சிஎன்ஆரின் மறைக்கப்பட்ட வரலாற்று
உண்மைகளும், நினைவுகளும்
வணக்கம்
கடந்த 50 ஆண்டுகாலம் CNR அவர்கள் சமுதாய பணியை மட்டும் செய்து கொண்டு வருகிறார். 1969களில் இருந்து தொடங்கிய அவரது சமுதாயப்பணி வாழ்க்கை இந்த சமுதாயத்திற்கு ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினர் . அதன்விளைவாக அப்போது அவர் படிக்கும் காலம்தொட்டே வன்னியர் சங்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினர் . அவருடைய ஆக்கப்பூர்வமான பணியை பார்த்து தான் வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பணியை பெற்றர் . பின்பு பல கட்ட போராட்டங்களை வியுகம் அமைத்து ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று மக்களை திரட்டி பலகட்ட போராட்டம் செய்து இட ஒதுக்கீடு பெற்றார் .
அந்த பல கட்ட போராட்டத்தில் முக்கியமானவை 1) பட்டை நாமம் தரித்து பட்டினிப்போராட்டம் 2) புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு கருப்பு கொடி காட்டுதல் 3) இரயில் மறியல் போராட்டம் 4) ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் 5) பின்பு ஒரு வாரகால சாலை மறியல் போராட்டம். இந்த போராட்டத்தில் இராமதாஸ் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொள்வார். அன்றைய 1984 களில் வன்னியர் சங்கத்தில் உறுப்பினராக கூட இல்லாத இராமதாஸ் அவர்களுக்கு மருத்துவர் என்பதால் முன்னுரிமை கொடுத்தார்கள் .
இந்த ஒரு வாரகால சாலை மறியல் போராட்டத்தின் போது அதிமுக அரசின் துப்பாக்கிச்சூட்டில் நம் உறவுகள் 25 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு 1989 ல் அமைந்த டாக்டர் கலைஞர் அவர்கள் இட ஒதிக்கீடு கொடுப்பதற்கு முன் வந்தார். வன்னியர் சங்கத்தின் அன்றைய குழுவோடு பேசி 20% கொடுப்பதற்கு முன்வந்தார். ஒரு ஜாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு அன்றைய சட்டத்தில் இடமில்லாததால், 108 ஜாதிகளை இணைத்து 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கிறேன் என்று கலைஞர் சொன்னார். எதுவுமே கிடைக்காததற்கு 20% கிடைத்தால் நம் சமுதாய மக்களின் வாழ்க்கை தரமும் வேலைவாய்ப்பும் முன்னேறும் என்பதற்காக அன்றைய பொதுச் செயலாளராக இருந்தவர் , சிஎன் இராமமூர்த்தி மற்றும் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நமக்கு 20% சதவீதம் இட ஒதிக்கீடு கிடைக்கப்பெற்றது. இதுதான் வரலாறு.
இதன் பிறகு தான் பாட்டாளி மக்கள் கட்சியை சி.என் இராமமூர்த்தியும், இராமதாசும் மற்ற தலைவர்களும் இணைந்து துவக்கினார்கள் . பாட்டாளி மக்கள் கட்சி துவக்கியதன் நோக்கமே நம் சமுதாய மக்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதேபோல் மற்ற சமுதாய மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் நம் உரிமை பெற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் தொடங்கினார்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய பிறகு அவர் போராட்டத்தின்போது செய்த சத்தியங்களை எல்லாம் மறந்து அவர் பாதையை வேறுவிதமாக சென்றது.
நம் மக்களிடம் வசூல் செய்து அறக்கட்டளையை தொடங்கி அந்த அறக்கட்டளை மூலம் நம் வன்னிய சமுதாய மக்களின் கல்வி வேலைவாய்ப்பு வாழ்க்கை தரம் முன்னேற எல்லா வகையான கட்டமைப்புகளையும் செய்வோம் என்று சொல்லி வசூல் செய்தார். அதன்பின்பு நிறைய அறக்கட்டளைகள் அவரிடம் வந்து சேர்ந்தன. இப்போது வன்னியர் அறக்கட்டளை இராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்து தன் கட்டுபாட்டில் வைத்துக்கொண்டார். அதன் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடி மதிப்பு.
ஒரு வாரகால சாலை மறியல் போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகள் குடும்பங்கள் நிலையைப் பார்த்த வன்னியர் சங்க பொதுச் செயலாளர் திரு. சி.என். இராமமூர்த்தி அவர்கள் கலைஞர் அவர்களிடம் பேசி மூன்று லட்ச ரூபாய் கருணைத் தொகையும் மூவாயிரம் ரூபாய் மாத உதவித் தொகையையும் பெற்றுக் கொடுத்தார். பின்பு அவர்களுக்கு வீடு கட்டும் முயற்சியையும் அதையும் பிரச்சினை செய்து தடுத்துவிட்டனர்.
பிறகு பெருந்தலைவர் எஸ். எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு கிண்டியில் சிலையை நிறுவ செய்ய கோரிக்கையை மும்மூர்த்திகளான வாழப்பாடி கூ. இராமமூர்த்தி, சி.என். இராமமூர்த்தி மற்றும் U.S. இராமமூர்த்தி என்கிற வன்னிய அடிகளார் ஆகிய மூவரும் கலைஞரிடம் கோரிக்கை வைத்தார்கள். கலைஞரும் பெருந்தலைவர் எஸ். எஸ். இராமசாமி படையாச்சி அவர்களுக்கு சிலையும் வைத்தார்.
பிறகு 2000 இல் இருந்து இந்த மும்மூர்த்திகளும் தொடர்ந்து கலைஞர் அவர்களை பார்த்து கோரிக்கை வைத்ததன் காரணமாக 2001 இல் வன்னியர் பொதுச்சொத்து வாரியம் அமைய அரசாணை வெளியிட்டார் கலைஞர். பிறகு 2009 வரை எதுவும் நடைமுறைப் படுத்தாமல் அப்படியே கிடப்பில் இருந்ததால் நீதிமன்றத்தில் 3 வழக்குகளை சி.என். இராமமூர்த்தி தொடுத்தார்.
அந்த மூன்று வழக்குகளாவன:
- வன்னியர் பொதுச்சொத்து வாரியம் (அறக்கட்டளைகள் ஒன்றிணைப்பு, 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்தின் மதிப்பு). நீதிமன்ற ஆணைக்கிணங்கி 44-வது சடட்டத்தை உருவாக்கி ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்கி பொதுச்சொத்து வாரியம் அமையப்பெற்றது. இதை அமுல்படுத்தவே பத்து வருடம் நாம் அதிமுக அரசை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பொறுமை காத்து சட்டப் போராட்டம் மூலம் வெற்றி பெற்றோம். அதற்காக முதலமைச்சர் பாராட்டு விழாவினையும் 2018 ல் செய்தார்கள் . இதற்கு இராமதாஸ் ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த வன்னியர் பொதுச் சொத்து வாரியம் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் நம் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் அடிப்படை உரிமைகளை கிடைத்துவிடும் என்பதற்காகவா?
- வன்னியர் நல_வாரியம் (நிதி ஒதுக்கி நம் தேவைகளை பூர்த்தி செய்வது) நீதிமன்ற ஆணை பெற்று விட்டோம். இதையும் இன்னும் கடந்த 9 வருட காலமாக அமல்படுத்தவில்லை தமிழக அரசு.
- வன்னியர்களுக்கு மட்டுமே 15% உள் இட ஒதுக்கீடு 20% சதவீதத்திலிருந்து வெண்டும் என்று 2010ல் வழக்கு தொடுத்து 2012ல் நீதிமன்ற ஆணையை பெற்று அதனடிப்படையில் அரசாணை எண் (GO.No:35) பெற்றோம். பிறகு அந்த அரசாணையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நமக்கு 14 லிருந்து 15% உள் இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று பரிந்துரையை 2012 லேயே கொடுத்துவிட்டது. அதை அப்போதைய அதிமுக அரசு செயல்படுத்தாமல் இருந்ததால் 2015 ,ல் மீண்டும் நீதிமன்றம் சென்று நீதிமன்ற ஆணையை பெற்றுவிட்டோம். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்களின் குழுவின் பரிந்துரை கோப்பு, முதலமைச்சர் கையெழுத்துக்காக 2012 லிருந்து 9 வருடமாக காத்துக் கிடந்தது. இந்த கையெழுத்துட்டு மீண்டும் நடைமுறைப்படுத்த ஒரு அரசாணையை வெளியிட தொடர்ந்து நாம் பலகட்ட போராட்டத்தின் விளைவாக கிட்டத்தட்ட 9 வருட காலம் கழித்து 2021 ல் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு முதலமைச்சர் திரு_எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்5% இடஓதுக்கீட்டை வெளியிட்டார். உள் ஒதுக்கீட்டிற்காக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கொராணகாலத்தில் 2020 அக்டோபர் மாதத்தில் நாம் முயற்சி எடுத்தபோது அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆர்ப்பாட்டமாக மாற்றினோம். அது மிகப் பெரிய அளவில் மக்களிடம் எழுச்சி பெற்றது. அந்த எழுச்சியை பார்த்த இராமதாஸ் அவர்கள் டிசம்பர் 2020 மாதத்தில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தான், போராட்டம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் தனி இட ஒதுக்கீட்டுக்கான வாய்ப்பு இல்லை என்று அதிமுக தேர்தல் சீட்டு ஒதுக்கீட்டு பேச்சின் போது அதிமுகவால் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள் ஒதுக்கீட்டுக்காக 14 லிருந்து 15 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொடுக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2012 ல் திரு_ஜனார்த்தனம் அவர்களால் செய்த பரிந்துரையை அப்படி இருக்கிறது. அதனால் நாம் அந்த உள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தலாம் என்று அதிமுக அரசிடம் சொன்னார்கள்.
இதை தாமதமாக உணர்ந்த ராமதாஸ் அவர்கள் பின்பு “எங்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்தால் போதும்” என்று தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ஆனால் அதிமுக அரசு 10.5 சதவீதம் மட்டுமே கொடுக்க முடியும். 15% கொடுத்தால் மற்ற சமூக ஓட்டு எங்களுக்கு கிடைக்காது அதற்காக இப்போது 10.5% கொடுக்கிறோம் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆணையத்தின் மூலம் 6 மாதத்திற்குள் எடுத்து மக்கள் தொகை அடிப்படையில் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதை இருவரும் சேர்ந்து முடிவு செய்து தேர்தல் நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள். மற்றவர்கள் உழைப்பை அபகரிப்பதில் வல்லவர்கள்.
2018 ல் அதிமுகவுடன் இராமதாஸ் கூட்டணி வைத்த நோக்கம் என்ன என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மிக முக்கிய காரணமே இதுதான்…
வன்னியர் அறக்கட்டளையை இராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதன் மதிப்பு பல ஆயிரம் கோடியுடையது. சி.என். இராமமூர்த்தி அவர்களின் சட்டப் போராட்டத்தில் உருவான வன்னியர் பொதுச் சொத்து வாரியம் முறையாக செயல்பட்டால், இராமதாசிடம் உள்ள வன்னியர் அறக்கட்டளையையும் இந்நேரம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தும் அவர் கையை விட்டு வெளியேறி விடும். அதை உணர்ந்த இராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணிக்கு சரி சொன்னார். பல ஊழல் புகார்களை அமைச்சர்கள் மீதும் முதலமைச்சர் மீதும் பட்டியலிட்டு கவர்னரிடம் கொடுத்த அன்புமணி ராமதாஸ் ஏன் இப்படி தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டார்கள். தன்னுடைய பல ஆயிரம் கோடி சொத்து மதிப்புடைய அறக்கட்டளையை காப்பாற்றுவதற்காக.
இப்போது பத்து லட்சம் கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்து வாரியம் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் செயலிழந்து கிடக்கிறது. இரண்டாவதாக 15% இட ஒதிக்கீடு கொடுக்காமல் 10.5% குறைத்துக் கொடுத்துள்ளார். தேர்தலுக்காக இருந்தாலும் அதை நாம் வரவேற்கிறோம். இப்படி தொடர்ந்து நம் வன்னிய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் அனைத்தும் நாம் பல வருடமாக போராடி சட்டத்தின் மூலம் கிடைக்க அரும்பாடுபட்டு கொண்டிருக்கும்போது இப்படி இவர்கள் தாமதப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
நம் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளில் இட ஒதுக்கீடு இப்போது 10.5% கிடைத்துள்ளது. ஆனால் பத்து லட்சம் கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச் சொத்து வாரியத்திலிருந்து நம் சமுதாய மக்களுக்கு என்ன பலனும் சென்றடையாமல் தடுக்கின்றனர். அந்தப் பலன்கள் அனைத்தும் முழுமையாக நம் சமுதாய மக்களுக்கு சென்றடைய நாம் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். நம் இளைய சமுதாயம் இன்னும் வரலாறு என்ன என்றே தெரியாமல் அவர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். போலியான வாய் பேச்சுக்களை மட்டும் பேசுபவர்களை நம்பி உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். எது சரி! எது தவறு! என்று நீங்கள் தீர ஆராய்ந்து எதில் உண்மை இருக்கிறது என்பதையும் தெளிவாக உணரவேண்டும்.
இத்தனை ஆண்டுகள் சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டுமே தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் இப்போது தொடங்கி உள்ள அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் அரசியல் அங்கீகாரத்திற்கு நமது பங்கு மிக முக்கியம். ஒன்றுபடுவோம்…! அறிவாயுதம் ஏந்தி உழைப்போம்…! முன்னேறுவோம்…!
நன்றி
- ••