ஆண்ட பரம்பரையினரான
வன்னியர் இன்று நகர் புறங்களில்
ஏன் வாழ்வதில்லை?
அவர்கள் குக்கிராமங்களிலேயே
ஏன் வசிக்கின்றனர்?
அன்பர்களே!
இக்கேள்வி மிகவும் முக்கியமான கேள்விதான். அதிலும் இக்கேள்வியில் மிக்க அர்த்த புஷ்டியும் அடங்கி இருக்கிறது. பொதுவாக இன்றுள்ள நிலையில் வன்னியர்களில் பெரும்பாலோர் நகர்புறங்களில் வசிப்பதே இல்லை. கிராமங்களில் தான் வசிக்கிறார்கள். அதிலும் முக்கியமாக இவர்களை சிறிய சிறிய குக்கிராமங்களில் தான் காணலாம்.
நாட்டை ஆண்ட வன்னியகுலத்தினர் அன்று நாட்டை மாற்றானிடம் விட்ட பிறகு இவர்கள் மானத்திற்கு அஞ்சி நாலா திசைகளிலும் பரவி வாழ ஆரம்பித்தனர். யுத்தத்தில் தோற்று ஓடினவர்கள் கண்டம் கண்டமாக சிதறி விட்டனர். கண்காணாத இடங்களில் ஓடி ஒளிந்து வாழ்க்கையை நடத்த முற்பட்டனர். இதனால் இவர்கள் அரசாங்க தலை நகரங்களில் தங்கி அன்று வாழ்க்கையை நடத்த முடியாமல் போய்விட்டது.
கங்காணிகள் காட்டிக் கொடுத்தனர்!
வீர வன்னியர்கள் தூக்கில் தொங்கினர்!
மேலும் இவர்கள் ஆட்சி செய்திருந்த காலத்தில் அவ்வாட்சியின் மீது அதிருப்தியும், பொறாமையும் கொண்டிருந்த பலர், இச்சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேற்று நாட்டு அரசனுடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு வன்னியர்களை பழி தீர்க்க தலைப்பட்டு விட்டனர். வன்னிய வம்சத்தினரை அரசாட்சியிலிருந்து விரட்டி விட்டால் மட்டும் போதாது. இவர்களை நாட்டை விட்டே துரத்தி விட வேண்டும். இல்லையெனில் வன்னியர்கள் மீண்டும் மீண்டும் தலை தூக்கி அரசை மறுபடியும் கைப்பற்ற முயலுவார்கள். ஆகவே இவர்களை கூண்டோடவே அழித்து விட வேண்டும். கொலை செய்து விட வேண்டும். தூக்கில் போட வேண்டும் என்று இக்கங்காணிகள் நாட்டைப் பிடித்த அரசனுக்கு தூபம் போடவே அவனும் இதை நம்பி வன்னியர்களை பழி வாங்க முற்பட்டான். படைகளை ஏவினான். ஒற்றர்களை அனுப்பி வைத்தான்.
இந்நிலையில் தமது தலைவர்களையும், போர் வீரர்களையும் பலி கொடுத்து பரிதவித்த வன்னியர்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளைத் துறந்து, சொத்து சுகத்தை எல்லாம் இழந்து உயிருக்கு பயந்து சின்னா பின்னப்பட்டு சிதறி சுக்கு நூறாகி காடுகளிலும் குகைகளிலும் மனித சஞ்சாரமற்ற இடங்களில் எல்லாம் ஒளிந்து மறைந்து வாழ்க்கையை நடத்த தலைப்பட்டனர்.
இடையிடையே இராஜ்ய ஒற்றர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அனேக வன்னிய வம்சத்தினர் கைது செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர்.
வன்னியர் அன்று பிழைக்க வேறு வழி
இல்லாமல் போகவே,
விவசாயத்தை மேற்கொண்டனர்!
இப்படி நாலா விதத்திலும் துன்பத்திற்குள்ளான வன்னியர்கள், தங்களுடைய வாழ்க்கையை நடத்த வேறு ஒரு வழியும் இல்லாததால் அவரவர்கள் தங்கி தலை மறைவாக இருந்த இடங்களையே தங்களுக்கு வாழ்க்கைக்குகந்த இடமாக மாற்றிக் கொண்டனர். குடியிருக்க அவ்விடத்திலேயே ஒட்டுக் குடிசையை அமைத்துக் கொண்டு, வயிற்றைக் கழுவ காடுகளை அழித்து பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து ஜீவிக்க தலைப் பட்டு விட்டனர்.
இந்த முறை பல ஆண்டு காலம் நீடித்து விட்டபடியால் இவர்களுடைய பழைய பட்டணத்து நாகரீகம் மங்கி காட்டுப் பிரதேச வாசிகளாகவும் கல்வி கேள்விகளில் சிறந்திருந்த இவர்கள். கல்வி அறிவற்றவர்களாகவும், ஆடவர் கையில் தடியுடனும், அரை நிர்வாணத்துடனும், பெண்டீர் எல்லாம் அநாகரீக வேஷத்துடனும் கால தேச வர்த்தமானத்தினால் மாறி விட்டனர்.
ஆனால் வன்னியர்கள் நாட்டை மாற்றானிடம் விட்டுவிட்டு ஓடி வந்து விட்ட பிறகு அனைவரும் நாம் மேலே சொன்னபடி கை கட்டி வாய் பொத்தி வெறுமனே இருந்து விடவில்லை. இவர்களிலும் வலிமை கொண்ட வீர புருடர்கள் சிலர் அப்போதுக்கப் போது சிறுசிறு கோஷ்டிகளாக சேர்ந்து, (தங்களது நாட்டை ஆக்கிரமித்து கொண்ட அரசனுக்கு) அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தனர். பழிக்குப் பழி வாங்க வேண்டும். வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டும். என்று ரோஷம் கொண்ட அதி தீவிர வீர வாலிபர்கள் மற்றும் பல போர் வீரர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீட்க பலமுறை முனைந்து போரிட்டு இருக்கின்றனர். ஆனால் இவர்களுடைய கிளர்ச்சிகள் எல்லாம் வெற்றியடையாமல் போய் விட்டன. இக்கிளர்ச்சியின் காரணமாக எண்ணற்றவர்கள் இறக்கவும், கொடுமைக்கு உட்படவும் நேரிட்டு விட்டது.
ஆண்டப் பரம்பரை இன்று,
ஆண்டிப் பரம்பரையாக மாறிவிட்டது!
இதனால் வன்னிய சமூகத்தில் பல மற்றவர்களின் எண்ணிக்கையும் பீதி கொண்டவர்களின் தொகையும் இனிமேல் நம்முடைய பிழைப்பை கவனிப்போம் என்று எண்ணுபவர்களின் கணக்கும் அதிகமாயிற்று. மறுபடியும் தாங்கள் இழந்த நாட்டை மீட்க வேண்டும் என்று எண்ணுபவர்களின் கணக்கு குறைந்து விடவே நாள் செல்ல செல்ல வருடங்கள் உருண்டோட நாம் ஆண்ட பரம்பரையினர் என்ற எண்ணமே இவர்களில் பெரும்பாலோருக்கு இல்லாமல் அற்றுப் போய்விட்டது. நாம் பட்டிக்காட்டான், கிராமவாசிகள் படிப்பற்றவர்கள், திக்கற்றவர்கள், அனாதைகள், ஆதரிப்பார் இல்லாதவர்கள் என்று இவர்களே தங்களுக்குள் எண்ணும்படியான சூழ்நிலைக்கு இவர்களை காலம் உருட்டிக் கொண்டு வந்து விட்டுவிட்டது.
ஆகவே தான் வன்னியர்கள் இன்று நகர்புறங்களில் அதிகமாக வசிக்காமல், கிராமங்களிலேயே அதிகமாக இருப்பதும் இச்சமூகத்தினரில் 100க்கு 80 சதம் பேர் விவசாயத் தொழிலிலேயே ஈடுபட்டிருப்பதும், மேலும் இவர்கள் வருவதால் நாகரீகம் குன்றி கல்வியிலும் மற்றும் பலவற்றிலும் தாழ்ந்து இருப்பதற்கு நாம் மேலே கூறிய காரணம் தான் என்பதை வாசகர்கள் நன்கு புரிந்துக் கொண்டிருக்கலாம்.
- ••
தமிழ் மன்னர் கட்டிய திருக்கோயில்கள்
கோயில்கள் கட்டியவர்கள்
காஞ்சி, கயிலாசநாதர் கோயில் இராசசிம்மன்
மாமல்லபுரம் கோயில் நரசிம்ம வர்மன்
காஞ்சி, ஏகாம்பரநாதர் கோயில் நரசிம்ம வர்மன்
திருத்தணி கோயில் அபராசித வர்மன்
தஞ்சை பெரிய கோயில் முதல் ராஜராஜன்
திருப்பதி கோயில் கருணாகர சோழன்
காஞ்சி, ஆதிவராகர் கோயில் சிம்ம விஷ்ணு
காஞ்சி, வைகுந்த பெருமாள் கோயில் இரண்ய வர்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுந்தரபாண்டியன்
ராமேஸ்வரம் கோயில் குலசேகர பாண்டியன்
திருச்சி, மலைக்கோட்டை கோயில் மகேந்திர வர்மன்
மகேந்திரவாடி கோயில் மகேந்திர வர்மன்
திருக்கழுக்குன்றம் கோயில் மகேந்திர வர்மன்
நாமக்கல் கோயில் மகேந்திர வர்மன்
பல்லவபுரம் கோயில் மகேந்திர வர்மன்
வல்லம் கோயில் மகேந்திர வர்மன்
மாமண்டூர் கோயில் மகேந்திர வர்மன்
தளவானூர் கோயில் மகேந்திர வர்மன்
மண்டப்பட்டு கோயில் மகேந்திர வர்மன்
சீயமங்கலம் கோயில் மகேந்திர வர்மன்
சிதம்பர நடராஜர் கோயில் சிம்ம வர்மன்
சிதம்பர நடராஜர் கோயிலில் பொன் விமானம் புதுப்பித்தவன்
1வது பராந்தக சோழன்
- ••
சோழ மன்னர்களின் ஆட்சிக் காலம்?
ஆரம்பக் கால சோழரின் ஆட்சிக் காலம்
(சரியாக அறிய முடியவில்லை)
இடைக் கால சோழரின் ஆட்சிக் காலம்
கி.பி. 800-1100
பிற்கால சோழரின் ஆட்சி காலம்
கி.பி. 1100 – 1350
சோழரின் பேரரசை
நிலை நாட்டிய வீர மன்னர்கள்
கரிகாலன் திருமாவளவன் கி.பி. 5வது நூற்றாண்டு
இம்மன்னன் வடநாட்டு ஆரிய மன்னர்களான வஜ்சிர நாட்டரசர்களை வென்று இமயத்தில் புலி கொடி நாட்டினான்.
விசயாலய சோழன் கி.பி. 846 – 880
இம்மன்னன் உறையூரில் இருந்த தலை நகரை தஞ்சைக்கு மாற்றினான்
ஆதித்த சோழன் கி.பி. 870 – 907
முதல் பராந்தக சோழன் கி.பி. 907 – 953
இம்மன்னன் இலங்கையையும், ஈழத்தையும் வென்றான்
முதல் இராஜராஜ சோழன் கி.பி. 985 – 1013
இம்மன்னன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டினான்.
முதல் இராஜேந்திர சோழன் கி.பி. 1014
இம்மன்னன் வடநாட்டு அரசரை வென்று, இமயத்தில்புலி கொடியை நாட்டி கங்கை நீரை கொண்டு வந்து கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்தவன்.
முதல் இராஜாதி இராஜன் கி.பி. 1018
முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 1060
இம்மன்னன் ஒரு கன்றின் உயிருக்காக தனது மகனின் உயிரை வாங்கினான்.
விக்ரம சோழன் கி.பி. 1118
2வது இராஜஇராஜன் கி.பி. 1173
3வது குலோத்துங்கன் கி.பி. 1218
சோழர் ஆட்சியை கோட்டை விட்டவன்
3வது இராஜஇராஜன் கி.பி. 1256
சோழர் ஆட்சியை அழித்த
வேற்று நாட்டு மன்னர்கள்
பாண்டியர் + விஜய நகரத்து அரசர்கள்
- ••




