ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்து நின்றது, பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனல்ல!

முன்பு திருநெல்வேலி சீமையில் பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த கட்டபொம்மன் தான். முதன்முதலில் தமிழ்நாட்டில் பரங்கியரை (வெள்ளையரை) எதிர்த்து போராடியது என்று இன்று அனைவராலும் பேசவும் எழுதவும், படுகிறது. ஆனால் புதைந்து கிடக்கும் மற்றொரு சரித்திரம் நமக்கு வேறொரு விஷயத்தை கவனப்படுத்துகிறது. அதாவது:-

கி.பி. 1637-ல் சென்னைக்குள் வந்திறங்கிய பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியார் கி.பி. 1639ல் சென்னை கடற்கரை ஓரத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி தக்க பாதுகாப்பு செய்து கொண்டவுடனே மேலும் தெற்கு நோக்கி படையை கொண்டு சென்றனர். அச்சமயத்தில் பல்லவபுரம் குறுநில மன்னர்கள் தவிர மற்ற தனக்கு எதிர்பட்ட ஏனைய குறுநில மன்னர்களை எல்லாம் இவர்கள் அடக்கி விரட்டி அல்லது கப்பம் கட்டச் செய்து மேலும் முன்னேறிச் சென்றனர்.

பல்லவபுரம் சிற்றரசர்களான வன்னியர்கள்தான், முதல்முதலில் வெள்ளையரை எதிர்த்து போராடியவர்!

ஆனால் பல்லவபுரத்து (பல்லாவரம்) சிற்றரசர்களான வன்னிய பரம்பரையில் வந்த காத்தவராய கவுண்டன், சேர்ந்தவராய கவுண்டன் என்ற இருவரும் வெள்ளையன் படைக்கு தலை வணங்கி கீழ் படிய, அல்லது கப்பம் கட்ட மறுத்துவிட்டனர். மேலும் இச்சிற்றரசர்கள் கும்பினியார் கொண்டு செல்லும் படையை தெற்கு நோக்கி மேலும் போகவிடாமல் செய்து தங்களது சேனையைக் கொண்டு தடுக்கவும் செய்தனர். இந்த இடத்தில் இரு சாராருக்கும் கொடிய யுத்தம் நடைபெற்று இருக்கிறது. ஒரு வார யுத்தத்திற்கு பிறகு வெள்ளையர் படை, கவுண்டர் படையை தோற்கடித்து, இந்நாட்டு சிற்றரசர்கள் இருவரையும் சிறை பிடித்து சிரச்சேதம் செய்ததுடன் பல்லவபுரத்தை சூரையாடிவிட்டு தெற்கு நோக்கி சென்றிருக்கின்றனர்.

சரித்திரம் எழுதிய கயவர்கள் வன்னியரின் வீரத்தை திரைபோட்டு மறைத்து விட்டனர்.!

எனவே தமிழ்நாட்டில் கொள்ளைக்காரர்களான வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தை முதன்முதலில் எதிர்த்து நின்றது பல்லவபுரத்தின் சிற்றரசர்களாக இருந்த வன்னியர்கள் தான் என்று, நமது ஆராய்ச்சியில் அறிய வருகிறது. மேலும் பல்லவபுரம் சென்னையில் இருந்து 12வது மைலில் தான் இருக்கிறது.

ஆனால் பாஞ்சாலங்குறிச்சியோ சென்னையில் இருந்து 400 மைல் தொலைவில் இருக்கிறது. இந்நிலையில் பாஞ்சாலங்குறிச்சியை (பின்னது) சரித்திரம் எழுதி விளம்பரப்படுத்தப் பட்டிருக்கிறது. பல்லவபுரத்தை (முன்னதை) மறைக்கப்பட்டு விட்டது. இது விந்தையிலும் விந்தையே. சரித்திரம் எழுதும் ஆசிரியர்கள் வேற்று சமூக அன்பர்களான படியால் இதிலும் வன்னியரைப் பற்றி இருட்டடிப்பு செய்து விட்டிருக்கின்றனர். என்னே மதியீனம். வன்னியர்களை எல்லாத்துறையிலுமா பழி வாங்க வேண்டும்?

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் ஓர் போர் வீரன், வெள்ளையரை எதிர்த்த மாவீரன் என்றெல்லாம் பிறர் போற்றுவதைப் போலவே நாமும் அவ்வீரனை மனமார போற்றுகிறோம். ஆனால் வெள்ளையனை எதிர்த்து முதலில் போராடியது கட்டபொம்மன் அல்ல. செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள பல்லவபுரமும், அதனுடைய சிற்றரசனுமான காத்தவராயனும்.  அவனுடைய சேனாதிபதியுமான சேர்ந்தவராயனும் தான். முதன்முதலில் இத்தமிழ்நாட்டில் வெள்ளை ஏகாதிபத்தியக்காரர்களை எதிர்த்து நின்று, தமிழ் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயில் விட்டவர்கள் என்பதை நாம், இங்கு வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

பல்லவ சாம்ராஜ்யத்தின் கால அளவு!

பல்லவ சாம்ராச்யம் உறுதியாக இருந்த காலம் கி.பி. 892 வரை

பல்லவ சாம்ராச்யம் சிற்றரசாக மாறிய காலம் கி.பி. 892 – 1100

பல்லவ சாம்ராஜ்யத்தை அழித்தவன்

2ம் விக்கிரமாதித்தியன் (சாளுக்கியன்) கி.பி. 892-ல்

பல்லவ சாம்ராச்யத்தை கோட்டை விட்டவன்

அபராசித வர்மன (பல்லவன்) கி.பி. 892-ல்

  • ••
Menu