பார்ப்பாரும் வேளாளரும் பறித்துக் கொண்ட
வன்னியரின் மன்னவேடு ஊர்கள்
1882-க்குப் பிறகு
அ. வேங்கடாசல நாயகரால் எழுதப்பட்டவை
கடிதம் – 1•
(தத்துவ விவேசினி, பிப்ரவரி 4, 1883, பக்கம் 255)
ம.ள.ள.ஸ்ரீ தத்துவ விவேசினி பத்திராதிபரவர்களுக்கு வந்தனம்.
இதனடியில் எழுதியதை தங்கள் பத்திரிகையில் பதிப்பிக்கும்படிக் கோருகிறேன். அதாவது,
மகா கனம் பொருந்திய தர்மப் பிரபுவாகிய கவர்னர் ஜெனரல் ரிப்பன் துரையவர்கள் இந்து தேசத்தில் பயிரிடும் ஏழைக் குடிஜனங்கள்…. …. …. முதலானதுக்கில்லாமல் அயலில் வட்டிக்கு வாங்கியும் தானியத்…. …. …. விலைப்படிக்கு உயர்த்தியும்…. …. …. குப்பத்தில் தானியமாய் கடன் கொடுத்தவர் கேட்கிறபோது கொடுக்கிறதாயும் வாங்கி சாகுபடி பண்ண தானிய…. …. …. அளந்துவிட்டு வாங்கின பணத்துக்கே குறைகின்ற…. …. …. கடன்காரராகி நாசப்படுகிறார்களென்று தெரிந்து வேண்டியவர்களுக்கு அசையாப் பொருள் அடமானத்தின் பெரில் அறையே அறைக்கால் வட்டிக்கு…. …. …. லாமென்று கலெக்ட்டர்கள் கச்சேரிகளில்…. …. …. கர்னாபிஷேகம்…. …. …. பிருந்தாலும் கஷ்டப்பட்டுச் சாகுபடி பண்…. …. …. விருத்தி பண்ணுகிற அனேக லட்சம்…. …. …. கொஞ்சமேனும் பிரையோசனமு…. …. …. ல்லை யென்று முன் அனுபவ திருஷ்டாந்தங்களினால் தெரிய வருகிறது. அதாவது, சரு (45) வருஷத்துக்கு முன் லோகல் கவர்ன்மெண்டு கம்பெனியார். ஏழைக் குடிகள் சாகுபடி பண்ண நிர்வாகமற்று, ஏர், மாடு, விதை, கலப்பை, காரில்லாமல் காடு கறம்பாய் நிலங்களைப் போட்டுவிட்டு, சீவனத்தாக்ஷியா யிருக்கிறார்கள் என்றும், தீர்வை விருத்திக்கும் இல்லை யென்றும், சீர்படுத்த வாரகம் என்று குடிகளுக்குக் கொடுக்க உத்திரவாகி நடந்தது. ஆனாலும் குடித்தனக்காரன் தனக்கு ரூபா உ0, ங0 (20, 30) வேணுமானால் கிராமத்தான் கணக்கன் முதலியவர்கள் தயவிருந்து ரிவினியு இன்ஸ்பெக்டரிடத்தில் எழுதி வைக்க வேணும். தாசில்தார் தயவிருந்து கலெக்டருக்கு ரிப்போர்ட்டு எழுத வேண்டியது. சிரஸ்தா (Serishtadar) தயவிருந்து கலெக்ட்டருக்குச் சொல்லி பணங்கொடுக்க காஷ்கீப்பருக்கு உத்தரவு பண்ண வேண்டியது. காஷ்கீபருக்கு தயவிருந்து திருப்படிக் காமலுடனே கொடுக்க வேண்டியது. இத்தனை பேர்களுடைய தயவுக்கும் வாங்குகிற பணத்தில் பாதிடணம் வரையில் நபர் நபராய் கொடுத்துவிட்டு மிகுந்த மீதி கொண்டுபோய் தன் வேலைக்கு எட்டுமெட்டாமல் நஷ்டப்பட்டு அவன் கடன்காரனாக, அவனை வருத்தி, அவனிடத்திலிருந்த மட்டுக்கும் சொத்தை சட்தி செய்து வசூல் பண்ணி அபகரித்தும், நிர்வாகம் உள்ளவனையும் லியவெழுப்பி வாரகம் வாங்கச் சொல்லி மேற்கண்டபடி அவனிடத்திலிருந்து அடவரித்தும், வாரகம் அபாரியாய் கொடுக்கச் செய்தும் வாங்கின பணத்தில் கால்டாகங்கூட செல்லுவராமலும் பணம் வாங்கினவன் பிராமணனா யிருந்தால் அவனை நாதால் என்று வாங்கின பணத்தை தள்ளிவிடச் செய்தார்கள். இதனால் மெற்படி கம்பெனியார் வெறுப்படைந்து ஏழைகளுக்குப் பண உதவி பண்ணுகிறதை நிறுத்திவிட்டார்கள். இப்போது அடுத்துப்போன கருப்பில் (பஞ்சத்தில்) விஸ்தாரம் ஜனங்கள் நாசமாகிறதைக்கண்டு கவரன்மெண்டார் மனஞ்சகிக்காமல் திடுக்கிட்டு பரிதாபப்பட்டு ஐரோப்பா முதலான பிரதேசங்களிலும், இந்தியாவில் தனவான்களிடத்திலுமிருந்து பொருள் சேகரம் பண்ணி றிலீபுபண்டு ஏற்படுத்தி அந்தந்த கிராமங்களில் ஏழைகளுக்கு நபர் கதியாய் கஞ்சிக்குக் கொடுக்கிறதன்று உத்தியோகஸ்தரிடத்தில் அனுப்பிக் கொடுக்கச் சொன்னபோது ச(4) பேருக்குக் கொடுத்து ச(40) – பேருக்குக் கொடுத்ததாய்க் கணக்கெழுதி விஸ்தாரம் தாங்கள் அகரித்துக் கொண்டு ஏழைகளுக்குக் கொடுக்காததினால் பட்டினியாய்க் கிடந்து அனேகர்களுமாண்டார்கள். அப்படிக் கொள்ளையிட்ட தாசில்தார் முதலான வர்கள் பெருமோசம் பண்ணது தெரிந்து சிட்சை பண்ணப்பட்டார்கள் இதுகளிப்படியிருக்க, அசையாப் பொருளை அடமானம் வைக்கிறதென்றால் மிராசு, மிட்டா, சுறோத்திரியம், சாக்கீர், அக்கிறார, கோயில் மானிய மொத்தப்பட்டாதாரரென்று சொல்லப்பட்ட பிரட்டு பாத்தியஸ்தருக்குள் சிக்கியிருக்கிற ஏராளமாய்ப் பயிரிடும் சொகவாசி பாயக்காரிகளென்ற குடிகள் க – க்கு உ (1க்கு 2) குறைந்த குடிவாரத்தை வாங்கிக் கொண்டும் வந்தால் நில பாத்தியமென்ற பட்டா வில்லாத குடிப் பிரசைகள் எதை அடமானம் வைப்பார்கள்? பிரட்டு பாத்தியஸ்தர்கள் ஏழைகளையும் சர்க்காரையும் கொள்ளையிட்டுத் தனவந்தர்களா யிருக்கிறவர்கள் ஏன் வட்டிக்குப் பணம் வாங்குவார்கள்?
A.V.
-பாயக்கார ஏஜண்டு
- •••
கடிதம் – 2*
(தத்துவ விவேசினி, பிப்ரவரி 25, 1883, பக்கம் 279)
அப்படி மிராசு, மிட்டா, சுறோத்திரியம் முதலான பிரட்டு பாத்தியஸ்தர்கள் வட்டிக்குப் பணம் வாங்கினாலும், தங்களுக்குள்ளடங்கிய பயிரிடுங்குடிகளைக் கட்டாயப்படுத்தி, தங்களுக்கிஷ்டமான மட்டும் வட்டி போட்டுக் கொடுத்து நாசம் பண்ணுவார்கள். நம்மையாளும் தர்மப் பிரபுக்கள் ஏழைகளுக்கென்று பண்ணவுத்திரவானது (முன் பத்திரிகையில் காட்டிய திருஷ்டாந்தப்படி) ஏழைக் குடிகளுக்குப் பிரையோசனமில்லாமற் போகிறது. கஅசுச (1864) கவர்னராகவிருந்த கனம் பொருந்திய டெனிசன் துரையவர்கள் (Sir William Dennison (1861-1863)) என்னால் எழுதப்பட்ட பிரிட்டீஷனாலும், பத்திரிகைகளினாலும் ஷெ பிரட்டு பாத்தியஸ்தர் களால் சர்க்காருக்கு விஸ்தாரம் தீர்வை நஷ்டமும், நமது ஏழைக்குடிகளில் அனேகம் லட்சம் ஜனங்களுக்குத் தீராத் துன்பம் உண்டாயிருக்கிறதென்றும் தெரிந்து, மிட்டா கொடுத்தபோது கவரன்மெண்டார் மோசம் போனார்களென்றும், இந்த செங்கற்பட்டு ஜில்லா பட்டா கொடுத்தபோது பாயக்காரிகள் ஏமாந்தார்க ளென்றும் கெசட்டில் விளம்பரப்படுத்தி, மேற்கண்ட பிரட்டு பாத்தியங்களை யெல்லாம் எடுத்து சர்க்காரில் சேர்த்துக்கொண்டு, நபர்கதி, றயத்துவாரி பட்டா பண்ணிவைக்கிறதென்று உத்திரவு பண்ணினார்கள். கஅசுச – ஹத்தில் அதன்படி நடத்தி வைக்க ஆரம்பித்தபோது ரிவின்யு போர்ட்டார் உதவி பண்ணாமல் போனார்களென்று விசனப்படுகிறோமென்று, கெசட்டிலும் கவரன்மெண்டார் பிரஸித்தப்படுத்தினார்கள். ஆகிலும் ரிவின்யு போர்ட்டார் உதவி பண்ணாமல் போனது அநியாயந்தான். செங்கற்பட்டு ஜில்லா முதலான எல்லா ஜில்லாக்களின் நிலங்களையும் ஆதி அரசரிலிருந்து எந்த கவர்ன்மெண்டாரும் குடிகளுக்குக் காணியாகவாவது கிராமங்களாயாவது தாலுக்காவாயாவது ஜில்லாக்களயாவது விக்கிறையம் பண்ணியிருந்தாலல்லவோ இவர்களுக்கு சுவந்திர பாத்தியமுண்டு அப்படி விக்கிறையமும் பண்ணவில்லையே. காடு கறம்பு வெட்டி செய்னேத்தி பண்ணி அனுபவித்து வருகிறவனுக்கு சாகுபடிக்கு பண்ணுகிற வரையில் போக அவன் விட்டுவிட்ட நிலங்களுக்கு அதை யெவன் சாகுபடி பண்ணுகிறே னென்றானோ அவனுக்கு விட்டுக்கொண்டு வந்ததே தவிர, அவன் அந்நிலங்களை விற்கவும், அடமானம் வைக்கவும் பாத்தியமில்லாமலிருந்தது.
இப்போது இருக்கிற சமீன்தாரிகள் பழைய வழக்கம்போல கிராமக்குடிகள் சாகுபடி பண்ணுகிற நிலத்தை மேற்படி குடிகள் விற்கிறையம் பண்ணவும் அடமானம் வைக்கவும், பாத்தியமில்லாமல் இருக்கிறதினாலும் தெரிந்துக் கொள்ளலாம். காஞ்சி தேசத்தையாண்ட தொலாதானப் பல்லவராயன் இந்த ஜில்லாக்களுள் அடங்கிய கிராமங்களை எ(61) – பங்காக்கி, அதில் ச (4) பங்கு கிராமங்களை மன்னர் வேன்று வன்னிய சாதியாருக்கும், உ (2) பங்கு கிராமங்களை நத்தமென்று வெள்ளாழ சாதியாருக்கும், க (1) பங்கு கிராமத்தை அக்கிறாரமென்று பார்ப்பார சாதியாருக்கும் விட்டு, அந்தந்த சாதியாருடைய கிராமமென்று விளங்கும்படி எல்லைக் கல்லுகளின் குறிகளும், காணிக்கழி ஏற்பாடுகளும் நிலக்குறிப்பு அடையாளங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்போதும் அவற்றைப் பார்க்கலாம். அந்தப்படி அந்தந்த சாதியாரே பொதுப் பாத்திய மாயனுபவித்து வந்தார்கள். இப்படிப் பங்கில்லாத பசுங்கூர் கிராமங்களா யிருந்தால் நாம் அபகரிக்க இடமில்லை என்று இந்த துரைத்தனத்தில் பார்ப்பார் முயர்ச்சி பண்ணி அறிதிக் கூறாகச் செய்து, பங்குகளென்று ஏற்படுத்தி வன்னியர்களுடைய ச – பங்கு கிராமங்களில் வளமுள்ளதாய மூணரை பங்கு கிராமங்களைப் பலப்பல வழியாய் அபகரித்தார்கள். அப்படி ஆதியிலிருந்த பொது ஏற்பாட்டைக்கெடுத்து அபகரித்து இதுவரையில் அவாள் அனுபவித்தது போக, இது முதலாகவாவது ஆதிப் பொதுப் பாத்தியப் படிக்கு அந்தந்த சாதியார் கிராமங்களை அந்தந்த சாதியாருக்கே ஏன் காயப்படுத்தக் கூடாது? அப்படிக் காயப் படுத்தக் கூடாவிட்டாலும் டிரிவிலியன் கவர்னர்? (டிரிவிலியன் கவர்னர் (Sir Charles Treveylon 1859 – 1860) அபிட்பிராயப் படிக்கும், டெனிசன் கவர்னர் அவர்கள் மினிட் படிக்கும், ஜி. பான்புரி துரையவர்கள் ரிவின்யு செட்டில்மெண்டு நிப்போர்ட்டு படிக்கும் அந்தந்தக் குடிகளின் கைப்பற்று நிலத்தை அந்தந்த குடிகளின் பேரிலாவது றயஸ்துவாரி பட்டா பண்ணி வைக்கலாமே. அதுவும் ஏன் கூடாது? மோசவிதமாய் சமையம் பார்த்து கவரன்மெண்டார் இடத்தி லிருந்து பிரட்டிக்கொண்டிருக்கிற மிட்டா, சுறோத்திரியம், சாக்கீர், எனாம், மொத்த பட்டா, அக்கிறார மானிய முதலானதை உத்திரவுகள் ஆகியிருக்கிறபடி கட்டிக்கொண்டு ஏன் றியத்துவாரி பட்டா பண்ணக் கூடாது? திருடுகிறவனை மாமூலாய்த் திருடுகிறவனென்று விட்டு விடுகிறதில்லையே! அதிலும் அதிகமானது மோசம். இப்படி மோசத் தினால் அபகரித்ததைத் தெண்டித்துச் சேர்த்துக்கொள்ள வேண்டிய திருக்க தெண்டிக்காவிட்டாலும் சனங்கள் சீவிக்க யிதர ஜில்லாக்களைப் போல நிலங்களைச் சாகுபடி பண்ணுகிறகுடிகள் பட்சம் செய்யாமல் பிரஜைகளை நாசப்பட விட்டிருக்கிறதுதான் நீதியோ!
A.V.
– செங்கற்பட்டு ஜில்லா பாயக்காரி ஏஜண்டு
- ••
கடிதம் – 3*
(தத்துவ விவேசினி, மார்ச் 4, 1883, பக்கம் 287)
(இதற்கு எழுதியவரே பொறுப்பு)
ஆங்கிலோ கவர்ன்மெண்டார் இந்த செங்கல்பட்டு ஜில்லாவை நவாப்பிடத்தில் இருந்து வாங்கிக்கொண்ட காலத்தில் இத்தேசத்தின் ரிவின்யு விஷயம் சுத்தமாய் அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. அப்போது நவாப்பி த்திவிருந்த மாத்துவப் பிராமணர்கள்தான் உத்தியோகங்களி லுயர்ந்தவர்கள். தங்களுக்காகவும் தங்களினத்தார்களுக்காகவும் மற்றப் பிராமணர்களுக்காகவும் சுறோத்திரியம், சாக்கீர், எனாம், அக்கிறாரமானியம் கோயில் மானியம், மிராசு (நிலவுடைமை) மிட்டா நாட்டுவார்சறோத்திரியமென்று ஸ்தாபித்துக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்குப் பின் தொடர்ந்து எழுதப் படிக்கத் தெரிந்து கச்சேரிக்குப் போக்குவரத்தாயிருந்த வெள்ளாளருக்குக் கொஞ்சம் கைகாட்டிவிட்டு முழுதும் அபகரித்தார்கள். அப்போது கவரன்மெண்டாருக்கு ரிவின்யு விஷயங்களைத் தெரியச் சொல்லுவார்களில்லை. வன்னியர்கள் அனேகராய் இருந்தபோதிலும் கவரன்மெண்டார் பார்ப்பார் விஷயத்தில் நம்பிக்கை வைத்திருந்த படியால், இவர்களைக் கச்சேரிக்கு வரப் போக வொட்டாமலும், யாதொன்றையும் சொல்லவொட்டாமலும் தடுத்துத் தாங்கள் அவர்களுக்கு அனுகூலமாய்ப் பேசுவது போல நடித்து, இராசாங்க பயங்கரத்தைக் காட்டி. அவர்கள் மறையவிருக்கப் போதித்திருந்த படியால் அவர்களும் ஆனமட்டுக்குமாவது சொல்லுகிறதற்கில்லாமல் போச்சுது. கவரன்மெண்டாரும் பொறுத்து விசாரணை செய்திருந்தால் இவ்வளவு கேடுபாடான மோசத்துக் கிடமாய்ப் போயிருக்க மாட்டார்கள். செங்கற்பட்டு ஜில்லா நிலங்களைப் பட்டா கொடுத்தபோது வன்னியர்களும் ஏமாந்து போகமாட்டார்கள். மற்ற இதர ஜில்லாக்களில் நிலங்களைப் பட்டா கொடுத்தபோது, அந்த ஜில்லாக்களில் பார்ப்பார் அடர்ந்து இராததினாலோ கலெக்டர்கள் சரியாய் நடத்தினதினாலோ குடிகள் பேருக்கு றயத்துவாரி பட்டாக்களாச்சுது. இந்த ஜில்லாவில் பார்ப்பார் அடர்ந்திருந்த படியினாலே வந்திருந்த கலெக்டர்களை ஸ்தோத்திரஞ் செய்து, கிராமம் கிராமங்களாய் மடக்கிக் கொண்டனர். லார்ட் பெண்டிங்கு துரை நாளில் இந்தச் செங்கற்பட்டு ஜில்லாவை நவாப்பு சாக்கீர் கொடுத்தபோது நவாப்ட … …. ….. … மை பண்ணிக் கொண்டு இந்த ஜில்லா முழுமையும் சுறோத்திரியம், சாக்கீர், எனாம். அக்கிறாரமானியம் கோயில் மானியம்… …. ….. … மிட்டா, நாட்டுவார் சுறோத்திரியம், மீராசெ… …. ….. … ரார்களென்று தெரிந்துதானோ மற்ற… …. ….. … தேசத் துரோகம் செய்தவர்… …. ….. … லிருந்த மாத்துவ பிராமணாளை உத்தியோகத்திலிருந்து நீக்கி, மற்ற சாதிப் பிராமணாளை… …. ….. … வைத்தார்கள். … …. ….. … மாத்துவப் பார்ப்பார்கள் சித்தூர் ஜில்லாவிலிருந்து குடியேறி வள்ளிய குடிகளுடைய மன்னர் வேடு கிராமங்களில் நுழைந்துகொண்டு மோகந்திர… …. ….. … அனேகம் கிராமங்களைத் தாங்களும் அபகரித்து இதர பார்ப்பாருக்கும் பிடுங்கிக் கொடுத்து, மிராசு பாத்தியமென்று மோசவிதமாய் ஸ்தாபித்துக் கொண்டார்கள். கஅரு0 (1850) ஹத்துக்குப் பின் மேற்படி ஜில்லாவுக்கு கலெக்டராய் வந்த மிஸ்டர் கிறீன் துரையவர்கள் இந்த ஜில்லா எவ்விதத்திலும் மிராசு பாத்தியமுண்டாயிருக்கிறதா இல்லை. இந்தப் பிரட்டு பாத்தியத்தை யெடுத்துவிட்டு றயத்துவாரி பட்டா பண்ணினால் குடிகள் க்ஷேமப் படுவார்களென்று எழுதினபடி, கவரன் மெண்டாரும் ஒத்துக்கொண்டு மிராசைத் தள்ளி றயத்துவாரி பட்டா பண்ணப்பட்டு நடந்தேறி வருகிறது. இந்தச் செங்கற்பட்டு ஜில்லாவில் நெருங்கிப் பெருகி இருக்கிற பார்ப்பார்கள் இங்கிலீஷ் பாஷையை மிகுதியும் படித்து முக்கியமான உத்தியோகங்களிலேறி தனவான்களும் கனவான்களுமாயிருந்து மிரட்டிக் கொண்டு மிராசு முதலான பிரட்டு பாத்தியத்தை நிலைக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். வெள்ளாழரும் அவர்களுக்கு உடன்பட்டவர்களாய் கூடிக் கொண்டிருக்கிறார்கள். கவரன்மெண்டார் நெடுநாளாய் எண்ணங் கொண்டும் முக்கியமாய் கவர்னர் திரிவிலியன் துரையவர்கள் அபிப்பிராயப் படிக்கும், கவர்னர் டெனிசன் துரையவர்கள் இந்த ஜில்லாவில் கஷ்டப்பட்டு சாகுபடி பண்ணி சர்க்காருக்குத் தீர்வையும் பிரஜைகளுக்கு சீவாதாரமுமான தானிய உற்பத்தியும் பண்ணுகிற லட்சா லட்சம் குடிகள் நாசத்தையடைகிறார்க ளென்று ஷெ மிராசு முதலான பிரட்டு பாத்தியங்களையெடுத்துவிட்டு றயத்துவாரி பட்டா பண்ணுகிற தென்று உத்திரவு பண்ணி நடத்தின காலத்திலும் இந்த ஜில்லா சப்கலெக்டராயும், எட் (தலைமை) கலெக்டராயுமிருந்து, மிகுந்த அனுபவம் பொருந்தி ரிவின்யு செட்டில்மெண்டு பண்ண ஜி. பான்புரி துரையவர்கள், இந்த ஜில்லா மிராசு பாத்தியம் எவ்விதத்திலும் இல்லையென்று ரிப்போர்ட்டு பண்ண காலத்திலும், மேற்படி பிரட்டு பாத்தியஸ்தருக்கு அனுகூலமாயிருந்து ரிவின்யு போர்ட்டார் தடங்கால் பண்ணிக்கொண்டு வந்த அநியாயத்தை யென்னென்று சொல்லலாம். கருப்பு (பஞ்சம்) க்கிடமுண்டாகி ஏராளமான சனங்கள் சாகிறதையும். கஷ்டப்படுகிறவர்களுடைய தானியத்தை மேற்படி பிரட்டு பாத்தியஸ்தர்கள் ஒட்டச் சுரண்டிக் கொண்டு கஞ்சி கூழ் தண்ணி யில்லாமல் முக்கால் கருப்பாய்ப் பட்டினியாய்க் கிடந்து பல வியாதிக் கிரையாகிப் போகிறதையும் ரிவின்யு போர்ட்டார் யோசிக்கவில்லையோ! தங்களாலேயே இப்படி நாசமாகிறதென்றும் அவர்களுக்குத் தோன்றவில்லையே! போர்ட்டார் கொன்றை மாலையைப் போலக் குறுக்கிட்டு இப்படியும் நாசம் பண்ணப் பார்த்துக்கொண்டு இருப்பார்களா! தங்கள் மேலான அரசாட்சியின் பெருமையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வரவில்லையே. தர்ம நீதியுள்ள இந்த ஆங்கிலேய துரைத்தனத்தில் சேத மில்லாமல் சனவிருத்திக்காக சகல முயற்சி காவலால் காக்கப்பட்டு, பெருகி யிருக்கிற சனங்களுக்குத் தகுந்தபடி ஆகாரங்களுக்கு அனுகூலம் பண்ணாமல் பிரதிகூலமாகவேயிருந்தால் என்னமாய்த்தான் சீவித்திருப்பார்களோ. சீவித்தும் வாசித்து விவேகத்துக்கு எப்படி வருவார்களோ, அதுகளையெல்லாம் அரசாக்ஷியார் உணராவிட்டால் மற்று யார்தான் உணருவார்கள்?
– A.V.
செங்கற்பட்டு ஜில்லா பாயக்காரி
- ••
கடிதம் – 4*
*(தத்துவ விவேசினி, மார்ச் 11, 1883, பக்கம் 295)
(உஎகூ *(279 – பக்க எண் பிழை) – வது பக்கத் தொடர்ச்சி)
அப்படி நவாப்பிடத்தில் செங்கல்பட்டு ஜில்லாவை கவரன்மெண்டார் வாங்கிக்கொண்ட பிறகு, மறுபடியும் நவாப்பு தன்னுடைய உத்தியோகஸ்தர் மாத்துவப் பிராமணர் ஏவுதலினால், கவரன்மெண்டாரிடத்தில் ஷெ ஜில்லாவை ங0 (30) ஷரத்துக்குக் கீழ்க் குத்தகை வாங்கிக் கொள்ள, அவனிடத்தில் திவான்ஜியாயிருந்த கான்கோய் றாயதஜியான மாத்துவப் பிராமணன் நவாப்பின் அனுமதி பெற்றுக்கொண்டு தனக்கும் தன்னுடைய பந்துக்களுக்கும் தன் மதத்தை அனுசரித்த இதர சாதிப் பார்ப்பார்களுக்கும் வைணவக் கோயில்களுக்குமாக நவப்பின் சேனையை துணைக் கொண்டு வன்னியர்களை அடித்தும் கொன்றும் அவர்களுடைய வளமுள்ள கிராமங்களைப் பிடுங்கி, அதில் சுறோத்திரியம், சாக்கீர், எனாம், அக்கிறாரமானியம், கோயில் மானியமென்று புரட்டி, தம்மவர் பேரால் எழுதிக் கொண்டதுமல்லாமல் அனேகம் கிராமங்களையும் பிடுங்கி மிராசென்று ஆக்கிக்கொண்டு கவரன் மெண்டுக்கு கணக்குக் கொடுத்து ஸ்தாபித்துக் கொண்டான். அப்படியாக ஆக்கிக்கொண்ட கிராமங்களில் வன்னியக் குடிகளுடைய நில பாத்திய முடையதாயிருந்தாலும் வரவர அந்த நில பாத்தியமும் அவர்களுக்கு இல்லாமல் பிடுங்கிக் கொண்டு ஒடுக்கி பாயக்காரி – படியாளுமாக ஆக்கிவிட்டார்கள். பார்ப்பாரை அனுசரித்து வெள்ளாழர், வெட்டி மிட்டாக்கள், நாட்டுவார் சுறோத்திரியங்கள் பார்ப்பாரைப் போல் வன்னியர்களுடைய கிராமங்களின் பேரில்தான் பெற்றுக் கொண்டார்கள். பிற்பாடு கவரண்மெண்டு உத்தியோகம் பண்ணவர்கள் கிராமம் க0000*(1000) கணி தரத்தில் க0*(10) காணி சாகுபடியாகிறதாய் சொற்ப வரும்படியைக் காண்பித்து, சுறோத்திரியம் எனாம் பெற்றவர்களும். வன்னியர்களுடைய கிராமத்தின் பேரிலேயே முக்கியமாய்ட் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மிட்டா, சுறோத்திரியம், சாக்கீர், எனாம் முதலான பிரட்டு பாத்தியங்களை வன்னியருடைய மன்னவேடு கிராமத்தின்பேரில் முக்கியமாய் அவாள் பெற்றுக்கொண்ட காரணம் யாதென்றால், இந்த வன்னிய சாதியார் சன விருத்தியாய்க் கஷ்டப்படுபவர்கள், கபடமில்லாதவர்கள், பயிர்த் தொழிலையே முயற்சியாய்ப் பார்க்கிறவர்கள், உத்தியோகம் வர்த்தகத்தை அலட்சியம் பண்ணி அதில் பிரவேசிக்க மனமில்லாதவர்கள். இவர்களுடைய நில பாத்தியங்களை லேசாய்ப் பிடுங்கிக் கொண்டு பார்ப்பார் தங்களுக்கு அடிமையாக்கிப் போடலாமென்ற எண்ண முடையவர்களாய் அந்தப் பிரட்டு பாத்தியக் கிராமங்களிலிருந்த வன்னியர்களை ஒடுக்கி அவர்களுடைய நில பாத்தியங்களை எல்லாம் அபகரித்தார்கள். அப்படி அபகரித்தாலும் அந்த நிலங்களையெல்லாம் இவர்களே சாகுபடி பண்ணி அவாள் கொடுத்த குடி வாரத்தை வாங்கி சீவனத்துக்குப் போதாமல் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு காலம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகிலும் இப்போதும் வன்னியர்களுக்கு மன்னர்வேடென்று பழைய ஏற்பாட்டின்படி காஞ்சிபுரம் தாலுக்காவில் க00, *(100) கஉ0 *(120) – கிராமங்களும், பொன்னேரி தாலுகாவில் கும்முடிப்பூண்டி வகையறா கிராமங்கள் சு0 *(60), எ0 *(70) – கிராமங்களும், மற்ற எ*(7) -தாலுக்காவில் தாலுக்கா க*(க்0)-க்கு க0 முதல் உ0 *(1-க்கு 10 முதல் 20) வரையிலுமிருக்கின்றன. இந்தக் கிராமங்களின் பேரிலும் மிட்டா, சுறோத்திரியம் சாக்கீர், எனாம் முதலானதிருந்து நாசப்படுகிற கிராமங்கள்போக, மற்ற தரவாரி கிராமங்களிலும் வன்னியர் பரம்பரையாய் பந்துக்களுடன் காடு கறம்பில்லாமல் சாகுபடி பண்ணியும் குடும்பத்துக்கு உ-ங *(2-3) காணி கூடவில்லை. அப்படி வன்னியருக்கிருக்கிற தரவாரி கிராமமும் பெருத்த ஏரி ஆற்றுக் கால்வாயில்லாமல் பார்ப்பார் பிடுங்காமல் கழித்து விட்டுவிட்டு, வானம் பார்த்த மேட்டுக் கிராமங்களே. அந்தச் செற்ப ஏரிகளையும் பார்ப்பார் உளவின்பேரில் மராமத்து பண்ணுகிறதே இல்லை. அந்தக் கிராமங்களில் எந்தக் காலத்திலும் எவ்விதத்திலும் சாவிவசா முதலானது கொடுக்க ஓட்டுகிறதில்லை. இப்படி எல்லாம் சர்க்கார் உத்தியோகப் பார்ப்பாரும், மற்றப் பார்ப்பாரும் கட்சியாய் ஒடுக்குகிறதினாலே அவர்களும் கஞ்சிக்கில்லாமல் உயிரை வைத்துக் கொண்டும் காலம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
A.V.
- செங்கற்பட்டு ஜில்லா பாயக்காரி ஏஜண்டு
- ••
கடிதம் – 5*
*(தத்துவ விவேசினி, ஏப்ரல் 8, பக்கம் 327)
(உருகூ*(259) (பக்க எண் பிழை) – வது பக்கத் தொடர்ச்சி)
வன்னியர்கள் பயிரிட்டுச் சீவிக்கிறதே நலமென்று நெடுங் காலமாய் பயிர் சீவனத்தையே அபேசஷித்து வருகின்றார்கள். நாம் முன் பத்திரிகைக்களில் காட்டியப்டி, பார்ப்பாரால் ஒடுக்கப்பட்டு சாகுபடி பண்ணச் சக்தியில்லாமலும், பூமியைத் திருப்பியாய் Bளக்கத்தோடு சாகுபடி பண்ண மனமில்லாமலும் தானிய உறபத்தி நாளுக்கு நாள் குறைந்தும், சகிக்க மாட்டாமல் வேறே தொழில்கள் உத்தியோகங்கள் பண்ண சிலர் பிரையத்தனப்பட்டுக் கூடிய மட்டுக்கும் வாசித்துக் கொண்டு வருகிறார்கள். சாதிகளிலனேகர் பட்டணவாசிகளாகிப் படிக்கிறார்கள். இவர்களுக்கும் இந்த அநியாயங்களெல்லாம் தெரிந்து மனந்திடுக்கிட்டுத் தங்கள் வமிசத்தார்கள் ஆதி நிலைமையின் பாத்தியத்தில் இருந்திழந்து இப்போது அடைகிற துக்கத்தைச் சகிக்க மாட்டாமல் வெளியிலிருக்கிற தங்கள் வமிச…. … … … லும் ஆதரவு பண்ண வேணுமென்ற எண்ணம் உற்பத்தியாகி வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த எண்ணம் எவ்வழியாய் நிறைவேறுமோ தெரியவில்லை. கஅசுங *(1863) ஷரத்தில் மதராஸ் டைம்ஸ் பேப்பர் எடிட்டர் அவர்கள், ஐரிஷ்காரரைப்போல் இந்த செங்கல்பட்டு ஜில்லா குடிகள் கொடூரமுள்ளவர்களல்ல, இவர்கள் பொறுமையுள்ளவர்களா யிருந்தாலும் இப்போதுதான் இவர்களுக்குக் கோபமென்றது முளைத்து இரண்டிலை வெடித்து இருக்கிறது: இனிமேல் சீக்கிரத்தில் விருத்தியாகிக் கொடுரம் நடக்குமென்று எழுதினாரே – அந்தப்படிதாநடக்குமோ, அல்லது கஅசுக *(1861) – ஷரத்து முதல் இதுவரையில் உங *(23) யெல்லாம் கவரன்மெண்டு முதலான மேலான அதிகாரிகளுக்கு பெட்டீஷன்களி ளாலும் பேப்பர்களினாலும் அநேகமாய் உண்மைகளைத் தெரிவித்தும் சரியான ஏற்பாடாகமலிருந்தாலும், இன்னமும் தெரிவித்து சுதந்திர பாத்திய நிலங்கள் முதலானதைப் பெற்றுக்கொள்ளும் வழியாய் நடக்குமோ என்னமோ அல்லது இந்த ஏழைக்குடிகள் இப்படியே கேள்விமுறை இல்லாமல் கும்பு கும்பாயழிந்து போவார்களோ என்னமோ தெரியவில்லை! பார்ப்பார்களுக்கு ஆதி அரசர்கள் சேர சோழ பாண்டியர்களால் கொடுக்கப்பட்டதென்ற சுறோத்திரியம், எனாம் மானியங்களும், நவாப்பால் கொடுக்கப்பட்டதென்ற சாக்கீர், சுறோத்திரியம் மானியமென்றதும் பார்ப்பார் வமிசவரையில் அவர்களுக்கே பாத்திய மென்றிருக்கிறதென்ன – மற்றவர்களுக்கும், வன்னிய சாதியாருக்கும் ஆதித் தமிழரசர்கள் மேற்கண்ட சேர சோழ பாண்டியர்கள் கிராமங்களை ஏற்படுத்தி அழியாச் சகல ஏற்பாடும் பண்ணி மன்னன் என்ற தங்கள் பேரையும் தங்கள் வமிசத்தாரென்று குறிப்புகளும் காட்டி சிலாசாதனம் பண்ணிய எல்லைக் கல்லுகளை நட்டிச் சுட்டி ஸ்தாபித்திருக்கிற வன்னியர்களுடைய மன்னர்வேடு கிராமங்கள் இவர்கள் பட்ச வமிசத்தாருக்குப் பாத்தியமில்லாமற் போனதென்ன? கவரன்மெண்டாருடைய ரிவின்யு வரும்படியை கஅசுங *(1861) மறைத்திருந்தார்களோ அப்படியே வன்னியர்களுடைய நில பாத்தியங்களையும் மறைத்திருக்கிறார்கள். கஅசுக *(1863) ஷரத் முதல் ரிவின்யு வரும்படியில் இன்னதில் மறைந்து அபகரிக்கிறார்களென்று தெரிவித்துக் காண்பித்ததின் பேரில் அந்தப்படி கண்டுபிடித்து கவரன்மெண்டார் தங்கள் வரும்படியை மாத்திரம் காப்பாற்றுவதில் சாக்கிரதைப் பட்டார்கள். இந்த ஏராளமான குடிகளுடைய – வரையில் எப்படி வ முதல் ரிவின்யு வரும்படியில் இன்னது துன்பத்தை நீக்கக் கவலையற்றிருக்கிறது இராஜ நீதிதானோ! இந்த ஏராளமான சனங்கள் ஓயாமல் கஷ்டப்பட்டும் கஞ்சி கந்தை குடிசையில்லாமல் பசியினால் பீடிக்கப்பட்டும் வியாதியடைந்தும் கூக்குரல் இட்டுச் சாகிற அநியாயப் பழி இராசாங்கத்தையும் குடிகளையும் மோசம் செய்து அபகரித்து நாசம் பண்ணுகிற மிராச, மிட்டா, சுறோத்திரியம், சாக்கீர், அக்கிறார மானியம், கோயில் மானியம், மொத்தப்பட்டா வென்ற பிரட்டு பாத்தியஸ்தர்களைச் சேருமோ அல்லது இந்த அநியாயத்தின் உண்மைகளைப் பொறுப்பாய்க் கண்ணோட்டம் வைத்துப் பாதுகாக்காத இந்த அரசாங்கத்தைச் சாருமோ அல்லது இந்த சாதி அரசர் சேர சோழ பாண்டியர்கள் செய்த தீவினையினால் அந்த அரசர்களுடைய வமிசத்தாரான இவர்கள் இப்படி அவர்கள் கையிலகப்பட்டுத் துக்கப்பட்டு சாகவிடங் கொடுத்ததோ தெரியவில்லை. ஆகிலும் அந்த தமிழரசர்கள் நீதி தவறாமல் ஆண்டார்களென்று அனேக புராணங்களும் நீதி நூல்களும் மகாவித்வான்கள் புகழ்ந்த காவியங்களும் கோயில் குளங்களும் பூமிகளும் சொல்லுகிறதே. அவர்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல வென்று தெரிகிறது. இப்போது சில துரைகள் ரிவின்யு விஷய முதலானதில் தேர்ந்தவர்களாகி நடந்த மோசங்களும் நடக்கிற மோசங்களும் தெரிந்து கொள்கிறார்கள். ரிவினியு சங்கதி தெரிந்த கவர்னர் டெனிசன் துரையும், இந்த ஜில்லாவில் சப் கலெக்டராயிருந்து கலெக்டராகி ரிவின்யு செட்டல் மெண்டு பண்ண ஜி. பான்புரி துரையவர்களும் இந்த ஜில்லாவை ரிவினியு விஷயத்தில் சீர்திருத்த முயன்று உண்மைக்கு வேண்டிய பிரயாசப்பட்டும் ஆகவொட்டாமல் பண்ணார்கள். இந்த ஜில்லாவில் கஅஅஉ*(1882) – ஷரத்து வரையில் சப் கலெக்டறாயிருந்த எச்சு.ஆர். பார்மர் துரை யவர்கள் தமிழ் பாஷையிழிலும் ரிவின்யு விஷயத்திலும் சாதிகளுடைய நடவடிக்கை களிலும் நீதியிலும் தேர்ச்சியுடையவராய் இந்த ஜில்லாவில் சகலரும் சந்தோஷிக்கும் படியாயிருந்த அவரை, நான் போய்த் தெரிசித்தபோது அவர் வாக்கிலிருந்து பிறந்த தமிழ் வார்த்தையையும் இந்த ஜில்லா முதலானதில் ஏழைகள் படுந்துன்பத்தை நீக்கப் பேரவாக் கொண்டிருக்கிற தையும் பார்த்து ஆச்சரியப்பட்டு இப்பேர்பட்ட துரைகளும் இருக்கிறார்களா வென்று சந்தோஷத்தை அடைந்தேன். அவர் ஏழைகள் விஷயத்தில் எடுத்துக்கொண்ட பிரையாசை யெப்படி முடியுமோ அறியேன்.
A.V.
-செங்கல்பட்டு ஜில்லா பாயக்காரி ஏஜண்டு
- •••
கடிதம் – 6*
*(தத்துவ விவேசினி, மே 27, 1883, பக்கம் 383)
(ஙஉஎ *(327 )வது பக்கத் தொடர்ச்சி)
அப்படியெல்லாம் ஏராளமான குடியானவர்களுக்கு ஒரு ஆதரணையு மில்லாமல் நாசப்பட்டுக் கொண்டிருக்க, இவர்களுக்கு விரோத கக்ஷி சாதியாரே சட்ட நிரூபண சபையிலிருந்து தங்கள் தங்கள் சாதியாருக்கே அனுகூல மாகும்படியாயும், குடிகள் தரித்திரராகித் தங்களுக்கு அடிமையிலும் அடிமையாய்ப் பறையரைப் போலாகச் செய்கிறவர்களேயிருக்கிற படியாலும், இந்தச் சாதியாருக்காக அனுசரித்த சங்கதியை அணுவளவேனும் போசப் பட்டவர்கள் இல்லாததினாலும், இராசாங்கத்தாருக்குக் குடியானவர்களாகிய வன்னிய சாதியார்களுடைய அருமை பெருமைதெரியாமலும் இவர்கள் கrணித்துப் போகிறதையறியாமலும் இவர்களாலேயே பூமிகள் திருத்தப்பட்டு தானியவுற்பத்தி பண்ணப்பட்டு தீர்வை விருத்திக்குக் கொண்டு வரப் படுகின்றனவென்றும், தங்கள் சுசாதி *(சுயசாதி) சேர சோழ பாண்டிய அரசர்கள் நாளில் படை வீரராயிருந்தது போல இந்தத் துரைத்தன ஆதியி லிருந்து இந்தச் சாதியாரே முக்கியமாய் சேனா வீரர்களாய் செயம் பண்ணி வருகிறார்கள் என்றும் தெரியாமலிருக்கிறதினாலேயே சர்க்காருக்கு நஷ்டமும் வெி செனங்களுக்குத் தரித்திரமும் துக்கமுமான நீங்காத் தொல்லையில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்தச் சாதியாரிலும் சட்ட நிரூபண சங்கத்திலொருவ ரிருந்தால் அக்கரையாய் அவர்களுக்கு நேரிட்டிருக்கும், நேரிடும் துன்பங்களைத் தடுத்துப் பேசுவார்கள். அப்போது இராசாங்கத்தாருக்கு விஷயம் சொல்பமாய் தெரிந்து சீர்படுத்துவார்கள். இந்த மதராசு பிரசிடென்சி உக *(21) – ஜில்லாக்களிலும் முக்கியமாய் சாதிபேதம் மதபேதம் கக்ஷி பேதங்க ளுண்டாகி ஒன்றையொன்று இழிவுபடுத்தி ஒடுக்குகிற சங்கதி தெரிந்திருந்தும், கக்ஷி சாதியாரையே சட்ட நிரூபண சபையில் சேர்த்துக்கொண்டு இந்த ஏராளமான சாதியார்களில் ஒருவரையும் சேர்க்காமலிருக்கிறது கவரன்மெண்டாருக்குக் கண்ணோட்ட மில்லாதினாலேயோ, கட்சி சாதியார் பொறாமையினாலே மறைத்திருக்கிறதி னாலேயோ, சாதியார் கேட்டுக் கொள்ளாததினாலேயோ, எதினால் என்றுந் தெரியவில்லை. இந்தச் சாதியார் படும் இமிசையையும் ரிவினியு வரும்படி முதலானதில் மற்றச் சாதியார் அபகரித்தலையும் நீக்க வேணுமென்று என்னுடைய சொந்த விரையம் பண்ணி நடத்துகிறதை ஷெ சாதியார் அறிந்து, ந00*(300) – பேர் வரையில் கையெழுத்துப் போட்டு, எங்களுக்கு தர்ம உபகாரியா பெற்பட்டிருக்கிற அ. வேங்கடாசல நாயகனான என்னைத் தங்களுக்காக வே சபையில் சேர்த்துக் கொள்ளவேணுமென்று கஅசுஅ*(1868) ளூ பிப்ரவரி மீ உஉ *(22) கவரன்மெண்டு கவுன்ஸலுக்கு பிட்டிசன் கொடுத்துக் கேட்டுக் கொண் டார்கள். அதற்கும் யாதொரு உத்திரவும் கிடைக்கவில்லை. பிரான்சு துரைத் தத்தார தங்கள் புதுச்சேரியிலாக்காவில் இந்தச் சாதியாரையே முக்கியமா யிராணுவ வீரராகவும். இந்தச் சாதியார் செய்கிற குற்றங்களுக்கு க்ஷத்திரியரென்று தண்டனைகளைக் குறைவுபடுத்தியும், இராசாங்கக் காரியத்தை அனுசரித்துக் கூடுகிற மகாகூட்டங்களில் மேம்பாடாகவும் வைத்திருக்கிறார்கள் இந்த துரைத்தனம் ஆதியிலிருந்து நெடுங்காலம் முக்கியமாய் இராணுவ வீரர்களா யிருந்தார்கள் என்றதற்கு வெளிக்கிராமங்களில் இந்த ஜில்லா முதல் எல்லா ஜில்லாக்களிலும் சுபையதார் மேஜர், சுபையதார் பாதர், சுடையதார் சமையதார் அவல்தார், சிப்பாய் ஊரென்றும்; வீடென்றும் அவர்கள் பெண் சாதி, பிள்ளை தாய், தகப்பன் தமையன் தம்பி யென்றும் எங்கும் நெருங்கி விஸ்தாரம் குறிப்பிட்டு வழங்கி வருகிற குடிகள் அனேகராயிருக்கிறார்கள். அதினாலேயே தெரிய வரலாம் கான்ஸ்வார் கணக்கில் இந்தச் சாதி விஸ்தார செனாங்களாய் கஷ்டப்பட்டு திருத்திச் சாகுபடி பண்ணுகிறவர்களென்றும் தெரிய வரலாம். இப்பேர்ப்பட்ட சாதியாருக்கு அனுகூலம் செய்ய இராசாங்கத்தாருடைய கடமையாயிருக்கிறது. ஆங்கிலேய நாட்டின் சட்ட நிரூபண சபையில் பல பிரிவுகளிலும் வசிக்கும் செனங்களால் ஏற்படுத்தப்பட்டு தங்களனைவருக்கும் பிரீதியாக ஒருவரை அனுப்புதலை அங்கீகாரம் பண்ணுகிறதுபோல, இந்தச் சாதியார் கேட்டுக்கொண்டடடி அவாள் ஏற்படுத்தியவரை ஏன் ஜெ சபையில் சேர்த்துக் கொள்ளவில்லை? இப்போதாவது அவாள் கேட்டுக் கொண்டிருக்கிற படி அந்தச் சாதியிலிருந்து ஒருவரைத் தெரிந்தெடுத்து சட்ட நிரூபண சடையில் சேர்த்துக் கொண்டால் மிகுந்த நன்மை உண்டாகும். சேர்த்துக் கொள்ளா விட்டால் தங்களுக்குத் தெரியாமலே இந்தச் சாதியாரை இன்னமும் ஒடுக்கி நாசப்படுத்திப் போடுவார்கள்.
A.V.
- ••
கடிதம் – 7•
*(தத்துவ விவேசினி, அக்டோபர் 10, 1883, பக்கம் 119)
ம.ள.ள.ஸ்ரீ தத்துவ விவேசினிப் பத்திராதிபரவர்களுக்கு வந்தனம். இதனடியிலெழுதிய செங்கற்பட்டு ஜில்லா பாயக்காரிகள் படு் துன்பத்தை தங்கள் பத்திரிகையில் பதிப்பிக்கும்படி கோருகிறேன். அதாவது மகாகனம் பொருந்திய லோகல் கவர்ன்மெண்டாருக்கு மதராஸ் பிரசீடென்சில் முதலில் கைப்பற்றிய இந்தச் செங்கற்பட்டு ஜில்லாவினுடைய ரிவினியு அனுபவந்தெரியாமல், பார்ப்பாரால் மோசம் போய், மிராசு, மிட்டா சுறோத்திரியம், சாக்கீர், அக்கிறாரமானியம், கோயில் மானியமென்ற பிரட்டு பாத்தியங்களுக்கிடமுண்டாகி பார்ப்பாரும் அவர்களைப் பின்பற்றின சாதியாரும் இராசாங்க வரும்படியையும் ஏழைக் குடிகளுடைய நில பாத்தியங்களையும் அவர்களுடைய கஷ்டார்த்தங்களையும் அபகரித்துச் செல்வந்தராய் மேம்பாடடைந்திருக்கிறார்கள். நாம் வாசம் செய்யும் இந்த விசாலமான பூமியில் சகல பண்டு பதார்த்தங்களும் அமைக்கப்பட்டுப் பிரஜைகளுக்கென்றே சேமிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பூமியிலிருந்தெடுத்துப் பிரஜைக ளனுபவிக்க நம்ம இராசாங்கத்தா ருடைய கண்ணோட்டமில்லாமல் தடைபட்டுச் சாகிறார்கள். (ஆ)தியரசர்கள் முதலாவ்வொரு குடித்தனக்காரனும் போதுமான வரையில் சக்திக்குத் தகுந்தாற்போல நிலத்தைத் திருத்திச் சாகுபடிக்கு மாத்திரம் உரியவராய் ச0 *(40) ரு0 *(50) வருஷத்துக்குமுன் இந்த ஜில்லா பட்டாவானது வரையில் இந்த இராசாங்கத்தாருக்கும் கடமையல்லது மேல் வாரதானியமாகவே கொடுத்துத் தங்களுடைய குடிவாரத்தைப் பெற்றுக் கொண்டு அல்லலற்று சீவித்துக் கொண்டு வந்தார்கள். ஷெ குடிகள் சுதந்திரப்பட்டு நிலங்களை விற்கவும், அடமானம் வைக்கவும் பாத்தியமில்லாமல் பூமி இராசாங்கத்தாருடையதே யென்று ஏற்பாடாயிருக்கிற உறுதி பெரிய அத்தாகவேயிருந்தது. அதற்கொத்ததாய் முன் தமிழரசர்களால் அக்கிறார, மன்னர்வேடு, நத்தமென்று மூன்று சாதிகளுக்கே வகுக்கப்டட்டிருந்தது. அந்தந்தக் கிரமங்களின் சாதிக் குடிகள் சாகுபடி பண்ணிக் கொள்ளமாத்திரம் உரியவர்களாயிருந்தார்கள். கவரன்மெண்டார் வாரம் வாங்குவதில் ஏதோ தொந்தரையுண்டாயிருக்கிறதா யெண்ணங்கொண்டு மேல் வார தானியத்துக்குப் பதிலாய், தீர்வைப் பணமாய் வசூல் பண்ணால் சங்கட மில்லையென்று எவனெவ்வளவு நிலம் சாகுபடி பண்ணுகிறானோ அவ்வளவு நிலத்தை அவனவன் பேருக்குப் பட்டா பண்ணுகிறதென்று உத்தரவாகிப் பட்டா பண்ணுங் காலத்தில் பார்ப்பாரும், பார்ப்பார உத்தியோகஸ்தர்களும் ஒன்றுகூடி மோசவிதமாய்க் குடிகளையும், கலக்டரையும் ஏமாற்றிப், பார்ப்பார் தங்கள் தங்கள் பேருக்கு மொத்தப் பட்டா பண்ணிக்கொண்டார்கள். அப்படி மொத்தப்பட்டா பண்ணிக் கொண்டு, பசுங்கூர் அல்லது அந்தந்தச் சாதிக்கே பொதுவாயிருந்த கிராமங்களையெல்லாம் அரிதிக்கூறன்று பங்குளாக்கிப் பங்கிட்டுக் கொண்டு, கிராமப் பங்குக்காரர்களென்று பேருண்டாக்கிக் கொண்டார்கள். கிராமப் பங்குகி) கார்களென்றாவது ஒருவனுடைய ஏகபோக கிராமமென்றாவதிந்த ஜில்லா பட்டாவாகாததற்கு முன்னிந்த ஜில்லாவிலும் எந்த ஜில்லாவிலுமிருந்ததே யில்லை. ஒருவன் சாகுபடி பண்ணுகிற நிலத்தின் பேரில் அப்போது கிராம வூழியக்காரனான இப்போது கிராமத்தானென்று சொல்லப்பட்டவனுக்கு பாத்தியமேயில்லை. குடிகளுக்கு அவன் பார்த்து நிலம் விட்டதேயில்லை சர்க்கார் மனுஷாள் பசலி பசலிக்கும் கிராமங்களுக்குப் போய், குடிகளை யழைப்பித்து இந்தப் பசலிக்கு அல்லது இந்த வருடத்துக்கு நீயெத்தனைக் காணி, நீ யெத்தனைக் காணி சாகுபடி பண்ணுகிறா யென்று நபர் நபராய்க் கேட்டு, அவனவன் ஒப்புக் கொண்டபடி பைத்துக்கட்டு முச்சிலிக்கா என்கிற கணக்கெழுதிக் கொண்டு ரசீது வாங்கிக் கொண்டும் அவனவனுக்கு அந்தப் பசலிக்கு வேண்டுமான நிலங்களை விட்டுச் சர்க்காரே மேல்வாரம் வாங்கிக் கொண்டு வந்தார்கள். பட்டாவான பிற்பாடுதான் நிலத்தின் பேரில் கவரன் மெண்டாருக்கிருந்த பாத்தியதையும் குடிகளுக்கிருந்த சாகுபடி நில பாத்தியதையும் கொஞ்சங் கொஞ்சமாய்ப் புரட்டி மிராசுதாரென்ற பிரட்டுப் பேரையுறுதிப் படுத்தி, குடிகளை ஒடுக்கி நாசம் பண்ணிப் போட்டார்கள். சர்க்காரார் தங்களுக்குக் கொள்ளை போனது போக வந்த மட்டும் தீர்வை வந்தால் போதும், யார் கெட்டாலும் நமக்கென்ன வென்று அண்டை யிலிருந்து இதஞ்சொல்கிறவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு, வேண்டுமானால் குடிகள் கோரட்டில் தாவா பண்ணிப் பாத்தியதைப் பெற்றுக் கொள்ளுகிறார்க ளென்று கைசோர விட்டார்கள். குடிகள் கோரட்டுக்குப் போக நிர்வாக மில்லாததினாலும் எழுதப் படிக்கத் தெரியாததினாலும் போகப் பயந்திருந்து விட்டவர்கள் போக மிஞ்சிக் கோர்ட்டுக்குப் போனாலும் கோரட்டுப் பீகு வைக்கீல் பீசு, எழுத்துக் கூலி, இலஞ்சம் முதலியன கொடுத்தும்; பார்ப்பாரும் அவர்களுக்குடன்பட்ட அவர்கள் சாதியாருமே பெரும்பாலும் ரிவினிய முதலான கீழ் உத்தியோகங்களிலும். கோர்ட்டுகளிலும் கோர்ட்டு வக்கி லுத்தியோகங்களிலும் இருக்கிறவர்களாதலால், இவாளைக் கொஞ்சம் மிஞ்சவிட்டால் நம்முடைய சாதியார் கொள்ளைக்கிடமில்லாமற் போகுமென்றிவர்களுக்கு நியாங்கிடைக்க வொட்டாமல் செய்கிறதே அவ்வுத்தியோகத்தருடைய பிடிவாதமாயிருந்தது. மிராசென்ற பாத்தியம் கவரன்மெண்டாருக்குச் சந்தேகத்திலேயே யிருந்ததினால், அதைச் சோதித்து உடனுக்குடன் பரிஷ்காரப்படுத்தாம லிருந்தாலும் மிராசைக் குறித்து உண்மையை தெரிவிக்கிறதென்று, இந்த ஜில்லாவுக்கு முதலில் பிளேசு துரைக்குப் பின்வந்த கலெக்டர் எல்லீஸ் துரைக்கு உத்திரவாகி, அவர் பார்ப்பாருடைய வலையிற் சிக்கிக்கொண்டு, சிரஸ்தார்) போகண்ட சங்கரையர் போதனைப்படி மிராசு பாத்தியமுண்டென்று அவாள் பக்ஷமே சொல்லி, மிராசு சிஸ்டமென்று பொய்க்கதை கட்டி ஒன்றை ஏற்படுத்தி யெழுதினார். எச *(74 (1874)) வருடத்தில் ரிவினியு போர்ட்டு மெம்பர் ஜி. பான்புரி துரையவர்கள் கொடுத்த டிமார்க்கேஷன் ரிப்போர்ட்டில், இந்த ஜில்லா எவ்விதத்திலும் மிராசு பாத்தியமில்லையென்று கண்டு கொடுத்ததற்கு விரோதமாய், மிராசு பாத்திய மில்லாவிட்டாலும் அவர்களுக்குக் கொடுத்த மேனா கிரையம் சராசரி தீர்வை ரூபாய் க-க்கு உ*(1-க்கு 2) அணாவீதம் குடிகள் கொடுக்க வேண்டுமென்று மிராசைச் சுட்டி ஆதார மில்லாமல் இச்சகமாய்ச் சொல்லிக்காட்டியிருக்கிறார். லா(ர்)ட் சர். தாமஸ் மன்றோ துரையவர்கள், மிராசு பாத்தியம் பொய்யென்று அவருக்குப் பட்டிருந்த அபிப்பிராயத்தையும் கஅசுங*(1863) – வருடத்தில் மதராஸ் டைமிஸ் பத்திரிகையில் மிராசுதாரர்கள் மிராசு உண்டென்றும் பாயக்காரர்கள் ஏஜெண்டு மிராசில்லை பொய்யென்றும் ஒரு மாத வரையில் தர்க்கித்து வாதஞ்செய்ததில். மிராசு பாத்தியம் பொய்யேயென்று ருசுவாகிப் பின்னிட்டார்களே, அதையும் கங *(63 (1863)) கவர்னர் சர். உல்லியும் பெனிசன் துரையவர்களதைக் கவனமாய்ப் பார்வையிட்டுப் பரிசோதித்து மிராசுபாத்தியமென்றது பொய்தானென்று பூர்த்தியாய்(த்) தெரிந்து கொண்டவராய், மிராசு பாத்தியத்தை நீக்கிவிட்டு, இதர ஜில்லாக்களைப் போல் ரயத்துவாரி பட்டா பண்ணுகிறதென்று அவர் உத்திரவு பண்ணியிருக்கிறதையும், கனம் பெருந்திய ரிவினியு போர்ட்டாரவர்களும் அதன்பின் இந்த ஜில்லா இதர ஜில்லாக்களைப் போல ரயத்துவாரி பட்டா நமுனாவாக வேண்டுமென்றும், இதுவரையில் மிராசு பட்டாவென்றும், பாயக்காரர் பட்டாவென்றும் போட்டு வந்ததுபோல் போடாமல், இது முதலெல்லாம் நெம்பர் பட்டாவாய்ப் போடுகிறதென்றும், ஒருவன் கைப்பத்து நிலத்தை அப்புறப் படுத்தக் கூடாதென்றும் உத்திரவாகி அந்தப்படி நடந்து வருகிறதையும், ரிவினியு போர்ட்டு மெம்பர் ஜி. பான்பரி துரையவர்கள் கொடுத்த டிமார்க்கேஷன் றிப்போர்ட்டில் இந்த ஜில்லா மிராசு பாத்தியம் எவ்விதத்திலும் உடைத்தாயிருக்கவில்லையென்று கண்டிருக்கிறதையும், இப்போது எஸ்.ஆர். பார்மர் துரையவர்கள் ரிவினியு சட்டங்களைத் திருத்தினதில் மிராசு பாத்தியமில்லையென்று கண்டிருக்கிறதாய்க் கேள்வியாயிருக்கிறதையும் பார்த்து மேற்சொல்லிய மேலான கனவான்கள் சகலவிதத்திலும் சோதித்துச் சொல்லி யிருக்கிற உண்மையை ஸ்தாபிக்காமல், பட்சபாதமாய் மேற்சொன்ன இரண்டு டேர்களுடைய சொல்லுக்கும், மிராசுதாரென்றவர்களுடைய முக ஸ்துதிக்கு மாகக் குழப்பத்தில் விட்டிருந்தால் குடிகள் தங்கள் பாத்தியங்களை யிழந்தது வரைக்கும் பட்டு மாண்டது போதாமலின்னமும் நாசத்தை அடையப் பார்த்திருந்தால், டெ குடிகள் நிர்மூலமாய்த்தான் போகவேண்டியதாயிருக்கிறது இப்பவும் மகாகனம் பொருந்திய கவரன்மெண்டாரவர்களுக்கு இந்த மிரசைக் குறித்துப் பரிஷகாரமாய்த் தெரிய வேண்டுமானால் ஷெ செங்கற்பட்டு ஜில்லா கிராமங்களைப் போய்ப்) பார்வையிட்டுச் சோதித்தால் மிராசுண்டென்றும். இல்லையென்றும் ருகுவாகும். கஞ்ச தேசம் அல்லது செங்கற்பட்டு இந்த ஜில்லா கிராமங்களெல்லாம் அக்கிறார, மன்னர்வேடு, நத்தமென்று நாளது வரையிலும் சர்க்கார் ரிக்கார்டுகளினாலும் அந்தக் கிராமக் குடிகள் சாதாரணமாய்ச் சொல்லி வழங்கிக் கொண்டு வருவதினாலும், அந்தந்தக் கிராம எல்லைக் கல்லில் பதிந்திருக்கிற சின்னங்களினாலும் காணியாவினாலும் நிலக்குறிப்பினாலும் அக்கிறாரம் பார்ப்பார சாதியாருடையதென்றும், மன்னர்வேடு வன்னிய சாதியாருடையயதென்றும், நத்தம் வெள்ளாழ சாதியாருடையதென்றும் விளங்கும். அப்படி அந்தந்தச் சாதிக்குப் பொதுவாய் அந்தந்தச் சாதியாரே அனுபவித்த கிராமங்களைப் பார்ப்பார் பிடுங்கிக் கொண்டு மிராசு பாத்திய மென்று ஏற்படுத்தி, மிராச தங்களுடையதென்று வரவரத் தங்கள் சொல் சாமர்த்தி யத்தினால் புரட்டி, இராஜாங்கத்தாரையும் குடிகளையும் துரோகம் செய்தார்கள் என்று கவரன்மெண்டார் சித்தத்துக்கு விசிதமாகும்.
அ. வேங்கடாசல நாயகர்
(பாயக்காரி ஏஜெண்டு)
- •••
கடிதம் – 8*
*(தத்துவ விவேசினி, அக்டோபர் 24, 1883, பக்கம் 134)
குடிகள் துயரம்
(கககூ *(119) -ம் பக்கத் தொடர்ச்சி)
செங்கல்பட்டு ஜில்லா தர்க்காஸ்தி நிலமை. இந்த ஜில்லாவை நவாப்பு கவரன்மெண்டாருக்கு விடப்போகிறதைத் தெரிந்து, நவாப்பைச் சில பார்ப்பார் அனுகூலப்படுத்திக் கொண்டு சுரோத்திரியம், சாக்கீர், எனாம். அக்கிறார மானியம், கோயில் மானியமென்று எழுதிக்கொண்டு கவரன் மொண்டாரை மோசம் பண்ணதுமில்லாமல், பின்னரும் கவரன்மெண்டா ரிடத்தில் தந்திரம் பண்ணி, மிட்டா, சுரோத்திரியம், நாட்டுவார் சுரோத்திரியங் களும் அபகரித்தார்கள். இப்படியெல்லாம் அகரித்த கிராமங்களுக்குச் சுற்றிலுமிருக்கிற சர்க்கார் தரவாரி கிராமங்களையும், கண்டங் கண்டமாயும், தத்தி தத்தியாயும், நாளா வட்டத்தில் சேர்த்துக்கொண்டு விஸ்தாரம் சாகுபடி பண்ணி அபகரித்துக் கொண்டு வந்தார்கள். கலெக்டர் மக்ளியன் துரை காலத்தில் தர்காளஸ்துக்கு உத்திரவாகி மிராசுதாரென்கிறவர்கள் கேட்டுக் கொண்டபடி. முதல் வருஷத்துக்குக் கால் தீர்வையும், இரண்டாம் வருஷத் துக்கு அரை தீர்வையும், மூன்றாம் வருஷத்துக்கு முக்கால் தீர்வையும், நாலாம் வருஷத்துக்கு முழுத் தீர்வையுமாகவும், கவுல் பட்டா கொடுக்கவும் ஒப்புக் கொண்டார்கள். அப்படி ரிவினியு போர்ட்டார் ஒப்புக்கொண்டும் மிராசுதாரர்கள் தர்க்காஸ்து கொடுத்துக் கொண்டு வந்தார்கள். அப்போதும் கிராமத்தானைக் கேட்டு அவன் தனக்கு வேண்டியதில்லையென்றால் மாத்திரம் தர்க்காஸ்துதாரனுக்கு நிலம் கொடுக்கிற தென்று சில பார்ப்பார உத்தியோகஸ்தர்களின் அனுமதியின் பேரில் ஏற்பட்ட குடியைக்கெடுத்த சட்டம் அவர்கள் அனுகூலத்துக்கே ஒத்ததாயிருந்தது. ஆகிலும் குடிகள் கொடுத்த தர்க்காஸ்துகளை கிராமத்தார் கட்டுப்பாடாய்த் தாங்களே ஏற்றுக்கொண்டு சாகுபடி பண்ணாமலே மழை பெய்யவில்லை யென்றும், விதைத்தும் கால மழையில்லாமல் சாவியாய்ப் போயிற்றென்றும், உயர்ந்த தீர்வையுள்ள நன்செய் சாகுபடி பண்ணிக் கொண்டிருந்ததினால் காலந் தள்ளி புன்செய்க்கு ஈரமில்லாமற் போயிற்றென்றும், வரகு சாகுபடி போடுகா லென்றும் வீணாண போக்குகள் காட்டி., தர்க்காஸ்த்தென்ற பெயரைத் தலையெடுக்க வொட்டாமல் மாயஞ்செய்து மறக்கச் செய்து விட்டார்கள். அப்போது தர்க்காஸ்து கொடுத்த ஏமாந்த அனேக குடிகளில் சிலருக்கு அபூர்வமாய் கலெக்டர் தர்க்காஸ்தைக் காயட்படுத்தி பட்டா கொடுத்திருந்தாலும், அதின்பேரிலும் துண்டு சுரோத்திரம், குப்பத்தம், மேனாயென்று தீர்வைக்கு மேல் இரண்டத்தனை வாங்கியும், தப்பு பத்திரங்களெழுதி ஷெ நிலங்களைப் பிடுங்கியும் வந்ததினால், குடிகளுக்கு நியாயங் கிடையாமல் வேசாரி தர்க்காள்து கொடுக்கிறதை விட்டு ஓய்ந்து தர்க்காஸ்த்தென்கிற பெயரையும்மறந்தார்கள் இப்படி உ0*(30) – ந0*(30) வருஷ காலமாய்த் தர்க்காஸ்தென்றது மறைந்து போயிருந்தது தெரிந்து, கஅசுங*(1863) – வருஷத்தில் இந்த ஜில்லாவிலிருந்த கலெக்டர் பான்பரி துரையவர்க ளிடத்தில் சொல்லிக் கேட்டுக்கொண்டு கனம் பொருந்திய ரிவினிய போர்ட்டாரவர்கள் சமூகத்துக்கு பிட்டிஷன் கொடுத்தும், எடமிஸ் பத்திரிகாகைக்கு எழுதியும், இந்த ஜில்லாவில் விஸ்தாரம் கறம்பு நிலங்களிருக்கிறபடியால் விஸ்தாரமான ஏழைக் குடிகள் ஜி. … …. … க் தங்ரக்காஸ்துக்கு உத்தரவு பண்ண வேண்டுமென்று கேட்டுக்கொண்டதுமல்லாமல், கலெக்டர் வெ…. …. … சொல்லியும் கேளாமல் ரிவின்யு போர்ட்டு, சிரஸ்தா மு…. …. …. பலத்தினாலும் போதனை யினாலும், முன்போலவே மிராசுதாரனைக் கேட்டு அவன் தக்கு வேண்டாமென்றால் தர்க்காஸ்துதாரன் பரம் பண்ணுகிறதென்றும். தர்க்காஸ்து பண்ண தேதி முதல் பூரா தீர்வை கட்டுகிறதென்றும், அப்படி விளைந்தாலும் விளையாவிட்டாலும் கட்டுகிறேனென்று கறார் நாமா கொடுக்க வேண்டு மென்றும் உத்தரவு செய்தார்கள். அப்போது மிராசுதார்கள் கட்டாய தர்க்காஸ்து கொடுக்கவேயில்லை. ஆகிலும் நான் குடிகளை எழுப்பித் தூண்டினபடியால் குடிகள் தர்க்காஸ்து கொடுத்தார்கள். அதையுமுன்போலவே. கிராமத்தா ரென்றவர்கள் ஏற்றுக்கொண்டு சாகுபடி பண்ணாமலே உத்தியோகஸ்தர் உளவினால் இரகசியத்தில் ராஜினாமா கொடுத்து சும்மா போட்டுவிட்டு தாங்களதற்குத் தீர்வை கட்டுகிறதாய்க் குடிகளுக்குக் காண்பித்துக்கொண்டு வந்தார்கள். அது தெரிந்து கனம் பொருந்திய ரிவினியு போர்ட்டாருக்கு பிட்டிஷன் மூலமாய் விபரித்து நான் கேட்டுக் கொண்டதின்படி இராஜிநாமா கொடுத்த நிலத்தின் நெம்பரும் பேருங்கண்டு இஸ்தியாரெழுதி*(இஸ்தியாரெழுதி – அறிவிப்பு எழுதி). ஒன்றை அந்தக் கிராமத்தில் ஒட்டி. ஒன்றில் ஷெ கிராமத்தின் குடிகளுடைய கையெழுத்து வாங்குகிற படியால், மறைக்கக் கூடாமல், தீர்வை கட்டத் தான் வைத்துக் கொண்டது போக, மற்றதை அல்லது முழுதையும் கொடுத்து இராஜிநாமா நிலத்தை மற்றக் குடிகள் தர்க்காஸ்து கொடுத்துச் சாகுபடி பண்ணலாயிற்று சுங*(63)-வருஷத்தில் ஆன உத்திரவின்படி குடிகள் தர்க்காஸ்து கொடுக்க ஆரம்பித்தபோது தோப்பு தர்க்காஸ்து ரூல் உ0*(20)-வருஷத்துக்குத் தீர்வை யில்லையென்று ஒன்றை ஏற்படுத்தினார்கள். அது முழுதும் சாகுபடி தர்க்காஸ்துக்கு விரோதமாகவேயிருந்தது. கிராமங்களில் குடிகள் சாகுபடிக்கு தர்க்காஸ்து கொடுக்க எண்ணங்கொண்ட நிலத்தை கிராமத்தான் தொரிந்து கொண்டு அந்தவிடத்தில் க00*(100) – காணியையானாலும் சேர்த்துத். தோப்பு வைக்கிறேனெஸ்று தோப்பு தர்க்காஸ்துக்கு மனுவு கொடுத்து உத்தியோகஸ்தர் உளவினால், உடனுக்குடன் உத்தரவாகி அளேகரும் தோப்பு தர்க்காஸ்து பெற்றுக்கொண்டு செடி வைக்காமலே புல்லை வளர்த்து மாட்டை மேய்த்தும் காட்டை வளர்த்து கட்டை வெட்டி விற்றுக் கொண்டும் சாகுடடி பண்ணிக் கொண்டும் அனுபவித்துக் கொண்டும் வந்தார்கள். அப்படியிருக்கிறதில் சிலனதை ருகக்காட்டி ரிவினியு போர்ட்டுக்கு எழுதினதின்பேரில் உத்தரவாகி, கலெக்டர் போய்ப் பார்வையிட்டதில், நானெழுதினபடிக்கெல்லாம் இருக்கப் பார்த்து. இது முதலாவது செடி வைத்தாலாயிற்று – இவ்லாவிட்டால் தரத்தீர்வை கட்டவேண்டுமென்று தாக்கீதுகளனுப்பிவித்ததின்பேரில், வெகுபேர்களும் இராஜிநாமா கொடுத்து விட்டார்கள். அந்த நிலங்கள் தர்க்காஸ்தின் பேரில் சாகுபடிக்கு வந்து கொண்டிருக்கிறது. அனாதியாக ஏரியினுள் வாயிலும் எதுவாயிலும் சாகுபடி பண்ணிக்கொண்டு வந்ததை ஏரி தந்துப் போகிறதென்றும். சாகுபடி பண்ணாமல் நிறுத்திப்போட வேண்டுமென்றும் சொல்லி சுச*(64 (1864)) வருஷத்தில் சாகுபடி பண்ண வொட்டாமல் நிறுத்திப் போட்டார்கள். இந்தப்படி உ0 ஜிவ்வாவிலும் நிறுத்தப்பட்டது. அப்படி நிறுத்தினால் பெருங்கருப்புக் கிடமாகி தேசம் பாழாகுமென்று விபரத்தோடு ருகக்காட்டி ரிவினியு போர்ட்டா ரவர்களுக்கு எழுதிக்கொண்டதின் பேரில், மறுபடியும் உத்தரவாகிச் சாகுபடி பண்ணுகிறார்கள். ஏரி எதுவாய் கறமப்பு நிலங்களை ஏரிக்கு வரும் தண்ணீர்க்குத் தடங்கலாகுமென்றும், காடுகள் போகப் பக்கத்திலிருக்கிற கறம்பு நிலங்களையும் குத்துச்செடி அங்கொள்று இங்கொன்றாயிருக்கிற கறம்பு நிலங்களையும் மாடு மேய்கிறதற்கில்லையென்று போக்குக்காட்டி தர்க்காஸ்து கொடுக்கவொட்டாமல் நிறுத்தியிருக்கிறார்ர்கள். அதனால் சாகுபடிக்கு வாயக்கான அனேகமாயிரம் ஏகறா நிலங்கள் பாழாயிருக்கிறது. பயிர்த்தொழிலே செய்து கஷ்டப்பட்டுச் சாகுபடி செய்கிற ஜனங்கள் விஸ்தாரம் பட்டினியாயிருந்து சாகிறவர்களுக்கு அந்த நிலங்களைத் தடங்கலில்லாமல் தர்காஸ்த்தில் கொடுத்தால் சாகுபடி பண்ணித் தீர்வை கட்டி சீவிப்பார்களே, அந்த நிலங்களில் உற்பத்தியாகும் தானியங்களின் நெல் வைக்கோல், வரகு வைக்கோல், சோளத் தட்டு கம்பந்தட்டு, கேழ்வரகுத் தட்டு முதலானது மாடுகளுக்கு அதில் முளைக்கும் புல்லைவிடப் பெருத்த ஆகாரமுமாகுமே. அப்படியிருக்க கவரன்மெண்டாரும் போர்ட்டாரும் கலெக்டர்களும் அவர்களுடைய மோசத் தந்திரத்தை நம்பி. அவர்கள் வீண் சொல்லுக்கிசைந்து அனேகமாயிரம் ஏக்றா நிலங்களைப் பாழ்போட்டிருக்கச் செய்திருக்கிறது அறியாயமே. முதல் ரு0*(50) – ஷரத்துக்கு முன்னே கவுல் தர்க்காஸ்துக்கு உத்தரவு பண்ணியும், அப்போதும் கிராமத்தாரென்றவர்கள் தர்க்காஸ்து கொடாமல் குடிகள் கொடுத்த தர்க்காஸ்தையேற்றுக் கொண்டு சாகுபடி பண்ணாமல் அலக்கழித்தார்கள். உ*(வது 20)- வது உ0*(2ஆவது 20) – மத்துக்கு முன் கறார் நாமாவின் பேரில் தர்க்காஸ்து கொடுக்கிற தென்றும் விளையாவிட்டாலும்… …. …. பணம் கட்ட வேண்டுமென்றும் ஆன உத்தரவுப… …. …. …ள், தர்க்காஸ்து கொடாமல் குடிகள் கொடுக்க….. …. ….தை முன் போலவே ஏற்றுக்கொண்டும் போக்குச் சொல்லியும் ஆகவொட்டாமல் செய்கிறார்கள். முதலிலிருந்தே மிராசுதாரென்றவர்களுடைய தொடர்ச்சி யில்லாமலிருந்ததால் இந்தத் தர்க்காஸ்து விஷயத்திலும் கவரன்மெண்டாருக்கு இத்தனை காலமாய் எத்தனை வட்சம் ரூபாய் வசூலாகியிருக்கும்: குடிகளும் க்ஷேமப்படுவார்களல்லவா. முன் பத்திரிகையில் சொல்லியபடி, மிராசென்ற பிரட்டு பாத்தியத்துக்கு யாதொரு ஆதாரமுமில்லாமலிருக்கப் பொய்க்கதை கட்டிக்கொண்டும், பொய்யான பேர்களை ஏற்படுத்திக்கொண்டும். கவரன்மெண்டாரை சகல விதத்திலும் மோசம் பண்ணியும். குடிகளை நாசம் பண்ணியும் வந்தார்கள். இன்னமும் கவரன்மெண்டாருக்கும் ரிவினியு போர்ட்டாருக்கும் தோன்றாதிருக்கிறது, குடிகள் செய்த துரதிஷ்டமே . இப்போதாவது துரைத்தனத்தார் கண்ணோட்டம் வைத்துப் பூர்த்தியாய் விசாரணை பண்ணி யோசித்து இன்னமும் குடிகள் கெடாமலிருக்க, முன் பத்திரிகையில் கண்டபடி பிரட்டு பாத்தியங்களை நீக்கி ரயத்துவாரி பட்டா பண்ணுகிறதுமல்லாமல் தர்க்காஸ்தில் பாயக்காரி குடிகளுக்கே கொடுக்க வேண்டியது.
அ. வேங்கடாசல நாயகர்
செங்கல்பட்டு ஜில்லா பாயக்காரி ஏஜெண்டு
- ••
கடிதம் – 9*
*(தத்துவ விவேசினி, நவம்பர் 4, 1883, பக்கம் 151)
குடிகள் துயரம்
(கககூ *(119 (பக்க எண் பிழை) -ம் பக்கத் தொடர்ச்சி)
ம.ள.ள.ஸ்ரீ தத்துவ விவேசினிப் பத்திராதிபருக்கு வந்தனம் செங்கல்பட்டு ஜில்லா மிட்டா, சுரோத்திய வகையராவினிலைமை.
இந்த ஜில்லாவில் மணலி சின்னையா முதலியாருக்கு 70-80 வருடங்களுக்கு முன் மிட்டா கிராமங்கள் கவரன்மெண்டாரவர்களால் கொடுக்கப்பட்டன. அப்படிக் கொடுக்கும்போது கவரன்மெண்டாருக்கு ரிவினியு அனுபவமில்லா விட்டாலும் கூடிய மட்டும் சாக்கிரதையாகவே கண்டு கொடுத்தார்கள். அப்போது ஐந்து வடத்திய கருட்பினாலும் பெருங்காற்றினாலும் ஐதரலியின் கொள்ளையினாலும் சனங்கள் மாண்டு… …. …. … ல்லாமலும் போனார்கள். இவர்கள் நியாபகப் படுத்தாவிட்டால் கலெக்டர், ரிவினியு போர்ட்டார், கவரன்மெண்டார் இவர்களுக்கு எப்படித் தெரியும் அவர்கள் இவர்களை நம்பி கவனமில்லாமலிருந்ததேயல்லாமல் வேறில்லை. அப்படி மேல்வாரங்களை வசூல் பண்ணாமல் எத்தனை லக்ஷம் ரூபாயை நஷ்டட்டடுத்தி அபகரித்தார்கள். 63*(1863) ஆம் வருடத்தில் மகாகனம் பொருந்திய கவரன் மெண்டாரவர்கள் சமூகத்துக்கு, மேற்கண்ட மிட்டாக்களின் மோசங்களை யெல்லாம் கண்டு நான் மனுகொடுத்ததற்கு கவர்னர் சர். உல்லியம் டெனிசன் துரையவர்கள் விசாரித்துத் தெளிந்தர். 20 வருடமாய் கவரன்மெண்டாருக்கும், ரிவினியு போர்ட்டாருக்கும் அப்போதைக்கப்போது அதையெடுத்துக் காட்டாமற் போனதினாலே தான் அதுமுதல் 20 வருடமாய்க் காலந்தள்ளி எவ்வளவு இலட்சம் ரூபாய் கவரன்மெண்டாருக்கு நஷ்டமாயிற்று. ஆனாலும் கவர்ன் மெண்டாருக்கிப்போது எண்ணம் பிறந்து, மிட்டா முதலான பிரட்டு கிராமங்களில் அவாளுக்கு ஆதியில் கண்டு கொடுத்திருந்த பிரமனட் டோரிஜ்*(கணக்கின் மொத்த தொகை) நிலந் தவிர மற்ற நிலங்களைச் சாகுபடி பண்ணுகிற குடிகளுக்கு ரயத்துவாரி பட்டா பண்ணப் போகிறதாயும், அதற்கு அந்தந்தக் குடிகளின் சாகுபடிக் கணக்கு வாங்க உத்தரவாகியிருக்கிறதாயுந் தெரியவருகிறது. அப்படி அபகரித்த மேல்வாரப் பணத்தை அவாளிடத்திலிருந்து வசூல் பண்ணாவிட்டாலும் மிட்டா முழுமையுமாவது சேர்த்துக்கொள்ள வேண்டியது அல்லது ஜி. பான்புரி துரையவர்கள் சொல்லியிருக்கிறபடி பிஞ்சனாவது*(பிஞ்சன் – ஓய்வூதியம், உதவித் தொகை (Pesion)) கொடுத்துச் சேர்த்துக் கொள்ள வேண்டியது. அல்லது பிரமனட்டு பேரிசு நிலத்தை அவாளுக்குக் கொடுத்து வைத்தால், சமீன்தாரென்ற பிரட்டுப் பேரை வைத்துக்கொண்டு குடிகளைத் தலையெடுக்க ஒட்டாமல் அவாளுக்கான நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் அபகரித்துக்கொள்ளுவார்கள். இப்போதும் கணக்கர்கள் மிட்டாதாரர் பக்ஷத்திலிருந்துகொண்டு குடிகளுடைய சாகுபடி கணக்கைச் சரியாய்க் கொடுக்காமல் மிட்டாதாரன் பக்ஷத்திலும். அவர்களுடைய வாரிசு பக்ஷத்திலுந்தான் கணக்கு மிகுதியாய்க் கொடுப்பார்கள்.
இந்தப் பத்திரிகையில் சென்ற அக்டோபர் மீ 7 உ 119-ம் பக்கத்தில் மிராசென்ற பொய்ப் பாத்தியத்தைக் குறித்து எழுதியிருக்கிறதையும், 21 உ 134ஆம் பக்கத்தில் தர்க்காஸ்தின் மோசப் பிரட்டைக் குறித்து எழுதியிருக்கிறதையும், இப்போது இதில் மிட்டாவில் இராஜதுரோகம், குடித் துரோகம் பண்ணதைக் குறித்து எழுதியிருக்கிறதையுமான இவை மூன்றையும் சேர்த்து… …. …. …. .
- •••
அருஞ்சொற் பொருள்
சொல் பொருள்
ம.ள.ள. ஸ்ரீ – மகா றாய றாய ஸ்ரீ;
மகா ராச ராச ஸ்ரீ
கருப்பு – பஞ்சம், பட்டினி
பண்ணு – பண்ணியது
பிரட்டு – புரட்டு
பிரயோசம் – பிரயோசனம்
சுவந்திர – சுதந்திர
அக்கிறாரம் – அக்கிரகாரம் – பார்ப்பனச் சேரி
தெண்டித்து – தண்டித்து
மோகந்திர – முகாந்திரம்
சாவி வசா – சாவியாகிவிட்ட பயிருக்கு வரித்
தள்ளுபடி
சு சாதி – சுய சாதி
கான்ஸ்வார்
கணக்கில் – கடமை அல்லது மேல் வார
தானியமாகவே
அத்தாகவே – வரைமுறை, வரம்பு, பாதுகாப்பு
கிராம பங்குக்காரர் – கிராமத்துக்கு உரிமையானவர்
பசலி – பயிரிடும் ஆண்டு
முச்சலிக்கா – எழுத்துச் சான்று
பரிஷ்காரம் – ஆய்வுக்கு உட்படுத்தல்,
தெளிவுபடுத்தல்
விசிதமாகும் – தெளிவாகத் தெரியும்
தர்க்காஸ்து – நில அடமானம்
இஸ்தியர் – அறிவிப்பு
பேரிசு (பேரீஜ்) – கணக்கின் மொத்தத் தொகை,
பட்டாதார் அல்லது ஊரார் கட்டும் மொத்த வரி
பிஞ்சன் – பென்ஷன் – ஓய்வூதியம்
- ••
அத்திப்பாக்கம் அ. வேங்கடாசல நாயகரின்
பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்
(1872)
பாயிரம்
இந்த இந்தியாவில் திருப்பதிக்குத் தெற்கிலும் வன்னியர்கள் ஆதியில் பேரரசாயிருந்து, மத்தியில் அனேகர் சிற்றரசர்களாகி இப்போது பேரரசு சிற்றரசு பாளைப்பட்டாயிருந்தாலும் மதராசு பிரசீடென்டு(சி) எல்லா ஜில்லாக்களிலும் வன்னியரான ராஜகுடிக் குரித்தாய் பாதி முக்கால்பாகம் மன்னவேடென்கிற கிராமங்களாகவே யிருந்த போதிலும் முக்கியமாய் செங்கற்பட்டு ஜில்லா முழுமையும் மன்னவேடென்னும் கிராமங்களாகவேயிருந்தும், ஆதொண்டச் சொழ வன்னியன் அல்லது ஆதொண்டச் சக்கிரவர்த்தியினால் கொண்டு விட்ட வேளாளர்களும், துலுக்கர் துரைத்தனத்தில் குடியேறின வடுகர்களான ரெட்டி – கம்மவார் முதலானவர்களுமான இவர்களுக்கு உதவியாயிருந்து, தங்களுக்கு வேலைக்காரர்களாகச் செய்ய சகலவிதத்திலுங் கெடுக்க வேண்டுமென்று வன்னியர்களை நாசம் பண்ணுகிற பிராமணாளுக்கு ஆதி காலத்தில் வடக்கில் நேரிட்ட பவுத்த மத சத்துராதிகளை செயம்பண்ணி ஆதரித்து, நமது முன்னோர்கள் முதலில் தென் தேசத்தை யாளவந்தபோது கொண்டாடி கூடி வந்த பிராமணக் கூட்டங்களைப் போஷக்து. சென்னபட்டணம் பெரிய கோர்ட்டு துபாசியாய் மூன்னாலிருந்த ஏனிகல் வீராசாமி ஐயர் காசியாத்திரை சரித்திரத்தில் சொல்லிய பிரகாரம் மேன்மைப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தும், வன்னிய அரசு இளைத்து, பிற்பாடு வந்த துலுக்கர் துரைத்தனத்திலிவர்கள் புகுந்து அவர்களுக்கு நயபயங்களைக் காட்டி உத்தியோகங்களிலேறி அக்ராரமானியம் – கோயில் மானியம் – சுரோத்திரியம், சாகீர் முதலானதென்று கிராமங்களை அபகரித்து, நவாபு பரைக்குனக் கடைசியில் நவாபுவினிடத்தில் உத்தியோகத்திலிருந்த கான்கோ ராயஜி என்பவன் இனிமேல் நிலத்தைக் குறித்து இங்கிலிஷ் துரைத்தனத்தில் நடக்கப் போகிறது தனக்குத் தெரிந்து, வன்னியார்க ளுடைய நல்ல கிராமங்களையல்லாம் பார்ப்பாருக்குப் பிடுங்கம் கொடுத்தான். பிற்பாடு வந்த பிரிட்டிஷ் கவரன்மெண்டுத் துவக்குது திலும் மராட்டிய பாஷையினால் ரிவினியு உத்தியோகங்களில் பார்ப்பாரேயிருந்தபடியினால் பட்டாவாகிற காலத்திலும் மோகம பண்ணி மன்னவேடு கிராமத்தை மேற்படி கிராமத்தில் அல்லது அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்த பஞ்சாங்கப் பார்ப்பான், பிள்ளையார் கோயில் முதலானதை பூசை பண்ணுகிற பார்ப்பார்கள் பேரில் மொத்தப் பட்டா பண்ணிக் கொண்டும், தப்பு தஸ்தாவேஜிக ளெழுதிக் கொண்டும் செய்கிற அநியாயங்களைக் குறித்து பிராதிற்குப் போனாலும் துரைகளுக்குத் தெரிவிக்காமல் அநியாயம் பண்ணி மறுபடியும் மறுபடியும் பிடுங்கிக் கொண்டு பாயக்காரி சுகவாசி படியா ளாக்கி குடிக்கக் கூழும், கட்டக் கந்தையும், முடங்கக் குடிசையு மில்லாமல் இந்த ஜில்லா அனேக லட்சஞ்செனங்களை நாசம் பண்ணு கிறதைக் குறித்தும்,
கிராமத்தில் 4000 காணி தரமாயிருந்தாலும் 100, 200 காணியை குடிகளைக் கொண்டு சாகுபடி பண்ண வைத்து அல்லது காடு கரம்புகளைத் திருத்தி நெடுங்காலமாய்ச் சாகுபடி பண்ணுகிற குடிகளுடைய நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு காட்டை மோட்டைக் காண்பித்து, அதை ஆண் பெண் குடும்பங்களுடன் கஷ்டப்பட்டுத் திருத்திச் சாகுபடி பண்ணிக் கொண்டு வந்தாலும், அந்த நிலத்தை மறுபடியும் பிடுங்கிக் கொண்டு வேறு கரம்பைக் காட்டியும் செய்கிற அநியாயத்தையும், மேல் வாரமென்றும், அல்லது காணி ஒன்றுக்கு ஒன்று முதல் 10 ரூபா துண்டு வாரமென்றும், தன் சொந்தத்திற்கு குடிகளால் சாகுபடி பண்ணிக் கொள்ளுகிற 20, 30 காணிக்கு ஏரித் தண்ணீர் குறைவுபடும் போலிருந்தால் தலையாரியைக் காவல் வைத்துத் தன்னிலத்திற்குப் பூர்த்தியாய்ப் பாய்ச்சிக் கொண்டு குடிகள் நிலத்துக்குத் தண்ணீர் விடாமல் சாவியாய்ப் போகச் செய்தும் கொள்ளையடிக்கிறதல்லாமல், கரம்பாய் இருக்கிற மற்ற அனாதிபஞ்ச ரென்று வைத்திருக்கிற 380 காணி நிலத்தில் குடிகளுக்கு விடாமலும் தர்காஸ்து கொடுத்தால் கிடைக்கவொட்டாமலும் பூமியைப் பாழாகப் போட்டு சர்க்கா ருக்கும் தீர்வை விர்த்தியாகவொட்டாமலும் சாகுபடி பண்ண 100-200 காணியிலும் 40, 50 காணி சாகுபடி டாக்கல் பண்ணாமல் தீர்வையை அபகரித்தும் முழுகடை, அழுகடை சாவி திட்ட பஞ்சா – சாமளாத்தி பஞ்சா – கரார் நாமா பஞ்சா – போடுகொல பஞ்சா என்று வசா பண்ணிக் கொண்டும் கட்ட ஏற்பட்ட பணத்தையும் கட்டாமல் பாக்கி வைத்துக் கொண்டு நாதரால் பாக்கியென்று தள்ளிக் கொண்டு வந்ததைக் குறித்தும்,
மிட்டா, சுரோத்திரியம், சாக்கீர் கிராமங்களில் குடிகளுக்குக் குறைந்த வாரம் கொடுத்தும், விளைந்தால் வாரம் விளையாவிட்டால் தீர்வையென்று குடிகளை நாசம் பண்ணி மேற்படி கிராமம் ஒன்றுக்கு சர்க்காருக்கு பத்து முதல் 100, 200 ரூபா கட்டி நாலாயிரம் ஐயாயிரம் ரூபா கொள்ளையடிக்கிறதைக் குறித்தும்;
வலங்கைக் கக்ஷிக்காரர்களான வெள்ளாளர், அகமுடியர், கவரை இவர்களும் உத்தியோகத்திலேறி அனுக்கூல சத்துராதிகளான பார்ப்பாருடன் கூடிக் கொண்டு, இந்தச் சாதியாரை மிருக வேட்டையாடி கஷ்டார்த்தத்தையும் மானாபிமானத்தையும் சர்க்கார் வரும்படியையும் நீதியையும் ஒரு கக்ஷியாயிருந்து கொள்ளையடிக்கிறதைக் குறித்தும், (எனக்கு) அனுதாபம் உண்டாகி, இந்தத் தேசத்தில் செய்ற தர்மங்கள் அனேகமாயிருந்தாலும் அந்தத் தர்மங்களெல்லாம் பார்ப்பார் தங்கள் வமிசத்தாரே செல்வ சீவனம் பண்ண கட்டுப் பாடான மாய் தந்திர சாஸ்திரங்களை உண்டாக்கிக் கொள்ளையடிக்கச் செய்திருக்கிற தர்மங்களென்று அவைகளையெல்லாம் வெறுத்து முக்கிய தர்மமான கல்விச்சாலை, வைத்தியசாலை, ஆருமற்ற மொண்டி – முடம் – கூன் – குருடு -விருத்தாப்பியர் – வியாதியஸ்தர் களுக்குக் கஞ்சித்தொட்டி ஆகிய இந்த மூன்று தர்மமு முக்கியப் பட்டதாயிருந்தாலும், அதை மேலான அறிவுள்ள கவரன்மெண்டார் செய்தாலும் அதில் இந்தச் சாதியார் வாசிக்கப் பிறர் இடம் கொடாமல் எல்லாவற்றையும் இழந்து போனபடியினாலே, கல்விச்சாலைகளை வைத்து இந்தச் சாதி பிள்ளைகளை வாசிக்கச் செய்து மேன்பாட்டுக்குக் கொண்டுவரலாமென்றால், அவ்வளவு திரவியம் என்னிடத்திலில்லை.
இதைக் குறித்து நான் ஏக கர்த்தாவினிடத்தில் முறையிட்டேன். 1858 ஆம் வருஷத்தில் நம்முடைய அரசி ராணி விக்டோரியம்மாள் அவர்கள் இந்த இந்து தேசமெல்லாம் பாடசாலை வைத்து ஏழைப் பிள்ளைகளை வாசிக்கச் செய்கிறதென்று அனுப்பின உத்திரவை மாற்றி, இந்தப் புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் சொல்கிறபடி முக்கியமாய் நம்முடைய சாதிபிள்ளைகளுக்கு உதவவொட்டாமல் செய்து பார்ப்பார் முதலானவர்கள் தங்கள் பிள்ளகளையே வாசிக்கச் செய்து கொண்டார்கள். அதைப் பற்றி நான் என்ன முயற்சி பண்ணியும் அப்போது நடவாமல், இப்போது கர்த்தாவுக்குத் தயவு பிறந்து மின்ஸ்பால் (முனிசிபல்) கமிசனரவர்களால் கிராமாங்கள் தோறும் பாடசாலை ஏற்படுத்தி ஏழைப் பிள்ளைகளும் வாசிக்க உத்தரவாகி முயற்சி நடக்கிறது.
ஆகையால் பந்துக்களுக்கு அல்லது இனத்தார்க்குச் செய்கிற தர்மமும் உபகாரமும் பெரிதானதென்று அனேக அனுபோக திருஷ்ட்டாந்தங்களினால் நிச்சயப்பட்டு, இது காரியங்களில் 1860 ஆம் வருஷம் முதற்கொண்டு நான் பிரவேசித்து மேற்சொன்ன அநியாயங் களையெல்லாம் விபரம் விபரமாய் நியூஸ் பேப்பர்களினாலும் பெட்டிசன்களினாலும், இடைவிடாமல் நாளது வரைக்கும் கலெக்ட்டர்களுக்கும், ரெவினியு போர்டாருக்கும், கவர்ன்மெண்டாருக்கும், வங்காளம் கவர்னர் ஜெனரலுக்கும், 1861 ஆம் வருஷம் ஸ்டேட் இண்டியா செக்ரெட்டரி அவர்களுக்கும் எழுதிய அனேகங்களில் சுருக்கிக், கடைசியாகச் சீமையில் பார்லிமெண்டில் ஒரு கூட்டத்தாரான வெகுஜனை உபகாரத்துக்கு ஏற்பட்டிருக்கிற ஈஸ்டு இந்தியா அசோகியேஷன் சபையாருக்கு, 1871 ஆம் வருடம் சூன் மாதம் 28 இல் நான் அச்சுப் போட்டு அப்பீல் பண்ணிக் கொண்ட இங்லீஷ் புத்தகத்துக்குச் சரியான தமிழ் அச்சுப் போட்ட விலையுயர்ந்த இந்த தமிழ்ப் புத்தகங்களைப் பிரபல்லியஞ் செய்தேன். ஏனென்றால் இதை நீங்கள் வாசித்து அல்லது வாசிக்கச் சொல்லிக் கேட்பீர்களானால், நமக்குக் கீழிருந்தவர்களெல்லாம் மேலுக்கு வந்து நம்மை நாசம் பண்ணுகிற சங்கதியும், நீங்கள் சாகுபடி பண்ணுகிற நிலத்தில் உங்களுக்கிருக்கிற பாத்தியமும் தெரிந்து வைராக்கியமுண்டாகி ஒவ்வொரு கிராமத்திலுமிருக்கிற குடிகளெல்லாம் ஒரு வழியாயிருந்து காரியங்களை எந்த விதத்திலாவது சாதிக்கிறதுக்கும், இனி மேலாவது தங்கள் தங்கள் பிள்ளை களைக் கவர்ன்மெண்டார் வைக்கிற பாடசாலையிலாவது தங்கள் தங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் வைத்தாவது, வீணான கட்டுக்கதை, பாரத ராமாயண இந்துப் புத்தகங்களை வாசிக்கமால் கவர்ன்மெண்டு சட்டப் புத்தகங்களைப் பிள்ளைகள் வாசிக்கச் செய்து, தங்கள் சொத்துக்களையும் மானாபிமானங்களையும் காப்பாற்றிக் கொண்டு நம்முடைய மேலான அந்தஸ்துக்கு வருவீர்களென்று நான் நம்பி, 14 வருஷங்கள் சொந்தப் பணத்தை விஸ்தாரம் சிலவழித்து நானும் இடைவிடாது உழைத்தேன்.-அதனால் கவர்ன்மெண்டார் ரெவினியு முதலான மோசம் போனது தெரிந்து:
- 1863 ஆம் வருஷம் மிராசு நிலம் என்பதை எடுத்துவிட்டு சர்க்கார் நிலத்தைக் குடிகள் கைப்பற்றிச் சாகுபடி பண்ணுகிறபடியால் எல்லா நிலமும் சர்க்கா ருடையது என்று ஸ்தாபித்தும்;
- மிராசுபட்டா, பாயக்காரி பட்டா என்றில்லாமல் நெம்பர் பட்டாவாய்ப் போட்டு வைத்தும்;
- அடிக்கடி தர்காஸ்து ரூலைப்பிறப்பித்து தர்க்காஸ்தைக் காயப்படுத்தியும்;
- இசாரா கொடுத்து கொள்ளையிட்டுக் கொண்டு வந்த கிராமங்களை நபாக்தி பட்டா பண்ணியும்;
- ஒருவன் கைப்பற்றும் நிலத்தைப் பட்டாதாரன் அப்புறப்படுத்தக்கூடாதென்றும்;
- பட்டாதாரன் குடிகள் கட்டிய தீர்வைப் பணத்தைத் தான் கட்டாமல் குடிகள் கைப்பற்று நித்தை ஏலம் போட்டுஅபகரிக்கிறதைத் தடுக்க மேற்படிகைப்பற்று நிலத்துக்குடைய குடிகள் கட்டினானும் சர்க்காரில் கட்டிக் கொள்ளும்படி உத்தரவு பண்ணியும்;
- பலவித வசா பண்ணிக் கொண்டு நிலத்தை அடக்கட்டிக் கொண்டிருந்ததற்கு யாதொரு வசாவும் கொடாமல் தீர்வை கட்டாவிட்டால் நிலத்தை ராஜினாமா கொடுக்கிறதென்றும்;
- சொற்ப பாக்கிக்கும் மிராசு பாத்தியம் என்னும் நிலத்தை ஏலத்தில் விற்கவும்;
- நான்கு வருஷம், 5 வருஷம் பணம் கட்டாமல் நாதாரல் பாக்கியென்று அபகரித்துக் கொண்டுவந்ததற்குகிஸ்திப் பிரகாரம் பணங்கட்டா விட்டால் வட்டி டிமாண்டுபடியுடன் உடனுக்குடனே வசூல் பண்ணவும்;
- பாயக்காரிகள் காட்டில் கொம்பும், புளியன் பனை மர முதலானதில் தொட வொட்டாமல் அதில் ஆயிரம், ஐம்பது, நூறு வரும்படி பண்ணிக் கொண்டிருந்த மேற்படி காடு மரம் வகையறாக்களை சர்க்காரில் சேர்த்துக் கொண்டும், விஸ்தாரம் குடிகளால் சாகுபடியாக்கச் செய்கிறார்கள்.
அவனவன் கைப்பற்று நிலத்திற்கு நபாகதி பட்டா பண்ண உத்தரவாகியிருக்கிறதை நிறைவேற்றாமல் இருக்கிறதைக் குறித்தும் மிட்டா, சுரோத்திரியம், சாகீர் முதலானதைக் குறித்தும் கவர்ன் மெண்டார் ஆலோசனையிலிருக்கிறார்கள்.
இந்தச் சாதியாரை இப்படித் தரித்திரராக்கியும் பார்ப்பார் அபகரிக்க ஏற்படுத்திய கலியாண கருமாந்திர முதலானதற்கு வீண் சடங்குகள் செய்யக் கடை பரப்பிக் கொள்ளை கொடுக்கிறதற்காக, என்ன ஏழையாயிருந்தாலும் கலியாணங் கருமாந்திரம் தலை திவஷம் முதலானதும் செய்யாவிட்டால் அவனுக்கு ஈனத்துவமும், சாதிக் குறைவும், அன்னியர்கள் பழிப்பும் நரகமும் வருமென்று பயந்து இது சிலவுகளுக்குக் கடன் வாங்க வேண்டியதற்கு இருக்கிற சொத்தை கெடுவுக்கு வைத்து வாங்கியாவது, விற்றாவது, வெண்ணிலைக் கடன் வாங்கியாவது பார்ப்பாருக்கும் வீணாக மற்ற செனங்களுக்கும் சிலவழித்துவிட்டு கெடுவுப்படிக்கி செலுத்தவில்லாமல் சொத்தை யிழந்தும் கடனென்னும் வலையிற் சிக்கிக்கொண்டு மீட்சியில்லாமல் தரித்திரராய் நாசப்பட வேண்டியதென்ன? நாள் பார்க்கிறதிலும், பொருத்தம் பார்க்கிறதிலும், சாதகமெழுதுகிறதிலும், சோசியம் கேட்கிறதிலும் ஒரு பிரயோசனமுமில்லை.
இதுகளையெல்லாம் முக்கியமாய் சொந்தத்திற்குப் பார்த்துக் கொள்ளுகிற பார்ப்பார் வீடுகளில் நாலு பெண்ணுக்கு மூன்று பெண் விதவைகளாகி அந்தச் சாதியில் விஸ்தாரம் விதவைகளா யிருக்கிறார்கள்.
பார்ப்பாரில்லாமல் விவாகம் முதலானதுஞ் செய்கிற இந்துக்களில் கன்னிடைய*(கன்னடியர்) கம்மாளர் முதலான அனேக சாதிகளும் வெள்ளைக்காரர் தலுக்கர் கிறிஸ்துவர்களும், சில தேசத்தாரும், தீவாந்திரத்தாரும் அட்ட ஐசுவரியத்தையும், ராஜரீகத்தையும், புத்திரமித்திர விர்த்தி(யை)யும், நாகரீகத்தையும் அடைந்திருக்கிறார்களே! அப்படி நம்மிலொருவரை சிலவில்லாமல் உபாயமான சடங்குகள் செய்ய ஏற்படுத்தி வைத்து, இன்ன தேதி இன்ன கிழமையில் விவாகமென்று தாம்பூலம் அல்லது கடிதமெழுதி, தாலி கூரை தட்டில் வைத்து பந்துக்களால் ஆசீர்வதிக்கச் செய்து, இஷ்ட தெய்வத்தைப் பிரார்த் தித்து மங்கிலிய தாரணம் பண்ணிஎழுப்பிவிட்டு பந்துக்களுக்குச் சாப்பாடு போட்டு விட்டும், வேணுமானால், இறந்தவர்களுக்கு இத்தனாம் நாள் கருமாந்திரமொன்று பந்துக்களுக்குத் தெரிவித்து நடுவீட்டில் தளிகை சமர்ப்பித்துத் தூபதீபம் கொடுத்து, இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்து தீர்க்க தெண்டம் பண்ணி இன்னானான என் தகப்பனை, என் தாயாரை, என் தமயனை உம்முடைய திருவடியில் சேர்த்துக் கொள்ளென்று சொல்லிப் பந்துகளுக்குப் போசனம் பரிமாறி உடனே அனுப்பிவிட்டால் சத்ராதிகளுக்கும் வறுமைக்கும் தப்பி எவ்வளவு மீந்து போவார்கள்!
ஆகையால் உங்களை மிராசு, மிட்டா, சுரோத்திரியம், சாக்கீர் முதலானவர்களுடைய துன்பத்திலிருந்தும் பார்ப்பார் சடங்குக் கொள்ளையிலிருந்தும் நீக்கி உங்களுக்குக் கல்வியும் செல்வமும் சத்துரு செயமும் கொடுக்க வேணுமென்று ஏககர்த்தாவான சர்வ ஜீவதயாபரனை ஸ்துதி செய்து பிரார்த்திக்கின்றேன்.
பாயிரமுற்றிற்று.
- •••
பாயக்காரிகள் மிராசுதாரர்களோடு
செய்த போராட்டம்
- பாயக்காரிகள் அல்லது சுகவாசிகளுக்கும்*(அற்றைக் கூலிக்கு உழைப்பவர்கள்) மிராசுதாரர் களுக்கும் உண்டாகிய வியாச்சியத்தைக் குறித்து அல்லது மதராசு டிஸ்திரிக்ட்டு ரெவின்யு ஏற்பாட்டைக் குறித்துச் சொல்வியவை. செங்கற்பட்டு ஜில்லாவில் வழங்கிவரும் ரெவின்யு ஏற்பாட்டைக் குறித்து எழுதும்போது, அந்த ஏற்பாட்டுக்கும் மதராசு இராஜ தானியில் இராநின்ற மற்ற இதரமான ஜில்வாக்களில் சாதாரணமாய் வழங்கிவரும் ஏற்பாட்டுக்கும் ஒத்துப் பார்க்கும்படியாக எண்ணங் கொண்டதால் மேலும் பங்காளத்திலுண்டான சமீன்தாரி ஏற்பாட்டுக்கும் தென்னிந்தியாவில் பிரசித்துமாயிருக்கிறறயத்து வாரி ஏற்பாட்டுக்கும் உண்டாயிருக்கிற குறைவுகளை அல்லது மேன்பாடு களைக் குறித்துப் பேசப் போகிறதுமல்ல. இந்த செங்கட்பட்டு ஜில்லாவில் வழங்கிவரும் ஏற்பாட்டைக் குறித்து மாத்திரம் பேசுவ தல்லாமல், அந்த ஏற்பாடு நியாயமான ஏற்பா டென்றும் அநியாயமான ஏற்பாடென்றும் உண்டாகிய வித்தியா சங்களைக் குறித்துப் பேசப் போகிறமேயல்லாமல் வேறல்ல.
- ஆனபோதிலும் இது சங்கதியைக் குறித்துப் பேச ஆரம்பிக்கிறதற்கு முன், சாக்கீரின் சரித்திரத்தைக் குறித்துக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது.
- இந்த சாக்கீர் பூர்வீகத்தில் கர்னாடக நவாபுகளின் எல்லைகளில் ஒரு பாகமாகயிருந்தது. அப்போதிருந்த நவாபு இதை 1760 ஆம் வருஷத்தில் மாஜி கனம் பொருந்திய ஈஸ்ட்டு இந்தியா கம்பெனியாருக்கு உபகாரமாகக் கொடுத்தார். இந்த உபகாரகமானது, டில்லி சக்கிரவர்த்தியினால் பின்பு 1763 ஆம் வருஷத்தில் காயப்படுத்தப்பட்டது. 1783 ஆம் வருஷத்தில் இந்த சாக்கீர் முழுமையும் 14 பெரிய பாகங்களாக 9 வருஷத்திற்குக் குத்தகை யாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் 1788 ஆம் வருஷத்தில் இந்த சாக்கீர் நிலங்களை சிறிய பாகங்களாக 3 வருஷக் குத்தகைக்குக் கொடுப்பது பிரயோசனமென்று அக் கம்பெனி உத்தியோகஸ்தர் களுக்குத் தோன்றிற்று. இங்லீஸ்காரர்கள் இந்த வூரை வசப்படுத்திக் கொள்ளும்போது, அது மிகவும் நிர்ப்பாக்கியமான ஸ்திதியிலிருந்தது. ஐதரலியினுடைய கலாபனையினால்*(அழிப்பு வேலைகளால்) கிராமங்கள் சுட்டெரிக்கப்பட்டு வீடுகளும் சத்திரங்களும் குட்டிச் சுவராயும் பயிரிடும் நிலங்கள் பாழாயும் கலாபனையில் சங்காரஞ்*(கொல்லப்பட்ட) செய்யப்பட்ட வர்களுடைய யலும்புகள் வாசமாயுமிருந்தது. மேலும் இந்த சாக்கீர் கம்பெனி உத்தியோகஸ்தர்களுடைய வசத்தில் வந்தும் அது சீர்படாமலிருந்தது. இங்லீஸ் கவர்ன்மெண்டு பாரிய உத்தியோகஸ்தர்களின் கீழிருந்த துபாசிகள்*(துவி பாஷிகள். இரண்டு மொழிகளைக் கற்ற மொழிப்பெயர்ப்பாளர்கள்) அல்லது அவர்களுடைய பந்துக்கள் ஒன்றாகச் சேர்ந்து சுயதேசத்து உத்தியோகஸ்தர்களை வசப்படுத்திக் கொண்டு, மதராசு கவர்ன் மெண்டாருக்கு காரியங்களின் சரியான ஸ்திதியைத் தெரியப் படுத்தாமலிருந்தார்கள். அதாவது ரயத்துகளின் பாத்தியத்தைக் குறித்தும், நிலங்களின் தீர்வையைக் குறித்தும் காண்பிக்காம லிருந்தார்கள்.
- மேஸ்தா பிளேசு என்பவரை ஏற்படுத்துகிற பரியந்திரம் இது காரியங்களை ஒழுங்குபடுத்தும்படியாக யாதொரு முயற்சியும் செய்யப்படவில்லை. ஆனால் அவரை ஏற்படுத்தின போது அவர் நடந்து கொள்வதற்கு ஒரு நியாயமான ஒழுங்குச் சட்டம் அவருக்கில்லை, அவருக்கு உண்டாகியிருந்த ஒழுங்கு கர்ல் பார்னட் தரப்படி அல்லது சர்வே கணக்குகள் தவிர வேறொன்று மில்லை. இந்தக் கணக்குகளை நவாபுடைய உத்தியோகஸ்தர் களால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்களினாலும் கிராம உத்தியோ கஸ்தர்களாலும் குடித்தனக்காரர்களாலும் உண்டாகும் மாறுபாடு களினால் அதிகப் பிரயாசையோடு அவர் அதை ஏற்படுத்தினார்.
- கலெக்டர் பிளேசு யென்பவர் இந்த சாக்கீரை கைவசப்படுத்திக் கொண்ட பிறகு, 1795ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியில் ரெவின்யு போர்டாருக்கு ஒரு ரிப்போர்ட்டு எழுதி யனுப்பினார். அந்த ரிப்போர்ட்டின் இரண்டாவது கலத்தில் ‘எனக்கு யோக்கியமாகத் தோன்றின வரைக்கும் கிராமங்களை மூன்று வகுப்பாக ஏற்படுத்தியிருக்கிறேன். முதல் வகுப்பில் கவர்ன்மெண்டாருக்கு நியாயமான பிரகாரம் பாத்தியப்பட்ட கிராமங்களடங்கி யிருக்கின்றன. இவைகளினுடைய வரும்படியை சர்க்காரும் குடித்தனக்காரரும் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கின் பிரகாரம் பாவித்துக்*(பங்கிட்டு) கொள்கிறார்கள். இதற்கு அமானியென்று பெயர். இப்படி அமானியாக ஏற்பட்ட கிராமங்களில் திருப்பாச் சூரில் 157-உம், கருங்குழியில் 395-உம், காஞ்சிபுரத்தில் 180-உம் அடங்கியிருக்கின்றன. இரண்டாவது வகுப்பில் எஜமான்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் சவுக்கியமான ஏற்பாட்டினால் கொடுக்கப்பட்ட சுரோத்திரியங்கள். இப்படி ஏற்பட்ட சுரோத்திரி யங்கள் திருப்பாச்சூரில் 48-உம், கருங்குழியில் 26-உம். காஞ்சி புரத்தில் 49-உம் இருக்கின்றன. முக்கியமாயிருக்கப்பட்ட மூன்றாவது வகுப்பு மிராசு கிராமங்களென்று சொல்லப்பட்டது. இது பாளையக்காரர்களால் கைவிடப்பட்ட கிராமங்களாக யிருக்கின்றது. ஆனால் இதில் மிச்சமான பாகம் துராக்கிரதமாக சுவாதீனப்படுத்திக் கொள்ளப்பட்டது. டர்ப்புனாத் அல்லது பலவந்தமாய் சுவாதீனஞ் செய்துகொண்டது என்று சொல்லப் பட்ட கிராமங்களாக இருக்கிறது’ என்று சொல்கிறார்.
- கலெக்டர் பிளேசு என்கிறவார், மிராசுதாரர்களென்று சொல்லப் பட்டவர்களுடைய சொந்தப் பாத்தியத்தைக் குறித்து ஆரம்பத்திலேயே அவருக்குத் தடுமாற்றமாயிருந்தது. இதைக் குறித்து 1812 வருஷம் ஈஸ்ட்டு இந்தியா கர்பெனியாருடைய காரியங்களைக் குறித்து சிலெக்ட்டு கமிட்டியார் செய்த 5ஆவது ரிபோர்ட்டில் பாயக்காரிகளென்று சொல்லப்பட்ட றயத்துக்களின் பாத்தியத்தைக் குறித்து கவர்ன்மெண்டாருக்கும் ரிவின்யு போர்டாருக்கும் நீண்ட தர்க்கமுண்டாயிற்று. இந்த தர்க்கம் கலெக்டரால் ஏற் படுத்தப்பட்ட ஏற்பாடுகளை ஆகோ்ஷபித்த சில மிராசுதாரர்களைத் தங்களுடைய மிராசு நிலங்களிலிருந்து நீக்கிவிட்டு கலெக்டருடைய ஏற்பாட்டின் பிரகாரம் சாகுபடி செய்யச் சம்மதித்த இதரமானவர்களை ஏற்படுத்தும்படியாக கலெக்டர் சொய்த யோசனையின்பேரில் உண்டாயிற்று. ரெவின்யு போர்டார் மிராசுதாரர்களுக்கு நிலபாத்தியம் உண்டாகியிருக்கிறதென்று யோசித்து அவர்களுடைய நிலத்தை அபகரிக்கக் கூடாதென்று ஆட்சேபித்ததாகச் சொல்லுகிறார்கள். மேலும், கவர்ன்மெண்டாருக்கு போர்டார் உண்டென்று சொல்லப்பட்ட பாத்தியத்துக்கு விரோதமாக மிராசுதாரர்களுடைய பக்ஷத்தில் பாத்தியமுண்டென்று போர்டார் சொல்லுகிறது நேர்விரோதமா யிருக்கிறதென்று கவர்ன்மெண்டாருக்குத் தோன்றுகின்றது. ஆகையால் பாரம்பரியமாக வாசஞ் செய்வதினால் நிலபாத்தியமுண்டென்று இங்கிலாண்டு தேசத்தில் குடித்தனக்காரர்களுக்கு எவ்வளவு பாத்திய மில்லையோ அவ்வளவு இந்தியாவில் நிலங்களைக் கைவசப்படுத்திக் கொண்டிருக்கிறவர்களுக்கும் பாத்தியமில்லை யென்று கவர்ன்மெண்டாரால் தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் கிராமத்தின் மிராசுயென்கிறது பரம்பரையாய்க் குடியிருப்பதனால் சாகுபடிக்குப் பாத்தியப்பட்டதென்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் கவர்ன்மெண்டாரே நிலத்தின் முக்கியமான சுதந்திரக் கர்த்தாக்களாயிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
- இந்த தாற்பரியத்தை வெளிப்படுத்தும் போது, கவர்ன்மெண்டார் 1790 வருஷம் ஜனவரி மாதம் 8 ஆம் தேதியில் புறோசிடிங்கிசிகளில் மிராசுயென்கிற வார்த்தை முக்கியமாக அதினுடைய தாற்பரி யத்தைச் சார்ந்தகா யிருக்கிறபடியால், அதை மிகவும் யோசிப்பது அவசரமென்று கவர்ன்மெண்டார் யோசிக்கிறார்கள். ரெவின்யு போர்டார் அவர்களுடைய ரிப்போர்ட்டில் இதை மிராசு பாத்திய மென்று சொல்லுகிறார்கள், அதினுடைய தாற்பரியம் பாத்தியம், சொத்து, சுவாஸ்தியம், சுவாதீனமான அக்கு, மிராசு பாத்தியம் நிலத்தினுடைய பாத்தியம் – என்கிறதாம் என்று சொல்லுகிறார்கள். மேலும் கவர்ன்மெண்டார் நிலத்தின் கர்த்தாவாயிருக்கிறார்க ளென்று விவாத(த்திற்கிட)மில்லாத சட்டமென்று ஏற்படுத்தின பின்பு, அவர்களுடைய தாற்பரியத்தை இதனடியில் கண்டிருக்கிற வார்த்தைகளினால் வெளிப்படுத்துகிறார்கள். மற்ற குடிகளுக்கும் சுவர்ன்மெண்டாருக்கும் என்ன பாத்தியம் உண்டோ அகே பாத்தியம் மிராசு குடிகளுக்கும் கவர்ன்மெண்டாருக்கும் இருக் கின்றது. இரு தரப்பாரும் கிராமத்தில் பரம்பரையாய்க் குடியிருப்ப தினால் நிலத்தைச் சாகுபடி செய்கிறதற்கு பாத்தியஸ்தர்களாக யிருக்கிறார்களே யொழிய சுதந்திரவாதிகளாகயிருக்கவில்லை; சுதந்திரம் முழுமையும் சர்க்காருடையது.
- மிராகதாரர்களுக்குண்டானதாயிருக்கிற பாத்தியம் இரண்டு ஏற்பாட்டுக்குள் அடங்கியிருக்கின்றன. அவையாவன: நிலத்துக்கு அரசனுக்கு பாத்தியம் இருக்கிறதும், மிராசுதாரரென்று சொல்லப் பட்டவர்களுக்கு நிலத்துக்கு சுதந்திர பாத்தியமிருக்குதாவென்றும் இந்த இரண்டு ஏற்பாட்டுக்குள் அடங்கியிருக்கின்றன.
- அரசாக்ஷிக்கு நிலத்துக்கு பாத்தியமில்லையென்று சொல்வது சாரமற்ற பேச்சாயிருக்கின்றது. மேலும் சில குடிகள் ஒரு கிராமத்தில் பரம்பரையாய் சில நிலங்களை அனுபவித்து வருகிறதினால் அவர்களுக்குப் பரம்பரையான சுதந்திரம் உண்டென்று சொல்வது அதைப் பார்க்கிலும் சாரமற்ற பேச்சாயிருக்கின்றது. ரெவின்யு போர்டார் தங்களுடைய 1798 ஆம் வருஷம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதியின் புறோசிடிங்கிசில் மேற்சொல்லிய கவர்ன்மெண்டாருடைய உத்தரவைத் தடுத்துப் பேசும்போது வேற்றுமையில்லாமல் வித்தியாசப்படுத்துவதை யோசிக்க வேண்டியதிருக்கிறது. இவ்விடத்தில் சொல்லப்பட்ட மிராசுதாரர்களால் அனுபவிக்கப் பட்ட செங்கற்பட்டு ஜில்லா நிலங்களில் நிலத்தின் உற்பத்தியில் சர்க்காருக்கு மாற்றக்கூடாத பாத்தியமுண்டென்றும், பிரஜைகளுடைய உற்பத்தியின் பிரகாரமும் அவர்களுடைய ஏதுக்களின் பிரகாரமும் மிராசியையுடைத்தானவர்கள் நிலத்தை வேணுமென்று சாகுபடி செய்யாமற் போனால் சாகுபடிக்குண்டான அவர்களுடைய பாத்தியத்தை இழந்து போகிறதுக்கு அவர்களை உட்படுத்துகிறதென்றும், இந்த அத்துனால் நிலபாத்தியம் சர்க்காருடையதென்றும் போர்ட்டார் சொல்கிறார்கள்.
- இந்த வாய் ஜாலத்தினால் ரெவின்யுபோர்ட்டார் கவரன் மெண்டார் நிலைப்படுத்தினதைச் சிறிதளவும் அசைக்க முடியாதவர்களாயிருக்கிறார்கள். கவர்ன்மெண்டார் ஆளுகைக் கர்த்தாக்களாயிருக்கிறபடியால் நிலத்தின் சுதந்திரம் தங்களுக்கே யென்று உறுதியாய்ச் சொல்லுகிறார்கள். உற்பத்தியில் ஒரு பாகத்துக்கு சர்க்காருக்கு மாற்றக்கூடாத பாத்தியமுண்டென்று ரெவின்யு போர்ட்டார் ஒப்புக்கொள்கிறார்கள். கவர்ன்மெண் டாருக்கு நிலத்தில் சுயபாத்தியமுண்டாகியிருக்கிறதினாலல்லவோ மாற்றக் கூடாத இந்த பாத்தியமுண்டாயிற்று. இதரமான குடிகளுக்கும் கவர்ன்மெண்டாருக்கும் என்ன பாத்தியமுண்டோ அதே பாத்தியம், மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிறது மல்லாமல் இரு தரத்தாருக்கும் உண்டாயிருக்கிறது. அவையாவன:- மிரசுதாரர்களும் இதரமான குடிகளும் ஒரு கிராமத்தில் பரம்பரையாய் வாசஞ் செய்வதினால் நிலத்தைச் சாகுபடி செய்கிறதுக்கு பாத்தியத்தை யுடைத்தா யிருக்கிறார்களே யொழிய, சுதந்திரத்தை யுடைத்தாயிருக்கவில்லை யென்று கவர்ன்மெண்டார் சொல்லுகிறார்கள். ரெவின்யு போர்டாரோ மிராசியையுடைத்தா னவர்கள் தங்களுடைய வலுமைக்குத் தகுந்த பிரகாரம் சாகுபடி செய்யாவிட்டால் சாகுபடியின் பரம்பரையான பாத்தியத்தை யிழந்துபோகத் தக்கினவர்களாயிருக்கிறார்கள் என்று சொல்லு கிறார்கள். இது கவர்ன்மெண்டார் சொல்லுகிறதை இரட்டித்துச் சொல்லுவதேயன்றி வேறல்ல. கவர்ன்மெண்டாருக்கும் போர்ட் டாருக்கும் மத்தியில் கலெக்ட்டர் பிளேசு சொல்லுகிற வார்த்தைகள் என்னவாகுது, 3ஆவது வகுப்புமிராசு கிராமங்கள் என்று சொல்லப் பட்டது பாளையக்காரர்களால் கைவிடப்பட்ட கிராமங்களா யிருக்கின்றன. அதில் சர்க்காருக்கு யாதாமொரு வரும்படியுமில்லை யென்று சொல்லுகிறார். இதனால் அரசாட்சிக்கு உண்டாகி யிருக்கிற பாத்தியததை முழுமையும் மறுதலித்த மிராசுதாரர்க ளுடைய பாத்தியததை உண்மையாய் ஸ்தாபிக்கிறார். இப்பேர்க் கொத்த நானாவிதமான எக்கச்சக்கமுள்ள யோசனைகளினால் ஏற்படுத்தப்பட்டு, நாளது வரைக்கும் பிடிவாதமாய் நடத்தி வருகிற ரெவின்யு ஏற்பாடானது நிலத்தை எதார்த்தமாய்ச் சாகுபடி செய்கிற அனேக நூறாயிரஞ் சனங்களின் சவுக்கியத்துக்கும் பிரயோசனத்திற்கும் தடங்கலான தப்பளமாயி*(மிகவும் கேடானதாய்)ருக்கிறதென் பதற்கு யாதொரு ஆச்சரியமுண்டா?
- ஆகையால் நிலத்தைச் சாகுபடி செய்கிறவர்கள் மிராசுதாரர்க ளென்றும், பாயக்காரிகள் சுகவாசிகள் அல்லது புறக்குடிகளென்று சொல்லப்பட்ட இரண்டு விதமான வகுப்புகளாக இருக்கிறார்க ளென்று எண்ணப்பட்டிருக்கின்றது.
- கலெக்டரும் ரெவின்யு போர்ட்டாரும் ‘மிராசு’ என்கிற வார்த்தைக்கும், மிராசுதாரென்கிற வார்த்தைக்கும் எவ்வளவு பொதுவாயும் நட்டாமுட்டியாயும்*(பொருள் விளங்காததாயும்) அர்த்தம் செய்திருக் கிறதை நாம் மேலே கண்டிருக்கிறோம். ஆகையால் அவர்க ளுடைய தாற்பரியத்தின் பிரகாரம் பாயக்காரி களென்கிற வார்த்தையை என்னமாய் அங்கீகரிக்கிறது. பாயங்காரி குடிகள் கிராமத்தில் யாதாமொரு பாத்தியத்தை யுடைத்தாயிராமல் சாகுபடி செய்கிறார்களென்று மேற்படியார் சொல்லு கிறார்கள். இது யாதாமொரு திட்டாந்தரமில்லாமல் சுயத்தில் சொல்லுகிற அர்த்தமாயிருக்கின்றது. மிராசுதார ரென்று சொல்லப்படுகிறவர்களுக்கு நிலத்தில் எவ்வளவு பாத்திய முண்டோ அவ்வளவு பாத்தியம் பாயக்காரிகளுக்கும் உண் டென்று ரூபிக்கப்போகிறோம்.
- ‘மிராசு’ என்கிற வார்த்தை பாரிசு*(பார்சி மொழி) மொழியென்று ரிவின்யு போர்ட்டார் சொல்லுகிறதுமல்லாமல் மிராசு பாத்தியம் மராட்டிய துரைத்தனத்திற்கு முன்னமே யுண்டாகியிருந்ததாகத் தங்களுக்குத் தோற்றுகின்றதென்றும் சொல்லுகிறார்கள். எந்தச் சாதியாரையும் எந்த வகுப்பானரையும் கேட்டால் இந்த மிராசு பாத்தியத்தின் பூர்வீகம் கண்டுபிடிக்கக் கூடாத காலமா யிருக்கிறதென்று எல்லாரும் ஒப்புக்கொள்ளுவார்கள். அதற்கு ஏற்ற பயனுள்ள வார்த்தைகள் சுவாஸ்தியம் அல்லது காணியாக்ஷி யென்கிறதும், மாமூல் யென்கிறதும் இந்து பூர்வீகமாக இருக்கின்றது. இந்தச் சுதந்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட சொற்கள் பலனுள்ளதாயிருந்த போதிலும் சர்க்கார் நிலங்களை அகத்தியம் சாகுபடி செய்ய வேணுமென்றும் அர்த்தங் கொள்கிறதை மறுதலிக்கக் கூடாதென்றும் ற்கெனவே நாம் சொல்லியிருக்கிறோமென்றும் போர்ட்டார் சொல்லுகிறார்கள். இந்தப் பாத்தியமும் சுதந்திரமும் பூர்வீகத்தில் நிலங்களைக் காடுகரம்பு திருத்துகிறதற்காகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிற தென்றும் சொல்லுகிறார்கள். ஆகையால் மிராசுதாரென்று சொல்லப்பட்டவர்களுக்கு போர்ட்டார் கொடுக்கப் போகிற சுதந்திரங்களினுடையவும் பாத்தியங்களி னுடையவும் பூர்வீகத்தைக் குறித்துப் போர்ட்டார் சொல்வது கேள்வி சமாச்சாரமாயிருக்கிறதேயொழிய வேறல்ல.
- இந்தச் சங்கதியைத் தொடர்ந்து பிளேசு துரை அவருடைய 1799 ஆம் வருஷம் சூன் மாதம் 6ஆம் தேதியின் ரிப்போர்ட்டில் வடக்கிலும் தெற்கிலும் இருக்கப்பட்ட இரண்டு பெண்ணை யாறுகளின் மத்தியிலிருக்கப்பட்ட கர்னாடகமானது, தண்ட காரண்ணியமென்று சொல்லப்பட்ட குடிகளில்லாத திடமான காடாயிருந்ததாகச் சொல்லுகிறதுமல்லாமல், வன்னியராகயிருந்த சோழராஜாவென்பவர் அந்தக் காலத்தில் கர்னாடகத்தை யுடைத்தாயிருந்த இடைப்பாளையக்காரர்களைத் துரத்தி விட்டு, வேளாளரென்று சொல்லப்பட்ட ஒரு சாதியாருக்கு நிலங் களைப் பகிர்ந்து கொடுத்தாரென்றும், அந்தக் காலத்தில் மிகுந்த உணர்வையும் ஐசுவரியத்தையும் உடைத்தாயிருந்த பயிரிடுங் குடிகளாகிய வேளாளரென்று சொல்லப்பட்ட முதலி ஜாதி யாரைச் சேர்த்து நன்னுடைய குமாரனை அதில் ஆளுப்படியாக அனுப்பினரென்றும் சொல்லுகிறார். இவ்விதமாக வேளாளர் அந்த நிலங்களில் குடியேறி அதைக் காடுகரம்பு திருத்தி சாகுபடிக்கு லாயக்காகக் கொண்டு வந்ததினிமித்தம், அவர்கள் சில பாத்தியங்களையும் சுதந்திரங்களையும் அனுபவித்தார்கள். அவைகளுக்கு காணியாக்ஷியென்று பேர். இந்தத் தொடர் மொழி தமிழ் பூர்வீகம் காணியென்பது பூமியும், ஆக்ஷியென்பது சுதந்திரமுமாம். அவர்கள் காடுகரம்பு திருத்திய எல்லா நிலங் களையும் சாகுபடி செய்ய வல்லமையில்லாமலிருந்தபடியால், சாகுபடி செய்ய வல்லமையுடைத்தானவர்களுக்கு அந்த நிலங்களை விற்கிறையஞ் செய்து அல்லது தானஞ்செய்ததாகவும் இருக்கலாம். இவ்விதமாக நாளுக்குநாள் நடுப்புரமான கிராமங்கள் உற்பத்தியாயின. இது சங்கதி வேளாளருக்குட்பட்ட இதரமான முதலி சாதியார் அவர்களுடைய அதிகாரத்தை அல்லது மேன்மைத்தனத்தை யங்கீகரிக்கும்படியாகச் செய்தது தமிழரில் மிகவும் ஈனத்துவமுள்ள பள்ளியென்கிறவர்கள் பிராமணாளுக்கே ஊழியக்காரர்களாயிருந்தார்களென்பது விசேசமாகக் கவனிக்கத்தக்கதாயிருக்கின்றது. வேளாளர் அடிமைகளையுடைத்தாயிருந்தார்கள். இதரமான முதலி சாதியார்கள் சுதாவில் சாகுபடி செய்தார்கள். பறையர் தவிர மற்ற எல்லாச் சாதியாரும் இப்போது மிராசியுடைத்தாயிருக்கிறார்க ளென்றும் கலெக்டர் பிளேசு சொல்கிறார்.
- மிராசு அல்லது காணி ஆக்ஷியென்கிற வார்த்தையின் பூர்வீக சரித்திரத்தைக் குறித்து கலக்டர் சொல்லுவதில் சில பரிஷ்காரமான தப்புக் காரியங்களுண்டாயிருக்கின்றன. இவைகளைக் குறிப்பாய்க் காண்பிக்கிறது அவசியமாயிருக்கிறது. சோழ அரசனுடைய இராச்சியத்தில் இருந்த வேளாளர் மிகவும் அறிவுள்ளவர்களென்றும் ஐசுவரியமுள்ளவர்களென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. இது வாஸ்தவமாயிருந்தால் அப்பேற்கொத்த அறிவும் ஐசுவாரியமும் உடைத்தான குடிகள் அவர்களுடைய சொந்த கிராமங்களையும் சவுக்கியமான நிவாசஸ்தலங்களையும் விட்டுவிட்டுக், குடிகளில்லாத பெருங் காடுகளுக்கு நூதனமாய்ப் போய்க் குடியேற வேண்டிய காரணமென்ன? இது எவ்வளவும் நம்பத்தக்கதல்ல. ஏனென்றால் எல்லா இந்துக்களும் தங்களால் கூடிய வரையில் தங்களுடைய பந்துக்களைவிட்டுப் பிரியாமல் தங்கள் சொந்தக் கிராமத்தில் ஜலத்தைக் குடித்துக் கொண்டு அதனுடைய காற்றை சுவாசம் விட மிகவும் வயிராக்கியமுடையவர்களாயிருக்கிறார்கள் வேளாளர்கள் அந்தக் காலத்தில் அறிவையாவது ஐசுவரியத்தையாவது உடைத்தாயிருக்கவில்லையென்பது வாஸ்துவமாயிருக் கின்றது. அவர்கள் இழிவான சாதியாராகயிருந்தபடியால், அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்படவும் தங்களுடையதன் நீங்கல்தனத்தையும் இந்த வாழ்க்கையின் சவுக்கியங்களையும் மிகுதியாய் அனுபவிக்கும்படியான ஸ்திதியில் வைக்கப் படுவதற்கு மிகவும் சந்தோஷமுள்ளவர்களாயிருந்தார்கள். ‘கொண்டுவிட்ட வேளாளர்’ என்கிற அவர்களுடைய நாமமே காடுகளைத் திருத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட வர்க ளென்கிற அர்த்தமாகும்.
- மேற்படி காடுகளை சீர்படுத்தினதற்காக அவர்கள் சில சுதந்திரங்களையும் பாத்தியங்களையும் சம்பாதித்தார்கள் என்று சொல்வது தப்பு. ஏனெனில் இத்தகைய சுதந்திரங்களும் பாத்தியங்களும் மிராசு அல்லது காணியாக்ஷி என்கிற வார்த்தைக் குள் கொண்டு வரப்பட்டது. சாகுபடி செய்கிறவர்களுக்கு நில பாத்தியமுண்டென்று சொல்வது தப்பு. அது எப்படியென்றால் காணியாக்ஷியென்கிற வார்த்தை கிராமங்களின் எல்லா ஊழியக்காரர்களுக்கும் சாதாரணமாய் அனுபவிக்கிற கசதந்திரங் களுக்கும், தீர்வை கொடுக்காமல் அனுபவிக்கிற நிலங்களுக்கும் உபயோகப்படும். பரம்பரையாக ஊழியஞ் செய்கிற கிராமத் தாருக்கும் கணக்கருக்கும் தலையாரி முதலான கிராம ஊழியக்காரர்களுக்கும் காணியாக்ஷியென்கிற மானியமுண்டு. இது தவிர காணியாக்ஷியென்கிற வார்த்தை சர்க்காருக்கு ஊழியஞ் செய்வதற்குக் கொடுக்கப்பட்ட மானியங்களென்கிற அர்த்தங்கொள்ளுமேயொழிய வேறு விசேஷமான அர்த்தங் கொள்ளாது.
- பள்ளிகள் பிராமணாளுடைய ஊழியக்காரர்களாயிருந்தார்க ளென்று கலெக்டர் பிளேசு துரை சொல்லுகிறார். இதற்கு மிகுந்த பெரிய பொய் கிடையாது. பள்ளிகளென்று சொல்லப்பட்ட வன்னியர்கள் பிராமணாளுடைய ஊழியக்காரர்களாயிருந்த தில்லை. இவர்கள் பூர்வீகத்தில் தன்னிந்தியாவில் ஒரு பெரிய பாகத்துக்கு ஆளுகைக் கர்த்தாக்களாகயிருந்தார்கள். சேரன் – சோழன் – பாண்டியனென்று சொல்லப்பட்ட அரசர்கள் எல்லாரும் வன்னியர்கள்தான். தற்காலத்தில் தெற்கிலும் மேற்கிலும் இருக்கப்பட்ட பாளையக்காரர்களும் ஜமீன்தாரர் களும் வன்னியர்கள்தான்.
- செங்கற்பட்டு ஜில்லாவுக்குக் கொண்டுவருகிறதற்கு முன்னமே தென்னிந்தியாவிலிருந்த வேளாளர் மிகவும் தாழ்ந்த ஸ்திதியி லிருந்தார்களென்பது, செங்கற்பட்டு ஜில்லாவில் தவிர மற்ற எந்த ஜில்லாவிலும் நத்தம் என்னும் கிராமம் இல்லையென்கிற திஸ்ட்டாந்திரத்தினால் தெளிவாய் ரூபிக்கப்படுகிறது. இந்த ஜில்லாவில் மூன்று வித்தியாசமுள்ள கிராமங்களிருக்கின்றன.
- பிராமணாள் வாசஞ்செய்ய அனுபவிக்கப்பட்ட கிராமங்களுக்கு அக்கிராரமென்றும்,
- ஆளுகை செய்யப்பட்டவர்களுடைய சந்ததியாரான வன்னியர்கள் வாசஞ்செய்யப்படுகின்ற கிராமங்களுக்கு மன்னவேடென்றும்,
- வெள்ளாளரென்று சொல்லப்பட்ட பயிரிடுங் குடிகள் வாசஞ் செய்யப்பட்ட கிராமங்களுக்கு நத்தமென்றும் பெயர்.
- வன்னியர்கள் ஒரு காலத்தில் வல்லமையும் வீரத்துவமும் உள்ள சாதியாக இருந்தார்கள். அவர்கள் பயிரிடுவதைப் பார்க்கிலும் வேட்டையாடுவதில் மிகவும் பிரியமுள்ளவர்களாயிருந்தார்கள். இதனால்தான் சேலத்திலும் இதரமானவிடங்களிலும் இருந்த வேளாளரை செங்கற்பட்டுக்குக் கொண்டுவரும்படியான அவசரம் நேரிட்டது. இதனாலேதான் நவாபுகள் தங்களுடைய கம்பத்த (சொந்த) நிலங்களை சாகுபடி செய்கிறதற்கு வடக்கேயிருந்து ரெட்டிகளையும் கம்மவாரையும் அழைப்பித்தார்கள்
- அதற்குப் பிறகு பிராமணாள் அவர்களைப் பின் தொடர்ந் தார்கள். தேவாலயங்கள் கட்டப்பட்டு பிராமணாளுடைய சிவனத்துக்காக அக்கிராரமென்னும் கிராமங்களைத் தானமாகக் கொடுக்கப்பட்டது. வேளாளர்கள் இந்த பிராமணாளுடைய சிஷர்களாயிராமல் வன்னியர்களே அவர்களுடைய சீஷர்களா யிருந்ததால் வன்னியர்களை பிராமணாளுடைய ஊழியக்காரர்க ளென்று தப்புவிதமான அபிப்பிராயம் கொள்ளும்படியாக நேரிட்டது.
- வன்னியர்களான பிரஜைகள் முக்கியமாக செங்கற்பட்டு ஜில்லாவிலிருந்தவர்கள், தாங்கள் அனேக நூறு வருவங் களுக்குப்பிறகு முன்னிருந்த ஸ்திதியிலிருந்து குறைந்து கல்வியற்று பயிரிடுவதனால் ஒரு சொற்ப சீவனத்தையடைந்த தொழிய வேறொன்றுந் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆனபோதிலும் கலெக்டர் பிளேசு துரை அவருடைய இரண் டாவது ரிப்போர்ட்டை எழுதுங்காலத்தில், பள்ளிகளில் னேகம் பேர் வெள்ளாளரைப் போல கன்னி (கண்ணி)ய முள்ள குடித்தனக்காரர்களாயிருந்தார்களென்று எழுதினார். செங்கற்பட்டு ஜில்லா கம்பெனியாருக்கு சாக்கீராய் கொடுக் கப்பட்டு அவர்களால் ஆர்க்காட்டு நவாப்புக்கு குடிக்கூலிக்கு விடப்பட்டு, அதின் பிறகு 30 வருஷ காலமாக அக்கிரமமாக நடத்தப்பட்டு மிராசுகளாயிருந்த குடிக்கூலிக்காரர்களால் செய்யப்பட்ட மோச தந்திரங்களுக்குப் பிறகுதான், பாயக் காரிகள் என்று சொல்லப்பட்ட வன்னியர்கள் மிகவும் அநியாயமாய் நடத்தப்பட்டுத், தங்களுடைய சுதந்திரங்களை கீழ் மேலாகக் கவிழ்த்துவிடப்பட்டு எவ்விதத்திலும் ஒடுக்கப் பட்டார்கள். இந்தக் கொடூரமான செய்கைகளிலெல்லாம் மேற்சொல்லிய குடிக்கூலிக்காரர்களுக்கு பிராமணாளும் உத்தியோகஸ்தர்களும் மிகவும் அனுகூலமா (துணை) யிருந்தார்கள். இந்த பிராமணாள் தங்களுடைய சொந்தத்திற்கும் தங்களுடைய இனத்தாருக்கு மாத்திரமல்ல, அவர்களுக்கு லஞ்சங் கட்டினவர்களுக்கும் றயத்துகளை வெகுசாய் (மிகவும்) மோசஞ் செய்தார்கள்.
- இவ்வளவு சொல்லியும் கலெக்டர் பிளேசு துரை கடைசியில் வந்து எட்டின முடிவென்ன? அவர் தம்முடைய இரண்டாவது விரிவான ரிப்போர்ட்டில் வந்து எட்டின முடிவன்றி வேறில்லை. அவர் என்ன பிரையெத்தனம் செய்த போதிலும் அவர் சிக்கிக் கொண்டிருக்கிற வரை(வலை)யிலிருந்து அவருடைய எல்லாச் சாமர்த்தியமும் அவரை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடாமையா யிருந்தது. இந்தச் சிக்கில் அவர் அகப்பட்டுக்கொண்டது தன்னுடைய கீழ் உத்தியோகஸ்தர்கள் அவரைச் செய்த தந்திரமும் அப்போது இந்தச் செங்கற்பட்டு ஜில்லாவிலிருந்த கலவரமுள்ள ஸ்திதியுமாம்.
- மிராசுதாரர்களுடைய பாத்தியத்தைக் குறித்து கலெக்டர் பிளேசு துரை சொல்லுகிறதென்னவென்றால், மிராசுதாரர்களுக்கு விடப்பட்ட நிலத்தை அவர்களும் அவர்களுடைய வாரிசுகளும் சுவாதினப்படுத்திக்கொள்ளும்படியான பாத்தியமாயிருக் கின்றன. இந்த பாத்தியம் அந்த நிலத்தைச் சாகுபடி செய்து சர்க்கார் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து அவர்களுடைய கிஸ்தி யைச் செலுத்திக் கொண்டு வரும் வரையிலுந்தான் செல்லும். அப்படி நிலத்தைச் சாகுபடி செய்யாமலும் சர்க்காருக்குக் கீழ்ப்படிந்து சர்க்கார் தீர்வையைச் செலுத்தாமலும் போனால், அந்த நிலம் முழுமையும் சர்க்காரைச் சேர்ந்து போய் சர்க்காருக்கு இஷ்டமானவர்களுக்கு அதைக் கொடுத்து விடலாம்.
- இதுதான் கலெக்டர் பிளேசு துரை மிராசு பாத்தியத்தைக் குறித்துச் சொன்னது. இவர் தம்முடைய பிராமணரான கீழ் உத்தியோகஸ்தர்களுடையவும் சென்னப் பட்டணத்தில் இருக்கப்பட்ட துபாசிகளினுடையவும் துர்போக்குக்குச் சந்தேகமில்லாமல் உட்பட்டிருந்தபோதிலும், கவர்ன்மெண் டாரும் ரெவினியுபோர்ட்டாரும் சொல்லப்பட்ட அபிப்பிராயங் களுக்கு அனுசரித்ததாயிருக்கிறதேயொழிய வேறல்ல. இதரமான குடிகளுக்கும் சர்க்காருக்கும் என்ன சம்பந்தமுண்டோ அதே சம்பந்தம் மிராசுதாரர்களுக்கும் சர்க்காருக்கும் உண்டென்று(ம்) மிராசுதாரர்கள் பரம்பரையாய் நிலங்களை சுவாதீனப்படுத்திக் கொண்டிருக்கிறபடியால் சாகுபடி செய்கிறதற்கு முதல் பாத்தியத்தையுடைத்தாய்யிருக்கிறார்களென்றும், அப்படி அவர்களுடைய முச்சிலிக்கையின் பிரகாரம் நிறைவேற்றாமல் போனால் தங்களுடைய கைப்பற்று நிலங்களின் பாத்தியத்தை யிழந்துபோகத் தக்கவர்களாயிருக்கிறார்களென்றும் கவர்ன் மெண்டார் சொல்லுகிறார்கள்.
- மேற்சொல்லிய ஏற்பாட்டின் பிரகாரம் நடவாமற்போனால் மிராகதாரர்களுக்கு உண்டாயிருக்கப்பட்ட நில பாத்தியததை அவர்களிழந்து போவார்களென்று கலெக்டரும் ரெவின்யு போர்ட்டாரும் உறுதியாய்ச் சொல்லுகிறார்கள். இதனடியிற் கண்டிருக்கிற சங்கதியினால் கவர்ன்மெண்டார் கடைசியாய் வந்தெட்டிய இந்த பரிஷ்காரமில்லாத அபிப்பிராயத்தை மிராசுதாரரென்று சொல்லப்பட்டவர்கள் எவ்விதமாய் உபயோகப்படுத்தினார்களென்பது தெரியவரும்.
- முந்தி வன்னியர்கள் தென்னிந்தியாவில் விசேஷமான குடிகளாக யிருந்தார்களென்பது தர்க்கிக்கக் கூடாத உண்மையையும், செங்கற்பட்டு ஜில்லாவில் நிறைந்த குடிகளாகயிருந்தார்க ளென்றும் சாகுபடி செய்யாமலிருந்த காடு கரம்பு நிலங்களை திருத்துகிறதற்காகத்தான் வேளாளர்களைக் கொண்டு வந்து விடப்பட்டார்களென்றும், இவர்களும் பிராமண உத்தியோகஸ் தர்களும் அன்னியோன்னியமாய் ஒன்று சேர்ந்து நெடுநாளாகத் தங்கள் முன்னோர்களுடைய நாள் முதற்கொண்டு அதிகப் பணத்தை விரையப்படுத்தி சரீரப் பிரயாசையும் செய்து அனாதி கரம்பாயிருந்த நிலங்களைச் சீர்படுத்திச் சாகுபடிக்கு லாயக்காய்க் கொண்டுவந்து அனுபவிக்கிறவார்களுக்கு நூதனமான பாயக்காரிக ளென்றும் – சுகவாசிகளென்றும் பெயர்களைக் கொடுத்திருக்கிற தையும் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பூர்வீகத்தில் மிகவும் வல்லமையும் பிரபல்யமு முள்ள சாதியாராக இருந்தார்களென்கிறதற்கும், அவர்களை க்ஷத்திரிய வமிஸஸ்த்தரென்கிறதுக்கும் அடையாளமாக அரச ருடைய ஆக்கியா (ஆக்ஞா) சக்கரம் மன்னவேடு கிராமங்களின் எல்லைக் கல்லுகளில் பதிய வைத்திருக்கிறது, இந்நாள் வரைக்கும் திட்டாந்தரமாக யிருக்கின்றது. மேலும் செங்கற்பட்டு ஜில்லா முழுமையிலும் இருக்கப்பட்ட மண்டபங்களிலும் தேவஸ் தானங்களிலும் முக்கியமாக, காஞ்சிபுரத்திலிருக்கப்பட்ட கோயில்களிலும் இருக்கும் சாசனங்களினால் திட்டாந்திரமாகு கின்றது. வேளாள ருடைய கிராமத்தின் எல்லைக் கல்லுகளுக்கு சூல அடையாளமும், அக்கிரகார எல்லைக் கல்லுகளுக்கு குடைபிடித்துக் கொண்டிருக்கிற குள்ளப் பிராமணனுடைய உருவமும் போட்டிருக்கின்றது.
- இதே பிரகாரம் மிராசு காரியத்தில் மிகவும் சாமர்த்தியமுள்ளவராக அங்கீகரிக்கப்பட்ட கலெக்டர் எல்லீசு என்பவர் பறையர் வேளாளர்களுடைய அடிமைகளென்றும், பள்ளிகள் பிராமணாளுடைய ஊழியக்காரர்களென்றும் சொல்லுகிறார்
- இப்படிச் சொல்வது உண்மையாகவே அபத்தம். எல்லீசு என்பவர் தன்னுடைய கீழ் உத்தியோகஸ்தர்களுக்கும் அவர்கள் உறவின் மூறையாருக்கும் சகாயமாக இந்த துரதிஷ்டமுள்ள வன்னியர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களன்று அவருடைய பிராமண சிரஸ்தேதாராகிய போகண்ட சங்கரராயரினால் மோசம் போனார்கள். வன்னியர்களுக்கு இப்போது ரெட்டியார், நாய்க்கர், நாட்டார், கவுண்டர், தந்திரியார், படையாக்ஷி பண்டாரத்தார், உடையார், நயினார் முதலான நாமதானங்கள் உபயோகப்படுகிறதைக் கவனிக்க வேண்டியது. வன்னியர்கள் பூர்வீக காலத்தில் ஆளுகைக் கர்த்தாக்களாக யிருந்த போதிலும், பின்னிட்டுப் பயிரிடுந் தொழிலில் பிரவேசித்திருந்தார்கள். அப்படிச் செய்வதில் தங்களுடைய கல்வியை அசட்டை பண்ணினார்கள். இதனால் அவர்கள் மீதில் வேளாளர்க ளுக்கும் இதரமான முதலி சாதியாராகிய அகமுடையாருக்கும் பிராமணாளுக்கும் உண்டான பொறாமையினால், இந்த செங்கற்பட்டு ஜில்லா இசாராவாகக் கொடுக்கப்பட்டிருந்த 30 வருஷ காலத்தில் நானாவிதமான மோசத்துக்கு உட்படும் படியாக நேரிட்டிருந்தார்கள். அவர்களை ஒடுக்கிறவர்களோடு கூட கீழ் உத்தியோகஸ்தர்களும் சேர்ந்து அவர்களை அதிகத் துன்பப்படுத்தினார்கள்.
முதலில் இந்துஸ்தான தேசத்திலிருக்கும் பிராமணாள் அனாதி காலமுதற்கொண்டு, பச்சை போன்றிருந்தபடி செடி பயி் முதலானதை நாசஞ்செய்யும் வெட்டுக்கிளியை மகாராணி யவர்களுடைய உத்தரவு உபயோகமாகவொட்டாமல் குடிகளுக்குத் தங்களுடைய பிள்ளைகளை கவர்ன்மெண்டு பள்ளிக் கூடங்களில் படிக்க அனுப்பினால், அந்தப் பிள்ளைகளை கிறிஸ்து மதத்தில் சேர்க்கப்படுவார்களென்றும் தாங்கள் அல்லது தங்களுடைய… …. …. …. வாசஞ் செய்து கொண்டிருக்கிற ஸ்தல கிராமங்களில் அல்லது தாலுக்கு, முனிசீப் கோர்ட், கலெக்டர் கச்சேரி, சிவில் கோர்ட், இவை முதலான நியாயஸ்தானங்களில் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினால், பிள்ளைகள் விஸ்தாரமாய்ச் சேர்வார்களென்று சொல்லுகிறார்கள். ஏனென்றால் தங்க ளுடைய சந்ததியாரும் தங்களுடைய பந்துக்களுடைய சந்ததி யாரும் நூறு நூறாய் அவ்விடங்களுக்கு வந்து வாசித்துக் கொண்டு வருஷா வருவம் பரீக்ஷை கொடுக்கறது காரணமா யிருக்கிறது. அவ்வாறு தட்டுத் தடுமாறி…….. பிள்ளைகள் வாசித்துக் கொண்டு பரிக்ஷை கொடுத்தாலும் அவர்களை முன்னுக்குக் கொண்டு வருகிறதுக்காகச் சகாயஞ் செய்கிறவர்கள் யாதாமொருவருமில்லை. அப்படிப் படித்துத் தேறி ஒரு உத்தியோகத்தைச் சம்பர்தித்தாலும் அதிலிருந்து மோசத்தினா லேயும், தந்திரத்தினாலேயும் தள்ளப்படுகிறார்கள்.
- வன்னியர்களுக்கும் வேளாளர்களுக்கும் இருக்கப்பட்ட குரோதம் வீம்பாகச் சொல்லப்பட்ட மத சம்பந்தத்தினாலுண்டானதல்ல. வலங்கை, இடங்கையென்று சொல்லப்பட்ட கக்ஷியினாலுண்டாயிற்று.
- வன்னியர்கள் தென்னிந்தியாவில் ஆளுகைக்காரர்களாக இருந்தார்களென்பது ராஜமயேந்திரத்தின் ராஜபிரதா பருத்திர வன்னியரும், சந்திரகிரி கிருஷ்ணராயரும், நகரி சாளுவராயரும் காஞ்சிபுரம் தொலாதானப் பல்லவராயரும், செங்கற்பட்டு காந்தவராயரும், திருவண்ணாமலை வல்லாளராயரும், பிட்சை புரம் விட்டலராய சோழ வன்னியரும், உடையார்பாளையம் இயு)வரங்க உடையாரும், அரியலூர் மழவராயரும், கச்சிராயன் பாளையம் கச்சிராயரும், சிவகிரி வரகுணராம பாண்டியரும் வணங்காமுடி செந்தொட்டிக்காளை வன்னியரும் இன்னும் எண்ணி முடியாத அனேக அரசர்களெல்லாரும் வன்னியர்களாக யிருந்தார்களென்பதினால், சுல்பமாய் வெளியரங்கமாகும். அப்படியிருக்க இவர்கள் சூத்திர சாதியில் மிகவும் இழிவானவர்க ளென்று எப்படிச் சொல்லக்கூடும்? ஆகையால் 1816ஆம் வருஷம் மே மாதம் 30 ஆம் தேதியின் ரிப்போர்ட்டில், கலெக்டர் எல்லீசு துரை, பள்ளிகள் பிராமண மிராசுதார்களுடைய ஊழியக்காரர்க ளென்று என்ன காரணத்தினால் சொல்லக்கூடும்?
- ஏற்கெனவே சொல்லியிருக்கிற பிரகாரம் வன்னியர்கள் தென்னிந்தியாவில் சுய தேசத்தாராயிருந்தார்கள். அவர்களி லிருந்து இந்து அரசர்களும் பிரபுக்களும் பாளையக்காரர்களும் உற்பத்தியானார்கள்.
- வேளாளரென்று சொல்லப்பட்டவர்கள் செங்கற்பட்டு ஜில்லாவில் குடியேறி அவர்களுடைய பிரயாசையினால் கொஞ்சம் திரவியத்தைச் சம்பாதித்து அதுல் சல்வியையடைந்து, அவர்களுடைய பூர்வீக ஸ்தித இழிவானதாயும் ஈனத்துவ முள்ளதாயுமிருந்த போதிலும், நாளுக்குநாள் மேன்மையை யடைந்தார்கள். இப்படியிவர்கள் நாளுக்குநாள் மென்மையடைய வன்னியர்களின்போரில் அவர்கள் பொறாமை கொண்டதனால் வன்னியர்கள் தாங்களிருக்கப்பட்ட நிலை தெரியாமல் மூடத்தனத்தினால் நாளுக்கு நாள் குறைந்தார்கள், இவர்களை இன்னும் இழிவான ஸ்திதிக்கு கொண்டு வருகிறதுக்குக் காரணமென்ன வென்றால், வடராச்சியத்தி லிருந்த தேசூரென்ற ஜாதி ரெட்டிகளும், பிராமணாளும் பெரும் வெள்ளம் போல் நுழைந்ததினாலும், ஐதரலியி னுடைய கலாபனையினாலும், இன்னும் வெகுசாய் ஒடுக்கப் பட்டார்கள். பின்பு செங்கற்பட்டு ஜில்லா நவாப்புக்கு 30 வருஷத்துக்கு இசாரா கொடுத்திருந்த காலத்தில் கான்கோய் களும், துபாசிகளும் செய்த மோசங்களினாலும் தந்திரங்களி னாலும் வன்னியர்கள் தங்களுடைய நியாயமான சுதந்திரங் களிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் சாமர்த்தியமுள்ள குடிக ளானபடியினாலே அவர்களப் பலாத்காரமாய் பாயக்காரி களாகச் செய்துவிட்டார்கள். அதென்னவென்றால் கூலிக்கு மாரடிக்கிறவர்களாகச் செய்துவிட்டார்கள்.
- கிராமத்தாரென்கிறவர்கள் கச்சேரி உத்தியோகஸ்தர்களுடைய பந்துக்களான படியினாலே இந்தக் கல்வியில்லாத வன்னியர் களை மோசஞ்செய்து தங்களுடைய சொந்தப் பேரில் மொத்தப் பட்டா செய்து கொண்டு, பாயக்காரிகளுடைய கைப்பற்ற நிலங்களுக்குப் பட்டாவில்லாமல் செய்து விட்டார்கள், அன போதிலும் பாயக்காரிகள் சர்க்கார் தீரிவையைச் செலுத்தி நாளது வரைக்கும் கச்சாயத்து*(கைச்சாத்து, கையொப்பம் போட்ட பற்றுச்சீட்டு) பெற்று வருகிறார்கள். கணக்குப் பிள்ளைகளும் மிராசுதாரர்களென்ற கிராமத்தார்களும் தங்களுடைய நிலங்களைச் சாகுபடி செய்யாமல் போன போதிலும், அவர்களுடைய மேல்வாரம் துண்டுவாரம் குப்பத்தமும் இதரமான மேரைகளையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள். இது நீதியா? இது நியாயமா? பாயக்காரிகளை இவ்விதமாக மோசஞ் செய்து அநியாயப்படுத்துகிறது சரியா? பாயக்காரிகள் ஏர்-குண்டை*(மாடு, எருது) விரைதானியம் முதலானதுகளை சவுதாய்க்கிறது மல்லாமல் தங்களுடைய சரீரப் பிரையாசையையும் செலுத்து கிறார்கள். இப்படிச் செலுத்தின பின்பு அவர்கள் என்ன பலனடைகிறார்கள்? மொத்த விளைவில் நூறில் இருபத்தைந்து அடைகிறார்கள். இந்தச் சொற்ப வரும்படியைக் கொண்டு அவர்கள் என்னமாய்த் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தங்களுடைய ஆடு மாடுகளையும் காப்பாற்றக் கூடும்? அவர்கள் விரைதானியங்களை எங்கேயிருந்து சவுதாகிக்கக் கூடும்? மழை பெய்யாவிட்டால் அவர்கள் என்ன செய்கிறது? எதார்த்தமாகவே நிலபாத்தியத்தை உடைத்தான இந்த ஏழைக்குடிகள் மகிமை பொருந்திய இங்லீஷ் கவர்ன்மெண்டாரால் என்னமாய் நடத்தப்படுகிறார்களென்கிறதுக்கு, உலகமே சாட்சி. தங்களைக் காப்பாற்றவேண்டிய ஆளுகைக்காரர்களுடைய ஒருதலைப் பட்சமான எண்ணத்தினால், ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக் கணக்கிலும் செனங்கள் அதிக வருத்தத்திற்கும் தீமைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.
- இந்தக் கெடுதிகளுக்கெல்லாம் காரணம் மேற்சொல்லிய கலெக்டர் எல்லீசு என்பவருடைய ரிப்போர்ட்டுதான்.
- கலெக்டர் எல்லீசு மிராசு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் செய்வதில், ஆதியில் சுதந்திரமௌன்று அர்த்தங்கொள்ளப்பட்ட மிராசு என்கிற வார்த்தை தென்னிந்தியாவில் பலவிதமான பாத்தியத்திற்கு வழங்குதென்றும் இந்த பாத்தியம் ஒன்றுக் கொன்று வித்தியாசப்படுகிறதுமல்லாமல் எல்லாச் சுதந்திரமும் நிலத்தைச் சார்ந்ததென்றும் சொால்லுகிறதுமல்லாமல், இந்த பாத்தியம் சென்னப் பட்டணம் இராஜதானியிலிருக்கப்பட்ட எல்லா ஜில்லாக்களின் குடித்தனக்காரர்களுக்கும் நிலபாத்திய மென்று தெரிந்திருக்கிறதென்றும் சொல்லுகிறார்.
- வட ஆர்க்காடு கலெக்டராகிய கிறீம் துரை அவருடைய 1818 ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 31 ஆம் தேதியின் ரிப்போர்ட்டில் நில பாத்திய முழுமையும் சர்க்காருடையதென்று எனக்குப் பூர்த்தி யாய்த் தோற்றுகிறபடியால், அந்த பாத்தியத்தை விட்டுவிட்டால் சர்க்காருக்குக் குறைவுபடுமென்றும், பிராமணாளுடைய அக்கிராரங்களுக்கு உண்டாகியிருக்கிற பாத்தியங்கள் இந்த ஜில்லாவில் சூத்திராளுக்கில்லையென்றும் தான் கண்டு பிடித்ததாகச் சொன்ன போதிலும், கிராமத்தாருக்கு சர்க்கார் பட்டாவில் சில மிராசு பாத்தியமுண்டென்று நான் ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆதியில் ஒவ்வொரு கிராமத்தின் சமாபந்தி காலத்தில் கிராமத்தாருக்கு கிராமத் தான மானியமென்று சொல்லப்பட்ட கில நிலங்களும் கிராமத்தான சுதந்திரமென்று சொல்லப்பட்ட சில சுதந்திரங்களும் மாமூலாகயிருந்தது. ஆனால் கிராமத்தாரென்று, சொல்லப்பட்டவர்கள் யாதாமொரு தப்பிதஞ் செய்தால் அபராதத்திற்கு நிலத்தையும் சுதந்திரத்தையும் இழந்து போகிறதற்கு உட்பட்டவர்களாகயிருக்கிறார்க ளென்றும் சொல்கிறார்.
- கிராமத்தார் மானியந்தவிர கிராமத்தின் மற்ற எல்லா நிலங்களும் சர்க்காருடைய வசத்திலிருந்தது. சூத்திராளுடைய சொந்தக் கிராமத்தில் சர்க்காருக்கு எவ்வளவு செலுத்த வேணுமென்று ஒரு நிஷ்கரிஷை (வரையறை)யில்லாமல் போனபடியினால், அந்தக் கிராமத்தானுக்கு என்ன சேர வேணுமோ தெரியாமலிருக்கிறது. மாமத்*(மராமத்து)தென்று சொல்லப்பட்ட சூத்திராளுடைய கிராமங்களும் ஏகபோகம் பசுங்கரை அல்லது அர்த்தக்கரையாயிருக்கிறது. ஆகியிலிருந்த கிராமத் தான மானியந்தவிர வேறே பாகம் பங்கிடாமலிருக்கிற கிராமத்துக்கு ஏகபோக கிராமமென்று பெயர். பூர்வீகத்தில் கிராமங்கள் ஏற்பட்டபோது சிலர் ஒன்று கூடி அனுபவித்த கிராமங்களுக்குப் பசுங்கரை என்று பெயர். குடிகளும் சாகுபடியும் விர்த்தியாக ஏரி மராமத்து செய்வதற்கும் நிலங்களைப் பகுந்துக் கொடுக்கிறதுக்கும் ஜல ஆதாரத்தை ஒழுங்கு படுத்துவதற்கும் ஆதிக் குடிகளுக்கு ஒத்தாசையாக சில யோக்கியமானவர்களைச் சேர்ப்பது அவசியமாயிருந்தது.
- பூர்வீகத்துக் குடிகளாகிய வன்னியர்களுக்கு உதவியாக வேளாளர்களைக் கொண்டு வர வேண்டியதாயிருந்தது.
ஆனால் இவ்விதமாக நூதனமாய் வந்த பங்குதாரர்கள் அதி இராமத் தான மானிய நிலங்களுக்காவது சுதந்திரங்களுக்காவது பங்குள்ளவர்களாக இருக்கவில்லை. நில சாகுபடியிலுண்டாகிற நய, நஷ்டங்களுக்குப் பங்குள்ளவர்களாக இருந்தார்கள். பங்குள்ள கிராமங்கள் அர்த்தக்கரை கிராமமென்று சொல்லப் படுகிறது. மராமத்து என்று சொல்லப்பட்டவை சூத்திரா ளுடைய கிராமங்கள், பூர்வீகத்தில் உடைத்தாயிருந்த தானை பத்திரம் சாசனம் அல்லது தாம்பர சாசனத்தை இப்போது உடைத்தாயிருக்கவில்லை. மேலும் கிராமத்தில் கிராமத் தான மானியமென்று சொல்லப்பட்ட நிலங்களுக்காவது, சுதந்திரங் களுக்காவது யாதொரு ஆதாரமுமில்லை. மானியத்தை அனுபவிக்கிற ஒரு கிராமத்தானாவது பல மிராசுக்காரர்களாவது கிராமத் தான மானியத்தையும் சுதந்திரத்தையும் அப்புறப் படுத்தக் கூடாது. கிராமத்தின் மற்ற எல்லா நிலங்களுக்கும் அவர்களுக்கும் பாத்தியமில்லை. அந்தப் பாத்தியம் முழுமையும் சர்க்காருடையது. தானத்தினாலாவது மாமூலினாலாவது சாஸ்விதமான குடிக்கூலி ஸ்தாபிதஞ் செய்யவில்லை. சாதாரண மான வழக்கத்தின் பிரகாரமும் சாகுபடியின் ஸ்திதியின் பிரகாரமும் வருஷா வருஷம் குடிக்கூலியை வசூல் செய்து கொண்டு வந்தார்கள். ஆனால் அக்கிராரத்திலிருந்து அடைந் ததைப் பார்க்கிலும் மராமத்து என்கிற கிராமங்களிலிருந்து அடைந்த மேல்வாரம் அதிகமாயிருந்தது. குடிவாரத்தைக் குறித்து சர்க்காரால் யாதொரு அதிகாரமுஞ் செய்தார்களென்று காணப் படவில்லை; இது முன்னிருந்த அல்லது பிற்பாடு ஏற்பட்ட அக்கிராரத்துக்கு (உரிமைக்கு) சர்க்காருக்குச் செலுத்துகிற தீர்வையைக் குறித்து மாத்திரந்தான் அப்போதைக்கப்போது மேல்வாரத்தைப் பத்திரப்படுத்துகிறதுக்காக ஏஜென்டுகள் ஏற்படுத்தப்பட்டார்கள். ஆனால், குடிவாரத்தை வசூல் செய்து மராமத்து கிராமத்தாரிலும் அக்கிரார கிராமத்தின் மகா ஜனங்களிலும் சமமாயிருந்தது.
- மராமத்து கிராமங்களில் வழங்காத இதரமான பாத்தியம் அக்கிரார கிராமங்களிலிருக்கிறதாகத் தோற்றுகின்றது. இது என்னவென்றால் அர்த்தக் கிரையம். அர்த்தம் என்கிறது சாஸ்விதமென்கிற அர்த்தமாம். அர்த்தக் கிரையமென்பது சாஸ்விதமான விற்பனை. இந்த அதிகாரம் அக்கிராரதாரர்களுக்கு மாத்திரம் முழு கிராமத்தையாவது ஒரு கிராமத்தில் தங்களுக்கு உண்டாயிருக்கிற பங்கையாவது விற்பனை செய்யும்படியான அதிகாரம். ஆனால் மராமத்து கிராமங்களின் கிராமத்தான மானிய நிலங்களை அல்லது பாகங்களைக் குறித்து உபயோகப் படாது.
- இதோ நாம் இரண்டு மேலான அதிகாரஸ்தர்களையுடைய அபிப்பிராயத்தை உடைத்தாயிருக்கிறோம். இருதரத்தாரும் மேன்மையுள்ள உத்தியோகஸ்தாள். மேற்படி இருதரத்தாரும் ரெவின்யு காரியத்தில் அதிக அனுபோகசாலிகள். ஆனால் மேஸ்டர் எல்லீசு என்பவர் தம்மிடத்திலிருந்த பிராமண கத்துக் குட்டிகளின் தந்திரத்திற்கும் மோசத்திற்கும் உட்பட்டபடி யினால் அவர்களைக் காப்பாற்றி எழுதும்படி நேரிட்டது.
- 1820ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 4ஆம் தேதியில் ரெவின்ய போர்ட்டார் பிறோசீடிங் 8ஆவது கலத்தில், ஒரு மிராசுதாரன் தன்னுடைய நிலங்களை விட்டுவிட்டால் அவைகளின் குடிக் கூலி வரும்படிக்காக அந்த நிலங்களை இதராளுக்குச் சாகுபடி செய்கிறதுக்குக் கொடுக்கவேண்டியது கவர்ன்மெண்டார் மேல் விழுந்த கடமையென்று சொல்லுகிறார்கள்.
- இதைக் குறித்து 1824 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதியில் இத்தேசத்தின் நிலையை குறித்து சர். தாமஸ் மன்றோ என்பவர் இதனடியில் கண்டிருக்கிற பிரகாரம் சொல்லுகிறார்.
இந்தியாவின் பூர்வீக நில பாத்தியதை குறித்து நமக்கு மிச்சம் ஒன்றும் தெரியாமலிருக்கிறபடியால், அதைக் குறித்துப் பலவிதமான யோசனைகள் உண்டாகியிருக்கிறது. ஆனால், நமக்குத் தெரிய வருவதில் அதினுடைய தற்கால ஸ்திதியை அறிந்து அதைச் சீர்ப்படுத்தும்படியான வழியைக் கண்டுபிடிப்பதற்காக ஏதுவாகயிருக்கிறதேயொழிய வேறல்ல. இந்தியா தேச முழுவதிலும் இதே மாதிரியாக தனியான பூஸ்திதிகள் இருந்ததாக நம்புவதற்கு இடமில்லை. பழவேற்காடுமுதற்கொண்டு கெஞ்சம் வரைக்கும், பர்மா ஆல் கோயம்புத்தூரிலும் இப்போது வழங்கா நின்ற சர்க்கார் எனாம் என்று எப்போதும் வழங்கி வந்ததாகத் தெரிய வருகிறதே யொழிய வேறல்ல. தங்களுடைய சுய அரசர்களிடத்தில் குடிக்கூலிக்கு வாங்கி நடத்திக் கொண்டுவந்த நாடுகளை அவர்களே அதை நடத்திக் கொண்டு வரும்படியாக, கம்பெனியார் உத்தரவு கொடுத்திருக்க, வட ஜில்லாக்களில் தற்காலத்து ஜமீன்தாரர்களும் இதற்கு உட்பட்டவர்கள். ஒரு. ஜில்லாவில் நிலங்கள் எவ்விதமாக அனுபவிக்கப்படுகிறதென்கிறது நமக்குத் தெரிந்தாலொழிய அதனுடைய உள்ளந்தரமான ஏற்பாட்டை இவ்விதமாகஒமுங்க படுத்த வேண்டும் என்பதைக்குறித்து நாம் சரியான அபிப்பிராயத்தைக் கொள்ளக் கூடாது. மேஸ்டர் எல்லீசு சொல்லுகிற பிரகாரம் மிராசு பாத்தியம் உண்டாகியிருக்கப்பட்ட கர்னாடகத்திலும், தென்னாடுகளிலும் இந்த நிலங்கள் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ஏக்ரா வரைக்கும் உண்டாகியிருக்கின்றது. கர்னாடகத்தில் உண்டாயிருக்கிற மிராசு ஏற்பாட்டைக் குறித்து நாம் கொஞ்சம் யோசிக்கிறது நியாயமாயிருக்கும். பூர்வீகத்தில் கிராமங்கள் ஏற்படும்போது நிலங்களைப் பெற்றவர்கள் கிராமயிராகதாரர்களென்று ரெவின்யு போர்ட்டார் யோசிக் கிறார்கள். இதைக் குறித்து அவர்கள் பூர்த்தியான தாற்பரியம் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளவும் திட்டாந்தரமில்லாத எண்ணங்களாக இருக்கின்றது. ஆகையால் எவ்வளவும் இவை நம்பத்தக்கவைகளல்ல. இதைக் குறித்து மேஸ்தர் எல்லீஸ் சொல்லுகிறதும் திருப்திகரமாயிருக்கவில்லை. பாணவாசி என்கிற நகரைச் செய்த அர்த்த சோழச் சக்கரவர்த்தி காலத்திற்கு முன் கர்னாடகமுழுமையும்காடுகரம்பாயிருந்த தென்றும், இந்த அரசன் நற்சனங்களை அதில் குடியேற்றினார் என்றும், இதில் ஐந்தில் நான்கு பாகம் வேளாளர்களாக யிருந்தார்களென்றும் அவர் நினைக்கிறார். இது முழுவதும் கட்டுக்கதை. எந்த அரசலும் அவ்வளவு செனங்களைக் குடியேற்றினதில்லை. எந்த ஊரும் அவ்வளவு செளங்கள் தந்ததில்லை. இப்பேர்க்கொத்த குடியேற்றுதலில் மாண்டவர்களுடைய தொகை பிழைத்து வந்தவர்களுக்குச் சரியாயிருப்பார்கள். கெனறா (கன்னடம்) அல்லது கன்னடி தேசத்திலும் பாணவாசி என்கிற தேசத்திலிருந்தும் செனாங்களை கர்ளாடகத்தில் குடியேற்றினால் இப்போது – காடுகரம்பு திருத்தியிருக்கிற இந்தக் காலத்தில் கூட – அவர்கள் சீக்கிரத்தில் இறந்து போவார்கள். அப்போது காடாயிருந்ததாய்ச் சொல்லப்பட்ட ஊரில் இந்த முந்நூறு ஆயிரம் செனங்கள் சாகுபடி செய்கிறதுக்கு ஜலமும் ஏரிகளும் இல்லாமல் என்னாயாய்ப் பிழைத் தார்கள்? அதை மேஸ்தர் எல்லீசு நமக்குச் சொல்லவில்லை. மேஸ்தர் எல்லீசு சொல்லி வருகிற மிராசு பாத்தியம் வேளாளர்கள் ஆதியில் ஆர்க்காட்டில் குடியேறினபோது உண்டான பாத்தியமாயிராமல் நெடுநாளாய்க் குடியேற்றப் பட்டுச் சாகுபடி செய்துகொண்டு வந்த தேசத்தில் நாளுக்குநாள் உண்டான பாத்தியமாகத் தோற்றுகிறதேயொழியவேற்ல்ல. இந்த பாத்தியம் பொதுச்சிலவில் உண்டாக்கப்பட்ட பெருந்தொகையான ஏரிகளினாலும் ஐல ஆசான்களினாலும்*(நீர் ஆதாரங்களினாலும்) உண்டாயிருக்கலாம். இந்த ஜல ஆசான்கள் எந்த நிலத்துக்காக உண்டாக்கப் பட்டதோ அந்த நிலங்களைக் கிரமமாய்ச் சாகுபடி செய்வதினால்தான் சர்க்காருடைய சிலவு கிட்டும் படியாகக் கூடுமான படியால், அந்தச் சாகுபடியைக் இரமமாய் நடத்திக் கொண்டு வருவதற்காகக் குடிகளுக்கு சில சுதந்திரங்களைக் கொடுக்கவேண்டியிருக்கும். கிராமத்தில்யாவற்று நிலங்களையும்மிராசதாரர்கள், கைப்பற்றியிருக்கிற சமுதாய பாத்தியமாகப்பட்டது மேற்சொல்லிய பிரகாரமே உண்டாயிருந்திருக்கலாம். ஏனென்றால் மழை பூச்சியமாயிருக்குங்காலங்களில் எல்லா நிலங்களையும் மிராசுதாரர்கள் சாகுபடி செய்ய வருஷாவருஷம் மாற்றிக் கொள்ளாவிட்டால் மற்றவர்களைப் பார்க்கிலும் இவர்கள் தங்களுடைய தீர்வையைக் கிரமமாய்ச் செலுத்துகிறது வருத்தமாயிருக்கும். ஆர்க்காட்டிலும் இதரமான தமிழ்த் தேசங்களிலும் நஞ்சை நிலங்களையுடைத்தான மிராசுதாரன் அவன் சாகுபடி செய்கிற நிலங்களுக்கு மாத்திரம் வரிசெலுத்த வேண்டியதென்றும் அவன்கொஞ்சமாவது சாகுடி செய்யாவிட்டால் வரிகொடுக்க வேண்டியதில்லை யென்றும் இந்த நிலத்தைச் சாகுபடி செய்யும்படியாய் சர்க்கார் இதராளை யனுப்பினால் அவரிடத்தில் மேல்வாரத்தை வாங்குகிறதற்கு மிராசுதாரனுக்கு அதிகாரமிருக்கு தென்றும் சிலர் சொல்லுகிறார்கள். இப்பேர்க்கொத்த அதிகாரம் எங்கேயாவது இருந்தால் ஆர்க்காட்டைவிட மலையாளத்திலும், கன்னிடைய தேசத்திலும்*(கன்னடிய தேசத்திலும்) இதைக்காண நாம் எதிர்பார்க்கலாம். ஏனென்றால் அவ்விடங்களில் சாகுபடி சிலவுக்கும் சாக்காருக்கும் பாத்தியமில்லை. ஆனால் இப்பேர்க்கொத்த அதிகாரம் அத்தேசங்களிலில்லை. நிலக்காரன் தன்னுடைய நிலத்தைச் சாகுபடி செய்தாலும் செய்யாமல் போனாலும், அவனுடைய நிலத்தின் தீர்வையை அவன் கட்டவேண்டியது. கட்டாமற் போனால் அவனிலத்தை*(அவன் நிலத்தை) ஜப்தி செய்து ஏலம் போடலாம். ஆர்க்காட்டில் அப்போர்க்கொத்த சுதந்திரம் உண்டாயிருக்கிறதாக எவ்வளவும்காணப்படவில்லை. மிரோசுதாரனுடைய வாரக்குடியை சர்க்காருடைய வாரக்குடியோடு சேர்ப்பதால் இந்தத் தாத்பரியம் உண்டானதாகத் தெரிய வருகிறது. மிராசுதாரன் தன்னுடைய சொந்த வாரக்குடியோடு தனக்கிஷ்டமான ஏற்பாட்டைச் செய்து கொள்ளலாம். ஆனால் அவன் தானும் சாகுபடி செய்யாமல் ஒரு வாரக்குடியை சவுதாய்க்காமல் போய் சர்க்கார் ஒரு வாரக்குடியை சவுதாய்த்தால் சர்க்காருடைய வாரக்குடியின் மீதில் மேல்வாரம் வாங்குவதற்கு மிராசுதாரனுக்கும் யாதாமொரு பாத்தியமில்லை. மிராசுதாரன் தன்னுடைய சொந்த நிலத்தைக் குடிக்கூலிக்கு விடுகிறதற்குத் தனக்குப் பாத்தியமில்லையென்று சொல்வது அநியாயமாயிருக்குதென்று அசப்பில் தோற்றலாம். ஆனால் சர்க்கார் வரியை அவன் செலுத்தாமற் போனால் இதரமான தேசங்களில் எப்படியோ அவ்விதமாக இத்தேசத்திலும் அவனிலங்கள் சர்க்கார் தீர்வைக்குப் பாத்தியப்பட்ட போதிலும், அனேக வருஷம் சென்றபோதிலும், வரியைச் செலுத்தப் பாத்தியப் பட்டால் சர்க்காரிடத்திலிருந்து தன்னிலத்தை மறுபடியும் அடையலாமென்கிறதை நாம் கியாபகத்துக்குக் கொண்டுவேர வேண்டியதுதான். சர்க்கார் தீர்வையைச் செலுத்தாமலும் தன்னிலங்களைச் சாகுபடி செய்கிறதற்கு வாரக்குடியை சவுதாய்க்காமலும் போனால், அப்பேர்க்கொத்த நிலத்துக்குக் குடிக்கூலி பெறலா மென்னும் பாத்தியம் எதார்த்தமாக இந்தக் காலத்திலும் ஒப்புக்கொள்ளப் படவில்லை. மேலும் முன் எந்தக் காலத்திலும் உண்டாயிருக்க மாட்டாது. ஆர்க்காட்டைச் சார்ந்த கிராமங்களில் உண்டாயிருக்கப்பட்ட கரம்பு நிலங்களும் மிராசுதாரருடையதென்று மேஸ்தர் எல்லீசு நினைக்கிறதுமல்லாமல், அவருடைய எண்ணத்தை சில தஸ்தாவேஜிகளினால்காண்பிக்கிறார். அதென்னவென்றால் ஒரு மிராசுதாரன் தன்னுடைய சாகுபடி நிலங்களை விற்கிரையஞ் செய்யும்போது அந்தக் கிராமத்தின் அத்துக்குட்பட்ட கரம்பிலும், கருங்கல்லிலும், ரவைமுதலியன உண்டாகிற கல்லிலும், ஜல, நிதி, பாஷாணமுத லுற்பத்தியாகிறவர்களுக்கும் தனக்குண்டான பாத்தியத்தையும் அவன் விற்றுப் போடுகிறான். ஆனால் இது ஒரு சந்தேகமுள்ள ஒழுங்கொழிய இதனால் கரம்புக்கு எதார்த்தமான பாத்தியம் உண்டாகாது, இது கரம்பில்லாத கிராமங்களிலும் கரம்புள்ள கிராமங்களிலும் வழங்குவதும் அல்லாமல், மிராசு இல்லாத இடங்களிலும் வழங்கும். அது கரம்பு நிலங்களில் மேய்ச்சலுக்கு ஒருவித பாத்தியத்தைக் குறித்தபோதிலும் அது சாஸ்விதமான பாத்தியத்தைக் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுக்கிறதா யிருந்தால் கிராமத்தின் எல்லாக் கரம்பு நிலங்களையும் கொடுத்துவிடும்படியாக நேரிட்டுக் குடிகளுக்கு மேய்ச்சல் நிலமில்லாமல் அவர்களை நஷ்டப்படுத்தும்.
- இதே மாதிரியாக செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, தஞ்சாவூர், திருநெல்வேவி, மதுரை ஜில்லாக்களின் கலெக்டர்களும் அவர்களுடைய அபிப்பிராயத்தைக் காண்பித்திருக்கிறார்கள் 1850ஆம் வருஷத்தின் 9ஆவது நெம்பர் அசல் வழக்கில், மதுரை ஜில்லா சப்-கலெக்டர் அவருடைய உத்தரவின் 21-ஆவது ஆன்சரில் (பதிலில்) சாதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள எல்லா எனாம் நிலங்களும் ஒரு ஏற்பாட்டைக் கொண்டு கொடுக்கப் பட்டதென்று இந்து சாஸ்திரத்தில் தெளிவாகச் சொல்லியிருக் கிறதுமல்லாமல், அந்த ஏற்பாட்டின் பிரகாரம் நடவாமற் போனால் அந்த எனாம் சப்தி செய்யப்பட்டு அரசன் நிலத்திற்குச் சுதந்தரவாளியாய் அதை இதராளுக்குக் கொடுத்துவிடலாம் என்று கண்டிருக்கிறதென்றும் சொல்லுகிறார். அவர் சொல்லுகிற சாஸ்திரம் இதனடியில் வருகிற வார்த்தைகளினால் தெரியவரும். அதென்னொனில், ஜெயத்தினால், பூமி பரிசுத்தமுள்ள பரசுராம னென்பவருடைய சொத்தாயிற்று. தானத்தினால், ரிஷியாகிய காசிபருடைய சொத்தாகி, ஆதரவுக்காக க்ஷத்திரியருக்கு ஒப்புவிக்கப்பட்டு அவர்களுக்குள் உண்டாகியிருந்த வல்லமை யுள்ள வீரர்களால் அனுபவிக்கப்பட்டதல்லாமல், பூமியைச் சாகுபடி செய்த குடிகளால் அனுபவிக்கப்படவில்லை. ஆனால் வருஷவரி கொடுப்பதனால் வருஷ பாத்தியம் குடிகளால் அடையப்பட்டது. அவ் வருஷத்திற்கு நிலத்தை அரசன் வேறொருவருக்கு நியாயமான பிரகாரம் கொடுக்கவாவது விற்கவாவது கூடாது.
- மேலும் பூமியில் அரசனுக்குண்டான பாத்தியம் பிதிரார்ச்சித சொத்தைப் பாகித்துக் கொடுக்கும்படியான சங்கதியின் ஆரம்பத்தில் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. அதில் ‘செகனாத திருக்கா பாணிசுவானா’*(செகனாத தெர்க்கி பஞ்சனனா என்கிற சமஸ்கிருத இந்துச் சட்டத் தொகுப்பாள் (பதிப்பாளர் முன்னுரை பார்க்க)) என்பவர், சாதாரணமான சொத்தின் சுபாவத்தைக் குறித்தும், இறந்துபோன சுவாதீனக்காரனுடைய பந்துக்களில் அதைச் சுதந்திரமாகவைக்கும்படியாகவும் தர்க்கிக் கிறார். ‘கோல் புற்கஸ் டைஜெஸ்டு’*(Colebrooke’s Digest) என்னும் நூலின் இரண்டாவது புத்தகம், 502ஆவது ஏடு முதல் 520ஆவது ஏடு வரைக்கும் பார், ‘ஒரு அரசாங்கம் விற்கப்பட்டால் அரசன் வரி வாங்கும்படியான நில பாத்தியம் அவனுக்குண்டு. ஆனால் நிலத்தின் வரும்படியை அனுபவிக்கும்படியான பாத்தியம் நிலம் ஆர் வசத்திலிருக்கின்றதோ அவனுக்குப் பூர்த்தியாய்ச் செல்லும். குடியானவன் நிலத்தின் விளைவை விற்கிரையஞ் செய்யும் போது அதை வாங்குகிறவன் அனுபவிக்கும்படியான பாத்தியத்தை யடைகின்றான். ஆனால் வரியை அனுபவிக்கும்படியான பாத்தியம் அரசசனை விட்டு நீங்காது’.
- இப்பேர்க்கொத்த சட்டத்தின் நி(ய)தியும் யோக்கியமும் பயிரங்கமாகத்*(பகரங்கமாக, வெளிப்படையாக) தெரிய வருகின்றது. எல்லாக் கிராம சுதந்திரங் களும் சில பிரயோசனத்திற்காகவும் சர்க்காருடையவும் குடிகளினுடையவும் அன்னியோன்னிய பிரயோசனத்திற் காகவும் ஏற்படுத்தப்பட்டதென்றும். சர். தாமஸ் மன்றோ சொல்லுகிற பிரகாரம் சர்க்கார்சிலவினால் உண்டாக்கப்பட்டிருக் கிற பெருந்தொகையான ஏரிகளினலும் ஜல ஆசான்களினாலும் உற்பத்தியானதாயிருக்கலாம். ஏனென்றால் எந்த நிலங்களுக்காக ஜல ஆசான்களை உற்பத்தி செய்தார்களோ அந்த நிலங்களைக் கிரமமாய்ச் சாகுபடி செய்தாலாழிய, சர்க்கார் சிலவிட்ட சிலவு அவர்களுக்குக் கைகூடி வரமாட்டாது. ஆதலால் குடிகள் கூடியவரைக்கும் சாகுபடி செய்யும்படியாக அவர்களுக்குச் சில சுதந்திரங்களைக் கொடுப்பது சர்க்காருக்கு யுக்தமாய்த் தோற்றியிருக்கலாம். இது காரியத்தை நிறைவேற்றும்படியாக ஒரு சொற்பக் குடிக்கூலியை ஏற்படுத்தவும் நிலத்தின் பரம்பரையான பாத்தியத்தைக் கொடுக்கவும் காரணமாயிருந்தது.
சர்க்கார் மிராசுதாரனை ஆதரித்தால் அந்த ஆதரவு எது காரியத்திற்காகக் கொடுக்கப்படுகின்றதோ அந்தக் கடமையை அவன் நிறைவேற்ற வேண்டியது. அப்படி அவன் நிறைவேற் றாமற் போனால் சர்க்கார் அவர்களுடைய கிஸ்தியைச் சேற்க (செய்கை)ப்படுத்தவும் அவர்களுடைய ராணுக்களை (உரிமை களை)க் காப்பாற்றவும் மிராசுதாரர்களை ஆதரிக்கவுங் கூடாது. ஆகையால் அந்தப் பாத்தியங்கள் எந்தக் காரியத்திற்காக ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டு இதுவரையிலும் நிறைவேறி வருகின்றதோ, அந்த ஊழியத்தைச் செய்து சர்க்கார் கிஸ்தியைச் செலுத்தாமற் போனால் மிராசுதாரனுக்கும் சர்க்காருக்கும் உண்டான உடன்படிக்கை அற்றுப்போய் சர்க்கார் நிலைப்பட்டிருக்கிறதற்கு அவசியமான கடமைகளை நிறைவேற்ற இதரமானவர்களைத் தேடவேண்டியதிருக்கிறது. இந்த தாற் பரியம் சரியாயிருந்தால் மிராசு என்கிறது சாகுபடி செய்யக் கூடுமான நிலங்களைக் கரம்பாக வைத்துக் கொண்டிருக்கும் படியான பாத்தியத்தைக் கொடுக்கவில்லை. மிராசுதாரன் தன் கடமையைச் செலுத்தாவிட்டால் இதராளைக் கொண்டு செலுத்திக் கொள்ளும்படியாகச் சர்க்கார் சாக்கிரதையாக இருக்க வேண்டியது.
‘சப்பளிமென்டு பிரதிவாதி சொல்லுகிற நியாயம் நூதனமல்ல வென்று தென்னிந்தியாவில் ஆதியிலிருந்த எல்லாக் கலெக்டர்களுடைய ரிப்போர்ட்டுகளினால் ரூபிக்கச் சித்தமாயிருக்கிறார். அந்த கலெக்டர்களுடைய நாமதேயங்கள் என்னவென்றால் மேஸ்தர் பிளேசு, எல்லீசு, ஆட்சன், வாலீசு, ஆரீஸ், லசிங்ட்டன் தாக்கிரி, காம்பல், சர் தாமஸ் மன்றோ முதலான துரைகள் நில பாத்தியத்தைக் குறித்து ரிப்போர்ட் செய்ய வேண்டுமென்று கவர்ன்மெண்டார் உத்தரவு செய்தார்கள்.’ மிராகதாரனாவது அவனுடைய குமாரனாவது பேரனாவது உயிரோடிருக்குங்காலத்தில் ஒரு வருஷத்திற்காவதும் அதற்கு மேற்படவாவது சாகுபடி செய்யாவிட்டால், மிராசு பாத்தியம் அற்றுப் போகவில்லையென்று மேஸ்தர் எல்லீசு சொல்லுகிறார். இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் அதை இழந்து போகிறதற்குப் பாத்திரவானா யிருக்கிறான். அதெப்படி என்றால் அது இதரமானவனுடைய வசத்தில் வந்து மூன்று தலைமுறை அல்லது நூறு வருஷம் சென்றால் பாத்தியம் அற்றுப் போகும். நிலத்தைச் சாகுபடி செய்யாவிட்டால் மிராசு நிலங்களைச் சர்க்கார் ஜப்தி செய்யக்கூடுமா என்று கேள்வி பிறந்தால், அதற்கு உத்தரவாகச் சொல்லுவது என்னவென்றால், அந்த நிலங்களும் பலவிதமான மிராசு பாத்தியங்களும் எந்த ஏற்பாட்டினால் அனுபவிக்கப் படுகிறதோ அந்த ஏற்பாட்டால் அவனுடைய வார்ப்பத்து நிலங்கள் யாவையும் அவன் சாகுபடி செய்ய வேண்டியது. அப்படியவன் சாகுபடி செய்யாவிட்டால் அவன் அந்த ஏற் பாட்டை மீறி நடக்கிறபடியால் சர்க்கார் இதராளைக் கொண்டு தங்களுடைய வரும்படியைக் காப்பாற்றிக் கொள்ள ஏதுவைத் தேடுவது அவசியமாயிருக்கின்றது. ஆனபோதிலும் இந்த உத்தரவில் மேஸ்தர் எல்லீசு மிராசு பாத்தியத்தை ஸ்திரமாய்க் காப்பாற்றுகிறவராயிருந்தபோதிலும், சென்னப் பட்டணத்தில் 1802 – 1803ஆம் வருடங்களின் சமாபந்தியில் சில கிராமங்களில் கரம்பு நிலங்கள் இருந்ததற்காக மிராசுதாரர்கள் சர்ட்டிபிகேட்டு பெற்றுக் கொள்ள மாட்டோமென்று ஆக்ஷேபித்த படியால் சர்க்கார் நிலமாகிவிட்டதென்று அவர் சொன்ன போதிலும், தொடர்ச்சியாக இந்த வார்ப்பத்து நிலங்களை ஸ்தாபிதம் செய்த கிஸ்திபந்திக்கு எடுத்துக் கொள்ளுகிறீர்களா என்று கேட்டதற்கு அவர்கள் சம்மதிக்காமல் போன போதிலும், அவர்களுக் குண்டான மற்ற எல்லாப் பாத்தியத்தையும் அவர்களுடையதா யிருந்தபடியினாலே சாகுபடி செய்யாததன் நிமித்தம் இந்த வார்ப்பத்து நிலங்களை அவர்கள் இழந்து போனார்கள் என்று சொல்லக் கூடாதெனச் சொல்லுகிறார்.
நாலு தலைமுறைக்குள்ளாகத் தன்னுடைய பாத்தியத்தை மிராசதாரன் பெறலாமென்று எல்லீசு சொல்லுகிற அபிப்பிராயத் துக்கு எதிரிடையாயிருக்கின்றது. சிரேஸ்தாரரைக் குறித்து : 30 வருஷ காலமாக இந்த ராஜதானியின் கீழ் வடக்கிலும் தெற்கிலும் ரெவின்யு ஜூடிசல் (Judicial) டிபார்ட்டுமெண்டுகளில் பல விதமான உத்தியோகங்களைச் செய்தபடியால் யூரோப்பியர் களுக்கும் சுயதேசஸ்தர்களுக்கும் அவர் எழுதுகிற சங்கதியைக் குறித்து அவ்வளவு சமையாங்கிடையாமலி அவருடைய அபிப்பிராயத்தையே ஒப்புக் கொள்ள வேணு மென்று எல்லீசு சொல்லுகிறார்.
‘இந்த சிரேஸ்தேதார் சொல்லுகிறதென்னவென்றால், ஒரு வருஷம் சாகுபடி செய்யாவிட்டால் மிராசுதாரன் தன்னுடைய மிராசு பாத்தியத்தை சர்க்காருக்கு இழந்துபோகவில்லை. ஆனால் தன்னுடைய மிராசு நிலங்களை விட்டு நெடுநாளாக அதைச் சாகுபடி செய்யாமலும் அதை இதராளுக்குக் கீழ்க் குத்தகைக்கு விடாமலும் சர்க்கார் பிரயோசனத்திற்கு விரோதமாய் நடந்தால், அந்த மிராசியை இதராளுக்கு கவுலின் பேரில் கொடுக்கும்படியாக சர்க்காருக்கு அவசரம் நேரிடும். … … …
எல்லீசுனுடைய அபிப்பிராபத்தைசக் குறித்து இன்னும் ஆக்ஷேபிக் கிறதென்னவென்றால், ஒரு மிராசுதாரன் தன்னிலங்களைச் சாகுபடி செய்யாவிட்டால் அதற்குக் குடிக்கூலி வரும்படியாக சர்க்கார் இதராளுக்குவிட வேணடியது. ஆனால் மிராசுதாரனுடைய பேரர்கள் அந்த நிலங்களைச் சாகுபடி செய்யமல் விட்டுவிட்டு, 99 வருஷத்திற்குப் பிறகு அதை மறுபடியும் பி(பெ)றவும் இத்தனை வருஷ காலமாகச் சர்க்காருடைய கவுலினால் அதை அனுபவித்துச் சாகுபடி செய்து சர்க்காருடைய தீர்வையைக் கட்டிக்கொண்டு வந்தவனை அப்புறப்படுத்தக் கூடுமானால் நம்பிக்கையற்றுப் போய் சாகுபடி நஷ்டப் படும்.அனேக விஷயத்தில் இப்படிக் கைவிடப்பட்ட நிலங்களை ஒரு வருஷத்திற்கு மாத்திரம் சாகுபடி செய்கிறதற்கு எந்தக் குடித்தனக்காரனும் பாத்தியப்படமாட்டான். ஆகையால் மிராசுதாரர்களிருக்கிற வரைக்கும் முக்கியமாக யாதாமொரு ஏற்பாட்டிற்குக் கொண்டுவரக்கூடவில்லையென்று ரெவின்யு போர்ட்டார் சொல்லுகிற பிராமண மிராசுதாரர் இருக்கிற வரைக்கும் சர்க்கார் வரும்படி நவஷ்டப்படும்.
மிராசு தான் சாகுபடி செய்யாத நிலங்களை ஜமீன்தார் இதராளுக்குக் கொடுத்துவிடலாமென்றிருக்கிற றிக்கிலேஷன் (ரெகுலேஷன்)களை நாம் கவனிக்காமலிருக்கலாகாது.
மகமது தேசாதிகள் மிராசுதாரர்கள் தங்களுடைய கிஸ்திகளைக் கிரமமாய்ச் செலுத்திக் கொண்டு வருகிற பரியந்தரம் மிராசு பாத்தியத்தைக் காப்பாற்ற வேணுமென்று எண்ணங் கொண் டிருந்த போதிலும், வாதிகள் சொல்லுகிற எண்ணங்களுக்கு அந்த அரசர்கள் பாத்தியப்பட்டிருந்தார்கள் என்று எவ்வளவும் நம்பக்கூடவில்லை. ஏனென்றால் இது இந்துக்களுடைய தர்ம் நீதிக்கும் நம்முடைய சுயபுத்திக்கும் விரோதமாயிருக்கிறது. இதைக் குறித்து தமிழ் ராச்சியத்தில் உண்டாகியிருக்கப்பட்ட மிராசு பாத்தியத்தைப் பற்றி ஏ.டி. காம்பல் என்பவர் சொல்லு கிறது என்னவென்றால், அத்தேசத்தில் இருக்கப்பட்ட மிராசு தாரர்கள் நாமதானத்திலன்றி மற்றை எல்லா விஷயத்திலும் உட்குடி பாயக்காரிகளுக்குச் சமமாயிருக்கிறார்கள்.’*(இப்பத்தியும் இதன் முன் உள்ள எடுத்துக்காட்டுக் குறியில் அடங்கியிருக்கும் ஒன்பது பத்திகளும் மேற்கோளாக எடுத்தாளப்பட்டமையால் தனியே எண்ணிடப்படவில்லை.)
- **(மூல நூலில் வரிசை எண் 45 தவறுதலாக விடுபட்டுப் போயுள்ளது. அதன்படியே இங்கும் ஓர் எண் விடப்பட்டு எண்ணிடப்பட்டுள்ளது.) அப்போது சப்-கலெக்டராயிருந்த டி.கிளார்க் என்பவருடைய அபிப்பிராயத்தை அங்கீகரித்து மற்ற கலெக்டர்களும் எழுதியிருக்கிறார்கள்.
- தஞ்சாவூர் கலெக்டராகிய ஆரிசு என்பவர் 1804 ஆம் வருஷம் மே மாதம் 9ஆம் தேதியில் எழுதிய ரிப்போர்ட்டில் 9ஆவது பாராவில் சொல்லுகிறதென்னவென்றால், எல்லா விஷயத்திலும் ஒரு மிராசுதாரனுடைய நிலைமை சீர்மையில் பயிரிடுங் குடியானவ னுடைய நிலைமைக்கு ஒப்பந்தமாயிருக்கிறது (ஒத்ததாயிருக்கிறது). மிராசுதாரருடைய தற்காலத்தின் நிலைமை யென்ன வென்றால் அவர்களுடைய குடித்தனத்திற்கும் மராமத்திற்கும் ஏரிகளுக்கும் செலுத்தவேண்டியதைச் செலுத்தி சாகுபடியைக் கிரமமாய் நடத்துகிறதும், அவர்களுடைய கடமையா யிருக் கின்றது. ஆனால் அப்படிச் செய்யாமல் சர்க்காருடைய உத்தர வினாலும் ஒத்தாசையினாலும் தடுக்கப் பிரயத்தனப்படு கிறார்கள். ஒரு தீர்வை ஏற்படுவதற்கு முன்னமே ஆரம்பத்தில், தங்களுடைய நிலம் கொஞ்சப் பலனைத் தருகிறதென்று காண்பித்துப் பின்னிட்டுத் தீர்வை குறைந்திருக்கும்படியாக, இவ்விதமாகத் தங்களுடைய கலகத்தினாலும் துர்குணத்தினாலும் சோம்பேறித்தனத்தினாலும் செய்கிறார்கள்.
- தஞ்சாவூர் ரெசிடெண்டாகிய கர்னல் பிளாக்கு பரர்ன் என்பவர், 1804 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 27ஆம் தேதியில் லார்ட் வில்லியம் பெண்டிங் என்பவருக்கு எழுதின ரிப்போர்ட்டில் சொல்லுகிறது என்னவென்றால், ‘மிராசு’ என்பது பார்சி மொழி. அதனுடைய தாற்பரியம் பொதுவில் சுதந்திரம் என்கிறதாம். தஞ்சாவூரில் சர்க்காருக்கும் மிராசுதாரனுக்கும் பிரயோசனமாகச் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் சுதந்திரத்திற்குப் பாத்தியப் பட்டதாயிருக்கின்றது. இந்த மொழி (மிராசு) 1774-75 ஆம் வருஷங்களில் நவாப்பினுடைய உத்தியோகஸ்தர்களால் தஞ்சாவூரில் நுழைக்கப்பட்டதாகக் காணுகிறது. அந்த தேச மானது மறுபடியும் ராசாவுக்கு ஒப்புவிக்கப்பட்டபோது இந்த வார்த்தை உபயோகமற்றுப் போய், மேற்சொல்லிய காலத்துக்கு முன்னாவது பின்னாவது ராசாவினுடைய துரைத்தனத்தில் உண்டான ரெவின்யு தஸ்தாவேஜூகளிலாவது ரிக்கார்டுகளிலாவது காணப்படவில்லை. அது மறுபடியும் ஆரிசு என்பவ ருடை ய துரைத்தனத் துவக்கக்கில் சாதாரணமாய் நுழைக்கப் பட்டது. தஞ்சாவூரில் இருக்கப்பட்ட மிராசு பாத்தியம் நிலத்தைச் சாகுபடி செய்து சர்க்காருக்கு மேல்வாரம் செலுத்துகிற பாத்தியம் என்று எனக்குத் தோற்றுகின்றது. இந்த பாத்தியம் இங்கிலாண்டு தேசத்தில் சாகுபடி செய்கிற குடிகள் என்னமாய் நிலத்தீர்வை முதலானதுகளைச் செலுத்துகிறார்களோ அதற்கு ஒப்பதாயிருக்கிறது. ஒரு மிராசுதாரன் தன்னுடைய நிலத்தைக் கைவிட்டால் அதை சர்க்கார் இதரமானவர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள். இது யுத்த காலங்களில் பஞ்சகாலங்களிலும் தவிர மற்ற காலங்களில் நடந்ததில்லை. ஐதர் அலியினுடைய கலாபனை*(கலவரநிலை, குழப்பம்)யில் மிராசுதாரர்கள் சாதாரணமாய் ஓடிப் போனார்கள்; அல்லது ஒளிந்து கொண்டார்கள்; அல்லது கைதிகளாக்கப்பட்டு வட மைசூருக்கு அனுப்பப்பட்டார்கள்…. …. …. … நிலங்கள் சாகுபடி செய்யாத இடங்களில் யாதாமொரு தொந்தரவும் நேரிடவில்லை. கைவிடப்பட்ட நிலங்களை சர்க்காருடைய அனுமதியைக் கொண்டு நூதனமாய்ச் சாகுபடி செய்தவர்கள் பழைய மிராசுதாரர்களை எதிர்த்தார்கள் அல்லது அவர்கள் கஷ்டத்திற்கும் (பாடுபட்டதற்கு) அவர்கள் வீடுகளுக் கும் மற்றும் அவர்களுக்குண்டான சிலவுகளையும் கேட்டார்கள்.
- திருநெல்வேலி கலெக்டர் லசிங்ட்டன் என்பவர் 1800 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதியில் எழுதிய ரிப்போர்ட்டில் சொல்லுகிறது என்னவென்றால், என்னுடைய அபிப்பிராயம் குடிகள் சாதாரணமாய் அனுபவிக்கிற நிலங்களின் பாத்தியத் தைக் குறித்தொழிய வேறல்ல. தற்காலத்தில் ஒரு நூதனமான ஏற்பாடுகளை ஏற்படுத்துகிறதுக்கு முன்னமே கவனமாய் யோசிக்க வேண்டிய எண்ணங்கள் முடிவாய்த் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றன. கானல் நிலமென்று சொல்லப்பட்ட எல்லா நிலங்களும் சர்க்காருடைய நிலமென்று கவர்ன்மெண்டா ருடைய ஏற்பாட்டினால் தெரியவருகிறது.
பழைய இந்துக்களுடைய துரைத்தனமானது கொடூரமுள்ள தென்றும், அரசனுடைய சுய இஷ்டத்தின் பிரகாரம் நடத்தப்பட்டதென்றும் யோசிக்கிறது வழக்கமாயிருக்கின்றது. உத்தேசமாய் யோசிக்கும்போது அவைகள் அப்படியிருக்க வில்லை. ஆனால் யோசனையாகவும் செய்காரியமாகவும் யோசிக்குமளவில், அப்பேர்க்கொத்தவைகளல்ல. அவர்க ளுடைய வேதநூல்கள் எல்லாம் நீதி நியாயங்களை அனுசரித் தவைகளாயிருக்கின்றன. அவர்களுடைய செய்கையும் நீதியுள்ள தாயும் அன்புள்ளதாயுமிருந்தன. பிற்காலங்களில் இந்த தேசமானது மகமது மார்க்கத் துராணுக்களால் கொள்ளை யடிக்கப் பட்டு அவர்களுடைய சட்டங்களை நுழைத்ததினால் நீதி செலுத்துவதில் அனேக மாறுபாடுகளும் அநியாயமும் உண்டானபோதிலும், பூமியின் சுதந்திரத்தில் ஜாஸ்தி தீர்வை போட்ட போதிலும், யாதாமொரு நூதனமான சட்டம் ஏற்படவில்லை. நிலத்தை ஆதியில் காடுகரம்பு திருத்தி அதைச் சாகுபடிக்குக் கொண்டு வந்தவன் சர்க்காருக்கு அந்த நிலத்தீர்வையைக் கட்டிக் கொண்டு வருகிற பரியந்திரம் அந்த நிலத்தை எந்த ராசாங்கமும் பறித்துக் கொள்ளவில்லை.
- 1214 ஆவது பசலியில் தஞ்சவூர் சமாபந்தியில் 1805 ஆம் வருஷம் மே மாதம் ரிப்போர்ட்டில் கலெக்டர் வால்சு என்பவர் சொல்லுகிறது என்னவென்றால், ‘தஞ்சாவூரில் நிலபாத்தியஸ்தர்கள் மிராசுதாரரென்கிற நாமதேயத்தினால் தெரிந்திருக்கிறார்கள். இந்த மொழி சுதந்திர பாத்தியத்தை உடைத்தானவன் என்கிற அர்த்தமாம். இந்த மிராசு பாத்தியத்தை இந்துக்களிலுண்டாகி யிருக்கப்பட்ட எல்லாச் சாதியார்களும் வித்தியாசத்தார்களும், மகமது மார்க்கத்தார்களும் சுயதேசத்துக் கிறிஸ்தவர்களும் உடைத்தாயிருக்கிறார்கள்.’
- திண்டுக்கல்லைக் குறித்து 1808ஆம் வருஷம் மார்ச் மாதம் 28ஆம் தேதியில் மேஸ்தர் ஆட்சன் என்பவருடைய ரிப்போர்ட்டில் சொல்லுகிறதென்னவென்றால், ‘முதலாவது எல்லா ஊரிலும் எல்லா ஜில்லாக்களிலும் நிலத்தைச் சாகுபடி செய்கிறவர்கள், அவர்கள் அனுபவிக்கிற ஷெ நிலங்களுக்கு ஒரு ஸ்தாபிதமான வரியைச் செலுத்த வேண்டியது. இரண்டாவது இந்த வரியை அவர்கள் செலுத்திக் கொண்டு வருகிற பரியந்திரம் அந்த நிலத்துக்கு அவர்களுக்கும் சாசுவிதமான பாத்தியம் உண்டு’.
- மேல் எடுத்துக்காட்டிய எல்லாச் சங்கதிகளினாலும் தென்னிந்தியாவில் ஈஸ்ட் இந்தியா கம்பெனியாருடைய உத்தியோகத்தி லிருந்த மிகவும் சாமார்த்தியமுள்ள உத்தியோகஸ்தர்களுடைய எண்ணங்களினாலும், செங்கற்பட்டு ஜில்லாவின் நில பாத்தியத் தைக் குறித்து யாதாமொரு தப்பிதமான அபிப்பிராயம் உண்டாயிருக்கக் கூடாது. மேற்சொல்லிய சங்கதிகளினால் உண்டாகிற கேள்விகள் என்னவென்றால்,
1-ஆவது மிராசு என்கிற வார்த்தைக்கு என்ன வியாக்கியானஞ் செய்திருக்கிறார்கள்
2.-ஆவது தங்களுடைய நிலங்களை என்ன ஏற்பாட்டால் அவர்கள் உடைத்தாயிருந்தார்களென்று நினைக்கப்பட்டிருக்கின்றன?
3-ஆவது அவர்களுடைய மிராசு நிலங்கள் கிராம ஊழியங்களைச் செய்கிறதுக்குக் கொடுக்கப்பட்டமானியங்கள் அல்லவா?
4-ஆவது சாகுபடி செய்யாமலும் சர்க்கார் கிஸ்தியைச் செலுத்தாமலும் போனால் அவர்களுடைய நிலங்களை இழந்து போவதற்கு அவர்கள் ஏதுள்ளவர்களல்லவா?
5- ஆவது சாகுபடி செய்யாத நிலங்களைச் சர்க்கார் தங்களுக்கு இஷ்டமானவர்களுக்குக் கொடுத்துவிட அதிகாரத்தை உடைத்தவர்களல்லவா?
6-ஆவது தங்களுடையகைப்பற்று நிலங்களைரயத்துகள் கவுலின்போரில் சாகுபடி செய்யும் போது அவர்களை அப்புறப்படுத்தக் கூடுமா?
- ரெவின்யு போர்ட்டார் ஜில்லாவின் குடிகளுடைய கோஷமத் திற்கும் கவர்ன்மெண்டாருடைய சௌக்கியத்திற்கும் எப்போதும் தடங்கலாய் இருப்பது ஆச்சரியமாயிருக்க வில்லையா?
- பாயக்காரிகளினுடையவும் சுகவாசிகளினுடையவும் மனக் குறைவுகளைக் குறித்து அப்பீல்களினாலும், னூஸ் பேப்பர்களினலும்*(நியூஸ் பேப்பர்களினாலும்) அடிக்கடி அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் யாதாமொரு பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது.
- இது சங்கதியைக் குறித்து உண்டாயிருக்கிற பலவிதமான காரியங்களையும், ரெவின்யு போர்டாருக்கும், இவ்விடத்து கவர்ன்மெண்டுக்கும், சூப்பிரின் (சுப்ரிம்) கவர்ன்மெண்டுக்கும், இந்திய செகரிட்டேரி ஆப் ஸ்டேட்டுக்கும்*(இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் (Seretary of State for India)) படிப்படியாய் அல்லது தொடர்ச்சியாய் எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்தப் பிரயத்தனாங்களினால் உண்டான பிரயோ சனத்தை நாம் கவனித்துப் பார்க்க வேண்டியது.
- செங்கற்பட்டு ஜில்லாவின் மிராசுதாரர் என்று சொல்லப்பட்டவர்களுடைய சங்கதியைக் குறித்து மதராசு நேட்டிவ் அசோசி யேஷன், கவர்ன்மெண்டாருக்குக் கொடுத்த பெட்டிசனைக் குறித்து, கவர்னர் டெனிசனுக்குக் கொடுத்த பெட்டிசனில் கண்டிருக்கிறது என்னவென்றால், நேட்டிவ் அசோசியேஷன் என்னும் சபையார் தங்களுக்கு யாதொன்றும் தெரியாத சங்கதிகளைக் குறித்து எடுத்துப் பேசுகிறார்களென்றும், அவர்கள் உபயோகப்படுத்துகிற பிரட்டு (புரட்டு) நியாயங்களினால் மிராசு என்கிற வார்த்தையினுடையவும், சுகவாசி என்கிற வார்த்தையினுடையவும் அர்த்தம் தெரியாதென்பது பகிரங்கமாயிருக்கின்றது. காஞ்சிபுரத்தில் கூடினதாகச் சொல்லப்பட்ட மகா கூட்டமானது வேஷம் ஒழிய வேறல்ல. வருஷாந்திர திருவிழாக் காலத்தில் அனேக நூறாயிரம் செனங்கள் அவ்விடத்தில் கூடியிருக்கும்போது இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்படி இருந்தும் இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள் மெத்தவும் கொஞ்சம் பேராய்த்தானிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய மரியாதை யைக் காப்பாற்றும் பொருட்டாக அவர்களுடைய பெட்டிசனில் கையெழுத்து வாங்கும் பொருட்டாக அவர்களுடைய ஏஜெண்டுகளைப் பின்னிட்டு அனுப்பினார்கள். மிராசு பாத்தியம் எப்படி உண்டாயிற்றென்றும், எந்தக் காலத்தில் ஏற்பட்டதென்றும் தங்களுக்கே தெரியாதென்று அவர்கள் சொல்லுகிறார்கள். தங்கள் வசத்திலிருக்கப்பட்ட எல்லா நிலங்களுக்கும் தரம் தீர்வை கட்ட வேண்டியது; இல்லா விட்டால் அவைகளை விட்டுவிட வேண்டியதென்று கவர்ன் மெண்டார் 1859 ஆம் வருஷம் சூன் மாதம் 18 ஆம் தேதி, நம்பர் 80-இல் பிறப்பித்த கட்டளை மிகவும் கண்டிப்பாயிருக்குதென்று மிராசுதாரர்கள் முறையிடுகிறார்கள். இந்தக் கட்டளை நீதியுள்ளதென்று சுயப்பிரயோசனத்தைத் தேடுகிறவர்கள் தவிர மற்றெல்லாரும் ஒப்புக் கொள்ளுவார்கள். தங்களுடைய சுயப்பிரயோசனத்தைத் தேடுகிறவர்கள் தங்களுடைய சொந்த மென்று வீணாய் வழக்கிடுகிற நிலங்களைச் சாகுபடி செய்கிற தற்குச் சக்தியற்றவர்களா யிருந்தும் நிலங்களுக்கு ஒத்த பாத்தியததையுடைத்தாகி தங்களுக்கும் கவர்ன்மெண்டா ருக்கும் பிரயோசனஞ் செய்ய இஷ்டமாயிருக்கிற இதராளை நுழைய வொட்டாமல் செய்யக்கேடுகிறார்கள். பூர்க்தியான சாகுபடிக்குக் கொண்டுவரத்தக்க விஸ்தாரமான புறம்போக்கு நிலங்கள் உண்டாகியிருக்கிறது பூர்த்தியாய்த் தெரிய வருகின்றது. ஆகையால் தங்களுடைய சொந்தத்திற்கு இந்த நிலங்களைச் சாகுபடி செய்ய விரும்புகிற சுகவாசிகளையும் பாயக்காரிகளையும் அதில் நுழைய வொட்டாமல் தடுக்கிறது பெரிய அநியாயமாயிருக்கின்றது. இந்த நிலங்களை மிராசுதாரென்று சொல்லப்பட்டவர்கள் தங்களுடைய சுயப்பிரயோசனத்தி னிமித்தம் பாழாய் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிராசு பாத்தியம் என்கிறதுக்காக நியாயமான பிரகாரம் தீர்மானிக்கப் படவில்லை என்று மிராசுதாரர்கள் முறையிடுகிறார்கள். அது என்னத்தினால் என்றால், முழுமையும் சந்தேகமுள்ளதாக இருக்கின்றது. கவர்ன்மெண்டார் பூமியைச் சாதாரணமாகச் சாகுபடி செய்கிறவர்களின் மீது உண்டாயிருக்கிற வருத்தங்களையும் மிராசு பாத்தியமென்று சொல்லப்பட்ட பாத்தியத்தினால் சர்க்காருக்கு வரப்பட்ட நஷ்டத்தையும் பூர்த்தியா யறிந்து மிராசுதாரர்கள் சாகுபடி செய்யாமல் போனால் தங்களுடைய நிலங்களை விட்டுவிட வேண்டியதென்று நியாயமான ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதைக் குறித்து, 1861 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி கவர்ன் மெண்டாருக்கு எழுதிய மிமோரியலை கவனமாய்ப் பார்வை யிடும்படியாக பாயக்காரி ஏஜெண்டு வெகுசாய்க் கேட்டுக் கொள்ளுகிறார். அதில் மிராசுதாரர்களால் பாயக்காரிகளுக்கும் சுகவாசிகளுக்கும் செய்யப்பட்ட பெரிய அநியாயங்கள் தெளிவாய்க் காண்பிக்கப்பட்டிருக்கிறதுமல்லாமல், சாகுபடி செய்கிறவர்களில் மிச்சமான வர்கள் மிராசுதாரர்கள் எல்லா நிலங்களையும் அனுபவிக்கிறது மிகவும் அநியாயமென்று முறையிடுகின்றார்கள். பரப்பாத்தியத்தை உடைத்தானவர்கள் மிராசு நிலங்களை வாங்காமல் போன காரணமென்ன வென்றால், உத்தியோகத்திலிருக்கப்பட்ட பிராமணாளுடைய அதிகாரத் திற்கும் வல்லமைக்கும் பயப்பட்டிருந்தார்கள்.
- மனுநீதியிலிருந்தாவது இதரமான சமஸ்கிருத சாஸ்திரங்களி லிருந்தாவது இங்கிலீஷில் திருப்பியிருக்கிற அனேக நூல்களி லிருந்தாவது தங்களுடைய பாத்தியத்தை நிலைப்படுத்தும் படியான நியாயங்களை மிராசுதாரர்கள் கொண்டுவரக் கூடாமலிருக்கின்றது. அப்படிக் கொண்டு வந்தால் அது அவர்களுக்கே விரோதமாயிருக்குமென்று அறிந்திருக்கிறார்கள். மனுநீதியிலாவது அல்லது இதரமான சமஸ்கிருதநூல்களிலாவது சாகுபடி செய்கிறவனிடத்திலிருந்து உற்பத்தியில் மிராசுதாரன் 10 இல் 2 பங்கு அனுபவிக்க வேண்டியதென்றும், அரசனுக்கு 10 இல் 1 பங்கு செலுத்த வேண்டியதென்றும் எங்கேயாவது சொல்லியிருக்கின்றதா? மிகவும் பூர்வீக காலம் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் பிராமணாள் மத்திபமான காலங்களில் (Middle Ages) சீர்மை(சீமை)யிலிருந்த மடாதிபதிகளைப் போல, எல்லாச் சாஸ்திரங்களையும் காப்பாற்றுகிறவர்களாக இருந் ததும் அல்லாமல், அவர்கள் ராசாங்கத்தில் மிகவும் உயர்ந்த உத்தியோகங்களில் இருந்தபடியால், தங்களுடைய சொந்தக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளும்படியாக எல்லா விதமான மோசத்தையும் செய்ய சமயத்தை (வாய்ப்பை) உடைத்தாயிருந்தார்கள். தங்களுடைய மிராசு அல்லது காணியாக்ஷி பாத்தியம் சோழ ராஜாவாகிய ஆதொண்டர் சக்கரவர்த்தியென்பவரால் வேளாள சாதியின் குடும்பத்துக்குக் கொடுத்த பிறகுதான் உண்டாயிற்றென்று மிராசுதாரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மேற்சொல்லிய சக்கிரவர்த்தியின் ஆளுகைக் காலத்திற்கும், மனு என்பவருடைய காலத்திற்கும் மத்தியில் எத்தனை வருஷங்கள் சென்றன! அப்படியிருக்க அவர்களுடைய பாத்தியத்தின் பூர்வீகத்தைக் குறித்து மிராசு தாரர்கள் சொல்லுகிறது எவ்வளவு அபத்தமாயிருக்கிறது? மேலும் மிராசுதாரர்கள் சொல்வது எந்தச் சரித்திரத்தினாலும் ரூபிக்கப் படமாட்டாது. தொண்டைமண்டல ராச்சியம் பூர்வீகத்தில் மிகவும் சிறியதாயிருந்தது. அதனுடைய அரசர்கள் தங்களுடைய ஆளுகையில் நீதியுள்ளவர்களாயும் நெறியுள்ளவர்களாயும் இரக்கமுள்ளவர்களாயும் இருந்தார்கள். ஆகையால் கஷ்டப் படாத செனங்களுக்கு ரயத்துகள் தங்களுடைய கஷ்டத்தில் மூன்றில் இரண்டு பாகத்துக்கு ஜாஸ்தியாய்க் கொடுக்கும் படியாகவும் அவர்களை முழுமையும் மிராசுதாரர்களுடைய இரக்கத்திற்கு பாத்தியப்படுத்தி அவர்களை ஒடுக்கும்படியாக உட்படுத்தியிருப்பார்களெண்பதை எவ்வளவும் நம்பக்கூட வில்லை. மிராசுபாத்தியம் அனாதி கால முதற்கொண்டு உண்டாயிருக்கிறதென்று ஓப்புக்கொண்ட போதிலும், அது சொல்லி முடியாத அநியாயத்திற்கு இடங்கொடுக்குமா? மிராசுதாரர்கள் அல்லது நேட்டிவ் அசோசியேஷன் என்னும் சபையார் பிரசை(ஜை)கள் தங்களுடைய பட்சத்தில் இருக் கிறார்களென்று தந்திரமாய்க் காண்பிக்கிறார்கள். பிரசைகள் என்று சொல்லப்பட்டவர்கள் அவர்களேயொழிய வேறல்ல சாகுபடி செய்கிறவர்களில் பெருந்தொகையானவர்கள் பாயக் காரிகளாயும் சுகவாசிகளாயும் இருக்கிறார்கள். அப்போதிருந்த கலெக்டராகிய பிளேசு துரை என்பவருக்கும், எல்லீசு துரை என்பவருக்கும் இந்தச் சமாசாரத்தைத் தெரியப்படுத்தினவர்கள் மிராசுதாரரென்று சொல்லப்பட்டவர்களேயொழிய வேறல்ல ஆகையால் அவர்கள் சொந்தப் பிரயோசனத்திற்கு விரோதமான எதையாவது சொல்லுவார்களன்று எதிர்பார்க்கக் கூடாது. பிராமணாளுடைய வல்லமைக்குட்பட்ட மேற்சொல்லிய கலெக்டர்களுடைய பட்சபதத்தினால் ரெவின்யு போர்ட்டார் இது சங்கதியைக் குறித்து தப்பிதமான எண்ணங்கள் கொள்ளும்படியாக நேரிட்டதை எவ்வளவும் யோசியாமல், அந்தக் கலெக்டர்களுடைய அபிப்பிராயங்களையே போர்ட்டாருடைய சொந்த அபிப்பிராயமாக அங்கீகரித்திருக்கிறார்கள். அது முதற்கொண்டு ரெவின்யு போர்டார் உறுதியாயும் வையிராக்கியமாயும் அநியாயமாயும் அவர்கள் ஆதியில் ஒப்புக் கொண்டு ஏற்பாடு செய்திருக்கிறதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மிராசு என்கிற வார்த்தை துலுக்கர் துரைத்தனத்தினால் நுழைக்கப்பட்டு ராசாங்கத்துக்குச் செலுத்தப் பட்ட ஊழியத்துக்கு வெகுமதி என்பதாய் ஒப்பந்தமாயிருக் கிறது. இவ்விதமாகவே கிராமத்தின் எல்லா உத்தியோகஸ்தர் களும் தொழிலாளிகளும் அவரவர்களுடைய மிராசியை அனுபவிக்கிறார்கள். இந்த மிராசு ஒரு அத்துக்கு உட்பட்ட சொற்ப நிலங்களாகவிருக்கின்றது. மிராசுதார்களென்று சொல்லப்பட்டவர்களோ நிலத்துக்குச் சொந்தக்காரர்களென்கிற பாத்தியததை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாத்தியம் அவர்களுக்கு எந்தக் காலத்திலாவது கொடுக்கப்பட்ட தென்று ரூபிக்க மாட்டார்கள். அவர்கள் நிலத்துக்கு உடையவர்க ளென்று சொல்லுகிறதினாலும், நேட்டிவ் உத்தியோகஸ்தர்க ளுடைய வல்லமையினாலும் தங்களுடைய நிலங்களை விற்கவும் அடமானம் வைக்கவும் ஒரு மோசதந்திர பாத்தியத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டார்கள். அப்படிச் சம்பாதித்தும் அவர்க ளுக்குப் பாத்திய(தை) உண்டாகியிருக்கிற அவர்களுடைய கைப்பற்று நிலங்களையும் ஊழிய மானியங்களையும் மாத்திரம் விற்கிறதற்கு அவர்களுக்குப் பாத்தியமுண்டு. மேலெடுத்துக் காட்டிய காரணங்களால் நில பாத்தியம் சர்க்காருடைய தென்றும், தங்களுடைய கைப்பற்று நிலங்களை சாகுபடி செய்கிற பாத்தியம் மிராசுதாரர்களுடையதென்றும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. கலெக்டர் எல்லீசு என்பவர் இந்துக்களில் மேன்மையானவர்களோடு சினேகிதஞ் செய்திருந்தபடியால் தான், எப்போதும் சூழப்பட்டிருந்த பிராமணாளுடைய தப்பு எண்ணங்களை அவரும் அங்கீகரித்திருக்கிறார். ஆகையால் இப்பேர்க்கொத்த முக்கியமான சங்கதிகளில் அவருடைய அபிப்பிராயத்தை எவ்வளவும் ஒப்புக் கொள்ளக்கூடாது. மேஸ்தர் எல்லீசு இப்பேர்க்காத்த (இப்படிப்பட்ட) தப்பு எண்ணங்களைக் கொண்டிருந்த போதிலும், கரம்பு நிலங்களை சர்க்காருடைய உத்திரவில்லாமல் திருத்தக் கூடாதென்றும், தன்னுடைய கைப்பற்று நிலங்களைக் கைவிடாமல் கரம்பு நிலத்தின் யாதாமொரு பாகத்தை(யும்) அவர்கள் விற்கக் கூடா தென்றும் ஒப்புக்கொள்கிறார். எனாம்களை உடைத்தானவர்கள் செங்கல்பட்டு ஜில்லாவில் மாத்திரம் நில அனுபோகத்தை உடைத்தாய் இருக்கவில்லை என்று சொல்வது வாஸ்தவத்திற்கு விரோதமாயிருக்கின்றது. அனேக ஜில்லாக்களில் அனுபோகத் தினால் அடைந்த சர். தாமஸ் மன்றோ என்பவருடைய தீர்ப்பை மிராசுதாரர்கள் ஆக்ஷேபிக்கிறார்கள். கிராமங்களோடு அல்லது கிராமப்பங்குகளோடு விஸ்தாரமான கரம்பு நிலங்களை விற்கிறார்களென்று சொல்லுகிறது. மிராசு பாத்தியத்தைத் திறப்(உறுதி)*(திறப்- திறன்- திறப்படுத்த- ஸ்திரப்படுத்த, உறுதி செய்ய) படுத்துகிறதற்கு நியாயமான அத்தாட்சியல்ல. ஏனென்றால் கிராமங்களும் கரம்பு நிலங்களும் தனித்தனி யாகவும் வெவ்வேறாகவும் விற்கப்பட்டிருக்கிறதாக மிராசுதாரர் களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஏற்கெனவே சொல்லியிருக்கிற பிரகாரம் சர்க்கார் உத்தியோகத்திலிருக்கிற பிராமண மிராசுதாரர்களுடைய வல்லமையினால் கரம்பு நிலங்களைப் பொது நன்மைக்கு வாங்குகிறதற்குச் சர்க்காருக் குண்டாகிய பாத்தியத்தைத் தடுக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். மேற்சொல்லிய நேட்டிவ் அசோசியேஷன் என்னும் சபையா ருடைய பிட்டீசனில் பூர்வீகத்தில் கிராமங்கள் ஏற்படும் போது அவைகள் ஏகபோகமாக இருந்ததாகச் சொல்லுகிறார்கள். ஏகபோகம் என்றால் ஆருக்குள் ஏகபோகமாயிருந்தது? ஒரு கிராமத்தின் தனிக்குடும்பத்திலும் தன்னுடைய சந்ததியார் களிலுமாயிருந்தது? பிரசைகள் விருத்தியினாலேயும் கல்வி விருத்தியினாலேயும் சாகுபடிக்கு லாயக்காய் இருந்த நிலங்கள் நாளுக்கு நாள் அவர்களுக்குள் பகுத்துக் கொள்ளப்பட்டதென்று மிராசுதாரர்கள் சொல்லுகிறார்கள்.
அதென்னவென்றால் ஒரே கிராமத்தில் ஐசுவரியத்தையும் அதிகாரத்தையும் உடைத்தானவர்கள் மற்றவர்களை நீக்கி நிலங்களைத் தங்களுக்குள் பகுத்துக் கொண்டார்களென்ற அர்த்தமாகும். மிராசுதாரர்கள் என்னப்பட்ட குடிகள் எவ்வளவு அதிகரித்தபோதிலும், ஏழைப் பாயக்காரிகளுக்குக் கேடாயும் சர்க்காருக்கு நஷ்டமாயும், விஸ்தாரமான கரம்பு நிலங்களைச் சாகுபடி செய்யாமலிருக்கிறார்கள் என்பது சர்க்காருடைய ரிக்கார்டுகளினாலேயே தெரியலாம். சொந்தச் சிலவினாலும் சரீரப்பிரயாசையினாலும் நெத்தி வேர்வையினாலும் பாயக்காரிகள், சுகவாசிகள் என்பவர்கள் நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வந்திருக்கும் போது, சர்க்காருக்கு எவ்வளவும் பிரயோசனமில்லாமல் மிராசதாரர்கள் ஜீவித்துப் பெருகுகிறார்கள். பெருகித் தாங்கள் கொழுத்திருக்கிறது போலத் தங்கள் கால்நடைகளும் கொழுக்க வேணுமென்று சாகுபடி செய்யாமல் கரம்பாகவிடப்பட்டிருக்கிற நிலங்களை மேய்ச்சலுக்கு விடப்பட்ட நிலமென்று சொல்லுகிறார்கள். பாயக்காரிகளினுடைய பிரயாசையில்லாமற் போனாலும், மிராசுதாரர்களுடைய கோரிக்கைகளுக்கு நேர் விரோதமாகத் தங்களுடைய பணத்தையும் காலத்தையும் சரீரப் பிரயாசை யையும் இடைவிடாமல் சிலவழிக்காமல் போனால், இப்போது சாகுபடியாகிறதில் 16 இல் 1 பங்காவது சாகுபடியாகாது. ஒருவன் சர்க்கார் பாக்கியைச் செலுத்திக் கொண்டு வருகிற பரியந்திரம் (வரை) அவன் கைப்பற்று நிலங்களுக்கு அவனுக்குப் பாத்திய முண்டென்றும், அப்படிச் செலுத்தாமல் போனால் அந்தப் பாத்தியததை அவனிழந்து போகிறானென்றும் எங்கேயும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.
தங்களுடைய வசத்திலிருக்கிற எல்லா நிலங்களுக்கும் எல்லாக் குடித்தனக்காரர்களுக்கும் தரம் தீர்வையைச் செலுத்த வேணுமென்று கவர்ன்மெண்டார் உத்தரவு செய்திருக்கிறார்கள் ஆகையால் அப்படியவர்கள் செலுத்தாமல் போனால் அவர்களுடைய எல்லாப் பாத்தியத்தையும் இழந்து, கவர்ன் மெண்டார் தங்களுடைய சொந்த பிரயோசனத்திற்கும் பிரசைகளுடைய பிரயோசனத்திற்கும் அந்த நிலங்களை வேறே யாருக்காவது கொடுத்து விடலாமென்கிறதும் பகிரங்கமாக இருக்கின்றது. இவ்விதமாக நில பாத்தியமென்கிறதும் தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சர்க்கார் கோரிக் கையை நிறைவேற்றினால் பாத்தியத்தைக் குறித்து யாதாமொரு தர்க்கம் இராது. முதலாவது எந்த நிலங்களைச் சாகுபடி செய்யாமலும், அவர்களுடைய பாத்தியத்தை அகப்படுத்தக் கூடாமலும் இருக்கிறார்களோ அந்த நிலங்களுக்கு மிராசுதாரர்களுக்கு பாத்தியம் உண்டென்று சொல்வதும்; இரண்டாவது தங்களுடைய சொத்துக்களைக் காப்பாற்றுகிற கவர்ன் மெண்டார் பாக்கியைச் செலுத்த ஆக்ஷேபிக்கிறதும் பெரிய ஆங்காரமாயிருக்கின்றது, செங்கல்பட்டு ஜில்லாவில் மாத்திரமல்ல. இந்தியாவில் இங்கிலீஷ் துரைத்தனத்தாருக்கு இருக்கப்பட்ட எல்லாச் சுதந்திரங்களையும் சம்பந்தப்படுத்துகிற தர்க்கத்தைக் குறித்து இது ஸ்தாபிதமாக இருக்கின்றது. நில பாத்தியம் செயித்தவனுடையவா(தா) அல்லது செயிக்கப்பட்டவை னுடையவா(தா) என்கிற கேழ்(ள்)வியை இன்னந் தெளிவாய்த் தீர்மானிக்கப்பட வேண்டியது. ஆனால் இந்தக் கேழ்(ள்)வியைக் குறித்து இதரமான இடங்களில் உண்டாயிராத ஏற்பாடானது செங்கற்பட்டு ஜில்லாவில் மாத்திரம் வேர்கொண்டிருக்கிறது. அது என்னத்தினாலென்றால், தொண்டமான் அரசர்களுடைய பீடமான காஞ்சிபுரம் அதற்குச் சமீபத்திலிருக்கிறபடியாலும், பிராமலணாள் அதில் அதிக வல்லமையையும் அதிகாரத்தையும் உடைத்தான ஸ்தானமாயிருக்கின்றது. மிராசுதாரர்களுக்குத் துண்டுவாரம் கொடுக்கிறது பாயக்காரிகளை இரட்டைத் தீர்வைக்கு உட்படுத்துகிறதாக இருக்கின்றது. முதலாவது கவர்ன்மெண்டுக்கும் மற்றொன்று மிராசுதாரர்களுக்குமாம். இதனால் தன்னுடைய கஷ்டத்துக்கு, பாயக்காரிக்கு ஏதாவது மீறுகிறது (மிச்சப்படுகிறது) அரிதாக இருக்கின்றது. தலைமுறை தலைமுறையாகச் சாகுபடி செய்து கொண்டு வந்த நிலங்களின் சுவாதீனத்திலிருந்து பாயக்காரிகளை அப்புறப்படுத்துகிறது மிகவும் வருத்தமான காரியமென்று எல்லாரும் ஒப்புக் கொள்வார்கள். ஏற்கெனவே சொல்லியிருக்கிற பிரகாரம் மேஸ்தர் எல்லீசு பிராமணாளுடைய வல்லமைக்குள் அகப்பட்டிருந்த படியால் அவருடைய விரோதமான எண்ணம் சங்கரைய ருடைய இரட்டைப் பிறப்பான எண்ணமாகவிருந்தது சங்கரையர் மேற்கொல்லிய அவருடைய அபிப்பிராயத்த மறைவாய்க் காட்டியிருக்கிறார். ஆனால் பிராமணன் ஆன படியால் பிராமணாளுக்கு உதவி செய்யவும் அவர்களைக் காப்பாற்றவும் தன்னாலியன்ற எல்லாப் பிரையாசையையும் ஸ்வாபீகமாக (தானாக) எடுத்துக் கொள்வான் என்பதற்குச் சந்தேகமில்லை. சர் தாமஸ் மன்றோ என்பவர் தென்னிந்தியாவில் நில காரியத்தில் அதிக பரிகைஷயை உடைத்தாயிருந்ததால், ரயத்துவாரி சிஸ்ட்டமே நேர்த்தியானது என்று நினைத்தார். குடித்தனக்கார ருடைய சவுக்கியத்தை அவர் யோசிக்குமளவில் (போது) தன் யஜமான்களாகிய கோர்ட் டப் டிரக்டர்ஸ்*(Cour of Directors) என்பவர்களுடைய பிரயோசனத்தை மறக்கவில்லை. ஆகையால் செங்கற்பட்டில் மிராசு பாத்தியம் என்று சொல்லப்பட்ட பாத்தியத்தை ஒத்துக் கொள்ளவில்லை. பிராமணாள் தங்களுக்கு மேலானவர்க ளிடத்தில் மிகவும் கீழ்ப்பட்டவார்களாகவும் கெஞ்சுகிறவர்க ளாகவும் இருக்கிறார்கள் என்றும், தங்களுக்குக் கீழானவர்க ளென்று மற்றவர்களை மிகவும் அவமரியாதையாகவும் தூஷணை யாகவும் நடத்துகிறார்களென்கிறதும் எல்லோருக்கும் தெரியும். மிராசுதாரர்கள், அவர்களுடைய பிட்டிசனில் 21ஆவது பாராவில் கவர்ன்மெண்டாருக்கு பாத்தியமில்லை என்றும், தங்களுடைய பாத்தியத்தைக் குறித்து ஏற்படுத்தப்பட்ட றிகுலேஷன்கள் உதவாதென்றும் சொல்லுவதே அவர்களுடைய தூஷணையை வெளிப்படுத்துகின்றது. மிராசுதாரர்கள் இப்போது தங்களுடைய பாத்தியத்தை வழக்கத்தின் மீதில் அஸ்திவாரம் போடுகிறார்கள் இதற்கு முன் தொண்டமான் இராசாக்களிலிருந்து அடைந் தார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இது ஒன்றுக்கொன்று ஒவ்வாத நியாயங்களாய் இருக்கிறதென்பது பகிரங்கமாயிருக் கின்றது. சர்க்காருடைய குத்தகைதாரர்களுக்கு இவ்வளவு அதிகாரம் இருந்தால், தங்களுடைய நிலங்களைச் சாகுபடி செய்யாமலும் தரம் தீர்வை கொடாமலும் இருக்கிற யாவரையும் அப்புறப்படுத்திப் போட கவர்ன்மெண்டாருக்கு அதிகார மில்லை யென்று யார் துணிந்து சொல்லக்கூடும்?
- மதராசு நேட்டிவ் அசோசியேஷன் சபையார் கவர்ன்மெண்டார் ஜல ஆசானத்தில் மராமத்துக்களைச் செய்கிறபடியால் நஞ்சை நிலங்களுக்கு வரி கேழ்(ட்)கிறார்களென்றும், அனேக நூறு வருஷங்களுக்குப் பின்பு இப்போது மிராசுதாரர்கள் சாகுபடி செய்கிறதுக்குச் சித்தமாய் இருக்கிறார்கள் என்றுஞ் சொல்லு கிறார்கள். யதார்த்தமாகவே சகுபடி செய்து தீர்வையைச் செலுத்துகிறவர்கள் பாயக்காரிகளேயொழிய வேறல்ல. அவர்களே சாகுபடி செய்யப்பட்ட நிலங்களுக்கும் கரம்பாயிருக்கப்பட்ட நிலங்களுக்கும் நியாயமான சொந்தக்காரர்.
ஐதர் கலாபனையில் அனேகம் கிராமங்களை குடிகள் விட்டோடிப் போனார்கள். இந்தக் கிராமங்களின் மிராசு பாத்தியம் அற்றுப் போய் விட்டதென்று மிராசுதாரர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். பிற்பாடு அப்படிக் காலியாய்ப் போன கிராமங்களை மிஸ்டர் பிளேசு என்பவர் மிராசுதாரர் அல்லாதவர்களைக் கொண்டு நிரப்பிவிட்டார். அப்போது மிராசு பாத்தியம் என்னமாய்ப் போய்விட்டது? குடிகள் அதிகரிக்க சாகுபடியும் அதிகரித்து வருகிறதென்று மிராசுதாரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இது சந்தேகமில்லாமல் எதார்த்தந்தான். ஆனால் அவாள் சொல்லுகிறபடியல்ல. குடிகள் விர்த்திப்பென்று சொல்லப்பட்டது சுகவாசிகளும், பாயக்காரிகளும். அவர்களால் தான் சாகுபடி அதிகரித்துக் கொண்டு வருகிறது.
- மிராசு நேடிவ் அசோசியேஷன் என்னும் சபையார் எழுதிய பெட்டீசனில் உண்டான சாரமற்ற சங்கதிகளை வெளிப்படுத்தின பின்பு, முடிவில் பாயக்காரிகள் பிரார்த்தித்துக் கொண்டது என்னவென்றால்
- ஒவ்வொருரயத்தும் சாகுபடி செய்யத்தக்க நிலங்களுக்குத் தனிப்பட்டா கொடுக்க வேண்டியது.
- தர்காஸ்து கொடுக்கிறவனும் கவுல் கொடுக்க வேண்டியது.
- லார்டுகானிங் என்பவருடைய கட்டளைப் பிரகாரம் கரம்பு நிலங்களை ஏலம் போட்டால் மிராசுதாரர்களும், மிட்டாதாரர்களும். இசாராதாரர்களும், சுரோத்திரியதாரரும் ரெவின்யு டிபார்ட்மெண்டில் இருக்கப்பட்ட அவர்களுடைய பந்துக்களும் தங்களுக்குண்டாகிய வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் அபகரித்துக்கொள்வார்கள். (ஏலமாக விடக் கூடாது என்பது கருத்து).
- பாயக்காரி ஏஜெண்டு தங்கள் நிலங்களை வேணுமென்று சாகுபடி செய்யாதிருந்த மிராசுதாரர்களுக்கு அநியாயமாய் வசாக் கொடுக்கிறார்களென்கிற சங்கதியைக் குறித்து மறுபடியும் ரெவின்யு போர்டாருக்கு மற்றாரு பெட்டீசன் எழுதினதற்கு இதனடியிற் கண்ட இண்டார்ச்சுமெண்டு*( Endorsement – விளக்கம் கூறும் மடல்) கிடைத்தது.
‘1863 ஆம் வருஷம், நவம்பர் மாதம் 824 இல், விண்ணப்பக் காரனுக்குத் தெரியப்படுத்துகிற தென்னவென்றால், சர்க்கார் உத்திர விற்கு விரோதமாகக் கரம்பு நிலங்களுக்கு யாருக்காவது வசா கொடுத் திருந்தால், அது சங்கதியைக் கலெக்டருக்குத் தெரியப்படுத்த வேண்டியது. கரம்பு நிலங்களைக் குறித்துக் கொடுத்த தர்க்காஸ்து சங்கதியும் கலெக்டரிடத்திற்குப் போக வேண்டியது. இந்தச் சங்கதியைக் குறித்து விண்ணப்பக்காரர் கொண்டு வரப்பட்ட மொத்தப் பிராதுகளில் போர்டார் பிரவேசிக்க மாட்டார்கள். நஷ்டமடைந்தவன் முறையிட்டுக கொள்ள வேண்டியது.’
- 1861 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் பாயக்காரி ஏஜெண்டு மகாகனம் பொருந்திய இந்தியா செக்கிரட்டேரி (ஆப்) ஸ்டோட்டு அவர்களுக்கு அனுப்பிய மிமோரியலின் 9 ஆவது பாராவில் சொல்லுகிறது என்ன வென்றால், வாரண்ட் தரப்படி கணக்கினாலும் பைமாஷ் கணக்கினாலும் ஒவ்வொரு கிராமத்தின் குடித்தனக்காரர்க ளுடைய அனுபோகத்திலிராநின்ற வீடுகளும் நிலங்களும் தோட்டங்களும் அவரவர்கள் பேரில் டாக்கலாயி*(டாக்கல் – தாக்கல், பயிர்த்தாக்கல், பயிரிட்டவரின் பெயர்ப்பதிவு) (தாக்கல்) ருந்தது. இந்த டாக்கல்களை கிராம கணக்கப்பிள்ளைகளினுடைய உதவியினால் மோசவிதமாய் மாற்றி, மிராசுதாரர்களுடைய பேர் (பெயர்)களை டாக்கல் செய்கிறார்கள். குடிகளில் யாராவது ஆட்சேபித்தால் அல்லது மேற்சொல்லிய வீடு, மனை, தோட்டங்களைத் தன் வசத்தில் வைத்துக்கொள்ள விரும்பினால் மிராசுதாரர்கள் அவர்பேரில் போடப்பட்ட வரியை அவர் கொடுக்க வேண்டியது.
இல்லாவிட்டால் அதுகளை விட்டுப் போகும்படியாகத் தொந்தரவு செய்கிறார்கள். அப்படிப் போகாவிட்டால் வீடு முதலான (வற்றின்) மராமத்துக்களைச் செய்யவொட்டாமல் தோட்டி, தலையாரிகளை ஏவி விடுகிறார்கள். அப்படியும் போகாமற்போனால், அவர்கள் மிராசுதாரர்களுக்கு வேண்டிய போது வீடு முதலானதுகளை ஒழித்துப் போடுகிறோமென்று பாயக்காரிகள் எழுதிக்கொடுத்தது போலத் தப்புப் பத்திரங் களைச் சி(ரு)ஷ்டித்து, அதைக் கோர்ட்டில் போட்டு அவர்களை அப்புறப்படுத்திப் போடுகிறார்கள். இந்த நிச்சயமற்ற அனு போகத்தின் நிமித்தம் தங்களுடைய குடிசைகளை நியாயமான பிரகாரம் ரிப்பேர் செய்யாமல் மழைக்கும் வெய்யிலுக்கும் காற்றுக்கும் குளிருக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். சில கிராமங்களில் நெடுநாள் அனுபோகத்தில் இருக்கிற வீடுகளுக்கு சாதி அடியால் 144 குழிக்கு 5 அணா குயிட்டரெண்டு (Quit rent) ஏற்படுத்தி வாங்குகிறார்கள்.
- கிராமத்தானுக்கு கிராம மானியம் என்று சொல்லப்பட்ட தோட்டக்கால் அல்லது நஞ்சை நிலங்கள் தவிர மற்ற யாவற்று நிலங்களும் சுகவாசிகளாலும்*(சுவாசி – சுகவாசி – மண்ணுக்கு உரியவன்) பாயக்காரிகளாலும் காடுகரம்பு திருத்தப்பட்டு சாகுபடியாகி வருகிறது. இப்பேர்க்கொத்த நிலங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் 500 முதல் 1000 காணி வரைக்கும் இருக்கின்றது. முதல் போகத்துக்கு அவர்கள் துண்டு வாரம் கொடுக்கிறார்கள். இரண்டாவது போகத்திற்கும் மேற்படி துண்டு வாரத்தில் பாதி கொடுக்கிறார்கள்.
- சர்க்கார் 120 மரக்காலுக்கு 50 முதல் 54 மரக்கால் வரைக்கும் குடிவாரம் கொடுக்கிறார்கள். எந்தத் துரைத்தனத்திலும் இந்தக் கவர்ன்மெண்டார் அமானியில் வைத்திருந்த காலத்திலும் மேல்வாரம் தானியத்தினால் செலுத்தப்படாமல் பணத்தினால் செலுத்தப்பட்டது. யாதாமொரு ஆட்சேபனையும் இல்லாமல் தர்காஸ்து செய்கிறவர்களுக்கு கவுல் கொடுக்கும்படியாக 1859 ஆம் வருஷத்தில் ரெவின்யு போர்டார் பிரசித்தப்படுத்திய இஸ்தியாரை (அறிவிப்பை) நம்பி, அனேகம் பாயக்காரிகள் தர்க்காஸ்து கொடுத்தார்கள். ஆனால் ஒன்றுக்கும் நியாயம் கிடைக்கவில்லை. ஏனென்றால் யாராவது தர்க்காஸ்து கொடுத்தால் கிராமத்தானை முந்தி அழைத்துக் கேழ்(ட்)க்க வேண்டியதென்றும், அவன் சம்மதித்தால் அவனுக்கே கொடுக்க வேண்டியதென்றும், அவனுக்கு வேண்டியதிராவிட்டால் தர்காஸ்துக்காரனுக்கு கவுல் கொடுக்க வேண்டியதென்றும் கலெக்டர் உத்தரவு செய்ததினாலேதான், இந்த உத்தரவு மெய்யெழுத்துப்போல் (தனித்து இயங்காதது, உயிரற்றது) இருக்கிறபடியால் ஒன்றுக்கும் உதவாது. ஏனென்றால் மிராசுதாரர்கள் தங்களுடைய இஷ்டப் பிரகாரம் நடந்து கொண்டு வருகிறார்கள். ஒரு தர்க்காஸ்து கொடுத்தால் மிராசுதாரர்கள் ஆக்ஷேபிக்கிறார்கள். அப்புறம் கேழ்(ள்)வி முறையில்லை.
- ஒவ்வொரு கிராமத்திலும் 100 முதல் 200 காணி வரைக்கும் மேய்ச்சல் நிலமாக உபயோகப்படுத்துகிற கரம்பு நிலங்கள் சாதாரணமாயிருக்கின்றன. இதைக் கிராமத்தார் முழுமையும் தங்களுக்கு மாத்திரம் உபயோகப்படுத்திக் கொண்டு வருகிற தல்லாமல் தோட்டி, தலையாரிகளைக் காவலாளிகளாக வைத்துப் பாயக்காரிகளுடைய கால்நடைகளை அவ்விடங்களில் மபமேய வொட்டாமல் திட்டஞ் செய்து தடுத்துக் கொண்டு வருகிறார்கள் இதனால்தான் தகுந்த மேய்ச்சல் இல்லாமல் அவர்களுடைய மாடுகள் மிகவும் இளைத்துப் போகிறதும் அல்லாமல், அனேகம் இறந்துபோகின்றன. உழவு காலத்தில் மழை பேய்ந்த போது பாயக்காரிகள் தங்களுடைய நிலங்களை வி(உ)ழுகிறதுக்கு இரட்டைவிலை கொடுத்து மாடுகளை வாங்க வேண்டியதிருக் கிறது. அப்படிச் செய்ய நிர்வாக (வசதி)மில்லாமலிருக்கின்ற படியினால் விஸ்தாரமான நிலங்களை சாகுபடி செய்யாமல் விடவேண்டியிருக்கிறது.
- ஒரு ஊரில் கிராமத்தாருடைய சமுசாரம்*(கிராம மானியம் பெற்ற குடும்பம்) (குடும்பம்) ஒன்று இரண்டொழிய அதற்கு மிஞ்சியிருக்கவில்லை. இப்பேர்க் கொத்த கிராமத்தாருக்கு ஒன்று முதல் பத்து கிராமம் வரைக்கும் இருக்கின்றது. இந்த நிலங்களையும், அவர்களுடைய மானிய முதலான நிலங்களையும் சாகுபடி செய்கிறதற்கு ஒவ்வொரு கிராமத்தில் ஐந்து குண்டைக்கு மிஞ்சி இல்லை. இப்படியிருக்க ஒவ்வொரு கிராமத்திலும் சுகவாசி பாயக்காரி சமுசாரங்கள் 50 முதல் 500 வரைக்கும் இருக்கின்றதும் அல்லாமல், அவர்களுக்கு 20 முதல் 200 குண்டை வரைக்கும் இருக்கின்றது. அவர்களில் ஆணும் பெண்ணும் ஐந்து வயது முதற்கொண்டு இரவும் பகலும் கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது.
- கிராமத்தாலும் அவனோடுகூட உளவாயிருக்கிற கணக்கனும் தங்களுக்கும் இதரமான கிராமை உத்தியோகஸ்தர்களுக்கும் சுதந்திரமாக பாயக்காரிகளிடத்திலிருந்து ஏற்படுத்தப்பட்ட ஒரு அளவு தானியத்தை வாங்குகிறதும் அல்லாமல், கிராமக் தாருடைய வீடுகளிலாவது தங்களுடைய பந்துக்களினுடைய வீடுகளிலாவது கலியாண முதலான சடங்குகள் உண்டானால், அதற்குண்டான சிலவுகளை பாயக்காரிகளிடத்தில் வாங்கு கிறார்கள். மேலும் குடிகளை ஏரி மராமத்து செய்யும்படி யாகவும் இன்னும் தங்களுக்கு வேண்டிய வேலைகளைச் செய்யும்படியாகவும் அவர்களை வருத்துகிறார்கள். யாராவது ஆக்ஷேபித்தால் அவர்கள் வீட்டை முத்திரை செய்து அவர்களைக் கட்டி அடித்து நானாவிதத்திலும் வருத்தப்படுத்துகிறார்கள்.
- அவர்களுடைய முதல் மிமோரியலில் சுகவாசிகளும் பாயக்காரிகளும் கிராமத்தார், மிட்டாதார், சுரோத்திரியதார் இசாராதார் முதலானவர்களுடைய சிங்கப்பல்லுகளிலிருந்து விடுதலை செய்யும்படியாயும், தமிழ்ப் பாஷையை நன்றாய் அறிந்திருக்கிற யூரோப்பியன் உத்தியோகஸ்தர்களில் ஒவ்வொரு கிராமத்திலும் தாலுக்காவிலும் ஒரு கமிஷன் ஏற்படுத்தும்படியாகப் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
- இதைச் செய்வார்களேயானால் ஒரு கரண்டி (அளவு) நிலமாவது சாகுபடியில்லாமல் இருக்கமாட்டாது.
- 1862 ஆம் வருஷம் நவம்பர் மாதம் 23ஆம் தேதியில் மகாகனம் முதலாவது பொருந்திய இந்தியா செக்கிரட்டேரி (ஆப்) ஸ்டேட்டு அவர்களுக்கு எழுதிக்கொண்ட இரண்டாவது சப்ளிமெண்டு மிமோரி யலில் இதனடியில் கண்டவைகள் கிராமத்தாரால் கேட்டு வாங்கப்பட்ட பீசு (கட்டணம்) என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
முதலாவது துண்டுவாரம்
இரண்டாவது குப்பத்தம்
மூன்றாவது மேனா
இதல்லாமல் இதரமான கிராம உத்தியோகஸ்தர்களோடு அவர்கள் செலுத்தப்பட்ட வேலைகளுக்கு கவர்ன்மெண்டா ரிடத்திலிருந்து மானியங்களைப் பெற்று அனுபவிக்கிறார்கள்.
- இந்த நானாவிதமான பீசுகளை வசூல் செய்து நேராய் கவர்ன்மெண்டாரிடத்திலும் மானியங்களை அனுபவிக்கிற கிராமத்தார், மிராசுதாரர்களென்று இதரமான பாத்தியங்களுக்கு எவ்விதமாகச் சுதந்திரங் கொண்டாடலாம்? பாயக்காரிகள் நிலங்களை எதார்த்தமாகவும் இடைவிடாமலும் சாகுபடி செய்கிறவர்களாய் இருக்கிறதுமல்லாமல், அவர்களுடைய முன்னோர்கள் தங்களுடைய சொந்தப் பணத்தை விரையம் செய்து காடுகரம்பு திருத்தி நிலத்தைச் சாகுபடி செய்ய லாயக்காகக் கொண்டு வந்தார்கள்.
- குப்பத்தம் என்கிற நாமதேன(ய)த்தைக் கொண்டு சேகரப் படுத்தப்பட்ட எல்லாப் பலத்தையும் கிராமத்தார் சூது மார்க்கமாய்ச் சொல்லப்பட்ட அவர்கள் மிராசு பாத்தியத்தைக் கொண்டு சொந்தத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
- அவர்களுக்குப் பாத்தியமில்லாத கிராமத்தின் எல்லா நிலங்களும் அவர்கள் அவாள் பேரில் தந்திரமாயும் மோசடியாயும் மொத்தப்பட்டா வாங்கியிருக்கிறார்கள். ரெவின்யு போர்டார் அவர்களுடைய ரிப்போர்ட்டில் மிராசு பாத்தியம் துலுக்கத் துரைத்தனத்திற்கு மேற்பட்டதென்றும், துலுக்கரால் நுழைக்கப்பட்ட மிராசு என்கிற வார்த்தை பாரம்பரியமான பாத்தியம் என்கிற அர்த்தத்தைக் கொடுக்கிறதென்றும் சொல்லுகிறார்கள்.
- யாதொரு யோசனையுமில்லாமல் போர்டார் இவ்விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் இச்சங்கதியைக் குறித்து ஒன்றுந் தெரியாதவர்களாயும் அனுபோகமில்லாதவர்களாயும் இருந் திருக்கலாம். அவர்கள் நிறைவேற்றினது சொற்பந்தான். இதுவும் அவர்களுடைய வேணுமென்கிற அவிவேகத்தினாலும் வயிராக் கியத்தாலும் மூடப்பட்டிருக்கின்றது. கவர்ன்மெண்டாருடைய கண்டிப்பான உத்திரவுகளைப்பார்த்துக் கண்ணைச் சிமிட்டி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கண்டிப்பான உத்தரவுகளை மறைத்துப் போடுகிறார்கள்.
- எல்லாக் கிராம ஊழியக்காரர்களும் மிராசுக்குப் பாத்திய முள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பது வாஸ்துவம். ‘மிராசு’ என்ற வார்த்தை கிராமத்தாருக்கு எப்படி உபயோகப் படுத்தப் படுகிறதோ, அப்படியே, மற்ற ஊழியக்காரர்களுக்கு உபயோகப் படுத்தப்படவில்லை. மானியத்திற்கும் அல்லது மிராகுக்கும் கிராமத்தானுக்கு உண்டான பாத்தியம் கணக்கன், தச்சன் கருமான், தோட்டி, தலையாரி (ஆகிய) இவர்களுக்கு உண்டான பாத்தியத்துக்கு ஒப்பாயிருக்கவில்லையா? (இருக்கவில்ல என்பது கருத்து). இவர்களில் யாராவது, சாதியினாலாவது வயதினாலாவது அல்லது இதரமான காரணங்களினாலாவது தன்னுடைய ஊழியங்களை நிறைவேற்றக்கூடாமற்போனால், அவர்களுக்குப் பதிலாக குமாஸ்தாக்களை ஏற்படுத்தப்படுகிறார்கள். கடைசியில் இவர்கள் தானும் மிராசு பாத்தியத்தை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இப்படி வசப்படுத்திக் கொண்டதற்கு அனேக திருட்டாந்திரங்களுண்டு. ஆகையால் அப்பேர்க்கொத்த விஷயங்களில் கிராமத்தானுடைய மிராசு பாத்தியம் எங்கே போச்சுது? நவாப்புடைய முதன் மந்திரியான கான்கோர்ராயஜீ என்பவர், தன்னுடைய தேசத்தாரும் இனத்தாருமாகிய மராட்டிய பிராமணாளுக்கு உதவி செய்யும் பொருட்டாக விருப்பங்கொண்டு, ஊர்களின் கிராமப் பட்டத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இங்கிலீஷ் துரைத்தனத்தார் ஊரைப் பிடித்துக் கொண்டபோது இந்தக் கிராமத்தார்களில் மிச்ச மானவர்கள் மராட்டிய பிராமணாளாயிருந்தபடியினாலும் கச்சேரி கீழ் உத்தியோகஸ்தர்கள் மராட்டிய பிராமணாளாயிருந்து அவர்களுக்கு நெருங்கிய பந்துக்களாயிருந்தபடியினாலே அவர்கள் எல்லோரும் ஏகமாய்ச் சேர்ந்து கலெக்டர்களை மோசஞ்செய்து அவர்களுடைய முன்னோர்கள்தான் ஆரம்பத்தில் சாகுபடி செய்தவர்களென்று பொய்யாகவும் தந்திரமாகவும் சொல்லிக் கொண்டு வந்தார்கள். உண்மை வெளியாகுமாகில் மிராசுதாரென்று சொல்லப்பட்டவர்கள் பாயக்காரி சுகவாசிகள் தங்களுடைய முன்னோர்கள் நாள் முதற்கொண்டு அபட்டி யில்லாமல் சாகுபடி செய்து அனுபவித்துவந்த நிலங்களை மோசவிதமாய் அபகரித்தார்களென்றும், இவர்கள்தான் நிலத்துக்குச் சுவாதீனக்காரர்களென்றும், அதைச் சாகுபடி செய்கிறவர்களென்றும் தெரிய வரும். ஆகையால், அவர்கள் தீர்வையைச் சர்க்காருக்குச் செலுத்த வேண்டியது அவர்கள் மீதில் விழுந்த கடமையாயிருக்கின்றது. அதே பிரகாரம் அவர்கள் கிரமமாய்ச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள். அதை இரண்டாம் ஆளுக்குச் செலுத்தவேண்டிய கடமையில்லை. கொடுக்கிறதற்குச் சக்தியுமில்லை. கலெக்டர் பிளேசு என்பவர் இந்த ஜில்லாவில் தாலுக்காக்களுக்கு இரண்டு மூன்று பேரை மேன்காவலாக நாட்டாரை ஏற்படுத்தி, அவர்கள் ஒவ்வொருத்தருக்கும் இரண்டு மூன்று கிராமங்களை சுரோத்திரியமாகக் கொடுத்ததினால், இதரமான (மற்றுமொரு) அந்திப்பாக்கம் அ, 6வங்கடாசல நாயகரின் பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம் 137 தன்னுடைய ஊழியங்களை நிறைவேற்றக்கூடாமற்போனால், அவர்களுக்குப் பதிலாக குமாஸ்தாக்களை ஏற்படுத்தப்படு கிறார்கள். கடைசியில் இவர்கள் தானும் மிராசு பாத்தியததை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இப்படி வசப்படுத்திக் கொண்டதற்கு அனேக திருட்டாந்திரங்களுண்டு. ஆகையால் அப்பேர்க்கொத்த விஷயங்களில் கிராமத்தானுடைய மிராசு பாத்தியம் எங்கே போச்சுது? நவாப்புடைய முதன் மந்திரியான கான்கோர்ராயஜீ என்பவர், தன்னுடைய தேசத்தாரும் இனத்தாருமாகிய மராட்டிய பிராமணாளுக்கு உதவி செய்யும் பொருட்டாக விருப்பங்கொண்டு, ஊர்களின் கிராமப் பட்டத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இங்கிலீஷ் துரைத்தனத்தார் ஊரைப் பிடித்துக் கொண்டபோது இந்தக் கிராமத்தார்களில் மிச்ச மானவர்கள் மராட்டிய பிராமணாளாயிருந்தபடியினாலும் கச்சேரி கீழ் உத்தியோகஸ்தர்கள் மராட்டிய பிராமணாளாயிருந்து அவர்களுக்கு நெருங்கிய பந்துக்களாயிருந்தபடியினாலே அவர்கள் எல்லோரும் ஏகமாய்ச் சேர்ந்து கலெக்டர்களை மோசஞ்செய்து அவர்களுடைய முன்னோர்கள்தான் ஆரம்பத்தில் சாகுபடி செய்தவர்களென்று பொய்யாகவும் தந்திரமாகவும் சொல்லிக் கொண்டு வந்தார்கள். உண்மை வெளியாகுமாகில் மிராசுதாரென்று சொல்லப்பட்டவர்கள் பாயக்காரி சுகவாசிகள் தங்களுடைய முன்னோர்கள் நாள் முதற்கொண்டு அபட்டி யில்லாமல் சாகுபடி செய்து அனுபவித்துவந்த நிலங்களை மோசவிதமாய் அபகரித்தார்களென்றும், இவர்கள்தான் நிலத்துக்குச் சுவாதீனக்காரர்களென்றும், அதைச் சாகுபடி செய்கிறவர்களென்றும் தெரிய வரும். ஆகையால், அவர்கள் தீர்வையைச் சர்க்காருக்குச் செலுத்த வேண்டியது அவர்கள் மீதில் விழுந்த கடமையாயிருக்கின்றது. அதே பிரகாரம் அவர்கள் கிரமமாய்ச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள். அதை இரண்டாம் ஆளுக்குச் செலுத்தவேண்டிய கடமையில்லை. கொடுக்கிறதற்குச் சக்தியுமில்லை.
- கலெக்டர் பிளேசு என்பவர் இந்த ஜில்லாவில் தாலுக்காக்களுக்கு இரண்டு மூன்று பேரை மேன்காவலாக நாட்டாரை ஏற்படுத்தி, அவர்கள் ஒவ்வொருத்தருக்கும் இரண்டு மூன்று கிராமங்களை சுரோத்திரியமாகக் கொடுத்ததினால், இதரமான (மற்றுமொரு) பெரிய தப்பிதத்தைச் செய்திருக்கிறார். இவ்விதமாக அவர்க ளுக்குக் கொடுக்கப்பட்ட கிராமத்தின் உற்பத்தி 2000 முதற்கொண்டு 5000 ரூபாய் வரைக்கும் பெறுமானதாய் இருக்கிறது. இதில் கவர்ன்மெண்டாருக்கு வருகிற பாகம் மிகவும் சொற்பம். இந்த சுரோத்தியங்களல்லாமல் மேற்சொல்லிய நாட்டார், கச்சேரி கீழ் உத்தியோகஸ்தர்களுடைய சகாயத்தினால் மிட்டாக்களையும் பெற்றுக் கொண்டார்கள். இவைகளுக்கு வருஷத்தில் 200 முதற்கொண்டு 300 ரூபாய் சொற்பத் தீர்வை கட்டுகிறார்கள். அதில் வருஷத்திற்கு மூவாயிரம், நாலாயிரம் ரூபாய் வரைக்கும் உற்பத்தி ஆகி அனுபவிக்கிறார்கள்.
- இதற்குச் சில திருட்டாந்தரங்களை எடுத்துக் காட்டுவோம். மதுராந்தகம் தாலுக்கா சூ. ஆறுமுகத்தா முதலிக்கு 3 நட்டுவார் கிராமங்களிருக்கின்றன. அதன் வரியும் வரும்படியும் வருமாறு
ஊர்கள் வரி ரூ வரும்படி ரூ.
- ஆர்க்காடு 170 3000
- வில்லியனூர் 105 2500
- அரசூர் 66 4500
ஆகமொத்தம் 341 10000
இதுவல்லாமல், மேற்சொல்லியவன் 8 கிராமங்களுள்ள மிட்டாவை உடைத்தாயிருக்கிறான். அவற்றால் அவனுக்கான வரும்படி ரூ. 9,600. அவற்றின் விவரம் வருமாறு: செய்யூர் சனியந்திரம் பேட்டையும், வெள்ளிப்பாக்கமும் ரூபாய் 1000 வீதம்; தாத்தச்சேரி, ஒதி வலங்கம், சதுரக்குப்பம், மணப்பாக்கம் ரூபாய் 800 வீதம் ; காசரப்பாக்கம் ரூ.400. புதுப்பேட்டை ரூபாய் 4000 ஆக மொத்தம் ரூபாய் 9600.
ஏழு கிராமத்தையுடைத்தான மற்றொரு மிட்டா
வெள்ளக்குணகாரம் ரூ 400
எரசூர் ரூ 2000
வெண்மாலகரம் ரூ 1500
சிறிய மேலூர் ரூ 1500
புல்லம்பாக்கம் ரூ 1000
தாமரைக்கேணி ரூ 1000
பிச்சன் தாங்கல் ரூ 500
மொத்தம் ரூ 7,900
ஏழு கிராமத்தையுடைத்தான மற்றொரு மிட்டா
மேலப்புதூர் ரூ 2000
போறன் ரூ 1500
கொக்கரன் தாங்கல் ரூ 500
பாடுக்குப்பம் ரூ 500
வாடி ரூ 800
நயனாக்குப்பம் ரூ 300
முத்துக்காடு ரூ 1000
மொத்தம் ரூ 6600
- அதே தாலுக்காவில் தொடர்ந்தால் காளப்பமுதலி எனப்பட்ட நாட்டுவார், 5000 ரூபாய் உற்பத்தியாகப்பட்ட சுரோத்திரியத்தை அனுபவிக்கிறதும் அல்லாமல், 30 கிராமங்களுள்ள ஒரு மிட்டாவையும் உடைத்தாயிருக்கிறார்.
- கடுக்கனூர் சஞ்சீவி ரெட்டியினுடைய புத்திரன் கோட்டை சுரோத்திரியம் 3000 ரூபாய் உற்பத்தியாகிறது.
- கடலூர் குமாரசாமி முதலி 20 கிராமங்களை மிட்டாவாக அனுபவிக்கிறார்.
- கயப்பாக்கம் முத்துக்குமரப்ப ரெட்டி மிட்டாவில் 9 கிராமங்க ளிருக்கின்றன. அவையாவன
வரும்படி ரூ.
- பெரியகயப்பாக்கம் 3000
- சின்னக்கயப்பாக்கம் 4000
- கடப்பேரி 500
- பூங்குணம் 2000
- பூரியம்பாக்கம் 2000
- இறவானூர் 1500
- பழவூர 800
- பெட்டாம் பெரும்பாக்கம் 2000
- அம்மணம்பாக்கம் 2000
மொத்தம் 17800
- புலம்பாக்கம் முத்து வெங்கட்டராம ரெட்டி அனுபவிக்கிற மிராசு கிராமங்கள் என்னவென்றால்:
- புலம்பாக்கம்
- முதுகறை
- சிரவம்பாக்கம்
- சிட்டத்தூர்
- சிறுநல்லூர்
- ராவத்த நல்லூர்
- அல்லூர்
- கீழ் அத்திப்பாக்கம்
- விளாங்காடு
- கீழ மருவத்தூர்
- இந்தப் பிரகாரம் ஒவ்வாருத்தனும் மிட்டாவாகவாவது மிராசியாயாவது ஒன்று முதல் முப்பது முப்பத்தைந்து கிராமங்கள் வரைக்கும் அனுபவிக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுவாரும் இதே பிரகாரம் இந்த ஜில்லாவில் ஐம்பது முதல் அறுபது கிராமங்கள் வரைக்கும் அனுபவிக்கிறார்கள். இதற்கு 50 முதல் 60 ரூபாய் வரைக்கும் தீர்வை செலுத்தி, வருஷத்தில் கிராமம் ஒன்றுக்கு 1000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரைக்கும் பிரயோசனத்தையடைகிறார்கள்.
- செங்கற்பட்டு ஜில்லாவில் 5000 கிராமங்களிருக்கின்றன. இவைகளில் 4 இல் 3 பங்கு நாட்டுவார், மிட்டா, சாகீர், சுரோத்தியம், இசாரா, அக்கிராரமானிய கிராமங்களாக இருக்கின்றன.
- இவ்விதமாக, சட்டத்திற்கு விரோதமாயும் அநியாயமாயும் கிராமங்களைக் கொடுத்துவிட்டபடியால் பாயக்காரிகளும் சுகவாசிகளும் மிராசுதாரென்று சொல்லப்பட்டவர்களுக்கு முறிகளிலும் (அடிமைகளிலும்) கேடான முறியாக்கப்பட் டார்கள். கொள்ளையடிக்கும்படியாக இப்பேர்க்கொத்தவ ரிடத்தில் கவர்ன்மெண்டார் ஒப்புவித்துப்போட்டபடியால் குடிக்கக் கூழும், கட்டக் கந்தையும், முடங்கக் குடிசையு மில்லாமல் வருத்தப்படுகிறார்கள்.
- மூன்றாவது சப்ளிமெண்டு மிமோரியத்தில் பாயக்காரி ஏஜெண்டு சுருக்கமாய்க் காண்பிக்கிறதென்ன வென்றால்:
- மிராசுதாரென்று சொல்லப்பட்டவர்களுக்கு ஊழிய மானியம் அல்லது மிராசு நிலங்கள் தவிர பாயக்காரி சுகவாசிகள் காடுகரம்பு திருத்தி சாகு படிக்குக் கொண்டு வந்த நிலங்களுக்கு எவ்வளவும் பாத்தியமில்லை யென்று காண்பித்திருக்கிறார்கள். இந்த மிராசுதாரென்று சொல்லப் பட்டவர்கள் கவர்ன்மெண்டாரை மோசஞ் செய்கிறதுமல்லாமல் பாயைக்காரிக ளிடத்திலிருந்து துண்டுவாரம், தீர்வை சாஸ்தி, அமிஞ்சி, தெண்டம் முதலானவைகளை வருத்தப்படுத்தி வசூல் செய்கிறபடியால் அவர்களை மிதித்துத் தூசியிலும் நிர்மூலமாக்கிப் போடுகிறார்கள்.
- ஏரிகளை மராமத்து செய்கிறதற்கும் சாகுபடிக்கு மேன்காவலாயிருக்கிறதுக்கும் நாட்டுவாருக்கு சுரோத்திரியங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்த ஏற்பாடுகளை நிறைவேற்றவில்லை. பாயக்காரிகள் தங்களுடைய கைப்பற்று நிலங்களைச் சாகுபடி செய்ய இஷ்டமாயிருந்தும் சக்தியை உடைத்தா யிருந்தும் மேற்படி கொள்ளைக்காரர்களால் தடுக்கப்படுகிறார்கள்.
- இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், 1849 ஆம் வருஷத்தில் கூடலூரில் கலெக்டராயிருந்தவர் ஆம் நாட்டுவார் முத்துமல்லாரெட்டி தான் செலுத்த வேண்டிய ஊழியத்தைச் செய்யவில்லையென்று கவர்ன்மெண்டுக்கு ரிப்போர்ட்டு செய்து, பங்காளத்து (Bengal) கவர்ன்மெண்ட்டி லிருந்து அவனுடைய சுரோத்திரியத்தை ஜப்தி செய்து கொள்ளும்படியாய் உத்திரவு பெற்றார். அதே பிரகாரம் எல்லா நாட்டுவாருடைய சுரோத்திரியங்களையும் ஜப்தி செய்யக் கூடாதா?
- சர்க்காருக்கு ஊழியஞ் செய்ததற்குப் பென்ஷன் கொடுக்கிற தற்குப் பதிலாக சாகீர்கள் கொடுக்கப்பட்டபடியால் பாயக்காரி களும் சுகவாசிகளும் மிகவும் சொற்பக் குடிவாரத்தை அடைகிறார்கள். அதனால் மெத்தவும் வருத்தப்படுகிறார்கள்.
- இந்த முறையீட்டுக் கொள்ளுதலுக்கெல்லாம் அப்போதிருந்த மகாகனம் பொருந்திய இந்தியா செக்கிரட்டேரி (ஆப்) ஸ்டேட்டு இதனடியில் கண்டிருக்கிற உத்திரவை கவர்னர்-இன் கவுன்சிலுக்கு அனுப்பினார்;
- ‘ஐயா, நீர் போன பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியில் அனுப்பிய 10 ஆம் நம்பர் கடிதமும், மிராசு ஏற்பாடு இருக்கக்கூடாதென்று சாதித்துத் தங்களுடைய துக்கமுள்ள காரியங்களை விசாரிக்கும்படியாக ஒரு கமிஷனை ஏற்படுத்தும்படியாகப் பிரார்த்திக்கிற செங்கற்பட்டு ஜில்லாவிலிருக்கும் கீழ்க்குடிகள் அனுப்பிய அனேக மிமோரியல்களையும், நம்முடைய சபையில் ஆலோசனைக்குக் கொண்டு வந்தோம்.’
- ‘அவர்களுடைய விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கு மகாராணி கவர்னமெண்டாருக்கு யாதாமொரு ஏதுவும் காணப்படவில்லையன்று அர்ஜீதாரர்களுக்குத் தெரிவிக்கவும்.’
- இந்த ‘அருமையான’ உத்தரவில் இரண்டொரு விஷயங்களை ஊணி(ஊன்றி)ப் பார்க்கும்போது, அவைகள் சாரமற்றவைகள யிருக்கிறது மல்லாமல், மூடத்தனமாகவும் இருக்கின்றன. இந்த உன்னிதமான அதிகாரியென்று சொல்லப்பட்டவருக்கு அப்போதாவது அவர் லார்டு அலிபொக்ஸ்*(Lord Halifox) என்கிற பட்டத்தைத் தரித்த பிறகாவது, மிராசு ஏற்பாட்டு சங்கதியைக் குறித்து ஏதாவது தெரியுமா? இந்த மிராசு சங்கதியை ஏதாவது அறியும் பொருட்டு எவ்வளவாவது பிரயாசைப்பட்டிருப்பாரா? இன்னாள் வரைக்கும் மிராசு என்கிற மொழியின் சரியான தாற்பரியத்தை அவர் சொல்லமாாட்டுவரா (சொல்ல முடியுமா?), உண்மையாகவே. ஏனென்றால் அவருடைய அவிவேகத்தினால் தான் பாயக்காரி சுகவாசிகளைக் கீழ்க்குடிகளென்று சொல்லு கிறார். அவர்கள் யாருக்குக் கீழ்க்குடிகளாக இருக்கிறார்கள்? மிஸ்டர் பிளேசு என்பவருடையவும் மிஸ்டர் எல்லீசு என்பவ ருடையவும் ரிப்போர்ட்டுகள் ஒருதலைப்பட்சமாயிருந்த போதிலும் இவைகளையாவது அவர் வாசித்திருந்தால், பாயக் காரி சுகவாசிகள் கவர்ன்மெண்டுக்கே கீழ்க்குடிகள் தவிர வேறே யாருக்கும் கீழ்க்குடிகள் அல்ல என்று கண்டறியலாம்.
- ஆனால் லார்டு அலிபாக்ஸ் பிரபுவை நாம் நிச்சயமாய்க் கடிந்து கொள்ளக் கூடாது. யாரோ இவ்விடத்திலிருந்து பழைய சிவில் சர்வண்டு பாயக்காரி சுகவாசிகள் மிராசுதாரர்களுடைய கீழ்க் குடிகளென்று அவர் காதில் ஊதியிருக்க வேண்டும். ஆனால் பிளேசு என்பவரும் எல்லீசு என்பவரும் பாயக்காரிகள் மன்னவேடு என்கிற நாமதேயத்தையுடைத்தான சொந்தக் கிராமங்களை உடையவர்களாக இருந்தார்களென்றும், பிராமணாளோடும், வேளாளரோடும் ஒத்த மிராசுதாரர்களாக இருந்தார்களென்றும், இவர்கள்தான் நிலத்தைச் சாகுபடி செய்தவர்கள் என்றும், இவர்களுடைய முன்னோர்களும் இவர்களுந்தான் வடபெண்ணாறு ஆற்றுக்கும் தென் பெண்ணாறு ஆற்றுக்கும் மத்தியிலிருந்த காடுள்ள நிலங்களை அனாதி கரம்பிலிருந்து திருப்பிச் சாகுபடிக்குக் கொண்டு வந்தார்களென்றுஞ் சொல்லுகிறார்கள்.
- இந்த உத்தரவில் மிகவும் கவனிக்கத்தக்கது என்னவென்றால் இது சங்கதியில் பிரவேசிக்கிறதுக்கு ராணியினுடைய கவர்ன் மெண்டார் யாதொரு காரணங்களைக் காணவில்லையென்று சொல்லுகிறது. இதில் பிரவேசிக்கிறதுக்கு ராணியின் கவர்ன் மெண்டார் ஏன் காரணங்களைக் காணவில்லை? அவர்கள் காரணங்களைக் காணாவிட்டால் எந்தக் காரணத்தினாற் பிரவேசிக்க மாட்டார்களென்பதற்கு அவர்களுக்கு உண்டான ஆட்சேபனைகளைத் தெரியப்படுத்த வேண்டியது. அப்படித் தெரியப்படுத்தியிருந்தால் அவைகளுக்கு மிகவும் திருப்திகரமான உத்தரவை அனுப்ப நாங்கள் மிகவும் சித்தமாய்க் காத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி சொற்பமான சவாப்புமாத்திர மல்ல. ரெவின்யு போர்டார் இதுவரைக்கும் பாயக்காரிகளுடைய சவுக்கியத்தைக் குறித்தும் மேன்மையைக் குறித்தும் சிரத்தை யில்லாமலிருந்தாலும் பரிஷ்காரமான ஆட்சேபனை யில்லாத சவாப்பு கொடுக்கிறதுக்குச் சித்தமாயிருக்கிறார்கள்.
- இதைக் குறித்து அவர்கள் 1865ஆம் வருஷம் நவம்பர் மாதம் முதல் தேதியில் செங்கற்பட்டு ஜில்லா முழுமையிலும் 5000 கிராமங்கள் இருக்குதென்றும், அதில் 1000 கிராமங்கள் மாத்திரம் ரயத்துவாரி ஏற்பாட்டிலிருந்து முதல் போகத்துக்குக் கேழ்வரகும் இரண்டாம் போகத்திற்கு நெல்லும் பயிரிடுகிறார்கள்; ஆனால் மற்ற இதரமான 4000 கிராமங்களில் கேழ்வரகு சாகுபடி செய்கிறதில்லை. ஏனென்றால் மிராசுதாரன் இரண்டாம் போகத்துக்கு ஜாஸ்தி தீர்வையைக் கட்ட வேண்டியது இருக்கிறபடியால் நஷ்டம் அடைவான். இதனால்தான் தங்களுடைய நிலங்களை நெல் சாகுபடி செய்கிறதொழிய வேறில்லை என்று கண்டு ஒரு பெட்டீசன் கொடுத்தார்கள்.
- மாசி*(மாஜி – முந்தைய) கனம் பொருந்திய கோர்ட்டப் டிரக்ட்டர்ஸ்*(Court of Directors) என்பவர்களுடைய உத்திரவின் பேரில், பட்டாக்கள் கொடுத்து வந்த போது, மிராசுதாரர்கள் பாயக்காரிகளை மோசஞ் செய்து தங்களுடைய சொந்தப் பேர்களில் மொத்தப் பட்டாக்கள் ஏற்படுத்திக் கொண்டு பின்பு அவர்களிடத்தில் சாஸ்தி தீர்வை வாங்க ஆரம்பித்தார்கள்
- வரகுபோடு கால்நிலங்களைக் குறித்தும் தண்ணீர் பாய இடங் கொடுக்காமலிருக்கிறதினால் கரம்பாய்க்கிடக்கிற நிலங்களுக்குத் தர்காஸ்து கொடுக்கப்பட்ட நிலங்களைக் குறித்தும் மிராசுதாரர்கள் மோசஞ் செய்து கொண்டு வருகிறபடியினால் நிலங்கள் சாகுபடி இல்லாமல் கிடக்கின்றன.
- மொத்தப் பட்டாக்காரர்களென்று சொல்லப்பட்டவர்கள் பாயக்காரி சுகவாசிகளைத் தங்களுடைய நிலங்களைச் சாகுபடி செய்யவொட்டாமல் செய்கிறதும் அல்லாமல், கரம்பாயிருக்கிற நிலங்களுக்குத் தர்காஸ்து கொடுத்தால் அங்கேயும் நாங்கள் ராசிநாமா கொடுத்தாலொழிய உனக்குக் கிடையாது என்று சொல்லித் தடுத்துப் போடுகிறார்கள்.
- இவைகளினால் வருகிற துன்பம் என்னவென்றால் மிராசுதாரர்கள் தங்களுடைய நிலங்களில் மூன்றில் இரண்டு பங்கைப் பீடுபோட்டு (தரிசாக) வைத்து, ஒரு பங்கை மாத்திரம் சாகுபடி செய்கிறார்கள். இதனால் கவர்ன்மெண்டாருக்கு அதிக நஷ்டம் உண்டாகிறது. நூறு காணியினுடைய எருவை 50 காணிக்கு உபயோகப்படுத்துகிற சங்கதியை யோசிக்க வேண்டியது. இப்படிப் பீடாகப் போட்டிருக்கிற நிலங்களைப் பாயக்காரி சுகவாசிகளுக்குக் கொடுத்தால் கவர்ன்மெண்டாருக்கு அப்பேர்க் கொத்த நஷ்டம் சம்பவிக்குமா?
- தர்காஸ்துகள் இடைவிடாமல் கொடுக்கப்படும் அவைகளை அங்கீகாரஞ் செய்கிறதுமில்லை. இதனால் நீண்ட காலமாய் விஸ்தாரமான நிலங்கள் கரம்பாக விடப்பட்டிருக்கின்றன.
- மிராசுதாரர்களுக்குக் கைப்பற்று பட்டா நிலம் இல்லாததினாலே பாயக்காரிகளுடைய கைப்பற்று நிலங்களை மோசடியாய் அபகரித்துக் கொள்ளுகிறார்கள். 1859ஆம் வருஷத்தில் பாயக்காரி களுடைய வசத்திலிருக்கப்பட்ட கைப்பற்று நிலங்கள் அவர்கள் வசத்திலேயே இருக்க வேண்டுமென்று கவர்ன்மெண்டார் ஒரு கட்டளையிட்டார்கள். மிராசுதாரர் என்ன ஆட்சேபனைகள் சொன்னபோதிலும் பாயக்காரிகள் தங்களுடைய நிலங்களை அனாதி காலமாய்ச் சாகுபடி செய்து கொண்டு வருகிறபடியால் அந்த நிலங்களை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று மிராசுதாரர்கள் ஏன் ஆட்சேபிக்கிறார்கள்? அனேக வருஷ காலமாய் கரம்பாய் விடப்பட்டிருந்த நிலங்களைக் குறித்து அவர்களேன் முன் வருகிறார்கள்?
- சென்னப் பட்டணம் இராஜதானியிலிராநின்ற இதரமான எல்லா ஜில்லாக்களைப் பார்க்கிலும் சொங்கற்பட்டு ஜில்லாவில் தரம் தீர்வை சொற்பமாயிருக்கின்றது. இதில் வசா கொடுக்கிறது அநியாயமாயிருக்கிறதுமீ மிராசுதாரர்களுடைய நிலங்களை நூற்றுக்கு முன்னூறு நானூறு காணியாகச் சாகுபடி செய்தும் வாரத்துக்காகப் பாயக்காரி சுகவாசிகளிடத்தில் சாஸ்தி தீர்வை வாங்குறது கொடுரமல்லவா? பாயக்காரிகள் அவர்கள் கேழ்(ட்)கிற தர்காஸ்து நிலங்களை அவர்கள் சாகுபடி செய்தாலும் செய்யாமற்போனாலும் இரட்டைத் தீர்வை கட்டச் சித்தமா யிருக்கிறார்கள். அப்படியிருக்க நஞ்சை, புஞ்சை, மானவாரி நிலங்களுக்குப் பாதி வசா மிராசுதாரர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று கவர்ன்மெண்டார் ஏன் கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள்?
- இப்படிச் செய்வதினால், பாயக்காரி சுகவாசிகள் மாடுகளுக்காக 5 ரூபாய் முதற்கொண்டு 20 ரூபாய் வரைக்கும் கிரையம் கொடுத்துத் தங்கள் நிலங்களைச் சாகுபடி செய்து கொண்டு வரும்போது. மிராசுதாரர்கள் 20 காணிக்குப் பதிலாகப் 10 காணி மாத்திரமே சாகுபடி செய்கிறார்கள். தீர்வை ரூபாய் 100 க்கு 400 ரூபாய் கொடுக்கிறவனுக்குத் தான் தங்களுடைய நிலங்களை விடுவோமென்று சொல்லுகிறார்கள். ஆகையால் மிச்சமானை பாயக்காரி சுகவாசிகள் சீவனம் செய்கிறதுக்கு வேறே ஏதுக்களில்லாத படியால், அவர்களும் பெண்சாதி பிள்ளைகளும் இரவும்பகலுமாய்க் கஷ்டப்பட்டுப் பெரிய அநியாயத்தை அனுபவிக்கிறார்கள்.
- மேலும் கிராமத்தார் பாயக்காரி சுகவாசிகள் என்பவர்க ளுடைய புறக்கடை நிலங்களை அபகரித்துக் கொள்ளுகிற படியால், பத்து, பன்னிரண்டு சமுசாரங்கள்*(பத்துப் பன்னிரண்டு கணவர்கள், மனைவிகள், குழந்தைகள் கொண்ட குடும்பங்கள்). வித்தியாச மில்லாமல் ஏகமாய்க் கலந்திருக்க வேண்டியிருக்கிறது. அதனால் துன்மார்க்கப் பங்க நடத்தைக்கு (ஒழுக்கம் கொட்) இடமுண்டாகிறது. ஆகையால் வீடுகள் கட்டுகிறதற்கு அவர்க ளுக்கு நிலங்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
- 1863ஆம் வருஷத்தின் சமாபந்தி காலத்தில் மிராசுதாரர்களுடைய சாகுபடிகள் ஜாஸ்தியாய்ப் போய்விட்டதென்று கிராம ஊழியக்காரர்கள் மாறுபாடு செய்ததினால், அவர்களுக்கு விஸ்தாரமாக வசா கொடுக்கப்பட்டது. ஏரியின் எதுவாயி லிருக்கப்பட்ட நிலங்களைக் கொடுக்கக்கூடாதென்று கலெக்டர் கள் உத்திரவு செய்திருக்கிறார்கள். பாயக்காரிகள் இந்தக் கரம்பு நிலங்களுக்கு தர்க்காஸ்து கொடுத்தால் கிராமத்தார் அதைக் கொடுக்க வொட்டாமல் தடுக்கிறோர்கள். அப்படிச் செய்வதென் காரணம்?
- பாயக்காரிகளும் சுகவாசிகளும் தர்காஸ்து கொடுக்கப்பட்ட நிலங்கள் (மிராசுதாரர்களால்) ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் கரம்பாய் விடப்பட்ட நிலங்கள். இந்தக்காலம் முழுமையும் சர்க்கார் அவர்களுடைய வரும்படியின் பிரயோசனத்தை இழந்தார்கள். கச்சேரி கீழ் உத்தியோகஸ்தர்களும் கிராம ஊழியக் காரர்களும் ஒன்றுகூடி ஏரி மராமத்துக்காகக் கொடுக்கப் பட்ட பணங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். இதரமான ஜில்லாக் களில் நடக்கிறதுபோல் இதற்கு முன்னால் அனேக விதமாய்ச் சொல்லியிருக்கிற பூமியை – வாஸ்துவமாய் – சாகுபடி செய்கிற பாயக்காரி சுகவாசிகளுக்குத் தனிப்பட்டாகொடுத்தால், சர்க்கார் எவ்வளவும் நஷ்டமடைய மாட்டார்கள். ஜல ஆதாரங்களையும் (பட்டா பெறுபவர்கள்) காப்பாற்றி வருவார்கள்.
- கவர்ன்மெனண்டார் கரம்பாயும் கல்பூமியாயும் இருக்கப்பட்ட நிலங்களை தர்க்காஸ்த்தின் பேரில் இருபது வருஷத்துக்குத் தீர்வையில்லாமல் கொடுக்கிறதாகத் தோப்புச் சட்டங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிலங்களுக்குப் பாயக்காரிகள் தர்க்காஸ்து கொடுத்தார்கள். இதிலேயும் மிராசுதாரர்கள் அவர்களைத் தடுத்து இங்கேயும் அங்கேயும் எல்லையாகச் சில பனை மரங்களை நாட்டி நஞ்சை புஞ்சை நிலங்களை மேய்ச்ச லுக்காகக் கரார்நாமா கொடுத்து தர்காஸ்துக்காரர்களுக்குக் கிடைக்கவொட்டாமல் தடுத்துப் போடுகிறார்கள்.
- அவர்களுடைய அர்ஜியின் முடிவில் பாயக்காரிகள் இதன் அடியில் கண்ட முக்கியமான காரியங்களை கவர்ன்மெண்டாருக்குத் தெரியப்படுத்தினார்கள், அவையென்னவென்றால் :
- வரகு முதலான சாகுபடிக்காக வஸா கொடுக்கக்கூடாது.
- தங்களுடைய சுவாதீனத்திலிருக்கிற கைப்பற்று நிலங்களைப் பிடுங்கக் கூடாது.
- கவர்ன்மெண்டார் இதற்கு முன்பாகவே உத்தரவு கொடுத்திருக்கிற பிரகாரம் மிராசுதாரர் பட்டாவென்றும் பாயக்காரி சுகவாசி பட்டாவென்றும் வித்தியாசம் செய்யக் கூடாது.
- எந்தச் சாதியான் தர்க்காஸ்து கொடுத்த போதிலும் அந்த நிலங்களைத் தடங்கலில்லாமல் அவனுக்குக் கொடுக்க வேண்டியது.
- இந்த அற்பந்திரத்தைக் குறித்து கவர்ன்மெண்டார் கிருபை செய்து அளித்த உத்தரவு என்னவென்றால், மிராசுதாரர்கள் அவசத்தியமாய்ப் பாயக்காரி சுகவாசிகள், கலெக்டர் முதலான அதிகாரிகளிடத்திலும் சிவில் கோர்ட்டுகளிலும் தாவா செய்ய வேண்டியது.
- இதே பிரகாரம் ரெவின்யு போர்டாரும் கவர்ன்மெண்டரும் தர்க்காஸ்து ரூல்கள் ஏற்படுத்தப் போகிறார்கள் என்று 61 ஆம் வருஷம் (1861 ஆம் வருஷம்) முதற்கொண்டு இதுவரைக்கும் யோசனையாய் இருக்கிறார்கள்.
- இத்தியாதி காரியங்களை அந்தந்த அதிகாரிகளுக்குத் தொரியப் படுத்தியும், இதைக் குறித்து இந்த இராஜதானிப் பத்திரிக்கை களில் அனேகம் கரஸ்பாண்டுகள் (Corespondence) (ஆசிரியருக்குக் கடிதங்கள்) பதிய வைத்தும் டைம்ஸ் எடிட்டர் அவருடைய 1863 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியின் பத்திரிக்கையில் சொல்வதென்னவென்றால் :
போன வியாழக்கிழமை நம்முடைய பத்திரிக்கையில் பதிய வைத்த 3, 4 கலம் (பத்திரிக்கையின் 3,4 ஆம் காலங்கள் கொண்ட கரஸ்பாண் டன்சை நம்முடைய பத்திரிக்கையை வாசிப்பவர்களில் மிச்சமானவர்கள் பலர் வேண்டா வெறுப்போடு வாசித்திருப்பார்கள். இந்தக் கலகத்தின் இடமானது பெரிய செங்கற்பட்டு ஜில்லாவிலிருக்கின்றது. அதில் 3000 சதுர மைல் கொண்ட நிலமும், சென்னப்பட்டணத்து இராஜதானியி லிருக்கிறவர்களைத் தள்ளி 60000 ஆயிரம் ஜனங்களும் இருக்கிறது. அதில் வகுப்புக்கும் – வகுப்புக்கும் கசப்பான போராட்டம் உண்டா யிருக்கிறது. மிராசுதாரர்கள் குடிகளை ஒடுக்குகிறார்கள். குடித்தனக்காரர்கள் தங்களுடைய சொந்த மிராசுதாரர்களை மோசஞ் செய்கிறார்கள். ஒரு ககூஷி தன் காரியத்தைக் காயப்படுத்துகிறதுக்குச் சொத்தின் பாத்தியத்தை அத்தாட்சியாகக் கொண்டு வருகிறான். மற்றொரு கக்ஷி சாதாரணமாய் மனிதருக்குண்டாகிய பரிசுத்தமான சுதந்திரத்தைக் கொண்டு வருகிறான். இந்த அனுபோகத்தின் பூர்வீகம் முன்னடந்த கரஸ்பான்டென்ஸ்களில் தெரியப்படுத்தி யிருக்கிறது. பூமியானது ஆதியில் மிராசுதாரர்களுக்குச் சுதந்திரமாய்க் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர்கள் ஏற்படுத்தப்பட்டதைச் செலுத்த வேண்டியது. ஆனால் இந்த ஏற்பாடுகள் இன்னதென்று செவ்வையாய்த் தெரியவில்லை மிராசுதாரர்கள் அவர்களுக்கு நில பாத்தியம் உண்டென்று சொல்லுகிறார்கள். கவர்ன்மெண்டாரும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. தர்க்காஸ்து நிலங்களுக்கு முதல் மிராசுதாரர்களைக் கேட்டு அவன் தனக்கு வேண்டியதில்லை என்றால், தர்க்காஸ்து தாரருக்குக் கொடுக்கிறதென்று உத்தரவு கொடுத்திருக்கிறதினாலேயே தெரிய வருகிறது. மேலான நேட்டிவ் உத்தியோகஸ்தர்கள் மிராசுதாரர்களிடத்தில் மிகவும் இஷ்டமுடையவர்களாக இருக்கிறபடியால், இந்த உத்தரவைக் கொண்டு அவர்கள் எதைக் கேட்டாலும் அதைக் கொடுக்கும்படியான காரணமாயிருக்கிறதுக்கு ஏதுவாயிருக்கிறது. மிராசுதார் பக்ஷத்தில் (சார்பாக) நேபாத் என்பவர் எழ கரஸ்பான்டென்சுகளைக் குறித்து எடிட்டர் சொல்லுகிறது என்னவென்றால், தற்கால ஸ்திதி முந்திய ஸ்திதியைப் போலல்ல. 100 முதல் 10000 வரும்படியுள்ள கிராம பீசுகள் இப்போது கிடையாது. இந்தக் காலத்தில் ஒரு பாயக்காரி ஒரு குடித்தனக்காரனுக்கு எதார்த்தமாகக் கொடுத்துக் கொண்டு வருகிறதென்ன என்றால், ஒரு காணி நிலத்தில் 100 அல்லது 120 மரக்கால் உற்பத்தியாகி, அதனுடைய விலை 24 ரூபாயாக இருந்தால், அதில்
ரூ அ பை
- நிலவரி 8 12 0
- மிராசுதாரனுடைய பீசு 1 0 0
- கிராம உத்தியோகஸ்தாள் 4 8 0
ஆக 14 4 0
பாயக்காரிக்கு மீறுகிறது 9 12 0
24 0 0
- எடிட்டர் தொடர்ந்து சொல்லுகிறது என்னவென்றால்:-
‘பாயக்காரி சினேகிதன் நியாயத்தோடு அனாதி கரம்புகளுக்கும் அல்லது பாயக்காரிகள் தங்களுடைய சொந்தத்தில் சாகுபடி செய்கிற நிலங்களின் பேரிலும் என்ன மிராசு பாத்தியம் உண்டென்று தர்க்கிக் கிறார். ஒரு மிராசு கிராமத்தில் நிலங்களைக் குறித்து முந்தி (முதலாவதாக கிராம மிராசுதாரர்களைக் கேட்டு அவர்கள் கழித்துப் போடுகிற நிலங் களைக் கவர்ன்மெண்டு பட்டாவின்பேரில் இதராளுக்குக் கொடுத்து வருகிறார்கள். அதிகாரிகளும் அவர்கள் பக்ஷத்திலிருக்கிறார்கள்.*(அவர்களுக்குச் சார்பாக இருக்கிறார்கள்.) ஆனால் இப்போது வழங்குகின்றதென்னவென்றால், கவர்ன்மெண்டு பாயக்காரிகள் மிராசுதாரர்கள் ஒப்பந்தமாக மிராசு சுதந்திரத்தைக் கட்டாமல் நிலத்தை யனுபவிக்கிறார்கள். பாயக்காரிகள் சொல்லுகிற பிரகாரம் தற்காலத்தி லிருக்கப்பட்ட மிராசுதாரர்களுடைய முன்னோர்கள் தங்களுடைய நிலங்களை நியாயமாய் அடைந்திருக்க மாட்டார்கள். இந்த மிராசு பாத்தியம் எந்த அநியாயத்தினாலேயோ நுழைக்கப்பட்ட போதிலும், அது வழக்கத்தினால் பெலப்பட்டுப் போச்சுது. நம்முடைய கரஸ்பாண் டென்ஸ் தான் சொல்லுகிறதை ரூபிக்கத் தொடரும்போது அவர் நியாயமாய் எழுதியிருக்கிறார். அவர் சொல்லுகிறது என்னவென்றால், பாயக்காரிகள் சாகுபடி செய்கிறதில் ஆகிற உற்பத்தியில், அவர்களும் அவர்களுடைய பெண்சாதி பிள்ளைகளும் மாடுகளும் சீவனம் செய்கிறதுக்கு 4 இல் 1 பங்குதான் பாயக்காரிக்குக் கிடைக்கிறது. அது எப்படியென்றால்:
ரூ அ பை
காணி ஒன்றுக்கு சராசரி கண்டு
முதல் சென்னப்பட்டண மரக்கால்
120-இதன் சராசரி விலை வராகன்
ஒன்றுக்கு மரக்கால் 9 ஆக 46 10 9
இதில் மிராசுதாரன்
எடுத்துக்கொள்கிற மேல்வார
மரக்கால் 78க்கு கிரையம் 30 5 6
கிராம ஊழியக்காரர்களுக்குச்
சுதந்திரம் 2 14 8
ஆக 33 4 2
நீக்கி பாயக்காரிகளுக்கு மீறுகிறது 13 6 7
இதில் விதை தானிய கிரையம் 1 2 0
மிராசுதாரர்கள் கொடுக்காத
கிராம ஊழியக்காரர்களான
வண்ணான் அம்பட்டனுக்குச்
சாப்பாடு 0 10 6
போக மீதி நிற்கிறது 11 10 1
நம்முடைய கரஸ்பான்டென்சு சொல்லுகிற பிரகாரம் பாயக் காரிகளுக்கு நஞ்சை நிலங்களைச் சாகுபடி செய்கிறதைவிட புஞ்சை நிலங்களைச் சாகுபடி செய்வதில் அதிகப் பிரயோசனம் உண்டு.
- 863 ஆம் வருஷம் நவம்பர் மாதம் 26 ஆம் தேதியில் ‘மதராசு டைம்ஸ்’ என்னும் பத்திரிக்கைக்கு அனுப்பிய ஒரு கரஸ்பாண் டென்சில் பாயக்காரி ஏஜெண்டு சொல்லுகிறதென்னவென்றால்:
மிராசு ஏற்பாட்டால் உண்டாகுகிற துன்பங்களினால் ஆயிரம் பத்தாயிரம் புருஷர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும் அதிக வருத்தத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள் என்றும், நூதனமான தர்காஸ்து றூல்களை (விதிகளை) ஏற்படுத்தும்படியான சங்கதி, அப்போது கவர்ன்மெண்டாருடையவும் ரெவின்யு போர்டாருடையவும் மறு யோசனையில் இருக்குதென்றும்; அப்போதிருந்த ஆக்டிங் கலெக்டர் இவைகளைக் குறித்துச் சில ஆட்சேபனைகள் செய்திருக்கிறார். ஆனால், அந்த ஆட்சேபனைகள் இன்னதென்று எங்களுக்குத் தெரியாது. மிராசுதாரர்கள் சாகுபடியைத் தடுக்கிறார்கள். அவர்களுடைய வேணுமென்கிற அசமந்தத்தினாலும் *(பொறுப்பு இன்மையாலும், சோம்பேறித் தனத்தினாலும்) மொரட்டு வயிராக்கியத்தினாலும் சர்க்கார் வரும்படிக்கு நஷ்டமுண்டாகும்படியாயும் குடிகளுடைய சவுக்கியத்திற்குக் குறைவு உண்பாகும்படியாயும் அனேகம் ஆயிரம் சாகுபடிக்கு லாயக்கான காணியுள்ள நிலங்களைக் கரம்பாகப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிகள் படுகிற வருத்தத்தை உண்மையாகவே மேலான அதிகாரிகள் நன்றாய் அறிந்திருக்கிறார்கள். இதைச் சவுக்கியப் படுத்துவதற்குத்தான் நேர்படுத்துவதற்கு அடிக்கடி உத்தரவுகள் பிறந் திருக்கின்றன. இந்த உத்தரவுகளை நிறைவேற்றினால் மிராசு பாத்தியம் என்கிற வழக்கு அற்றுப்போகும். ஆனால் (அதனால்) இந்த உத்தரவுகள் ஒன்றுமில்லாமல் போய்விட்டது’.
அந்தக் கரஸ்பாண்டென்சில் இதனடியிற் கண்ட கோர்ட் ஆப் டிரக்ட்டர்ஸ் களென்பவர்களுடைய உத்தரவும் இருக்கிறது. அதாவது புறக்குடிகள் கரம்பு நிலங்களுக்கு தர்க்காஸ்து கொடுத்தால், உள்குடிகளுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் சம்மதித்தால் தீர்வைக்காக சாமீன் வாங்கிக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கிறது.
- இதைக் குறித்து ரெவின்யு போர்டார் சொல்லுகிறது என்ன வென்றால்:
ரெவின்யு உத்தியோகஸ்தர்களை நடத்துவதற்கு இந்தக் கோர்ட் ஆப் டிரக்கட்டர்ஸ்களுடைய இந்தத் தீர்மானம் போதுமானதாய் இருக்குமென்று போர்டார் நம்புகிறார்கள். ஒரு கிராமத்தின் உள்குடிகள் தங்களை மிராசுதாரர்களென்று சொல்லிக்கொண்டாலும் சொல்லிக் கொள்ளாமல் போனாலும் அவர்கள் கரம்பு நிலங்களைச் சாகுபடி செய்யாமலும் அல்லது அதற்குத் தீர்வை செலுத்தாமலும் போனால் தர்க்காஸ்துதாரர்களை உள்ளூர்க் குடியின் கீழ்க்குடியாகச் செய்யாமல் அவனுக்குச் சாதாரணமான பட்டா கொடுக்கலாம். இப்பேர்க்கொத்த நிலங் களைத் தாங்களும் அனுபவியாமல், இதராளையும் அனுபவிக்க வொட்டாமல் கரம்பாக வைத்துக் கொண்டிருக்கும்படியான மிராசுதாரர்க ளென்று சொல்லப்பட்டவர்களுக்கு இதுவரைக்கும் உண்டாயிருக்கிறே வல்லமையை அடக்கிப் போட வேண்டியது.
- கவர்ன்மெண்டார் அவர்களுடைய 1859ஆம் வருஷம் சூன் மாதம் 18 தேதியின் உத்தரவில் மிராசுதாரர்கள் அவர்களுடைய எல்லா நிலங்களுக்கும் பூராதரந் தீர்வை கட்ட வேண்டிய தென்றும், அப்படிக் கட்டாவிட்டால் அவர்களுடைய நிலங்களை முழுவதும் இழந்துபோக வேண்டியது என்றும் கண்டிருக்கிறார்கள். இதே பிரகாரம் ரெவின்யு போர்டாரும் 1859ஆம் வருடம் சூன் மாதம் 18 ஆம் தேதியிலும், சூலை மாதம் ஆம் தேதியிலும் இரண்டு சர்க்குலர்கள் அனுப்பியிருக்கிறார்கள். செங்கற்பட்டு கலெக்டரும் 1859 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதியில் அதிகாரிகளுடைய அபிப்பிராயத்தைச் சாதாரணமாய் பகிரங்கப்படுத்தும்படியாய் இஸ்தியார் (அறிவிப்பு) போட்டிருக்கிறார்.
- இப்பேர்க்கொத்த கண்டிப்பான உத்திரவுகள் பிறந்தும் அவைகளை நிறைவேற்றவில்லை. கரம்பு நிலங்களுக்கு அனேகம் தர்க்காஸ்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை ஏன் மஞ்சூர் செய்யவில்லை? பாயக்காரிகள் கிராமத்தின் புறக்குடிகளாக இராமல் நிலத்தைச் சாகுபடி செய்து அதையனுபவிக்கிற பழைய உள்குடிகளாக இருக்கிறார்கள் இவர்கள் கரம்பு நிலங்களுக்கு தர்க்காஸ்து கொடுத்தால் மிராசுதாரரென்று சொல்லப்பட்டவர்களுடைய போராட்டத்தினால் அவர்களுக்குக் கிடைக்கிறதில்லை. சகல வல்லமையையும் உடைத்தான கவர்ன்மெண்டு தங்களுடைய கட்டளைகளைத் தங்களுக்குக் கீழான ரெவின்யு போர்டார் மூலமாக அனுப்பியும் அந்த உத்தரவுகளை நிறைவேற்றாமல் சர்க்கார் வரும்படிக்கு நஷ்டமாயும் குடிகள் சவுக்கியத்துக்கு மிகவும் குறைவாயும் மறைக்கப்பட்டிருக்கிறது (உத்தரவுகள்). இது ஆச்சரியமல்லவா? இந்தக் காரியங்களினுடைய நிலை 50 வருஷங்களுக்கு மேற்பட அதே ஸ்திதியில் இருக்க வேண்டிய காரணமென்ன என்று கண்டிப்பாய் விசாரிக்க வேண்டியது. மேற்சொல்லிய உத்தரவுகளை நிறைவேற்றினால் வழக்குக்கு இடமிருக்கமாட்டாது. இப்போதாவது ரெவின்யு போர்டார் தங்களுடைய முந்தின கட்டளைகளை அனுசரித்து, தர்க்காஸ்து ரூலை ஏற்படுத்தினால் சந்தேகமில்லாமல் செங்கற்பட்டு ஜில்லா ரயத்துக்கள் அவர்கள் படுகிற துன்பங்களிலிருந்து மீட்கப்படுகிறதும் அல்லாமல் சர்க்கார் வரும்படியும் வெகுசாய் விர்த்தியாகும்.
- ஏற்கெனவே சொல்லியிருக்கிற பிரகாரம் 1859ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதியில் செங்கற்பட்டு ஜில்லா கலெக்டர், ஜில்லா கெஜட்டில் விளம்பரப்படுத்தியிருக்கிறது என்னவென்றால், எவனாவது தன்னுடைய நிலங்களைக் குத்தகை(க்குக்) கொடுத்தால் அந்தக் குத்தகைக்காரனிடத்தி லிருந்து ஒரு உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டி யது. அப்படிப் பெற்றுக் கொள்ளாமல் குத்தகை(க்குக்) கொடுத்தால் அந்தக் குத்தகையை ரெவின்யு அதிகாரிகள் அங்கீகரிக்கமாட்டார்கள். இந்த ஏற்பாடானது தலைமுறை தலைமுறையாகப் பாயக்காரிகளுடைய அனுபோகத்திலும் வசத்திலும் இருக்கப்பட்ட நிலங்களுக்காவது அனாதி கரம்பி லிருந்து அவர்கள் திருப்பின நிலங்களுக்காவது சம்பந்தப்பட்ட தல்ல. ஆனபோதிலும் சில தந்திரமான மாறுபாடுகளினால் 1859 ஆம் வருடம் முதல் மிராசுதாரர்கள் பாயக்காரிகள் தலைமுறை தலைமுறையாகச் சாகுபடி செய்து வருகிற கைப்பற்று நிலங்களுக்கு உடன்படிக்கை தஸ்தாவேஜிகள் வாங்குகிறது மல்லாமல், 1859ஆம் வருஷத்திற்குப் பின்னிட்டுச் சாகுபடிக்கு லாயக்காகக் கொண்டுவந்த நிலங்களுக்கும் உடன்படிக்கை தஸ்தாவேஜிகள் வாங்குகிறார்கள். உண்மையாகவே மிராசுதா ரென்று சொல்லப்பட்டவர்களுக்கு இப்பேர்க்கொத்த தஸ்தா வேஜிகள் வாங்கும்படியான அதிகாரம் இல்லவே இல்லை. மிராசுதாரர்கள் சுகவாசிகளின் மீதில் சுமத்துகிற ஆயிரத்து ஒன்று அநியாயமான சுமைகளில் இது ஒன்று. 1802*(இது 1862 என்பது அச்சுப்பிழையாக 1802 என பதிப்பிக்கப்பட்டிருக்கலாம்.) ஆம் வருஷத்தின் 30 ஆவது ரெகுலேஷன் ஏற்பாட்டிருந்தும் பாயக்காரிகள் அனுபவிக்கிற வருத்தங்களும் துன்பங்களும் இவ்வளவென்று சொல்லி முடியாது. இந்த ரிகுலேஷனில் கண்டிருக்கிறதென்ன வென்றால், நிலபாத்தியஸ்தர்களுக்குப் பட்டாக்கள் கொடுக்க வேண்டியதென்றும் குடித்தனக்காரரிடமிருந்து முச்சிலிக்கை கள் வாங்கவேண்டியதென்றும் கண்டிருக்கிறது. ஆனால் செங்கற்பட்டு ஜில்லா கீழ்க்குடிகள் விஷயத்தில் நடந்ததேயில்லை. இந்தச் சட்டத்தில் ஒரு முக்கியமான ஏற்பாடு கண்டிருக்கிறது என்னவென்றால், நிலபாத்தியஸ்தாள் எந்த நாமதேன(ய)த்தைக் கொண்டாவது – எந்த சாக்கைக் கொண்டாவது யாதாமொரு நூதனமான வரியை ரயத்துக்களின் மீதில் சுமத்தக் கூடாதென்று கண்டிருக்கிறது. இப்படி சட்டத்துக்கு விரோதமாய் அக்கிரமமாய் வாங்கப்பட்ட தொகைக்கு மூன்றத்தனைய அபராதம் கொடுக்க வேண்டியதென்று ஏற்பட்டிருந்தபோதிலும், மிராசுதாரரென்று சொல்லப் பட்டவர்களால் பாயக்காரிகளிடத்திலிருந்து இப்பேர்க்கொத்த அக்கிரமமான வசூல்கள் நடக்குதென்பது சூரியன் கீழிருக்கிறவர் களுக்கு நூதனமான சங்கதியல்ல. பயமுறுத்தலாகச் சொல்லப் பட்ட இந்த மூன்றத்தனைய அபராதம் எப்போதாவது எங்கேயாவது நில பாத்தியஸ்தரென்று சொல்லப்பட்ட மிராசுதாரர்களிடத்தில் வசூல் செய்திருக்கிறதா? மிராசுதாரர்கள் கொடுக்கப்பட்ட கிஸ்தி சொற்பமாயிருந்தபோதிலும் நில விர்த்தி செய்கிறதுக்காவது உற்பத்தியை அதிக விலைக்கு விற்கிறதற்காவது இவர்களுக்கு யாதாமொரு பிரயோசனங் கிடைக்கும்படியாகத் தங்களுடைய நிலத்தைச் சீர்படுத்த அவர்கள் இன்னாள் வரைக்கும் சுண்டு விரலையாவது அசைக்கவில்லை. மிகவும் சவுக்கியமான காலங்களிலும் பூராத் தீர்வை அவர்களிடத்திலிருந்து வசூல் செய்யப்படவில்லை யென்கிற சங்கதி நன்றாய்த் தெரிய வருகிறது. ஆனால் இதற்கு விரோதமாக மிராசுதாரர்கள் தங்களுக்குக் கீழ்க்குடிகள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு ஒரு போதும் சொற்ப வசாவாவது கொடுக்கிறதில்லை. மிராசுதாரர்கள், மிட்டாதாரர்கள், இசாராதாரர்கள், சுரோத்திரியதாரர்கள் வகையறா என்று சொல்லப்பட்டவர்களுக்கு ஒரு போதும் சொற்ப வசாவாவது*(வரித் தள்ளுபடியாவது.) கொடுக்கிறதில்லை. மிராசுதாரர்கள், மிட்டாதாரர்கள். இசாராதாரர்கள், சுரோத்திரியதாரர்கள் வகையறா என்று சொல்லப்பட்டவர்கள் கவர்ன்மெண்டாரால் வசூல் செய்கிற தீர்வைக்கு அதிகமாகத் தங்களுடைய குடிகளிடத்தில் வாங்க அவர்களுக்கு யாதொரு நியாயமாவது அதிகாரமாவது எவ்வளவும் இல்லை. ஏனென்றால் அவர்கள் நிலத்துக்கு எகார்த்தமான பாத்தியஸ்தர்களென்று அங்கீகரிக்கப்பட வில்லை. அது எப்படி என்றால் அவர்கள் கொடுக்கப்பட்ட கிஸ்தி அவர்களுடைய வரும்படிக்கு எவ்வளவும் சமமாய் அல்லது ஈடாய் இருக்கவில்லை.
- கரம்பு நிலங்களைக் குறித்து 1864 ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் ஆம் தேதியில் பாயக்காரி ஏஜெண்டு அத்தினியம்*(Atheniam Daily) என்கிற பத்திரிக்கைக்கு எழுதிய லெட்டரில் அல்லது காகிதத்தில் சொல்லுகிறது என்னவென்றால்:
‘மிராசுதாரர்களென்று சொல்லப்பட்டவர்களால் பாயக்காரிகளுக்குச் செய்யப்பட்ட கொடூர அநியாயங்களை அனேகந்தரம் ‘மதராஸ் டைம்ஸ்’ என்னும் பத்திரிக்கையின் மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கிறேன்; நான் பரிஷ்காரமாய் எல்லா நிலங்களுக்கும் அரசனே பாத்தியனாய் இருக் கிறான் என்றும், அந்த நிலங்களின் பாத்தியம் கவர்ன்மெண்டாருடைய தென்றும் தெரியப்படுத்தியிருக்கிறேன். இதல்லாமல் பாயக்காரியின் ஏஜெண்டு இன்னம் தெரியப்படுத்தியது என்னவென்றால், மிராசுதாரர்கள் தங்களுக்கு உண்டென்று சொல்லப்பட்ட பாத்தியத்தைக் குறித்து கவர்ன் மெண்டார் மெௌனமாயிருக்கிறபடியால் உழைப்பாளிகளாகிய ஏழைப் பாயக்காரிகளை அதிக வருத்தத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கு கிறார்கள். மிராசுதாரர்கள் தர்க்காளஸ்து கொடுக்கப்பட்ட கரம்பு நிலங்களைக் குறித்துத் தங்களுடைய இஷ்டப் பிரகாரம் நடப்பித்துக் கொள்ளலாமென்று சிலவு (உரிமை) கொடுத்திருக்கிறபடியால், கவர்ன்மெண்டார் தங்களுக்கு வரப்பட்ட ரெவின்யுவில் அதிக நஷ்டத்தை அடைகிறதுமல்லாமல், நிலத்தை மப்பூர்த்தியாய்ச் சாகுபடி செய்கிற வனை அதிக நிர்ப்பாக்கியத்திலும் வருத்தத்திலும் அமிழ்த்துகிறார்கள். டைம்ஸ் எடிட்டர் எழுதிய சங்கதிகளினாலும், இந்த ஏழை காண்பித்த சங்கதிகளினாலும் போர்டாரும் கவர்ன்மெண்டாரும் நூதனமான தர்காஸ்து ரூல்களை ஏற்படும்படியாக நேரிட்டதென்று நான் துணிகர மில்லாமற் சொல்லமாட்டுவேன். (துணிந்து சொல்வேன்)’.
- இந்தச் சட்டங்களைக் குறித்துத்தான், நான் சிலதை கவனிக்கப் போகிறேன். உள்குடிகளென்கிறவர்களுக்கும் புறக்குடிகள் என்கிறவர்களுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. உள்குடிகள் என்கிறவர்கன் கிராமத்திலிருக்கப்பட்டவர்கள். புறக்குடிகள் வெளி கிராமத்திலிருக்கப்பட்டவர்கள். உள்குடிகளுடைய சம்மதியில்லாமல் புறக்குடிகள் கொடுக்கிற தர்க்காஸ்தை அங்கீகரிக்கக் கூடாது.
- உள்குடிகள் நான்கு வகுப்புகளாயிருக்கிறார்கள்.
- மிராசு பட்டாதாரர்கள்
- சுகவாசி பட்டாதாரர்கள்
- பட்டா இல்லாத சுகவாசிகள்
- நான்கைந்து வருஷத்துக்குள் கிராமத்தில் குடியேறின பாயக்காரிகள்.
- இவர்களெல்லாரும் உள்குடிகள் என்று அங்கீகரிக்கப்படு கிறார்கள். இவர்களில் ஒருவன் தர்காஸ்து கொடுத்தாமல் மற்றவர்களுடைய அனுமதி வேண்டியது அவசியமாயிருக்கின்றது.
- கவர்ன்மெண்டாருக்கு எப்போதுதான் அறிவு விளங்கும்? இவ் விதமாக நிலத்தை மனப்பூர்த்தியாய்ச் சாகுபடி செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இவ்விதமான தடங்கல் உண்டாயிருப்பதால் சாகுபடி நிலத்தில் லட்சத்தி ஐம்பதினாயிரம் முதற்கொண்டு இரண்டு லட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யாமலிருக்கிறது.
- 1864ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதியில் அத்தினியம் டெயிலி நியூஸ் என்னும் பேப்பரில் இதனடியிற்கண்ட சங்கதி பதியப்பட்டிருக்கிறது. ரெவின்யு போர்டாருடைய பிரோசி டிங்சுகளை கவர்ன்மெண்டார் ஆலோசனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த பிரோசிடிங்கிசில், கலெக்டர் பெயின் என்பவருடைய சிபாரிசின் பேரில், செங்கற்பட்டு ஜில்லாவின் ஏற்பாட்டைக் குறித்து ஆக்டிங் கலெக்டர் பான்புரி என்பவரும் சப் கலெக்டர் அட்சின்ஸ் என்பவரும் செய்த ஏற்பாடுகள் முக்கியமாகத் திருத்தப்பட்டிருக்கிறது. இப்படித் திருத்தப்பட்ட தென்னவென்றால், கவர்ன்மெண்டு தீர்வையைச் செலுத்தாமல் சோம்பேறித்தனமாக அல்லது வேண்டா வெறுப்பாகப் பாய்ச்சல் நிலங்களைச் சாகுபடி செய்யாமல் மிராசுதாரர்கள் சும்பாப் போட்டு வைத்துக் கொண்டிருக்கும்படியாக அவர்களுக்குக் கட்டுப்பாடில்லாமல் இளக்காரங் கொடுக்கிற சங்கதிதான். இதனால் கவர்ன்மெண்டாருக்கு வரும்படி நஷ்டமாகிறதும் அல்லாமல் மராமத்துக்காக அவர்கள் சிலவழிக்கின்ற பணத்துக்குப் பிரயோசனமில்லாமலும் போகின்றது. இதனால் நிலங்களைச் சாகுபடி செய்ய அனேகம் பேர் காத்துக் கொண்டிருந்தும் சாகுபடியாகாமல் விடப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் சீர்த்திருத்துகிறதை ஐசுவரியமும் வல்லமையும் உடைத்தான மிராசுதாரர்களாலும் ரெவின்யு நேட்டிவ் உத்தி யோகஸ்தர்களாலும் எதிர்க்கிறதுக்கும் தடுக்கிறதுக்கும் சுவாபீகமாக (சுயநல நோக்கோடு) இடமுள்ளதென்கிறதுக்கும் சந்தேகமில்லை. இந்தத் தீங்கு உண்டாயிருக்கிறதென்று போர்டார் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் அதைச் சீர்ப்படுத்துகிறதற்காகப் பிரயத்தனப்படுகிற உத்தியோகஸ்தர்களுக்கு போர்டார் போதுமான உதவி செய்யவில்லை என்று கவர்ன்மெண்டார் விசனத்தோடு கவனிக்கிறார்கள். கலெக்டர் பெயின் தெரியப்படுத்திய சங்கதியைக் குறித்த ரெவின்யு போர்டார் செய்த உத்தரவு, கவர்ன்மெண்டாருக்கு திருப்தியா யிருக்கவில்லை. போர்டார் இந்த சங்கதி யாவற்யும் மறு படியும் நன்றாய் யோசித்து கலக்டரும், சப் கலெக்டரும் தங்களுடைய பிரோசிடிங்சுகளை தெளிவாய்த் தெரியப்படுத்தும் படியாக அவர்களைக் கேட்க வேண்டியது அவசரமென்று கவர்ன்மெண்டார் அபிப்பிராயங் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சமாபந்தியினுடைய முடிவிலும் சீர்திருத்தலுக்கு இடமுண்டென்று கேள்விப்படுகிறது வாஸ்தவந்தான். இப்படி சீர்ப்படுத்துகிறதற்குக் கலெக்டர் பெயின் உத்தரவு கேட்டிருந் தால், ஜில்லா முழுமையிலும் கரம்பாகவிடப்பட்ட நஞ்சை நிலங்களுக்குச் சாதாரணமாய் வசாகொடுக்கும்படியாக அவர் சொல்லுகிற நியாயம் போதுமானதாயிருக்கவில்லை.
- இதைக் குறித்து பாயக்காரி ஏஜெண்டு அத்தினியம் டெய்லி நியூஸ் பத்திரிக்கைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
‘செங்கற்பட்டு ஜில்லாவில் நிலவரும்படி ஏற்பாட்டில் உண்டாகியிருக்கிற அக்கிரமங்களைகவர்ன்மெண்டார் கவனிக்க இறங்கினதைக் (தொடங்கினதை) காண சந்தோஷப்படுகிறேன். சர்க்கார் தீர்வையைச் செலுத்தாமல் பாய்ச்சல் நிலங்களை மிராசுதாரர்கள் சோம்பேறித் தனத்தினால் அல்லது வேண்டா வெறுப்பினால் சாகுபடி செய்யாமல் பீடாக*(வீணாக) வைத்துக் கொண்டிருக்கும்படியாய் இளக்காரங் கொடுப்பது, நியாயமான ஒழுங்கல்லவென்றும் கவர்ன்மெண்டார் ஒப்புக்கொள்கி றார்கள். இந்த நியாயமில்லாத ஒழுங்கினால் கவர்ன்மெண்டாருக்கு வரும்படி நஷ்டமாகிறதும் அல்லாமல். மராமத்து வேலைகளுக்குச் சிலவிடுகிற பணத்துக்கும் பிரயோஜனமில்லாமல் போகுதென்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இதனால் நிலங்களைச் சாகுபடிசெய்கிறதற்கு அனேக சனங்கள் காத்துக் கொண்டிருந்தும் நிலங்கள் சாகுபடி யில்லாமல் பீடாய்க் கிடக்கிறது. இதனால்தான் பாயக்காரிகள் வருத்த மடைகிறார்களென்று அனேக விசை (தடவை) தெரியப்படுத்தி யிருக்கிறேன். இப்படி பீடாகவிடப்பட்ட நிலங்களைச் சாகுபடி செய்கிற தற்கு அனேகமாயிரம் பாயக்காரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிராசுதாரர்களென்று சொல்லப்பட்டவர்களுடைய வயிராக் கியத்தினால் தடுக்கப்படுகிறார்கள். இவ்விதமாக, மாட்டுக் கொட்டாயி லிருந்த நாயைப் போலத் தாங்களும் சாகுபடி செய்யாமல், சாகுபடி செய்ய விரும்புகிறவர்களையும் செய்ய ஓட்டாமல் அநியாயமாய்த் தடுக்கிறார்கள். நூறு குடிகளிருந்தால் அதில் 99 பேர் சுகவாசி பாயக்காரிகளென்றும், ஒருத்தன் மிராசுதாரனென்றும் கியாபகத் துக்குக் கொண்டு வரவேண்டியது. பான்புரி துரையும், அட்சின்ஸ் துரைய ும் சமாபந்தி எற்பாட்டைக் குறித்துச் செய்த ஒழுங்குகளை ரெளின்யு போர்டார் ஒப்புக் கொண்டு காயப்படுத்தினதுண்டானால் சீர்த்திருத்துதல் நியாயமாய் நிறைவேறியிருக்கும்.’
- ஆக்டிங் கலெக்டரும், சப் கலெக்டரும் ஏற்படுத்திய ஏற்பாடு நியாயமென்பதற்கு இரண்டொரு திருட்டாந்தரங்களை அடியில் காண்பிக்கிறேன். திருவள்ளூர் தாலுக்கா பட்டரை பெரும்பூதூர் கிராமத்தின் மிராசுதாரர்கள் அவர்கள் சாகுபடி செய்யாத நஞ்சை நிலங்களுக்கு 1120 ரூபா வசா கேட்டார்கள்.
- சைதாப்பேட்டை தாலுக்கா குண்ணத்தூர் (குன்ளத்தூர்) கிராமத்தில் தண்ணிக்கால்களை குடிகளை மிராசுதாரர்கள் மராமத்துச் செய்யவொட்டாமல் 700 காணி நிலங்கள் கரம் பாய்க் கிடக்கிறது.
- இப்படி அனேகந் திட்டாந்தரங்களுண்டு. இதனால்தான் கவர்ன்மெண்டாருடையவும் ரெவின்யு போர்டாருடையவும் உத்தரவின் பேரில் பான்புரி துரையும், அட்சின்ஸ் துரையும் அவர்களுடைய ஏற்பாட்டைச் செய்தார்கள்.
- முரட்டுத்தனத்தினாலேயோ அல்லது வயிராக்கியத்தினா லேயோ ரெவின்யு போர்டார் அதை யோசிக்காமல் இன்னாள் வரைக்கும் ஒன்றும் முடியாமலிருக்கின்றது.
- இதே சங்கதியைக் குறித்து 1864 ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியில் பாயக்காரி ஏஜெண்டு மற்றொரு கடிதத்தை அத்தினியம் டெய்லி நியூஸ் பேப்பருக்கு அனுப்பினார். அதிலடங்கிய சங்கதியைச் சுருக்கமாய்க் காண்பிக்கிறேன். சாகுபடியாகாமலிருக்கப்பட்ட எல்லா நஞ்சை நிலங்களுக்கும் வசா கொடுக்க வேணுமென்று கலெக்டர் பெயின் கேட்டுக் கொண்ட விந்தையான ஏற்பாட்டைக் குறித்து கவர்ன்மெண்டார் அனுப்பிய மேற்சொல்லிய கட்டளை என்னமாய்ப் போய்விட்டது. திட்ட பஞ்சா நிலங்களுக்கு வசா கொடுக்கலாமோ கொடுக்கக் கூடாதோ என்கிற கேள்விகளுக்கு கண்டிப்பான உத்தரவு கொடுப்பது மிகவும் அவசியமாக இருக்கின்றது. கவர்ன்மெண்டாரால் அனுப்பப்பட்ட கட்டளைகள் கண்டிப்புள்ளதாக இருந்தபோதிலும் யூரோப்பியன் உத்தியோகஸ்தர் களை நேட்டிவ் உத்தியோகஸ்தர்கள் செய்யப்பட்ட மாறுபாடான தந்திரங்களினால் கட்டளைகள் பிரயோசனமில்லாமல் போய்விட்டன. இதனால்தான் சர்க்காருடைய நில வரும்படி நஷ்டப்படுகிறதென்றும், பாய்ச்சல் மராமத்துக்குப் போடப்பட்ட சிலவு பிரயோசனமற்றுப் போகுதென்றும் கவர்ன் மெண்டார் நியாயமான பிரகாரம் சொல்லியிருக்கிறார்கள்
- மேற்சொல்லிய இரண்டு நஷ்டங்கள் அல்லாமல் சாகு படிக்குக் கொண்டுவராத அனேக ஆயிரங் காணி கரம்பு நிலங்கள் மேற்படி ஜில்லாவிலிருக்கிறதை கவர்ன்மெண்டார் யோசிக்காமல் இருக்கிறார்கள். இந்த நிலங்களை மோசடி யாக அனாதி கரம்பு என்று சொல்லுகிறார்கள். மிராசு தாரர்கள் பாயக்காரிகளை ஒடுக்குகின்ற ஒடுக்கத்தினால் அவர்களும் அவர்கள் ஏழைச் சமுசாரங்களும் வேறே சீவனத்தின் வழியில்லாமல் இந்த அனாதி கரம்பு என்ற சொல்லப்பட்ட நிலத்துக்கு தர்காஸ்து கொடுத்துக் கேட்ப தினால் மிராசுதாரர்களுக்கு கீழ்க்குடிகளில்லாமல் போவார் கள் என்கிற பயத்தினால், அதைத் தடுத்துத் தாங்களே தர்காஸ்து நிலங்களைச் சாகுபடி செய்கிறோம் என்று ஒப்புக் கொண்டு அதைக் கிஞ்சிற்றுக் காரமாவது (ஒரு சிறிதும்) சாகுபடி செய்கிறதில்லை.
- இதைவிட கவர்ன்மெண்டாரும் நிலத்தை எதார்த்தமாகச் சாகு படி செய்கிறவர்களும் படுகிற பொரிய நஷ்டம் என்னவென்றால், துரைத்தனத்தாருடைய விருத்தியாகப்பட்டது, குடித்தனக்கார ருடைய சவுக்கியத்தைச் சார்ந்திருக்குமே ஒழிய வேறல்ல குடிகள் வருத்தப்பட்டால் துரைரைத்தனம் அழிந்துபோகும். மேற்சொல்லியிருக்கிற பிரகாரம் செங்கற்பட்டு ஜில்லாவில் 100 பேரில் 99 பேர் பாயக்காரி சுகவாசிகளாக இருக்கிறார்கள். மிராசுதாரர்களுடைய போராட்டமும் வம்பும்தும்பும் இல் லாமல் நிலங்களை சாகுபடி செய்கிறதுக்கு அவர்கள் எவ்வளவு இஷ்டங்கொண்ட போதிலும், மேற்சொல்லிய காரணங்களி னால் அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். தர்க்காஸ்து நிலங்களை மிராசுதாரரென்று சொல்லப்பட்டவர்கள் தாங்கள் சாகுபடி செய்கிறதாக ஒப்புக்கொண்டு சாகுபடி செய்யாமல் போனால் கட்டாயமாக அவர்களிடத்தில் பூராத்தீர்வை வாங்கவேண்டியது.
- ஆனால் கவர்ன்மெண்டார் தங்களுடைய கீழான உத்தியோ கஸ்தர்களுடைய தப்பிதமான நடத்தையினால் இப்பேர்க் கொத்த நஷ்டத்தை அடைய மனதுள்ளவர்களாக இருக்கிறார்க ளென்று தோற்றப்படுகிறது (தோன்றுகின்றது).
- இதன்றி மற்றொரு நஷ்டம் இருக்கின்றது. அது என்னவென்றால் மிராசுதாரர்கள் வேணுமென்று சாகுபடி செய்யாமல் விடப்பட்ட சாகுபடி நிலங்களைப் பாயக்காரிகள் சாகுபடி செய்ய விருப்பம் உள்ளவர்களாக இருந்தபோதிலும் அவர்களுக்குக் கிடைக்கவொட்டாமல் செய்கிறது. அந்த நிலங்களைச் சாகுபடி செய்யப் பாயக்காரிகள் கேட்கிற ஏற்பாடுகள் என்னவென்றால்:
- மேற்சொல்லிய நஞ்சை நிலங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் பாய்ச்சல் இருந்தாலும் இல்லாமல் போனாலும் நஞ்சை தீர்வையைப் பூராவாய்க் (முழுதும்) கட்டசித்தமாயிருக்கிறார்கள். அப்பேர்க்கொத்த நஞ்சை நிலங்களுக்கு ஆற்றுப்பாய்ச்சல் அல்லது ஏரிப்பாய்ச்சல் இல்லாமல் போனாலும் புஞ்சை சாகுபடி செய்து பளுவான நஞ்சை தீர்வையைக் கட்ட சித்தமாயிருக்கின்றார்கள்.
- முதலில் புஞ்சை சாகுபடி செய்து நஞ்சை பூராதீர்வை கட்டிப், பின்பு கிணறெடுத்து மடிப்பு நஞ்சை சாகுபடி செய்தால் அதற்கு நஞ்சை தீர்வையில் பாதித் தீர்வை கட்டுகிறோமென்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
- இவ்விதமாக கவர்ன்மெண்டாருக்கு நஷ்டம் சம்பவிக்கும் போது தங்களுடைய அதிகாரத்தை நிறைவேற்றும்படியாக கீழ் உத்தியோகஸ்தர்களை ஏன் பலவந்தப்படுத்தவில்லை? கவர்ன் மெண்டாருடைய உத்தரவை அசட்டை செய்வது இகக்ஷி (இகழ்ச்சி) யான காரியமல்லவா? இதைக் குறித்து கவர்ன் மெண்டார் கீழ் உத்தியோகஸ்தர்களை ஏன் விசாரணை செய்யவில்லை?
- மேற்சொல்லிய கட்டளைகளை எழுதியனுப்புவதில் அனேக தஸ்தா*(20 குயர் கொண்ட எழுதும் தாள். (Writing Paper)) கடுதாசிகள் சிலவழிந்திருக்கின்றது. அந்தக் காகிதங்களினுடைய கிரையமும் அதைப் பேர்த்து எழுதுகிற ரைட்டர்களுடைய (Writers) சம்பளமும் சொற்பமாயிருந்த போதிலும், கவர்னருக்கும் அவருடைய ஆலோசனை சங்கத்தாருக்கும் ரெவின்யு போர்டாருக்கும் கொடுக்கப்பட்ட சம்பளம் ஏழைகளிடத்தில் வசூல் செய்யப்பட்ட பெருந்தொகையாக இருக்கின்றது. செங்கற்பட்டு ஜில்லாவில் வரப்பட்ட வரும்படிக்கு மாத்திரம் இவர்களுடைய சம்பளத்துக்கு இவர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்களாயின் இந்தக் காரியங்களைக் குறித்து இவ்வளவு அசமந்தமாயிருப்பார்களா? அல்லது மிராசுதாரர்களென்று சொல்லப்பட்டவர்கள் வேணுமென்று கரம்பாக விடப்பட்ட நிலங்களுக்கு வருஷவாரி கொடுத்து வருகிற பெருந்தொகையான வசாவைக் கொடுப்பார்களா?
- தர்காஸ்து சங்கதியைக் குறித்து 1867 ஆம் வருஷம் ஏப்பிரல் மாதம் 19 ஆம் தேதியில் அத்தினியம் டெய்லி நியூஸ் என்னும் பத்திரிக்கைக்கு பாயக்காரி ஏஜெண்டு எழுதிய லெட்டரில் சொல்லுகிறதென்னவென்றால் :
சாகுபடி செய்யாமல் கரம்பாய் விடப்பட்ட எல்லா நிலங்களும் தர்க்காஸ்து தாரர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று ரெவின்யு போர்டார் 1862 வருஷத்தில் கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள். இதை அனுசரித்து நிர்ப்பாக்கியர்களாக இருக்கப்பட்ட அனேக பாயக்காரி சுகவாசிகள் தர்காஸ்து கொடுத்தார்கள். ஆனால் மிராசுதாரர்களென்று சொல்லப்பட்டவர்கள் கவர்ன்மெண்டானாமா மூலமாய்ச்செய்து வந்த மோசத்துக்கு இடமில்லாமல் போகுமென்று அறிந்து, இவைகளைத் தடுத்தார்கள். மிராசுதாரர்கள் மாத்திரமல்ல, சாகீர்தாரர்களும், சுரோத்திரியதாரர்களும், மிட்டாதாரர்களும் பாயக்காரிகளால் கொடுக்கப்பட்ட தர்க்காஸ்துகளைத் தங்களால் இயன்ற மட்டும் தடுக்கிறார்கள். இதனால் தர்க்காஸ்து கொடுக்கப்பட்ட விஸ்தாரமான நிலங்கள் சாகுபடியாகாமல் கிடக்கின்றது.இந்த நிலங்களை மிராசுதாரர் களுக்குக் கொடுத்தும் அவைகளைச் சாகுபடி செய்யாமல் சாகுபடி செய்தோமென்றும், சாகுபடி சாவியாய்ப் போய்விட்டதென்றும் பொய்யைச் சொல்லி அனேகமாயிரம் காணிகளுக்கு வசா பெற்றுக் கொள்கிறார்கள்.|
- இந்த தர்க்காஸ்து நிலங்களை மிராசுதாரர்களுக்கே கொடுத்த போதிலும் அவர்கள் அதை முதல் வருஷத்திற்கு மாத்திரம் சாகுபடி செய்து பின்பு கரம்பாகவே போட்டு வைக்கிறார்கள். இந்த நிலங்களைப் பாயக்காரிகளுக்குக் கொடுத்தால் அவர்கள் ஒருபோதும் அப்படிச் செய்யயாட்டார்கள்.
- 1867ஆம் வருஷம் ஏப்பிரல் மாதம் 17ஆம் தேதி அத்தினியம் டெய்லி நியூஸ் என்னும் பத்திரிக்கையில் அடியிற்கண்ட பிரகாரம் பாயக்காரிகள் கடவுள்களை நோக்கிச் செய்த பிரார்த்தனை பதியப்பட்டிருக்கிறது.
‘செங்கற்பட்டுஜில்லா பாயக்காரிகளாகிய நாங்கள், கோடானகோடி செனங்கள், மிராசுதாரர், சுரோத்திரியதாரர், மிட்டாதாரர் என்கிறவர்களுடைய ஒடுக்குதலினால் அடைகிற துன்பங்களைக் குறித்து இரத்தக் கண்ணீரோடு பரமபதத்திலிருக்கும் பரந்தாமன் அல்லது சர்வ வல்லமையுடைய வாசுதேவனை நோக்கி முறையிடுகிறதென்ன வென்றால்: எங்கள் பில(பல) மெல்லாந் தளர்ந்து போய்த் தரையின் பேரில் நகருகிறோம். எங்களுடைய துக்கங்களைக் குறித்து பிட்டீசன் மூலமாயும், பேப்பர் மூலமாயும், 1861ஆம் வருஷம் முதல் அனேகந் தடவை எங்களுடைய பிதாக்களாகிய துரைத்தனத்தாருக்குத் தெரியப்படுத்தியும் எங்கள் துன்பங்கள் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. இப்போ உயரத்தில் இருக்கின்ற கர்த்தனிடத்தில் எங்கள் அப்பீல் கிடக்குது. நீர்தான் சோதோங் கொமாரா யென்னும் பட்டணங்களின் குடிகளைஅக்கினி கந்தகத்தினால் அழித்தீர். துரோபதையை அவமானப்படுத்தியதுரியோதனனையும் கெஜேந்திர னைப் பிடித்துக் கொண்ட முதலையையும் கொன்று அவர்களை இரக்ஷித்தவர் நீர்தான். மனிதனுடைய பிரயோசனத்துக்காக முந்தி சகலத்தையும் சிருஷ்டித்துப் பின்பு எங்களுடைய ஆதித் தாய் தகப்பனைச் சிருஷ்டித்ததை மறந்துவிட்டாயா? மனுஷனுடைய நன்மைக்காக பஞ்ச பூதங்களாகிய பிரிதிவி, அப்பு, வாயு, தேயு ஆகாயத்தைச் சிருஷ்டித்தீர். இவைகளைத் தங்களுடைய கட்டளை யின் பிரகாரம் எல்லா மனிதராலும் பெர்துவில் அனுபவிக்கப்படுகிறது. நிலங்களைச் சாகுபடி செய்தவர்கள் அவர்களுடைய நெற்றி வேர்வையினால் உபயோகமான உற்பத்திகளைச் செய்து, தங்களைக காக்கும் அரசர்களுக்கு அதில் ஒரு பாகத்தை மேல்வாரமாகக் கொடுத்தார்கள். மனுசாஸ்திரத்தில் கிணறு, குளம், ஆறு இவைகளின் சலம் சகலருக்கும் பொதுவென்றும், காட்டி லிருக்கப்பட்ட மான்களை எய்த வேடர்கள் அனுபவிக்க வேண்டு மென்றும், அனாதி கரம்புகளைத் திருத்தினவர்கள் நிலத்தை அனுபவிக்க வேணுமென்றும் கண்டிருக்கிறது.இப்படிச் சொல்லியிருக்க நிலங்களைத் திருத்திச் சாகுபடிக்குக் கொண்டு வந்து தீர்வை, மேரை முதலானவை செலுத்தப்பட்ட எங்களை மிராசுதாரர்களுடைய பக்ஷத்தில் உட்படுத்துகிறது நியாயமா? நெற்றி வியர்வையினால் மனிதன் பிழைக்க வேண்டியது என்று எங்களுடைய ஆதித் தாய் தகப்பனாருக்கு இட்ட கட்டளை அது சாபமோ, ஆசீர்வாதமோ கொடுத்தீர்கள். அதே பிரகாரம்தான் நாங்களும் எங்கள் பெண்சாதி பிள்ளைகளும் கஷ்டப்படுகிறோம். ஆனால் எங்களுடைய கஷ்டத்தின் பலனை எங்களை அனுபவிக்கவொட்டாமல் முழுமையும் திருடிக்கொள் கிறார்கள். நாங்கள் படுகிற அதிக துன்பத்தைக் குறித்து எங்களுடைய ராணியவர்களுக்கு ரூபி (உருவில்)லாவது சொப்பனத்திலாவது. நினைவிலாவது ஏன் நீர் தெரிசனையாகவில்லை? எரிகிற முட்புதரில் மோசேயிக்கு நீர் தெரிசனையாகவில்லையா? சீனா (சினாய்) பர்வதத்தின் மீது அவருக்குப் பிரத்தியக்ஷமாகி இரண்டு கற்பலகை களைக் கொடுக்கவில்லையா? ஏழு வருஷம் செழும்(செழிப்)பாயும் ஏழு வருஷம் பஞ்சமாயும் இருக்குமென்று யோசேப்பைக் கொண்டு பார்வோன் அரசனுக்குத் தெரியப்படுத்தவில்லையா? இதனால் எகிப்து தேசத்தார் காப்பாற்றப்படவில்லையா? கன்னி மரியாளுக்குப் புருஷனாக நியமிக்கப்பட்ட யோசேப்புக்கு உன்னுடைய தூதரை யனுப்பி சொப்ப மூலமாக ஏரோதையின் குரூரமுள்ள கொலைபதக எண்ணத்தைத் தெரிவிக்க வில்லையா? ஏரோதையைக் காணாமல் மற்றொரு வழியாகப் போகும்படியாய் அதே பிரகாரம் சாஸ்திரிகளுக்குத் தெரியப்படுத்தவில்லையா? மிராசுதாரர்களாலும் இதரமான கொடூர்களாலும் நாங்கள் அடையப்பட்ட அநியாயத்திலிருந்து எங்களை இரக்ஷிக்கும்படியாக எங்களுடைய ராணியின் மனதில் பதியவைக்கும்படியாகச் சர்வவல்லமையுள்ள பிதாவாகிய உம்மை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.’
- 1866ஆம் வருஷம் அக்டோபர் 31 ஆம் தேதியில் பாயக்காரி ஏஜெண்டு அத்தினியம் டெயிலி நியூஸ் என்னும் பேப்பருக்கு எழுதிய லெட்டரில் தெரியப்படுத்துகிறது என்னவென்றால் :
‘இசாரா கிராமங்களில் இருக்கப்பட்ட ரயத்துக்களுக்கு நபாகதி பட்டாக்கள் கொடுக்கவேண்டியதென்று கவர்ன்மெண்டார் தயவு செய்து உத்தரவு கொடுத்திருந்தாலும், கிராமத்தார் அப்படி நபாகதி பட்டாக்கள் கொடுக்கவொட்டாமல் பரிபூரணமாய்த் தடங்கல் செய்திருக்கிறார்கள். மேலும் கிராம உத்தியோகஸ்தர்கள் அனுபவிக்கிற மானிய நிலங்களை அமானி*(மானியம் அல்லாதது (மானி-மானியம்)) (மானிய நிலம் என்பதை ரத்து செய்து) செய்து அவர்களுடைய உத்தியோகத்துக்காக ரொக்கச் சம்பளம் கொடுக்க வேண்டியது என்று உத்தரவு பிறந்திருக்கிறது. ஆனால் யோசனை செய்ய வேண்டியது என்னவென்றால், அப்படிச் சொல்லப்பட்ட மானிய நிலங்கள் ஆதி முதற்கொண்டு அனாதி பஞ்சராய்க் கிடந்த நிலத்தைத் திருத்திச் சாகுபடி செய்தவர்களுடைய சந்ததியார் (இப்பொழுது) சாகுபடி செய்து கொண்டு வருகிறவர்கள் மானியதாரனென்று சொல்லப் பட்டவர்களுக்கு மேல்வாரம் கொடுத்துக் கொண்டு, குடிவாரம் மாத்திரம் அனுபவித்து வந்தார்கள் ஆகையால் ரயத்துகள் நிலபாத்தியஸ்தர்களாயிருக்கிறபடியினால் பரிஷ்காரமாய் மானியமென்று சொல்லப்பட்ட நிலங்கள் அவர்களுடைய பேரில் தாக்கல் செய்ய வேண்டியது அகத்தியமாயிருக்கிற தல்லவா’.
- செங்கற்பட்டு ஜில்லாவில் உண்டாகியிருக்கிற கருப்பின் (பஞ்சத்தின்) காரணத்தைக் குறித்து இதனடியிற் கண்ட லெட்டர் 1866 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி யில், அத்தினியம் என்னும் பேப்பரில் வெளியிடப்பட்டது.
- (அக்கடிதம்) அடிக்கடி இந்தியாவில்- முக்கியமாகத் தென்னிந்தியாவில் சம்பவிக்கின்ற கருப்புக்குக் காரணம் என்னவென்றால், நிலங்கள் மொத்தப் பட்டாவின் பேரில் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் ஐசுவரியமுள்ள மிராசு தாரர்கள் காரியத்தின் அனுபோகத்தை அறிந்தவர்களாக (எப்படிக் காரியத்தை சாதித்துக் கொள்வது என்பதை) இருக்கிற படியினாலும், பணத்தினால் கச்சேரியில் அவர்களுக்கு உண்டாகியிருக்கிற வலிமையினாலும், சட்ட ஒழுங்குகளை நன்றாய் அறிந்தவர்களாயும் இருக்கிறபடியால் ரயத்துகளுக் குடைய நிர்பாக்கியமுள்ள ஸ்திதியை அறிந்து நாளுக்கு நாள் அவர்களுடைய நிலங்களைப் பறித்துக் கொள்ளுகிறார்கள். இதனால்தான் கிராமங்கள் முழுமையும் அவர்களுடைய சுவாதீனத்தில் அகப்பட்டுக் கொண்டு பயிரிடும் குடிகள் அவர்களுடைய சாகுபடியில் சொற்பப் பாகத்தை அடைந்து, சீவனத்துக்கு வேறே வழியில்லாமல் இருக்கிறபடியினால், இதோடு திருப்தியடைந்து இருக்க வேண்டியதாயிருக்கிறது. இவ்விதமாக ஒவ்வொரு மிராசுதாரர்களும் பதினைந்து இருபது கிராமங்களை அபகரித்து மிராசு என்கிற நாமதேயத்தைக் கொண்டு அவைகளை அனுபவித்து வருகிறார்கள். சுரோத் திரியங்களிலும் அப்படியே நடந்தேறி வருகிறது. அநியாய மாயும் மோசடியாயும் அடையப்பட்ட மிட்டா, மிராசு, சுரோத்திரியம், சாகீர் முதலானவைகளில் ஜில்லா முழுமையும் மூழ்கியிருக்கிறது. ஆறுலக்ஷம் ரயத்துக்களும் அதிக நிர்ப்பாக் கியத்திலிருக்கிறார்கள். மிகவும் சவுக்கியமான காலங்களில் கூட நஞ்சை சாகுபடிக்கு 4 இல் 1 பங்கில் குறைந்து அவர்களுக்குக் கிடைக்கிறபடியால், அவர்கள் அதிகக் கஷ்ட சீவனம் செய்கிறார்கள். இந்த 4 இல் 1 பங்குகூட அவர்களுக்கு நெல் லாகக் கொடாமல் கேழ்வரகு முதலான புஞ்சை தானியத்தைக் கொடுத்து நஞ்சை தானியத்தை அவர்கள் (மிராசுதாரர்கள்) எடுத்துக் கொள்கிறதுமல்லாமல், புஞ்சை தானியத்திலும் முக்கியமான பாகத்தை அபகரித்துக் கொள்கிறார்கள்.
- இப்படித் தானியம் சேகரப்படுத்திக் கொண்ட மிராசுதாரர்கள் தொகையில் (எண்ணிக்கையில்) கொஞ்சம் பேராயிருக் கிறார்கள். இவர்களும், சென்னப் பட்டணத்திலிருக்கப்பட்ட வர்த்தகர்களும் அதிக நேசமான படியினாலே, அவர்களால் காலமறிந்து தானியத்தை விலை குறைத்து விற்றுக்கொள் கிறார்கள் (ஒரு வராகனுக்குக் குறைந்த அளவு தானியமே விற்கவேண்டிய காலக்கட்டம் அறிந்து, குறைந்த தானியத்திற்கு அதிக விலை பெறுகிறார்கள்). இதுவல்லாமல் ஐசுவரியமுள்ள மிராசுதாரர்கள் சென்னப் பட்டணத்தில் நெல் வராகன் ஒன்றுக்கு ஐந்து மரக்காலாகக் குறைகிற பரியந்திரம் தானியத்தை விற்காமல் சும்மா வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குத் திருட்டாந்தரமாகச் சென்ற 14 வருஷகாலமாய் மழை பேய்ந்து சவுக்கியமாய் இருக்கிறபடியால், திட்ட பஞ்சருக்கு வசா கொடுக்க மாட்டோமன்று கட்டளை பிறந்திருந்தும் விஸ்தாரமான நிலங்கள் சாகுபடியாகியும் அனேக தர்க்காஸ்து நிலங்களை காயமாயும் இருந்தபோதிலும், வராகன் ஒன்றுக்கு நெல் 4 மரக்கால் முதற்கொண்டு ஏழு மரக்காலுக்கு உயர்ந்து விற்கவில்லை. அதற்கு முன்னயோ 15 முதற்கொண்டு 20 மரக்கால் வரைக்கும் விற்றது. இவ்விதத்தினால் ஐசுவரியமுள்ள மிராசுதாரர்களாலும் வர்த்தகர்களாலும் பட்டணத்திலிருக்கிற ஏழைக்குடிகளும் அதிகச் சிறுமையை அடைகிறார்கள்.
- இதைச் சீர் செய்யும் பெருட்டாக ஒவ்வொரு குடித்தனக் காரனும் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் பட்டாவை அவனுக்குக் காயப்படுத்த வேண்டியதும் அல்லாமல், அதை அவனும் அவன் பெண்சாதி பிள்ளைகளும் அனுபவிக்கும் பொருட்டாகச் செய்வித்தால், ஒவ்வொரு ரயத்துகள் தன் நிலத்தைச் சாகுபடி செய்து விருத்தி செய்து அவர்கள் அனுபவிக்கிற தானியம்போக மிகுதியைக் கிறையப்படுத்திப் போடுவார்கள்
- இந்த ஏற்பாட்டை அங்கீகாரித்துத்தான் 1861-ஆம் வருஷம் முதல் நாளது வரைக்கும் (1872 வரை) நான் கவர்ன்மெண்டாருக்கு அனேக பிட்டீசன் எழுதிக் கொண்டதும் அல்லாமல், ராஜதானி பேப்பர்களிலும் அனேகம் லெட்டர்களும் எழுதியிருக்கிறேன். மதராஸ் டைம்ஸ் என்னும் பேப்பர் 1863ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 11 தேதியிலும், அதற்கு முன்னிட்டும் பின்னிட்டும் என்னால் கொண்டுவரப்பட்ட சங்கதிகளாகிய,
- மிட்டாதாரர்களும் மிராசுதாரர்களும் சுரோத்திரியதாரர்களும் கொள்ளையடித்திருக்கிறதும்;
- நிலத்தை எதார்த்தமாகவே சாகுபடி செய்கிறவர்களுக்கு உண்டாகிய நஷ்டமும்;
- கவர்ன்மெண்டாருக்குக் கிடைக்கவேண்டிய வரும்படியில் தங்களுக்குண்டாகிய நஷ்டத்தையும் அனுசரித்துப் பேசியிருக்கின்றது.
- ஒவ்வொரு குடித்தனக்காரனும் சாகுபடி செய்கின்ற கைப்பற்று நிலங்களை அவன் வசமாகச் செய்து கவர்ன்மெண்டாருடைய கட்டளையின் பிரகாரம் பாயக்காரி பட்டாக்களுக்கும், மிராசு பட்டாக்களுக்கும் வித்தியாசஞ் செய்யாமல் தர்க்காஸ்து நிலங்களை மிராசுதாரர்களை முந்திக்கேளாமல் தர்க்காஸ்து தாரர்களுக்குக் கொடுத்தால், இப்பேர்க்கொத்த கருப்புக்காலம் (பஞ்சக்காலம்) நேரிடுகிறது அபுரூபமாயிருக்கும் (அபூர்வமா யிருக்கும்).
- 1866 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியில் பாயக்காரி ஏஜெண்டு டைம்ஸ் என்னும் பேப்பரில் பதித்த லெட்டரில் சொல்லுகிறதென்னவென்றால் :
‘1863ஆம் வருஷம் முதல் இதுவரைக்கும் மிராசுதாரர்களுக்கும், சுகவாசி பாயக்காரி என்கிறவர்களுக்கும் உண்டாகிய பெரிய போராட்டத்தைக் குறித்து நான் எழுதின லெட்டர்களைத் தாங்கள் அனுசரித்து, செங்கற்பட்டு ஜில்லா குடிகள் கேட்டுக் கொண்ட பிரகாரம் மிராசுதாரர்களுக்கும் பாயக்காரிகளுக்கும் இருக்கப்பட்ட வாக்கு வாதத்தை விசாரணை செய்து, பரிஷ்காரஞ் செய்ய ஒரு கமிஷனரை ஏற்படுத்த வேண்டியது என்கிறதை நீர் சிபாரிசு செய்த பிரகாரம் அப்படியே ஒரு கமிஷனரை ஏற்படுத்தப்பட்டது உண்டானால், செங்கற்பட்டு ஜில்லாவின் குடித்தனக்காரர்கள் அனுபவிக்கிற சிறுமையில் மிச்சமான பாகம் நீங்கி இருக்கும். இப்போதாவது ரெவின்யு சர்வே டிபார்ட்மெண்டு ஏற்பட்டிருக்கிறபடியால் பாயக்காரி சுகவாசிகளுடைய பாத்தியங்களை யோசனைக்குக் கொண்டுவந்து டிமார்கேஷன் டிபார்ட்மெண்டு தலைவர்களோடு பான்புரி துரை யையும், அட்சின்ஸ் துரையையும் கமிஷனர்களாக ஏற்படுத்தினால் நீதி கிடைக்கும். கனவான்களும் இந்த ஜில்லாவில் கலெக்டர்களாக மேற்சொல்லின இரண்டு கனவான்களும் இந்த ஜில்லாவில் (பேரும்) இருந்தபடியாலும் இந்த ஜில்லாவின் ரெவின்யு சங்கதிகளை நன்றா யறிந்திருப்பதாலும், அவர்களைவிட வேறே தகுதியானவர்களை நேமிக்கக் கூடாமையாயிருக்கும். நேட்டிவ் உத்தியோகஸ்தர்களில் திருப்போரூர் டிப்டி தாசில்தார் இரத்தினசபாபதி முதலி, திருப்பாச்சூர் தாலுக்கா முன்ஷிப் செல்லப்பநாய்க்கர், காஞ்சீபுரம் தாலுக்கா முன்ஷிப் மதுரை வீராசாமிபிள்ளை இவர்கள் மிகவும் அனுபோகசாலிகளாயும் நம்பத்தக்கனவர்களாயும் இருக்கிறபடியால், அவர்களை ஒத்தாசை கமிஷனர்களாக ஏற்படுத்தலாம். இது அனேகம் ஆயிரம் குடிகளுடையவும் அவர்கள் பெண்சாதி பிள்ளைகளுடையவும் சவுக்கியம் சார்ந்த முக்கியமான சங்கதியாயிருக்கிறது.’
- இந்த லெட்டர்களில் பாயக்காரிகள் தெரியப்படுத்தியது என்னவென்றால், தாங்கள் தீர்வையாய்க் கட்டுகிற ஆயிரம் கிராமத்தில் நஞ்சையில் முதல் போகம் கேழ்வரகு சாகுபடி செய்து இரண்டாவது போகம் நெல் சாகுபடி செய்கிறார்கள் என்றும், மற்ற நாலாயிரம் கிராமங்களில் மிராசுதாரர்கள் மேல்வாரத்தில் நஷ்டம் அடைவார்கள் என்னும் பயத்தினால் கேழ்வரகு. கம்பு முதலானது சாகுபடி செய்ய வொட்டாமல் நெல்லையே சாகுபடி செய்யவேணுமென்று பலவந்தப்படுத்துகிறார்கள். ஆகி முதல் தரவாரிப் பட்டாக் கொடுக்கிறபோது மிராசுதாரர்கள் பாயக்காரிகளை மோசஞ்செய்து, தங்கள் பேரால் மொத்தப்பட்டா பிறப்பித்துக் கொண்டு சாஸ்தி வாரம் அவர்களிடத்தில் வாங்குகிறார்கள். மிராசுதாரர்கள் சொல்லு கிறது என்னவென்றால், இந்த வருஷம் நிலங்களைச் சாகுபடி செய்வதற்குச் சக்தியில்லாமல் இருந்தாலும் அவர்கள் ராசிநாமா கொடுத்த பிற்பாடுதான் பாயக்காரிகள் அந்த நிலங்களுக்குத் தர்க்காஸ்து கொடுக்கக் கூடும். இதனால் சம்பவிக்கிற கேடு என்னவென்றால் மிராசுதாரன் நூறு காணிகளை ராசிநாமா கொடுத்து அந்த நூறு காணிக்குப் போடுகிற எருவை 50 காணிக்குப் போட்டு உபயோகப்படுத்திச் சாகுபடி செய்கிறான்.
- 1865ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி அத்தினியம் பேப்பரில் கவர்ன்மெண்டாருடைய கண்கள் இப்போது திறக்கப்பட்டதென்று சொல்லியிருக்கிறது. அந்தப் பேப்பரில் பாயக்காரிகள் தங்களுக்கு உண்டாகிய வருத்தங்களைக் குறித்து அடிக்கடி தெரியப்படுத்தியதின் பேரில், மிட்டாதாரர் களும் சுரோத்திரியர்களும் செங்கற்பட்டு ஜில்லாவில் அபகரித்துக் கொண்ட நிலங்களை அளக்கவேண்டியதென் றும், நிலங்களைச் சாகுபடி செய்கிற ஒவ்வொரு குடிக்கும் தனிப்பட்டா கொடுக்கவேண்டியதென்றும் கட்டளை இட்டிருக்கிறார்கள்.
- எழுதப்படிக்கத் தெரியாத மூடர்களாக இருக்கிற பயிரிடுங் குடிகள் இந்த ஜில்லாவில் பட்டாக்கள் முதலில் ஏற்பட்டபோது ஏமாந்து போனார்கள் என்கிறதற்குச் சந்தேகமில்லை.
- ஆகையால் கிராமங்களின் அளவு கணக்கு ஏற்படும்போது ஒவ்வொரு குடியானவன் எவ்வளவு நிலம் சாகு!டி செய்கிறான் என்று குடிகளை அழைப்பித்து விசாரணை செய்வது மெத்தவும் அவசியமாயிருக்கின்றது. (பார்ண்ட் தரப்படி) கணக்கில் கண்டிருக்கிற பிரகாரம் மோசவிதமாய் ஏழைப் பாயக்காரி நிலங்களை அபகரித்துக் கொண்டு அனேக வருஷ காலமாய் தீர்வையில்லாமல் மிட்டா, சுரேோத்திரியதாரர் அனுபவித்துக் கொண்டு வருகிற நிலங்களைத் துரைத்தனத்தார் ஜப்தி செய்ய வேண்டியதாய் இருக்கின்றது.
- 1865 ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் கைப்பற்று நிலங்களைக் குறித்து பாயக்காரி ஏஜெண்டு இதனடியிற்கண்ட சங்கதிகளை விளம்பரப்படுத்தியிருக்கிறார் :
‘நாவலூர் கிராமத்தில் இருக்கப்பட்ட சுகவாசி பாயக்காரி என்கிறவர்களுடைய முன்னோர்கள், இங்கிலீஷ் துரைத்தனத்தார் இத்தேசத்தை செயித்ததற்கு முன், நிலங்களைக் காடுகரம்பு திருத்திச் சாகுபடிக்கு லாயக்காகக் கொண்டு வந்தார்கள். இப் படிக் கொண்டு வந்தவர்களின் மீதில் செனுத்தப்பட்ட அநியாயம் மேற்சொல்லிய (ஒத்ததாயிருந்தது). இந்த அநியாயம் நாவலூர் கிராமத்தில் மாத்திரமல்ல, இந்த ஜில்லாவில் இருக்கப்பட்ட எல்லாத் தானுக் காக்களிலும் கிராமங்களிலும் செய்யப்பட்டது.’
- தர்க்காஸ்து நிலங்களைக் குறித்து, அத்தினியம் எடிட்டர் 1865 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியின் பேப்பரில் சொல்லுவது என்னவென்றால்:
‘கீழ் அதிகாரஸ்தர்களும், மேலான உத்தியோகஸ்தர்களும் இது சங்கதியைக் குறித்து ஏனோதானோ என்றிருக்கின்றது மிகவும் ஆச்சரியமாயிருக்கின்றது. இந்த விஷயத்தைக் குறித்துக் கொடுத் திருக்கிற கட்டளைகளின் தாற்பரியம் பரிஷ்காரமாய் (தெளிவாய்)க் காணப்படுகிறது. சந்தேகமில்லாமல் அடியிற் காணுகின்ற மூன்று ஆலோசனைகளின் நிமித்தம்தான் அந்த உத்தரவுகள் கொடுக்கப் அநியாயங்களுக்கு ஒப்பந்தமாயிருந்தது பட்டன. அவையாவன:
- அனேக சாகுபடி குடிகளுக்கு சீவனத்தில் ஏதுக்களைக் கொடுக்கவும்.
- அனாதி பஞ்சராயும், அப்போதைக்கப்போ சாகுபடி செய்யாமலும் இருக்கப்பட்ட விஸ்தாரமான நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வரும்படியும் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களாயிருக்கின்றது.
- அரசன் நிலத்திற்குப் பாத்தியஸ்தனாய் இருக்கும்போது சென்னப் பட்டணம் இராஜதானியில் நிலங்களை விற்கிரையம் செய்கிறதற்காகவும் வாங்குகிறதற்காகவும் துரைத்தனத்தார் இடங்கொடுக்கிறபடியால், அதிகக் கேடு சம்பவிக்கிறதற்குக் காரணமாயிருக்கின்றது. இந்தக் கேடு செங்கற்பட்டு சாகீரில் விஸ்திரித்திருக்கிறது போல வேறெங்கேயும் விஸ்திரித்திருக்க வில்லை. பிராமண உத்தியோகஸ்தர்களும் உத்தியோகமில்லாத இதரமான பந்துக்களும் (மக்கள் தொகையில்) கொஞ்சமானவர் களாய் இருந்தபோதிலும் அவர்களுக்கு உண்டாகிய பலத்தி னாலும் ஐசுவரியத்தினாலும் அவர்கள் செய்யப்பட்ட மோச தந்திரங்களினாலும் அனேக கிராமங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்கள். எதார்த்தமாகவே ஜில்லா முழுமையும் அவர்களுடைய வசத்திலிருக்கின்றது. பாயக்காரிகள் என்று சொல்லப்பட்டவர்களோ அவர்கள் முன்னோர்களுடைய கைப்பற்று நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதிக நிர்பாக்கியத்தை அடையும்படியாக விடப்பட்டிருக்கிறார்கள் பாயக்காரிகள் அனுபவிக்கிற கிராமங்கள் மன்னவேடென்று சொல்லப்பட்டது. அது என்னவென்றால் வன்னிய சாதியார் குடியிருக்கப்பட்ட கிராமங்கள். இந்தக் கிராமங்கள் அனாதி காலமாக இந்த சாதியாராலேயே குடியிருக்கப்பட்டு அதிலிருந்த காடுகரம்பு நிலங்களைத் திருத்திச் சாகுபடிக்குக் கொண்டுவந்து, நில பாத்தியஸ்தராகவிருக்கிறபடியினாலே அவர்கள் சர்க்கார் தீர்வையைச் செலுத்தி அனுபவித்து வந்தார்கள். தரவாரி பட்டா கொடுக்கப்பட்ட காலத்தில், பிராமணாளும் அவர்களுக்குச் சம்பந்தப்பட்ட கச்சேரி உத்தியோகஸ்தாளும் எழுதப் படிக்கத் தெரியாத மூடர்களாயிருந்த பாயக்காரிகளை மோசஞ்செய்து, தங்கள் தங்கள் பேரால் பத்துப் பதின்மூன்று கிராமம் வரைக்கும் மொத்தப்பட்டா செய்துகாண்டார்கள். மேல்வாரம், துண்டுவாரம் கேட்கிறவரைக்கும் பாயக்காரிகளோ ஒன்றும் தெரியாமலிருந்தார்கள். இப்படி நடக்கும் என்று அவர்கள் 60T ார். அத்திப்பாக்கம் அ, வங்கடாசல நாயகரின் பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம் 169 அனேக சாகுபடி குடிகளுக்கு சீவனத்தில் ஏதுக்களைக் கொடுக்கவும் அனாதி பஞ்சராயும், அப்போதைக்கப்போ சாகுபடி செய்யாமலும் இருக்கப்பட்ட விஸ்தாரமான நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வரும்படியும் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களாயிருக்கின்றது. அரசன் நிலத்திற்குப் பாத்தியஸ்தனாய் இருக்கும்போது சென்னப் பட்டணம் இராஜதானியில் நிலங்களை விற்கிரையம் செய்கிறதற்காகவும் வாங்குகிறதற்காகவும் துரைத்தனத்தார் இடங்கொடுக்கிறபடியால், அதிகக் கேடு சம்பவிக்கிறதற்குக் காரணமாயிருக்கின்றது. இந்தக் கேடு செங்கற்பட்டு சாகீரில் விஸ்திரித்திருக்கிறது போல வேறெங்கேயும் விஸ்திரித்திருக்க வில்லை. பிராமண உத்தியோகஸ்தர்களும் உத்தியோகமில்லாத இதரமான பந்துக்களும் (மக்கள் தொகையில்) கொஞ்சமானவர்களாய் இருந்தபோதிலும் அவர்களுக்கு உண்டாகிய பலத்தி னாலும் ஐசுவரியத்தினாலும் அவர்கள் செய்யப்பட்ட மோச தந்திரங்களினாலும் அனேக கிராமங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்கள். எதார்த்தமாகவே ஜில்லா முழுமையும் அவர்களுடைய வசத்திலிருக்கின்றது. பாயக்காரிகள் என்று சொல்லப்பட்டவர்களோ அவர்கள் முன்னோர்களுடைய கைப்பற்று நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதிக நிர்பாக்கியத்தை அடையும்படியாக விடப்பட்டிருக்கிறார்கள் பாயக்காரிகள் அனுபவிக்கிற கிராமங்கள் மன்னவேடென்று சொல்லப்பட்டது. அது என்னவென்றால் வன்னிய சாதியார் குடியிருக்கப்பட்ட கிராமங்கள். இந்தக் கிராமங்கள் அனாதி காலமாக இந்த சாதியாராலேயே குடியிருக்கப்பட்டு அதிலிருந்த காடுகரம்பு நிலங்களைத் திருத்திச் சாகுபடிக்குக் கொண்டுவந்து, நில பாத்தியஸ்தராகவிருக்கிறபடியினாலே அவர்கள் சர்க்கார் தீர்வையைச் செலுத்தி அனுபவித்து வந்தார்கள். தரவாரி பட்டா கொடுக்கப்பட்ட காலத்தில், பிராமணாளும் அவர்களுக்குச் சம்பந்தப்பட்ட கச்சேரி உத்தியோகஸ்தாளும் எழுதப் படிக்கத் தெரியாத மூடர்களாயிருந்த பாயக்காரிகளை மோசஞ்செய்து, தங்கள் தங்கள் பேரால் பத்துப் பதின்மூன்று கிராமம் வரைக்கும் மொத்தப்பட்டா செய்துகாண்டார்கள். மேல்வாரம், துண்டுவாரம் கேட்கிறவரைக்கும் பாயக்காரிகளோ ஒன்றும் தெரியாமலிருந்தார்கள். இப்படி நடக்கும் என்று அவர்கள் கனவிலும் கண்டதில்லை. இந்த மாறுபாடுகளை அவர்கள் பின்னிட்டுத் தெரிந்து கொண்ட போதிலும், அவர்களுக்குச் செய்த அநியாயங்களைக் குறித்து யாதொரு நியாயமும் கிடைக்க வில்லை.
செங்கற்பட்டு ஜில்லாவில் 5000 கிராமங்களிருக்கின்றது இவைகள் மிராசுகளாயும், மிட்டாக்களாயும், சாகீர்களாயும் அக்கிராரங்களாயும், தேவஸ்தானமாயும், சுரோத்திரிய முதலானதாயும் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த நிலங்களில் வருஷவாரி 4 இல் 1 பங்கு மாத்திரம் சாகுபடியாகி மற்ற நிலங்களெல்லாம் சர்க்கார் வரும்படியை மோசஞ்செய்யும் பொருட்டாகக் கரம்பாகப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
- எதுவரைக்கும் இது இருக்கப்போகுது? இங்கிலீஷ் துரைத் தனத்தின் கீழ் அடிமைகள் இருக்கக் கூடாதென்று சொல்லு கிறதே யொழிய, பாயக்காரிகளுடைய நிலை வேறென்ன? அவர்களைத் துரிதத்தில் (விரைவில்) இரக்ஷித்தாலொழிய அவர்கள் நாசமாகி, செங்கற்பட்டு ஜில்லா பாழாய்ப் போய் மிராசுதாரர்களுக்கும் காட்டு மிருகங்களுக்கும் வாசம் பண்ணு கிறதற்குத் தகுதியான இடமாயிருக்கும்.
- நியாயமாய் பரிபாலனஞ் செய்தால் பாரம்பரியமாய் சாகுபடி செய்து கொண்டு வருகிற நிலங்களை அவனவனுடைய சுவாதீனத்தில் ஸ்தாபிதம் செய்தால் எவ்வளவு சந்துஷ்டியா யிருக்கும். இப்படிச் செய்தால் எல்லாரும் சவுக்கியத்தை அடைவார்கள். இதர ஜில்லாவில் பட்டாக் கொடுக்கிறதுபோல இந்த ஜில்லாவில் நபாக்தி பட்டா கொடுத்தால், 4 இல் 3 பங்கு குடிகள் சவரக்ஷணையாவார்கள் (பிழைப்புக்கு வழி காண்பார்கள்). இதுவும் அல்லாமல் துரைத்தனத்தார் தங்களுக்குக் கொடுக்கத் தீர்வை குறைவில்லாமல் சேரும். ஆனால் இப்போ திருக்கிற மிராசு பாத்தியம் நடந்துகொண்டு வந்தால் தர்க்காஸ் துக்காரனுக்குச் சாகுபடியில் ஒரு பங்கும், சர்க்காருக்கு ஒரு பங்கும், மிராசுதாரனுக்கு இரண்டு பங்குமாய்ப் போகும். இந்த அக்கிரமங்களைக் குறித்து துணிந்து அர்ஜிகள் (மனு) கொடுத் தால், பிராமண கீழ் உத்தியோகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்டு அநியாயமே கிடைக்கின்றது. பத்துப் பன்னிரண்டு வருஷமாய் யாதொரு நியாயமும் கிடைக்காமல் அர்ஜிகளெல்லா மூட்டை கட்டிக் கொண்டு அவ்விசுவாசமுள்ளவர்களாக இறந்து போகிறார்கள். இன்னும் சில பாயக்காரிகள் யாதொரு திக்குமில்லாமலிருக்கிறோமென்று எண்ணங்கொண்டு படுத்து பிராணனைவிட்டு விடுகிறார்கள்.
1861 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி 5000 குடிகள் கையொப்பஞ் செய்து செக்கிரட்டேரி (ஆப்) ஸ்டேட்டுக்கு அனுப்பிய மிமோரியலைக் குறித்து, சப்கலெக்டர் பான்புரி துரை என்பவர், அந்த மிமோரியலில் கண்ட சங்கதிகள் எதார்த்தம் என்று ஒப்புக்கொண்ட போதிலும், கலெக்டர் கான்லிப் என்பவர் பொய்யான ரிப்போர்ட் செய்தார். அப்ப1டிச் செய்ததினால் விசனப்படுகிறேன் என்று பாயக்காரி ஏஜெண்டிடத்தில் சொன்னார். மேற்கண்டிருக்கிற வாஸ்துவங்கள் யாவற்றும் ஆலோசனை செய்தால் சாகுபடி செய்கிற அனேக மாயிரம் நிர்ப்பாக்கியமுள்ள குடிகள் அனுபவிக்கிற கஷ்ட நஷ்டங்களைக் காணலாம். துரைத்தனத்தாருக்கு நாங்கள் எவ்வளவு சொல்லிக் கொண்டாலும் யாதொரு நீதியும் கிடைக்காமலிருக்கிறபடியால், துக்கத்தினால் நிறைந்திருக்கிறோம். அப்படி நியாயம் கிடைக்காமலிருக்கிறதினால் இப்போது செக்கிரட்டேரி (ஆப்) ஸ்டேட்டு இடத்தில் அப்பீல் செய்திருக்கிறோம். அங்கேயும் நியாயம் கிடைக்காமல் போனால், டயம்ஸ் (டைம்ஸ்) எடிட்டர் தீர்க்கதரிசனமாய் சொன்ன பிரகாரம், இங்கிலாண்டு தேசத்தில் நடப்பதுபோல் இங்கேயும் நடக்குமோ இல்லையோவென்று அறிந்து கொள்ள வேண்டியதாயிருக்கும்.
- •••
பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும்
உண்டாயிருக்கிற விவாதம்
முற்றிற்று
- ••••