- 1998 தேர்தல் சமயத்தில் ‘இருந்த கோவணத்தையும் அவிழ்த்துக் கொண்டு என்னை நடுத்தெருவில் விட்டுவிட்டார் கலைஞர்’ என்று பேசிய உங்களுக்கு உடனடியாகக் கோவணம் கொடுத்து நிர்வாணமாக்கப்பட்ட உங்களது மானத்தைக் காப்பாற்றிய அரசியல் ராஜதந்தரி யார்?
- பட்டு ஆடைகளை உடுத்திக் கொண்டு முகத்திற்க ‘டால்கம்’ பவுடர் அடித்துக் கொண்டு, சட்டைப் பையில் உள்ள சீப்பை எடுத்து எடுத்து பத்து முறை சீவி, சிங்காரித்துக் கொண்டு அ.தி.மு.க. தலைமை நிலையத்திற்கு ‘வெள்ளைப் பன்றி’யை பார்க்கப் போனீர்களே அது எவரால்?
- பா.ம.க. வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையை உருவாக்கி 1998 – 99 பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க, உங்களுக்கு வழிகாட்டிய மாமனிதர் வாழப்பாடியார். அவர் வகுத்தளித்த கூட்டணியில் இருந்து கொண்டே அவர் கொடுத்த கோடிகளை பதுக்கிக் கொண்டே அவருக்கு எதிராக கீழறுப்பு வேலை செய்தது அவர் தோல்விக்கு நீங்கள் காரணமாக இருந்தது எந்த வகை நன்றி?
- வன்னியர் பெயர் சொல்லி – வன்னியர் மக்களது உழைப்பைச் சுரண்டி, அரசியலில் வளர்ந்து – உயர்ந்தவரல்ல, வாழப்பாடியார். ஆனால் நமது சமுதாய உணர்வை எவரை விடவும் கூடுதலாகப் பெற்றவர். நமது சமுதாய மக்களுக்கு, அளவிடாத நன்மைகளை செய்தவர், செய்து கொண்டிருப்பவர். இந்த விஷயம் பா.ம.க.வில் உள்ள கடைசித் தொண்டனுக்கும் தெரியும். உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனால் அவரது அரசியல் மேம்பாடு உங்களுக்கு, உங்களது கனவுகளுக்கு தடையாகி விடுமோ என்று அஞ்சி அவரது அரசியல் எதிகளுடன் வஞ்சகமாகக் கை கோர்த்துக் கொண்டு ‘பள்ளிக்கு கொடுப்பதை பள்ளனுக்குக் கொடு’ என்று செயல்பட்டு உலகம் முழுவதும் உள்ள நம்து சமுதாய மக்களிடமும், தமிழகத்திலுள்ள ஏனைய சமூக மக்களிடமும் நீங்கள் அம்பலப்பட்டு நிற்கிறீர்களே, அதை உணர முடிகிறதா?
- வன்னியர் சமுதாயத்தில் தன்னைத் தவிர வேறு எவரும் தன் கட்சியாக இருந்தாலும் பிற கட்சிகளில் இருந்தாலும் உயர்ந்து நிற்கக் கூடாது என்று எங்காவது சத்தியம் செய்து விட்டீர்களா?
ஒரு பக்கம் வாழப்பாடியாருக்கு எதிராக வேட்டு, மற்றொரு பக்கம் ம.தி.மு.க. – செஞ்சி இராமச்சந்திரனுக்கு எதிராக வேட்டு என்றல்லவா 1999 தேர்தலில் செயல்பட்டீர்கள்?
உங்களது லட்சணம் மொத்தமும் திண்டிவனம் பாராளுமன்றத் தொகுதி மக்களுக்கு நேரடியாகத் தெரிந்திருந்தால் செஞ்சியார் தப்பித்தார். வென்றார். மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்?
1999 தேர்தல் முடிந்தவுடன் உங்களது திண்டிவனம் வீடு தாக்கப்பட்டது. உங்களது கீழறுப்பு வேலையை மீறி ஜெயித்த செஞ்சியார், தோழமை உணர்வோடு உங்களுக்கு ஆறுதல் கூற, உங்கள் தைலாபுரம் மாளிகை தேடி வந்தார். என்ன செய்தீர்கள்? மத்திய அமைச்சரான அவரை மணிக்கணக்காக காக்க வைத்து அவமதித்துச் சந்திந்தீர்? இது எந்த வகை பெருந்தன்மை? கேட்டால் ‘என் வீடு தாக்கப்பட்டதற்கு, செஞ்சியார் கண்டன அறிக்கை தரவில்லை’ என்கிறீர்கள். நீங்கள் செஞ்சியாருக்கு எதிராக, தோழமை – கூட்டணி விதிகளை மீறி, அவரைத் தோற்கடிக்க சதி செய்வீர்கள். ஆனால் அந்த வருத்தத்தை செஞ்சியார் மட்டும் வெளிக்காட்டக் கூடாதா?
- 1996 தேர்தலில் பா.ம.க. வாங்கிய ஓட்டுக்களின் சதவிகிதம் என்ன? 2.2 சதம். தேர்தல் கமிஷன் மாநிலக் கட்சியாக ஒரு கட்சியை ஏற்று, அங்கீகரிக்க 4 சதம் ஓட்டுக்கள் பெற்றிக்க வேண்டும். பிறகு எப்படி தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைத்தது? அது ஒரு நீண்ட கதை. பா.ம.க.வுக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க மூத்த வழக்கறிஞர் ஜி. இராமசாமியை ஏற்பாடு செய்து தந்து, சட்ட வழிகாட்டுதல் தந்து, நிதியுதவியும் லட்சக்கணக்கில் செய்தவர் யார்? நினைவுக்கு வருகிறதா? நமது சொந்தம் வாழப்பாடியார் உங்களுக்கு வசதியாக மறந்து போகலாம். ஆனால் அப்போது உங்களோடு டெல்லிக்கு வந்து தேர்தல் கமிஷன் முன் காத்திருந்த தலித் எழில்மலை, பா.ம.க. வழக்கறிஞர் விமுனா மூர்த்தி போன்றவர்கள் மறக்கமாட்டர்கள். அதே நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? பகுஜன் சமாஜ் கட்சியினர் அகில இந்திய அளவில் யானை சின்னத்தை ஒதுக்கித் தரும்படி தேர்தல் கமிஷனில் முறையிட்டனர். தேர்தல் கமிஷன் பா.ம.க.வின் கருத்தைக் கேட்டது. எங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று நீங்கள் தேர்தல் கமிஷனுக்குக் கூறினீர்கள். உங்கள் கருத்தை தலித் எழில்மலை ஏற்க வேண்டியதானது. இந்த என்.ஓ.சி. தருவதற்கு பகுஜன் சமாஜ் தலைவர் கன்ஷிராமிடம் ஒரு கணிசமானத் தொகையைப் பெற்றீரா, இல்லையா? தொகையை நீங்கள் பெற்றுக் கொண்டு தலித் எழில்மலை மீது பழியைப் போட்டது என்ன நியாயம்? மாமல்லபுரம், காஞ்சீபுரம், வேலூர் பா.ம.க. பொதுக்குழுக்களில் தலித் மீது பாய்ச்சல் ‘பாவ்லா’ காட்டியது ஏன்?
- புதுவை மாநில பா.ம.க.விற்கு 1999 பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் நிழல் தலைவர் போல் செயல்பட்டாரே ஒரு நபர், அவர் யார்? வி.சூ. கிருஷ்ணராஜ். இவர் புதுவை மாநில அரசின் அச்சு மற்றும் எழுது பொருள் துறையின் இயக்குநர். இவர் ஒரு மீனவ நண்பர். இவரிடம் தானே தேர்தல் செலவுப் பொறுப்பை ஒப்படைத்தீர்? இவர் ஒன்றுக்கு இரண்டாகக் கணக்கெழுதி, 98 லட்சம் ரூபாயைக் கணக்குக் காட்டியது உண்மையா? தனது துறையில் ஊழல் புரிந்ததாக இவர் மீது வழக்குப் பதிவாகி சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறதே, அது தெரியுமா? ஊழல் பேர் வழிகள் தான். இப்போதெல்லாம் உங்களது உள் வட்ட நண்பர்களா?
- உங்களது கறுப்புக் கறுப்பான பணம் 10 கோடி ரூபாய் உங்களது பினாமியான, உறவினர் காடு வெட்டி குருவிடம் சிக்கிக் கொண்டதாக ஒரு பேச்சு நிலவுகிறதே, உண்மையா?
- காடுவெட்டி குரு, தனது வீட்டைச் சுற்றி வானுயர மதில் சுவர் எழுப்பி, பல லட்சம் ரூபாய் செலவில் ‘ஹாலோஜன்’ மின் விளக்குகளைப் பொருத்தி இருப்பது எப்படி? சர்வதேசத் தரத்தில் கண்காணிப்பு எலக்ட்ரானிக் சாதனங்களை பல லட்சம் செலவு செய்து குரு பொருத்தியிருப்பது ஏன்?
- 1998 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உங்களிடம் கருத்து வேறுபட்டு, பேராசிரியர் தீரன் பிரிந்து சென்றார். அவரைக் கொல்ல சதி செய்தது ஏன்? அவர் தனது ஆண்டிமடம் தொகுதியில் சுற்றுப் பயணம் செய்த போது இரும்புலிகுறிச்சி அருகே, அவரது கார் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றது ஏன்?
- உங்களது அக்காள் மகள்களில் ஒருவரான விஜயாவை திருமணம் முடித்தவர். இப்போது செங்கை கிழக்கு எஸ்.பி.யாக இருக்கும் இராதாகிருஷ்ணன். இவர் டி.எஸ்.பி.யாக இருந்தார். இவர் எஸ்.பி.யாக வேண்டும் என்று, தீரன் மூலமாக தமிழக முதல்வர் கருணாநிதியை எத்தனை முறை நச்சரித்திருப்பீர்கள்? இதே மாதிரி வேறு நமது சொந்தங்களுக்காக எவரையாவது நச்சரித்தது உண்டா? அந்த இராதாகிருஷ்ணன் எஸ்.பி.யானதற்கு தைலாபுரத்தில் வசந்த மாளிகையில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் ‘தடபுடல்’ ஃபாரின் விஸ்கி பார்ட்டி கொடுத்துரே, அது எதற்காக? யாரை குஷிப்படுத்த?
- வன்னியரும், தேவேந்திரரும் ஒரு தாய் மக்கள் என்று வரலாறு பேசும் நீங்கள், தென் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட ‘தேவேந்திர சிங்கம்’ பசுபதி பாண்டியனின் ரத்தத்தை உறிஞ்சினீர்கள். பசுபதி பாண்டியனை வைத்து ஸ்பிக், ஸ்டெர்லைட் நிர்வாகங்களை மிரட்டினீர். பணம் வசூலித்தீர். ஆனால் அவருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவி தரவேண்டும் என்று மட்டும் தோன்றாதது ஏன்? ஊரறிந்த தேவெந்திரரான பசுபதி பாண்டியனை ஓரம் கட்டிவிட்டு, பெங்களூர் அசோகா ஓட்டலில் உங்களுக்கு கிளுகிளுப்பை உருவாக்கித் தரும் ஒரு தேவேந்திரருக்காக, வாழப்பாடியார் போன்ற நல்லவரோடு மோதியது என்ன நியாயம்?
- தலித்துக்களுக்காகப் பாடுபடுவேன் என்று நீங்கள், திடீர் காந்தியாகிப் பேசுகிறீர்களே, இது எவ்வளவு தூரம் உண்மை? 1996 தேர்தல் நேரத்தில், அடியாட்களை ஏவிவிட்டு, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கடத்தி வந்து திண்டிவனம் கந்தன் லாட்ஜில் அடைத்து வைத்தது ஏன்? டாக்டர் கிருஷ்ணசாமி, தப்பியோடியல்லவா ஒட்டப்பிடாரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்? ஒரு தலித் தலைவரை ஒழிக்க, இன்னொரு தலித் தலைவரை அன்று பயன்படுத்தினீர். இது என்ன நாகரீகம்? அராஜகமே உன் பெயர்தான் இராமதாசா?
- ‘சொந்தம்’ என்பதே நாலு வகையானது என்று நீங்கள் சொல்வீர்களாமே? அது என்ன நாலு வகை சொந்தம்? நீங்கள் சொல்லமாட்டீர்கள். நாங்கள் நினைவு வைத்துக் கூறுகிறோம். 1. குடும்ப சொந்தம், 2. நெருங்கிய சொந்தம், 3. தூரத்துச் சொந்தம், 4. பட்டாளி சொந்தம். முதல் மூன்று சொந்தங்களுக்காக, அவர்களது ஏற்றத்திற்காக உங்களால் சுரண்டப்படுவது தான் பட்டாளி சொந்தமா?
- கடலூர் – பாண்டிச்சேரி பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வளமாக வாழ்ந்தவர், மாரிமுத்து படையாட்சி. வன்னியல் சங்கத்திற்காக, கட்சிக்காக லட்சம், லட்சமாக வாரி வழங்கிய வள்ளல். அவரிடம் ஒரு கணிசமான தொகையை கடனாகக் கேட்டீர்கள். உரிய நேரத்தில் கடன் தராததால் அவரை கட்சியை விட்டே நீக்கியது என்ன நியாயம்?
- உங்களுடைய கடைசி தம்பி எழிலன், செங்கற்பட்டில் வசிக்கிறார். உங்களுக்கும், அவருக்கும் தகராறு வந்தது. அது உங்கள் சொந்த விஷயம். ஆனால், பா.ம.க. செயலாளர்களில் ஒருவரான சி.ஆர். பாஸ்கரை தூண்டிவிட்டு, எழிலனைத் தீர்த்துக் கட்டச் சொன்னது என்ன நியாயம்? பாஸ்கரன் கொஞ்சம் உஷாராகி எழிலனை கடத்தி வந்து உங்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டார். வ.ச. நிர்வாகிகளையும் பா.ம.க. நிர்வாகிகளையும் உங்கள் ஆசாபாசத்திற்கு இழுப்பதும், மறுத்தால் ஒதுக்குவதும், ஆள் வைத்து கொலை செய்ய முயற்சிப்பதும் என்ன நியாயம்?
- விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகள், பேராசிரியர் தீரன் வழியாக கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு உங்களை அழைத்தது, நீங்கள் அங்கெல்லாம் ஈழத் தமிழர்களை சந்திப்பதை, அவர்களுடன் பேசுவதைவிடக் கூடுதலான நேரத்த எங்கே செலவிட்டீர்கள்? தங்க நகைகளை வாங்குவதிலும், எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதிலும், ஷாப்பிங் செய்வதிலும் தானே செலவிட்டீர்கள்? வன்னியர் உணர்வும் ஈழத் தமிழர் உணர்வும் உங்கள் ஜாலிக்காகத்தானே இருந்திருக்கிறது?
- பெரம்பலூர் மாவட்டம் செந்துறை ஒன்றய பா.ம.க. செயலாளர் சாமிதுரை. இவர் கட்டுக்கட்டாக 20 லட்சம் ரூபாய் பணத்தை கட்சிக்காக உங்கள் குடும்பத்திற்காக செலவிட்டவர். இவரது திருமணத்திற்கு உங்களை அழைத்த போது ‘இரண்டு லட்சத்தை எடுத்து வை’ என்று பிடுங்கிக் கொண்டது என்ன தருமம்?
- 1998ல் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிர்ப்பையும் மீறி, பாரிமோகனுக்கு எம்.பி. சீட்டு கொடுத்தது ஏன்? அவர் 35 லட்சம் ரூபாயை உங்களுக்கு மொய் எழுதினார். அது போகட்டும். 1999ல் மறுபடி திடீர் தேர்தல் வந்தது. மறுபடியம் 35 லட்சம் ‘மொய்’ கேட்டீர்கள். பாரிமோகன் நிமிர்ந்து விட்டார். என்ன கேட்டார், உங்களிடம்? ‘ஒரு வருடத்திற்கு 35 லட்சம் அழ, நான் கொள்ளையா அடிக்க முடியும்? அஞ்சு வருஷத்திற்குத் தானே 35 லட்சம் கொடுத்தேன்? எங்களை டெல்லியிலே அடகு வெச்சி, பத்து கோடி ரூபாய் வாங்கினதுக்கு என்ன கணக்கு?’ என்று கேட்டாரே, நினைவுக்கு வருகிறதா டாக்டரே?
- 1987 தொடர் சாலை மறியலில் உயிர் நீத்த இருபத்தைந்து குடும்பங்களுக்கும் தலா பத்து கறவை மாடுகள் வாங்கித் தருவேன் என்று சத்தியம் செய்தீர்களே, அந்த சத்தியம் இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறதே, நினைவுக்கு வருகிறதா?
- டாக்டர் இராமதாஸ் அவர்களே, உங்களது தந்தையார் சஞ்சீவிராயக் கவுண்டர், தலைச்சிறந்த கூத்துக் கலைஞர். தாயார் நவநீதம்மாள், கடுமையான உழைப்பாளி. மிகச் சாதாரண விவசாயக் குடும்பம். இவர்களது மூத்த மகன் நீங்கள். இதெல்லாம் எந்த அளவு உண்மையோ, அதே அளவு உண்மையான விஷங்கள் தான் இங்கே தொகுத்துள்ளோம்.
1994 டிசம்பர் வரையிலான உங்களது குடும்பத்தின் சொத்துக்கள் என்னென்ன? அவற்றின் மதிப்பு என்ன? உங்களது சொத்த சம்பாத்யத்தில் நீங்கள் வாங்கிப் பயன்படுத்திய ஒரு ‘டப்பா’ அம்பாசிடர் + 1993 வாக்கில் எஸ்.ஐ.எஸ். அமைப்பின் சொந்தங்கள் வாங்கி வழங்கிய ஒரு புதிய அம்பாசிடர் இதுதானே, 1994 டிசம்பர் நிலவரம்? இப்போது டாடா சுமோ, டாடா சபாரி, சியாலோ, ஓபல் ஆஸ்ட்ரோ, ஃபோர்டு என்று 35 ‘குளுகுளு’ வசதியுள்ள கார்களும், 25 மகேந்திரா வேன்களும் எப்படி வந்தன? இவற்றின் மதிப்பு 300 லட்சத்திற்கும் மேல் என்பது சரியா? இவற்றை பராமரிக்க, மாதம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவிடுகிறீர்களே, சரியா? மூன்று நட்சத்திர ஓட்டல், மகனுக்கு சென்னையில் மாளிகை, பெங்களூர் ஒய்ட் ஃபீல்டில் 100 ஏக்கர் நிலம் என்று பினாமிகள் பெயரில் இருபதுக்கும் மேற்பட்ட சொத்துக்களை, ஐந்தே ஆண்டுகளில் மடக்கிப் போட்டிருப்பது, எப்படி?
அசையும் சொத்துக்கள், அசையாத சொத்துக்கள், குடும்பத்தனரின் பெயலிரும் – சம்பந்திகளின் பெயரிலும், சில பினாமிகளின் பெயரிலும் மடக்கியிருப்பது, நூறு கோடி ரூபாய் என்று மதிப்பிடப் படுகிறதே, இது சரியா?
இந்த சொத்துக்கள் வந்த வழி என்ன? 200 லட்சம் வன்னியர்களை மையப்படுத்தி, நீங்கள் பல ரூட்டுகளில் மிட்டாயகப் பெற்ற பணம் தானே, இவை?
தவறான வழிகளில் குவிந்த சொத்துக்கள் தான் இவையெல்லாம்.
அப்படியானல் மேற்கண்ட அசையும், அசையாத சொத்துக்களை, நீங்களும், உங்களது குடும்பத்தினரும் இடம் பெறாத ஒரு ‘வன்னியர் நல ட்ரஸ்ட’ அமைத்து, அதனிடம் ஒப்படையுங்கள்.
ஒப்படைக்க வேண்டும். இப்படிச் செய்வதுதான் நியாயம்.
இது என்ன நியாயம் என்று கேட்கிறீர்களா டாக்டரே?
அது முதலமைச்சராக இருந்து தமிழகத்தைச் சுரண்டி, ஊழலில் மிதந்த ஜெயலலிதாவுக்கு எதிராக, 1996 தேர்தலின் போது நீங்கள் கேட்ட நியாயம். ஜெயலலிதா மட்டுமல்ல. தமிழகத்தை 1952 முதல் ஆண்டு ஊழல் செய்த அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராக நீங்கள் கேட்ட நியாயம்.
1996 சட்டமன்ற. பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ம.க. சார்பில் நீங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் அறிவிப்பை, முதல் பக்க அறிவிப்பை எடுத்துப் படியுங்கள்.
அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்காது. உங்கள் வசதிக்காக இதோ அந்தத் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதி.
‘இந்திய அரசு சுதந்திரம் அடைந்து, இன்றுவரை
எத்தனையோ கட்சிகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளன.
இருப்பினும், அவற்றுள் பெரும்பான்மையான கட்சிகள், மக்கள்
விரோத திட்டங்களினால், கோடி கோடியாய் சொத்துக்கள்
சேர்த்துள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அத்தகைய
கட்சிகள் ஆட்சி புரிந்த காலங்களில், ஊழலினால் சேர்த்த
சொத்துக்களை பறிமுதல் செய்து, தேசிய மயமாக்குவோம்…
இவ்வாறாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களிலிருந்து
கிடைக்கும் வருவாயைக் கொண்டு, PUBLIC MONEY
FOR PUBLIC என்ற திட்டத்தின் கீழ் கொண்டு வந்து, கல்வி,
வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற மக்கள்
தேவைகளுக்குப் பயன்படுத்துவோம்…’
டாக்டர் அய்யா அவர்களே, ஆட்சி நடத்தி ஊழல் செய்தவர்களுக்கு என்ன மாதிரி பாடம் கற்பிப்பது என்று, நீங்கள் அறிவித்துள்ளீர்கள். அது மெத்தவும் சரி.
ஆனால், ஆட்சியைப் பிடிக்காமலே, ஒரு இருபது வருடத்தில் அதன் ஒரு பகுதியான ஐந்து வருடத்தில், நூறு கோடி ரூபாய் ஊழல் செய்து, இதிலும் ஒரு சாதனை புரிந்து விட்டீர்கள்.
200 லட்சம் வன்னியர்களின் பேரால் தான், இந்த சொத்து குவிப்பு நடந்துள்ளது.
எனவே ‘உங்கள் ஊழல் சொத்துக்களை, 200 லட்சம் வன்னியர்களுக்கும் பொதுவாக வையுங்கள்’ என்ற எங்களது கோரிக்கை நியாயம்தானே? செய்வீர்களா?
- ‘டாக்டர் அய்யாதான் எங்களது உயிர், அவரைப் பற்றி விமர்சிக்கும் யாரையும் சும்மாவிட மாட்டோம். அது இனத் துரோகிகளான ஏ.கே. நடராஜனாக இருந்தாலும் சரி… தீரனாக இருந்தாலும் சரி… ஆனானப்பட்ட வாழப்பாடியாக இருந்தாலும் சரி… டாக்டர் அய்யாவை விமர்சித்தவன் தலையை வெட்டி எடுத்து வரச் சொல்லி உத்தரவிடுவோம்’ என்று, நீங்கள் நிறுவனராக உள்ள வன்னியர் சங்கத்தின் தலைவராக – உங்களால் திணிக்கப்பட்ட காடுவெட்டி குரு, ‘நெற்றிக்கண்’ இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இந்தத் திமிர் தனமான கொலை வெறிப் பேச்சுக்குப் பின்னே இருப்பது நீங்கள்தானே? ஏறி வந்த ஏணிகளை எட்டி உதைப்பதும், தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதும், வாரி, வாரி வழங்கி உங்களை உங்களை வாழ வைத்தவரின் தலையை வெட்டுவோம் என்று கொக்கரிப்பதும், வன்னியர் சமூகத்தின் இயல்புப் பண்புக்கு எதிராக இருக்கிறதே. என்ன காரணம்? வன்னியர் தலைவர்களின் தலையை வெட்டவா, ஒரு வன்னியர் சங்கம்? அதற்கு நீங்கள் நிறுவனர்? தங்களது சமூக உரிமையை மீட்க, மரம் வெட்டிய கரங்களுக்கு, தனது சமுதாயத் தலைவர்களுக்கு எதிராகவே ‘தலை வெட்டும்’ உத்தரவா?
- பத்திரிகைகளுக்கு, மக்களுக்கும் சொல்வது போல நீங்களோ ஒரு மரம் வெட்டி… உங்களது சொந்தம் குருவோ ஒரு காடு வெட்டி… ஆனால் உங்கள் வாரிசோ… சீனுவாச ராவ் – ஞானசேகரனிடம் திருடிச் சேர்த்துக் கொண்ட பசுமைத் தாயகம்… எங்களுக்கே… தலை சுற்றுகிறது – உங்களுக்குப் புரிகிறதா….?
- ‘நீங்கள்தான் குள்ள நரித்தனமாக தோற்கடித்தீர்கள்’ என்று வாழப்பாடியார் நேரடியாக உங்களை விமர்சித்து விட்டார்.
‘பாம்பாட்டி பாம்பு கடி பட்டுத்தான் சாவான்’ என்ற பழமொழி உங்களுக்கு தெரியுமா? ‘எப்படித் தீர்த்துக்கட்ட நினைக்கிறாயோ, அப்படியே தீர்ந்து போவாய்’ என்ற பைபிள் வரிகளுக்கு அர்த்தமாவது தெரியுமா? வன்னிய மக்களது நல் மேய்ப்பனாக வேடம் போட்டு, வன்னியர்களையே ஏய்க்கப் பார்க்கும் உம்மை, வரலாறு மன்னிக்குமா? சுரணையுள்ள வன்னியர்கள் தான் மன்னிப்பார்களா? ‘வல்லவனுக்கு வல்லவன் இந்த வையத்தில் உண்டு’ என்ற விவரமாவது உங்களுக்கு இருக்கிறதா?
- ••