இனத்தின் முதல் தலைவர்

இராமசாமி படையாட்சியார்!

 

சொந்தங்களே! நாம் நமது வன்னிய தலைவர்களின் வரலாற்றை தொடர்நது எழுதி வருகிறோம். அதைக் கவனமாக படியுங்கள். நமது தலைவர்களின் அரசியல் நடவடிக்கைகளே பின்னர் வந்த திராவிட கட்சிகளுக்கும், இப்போதைய நமது சாதியை முன்னிறுத்திய அனைத்து கட்சிகளுக்கும் ஆதாரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

நம் தலைவர்களின் செயல்பாடுகளை எந்தளவுக்கு பயன்படுத்தி இன்று உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார்களோ அவர்களோ, அல்லது அவர்களது அமைப்புகளோ எவராவது மக்கள் தலைவர் ஐயாவை நினைவு படுத்தியதுண்டா? ஒரு முறையேனும் மரியாதை செய்ததுண்டா? என்பதை யோசித்து பார்க்குமாறு உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். வன்னிய இனத்தை உயர்த்தவும், வன்னிய மக்களை பாதுகாக்க வந்த பாதாள பைரவன் என்றும் சொல்பவர்கள் மரியாதை செய்ததுண்டா?

 

இந்த நேரத்தில் ஓர் உண்மையை உணர வேண்டுகிறேன். நம் மக்கள் தலைவர் ஐயாவை அரசியல் ரீதியாக உயர வைத்து மரியாதை செய்தது நமது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான். அவர் தன் தனது 1991 – 1996 கால கட்ட ஆட்சியின் போது விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என்ற பெயரில் மாவட்டத்தை உருவாக்கி புகழ் சேர்த்தார். நாம் கடந்த இதழில் ஐயா மாணிக்க வேல் நாயகர் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை சுருங்க கூறி இருந்தோம். அந்த பெருமகனாருக்கு நூற்றாண்டு விழா நடத்தி அவருக்கு பெருமை சேர்த்தவரும் நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் என்பதை வன்னிய சொந்தங்கள் உயிர் உள்ளவரை மறக்கக் கூடாது; இயலாது.

 

மக்கள் தலைவர் இராமசாமி படையாட்சியாரின் அரசியல் வியூகமும், விவேகமும் இன்று வன்னியர்களாகிய நாம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு முழு முதற்காரணம் என்பது நிதர்சனமானது. இதோ! படையாட்சியாரின் கம்பீரமான சமூக அரசியல் பயண வாழ்க்கை உங்கள் பார்வைக்காக…!

 

அன்றைய தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பதினாறாம் நாள் சிவசிதம்பர படையாட்சி தம்பதியர்க்கு மகனாக பிறந்தார் நம் இனம் காக்க வந்த ஐயா இராமசாமி படையாட்சியார்.

 

சிவசிதம்பர படையாட்சியார் தம்பதியர்க்கு செல்லப் பிள்ளையாக வந்துதித்த நமது ஐயாவுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள். ஒரு சகோதரி இவரது பாட்டனார். அதாவது சிவசிதம்பர படையாட்சியின் தகப்பனார் முத்தயப் படையாட்சி தான் முதல் வன்னியர் சங்கத் தலைவராக திகழ்ந்தவர். வெள்ளையர் ஆட்சி நடந்த அக்காலத்தில் கடலூரில் உள்ள நிலத்தில் 75 சதவீதம் இவரிடம் தான் இருந்தது. அந்தளவுக்கு செல்வாக்கு பெற்ற குடும்பம் படையாட்சியாருடையது. உடைத்து முன்னுக்கு வந்த பரம்பரையினர்; ஊரை வளைத்து உலையில் போடும் வகையினர் அல்ல.

 

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? அதுதான் நமது ஐயாவின் அரசியல் பிரவேசம். அவரை உயர்ந்த தலைவனாய் அங்கீகரிக்க வைத்தது. நம் ஐயாவை மக்களாலும் தலைவர்களாலும் செல்லமாக அழைப்பட்ட பெயர் மக்கள் தலைவர் எஸ்.எஸ்.ஆர்.

 

 

தென்பெண்ணை நதி பாயும் தென் ஆற்காடு மாவட்டம் எண்ணற்ற அறிவார்ந்த பெருந்தகைகள் அவதரித்த புண்ணிய பூமியாகும். ஆன்மிகத் திருத்தலங்கள் நிறையப் பெற்ற இம்மாவட்டம் சன்மார்க்க நெறியில் சங்கமாகவும் திகழ்கிறது.

 

பச்சைக் கம்பள வயல்களையும் பரந்த கடலையும் கொண்டு விளங்கிய அம்மாவட்டத்தில் விவசாயிகள், உழைப்பாளிகள், மீனவர்கள் என்ற மூன்று பெரும் பிரிவினரை உள்ளடக்கியதாகும்.

 

ஆங்கிலேயர்கள் தொடக்க காலத்தில் இம்மாவட்டத்தின் தலைநகரான கடலூரைத்தான் தலைமையிடமாகக் கொண்டு செயல் பட்டார்கள். அருகிலுக்கும் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆதிக்கம் அதிகம் இருந்தாலும், அதன் ஆளுநர் டூப்ளேயின் தொடர் படையெடுப்பாலும் தங்களது தலைநகரத்தை சென்னைக்கு மாற்றி இருக்கிறார்கள்.

 

செல்வச் செழிப்பிலே மிதந்த பண்ணையார் குடும்பத்தில் பிறந்த இராமசாமி படையாட்சியார் எவ்விதக் குறையுமின்றி சீரும் சிறப்புமாய் வளர்த்தார். இன்டர்மீடியட் வகுப்பு வரை படித்தார்.

 

1943 ஆம் ஆண்டு ஞானாம்பாள் அம்மையாரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இல்லற வாழ்க்கை தொடங்கிய நேரம் சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டம். இருப்பினும் சமுதாயத் தொண்டு செய்வதில் பெரும் போராளியாகவே திகழ்ந்தார்.

 

படையாட்சியாரின் சமுதாயத் தொண்டு அவரது 24-ம் வயதிலேயே கடலூர் முனிசிபல் உறுப்பினராக்கியது. பொது நலத்தொண்டில் பெரும் புகழ் சேர்ந்ததால் அடுத்த நான்கு வருடத்திற்குள் தனது 28 வது வயதில் கடலூர் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

நாடு விடுதலை அடைவதற்கு முன்பாக நமது சமுதாயத்தில் இந்த இளம் வயதில் இவ்வளவு பெரிய பதவியை பெற்றவர்கள் அம்மாவட்டத்திலேயே யாரும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர் பதவி வகித்த போது கொண்டு வரப்பட்ட ‘குடிநீர்த் திட்டம்’ தான் இன்றளவும் பயன் தருகிறது என்பது ஒன்றிலிருந்தே நமது படையாட்சியாரின் தொலை நோக்கு சிந்தனை  எப்படிப் பட்டது என்பதை உணரலாம்.

 

எதையும் முன்கூட்டி ஆலோசனை செய்வது தீர்மானித்த பின்பு செயலாற்றுவது, அதை நடைமுறைப்படுத்துவது, மற்றும் எடுத்த முடிவில் பின்வாங்காதது – இவைகள்தான் படையாட்சியாரை சிறந்த நிர்வாகியாகவும், சரியான அரசியல்வாதியாகவும், கடைசியில் மக்கள் தலைவராகவும் உருவாக அடித்தளமாய் அமைந்தது.

 

கடலூர் நகராட்சியின் உறுப்பினர் சேர்மன் ஆகிய பதவிகளில் வகித்த போது தான் தன்னுடைய இனமக்களின் நலிவுற்ற நிலையை கண்ணாரக் கண்டார் ஐயா. தன் சொந்தத் திறமைகளையும், தான் பிறந்த சமுதாயத்தின் பெருமைகளையும் உணராது. நம்பிக்கை இழந்தவர்களாய் மாற்றாரின் ஆதிக்கப் பிடியில் சிக்கி வாழ்கின்றவர்கள், சரியான தலைமையின்றி வழி தடுமாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  நம்மினத்தவர்கள் என்பதை கண்டு பொங்கி எழுந்தார்.

அதே சமயம் நாடு விடுதலை பெற்ற சுதந்திர இந்தியாவில் இந்தியர்களே இந்தியாவை ஆண்டு கொள்ள உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்படக் கூட்டப்பட்ட அரசியல் அமைப்பு அவையில் வன்னியர்கள் யாரும் இடம் பெறாதவாறு பார்த்துக் கொண்டனர் உயர் வகுப்பினர்.

 

அதை எதிர்த்து படையை திரட்டிய படையாட்சியார் பண்டித நேருவை எதிர்த்து அறப்போர் துவக்கினார்கள். அந்தப் போராட்டத்தின் ஆயுதமே படையாட்சியாரின் உழைப்பாளர் கட்சியாக உருமாறியது.

 

படையாட்சியார் தன்னுடைய இடை விடாத, சலியாத உழைப்பால் பெற்ற அனுபத்தால் கடைசியில் தன் சமுதாய மக்களுக்கு வாழ்வு பெற்றுத் தரும் போராட்ட முகமாக உழைப்பாளர் கட்சியை வார்த்தெடுத்தார்.

 

 

இரவு பகலாக கட்சியை பற்றிய மக்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார். வாழ்வாங்கு வாழ்ந்து இப்போது நலிவுற்றுக் கிடக்கும் தனது சமுதாயத்தை தலை நிமிரச் செய்திட தன்னை அர்ப்பணித்துக் கொள்வது அவசியம் என்பதையும் அது காலத்தின் கட்டாயம் என்பதையும் உணர்ந்தறிந்து களமிறங்கினார் நமது படையாட்சியார்.

 

உழைப்பாளர் கட்சி தோன்றியது குறித்து ஏற்கனவே காங்கிரஸ் மீது கடும் வெறுப்பிலிருந்த படையாட்சியாருக்கு வந்து வாய்த்தது. 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயக நாட்டின் முதல் தேர்தலாகவும் அமைந்தது.

 

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய, அவர் தம் இனமான உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய அவர்களது எண்ணங்களை எடுத்து வைக்கின்ற, அவர்களுக்கு ஒளி விளக்காக திகழ உழைப்பாளர் கட்சி மலர்ந்ததாக எண்ணி மக்கள் அதில் தீவிர ஈடுபாடு கொண்டனர்.

 

தேர்தல் வந்தது. போட்டியிட்ட படையாட்சியாருடன் சேர்த்து 19 சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மகத்தான வெற்றி பெற வைத்தனர். மக்கள் இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. தாழ்த்தப்பட்ட அரிசன சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை ‘ரிசர்வ்’ தொகுதியில் இல்லாத பொதுத் தொகுதியில் உழைப்பாளர் கட்சி சார்பில் நிறுத்தி அவரை வெற்றி பெறச் செய்து சட்டமன்ற உறுப்பினராக்கி காட்டினார். இது போல் நம்மினத்தில் இன்று வேறு பலர் செய்து காட்டுவதாக சொல்வதெல்லாம் கூத்து; நாடகம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

 

1952 தேர்தலின் மூலம் அகில இந்திய அளவில் புகழ் பெற்றார். நமது படையாட்சியார், தினமணி அதிபர் கோயங்கா நின்ற திண்டிவனம் பாராளுமன்ற தொகுதியில் சாதாரண ஆளான திருக்குறள் முனுசாமியை வைத்து தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.

 

அதே சமயம் தாழ்த்தப்பட்டவர்களையும், பிற சமுதாயத்தினரையும் உழைப்பாளர் கட்சி சார்பில் வேட்பாளராக நிற்க வைத்து வெற்றியும் பெற்றார்.

 

இந்த வெற்றியின் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் இராமசாமி படையாட்சியார் தான் என்பதை நிரூபித்து காட்டினார். வெற்றி வாகை சூடிய படையாட்சியார் சட்டமன்றத்தில் தன் சங்க நாதத்தை எழுப்பினார்.

வன்னிய குல சத்திரியர்களாகிய நாங்கள் மிகவும் பிற்பட்ட இனத்தவர்கள், எங்களுடைய பிற்பட்ட இனமும் எங்களைப் போன்ற இனத்தவர்களும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் ஒரு கட்சியாக ஏற்படுத்திக் கொண்டு இங்கே வேலை செய்கிறோம்.

 

எங்கள் சமூகம் மிகவும் பிற்போக்கான நிலையில் இருக்கிறதென்பதும் எங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தான் நாங்கள் உழைக்க வந்திருக்கிறோம் என்பதும் கனம் ஸ்ரீஇராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கு நன்றாக தெரியும்.

 

எங்கள் சமூகத்தவர்கள் யாரும் பெரிய உத்தியோகங்களிலோ அல்லது படித்தவர்கள் அதிகமாகவோ இல்லை. இதற்கு முன்பிருந்த சர்கார்களிடமும், காங்கிரஸ்காரர்களிடமும் நாங்கள் எங்கள் குறைகளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உதாசீனப் படுத்தப்பட்டோம். எங்கள் குறைகள் ஒன்றும் நிவர்த்திக்கப்படவேயில்லை.

 

 

தலைவர் காந்தி முதற்கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை எல்லோரும் உயர்த்த வேண்டும் என்று சொன்னார்களே தவிர, உருப்படியாக ஏதும் செய்யவில்லை. அதற்கு பிறகுதான் நாங்கள் சட்டசபைக்கு சென்று எங்கள் உரிமைக்காகப் பாடுபட வேண்டுமென்று தீர்மானம் செய்தோம்.

 

கல்வி நிலையிலே, பொருளாதார நிலையிலே, உத்தியோக நிலையிலே மிகவும் பிற்போக்கான நிலையில் இருக்கின்ற நாங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காகத் தான் வந்திருக்கின்றோம்.

 

கனம் ஸ்ரீஇராஜகோபாலாச்சாரியாரிடமும் இது பற்றி கேட்ட போது உங்கள் சமூகத்தின் பிரதிநிதியாக மாணிக்க வேலர் இருக்கிறாரே என்று சொன்னார்கள்.

 

மாணிக்க வேலர்கள் போல் பல மாணிக்க வேலர்கள் எங்கள் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கு வந்தாலும் எங்கள் சமுதாயம் மேல்நிலைக்கு வரும் வரையில் நாங்கள் ஒரு நாளும் ஓய்ந்து இருக்கப் போவதில்லை. காங்கிரஸ் இவ்வளவு காலமாக எங்கள் நலனைக் கவனிக்கத் தவறி விட்டதன் காரணமாக நாங்கள் காங்கிரசை எதிர்க்கத் திட்டமிட்டோம்.

 

பிற்பட்ட இனத்தவர்களின் குறைகள் தீர்க்கப்படும் வரை நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்க முடிவு செய்துள்ளோம். ஆகையால் நான் தான் இப்போது இந்த தீர்மானத்தை எதிர்க்கிறேன்.

 

மேலும் மாவட்ட அதிகாரிகள் சட்டசபை உறுப்பினர்கள் சொல்வதை கருத்தில் கொள்வது கிடையாது. அவர்கள் எடுத்து வைக்கின்ற நியாயமான கோரிக்கைகளும் புறக்கணிக்கப்படுகின்றன.

 

இந்த அரசு வந்ததில் இருந்துதான் இந்த மாதிரியான ஏதேச்சதிகாரம் நடந்த கொண்டிருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எந்த விதமான சலுகைகளும் செய்வதில்லை. படித்தவர்களிடமும், தொழிலாளிகளிடமும் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

 

எல்லா மக்களுக்கும் வேலை கிடைக்க வழி செய்ய வேண்டும். வேலை இல்லாத் திண்டாட்டத்தை போக்க சமூக நலதிட்டங்கள் போன்றவற்றை அரசு எல்லா மாவட்டங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் தமது நிலைப்பாட்டை துணிச்சலுடன் எடுத்துரைத்தார்.

 

 

காலக் சூழல் மாறியது. 1954-ம் ஆண்டு இடைத்தேர்தல் ஒன்று வந்தது. குடியாத்தம் தொகுதியில் காமராஜர் நின்றார். அப்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட கட்சிகள் சம பலம் படையாட்சியார் காங்கிரசில் சேராமல் கம்யூனிஸ்ட் பக்கம் சாய்ந்திருந்தால் இன்று சரித்திரம் திரும்பி இருக்கும் இடைத் தேர்தலில் காமராஜர் வென்றார்.

 

இராஜாஜி 1954-ல் மந்திரி சபை அமைக்கிறார். அதில் படையாட்சியாரை சேர்த்து விடுமாறு வற்புறுத்துகிறார். முடியாதென்ற படையாட்சியார், நான் பெரியாரிடம் பாடம் படித்தவன். உங்களோடு வர முடியாது என்று சொல்லிவிட்டார். விட்டுவிடவில்லை இராஜாஜி.

 

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் ஒன்று உண்டு. அந்த சமுதாயத்தை (வன்னியர்) எந்தக் கட்சி அரவணைத்துச் செல்கின்றதோ அந்தக் கட்சிதான் நிரந்தரமான ஓர் ஆட்சியை அமைக்க முடியும். அந்த சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சி அவர்கள் எப்போது காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரோ  அப்போதுதான் ஒரு நிரந்தர ஆட்சியை நாங்கள் தர முடியும் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்தார்.

 

கடைசி வரை இராஜாஜி சொன்னதை செவி மடுக்கவில்லை. படையாட்சியார் காமராஜர் 1954ல் ஜெயித்து வந்த பின்னர் அதுவும் தான் வைத்த நிபந்தனையை ஒப்புக் கொண்ட பின்னரே மந்திரியானார். படையாட்சியார் வைத்த நிபந்தனை வன்னியருக்கு 20 சதவிகிதம் இலவச கல்வி தர வேண்டும் என்பதே.

 

வரலாற்று சிறப்புமிக்க இந்த 20 சதவீதமே இட ஒதுக்கீட்டுக்கு முதல்படி ஏற்றுக் கொண்டார். காமராஜர், இராஜாஜியால் கொண்டுவர முடியாத படையாட்சியை காமராசர் கொண்டு வந்ததால் காங்கிரசில் அவருக்கு மரியாதை கூடியது. தலைவர் பெருந்தலைவராகவும் ஆக முடிந்தது.

 

அதனால் அவருடன் இணைந்தார். அவர் செய்தது ஒரு இனத்தினுடைய மக்களின் நன்மைக்காக; மந்திரியாக அல்ல என்பதை அவரை விமர்சிப்பவர்கள் எளிதாக மறைத்து விட்டனர். காமராஜரை பெருந்தலைவராக்கியதே நமது படையாட்சியார்தான் என்பதை எவர் சொல்ல முன்வருவர்.

அமைச்சரான படையாட்சியார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையை கவனமாக படியுங்கள். அப்போது தெரியும் அவரின் தொலை நோக்கு எண்ணம்.

 

தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர் நல விருத்திக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டிருப்பது 90 லட்ச ரூபாய். ஆனால் பத்து லட்ச ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 

பிற்பட்ட வகுப்பினர் ஜனத் தொகையில் எத்தனை விகிதாச்சாரம் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அந்த சதவிகிதப்படி பணம் ஒதுக்க வேண்டும்.

 

அந்த வகுப்பை சார்ந்த பள்ளிக் கூடப் பிள்ளைகளுக்கு உதவித் தொகை கொடுப்பதிலும், மற்ற சலுகைகள் காட்டுவதிலும் ஜனத்தொகை விகிதாச்சாரப்படி பணம் ஒதுக்கும்படி அரசாங்கத்தை வேண்டுகிறேன்.

 

 

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எல்லா வித சலுகைகள் அளிப்பதற்கும் நிரந்தரப் பரிகாரம் செய்வதற்கும் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்போது நாட்டில் அரசாங்கம் புதிய வரிகளைக் கொண்டு வந்திருக்கிறது. நாட்டில் மக்கள் அல்லல்படும் இந்த நேரத்தில் தரவேண்டிய வரியையே கொடுக்க முடியாமல் இருக்கும் போது புது வரிகள் தேவையில்லை என்றுதான் நான் சொல்லுவேன்.

 

மேலும் விவசாயப் பயிர்கள் பூச்சிகளால் பல வழிகளிலும் பீடிக்கப்பட்டு விளைச்சல் ஏதுமின்றிப் பல வழிகளிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

அரசாங்கம் இது பற்றி ஆலோசனை செய்து ஏழை விவசாயிகளுக்கு வரிவிலக்கு அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சராக இருந்தாலும் எதிர்க்கட்சி உறுப்பினரை போல தம்மக்களுக்கு வாதாடி பேசினார்.

 

 

 

அவர் அமைச்சராக பணியாற்றியதால் தன்னுடைய சமுதாயத்திற்கு நிறைய தொண்டுகள் செய்ய முடிந்தது. சீரழிந்து கிடந்த தன் சமுதாயத்திற்கு சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.

 

 

சட்டநாதன் குழுவை ஏற்படுத்தி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இராயப்பா ஐ.ஏ.எஸ். அவர்களை அரசு தலைமைச் செயலாளராக கொண்டு வந்தார். அம்பா சங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களை தமிழ்நாடு தேர்வானைக் குழுத் தலைவராக கொண்டு வந்தார்.

 

எங்கள் சமுதாயத்தையும் தாழ்த்தப்பட்டவர்களோடு இணைத்து விட்டால் மிகவும் நல்லது. அப்போதாவது அவர்கள் படித்து நல்ல வேலை வாய்ப்புகளில் அமர்வதற்கு வாய்ப்பு இருக்கும் என்று முதல்வராக இருந்த காமராஜரிடம் கோரிக்கை வைத்தார். அவர் சொன்ன வார்த்தை காமராசரை சிந்திக்க வைத்தது.

 

அதன் விளைவாக எல்லா மக்களும் பயன்பெறும் வகையில் இலவசக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. வேலை வாய்ப்பில் தன் சமுதாய மக்களுக்கு இருபது சதவீத இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முதன் முதலில் கொண்டு வந்தவர் படையாட்சியார்தான்.

 

இக்கட்டுரையை வாசித்து கொண்டிருக்கும் அன்பர்களே! படையாட்சியார் பதவிக்காக கட்சியை இணைத்துக் கொண்டார் என்று சொன்னால் இது போன்ற பேச்சை அவரால் பேசி இருக்க முடியுமா? என்பதை உங்களின் தலையாய தீர்ப்புக்கு விட்டுவிடுகிறேன்.

 

 

ஆனாலும் ஒரு முறை எடுக்கப்படும் முடிவு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை படையாட்சியாரின் அடுத்தடுத்த காலகட்ட அரசியல் நிகழ்வுகளை படித்தால் அதிலிருந்து அறிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

 

காங்கிரஸ் சரியில்லை என்று சுதந்திர கட்சியில் சேர்ந்தார். அப்போது இராஜாஜி சொன்னார், காங்கிரஸ் ஆளுங்கட்சி. அதை விட்டுவிட்டு இங்கே என்ன லாபத்திற்காக வந்திருக்கிறார். இல்லை, இல்லை! தியாகம் செய்வதற்காக வந்துள்ளார். தியாகம் செய்ய வந்த நம்மவரை தியாகப் படையாட்சி என்று சொல்லலாம் என்றார்.

 

படையாட்சியார் சுதந்திர கட்சிக்கு வந்த பின்னர், காங்கிரஸ் வெற்றிடமாகி விட்டது. அதை ஈடுகட்ட ஓ.வி. அழகேசனை வைத்து மாணிக்க வேலரை துணைக்கு வைத்து கடலூரிலேயே வன்னியர் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்தனர்.

 

படையாட்சி இல்லாத வன்னிய மாநாடா? அதுவும் அவர் பிறந்த கடலூர் மண்ணிலா?  கொந்தளித்தனர் மக்கள். படையாட்சியார் மாநாட்டு பாதையில் படுத்துக் கொண்டே போராடினார். இறுதியில் மாணிக்க வேலர் வந்து மன்னிப்புக் கேட்டார். அதன் பிறகே மாநாடு நடந்தது.

 

 

மறுபடியும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966லிருந்து 1977 வரைக்கும் இரண்டு முறை சட்டமன்ற மேல் சபை உறுப்பினராக பணியாற்றினார்.

 

1975-ல் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு இல்லாததால் பாதிப்பிற்குள்ளான வன்னிய சமுதாயத்திற்கு 15 சதவீதம் ஒதுக்கீடு கோரி தமிழகத்தில் மறியலை நடத்தினார் படையாட்சியார். அதன் உச்சகட்டமே தமிழகம் 1980ல் சந்தித்த தொடர் சாலை மறியல் போராட்டம். அதற்கு வித்திட்டவர் நம் படையாட்சியார் அவர்கள்.

 

1980ல் இருந்து 1984 வரையும் 1984ல் இருந்து 1989 வரைக்கும் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் திண்டிவனம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமேலவை உறுப்பினாராகவும், பாராளுமன்ற உறுப்பினாராகவும் பணிபுரிந்த படையாட்சியாரின் இடத்தை யாரும் எளிதில் நிரப்ப முடியாது என்ற வன்னிய அடிகளாரின் புகழாராம் எத்தனை பொருத்தமானது.

 

சிறுவயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்ட படையாட்சியாரின் எண்ணமெல்லாம் நலிவுற்ற மக்களை முன்னேற்றுவதாகத் தான் இருந்தது.

 

தாழ்வுற்றுக் கிடக்கும் சமுதாயம் ஏற்றம் காண வேண்டுமென்றால் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து செயலாற்றினர்.

 

 

சீரழிந்து கொண்டிருக்கும் தன் சமுதாய மக்களுக்குச் சமூகத்தில் உடனடியாக ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் அவருடைய  முக்கிய குறிக்கோளாக இருந்தது.

 

இரண்டு கோடி வன்னிய மக்களை கொண்ட நம் சமுதாயத்தில் சமூக சேவை செய்ய தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதிலும் 1950 முதல் 1960 வரையிலான பத்தாண்டு காலம் படையாட்சியார், மாணிக்க வேலர் இருவர் செய்த சமூகத் தொண்டுதான் வன்னியர்களுக்கு பொற்காலம் என்றால் அது மிகையல்ல.

 

தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் போற்றிய படையாட்சியாரின் பேரும் புகழும் பரவாதது போல் வன்னிய இனத்தின் சாதனைகளும் மிளிராமல் போய்விட்டது. படையாட்சியாரின் சாதனைகளுக்கு பிறகாவது தமிழகத்தின் தனிப்பெரும் சமூகமான நாம் அரசியல் அமைப்பில் 60 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் சக்தி இருந்தும், தலைமையையே நிர்ணயிக்கின்ற ஆற்றல் இருந்தும் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லையே ஏன்?

 

இந்தக் கேள்வி நம் எல்லோரிடையேயும் அவசியம் கிளர்ந்து எழ வேண்டும். அப்போது தான் நாம் பல படையாட்சியார்களை உருவாக்க முடியும். அவருடைய அடிப்படையை பின்பற்றினால் நிச்சயம் நாளை நம்முடையதாகும் என்பதை மனதில் வைத்து வன்னியர் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றுங்கள்! பங்கு பெறுங்கள்! ஒன்றாய் உயர்வோம்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திராவிட கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்!

 

1967 – தமிழக சட்டமன்ற தேர்தல் இம்மாநிலத்திற்கு புதிய பாதையை வகுத்து தந்தது. தமிழக முதலமைச்சர் காமராஜர் விருதுநகரில் போட்டியிட்டு தோல்வியடைந்த வரலாற்று சரித்திரத்தை ஏற்படுத்திய தேர்தல். மாபெரும் தலைவரை ஒரு மாணவனை வைத்து வீழ்த்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைய திமுகவின் தலைவர் அண்ணாவுக்கும் சரி, பின்பு வந்த கருணாநிதிக்கும் சரி இவர்களும் முன்னுதாரணம் நம் வன்னிய பெருந்தலைவர்களின் வழிகாட்டுதல்கள் அடங்கிய செயல்பாடுகள்தான்.

 

தென்னாற்காடு மாவட்டத்தில் உழைப்பாளர் கட்சியை மக்கள் தலைவர் இராமசாமி படையாட்சியாரும், வடாற்காடு மாவட்டத்தில் பொதுநலக் கட்சியை ஐயா மாணிக்க வேலரும் ஆரம்பித்ததே திமுக உருவாகவும், இவ்விரு கட்சிகளின் வெற்றியே திமுகவை அடுத்த தேர்தலில் போட்டியிட வைக்கவும் உந்து சக்தியான உதாரணங்கள். ஆனால், திமுக தனக்கு வசதியாக இவற்றையெல்லாம் அழித்துவிட்டது.

 

அதோடு மட்டுமல்ல நம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலும், பின்பு ஆட்சியிலும் இணைந்ததால் அதை தாங்களுக்கு சாதமாக்கி இவர்களிடம் திரண்டிருந்த மக்களை பிரித்து தம்பக்கம் இணைத்துக் கொண்டனர். அதுவே நம் சமூகத்துக்கு தீங்காய் அமைந்து சுமார் நாற்பதாண்டுகளுக்கு மேல் நாம் சுதந்திரம் பெற்றும் அடிமைகளாகவே வாழ்ந்தோம்.

 

 

 

 

 

 

 

 

 

தனி ஒதுக்கீடு பிதாமகன்!

 

படையாட்சியார் தன்னுடைய சமுதாய மக்களுக்காக போராட எப்போதும் தயங்கியதே இல்லை. 1968 – அண்ணாவின் ஆட்சி நடந்து கொண்டு இருந்த நேரம். ஏற்கனவே பலமுறை 20 சதவீத தனி ஒதுக்கீடு கேட்டு போராடிய வேளையில் ஜனாதிபதி ஜாஹிர் உசேன் சென்னைக்கு வந்தார்.

 

முதலாவது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனான காகா காலேல்கார் கமிஷன் தீர்ப்பினை அமுல்படுத்தக் கோரி சென்னைக்கு வரும் ஜனாதிபதிக்கு படையாட்சியார் தலைமையில் கருப்புக் கொடி காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்த போராட்ட முறையில் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், தொண்டர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர் இதில் கலந்து கொண்டார். சாத்வீக – காந்திய முறையிலான போராட்டங்களால் நம்பிக்கை கொண்டிருந்தாலும் எதற்கும் துணிந்த அஞ்சா நெஞ்சர்.

 

 

தினமணியை வென்ற திருக்குறள்

 

மக்கள் தொண்டு செய்வதில் மாசற்று விளங்கினால் எந்த மலையையும் எதிர்த்து நின்று போரிட்டு வென்று விடலாம் என்பதை அகில இந்தியாவுக்கும் எடுத்துக் காட்டியவர் நம் மக்கள் தலைவர் படையாட்சியார். காமராஜரை தோற்கடித்தது திமுகவின் அபார வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்தது என்பதை நாடறியும், ஆனால், இந்த சாதனையை இந்திய தேர்தல் அரசியலில் முதல் தேர்தலிலேயே செய்து காட்டினார் நமது மக்கள் தலைவர்.

 

அதுவும் 1952-ம் வருடம் காமராஜரை விட பல மடங்கு புகழும், சுதந்திர வேள்விக்கு பத்திரிகை மூலம் பணியாற்றிய பெருமையும் உடைய தினமணி பத்திரிகையின் அதிபர் கோயங்கா அந்த தேர்தலில் திண்டிவனம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

 

தனது பள்ளிக்கால நண்பரான திருக்குறள் முனுசாமியை கோயங்காவை எதிர்த்து வேட்பாளராக நிற்க வைத்தார் படையாட்சியார். அன்றைய நிலவரத்தில் சுமார் 10 கோடி ரூபாயை இழந்தாலும் தான் ஜெயித்தே தீர வேண்டுமென்று போராடினார் கோயங்கா.

 

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய பத்திரிகைகள் அதிபரும், மிகப்பெரிய கோடீசுவரரான கோயங்காவை எதிர்த்து பணபலமற்ற சாதாரண ஆளான முனுசாமியை நிற்க வைத்து கடும் பிரச்சாரத்தை செய்தார் படையாட்சியார். உண்மையில் படை திரட்டி சென்று போரிட்டது போன்றுதான்.

 

தேர்தல் நடந்து முடிந்தது. இந்திய தேசமே அதிர்ந்தது. பெரும் தனவான் ஆன கோயங்காவை திருக்குறள் முனுசாமி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

 

இந்தியத் துணைக் கண்டத்தில் இப்படிப்பட்ட மக்களும் உள்ளனர். இப்படிப்பட்ட கட்சியும் உள்ளது. இப்படிபட்ட மக்கள் தலைவரும் உள்ளார் என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்த பெருந்தகையாளார் வெற்றிக்கு சொந்தக்காரர் நமது படையாட்சியார் அவர்கள்.

 

திருக்குறள், தினமணியை தோற்கடித்த வரலாற்றை இதுவரை எவரேனும் இப்பூமியில் ஒப்புக்காக சொன்னதுண்டா? ஏனென்றால் சாதனை படைத்தவனும், சரித்திரம் படைத்தவனும் வன்னியன் அல்லவா?

 

பணத்தை இழந்து

இனத்தை மீட்டவர்!

 

பெரும் நிலச் சுவான்தார்களும், பெருந்தனக்காரர்களுமே கொலுவீற்றிருந்த அரசியல் காலகட்டமது. ஒரு கட்சியை ஆரம்பித்து அதை தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைப்பது அவ்வளவு சுலபமானதா என்ன?

 

கடலூரில் மராட்டா ஓட்டல் முதல் (இந்தியா காப்பி முதல்) திருப்பாப்புலியூர் வரையில் ஏராளமான கடைகள் படையாட்சியாரின் குடும்ப சொத்து. அவை அத்தனையும் 1952-ல் உழைப்பாளர் கட்சித் தேர்தலுக்கு அடமானம் வைத்து செலவு செய்தார் படையாட்சியார். திருப்பிக் கட்ட முடியாமல் அவை அனைத்தும் மூழ்கிக் போயின.

 

பீமா விலாஸ் ஓட்டலை விற்று திருக்குறளார் முனுசாமிக்கு போட்டியில் செலவிட கொடுத்து விட்டார். இப்படி அவரது சொத்துக்கள் எல்லாம் கட்சிக்காகவே கரைத்து விட்டார். அவரது சகோதரர்கள் இந்த சொத்துக்களில் பங்கு கேட்கவே இல்லை.

 

கடலூரில் இருந்த அவருக்கு சொந்தமான முத்தைய்யா டாக்கீஸில் அன்றைய தினம் வசூலான பணம் முழுக்க கட்சி அலுவலகம் நடத்துவதற்கான செலவுக்குப் பயன்பட்டது. மக்களுக்காக, கட்சிக்காக, அரசியலுக்காக அனைத்தையும் இழந்த மாமன்னன் எங்கள் படையாட்சியார்.

 

பணத்தை இழந்து இனத்தை மீட்ட படையாட்சியார் வன்னியர்களின் குலதெய்வமன்றோ?

 

 

 

 

 

 

 

படையாட்சியார் பற்றி புரட்சித் தலைவி!

 

விழுப்புரத்தை தலைநகராகக் கொண்ட மாவட்டத்திற்கு விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என்று பெயர் சூட்டி அம்மாவட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் பேரூவுவகை அடைகிறேன் என்றார் அப்போதைய முதல்வரும், அடுத்த (2011) முதல்வருமான நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

 

வாழ்வாங்கு வாழ்ந்து… பின்னர் வீழ்ந்த ஒரு சமுதாயத்தை மீண்டும் தலைநிமிரச் செய்து தன் வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட பெருந்தகையாளர் இராமசாமிப் படையாட்சி அவர்கள்.

 

வாழ்ந்தவர் கோடி – மறைந்தவர் கோடி என்றாலும், மக்கள் மனதிலும்… சரித்திரத்திலும் நின்று நிலைப்பவர்கள் மாபெரும் வீரர்களும் – மானம் காத்தோருமே என்ற இயற்கை நியதிப்படி வாழ்ந்து மறைந்த ஒரு பெருந்தகையாளரின் – சாதனைகளுக்குச் சிறப்பு செய்யும் வண்ணம் விழுப்புரம் – இராமசாமிப் படையாட்சியார் மாவட்டம் அமைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

 

விழுப்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு இன்று உதயமாகும் இராமசாமிப் படையாட்சியார் மாவட்டம் நம் தங்கத் தமிழகத்தின் நெற்றித் திலகமாக ஜொலிக்க வேண்டும்.

 

சாதி, சமய அரசியல்மாச்சாரியங்களைக் கடந்து நல்லோர்களின் பெயரை மாவட்டங்களுக்குச் சூட்டும் நாகரீகம் அனைவருக்கும் வருவது இல்லை. பரந்த மனதும் – தன்னம்பிக்கை உடையவர்களும் தான் அனைத்து பேதங்களையும் கடந்து நல்லவர்களையும்… வல்லவர்களையும் பாராட்டிச் சீராட்டி மகிழ்ச்சி அடைய முடியும்.

 

 

 

 

பெரியாரும் படையாட்சியாரும்!

 

தந்தை பெரியாரிடம் படையாட்சியாருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால் தான் இராஜாஜி அமைச்சராக அழைத்த போது தான் பெரியாரிடம் பாடம் படித்தவன். உங்களோடு வர முடியாது என்று மறுத்தவர். பெரியாரும் பாந்தமாக என்ன படையாட்சியாரே என்று மருகி பேசுவதும் இருவருக்குமுள்ள நெருக்கத்தை காட்டுவதாக பலர் சொல்வதுண்டு.

 

சீர்திருத்தக் கருத்துக்களை பரப்புவதற்குத் தந்தை பெரியாரும் படையாட்சியாரின்  உதவியை கேட்டு பெறுவாராம். இந்த உறவுதான் காமராஜரையும் படையாட்சியாரையும் இணைத்தது என்றும் கூட சொல்லப்படுவதுண்டு.

 

 

 

 

 

 

குற்றப் பரம்பரையை ஒழித்தவர்!

 

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் குற்றப்பரம்பரையினர் என்று தமிழ்நாட்டில் ஒரு சாரர் முத்திரை குத்தப்பட்டு வெள்ளையர்களால் கீழ்த்தரமாகவும், அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். அந்த இழி நிலையிலிருந்து அந்த அவப்பெயரை தூக்கி எறிந்து விட்டு சரித்திரம் படைத்தார் படையாட்சியார். அந்தச் சமுதாயம் – தென்னாட்டவர் – எந்நாளும் படையாட்சியாருக்கு நன்றி விசுவாசத்தோடு இருக்க வேண்டும் அல்லவா?

 

 

 

 

 

 

 

 

 

 

படையாட்சியார் மன்னிப்பாரா!

 

இராமசாமி படையாட்சியார் தனது காரில் சென்றால், அதை பார்க்க நேரும் வன்னிய மக்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்படியே போட்டு விட்டு நெடுஞ்சாண் கிடையாக கார் போகும் திசையில் விழுந்து வணங்குவார்கள்.

 

அத்தகு பேரும், புகழும், கீர்த்தியும் பெற்ற பெரிய மனிதரை, சமுதாய பெருந்தலைவரை உலகில் எதிரி கூட செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்யச் சொன்னார் இன்றைய வன்னிய பாதுகாவல் வேஷம் போடும் கபடதாரி.

 

வன்னியர்களை காங்கிரசில் அடகு வைத்து விட்டார் படையாட்சியார். எனவே, நமது சங்கத்தை சேர்ந்தவர்கள் அவரது கடலூர் முகவரிக்கு ஒற்றைக்கால் செருப்பு, வளையல், மர்ம உறுப்பு மயிர் ஆகியவற்றை பார்சல் அனுப்புங்கள்! என்று குரூரமான, நாகரீகமற்ற கட்டளையை இட்டவர் இன்று மரத்துக்கு மரம் தாவுவது போல் கூட்டணிக்கு குருமா தேடும் இப்போதைய இராமதாஸ்தான் அவர். இதை படித்து தெரிந்து உங்கள் ரத்தம் கொதித்தால் படையாட்சியாரின் ஆசி கிடைக்கும். தீயவைகளை அகற்றுதல்; கெட்டவைகளை நீக்குங்கள்! முடிந்தால் பகல் வேடதாரிக்கு பாடம் புகட்டுங்கள்!

 

  • ••• •

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu