@Copyright – C.N.Ramamurthy M.Com, B.L. Founder President, Vanniyar Kootamaippu.
e-Book Publication – E-edition Version – 1 – 2021
Publisher:
Kshatriyas Documentary
For Contacts:
Kshatriyas Documentary
# 7, First Main Road,
Kamdar Nagar, Nungambakkam,
Chennai – 600 034
Email – info@vanniyarkootamaippu.com
+91 9941311788
URL: www.vanniyarkootamaippu.com
தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் (PUBLIC CHARITABLE TRUST)
மற்றும்
நிலைக்கொடைகள் (ENDOWNMENTS) பாதுகாத்தல்
மற்றும்
பேணி வருதல் சட்டம் 2018 (சட்டம் 44/2018)
- கடந்த 04.02.2019 அன்று தமிழ்நாடு அரசால் அரசிதழில் Notification No: 11(2)/BCMBCMW/117) (g-1) 2019 மூலமாக வெளியிடப்பட்டு அன்று முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் வன்னிய அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைக்கு மட்டும் பொருந்தும்.
- வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தை சேர்ந்த பல கோமான்கள் / நபர்கள் பல்வேறு அறச்செயல்கள் (ஓய்வு இல்லங்கள், சத்திரங்கள், பாடசாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஏழைகளுக்கு உணவளிக்கும் இல்லங்கள், கல்வி மேம்பாட்டிற்கான நிறுவனங்கள், மருத்துவ உதவிகள், மக்கள் நல்வாழ்வு, இன்ன பிற நோக்கங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றம், ஆன்மீகப் பணிகள், சமுதாய முன்னேற்றம் மற்றும் பல நோக்கங்களுக்காக வன்னியர்கள் பயன்பெறும் பொருட்டு பணம், பொருள் மற்றும் சொத்துக்களை வழங்கி உள்ளார்கள். மேலும் இது முறையாக பயனாளிகள் (வன்னியர்கள்) பயன்பெறும் வகையில் அறநிலை பொறுப்பாட்சிகள் (Public Charitable Trust) மற்றும் நிலை கொடைகள் (Endowment) உருவாக்கிவிட்டு சென்று இருக்கிறார்கள்.
- சட்டத்தின் நோக்கம் (Object of Law)
- மேற்குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் அதன் நோக்கங்களுக்காக பயன்படாமலும், நல்ல நிலையில் பேணி பாதுகாத்து வராமலும் இருக்கின்றனர். மேலும் சில அறநிலைய பொறுப்பாட்சி சொத்துக்கள் அதன் நோக்கங்களுக்கு பயன்படாமலும் அதன் பின் தொடர்ச்சியாக வரும் நிர்வாகிகளால் விற்கப்பட்டும் அல்லது அந்த நிர்வாகிகளோ அல்லது அவர்களுடன் தொடர்புடைய நபர்களாலோ அல்லது மூன்றாம் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்த அறநிலையின் நோக்கங்கள் நிறைவேற்ற முடியாத நிலையிலும் உண்மையான பலன்கள் அதன் பயனாளிகளுக்கு சென்று அடைய முடியாத நிலையிலும் உள்ளது.
- மேற்குறிப்பிட்ட பொறுப்பாட்சி சொத்துக்கள் மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களை பாதுகாப்பதுக்கும் அந்த பொறுப்பாட்சிகளை (Trust) ஏற்படுத்திய கொடையாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றவும், நல்ல நிர்வாகத்தை வழங்கவும், முறை கேடாக விற்கப்பட்ட சொத்துக்களை மீட்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசாங்கத்தால் மேற்குறிப்பிட்ட சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
- வன்னியகுல சத்திரியர் பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகளின் நிருவாகக் குழுமம் (Board of Members)
- மேற்குறிப்பிட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த அரசானது, இந்தச் சட்டத்தின் மூலம் ஒரு நிருவாகக் குழுமத்தை (Board) ஏற்படுத்தி உள்ளது. இந்த குழுமத்தில் பதவி வழி உறுப்பினர்கள் தவிர அனைவரும் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த நபர்களைத்தான் நிருவாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். மேலும் நிருவாகக் குழுமத்தின் பதவியும் இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்கண்ட பதவிகள் உருவாக்கப்பட்டு இந்தச் சட்டத்தை செயல்படுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.
- ஒரு தலைமையாளர் (Chair Person) அவர் வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும்.
- பின்வரும் உறுப்பினர்கள் அவர்களும் வன்னியகுல சமுதாயத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும்.
- உச்சநீதி மன்றம் அல்லது உயர்நீதி மன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு நபர்.
- அகில இந்திய பணிகளில் இருந்து ஒரு நபர். (All India Service)
- சட்டமன்ற பேரவையில் உறுப்பினர்களில் இருநபர்கள். (MLA)
- பொறுப்பாட்சிகளின் பொறுப்பாட்சியாளர்கள் மற்றும் நிலைக் கொடையின் நிர்வாகிகள் ஆகியோருக்கிடையே இருந்து ஒரு நபர். (One Person from Trust or Endowment)
- வன்னியகுல சத்திரியர் சமுதாய நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு நபர். (One Person belongs to the Same Community)
- சட்டத்தொழில், தணிக்கை, வணிகம், கல்வி, பொறியியல் மற்றும் தொழிற்சாலை ஆகிய துறைகளில் நல்ல பெயர் பெற்றுள்ள புகழ் வாய்ந்த நபர்கள் இருவர்.
- வன்னியகுல சத்திரியர் நலனுக்காக பணியாற்றி உள்ள அதே சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பெண்கள். (Two Women Lady belongs to the Same Community)
- பின்வரும் பதவி வழி உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும். அவர்கள் வன்னியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு செயலாளர்.
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் ஆணையர் அல்லது இயக்குநர்.
- மேற்குறிப்பிட்ட அனைத்து நிருவாகக் குழு நபர்களின் பதவிக் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.
- நில அளவையர் (Surveyor)
- பொறுப்பாட்சிகள் (Trust) மற்றும் நிலைக் கொடைகளின் (Endowment) சொத்துக்களை அளந்து பட்டியலிட (List) வட்டாட்சியர் படிநிலைக்கு குறையாத நில அளவையர்களை அரசு ஒரு ஆணையை பிறப்பித்து நியமனம் செய்யவேண்டும்.
- அந்த நில அளவையர்கள், தேவையானதாக இருக்கக்கூடிய அத்தகைய விசாரணையை செய்த பின்னர், பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களை பொறுத்த அளவில் பின் வரும் தகவல்களை தனது அறிக்கையின் மூலமாக அரசுக்கு பணிந்தனுப்புதல் வேண்டும். அதாவது :
- அப்பரப்பிடத்தில் உள்ள பொறுப்பாட்சிகள் (Trust) நிலைக்கொடைகளின் (Endowment) எண்ணிக்கை.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை ஒவ்வொன்றும் அமைக்கப்பட்டதன் இயல்பு மற்றும் நோக்கம்.
- ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையிலிருந்து வரும் மொத்த வருமானம்.
- ஒவ்வொரு பொறுப்பாட்சியையும் நிலைக்கொடையையும் பொறுத்த அளவில் செலுத்தப்பட வேண்டிய நில வருவாய், கட்டணங்கள் மற்றும் வரிகள்.
- ஒவ்வொரு பொறுப்பாட்சிக்கும் மற்றும் நிலைக்கொடைக்கும் உள்ளாகும் செலவினங்கள்.
- ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை தொடர்பாக வகுத்துரைக்கப்படக் கூடிய இன்ன பிற தகவல்கள்.
- நில அளவை அலுவலர், விசாரணை எதனையும் செய்யும் போது, பின்வரும் பொருட்பாடுகளைப் பொறுத்த அளவில், 1908ஆம் ஆண்டு உரிமையியல் வழக்கு விசாரணை முறை தொகுப்புச் சட்டத்தின் படி உரிமையியல் நீதிமன்றம் பெற்றுள்ள அதே அதிகாரங்களை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது :
- சாட்சி எவருக்கும் அழைப்பானை அனுப்பி வரவழைத்து விசாரணை செய்தல்.
- ஆவணங்கள் எதையும் ஆராயவும், சமர்பிக்குமாறு கோருதல்.
- நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் பொதுப் பதிவுருகள் எதையும் கோரிப் பெறுதல்.
- சாட்சிகள் அல்லது கணக்குகளை ஆய்வு செய்வதற்காக ஆணையங்களை (Commission) பிறப்பிக்க ஆணையிடுதல்.
- உள்ளுர் ஆய்வுகளையும் அல்லது உள்ளுர் புலனாய்வுகளையும் செய்தல்.
- வகுத்துரைக்கப்படக்கூடிய இன்ன பிற பொருட்பாடுகள்.
- அத்தகையை விசாரணை எதனின் போதும் குறிப்பிடப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒன்று தனிப்பட்டதொரு பொறுப்பாட்சியா அல்லது நிலைக்கொடையா அல்லது பொது பொறுப்பாட்சியா அல்லது பொது நிலைக்கொடையா என்பது குறித்த பூசல் எதுவும் எழுமானால் மற்றும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஆவணத்தில் அதன் இயல்பு குறித்து தெளிவான குறிப்புக்கள் இருக்கின்றனவா என்ற அடிப்படையில் விசாரணை செய்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.
- அரசானது, ஆணையின் வாயிலாக, பரப்பிடம் எதிலும் உள்ள பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையை பொறுத்த அளவில் இரண்டாவது அல்லது அதற்கடுத்த நில அளவை செய்யுமாறு நில அளவை அலுவலரைப் பணிக்கலாம்.
- மேற்குறிப்பிட்ட முறையில் சொத்துக்களின் பட்டியலை நில அளவையர்கள் குழு, நிருவாகக் குழுமத்திற்கு (Board) அனுப்ப வேண்டும். நில அளவையர் அனுப்பிய அந்தப் பட்டியலை நிருவாகக் குழுமம் அரசுக்கு அனுப்பி அதன் ஒப்புதலோடு அரசிதழில் வெளியிட வேண்டும். மேற்குறிப்பிட்ட சொத்துப் பட்டியலில் உரிமை தொடர்பான பிரச்சனை எழுமானால் பாதிக்கப்பட்ட நபர் ஓராண்டிற்குள் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அவரது சொத்தினை மீட்டுக் கொள்ளலாம். ஆனால் நீதிமன்ற உத்தரவே இறுதியானது. நில அளவையர்களுக்கு ஏற்படும் செலவினங்களை அந்தந்த பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நிர்வாகம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- நிருவாகக் குழுமத்தின் கூட்டங்கள் (Board Meeting)
- நிருவாகக் குழுமத்தின் முன்பாக வரும் அனைத்து பிரச்சனைகள் மற்றும் தீர்மானங்களை நிருவாகக் குழுமத்தின் உறுப்பினர்களை பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். ஆனால் சமமாக ஓட்டு வரும் பட்சத்தில் தலைவரின் (Chairman) ஓட்டைப் பொறுத்து இறுதி முடிவு செய்யப்பட வேண்டும்.
- முதன்மை நிர்வாக அலுவலர் (Chief Administrative Officer)
- முதன்மை நிர்வாக அலுவலர் என்பவர் அரசு துணைச் செயலாளர் (Deputy Secretary to the Government) படி நிலைக்கு குறையாதவராக இருக்க வேண்டும். குறிப்பாக வன்னியராக இருக்க வேண்டும். அவர் நிருவாகக் குழுமத்தின் (Board) ஆலோசனைப்படி அரசினால் பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும். அவர் நிருவாகக் குழுமத்தின் உறுப்பினர் – செயலாளராக இருத்தல் வேண்டும். அவர் நிருவாக் குழுமத்தின் நிருவாகக் கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.
- முதன்மை நிர்வாக அலுவலரின் பணிகள் (Duties of the Chief Administrative Officer)
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களில் இயல்பையும், அளவையும், கவனமாக ஆய்வு செய்தல், பொறுப்பாட்சி சொத்துக்களின் விபரப் பட்டியல், கணக்கு விபரங்களை தேவைப்படும் பொழுது பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை நிர்வாகிகளிடம் இருந்து கோரிப் பெறுதல், மேலும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைகளை பேணி கண்காணித்து வருவதற்கும், தக்க அறிவுரை வழங்குவதற்கும் அதன் நோக்கத்தை செயல்படுத்த தக்க ஆணைகளை வழங்கிட வேண்டும்.
- முதன்மை நிர்வாக அலுவலர் அவர்கள் நிருவாகக் குழுமத்தினால் பிறக்கப்பட்ட ஆணை மற்றும் பொறுப்பாட்சி, நிலைக்கொடை ஆவணங்களில் காணப்படும் பணிப்புரைக்களுக்கு இணங்கிய வகையில் செயல்படுதல் வேண்டும்.
- கீழ் குறிப்பிட்ட நிருவாகக் குழுமத்தினால் (Board) பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது சட்டத்திற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் முதன்மை நிர்வாக அலுவலர், நிருவாகக் குழுமத்திற்கே மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பலாம். மேலும் அதில் முடிவு எடுக்கப்படாத பட்சத்தில் அரசிடம் இருந்து ஆலோசனைப் பெற்று செயல்படுத்தலாம்.
- சட்டத்திற்கு இணங்கிய வகையில் ஆணை பிறப்பிக்கப்படவில்லை அல்லது நிறைவேற்றும் படியாக இல்லை.
- இந்தச் சட்டத்தாலோ அல்லது அதன்படியோ அல்லது பிற சட்டம் எதனின்படியோ நிருவாகக் குழுமத்திடம் வழங்கப்பட்ட அதிகாரங்களை மிஞ்சிய வகையில் அல்லது அவற்றை தவறாகவும் பயன்படுத்திய வகையில் இருக்கும் பட்சத்தில்.
- அந்த ஆணை அல்லது தீர்மானத்தை நடைமுறைப் படுத்தப்பட்டால் நிருவாகக் குழுமத்திற்கும் அல்லது நிலைக்கொடைக்கும் பெரும்பாலும் நிதி இழப்பினை ஏற்படுத்தக் கூடும்.
- கலகத்தை அல்லது அமைதி குழைவினை ஏற்படுத்தக் கூடும்.
- மனித வாழ்வை, நல்வாழ்வு அல்லது பாதுகாப்பிற்கு அபாயம் உண்டாகக் கூடும்.
- பொதுவாக நிருவாகக் குழுமத்திற்கோ அல்லது பொறுப்பாட்சிக்கோ அல்லது நிலைக்கொடைக்கோ நலன் தருவதாக இல்லையென கருதினால் அத்தகைய ஆணையை அல்லது தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பாக நிருவாகக் குழுமத்தின் முன்பு மறுபரிசீலனைக்கு வைக்கலாம்.
- இந்தச் சட்டத்தில் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளின் வகை முறைகளுக்கு உட்பட்டு முதன்மை நிர்வாக அலுவலர் அந்த பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையானது அமைந்துள்ள மாவட்டத்தின் ஆட்சியாளர் மூலமாகவோ அல்லது ஆட்சியாளர் நியமிக்கப்பட்ட பிற பொறுப்பான அலுவலர் மூலமாகவோ தனது அதிகாரத்தை செலுத்தலாம்.
- முதன்மை நிர்வாக அதிகாரி அல்லது அவரது அதிகாரம் பெற்ற நபர்கள் அரசு பொது அலுவலங்களின் அல்லது பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் ஆவணங்களும் பார்வையிடுவதற்கு அதிகாரம் பெற்ற நபர்கள் ஆவார்கள்.
- நிருவாகக் குழுமம் வகுத்துரைக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் முதன்மை நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யவும், நகல் வழங்கவும் அப்படி வழங்கப்படும் நகல் முதன்மை நிர்வாக அலுவலரால் சான்று அளிக்கப்பட வேண்டும்.
- முதன்மை நிர்வாக அதிகாரியின் அதிகாரங்கள் (Power of Chief Administrative Officer)
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைக்கு இழப்போ அல்லது சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை நிருவாகக் குழுமத்தின் (Board) அனுமதி பெற்று அனைத்து பதிவுருகள் (Records), தகவல் தொடர்புகள், திட்டங்கள், கணக்குகள் பிற ஆவணங்களை ஆய்வு செய்யலாம்.
- மேற்குறிப்பிட்ட ஆய்வுகளுக்கு அந்தந்த பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட ஆய்வின் போது பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைக்கு எதிராக, தவறாக கையாடல், மோசடி செய்து இழப்பு ஏற்படுத்தி வந்தால் அந்த நிர்வாகி மீது நிருவகக் குழுமத்தின் அனுமதி பெற்று Show Cause Notice அனுப்பி இழப்பு ஏற்படுத்திய பணத்தை கட்டுமாறு ஆணையிடலாம்.
- இந்த ஆணையை எதிர்த்து பாதிக்கப்பட்ட நிர்வாகி 30 நாட்களுக்கு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம்.
- நீதிமன்றம் அந்த இழப்புத் தொகையை அதன் ஆணையின் மூலம் நீக்கலாம் அல்லது குறைக்கலாம். நீதிமன்ற முடிவே இறுதியானது.
- முதன்மை நிர்வாக அலுவலருக்கு தொகையை வசூலிக்க உள்ள அதிகாரம்
- பிரிவு 28ன் படி பணத்தை செலுத்துமாறும் அல்லது சொத்து எதனின்
- உடமையை திரும்ப அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ள பொறுப்பாட்சி அல்லது நிர்வாகி அல்லது பிற நபர்கள் எவரும் அத்தகைய ஆணையில் குறித்துரைக்கப்பட்ட கால அளவிற்குள் செய்ய தவறுகின்ற பட்சத்தில் அந்த சொத்து அமைந்துள்ள மாவட்ட ஆட்சியாளருக்கு சான்றிதழ் ஒன்றை அனுப்பி அந்த சான்றிதழில் குறித்துரைக்கப்பட்ட தொகையை நில வருவாய் நிலுவை ஒன்றை வசூலிப்பதை போல் வசூலித்து மாவட்ட ஆட்சியாளர் அதனை முதன்மை நிர்வாக அலுவலருக்கு செலுத்துதல் வேண்டும்.
- நிருவாகக் குழுமத்தின் (Board) அதிகாரங்களும் மற்றும் பணிகளும்
- நிருவாகக் குழுமமானது பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதை நிறைவேற்றுவது நிருவாகக் குழுமத்தின் கடமையாகும்.
- நிருவாகக் குழுமத்தின் அதிகாரங்கள் (Power and function of the Board)
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் தோற்றம், வருமானம், நோக்கம் மற்றும் நலன் பெறுபவர்களின் விபரங்கள் அடங்கிய தகவல்களை பேணி பாதுகாத்து வரவேண்டும்.
- நோக்கத்திற்கான செலவுகளை உறுதி செய்தல் வேண்டும்.
- பணிப்புரைக்களை (Direction) வழங்குதல்.
- மேலாண்மைக்கான திட்டங்களை தீர்வு செய்தல். ஆனால் அதில் பாதிக்கப்படுபவர்களின் கருத்தை கேட்க வேண்டும்.
- வரவு, செலவு திட்டங்களை கூராய்வு செய்தல் மற்றும் தணிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- இச்சட்டத்திற்கு இணங்கி பொறுப்பாட்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்தல் அல்லது அகற்றுதல்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் தொலைந்து போன சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்தல்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்து சம்மந்தமாக வழக்கு தொடுத்தல் அல்லது எதிர்கொள்ளுதல்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை சொத்தின் விற்பனை, அடமானப் பரிமாற்றம், குத்தகை ஆகியவற்றிற்கு ஒப்பளிப்பு வழங்குதல். ஆனால் 2/3 நிர்வாக உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.
- நிதியத்தை (Fund) நிர்வாகம் செய்தல்.
- புள்ளி விவரங்கள், கணக்குகள் மற்றும் பிற தகவல்களை கோரிப் பெறுதல்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் கணக்கு பதிவுருக்கள் (Account and Records) அல்லது ஒப்பாவணங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தல் அல்லது ஆய்வு செய்வதற்கு ஆவண செய்தல்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் சொத்துக்களின் இயல்பையும் அளவையும் புலனாய்வு செய்து தீர்மானித்தல் மற்றும் நில அளவு தேவையெனின் அதற்கும் ஏற்பாடு செய்தல்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் மிகையான வருமானத்தை அதன் நோக்கத்திற்கு இணங்கிய வகையில் பயன்படுத்துதல்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் நோக்கம் அற்று போகிற அல்லது எய்த இயலாத நிலையில் உள்ள பொறுப்பாட்சியின் வருமானத்தை கிட்டத்தட்ட அதே போன்று நோக்கம் எதுவோ அல்லது ஏழ்மை நிலையில் உள்ள வன்னியர் குல சத்திரியர் மக்களின் பொருளாதார, சமூக, கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் அடையச் செய்யவும் வாழ்வதாரங்களை பெருக்கவும் பயன்படுத்த வேண்டுமென பணித்தல். இந்த பணிப்புரையில் பாதிக்கப்பட்ட நபர் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்துக் கொள்ளலாம்.
- சொத்தில் விற்பனை மையமாக அதாவது அங்காடிகள், வீட்டு குடியிருப்புகள் போன்ற மேம்பாடுகளை செய்ய வளம் இருக்கும் போது அதை உரிய பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடை நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தி ஆலோசனை வழங்கலாம். அப்படி அவர்களால் இயலாத போது நிருவாகக் குழுமமே (Board) நிதியை உருவாக்கி மேம்பாட்டு பணிகளை செய்து அந்த செலவு தொகை திரும்ப பெறும் வரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அப்படி செலவு தொகை முழுவதும் திரும்ப பெற்ற பின் பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கலாம்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையை பதிவு செய்தல் (Registration)
- இச்சட்டம் வருவதற்கு முன்பே பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடங்கப்பட்டு இருந்தாலும் இந்தச் சட்டம் அமுலுக்கு வந்த தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் நிருவாகக் குழுமத்திடம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
- நிர்வாகிகள், மரணசாசனம், வழியுரிமையாளர், பயனாளர்கள் அல்லது வன்னிய சமுதாய நபர்களால், நிருவாகக் குழுமத்தால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை நிருவாகக் குழுமத்திடம் ஒப்படைவு செய்யப்பட வேண்டும். அதை உரிமையியல் நடைமுறை சட்டத்தின் படி விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்வாரோ அப்படி பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும். அந்த விண்ணப்பத்தில் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் வருமானம், செலவு, வரி, சம்பளம், திட்டச் செலவு மற்றும் இன்ன பிற வரவு, செலவு அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட விண்ணப்பத்தை நிருவாகக் குழுமம் பேணி பாதுகாத்து வர வேண்டும்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை இருப்பதை வேண்டுமென்று அதை பதிவு செய்யாமல் இருக்கும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிர்வாகிகளுக்கு அல்லது பொறுப்பாட்சியை மறைக்க நினைத்தாலும் அந்த நிர்வாகிகளுக்கு Show Cause Notice கொடுத்து வழக்கு பதிவு செய்ய ஆணையிடலாம். மேற்குறிப்பிட்ட ஆணையால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றம் சென்று ஆணையை ரத்து செய்யுமாறு வழக்கு தொடுக்கலாம். நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைக்கு நிர்வாகிகளை நியமித்தல்
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நலன் கருதி நிருவாகக் குழுமம் (Board) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைக்கு நிர்வாகிகளை முழு நேரமோ அல்லது பகுதி நேர நிர்வாகிகளை நியமிக்கலாம். அவர்களுக்கு உண்டான சம்பளத்தை வழங்குமாறு பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை நிர்வாகிகளை பணிக்கலாம்.
- மேற்குறிப்பிட்ட நிர்வாகி சட்டத்திற்கு இணங்க அதிகாரம் செலுத்தி கடமையாற்ற வேண்டும்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் வருமானம் மற்றும் ஆற்ற வேண்டிய கடமையை பொறுத்து அந்த நிர்வாகிக்கு சம்பளம் நிர்ணயம் செய்யலாம்.
- நிர்வாக அலுவலர் மற்றும் அதன் பணியாளரும் சம்பளம் படித் தொகை போன்றவற்றை நிருவாகக் குழுமத்தால் அதன் விதியில் இருந்து செலுத்தப்பட வேண்டும். மேலும் கூடுதல் வருமானம் எதையும் உருவாக்கினால் மேற்குறிப்பிட்ட செலவினங்களை பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையில் இருந்து ஈடு செய்யுமாறு நிருவாகக் குழுமம் கோரலாம்.
- அந்த நிர்வாகியை பதவியில் இருந்து அகற்றவும் நிருவாகக் குழுமத்திற்கு அதிகாரம் உண்டு.
- அப்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி முப்பது நாட்களுக்குள் அந்த ஆணைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு ஒன்றை தாக்கல் செய்யலாம்.
- பொறுப்பாட்சி நிலைக் கொடையை நிர்வாகிகள் மாற்றம், இறப்பு, பணி ஓய்வு, பணி அகற்றுதல் மற்றும் இன்ன பிற மாற்றம் செய்து இருந்தால் அதை மூன்று மாதத்திற்குள் நிருவாகக் குழுமத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
- பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பான விசாரணைச் செய்வதற்கு ஆவண செய்தல் (Enquiry)
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயலற்று முடியாமல் போய் இருந்தால் அதன் காரணத்தை முதன்மை நிர்வாக அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
- அந்த பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் நோக்கங்கள் நிறைவேற்ற முடியாமல் அல்லது புதுப்பிக்க முடியாத போது அந்த நிதியத்தை முதன்மை நிர்வாக அதிகாரியின் அறிக்கை பெற்று நிருவாகக் குழுமானது பிரிவு 27(2)ன் படி வன்னிய சமுதாய மக்களுக்கு தேவையான சேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
- இந்த சட்டத்திற்கு முன்போ, பின்போ பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை செயல்படுத்த முடியாது என நிருவாகக் குழுமம் உறுதியாக நம்பினால் அந்த சொத்தை மீட்டெடுக்க நீதிமன்றத்தை அணுகலாம்.
- நீதிமன்றம் சட்டப்படி, அரசாங்கம் பொறுப்பாட்சியின் நிலங்களை கையகப்படுத்தவில்லை அல்லது நில சீர்திருத்தங்கள் செய்யப்பட வில்லை. மேலும் சட்டப்படி அதிகாரம் அளிக்கப்பட்டவர்களிடம் தான் சொத்து இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, மற்றவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தால் நிருவாகக் குழுமம் வசம் ஒப்படைக்க உத்தரவு வழங்கலாம்.
- வரவு, செலவு திட்டங்கள் (Budget)
- நிருவாகக் குழுமத்தின் நேரடி மேலாண்மை இல்லாத பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவு திட்டத்தை 90 நாட்களுக்கு முன்பாக நிருவாகக் குழுமத்திற்கு ஒப்படைவு செய்யப்பட வேண்டும். முதன்மை நிர்வாக அதிகாரி அந்த வரவு, செலவு திட்டத்தை மாற்றவோ, திருத்தம் செய்யவோ பணிப்புரை செய்யலாம். அப்படி திருத்தம் செய்யப்பட்ட வரவு, செலவு திட்டத்தை மறுபடியும் இறுதியான வரவு, செலவு திட்டத்தை முதன்மை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
- முதன்மை நிர்வாக அதிகாரியின் கீழ் நேரடியாக வரும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் வரவு, செலவு திட்டத்தை அவர் தயார் செய்து நிருவாகக் குழுமத்திற்கு அனுப்ப வேண்டும்.
- வருமானம் அதிகரிப்பு இருப்பின் அது பற்றி விவரக் குறிப்பையும் நிருவாகக் குழுமத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
- முதன்மை நிர்வாக அலுவலர் ஒழுங்கான கணக்குகளை வைத்திருத்தல் வேண்டும் மற்றும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையை தக்க முறையில் மேலாண்மை செய்வதற்கு பொறுப்பானவராக இருத்தல் வேண்டும்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் வரவு, செலவு திட்ட தணிக்கையானது உள்ளாட்சி நிதியங்களுக்கு மாநில ஆய்வாளரால் அரசால் ஏற்படுத்தப்பட்ட அலுவலரால் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
- பிரிவு 40(2)(3), 41, 42 பிரிவுகள் முரணாக இல்லாத வகையில் தணிக்கை பெற வேண்டும்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை எதுவும் நிருவாகக் குழுமத்தின் நேரடி மேலாண்மை இருக்கும் இடத்தில் முதன்மை நிர்வாக அலுவலரால் குறித்துரைக்கப்பட கூடிய நிர்வாக கட்டணங்களை பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையால் நிருவாகக் குழுமத்திற்கு செலுத்தப்பட வேண்டும்.
- பொறுப்பாட்சி அல்ல நிலைக்கொடை எதுவும் நிருவாகக் குழுமத்தின் நேரடி மேலாண்மையில் இருக்கும் பட்சத்தில் முதன்மை நிர்வாக அதிகாரியால் குறித்துரைக்கப்பட்ட நிருவாகக் கட்டணங்களை நிருவாகக் குழுமத்திற்கு செலுத்த வேண்டும். ஆனால் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் மொத்த வருமானத்தில் 10 சதவீதத்திற்கு மேல் வசூலிக்க அல்லது நிர்ணயிக்கக் கூடாது.
- தணிக்கை (Auditing)
- ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக் குழுவின் நிர்வாகிகளும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31க்கு முன்பாக கணக்குகளை அந்தந்த படிவத்தில் நிர்வாக குழுமத்திற்கு பணிந்து அனுப்பபட வேண்டும்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்குழுவின் ஆண்டு வருமானம் ரூபாய் 10,000/-க்கு கீழ் இருந்தால் நிர்வாக நியமன தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்குழு ஆண்டு வருமானம் ரூபாய் 10,000/-க்கு மேல் இருந்தால் அரசால் நிர்ணயக்கப்பட்ட பட்டியலிள்ள தணிக்கையாளரால் மட்டுமே தணிக்கை செய்ய முடியும். அவருக்கான ஊதியத்தை அரசே நிர்ணிக்கும்.
- தணிக்கையர், நிர்வாக குழுமத்திற்கு தனது அறிக்கை அளித்தல் வேண்டும் அந்த தணிக்கையில் சட்டத்திற்கு முரணாக அல்லது முறையற்ற செலவினங்கள் அல்லது அசட்டையினால் அல்லது தவறான நடத்தையினால் பணம் மற்றும் பிற சொத்தினை நிர்வாகிகளால் இழந்திருந்தால் அதை மீட்பது குறித்தும் கருத்துரைத்தல் வேண்டும். இந்த இழப்பை ஏற்படுத்தியவரின் பெயரையும் அந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும். மேற்குறிப்பிட்ட தணிக்கை செலவானது பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் நிகர ஆண்டு வருமானத்தில் 100க்கு 1½ விழுக்காடு அளவிற்கு மேற்படாது இருத்தல் வேண்டும்.‘
- மேற்குறிப்பிட்ட தணிக்கையாளரின் அறிக்கையின் பேரில் எந்த ஒரு நபரிடமும் நிர்வாக குழுமம் விளக்கம் கோரலாம். மேலும் பணம் மற்றும் சொத்து இழப்பு இருந்தால் அதை மீட்க நிர்வாக குழுமம் ஆணையை பிறப்பிக்கலாம். மேலும் இழப்பை பெற நில வரி வசூலிப்பதை போன்று வசூலித்து கொள்ளலாம்.
- அப்படி நிர்வாக குழுமத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணையால் பாதிக்கப்பட்ட பொறுப்பாட்சி நிர்வாகி அல்லது வேறு நபர் இருந்தால், அவர்கள் 30, நாட்களுக்கு நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்ற ஆணையே இறுதியானது.
- பொறுப்பாட்சியர் மற்றும் நிலக்கொடையின் மேலாண்மை (Trustee Administrator Duties)
- இந்த சட்டம் மற்றும் விதிகள் அல்லது நிர்வாக குழுமத்தால் பிறப்பிக்கப்படும் ஆணைகளை நிறைவேற்றுவது.
- நிர்வாக குழுமம் கேட்கும் விவரங்கள், தகவல்களை அளிப்பது.
- நிர்வாக குழுமத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்கள் அவை தொடர்பான கணக்குகள் அல்லது பதிவுறுக்கள் அல்லது ஒப்பாவணங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிப்பது.
- பொதுக்கடன்கள் அனைத்தையும் நிறைவேற்றுவது இவர்களின் கடமையாகும்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிர்வாகிகள் அதில் வரும் வருமானத்திலிருந்து அதன் நோக்கத்திற்காக முறையான செலவுகளை செய்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் உண்டு.
- நிர்வாகக் குழுமத்தின் (Board) ஒப்பளிப்பு இன்றி பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை சொத்தினை பிறருக்கு உரிமை மாற்றம் செய்ய இயலாது. அப்படி உரிமை மாற்றம் செய்தால் சட்டப்படி செல்லத்தக்கதல்ல.
- மேற்குறிப்பிட்ட பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்கள் விற்பனை அல்லது அடமானம் இது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அது குறித்து மறுப்புகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் கோரி பெற்று, அதை பரிசீலனை செய்து விற்பது நியாயமான காரணமாக இருந்தால் சொத்தை விற்க பொது ஏலத்தின் மூலம் அனுமதிக்கலாம். மேலும் விற்ற சொத்தில் பெறப்பட்ட தொகையை பற்றிய விவரங்களை நிருவாகக் குழுமத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட விற்பனையில் பாதிக்கப்பட்ட நபர் 90 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். நீதிமன்ற உத்தரவே இறுதியானது.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்தினை நிருவாகக் குழுத்தின் ஒப்பளிப்பின்றி உரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அந்த சொத்து எந்த ஆட்சியாளரின் வரம்பிற்குள் வருகிறதோ அந்த மாவட்ட ஆட்சியாளருக்கு சொத்தின் உடைமையை மீட்டு ஒப்படைக்கும்படி கோரி மனு ஒன்றினை நிருவாகக் குழுமம் அளிக்கலாம்
- மேற்குறிப்பிட்ட மனு பெற்ற 30 நாட்களுக்குள் அந்த சொத்தினை உடைமையை பெற்றிருக்கிற நபரிடம் சொத்தை நிருவாகக் குழுமத்திடம் ஒப்படைக்கும்படி ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்படி அந்த ஆணையால் பாதிக்கப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். நீதிமன்ற உத்தரவே இறுதியானது.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை சார்பாக சொத்தினை வாங்குவதற்கு முன்பாக நிருவாகக் குழுத்தின் ஒப்பளிப்பை பெற வேண்டியது கட்டாயமாகும். மேலும் இது குறித்த மறுப்புரையும் ஆலோசனையும் கோரி தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும். மேற்குறிப்பிட்ட மறுப்புரையும் ஆலோசனையும் பரிசீலனை செய்த பிறகு தான் நிருவாகக் குழுமம் ஆணையை வெளியிட வேண்டும்.
- அதே போல் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களை 3 ஆண்டுக்கு மேற்பட்ட கால அளவில் குத்தகைக்கு விடமுடியாது. மேலும் பொறுப்பாட்சி ஆவணத்திலேயே மூன்றாண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விடலாம் என்று இருந்தாலும் இச்சட்டத்தின்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விட்டால் செல்லுபடியாகாது.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களை ஒராண்டிலிருந்து 3 ஆண்டுக்குள் குத்தகைக்கு விட முடிவு செய்தால் நிருவாகக் குழுமத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றே குத்தகைக்கு விட வேண்டும். அப்படி முன் அனுமதி பெறவில்லை எனில் அந்த குத்தகை செல்லதக்கதல்ல.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைக்கு சொந்தமான பணம் எதையும் நிர்வாகிகள் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாது. மேலும் இவர்களுக்கு எதிராக நிருவாகக் குழுமத்தால் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் பணத்தை பயன்படுத்த முடியாது.
- நிருவாகக் குழுமத்தால் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிர்வாகிகள் அகற்றப்பட்டு புதியதாக ஒரு குழு உருவாக்கப்பட்டால் அந்த குழுவிடம் பதிவுருக்கள், கணக்குகள் மற்றும் சொத்துக்கள் அனைத்து பொறுப்பையும், உடைமையையும் ஒரு மாதத்திற்குள் நிர்வாகிகள் அந்த குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒரு மாதத்திற்குள் பொறுப்புகளையும் சொத்துக்களையும் ஒப்படைக்கவில்லையெனில் புதிய குழு அந்த பகுதிக்குட்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு மனு செய்து கணக்குகளையும் சொத்தினையும் ஒப்படைக்கும்படி கோரலாம்.
- குற்றவியல் நீதித்துறை நடுவரால் ஆணையிட்டு கணக்கு மற்றும் சொத்தினை ஒப்படைக்காத நிர்வாகிக்கு 6 மாத சிறைதண்டணையோ அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கலாம் மற்றும் அந்த சொத்தின் உடமையை எடுக்க காவல் துறையின் உதவியும் புதிய குழு நாடி பெறலாம். மேலும் மேற்குறிப்பிட்ட குற்றவியல் நீதித்துறை நடுவரின் ஆணையை பாதிக்கப்பட்ட நபர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். நீதிமன்றத்தின் முடிவு இறுதியானது.
- ஆக்கிரமிப்பை அகற்றுதல்
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்து அதற்காக பதிவு செய்யப்பட்டிருக்கிற நிலம், கட்டிடம், திறந்த இடம் பிற சொத்துக்கள் எதினும் ஆக்கிரமிப்பு இருக்கிறது என்று முறையீடு ஏதும் பெற்றதின் பேரிலோ அல்லது தானாக முற்பட்டோ முதன்மை நிர்வாக அலுவலர் ஆக்கிரமிப்பின் விவரங்களை குறித்துறித்து ஆக்கிரமிப்பு ஏன் அகற்ற ஆணை பிறப்பிக்கக் கூடாது என்ற ஓர் அறிவிப்பை ஆக்கிரமிப்பாளருக்கு மற்றும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிர்வாகிகளுக்கு சார்வு செய்ய வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட ஆணையின் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் அந்த ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் முதன்மை நிர்வாக அலுவலர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் முன்பு விண்ணப்பித்து அதன் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றி சொத்து தொடர்புடைய பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிர்வாகிகளிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பணிக்கலாம். மேலும் இது தொடர்பாக காவல்துறை உதவியும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவு இறுதியானது. (See above copy)
- மேற்குறிப்பிட்ட ஆக்கிரமிப்பு சொத்து 3ஆம் நபரிடம் இருந்தால் இச்சட்டத்தின்படி அவர் குற்ற செயலை செய்தவர் ஆகிறார். அவருக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டணையும், 500 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை நிர்வாகத்தின் நிருவாகக் குழுமத்திற்கு உள்ள அதிகாரம்
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிர்வாகிகள் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு மற்றும் நிருவாகக் குழுமம் எதற்கும் கொடுக்க வேண்டிய கட்டணங்கள், வரிகள் எதையும் செலுத்த மறுக்கின்ற போது, அதை நிருவாகக் குழுமமே (Board) அதன் நிதியத்திலிருந்து செலுத்திவிட்டு அந்த தொகையினை பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை சொத்திலிருந்து மீளப் பெறலாம். ஆனால் அந்த செலவு ஆண்டு வருமானத்தில் 12½% விழுக்காடுக்கு மேல் இருக்கக்கூடாது.
- நிருவாகக் குழுமத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை உரிய பொறுப்பாட்சியர் நிர்வாகிகளுக்கு தகுந்த அறிவிப்பை கொடுத்து, செலவு தொகையை நில வரியை வசூல் செய்யும் அதே முறையில் வசூலித்துக் கொள்ளலாம்.
- பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடைக்கென ஒரு நிதியத்தை உருவாக்க நிருவாகக் குழுமம் பணிக்கலாம்.
- பொறுப்பாட்சி நிர்வாகிகள் இந்த சட்டத்தின்படி செய்ய வேண்டிய பணிகளை அந்த கால நிர்ணயத்துக்குள் முடிக்க இயலாத போது கால நீடிப்பு செய்ய நிருவாகக் குழுமத்திற்கு அதிகாரம் உள்ளது.
- தண்டணைகள்
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையினை முறையாக நிருவாகக் குழுமத்திடம் பதிவு செய்யாத பட்சத்தில்,
- விவரங்கள், கணக்குகள், விவர உரைகள் ஆகியவற்றை அளிக்க தவறும் பட்சத்தில்,
- நிருவாகக் குழுமத்தால் (Board) கோரப்பட்ட தகவல்களை தர மறுக்கும் பட்சத்தில்,
- சொத்துகள் கணக்குகள், ஒப்பாவணங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய அனுமதி மறுக்கும் பட்சத்தில்,
- நிருவாகக் குழுமத்தால் அல்லது நீதிமன்றத்தால் ஆணையிட்டும் உடைமையை ஒப்படைக்க அனுமதி மறுக்கும் பட்சத்தில்,
- நிருவாகக் குழுமம் பண்புரைகளை செய்ய மறுக்கும் பட்சத்தில்,
- பொதுக்கடன்களை தீர்ப்பதற்கு மறுக்கும் பட்சத்தில்,
- சட்டப்படி கோரப்பட்ட பிற செயல்களை செய்ய மறுக்கும் பட்சத்தில்,
- ஒரு பொறுப்பாட்சியாளர் அல்லது ஒரு நிர்வாகி மேற்குறிப்பிட்டவற்றை செய்யாத போது அவருக்கு நிருவாகக் குழுமத்தால் ரூபாய் 5,000/- வரை அபராதம் விதிக்கலாம்.
- பிரிவு 30(8) படி கால அளவிற்குள் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை உருவாக்கப்பட்ட 3 மாதத்திற்குள் மறைக்கும் எண்ணத்துடன் விண்ணப்பிக்காது இருக்கும் பட்சத்தில்,
- முக்கியமான விவரம் ஏதும் பொய்யானது, தவறான வழிக்காட்ட கூடியது, உண்மையற்றது, சரியற்றது என நன்கு தெரிந்தும் விவர உரை, விவர அறிக்கை தகவல் ஏதும் அளிக்கும் பட்சத்தில்,
- பொறுப்பாட்சியாளர் அல்லது ஒரு நிர்வாகி மேற்குறிப்பிட்டவற்றை தவறுகளை செய்யும் போது அவருக்கு நிருவாகக் குழுமத்தால் 6 மாத சிறை தண்டணை அல்லது ரூபாய் 15,000/- அபராதமாக விதிக்கலாம்.
- மேற்குறிப்பிட்ட குற்ற முறையீட்டை (Complaint) நிருவாகக் குழுமமோ அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபரோ தான் நீதிமன்றத்தில் முறையிட முடியும்.
- மேற்குறிப்பிட்ட குற்ற முறையீட்டை (Complaint) முதல் வகுப்பு நீதித்துறை குற்றவியல் நடுவர் மட்டுமே விசாரிக்க முடியும்.
- குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும் வசூலிக்கப்படும் அபராதம் பிரிவு 70ன் படி நிதியத்தில் வரவு வைக்க வேண்டும்.
- அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் சிறை தண்டணை அளிக்கலாம்.
- பொறுப்பாட்சியாளர் நிர்வாகியை நியமித்தல்
- பொறுப்பாட்சியாளர் அல்லது நிர்வாகியின் பதவி காலியாகும் போது பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை விதிகளின்படி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்க முடியாத பட்சத்தில் தகராறு வரும் பட்சத்தில், நிருவாகக் குழுமம் அந்த பொறுப்பாட்சிக்கும் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகியை கால அளவு மற்றும் நிபந்தனைகளின்படி நியமிக்கலாம்.
- பொறுப்பாட்சியாளர் நிர்வாகியை அகற்றுதல்
- பிரிவு 56ன்படி தண்டணைப் பெற்றவர்,
- குற்றமுற நம்பிக்கை மோசடி ஒழுக்க நடத்தை பிற செயல்கள் என தண்டணை பெற்றவர்.
- மன சீர்கேடு, கடமையற்ற தகுதியற்றவர், உடல் நல குறைவு அல்லது ஊனம் ஏற்பட்டால்.
- நொடிப்பு நிலை அடைந்தால்.
- மது, மயக்க மருந்து உட்கொள்ளும் பழக்கம் உடையவர்.
- பொறுப்பாட்சியில் (Trust) எதிராக அல்லது சார்பாக ஊதியம் பெறும் சட்ட தொழிலாற்றுபவர்.
- தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு கணக்கு வைத்து வர தவறியவர் அல்லது தொடர்ந்து 2 ஆண்டுகள் பிரிவு 39(2)ன் படி கோரப்பட்ட கணக்குகளை பணிந்து அனுப்ப தவறும் பட்சத்தில்.
- குத்தகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விதிகளுக்கு முரணாக நிர்வாகிக்கு பயன்பெறும் வகையில் ஈடுபட்டவர்கள்.
- கடமையை தொடர்ந்து புறக்கணித்து வரும் பட்சத்தில் அல்லது நிதியை கையாடல் அல்லது முறைகேடாக பயன்படுத்தும் பட்சத்தில்.
- அரசால் அல்லது நிருவாகக் குழுமத்தால் பிறப்பித்த சட்டபடியான ஆணையை வேண்டுமென்றே கீழ் படியால் இருக்கும் பட்சத்தில்.
- சொத்தை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில்.
- மேற்குறிப்பிட்ட செயல்களை செய்யும் நிர்வாகியை அகற்ற நிருவாகக் குழுமத்தால் அகற்றப்படலாம்.
- பொறுப்பாட்சி நிர்வாகியின் தனிப்பட்ட உரிமைகள் ஏதுவும் பாதிக்கப்படாது.
- நிருவாகக் குழுமம் 2/3 குறையாத நிருவாகக் குழும நிர்வாகிகளால் நிர்வாகிகளின் சம்மதத்தின் பேரில் மட்டுமே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும்.
- இதில் பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தை அணுகலாம்.
- விசாரணையின் போது நிர்வாகியை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம்.
- மேற்குறிப்பிட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தால் நிருவாகக் குழுமம் நீதிமன்றம் மூலமாக பாதுகாவலர் (Receiver) நியமிக்கலாம்.
- பதவி நீக்கம் பெற்ற நபர் கணக்கு, சொத்து விவரம் உடைமையை நிருவாகக் குழுமத்திடமோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபரிடமோ ஒப்படைக்க பணிக்கலாம்.
- பதவி நீக்கம் செய்யப்பட்ட நபர் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் நிர்வாகியாக பணிபுரியக் கூடாது.
- நேரடி மேலாண்மையை நிருவாகக் குழுமம் (Board) ஏற்றுக் கொள்ளுதல்
- தகுதியான பொறுப்பாட்சியாளர் அல்லது நிர்வாகி கிடைக்காத போது பொறுப்பாட்சி நிருவாக நலன்களுக்காக 5 ஆண்டுகளுக்கு மேற்படாமல் நேரடியாக மேலாண்மையை நிருவாகக் குழுமம் ஏற்கலாம்.
- அரசானது தானாக முன் வந்தோ அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் அக்கறை உள்ள விண்ணப்பத்தின் பேரிலோ நிருவாகக் குழுமத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணையை கேட்டுப் பெறலாம். மேலும் இது சம்மந்தமாக அரசு ஆணையை பிற்பிக்கலாம். அதுவே இறுதியானது ஆகும்.
- ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்த பின்பும்
- அடுத்து முந்தைய ஆண்டிற்கான வருமான விவரங்கள்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
- நேரடி மேலாண்மையை (நிர்வாகம்) நிருவாகக் குழுமம் ஏற்கின்ற போது அதற்கான காரணத்தை விளக்கவும், மேலும் ஏன் பொறுப்பாட்சியின் நிர்வாகத்தை நிருவாகக் குழுமம் ஏற்றது என்ற காரணத்தை அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
- வகுத்துரைக்ககூடிய பிற பொருட்பாடுகளை அரசுக்கு அனுப்புதல்.
- அரசானது நிருவாகக் குழுமத்தால் பணிந்து அனுப்பப்பட்ட ஆணையை ஆய்வு செய்து தக்கதென கருதும் அறிவுறுத்தல் ஆணையை பிறப்பிக்கலாம்.
- மேலாண்மை குழுவை கண்காணித்தலும், கலைத்தலும்
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையால் ஒப்பாவணத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குழு அதன் நிர்ணயத்த காலம் வரை அல்லது நிருவாகக் குழுமத்தால் கலைக்கப்படும் வரை செயல்படலாம்.
- குழுவால் செயல்படுத்தப்படும் திட்டம், ஒப்பாவண விதிகளுக்கு முரணாக இருந்தால் திட்டத்தை நிருவாகக் குழுமம் மாற்றி அமைக்கலாம்.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் ஒப்பாவணத்திற்கு எதிராக அல்லது தவறாக இருக்குமாயின் அந்த குழுவை கலைக்கலாம்.
- குழுவை கலைப்பதற்கு முன்பு சம்மந்தப்பட்ட குழுவிற்கு அது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட அறிக்கை அனைத்து நிர்வாகிகளையும் கட்டுப்படுத்தும்.
- இதனால் பாதிக்கப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு நீதிமன்றத்தில் செய்யலாம்.
- குழுவை கலைத்த பின்பு புதிய மேலாண்மை குழுவை அமைக்கலாம் அல்லது மொத்த குழுவையும் கலைப்பதற்கு பதில் தவறிழைத்த நிர்வாகியை மட்டும் நீக்கலாம். ஆனால் அவருக்கு முறையாக அறிவிப்பு கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகி மேல் முறையீடு செய்யலாம்.
- நிருவாகக் குழுமம் (Board) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிர்வாக திட்டத்தை உருவாக்குதல்
- பிரிவு 61ன் படி நிருவாகக் குழுமமானது தானாக முற்பட்டோ அல்லது அக்கறை உள்ள குறைந்த பட்சம் 5 நபர்களின் விண்ணப்பத்தின் பேரிலோ ஒரு செயலாக்கத் திட்டத்தை தேவையானது என கருதும் பட்சத்தில் அதை ஒரு ஆணையாக வெளியிடலாம்.
- இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு இருந்த நிர்வாகி நீக்குவதற்கு நிருவாகக் குழுமத்திற்கு அதிகாரம் உள்ளது. அந்த பொறுப்பாட்சியில் ஒரு நிர்வாகி அகற்றும் போது அந்த பரம்பரையில் உள்ள வேறு நபரை அமர்த்துவதற்கு வழி செய்யலாம்.
- பொறுப்பாட்சியின் முறையான செயல் திட்டம் நிலுவையில் இருக்கும் பொழுது பொறுப்பாட்சியரின் பதவிக் காலம் முடிவடைந்தால், நிர்வாக அதிகாரியை நியமிக்க நிருவாகக் குழுமத்திற்கு அதிகாரம் உண்டு.
- பாதிக்கப்பட்ட நபர் 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகி மனு செய்யலாம். நீதிமன்ற ஆணையே இறுதியானது. ஆனால் பிரிவு 61ன் படி பிறப்பிக்கப்பட்ட ஆணையின் செயல்பாட்டினை நிறுத்தி வைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது.
- பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் செயல்பாட்டில் முரண்பாட்டை கண்ணுற்றால் அல்லது அக்கறையுடன் நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரப்பெற்றால் அது தொடர்பான விசாரணையை நிருவாகக் குழுமமோ (Board) அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபரோ உரிமையியல் விசாரணை நடைமுறை சட்டத்தின்படி எப்படி விசாரணை மேற்கொள்ளுமோ அதே போல அதே அதிகாரம் செலுத்தி விசாரணை செய்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
- நிருவாகக் குழுமத்துடன் கலந்தாய்வு செய்து ஒரு பொறுப்பாட்சியாளர் (அ) நிர்வாகியை அமர்த்துவற்கு (அ) அகற்றுவதற்கு அரசுக்குள்ள அதிகாரம்
- பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடையின் ஓர் ஒப்பாவணம் (அ) ஆவணம் (அ) நீதிமன்றத்தின் தீர்ப்பாணை, எதுவும் பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடை எதனின் மேலாண்மைக்கான திட்டம் எதுவும் நிர்வாகக் குழுமம் அல்லாத பிற அதிகாரம் அமைப்பு (அ) நீதிமன்றம் ஒரு நிர்வாகியை அமர்த்தலாம் (அ) அகற்றலாம் (அ) அந்த மேலாண்மைத் திட்டத்தை செயல் படுத்தவோ (அ) மாற்றியமைக்கவோ (அ) அதை கண்காணிப்பாவோ என பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை ஆவணங்களில் வகை செய்து இருந்தாலும் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மாற்றி அமைக்க அல்லது அதிகாரம் செலுத்த அரசுக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நிருவாகக் குழுமம் (BOARD) இருக்கும் பட்சத்தில் அவற்றுடன் கலந்தாய்வு செய்ய வேண்டும்.
- நிருவாகக் குழுமத்தின் நிதி (Finance of the Board)
- மேற்குறிப்பிட்ட நிருவாக குழுமத்திற்கு அரசினால் பணத்தொகைகளை மானியமாக வழங்கலாம்.
- ஆண்டு வருமானம் ரூ. 10,000/- மேல் உள்ள TRUST-கள் நிருவாகக் குழுமத்திற்கு ஆண்டுக்கு நிகர வருமானத்தில் 10% செலுத்த வேண்டும். (நிகர வருமானம் என்பது அரசு வரி, கட்டணங்கள், செலவுகள், பராமரிப்பு, கட்டிடம் பழுது பார்த்தல், கால்நடை, விவசாய கூலி மற்றும் இதர செலவுகளை கழித்தது போக உள்ள வருமானம்) மேலும் திரும்ப பெறப்பட்ட முன்பண வைப்பீடு, ஒப்பந்ததாரர் செலுத்தும் பிணை, வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட முதலீடு, நிதிமன்ற ஆணையின்படி பெறப்பட்ட செலவு தொகை போன்றவை ஆண்டு வருமானமாக கணக்கில் சேர்க்கப்படக் கூடாது. ஆனால் அது 25%க்கு மேல் செலவு கணக்கு காட்டக்கூடாது.
- பணத்தை செலுத்துமாறு (அ) பிறநபரை பணிப்பதற்கு முதன்மை நிர்வாக அலுவலருக்கு உள்ள அதிகாரம் (CHIEF ADMINISTRATIVE OFFICER)
- பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடைக்கு சொந்தமான பணம் எதுவும் வேறு நபரிடம் வைப்பீடாக இருந்தால் அந்த பணத்தில் இருந்து பிரிவு 66-ன்படி தனது பங்களிப்பை செலுத்துமாறு ஆணையிடலாம்.
- ஆணைக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்.
- மேற்குறிப்பிட்ட ஆணையை செயல்படுத்ததாத நபருக்கு ஆறு மாத சிறை (அ) ரூ. 8,000/- அபராதம் (அ) இரண்டும் விதிக்கலாம்.
- நிருவாகக் குழுமம் (Board) அரசின் முன் அனுமதியோடு சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு கடன் வாங்கலாம் மற்றும் வட்டியும், கடனையும் திரும்ப செலுத்த வேண்டியது நிருவாகக் குழுமத்தின் கடமையாகும்.
- நிருவாகக் குழுமத்தின் முன் அனுமதியின்றி பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடையின் நிர்வாகிகள் கடன் கொடுப்பதோ, கடன் வாங்குவதோ கூடாது.
- பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடையின் சட்ட வழிமுறைகளுக்கு முரணாக பணம் ஏதும் கொடுக்கப்பட்டிருந்தாலோ (அ) வாங்கப்பட்டிருந்தாலோ அந்த பொறுப்பாட்சியர் தான் பொறுப்பு. எனவே அவரது தனிபட்ட சொத்தில் இருந்து நிருவாகக் குழுமம் அந்தப் பணத்தை திரும்ப பெற வேண்டும்.
- வன்னியர் குல சத்திரியர்களின் பொது அறநிலைய பொறுப்பாட்சிள் மற்றும் நிலைக்கொடைகளின் பாதுகாப்பு பேணுகை நிதியகம் (PRODUCTION AND MAINTANANCE OF FUND)
- இச்சட்டத்தின்படி நிருவாகக் குழுமத்தால் பெறப்பட்ட (அ) மீட்கப்பட்ட பணங்கள், நன்கொடைகள், மானியங்கள் அனைத்திற்கும் ஒரு நிதியகம் அமைக்கப்பட வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட வரவினங்களுக்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட பணம் நிர்வாகக் குழுமத்தால் வாங்கப்பட்ட கடன் மற்றும் அதற்கு உண்டான வட்டியை செலுத்துவதற்கும், தணிக்கை (AUDIT) செலவுகளுக்கும், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பளத்திற்காக, நிருவாகக் குழுவினரின் அலுவலகப் பணியாளர் மற்றும் இவர்களின் பயணப்படி செலவிற்கும் மற்றும் சட்டத்தால் ஏற்படுகின்ற ஏனையச் செலவிற்கும் மேற்குறிப்பிட்ட பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நிருவாகக் குழுமத்தின் வரவு – செலவு திட்டம், கணக்குகள் மற்றும் தணிக்கைகள்
- நிருவாகக் குழுமம் வரும் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் படிவத்தின் அடிப்படையே தயார் செய்து அதை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
- அரசானது அதை பரிசீலனை செய்து, நிருவாகக் குழுமத்திற்கு அனுப்பி வைக்கலாம் (அ) அதில் மாற்றமோ (அ) திருத்தமோ செய்யுமாறு சில ஆலோசனைகளை வழங்கலாம். ஆலோசனைகளை பெற்ற பிறகு திருத்தம் செய்து மறுபடியும் அரசுக்கு அனுப்ப வேண்டும். மேலும் அரசின் முடிவே இறுதியானது.
- நிருவாகக் குழுமமானது வகுத்துரைக்கப்பட்ட படிவத்திலும், முறையிலும் தன் கணக்குகளை பராமரித்து வரவேண்டும்.
- மேற்குறிப்பிட்ட கணக்கை அரசாங்கத்தால் அமர்த்தப்பட்ட தணிக்கையாளரால் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
- தணிக்கையாளர் தணிக்கை செய்து அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதில் நிருவாகக் குழுமத்தின் கீழ் உள்ள பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் கணக்குகளை அந்தந்த உள்ளாட்சி நிதியங்களில் மாநில ஆய்வாளரால் தணிக்கை செய்யப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். மேலும் சட்டத்திற்கு முரணான (அ) முறையற்ற செலவினம் (அ) அசட்டையினால் ஏற்பட்ட பண இழப்பை அதில் குறிப்பிட வேண்டும். எந்த நபரால் பண இழப்பு ஏற்பட்டதோ, அந்த நபரின் பெயரையும் அதில் குறிப்பிட வேண்டும்.
- தணிக்கையாளரின் அறிக்கையை அரசானது ஆய்வு செய்து அதில் சந்தேகம் இருந்தால் விளக்கமும் கேட்கலாம் (அ) தக்கதன கருதும் ஆணையும் பிறப்பிக்கலாம்.
- பிரிவு 73-ன்படி மேற்குறிப்பிட்ட தணிக்கை அறிக்கையில் குறித்து உரைக்கப்பட்ட எந்த நபரால் இழப்பு ஏற்பட்டதோ, அந்த நபருக்கு கேட்பு அறிவிப்பு சார்வு, நிருவாகக் குழுமத்தால் செய்யப்பட்ட முப்பது நாட்களுக்குள் அந்த நபர் பணத்தை நிருவாகக் குழுமத்திடம் ஒப்படைய்வு செய்யப்பட வேண்டும். அப்படி செலுத்த தவறிய நபருக்கு எதிராக நில வரி நிலுவையை வசூலிப்பது போன்று வசூலித்துக் கொள்ளலாம்.
- குறித்த சில தேர்வுகளில் பாதுகாவலரை (RECEIVER) அமர்த்துதல்.
- நிருவாகக் குழுமத்தால் (அ) அதன் சார்பாக நியமிக்கப்படும் பாதுகாவலர் ஏற்கெனவே பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடையின் அசையா சொத்தை விற்றதை சட்டப்படி மீட்டெடுக்க, உரிமம் மாற்றம் செய்ததை மீட்டெடுக்க, மேலும் நிருவாகக் குழுமத்தால் தொடரப்பட்ட வழக்கின் சொத்தை இடைக் காலமாக பராமரித்தல். பாதுகாவலரை நியமிக்கும்படி உரிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.
- பதிவு செய்யப்படாத பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடையின் சார்பாக உரிமையை செலுத்துவதற்கு தடை. இந்தச் சட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடையின் சார்பாக உரிமை வழக்கு, மேல் முறையீடு இன்னப் பிற சட்ட நடவடிக்கை, இந்தச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டிருந்தாலன்றி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படக் கூடாது.
- நிருவாகக் குழுமத்திற்கு எதிராக வேறு தரப்பினர்களால் உரிமை வழக்கு குறித்த அறிவிப்பு : நிருவாகக் குழுமத்திற்கு எதிராக வழக்கு தொடக்கப்பட வேண்டுமெனில் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பாக அறிக்கையை (NOTICE) சார்வு செய்ய வேண்டும்.
- நீதிமன்றங்களால் உரிமை வழக்குகளுக்கான அறிவிப்பு முதலியன: நீதிமன்றத்தில் பொறுப்பாட்சி (அ) நிர்வாகி (அ) பயணாளர் வழக்கு தொடுத்தால் நிருவாகக் குழுமத்திற்கு அறிவிப்பினை வழங்குதல் வேண்டும். அதைப் போல் சொத்திற்கான உரிமை மூலம் (TITLE) உடைமை மீட்பு (POSSESSION OR RECOVERY) தொடர்பாக பொறுப்பாட்சியர் வழக்கு தொடர்ந்தால் அதை நிர்வாகக் குழுமத்திற்கு தெரிவிக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பால் பொறுப்பாட்சியின் சொத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம், வரி, இன்ன பிற கட்டணங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் அது பற்றிய விபரங்களை நிருவாகக் குழுமத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
- நிருவாகக் குழுமத்திற்கு முறையாக தெரிவிக்கப்படாமல் பொறுப்பாட்சியாளரால் வழக்கு தொடுக்கப்பட்டால், அந்த வழக்கு செல்லத் தக்கதாகும்.
- பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடையின் நிர்வாகிகளால் தொடரப்பட்ட உரிமையியல் வழக்கின் நிருவாகக் குழுமம் முன்னிலையாகி ஒரு தரப்பினராக வாதாடலாம்.
- பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடையின் நிர்வாகிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட உரிமையியல் தீர்ப்பை நிருவாகக் குழுமத்தின் ஒப்பளிப்பின்றி, இணக்கமாக தீர்த்துக் கொள்ளமுடியாது.
- பலவகைப்பட்டவை
- அரசானது நிருவாகக் குழுமம் சரியாக செயல்படவில்லை, கடமையில் இருந்து தவறுகின்ற பட்சத்தில், அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது நிருவாகக் குழுமம் அரசின் ஆணைகளை வேண்டுமென்றே செயல்படுத்த மறுக்கும் போதும், பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைக்கும் பாதகமான செயல்களை செய்யும் போது அரசானது ஒரு அறிக்கையின் வாயிலாக ஆறு மாதங்களுக்கு மேற்படாத ஒரு கால அளவிற்கு நிருவாகக் குழுமத்தை கலைத்து கை கொள்ளலாம். அதற்கு முன்பு நிருவாகக் குழுமத்திற்கு விளக்கம் கேட்டு அறிக்கையை சார்வு செய்ய வேண்டும்.
- நிருவாகக் குழுமத்தை கலைத்த தேதியில் இருந்து உறுப்பினர்கள் தன் பதவியை காலி செய்ய வேண்டும். மேலும் நிருவாகக் குழுமத்தால் செய்யப்பட வேண்டி கடமைகளை அரசு பணி அமர்த்துக்கின்ற நபரால் செயல்படுத்தபட வேண்டும். நிருவாகக் குழுமத்திடம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மேலும் அரசு தக்கதன கருதும் பட்சத்தில் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
- உரிமை வழக்கு (அ) பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் நிருவாகக் குழுமத்தால் இச்சட்டத்தின்படி செய்யப்பட்டிருந்தால் நிர்வாகக் குழும நிர்வாகிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது. அது நல்லெணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும் பட்சத்தில்.
- நிருவாகக் குழுமத்தின் தலைமையாளர், உறுப்பினர்கள், ஆய்வு அலுவலர், நிர்வாக முதன்மை அலுவலர் மற்றும் அதன் அலுவலர்கள் அனைவரும் பொது ஊழியர்களாக கருதப்பட வேண்டும்.
- பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பான பதிவுரு, பதிவுரு அறிக்கை இன்ன பிற ஆவணங்கள், அசையா சொத்து பற்றிய விவரங்கள், அது யார் பாதுகாப்பில் உள்ளது போன்ற விவரங்களை நிருவாகக் குழுமம் யாரிடமிருந்தாலும் கட்டணத்தின் அடிப்படையில் கேட்டுக் கொள்ளலாம்.
- பொறுப்பாட்சி (அ) நிலைக்கொடையின் சொத்துக்களை மீளப்பெறுவதற்கு கால வரம்பு சட்டம் 36/1963 பொருந்தாது.
- அரசாங்கத்திற்கு விதிகளை இயற்ற அதிகாரம் உண்டு. அதே போல் நிருவாகக் குழுமத்திற்கும் ஒழுங்கு முறை விதிகளை இயற்றவும், மாற்றவும், திருத்தங்கள் செய்யவும் அதிகாரம் உண்டு.
- இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் இடர்பாடுகளை அகற்ற அரசு ஆணையிடலாம்.
- இந்தச் சட்டத்தின் வெளிப்படையாக வகை செய்யப்பட்டவை தவிர, இந்தச் சட்டம் தொடக்கத்திற்கு முன்பு செயல்பாட்டில் இருந்த, வன்னியகுல சத்திரியர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த பொது அறநிலை பொறுப்பாட்சி நடைமுறைகள் இந்தச் சட்டத்திற்கு எதிராக இருந்தால் அது பொருந்துவது அற்றுப் போகும்.
- •• •