மகா சங்கத்தாரின் அன்றைய வேலைகள்?

 

அன்றைய மகா சங்கத்தின் நிர்வாகிகள் சங்கத்தை அரசியல் கட்சிகளில் சம்பந்தப்படுத்தவில்லை. அரசியல் விஷயத்தைப் பற்றியும் அக்கரை கொள்ளவில்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம் தம் குல மக்களிடத்தில்,

 

  1. சுத்தமாக இருத்தல்
  2. பூணூல் அணிதல்
  3. தெய்வம் தொழுதல்
  4. குல ஒழுக்கம்
  5. ஒற்றுமை
  6. கல்வி போதித்தல்

 

ஆகிய இந்த விஷயங்களிலே தான் சங்கத்தினுடைய முழு கவனமும் செலுத்தப்பட்டு வேலைகள் அன்று நடைபெற்று வந்திருக்கின்றன.

 

  • ••• •

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மகா சங்கத்தார் நடத்தும் சத்திரங்கள்

 

இதுவன்றி அன்று நம் முன்னோர்கள் பல ஊர்களில் அதாவது திருக்கோயில்கள் உள்ள ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறும் போது நம் குலத்தவர்கள் வந்து தங்குவதற்கு பல சத்திரங்களையும் கட்டி நிர்வகித்து இருக்கின்றனர். முறையே:-

  1. மைலாப்பூர்
  2. திருவொற்றியூர் (சென்னை)
  3. காஞ்சிபுரம்
  4. திருக்கழுக்குன்றம்
  5. திருப்போரூர்
  6. திருவண்ணாமலை
  7. ஸ்ரீபெரும்புதூர்
  8. அனுமந்தபுரம் (செங்கற்பட்டு)
  9. கும்பகோணம்
  10. திருத்தணி
  11. பழனி
  12. விருஞ்சிபுரம் (வட ஆற்காடு)
  13. தேவூர் (கோவை)
  14. உறையூர் (திருச்சி டவுன்)

 

இன்னும் பல, இவைகள் இன்றும் மகா சங்கத்தாரின் நிர்வாகத்திலும் பல அப்பிரதேச சங்கத்தாரின் நிர்வாகத்திலும் இருந்து வருகின்றன.

(குறிப்பு – இன்று மேற்படி ஊர்களுக்குச் செல்லுகிறவர்கள், அச்சத்திரங்களில் சென்று தங்கலாம்)

  • ஆசிரியர்
  • ••• •

 

 

 

 

 

மகா சங்கத்தார் நடத்தும் பாடசாலைகள்

 

இதற்காக அவர்கள் பல இடங்களில் பாடசாலைகளை நடத்தி இருக்கின்றார்கள். முறையே:-

  1. எட்டியப்ப நாயகர் வன்னிய சங்க பாடசாலை

பார்க் டவுன் சென்னை

  1. தியாகராய நாயகர் வன்னிய சங்க பாடசாலை, காஞ்சிபுரம்
  2. தியாகராய நாயகர் வன்னிய சங்க பாடசாலை

திருக்கழுக்குன்றம்

  1. கா. கோபால நாயகர் வன்னிய சங்க பாடசாலை

மைலாப்பூர், சென்னை

  1. கா. கோபால நாயகர் வன்னிய சங்க பாடசாலை

இராயபுரம், சென்னை

  1. ம. வெங்கடசாமி நாயகர் வன்னிய சங்க பாடசாலை

திருக்குமுளம்

  1. பா.செ. இலட்சுமண நாயகர், சின்னம்மாள்

வன்னிய சங்க பாடசாலை, காட்டுப்பாக்கம்

  1. வன்னிய சங்க பாடசாலை, நுங்கம்பாக்கம், சென்னை
  2. வன்னிய சங்க பாடசாலை, காயார்
  3. வன்னிய சங்க பாடசாலை, கல்வாய்
  4. வன்னிய சங்க பாடசாலை, காரணை, புதுச்சேரி
  5. வன்னிய சங்க பாடசாலை, மதுராந்தகம்

இவைகளில் சில இன்று மறைந்தும் பல நடந்தும் வருகின்றன.

 

இராயபுரம் கா. கோபால நாயகர் வன்னிய சங்க பாடசாலையில் நாம் ஆரம்ப பாடம் அதாவது அ, ஆ. இ. ஈ. கற்றது.

  • வ. செயசந்திரன்.
  • ••• •

 

 

 

 

மகா சங்கத்தின் சிறப்பு விழாக்கள்

 

நிற்க, மகா சங்கத்தில் அன்று இரு பிரிவினர்கள் நிர்வாகத்தில் இருந்த போதிலும் நிர்வாகப் பிடி அனைத்தும் (கோபால நாயகருக்குப் பிறகு) திரு. மு. இராசு நாயகர் அவர்களிடம் தான் இருந்து வந்தது. மகா சங்கத்தின் வேலைகளுக்கான செலவுக்கு தம் சொந்த பணத்தை அவ்வப்போது இவர் தாராளமாக அன்று கொடுத்து உதவியுள்ளார். மகா சங்கம் வளர்ச்சி பெற அன்று கா. கோபால நாயகர் பொறுப்பேற்று நடத்தியது போல் அவருக்குப் பிறகு இப்பொறுப்பை, திரு. மு. இராசு நாயகர் அவர்கள் தான் ஏற்றுக் கொண்டு சங்க வேலைகளை செய்து வந்துள்ளார். 1928வது ஆண்டிற்குப் பிறகு இன்று வரையில் இவர்தான் மகா சங்கத்தின் போஷகராக இருந்து வருகிறார். ஆக மகா சங்கம் தோன்றி வளர்த்ததில் 3 போஷகர்களுண்டு. அதில் 1. கா. கோபால நாயகர், 2. கா. கோ. பலபத்திர நாயகர், 3. மு. இராசு நாயகர் ஆக இவர்களுக்கு வன்னிய உலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

 

நிற்க, மகா சங்கம் 08.04.1888ல் தோன்றியது என்று முன்பே கூறியிருக்கிறோம். இதனுடைய 25வது வருட கொண்டாட்டம் அதாவது வெள்ளி விழா 1913ல் அன்று திருச்சி ஜில்லாவில் சேர்ந்திருந்து, இன்று சேலம் ஜில்லாவிற்கு மாற்றப்பட்டுள்ள நஞ்சையிடையாற்றில் சிறப்பாக நடந்தேறியுள்ளது. திரு. எஸ். கந்தசாமி கண்டர் அவர்கள் இவ்விழாவை பொறுப்பேற்று நடத்தினார்.

 

இதற்கு பிறகு மகா சங்கத்தின் தங்க விழா (50வது வருட கொண்டாட்டம்) 05.05.1940ல் சென்னை மைலாப்பூரில் நடைபெற்றது. இவ்விழாவை திரு. மு. இராசு நாயகர் பொறுப்பேற்று அதி விமரிசையாக நடத்தி வைத்தார்.

நிற்க, இம் மகா சங்கத்தின் வைர விழாவை நடத்த வேண்டிய காலமும், நெருங்கிக் கொண்டு வருகிறது. இத்தமிழ்நாட்டில் ஏன்? இந்தியாவிலேயே எந்த ஒரு சமூகத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் கூட, வைர விழா நடந்ததே கிடையாது. ஆகவே நமது தாய் சங்கமான மகா சங்கத்தின் வைர விழாவை அதி விமரிசையாக நாம் கொண்டாட வேண்டும்.

 

இதற்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலவாகலாம். சென்னை இராயபுரம் திரு. மு. இராசு நாயகர் தான் இதை ஏற்று சிறப்புடன் நடத்த பொறுப்பும், அனுபவமும் கொண்டவர். இவர் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் தனது சொந்த பணத்தையும் எடுத்து செலவு செய்யக்கூடிய வள்ளல்களின் வரிசையில் வந்தவர். மேலும், இவர் மகா சங்கத்தின் பழங்கால தலைவர்களில் மிகவும் தலைசிறந்தவர். ஆகவே இப்பெரியார் வைரவிழாவை பொறுப்பேற்ற சிறப்புடன் நடத்திக் கொடுக்க வேண்டுமென்று நாம் வன்னிய மக்களின் சார்பாக அவரை வணங்கி கேட்டுக் கொள்ளுகிறோம்.

 

– முடிவுற்றது –

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மகா சங்கம், மாகாண சங்கம் தகராறு

 

இச்சமயத்தில் மகா சங்கத்தின் மூல போஷகராக இருந்த கா. கோபால் நாயகரும், அவருக்குப் பின் வந்த பலபத்திர நாயகரும் காலமாகிவிட்ட பிறகு மகா சங்க நிர்வாகம் சிறிது தடைப்பட்டது. சங்கத்தில் பல அபிப்பிராயபேதங்கள் ஏற்பட தலைப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில், மகா சங்கம் அரசியலை தலையிட வேண்டுமென்று பலர் விரும்பினர். பலர் இதை ஏற்கவில்லை. இதனால் ஒரு பிரிவினர் மகா சங்கத்தில் இருந்து பிரிந்து 1928வது ஆண்டில் சென்னை மாகாண வன்னிகுல க்ஷத்திரிய சங்கம் என ஓர் சங்கத்தை ஏற்படுத்தனர். இதற்கு மூல காரணமாக இருந்து வேலை செய்தவர்கள், சுதேசமித்திரன் உதவி ஆசிரியர் திரு. தே. உலகநாத நாயகர், டி.எஸ். நடராசம் பிள்ளை பி.எ.பி.எல்., எம்.எ. மாணிக்கவேலு நாயகர், ஆ. சுப்பிரமணிய நாயகர், வி. கோபால்சாமி நாயகர் (மாடல் பிரஸ்) ஆகும்.

இதன் காரணமாக அன்று நாட்டில் இரு சங்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு அதி தீவிரமாக வேலைகள் செய்ய தலைப்பட்டன. இருப்பினும் இதை பல பெரியவர்கள் விரும்பவில்லை. இரண்டையும் ஒன்றாக சேர்க்க வேண்டுமென்று முயற்சித்தனர். சென்னை இராயபுரம் திரு. மு., இராசு நாயகர் அவர்கள் இதற்கு மூல காரணமாக இருந்து, முன்னின்று வேலை செய்து, இரண்டு சங்கத்தாரையும் சமாதானப்படுத்தி, புதிய சங்கத்தை கலைக்க வைத்து மகா சங்கத்தின் மீண்டும் ஒற்றுமையை உண்டாக்கினார். 1928வது ஆண்டில் வன்னிய உலகம் இரண்டு கூறுகளாக பிரிந்து அழிய இருந்ததை தடுத்து கார்த்த பெருமை திரு. மு. இராசு நாயகர் அவர்களையே சாரும். இதற்காக நாம் அவருக்கு என்றும் கடமைப் பட்டுள்ளோம்.

  • ••• •

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu