பாயக்காரிகளுக்கும்

மிராசுதாரர்களுக்கும்

உண்டாயிருக்கிற விவாதம்

பதிப்பாசிரியர் முன்னுரை

அத்திப்பாக்கம் என்னும் சிற்றூர் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது. அவ்வூரில் அய்யங்குட்டி என்பவரின் மகனாக வேங்கடாசல நாயகர் பிறந்தார். அவர் தம் 98ஆம் அகவையில் சென்னை ஏழுகிணறு பகுதியில், கிரிகோரி தெருவில் 14ஆம் எண்ணுள்ள இல்லத்தில் 1897 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3ஆம் நாள் காலை 8 மணிக்கு மறைவுற்றார் என அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புரையில் ந.சி.வ. என்பவர் எழுதியுள்ளார். 1897ஆம் ஆண்டில் 98 அகவை என்பதால் வேங்கடாசல நாயகர் 1799 ஆம் ஆண்டில் பிறந்தார் எனக் கொள்ளலாம். வேங்கடாசல நாயகரைப் பற்றி ந.சி.வ. எழுதிய செய்தி ‘அக்கினி குலாதித்தன்’ என்ற மாதமிருமுறை வெளியீட்டில் அவ்விதழின் ஆசிரியர் தி.குப்புசாமி நாயகர் என்பவரால் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.

இனி வேங்கடாசல நாயகருடைய முயற்சிகளைப் பற்றி நாம் நிரல்படப் பார்ப்போம். அவருடைய படிப்புத் தகுதி என்ன என்பது அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் காணப்படவில்லை. ஆனால் பின்வரும் செய்திகள் அவரைப் பற்றிக் காணப்படுகின்றன.

அவர் கிறித்தவ மிஷினரிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார் என்பதனாலும்; 1882இல் அவர் வெளியிட்ட "இந்து மதாசார ஆபாச தாரிசனி" என்னும் நூலை அவர் யாத்துள்ள தன்மையைக் கொண்டும் அவர் செழுமையான தமிழறிவு பெற்றிருந்தாரெனக் கொள்ளலாம்.

அவர் ‘Madras Times’, ‘Madras Mail’ ‘The Atheniam Daily’ ஆங்கில நாளேடுகளில், ‘பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்’ என்னும் பொருள் பற்றி, 1872இல் அவரே வெளியிட்டுள்ள நூலில் உள்ள செய்திகள் பற்றி, 1863 முதல் 1866 வரையில் எழுதிய முறையீட்டுக் கடிதங்களிலிருந்தும்; அவர் ‘MIRASI RIGHT’ (மிராசு பாத்தியதை) என்ற ஆங்கில நூலை அச்சிட்டு, 28.6.1871 இல் ஈஸ்ட் இந்தியா அசோசியேசன் சபையாருக்கு விடுத்த மேல்முறையீட்டை வைத்தும்: 1872 இல் அவர் வெளியிட்ட நூலுக்கு எழுதிய ‘பாயிரம்’ என்கிற முன்னுரையில் கண்டுள்ள பின்கண்ட செய்திகளிலிருந்தும் அவர் ஆங்கிலத்திலும் எழுதவும் வாதிடவும் நல்ல திறமையைப் பெற்றிருந்தார் என அறிய முடியும்.

 

கீழேகண்ட செய்திகளைக் கொண்டு நாம் இவற்றை உறுதி செய்யலாம். இந்த இந்தியாவில் திருப்பதிக்குத் தொற்கிலும் வன்னியர்கள் ஆதியில் பேரரசாயிருந்து, மத்தியில் அனேகர் சிற்றரசர்களாகி, இப்போது பேரரசு சிற்றரசு, பாளைப்பட்டாயிருந்தாலும் மதராசு பிரசீடென்டு(சி) எல்லா ஜில்லாக்களிலும் வன்னியரான ராஜகுடிக்குரித்தாய் பாதி முக்கால் பாகம் மன்னவேடென்கிற கிராமங்களாகவேயிருந்த போதிலும், முக்கியமாய் செங்கற்பட்டு ஜில்லா முழுமையும் மன்னவேடென்னும் கிராமங்களாகவே யிருந்தும் – ஆதொண்டச் சோழ வன்னியன் அல்லது ஆதொண்டச் சக்கர வர்த்தியினால்* (ரெவரென்று – டெயிலர் துரையால் செய்த கேட்லாக் ரோஜேன்னி 3வது வாலிமில் சொல்லுகிற ஆதொண்டைச் சக்கிரவர்த்தியினுடைய சரித்திரத்தினாலும் தெரிந்து கொள்ளலாம்.) கொண்டுவிட்ட வேளாளர்களும், துலுக்கர் துரைத் தனத்தில் குடியேறின வடுகர்களான ரொட்டி – கம்மவார் முதலானவர்களுமான இவர்களுக்கு உதவியாயிருந்து தங்களுக்கு வேலைக்காரர்களாகச் செய்ய சகலவிதத்திலும் கெடுக்க வேண்டுமென்று வன்னியர்களை நாசம் பண்ணுகிற பிராமணர்களுக்கு, ஆதி காலத்தில் வடக்கில் நேரிட்ட பவுத்தமத சத்துராதிகளை செயம் பண்ணி ஆதரித்து, நமது முன்னோர்கள் முதலில் தென்தேசத்தையாள வந்தபோது கொண்டாடி, கூட வந்த பிராமணைக் கூட்டங்களைப் போஷித்து, சென்னைப் பட்டணம் பெரிய கோர்ட்டு துபாசியாய் முன்னாலிருந்த, எனிகல் வீராசாமி ஐயர் காசி யாத்திரை சரித்திரத்தில்** (எனுகுல வீராசாமியின் காசியாத்திரை சரித்திரம். என்னும் தமிழ் நூலின் (1833) ஆங்கில மொழி பெயர்ப்பு  ‘ENUGULA VEERASWAMY‘S JOURNAL – (Kasiyatra Charitra)’ என்ற பெயரில், 1973இல் முதலாவது பதிப்பாக வெளிவந்தது. அந்நூலின் படிகளை, 2012 சனவரியில் நான் பெற்றேன் – பாதிப்பாசிரியர்.) சொல்லிய பிரகாரம் மேன்மைப்படுத்தி வைத்துக் கொண்டிருந்து வன்னிய அரசு இளைத்து, பிற்பாடு வந்த துலுக்கர் துரைத்தனத்தில் இவர்கள் புகுந்து அவர்களுக்கு நயபங்களைக் காட்டி உத்தியோகங்களிலேறி அக்ரார மானியம் – கோயில் மானியம் – சுரோத்திரியம், சாக்கீர் முதலானதென்று கிராமங்களை அபகரித்து, நவாபு துரைத்தனக் கடைசியில் நவாபுவினிடத்தில் உத்தியோகத்திலிருந்த கான்கோ ராயஜி என்பவன், இனிமேல் நிலத்தைக் குறித்து இங்கிலீஷ் துரைத்தனத்தில் நடக்கப் போகிறது தனக்குத் தெரிந்து வன்னியர்களுடைய நல்ல கிராமங்களையெல்லாம் பார்ப் பனருக்குப் பிடுங்கிக் கொடுத்தான்.’ நிற்க.

 

மேலே கண்ட எனிகல் வீராசாமி அய்யர் காசி யாத்திரைச் சரித்திரத்தில் சொல்லப்பட்ட செய்திகளை அவேங்கடாசல நாயகர் தமிழில் 1833இல் வெளிவந்த பதிப்பின் மூலம் அறிந்திருந்தார்.

 

இதுபற்றிச் சற்று விரிவாகக் கீழே கண்போம்.

எனுகுல வீராசாமி அய்யர் என்பவர் தெலுங்குப் பார்ப்பனர். எனுகுல சாமய்யா என்பவரின் மகனே எனுகுல வீராசாமய்யா ஆவார்

 

எனுகுல சாமய்யா தெலுங்கு, தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆ மொழிகளைக் கற்றவர். அவர்தம் 12ஆம் வயதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு (Collector) மொழி பெயர்ப்பாளராக இருந்தார். பின்னர் 15ஆம் வயதில் சென்னையில் கப்ரீம் கோர்ட்டில் மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 03.10.1836இல் மறைந்தார்.

 

அவருடைய மகனான வீராசாமய்யா என்கிற வீராசாமி அய்யரும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம். சமற்கிருதம் முதலான மொழிகளைக் கற்றிருந்தார். அவர் வெள்ளையர் அரசில் செல்வாக்கு உள்ளவராகத் திகழ்ந்ததால், 18.05.1830 முதல் 03.09.1831 முடிய 15 மாத காலம் காசி யாத்திரை என்கிற பேரால், பல்லக்கில் அமர்ந்து இந்தியாவின் பெரும் பகுதியில் உள்ள முதன்மையான கோயில்களப் பார்வையிட்டார். அவர் பயணம் புறப்படும்போது முனியப்பிள்ளை மகன் சிறீனிவாசப்பிள்ளள என்பவர், வீராசாமியைச் சந்தித்து, அவர் 1பார்வையிடுகிற இடங்களைப் பற்றியும் ஆங்காங்கு காணப்படும் இன்றியமையாத நிகழ்ச்சிகள் பற்றியும் தனக்குத் தொடர்ந்து மடல் எழுதும்படி கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவர் பெற்ற மடல்கள் தெலுங்கிலும் தயிழிலும் எழுதப்பட்டவை. ஆனால் முதலில் தெலுங்கு மொழியில் அது நூலாக வெளியிடப்படவில்லை. முதலாவதாகத் தமிழ் மொழியில்தான் ’எனுகுல வீராசாமி காசி யாத்திரைச் சரித்திரம்’ நூலாக வெளியிடப்பட்டது. தமிழில் அதை மொழிபெயர்த்தவர் கரகம்பாடி பனையூரி வெங்குமுலாரி (Panayuri Venku Modaleri) ஆவார்.

 

அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1973இல் வெளியிடப்பெற்றது. அதை வெளியிட்ட ஆந்திர அரசின் கீழையியல் ஏட்டுச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தார், ‘இம்முயற்சி 140 ஆண்டுகளுக்குப்பிறகு கைகூடிற்று’ எனப் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளனர். அதைக்கொண்டு 1973இலிருந்து 140 ஆண்டுகள் பின்னோக்கிக் கணக்கிட்டால், 1833இல் தமிழ் மொழிபெயர்ப்பு வெளி வந்தது எனக் கொள்ளலாம். அத்தமிழ் மொழி பெயர்ப்பினை வேங்கடாசல நாயகர் படித்திருந்ததனால்தான், அதன் வழியாகப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும் வேத, ஸ்மிருதி, சாஸ்திரங்களின்படியே இந்தியா முழுவதிலும் உள்ள இந்துக்கள் வாழ்வதையும் வேங்கடாசல நாயகர் தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் நாம் அறியலாம்.

1807 இல் கோமளீசுவரன்பேட்டையில் நிறுவப்பட்ட சத்திரத்தை நிருவகிக்க வெள்ளையர்கள் 11 பேர்களையும் இந்தியர்கள் 9 பேர்களையும் கொண்ட அறங்காவலர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழுவில் 1833இல் எனுகுல வீராசாமியும், சிறீனிவாசப் பிள்ளையும் அறங்காவலர்களாகப் பொறுப்பிலிருந்தனர். அந்த அறங்காவலர் குழுவினர் ஏழைகளுக்கு உணவும் துணியும் வழங்கினர்.

 

எனுகுல வீராசாமி சென்னையிலிருந்து 18.05.1830 காலை 9 மணிக்கு காசி யாத்திரையைத் தொடங்கினார். பெரும்பாலான பயண நாள்களில் அவர் சிறீனிவாசப் பிள்ளைக்கு மடல்கள் எழுதினார். பயணத்தின்போது திருப்பதியிலிருந்து மே 30 ஆம் நாள் எழுதிய கடிதத்தில் பின்வரும் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

 

கோவிந்தராஜஸ்வாமி, கோதண்டராமஸ்வாமி ஆகியோருக்கான கோவில்கள் திகுவதிருப்பதி (Diguva) என்ற இடத்தில் அமைந்துள்ளன. கோவிந்தராஜா கோவில் நிர்வாகம் அரசின் கீழ் உள்ளது. மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 200 பிராமணர் வீடுகள் இங்கு உள்ளன. ஸ்மார்த்த பிராமணர்களுக்கு மட்டும் உணவளிப்பதற்காக குருநாத செட்டி என்பவரால் இங்கு ஒரு அன்னச்சத்திரம் கட்டப்பட்டுள்ளது. இங்கு முனியப்பிள்ளை என்பவரால் நிறுவப்பட்ட வேதபாட சாலையில் இலவச உணவு. இலவச உதவித்தொகையுடன் 16 மாணவர்கள் படிக்கிறார்கள் என்கிற செய்திகள் உள்ளன.

 

எனுகுல வீராசாமி 20.06.1830 இல் எழுதிய மடலில் பின்கண்ட செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

 

கிருஷ்ணா ஆற்றின் ஒரு கரை கண்டனூர் நவாபு ஆட்சியின் கீழ் உள்ளது; இன்னொரு கரையில் அய்தராபாத் நவாப் ஆட்சியின் எல்லை தொடங்குகிறது. திருப்பதியிலிருந்து நான் சென்ற ஒவ்வொரு ஊரிலும் ரெட்டி கணக்குப் பிள்ளையாக அல்லது ஊர் அதிகாரியாக இருக்கிறார். கணக்குப்பிள்ளைகளில் சிலர் நந்தவாரிகாஸ், பிரதமசாகாநியோகிப் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மாத ஊதியம் பெறுவதற்குப் பதிலாக அரசு நிலங்களை சன்னதுகள் மூலம் பெற்று அனுபவிக்கிறார்கள். இந்தக் கணக்குப்பிள்ளைகளும் ரெட்டிகளுமே பயணிகளுக்கு வேண்டப்படும் பண்டங்களைச் சேகரித்துத் தரவேண்டியவர்களாக இருக்கிறார்கள். என்ன செய்தாவது வசதியோடும் கவுரமாகவும் பயணிகள் இருப்பதற்கு இவர்களின் உதவிகளைப் பெற்றே தீரவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்போதும் அவர்கள் நல்லவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் நடந்து கொள்வதில்லை. எனவே ஓரளவுக்கு அச்சுறுத்தலையும் அதிகாரத் தோரணையையும் நாம் காட்டவேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருவட்டூரில் தொடங்கி திருவாஞ்சூர் வரையில் சென்னையைச் சேர்ந்த செல்வந்தர்கள் பெருஞ்செலவில் பல சத்திரங்களைக் கட்டியிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.

 

29.06.1830 முதல் 08.07.1830 வரை தான் மேற்கொண்ட பயணம் பற்றி அவர் எழுதிய மடலில் தன்னுடைய பயண வசதிகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

 

’சென்னையிலிருந்து நான் புறப்படும்போது 6 ஏவலர்களை (Peons) அழைந்து வந்தேன். கடப்பாவில் மராத்தியர் நால்வரை ஏவலர்களாக அமர்த்திக் கொண்டேன். அய்தராபாத்தில் மேற்கொண்டு 6 ஏவலர்களை அமர்த்திக் கொண்டேன். பணப் பதுகாப்புக்கென்று 3 பேர்களை அமர்த்திக் கொண்டேன். ஒவ்வொரு ஏவலருக்கும் மாதச்சம்பளம் ஏழு ரூபாய். கூடாரம் போடுவதற்கு 10 பெரிய துப்பட்டிகளைக் கொண்டு சென்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

17.09.1830இல் வீராசாமி எழுதிய மடலில் குமரி முனைக்கும் நெல்லூர் மாவட்டத்துக்கும் இடையிலும், மற்றும் அங்கிருந்து டில்லி வரையிலும் வாழும் மக்களின் உணவுப் பழக்கங்களைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதியுள்ளார்.

 

‘கன்னியாகுமரிக்கும் நெல்லூருக்கும் இடையில் வாழுகின்ற மக்கள் எளிய உணவையே உண்ணுகிறார்கள். அதாவது தயிர்ச்சோறு, கஞ்சி, மோர் கேழ்வரகு மாவிலிருந்து செய்யப்பட்ட பண்டங்கள், மிளகு ரசம் மற்றும்பயறு வகைகளை உண்ணுகிறார்கள். இவை நல்ல உடல்கட்டையும் ஆற்றலையும் கொடுக்கக் கூடியவை அல்ல. ஆனால் நெல்லூரிலிருந்து தில்லி வரையில் வாழுகிற மக்கள் உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய கோதுமை ரொட்டி, நெய் பால், பாலில் செய்யப்பட்ட இனிப்பு (Dood Peda), பருப்பு வகைகள், சார்க்கரை தயிர் முதலான உணவுகளை உண்ணுகிறார்கள். அதனால் அவர்கள் உடல் வலிமை உள்ளவர்களாகவும் துணிவுமிக்கவர்களாகவும் விளங்குகிறார்கள். அவர்கள் நாடு முழுவதும் சுற்றுகிறார்கள்; குருகுலவாசங்களில் அறிஞர்களிடம் சாஸ்திரங்களைக் கற்கிறார்கள்.’

 

29.09.1830 முதல் 08.10.1830 வரை மீர்ஜாபூரைத் (MIRZAPUR) தாண்டி கங்கையைக் கடக்கிற வரையில் அவர் கண்ட பார்ப்பனர்களின் உட்பிரிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

 

விந்தியாவாசினி என்கிற இடம் ஒரு பெரிய நகரம். ஆனால் தெருக்கள் குறுகலானவை: மேடும் பள்ளமும் நிறைந்தவை. இங்குள்ள தேவி என்கிற தெய்வத்தை ‘பாண்டியா’ என்கிற பார்ப்பனர்கள் வழிபடுகிறார்கள் இவர்கள் “பஞ்சகவுடா” என்கிற பார்ப்பனர்களோடு உறவு கொண்டவர்கள் இப்பகுதியில் உள்ளவர்கள் கன்யகுப்ஜா, சர்வர்யா, கவுடா, சரஸ்வதா, மைதிலி என்கிற உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், பாண்டியா என்பவர்கள் கனுகுப்ஜா என்கிற பிரிவின்கீழ் வருவார்கள். நம்முடைய பகுதியில் (மாகாணத்தில்) உள்ள பார்ப்பனர்கள் பஞ்சதிராவிடா என்றழைக்கப்படுவது போல, பஞ்சகவுடா என்பவர்களும் பல பிரிவினராக இருக்கிறார்கள். நம் பகுதியில் உள்ள பஞ்சதிராவிடா என்பவர்கள் ஆந்திரர், திராவிடர், மகாராட்டிரர், கர்நாடகர் மற்றும் கூர்ஜரர் என அறியப்படுகிறார்கள் இவர்களிடையே உள்ள பழக்கவழக்கங்களும் வேறுபடுவதைப் போலவே, பஞ்சகவுடா பார்ப்பனர்களிடையே உள்ள பழக்கவழக் கங்களும் வேறுபடுகின்றன.

 

12.10.1830இல் எழுதப்பட்ட மடலில், திரிவேணியில் உள்ள பார்ப்பனர்கள் அங்குள்ள தல புராணத்தின்படி பிச்சை ஏற்பது இயலாததாக இருக்கிறது என்பதால், அங்கு குடியிருக்க அஞ்சுகிறார்கள். இது எப்படியிருந்தாலும் பாதுஷாவும் அவருடைய அலுவலர்களும் கணோஜா பார்ப்பனர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்து அவர்கள் தீர்த்தவாசுலு என்கிற பெயரில் திரிவேணி ஆற்றங்கரையில் குடியிருக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தப் பிராமணர்கள் வேறுசில உரிமைகளையும் பெற்றிருக்கிறார்கள். பிரயாகவாலி என்றழைக்கப்படுகிற 900 குடும்பத்தினர் அங்கு வாழ்கிறார்கள். இவர்களை அன்னியில் குளியல் துறைகளில் (Bathing Ghats) 125 மரப்பீடங்களில் யாத்திரை வாசிகளை அமர்த்தி அவர்களுக்கு வேண்டியதைச் செய்ய, 125 பிராமணர்கள் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். மேலும் பஞ்சதிராவிடர் எனப்படும் 10 மராட்டியப் பிராமணக் குடும்பங்களும். தானா (Tanas) எனப்படும் மூன்று தெலுங்கு பிராமணர்களும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அங்குக் குடியமர்த்தப்பட்டு இருக்கின்றனர்… லக்னோ நவாபின் திவானகிய துவாரகதாஸ். ஒரு தர்மச் சாலையைக் கட்டி இவர்களுக்கு அளித்திருக்கிறார். இங்கெல்லாம் யாத்திரைவாசிகள் எப்படிப் போக முடியும்? இப்படிப்பட்ட சத்திரங்கள் தக்காண மக்களுக்காக அன்னப்பூர்ணாவின் தயவில் காசியில் கட்டப்பட்டுள்ளன, ஆனால் நம்முடைய பகுதியில் இப்படிப்பட்ட சத்திரங்கள் ஒன்றுகூட இல்லை.

 

மேலும் தொடர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

 

ஒவ்வொருவரும் நாள்தோறும் குளிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சூத்திரர்கள் கூட தலையோடு முழுகிக் குளியல் போட்டபிறகுதான் மதிய உணவு கொள்ளுகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள பிராமணர்கள் மற்றச் சாதிக்காரர்களை மனம் புண்படச் செய்வதோ வெறுப்பாக நடத்துவதோ இல்லை. அதனால் கிறித்தவ மிஷனரிகள் இங்கு மதமாற்றம் செய்வது இதுவரையில் சொற்ப அளவிலேயே நடந்திருக்கிறது. ஆனால் திராவிட நாட்டுப் பகுதியில் (Dravida Country) சூத்திரர்கள் குறிப்பாகச் சண்டாளர்கள் மிகவும் புண்படுத்தப்படுகிறார்கள். சண்டாளர்கள் அண்டக் கூடாதவர்கள்: சூத்திரர்கள் பார்ப்பனரின் பார்வையில் படக் கூடாதவர்கள் என்று தடை செய்திருக்கிறார்கள் இந்த இழிவான நடத்தைகளின் விளைவாக சென்னை மயிலாப்பூரிலிருந்து வடக்கில் பெதபாலம் (Pedha Palam) வரையிலான இடங்களுக்கு இடையே உள்ள பகுதியில், இந்த வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் மாதா கோவிலில் கூடுவதைக் காண முடிகிறது.

 

பிராமணர்கள், சுருதிகளில் சொல்லப்பட்ட கடமைகளை ‘ஸ்வஸ்தி பிரஜாபயம், பரிபாலயந்தம், நியாயே மார்க்கன மகீம் மகிசபா’ என்ற சுலோகத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களைச் செய்யவேண்டும் அவர்கள் கடவுளை நோக்கி உலகின் நன்மைக்காகப் பிரார்த்திக்க வேண்டும்: சத்திரியர்களை மரியாதையாக நடத்த வேண்டும்: வைசியர்களிடம் அவர்கள் நட்பு முறையில் பழக வேண்டும். அதேபோல் தங்களுக்கு உதவியும் தொண்டும் செய்கிற சூத்திரர்களை, சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி மிகவும் அன்பாக நடத்தவேண்டும். சாஸ்திரங்களில் எந்த இடத்திலும் – நமக்கு உணவு சமைக்கத் தகுதி உள்ள அவர்களைப் பற்றி. நம்மால் பார்க்கப்படக்கூடாதவர்கள் என்று சொல்லப்படவில்லை. நம் பகுதியில் மூல ஸ்மிருதிகளில், சூத்திரர்கள் பிராமணர்களின் தெருக்களில் நடக்கக் கூடாதென்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்தப் புதிய ஸ்மிருதிகள் தலைவிதியின்படி (கர்மா) சூத்திரர்களுக்கு இந்த இயலாமைகள் இருப்பதாகச் சொல்லி, அந்தக் கருமத்தைப் போக்குவதற்கான சடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிட்டார்கள். சூத்திரர்கள் இப்படி இழிவுபடுத்தப்பட்டதன் காரணமாக அவர்களும் மற்றவர்களும் புலால் உண்ணும் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார்கள். எனவே சூத்திரர்களும் மற்றவர்களும். ‘பிராமணர்களால் நாம் ஏன் இவ்வாறான இழிவுக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கப்படவேண்டும் – எந்த மதம் நமக்குச் சமத்துவத்தைக் கொடுக்கிறதோ அந்த மதத்தில் சேருவோம்’ என்று கூறி. கிறித்துவ மதத்தில் சேர அணியமாகிவிடுகிறார்கள்.

 

பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் நம் நாடு கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீரம் வரையில் சிறந்த கர்மபூமியாக விளங்குகிறது: இராமன் கிருஷ்ணன் மற்றும் கடவுளின் மற்ற அவதாரங்கள் இங்கே தோன்றினார்கள் சாபம் கொடுக்கவும் வாழ்த்தவும் வல்லமைபெற்ற அகத்தியர் போன்றவர்கள் இங்கே வாழ்ந்தார்கள், ஆனால் இப்படிப்பட்ட நாடு இப்போது பிரம்மாண்டத்தின் இன்னொரு எல்லையில் வசிப்பவர்களால் ஆளப்படுகிறது. அவர்கள் முற்காலத்தில் ஆடுமாடுகளைப்போல வாழ்ந்தவர்கள். கர்மாவைப் பின்பற்றுகிற பாதையில் நடக்காத இங்கிலீஷ்காரர்கள் பேரில் கடவுளின் அருள்பாலித்திருக்கிறது. கீழே காணப்படும் காரணங்களால்தான் இந்த நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறதென்று நான் சிந்தித்து முடிவு கட்டியிருக்கிறேன்.

 

தலைவிதித் தத்துவமும், சிலை வணக்கமும் அறிவு வளர்ச்சி இல்லாத பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பக்தியை ஊட்டுவதற்கென்றே நம் முன்னோர்களால் உண்டாக்கப்பட்டன. சிலைகளுக்கு எல்லாவகையான சடங்குகளையும் ஆடம்பரமான அபிசேகங்களையும் கோயில்களில் நடத்துவது இந்த நோக்கத்திற்காகத்தான். இவ்வாறிருக்க இன்றைய உபஸ்மிருதிகள் இந்தத் தொடக்க நிலையிலிருந்து நெடுந்தொலைவு விலகிப் போய்ச் சடங்குகளைச் செய்வதில் நேரத்தை வீணாக்குகிறார்கள். கோயில்களில் சிலைகளை வைத்தும் படங்களை எழுதியும் அமைக்கிறவர்கள், ஆசையைத் தூண்டும் விதத்தில் அவற்றை அமைக்கிறார்கள்: இயற்கைக்கு மாறான தன்மையில் அவற்றை அழகூட்டி அமைக்கிறார்கள். எங்கும் நிறைந்த கடவுள் இப்படிப்பட்ட நம்முடைய நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருக்கிறார். கடவுள், நம்மைவிட பிரிட்டிஷாரை விரும்புவதாக நாம் நினைப்பதற்கு இதுவே காரணமாகும் என்றும், மேலும் சில செய்திகளையும் (6TF சொல்லியுள்ளார்.

 

எனுகுல வீராசாமி அய்யர் 28.12.1830இல் பாட்னாவை அடைந்தார் அப்பகுதியில் 10 நாள்கள் தங்கினார். அவர் கயா நகரத்தில் மருத்துவர் ஜான் டேவிட்சன் என்பவரிடம் விவாதம் மேற்கொண்டபோது, ‘இந்தியாவில் பின்பற்றப்படும் நால் வருணங்கள் கடவுளால் உண்டாக்கப்பட்டவையா? மனிதனால் உண்டாக்கப்பட்டவையா?’ என்னும் கேள்வியை எழுப்பினார்.

 

நான் அவருடன் நீண்டநேரம் விவாதித்த பிறகு, இது மனிதனால் உருவாக்கப்பட்டதுதான் என்று கூறி, அவரை ஒப்புக்கொள்ளச் செய்தேன். ஏன் எனில் வருணாசிரம தர்மம் கவுளால் உண்டாக்கப்பட்டிருந்தால், இந்த தர்மங்கள் உலகம் முழுவதிலும் உண்டாக்கப்பட்டிருக்க வேண்டுமே என்று அவரிடம் கூறினேன்.

 

இந்தக் கர்ம பூமியில்தான் மனிதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டான். பைபிள்கூட ஆதாமும் ஏவாளும் இந்தப் பூமியில் பிறந்ததாகக் குறிப்பிடு கிறது. இங்கு வழங்கப்படும் புராணங்கள்கூட இக்கருத்தை ஒத்துக்கொள்ளு கின்றன. மனிதன் தோற்றுவிக்கப்பட்டது இந்தியாவில்தான். எனவே தீப – தீபிகா நியாயப்படி பிரம்மாண்டம் முழுதும் ஆண்களும் பெண்களும் நிறைந்ததாக உருவாயிற்று. ஆதிகால மனிதர்கள் இங்கே வாழ்த்ததால் அவர்கள் நினைத்த மாத்திரத்தில் சாகக்கூடிய சுயேச்சை மரணத்தை (Swecha Maranam) ஏற்கும் மனத்திடம் படைத்த மிகப்பெரிய மனிதெர்களாக விளங்கியிருக்க வேண்டும். அவர்கள் மக்களை நான்கு வருணங்களாகப் பிரித்து, ஒவ்வொரு வருணத்துக்கும் ஒரு கடமையை விதித்து, அதை மீறினால் தண்டனை உண்டு என விதித்தார்கள். இது எல்லோருக்கும் பெரிய அனுபோகமும் பெரிய வசதியானை ஏற்பாடாகவும் அமைந்தது. அதனால் சுருதிகளும், ஸ்மிருதிகளும் இவற்றைத் தெளிவாக எடுத்துரைத்தன. இவை யஜூர் வேதத்தில் சொல்லப்பட்டபடி பரத்துவாஜ முனிவரால் மக்க ளிடத்தில் பழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

கயாவில் முதலாம் ஜார்ஜ் மோரிஸ் (George I Moris) என்கிற நீதிபதியுடனும், உள்ளூர்ப் பண்டிதர்களுடனும் உபஸ்மிருதிகள் பற்றி நீண்ட விவாதம் மேற்கொண்டேன். அப்போது நீதிபதி மோரிஸ் பின்கண்டவாறு என்னை நோக்கி ஒரு கேள்வி விடுத்தார்.

 

‘பென்டிங் பிரபு சக கமனம் அல்லது சதி (உடன்கட்டை ஏறுதல்) பெண்களால் பின்பற்றப்படக்கூடாது என ஆணை பிறப்பித்தார். தங்க ளுடைய கணவர் இறந்துவிட்டால் பெண்கள் மட்டும் உடன்கட்டை ஏற வேண்டுமா? அப்படி அவர்கள் உடன்கட்டை ஏறாவிட்டால் அது பிழையாகுமா?” எனக் கேள்வி தொடுத்தார். மோரிஸ் ஓர் ஆராய்ச்சி யாளரும் ரசிகரும் ஆவார்.

 

‘மனுவும் பராசரரும் ஆதி ஸ்மார்த்தர்கள். ஸ்மிருதிகள், கைம்பெண்கள் தங்கள் கணவன்கள் இறந்த பிறகு அவர்களால் பின்பற்றப்பட வேண்டிய நெறிகளைக் குறிப்பிடுகின்றன. நான் இதுபற்றி ஆய்வு செய்து கொண்டுள்ளேன். மூல ஸ்மிருதிகளில் சக கமனம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்று குறிப்பிட்டேன். உள்ளூர்ப் பண்டிதர்கள் இந்த என் கருத்தை முதலில் எதிர்த் தார்கள்; பின்னர் மூல ஸ்மிருதிகளில் சக கமனத்திற்கு ஆதாரம் இல்லை என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

‘….வட பகுதியில்கூட மன நிறைவு அளிக்கும் அளவுக்கு மூல ஸ்மிருதிகள் திரட்டப்படவில்லை. அப்படிச் செய்வதற்கு அங்குள்ள பிராமணர்களுக்குப் பல இடையூறுகள் இருந்தன. மேலும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்த பண்டிதர்களில் சிலர், மூல ஸ்மிருதிகளை உடன் எடுத்துவந்துவிட்டார்கள். அதன் விளைவாக மிதாட்சர சரஸ்வதி விலாசம் போன்ற ஸ்மிருதிகள்தான் தெற்குப் பகுதிக்கு உரியவையாக இருக்கின்றன.

 

உபஸ்மிருதிகளின் எண்ணிக்கை பெருகியதனால் ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள முரண்பாடு அதிகமாயிற்று. இந்த தர்ம சாஸ்திரங்கள் மற்ற மதக்காரர்களைச் சோர்வடையச் செய்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தன்மையில் உள்ளன.

 

இவையன்றி, தலபுராணங்கள் என்பவை வேறு உருவாக்கப்பட்டன. இதுபற்றி ஆய்வு செய்த பொழுது, தலபுராணங்களைப் பற்றிய செய்திகள், மூலபுராணத்தில் ஓராயிரத்தில் ஒரு பங்கு அளவுகூட இல்லை. நான் அறிந்தவரையில் அப்படிப்பட்ட தலபுராணங்கள் நாராயணபுரம் பற்றி, சென்னை அடையாறில் வாழ்ந்த அல்லாடி நாராயணசாமி நாயுடு என்பவரால்தன் எழுதப்பட்டன. அப்படிச் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொய்யான புராணங்கள், நல்ல நாணயங்களைக் கள்ள நாணயங்கள் செல்லாதவையாக்குவது போல மூலஸ்மிருதிகளைச் செல்லாதவை யாக்கிவிட்டன என. எனுகுல வீராசாமி குறிப்பிட்டுள்ளார். நிற்க.

 

அ. வேங்கடாசல நாயகர், 28.06.1871இல், ஈஸ்டு இந்தியா அசோசியேசன் சபையாருக்கு. ‘MIRASI RIGHT’ (மிராசு பாத்தியதை) என்ற ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட மேல்முறையீட்டு நூலை அனுப்பினார். அதனை சரியான தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்ட நூல், 1872 ஏப்ரலில் அவராலேயே வெளியிடப்பட்டது.

 

தமிழ்மொழி பெயர்ப்பு நூலைக்கொண்டு, அவர், இந்து உரிமையியல் சட்டங்களைத் தொகுத்து வெள்ளையர் அரசிடம் ஒப்படைத்த சகன்னாத தெர்க்க பஞ்சானனா அவர்களின் சமஸ்கிருதத் தொகுப்பைப் பற்றியும்; அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அளித்த ஹென்றி தாமஸ் கோல்புரூக் (Henry Thomas Colebrook) என்பவருடைய ஆங்கில மொழி பெயர்ப்புத் தொகுப்பின் 1864 இல் மூன்றாம் பதிப்பாக வெளிவந்த – A Digest of Hindu Law on Contracts and Successions என்ற தொகுப்பையும் நன்கு படித்து, அச்சட்டத்தினை எடுத்துக்காட்டி, வெள்ளையரின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் நிருவாக அவையினருக்கு முறையீடு செய்கிற அளவுக்குப் பெரிய மேதையாக விளங்கியுள்ளார் என்பதை நாம் அறிகிறோம்.

 

தம் முறையீட்டு நூலில் அ.வேங்கடாசல் நாயகர் இவற்றைப் பற்றிக் குறித்துள்ள செய்தி இந்நூலின் 114 ஆம் பக்கத்தில் உள்ளது.

 

அது கீழே தரப்பட்டுள்ளது.

மேலும் பூமியில் அரசனுக்குண்டான பாத்தியம் பிதுரார்ச்சித சொத்தைப் பாகித்துக் கொடுக்கும்படியான சாங்கதியின் ஆரம்பத்தில் குறித்துப் பேசப்பட்டிருக்கின்றது. அதில் ‘செகனாத திருக்கா பாணிகவானா’ என்பவர் சாதாரணமான சொத்தின் சுபாவத்தைக் குறித்தும், இறந்துபோன சுவாதீனக் காரனுடைய பந்துக்களில் அதைச் சுதந்திரமாக வைக்கும்படியாகவும் தர்க்கிக்கிறார். ‘கோல்புற்களஸ் டைஜெஸ்டு’ என்னும் நூலின் இரண்டாவது புத்தகம் 502ஆவது ஏடு முதல் 520ஆவது ஏடு வரைக்கும் பார். ‘ஒரு அரசாங்கம் விற்கப்பட்டால் அரசன் வரி வாங்கும்படியான நில பாத்தியம் அவனுக்குண்டு. ஆனால் நிலத்தின் வரும்படியை அனுபவிக்கும்படியான பாத்தியம் நிலம் ஆர் வசத்திலிருக்கின்றதோ அவனுக்குப் பூர்த்தியாய்ச் செல்லும். குடியானவன் நிலத்தின் விளைவை விற்கிறையஞ் செய்யும்போது அதை வாங்குகிறவன் அனுபவிக்கும் படியான பாத்தியததையடைகிறான். ஆனால் வரியை அனுபவிக்கும்படியான பாத்தியம் அரசனைவிட்டு நீங்காது.’

 

‘இப்பேர்க்கொத்த சட்டத்தின் நி(ய)தியும் யோக்கியமும் பயிரங்கமாகத் தெரிய வருகின்றது.

 

மேலே, சில வரிகளில் அவரால் சொல்லப்பட்டுள்ள இந்து உரிமை இயல் சட்டம் பற்றி, கீழே காணப்பட்டுள்ள விரிவான சான்றுகளை நாம் அறிவது நன்றாகும்.

 

நீதி வழங்கும் முறையானது, ‘வாரன் ஹேஸ்டிங்ஸ் திட்டம்’ (1772) அமலுக்கு வருகிற வரையில் (1802) சென்னையில் நீடித்ததாகக் கருதலாம்.

 

தாங்கள் பிறப்பித்த சாசனச் சட்டங்களைக் (1661-1678) கொண்டும். ஒழுங்கு முறைச் சட்டங்களைக் (1765-1833) கொண்டும் சரியான முறையில் நீதி வழங்க இயலாமல் இருக்கின்ற நிலையை எவ்வாறேனும் நீக்கவேண்டுமென வெள்ளையர் கருதினர், எனவே, அது கருதி, சட்டம் பற்றிய எல்லாவற்றையும் தொகுத்து, அவற்றுக்குச் சட்ட வடிவம் (Codfication) அளிக்கவேண்டுமென விரும்பினர். அவ்வாறு சட்டவடிவம் அளிக்கப்பட்ட காலத்தைச் (Period of Codification) சட்ட வடிவமைப்புக் காலத்தின் மூன்றாம் கட்டம் எனச் சட்ட அறிஞர் கூறுவர்.

 

அவ்வாறு சட்டவடிவம் கொடுப்பதற்குத் துணையாகப் பல ஆதாரங்களைத் தேடினர். அவ்வாறு தேடியபோது இந்தியாவில் வங்காள மாகாணத்திலிருந்த, ‘ரகுநந்தனா’ என்ற பெயருள்ள பார்ப்பனரால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வடமொழியில் தொகுக்கப்பட்டிருந்த ஒரு தொகுப்புக் கிடைத்தது. அத்தொகுப்பு இந்துச் சட்டத்திற் காணப்படும் எல்லாத் துறைகளையும் பற்றியதாக இருந்தது. அது இருபத்தேழு தொகுதிகளாக அல்லது நூல்களாக அமைந்திருந்தது.

 

அடுத்து, மொகலாயர் சட்டங்களைப் பற்றி மொகலாயப் பேரரசர் ஒளரங்கசிபின் ஆணைப்படி திரட்டப்பட்டிருந்த ‘பதே-இ-ஆலம்கிரி’ அல்லது ‘இந்தியத் தீர்ப்புகள்’ (Fetawa-Aalemgiri or Indian Decisions) எனப்பட்ட இஸ்லாமியர் சட்டத் தொகுப்புக் கிடைத்தது. அவ்விரண்டு தொகுப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பது மிகத் தொல்லையான பணியாகக் கருதப்பட்டது.

 

அப்போது, வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆணையின்படி ஏற்கெனவே தொகுக்கப்பட்டிருந்த இந்துச் சட்டத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எளிதாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்டது. அத்தொகுப்பின் பெயர் ‘விவாதர்நவா சேது’ (Vivadarnava Setu) என்பதாகும். அத்தொகுப்பு உரோமானியச் சட்டத் தொகுப்பைப் போன்று அமைந்திருந்தது. உரோமானியத் தொகுப்பைப் போன்ற சட்ட மூலங்களையும். அம்மூலங்களை எழுதிய பல ஆசிரியர்களின் பெயர்களையும், விளக்கங்களையும் அது கொண்டிருந்தது. எனினும், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பாக அமைந்த ‘நத்தேனியல் பிரேசி ஹால்ஹெட்’ என்பாருடைய ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு நூல் எதிர்பார்த்த அளவுக்குப் பயன் தருவதாக இல்லை. ஹால்ஹெட் மொழிபெயர்த்த அந்நூலுக்கு ‘இந்துச் சட்டங்களின் தொகுப்பு’ (A Code of Gentoo Laws) (Gentoo – Hindoo) எனப் பெயர்.

 

அதனை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆணையின்படி அவர் மொழி பெயர்த்தார். ரகுநந்தனாவின் தொகுப்பு நூலைப் போன்றே, இந்துக்கள் பலராலும் தொகுக்கப்பட்ட வெவ்வேறு தொகுப்புகள் அப்போதிருந்தன. அவற்றுள் ‘சகன்னாதா’ எனப்பட்டவரால் தொகுக்கப்பட்ட ஒன்றே மிகச் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது.

 

சகன்னாதா என்பவர் தொகுத்த நூலுக்கு விவாத பங்கர்நவா (Vivada Bhangarnava by Jagannatha) எனப் பெயர். அவரது தொகுப்பைப் போன்றே சிறந்தவையாகக் கருதப்பட்ட தொகுப்புகள் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் தொகுக்கப்பட்ட ‘விவாதர்நவா சேது’ சர் வில்லியம் ஜோன்ஸ் காலத்தில். மிதிலை வழக்கறிஞரான சிரோரு திரிவேதி (Seroru Trivedi) என்பவரால் தொகுக்கப்பட்ட ‘விவாதசார நவா’ (Vivada Sara Nava) என்பனவாம்.

 

அவற்றுள் சகன்னாதாவின், ‘விவாத பங்கர்நவா’ என்ற தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்குமெனைக் கருதப்பட்டது. அம்மொழி பெயர்ப்பைச் செய்ய ஹென்றி தாமஸ் கோல்புரூக் (Henry Thomas Colebrooke) என்பவர் அமர்த்தப்பட்டார்.

அம்மொழிபெயர்ப்புப் பணியை ஏற்று முடித்த (1795இல்) அறிஞர் கோல்புரூக் என்பவர், தாம் மொழிபெயர்த்த இந்துச் சட்டத் தொகுப்பு (A Digest of Hindu Law on Contracts and Successions) என்ற நூலுக்கு 17-12-1796இல் எழுதியுள்ள முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கீழே காண்போம்.

 

அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ‘புதிய இந்துச் சட்டத் தொகுப்பினை மொழிபெயர்த்து முற்றுப் பெறச் செய்வது எனது கடமையாக ஆயிற்று. இக்கடமையை ஆற்ற என்னை அமர்த்தியவர் சர். ஜான் கிஷோர் என்பார் ஆவார். அவரது நோக்கம் தமது ஆட்சிக்குட்பட்ட மாகாணங்களிலுள்ள இந்தியக் குடிமக்களுக்கு நலத்தையும், தமது ஆட்சியின் கீழ்ப் பணிபுரியும் கற்றோர், (நீதி பரிபாலனம் செய்வதில்) எளிமையையும் உண்டாக்க வேண்டுமென்பதேயாம். அத்துடன் பிரிட்டிஷாரின் நலத்தை முன்னிட்டு. இங்கு நீதி வழங்கும் துறை வெற்றிகரமாக இயங்கவேண்டும் என்பதும் அவரது நோக்கமாகும் எனவே, நான் பெரிதும் மதிக்கப்பட்டு என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இப்பணியை, மிகப்பெரிய ஆர்வத்தோடு மேற் கொண்டேன். எனது மொழி பெயர்ப்புப் பணி சிறந்ததாக இருக்கவேண்டும் எனவும், எதுவும் சிறிதும் விடுபட்டுப் போகக்கூடாது எனவும் எண்ணி நான் பணியாற்றினேன்’ என்பதாகும்.

 

அறிஞர் கோல்புரூக் அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பை மூன்றாவது பதிப்பாக, 1864இல் சென்னையில் வெளியிட்ட நிறுவனத்தாரின் முன்னுரையில் கண்டுள்ள சில செய்திகளை நாம் இங்கே காண்பதும் பொருந்தும். அதிற் காணப்படுவதாவது:

‘பெருஞ் சிறப்புக்குரிய இத்தொகுப்பு வங்காளப் பண்டிதரான ஜகன்னாதா தெர்க்க பஞ்சானனா என்பவரால் செய்யப்பட்டதாகும். இதனை சர், வில்லியம் ஜோன்ஸ் என்பாரின் விருப்பப்படி அப்பண்டிதர் தொகுத்தார். இத்தொகுப்பு திரு.ஹென்றி தாமஸ் கோல்புரூக் என்பவரால் 1795இல் சமற்கிருதத்தினின்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அடுத்த ஆண்டில் கல்கத்தாவில் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் இம்மொழி பெயர்ப்பின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. 1801ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பாக இலண்டனில் இது வெளியிடப்பட்டது. இத்தொகுப்பு. சமஸ்கிருதத்தில் மட்டும் நெடுங்காலமாக வழங்கி வந்த பல்வேறு சட்டத் தொகுப்புகளையும் ஒத்திட்டுப் பார்த்தபின் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்ததொன்றாகும்.’

 

இம்மொழிபெயர்ப்புத் தொகுப்பு இப்போது கிடைப்பது அரிதாகி வருவதால், மூன்றாம் பதிப்பாக, இரண்டே தொகுதிகளில் இதனை நான் வெளியிட்டுள்ளேன். இதனை என் சொந்தப் பொறுப்பிலும் செலவிலுமே வெளியிட்டுள்ளேன். அடிக்குறிப்புகளோடு இதனை வெளியிட வேண்டுமென எண்ணி, நல்ல திறமையும் அனுபவமும் வாய்ந்த நீதித்துறை அலுவலர் ஒருவரை இப்பணிக்கு அமர்த்திக் கொண்டேன். இத்தொகுப்பிற் காணப்படும் பல பகுதிகள் பிரிட்டிஷார் பிறப்பித்த கட்டளைச் சட்டங்களின் (Statutory Laws) பயனாக வழக்கொழிந்து போயின என்பதும், சில பகுதிகள் இந்திய வழக்கு மன்றங்களின் தீர்ப்புகளால் விளக்கம் பெற்றுள்ளன என்பதும் உண்மையே, இவைபற்றி ஆங்காங்குத் தக்க குறிப்புகள் எழுதி வெளியிட இயலாமற் போயிற்று’ என்பதேயாகும்.

 

இங்குப் பேசப்படும் தொகுப்பினைச் சமஸ்கிருதத்தில் தொகுத்த ஜகன்னாதா என்பவர் அத்தொகுப்புக்குத் தாமே எழுதிய, சமஸ்கிருதச் செய்யுள் வடிவில் அமைந்த முகவுரையில் குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படும் கருத்துகளாவன.

’ருத்திரன் என்பவரின் மகனாகிய ஜகன்னாதா எனப்படும் நான் தேவர்களை வணங்கி இத்தொகுப்புப் பணியை மேற்கொண்டேன். நான் மேற்கொண்டு முடித்துள்ள பணி. இந்நாட்டை இரட்சிக்க வந்துள்ளோரின் ஆணைப்படி நிறைவேற்றப்பட்டதாகும்… புனித இந்துச் சட்டத்தின் அளவு கடந்த பெருமையோடு எனது அறிவை ஒப்பிடச் சிறிதும் பொருந்தாது. பொங்கும் கடலில் கட்டுமரத்தைச் செலுத்துவதைப் போன்றது எனது பணியாகும். எனினும் இந்நாட்டின் தலைமை இரட்சகரின் இரட்சிப்பில் அப்பெருங்க லை நான் கடந்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

‘ஜகன்னாதா என்பவர் கல்கத்தாவிலிருந்து முப்பது மைல் தொலைவில் உள்ள திரிவேணி (Triveny) என்ற இடத்தில் கி.பி. 1815-ல் வாழ்ந்தவர் ஆவார். அப்போது அவருக்கு வயது 108. அவரைச் சூழ்ந்து, அவரது மரபில் வந்த நான்கு தலைமுறைகளைச் சார்ந்த ஏறக்குறைய நூறு பேர் அவரிடம் மாணவராக இருந்தனர். அவர்களுக்கு அன்றாடம் சட்டத்தின் மூலங்களைப் பற்றியும். தத்துவத்தைப் பற்றியும் அவர் சொற்பொழிவுகள் ஆற்றி வரலானார்' என அறிஞர் ஹாரிங்டன் என்பவர் (Mr. Harrington) குறிப்பிட்டுள்ளார்.

 

இங்கு மேலே தரப்பட்டுள்ள ஆங்கில மொழி பெயர்ப்பாளர் முகவுரை வெளியீட்டாளர் முன்னுரை, வடமொழித் தொகுப்பாளர் முன்னுரை இவற்றினின்றும் நாம் உணருவதென்ன?

 

  1. இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளையர் ஆட்சி நிலைபெற்ற பிறகும் நீதித்துறைக்கேற்ற சட்டங்கள் யாவை என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு பார்ப்பனருக்கே அளிக்கப்பட்டிருந்தது. அப் பார்ப்பனர் தங்களது உயர்வுக்கும் வருணப் பாதுகாப்புக்கும் நிலையான ஆதாரங்களாயுள்ள ஒன்றைக்கூட விட்டுவிடாமல் தொகுத்து அளித்துச் சட்டமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் பெருங்கவலை கொண்டிருந்தனர்.

 

  1. அத்துடன் நில்லாது, வழிவழியாகத் தங்களது வேதப் பயிற்சித் திறன் குன்றிவிடக் கூடாது என்பதற்காக, இந்துச் சட்ட ஆதாரங்களைப் பற்றியும் தத்துவங்களைப் பற்றியும் நூற்றுக்கணைக்கான பேருக்குப் பயிற்சியளிப்பதைப் பார்ப்பனர் மேற்கொண்டிருந்தனர் என நாம் உணருகிறோம்.

 

  1. தங்கள் சொந்தப் பொறுப்பிலும் செலவிலும் அப்படிப்பட்ட நூல்களை வெளியிடுவது இன்றியமையாதது என அன்றைய பதிப்பாளர் கருதும் அளவுக்கு அவர்கள் கடமை உணர்ச்சி பெற்றிருந்தனர் என்பதையும் நாம் அறிகிறோம்.

 

(வே. ஆனைமுத்துவின் ‘தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி’

நூல், 09-05-1980 பதிப்பு)

  • •••

அத்திப்பாக்கம் அ.வேங்கடாசல நாயகர் 1861 முதல், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள வன்னிய வேளாண் ஏழைக் குடிகள் பயிரிட்ட நிலங்களை நவாபு ஆட்சியின்கீழ் செல்வாக்கோடு திகழ்ந்த பார்ப்பனர்களும் வேளாளர்களும் ரெட்டிகளும் பறித்துக் கொண்டதை, அவர்களிடமிருந்து மீட்டுத்தரப் போராடினார்.

 

அப்போராட்டம் பற்றி, ‘பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்’ என்னும் தலைப்பில் 1863 முதல் தமிழ் ஏடுகளிலும், ஆங்கில நாளேடுகளிலும் கடிதங்களும் கட்டுரைகளும் எழுதி வந்தார்.

 

அப்படி அவர் தமிழில் எழுதியவற்றை ஒரு நூலாகத் தொகுத்தார். அதையே ஆங்கிலத்தில் ‘MIRASI RIGHT’ (மிராசு பாத்தியதை) என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். அதை அச்சிட்டு, கிழக்கிந்திய வணிகக் குழுவினரின் நிருவாக அவையினருக்கு இலண்டனுக்கு 28-06-1871இல் விடுத்து வைத்தார். அது மேல் முறையீடு (அப்பீல் – Appeal) என்கிற தன்மையிலானது. அதற்காக அவர் முதலில் தமிழில் எழுதிய நூலை, 1872 ஏப்ரலில், ‘பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்’ என்னும் பெயரில் வெளியிட்டார்.

 

அந்நூலுக்கு, 1860ஆம் ஆண்டைய அச்சுச் சட்டப்படி பதிப்புரிமை (Copy Right) பெற்றிருந்தார்.

 

அந்த மூல நூல் 2000ஆவது ஆண்டுவரையில் எவர் கையிலும் அகட் படவில்லை. இந்நிலையில் பேராசிரியர் முனைவர் க.இரத்தினம் அவர்கள். எதிர்பாராத தன்மையில், திருச்சிராப்பள்ளியில், ஒரு பழைய புத்தகக் கடையில், அந்நூலின்படி இருப்பதைக்கண்டு அதைப் பெற்றுள்ளார்.

 

இதுபற்றி அவரே. தம் 02-10-2000 நாளிட்ட ‘மறுபதிப்புரை’யில், பின்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

‘பழைய புத்தகக் கடையில் அரிய நூல்களைத் தேடித் தொகுப்பதில் ஆர்வம் உடைய எனக்குத், திருச்சியில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த நூலின் பிரதி கிடைத்தது. தாள்கள் நைந்து இற்றுப் போகும் நிலையிலிருந்த நூலினை, அதனைப் பதிப்பிக்க உதவும் வகையில், மீண்டும் கையெழுத்துப் பிரதி செய்து மூல நூற்பதிப்போடு இலைத்து. ஐந்திணைப் பதிப்பகத்தின் உரிமையாளர் குழ. கதிரேசன் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். இதன் சிறப்பினையும் அருமையினையும் புரிந்து கொண்ட அவர் இதனை மறுபதிப்பாக்கித் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்த இசைந்து அச்சிட்டு உங்கள் முன்வைத்துள்ளார்…’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நூல் தமக்குக் கிடைத்தவுடன் முனைவர் க. இரத்தினம் அவர்கள் வாளாயிருந்திருந்தாரானால், தமிழகத் தமிழர்க்கு இந்நூல் எப்போதும் கிடைத்திராது. அத்துடன், நைந்து போன மூல ஏடுகளையும் அதன் கையெழுத்துப் படியையும் பெற்ற கவிஞர் குழ.கதிரேசன் அவர்கள் 2000 திசம்பரில் மறுபதிப்புச் செய்யாமல் தயக்கம் காட்டியிருந்தாரானாலும். நம்மில் எவருக்கும் இந்நூல் கிட்டியிருக்காது.

 

இவ்வகையில், 1872இல் முதற்பதிப்புப் பெற்ற இந்த அரிய நூலினை 128 ஆண்டுகளுக்குப் பின்னர். 2000 அக்டோபரில் பதிப்பிக்காமலும், 2000 திசம்பரில் மறுவெளியீடு செய்யாமலும் கவலையற்று இவர்கள் விட்டிருந்தார்களானால் – தமிழக வரலாற்றில். வேளாண் ஏழை வன்னியக்குடி மக்கள் 1800 முதல் பார்ப்பாராலும் வேளாளராலும் வஞ்சிக்கப்பட்ட ஓர் உண்மை வரலாறு, தானாகவே மறைந்து போயிருக்கும். இத்தகைய வரலாற்றுத் தரவினைக் காப்பாற்றித் தமிழர்க்குத்தந்த இவ்விரு பெரிய அறிஞர்களும் தமிழரனைவரின் பாராட்டுதலுக்கும் உரியவர் ஆவர்.

 

இந்நூலினைப் பதிப்பித்து வெளியிட்ட கவிஞர் குழ.கதிரேசன் அவர்கள், ‘பாயக்காரிகள் மிராசுதாரர்களோடு செய்த போராட்டம்’ என்கிற. இந்நூலின் இன்னொரு பெயரையும் பதிவு செய்துள்ளார்.

பாயிரம் 8 பக்கங்கள் தவிர, மற்றெல்லாப் பக்கங்களின் தலைப்பிலும். ‘பாயக்காரிகளை மிராசுதாரர்கள் செய்த போராட்டம்’ என்றே நாயகர் பதிப்பித்துள்ளார். அப்படியே 2000 ஆண்டைய பதிப்பில் உள்ளது.

 

அடுத்து, ‘1860 லேயே தலித்* (‘தலித்’ என்பது வேற்றுமொழிச் சொல். அதன் உண்மையான பொருள், ஒடுக்கப் பட்ட வகுப்பு மக்கள் என்பதாகும்.) இன மக்களின் முதல் எழுச்சிக்குரல் எனும் ஒரு கவர்ச்சியான பெயரை. நூலின் மேலட்டை முகப்பில் பதித்துள்ளார் ஆனால், ‘தலித்’ என்னும் சொல். இந்தியா முழுவதிலுமுள்ள தீண்டப்படாத வகுப்பு மக்களை – தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை மட்டும் ரிப்பதாகப் பெருவழக்கில் கடந்த 30 ஆண்டுகளாகத் தவறாகப் பயன் படுத்தப்படுகிறது இது பிழைபட்ட ஒரு புரிதலையே மக்களுக்குத் தரும். நிற்க.

 

அடுத்து இந்தூலின் மூன்றாவது முதற்பதிப்பு என்று சொல்லத்தக்க வகையில், 2013 அக்டோபரில், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வீ. அரசு அவர்களால் பதிப்பிக்கப்பட்டு, சென்னை நியூசெஸ்சுரி புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட அத்திப்பாக்கம் அவெங்கடா சவனார் ஆக்கங்கள் திரட்டு வெளியிட்ட முதற் பதிப்புப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

 

பக்கம் 10இல், ‘நன்றி’ எனும் தலைப்பில் உள்ள பதிப்புரையில், மேற்குறித்த பேரா. க. ரத்னம் பதிப்பித்த அத்திப்பாக்கம் வெங்கடாகசலனார் நூல் பல விதபாடுகளைக் கொண்டிருந்தது. அவருக்குக் கிடைத்த பிரதியில் சில பத்திகள் இல்லை. மூலநூலத் தேடும்படி. எனது ஆய்வு மாணவர் ர. குமார் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக வளரக்கூடிய இவ்வாய்வாளர் அந்நூலைச் சென்னை ஆவணக் காப்பக நூலகத்திலிருந்து கண்டெடுத்தார். அவரும் நானும் க. ரத்னம் அவர்களது நூலை வைத்துக் கொண்டு, கண்டெடுத்த நூலோடு இணைத்து வாசித்து விடுபாடுகளைச் சரி செய்தோம் என பேரா. வீ .அரசு பதிவு செய்துள்ளார்.

 

அ. வேங்கடாசல நாயகர் 1872 ஏப்ரலில் வெளியிட்ட முதற்பதிப்பு நூலின் தெளிவான ஒரு படியை இரண்டாவதாகக் கண்டு, பிடித்து அதை முதன் முதலாகத் தமிழர்க்குக் கிடைக்கச் செய்த பெருமை இவர்களுக்கு உண்டு.

 

இனி இப்பதிப்பைப் பற்றிய பின்வரும் செய்திகள் எல்லோராலும் சிந்திக்கப்படத்தக்கவை.

 

அ. வெங்கடாசலனார் எனப் பெயரைப் பதித்திருப்பது, தகுதி உயர்வு கருதி, ‘ஆர்’ விகுதி இணைக்கப்பட்டிருப்பதாக நினைத்தால், அது பார்ப்பனியத் தாக்கத்தால், சாதி உயர்வு – தாழ்வை நிலைநாட்ட ஏற்பட்ட *அன்’. ‘அர்’ விகுதிகளைச் சேர்த்துப் பிழையாக எழுதுதலே ஆகும்.

 

இது அ வெங்கடாசல நாயகர் என்று மட்டுமே பதிப்பிக்கப்பட வேண்டும் சாதிப்பட்டப் பெயரைக் குறிப்பது. வெங்கடாசலத்துக்கு இழுக்கு என்று கருதப்போய் – அதைவிட இழிவான பார்ப்பனிய வருணக் கருத்தைப் புகுத்துகிற – சாதி உயர்வைக் காட்டுகிற ‘ஆர்’ விகுதியைச் சேர்த்துப் பதிப்பித்தது பொருத்தமற்றது.

 

அதேசமயம், நூலின் முகப்பு அட்டையில், ‘இந்து மதம் – ஆதிக்கச் சாதிகள்: ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு’ என்றிருப்பது நூலின் உள்ளடக்கத்தையும், உண்மையான குறிக்கோளையும் அறிய உதவாதது.

 

‘பாயக்காரிகள்’ என்பது இந்துஸ்தானி மொழிச்சொல்.

 

அ. வேங்கடாசல நாயகர், பாயக்காரிகள் அல்லது வந்தேறுங்குடிகள் அல்லது நிலத்தில் தங்கியிருந்து உழவு செய்வோர் என்று குறித்திருப்பது வன்னியர்களைப் பற்றியதே ஆகும்.

 

நிலத்தில் தங்கியிருந்து உழவுத் தொழில் செய்த வன்னியர்களிடமிருந்து நிலத்தைப் பறித்துக் கொண்டோர் யார், எவர் என்னும் வினாக்களுக்கு ஒரே விடை – பார்ப்பனர்கள், ரெட்டிகள், தொண்டை மண்டல வேளாள முதலி யார்கள், (தெலுங்கு) கம்ம நாயுடுகள் என்போர் ஆவர் என்பது மட்டுமே ஆகும். இவ்வுண்மையை அப்படியே குறிப்பிடுவதே முறையாகும்.

 

பேரா. வீ. அரசு, தம் பதிப்பின் 11ஆம் பக்கத்தில், ‘பதிப்புக் குறிப்புகள்’ என்ற தலைப்பில், கீழே கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:

 

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர், A.V., பாயக்காரி ஏஜெண்ட் என்று தன் பெயரைப் பல வடிவாங்களில் பதிவு செய்துள்ளார். இதனை, ‘அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார்’  என்று இப்பதிப்பில் பயன்படுத்தி யுள்ளோம். வேங்கடாசலம் என்பதே சரியான சொல்லாட்சியாக இருந்த போதும் மூலத்தில் அவர் பயன்படுத்தியுள்ள;வெங்கடாசலம் எனும் வடிவத்தை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

மேலே தடித்த எழுத்தில் உள்ள செய்தி முற்றிலும் தவறானது. எப்படி?

1872 ஏப்ரலில் வேங்கடாசல நாயகர் வெளியிட்ட முதலாவது தமிழ் நூலின் மூலப் பதிப்பில், நூலின் பதிப்பு விவரம் அச்சிடப்பட்டுள்ள முதலாவது பக்கத்தில் (Title Page), ‘அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகரால்’ என்றுதான், தடித்த எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதனால், ‘வெங்கடாசலம்’ என்று பதிப்பித்திருப்பது தவறே. வேறு மூலச் சான்றுகளில் ‘வெங்கடாசல நாயகர்’ எனப் பதிப்பாகி இருப்பனவற்றையும், ‘வேங்கடாசல நாயகர்’ எனத் திருத்திப் போடுவதே நம் கடமை.

 

இப்போது என்னால் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்நூல், பின்கண்ட வகைகளில் மற்றப் பதிப்புகளைவிடக் கூடுதலான சிறப்புகளைக் கொண்டது.

 

  1. 1872இல் அ.வேங்கடாசல நாயகர் வெளியிட்ட மூலப்பதிப்பு என்னிடம் உள்ளது அதையும், க.இரத்தினம் அவர்களின் பதிப்பையும் ஒத்திட்டுப் பார்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

 

  1. பேரா. க.இரத்தினம் பதிப்புக்கு, ‘பதிப்பாளர் உரை’யை, எழுதிய களிஞர் குழு.கதிரேசன் அவர்கள் பக்கம் 13, 14இல், அந்நாளிலிருந்த பத்திரிகைகளையும், பத்திரிகை ஆசிரியர் எழுதிய கருத்துக்களையும் அறியும் ஆவண மாகத் திகழ்கிறது என நாயகரின் முதற்பதிப்பு நூலின் சிறப்புகளின் ஒரு பகுதியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில், ‘Madras Times’ என்ற ஆங்கில நாளிதழில் 1863 முதல் 1866 வரையில் நாயகர் எழுதிய மடல்களில் சிலவற்றையும், அவ்விதழின் ஆசிரியர் எழுதிய ஆசிரிய உரைகள் சிலவற்றை யும், தில்லியிலுள்ள நேரு நூலகத்திலிருந்து, அறிஞர் ஜி. அலோசியஸ் அவர்கள் வழியாக நான் பெற்று, இந்நூலில் முதன்முதலாகப் பதிப்பித்துள்ளேன்.

 

2000 ஆண்டைய பதிப்பாளர் கவிஞர் குழ. கதிரேசன், பதிப்பாளர் உரையில், தெரிவித்துள்ள ஒரு விழைவு, இந்நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள நூல்களைத் தேடி வெளியிட்டால் அது மேலும் பல விவரங்களைத் தரும் என்பதில் ஐயமில்லை என்பதாகும்.

அவருடைய அவ்விழைவை நிறைவேற்றும் தன்மையில்,

  1. எனுகுல வீராசாமி அய்யர் காசியாத்திரை சரித்திரம் பற்றியும்:

 

  1. செகன்னாத தெர்க்க பஞ்சனனா என்ற அறிஞர் தொகுத்த இந்துச் சட்ட மூலங்களைப் பற்றியும்;

 

  1. ஹென்றி தாமஸ் கோல்புரூக் என்பவர் வடமொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்துச் சட்ட மூலங்களைப் பற்றியும் எனக்குக் கிடத்த எல்லாச் செய்திகளையும் என் நூலிலிருந்து பதிவு செய்துள்ளளேன்.

 

வரலாற்றின்படி, அத்திப்பாக்கம் அ. வேங்கடாசல நாயகரின் 1882 ஆம் ஆண்டைய பாடல் நூலைப் பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் 16.02.1930 இல் வியந்து பாராட்டியவர், பெரியார் ஈவெ. இராமசாமி அவர்களே ஆவார். 1946-48இல் அவரும், மற்றும் பல அறிஞர்களும் அவருடைய சிறப்புகளைப் பற்றி எழுதியுள்ளனர்.

 

மேலே கண்டவர்களால் பாராட்டப்பட்ட பாடல் நூலை நான் 1963 இல் எழும்பூரில் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். அதிலுள்ள சில பாடல் களை 1974க்குப் பிறகு என் ‘சிந்தனையாளன்’ இதழில் வெளியிட்டேன்.

 

’தத்துவ விவேசினி’ என்னும் இதழின் தொகுப்பு எனக்கு 1993 மே திங்களில் கிடைத்தது. ‘பாயக்காரிகள்’ படும் துன்பம்பற்றி, ‘தத்துவ விவேசினி’யில் நாயகர் எழுதிய ஒன்பது மடல்களைத் தொகுத்து. 08-12-1993இல் ஒரு நூலாக முதன்முதலாக வெளியிட்டேன்.

 

‘பார்ப்பாரும் வேளாளரும் பறித்துக் கொண்ட

வன்னியரின் மன்னவேடு ஊர்கள்’

என்பது அந்நூலின் பெயர். இப்பெயரே இந்த நூலின் உண்மையான உள்ளடக்கத்தைக் குறிப்பதாகும். நிற்க.

 

இந்நூலை இவ்வளவு சிறப்பாக வெளியிட எனக்குப் பேருதவி புரிந்தவர்கள் என் மூத்த மருமகன் புதுவை சீனு. அரிமாப்பாண்டியன். புதுவை சீனு. தமிழ்மணி, மா.பெ.பொ.க. மாணவரணிச் செயலாளர் ஆ.முத்தமிழ்ச் செல்வன், அறிஞர் ஜி. அலோசியஸ், நாயகரின் உருவப் படத்தைத் தேடி அளித்த கவிஞர் கவிரி நாடன் ஆகியோர் ஆவர்.

 

இதனை மனமுவந்து வெளியிட்டவர் என் மூத்தமகன் ஆனை. பன்னீர் செல்வம் ஆவார். இவர்கள் அனைவர்க்கும் மற்றும் நூலுக்கான பகுதிகளையும், இம் முன்னுரையையும் உரிய காலத்தில் கணினித் தட்டச்சு செய்து உதவிய முறையே புதுவை சீ. சந்திர சேகரன், சென்னை, சன் நகலகம் இரா. சரவணன் ஆகியோர்க்கும்; என் நூல்களை அழகுற அச்சிட்டு அளித்த சென்னை மணி ஆஃப்செட் அச்சகத்தாருக்கும் மனங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

வே. ஆனைமுத்து

பதிப்பாசிரியர்

சென்னை

01-03-2014

 

  • ••••

 

பதிப்பாசிரியரைப் பற்றி…

  • பெரம்பலூர் மாவட்டம், மருக்கன்குடியில் வேம்பாயி – பூவாயி இணையரின் மகனாக 21.06.1925இல் பிறந்தார்.

 

  • 1944 முதல் சுயமரியாதை, திராவிடர் கழகப் பணிகளில் முழுமையான ஈடுபாடு

 

  • 1946 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடைநிலை வகுப்பில் பயின்றார்.

 

  • இளம் வயதிலேயே குறள் மலர், குறள்முரசு போன்ற தத்துவ இதழ் களை வெளியிட்டார்

 

  • 1950 முதல் தந்தை பெரியாருடன் அணுக்கமான தொடர்பும், 1963 முதல் அன்னாருடன் அன்றாடம் கொள்கைபற்றிக் கலந்துரையாடும் வாய்ப்பும் பெற்றார்.

 

  • 1969இல், மறைந்த வேளாண் அமைச்சர் ஆ. கோவிந்தசாமி (தி.மு.க.) அவர்களின் அண்ணன் சுப்பிரமணி-தையல்நாயகி இணையரின் மகள் ஆ.சுசீலா அம்மையாரை 1954இல் வாழ்க்கைத் துணைவராக ஏற்றார்.

 

  • திராவிடர் கழகத்தில் முழுநேரப்பணியை மேற்கொள்ளத் தமது அரசுசார் பணியை 1956இல் துறந்தார்.

 

 

  • 1957இல் சாதி ஒழிப்புக்காகப் பெரியார் அறிவித்த அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் 18 மாதம் சிறைக்குச் சென்றார்.

 

  • 1962 திராவிடர் கழக மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களையும் அழைத்து முற்போக்கு இடது சாரித் தன்மையை வளர்க்க முயன்றார்.

 

  • தந்தை பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் தொகுத்து நிரல்படுத்திப் பதிப்பித்து, ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ எனும் தலைப்பில் தத்துவ நூல்களாக வெளியிடப் பெரியாரின் ஒப்புதலைப் பெற்று நூல்களின் திரட்சி அச்சாகிக்கொண்டிருக்கும்போதே 1973இல் பெரியார் ஈ.வெ.ரா. மறைந்தார்.

 

  • 1974 இல் திருச்சி சிந்தனையாளர் கழகம் சார்பில் ’பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்’ மூன்று தொகுதிகளும், 2010இல் பெரியார் – நாகம்மை அறக்கட்டளையினரால் விரிவாக்கம் செய்யப்பட்ட 20 தொகுதிகளும் வெளியிடப்பட்டன.

 

  • 1974 இல் இவரால் தொடங்கப்பெற்ற ‘சிந்தனையாளன்’ தமிழ் ஏடு இன்றும் தொடர்ந்து வெளிவருகிறது.

 

  • 08.1976 இல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியையும், 19.08.1978இல் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையையும் அமைத்திடக் காரணமானவர்.

 

  • நடுவண் அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பெற 1978 முதல் இந்திய அளவில் அரசியல் போராட்டக்களம் அமைத்து மண்டல் குழு அமைந்திடவும், அதன் பரிந்துரைகளை அமலாக்கம் செய்திடவும் காரணகர்த்தாவானார். அனைத்து வகுப்பினருக்கும் கல்வியிலும், வேலையிலும் விகிதாசார இடப்பங்கீடு கோரிப் போராடி வருகிறார்.

 

  • இந்தியா முழுவதும் தம் இயக்கத் தோழர்களுடன் பலமுறை பயணம் செய்து மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரியக் கொள்கைகளைப் பரப்பி வருவதுடன், சமூக மாறுதலுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்.

 

  • 1980இல் தாம் எழுதிய சிறந்த ஐந்து ஆராய்ச்சி நூல்களை வெளி யிட்டுள்ளார்.

 

  • 1993இல் பெரியார் ஈ.வெ. இராமசாமி – நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையினை நிறுவினார்.

 

  • 1994இல் Periyar Era எனும் ஆங்கில ஏட்டினைத் தொடங்கினார்.

 

  • 1996இல் மலேசியா; 2005இல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை; 2012 மற்றும் 2014இல் மலேசியா முதலான நாடுகளுக்குப் பயணம் செய்து பெரியார் கொள்கைப் பரப்புரையை மேற்கொண்டார்.

 

  • 2012இல், அதுவரை தாம் எழுதிய கட்டுரைகளையும், நூல்களையும் தொகுத்து ‘வே.ஆனைமுத்து கருத்துக் கருவுலம்’ என்னும் 16 நூல்களை வெளியிட்டார். அத்துடன், 1882-1888இல் வெளிவந்த தத்துவ விவேசினி, The Thinker உள்ளிட்ட 5 நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்து வெளியிட்டார்.

 

  • தமது 90ஆம் அகவையிலும் இந்திய சமூக அமைப்பைச் சோசலிச அமைப்பாக மாற்றவேண்டும் என்று முடிவெடுத்து, அதற்கு மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வழியே பொருத்தமானது எனத் தமது அரசியல் பயணத்தை மேற்கொண்டு ‘ஓய்வு என்பது இறுதி மூச்சோடுதான்’ என்கிற கொள்கையுடன் போராடி வருகிறார், இந்நூலாசிரியர் திருச்சி வே. ஆனைமுத்து.

 

  • •••

 

1993 இல் வே. ஆனைமுத்து வெளியிட்ட

பார்ப்பாரும் வேளாளரும் பறித்துக்கொண்ட

வன்னியரின் மன்னவேடு ஊர்கள்

நூலுக்கான

 

பதிப்பாசிரியர் முன்னுரை

1963இல் சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிர்ப்புறம் இருந்த நடைபாதைப் புத்தகக் கடையில் ‘இந்து மத ஆசார ஆபா தரிசனி’ என்ற நூலை முதன்முதலாக நான் பார்க்க நேர்ந்தது. உடனடியாக இதன் ஒரு படிக்கு எட்டணா என விலை தந்து மூன்று படிகளை வாங்கினேன். இந்நுலின் பொருளடக்கப் பகுதி என்னை மிகவும் கவர்ந்தது.

தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளில் முதன்மையான வருணாசிரம தர்மக் கண்டனம், புரோகித எதிர்ப்பு மற்றும் சோதிடம் சாதகம், உருவ வணக்கம், கைம்மை நோன்பு, சூரிய சந்திரகிரகணம், மந்திரம், சகுனம் முதலான மூட நம்பிக்கை கள் ஒழிப்புப் பற்றி எழுநுறுக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளதைப் படித்துணர்ந்தேன். தொடர்ந்து இந்நூலைப் பற்றி நான் ஆய்வு செய்திட இதுவே தலையான காரணமாகும்.

ஆயினும் என்னிடம் இந்நூலின் படிகளை இரவல் பெற்ற நண்பர்கள் இருப்பித் தரவில்லை. எதிர்பாராத விதமாக திருச்சி நோபிள் கு. கொவிந்தராஜலு அவர்கள் தன்னிடமிருந்த இந்நூலின் படியினை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.

1972-73இல் பெரியார் ஈவெ.ரா. அவர்களின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் தொகுத்து முடித்தேன். இத்தொகுப்பில், ‘அறிமுகச் செய்திகள்’ (பக்கம் 1891 முதல் 1906 வரை) என்பது ஒரு பகுதியாகும். பிறருடைய பத்திரிக்கைகளுக்கும் நூல்களுக்கும் பெரியார் அளித்த மதிப்புரைகளை இத்தலைப்பின் கீழ் தொகுத்துவைத்தேன். இவற்றுள், ‘இந்துமத ஆசார ஆபாசதரிசனி’ நூலின் இரண்டாம் பதிப்புக்கு 14.09.1946இல் பெரியார் ஈவெ.ரா. அளித்த மதிப்புரையையும் (பக்கம் 1905-06)நான் சேர்க்க நேர்ந்தது. பெரியாரின் இம்மதிப்புரையில் உள்ள பின்வரும் செய்தி என் சிந்தனையை மேலும் தூண்டியது.

இச்செய்தி பின்வருமாறு:

‘…. …. … …. …..

நான் பெரிதும் தொண்டாற்றி வரும் பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் இன்றைக்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகத் துணிவோடு தெளிவாக செய்யுள் உருவாய்ப் பாடப்பட்டிருப்பதைக் கூர்ந்து நோக்கினால், சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் புதியனவல்லவென்பதோடு வெகுகாலத்திற்கு முன்னதாகவே, அதாவது நான் பிறப்பதற்கு முன்னதாகவே, பல அறிஞர்களால் வெளியிடப்பட்ட பழங்கருத்துக்கள் என்பதற்கு ஓர் தக்க சான்றாகும்’.

இதைப்போன்றே இந்நூலின் இரண்டாம் பதிப்புக்கு மதிப்புரைகள் வழங்கிய மற்ற அறிஞர்கள் தோழியர் குஞ்சிதம் குருசாமி, ச.த. சற்குணர், சேலம் கிளிக்காட்டு இறையொளியனார், அ.கி. பரந்தாமனார், நாரண. துரைக்கண்ணன், சோ. இலக்குமிரதன் பாரதி, சி. என். அண்ணாதுரை, சுவாமி கைவல்யம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கா. அப்பாதுரை, எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, டாக்டர் மு. வரதராசன் முதலானோர் வழங்கிய கருத்துக்களும் அமைந்திருந்தன.

இந்நூலின் முதற்பதிப்பு 1882இல் வெளிவந்துள்ளது. அம் முதற் பதிப்புக்கு சாற்றுக்கவிகள் வழங்கிய பு. அப்பாசாமி நாயகர், ஸ்ரீ இராமாநுச நாயகர், காஞ்சி கா. அண்ணாசாமி நாயகர், பு.முனுசாமி நாயகர் முதலானோர் இயற்றிய பாக்களிலும் தந்தை பெரியாரின் மதிப்புரையில் உள்ள கருத்துக்களே வலியுறுத்தப்பட்டுள்ளது. நிற்க.

1975 முதல் பெரியாரின் விரிவான வாழ்க்கை வரலாறு எழுதும் பணியை ஒருவாறு நான் தொடங்கினேன். இதற்கெனப் பல்வேறு பழைய நூல்களையும் ஏடுகளையும் நான் படிக்க நேர்ந்த்து. 1930ஆம் ஆண்டைய ‘குடி அரசு’ தொகுப்பை நான் ஆய்ந்தபோது 16.02.1930, 23.02.1930 நாளிட்ட ‘குடி அரசு’ இதழ்களில் தந்தை பெரியார் இந்நூலைப் பற்றி விடுத்த வேண்டுகோளைக் கண்டு வியப்புற்றேன்.

‘குடி அரசு’ 23.02.1930 இதழில் இது வெளிவந்த பக்கம் அப்படியே இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

அவ்வேண்டுகோள் பின்வருமாறு அமைந்துள்ளது:

ஓர் வேண்டுகோள்

50 வருடத்துக்குமுன் சுயமரியாதை இயக்கம்

சுமார் 40, 50 வருடத்திற்கு முன் பதிப்பித்ததும், ‘இந்துமத ஆசார ஆபாச தரிசனி’ என்ற பெயர் கொண்டதும், 762 பாடல்களை உடையதும், கிரௌன் ஒண்ணுக்கு எட்டு சைசில் 120 பக்கங்களை உடையதுமான ஒரு தமிழ்ப் புத்தகம் எங்கேயாவதும், யாரிடத்திலாவதும் கிடைக்குமானால் தயவுசெய்து வாங்கி, உடனே நமக்கு அனுப்பிக் கொடுக்கும்படி வேண்டிக்கொள்ளுகின்றோம்.

ஏனெனில், அப்புத்தகம் ஒன்று நமக்கு ஒரு மாதத்திற்கு முன் ஒரு நண்பரால் அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால், அது மிக்கப் பழையதாகவும், முதலிலேயே சில பக்கங்கள் இல்லாமலும், சில பக்கங்கள் கிழிந்து சரிவரத் தெரியாமலும் இருப்பதால், கிழியாத புத்தகம் ஒன்று வேண்டியிருக்கின்றது. அப்புத்தகம் நமது இயக்கக் கொள்கைகளையே முக்கியமய் வைத்துப் பாடின பாட்டுகள் அனேகம் அதில் இருக்கின்றன.

ஈ.வெ.ரா.

(‘குடிஅரசு’ 16.02.1930, பக்கம் 4; 23.02.1930 பக்கம் 4)

மேலே கண்ட வேண்டுகோளில் பெரியார் புலப்படுத்திய அறிவு நேர்மை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே இந்நூலிலிருந்து சில பாடல்களை எடுத்து என்னுடைய ‘சிந்தனையாளன்’ கிழமை ஏட்டில் வெளியிட்டேன். இதற்கிடையில் பெரியாரின் சமதர்மக் கொள்கைப் பிரசாரம் பற்றியும் இந்தியப் பொருளாதார அமைப்புப் பற்றியும் 1958 முதல் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினேன்.

1958இல் நான் வேலூரில் மத்திய சிறையில் கடுங்காவலில் பல மாதங்கள் வைக்கப்பட்டிருந்த போது, ‘தென்னிந்தியச் சாதிகளும் பழங்குலங்களும்’ (Castes and Tribes of Southern India) என்னும் எட்கர் தர்ஸ்ட்டன் அவர்களின் அரிய தொகுப்புகளைப் படிக்க நேர்ந்தது அதில் தென்னிந்தியாவில் உள்ள கருமண் நிலங்கள் பெரிதும் தெலுங்கரான ரெட்டி, கம்மவார் முதலான வகுப்பினரால் கைப்பற்றப்பட்டிருப்பதைத் தெளிவாகப் புலப்படுத்தியிருந்தார். கருமண் நிலங்கள் பணப்பயிர் விளைச்சலுக்கு மிகவும் ஏற்றவை; அதிகம் பாடுபடாமல் விளைச்சல் தரக் கூடியவை; மேலும் மழையைக் கொண்டே பலன் அளிக்கக் கூடியவை. நான் பிறந்த பெரம்பலூர் வட்டத்தில் உள்ள எசனை, சிறுவாச்சூர் முதலான ஊர்களிலுள்ள கோவில்களைப் பற்றியும் இவை ரெட்டி வகுப்பினரின் ஆதிக்கத்தி லிருப்பது பற்றியும் எட்கர் தர்ஸ்ட்டன் குறிப்பிட்டிருந்தார். இவ்வகுப்பினர் இப்பகுதிகளிலுள்ளை கருமண் நிலங்களில் பெரும் பகுதிப்பரப்பைக் கைப்பற்றி வைத்திருப்பதை நேரில் கண்ட நான் இவ்வகையில் மேலும் கவனம் செலுத்தினேன்.

1966இல் திருச்சியில் மிகப் பழமையான நில அடமான அறிக்கை (Land Settlement Report) ஒன்றைப் பெற்றுப் படித்து ஆய்ந்தேன். இது திருச்சி காவிரிப் பாசனப் பகுதியில் அடங்கிய திருச்சி வட்டம், குளித்தலை வட்டங்களுக்குரிய அறிக்கை. இதன் மூலம் இப் பகுதியிலுள்ள செழிப்பான நிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பு உடையவை பெரும்பாலும் பார்ப்பனர், வேளாளர் போன்றோரிடமும் மேல்சாதி கிறித்துவர்களிடமும், திருச்சியை ஆண்ட இஸ்லாமிய நவாபின் வழித்தோன்றல்களின் கைப்பற்றிலும் இருப்பதை உணர்ந்தேன்.

இதே சமயத்தில் சென்னை மாகண முன்னாள் பிரதமர் (Premier) ஓமந்தூர் பி. இராமாசாமி ரெட்டியார் அவர்கள் 1948இல் இந்திய விவசாய விளை பொருள்கள் விலை நிர்ணயக் குழுவினருக்கு (Agricultural Prices Commission) எழுத்து மூலம் தந்த சென்னை மாகாண நில உடைமை அமைப்புப் பற்றிய சுருக்கமான அச்சிட்ட நூலும் எனக்குக் கிடைத்தது.

இவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் நில உடைம அமைந்திருக்கிற முறை பற்றி நான் அறிந்த விவரங்களை 1980இல் நான் எழுதிய, ’தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி’, ‘பொதுவுடைமை வாதிகளும் பெரியார் கொள்கைகளும்’ என்கிற நூல்களில் முதலாவதாக வெளிப்படுத்தினேன்.

இந்நிலையில், ‘இந்துமத ஆசார ஆபாச தரிசனி’ என்ற நூலை மறுபதிப்புச் செய்ய எண்ணங்கொண்டு 1991 முதல் இதனை மென் மேலும் துருவிப் படித்தேன்.

இந்நூலின் ஆசிரியர் கவிஞர் அ.வேங்கடாசல நாயகர் அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு, 1897இல் இவர் இறந்தவுடனேயே ‘அக்கினி குல ஆதித்தன்’ என்ற ஏட்டில் ந.சி.வ. என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ’மிராசு பாத்தியதை’ என்னும் ஒரு நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அ. வேங்கடாசல நாயகர் எழுதியிருப்பதாகக் கண்டிருந்தது.

மேலும் இவர் செங்கற்பட்டு மாவட்டத்தில் வாழும் வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர்களின் செழுமையான நிலங்கள் பார்ப்பாராலும் வேளாளராலும் பறிக்கப்பட்டதைப் பற்றி ஆய்வு செய்து அன்றைய் ஆங்கிலேய ஆட்சியாளரிடம் அறிவித்து அதற்குப் பரிகாரம் தேட முயற்சித்த செய்திகளை இவ்வரலாற்றுக் குறிப்பின் வழியாக உணர்ந்தேன். இவை பற்றிய விவரங்கள் மேலே சொல்லப் பட்ட ‘மிராசு பாத்தியதை’ என்ற நூலில் இருக்குமோ என எண்ணினேன்.

இம்முயற்சியினை 1993இல் தீவிரமாக மேற்கொண்டபோது, எதிர்பாராதவிதமாக, அ. வேங்கடாசல நாயகரைப் பற்றிய செய்திகளடங்கிய பழைய ஏட்டுத் தொகுப்பு ஒன்று, தன்னுடைய நண்பர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை சா. சிவசங்கரன் என்பாரிடம் இருப்பதாகப் பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் குப்பம் தே. முத்து 1993 மே திங்களில் என்னிடம் கூறினார். உடனடியாக நாங்களிருவரும் சிந்தாதிரிப்பேட்டைக்குச் சென்றோம். அங்கு அ. வேங்கடாசல நாயகரின் உற்ற நண்பரான காஞ்சிபுரம் கா. அண்ணாசாமி நாயகரின் பெயரனும், அண்ணாசாமி நாயகர் வாழ்ந்த அதே வீட்டில் இன்றும் வாழ்பவருமான சா. சிவசங்கரன் அவர்கள், மிகவும் இற்றுப் போய்க் கிழிந்து சிதலம் அடைந்த தன்மையில் உள்ளதும், அச்சிட்ட இதழ்களின் தொகுப்பானதுமான பெரிய பழந்தொகுதி ஒன்றைக் காட்டினார். நான் படித்துப் பார்ப்பதற்கென அன்புடன் அதனை அளித்தார். அன்றிரவே அப்பெருந்தொகுப்பின் பல பகுதிகளை நான் புரட்டிப் பார்த்தேன்.

அத் தொகுப்பில் பு. முனுசாமி நாயகர் அவர்களால் வெளியிடப் பட்ட ‘The Thinker’ என்ற ஆங்கில வார ஏடு, ‘தத்துவ விவேசினி’ என்ற தமிழ் வார ஏடு இவற்றின் 1882, 1883, 1884, 1885, 1886 ஆகிய ஆண்டுகளின் இதழ்கள் முறையாகவும் வரிசையாகவும் அமைந்திருப்பதைக் கண்டேன்.

‘தத்துவ விவேசினி’ ஏட்டில் 1883 பிப்ரவரி 4 முதல் நவம்பர் 4 வரை பல சமயங்களில் அ. வேங்கடாசல நாயகர் அவர்கள் எழுதிய கட்டுரைத் தொடர் வெளிவந்துள்ளது. இத்தொடரில் செங்கற்பட்டு மாவட்டத்து வன்னியர்களிடமிருந்து பார்ப்பாரும் வேளாளரும் பறித்துக்கொண்ட மன்னர் வீடு ஊர்கள் அல்லது மன்னவேடு ஊர்கள் பற்றித் தொடர்ச்சியாக இவர் எழுதியிருப்பதைப் படித்தேன்.

இது ‘மிராசு பாத்தியதை’ என்ற இவருடைய நூலின் பகுதியாக இருக்குமோ என்பதை நான் அறிய விரும்பினேன். எனவே ‘தத்துவ விவேசினி’ ஏட்டின் முழுமையான தொகுதி இலண்டனில் இருக்கலாம் என எண்ணி, சென்னை பேராசிரியர் முனைவர் பொன். கோதண்டராமன் (பொற்கோ) அவர்கள் மூலம் எஸ். யோகநாதன், எஸ். செல்வ நாயகம் அகியோர்க்கு இலண்டனுக்கு 18.05.1993இல் மடல்கள் எழுதிக் கேட்டேன். இலண்டனில் ‘தத்துவ விவேசினி’ ஏடு இல்லை என்பதை உறுதி செய்து எஸ். யோகநாதன் உடனே விடை மடல் விடுத்தார்.

இந்திய நில உடைமை அமைப்பு, தமிழக நில உடைமை அமைப்புகள் பற்றி 1980 வரையில் நான் புரிந்துகொண்ட செய்திகள் இரண்டு. வருணாசிரம அமைப்பில் மேல்சாதி, கீழ்ச்சாதி என்கிற வடிவில் படிக்கட்டுச் சாதிபேதம் அமைந்துள்ளது போலவே, இந்திய வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தின் அடித்தளமான நில உடைமை அமைப்பு என்பதும் மேல்சாதி – கீழ்ச்சாதியினரிடையே பெருத்த வேறுபாட்டுடன் அமைந்துள்ளது என்பது முதலாவது. பெருநில உடைமையாளர்கள் என்பவர்களில் பெரும்பாலோர் சிறுபான்மை எண்ணிக்கையினரான மேல்சாதியினராக உள்ளனர்; சிறு நில உடைமைக் காரர்களாகவும் நிலவுடைமை பெறாதவர்களாகவும் இருப்பவர்களில் பெரும்பாலோர் கீழ்ச்சாதியினராக உள்ளனர் என்பது இரண்டாவது.

அ. வேங்கடாசல நாயகர் அவர்களின் கட்டுரைகள் என்னுடைய இந்த எண்ணத்துக்கு அரண் செய்வதாக உள்ளன என்று நான் கருதினேன்.

எனவே அரசியல் விடுதலையையும் பொருளாதார விடுதலை யையும் அடித்தளமாகக்கொண்டே சமூக விடுதலை அமையும் என்கிற புரிதலுடன் செயல்படும் மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சியின் சார்பில் இந்நூலை இப்போது வெளியிட முடிவு செய்தேன்.

இந்நூலை வெளியிட ஒப்புதல் நல்கிய மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினர்க்கும், இந்நூலைத் தொகுப்பதற்கான மூலச் சான்றுகளை அளித்ததோடு பாதுகாத்து வைத்த கா. அண்ணாசாமி நாயகர் அவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் மனமுவந்து அளித்த சென்னை சிந்தாதிரிப்பேட்டை சா. சிவசங்கரன் அவர்களுக்கும் என்றும் நன்றியுடையேன்.

இதனைப் பாதுகாத்து அளித்த கா. அண்ணாசாமி நாயகரின் உருவப் படத்தை இந்நூலில் இங்கே வெளியிடுவதில் பெருமையடைகிறேன்.

இவ்விடத்து, ‘இந்துமத ஆசார ஆபாச தரிசனி’ என்ற நூலைச் செவ்விய இரண்டாம் பதிப்பாக 1948இல் வெளிக்கொணர்ந்த திருப்பூரைச் சார்ந்தவரும், அவ்வூரில் 1946 வரையில் திராவிடர் கழக இலவச நூல் நிலையச் செயலாளராக இருந்தவரும், பின்னாளில் சென்னையில் தங்கசாலைத் தெருவில் வாழ்ந்தவருமான அறிவியக்க நூற் பதிப்பக உரிமையாளர் குரு. இராமலிங்கம் அவர்களை நாம் நினைவு கூர்வது சாலவும் பொருந்தும்.

அன்னாருக்கு இந்நூலின் சிதைந்த படியொன்று 1944இல் கிடைத்தது. அவர் வருந்தி முயன்று சென்னை பேராசிரியர் ச.த சற்குணர் அவர்களிடமிருந்து இதன் முழுமையான படியினை 1946இல் பெற்று, 1948இல் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டார். அவ்வாறு அவர் வெளியிடாமற் போயிருப்பின் தமிழகத்துக்கு இந்நூல் கிடைத்திருக்க வாய்ப்பிராது போயிருக்கும். இந்நூலின் இரண்டாம் பதிப்புக்கு அவர் எழுதிய பதிப்புரை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

இனி அத்திப்பாக்கம் அ. வேங்கடாசல நாயகரைப் பற்றியும், ‘பார்ப்பாரும் வேளாளரும் பறித்துக்கொண்ட வன்னியரின் மன்னவேடு ஊர்கள்’ பற்றியும் சில கூறுவோம்.

செங்கற்பட்டு மாவட்டம் அத்திப்பாக்கம் என்ற ஊரில் அய்யங்குட்டி என்பவரின் மகனாக 1800ஆம் ஆண்டளவில் தோன்றியவர் வேங்கடாசல நாயகர். 1897ஆம் ஆண்டு நவம்பர் 3 புதனன்று இவர் மறைவுற்றார். அப்போது இவருடைய வயது 98 எனக் குறிக்கப்பட்டுள்ளது கொண்டு, இவர் 1800 அல்லது 1799இல் தோன்றியவர் என்பதை நாம் உறுதி செய்கிறோம்.

இரண்டாம் பதிப்பில், 03.11.1897இல் மறைவுற்ற இவரைப் பற்றிய செய்தி, 18.09.1897 நாளிட்ட ‘அக்கினி குலாதித்தன்’ ஏட்டில் வெளி வந்ததாகக் கண்டுள்ளது. இது 18.11.1897 என இருக்கக்கூடும்.

இவர் வைணவ சமயப் பிரிவினர் என அறியமுடிகிறது. சிறிது காலம் கிறித்துவ மிஷினரிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் செங்கற்பட்டு மாவட்டத்து வன்னியர்களுக்கு உரிமையான மன்னர் வீடு ஊர்களை அடையாளங்கண்டு அவற்றை மீட்டுத்தர எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். அதனால் இவ்வூர்களைப் பறித்துக்கொண்ட சமீன்தார்கள், மிராகுதாரர்கள், சுரோத்திரியதாரர்கள் முதலானோரின் பகைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளானார் என அறிகிறோம்.

இவர் வருணாசிரம அமைப்பை எதிர்த்தவர் என்பதை, குன்னம் முனிசாமிப்பிள்ளை என்பவர் இயற்றிய ‘சாதி சங்கிரக சாரம்’ என்ற நூலுக்கான ஆதாரங்களை இவர் தேடித் தந்தார் என்பதன் வழியாக அறிகிறோம்.

‘இந்துமத ஆசார ஆபாச தரிசனி’ நூலின் தொடக்கப் பகுதியில் கடவுள் வணக்கம் பற்றிய பாடல்கள் உள்ளன. கடவுள் நம்பிக்கை யாளரான இவர் அளவுக்கு மீறிய கடவுள் நம்பிக்கையைக் கண்டனம் செய்பவராகவும், பல தெய்வ வணக்கத்தையும், புரோகிதத்தையும், மூட நம்பிக்கைகளையும், மூடச் சடங்குகளையும் கண்டனம் செய்பவராகவும் விளங்கினார் என்பதே நாம் அறியத்தக்க உண்மையாகும்.

‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி’ என்னும் தம் நூலைப் பற்றிய அறிவிப்பு ஒன்றினை அ. வேங்கடாசல நாயகர் அவர்களே, ‘தத்துவ விவேசினி’யில் விளம்பரம் போன்ற தன்மையில் வெளியிட்டுள்ளார்.

அது பின்வருமாறு:

கடிதம்

(*தத்துவ விவேசினி, ஏப்பிரல் 15, 1883 – பக்கம் 336.)

இதனடியிற் கண்ட ‘இந்துமத ஆசார ஆபாச தரிசனி’ யென்னும் புத்தகம் எசச (744) – விருத்தப்பாவால் வெள்ளிய நடையாய் இயற்றப் பட்டிருக்கின்றது. இதில், நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற சொத்தை அன்னியர்களுடைய மந்திர தந்திர பகட்டு வேஷங்களாகிய விபரீதச் சடங்கு முதலானங்களுக்கே அழித்து, நாமு நம்ம குடும்பங்களும் சகல சவுக்கிய சம்பத்தையு மிழந்து நாசப்படுகிறோமென்றும்; மற்ற எந்தத் தேசக் கண்டத்தாரும் நம்ம தேசத்தாரைப் போலில்லாமல் விவேக மடைந்து சகல கவுக்கிய சம்பத்துடனிருக்கிறார்கள் என்றும், நம்முடைய தேச ஆதி அரசர்கள் முதல் நம்ம வரையில் சொல்ப வீண் கல்பனை விஷயங்களுக்கெல்லாம் பயந்து ஒடுங்கித் திகிலடைந்து எதிலும் துணிவில்லாமல், எதுவும் தோற்றாமல் விதிவினை செயலென்றே முயற்சியில்லாமல் இருக்கிறதினால், நம்முடைய தேசச் செல்வத்தை அன்னிய தேசத்தார் கைக் கொள்ளவுள்ளாகி வறுமையில் இருக்கிறோ மென்றும், அனுபோக திருட்டாந்த பிரத்தியட்சங்களினால் காட்டியிருக் கிறோம். இதை வாங்கி வாசித்துப் பார்ப்பீர்களாகில், அனேக ஆச்சர்ய அனுமான ஆதிசய ஆபாசங்களை எல்லாங் கண்டு தேர்ச்சியுண்டாகி திட சித்தராய் அல்லலற்று நீடுழிகாலம் குடும்பத்தோடு நித்திய சவுக் கியத்தை அடையலாம். புத்தம் வேண்டியவர்கள் ஏழு கிணற் றண்டை கிரிகுரி தெருவு, கச (14) நெ. வீடு நம்மிடத்தில் தபால் கூலி யுள்பட புத்தகம் க.க்கு சு (1 க்கு 6) அணா விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

அ. வேங்கடாசல நாயகர்

மேலே கண்ட மடலில் தாம் எழுதியுள்ள விருத்தப்பாக்களை எசச என அ. வேங்கடாசல நாயகர் குறித்துள்ளார். இதுபற்றி, 1930இல் தந்தை பெரியார் குறிப்பிட்டபோது 762 பாடல்களை உடைய நூல் எனக் குறித்துள்ளார்.

ஆனால் நமக்குக் கிடைத்துள்ள இந்நூலின் இரண்டாம் பதிப்பில் (1948) பாயிரம் என்னும் தலைப்பில் 11 விருத்தப் பாக்களும், நூல் என்னும் தலைப்பின் கீழ் 790 விருத்தப்பாக்களும் ஆக மொத்தம் 801 விருத்தப்பாக்கள் உள்ளன என்பது நாம் அறியத் தக்கது.

இந்நூலைப் பற்றிய ஓர் அறிவிப்பைத் தத்துவ விவேசினி ஏட்டில் அதன் வெளியீட்டாளரே வெளிப்படுத்தியுள்ளார். அது வருமாறு:

‘இந்து மதாசார ஆபாச தரிசனி’ என்னும் நூல் ஒன்று ம.ள.ள.ஸ்ரீ (மகா ராய ராய ஸ்ரீ, மகா ராச ராச ஸ்ரீ) பாயக்கார ஏஜண்டு. அ. வேங்கடாசல நாயகரால் இயற்றப்பட்டு தபால் செலவுடன் ஆறு அணா விலைக்கு விற்கப்படுகின்றது. வேண்டியவர்கள் ஏழு கிணற்றையடுத்த கிரிகுரி தெருவில் ஷெயாருக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். (*தத்துவ விவேசினி, பிப்பிரவரி 4, 1883 – பக்கம் 256.)

கவிஞர் அத்திப்பாக்கம் அ. வேங்கடாசல நாயகர் அவர்கள் எழுதியுள்ள கட்டுரைத் தொடர்களின் வாயிலாகப் பின்வரும் செய்திகளைத் தெளிவாக நாம் உணரலாம்.

வன்னியர்கள் சேர, சோழ, பாண்டிய அரசர்களின் வழி வந்தவர்கள் என்றும், அவர்களிடம் படை வீரர்களாக இருந்தவர்கள் என்றும் அறியப்படுவது முதலாவதாகும்.

தமிழரசர்களின் வீழ்ச்சி கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் முற்றுப்பெற்றது. இவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, தெலுங்கர், மராட்டியர், இஸ்லாமியர் முதலானோரின் ஆட்சிகள் ஆங்கிலையர் வருங்காலம் வரை இங்கு நீடித்தன.

ஆங்கிலேயர் தமிழகத்தில் முதலில் காலூன்றியது செங்கற்பட்டு மாவட்டத்திலேயேயாகும் என வேங்கடாசல நாயகர் குறிப் பிட்டுள்ளார். சென்னை மகாகாண ஆளுநராக பெண்டிங் பிரபு இருந்த காலத்தில் இந்த மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் – லார்ட் பெண்டிங் ஆளுநராக இருந்த காலத்தில் – நவாப்பிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள் என்பதையும் 04.03.1883இல் அன்னார் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அச்சமயம் நவாப்பிடத்தில் செல்வாக்கான பதவிகளிலிருந்தவர்கள் மாத்துவப் பார்ப்பனர்களே யாவர். குறிப்பாக கான்கோய்றாயஜி என்கிற பார்ப்பனர் நவாப்பிடம் திவானாகப் பணியாற்றினார். இந்தச் செல்வாக்கை வைத்து இவர்கள் நவாப்பைத் தூண்டியதன் பேரில் ஆங்கிலேயர்கள் முப்பதாண்டுக் காலத்திற்குக் கீழ்க் குத்தகைக்கு மீண்டும் நவாப்பிடமே செங்கற்பட்டு மாவட்டத்தை ஒப்படைத்தனர்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள நிலங்கள் முற்காலத்தில் தமிழரசர்களால் பார்ப்பனர்கள், வன்னியர்கள், வேளாளர்கள் (தொண்டை மண்டல வேளாளர்கள்) முதலான சாதியார்க்குப் பிரித் தளிக்கப்பட்டிருந்தன. பார்ப்பனர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட ஊர்கள் அக்கிரகாரம் என்றும், வன்னியர்களுக்குப் பிரித்தளிக்கப் பட்ட ஊர்கள் மன்னவேடு என்றும், வேளாளர்களுக்குப் பிரித்தளிக்கப்பட்ட ஊர்கள் நத்தம் என்றும் பெயர் பெற்றன.

****45 பிற்காலத்தில் காஞ்சிப் பகுதியை ஆண்ட தொலாதானப் பல்லவ ராயன் என்பான் சொங்கற்பட்டு மாவட்டத்தில் அடங்கிய ஊர்களை எழு பங்குகளாக்கி அவற்றில் நான்கு பங்கு ஊர்களை மன்னவேடு என்று வன்னிய சாதியாருக்கும், இரண்டு பங்கு ஊர்களை நத்தம் என்று வெள்ளாள சாதியாருக்கும், ஒரு பங்கு ஊர்களை அக்கிரகாரம் என்று பார்ப்பார சாதியாருக்கும் பிரித்தளித்தான் என அ. வேங்கடாசல நாயகர் குறிப்பிட்டுள்ளார். மேலே கண்டவாறு பிரித்தளிக்கப்பட்ட நிலங்கள் பொதுப் பாத்தியமாக அந்தந்தச் சாதியாரால் அனுபவிக்கப்பட்டிருந்தன. இப்படி அந்தந்தச் சாதியாரால் அனுபவிக்கப்பட்டு வந்த ஊர்கள் பங்கில்லாத பசுங்கூர் ஊர்கள்' எனப் பெயர் பெற்றிருந்தன. அந்தத் தன்மையிலிருந்தால் அவற்றைப் பறித்துக் கொள்ள முடியாதன்று கருதி, பார்ப்பனர்களே முயற்சித்து, இவ்வூர்களை 'அறிதிக் கூறு ஊர்கள்' அல்லது 'அரிதிக் கூறு ஊர்கள்' என மாற்றி, வன்னியர்களுக்குச் சொந்த மாக இருந்த நான்கு பங்கு ஊர்களில் வளமாகவும் செழுமை யாகவும் இருந்த மூன்றரைப் பங்கு ஊர்களைப் பலப்பல வழிகளில் பார்ப்பனர்கள் பறித்துக் கொண்டனர். பார்ப்பனர்களே பெரும்பகுதி நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டு தங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த வேளாளர் களுக்குச் சிறு பகுதி நிலங்களை அளித்தனர் என அ. வேங்கா ாசல நாயகர் குறிப்பிட்டுள்ளார் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த மன்னவேடு ஊர்கள் பெரும்பாலும் காஞ்சிபுரம் தாலுக்கா, பொன்னேரி தாலுக்கா, கும்மிடி பூண்டி வகையறா கிராமங்கள் மற்றும் உள்ள ஏழு தாலுக்காக்களில் இருந்தன. இப்படியிருந்த கிராமங்களில் செழிப்பானவற்றைப் பார்ப்பனர் பறித்துக் கொண்டு அவர்களால் கழித்துவிடப்பட்ட வானம் பார்த்த மேட்டுநில ஊர்களே வன்னியர் களுக்குச் சொந்தமாக இருந்தன. இவ்வூர் நிலங்கள் சொற்ப ஏரிகளை நம்பியே இருந்தன. பார்ப்பனரின் உளவின் பேரில் இவ்வேரிகள் சீர் செய்யப்படாமலும் கிடந்தன. இப்படி யெல்லாம் ஏமாற்றி வன்னியர்களின் நிலங்களைப் பறித்துக் கொண் டவர்கள் அரசாங்க உத்தியோகப் பார்ப்பனரும் மற்றப் பார்ப்பனருமே ஆவர் என்பதை அ. வேங்கடாசல நாயகர் தெளிவுபடுத்தியுள்ளார். அப்போது செங்கற்பட்டு மாவட்டத்து வன்னியர்களின் நிலைமை எப்படி யிருந்தது என்பதையும் அவரே பின்வருமாறு விவரித்துள்ளார். வன்னியர்கள் அனேகராய் இருந்தபோதிலும் கவரன்மெண்டார் பார்ப்பார் விஷயத்தில் நம்பிக்கை வைத்திருந்தபடியால், இவர்களைக் அத் திப்பாக்கம் அ, னேம்கடாசல ாயகரின் பாயக்காரிகளுக்கும் மிராசதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம் 45 பிற்காலத்தில் காஞ்சிப் பகுதியை ஆண்ட தொலாதானப் பல்லவ ராயன் என்பான் சொங்கற்பட்டு மாவட்டத்தில் அடங்கிய ஊர்களை எழு பங்குகளாக்கி அவற்றில் நான்கு பங்கு ஊர்களை மன்னவேடு என்று வன்னிய சாதியாருக்கும், இரண்டு பங்கு ஊர்களை நத்தம் என்று வெள்ளாள சாதியாருக்கும், ஒரு பங்கு ஊர்களை அக்கிரகாரம் என்று பார்ப்பார சாதியாருக்கும் பிரித்தளித்தான் என அ. வேங்கடாசல நாயகர் குறிப்பிட்டுள்ளார். மேலே கண்டவாறு பிரித்தளிக்கப்பட்ட நிலங்கள் பொதுப் பாத்தியமாக அந்தந்தச் சாதியாரால் அனுபவிக்கப்பட்டிருந்தன. இப்படி அந்தந்தச் சாதியாரால் அனுபவிக்கப்பட்டு வந்த ஊர்கள் பங்கில்லாத பசுங்கூர் ஊர்கள்' எனப் பெயர் பெற்றிருந்தன. அந்தத் தன்மையிலிருந்தால் அவற்றைப் பறித்துக் கொள்ள முடியாதன்று கருதி, பார்ப்பனர்களே முயற்சித்து, இவ்வூர்களை 'அறிதிக் கூறு ஊர்கள்' அல்லது 'அரிதிக் கூறு ஊர்கள்' என மாற்றி, வன்னியர்களுக்குச் சொந்த மாக இருந்த நான்கு பங்கு ஊர்களில் வளமாகவும் செழுமை யாகவும் இருந்த மூன்றரைப் பங்கு ஊர்களைப் பலப்பல வழிகளில் பார்ப்பனர்கள் பறித்துக் கொண்டனர். பார்ப்பனர்களே பெரும்பகுதி நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டு தங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த வேளாளர் களுக்குச் சிறு பகுதி நிலங்களை அளித்தனர் என அ. வேங்கா ாசல நாயகர் குறிப்பிட்டுள்ளார் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த மன்னவேடு ஊர்கள் பெரும்பாலும் காஞ்சிபுரம் தாலுக்கா, பொன்னேரி தாலுக்கா, கும்மிடி பூண்டி வகையறா கிராமங்கள் மற்றும் உள்ள ஏழு தாலுக்காக்களில் இருந்தன. இப்படியிருந்த கிராமங்களில் செழிப்பானவற்றைப் பார்ப்பனர் பறித்துக் கொண்டு அவர்களால் கழித்துவிடப்பட்ட வானம் பார்த்த மேட்டுநில ஊர்களே வன்னியர் களுக்குச் சொந்தமாக இருந்தன. இவ்வூர் நிலங்கள் சொற்ப ஏரிகளை நம்பியே இருந்தன. பார்ப்பனரின் உளவின் பேரில் இவ்வேரிகள் சீர் செய்யப்படாமலும் கிடந்தன. இப்படி யெல்லாம் ஏமாற்றி வன்னியர்களின் நிலங்களைப் பறித்துக் கொண் டவர்கள் அரசாங்க உத்தியோகப் பார்ப்பனரும் மற்றப் பார்ப்பனருமே ஆவர் என்பதை அ. வேங்கடாசல நாயகர் தெளிவுபடுத்தியுள்ளார். அப்போது செங்கற்பட்டு மாவட்டத்து வன்னியர்களின் நிலைமை எப்படி யிருந்தது என்பதையும் அவரே பின்வருமாறு விவரித்துள்ளார். வன்னியர்கள் அனேகராய் இருந்தபோதிலும் கவரன்மெண்டார் பார்ப்பார் விஷயத்தில் நம்பிக்கை வைத்திருந்தபடியால், இவர்களைக்

46

46 கச்சேரிக்கு வரப்போக வொட்ட லம் யாதொன்றையும் சொல்ல மறையலிருக்கப் போதித்திருந்தபடி யால், அவர்களும் ஆனமட்டுக்கு மாவது சொல்லுவதற்கில்லாமல் போச்சுது, கவரன் மெண்டாரும் பொறுத்து விசாரணை செய்திருந்தால் இவ்வளவு கேடுபாடான மோசத்துக்கிடமாய்ப் போலிருக்க மாட்டார்கள்" எனக் குறித்துள்ளது Qarobr Qaoar b a cwpamb இவற்றின் விளைவாக வன்னியர்களில் பலரும் சிறுசிறு நில உடைமைக்காரர்களாகவும், உடலை வருத்திப் பயிரிடுகிறவர் களாகவும் காடு கரம்புகளை வெட்டிச் செய்நெர்த்தி செய்து பயிர் பண்ணுகிறவர்க வாகவும் குத்தகைக்கும் வாரத்துக்கும் நிலத்தைப் பயிர் பண்ணுகிறவர்க ளாகவும், நிலவுரிமை என்கிற பட்டா இல்லாத குடிகளாகவும் படியாளாகவும் மாறி இழிநிலையை அடைந்துவிட்டனர் என்பதை இவர் தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளார். இப்படிப்பட்ட இழி நிலைக்குத் தள்ளப்பட்ட வன்னியர்கள் "பாயக்காரிகள்" என அழைக்கப் பட்டனர் இந்தப் பாயக்காரிகளுக்கு உதவி செய்கிற பணியை இவர் இடைவிடாது மேற்கொண்டுழைத்த காரணத்தால் இவருடைய இத்தொண்டினை மதித்து 'செங்கற்பட்டு ஜில்லா பாயக்காரி ஏஜெண்டு' என்கிற ஒரு கவுரவப் பட்டத்தை இவருக்குச் செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியாளராக இருந்த பார்மர் என்பவர் அளித்துள்ளார். 1C இத்தகைய பணியைக் குறித்து 'தத்துவ விவேசினி' யில் 4.2.1883 முதல் தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதிய அ. வேங்கடாசல நாயகர் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும், A.V. செங்கற்பட்டு வில்லா பாயக்காரி ஏஜெண்டு என்றே தம் பெயரைக் குறிப்பிட்டு வந்துள்ளார். ஆனால் 27.5.1883க்குப் பின்னர் 7.10.1888, 21.10.1883 இதழ்களில் இவரெழுதிய கட்டுரைகளின் அ. வேங்கடாசல நாயகர் செங்கல்பட்டு வில்லா பாயக்காரி ஏலண்டு என்றே எழுதியுள்ளார். 46 கச்சேரிக்கு வரப்போக வொட்ட லம் யாதொன்றையும் சொல்ல மறையலிருக்கப் போதித்திருந்தபடி யால், அவர்களும் ஆனமட்டுக்கு மாவது சொல்லுவதற்கில்லாமல் போச்சுது, கவரன் மெண்டாரும் பொறுத்து விசாரணை செய்திருந்தால் இவ்வளவு கேடுபாடான மோசத்துக்கிடமாய்ப் போலிருக்க மாட்டார்கள்" எனக் குறித்துள்ளது Qarobr Qaoar b a cwpamb இவற்றின் விளைவாக வன்னியர்களில் பலரும் சிறுசிறு நில உடைமைக்காரர்களாகவும், உடலை வருத்திப் பயிரிடுகிறவர் களாகவும் காடு கரம்புகளை வெட்டிச் செய்நெர்த்தி செய்து பயிர் பண்ணுகிறவர்க வாகவும் குத்தகைக்கும் வாரத்துக்கும் நிலத்தைப் பயிர் பண்ணுகிறவர்க ளாகவும், நிலவுரிமை என்கிற பட்டா இல்லாத குடிகளாகவும் படியாளாகவும் மாறி இழிநிலையை அடைந்துவிட்டனர் என்பதை இவர் தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளார். இப்படிப்பட்ட இழி நிலைக்குத் தள்ளப்பட்ட வன்னியர்கள் "பாயக்காரிகள்" என அழைக்கப் பட்டனர் இந்தப் பாயக்காரிகளுக்கு உதவி செய்கிற பணியை இவர் இடைவிடாது மேற்கொண்டுழைத்த காரணத்தால் இவருடைய இத்தொண்டினை மதித்து 'செங்கற்பட்டு ஜில்லா பாயக்காரி ஏஜெண்டு' என்கிற ஒரு கவுரவப் பட்டத்தை இவருக்குச் செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியாளராக இருந்த பார்மர் என்பவர் அளித்துள்ளார். 1C இத்தகைய பணியைக் குறித்து 'தத்துவ விவேசினி' யில் 4.2.1883 முதல் தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதிய அ. வேங்கடாசல நாயகர் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும், A.V. செங்கற்பட்டு வில்லா பாயக்காரி ஏஜெண்டு என்றே தம் பெயரைக் குறிப்பிட்டு வந்துள்ளார். ஆனால் 27.5.1883க்குப் பின்னர் 7.10.1888, 21.10.1883 இதழ்களில் இவரெழுதிய கட்டுரைகளின் அ. வேங்கடாசல நாயகர் செங்கல்பட்டு வில்லா பாயக்காரி ஏலண்டு என்றே எழுதியுள்ளார்.

 

47

அந்திப்பாக்கம் அ. வேங்கடாசலு நாயகரின் பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாமிருக்கிற விவாதம் 47 'தத்துவ விவேசினி' யில் 4.11.1883இல் இவரால் எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்த பக்கங்கள் கிழிந்தும் அரைகுறையாகவும் உள்ளன. இக்கட்டுரையில் எப்போதும்போோல் க,2,ந,ச என்கிற தமிழ் எண்களைப் பயன்படுத்தாமல் 70-80, 63, 20, 119, 134 என அரபு எண்களையே பயன்படுத்தியுள்ளார். இக்கட்டுரையே இச்செய்தி பற்றி நமக்குக் கிடைத்திருக்கிற இவருடைய கடைசிக் கட்டுரையாக இருக்கக்கூடும். ஏனெனில் 4.11.1883க்குப் பின்னர் 12.12.1886 வரையிலான – நமக்குக் கிடைத்துள்ள இவ்ஏடுகளில் இவருடைய கட்டுரை எதுவும் வெளிவர வில்லை தத்துவ விவேசினி ஏட்டுக்கு இச்செய்தி பற்றி அ. வேங்கடாசலை நாயகர் எழுதிய எல்லாக் கட்டுரைகளுக்கும் 'கடிதம்' அல்லது கடிதங்கள்' என்றே தலைப்பிட்டு, பு. முனுசாமி நாயகர் வெளியிட் டுள்ளார். எனவே நாம் இந்நூலில் தொகுத்துள்ள கட்டுரைகளையும் கடிதம்-1, கடிதம்-2 என வரிசைப்படுத்தி மொத்தம் ஒன்பது கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். நிற்க வன்னியர்களின் இழிநிலையை மாற்றுவதை முதன்மையானை நோக்கமாகக் கொண்டு 1861 முதல் 23 ஆண்டுகள் தாமே எல்லா முயற்சிகளையும் செய்ததாக இவரே குறிப்பிட்டுள்ளார். இவ்வகையில் இவர் செய்த முயற்சிகள் பலவாகும். வன்னியர்களின் இழிநிலை குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத் தினருக்கு எழுத்து மூலம் அறிவித்தல், சென்னை மாகாண ஆளுநர் களுக்கு வேண்டுகோள் விடுத்தல், செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியாளர் களையும் துணை ஆட்சியாளர்களையும் செட்டில்மெண்டு அதிகாரி களையும் நேரிற்கண்டு பேசிப் பரிகாரம் கோரல், நீதிமன்றங்களில் தம் சொந்தச் செலவில் வழக்காடுதல் முதலான பணிகளை இவர் மேற்கொண்டுள்ளார் இவற்றினூடே, கவிஞர் அ. வேங்கடாசல நாயகர் முன்வைத்த கோரிக்கைகள் யாவை? ஆதிப் பொதுப்பாத்தியப் படிக்கு அந்தந்தச் சாதியார் கிராமங்களை அந்தந்தச் சாதியாருக்கே காயப்படுத்த வேண்டும். இது முடியாவிட்டால் அந்தந்தக் குடிகளின் கைப்பற்று நிலத்தை அந்தந்தக் குடிகளின் பேரிலாவது இரயத்துவாரி பட்டா பண்ணி வைக்க வேண்டும் அந்திப்பாக்கம் அ. வேங்கடாசலு நாயகரின் பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாமிருக்கிற விவாதம் 47 'தத்துவ விவேசினி' யில் 4.11.1883இல் இவரால் எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்த பக்கங்கள் கிழிந்தும் அரைகுறையாகவும் உள்ளன. இக்கட்டுரையில் எப்போதும்போோல் க,2,ந,ச என்கிற தமிழ் எண்களைப் பயன்படுத்தாமல் 70-80, 63, 20, 119, 134 என அரபு எண்களையே பயன்படுத்தியுள்ளார். இக்கட்டுரையே இச்செய்தி பற்றி நமக்குக் கிடைத்திருக்கிற இவருடைய கடைசிக் கட்டுரையாக இருக்கக்கூடும். ஏனெனில் 4.11.1883க்குப் பின்னர் 12.12.1886 வரையிலான – நமக்குக் கிடைத்துள்ள இவ்ஏடுகளில் இவருடைய கட்டுரை எதுவும் வெளிவர வில்லை தத்துவ விவேசினி ஏட்டுக்கு இச்செய்தி பற்றி அ. வேங்கடாசலை நாயகர் எழுதிய எல்லாக் கட்டுரைகளுக்கும் 'கடிதம்' அல்லது கடிதங்கள்' என்றே தலைப்பிட்டு, பு. முனுசாமி நாயகர் வெளியிட் டுள்ளார். எனவே நாம் இந்நூலில் தொகுத்துள்ள கட்டுரைகளையும் கடிதம்-1, கடிதம்-2 என வரிசைப்படுத்தி மொத்தம் ஒன்பது கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். நிற்க வன்னியர்களின் இழிநிலையை மாற்றுவதை முதன்மையானை நோக்கமாகக் கொண்டு 1861 முதல் 23 ஆண்டுகள் தாமே எல்லா முயற்சிகளையும் செய்ததாக இவரே குறிப்பிட்டுள்ளார். இவ்வகையில் இவர் செய்த முயற்சிகள் பலவாகும். வன்னியர்களின் இழிநிலை குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத் தினருக்கு எழுத்து மூலம் அறிவித்தல், சென்னை மாகாண ஆளுநர் களுக்கு வேண்டுகோள் விடுத்தல், செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியாளர் களையும் துணை ஆட்சியாளர்களையும் செட்டில்மெண்டு அதிகாரி களையும் நேரிற்கண்டு பேசிப் பரிகாரம் கோரல், நீதிமன்றங்களில் தம் சொந்தச் செலவில் வழக்காடுதல் முதலான பணிகளை இவர் மேற்கொண்டுள்ளார் இவற்றினூடே, கவிஞர் அ. வேங்கடாசல நாயகர் முன்வைத்த கோரிக்கைகள் யாவை? ஆதிப் பொதுப்பாத்தியப் படிக்கு அந்தந்தச் சாதியார் கிராமங்களை அந்தந்தச் சாதியாருக்கே காயப்படுத்த வேண்டும். இது முடியாவிட்டால் அந்தந்தக் குடிகளின் கைப்பற்று நிலத்தை அந்தந்தக் குடிகளின் பேரிலாவது இரயத்துவாரி பட்டா பண்ணி வைக்க வேண்டும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu