மகா சங்கம் வளர்த்த வரலாறு?

 

மகா சங்கம் ரிஜிஸ்டர் ஆன பிறகு அதனுடைய வேலைகள் வெகு வேகமாக நடக்கலாயின. ஏனைய ஜில்லா அன்பர்கள் இதனுடன் தொடர்பு கொண்டனர். மகா சங்கத்தின் சார்பில் வெளி ஜில்லாக்களில் அதி தீவிரமாக பிரச்சாரங்கள் மளமளவென நடைபெற்றன. சங்கத்தின் வளர்ச்சிக்கென நன்கொடைகள் வசூல் செய்யப்பட்டது. ஒவ்வொரு கிராமங்களும் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு தாய் சங்கத்தின் வளர்ச்சிக்காக சன்மானங்கள் வழங்கின.

 

அக்காலத்தில் இச்சங்கத்திற்கு தலைவர் செயலாளர், மற்றும் நிர்வாகிகளாக யார் அமர்ந்திருப்பினும், எது வொன்றும் கோபால நாயகர் உத்திரவுபடி தான் நடைபெற்று வந்திருக்கின்றன. காரணம்? அன்றிருந்த நம் மக்கள். அவர் மீது அவ்வளவு பூரண நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதோடு கூட சங்கத்தின் வேலைகக்கு வசூலான தொகை பற்றும் பற்றாமல் போனால் கோபால நாயகர், தன் சொந்த பணத்தை கணக்கின்றி கொடுத்து உதவுவார். இவருக்கு பின் வந்த இவருடைய குமாரரான திரு. கா. கோ. பலபத்திர நாயகரும் தந்தையின் வழியை பின் பற்றி போஷகராக இருந்து சகல விதத்திலும் உதவி வந்துள்ளார்.

  • ••

அர்பத்நட் பாங்கி வீழ்ச்சி!

மகா சங்கத்திற்கு பெருத்த நஷ்டம்!

 

இச்சமயம் மகா சங்கத்திற்கு ஓர் துக்ககரமான நிகழ்ச்சி, எதிர்பாராத விதமாக ஏற்பட்டு விட்டது. அதாவது:

அவ்வமயம் மகாசங்கத்திற்கு வசூலான எல்லா பணத்தையும் (ரூ. 21,400) சென்னையில் பிரபலமாக நடந்து வந்த அர்பத்நட் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த பேங்க் 13.10.1906ல் திடீரென திவாலாகி விட்டபடியால் மகா சங்கத்தன் மிகப்பெரிய மூலதனம் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி விட்டது. திவாலானே அர்பத் நட் பேங்க், சென்னையிலேயே மிக பெரியது. 106 வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டது. அரசாங்கத்தைப் போல் மிகவும் நம்பிக்கை வாய்ந்தது. இருப்பிம் இந்த பேங்க் எதிர்பாராத விதமாக வீழ்ந்து விட்டபடியால் நம் தலைவர்கள் மட்டுமின்றி லட்சம் லட்சமாக அதில் பணம்  போட்டிருந்த ஜமீன்தார்களும், மகா ராஜாக்களும் கூட பெருத்த ஏமாற்றமடைந்தனர். முடிவில் பல வருடங்கள் கழித்து (1909ல்) மகா சங்கத்திற்கு நஷ்டமான தொகைக்கு டிவிடென்டாக ரூ. ஒன்றுக்கு 10 தம்பிடி வீதம், ரூ. 1112-1-4 மட்டும் கிடைத்தது. மற்றவை ரூ. 20,000மும் சொச்சமும் மகா சங்கத்தின் கைவிட்டு போய் விட்டது.

 

தலைக்கட்டு ஒன்றுக்கு ரூ. 1 தண்டலும்!

பிடி அரிசி வசூலும்!

 

இந்த திடீர் அதிர்ச்சியால் நம் தலைவர்கள் பெரும் ஏமாற்ற முற்றாலும் மனம் ஒடிந்து போகவில்லை. 18-11-1906ல் சென்னையில் கூடிய மகா சங்கக் கூட்டத்தில் சங்கத்திற்கு பணம் சேர்க்க வன்னியர் தலைக்கட்டு ஒன்றுக்கு ரூ. 1 வசூல் செய்வதென்றும் வன்னியர் குடும்பத்தில் தினசரி பிடி அரிசி தண்டுவதென்றும், தீர்மானித்து அதன்படியே தமிழ்நாடு பூராவும் வசூல் செய்யத் தலைப்பட்டு அவ்வழியே பணம் சேர்த்தனர்.

மேலும் இதை பின் தொடர்ந்தே எல்லா ஜில்லாக்கள் தோறும் நம் தலைவர்கள் ஜில்லா சங்கங்களை அமைக்கலாயினர். அச்சங்கங்கள் தோன்றிய வருடம், தேதி முதலிய விபரமும் அச்சங்கத்தின் அக்கால நிர்வாகஸ்தர்களாக இருந்த தலைவர்களின் பெயரும் அதன் விபரம் கீழே காணலாம்.

 

தஞ்சை ஜில்லா

வன்னிகுல க்ஷத்திரிய சங்கம்

 

01.04.1907ல் தஞ்சை ஜில்லாவைச் சார்ந்த மாயவரத்தில் மகா சங்கப் பிரதிநிதி வித்வான திரு. தி. சின்னைய்ய நாயகர் அவர்கள் தலைமையில் தஞ்சை ஜில்லா வன்னிகுல க்ஷத்திரிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்திற்கு கீழ் கண்டவர்கள், அன்று முக்கியஸ்தராக இருந்து சங்கத்தை வளர்த்தனர்.

தலைவர்                  மாயவரம் என். கோவிந்தசாமி நாயகர்

உப தலைவர்              தஞ்சாவூர் டாக்டர் சண்முகம் பிள்ளை

செயலாளர்                திருத்துறைப்பூண்டி குமாரசாமி ராயர்

 

தென்னாற்காடு ஜில்லா

வன்னிகுல க்ஷத்திரிய சங்கம்

 

14.06.1908ல் கடலூர் புதுபாளையத்தில் பகல் 1 மணிக்கு தென்னாற்காடு ஜில்லா வன்னிகுல க்ஷத்திரிய சங்கம் துவக்கப்பட்டது. சென்னை மகா சங்கத்தார் இச்சங்கத்தை  ஆதரித்து இதற்கு அங்கீகாரமளிக்க சென்னை எ. சொக்கலிங்க நாயகரை அனுப்பி வைத்தனர். இவருடைய தலைமையில் க்ஷ கூட்டம் நடைபெற்று பலர் பேசிய பின் தென்னாற்காடு ஜில்லா சங்கத்தை அமைத்தனர். இந்த ஜில்லாவில் இச்சங்கம் ஆரம்பித்த பிறகு தென்னாற்காடு மாவட்டத்தில் கூட்டம் நடத்துதல், கிளைச் சங்கங்களை ஆரம்பித்தால் போன்ற வேலைகளை இந்த ஜில்லா சங்கமே பொறுப்பு ஏற்று வேலை செய்ய ஆரம்பித்தது.

 

க்ஷ தென்னாற்காடு ஜில்லா வன்னிகுல க்ஷத்திரிய சங்கத்திற்கு கீழ் கண்டவர்கள் அன்று நிர்வாகிகளாக இருந்து பணியாற்றியுள்ளனர்.

 

தலைவர் :-                     பிச்சவரம் ஜமீன்தார்

சாமிதுரை சூரப்ப சோழனார்

 

விசேஷ உதவி தலைவர் :-      முகசா பரூர் ஜமீன்தார்

பாவாசா வீர சேகர முத்துகிருஷ்ணன் கச்சிராயர்

 

உதவி தலைவர்கள் :-           ஊற்றங்கால் ஜமீன்தார்

சாமியப்பா பரமேஸ்வர நயினார்

 

உதவி தலைவர்கள் :-           திருக்கணங்கூர் ஜமீன்தார்,‘                                      பெரியசாமி கச்சியராய துரை

 

காரியதரிசி :-                   பி.சி. சுப்பிரமணியம் பிள்ளை

பி.எ.பி.எல்., மஞ்சகுப்பம்

 

விஷேச உதவி காரியதரிசி :-    வி. குருசாமி ராயர்,

பரங்கிப்பேட்டை

 

உதவி காரிதரிசிகள் :-           வைத்திலிங்க ராஜா,

தேவனாம் பட்டிணம்

வி. கந்தசாமி படையாட்சி

சூரப்ப நாயகன் சாவடி

 

(இவர் மந்திரி ராமசாமி படையாட்சியாரின் பாட்டனார்)

 

தென்னாற்காடு ஜில்லா வன்னிய சங்கத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை நாம் ஆராய்ந்து பார்த்ததில், க்ஷ ஜில்லா சங்கத்தின் பொக்கிஷதாரர் பதவி, மந்திரி வேறு யாரிடமும் மாறியதாகக் காணோம். மந்தியாரின் பாட்டனாரான முத்தைய படையாட்சி அவர்கள் காலமாகின்ற வரைக்கும் ஜில்லா சங்க பொக்கிஷதாரராக இருந்திருக்கிறார். அவருக்கு பின் அப்பதவியில் அவருடைய குமாரான சிவ சிதம்பர படையாட்சி அவர்கள் இருந்திருக்கிறார். ஆக க்ஷ ஜில்லா சங்கத்தை வளர்த்ததில் முத்தையா படையாட்சியாரும் அவரது குமாரருமான சிவ சிதம்பர படையாட்சி அவர்களும் பெரும் பங்கெடுத்து வேலை செய்திருக்கின்றனர். சிவ சிதம்பர படையாட்சி காலமான பிற்பாடு அவருடைய குமாரான எஸ். எஸ். இராமசாமி படையாட்சி அவர்கள் இன்று அந்த ஜில்லா சங்கத்தின் தலைமை பதவியையே ஏற்று, சமூகத்திற்கு உழைத்து வருகிறார். ஆக தென்னாற்காடு ஜில்லா சங்கத்தில் சூரப்ப நாய்க்கன் சாவடி முத்தையா படையாட்சி அவர்களின் குடும்பம் செய்த  செய்து வரும் தொண்டு பொன் எழுத்துக்களால் பொறிக்கத் தக்கதாகும்.

 

செங்கற்பட்டு ஜில்லா வன்னிய சங்கம்

 

இந்த ஜில்லா சங்கம் 1910வது ஆண்டில் காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவராய பகத் ஜன சபை காரியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தை தோற்றுவிக்க மவுளிவாக்கம் திரு. முருகேச நாயகர், புன்னமை தியாகராய நாயகர் இருவரும் பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டனர். இச்சங்கத்திற்கு கீழ் கண்டவர்கள் அன்று நிர்வாகஸ்தராக இருந்து உழைத்திருக்கின்றனர்.

 

தலைவர்       :-         க.வே. கிருஷ்ணசாமி நாயகர்

காரியதரிசி     :-         அ. முருகப்ப நாயகர்

 

மற்றும் மேலே கண்ட ஜில்லா சங்கத்தோடு இணையாமல் அடியில் கண்ட உப சங்கங்களும் தனித்து நடைபெற்றிருக்கின்றன. அதாவது:-

ஊனைமாஞ்சேரி வன்னிய சங்கம்

(ஆரம்பம் 10.04.1918)

தலைவர்       :-         நாகப்ப நாட்டார்

காரியதரிசி     :-         வ. அரங்கசாமி நாயகர்

 

பூந்தமல்லி, பட்டு கிராம வன்னிய சங்கம்

(ஆரம்பம் 05.01.1920)

 

தலைவர்       :-         ஜி. நடராஜ நாயகர், பி.எ.

செயலாளர்     :-         மலைக்கொழுந்து நாயகர்

பொக்கிஷதார்   :-         ப.கோ. கிருஷ்ணசாமி நாயகர்

 

சோழங்கநெல்லூர் வன்னிய சங்கம்

(ஆரம்பம் 21.02.1920)

தலைவர்       :-          வி. வேலு நாயகர்,

காரியதரிசி     :-          எஸ்.கே. கோவிந்தராசு நாயகர்

 

கோவளம் வன்னிய சங்கம்

(ஆரம்பம் 13.01.1921)

தலைவர்       :-          கோ. கிருஷ்ணசாமி நாயகர்

காரியதரிசி     :-          கோ. தி. கெஜபதி நாயகர்

 

காஞ்சிபுரம் பல்லவராய

பக்த ஜன சபையின் வேலை?

 

 

  1. காஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலின் பெரிய கோபுரமான பள்ள கோபுரத்தில் (பல்லவ கோபுரம்) வழியாக உற்சவ காலங்களில் சுவாமி வெளி வரும் போது வன்னியர் சார்பாக சுவாமிக்கு முதல் மாலை மரியாதை செய்து தூப தீபம் கொடுப்பது. பிறகு கோயிலார் அளிக்கும் மரியாதையை ஏற்பது.

 

  1. வருடா வருடம் பள்ளி கோபுரத்திற்கு வெள்ளை அடித்து, பூசு வேலை செய்து செப்பனிடுவது.

 

இதனுடைய அர்த்தம் யாதெனில் மேற்படி ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலை வன்னியர் கட்டினது என்பதாகும்.

 

  • ••

 

 

கோயம்புத்தூர் ஜில்லா

வன்னிகுல க்ஷத்திரிய சங்கம்

 

1910வது ஆண்டில் கோயம்புத்தூர் ஜில்லா வன்னிகுல க்ஷத்திரிய சங்கம் கொடுமுடியில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தை அமைக்க பண்ணையக்காரர் சின்னசாமிக் கண்டர், பெரிதும் முயற்சி எடுத்து வேலை செய்தார். இச்சங்கத்திற்கு கீழ் கண்டவர்கள் நிர்வாகஸ்தர்களாக அன்று இருந்து உழைத்துள்ளனர்.

 

தலைவர்             :-    எம்.பி. கருப்பண்ண கண்டர்

காரியதரிசி           :-    ஆம். பூபதி பழனியப்ப நாயகர்

 

சேலம் ஜில்லா வன்னிய சங்கம்

 

சேலம் ஜில்லா வன்னிகுல க்ஷத்திரிய சங்கம் 1910வது ஆண்டில் ஆரம்பமாயிற்று. இச்சங்கத்தை அமைக்க எஸ். கந்தசாமி கண்டர் அவர்கள் பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார். இச்சங்கத்திற்கு கீழ்கண்டவர்கள் நிர்வாகஸ்தர்களாக அன்று இருந்து உழைத்து இருக்கின்றனர்.

தலைவர்       :-    எஸ். கந்தசாமி கண்டர், நஞ்சை இடையார்

உதவி தலைவர் :-    வே. மாரியப்ப செட்டியார், சேலம்

காரியதரிசி     :-    சு. அர்த்தநாரீச வர்மா, சேலம்

பொக்கிஷதாரர்  :-    பெ. இராமசாமி கண்டர்

இச்சங்கத்தின் காரியதரிசியமான ராஜரிஷி. திரு சு. அர்த்தநாரீச வர்மா அவர்கள், திருமணத்தை வெறுத்து பிரம்மச்சாரியாகவே (அன்றும், இன்றும்) இருந்து சேலம் மட்டுமின்றி மற்றும் பல ஜில்லாக்களுக்கும் சென்று சமூக பிரச்சாரம் செய்தது. இன்றும் செய்து வருவதானது மிகவும் பாராட்டதக்கதாகும்.

 

(சேலம் நஞ்சையிடையாற்றில் தற்சமயம் நடைபெற்று வரும் ‘கந்தசாமி கண்டர் உயர்நிலைப் பள்ளி’ மேலே கண்டவரால் தான் கட்டப்பட்டது. இதற்காக திரு. கண்டர் அவர்கள் தனது பெருஞ் செல்வத்தை பொது தர்மத்திற்கு எழுதி வைத்து இறந்து விட்டார்.)

 

  • ••

 

வடாற்காடு ஜில்லா வன்னிய சங்கம்

 

22.10.1917ல் இந்த ஜில்லா சங்கமானது வேலூர் காகித பட்டடையில் சென்னை மகாசங்க பிரதிநிதி திரு. ஆ சுப்பிரமணிய நாயகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைக்கப்பட்டது. காவேரிபாக்கம், சடகோப நாயகரும் பூபதி ஜெகநாதராஜாவும் நாட்ரம்பள்ளி  சாமுண்டி கண்டரும் இச்சங்கம் அமைக்க வேலை செய்தனர்.

இந்த ஜில்லா சங்கத்திற்கு அடியில் கண்டவக்ள் அன்று நிர்வாகஸ்தராக இருந்து சங்கத்தை வளர்த்தனர்.

தலைவர்       :-    ஆர்.சி. அனுமந்த கண்டர், நாட்ரம்பள்ளி

உதவி தலைவர் :-    எஸ். துரைசாமி கண்டர், சீலேரி

காரியதரிசி     :-    எஸ்- லிங்கைய கண்டர், இடையஞ்சாத்து

உததி காரியதரிசி:-    இராசு. பிள்ளை, வேலூர்

பொக்கிஷதாரர் :-     வ.பெ. அருணாசல நாயகர், வல்லம்

கணித பரிசோதகர் :- சாமுண்டி கண்டர், நாட்ரம்பள்ளி

இப்பெரியார்களில் ஒருவரான திரு. இலிங்கைய கண்டர் அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை க்ஷ ஜில்லா சங்கத்தின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்து வருகிறார். இதற்காக வன்னிய உலகம் இவரை மிகவும் போற்றுதல் வேண்டும். இன்னவரைப் போன்றே பழங்காலத் தலைவர்களில் ஒருவரான (காலஞ்சென்ற) திரு. சடகோப நாயகரின் புதல்வரான திரு. கே.எஸ். சாரங்கபாணி நாயகர் அவர்களும், தன் தந்தையைப் போன்றே இன்று சமூகத்திற்கு இடைவிடாது உழைத்து வருகிறார். நாம் இவரது குடும்பத்தையும் போற்றுதல் வேண்டும்.

(குறிப்பு :- வடாற்காடு ஜில்லா சங்கம் 1917ல் ஏற்பட்ட போதிலும் இதற்கு முன்னதாக க்ஷ ஜில்லாவில் காவேரிபாக்கம் தூசி போன்ற பல இடங்களில் பிரதேச சங்கங்கள் அமைத்து வேலை செய்திருக்கின்றன. – ஆ-ர்)

 

  • ••

சென்னை வன்னிகுல க்ஷத்திரிய சங்கம்

 

01.08.1920ல் சென்னை வன்னிகுல க்ஷத்திரய வாலிபர் சங்கம் சென்னை இராயபுரத்தில் ஆதம் சாயு வீதி, 77, நெம்பருள்ள இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கீழ்கண்டவர்கள் இச்சங்கத்திற்கு அன்று நிர்வாகஸ்தர்களாக பொறுப்பேற்று பணிபுரிந்தனர்.

 

தலைவர்       :-    எம். ஏகாம்பர நாயகர்

காரியதரிசி     :-    ப. இராஜரத்தின நாயகர்

பொக்கிஷதார்   :-    சி.வி. ஜெயராம் நாயகர்

 

இச்சங்கத்தார் சென்னை நகரத்தில் பல வேலைகளை செய்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் அளிப்பது, முதியோர் கல்வி, இரவு பாடசாலை நடத்துவது, வாசகசாலை அமைத்து பல வேலைகளை செய்துள்ளனர் மற்றும் சென்னையிலுள்ள வள்ளல் பி.டி.லீ. செங்கல்வராய நாயகர் கைத்தொழில் சாலையிலும், அவரது அனாதை ஆசிரமத்திலும் சேர வரும் நம் குல மாணவர்களுக்கு உதவி அளித்தல், க்ஷ நாயகரின் தர்ம பண்டிலிருந்து உபகார சம்பளம் பெற, நம் குல  மாணவர்களுக்கு சிபாரிசு செய்தல், மற்றும் சென்னையிலுள்ள நம் குல கோவிந்து நாயகர் அவர்களின் தர்ம நிதியிலிருந்து நடைபெரும் கோவிந்து நாயகர் பாடசாலையில் நம் குல மாணவர்களை  சேர்த்தல் போன்ற வேலைகளை செய்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தியை கண்டு பேச வந்த தென்னாப்பிரிக்க காங்கிரசின் தலைவர் திரு. ஜி. மோகாம்புரி நாயகர் அவர்கள் 11.04.47ல் சென்னை வந்த போது சென்னை சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலை பள்ளியில் இச்சங்கத்தாரால் அவருக்கு ஓர் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சங்கத்தின் வெள்ளி விழா (25வது வருட கொண்டாட்டம்) 16.05.48ல் சென்னை மெமோரியல் ஆலில் திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்துள்ளது

 

  • ••

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu