வன்னியர் கூட்டமைப்பு ஏந்திய அறிவாயுதம்!

உருவாகிறது

வன்னியர் பொதுச் சொத்து வாரியம்!

 

சி.என்.ஆர்,,

(நிறுவனத்தலைவர்)

வன்னியர் கூட்டமைப்பின் சார்பாக தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட முத்தான மூன்று கோரிக்கைகளுக்காக இயக்கத்தின் சார்பில் பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் கடிதங்கள் என நீண்டு கொண்டே போனதற்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் கடந்த திமுக ஆட்சியில் நமக்கு தீர்வேதும் கிடைக்காதென்ற முடிவில் நீதிமன்றத்தின் தயவை நாடினோம்.

முதலாவதாக வன்னிய சமுதாய மக்களுக்காகவும், எதிர்கால சந்ததியினருக்காகவும் மிகவும் பிறபடுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு தனி உள் ஒதுக்கீடு வேண்டி வழக்கு தொடுத்தோம். வன்னியர் கூட்டமைப்பின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. கடந்த ஆட்சியாளர்கள் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கிக் கொண்டே போய் கடைசியில் ஆட்சியையும் இழந்து போனார்கள்.

நமது கூட்டமைப்பின் சட்டப் போராட்டத்தினை அறிந்து நம்மை அழைத்து தனி ஒதுக்கீட்டுக்கான விபரங்களை கேட்டு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கையை பரீசிலித்து உரிய தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார் நம் தமிழக முதல்வர். எப்போதும் அதற்கான  முனைப்பான நடவடிக்கைகளை நம் முதல்வர் அவர்கள் எடுத்து வருவதை நாம் அறிவோம்.

தனி ஒதுக்கீடு கோரிக்கையினை எழுப்புவதற்கு முன்பே நமது சமுதாயத்துக்காக வன்னியர் நலவாரியம் அமைத்திட வேண்டி கோரிக்கை வைத்து போராடி வந்தோம். அத்தோடு ஆளவந்தாரின் சொத்துக்களை இணைத்து அவரின் அறக்கட்டளை சார்பில் ஆள வந்தார் பல்கலைக் கழகம் உருவாக்க வேண்டுமென்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம்.

வன்னியர் சங்கத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றிருந்த 2000 முதல் 2005 வரையிலான கால கட்டத்தில் இக்கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தி வடதமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி வந்தேன். வாழப்பாடியார், வன்னிய அடிகளார் ஆகியோரின் மறைவால் 2005-ல் வன்னியர் சத்திரிய சங்கத்தினை ஆரம்பித்து அதன் மூலம் தொடர் போராட்டங்களை நடத்தினேன். இக்கால கட்டத்தில் தான் நமது முன்னோர்கள் அவர்களது சொத்துக்களை நமது சமுதாயத்திற்காக அறக்கட்டளைகளை உருவாக்கி எழுதி வைத்துவிட்டுச் சென்றது தெரிய வந்தது.

வன்னியர் சத்திரிய சங்கத்தின் சார்பாக அரசுக்கு பலமுனைகளிலும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. தொடர்நது நமது போராட்டத்தின் விளைவாக நமது சமுதாய முன்னோர்கள் ஏற்படுத்திய அறக்கட்டளைகள் இனம் காணப்பட்டன. செயல்படாமல் இருந்த நம் சமுதாய முன்னோர்களின் அறக்கட்டளை கனவுகளை நனவாக்கியே தீருவதென முடிவெடுத்து களமிறங்கினேன்.

2010-ல் நமது சமுதாய முன்னோர்களின் சொத்துப் பட்டியல் அடங்கிய அறக்கட்டளைகள் 63 இனங்காணப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் சேகரிக்கப்பட்ட அறக்கட்டளைகளின் விவரங்கள் மற்றும் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த விவரங்கள் அடிப்படைய்ல இதுவரை 76 என முறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

பலமுறை முயற்சி செய்து உருவாக்கப்பட்ட இந்த சொத்துக்களை காப்பாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டிய நேரத்தில் தான் பலமுறை நினைவூட்டு கடிதங்கள் எழுதி ஓய்ந்து போய் இப்பிரச்சினைக்கு தீர்வு கேட்டு நீதி மன்றத்தின் தயவை நாடினோம்.

கடந்த ஓராண்டாக இந்த பொதுச் சொத்து வாரியத்திற்காக பலமுறை  நீதிமன்றப் படியேறினோம். ஒவ்வொரு முறையும் மனு மறுதலிக்கப்பட நாமும் 18 முறை போராடி கடைசியில் மனுவை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.

சி.என்.இராமமூர்த்தி அவர்கள் சமர்ப்பித்த ரிட் மனு சம்பந்தமான தீர்ப்பில் மனுதாரர் அரசிடம் அவரது மனுவை தொடர்ந்து வலியுறுத்துகையில் பிரதிவாதி (அரசு) அதை பரிசீலித்து சட்டத்தின்படி தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று உயர்நீதிமன்ற முதன்மை பெஞ்ச் குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி கடந்த நவம்பர் மாத இதழில் விரிவாக நான் எழுதி இருந்ததை நீங்கள் படித்திருப்பீர்கள். கடந்த இதழ் வெளியான திலிருந்து இக்கட்டுரை எழுதும் இக்கணம் வரையில் கைபேசியில் தொடர்ந்து அழைப்புக்கள் தான்.

நம்முடன் பேசியதில் ஒரு சிலர் பொதுச் சொத்து வாரியத்தைக் கண்டு பீதி அடைந்துள்ளது தெரிய வந்தது. அதாவது பொதுச் சொத்து வாரியத்தை அரசு உருவாக்கினால் வன்னியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து வாரியத்தில் சேர்த்து விடுவார்களோ? என்கிற ரீதியில் கேள்வி கேட்டார்கள்.

நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களின் அத்துனை கேள்விகளுக்கும் இந்த விள்க்கத்தை அளிக்க வேண்டியது எனது கடமையாகக் கருதுகிறேன். நாம் முன்னெடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கு%

Menu