வன்னியர் வரலாறு

வன்னியர் புராணம், வன்னியர் மகா சங்கம், வன்னியர் கூட்டமைப்பு என முக்கனியாய் நினைத்து சுவைத்து மகிழ்ந்திடும் வண்ணம் நமது வன்னியர் வரலாறு. புராணம், இலக்கியம், அரசர் காலம், பாளையக்காரர்கள் காலம், ஆங்கிலேயர் காலம், கடைசியாக சுதந்திர இந்தியாவில் நமது நிலை.

மனிதக்கூட்டம் மனித சமூகமாக முதன்முதலில் தோன்றிய பகுதி ஆப்பிரிக்க நாடுகள் என்பது மானிடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்கள் கருத்தாகும். கடல் விழுங்கிய லெமூரியாக் கண்டத்தில் ஒரு பகுதியாகிய குமரிமுனையில் மனிதன் முதன்முதலாகத் தோன்றியதாகவும், அங்கு வாழ்ந்த மனித சமுதாயமே முதல் சமுதாயம் என்றும் நமது மானிடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்கள் கூறுவதும் உண்டு.

வன்னியர் புராணம்

புராணங்களுள் ஒன்றாகிய வன்னிய புராணமும் தமிழில் எழுதப்பட்டது. பிற்காலமே தவிர அது முன்பே வடமொழி ஆக்கினேய புராணத்தில் உள்ளதாக பெரும் அறிஞர்கள் சான்றோடு விளக்கி இருக்கிறார்கள்.

மச்ச புராணத்திலே அங்கிரஸன் கோத்திரத்தில் உதித்த அரசர்களின் சந்ததிகளைக் கூறும் இடத்தில் அக்கினி என்றும் பாண்டு என்னும் அரசர்களைப் பற்றி கூறப்படுகிறது. இப்பாண்டுவின் வம்சத்தவரே பாண்டியர் என்கின்றனர்.

ஆக்கினேய புராணத்தின் 135வது அத்தியாத்தில் பரத கண்டத்தை வடபெண்ணை முதல் குமரி இலங்கை தென்கோடி வரையில் ஆக்கினேய கண்டமென்றும், பெண்ணையிலிருந்து விந்திய பருவதம் வரையில் சௌர  (சூரிய) கண்டமென்றும், விந்திய பருவதத்தினின்று இமய பர்வதம் வரையில் சௌமிய (சந்திர) கண்டமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ஆக்கினேய கண்டத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமே அரசர்கள் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

வன்னி வம்சத்தைப் பற்றி கூறும் புராணங்கள் பிராபம், வாயவ்வியம், மகா சிவபுராணம், தேவி பாகவதம் முதலியன யாதியின் புத்திரனாகிய துருவ மகாராஜன் வம்சத்தைக் கூறும் போது அவ்வம்சம் வன்னி சம்பு பாண்டு என்னும் பெயர் கொண்ட சத்திரியர்களால் புகழ் பெற்றிருந்ததென்று கூறுகின்றன.

ஆசுரனாகிய சூரபத்மனின் தங்கையாகிய அஜோமுகி, துர்வாசருடன் இணைந்து வாதாவி, வில்வலன் என்ற இரு அரக்கர்களைப் பெற்றாள். அவர்கள் இருவரும் எட்டு மலை சேர்த்து போன்ற உடலுடன் பலமான தோற்றத்துடன் விளங்கி பெரிய விலங்குகளையே விழுங்கி சாப்பிடும் அளவுக்கு பெரும் பசியுடன் வாழ்ந்து வந்தனர்.

இருவரும் பேசி வைத்து முனிவர்களை அழைத்து ஏமாற்றி அவர்களையே அடித்து பசித்து வந்த வேளையில் அகத்தியரால் வில்வலன் கதை முடிக்கப்பட்டது. இதனால் மனம் நொந்த வாதாவி சிவனை நோக்கி தவமிருந்து யாராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான்.

சுக்ராச்சாரியார் மூலம் பெரும் அரக்கர் படையை பெற்றவன் தனக்கு நான்கு பிள்ளைகளையும், நான்கு சகோதரர்களையும் பெற்றான். இவன் மூவுலகையும் ஆட்டிப் படைத்ததால் தேவர்கள், முனிவர்கள் நாரதரிடம் முறையிட, நாரதர் சிவனிடம் எடுத்துரைத்தார். சிவன் நடப்பதை அறிந்து திருமாலிடம் வழி கேட்க கயிலையின் வலப்புறத்தில் சம்பு முனிவரைக் கொண்டு யாகம் செய்யச் செய்து சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றும் வியர்வையை விட்டால் அதில் தோன்றுபவன் அரக்கர்களை அழிப்பான் என்றார் திருமால்.

அவ்வாறே சம்பு முனிவர் யாகம் செய்ய சிவபெருமான் நெற்றிக்கண் வியர்வையை அதில் ஊற்ற, அதிலிருந்த ஒரு வீரன் குதிரையுடன் செங்கழு நீர் மாலையுடன் தோன்றினான். வன்னி அக்னி தீயிலிருந்து தோன்றியதால் வன்னியன் என்றும், உருத்திரன் அம்சமானதால் உருத்திர வன்னியன் என்றும் பெயரிடப் பட்டான்.

பின் வன்னிய வீரன் இந்திரன் மகளை மணந்து அக்னியின் மூலம் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்து, வளர்த்து ஐவருமாக வாதாபியை அழிக்க கிளம்பி வெற்றியும் பெற்றனர். இது வன்னிய அரச குலம் தோன்றி வழி வழியாய் வந்த வரலாறு.

அடுத்ததாய் இரண்டாவது புராணத்தில் திருச்சியில் உள்ள திருவானைக்கா எனும் திருத்தலத்தில் சிவபெருமான் வெண்ணாவல் மரத்தின் அடியில் வீற்றிருக்கிறார். எனவே ஜம்புகேஸ்வரர் (ஜம்பு – நாவல்) என பெயர். பல கலைகளை கற்றுத் தேர்ந்த சம்பு, பெற்றோர் இசைவோடு ஆழ்ந்த தவத்தை மேற்கொண்டு சம்பு முனிவர் ஆனார்.

யாகத் தீயிலிருந்து உதித்ததால் ருத்திர வன்னியன்  அவதரித்தான் என்ற அசரீரி எழுந்தது. சகல கலைகளையும் கற்ற ருத்திர, வன்னியன் இருவரை மணந்து கொண்டு, ஐந்து புதல்வர்களை பெற்றெடுத்தான். இவர்கள் வளர்ந்து திருமணமாகி போருக்குத் தயாராகினர். போரில் வாதாவி. இனதாவியை அழித்து தேவர்களையும் மற்றவர்களையும் காத்தனர் என்கிறது இரண்டாம் வரலாறு.

தமிழ் இலக்கியங்களில் வன்னியர்!

கம்பர் பாடிய சிலையெழுபது மட்டுமல்ல, ஹரிவம்ஸம், சிவதருமோத்திரம், ஞானவா சிட்டம், கல்லாடம், கம்பராமாயணம், திருமந்திரம், முச்சங்க வரலாறு அகவற்பா, இறையனார், அகப்பொருள் பாயிரவுரை, நந்திக் கலம்பகம், கலித்தொகை, சிலப்பதிகாரம், பட்டிணப்பாலை, மணிமேகலை, குறுந்தொகை, பெரும்பாணாற்றுப்படை, கலிங்கத்துப்பரணி, கருணாகரத் தொண்ட வன்னியனார் சதகம் தொண்ட மண்டல சதகம் போன்ற பல்வேறு இலக்கிய நூல்களில் வன்னியர்களை குறிக்கும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல்லவ, சாளுக்கிய மன்னர்கள் வன்னியர்களே என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

வன்னிய மன்னர்கள்

பாண்டியர் மரபைச் சார்ந்த வன்னியர்கள் சிவகிரி, ஏழாயிரம் பண்னை, அளகாபுரி ஜமீன்தார்களாகவும், அரச பரம்பரையினராக அரியலூர், ஊத்தங்கால் முதலிய ஊர்களிலும், சோழ மன்னர்களின் வழிகளில், பித்தர்புரம், நல்ல நாயகபுரம், கடலங்குடி முதலிய இடங்களிலும், பல்லவ பார்த்திபர்கள் உடையார் பாளையம், முகாசாபரூர் முதலிய நகரங்களிலும் ஜமீன்தாரர்களாக வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்கள் இன்றளவும் இருக்கின்றன.

ஆத்தி மாலை உடைய  சோழனுக்கும், வேப்ப மாலை உடைய பாண்டியனுக்கும், பனை மாலை உடைய சேரனுக்கும், கற்றோர்க்கும் மற்றோர்க்கும் தொண்டை நாடாகிய பல்லவராஜ்ஜியம் பெரும் நிழலாக இருப்பதாக கம்பர் கூறுகிறார்.

இலங்கையில் இன்றளவும் சிங்கள மக்கள் புறாங் சுப்புவை விடுதலை வீரனாகக் கொண்டாடுகின்றனர். அதே அளவுக்கு தமிழ் மக்கள் சங்கிலி மன்னனையும், பண்டார வன்னியனையும் தேசிய வீரர்களாக மதித்துப் போற்றுவதிலிருந்தே அவர்களின் வீர தீர சிறப்புக்களை கலை  நாம் அறிந்தும் உணர்ந்தும் தெரிந்து கொள்ளலாம். பண்டார வன்னியனை இலங்கை அரசு தேசிய வீரனாக 1982-ல் அங்கீகரித்துள்ளது. சிங்கள மக்கள் வன்னி பண்டார என இம்மாவீரனை அழைப்பதும் உண்டு.

பிரம்மாவிடம் அக்னி; அக்னியிடமிருந்து சந்திரன்; சந்திரனது குமாரன் புதன்; புதனுக்கு புரூரவனுக்கு ஆயு; நகுஷன், யாயாதி முதலியவர்கள் தோன்றி, அவ்வம்சத்தின் வழியே துர்வக வந்ததாகவும், துர்வசுவின் குமாரனே வன்னி எனவும், அச்சந்ததியில் வந்தவன் துஷ்யந்தன் எனவும், இந்த துஷ்யந்தனுக்கு கருத்தமனும், கருத்தமனுக்கு, ஆக்ரீடனும், ஆக்ரீடனது குமாரர்களே பாண்டியன், கேரளன், சோழன், கலிங்கன், எனவும் ஹரிவம்ஸம் 32வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

வன்னியகுல சத்திரிய மகா சங்கம்

1800-களுக்கு பிறகு இந்திய தேசம் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான் என்றதாகவே இருந்தது. சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயரின் வால்பிடித்து அவர்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளும் நபர்களாக மேல்தட்டுக் குடியினர் மட்டுமே அருகில் இருந்தார்கள். இவர்கள் சொல்வதே ஆங்கிலேயருக்கு வேதவாக்காக மாற, அதை பயன்படுத்தி நம்மை போன்ற பெரும்பான்மை சமூகத்திடமிருந்த நிலபுலன்களை பறித்து இவர்களது பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.

வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மக்கள் காலங்காலமாக விவசாயம் செய்த பெருங்குடி மக்கள் என்பதை நாடறியும். நிலபுலன்களோடு வாழ்ந்த அம்மக்கள் அன்னியர் ஆட்சியில் மேட்டுக்குடி இனத்தவரால் பெரும் பரிதாபத்துக்குரியவர்களாகப் பட்டார்கள். கிராமங்களை, நிலங்களை பெயர் மாற்றம் செய்து சூறையாடியனார்கள். நில உரிமைகளை இழந்து காணியாட்சிக்காரர்களாக இருந்தவர்கள் கல்வி அறிவின்மையால் சூழ்ச்சிக்கு இறையாகி, கொடுமைப்படுத்தப்பட்டு படியாட்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வன்னியர் சங்கம்

மகா சங்கத்தின் செயல்பாடுகளை அரசியல் கட்சிகள் உள் வாங்கிக் கொண்டதின் விளைவு வன்னிய சமுதாயம். அதன் தலைவர்களுக்கு பின் அணி வகுத்தது. அதிலும் இராமசாமி படையாட்சியாரைத் தவிர வேறு யாரும் மக்களிடம் செல்வாக்கு பெற முடியவில்லை. படையாட்சியாருக்கு பிறகு எழுச்சிமிக்க தலைமை இல்லாததால் நமது சமுதாயத்தினர் அரசியல் கட்சிகள் பின்னால் திரண்டனர். வன்னியர் பலர் பல பெயர்களைக் கொண்ட அமைப்புகளை நடத்தி வந்தனர்.    உயிர் பலியான போராட்ட களத்திற்கு பின்பு வன்னியர் சங்கம் இரண்டாக உடைந்தது.

Menu