பாண்டிய நாட்டு மன்னர்கள்?

சேர நாட்டையும், சோழ நாட்டையும் தன் உள்ளடக்கிக் கொண்ட வைஷணவ சமயம். எக்காரணத்தினாலோ பாண்டிய நாட்டில் பரவாமல் நின்று விட்டிருக்கின்றது. ஆகவே பாண்டிய நாட்டில் சைவ சமயமே சர்வ பரிபூரணமாக ஆட்சி செய்திருக்கின்றது. இச்சமயத்தை அந்நாட்டிலே பரப்பியவர் நக்கீரரே தலை சிறந்தவர் ஆகும். பாண்டியநாட்டு அரச அவையிலே படைத்தலைவனாக இருந்த ஒரு சேனாதிபதியினுடைய மகன் நக்கீரர் என்று தெரிய வருகின்றது.

 

ஆனால் நக்கீரர் ராஜ போகத்தை விடுத்து எதற்காக சமயாச்சாரியாக மாறினார் என்பது தான் நம்முடைய ஆராய்ச்சிக்கு எட்ட வில்லை. அவர் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டும் நன்கு தெரிகின்றது. அவருடைய வாழ்க்கையிலே ஒரு தாசி அவர் மீது காதல் கொள்ளுகிறாள். அதற்கிணங்கும்படி நக்கீரரிடம் மன்றாடுகிறாள். அச்சமயத்தில் ராஜபோகத்தில் வாழ்ந்த நீங்கள் ஏன் துறவு கொள்ளல் வேண்டும் என்று நக்கீரரை பார்த்து கேட்கிறாள். இதைக் கொண்டு நாம் நக்கீரரை கூர்ந்து ஆராய்ந்தால் அவர் ஓர் போர் வீரன் என்று விளங்குகின்றது. நக்கீரரிடம் போர்குணம் இருந்தபடியால் தான் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று நீதிக்காக ஆண்டவனையே எதிர்த்தார் போலும் சமயத்திற்காக நீதிக்கு போராடிய இவர் அரசயலில் நீதிக்காக உயிரை விட்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வழித்தோன்றலாகவே இருக்கலாம். மேலும் திருநெல்வேலி ஜில்லா சிவகிரி குறுநில மன்னர்கள் சைவத்தை அனுசரிக்கும் போது அச்சமய ஆச்சாரியரான நக்கீரையை வழிபடுகின்றனர்.

 

அந்த சிவகிரி குறுநில மன்னர்கள் தான் பாண்டியநாட்டு மன்னர்களின் கடைசி சந்ததிகளாகும். அக்குறுநில மன்னர்கள் தங்களை வன்னிழுல க்ஷத்திரியர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

 

  • ••

 

சோழ நாட்டு மன்னர்கள்?

சேர நாட்டை போன்றே, சோழ நாட்டிலும் அரசாண்ட பல அரசகர்கள் வைஷ்ணவத்தையும், சைவத்தையும் பின்பற்றி ஆட்சி செய்திருக்கின்றனர். இவர்களிலே வைஷ்ணவத்தை திருமங்கை மன்னனும் சைவத்தை தழுவிய வல்லாளனும், வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வைஷ்ணவ வன்னியர்கள் குலசேகரனுக்கு அடுத்தபடியாக திருமங்க ஆழ்வாரையே கொண்டாடுகின்றனர். சைவ சமயத்தை தழுவி, அதன் மீது அளவிலாத பக்தி கொண்ட சோழ மண்டலத்து மகுடாபதி வல்லாள மகாராசன், ஓர் வன்னியன் என்று ருசுபடுத்துவதற்கு, இன்றும் திருவண்ணாமலையில் சான்று காணலாம்! ஆண்டு தோறும் நடைபெறும் வல்லாள மகாராசன் ஈமக்கிரியை சடங்கு திருவண்ணாமலைக்கு ஆடுத்த பள்ளி கொண்டா பட்டு ஆற்றங்கரையில் பிரதி மாசி மகத்தன்று நடைபெறுகின்றது. வல்லாள மகாராசனுக்கு ஈமக்கிரியை செய்ய திருவண்ணாமலை ஆலயத்திலிருந்து அருணாசல ஈஸ்வரர் சென்று ஆற்றங்கரையிலே தனது தந்தையான வல்லாள மகாராசனுக்கு (ஈஸ்வரன்) பிள்ளை பாவத்தில் அமர்ந்து தர்ப்பனங்ம கொடுக்கிறார். அச்சமயத்தில் சம்மந்தப்பட்டு கிராமத்திலுள்ள வன்னிகுல மக்கள், சுவாமி அருணாசல ஈஸ்வரருக்கு சம்மந்தம் கட்டுகின்றார்கள். இவை இன்றும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாசி மகத்தன்றும் நடைபெறுகின்றன. இதனுடைய தாத்பர்யம் என்ன? சோழ தேசத்து மன்னன் வல்லாள மகாராசன் ஓர் வன்னியன். அவனுக்கு நடக்கும் ஈமக்கிரியை சடங்கில் சம்மந்தம் உரிமை பாராட்ட வன்னியருக்குத்தான் உரிமை இருக்கிறது என்பது அனைவருக்கும் நன்கு புலப்படுகிறதல்லவா? இந்த உரிமையை ஒழித்து விட வேண்டுமென்று சில வேறு சமூகத்தினர்கள் செய்த சூழ்ச்சிகள் எல்லாம் தடுக்கப்பட்டு இன்றும் இந்த உரிமையை வன்னிய சமூகத்தினர் விடாமல் செய்து வருகின்றனர்.

இந்த வள்ளாள மகாராசன் ஈமக்கிரியை சடங்கில் வன்னியரின் உரிமையை நிலை நாட்ட, சென்னை இராயபுரம் வள்ளல் மு. இராசு நாயகர் அவர்கள், புதுவை இராமசாமி நாயகர் தர்ம பண்டின் தொகையைக் கொண்டு பிரதி வருடமும் இச்சடங்கை முன்னின்று நடத்தி வருகின்றார். இவருடன் மற்றும் திருவண்ணாமலை தாலுக்கா வன்னியர்களும் உடனிருந்து ஒத்துழைத்து வருகின்றனர்.

சோழ நாட்டு மன்னர்களின் கடைசி

பரம்பரையின் பிச்சபுரம் ஜமீந்தார்!

மற்றுமொரு உதாரணமும் கூறுகிறோம். சோழ மன்னர்களின் கடைசி பரம்பரையாக இன்று இருப்பவர்கள் தஞ்சை ஜில்லாவிலே உள்ள பிச்சபுரம் குறுநில மன்னரே யாகும். அவர்களில் யாராவது இளவரசு பட்டமோ அல்லது குறுநில மன்னராகவோ செய்விக்கப்படும் போது அச்சடங்கு சிதம்பரம் கோயிலிலே தான் நடைபெறுகின்றன. அதிலும் சுவாம நடராசா அவர்கள் அமரக்கூடிய பஞ்சாட்சரப் படியில் தான் பட்டம் தரிக்கும் குறுநில மன்னர் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்ளுகிறார்கள். இது மிகவும் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் தான். ராமலிங்க அடிகளையே விரலட்டி அடித்த பார்ப்பனர்கள் இதற்கெல்லாம் இடம் கொடுப்பார்கள்? ஒரு சாதாரண மனிதனை அதிலும் ஒரு வன்னியனை சுவாமி நடராஜா அவக்ள் அமரக்கூடிய டத்தில் உட்கார வைக்க பிரியப்படுவார்களா? என்று வாசகர்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் நாம் கூறுவது உண்மை. சுவாமி நடராசா அவர்களுக்கு எப்படி அபிஷேகம் செய்யப்படுகின்றதோ, அதைப் போன்றே இக்குறுநில மன்னருக்கும் செய்வித்து நாம் மேலே கூறியவாறு பட்டம் சூட்டுகின்றனர். இக்குறுநில மன்னர் பிச்சபுரம் அதிபதியாக சிதம்பரம் கோயிலில் ஆண்டவன் அமரக்கூடிய அதே பஞ்சாட்சரப்படியில் தான் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்கின்றார். சென்றகால சோழ தேசத்து மன்னர்களும் தான் கட்டிய பல கோயில்களில் சிதம்பரத்தை தான் தேர்ந்தெடுத்து இக்கோயிலின் பஞ்சாட்சரப்படியில் தான் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்வது வழக்கமாம். இதே உரிமையை பின்பற்றித்தான் சோழ மன்னர்களின் கடைசி பரம்பரையான தற்சமயம் பிச்சபுரம் குறுநில மன்னராக இருக்கும் ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அவர்கள் சமீபத்தில் சிதம்பரம் கோயிலில் மணிமுடி தரித்துக் கொண்டார். க்ஷ சோழனார் அவர்கள் வனினிகுல க்ஷத்திரிய சமூகத்தை சார்ந்தவரானபடியால் வன்னிய சமூகம் மன்னர்களின் வம்சத்தினர் என்று கூறுகிறோம்.

  • ••

சேர நாட்டு மன்னர்கள்?

சேர தேசம் என்பது கேரளம் (மலையாளம்) என்று இப்பொழுது அழைக்கப்படுகின்றது. இந்நாடு ஒரு காலத்தில் தமிழ்நாடாகவே தோற்றமளித்து, தமிழ் மொழியே அங்கு பேசப்பட்டு வந்தது. தமிழுடன் சமஸ்கிருதத்தை பலவந்தமாக சேர்க்கப்பட்டு, சுமார் 650 ஆண்டுகளாகத் தான் மலையாளம் என்ற சேர்க்கை மொழி இன்று அங்கு கையாளப்பட்டு வருகிறது. கேரளம் அன்று தமிழ்நாடாகத் திகழ்ந்த போது, அந்நாட்டை பல மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் குலசேகர மன்னன் மற்றொருவர் சேரமான் பெருமாள் நாயனார். இவர்களில் முந்தியவர் வைஷ்ணவர், பிந்தியவர் சைவர். அக்காலத்தில் சமயத்தின் பேரால் வாக்கு வாதமும், போராட்டமும் நடைபெற்று வந்தபடியால் வைணவத்தையும் சைவத்தையும் அதனதனை போற்றும் மன்னர்கள் ஆதரித்தனர் பிரியப்பட்ட சமயத்தை தழுவினர். இதன்படியே தனது குடும்பத்தாரையும், நாட்டு மக்களையும் தழுவும்படி கோரினர். மக்கள் அதன்படியே நடக்கவும் செய்தனர். அம்மக்களை அம்மன்னர்கள் சமயாச்சாரிகளாக தலைமை தாங்கி நடத்தவும் செய்தனர்.

அன்று, சமயப் போராட்டம்!

இன்று, கட்சிப் போராட்டம்! – ஆனால்

இரண்டிலும் எதைப் பார்க்கிறோம்?

இங்குதான் நாம் ஒரு முக்கிய விஷயத்தை தெரிவிக்கப் பிரியப்படுகின்றோம். இக்காலத்தில் பல அரசியல் கட்சிகள் இங்கு வேலை செய்கின்றன. அதில் அனேக மக்கள் சேர்ந்திருக்கின்றனர். அக்கட்சிகளை சில முக்கிய தலைவர்கள் தலைமை தாங்கி நடத்துகின்றனர். ஆனால் அக்கட்சியில் சேர்ந்திருக்கும் மக்கள், எஎடி தத்தமது சமூகத்தில் உதித்த தலைவர்களேயே அரசியல் கட்சிகளிலும் தலைவர்களாக தேர்ந்தெடுத்து, ஆதரித்து அவர் சொல்படி நடக்கன்றனறோ! இதுபோன்றே சமயப் போராட்டம் நடந்த அக்காலத்திலும், தத்தமது சமூகத்திலுதித்த சமயாச்சாரிகளையே தலைவராக ஏற்றும், போற்றிப் புகழ்ந்தும், அவர் வழி பின்பற்றுயும், அக்காலத்து மக்களும் நடந்திருக்கின்றனர். உதாரணமாக:- வைஷ்ண வதத்தில் இராமானுஜரை பிராமணர்கள் போற்றிப் புகழ்ந்து, சிலாக்கியமாக பேசுகின்றனர். அவரைவிட ஆழ்வாராதிகளிலே சிறந்தவர் வேறு யாருமில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவை அனைத்தும் எதைக் கொண்டு பேசுகின்றனர்? இராமானுஜரை விட அதிக பக்தி கொண்ட ஆழ்வாராதிகள் வைஷ்ணவத்தில் கிடையாதா? பலர் இருக்கின்றனர்.

 

அவரைவிட மேலான ஆழ்வாராதிகள் இல்லாமல் போனாலும், அவருக்கு ஈடாக இருக்கத் தான் செய்கின்றனர். இருந்திடினும் பிராமணர்கள் ஏன் இராமானுஜரை போற்றுகின்றனர்? எல்லாம் சமூகப் பற்று தான் காரணம்! இராமானுஜர் ஒரு பிராமணர்! என்ற காரணத்தினால் அவரை சிலாகித்துப் பேசுகின்றனர்! வைஷ்ணவ சமயத்தில் பிராமணர்கள் எல்லாம் இராமானுஜரையே தலைவனாக ஏற்று, பெரு மதிப்பு கொடுத்து ஆதரித்தனர். இது போன்றே சைவ சமயத்திலும் பிராமணர்கள், தனது குடிப்பிறந்த சங்கராச்சாரியாரையே போற்றி, உயர்வாக பேசி, அவர் காட்டிய வழியிலேயே சைவ பிராமணர்கள் இன்றும் நடந்து வருகின்றனர்.

 

வேளாளர்கள், சேக்கிழாரையும்

அரிஜனங்கள், நந்தனாரையும்

போற்றிப் புகழ்வதின் மர்மம் என்ன?

இது போன்றே வேளாளர்க்ள் வைஷ்ணவத்தில் பெரியாழ்வாரையும் சைவத்தில் சேக்கிழாரையும், தாழ்த்தப்பட்டவர்கள் வைஷ்ணவத்தில் திருப்பாணாழ்வாரையும், சைவத்தில் நந்தனாரையும், இதுபோன்றே பற்பல சமூகத்தினர்கள், தத்தமது குடிபிறந்த தலைவர்களையே சமயத்திலும் பின்பற்றி நடந்தது அவர்களைப் போற்றி வந்திருக்கின்றனர். இதன்படியேதான் வன்னிய சமூகத்தினரும் வைஷ்ணவத்தில் தமது குலத்தில் வந்த குலசேகர ஆழ்வாரையும், சைவத்தில் சேரமான் பெருமாள் நாயனாரையும் ஆதரித்து, அவர்களையே சமய தலைவர்களாக ஏற்று அவர்கள் காட்டி வழியே நடத்திருக்கின்றனர். எனவே சேரநாட்டை ஆட்சி கெய்த குலசேகரனும், சேரமான் பெருமாள் நாயனாரும், மன்னர் குலமாதலால் அக்குல மன்னரை ஆதரிக்கும் வன்னிய சமூகம் அரச பரம்பரை என்று நாம் திடமாக கூறுகிறோம். இதற்கு அத்தாட்சி தேவையெனில் நாடெங்கும் உள்ள வைஷ்ணவ வன்னியர்கள் இன்று தனது குடிபிறந்த குலசேகர மன்னன் பெயரால், ஸ்ரீமத் குலசேகர ஆழ்வார் பக்த ஜன சபை என்றும், குலசேகர ஆழ்வார் பக்தஜன சபை என்றும், குலசேகர சுவாமிகள் பஜனை மடம் என்றும் தனது சமூக பற்றினால் உரிமை பாராட்டி, தனது குலத்தலைவனையே சமயத்திலும் தலைவனாக ஏற்று, இன்றும் நடந்து வருகின்றனர். ஆழ்வார்களிலே பல பேர் இருக்க, அவர்கள் பெயரை மட்டும் வன்னியர்கள் போற்றி புகழ்வதேன்? சமயமாயினும், கட்சியாயினும் அல்லது வேறு எது வந்து தன் முன் நின்றாலும் சமூக கண் கொண்டு பார்த்தே எப்போதும் எல்லோரும் நடந்திருக்கின்றனர்.

  • ••

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu