அக்னிகுல பெருந்தலைவன் சி.என்.ஆர். அவர்களும், வன்னியர் கூட்டமைப்பும்!

1969-ல் சி.என்.ஆர். அவர்கள் மாணவ பருவத்தில் சிறந்த முதன்மை மாணவனாக வலம் வந்த காலம் தொட்டு சி.என்.ஆர்.  சமுதாய பணியை தொடங்கியது. தற்போது வரை இடைவிடாது சமுதாய முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வருகிறார்.

1973-ல் எஸ். எஸ். இராமசாமி படையாட்சியார், வன்னிய அடிகளார் போன்ற பெரும் தலைவர்களோடு அவர்களுடைய இறுதி காலம் வரை பயணித்து சமுதாய தொண்டாற்றினார்.

1978-ல் மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை தொடங்கி சிறப்பாக நடத்தி வெற்றி கண்டார்.

1980-களில் வன்னியர் சங்கத்தில் பொதுச் செயலாளராக இருந்து வரலாற்று சிறப்புமிக்க 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தில் தலைமை தாங்கி பங்கேற்றதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல  பொருளதார சமூக மேம்பாட்டுக்காக பல போராட்டங்களுக்கு தலைமையேற்று நடத்தி வந்துள்ளார்.  அவற்றில் சில….

  • 15.03.1986-ல் சென்னையில் கோட்டை முன்பு பட்டை நாமம் தரித்து பட்டினி போராட்டம்.
  • 06.05.1986-ல் ஒருநாள் சாலை மறியல் போராட்டம். சி.என்.ஆர். அவர்கள் பங்கெடுத்தது புதுவை மாநிலம் பேருந்து நிலையம்.
  • 28.06.1986-ல் மதுராந்தகத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம்.
  • 19.12.1986-ல் ஒருநாள் ரயில் நிறுத்தப் போராட்டம் சென்ட்ரல் நிலையத்தில்.
  • 1987-ல் (17.09.1987 முதல் 23.09.1987 வரை) ஏழு நாட்கள் தொடர் சாலை மறியல் போராட்டம். சேலம் வாழப்பாடியில் கைதாகி சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைத்தார்கள்.
  • 17.01.1989-ல் சட்டமன்றத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம். பங்கேற்ற இடம் குரோம்பேட்டை.

  • 16.07.1989-ல் சி.என்.ஆர். அவர்களின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி துவக்க விழா, சென்னை மெரினா கடற்கரையில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் துவக்கப்பட்டது.
  • மாவட்டந்தோறும் சமூக நல்லிணக்கம் ஒற்றுமை மாநாடு நடத்தினார்.
  • 1988 ஆம் ஆண்டு முதல் வன்னியர் மகளிர் மாநாடு பூம்புகாரில் நடத்தினார்.
  • 1989 ஆம் ஆண்டு முதல் வன்னியர் இளைஞர் மாநாடு மகாபலிபுரத்தில் சி.என்.ஆர். அவர்களார் நடத்தப்பட்டது.

  • 1989-ல் பு.தா. இளங்கோவன், பு.தா. அருள்மொழி, அரணி தாராசிங், அரணி இராஜேந்திரன், நெய்வேலி வாழைச் செல்வன் இவர்கள் ஐந்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நமது சொந்தங்களை விடுதலை செய்ய, வேலூரிலிருந்து சென்னை வரை நடைபயணம் நடத்தி விடுதலை பெற்றுக் கொடுத்தார்.
  • இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த 25 வன்னிய சமூக நீதி போராளிகளுக்கு மூன்று லட்ச ரூபாய் கருணைத் தொகையும், மாத மாதம் மூவாயிரம் ரூபாய் உதவித் தொகையும் இன்றளவும் பெறுவதற்கு வழி வகுத்ததோடு, அத்தனை தியாகிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இட ஒதுக்கீடு போர் வீரர் சான்றிதழ் பெற்று தந்தார்.

  • 04.08.2008-ல் செய்யூர் மரக்காணம் பகுதியிலே அனல்மின் நிலையம் அமைய மனித சங்கிலி போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.
  • 27.02.2009-ல் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவும், கள்ளக்குறிச்சிக்கு ரயில் நிலையம் அமைவதற்கு தொடர்ந்து போராடினார்.
  • 06.04.2009-ல் திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு தாலுகா பகுதியில் அமைந்த தொழிற்சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டுமென்று போராடி வெற்றி கண்டார்.
  • 1999-ல் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு சென்னை அண்ணாசாலையில் சிலை வைத்ததோடும், 2020-ல் அவருக்கு அரசு விழா மற்றும் கடலூரில் மணிமண்டபம், நூலகம் ஏற்படுத்த பாடுபட்டதோடும், சட்டமன்றத்தில் அவருக்கு திருஉருவபடம் வைத்திட வழி வகுத்திருக்கிறார்.

  • வன்னிய வள்ளல்கள் உயில் மூலமாக சொத்துக்களை வன்னிய சமுதாயத்திற்கு எழுதி கொடுத்துவிட்டுச் சென்ற 10 லட்சம் கோடிக்கு அதிகமான ‘வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம்’ ஜனாதிபதி ஒப்பதலோடு அமைந்திட சட்டப் போராட்டம் நடத்தி செயல்படுத்தினார். (ACT : 44/2019) (வழக்கு எண் : W.P. No. 26565 of 2011)
  • 5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று தமிழக அரசால் நடைமுறைக்கு கொண்டு வரச் செய்தார். (ACT : 8/2021) (வழக்கு எண் : 14025/2010 / அரசாணை எண் : 35 of 2012 – 21/03/20212)
  • நலவாரியம் (வழக்கு எண் : 20544/2012) – வன்னியர் சமுதாய மேம்பாட்டிற்காக தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி நம் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுத் தந்தார்.
  • 1989-ல் சிறு வணிகம் (காய்கறி, கனி வணிகம்) செய்து பாதிக்கப்பட்ட வியாபாரகளுக்கு தி.நகர் ரயிலடி ஓரமாக அன்றைய கவர்னர் திரு. P.C. அலெக்சாண்டர் அவர்களிடம் பேசி வணிக வளாகம் போல் கடைகளை அமைக்கச் செய்தார். அது இன்றளவும் செயல்பாட்டில் இருக்கிறது.
  • 1999 ஆம் ஆண்டு வன்னிய அடிகளார் என்கிற U.S. இராமமூர்த்தி, வாழப்பாடி கூ. இராமமூர்த்தி மற்றும் சி.என். இராமமூர்த்தியும் சமுதாய முன்னேற்றத்திற்கான முன்னேற்ற சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
  • வாழப்பாடி கூ. இராமமூர்த்தியும், வன்னிய அடிகளார் என்கிற U.S இராமமூர்த்தியும் அடுத்தடுத்து மறைந்து விட்டதை அடுத்து வன்னியர் சங்கம் உள்ளிட்ட 23 வன்னிய அமைப்புகளை இணைத்து 2003-ல் வன்னியர் கூட்டமைப்பாக உருவாக்கினார்.

மேலும் இது போன்ற போராட்டங்களை நடத்தி, அறிவாயுதம் ஏந்தி வெற்றி பெற்றார். இதற்கான அனைத்து ஆவணங்களும், அரசு ஆவணங்களும், நீதிமன்ற ஆவணங்களும் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கம் இனமான வன்னியர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். முதலில் சமுதாய மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவது தான் முக்கியமென்று வன்னியர் கூட்டமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

  1. சத்திரியர் சேம்பர் ஆஃப் காமர்ஸ், (பதிவு எண். 178/2020)
  2. சத்திரியர்ஸ் டாக்குமெண்ட்ரி,
  3. வன்னியர் குரல்,
  4. சத்திரியர் ஆராய்ச்சி மையம்,

அனைத்துமே வெகு விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் நட்சத்திரத்தன்று வன்னியருத்திரன் தோன்றியதாகச் சொல்கிறது நம் வன்னிய புராணம். அதனால் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத உத்திர நட்சத்திரம் வரும் நாளை வன்னியர் அவதரித்த திருநாளாக கருதி வன்னியர் எழுச்சி நாள் விழாவை வன்னியர் கூட்டமைப்பு சிறப்பாக கொண்டாடுகிறது.

வன்னியர்களின் வாழ்வாதாரமான இட ஒதுக்கீட்டுக்காக 1987 இல் நடந்த போராட்ட களத்தில் உயிர் நீத்த 25 வன்னிய வீரத் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வீரவணக்க விழாவை ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி புரட்சி நாளாக நம் வன்னியர் கூட்டமைப்பு சிறப்பாக கொண்டாடுகிறது.

Menu