குற்றப் பரம்பரை சட்டம் பிரயோகம்
1934வது ஆண்டில் சென்னை அரசாங்கத்தை ஜஸ்டிஸ் கட்சியினர் ஆட்சி செய்திருந்தனர். அவர்கள் வன்னியர்களைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. தென்னாற்காடு ஜில்லாவில் உள்ள அனேக ஆயிரம் வன்னிய குடும்பங்களை ‘குற்றப் பரம்பரை சட்டத்தில்’ பிணைத்து (சி.டி.ஆக்ட்) ஓர் சட்டம் கொண்டு வந்தனர். (சென்னை சர்க்கார் போர்ட் செயின் ஜார்ஜ் கெஜட், பார்ட் – 1, பேஜ் 2128 தேதி 04.12.1934ல் நெ. 648, 649ல் இதை காணலாம்)
‘குற்றப்பரம்பரை’ சட்டம் என்பது ஒருவர் ஒருமுறை எப்படியோ குற்றவாளியாகிவிட்டால் அக்குடும்பம் பூராவும் குற்றம் செய்வதையே தொழிலாக கொண்டது என்று கருதி அக்குடும்பத்தின் மீது போலீஸ் எப்போதும் கண்காணிப்பு வைத்தல் தினசரி அக்குடும்பம் போலீசில் ஆஜராகி பெயர் கொடுத்தல் சுற்று பக்கங்களில் கொலை, களவுகள் ஏதாவது நடந்தால் இக்குடும்பம் தான் அக்குற்றத்தை செய்திருக்கும் என்று இக்குடும்பத்து மீது போலீஸ் வழக்கு தொடருதல் போன்ற பல இன்னல்களை கொண்டது தான், மேலே கண்ட குற்றப் பரம்பரை சட்டம் என்பதாகும்.
இதை தென்னாற்காடு ஜில்லா சங்கத்தாரும், சென்னை மகா சங்கத்தாரும் மற்றுமுள்ள ஜில்லா சங்கங்களும் பலமாக எதிர்த்து தமிழ்நாடு பூராவிலும் தீவிர கிளர்ச்சி செய்தனர். அரசாங்கத்தினிடம் தூது சென்று குற்றம் செய்பவர்களை தண்டிக்க வேண்டுமே தவிர, அக்குடும்பத்தையே பழி வாங்கக்கூடாது என்றும் எடுத்து கூறினர்.
- ••
வன்னியரின் பலத்த கிளர்ச்சி!
சட்டம் வாபஸ்!
இதன் காரணமாக தென்னாற்காடு ஜில்லா சங்கத்தினர் 20.05.2935ல் க்ஷ ஜில்லா கலெக்டரிடமும், அரசாங்கத்தினரிடமும் மகஜர்கள் சமர்பித்து க்ஷ சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று வற்புறுத்தினர். சென்னை அரசாங்கமும் வன்னியரின் கிளர்ச்சிக்கு பயந்து, 1935வது ஆண்டு டிசம்பர் மாதத்தில் க்ஷ சட்டத்தை ரத்து செய்து விட்டது.
- ••