ஒன்றிய / மாநில அரசுகளுக்கு வன்னியர் கூட்டமைப்பின் வேண்டுகோள்!

நமது வன்னியர் கூட்டமைப்பு தொடங்கப்பட காலம் முதல் இன்றளவும் தொய்வில்லாமல் நம் சமுதாயத்திற்கு தேவையான கோரிக்கைகளை தொடர் முழக்கமாக எழுப்பி அவற்றை அரசுகளின் செவிகளுக்கு எட்டச் செய்து வருகிறது. நமது கோரிக்கைகளை மீண்டும் நினைவுப்படுத்த நமது கடமையென கருதி இதை பிரசுரிக்கிறோம். ஒன்றிய  / மாநில அரசுகளின் கவனம் இக்கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சமுதாய மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கையாக சொல்வது நம் கடமை.வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு

தமிழகத்தில் பொருளாதாரத்தால் வஞ்சிக்கப்பட்டு கீழ் நிலையில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் மாநிலத்தில் 20 சதவீதமும் அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கிடுக.

சாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு

1931-ம் ஆண்டுக்கு பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. எனவே 2011-ம் ஆண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுத்து தந்தை பெரியாரின் உயிர் மூச்சு கொள்கையான வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கிடுக.

விவசாயிகள் மேம்பட…

பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கைப்பற்றி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் போக்கினை கைவிட்டு விட்டு விவசாய நிலங்களை பாதுகாத்து விவசாய இடு பொருட்களை மானிய விலையில் வழங்கி விவசாய உற்பத்தியில் பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஒன்றிய / மாநில அரசுகள் விவசாயத்திற்கு தனியாக ‘விவசாய பட்ஜெட்’ தாக்கல் செய்க.

இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணி மண்டபம்

1987-ம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் உயிர் நீத்த இட ஒதுக்கீடு போராட்ட வன்னிய தியாகிகளால் தான் வன்னியர் உள்ளிட்ட 109 சாதியினருக்கு மிகவும் பிற்பட்ட பட்டியலில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்து. எனவே சுதந்திர போராட்ட தியாகிகள் மொழிப் போர் தியாகிகளை கௌரவித்தது போன்று இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபத்தை அரசு அமைக்க வேண்டும். அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையும், குடியிருப்பும் ஒதுக்கிடுக.

வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்

வன்னியர் சமுதாய முன்னோர்கள், வன்னியர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பாடு அடைய பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களின் சொத்துக்களை உயிலில் எழுதிவிட்டு சென்றுள்ளனர்.

அவைகளை மீட்டு முறையாகவும் சட்டரீதியாகவும் ‘வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்’ அமைத்திடுக.

வன்னியர் நலவாரியம்

இசுலாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஒன்று அமைக்கப்பட்டு செயலாற்றி வருகிறது.

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியம் அமைக்கப்பட்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் செயலாற்றிக் கொண்டு வருகிறது. அது போல, வன்னியர் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் வன்னியர் நல வாரியம் அமைத்து, அதற்கென சட்ட திட்டங்களுக்கு சட்டமியற்றி, நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட வேண்டுகிறோம்.

வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

வன்னியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பழிவாங்கவே கொண்டு வரப்பட்டுள்ள ‘வன்கொடுமை சட்டத்தை ஒன்றிய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசை நிர்ப்பந்திக்க வேண்டுகிறோம்.

வன்னியர்களுக்கு உயர்பதவிகள் கிடைத்திட…

தேசிய கட்சிகளும், ஒன்றிய அரசும் வன்னியர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 1952-ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வன்னியர்கள்தான் காரணம் என்பது வரலாறு.

எனவே இந்த உண்மை நிலை புரிந்து கொண்டு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி வன்னியர்களுக்கு ஆளுநர், ஒன்றிய அமைச்சர், வெளிநாட்டு தூதுவர், உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகள் பொதுத்துறை நிறுவனங்களில் சேர்மன் பதவிகளை வழங்கிடுக.

தமிழக அரசு வன்னியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கிடுக.

அரசியல் கட்சிகளில் முக்கிய பதவிகளை அலங்கரித்திட…

வடதமிழகத்தில் 110 சட்டமன்ற தொகுதிகளிலும் 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயிக்கின்ற சக்தியாக வன்னியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அரசியல் கட்சிகள் வன்னியர்களின் வாக்கு வங்கிகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு அரசியல் அதிகாரத்தை வழங்குவது கிடையாது.

இந்நிலையை கைவிட்டுவிட்டு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலை பதவிகளில் வன்னியர்களுக்கு உரிய வாய்பு வழங்கிடுக.

வன்னியர் தலைவர்களுக்கு சிறப்பு செய்திடுக…

நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும், வன்னியர் சமுதாயத்திற்கும் புகழ் சேர்த்த பெரியோர்கள், அர்த்த நாரிஸ்வர வர்மா, எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார், சர்தார் ஆதிகேசவ நாயகர், மாணிக்கவேல் நாயகர், சோமசுந்தர வன்னியர், கடலூர் அஞ்சலை அம்மாள், வன்னியஅடிகளார், வாழப்பாடி இராமமூர்த்தி ஆகியோர்களுக்கு ஒன்றிய அரசே தபால் தலை வெளியிடுக!

தமிழக அரசே இவர்களுக்கு சிலைகள் நிறுவிடுக. படையாட்சியார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்திடுக.

வஞ்சிக்கப்பட்ட, வன்னிய இன

சொந்தங்களே,

உரிமைகளை மீட்டு எடுக்க

ஒன்றுபட்டு வாரீர்! ஆதரவு தாரீர்!!

Menu