ஆண்ட பரம்பரை

 

(நமது சொந்த ஆராய்ச்சி)

 

(கி.பி. 2-வது நூற்றாண்டிலிருந்து,

கி.பி. 20-வது நூற்றாண்டு வரை

ஆராயப்பட்டது. – வ.செ.ச.)

 

உயிர் கார்த்து, உடமை கார்த்து,

நாட்டைக் கார்த்த நம்மினத்தார்

இன்றுள்ள நிலமை என்ன?

 

இன்று சீரழிந்து வறுமையில் வாடும் நமது குலமான வன்னிகுல சத்திரிய சமூகம், அன்று தமிழ் நாட்டை பல பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்து வந்த சமூகத்தினர் என்பதும், நாட்டை காக்கும் பணியில், பேரணியில் ஓரணியாக நின்று, படையேற்று உடமை  கார்த்து நாட்டை உயிர்க் கொடுத்து கார்த்து, படையை ஆட்சி செய்தவர் நம் வம்சத்தினர் என்பதும், வேறு பல சகோதர சமூகத்தினரில் கூட அனேகம் பேர், தான் யார்? தம்முடைய குலமென்ன? அதனுடைய சென்ற கால சரித்திர வரலாறு என்ன? என்பதை எல்லாம் அறிந்துக் கொள்ளாமலே, நமக்கென்ன யாருக்கு வந்த விருந்தோ என்று, கண்மூடி மவுனிகளாக இன்னும் இருந்தது வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஏழைகளும், கல்வி கேள்விகளில் தாழ்ந்து மிகவும் வறுமையிலும், அறியாமையிலும் இருக்கக்கூடியவர்களே அதிகம் எனக்கூறலாம். ஆனால் கற்றறிந்தவர்களோ அல்லது பெரும் செல்வம் படைத்தவர்களும் கூட, தனது முன்னிலையை அறிந்து, அந்நிலைக்கு இல்லாமல் போயினும், ஓரளவு மக்களை முன்னேற்றமடைய செய்ய முன் வராமல் தானுண்டு, தன்னுடைய பணமுண்டு. அதைக் காக்க தனக்கு கடமையுண்டு என்று சுயநல அடிப்படையிலேயே நடந்துக் கொண்டு வருகின்றனர். அன்று மண்ணுயிரை தன்னுயிர் போல் பாவித்து பணியாற்றிய நமது வன்னிகுல சமூகம், இன்று இன்னிலையிலே போய்க் கொண்டிருப்பதைக் காண நாம் மிகமிக வருந்துவதோடு  நம் முன்னோர்களின் வரலாற்றுச் சுவடிகளையும், இன்று நாட்டிலே காணப்படும் அதன் சின்னங்களையும் தயவுசெய்து கூர்ந்து காணும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.

 

வன்னிய சமூகம்

நாடாண்ட பரம்பரைதான்!

 

தமிழ்நாட்டில் வீரமும், ரோஷமும் கொண்ட வன்னிய சமூகம் நாடாண்ட பரம்பரை என்றும், தமிழ்நாட்டின் முடிமன்னர்களாகிய சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் சந்ததிகள் என்றும், கால தேச வர்த்த மானத்தினாலும், மேலும் வன்னிகுல சத்திரியர்கள் அடிமை மனப்பான்மையின்றி கோழைத்தனத்தை விடுத்ததும், யாருக்கும் அடி பணிந்து வாழமாட்டோம் என்ற குலச் சிறப்பை மெய்ப்பித்து நடந்து கொண்டிருப்பதாலும் பலரால் சூதினால் ஏய்க்கப்பட்டு மற்றும் சிலரால் பேடி தனமான வரதினால் ஏமாற்றப்பட்டு, நாட்டை விட்டு காட்டிற்கு துரத்தி அடிக்கப்பட்டதாலும், இன்றைய சூழ்நிலையில் வன்னியர்கள் வலிகுன்றி, மதிப்பிழந்து, மானமிழந்து கட்டுப்பாடின்றி எடுப்பார் கைப்பிள்ளை போல் இன்று வாழ்கின்றனர்.

 

நம்மக்கள் இன்றுள்ள தாழ்வான நிலையைக் கண்டு, நாமோ அல்லது பிறரோ யாரும் மதிப்பிட்டு விட கூடாது. இம்மக்களின் சமுதாயம் இன்று கட்டுப்பாடின்றி அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டைப் போல் இன்று சிதறி இருந்தாலும், இவர்கள் இன்று கல்வி, கேள்விகளில் தாழ்ந்தும், அரசியல் அறிவியல், விஞ்ஞான தொழில் துறையில் பொது உலக அனுபவ விஷயங்களில் கடையராக இருந்தாலும், இம்மக்களுடைய முன்னோர்கள் சென்ற நாட்களில் சிறந்தும், வீரத்தில் மிக பெருமை படக்கூடிய அளவு மிகுந்தும், அரசியல் அனுபவத் துறைகளில், மிகமிக போற்றத்தக்க முறையில் மணிமுடி தரித்து, மன்னாதி மன்னர்களாய், எந்நாட்டு மன்னரும் இத்தமிழ்நாட்டு மன்னரை போற்றிப் புகழ்ந்து, வணங்கி செல்லுமளவு, வாழ்ந்திருக்கின்றனர். இத்தமிழ்நாட்டை வளமுடன் அரசு செலுத்தியும் இருக்கின்றனர். இதற்கு சான்றுகள் பல கீழே தருகிறோம்.

 

தமிழ்நாட்டு மன்னர்களைப் பற்றி

சரித்திரம் கூறுவதென்ன?

 

இத்தமிழ்நாட்டை மூன்று வேந்தர்கள் மட்டும் தான், ஆட்சி செய்திருப்பதாக பொதுவாக கூறப்படுகின்றன. இது மிக தவறு! இத்தமிழ்நாட்டை 5 வம்சத்தினர்கள் ஆண்டிருப்பதாக சரித்திரத்தில் தெரிய வருகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, களப்பிரியர் என்று சொல்லும் 5 வம்சத்தினர், இத்தமிழ்நாட்டை பாகம் பாகமாக பிரித்து, அரசு செலுத்தி இருக்கின்றனர். சிற் சில சமயங்களில், சில அரசர்களின் போர் திறனால், எல்லைக் கோடுகள் மாறி மாறி இருக்கலாம். சில காலங்களில் ஒரே பிரிவினர் தமிழ்நாடு பூராவையும் ஆட்சி செய்தும் இருக்கலாம். ஆனால் இத்தமிழ்நாட்டை 5 பிரிவினர்கள் ஆண்டிருப்பது என்பது மட்டும் உண்மை. இந்த ஐவரில் களப்பிரியர் என்று சொல்லும் வம்சத்திரைப் பற்றி சென்ற கால சரித்திரம் அவ்வளவாக கூறப்படவில்லை. நமது ஆராய்ச்சிக்கும் அவர்களைப் பற்றி போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. ஆகவே மற்ற நான்கு அரச வம்சத்தினரைப் பற்றியும், அவர்களுக்கும் வன்னியர்களுக்கும் உள்ள உறவைப் பற்றியும் சற்று ஆராய்வோம்.

  • ••

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu